பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும்;
மேலும் அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' வழங்கப்படும்;
அப்படி 'பாரதி இளங்கவிஞர் விருது' பெறும் ஒரு மாணவருக்கும் மற்றும் ஒரு மாணவிக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்:
தமிழ் நாடு முதல்வர் அறிவிப்பு
மேலும் ......
‘உலகத் தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைத்து 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடத்தப்படும்.
திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் 'திரையில் பாரதி' என்ற தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தப்படும்.
பாரதியின் பாடல்கள், கட்டுரைகளை தொகுத்து 'மனதில் உறுதிவேண்டும்' என்ற புத்தகமாக சுமார் 37லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சென்னையிலுள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் செய்தித்துறை சார்பில் ஒராண்டிற்கு வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பாரதியின் உருவச்சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்கள், பூம்புகார் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு விற்கப்படும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க நிதியுதவி வழங்கப்படும்.
பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்களில் பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகள் எழுதப்படும்.
பாரதியாரின் படைப்புகளை குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி நவீன ஊடகங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு மகாகவி பாரதியார் வாழ்வதாரப் பூங்கா என பெயர் சூட்டப்படும்.
பாரதி ஆய்வாளர்களான மறைந்த பெ.சூரன், ரகுநாதன், ரா.அ.பத்மநாபன், இளசை மணியன் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், சீனி விஸ்வனாதன், பேராசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கும் தலா 3 லட்சமும், அரசின் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் பல செயல் திட்டங்களை அறிவிப்பில் காணலாம்