ஐயா,
இலக்குமிக்கு எண்ணனை என்ற பெயர் உண்டென்பதை இன்று தான் அறிந்தேன். எந்த இலக்கியத்தில் அந்தப் பெயருடன் இலக்குமி அழைக்கப்படுகிறாள் என்று சொல்கிறீர்களா?
அன்பன்,
குமரன்.
நன்றி ஐயா.
குசேலோபாக்கியானம் என்று இணையத்தில் தேடினால் கிடைக்கும் சுட்டிகள் இதனை இயற்றியவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்று சொல்கின்றன.
கலைமகள், நாமகள், சரசுவதி, சிந்தாதேவி வித்யாதேவி இப்படி எத்தனையோ பெயர் கொண்டவள்தான் சரசுவதி.
க என்றால் வடமொழியில் பிரம்மனைக் குறிக்கும். கா என்றால் தமிழில் சரஸ்வதியின் பெயரா? சரி தான். :-)
சிவ என்றால் சிவன்; சிவா என்றால் சக்தி என்று வடமொழி கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
அதே போல் க்ருஷ்ண என்றால் கண்ணன்; க்ருஷ்ணா என்றால் த்ரௌபதி.
பாரதி வடமொழிப் பெயர்.
கிருஷ்ண அல்லது கிருஷ்ணா என்றால் மேகத்துக் கருமையைக் குறிக்கும். இருவருமே (கண்ணன் மற்றும் பாஞ்சாலி கருமை அழகு பெற்று சிறந்தவர்கள். (Ref. 'Krishna' series K.M.Munshi) இருவருக்குமே கிருஷ்ண என எழுதினால் மாபாரதத்தில் பெயர்க் குழப்பம் வரலாம் என்று சற்று வேற்றுமை காட்டினார்களோ என்னவோ..
அது சரி.. சரசுவதிக்கு ஒரு அழகான தமிழ்ப்பெயர் நாம்தான் சூட்டுவோமே..
தி>>
நாமகள் என்று வேறு யாருக்காவது பேருண்டா? என்ன?
கண்ணன்
2008/10/13 venkatram dhivakar <venkdh...@gmail.com>:
ஓ! இது சாமி பெயரென்று தெரியும். எந்தச் சாமி என்று இப்போதுதான் தெரிந்தது!
ஆனால் இது "பேய்ச்சி" க்கு நெருங்கி வருகிறது. "நல்லதோர் வீணை செய்து...!"
க.>
பேச்சி அம்மன் என்றுதான் நானும் கேள்விப்பட்டுள்ளேன்.
அது சரஸ்வதி என்று தெரியாது. ஏனெனில், பிரம்மா, சரஸ்வதி வழிபாடு அவ்வளவு
பிரபலமில்லை. என் இஷ்ட தெய்வம் எப்போதும் ஒரு பிரகார தேவதையாக சிவன்
கோயிலில், சின்ன விளக்கொளியில் அமர்ந்திருக்கும்.
பேச்சி அம்மன் என்பது கிராம தேவதை. ஆனால் அது சரஸ்வதி என்றால், இது புதிய
ஆய்விற்கு இட்டுச்செல்லும்.
ஏனெனில் ஐயனார் எனும் காவல் தெய்வம் சமணக்கடவுள். சமண வழிபாட்டில்
கல்விக்கு தேவதையுண்டு. அப்படியெனில் பேச்சி அம்மனும் சமண தெய்வமாக வந்து
இந்து தெய்வமாக மாறியிருக்க வேண்டும்!
நான் "பேய்ச்சி" என்று சொன்னது பூதணையை (பேய்ச்சி முலையுண்ட...என்று பாசுரம்)
கண்ணன்
2008/10/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
There is another line of thought on sapta matrikas - Brahmani,
Maheshvari, Kaumari, Vaishnavi, Varahi, Indrani, Chamundi and their
later linkages with the main hindu gods to become their consorts. ( if
i am not wrong)
rgds
vj
2008/10/14 Narayanan Kannan <nka...@gmail.com>:
கலைமகள், நாமகள், சரசுவதி, சிந்தாதேவி வித்யாதேவி இப்படி எத்தனையோ பெயர் கொண்டவள்தான் சரசுவதி.
ஆனால் தமிழில் எண்ணனை என்பது இலக்குமி தேவியான அலைமகளையும், கொற்றவை என்பது துர்க்கையான மலைமகளையும் குறிப்ப்துபோல
2008/10/13 venkatram dhivakar <venkdh...@gmail.com>கலைமகள், நாமகள், சரசுவதி, சிந்தாதேவி வித்யாதேவி இப்படி எத்தனையோ பெயர் கொண்டவள்தான் சரசுவதி.
சீவக சிந்தாமணியின் தொடக்கமே நாமகள் இலம்பகம் என்றுதான் தொடங்குகிறது. ஆக, சமணர்களும் நாமகளை மறுக்கவில்லை.:-)
--
அன்புடன்,
ஹரிகி.
பிரச்சனை தீர்ந்தது!
க.>
On Oct 13, 3:44 pm, "Tthamizth Tthenee" <rkc1...@gmail.com> wrote:
// வேணி//
'வேணி' என்பது பின்னலைக் குறிக்கும் வடசொல். இரட்டைப் பின்னலை 'ரெட்டை
ஜடை' என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பர். அது கலைமகளுக்கான
பெயர் அன்று.
> விபரீதமாகப் போகிறதே! பேய்ச்சி முலையுண்ட வாயரே! நீர் உண்ட மார்பை மறக்கவும்
> செய்தீரோ? அம்மம் தாரேன் என்று பெரியாழ்வார் அஞ்சியது ஏன் என்பதும் மறந்ததோ!
அது சரி!
இந்த ஹரி, இந்த கிருஷ்ணன் என்ன செய்தது தெரியுமா?
"பொல்லாவடிவுடைப்பேய்ச்சி" என்றும்,
"முனிவஞ்சப் பேய்ச்சி" என்றும்
எல்லோரும் நடு, நடுங்க...இது சும்மாக்காச்சும் பால் குடித்து 'இந்தப்
பூனையும் பால் குடிக்குமா?' எனும் பாவனையில் உறங்குகிறதாம்.
ஏண்டா? அரக்கிட்ட போய் பால் குடிச்சே? நாங்களெல்லாம் இங்க இருக்கிறது
தெரியலை? யசோதை, பிற ஆச்சியர் இருக்க பூதணை முலை உண்ணுவானேன்?
ஏனா? அவ அம்மா போல வந்தா! அதுதான் அம்மாவென்று நினைத்து பால் குடித்தேன்.
பாத்தா தெரியலை? பிசாசு, பேய்!!
கிருஷ்ணனுக்கு எப்படி பயம் வரும் அவன் இரணியன் நெஞ்சையே பிளந்தவன். இது
வெறும் பூதணைதானே!
பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே!
குவிமுலையீர். வந்துகாணீரே!!
இவ்வளவு கொஞ்சல்! எங்கள் கண்ணனுக்கு! (பெரியாழ்வார்)
இதுவோ, ஆய்ச்சி பாலை உண்கிறது, கோகுலத்து மண்ணை உண்கிறது, பின் அது
ஜெரிக்க வெண்ணை உண்கிறது, போதாதற்கு பேய்ச்சி பாலை வேறு குடிக்கிறது!!
ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை
யுண்டுவெண்ணெ யுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ
ரேனமாய வாமனா. (ஆண்டாள்)
இது என்னதான் செய்தாலும் கோகுலத்து தாய்மார்கள் இதற்கு பால் கொடுக்க,
கால் கடுக்கக் காத்து நிற்பதே உண்மை!!
பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய்.
(காய்ச்சின நீரோடு நெல்லியைப் போட்டுக் குழந்தைக்குக் குளிப்பாட்டினால்
நல்லது போலும். பாட்டி வைத்தியம் சொல்கிறார் பெரியாழ்வார்)
கண்ணன்
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
ஹரிகி அவர்களே,>>கண்ணை உடையவன் கண்ணன்; நாவுக்கு உரியவள் நாமகள்<<கண்ணன் என்பது போல நாவி என்று வந்தால் சரியாக இருக்கும் போலும். ஆனால் மகள் என்பது இன்னொரு வார்த்தைதானே.
நீங்கள் முயன்றால் முடியும் என்றே தோன்றுகிறது.
'எண்ணணை' பற்றி ஏற்கனவே விளக்கம் இதே பதிவில் குறிப்பிட்டுள்ளேனே.
'கலைமகள்' 'நாமகள்' எனும் சொற்களை 'புனைபெயர்', 'ஊறுகாய்' போன்ற தொகைச்
சொற்களாகவே கொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். ஆயினும் திவா ஐயா கருதுவதுபோல்
இரு சொற்களின் தொகுப்பு என்றுதான் ஆகும்.
தேவ்
'கலைமகள்' 'நாமகள்' எனும் சொற்களை 'புனைபெயர்', 'ஊறுகாய்' போன்ற தொகைச்
சொற்களாகவே கொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். ஆயினும் திவா ஐயா கருதுவதுபோல்
இரு சொற்களின் தொகுப்பு என்றுதான் ஆகும்.
தேவ்
"எண்ணணைக்கு இலங்கி மார்பம் ஈந்த பிரானைவண்ணனை திகிரிசங்கம் வலமிடம் உறக் கொண்டானை" -குசேலோபாக்கியானம்
க.<
2008/10/15 Hari Krishnan <hari.har...@gmail.com>:
நம்ம கவிஞர் தொடர்வதால் இன்னும் தோண்டச் சொல்கிறது. இதை முதலிலிருந்து
சொல்ல நினைத்தேன். ஓர் சொல் போல் படும் பெயரும் கூட ஆழங்காட்படும் போது
இன்னும் விரிவடைகிறது. உம்.
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம் (பெரிய திருமொழி)
நாராயணன் எனும் பெயர் நம் வினைக்கு நஞ்சு எனும் போது நாராயணா என்றால்
என்னெவென்று விளங்கிக்கொள்ள வேண்டிவரும். ஓர் சொல் போல் படும் இதையும்
பிரிக்கமுடியும். அப்படிப் பிரித்துதான் இதன் முழுப்பொருளையும்
ஆச்சார்யர்கள் அறிந்துள்ளனர். அட்சரம், அட்சரமாகப் பிரிக்கின்றனர்.
கேட்கக் கேட்க பிரம்மிப்பாக இருக்கும்.
இவ்வளவு ஏன் போக வேண்டும்? "ஓம்" எனும் ஓர் ஓசை மூன்று அட்சரங்களால்
ஆனது. அதில் வரும் 'அ' என்றாலே விஷ்ணு என்று பொருள். அதையும்
பிரித்தாலும் அதனுள் அவன் இருப்பான். (பூவினுள் நாற்றம் போல்) இதைத்தான்
திருமழிசையார்...
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினாய்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே
என்கிறார். அவனை நாம் உணர வேறெங்கும் போக வேண்டாம். சொல்லின்
தொடர்ச்சியாக "ஓம்" எனும் ஓங்காரத்திலிருந்து அனைத்திலும் நீக்கமற
நிறைந்துள்ளான்.
இவ்வளவிற்கும் அதிபதியான "நாமகள்" ஒன்றா? இரண்டா?
க.;-)
--
A.Sugumaran Amirtham Intl PONDICHERRY INDIA MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com www.puduvaitamilsonline.com
--
A.Sugumaran Amirtham Intl PONDICHERRY INDIA MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com www.puduvaitamilsonline.com
இது தொகைச் சொல் ; பகு பதம் ; ஆயினும் ஒரே சொல்லாகவே கணக்கிட வேண்டும்.
நாமகள் வழிபாட்டிற்குச் சங்க இலக்கியத்தில் ஆதாரம் தேட இயலாது.
இவை பேராசிரியர். ராஜகோபாலன் (சென்னை) தெரிவித்த கருத்துகள்.
தேவ்
நம்ம கவிஞர் தொடர்வதால் இன்னும் தோண்டச் சொல்கிறது. இதை முதலிலிருந்து
>
சொல்ல நினைத்தேன். ஓர் சொல் போல் படும் பெயரும் கூட ஆழங்காட்படும் போது
.
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம் (பெரிய திருமொழி)
'மகள்' என்ற ஒட்டு சேர்ந்தால் மட்டுமே அது இலக்குமிக்கே உரிய தனிப் பெயராக மாறும்.
முழுப்பாடலும் கிடைக்குமா?
இப்போதுதான், 'அங்கப்பறை' பற்றி விளக்கமறிந்தோம்!
க.<
ஹரி,
வணக்கம். உங்களை இங்கு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி
.
வணக்கம் ரெகா. அடுத்த் ஆட்டத்தில் கார்த்திகை ஈசன் என்று உங்களை வம்புக்கிழுப்பதாகத்தான் இருந்தேன். இளங்கோவன் என்பதும் இரண்டு பெயர்கள் கூடி ஒன்றான ஒருசொல்தானே!
1) இந்த சொற்களுக்கிடையில் இடம் விட்டு எழுதுவதற்கு
இலக்கணம் ஏதும் உண்டா? இப்போதைய அச்சுப் பிரதிகளில்
பெரும் குழப்பம் இருக்கும் போலத் தெரிகிறதே!
நாம் ஒரு நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்புவரை கவிதையாகவே எழுதிக் கொண்டிருந்தோம். இரண்டு விரற்கடை அளவு அகலமுள்ள ஓலைச்சுவடியில் அதிகமான விஷயத்தைத் திணிக்கக் கவிதையால் முடிந்தது. கவிதையில் சீர் பிரிப்பது யாப்பிலக்கணத்தின் கட்டுக்கு உட்பட்டது. ஆகவே we really were never conscious about where to split a word while writing. பிறகு உரைநடை வந்தது. (கல்வெட்டு உரைநடையெல்லாம் இந்தக் கணக்குக்கு உதவாது. செதுக்கிய சிற்பி தப்புத் தப்பாக ஸ்பெல்லிங் போட்டுவிடுவான். அதுவும் மாற்றம் பெறாமல் அப்படியே இடம்பெற்றுவிடும். கம்பராமாயணத்தில் தசரதன் உடலை எரியூட்டிய படலத்துக்கு பள்ளிபடைப் படலம் என்று பெயர். கல்வெட்டில் பள்ளிப்படை என்று இருக்கிறது. இலக்கணப்படி பள்ளிபடை என்று இருக்க வேண்டும். வைமுகோ இரண்டு வடிவங்களையும் ஏற்றுக் கொள்ளகிறார். இதில் என்ன வேடிக்கை ஆகிவிட்டது என்றால், ப்ப என்ற இரண்டு எழுத்துகளையும் சேர்த்து கூட்டெழுத்தாக எழுதுவார்கள். கிட்டத்தட்ட ய மாதிரி இருக்கும். ஓலைச்சுவடியில் புள்ளி வைக்க மாட்டார்கள் (பொத்துக் கொள்ளும் என்பதனால்). பள்ளிப்படை படலம் பள்ளியடைப் படலமாகி விட்டது.
இது பழைய கதை. தவறுகள் நடந்த விதம். இப்போதைய அச்சு வாகனத்தின் டிமான்ட் வேறு விதமாக இருக்கிறது. நாம் சொற்களைச் சேர்த்தெழுதினால் (இதே சொல்லை பாரதியின் manuscriptல் பார்த்தால் 'சேர்த் தெழுதினால்' என்று எழுதியிருப்பான்) சொல் நீளமாகப் போய்விடுகிறது. Word wrap இருப்பதனால் column அகலத்துக்குள் அவ்வளவு நீளமான சொல்லை அமுக்க முடிவதி்ல்லை. ஆகவே தோன்றிய இடங்களிலெல்லாம் தோன்றிய படி பிரிக்கிறார்கள். 'இவ்வாறிருந்திருக்கலாம்' என்றோ 'இவ்வா றிருந்திருக்கலாம்' என்றோ எழுத நம் இலக்கணம் இடம் தருகிறது. இப்படி எழுதினால் மக்களுக்குப் புரியாது என்று ஒரு தியரி வைத்திருக்கிறார்கள். 'இவ்வாறு இருந்து இருக்கலாம்' என்று பிரித்துப் பிரித்து எழுதுகிறார்கள். ('இருந்து' என்றால் மலம் கழித்து என்றுவேறு பொருளிருக்கிறது. 'இருந்து இருந்தால்' என்ன அர்த்தம் வரும்!)
ஆகவே, அச்சு சௌகரியத்துக்காக அவர்கள் கண்டபடி பிரிக்கிறார்கள். அதற்கும் மேல், அடிப்படை இலக்கண அறிவு இல்லாதவர்கள் எழுதுகிறார்கள். அந்த+அளவு அந்த அளவுதான் அந்தளவு, இந்தளவு என்று புணராது; அந்த+ஆண்டு அந்த ஆண்டுதான். அந்தாண்டு, இந்தாண்டு என்று புணராது. ஜூனியர் விகடனைப் பாருங்கள். இப்படித்தான் எழுதுகிறார்கள்.
இன்னொரு வகை இருக்கிறது. நான் அங்கே பணியாற்றிய ஒன்றரை வருடங்களும் தலைதலையாய் அடித்துக் கொண்டு இன்னமும் திருத்த முடியாத விஷயம். எங்கெல்லாம் பெண் வருகிறதோ அங்கெல்லாம் 'பெண்' என்று சொல்லியே ஆகவேண்டும். பெண் கவிஞர், கவிதாயினி என்றெல்லாம் சொதப்புகிறார்கள். கவிஞர், அமைச்சர் எல்லாம் genderless nouns என்ற அடிப்படை இலக்கணம் தெரிந்தால்தானே! கவிஞருக்குப் பெண்பால் கவிதாயினி என்றால், அமைச்சருக்குப் பெண்பால் என்ன? ஏன் ஜெயலலிதாவை முதமைச்சாயினி என்று சொல்லிவில்லை! பத்திரிகையாளர்கள் யோசிக்கவில்லை. யோசிக்கச் சொல்பவன் 'பண்டிதன். அவனுக்கு இலக்கண சொறி பிடித்திருக்கிறது.'
அதைவிடவும் பெரிய ஜோக் என்னவன்றால் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகளைப் பாருங்கள். 'பெண் ரசிகைகள்', 'பெண் சிநேகிதிகள்' என்று எழுதுகிறார்கள். ரசிகையும் சிநேகிதியும் பெண்ணாக இல்லாமல் பின்ன ஆணாகவா இருக்க முடியும்! இதையும் சொல்லிப் பார்த்துவிட்டடேன். பயன்தான் இல்லை.
இதெல்லாம் பிரச்சினையின் மிகச் சிறிய பகுதிதான் ரெகா. இன்னும் நிறைய இருக்கின்றன. பேசலாம்.
2) "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலின் இலக்கண வழு பற்றிப்
பெரிதும் பேசப் பட்டிருக்கிறதல்லவா? இது ஆங்கில இலக்கணத்தைச்
சார்ந்த every = singular என்னும் விதிதானே? தமிழில் இப்படி
விதி இருக்கிறதா?
("பூக்களுமே, சொல்கிறதே" என்பதில் உள்ள பிழை தெளிவாக
இருக்கிறது. அதை விடுங்கள்.)
ஒவ்வொரு என்பது ஆங்கிலத்தில் every, அல்லது each and every என்ற ஒருமையைத்தான் குறிக்கிறது. ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே என்பதுதான் இலக்கணப்படி சரி. எளிய, அன்றாட இலக்கணத்தைச் சொல்கிறேன். யாருக்குமே புரியாது என்று கற்பனை செய்யப்படுகிறதே அதை இல்லை.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது. இப்படிப் பிழைபட எழுதினால், I are always correct, you is not correct. They speaks good English என்று ஆங்கிலத்தில் எழுதிவிடலாம். சொல்லப்போனால், They பன்மை, speaks என்ற பன்மைதானே அதைத் தொடரவேண்டும்! :-)))
எண்ணணைப் பற்றிதானே.. என்னிடம் இருந்த குறிப்பைக் கொடுத்தேன். நானும் முழுப் பாடலைத் தேடுகிறேன். கேட்டும் இருக்கிறேன். வந்ததும் உடனே இடுகிறேன்.
இந்தப் பாடல் குசேலர் கண்ணனைக் காணச் செல்லும்போது வழியில் பாடுவதாக வரும்.
தி
"எண்ணணை "என்பது ஒருவேளை "என்னணை" யாக இருக்குமோ"என்னணை" என்று கொண்டால் திருமால் தன் இருக்கையில் லக்குமியை மார்போடணைத்துக் கொண்டிருக்கிறாரே அதுபோல் திருமாலே சொன்னது போல..."என்னணை " என் +அணை =என்னுடைய பத்னி, நான் அணைத்துக்கொண்டிருப்பவள்அல்லது என்னை (திருமாலை) அணைத்துக் கொண்டிருப்பவள் என்று பொருள் படும்படி வருமே ஒரு வேளை என்னணையோ....?ஒரு சந்தேகந்தான்...
செய்ய தான செழுங்கம லாசனத்
தையல் காமுறத் தக்கன வீதிகள்
பைய நீங்கிப் பராபரை யாகிய
ஆகா. நான்கைந்து முறைகள் படித்து மனத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும் போலிருக்கிறதே?! மிக்க நன்றி ஹரியண்ணா.
சரியான இடத்தில் சொற்களைப் பிரித்திருக்கிறேனா? இல்லையென்றால் திருத்துங்கள்.
ஹரியண்ணா. நீங்கள் அனுமதி அளித்தால் நீங்கள் ரெகாவுக்குச் சொன்ன விடைப்பகுதியை என் வலைப்பதிவில் சேமித்து வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அனுமதி தருகிறீர்களா?
அன்பன்,
குமரன்.
இரண்டாமடி முதல்சீராக அமைந்துள்ள 'வண்ணனை' என்ற எதுகையே, முதலடியில்
இருப்பது> 'எண்ணனை' என்று மூன்றுசுழி டண்ணகரம்தான் என்பதை உறுதி
செய்கிறது.
இங்கேயோ ஐயை இல்லை. எண்ணனை என்று இருக்கிறது. இது பகுபதம்தான்.
குசேலோபாக்கியானம் பொதுவாக 6-8 வகுப்புகளுக்குப் பாடப்பகுதியாக
வைக்கப்படுவது.
ஹரிகி.//
**************************************************************************************************************************
குசேலோபாக்கியானம்
குசேலர் நகர்ப்புறம் அடைந்த அத்தியாயம்
(குசேல முனி கண்ணனைக் கண்ணாறக் காணுதல்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
எண்ணனைக் கிலங்கு மார்ப மீத்தருள் பிரானை நீல
வண்ணனைத் திகிரி சங்கம் வலமிட முறக் கொண்டானை
மண்ணனைத் தும்பு ரக்கும் வாசுதே வனைம ணக்குங்
கண்ணனைத் துளவத் தாமக் கண்ணனைக் கண்ணிற் கண்டான்.
எண் அனைக்கு இலங்கு மார்பம் ஈத்து அருள் பிரானை,
நீல வண்ணனை, திகிரி சங்கம் வலம் இடம் உறக்கொண்டானை,
மண் அனைத்தும் புரக்கும் வாசுதேவனை, மணக்கும் கள் நனை
துளவத் தாமக் கண்ணனைக் கண்ணில் கண்டான் - உ0ரு(205)
எண் அனை – யாவரும் நினைக்கும் அன்னையான இலக்குமி
(வினைத் தொகை)
அனை – அன்னை என்பதன் இடைக்குறை.
முதனூல் – ஆரியப்ப புலவரின் பாகவதம் (தமிழ்)
வரகவியின் குசேலோபாக்யானம் (தெலுகு)
அரும்பதவுரை ஆசிரியர் – திரு.வி.உலகநாத முதலியார்
தேவ்