அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழ்
நாள்: 18 . 02. 2017 சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 - 7.30 வரை
இடம்: இந்திய அலுவலர் சங்கக் கட்டிடம்
69, திரு.வி.க. நெடுஞ்சாலை
இராயப்பேட்டை , சென்னை - 600014
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :டாக்டர்.திருமதி. மணிமேகலை கண்ணன்
தொடர்பு எண்கள் : 9841036222 , 8939462185
தமிழறிஞர் மணவை முஸ்தப்பா
அகரமுதல் னகரம்வரை தமிழில்
அறிவியல் சிந்தையை தேடியவர்
மாசறத் தாம்கற்றுத் தெளிந்த
மாத்தமிழ் நுட்பம் யாவையும்
அறிவியல் சிந்தைக்கு உட்படுத்தியவர்
அண்ணார் அறிந்த அருந்தமிழ்
அறிவுக் களஞ்சிய மணைத்தும்
அறிவியல் இலக்கியச் சமுதாயத்தை
விளைத்திடவே; அல்லும் பகலும்
அயராது அண்ணைத் தமிழுக்கு
அருந்தவத் தொண்டினை ஆற்றினார்
செந்தமிழ் மொழியெங்கள் தமிழ்மொழி
முன்னைப் பழமைக்கும் பழமை
மாறிவரும் புதுமைக்கும் புதுமையென
தமிழ்மொழி சிறப்பினை எழுத்தால்
தனித்த வாதத்தால் வென்றார்
தமிழுலகம் சீர்பெற்று வாழ்ந்திட
அறிவியல் பார்வை கொண்டு
ஆய்வுக் கட்டுரைகள் எழுதியெழுதி
தமிழின் மாண்பை நாட்டினார்
தம்அறிவு நுட்பத்தை தண்டமிழ்
இலக்கிய நூலுள் ஆண்டார்
உலகரங்கில் தமிழின் தொண்மை
இனிமைவளமை தாய்மை தனித்தன்மை
பொதுமை பண்பாடு நடுவுநிலை
கலைப்பட்டறிவு வெளிப்பாடு இலக்கிய
வளமை பிறமொழித்தாக்க மின்மையென
திறனாய்வு செய்து தமிழ்மொழி
மேன்மையினை பறைசாற்றிய அறிஞர்
மணவை முஸ்தப்பா தமிழ்மொழி
தலைமகனார் அவர்புகழ் இத்தமிழ்
மண்ணுலகம் வாழுங்காலம் யாவும்
அண்ணவர் ஆற்றியஅருந் தவத்தொண்டினை
இத்தமிழுலகம் நாளும்போற்றி வாழ்க!
---------------------------------------------------------------------------------------------