இந்திய தந்திரம் - மந்திரம்

365 views
Skip to first unread message

இரவா

unread,
May 30, 2008, 11:18:18 AM5/30/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

இந்திய தந்திரம் - மந்திரம்

வேதியம், அவேதியம் என்னும் இரண்டு அடிப்படைகளைக் கொண்டது, இந்திய பண்பாடு. ஏதியத்திம் மிகச் சிறந்த பகுதிதான், தந்திரம். புருஷன் என்னும் ஆண் த்த்துவத்தை வேதம் வலியுறுத்துகிறது. பிரகிருதி என்கிற பெண் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது தந்திரம். தந்திரம் என்னும் பெண் த்த்துவம் விவசாய சமூகத்தில் தோன்றியது. எவ்வாறெனில் பெண்களின் கண்டு பிடிப்பே விவசாயமாகும்.

உலகம் முழுவதும் விவசாய செயல்பாடுகள் மந்திர நடவடிக்கைகளைச் சார்ந்தே யிருந்துள்ளன. மந்திர தந்திர நம்பிக்கைகளுடன் இணைந்து வளர்ந்ததே விவசாயமாகும். நாகரிகமற்ற மக்களின் திறமையும் உழைப்பும் மதிக்கப்படாமல் அதற்கு மாறாக மந்திர தந்திரங்களுக்கே பெரு மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடியேறிய ஐரோப்பியர்கள் சடங்குகள் ஏதும் செய்யாமல் விவசாயம் செய்தனர். அவர்களுக்கு மகசூலும் அதிக அளவுகிடைத்த்து. அதனைக் கண்ட இந்தியர்கள் திகைத்த்துடன் அதிசயமாகப் பார்த்து அசந்து போயுள்ளனர்.

இந்திய பழங்குயினத்தில் 'ஹோ' என்னும் இனமும் ஒன்று. அவ்வின மக்கள் முக்கியமாக ஏழு விழாக்களைக் கொண்டாடுவார்கள். அவை ஏழும் விவசாயம் சார்புடையவை. அவை மந்திரத்தின் வழியாக விவசாய உற்பத்தியை நிச்சயம் செய்வதாகும்.

இராஜ தந்திரி என்றும் அரசியல் அறிஞன் என்றும் போற்றப்படுகின்ற சாணக்கியன், தக்க மந்திர நடவடிக்கை இல்லாமல் நிலத்தில் விதையை விதைக்கக் கூடாது! என்கிறான்.

வேதகால பொருளாதாரத்தில் விவசாயம் இரண்டாமிடத்தில் இருந்துள்ளது. என்றாலும், வேதகால இலக்கியத்திலும் விவசாயத்திலும் மந்திரம் கலந்தே இருந்தது. வேதர்கள் மேய்ப்பு இனத்தவரானதால் அவர்களுக்கு விவசாயம் முக்கமில்லை! விவசாயம் செய்ய வேண்டுமானால் நிலத்தில் கடுமையாக உழைக்க வேண்டும். விவசாயத்தினால் கிடைக்கக் கூடிய பலன் உறுதியானதில்லை. என்பதால், வேதர்கள் விவசாயத்தைச் செய்வதில்லை.

'ஓ…, தானியமே! நீயே உன் பலத்தால் வளர்க! எல்லா பண்டங்களையும் நிரப்புக! வானத்தின் இடியும் மின்னலும் உன்னை தாக்காது இருக்கட்டும்' என்னும் மந்திரத்தை விதைவிதைக்கும் போது கூற வேண்டுமென்று அதர்வண வேதம் கூறுகிறது.

பழங்கால இந்திய விவசாயிக்குப் பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பது தெரியாது. அதனால், விவசாய நிலம் நன்றாக விளைய வேண்டுமென்ற நம்பிக்கையினால், மந்திரம் விவசாயத்தில் பங்குபெறலாயிற்று.

அறியாமையின் அடிப்படையில் அமைந்தது மந்திரம். ஆனாலும் உளவியல் தூண்டலுக்கும் பழங்கால விவசாய உற்பத்தியில் மனோவியல் துணை மிகவும் தேவைப்பட்டுள்ளது.

 
...................................................... தொடரும்!

--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
May 30, 2008, 11:26:52 AM5/30/08
to minT...@googlegroups.com
ஆஹா
 
இந்திய தந்திரம் - மந்திரம்
இரவாவின் சுதந்திரம்
எந்த ஒரு கருத்தை எழுத ஆரம்பித்தாலும் அந்தக் கருத்தின் அடி ஆழம் வரையில்
சென்று அலசும் யந்திரம் இரவா அவர்கள்
 
தொடரட்டும் உங்கள் மந்திரம் நானும் கொஞ்ஜ்ம் தெரிந்து கொள்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2008/5/30 இரவா <vasude...@gmail.com>:

இரவா

unread,
May 30, 2008, 10:50:28 PM5/30/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

விவசாயம் பெண்களின் கண்டுபிடிப்பு என்றால் விவசாய மந்திரமும் பெண்களின் கட்டுப் பாட்டிலேயே இருந்திருக்க வேண்டும். விவசாயத்தின் ஆரம்பம் சடங்குகளிலிருந்தே தொடங்கியது. தந்திரமும் ஆதியில் பெண்கள் மட்டுமே முன்னின்று நடத்திய சடங்குகளையெ கொண்டிருந்தது.

பயிர்களைப் பயிரிட்ட பெண்களே அப்பயிர்களைப் பாதுகாக்க ஏற்பட்ட மந்திர சடங்குகளைச் செய்யும் சிறப்புத் தகுதி உடையவர்களானார்கள்.

விவசாய்த்துக்கு முதல் தேவை மழை. மழைச்சடங்குகள் மற்ற சடங்குகளை விட முக்கியமானவை. மழைச் சடங்குகள் முழுக்க முழுக்க பெண்களாலேயே நடத்தப்பட்டன.

கானரி தீவுகளில் உள்ள காவுஞ்சி இனத்தில் மழை உற்பத்தி பூசாரிணிகளின் வேலையாக உள்ளது.அதற்கு அவர்கள் கடலுக்குச் சென்று நீரை தடியால் அடிப்பார்கள். உலகம் முழுவதிலும் மழைச் சடங்குகளைப் பெண்களே நடத்தினர்.

பண்டைய இந்தியா பூசாரிணிகளால் நிறைந்திருந்தது. தீர்க்கதரிசினிகள் உயர்வாக மதிக்கப் பட்டார்கள். அதன் பின்னர்  கிறிஸ்தவர்வேதர் -  சீனர் போன்ற ஆணாதிக்க சமூகங்கள் புரோகிதத்தில் பெண்கள் முதன்மை நிலையிலிருப்பதை விரும்பவில்லை.

பண்டைய எகிப்தில் 'ரா' என்ற தலைமை பூசாரிணியே அரசியாகவும் இருந்தாள் என்பதும், சீனாவில் தாவோ மத்த்தில் மந்திரச் சடங்குகள் பெண்களுக்கு உடையவை என்பது குறிப்பிடத் தக்கது.

பிற்காலத்தில் ஆண்கள் பூசாரிகளாக முதன்மை பெற்றார்கள். ஆனாலும், அவர்கள் பெண்களுடன் இணைந்தே மந்திர தந்திரங்களைச் செய்ய முடிந்தது. பல தேவதைகளின் பூசாரிகள் தங்கள் ஆண்மையை நீக்கிக் கொள்ள நேர்ந்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்த பண்டைய சமூகங்களில் காணப்பட்ட ஒரு கொள்கை என்னவென்றால், உடையானது உடுத்துபவரின் பாலையே குறிக்குமாம். அதாவது, பெண்களின் ஆடை. தோற்றம் ஆகியவற்றை ஆண் பூசாரிகள் ஏற்பதற்கு, அவர்கள் பெண்களாகவே மாறுவதாகவே பொருளாகும். இன்றும் இவ்வாறு நிகழ்கிறதல்லவா?

பெண்களுடையதாக இருந்த விவசாய மந்திரத்தை, பின்பு நுழைந்த ஆண்களால் மாற்ற முடியவில்லை.

இரவா

unread,
May 31, 2008, 10:39:42 AM5/31/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


பெண் பூசாரிகளுக்கு பைராகிகள், யோகினிகள் எனப் பெயர். நிறைய ஆண்களைக் காண்கிறோம். ஆனால், அவர்கள் ஆண்களாகவே இருந்து தந்திரமந்திரங்களைச் செய்தார்களா? என்பது கேள்வி.

"ஐந்து தத்துவங்களையும் வானத்து புஷ்பத்தையும் குலப் பெண்னையும் தொழுக! இதுவே வாமாச்சாரம். பெண்ணாக மாறுவதன் மூலமே பெண் சக்தியைத் தொழமுடியும்" என்று, அகரபேத தந்திர நூல் கூறுகிறது.

ஏன் பெண்ணாக மாற வேண்டும்? ஏனென்றால், தந்திர மந்திரம் ஆதியில் பெண்களுக்கு  உடையதாக இருந்தது.

வாமம் = பெண்/காமம். ஆசாரம் = சடங்கு/நடவடிக்கை. வாமாச்சாரம் = பெண்களின் காமச் சடங்குமுறை.

தந்திர சடங்குகளில் காமத்துக்கு மாபெரும் இடம் இருக்கிறது.

தந்திரத்தின் ஒரு பிரிவே வாமாசாரம். அதுவே  தந்திரமாகிவிடாது. வாமாச்சாரத்துக்கு எதிரான இன்னொரு பிரிவும் இருக்கிறது. அதன் பெயர் தட்சிணாச்சாரம். இது, பிற்காலத்துக் கண்டுபிடிப்பு.

தந்திரம் இரகசியமான நடைமுறைகளைக் கொண்டது. எல்லாருக்கும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். சில அறிஞர்கள் அதன் உண்மைகளை அறிந்துள்ளார்கள். தந்திரம் வலிமையாக வாழும் பகுதி வங்காளமாகும்.

அபிசேகம் பெறாத தந்திரர் தந்திரர் ஆகார். வாமாச்சாரம்/ வாம வழி அபிசேகம் பெற்றவர்க்கே உபதேசிக்கப் படுவதால் அதுவே சரியான தந்திரமாக இருக்க வேண்டும்.

 

..... தொடரும்.

இரவா

unread,
Jun 1, 2008, 11:02:58 AM6/1/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


தந்திரத்தின் யோக சாதனை அல்லது உளவியல் பயிற்சிகள் என்பவை ஒருவருக்குள் உள்ள பெண்மையை உணர (வீணான செயல்) முயலும் முயற்சியே அன்றி வேறல்ல. அதாவது ஆளுமையையும் உணர்வையும் பெண்மையதாக மாற்றுவதற்கான் ஒருவித பயிற்சித் திட்டமே தந்திரயோகமாகும்.

யோகாவின் மூலமாக 'அதிசய சக்தியை' கண்டுபிடிக்க ஆர்வம் காட்டும் இன்றைய ஆர்வலர்கள், துரதிஷ்டவசமாக வெளிப்படையாகத் தெரிகின்ற மேற்படி விபரங்களைக் கோட்டைவிட்டு விடுகின்றார்கள்.

அது என்ன என்பதைப் பார்ப்போம்.

யோக சாதனா, சத்சக்கர பேதம் என்பவை, தந்திரரின் உடலியல் பார்வையை அடிப்படையாகக் கொண்டவை. இதன்படி 2 நரம்புகள் உள்ளன. (அவர்கள் நாடி என்பதை நாம் நரம்பு என்போம்) 2 நரம்புகளுக்கும் நடுவில் சுசும்மா நரம்பு என்ற நரம்பு இடுப்பிலிருந்து மூளைவரை நேரிணையாகச் செல்கிறது. இதை நாம் முதுகுத் தண்டுவடம் எனலாம். சுசும்மா நரம்புக்குள் வஜ்ராக்யா என்ற நரம்பும் அதற்குள் சித்ரினி என்ற நரம்பும் செல்கின்றன. சுசும்மா நரம்பின் 7 இடங்களில் 7 பதுமங்கள் (தாமரைகள்) உள்ளன. இவற்றை இன்றைய தந்திர ஆசிரியர்கள் நரம்புத் தொகுதி என்பார்கள். ஆனால் மற்ற சொற்களைப் போலவே பதுமம் என்ற சொல்லின் பொருளும் தந்திரத்தின் குழுக்குறியாக (துறைச் சொல்லாக) வழங்கப்படுகின்றது.

அதாவது, தந்திரத்தில் பதுமம் என்பது "பெண் குறி" (பாகம்), வஜ்ர என்றால் "ஆண் குறி" (லிங்கம்) என்கிறது, புத்த தந்திரம்.

ஆக, சுசும்மா நரம்பில் உள்ள 7 தாமரைகள் மனிதர் உடம்பில் உள்ள பெண்மையின் 7 இருக்கைகளே என்கிறது தந்திரம். ஒவ்வொரு தாமரையும் ஒரு தந்திரத்தில் இக்குறி பெண்குறியைக் குறிக்கிறது. ஏழு தாமரையிலும் ஏழு சக்திகள் உள்ளார்கள். குலகுண்டலினி, வருணலாகினி என்று பெயரிடப்பட்டுள்ளர். சக்தி என்றால் ஆற்றல் என்று பிற்காலத்தில் சொன்னார்கள். ஆனால், தந்திரத்தில் சக்தி என்றால் பெண் என்றே பொருள். மனித உடலின் 7 சக்திகள் என்பவை 7 பெண்மை ஆற்றல்களையே குறிக்கின்றன.

இரவா

unread,
Jun 2, 2008, 1:55:07 PM6/2/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


மூச்சுப் பயிற்சியின் மூலம் தந்திரயோகம் பயிலும் சாதகன் தன் இடுப்பில் உள்ள குல குண்டலினி சக்தியை – அதாவது சுருண்டு கிடக்கும் பெண்மையை எழுப்பவேண்டும். சித்ரினி நரம்பு வழியே சக்தியைச் செலுத்தி வழியில் உள்ள மற்ற தாமரைகளைக் கடந்து குண்டலினி சக்தியை உச்சித் தாமரையாகிய ஆயிரம் இதழ் தாமரையை அடையுமாறு செய்ய வேண்டும். இதை உணர்வின் உச்சிநிலை என்பார், தந்திரர்.

இது முழுமையாகப் பெண்மையர் ஆக்குவதுதாவே அன்றி வேறில்லை. தந்திரர் கோட்பாடு சரியா? தவறா? என்று விவாதிக்க இது இடமில்லை. இந்த நடைமுறை பெண்ணாக மாறுவதன் மூலம் எல்லையற்ற பெண் சக்தியை சாந்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் என்பதை உணர்த்தவேயாகும்.

தந்திரத்தின் ஒவ்வொரு நேர்மையான மாணவனும் தன்னை திரிபுர உந்தரியுடன் அய்க்கியம் ஆக்கவே விரும்புகிறான். இதற்காக அவன் செய்யும் பயிற்சிகளில் ஒன்று தன்னை பெண்ணாக நினைக்கப் பழகிக் கொள்வது. * இந்த முறையைச்செய்ய முயன்றவர்களில், இராமகிருஷ்ண பரம அம்சரும் ஒருவர் *

 

இரவா

unread,
Jun 2, 2008, 8:00:02 PM6/2/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

தந்திரர் தம் ஆன்மீக பயிற்சியில் ஆண் பெண்ணாகியே ஆகவேண்டும் என்றும் தன்னில் உள்ள பெண் இயல்பை தரிசிக்காத வரை உண்மை அன்பை தன்னால் அனுபவிக்க முடியாது என்றும் நம்பினார்கள்.

ஏன் இப்படியென்றால்,

காமத்தை ஒழிக்க வேண்டும் என்று தந்திரர் கூறுவதே இல்லை. மாறாக ஞானம் அடைய வேண்டுமானால் அஞ்சு காமத்து உழல்வீர் என்று கூறுகிறார்கள்.

ஆண் ஏன் பெண்ணாக மாற வேண்டும்? ஏன் என்றால், ஆதியில் பெண்கள் பூசாரிகளாக இருந்தார்கள். தாமும் அப்படியாக வேண்டும் என்பது தான். இன்னும் ஆழமாகப் பார்த்தால், இப்படிப்பட்ட நிலைமைகளினால் பொருள் ஆதாயம் இருக்கிறது. அன்றைய தொழில் வளர்ச்சி மந்தமாக இருந்ததினால், விவசாயம் என்னும் ஒரு தொழில் மட்டும் இருந்த்து, அதனை மேலும் வளப்படுத்த வேண்டும் என்னும் அவாவினால், போலியான மந்திர சடங்குகளைச் சார வேண்டிய நிலையுண்டாயிற்று.

இந்தியரின் மனைவிகள் பொசுக்கும் வெயிலில் மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு, நிலத்தில் விதை விதைத்தார்கள். இச்செயலைக் கத்தோலிக்க பாதிரிமார்கள் எதிர்த்தார்கள். அதற்கு இந்தியர்கள் கூறியதாவது, பெண்களுக்கே குழந்தை பெறமுடிகிறது. நம்மால் முடிவதில்லை. எனவே பெண்கள் விதை விதைத்தால், தானியம் மும்மடங்கு விளையும். ஏன் என்றால் பெண்களுக்கே உண்டாகவும் உண்டாக்கவும் தெரியும்! அதெல்லாம் நமக்கு வராது! என்றார்கள்.

இதுவே விவசாய சடங்கின் அடிப்படை நம்பிக்கை. மனித வளமும் இயற்கை வளமும் ஒரே இயற்கை விதிக்கு உட்பட்டது. மனித பெருக்கமும் விவசாய பெருக்கமும் உறவுள்ளவை. எனவே தொற்றுதல் / போலியாகச் செய்தல் மூலம் ஒன்றை ஒன்று பாதிப்பதாக இருந்தது.

அதாவது மனித உடலுறவு மூலம் அதே நிகழ்வை பயிர்களில் தூண்டமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

மத்திய ஆப்பிரிக்காவில் வாழும் பகண்டர்களில் இரட்டைக் குழந்தை பெற்ற பெற்றோர் அசாதாரண வளம் உள்ளவராகக் கருதப்பட்டார்கள். அதே வளத்தை அவர்கள் வாழை மரத்தில் ஏற்ற முடியும் என நம்பினார்கள். இரட்டைக் குழந்தை பெற்றவர்களுக்கு விழா நடத்துவார்கள். அதன் நோக்கம் அவர்களின் இனப்பெருக்க சக்தியை தாவரத்துக்கு கடத்துவதுதான்.

"தாய் தரையில் மல்லாந்து படுப்பாள். அவள் கால்களுக்கிடையில் வாழைப்பூவை வைப்பார்கள். தந்தை தன் குறியால் அப்பூவை தட்டிவிடுவான். பிறகு நாடு முழுவதும் உள்ளவர்கள் தோட்டங்களுக்குச் சென்று இதையே செய்வார்கள். வாழை அபரிமிதமாக கனிகளை ஈன வேண்டும் என்பதே நோக்கமாகும்.

இரவா

unread,
Jun 3, 2008, 7:21:53 AM6/3/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

ஆஸ்திரேலிய பவோரியன் இனத்தவர், குழந்தை பெற்ற பெண்ணுக்கு ஒரு மரத்தின் முதல்கனியைத்  தந்தால் அடுத்த வருடம் அம்மரம் அதிகமான பலன்களைத் தரும் என்று நம்பினார்கள். மலடியானவள் த கணவனின் நிலத்தையும் சத்தற்றதாக்கி மரங்கள் பலன் தருவதையும் தடுத்துவிடுவாள் என்று நம்பினார்கள்.

(மலடான பெண்களுக்கு நம் சமூகத்தில் உள்ள மதிப்புக்குறைவுக்கு அவள் தனிச் சொத்துக்கு வாரிசை உண்டாக்கவில்லை என்ற காரணத்தை விட இந்தக் காரணம் பழங்காலத்தில் முக்கியமாக இருந்திருக்க முடியும். இன்றுவரை அவளுக்கு மதிப்புக் குறைவே தரப்படுகிறது. இன்று இது தேவையற்றது)

கருத்தரித்த பெண் விதை போட்டால் நல்ல மகசூல் கிடைக்கும் என நிகோபார் தீவினர் நம்பினார்கள். சில அமெரிக்க பூர்வ குடிகள், பூமித்தாயிடம் இருந்து குழந்தை நேரடியாக பெண்ணின் கருப்பைக்கு வருவதாக இப்பொழுதும் நம்புகிறார்கள். (அமெரிக்கர் என்றால் அறிவில் சிறந்தவர்கள் என்று பொருளா என்ன?)

வட இந்தியாவில் குழந்தைப் பேற்றுக்காக ஒரு மரத்தை கடவுளாக வழி படுகின்றார்கள்.குழந்தை வேண்டுவோர்க்கு கோயில்களில் தேங்காய்களை தருகிறார்கள். தேங்காய்க்கு சக்தி உள்ளது என்கிற நம்பிக்கை.

இன்று மதமாக உள்ளது அன்று மந்திரமாக இருந்தது.

மலடிகள் மழையில் நனைவார்கள் அல்லது தம்மேல் நீர் ஊற்றிக் கொள்வார்கள். நீர் நிலத்தை வளம் செய்வது போல தம்மையும் செய்யும் என்று நம்புகிறார்கள்.
பஞ்சாபில் குழந்தை வேண்டும் பெண்கள் நாற்சந்தியில் குளிக்கிறார்கள். அல்லது கிணற்று நீரில் முக்கி எடுக்கிறார்கள். இந்த சடங்கால் மரத்தின் / நீரின் வளம் பெண்ணுக்கு ஏறிவிடும். அந்த மரம் பட்டுவிடும். கிணறு வற்றிவிடும். பெண் உண்டாகிவிடுவாள் என்று நம்புகிறார்கள்.

பூஷ்மன் இன சிறுமிகளை மழை காலத்தில் தக்க காப்பிடங்களில் அடைத்து வைப்பார்கள். காரணம், மழைபட்டால் கர்ப்பம் தரித்துவிடுவார்களாம்.

(நம்ம ஊரிலும் இம்மாதிரியான நம்பிக்கை உள்ளது. ஓரக்கண்ணால் பார்த்தால் நீ புள்ளத்தாசி! என்று ஒரு கவிஞன் பாடியுள்ளான்)

கோரக்பூர் பஞ்சத்தின் போது பெண்கள் இரவில் நிர்வாணமாக வயலுக்குச் சென்று உழுதார்கள். வடக்கு வங்கத்தில் பஞ்சம் வந்தபோது சில பழங்குடி பெண்கள் நிர்வாணமாக மழை தேவதை முன் நடனம் ஆடினார்கள்.

இந்தப் பழக்கம் நிறைய பழைய இனங்களில் உள்ளது.

இரவா

unread,
Jun 3, 2008, 9:33:15 PM6/3/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

பூமித்தாய்க்கும் மனிதத் தாய்க்கும் இருந்த பரஸ்பரம் பற்றி பண்டைய உலக தெய்வங்களும் தெரிவிக்கின்றன.

மார்க்கண்டேய புராணத்தில் ஒரு பிரிவு தேவி மகாத்மியம். அதில் தேவி கூறுகிறாள், "ஓ… கடவுளரே! நல்ல மழைக்காலத்தில் என் உடலில் இருந்தே வளரும் உயிர்காக்கும் காய்கனிகளால் உலகம் அனைத்தையும் வளர்க்கிறேன். பின் இவ்வுலகில் நான் சாகம்பாரி என பூசிக்கப்படுவேன்" என்றிருப்பதிலிருந்து பண்டைய காலத்தில் செடிகளும் கொடிகளும் பெண்களின் பெண்ணின் உடம்பிலிருந்தே வளர்கின்றன என்னும் நம்பிக்கை இருந்துள்ளது என்பதை மெய்ப்பிக்கிறது.

ஹரப்பாவில் ஒரு முத்திரை கிடைத்துள்ளது. அதில் கால்களை அகட்டி விரித்த நிலையில் தலைகீழாக நிற்கும் பெண்ணின் கருப்பையில் இருந்து செடி கிளம்புவது போல வரைந்துள்ளது. அதேபோல், குப்தர்காலத்து முத்திரையில் பெண்ணின் கழுத்திலிருந்து தாமரை எழும்புகிறது.

தாவரம் தருபவளும் பெண். உணவு தருபவளும் பெண். அவளே அன்னபூரணி. அன்னபூரணி என்றால் உணவுதருபவள் என்று தானே பொருள்.

 

பூரண கும்பம்

பூரண கும்பம் என்பது நீர் நிறம்பிய மண்குடம். சதுரமான மண் தகடில் ஐவகை தானியம் நிறைத்து அதன் மேல் நிரைகுடம் வைக்கப்படும். குடத்துள் தயிர் சோறு வைத்து குடத்தின் கழுத்தைச் சுற்றி சிவப்பு நூல் கட்டுவார்கள். குடத்தின் வாயில் ஐந்து வகை இலைகளால் மூடி அதன் மேல் அரிசி, தேங்காய் வைத்து குங்குமம் பூசுவார்கள். குடத்தின் மேல் குங்குமத்தால் குழந்தை உருவம் வரைவார்கள். இது தான் பூரண கும்பம்.

குடம் வைக்கும் சதுர மண் தகட்டில் ஒரு படம் வரைவார்கள். அதையே யந்திரம் என்பர். அந்த படத்தின் நடுவில் எட்டிதழ் தாமரை இருக்கும். தாமரை படத்தைத் தாவரங்கள் தொடுவது போல் வைப்பர்.

இதன் பொருளாவது, தாமரை பெண்குறியைக் குறிக்கும். குடம் கர்ப்பப்பையைக் குறிக்கும். குழந்தை இனப்பெருக்கத்தைக் குறிக்கும். செடிகொடி தொடும்படி வைப்பது மனித வளம் தாவர வளத்தை தூண்டப்படும் என்பதாகும்.

இதுதான் துர்க்கை பூசை. இதில் "ஆன்மீகம்" என்பது என ஒன்றுமில்லை. இது விவசாய மந்திர வேலை.

Tthamizth Tthenee

unread,
Jun 3, 2008, 10:43:11 PM6/3/08
to minT...@googlegroups.com
"இதுதான் துர்க்கை பூசை. இதில் "ஆன்மீகம்" என்பது என ஒன்றுமில்லை. இது விவசாய மந்திர வேலை."
 
துர்க்கை பூசை, மந்திர வேலை
என்று ஒப்புக் கொண்டாலே அங்கு
ஆன்மீகம் வந்துவிடுமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2008/6/4 இரவா <vasude...@gmail.com>:

இரவா

unread,
Jun 4, 2008, 12:49:09 AM6/4/08
to minT...@googlegroups.com
தேனி அய்யாவுக்கு ஆன்மீகம் என்றால் என்னவென்று பாடம் நடத்தும் நிலையில் நான் இல்லை!

2008/6/4, Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jun 4, 2008, 6:34:37 AM6/4/08
to minT...@googlegroups.com
இரவா அவர்களே ஆன்மீகத்தைப் பற்றி
பாடம் நடத்த உங்களைவிட தகுதியானவர் யார்..?
நீங்கள்தான் மிகத்தகுதியானவர்,

இரவா

unread,
Jun 7, 2008, 11:04:45 PM6/7/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


தந்திரத்தின் காம கோட்பாடும் நடைமுறையும் படு ஆபாசமானவை. அதற்கு ஆன்மீக போர்வை போர்த்துகிறார்கள்.

தந்திரத்தின் மீது பிற்காலத்தில் ஏற்பட்ட மதக்கொள்கை புரிதலுக்கு உதவாதது. தந்திரம் மிகப் பழமையானது. நமது பண்பாட்டை வரலாற்றை புரிந்துகொள்ள வேண்டுமானால் தந்திரத்தின் உட்பொருளை ஆராயலாம்.

இந்தியப் பண்பாட்டை மிகவும் வலுவாகப் பாதித்தது தந்திரம்.

தந்திரச் சடங்குகள் பெண்குறியை மையமாகக் கொண்டவை. பெண்குறி பாகா, லதா எனப்படுகிறது. அதனால், தந்திரச் சடங்குகள் பாகயாகம், லதா சாதனா எனப்படுகிறது. என்பதனால் தந்திரச் சடங்குகள் பெண் குறிச் சடங்குகள் என்றறியலாம்.

பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளைக் கொல்ல பிளினி ஒரு நிவாரணம் கூறுகிறார். கர்ப்பிணிகள் வெறும் காலும் விரிந்த கூந்தலுமாய் பாவாடைகளை இடுப்புக்கு மேல் தூக்கிக் கொண்டு வயலில் நடக்க வேண்டும்.

சடங்கள் நல்லபடியாக நிறைவேற பூசாரிணி தனது உடையைக் களைந்து விடவேண்டும் என்பது இந்தியா முழுவதும் விதியாக உள்ளது.

பிற்காலத்தில் ஆண்கள் புரோகிதர்களாக வந்தபோது அவர்களும் தங்கள் ஆடைகளைக் களைந்தும் மாற்றியும் நிற்க வேண்டும் என்று விதிவகுக்கப்பட்டது. அதன்பின் சடங்குகளில் ஆண்குறிச் சின்னம் இடம் பெற்றது.

தந்திரங்களில் பயன்படுத்தப் பெறும் யந்திரங்கள் கடவுளர் அமரும் ஆசனங்கள் என்பர். ஆனால் அது உண்மையல்ல! யந்திரம் பெண் உறுப்பைக் குறிப்பதாகும்.

பழங்காலத்து தெய்வச் சிலைகள் இராட்சத இடுப்புகள், மகாபெரிய மார்பகங்கள், கர்ப்ப வயிறு கொண்ட பெண்களின் சிலைகளாக உள்ளன. அவற்றில் சில உறுப்புகள் பெரிதாகவும் சில உறுப்புகள் சிறியதாகவும் உள்ளன. உறுப்புகளில் முதன்மையானது மார்பகம் என்றே கருதப் பட்டது. காரணம் அதுவே இனப்பெருக்கத்தைச் செய்வதாகக் கருதப்பட்டது. இன்றும் பிரிட்டிஷ் நியூகினியாவில் ஒரு இனத்தவர் மார்பகத்தையே கர்ப்ப உறுப்பாகக் கருதுகின்றனர்.

தாம் முக்கியமாக்க் கருதுவதைப் பெரிது படுத்துவதும் எண்ணிக்கையை அதிகமாக்குவதும் பண்டைய மக்களின் பழக்கமாக இருந்துள்ளது.

உதாரணமாக, தலை முக்கியம் என்று கருதி இராவணனுக்குப் பத்து தலை வைத்தனர். மார்பகம் முக்கியம் எனக்கருதி, சக்திக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததாகப் புராணத்தில் கூறினர்.

உற்பத்தி செய்யும் உறுப்பு என மார்பகத்திலிருந்து பெண் குறிக்கு இறங்கிய காலத்தில் தோன்றியதே தந்திரமாகும்.

இரவா

unread,
Jun 9, 2008, 12:41:24 PM6/9/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


பெண்ணுக்குள் சீவசக்தி உள்ளது. அதன் வெளிப்பாடே இரத்தப்போக்கு என்றார்கள். அதனால், பெண் ஒரு விதத்தில் தீட்டானவள், ஒரு விதத்தில் புனிதமானவள் என்பதாலும் ஆண்கள் நெருங்கக் கூடாதவள் ஆனாள்.

ஆணாதிக்க சமுதாயம் வந்தது. மதத்தில் பெண்களின் பிடி தளர்ந்தது. அப்போது பெண் தீட்டான – அசுத்தமானவளாகக் கருதப்பட்டாள். பெண் தீயவள். தீமையின் மொத்த உருவம். சூனியக்காரி எனப்பட்டாள்.

உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் மாதப்போக்காகும் போதில் முகத்தில் செங்காவி பூசிக் கொண்டனர். இது மற்றவர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் தம் வளமையைக் கூட்டிக் கொள்ளவும் ஏற்பட்டது. திருமணங்களில் மணப்பெண்ணின் நெற்றியில் செஞ்சாந்து பூசப்பட்டது. அது பிற ஆண்களிடமிருந்து அவளைப் பாதுகாக்க ஏற்படுத்தப் பட்டது.

இதுவே, முகத்துக்கு அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் தொடக்கமாகும்.

மழைக் காலத்தில் பூமித்தாய் மாதவிடாய் ஆகிறாள். எனவே விவசாய வேலைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற நம்பிக்கை வங்கத்தில் இருந்தது.

திருவாங்கூரில் திருபுக்காராட்டு விழா நடக்கும். அங்குள்ள தேவி வருடத்துக்கு 8-10 தடவை மாதவிலக்காகி விடுகிறாள் என்று தேவியில் உலோகச் சிலையைச் சுற்றியுள்ள சீலை வண்ணானுக்கு கொடுக்கப்படும். அந்தத் துணி புனிதமாகக் கருதப்படும்.

 


--

இரவா

unread,
Jun 10, 2008, 12:59:52 PM6/10/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

"5" இன்றி ஓ.. தேவி எப்படி மந்திரம் சொல்வது?"  '5' ம'கள் தான் கடவுளரை மகிழ்விக்கின்றன! என்று ஏடுகள் கூறுகின்றன.  அவை என்னென்ன?

 

மது, மாமிசம், மச்சம்(மீன்) முதிரை (தானியம்) மைதுனம் (கலவி)

இந்த ஐந்தைக் கொண்டுதான் கடவுளைக் காண முயல்கின்றனர். நாமோ கடவுளைக் காண முற்படாவிட்டாலும் இந்த ஐந்தும் எதற்கு என்று அறிந்து கொள்ள வேண்டும்.

மீன், மாமிசம், தானியம் இவற்றை ஏற்றுக் கொள்ளலாம். மதுவையும் மாமிசத்தையும் என்ன செய்ய? என்கிறீர்களா. தந்திரத்தில் இந்த இரண்டுந்தாம் முக்கியமானவை.

மது இல்லாமல் கடவுளைக் காண செய்யப்படுகின்ற பயிற்சிகளைச் செய்ய முடியாது. 'மது இல்லாவிட்டால் சித்தி இல்லை'. எனவே கவனமாகக் குடி! அவளையும் குடிக்கச் செய். பிறகே மந்திரம் ஓதலாம்! என்கிறது, தந்திரம்.

இவ்வாறு செய்யப்படும் சாதனைக்கு வாமாச்சாரம் என்று பெயர். இதனை பஞ்ச மகர வித்தை என்பார்கள். இதனை புனிதமான வித்தை என்கிறார்கள்.

இந்த வித்தையை வங்காளம், அஸ்ஸாம்,கேரளாம் ஆகிய பகுதிகளில் மிகவும் இரகசியமாகச் செய்துவருகின்றார்கள். இது மிகவும் வசதியுள்ளவர்கள் மட்டுமே பயிலக் கூடிய பயிற்சியாக இருந்து வருகிறது. இது, சிற்றின்பத்திற்காகச் செய்யப்படுவதில்லை. பேரின்ப நிலையை அடைவதற்காகச் செய்யப்படுகின்ற பயிற்சி என்கிறார்கள்.

இந்த தாந்திரிக பயிற்சியைச் சிறப்பிக்க, அஸ்ஸாமில் காமாக்கியா என்று ஒரு கோயில் இருக்கிறது. அதன் மூலஸ்தானத்தில் பெண் குறியையே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். தாந்திரிக யோகத்திற்கு அந்த கோயிலே முதன்மையாகக் கருதப்படுகிறது.

இந்த யோகத்தில் ஈடுபடும் பெண்கள் பைரவி என்றும் ஆண்களை பைரவர் என்றும் அழைக்கிறார்கள்.

இந்த யோகத்தை விரிவாக "திருமந்திரம்" "கந்த புராணம்" விவரிக்கிறது.

இரவா

unread,
Jun 10, 2008, 10:03:28 PM6/10/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


கக

உடலுறுப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி முழுமையான இன்பத்தை அடையும் முறையைத்தான் தாந்திரிக தந்திரம் என்கிறார்கள்.

            Human bodily sources are fully utilized

பாலுணர்வின் விளைவாகத்தான் பிரபஞ்ச உற்பத்தி என்று இறைவழி ஒப்புக் கொள்கிறது

Becomes one with God என்பதன் உண்மையான விளக்கம் யாருக்கும் தெரியவில்லை. மனிதன் எப்படிக் கடவுளோடு இணைய முடியும்? என்று எதிர்ப்பிரச்சாரம் செய்ததன் விளைவாகத்தான் தாந்திரிக முறை தியான முறை பற்றி யாரும் விரிவாகவும் விவரமாகவும் புரிந்து கொள்ளவில்லை.

ஆண் பெண் சேர்க்கையின் போது இரண்டு உடலும் மனமும் ஒன்றாகி இணைந்து உச்சநிலை இன்பத்தில் இருக்கும் போதுதான் இறைவனுடன் இறைவனது அன்பில் ஆனந்த சாகரத்தில் மூழ்கலாம்! என்கிறது, தந்திர தியான அனுபவம்.

ஆண் பெண் இறைவன் ஆகிய இம்மூன்றும் இணைந்த நிலையை 'சமாதி' யோகம் என்கிறார்கள். சமாதி என்பது முதிர்ந்த இன்பநிலையைக் குறிக்கும்.

இந்த தாந்திரிக தியானத்தினால் நல்ல எண்ணங்கள் உதயமாகும். கிரியாமனம் இயங்க ஆரம்பிக்கும். அதன்பின் எண்ணியது எல்லாம் நடக்கும்.

மலை ஏறிப்போகும் போது மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. அப்போது வெளிமன உணர்வுகள் அடங்கி, கிரியா மனம் திறந்து கொள்கிறது. அவ்வேளையில் என்ன எண்ணினாலும் அது நடக்கும் என்பதால், மலைக்குச் சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்த மலைக்கோயில்கள் உருவாக்கப்பட்டன. மலைக்கோயிலுக்குச் சென்றான்! நான் நினைத்தது நடந்தது! இறைவன் எனக்கு வரமளித்துவிட்டான்! என்று, மலையேறுவதனால் உண்டாகும் நன்மையை அறியாமல் பேசுவோர் உண்டு.

வெளிமனம் அடங்கும் போது உள்மனம் திறக்கும். இதுதான் உலகறிந்த உண்மை. அதை அடையும் வழிதான் தாந்திரிக தந்திர முறைகள்.

இம்முறையின் நன்மையைக் கருத்தில் கொண்டே திருமணமுறைகள் ஏற்படுத்தப் பட்டன. மண உறவுமுறைகள் எல்லாம் தாந்திரிக தந்திர முறையினால் அடையக்கூடிய இன்பத்தையும் பயனையும் அடையச் செய்வதற்காகவேயாகும்.

இறைவழி நாட்டத்திற்கு இரண்டுமுறைகள் இருந்தன. ஒன்று தாந்திரிக தந்திர உறவுமுறை. மற்றொன்று, ஆன்மிக நாட்ட முறை. ஆன்மிக நாட்டமுறையை விட தாந்திரிக தந்திர முறையை மேற்கொண்டவர்களே சமாதி நிலையை அடைவார்கள்.

இம்முறையை அடிப்படையைக் கொண்டே உலகில் மதங்கள் அனைத்தும் தோன்றின.

அடுத்து 'ஓம்' என்பது என்ன என்றும் பிரபஞ்சம் என்றால் என்ன என்றும் காண்போம்.

இரவா

unread,
Jun 11, 2008, 12:47:12 PM6/11/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


௧௨

ஓங்காரம் என்பது ஒரு மாபெரும் சிவ சக்தியின் சின்னமாக விளங்கி வருகிறது. பல பெயர்களில் பல மதங்களில் குறிப்பாக இந்து, ஜைனம், புத்தம் ஆகிய மதங்களில் ஓங்காரச் சின்னம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

      

ஓங்காரமானது ஜீவன்களின் துன்பமான பிறப்பையும் சிறப்பையும் விடுதலை செய்து ஜீவன்களை விடுவிக்கும் சக்தியுடையது என்று தந்திர நூல்கள் கூறுகின்றன.

                                                    
                                                    ஓம் தேவநாகரி சின்னம் 
                                                 

இந்த ஓங்காரச் சின்னம் ஆண்-பெண் உறுப்புகளின் இணைப்பைக் குறிக்கிறது.

                                              
                                                      ஸ்வஸ்திகா சின்னம்   
       

கிராஸ் மற்றும் ஸ்வஸ்திக் சின்ன்ங்கள் மிகவும் தொன்மைக் காலந்தொட்டே இருந்து வருகிறது. இதம் இரகசியங்களை உணர்ந்து படைப்பவனைத் தொழுதிருக்கிறார்கள்.

தாந்திரீகள் ஸ்வஸ்திகா சின்னத்தை மங்களகரமான சின்னமாக எடுத்துக் கொண்டார்கள். இச்சின்னம் அமெரிக்க போன்ற மேலை நாடுகளிலும் பரவியது. அதை அவர்கள் Sex energy force என்று சொல்கிறார்கள்.

கொலம்பஸ் காலத்துக்கு முன்பே கிராஸ் மற்றும் ஸ்வஸ்திகா சின்ன்ங்கள் ஆண்-பெண் பாலுணர்வு சின்னங்களாகக் கருதி வந்துள்ளனர்.

ஸ்வஸ்திகா சின்னத்தின் புனிதம் கருதிய சீன அரசு, அச்சின்னத்தை படமாகவோ, துணியிலோ அச்சிட்டோ பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதித்து அதன் புனிதம் பாதுகாக்கப்பட்ட்தாகச் சீன வரலாறு குறிப்பிடுகிறது.

images 4.jpg
images 1.jpg
images.jpg

இரவா

unread,
Jun 12, 2008, 2:49:10 AM6/12/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com
ஓம் மணி பத்மே ஹூம்(தேவநாகரி: ॐ मणि पद्मे हूँ, IAST:oṃ maṇi padme hūṃ),
என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி
மந்திரம் எனவும் அழைப்பர்.

இந்த ஆறெழுத்து மந்திரம்(ஷடாக்ஷர மந்திரம்) அவலோகிதேஷ்வரருடன்
தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட
அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள்
கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி(ஆறெழுத்துகளின் அதிபதி) என
அழைக்கப்படுகிறார்.


அவலோகிதேஷ்வரரின் அவதாரமாக கருதப்படும் தலாய் லாமாவின் பக்தர்களால் இந்த
மந்திரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மந்திரத்தின்
ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில்
செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு
முறை இந்த சக்கரத்தை சுழற்றும் போது, அது மந்திரத்தின் உச்சரித்ததின்
பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.

பல்வேறு எழுத்துமுறைகளில் மணி மந்திரம்:

திபெத்திய வரிவடிவம்: ཨོཾ་མ་ཎི་པ་དྨེ་ཧཱུྃ་(எழுத்தில்:ஓம் மணி பத்மே
ஹூம், உச்சரிப்பில்:ஓம் மணி பே மே ஹூ(ம்)
தேவநாகரி: ॐ मणि पद्मे हूँ;
சீன மொழி 唵嘛呢叭咪吽, pinyin ஆன் மணி பாமி ஹோங்
கொரிய ஹங்குல் 옴마니반메훔, ஓம் மணி பான் மே ஹூம்
ஜப்பானிய கடகனா オンマニハツメイウン ஓன் மனி ஹட்ஸு மே ஊன்
மங்கோலிய மொழி: Ум маани бадми хум
வியட்னாமிய மொழி: Úm ma ni bát ni hồng or Án ma ni bát mê hồng

[பொருள்

இந்த மந்திரத்துக்கு பல்வேறு பௌத்த பிரிவினர்களால் பல்வேறு பொருட்கள்
கூறப்படுகின்றன.

மணி பத்மே என்றால் தாமரையில் இருக்கும் மணி என்று பொருள்(பத்மம் -
தாமரை). இங்கு மணி என குறிப்பிடப்படுவது அனைத்தையும் தர வல்ல சிந்தாமணி
ரத்தினம் ஆகும். ஆனால் டோனால்ட் லோபெஸ் என்பவர் மணிபத்மே என்பது மணிபத்மா
என்பதின் பெண்பால் விளி எனக்கருதுகின்றார்(வடமொழியில் பெண்பால் பெயர்களை
விளிக்கும் போது கடையெழுத்து ஏகாரம் பெறும்). எனவே இது மணிபத்மா என்ற
போதிசத்துவரை குறித்தது என இவர் கருதுகின்றார். மணிபத்ம(கையில்
ரத்தினமும் தாமரையும் ஏந்தியவர்) என்பது அவலோகிதெஷ்வரரின் இன்னொரு பெயர்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓம் என்பது அனைத்து மந்திரங்களிலும்
முன்னொட்டாக வருவது மிகவும் புனிதமாக கருதப்படுவது. ஹூம் என்பது ஒரு
பீஜாக்‌ஷரம் ஆகும். குறிப்பித்தக்க பௌத்த மந்திரங்களில் இது பின்னொட்டாக
வருகிறது.

எனினும் பௌத்தத்தில் மந்திரங்களின் பொருள் இரண்டாம் பட்சம் தான்.
மந்திரத்தின் மேலும் மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது
போதிசத்துவரின் மீதுள்ள நம்பிக்கையே முதண்மையானது என பல மகாயான
சூத்திரங்கள் கூறுகின்றன.


காரண்டவியூக சூத்திரம்

இந்த மந்திரம் முதன் முதலின் காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது.
இந்த சூத்திரம் திபெத்திய பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம்
ஆகும். இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், "இது தான்
மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம்
வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து
பெற்றேன்"


ஷிங்கோன் பௌத்தத்தில் பயன்பாடு

ஷிங்கோன் பௌத்தத்திலும் இந்த மந்திரம் பரவலாக பயனபடுத்தப்படுகிறது.
எனினும் இந்த மந்திரத்தை விட ஓம் அரோ-ருக்ய ஸ்வாஹா என்ற மந்திரத்தையே
அவலோகிதேஷ்வரருக்காக அதிகமாக பயன்படுத்துகின்றனர்.


வேற்றுமை

இந்த மந்திரத்தில் இறுதியில் ஹ்ரீ:(ह्री:) என்ற பீஜாக்‌ஷரம் எப்போதாவது
இணைக்கப்படுவதுண்டு. ஹ்ரீ: என்பது அமிதாப புத்தரின் பீஜாக்‌ஷரம் ஆகும்.
அவலோகிதேஷ்வரர் அமிதாபரின் அம்சமாக கருதப்படுவதால் இதை மணி மந்திரத்தில்
இறுதியில் சேர்க்கப்படுவதுண்டு.

2008/6/11, இரவா <vasude...@gmail.com>:

இரவா

unread,
Jun 12, 2008, 10:33:57 PM6/12/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


௧௩

தந்திரம்

தந்திரம் என்பது தாய் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை. வேதியம் என்பது ஆண் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை.

தந்திரம் மதம் சார்ந்ததல்ல. சமுதாயம் என்னும் மக்கள் ஒழுக்கம்.  தன் + திரம் = தந்திரம். தன் = விருத்தி செய்தல். திரம் = இனம். தன்னின விருத்தியே தந்திரமாகும். இது உலகத் தோற்றத்தைக் குறிப்பது.

பண்டைய தாயாட்சி சமுதாயத்தைப் பற்றியும் அதன் சிறப்புப் பண்பான சடங்குகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சடங்குகளின் நுட்பத்தை அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல், பொதுவாகப் பார்த்தால், "கடவுளே உலகைப் படைத்தார்" என்ற விளக்கத்தையே கருத நேர்ந்துவிடும்.

சிந்துவெளியில் கண்டெடுக்கப் பெற்ற முத்திரைகளில் தந்திரத்தின் கூறுகள் காணக் கிடைக்கின்றன. சிந்து வெளி நாகரிகம் விவசாய நகர நாகரிகம் அங்கு விவசாய மந்திர சடங்குகளான தாந்திரிகம் இருந்த்தில் வியப்பில்லை. இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது தாந்திரிக தந்திரம்.

இந்த தந்திரங்கள் இந்தியப் பண்பாட்டில் ஆழப் பதிந்துள்ளது. இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற தொகுப்பின் பல்வேறான சடங்குப் பகுதிகள் தந்திரத்தில் உள்ளவையே ஆகும்.

இந்துக்கள் சக்தி என்று சொல்வது தந்திரத்தைக் குறிப்பதாகும்.

புத்த தத்துவங்களில் தந்திரங்களின் பாலியல் உவமைகள் தாந்திரிக தத்துவத்தின் கூறுகள் அதிகமாக உள்ளன. இவை புத்த வார்த்தைகளால் கூறப்படுகின்றன.

தாந்திரிகத்தில்                                              ஆண் - பெண்

இந்து தந்திரத்தில்,                                        சிவன்  - சக்தி

புத்தத்தில்                                                      வஜ்ர – பத்ம

                                                                        பிரக்ஞா – உபய

வைணவ சகஜியர்                                        கண்ணன் – ராதை

இரசவாதம்                                                    ரசம் – மைகா

 

என்று மாற்றிக் கொண்டுள்ளன.

 

 
இன்றைய தந்திரத்தில் மேலோடும் பக்தி, பூசை, மோட்சம் என்பதெல்லாம் ஆதி தந்திரத்தின் ஆண் பெண் கூடலும் அதனை வலியுறுத்தும் சடங்குகளும் மறைந்து கிடக்கின்றன.

இக வாழ்வில் விடுதலை பெற விரும்புகின்றவர் முதலில் த உடலைப் பேண கற்கவேண்டும்.

                        'மைகா உன் விதை. ரசம் என் விதை

                        இவற்றின் கூடலில் ஓ – தேவியே

                        மரணமும் வறுமையும் அழியும்.'

என்று உடல் விடுதலையைக் கூறுகிறது. கூடல் என்பது தாந்திரிகத் தந்திரத்தின் பொருள் முதல் வாதம் ஆகும்.

தந்திரத்தில் யோகப் பயிற்சிகள் கூறப்பட்டுள்ளன. தந்திரம் விவசாயத்துடன் இணைந்தது. இது, வேளாளர் நாகரிகத்தின் வேராகும். வேளாளர் நாகரிகத்தை விவரிப்பது திருக்குறள்.

தாந்திரிகம் வேதத்துக்கு எதிரானது.

 

இரவா

unread,
Jun 14, 2008, 1:22:27 PM6/14/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

௧௪

தந்திரத்திலிருந்து தோன்றியது, உடல் தத்துவம். உடலைப் பாதுகாக்க உருவானது, மருத்துவம். மனிதர்கள் பிறக்கும் முறையிலேயே இயற்கையும் பிறந்தது – என்று, தாந்திரிகர்கள் நம்பினார்கள்.
அவர்களிடம் ஆன்மா, கடவுள், சொர்க்கம், நரகம், பலி, பிரார்த்தனை போன்ற மூட நம்பிக்கைகள் இல்லை.

உடலில் உள்ளதே உலகில் உள்ளது

உலகில் உள்ளதே உடலில் உள்ளது

பிரபஞ்சத்தின் நுண்வடிவே மனித உடல்

 

உடலில் உறைந்துள்ள சக்திகளை ஊக்குவித்தால், புற உலக வெற்றிகளைப் பெறமுடியும். அவ்வாறே இயற்கை சக்திகளை அறிந்து கட்டுப்படுத்துவதன் மூலம் மனிதன் அக சக்திகளை வளர்க்க முடியும்! என்றனர். இதுவே தாந்திரிகத்தில் உடல் தத்துவம்.
 

இந்த தத்துவத்தைக் கையாண்டவர்கள் சித்தர்கள். உலகமும் உடலும் ஒரே மூலப்பொருளால் ஆனது. இரண்டிலும் ஒரே விதமான சக்தியும் ஒரே மாதிரியாக இயங்குகின்றன என்கிறார்கள்.

தாந்திரிகர்கள் கூறும் யோகம் உடம்பை முதன்மைப் படுத்துகிறது. உடம்புக்குள் உண்மை தேடல் என்பது நரம்பு மண்டலம் பற்றியது. மூளையே உணர்வின் இருப்பிடம் என்ரு தாந்திரிகர்கள் அறிந்துள்ளார்கல். கங்கை, யமுனை, காசி, சூரியன், சந்திரன் ஆகிய எல்லாம் உடம்பில் உள்ளன. உடம்பை விட்டு வேறு எங்கும் புனிய யாத்திரை செல்ல வேண்டியதில்லை.

தாந்திரிகம் கண்ட உடலியலே உண்மையான இந்தியாவின் அறிவியல் ஆகும்.

உடல் பற்றிய அரிவு உலகம் பற்றிய அறிவை வளர்த்தது. உலகத்தின் நுண்வடிவமே உடல் என்றதால் உடல் பிறப்பது போலவே உலகும் பிறந்தது என்றார்கள் தாந்திரிகர்கள். இதுவே தாந்திரிகத்தின் அண்டவியல் கொள்கை.

காமத்தால் படைக்கப் பட்டதே உலகம் என்றார்கள். அதனை ஏற்ற புத்த மதத்தினரில் ஒரு பிரிவினர்ரின் சடங்குகள் பிரபஞ்ச காமத்துக்கும் மனித காமத்துக்கும் ஒற்றுமை உள்ளது என்றார்கள். எனவே அவர்களும் காம சாதனைகளில் மூழ்கினார்கள். அவர்களில் இந்த நடவடிக்கைகளை பூரி ஜகனாதர் கோயிலில் சிலைவடிவாக உள்ளதைக் காணலாம்.

உலகம் முழுவதும் இவ்வாரன நம்பிக்கை அறிவே மிகுந்திருந்தது.

இரவா

unread,
Jun 15, 2008, 8:13:06 AM6/15/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


வேதங்களில் இறைக்கோட்பாடுரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.
யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்
குர்ஆன் கூறுகிறது:
...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)
ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.
குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.
ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.
குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.
ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)
குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)
ரிக் வேதம் (6:45:16)
''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.
இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.
மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)
இஸ்லாத்தில் மலக்குகள்
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக் கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.
உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு
இந்து மதத்தில் மலக்குகள்
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.
ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்மரைக்காயர்http://www.blogger.com/profile/1043129468392...@blogger.com

 

இரவா

unread,
Jun 15, 2008, 10:02:16 PM6/15/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

௧௫

தந்திரரும் சீனத்து தாவோக்களும் பலவழிகளில் ஒத்துள்ளனர். தாவோக்கள் ஆண்-பெண்களைச் சமப்படுத்தும் விழாக்களைக் கொண்டாடினார். அமாவாசை பவுர்ணமி இரவுகளில் சடங்குகள் விழாக்கள் நட்த்தினார். கோயில்களில் வரம்பற்ற கலவிகளும் நடத்தினார்கள். இந்த புராதன மந்திரவாதத்தின் நோக்கம் நிலவளத்தைத் தூண்டுவதாகவே இருந்தது.

தந்திரம் சீனாவுக்கு ஏற்றுமதியானதா? சீன தத்துவம் இந்தியாவுக்கு இறக்குமதியானதா? என்றால், இரண்டும் இல்லை. இரண்டும் சுயமாக தத்தம் நாடுகளில் தோன்றின. தத்தம் நாடுகளில் நிலவிய தாயாட்சி என்ற சமுதாய அமைப்பு நிலவிய போது தோன்றியவை.

வேதியரை தந்திரர் விமர்சித்தது போலவே தாவோக்கள் ஆளும் சாதிகளை விமர்சித்தார்கள்.

"வெட்கம் கெட்டவர்கள் செல்வர் ஆகிறார்கள். வாயாடிகள் அரசியல் வாதி ஆகிறார்கள். குட்டித் திருடர்கள் சிறையில் வாடுகிறார்கள். பெரிய திருடர்கள் பிரபுக்கள் ஆகிறார்கள். பிரபுக்கள் வீட்டு வாசற்படிகளில் மகா புலவர்கள் மண்டியிட்டு கிடக்கிறார்கள். அறிவர், முனிவர் என்போர் பெரிய திருடர்களின் காவலர்களாக இருக்கிறார்கள். கிழிந்த சட்டையைத் தைக்க ஊசி எடுத்தவனுக்கு மரண தண்டனை. நாட்டையே அபகரித்தவனுக்கு இளவரசுப் பட்டம்" என்று, தாவோக்களின் சாடல் அமைந்தது.

தாவோக்கள் தொழிலாள மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். பொருள் உற்பத்தியில் ஈடுபட்டார்கள். உழைப்பில் ஈடுபடுவோரிடமே அறிவியல் தோன்றும். தத்துவம் தோன்றும். கடின உழைப்புக்கு உணர்வே மூலதனமாகிறது. உணர்வு என்னும் சொல்லுக்கு மாற்றாக அந்த இடத்தில் கடவுள் அல்லது ஆன்மா என்று போட்டுவிட்டால் ஆன்மிகம் ஆகிவிடுகிறது.

தந்திரத்தில் பல அறியாமைக் கருத்துகள் இருந்தாலும் அது விவசாய தொழிலுக்கு உரியதாக இருந்தது. விவசாய மக்களை வளப்படுத்தி இன வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. அந்நோக்கம் சமூக சூழலால் எதிர்மறையாக மாற்றப்பட்டது. அதன்பின் தந்திர தத்துவத்தில் பக்தி, முக்தி என்னும் கருத்துகள் சேர்ந்தன.

நாலந்தா பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப் பட்ட தந்திரத்தில் ரசவாத பாடங்கள் இருந்தன. தாந்திரிக தத்துவம் வங்கத்தில் சாரியராலும் தென்னிந்தியாவில் சித்தர்களாலும் வளர்ந்த்து. சித்தர்கள் 18 என்னும் எண்ணால் குறிக்கப்பட்டார்கள்.

தந்திர்ர்கள் பல அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தினார்கள்.  அவை, பதன யந்திரம், அபதன யந்திரம், வாலுக யந்திரம் போன்றவை. எல்லாவற்றையும் பரிசோதனை வாயிலாகவே ஏற்றனர்.

தந்திரம் மிகவும் தொன்மையானது. பிற்காலத்தில் பெரிய எதிரியான வேதாந்தத்தை எதிர்த்தது. அப்போது, தந்திரத்தின் பெயர் சாங்கிய தத்துவம். தந்திரத்தின் உள்ளிருந்த த்த்துவ நிலையை வெளிப்படையாக நிறுவியதே சாங்கியம் ஆகும்.
Reply all
Reply to author
Forward
0 new messages