ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி, உலகமே எழுந்து
நின்று கை தட்டுகிறது. இந்திய திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இன்று
தமிழ் திரையுலகுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் உலக திரையுலகுக்கு தலைமை
தாங்கும் தகுதி, இந்திய திரையுலகுக்கு வந்திருக்கிறது.
மலேசியத் தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரஹ்மானும்
பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில், வேறு ஒரு பாடலை
பாடினார்கள். இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நீராரும் கடலுடுத்த...
என்ற பாடலை அவர்கள் பாடவில்லை.
நீராரும் கடலுடுத்த... பாடலில், இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. அதை
உலக தமிழன் எப்படி பாடுவான்? இந்த சிக்கலைத் தீர்க்க உலக தமிழர்களுக்காக,
புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதப் போகிறேன். அந்த பாடலுக்கு
இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதித்திருக்கிறார்.
தமிழன் எடுக்கிற படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று
இப்போது சிலர் கேட்கிறார்கள். இங்குள்ள கலைஞர்கள், இயக்குனர்கள்,
தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உலக கலைஞர்களுக்கு சளைத்தவர்கள்
அல்ல. வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்கரை வெல்லும் தகுதி நம்மவர்களுக்கு
இருக்கிறது.
ஆங்கிலம் தெரிந்த தமிழ் இயக்குனர்கள், ஆஸ்கார் விருதுக்கான ஆங்கிலப்
படங்களை எடுக்க வேண்டும் என்றார் வைரமுத்து.
"மலேசியர்கள் விரும்பினால் நான் புதிதாக ஒரு தமிழ் வாழ்த்து
எழுதித் தருகிறேன்" என்றுதான் சொன்னார். ஆனால் விழா முடிந்து
அடுத்த சில நாடகளில் எழும்பிய எதிர்ப்பலை பெரிதாக இருந்தது.
அந்த விவாதத்தின் இறுதியில் மலேசியாவுக்கான தமிழ் வாழ்த்தை
மலேசியக் கவிஞர்களே எழுதிக் கொள்வதாக முடிவாகி, பல கவிஞர்கள்
எழுதி, இப்போது பாடல்கள் பரிசீலனையில் இருக்கின்றன.
கூட்டங்களில் நாம் தமிழ் வாழ்த்து பாடுவது போல பிற மொழிக் குழுவினர்
செய்கிறார்களா என்று தெரியவில்லை. நான் கலந்து கொண்ட மலாய், ஆங்கில
மேடைகள் எதிலும் மலாய் வாழ்த்தோ, ஆங்கில வாழ்த்தோ பாடப்படுவதில்லை.
ஏன் தமிழ் வாழ்த்து?
அதிருக்க, தமிழ் வாழ்த்து வேண்டும் என்றால் புதிதாக ஒன்று எழுதவே
வேண்டும்.
அதில் தமிழ் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் மொழி என்பது
பிரதிபலிக்கப்பட வேண்டும். அதே போல "முத்தமிழ்" என்று பேசுவதெல்லாம்
பழசு. தமிழின் வகைப்பாடுகளில் கணினித் தமிழும் சேர்த்துக் கொள்ளப்பட
வேண்டும்.
இலக்கியங்களைப் போற்றுகையில் பாரதியார் வரை வந்து நின்றுவிடுகிறார்கள்.
("சிந்தையள்ளும் தமிழ்" பாடல் நினைவிருக்கிறதா?")
அதிலும் கவிதைக்குத்தான் இடம். இயல் தமிழ் எழுதுபவர்கள், இன்று நவீன
இலக்கியம்
படைப்பவர்கள் அதில் இடம் பெற வேண்டும். பழமை மட்டும் போற்றப்பட்டால்
போதாது.
இன்றுள்ள அதன் உயிர்ப்பையும் செழுமையையும் போற்ற வேண்டும்.
எல்லாம் ஒரு நிமிடப் பாட்டுக்குள் அடங்க வேண்டும்.
வைரமுத்து செய்வார் என்றுதான் நம்புகிறேன்.
ரெ.கா.
On Feb 26, 4:56 pm, வசந்தம் <suryavasant...@gmail.com> wrote:
> உலகத் தமிழர்களுக்காக ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து
> எழுதப் போவதாகத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
>
>/movies/specials/2009/02/26-rahman-to-co...
உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்
இங்கேயும் அதைப் போட்டிருக்கலாமே!
க.>
இன்று தமிழர்களான நாங்கள் வெளிநாட்டுக் குடிமக்களாக
வாழ்கிறோம். என் குடும்பத்தார் அனைவரும் மலேசியாவிலேயே
பிறந்த மலேசியத் தமிழர்கள்.
நாங்கள் தமிழ்மொழியை வாழ்த்த பாரதத்தையும் திராவிடத்தையும்
பாட முடியாது. அதற்காகத்தான் புதிய வாழ்த்தின் தேவை.
"புதிய தமிழ் வாழ்த்து தேவையா?" எனற் கேள்வியை
"தமிழ் வாழ்த்து தேவையா?" என்று கேட்டீர்களானால் அது
விவாதிக்கத்தக்க கருத்தே.
ரெ.கா.
"சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்"
இதில் வரும் பாரதம் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று எழுதப் போகிறாரா? :-)
On Feb 26, 6:32 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> 2009/2/26 Saravana Rajendran <rajesarav...@gmail.com>:
>
> > நான் 2001-ம் ஆண்டே பிரபலங்களுக்கு நீராரும் கடலுடுத்தவில் சில மாற்றங்கள்
> > செய்து உலகதமிழ்த்தாய்வாழ்த்துஅனுப்பி இருந்தேன்.
>
> இங்கேயும் அதைப் போட்டிருக்கலாமே!
>
> க.>
உங்கள் திருத்தம் தர முடியுமா?
நன்றி!
நா. கணேசன்
On Feb 26, 7:19 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
தமிழ்த் தேசியத்தை முதன்முதலாகக் கட்டமைத்தவர் இளங்கோ அடிகள்.
வேட்டுவவரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் பாட்டு, ...
எல்லாக் குடிகளையும் போற்றியவர் இளங்கோ.
இளங்கோ சமணத் துறவியாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
சோழ நாட்டில் பிறந்து, பாண்டி நாட்டில் நீதிகேட்டு,
சேரநாட்டில் தெய்வமானவள் கண்ணகி தமிழ்த்தாய் தான்.
ஒரு நாவல்போலத் தன் சிலம்புக் காப்பியத்தை
அமைத்திருக்கிறார். கிருஷ்ணனை கோவலன்
என்று நாயகன் ஆக்கி, மனைவியாக
இலக்குமியை வைத்துள்ளார். லக்ஷ்மி
தாமரைப் பொகுட்டில் (pericarp) வாசம்செய்பவள்.
தாமரைப் பொகுட்டுக்கு கர்ணகீ என்பது பெயர்.
அதனையே, கண்ணகி என்பார் இளங்கோ.
இன்றும் ஈழத்தில் கண்ணகியின் பெயர் கர்ணகை
என்று வழங்குகிறது. கிருஷ்ணன் என்றால்
முல்லை நிலக் கோபியர் இல்லாமலா?
அதற்காக, முல்லைக்குப் பிரதியாக (substitute) குருக்கத்தி
(மாதவி) பூவின் பெயரில் இரண்டாம்
நாயகியை அமைத்தார். கொங்கின்
முருகன்பூண்டி ஆலயம் மாதவிவனம் என்பர்.
‘முல்லைத் தாது மணங்கமழ் முருகன்பூண்டி’ -தேவாரம்.
கண்ணபிரான் - கோவலன் தொடர்பினை,
மதுரை நகரத் தேவதை மதுராபதி சொல்வதாய்
விளக்கவும் செய்துள்ளார் இளங்கோ அடிகள்.
கண்ணகியின் செப்புப் படிமம் 7-ஆம் நூற்றாண்டினது,
இலங்கை அனுராதபுரத்தில் கிடைத்ததைப் 10 ஆண்டு முன்னம்
“இது கண்ணகி” என்று எழுதினேன். அக் கண்ணகி
தெய்வம் என்பதைக் காட்ட நான்கு திருக்கரத்துடன்
வடிவமைத்துள்ளனர். சிங்கள அரசாங்க அதிகரிகள்
அர்த்தநாரீசுவரர் என்று வாஷிங்டனில் கொண்டுவந்து
பொருட்காட்சியில் காட்டினர். ஆனால், அர்த்தநாரியென்றால்
மார் மாறியிருக்கும். கண்ணகி வலக்கையால்
இடமுலை திருகி எறிந்தவள் என்கிறார் இளங்கோ
(மதுரை தீப்பிடிக்கப் பாஸ்பரஸா இருந்தது? என்ற
பெரியார் கேள்வியை விட்டுவிடுவோம்). சிலம்பில்
இருந்ததைக் காட்ட முத்துச் சிப்பியும் இருக்கிறது.
ஒருகரம் அபய முத்திரை, படம் கொடுத்து விரிவாக எழுதணும்.
அர்த்தநாரி அல்ல, கண்ணகி என்று விளக்கவேண்டும்.
தமிழ்த்தாய்க் காப்பியமான சிலம்பில் சில வரிகளை
எடுத்துக் கொள்ளவேண்டும். பாரதியாரும்
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியுள்ளார்.
ஓகை நடராஜன் வலைப்பதிவை இன்று
பார்த்ததன் விளைவே இம்மடல்.
பாரதியின் தமிழ்த்தாய் வாழ்த்து:
http://oagaisblog.blogspot.com/2006/05/blog-post_16.html
தமிழ்த்தாய் இவ்வாறு நம்மை 'வேண்டுவதாகக்' குறித்திருந்தாலும் நாம்
கட்டளையாகவே எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் ஓகையார்.
வைரமுத்து பாடல் அவளை வணங்கித் தமிழ்க்கவி சொல்லும்
விடையாக அமைக்கவும் செய்யலாம்.
சிலம்பு, பாரதி, மனோன்மணீயம் - சில கருத்துக்களை
எடுத்துக் கொண்டு, அறிவியல், கணினி, இணைய வளர்ச்சிகளைக்
குறிப்பிட்டு அழகான ஒரு தமிழ்த் தாய் வாழ்த்தைப்
பாடி வைரமுத்து, இரகுமானின் இசையில்
அளித்தால் ஒரு 100 ஆண்டுகள் நிற்பதாக
அமைய வேண்டுகிறேன்.
எதிர்பார்ப்புகளும், வாழ்த்துக்களும் ஏராளம்!
நா. கணேசன்
தமிழ்த் தேசியத்தை முதன்முதலாகக் கட்டமைத்தவர் இளங்கோ அடிகள்.
வேட்டுவவரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் பாட்டு, ...
எல்லாக் குடிகளையும் போற்றியவர் இளங்கோ.
இளங்கோ சமணத் துறவியாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
சோழ நாட்டில் பிறந்து, பாண்டி நாட்டில் நீதிகேட்டு,
சேரநாட்டில் தெய்வமானவள் கண்ணகி தமிழ்த்தாய் தான்.
ஒரு நாவல்போலத் தன் சிலம்புக் காப்பியத்தை
அமைத்திருக்கிறார். கிருஷ்ணனை கோவலன்
என்று நாயகன் ஆக்கி, மனைவியாக
உங்கள் கருத்துக்களை 100 விழுக்காடு சம்மதிக்கிறேன்.
அவ்வாறே ஆகுவதாகுக!
ரெ.கா.
On Mar 5, 9:19 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2009/3/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > தமிழ்த் தேசியத்தை முதன்முதலாகக் கட்டமைத்தவர் இளங்கோ அடிகள்.
> > வேட்டுவவரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் பாட்டு, ...
> > எல்லாக் குடிகளையும் போற்றியவர் இளங்கோ.
> > இளங்கோ சமணத் துறவியாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
> > சோழ நாட்டில் பிறந்து, பாண்டி நாட்டில் நீதிகேட்டு,
> > சேரநாட்டில் தெய்வமானவள் கண்ணகி தமிழ்த்தாய் தான்.
>
> > ஒரு நாவல்போலத் தன் சிலம்புக் காப்பியத்தை
> > அமைத்திருக்கிறார். கிருஷ்ணனை கோவலன்
> > என்று நாயகன் ஆக்கி, மனைவியாக
>
> கோவலன் என்ற சொல்லுக்கு ஆயன் என்று பொருள்.
>
ஆம். ஆநிரைகளைக் கோப்பவன். கோவலன், - காவலன், நாவலன், பாவலன் ... போல்.
gopAlan - வடசொல்லுக்கு ஒலி ஒப்புமை உண்டு.
ஐந்திணையின் மரபுகளும், பல்சமயக் கருத்துகளுக்கும்
சிலம்பில் இடம் பெறுகின்றன.கவுந்தி அடிகளும், மாடல மறையவரும் உரையாடிக்
கொள்வதும், இறுதியில்
“காமுறு தெய்வம் கண்டடி பணிய
நீ போ நாங்களும் நிள்நெறிப் படர்குதும் ”
என்று நாசூக்காக அவரவர் வழி அவரவர்க்கு என்று
கூறிக் கவுந்தி அடிகள் விடை கொடுப்பதும் மனத்தை விட்டு நீங்காத இடங்கள்.
//சிங்கள அரசாங்க அதிகரிகள்
அர்த்தநாரீசுவரர் என்று வாஷிங்டனில் கொண்டுவந்து
பொருட்காட்சியில் காட்டினர்.//
இப்புகைப்படம் கிடைத்தால் நல்லது.
//சிலம்பு, பாரதி, மனோன்மணீயம் - சில கருத்துக்களை
எடுத்துக் கொண்டு, அறிவியல், கணினி, இணைய வளர்ச்சிகளைக்
குறிப்பிட்டு அழகான ஒரு தமிழ்த் தாய் வாழ்த்தைப்
பாடி வைரமுத்து, இரகுமானின் இசையில்
அளித்தால் ஒரு 100 ஆண்டுகள் நிற்பதாக
அமைய வேண்டுகிறேன்.//
வரவேற்கத்தக்க ஆலோசனை.
தேவ்
சிலப்பதிகார உரைகளில் இக்கருத்துக்கு ஆதாரம் உள்ளதா ?
மாடல மறையவர் : திருத்தம் - மாங்காட்டு மறையோன்
தேவ்
வாய் விட்டு சிரித்தால் மட்டும் பத்தாதுங்..
கண்ணும் சேர்ந்து சிரிக்கோணும் இல்லீங்களா...!? 8-)
பிறகெதற்கு அவளுக்கு கண்ணகை/கி'னூ பேர்..?
மிகவும் நன்றிகள்...!
அன்புடன்.../பூபதி செ. மாணிக்கம்
__________________________
பிகு:
எதை மறந்தாலும்..
இதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கிங்:
எப்படி தமிழ்மாதங்கள் இ/ஐ
என்று மட்டும் ஒலித்து ஓயுமோ..
அவ்வாறே அறுசுவையும் உ/பு
என்றே வப்பு கட்டி வரும்.. சரீங்களா..?
_______________________
2009/3/5 devoo <rde...@gmail.com>:
Mu. Elango mentioned a Thamizththaay Vaazhththu in an e-mail to me.
I found the song, please see whether that will be fine.
I think Dr. Mu. Elangovan's suggestion of PaavalarERu's Thamizhththaay
Vaazhththu
will be good, if A. R. Rahman sets music to it. We need to carry
that message to Oscar Tamilan.
N. Ganesan
--------------
தமிழ்த்தாய் வாழ்த்து
அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே!
சிந்தா மணிச்சுடரே!
செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்
சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
வாழ்த்தி வணங்குவமே
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அழகான பாடல். ஆனால் நம் தேவைக்கு ஏற்ற பாடல் அல்ல
என்றே நினைக்கிறேன்.
"தந்த வடமொழிக்கும்
> தாயாகி நின்றவளே!"
சர்ச்சை எழுப்பக் கூடியது. ஏற்கனவே "ஆரியம் போல் அழிந்தொழிந்து
சிதையா" என்ற வரிகளை நீக்கிப் பாடியிருக்கிறார்கள்.
நமது பண்டைய புலவர் பாடிய எவையும் - பாரதி உட்பட-
பொருந்தும் என்று தோணவில்லை. தமிழ் இன்று உலகளாவி
இருப்பதையும் ஊடகங்களில் - குறிப்பாகக் கணினியில் -
சிறப்பாக இருப்பதையும் குறிக்காத பாடல் எடுக்காது.
க.>
2009/3/10 karth...@gmail.com <karth...@gmail.com>:
ஆரியம் ஒழிந்தது என்றால் இந்தியாவில் ஆன்மீகம்
ஒழிந்தது என்று பொருள்.
இந்திய ஆன்மீகம் உள்ளளவும் ஆரியம் நிற்கும், ஏனெனில் வேதம் அம்மொழியில்
உள்ளது, மேலும் பல உந்நத உபநிஷதம், இதிகாசம், காவியம், நாட்டிய, சங்கீத,
கணித, வானியல் சாத்திரங்கள்!
ஒன்றும் புரியாதவர்கள்தான் ஆரியம் அழிந்துவிட்டது என்று தங்கள்
அறியாமைக்கு ஒத்தடம் கொடுத்துக் கொள்வார்கள்.
ஆரியமும் ஆன்மீகம் ஒன்று என்ற பொருளில் சொல்லாடவில்லை ;-)
க.>
karth...@gmail.com wrote:
> நா.க.
>
> அழகான பாடல். ஆனால் நம் தேவைக்கு ஏற்ற பாடல் அல்ல
> என்றே நினைக்கிறேன்.
>
> "தந்த வடமொழிக்கும்
> > தாயாகி நின்றவளே!"
>
> சர்ச்சை எழுப்பக் கூடியது. ஏற்கனவே "ஆரியம் போல் அழிந்தொழிந்து
> சிதையா" என்ற வரிகளை நீக்கிப் பாடியிருக்கிறார்கள்.
>
> நமது பண்டைய புலவர் பாடிய எவையும் - பாரதி உட்பட-
> பொருந்தும் என்று தோணவில்லை. தமிழ் இன்று உலகளாவி
> இருப்பதையும் ஊடகங்களில் - குறிப்பாகக் கணினியில் -
> சிறப்பாக இருப்பதையும் குறிக்காத பாடல் எடுக்காது.
>
>
நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். நேற்று மரபுக் கவிஞர்
இலந்தை இராமசாமியார் சொன்ன் கருத்தும் மனங்கொளத்
தக்கது.
அறிவியல், கணினி, இணையம், ... தமிழ்த்தாய் வாழ்த்தில்
புதிதாக இணையவேண்டும். நேற்றைய என் பதிலைப் பாருங்கள்.
2009/3/9 S. RAMASAMI <eland...@gmail.com>:
> பாடல் அமைப்பு நன்றாக இருக்கிறது. களப்பிரர்காலத்தில் முற்றிலுமாக
> அடைபடுக்கிடந்த தமிழை உயிர்ப்பித்து உலாவ விட்டவை நாலாயிர திவ்யப் பிரபந்தமும்
> தேவாரப் பாடல்களும். அதே போலத் தமிழுக்கு உலகக் காவியங்களோடு ஒப்பு நோக்கும்
> கௌரவம் கொடுத்தது கம்ப ராமாயணம். இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அமைக்கிற எந்தத்
> தமிழ்த்தாய் வாழ்த்தும் முழுமை பெற்றதாக இராது.
> சமய இலக்கியங்கள் என்பதற்காக உண்மையை ஒதுக்க முடியாதே!
> இலந்தை
yes, I'm not sure this song is complete without Bhakti literature.
Also this song concentrates too much
on the past. But in reality, Vairamuthu should give important to the
future, science,, tech, computer and the Web.
Also, this some song has factual errors in
"வடமொழிக்கும் தாயாகி நின்றவளே"
"முந்தை எகுபதியர்
மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்
சிரித்த இளங்கன்னீ !"
Proto-Tamil is *not* the mother of Sumerian or Egyptian or for that
matter, Sanskrit!
this song is incomplete without Bhakti literature. Also this song
concentrates too much
on the past.
-----------------
But in reality, Vairamuthu, ... should give important to the future,
science,, tech, computer and the Web
Hope the Jambavans here will give a some nice Thamizth thaay
Vaazhththu songs.
anbudan,
N. Ganesan
அன்பின் நாக
உங்களை முதன் முறையாக நான் பெர்க்கிலியில் கண்டபோது உங்கள் தமிழறிவு
கண்டு சொக்கிப்போனவன். வைரமுத்துதான் இயற்ற வேண்டுமென்றில்லை!
தமிழுணர்வுடைய எவரும் இயற்றலாம். அது சமகால தொழில்நுட்பத்தை
உள்வாங்கியதாக இருக்கவேண்டும்.
ஆனால் அது நூற்றாண்டு நிற்குமா? என்பது கேள்வி. காரணம் பாரதியின்
வாழ்த்தும் இப்போது பாடப்படுவதில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பாட்டு
காலாவதியாகிவருகிறது 100 ஆண்டுகளில் அளப்பறிய மாற்றங்கள் நிகழும். 20
வருஷம் முன் யார் இணையம் பற்றி யோசித்திருக்கமுடியும்? வைரமுத்துவின்
பாடல் 20 ஆண்டுகள் தாங்கினால் அதுவே பெரிது. ரகுமான் இசையும் அவ்வாறே
அவருக்கு சமகால இசை அறிவு உண்டு. காலத்தை வெல்லும் இசையை அவரால்
தரமுடியுமா? என்பதும் கேள்விதான்.
நீங்கள் சொல்வது போல், எதிர்பார்ப்பு அதிகமாகும் போது ஏமாற்றமும்
அதிகமாகவே இருக்கும்!
அதுசரி, இவர்கள் எழுதிக்கொண்டு வந்து பொற்கிழிக்கு நிற்கும் முன், நாம்
முயன்றால் என்ன?
"புதிய தமிழ் வாழ்த்து" என்று ஒரு இழை தொடங்கலாம். வாழ்த்துக்கள்.
நா. க
On Mar 10, 4:50 am, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> "புதிய தமிழ் வாழ்த்து" என்று ஒரு இழை தொடங்கலாம். வாழ்த்துக்கள்.
>
ஆம். மிக நன்றாகச் செய்யலாம். முனைவர்கள் மறைமலை ஐயா, மு.
இளங்கோவன், ....
முதலில் வேண்டுவோம்.
நா. கணேசன்
அஹா.ஹா!!
சும்மா ஒரு ரைம்க்கு. அவரும் நா.க , நானும் நா.க.
அவர் அறிஞர். நான் பித்துக்குளி :-)
கானமயிலாடுவது இதுதான்!!
க.>
இசை அமைக்கும் ரஹ்மானும் அதை எளிதாக எல்லாரும் பாடும்
வகையில் செய்ய வேண்டும். சிறுபிள்ளைகள் முதல் பாட வேண்டும்
அல்லவா?
ஆனால் நாமெல்லாம் புல்லரிக்கும் வண்ணம் ஒரு grand orchestra
version ஒன்றும் அவர் செய்ய வேண்டும். அதை எல்லாரும் கேட்டு
மகிழலாம்.
ரெ.கா.
மனோன்மணீயம்
ஆசிரியர் : சுந்தரம் பிள்ளை (1855-1891)
http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0105.html
http://www.tamilvanan.com/content/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/
டி.எம்.எஸ் - சுசிலா புகழ் பாட தமிழ்த்தாய் வாழ்த்து போதும்!: கருணாநிதி
மதுரை : டி.எம்.எஸ் - சுசிலா இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து
காலமெல்லாம் தமிழர்களின் காதுகளில் ஒலிக்கும் என்று மதுரையில் நடந்த
பாராட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கூறினார்.
திரைப்படத்துறையில் சுமார் ஆயிரத்து 200 சினிமா படங்களில் 10 ஆயிரம்
பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளவர் டி.எம்.சவுந்தரராஜன். அவரது
கலைச்சேவையை பாராட்டி, மதுரையில் பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு
மு.க.அழகிரி ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. விழாவில்
முதல்வர் கருணாநிதி, மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில்
டி.எம்.சவுந்தரராஜனுக்கு ரூ.5 லட்சம் பொற்கிழியும் பின்னணி பாடகி
பி.சுசிலாவுக்கு ரூ.3 லட்சம் பொற்கிழியும் வழங்கி பாராட்டி பேசினார்.
அவர் பேசியதாவது:
”மு.க.அழகிரியை ‘அஞ்சா நெஞ்சன்’ என்று அழைத்தே மதுரை மக்கள்
பழக்கப்பட்டவர்கள். ஒருவரை அஞ்சா நெஞ்சன் என்று அழைக்கிறபோது ஐயப்பாடு
அதிகரிக்கிறது. அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பெயர், பட்டம் வந்ததற்கு
ஒரு காரணம் உண்டு.
அவர் பிறந்து அறையில் இருந்தபோது, தந்தை பெரியார் திருவாரூரில் இருந்த
எனது வீட்டுக்கு வருகை தந்தார். குழந்தைக்கு என்ன பெயர் வைத்து
இருக்கிறாய் என்று என்னிடம் அவர் கேட்டார். அழகிரி என்றேன். சரியான
முரட்டு பெயரைத்தான் வைத்து இருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார்
சொன்னார்.
இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும், தோழர்களும் அதை உறுதி
செய்து இருக்கிறீர்கள். இதைக் கண்டு மகிழ்ச்சியும், பெருமையும்
அடைகிறேன்.
‘எதற்கும் அஞ்சாவிட்டாலும் கூட ஏழையின் கண்ணீரை பார்த்து அஞ்ச வேண்டும்’
என்றான் ஒரு கவிஞன். அந்த பெருமை அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர
வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நண்பர் டி.எம்.சவுந்தரராஜன் இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே
அவர் நான் எழுதிய ஒரு படத்துக்கு நான் தந்த கருத்துரையை ஏற்று, சமுதாய
பாடலை எடுத்துச் சொன்னார். அன்னம் இட்ட வீட்டில் கன்னமிட நினைப்பவர்கள்
என்ன ஆவார்கள் என்று அவர் எடுத்து சொன்னார்.
இது பொதுவாக எனக்காகவோ, டி.எம்.சவுந்தரராஜனுக்காகவோ அல்லது ஒரு
சிலருக்காகவோ அவர்களின் வேதனையை போக்கும் மருந்தாக பாடப்பட்ட பாடல்
அல்ல. இந்த பாடல் காலம், காலமாக சமுதாயத்தில் ஒலிக்க வேண்டிய பாடல் அது.
டி.எம்.எஸ். நீண்ட காலமாக என்னோடு பழகியவர். என்பால் பழகியவர்களில் பல
சங்கீத விற்பன்னர்கள் எல்லாம் இசை மேதைகளாக இருந்தனர். அவர்களை எல்லாம்
நான் நன்றாக அறிவேன்.
தொடக்க காலத்தில் ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாடல் பாட 1969ஆம் ஆண்டு என்னை ஆளாக்கிய அண்ணா, முதலமைச்சர்
பொறுப்பில் அமர்ந்து மறைந்த பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றேன்.
அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அரசு விழாவில் பாட வேண்டும் என்ற
ஒரு ஏக்க பெருமூச்சு தமிழ் ஆர்வலர்கள் வாயிலாக எழுந்தது.
அப்போது மனோன்மணியம் சுந்தரனார் பாடிய பாடலின் உள்ள சில பொதுவான
கருத்துக்களை பதித்து, யாரையும் எந்த மொழியையும் விமர்சிக்காத அளவிலே
உள்ள வரிகளை எடுத்து, ஒரு பாடலாக தொகுத்து பாட வேண்டும் என்று நான்
எண்ணினேன். அப்போது ஒரு சிலர் அந்த பாடலை பாட பயந்து கொண்டு
மறுத்துவிட்டனர்.
ஆரியம் போன்ற கருத்து அதில் இருந்ததால் பாட்டை வாங்கிக்கொண்டு
சென்றவர்கள் 2 நாட்களுக்கு பிறகு டெலிபோன் மூலம் என்னிடம் தொடர்பு
கொண்டு வேறு யாரையாவது வைத்து பாட சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
பின்பு, டி.எம்.சவுந்தரராஜனையும், சுசிலாவையும் நான் பாடச்சொன்னேன்.
விசுவநாதன்-ராமமூர்த்தியை இசை அமைத்து கொடுக்கும்படி சொன்னேன்.
என்னிடம் உறுதி அளித்தவாறு டி.எம்.சவுந்தரராஜனும், சுசிலாவும் அந்த பாடலை
பாடினார்கள்.
இன்றளவும் காதுகளில் ஒலிக்கும் நிலையை கண்டுகொண்டு இருக்கிறோம். தமிழ்
உள்ளளவும், இந்த பாடல் ஒலிக்கும். காலமெல்லாம் தமிழர்களின் காதுகளில்
மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் காதுகளிலும் இந்த பாடல்
ஒலித்துக்கொண்டே இருக்கும்.
என்னை விசுவநாதன் சந்திக்கிறபோதெல்லாம் எனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பை
தந்தீர்கள் என்று சொல்லுவார். அப்படி சொல்லுவதற்கு காரணம் இந்தப்
பாடலுக்கே மெட்டு அமைக்கின்ற அந்த வாய்ப்பு அவருக்கு தமிழக அரசின்
சார்பாக வழங்கப்பட்டதுதான். இத்தகைய ஒரு பாடலை பாடிய துணிவுக்காக அவர்
அழகாக பாடினார் என்பதற்காக அல்ல, டி.எம்.எஸ்.சும், சுசிலாவும்
பாடுகிறோம் என்று சொல்லி பாடிமுடித்தார்களே அந்த துணிவுக்காக
தமிழ்த்தாய் சார்பாக அவர்களுக்கு நான் எனது வாழ்த்துக்களையெல்லாம்
கூறிக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது
பாராட்டுகளையெல்லாம் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
7-Aug-2008