திருக்குறள் முற்றோதல் - பெண்ணாடம் திருக்குறள் ஆய்வு மையம் -பேரறிவாளர் சம்பந்தனார்.

47 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 28, 2015, 6:53:58 AM1/28/15
to mintamil, maza...@googlegroups.com, vallamai, muththamiz, housto...@googlegroups.com, தமிழ் மன்றம், tamil_ulagam
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஊருக்கு எங்கள் மகள் வீட்டிற்குச்சென்றிருந்தபோது அங்குள்ள திருக்குறள் ஆய்வு மையத்தினரின் திருக்குறள் முற்றோதலில் 20,21,22,23.01.2015 தேதிகளில் கலந்துகொண்டதை என் பேறாகக்கருதுகிறேன்.
இந்த மையத்தை பெரியவர் திரு தா.கோ.சம்பந்தம் தன் பெரும் முயற்சியால் சில நண்பர்கள் உதவியோடு சிறப்புற நடத்திவருகிறார். சனிக்கிழமைதோறும் மாலை மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்பு வாழ்க வளமுடன் மனவளக்கலை மன்றத்தில் நடத்தப்படுகிறது. பெரியோர் உரையுடன் உணவும் வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு திருக்குறள் முற்றோதல் நிகழ்வு தை மாதம் முழுவதும் நடத்துவதாக திட்டமிடப்பட்டு 19.1.2014 அன்று தொடங்கியுள்ளது. 12.2.2015 நிறைவு விழா. இடம் மெய்கண்டார் திருக்கோயில் மண்டபம், பெண்ணாடம். மாலை 5.00 மணி தொடங்கி 7.15 வரை நடைபெறுகிறது. இரண்டாவது முதல் ஏழாவது, எட்டாவது படிக்கிற மாணவமாணவியர்வரை 50 பேர் கலந்துகொள்கிறார்கள். முதல் அதிகாரம் குழந்தைகள் சேர்ந்த குரலிசைக்குப்பின்னர் திருக்குறள் தொடர்ச்சியாக பெரியவர்கள் கூற குழந்தைகள் உரத்து திருப்பிச்சொல்ல ஓதப்படுகிறது. முடிவுறுகிறபோது 10 முறையாவது முழு நூலும் முற்றோதப்படும் என எண்ணுகிறேன். 
தினந்தோறும் மாணவர்கள் குறிப்பிட்ட அதிகாரத்தை இரண்டுமுறை எழுதவும் அவ்வதிகாரத்தில் குறைந்தது மூன்று குறட்பாக்கள் மனனம் செய்துவரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓதுதல் முடிந்த பிறகு எழுதி வந்தமாணவர்களுக்கும் மனனம்செய்துவந்த மாணவர்களுக்கும் சோதிக்கப்பட்டு சிறிய பரிசுகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. முடிவில் 100 குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ200 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முற்றோதலுக்குப்பிறகு வாழ்த்துரை அறிஞர்களால் வழங்கப்படுகிறது. 

மூன்று நாட்களும் கல்வி, அறிவுடைமை, ஊக்கமுடைமை குறித்த சிந்தனைகள், கதைகள், கருத்துக்கள் நான் பகிர்ந்துகொண்டேன். ஒருநாள் மருத்துவர் திரு வரதராசனும், மருந்தாளர் திரு குமார் அவர்களும் தொடர்ந்து திரு இராசமாணிக்கமும் கலந்துகொண்டார்கள்.
முடிவில் சுவையான புளியோதரை, பொங்கல், எலுமிச்சை சாதமும் சுண்டலும் அன்புடன் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள சிலரும் உணவு உண்ணுகிறார்கள். 
நண்பர்களிடமிருந்தும், அறநெஞ்சமுடையாரிடமிருந்தும் நன்கொடை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இவை அனைத்திற்கும் அச்சாணியாகவிருந்து செயல்படும் பேரறிவாளர் தா.கோ.சம்பந்தம் அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும். ஆசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் எண்பதுகளில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திக. செயலாளர். பிறகு வேதாத்ரி மகரிசி கொள்கைகளால் கவரப்பட்டவர். இன்று திருக்குறள் போற்றுதலை வாழ்வின் குறிக்கோளாக ஏற்றவர். அவர் மகனுடைய பெயர் இராவணன். பெயர்த்தியின் பெயர் அன்புஒளி, பெயரனுடைய பெயர் அறிவு. அவர் சிந்தனைப்போக்கை இப்பெயர்கள் விளக்கும். பெரியார் அறிவை கருவி,ஆயுதமென்றார். மகரிசி அறிவை மந்திரம் என்றார். வள்ளுவர் எல்லாமும் அறிவே என்கிறார் என்பது அவர் கருத்து.

அக்கருணையாளரைப்போற்றி சில படங்களை நண்பர்கள் பார்வைக்கும் கருத்துக்கும் பகிர்ந்துள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

IMG_3592.JPG
IMG_3454.JPG
IMG_3445.JPG
IMG_3610.JPG
IMG_3596.JPG
IMG_3603.JPG
IMG_3606.JPG
IMG_3613.JPG
IMG_3607.JPG
IMG_3424.JPG
IMG_3436.JPG

தேமொழி

unread,
Jan 28, 2015, 5:24:17 PM1/28/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com

ஒரு சில குழந்தைகளாவது, தொலைகாட்சி, கணினி, இணையம், கைபேசி, வீடியோ கேம் போன்றவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு அறிவை வளர்த்துக் கொள்ளும் தகவல் ஆறுதல் தருவதாக இருக்கிறது, 

பகிர்வுக்கு நன்றி சொ வி ஐயா. 

..... தேமொழி

shylaja

unread,
Jan 28, 2015, 8:11:33 PM1/28/15
to vallamai, mintamil
மனதுக்கு நிறைவான செய்தி  திருவினைதீர்த்தான் ஐயா..  குறளின் குரல் இளையவர்களிடம் அதிகம் கேட்கவேண்டும். இந்த நற்பணியைச்செய்பவர்களுக்கு பாராட்டுக்கள்.  கண்டு  விவரங்களும் படங்களும் அளித்த தங்களுக்கு நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

///கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று 
காட்டுமறைகளெல்லாம் – நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு 
அவங்கள் புரிவீரோ.//...
பாரதி .

N. Kannan

unread,
Jan 28, 2015, 10:12:34 PM1/28/15
to mint...@googlegroups.com

மிக நல்ல முயற்சி.

குறள் வழி வாழ்வே தமிழர்க்கு சிறந்த வாழ்வு. உலகமெங்கும் குறள் வாழ்வியல் எனும் நெறியை திட்டப்படுத்தி பரப்ப வேண்டும். அது உலகிற்கே நல்வழி.

ஐயா! அவர்கள் வங்கி விவரம் கொடுத்தால் பணம் அனுப்புகிறேன்.

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 28, 2015, 11:48:14 PM1/28/15
to mint...@googlegroups.com, vallamai, shylaja, coral shree, தேமொழி
கருத்துக்கு மிக்க நன்றி திருமிகு ஷைலஜா. வாழ்த்துக்கு நன்றி திருமிகு தேமொழி.
அங்குள்ள பிள்ளைகள் “வணக்கம் ஐயா; வாழ்க வளமுடன்” என்று வணக்கம்
தெரிவிப்பதைக்கேட்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உணவு உண்ண
வருகிற அப்பகுதியைச்சேர்ந்த வயதான பெண்களும் வாழ்க வளமுடன் சொல்ல
ஆரம்பித்துள்ளார்கள்!

ஊர் நடுவே பேருந்து நிலையத்தில் நின்றபோது ஒரு சிறுமி வந்து வணங்கி
‘வாழ்க வளமுடன்’ கூறியதைக்கண்டு என் துணைவியார் வியந்துபோனார்.
நற்பணி கவர்ந்ததால் நானும் நான்கு நாட்கள் கலந்துகொண்டு என்னால் இயன்ற
அளவில் உதவி பங்கெடுத்து மகிழ்ந்தேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Dhivakar

unread,
Jan 28, 2015, 11:53:48 PM1/28/15
to vallamai, மின்தமிழ்
திரு வினைதீர்த்தான்,

வாய்ஸ் ஆஃப் வள்ளுவர் என்றொரு வாட்ஸ்’அப் குழுமத்தில் உங்கள் செய்தியை உங்கள் பெயருடன் அப்படியே பகிர்ந்துள்ளேன் ஐயா!

அன்புடன்
திவாகர்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 29, 2015, 12:11:01 AM1/29/15
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் மன்றம், muththamiz
On 1/29/15, N. Kannan <navan...@gmail.com> wrote:
> மிக நல்ல முயற்சி. குறள் வழி வாழ்வே தமிழர்க்கு சிறந்த வாழ்வு. உலகமெங்கும் குறள் வாழ்வியல் எனும் நெறியை திட்டப்படுத்தி பரப்ப வேண்டும். அது உலகிற்கே நல்வழி ஐயா!

அவர்கள் வங்கி விவரம் கொடுத்தால் பணம் அனுப்புகிறேன்.

அன்பிற்கினிய நண்பர் திரு கண்ணன் தங்களுடைய அருமையான கருத்துக்கும்
கனிவுடன் உதவ முன்வந்ததற்கும் மிகுந்த நன்றி.
தங்களுடைய வாழ்த்துக்களை திரு சம்பந்தம் ஐயாவிடம் தெரிவிக்கிறேன்.
தங்களைப்போன்ற அறிஞர்களின் பாராட்டும் உதவியும் அவர்களுக்கு பெருத்த
ஊக்கம் அளிக்கவல்லது.
நன்கொடை கொடுத்தும் பிற வகைகளிலும் உதவியவர்களுக்கும் அவர்கள்
குடும்பத்தாருக்கும் அருட்பேராற்றல் வாழ்வில் துணைநிற்க முற்றோதல்
முடிவில் உணவு உண்ணும் முன் அனைவரும் ஒருங்கிணைந்து
வேண்டிக்கொள்கிறார்கள்.

நான் காரைக்குடி வந்துவிட்டேன். தாங்கள் அன்போடு உதவிசெய்ய
முன்வந்திருப்பதை ஐயாவிடம் தொலைபேசியில் தெரிவித்து வங்கி விவரம் பெற்று
இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
மீண்டும் தங்கள் அன்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

N. Kannan

unread,
Jan 29, 2015, 1:30:42 AM1/29/15
to mint...@googlegroups.com

On Jan 29, 2015 1:11 PM, "சொ. வினைதீர்த்தான்" .

> தங்களுடைய வாழ்த்துக்களை திரு சம்பந்தம் ஐயாவிடம் தெரிவிக்கிறேன்.
> தங்களைப்போன்ற அறிஞர்களின் பாராட்டும் உதவியும் அவர்களுக்கு பெருத்த
> ஊக்கம் அளிக்கவல்லது.
>

தமிழர்கள் ஜாதியால், மதத்தால் (சைவம்/வைணவம்) பிரிந்து கிடக்கிறார்கள். மலேசியக்குழந்தைகளுக்கு நாயன்மார் கதைகளைச் சொல்லும் இல்லத்திரை சீரியல் இங்கு உருவாக்கப்படுகிறது. கால, கருத்து முரண்பாடுகள் கொண்ட இக்கதைகளை நம் சமயம் என்று சொல்லிக்கொடுப்பதை விட காலத்தை வென்று நிற்கும் குறள் நெறி, நாத்திகரக்கும் பொது மறையாய் திகழும் வள்ளுவ நேறியைப் போதிக்கலாம். இதற்கான உலகளாவிய ஒரு செய்ற்திட்டம் உருவாக வேண்டும். உதவ முடியுமா?

நா.கண்ணன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 29, 2015, 6:15:42 AM1/29/15
to mintamil, maza...@googlegroups.com, vallamai, muththamiz, housto...@googlegroups.com, தமிழ் மன்றம், tamil_ulagam
வணக்கம்.
பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினாலும் இவ்வளவு மாணவர்களை நன்னெறிப்படுத்துவது சற்று கடினமே.
ஒவ்வொரு ஊரிலும் இதுபோல் “திருக்குறள் முற்றோதல்“ மன்றங்கள் இருக்க வேண்டும்.
அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Jan 29, 2015, 6:32:04 AM1/29/15
to mint...@googlegroups.com, maza...@googlegroups.com, vall...@googlegroups.com, mutht...@googlegroups.com, housto...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, kalair...@gmail.com
குறளை இளையோருக்குப் பயிற்றுவிக்கும் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தகுந்தது. பலரும் கடைப்பிடிக்கத் தகுந்தது. இன்னும் பல இடங்களில் இப்படி நடக்க, இந்த மாதிரிச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளல் மிக்க அவசியம். வி.ஐயா அவர்களுக்கு நன்றி. முற்றோதல் நடத்துவோருக்குப் பாராட்டுக்கள்.
ப.பாண்டியராஜா

Madhurabharati

unread,
Jan 29, 2015, 7:31:34 AM1/29/15
to MinTamil
மிக இளவயதில் என் தந்தையார் எனக்குத் தந்த இரண்டு நூல்கள் திருக்குறளும் பாரதியார் கவிதைகளும். தமிழின்மீது ஆறாக்காதல் தோன்றக் காரணமாக இருந்தவை அவைதாம். இளம் உறவினர்கள் வெளிநாடு போவதாகக்கூறி என்னிடம் வந்தால் நான் இந்த இருநூல்களையும் அவர்களுக்கு என் ஆசியாகத் தருவேன்.

சில ஆண்டுகள் நான் தொழில்நிமித்தமாகக் குடும்பத்தினரை விட்டுத் தனித்திருந்த காலத்தில் எனக்குத் துணையாக இருந்தவர் வள்ளுவர்தாம். அப்போது ஆழ்ந்து கற்றதில் பொருள், நயங்கள் புலப்பட்டதுடன் பலப்பல குறள்கள் மனதில் நின்றன. என்னுடைய பெரும்சொத்தாக, பெரும்பேறாக அவற்றை நான் கருதுகிறேன்.

இறையருளால் நான் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வாழ்நெறிகள்குறித்துப் பேசுகிறேன். அப்போது எந்தக் கருத்தென்றாலும் அதற்குத் துணையாக, வலுத்தருவதாக ஒரு குறள் சொல்வேன். ஆசிரியர்களும் மாணவர்களும் என்னிடம் வந்து அதுகுறித்து வியப்புத் தெரிவிப்பதுண்டு.

பெரும்பாலானோர் பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு அப்பாலுள்ள குறள்களை அறிவதேயில்லை. எனது உரைக்கிடையே நான் விளையாட்டாக “இது 1339வது குறள்” என்று சொல்லிவிட்டு அவர்களைப் பார்ப்பேன். சில கணங்கள் திகைத்தபின்னர், “சார் மொத்தமே 1330தானே சார்” என்பார்கள் சிரித்தபடி.

“ஆமாம், இதுவும் வள்ளுவர் எழுதியதுதான். நீங்கள்தான் தெரிந்துகொள்ளவில்லை” என்பேன்.

ஒவ்வொரு தமிழனும் குறள்கூறும் நெறிகளை அறியவேண்டும். அதற்கு முற்றோதல் ஒரு நல்ல தொடக்கம். ஆனால், பொருளறிந்து கொண்டு, அதற்குத் தக நிற்கும்போது தமிழ்ச்சமுதாயம் புதிய உயரங்களை (இல்லை, ‘பழைய’ உயரங்களைத்தானோ!) எட்டும்.

அன்புடன்
மதுரபாரதி

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 5:51:26 AM1/30/15
to vallamai, மின்தமிழ்
வாழ்த்துக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு திவாகர். 
முகநூலில் பல நண்பர்கள் அவர்களுடைய காலக்கோட்டில் செய்தியினைப்பகிர்ந்துள்ளார்கள். பலரும் விரும்பிக்கருத்துரைத்துள்ளார்கள். அனைவர் மனங்களிலும் திருக்குறள் நெறி பரவவேண்டும் என்கிற பேராவாவைக்காண்கிறபோது மிகவும் மகிழ்ச்சியேற்படுகிறது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 6:31:06 AM1/30/15
to mintamil, vallamai
அன்பிற்கினிய திரு கண்ணன் 
வணக்கம். தங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெண்ணாடம் திருக்குறள் மையத்தினை பெருமுயற்சியுடன் சில நண்பர்கள் துணையுடன் நடத்திவருகிற செயலாளர் ஐயா திரு சம்பந்தனாரின் வங்கிக்கணக்கு விவரம் கீழே கொடுத்துள்ளேன்.

Name: P.K.SAMBANDAM,
S.B. A/C No: 611001006058
RTGS/NEFT/IFSC Code No: ICIC 0006110
அண்டுகளாக அறிவ்
(ICICI BANK, PENNADAM)

தாங்கள் உவந்தளிக்கும் அறக்கொடை உரிய வகையில் உரியவர்களுக்கு முற்றிலும் பயன்படுத்தப்படும் என்று நான்கு நாட்கள் அவர்களுடன் நிகழ்வு முழுவதிலும் உடன் இருந்தவன் என்ற முறையிலும் பெரியவரையும் பிற நண்பர்களையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நன்கு அறிந்தவன் என்ற முறையிலும் உறுதியளிக்கிறேன்.

மீண்டும் தங்கள் அன்பிற்கும், திருக்குறள் நெறி பரவுகிற பண்பிற்கும், அறநெஞ்சத்திற்கும் என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
வாழ்க வளமுடன். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 6:49:18 AM1/30/15
to mintamil
2015-01-29 18:01 GMT+05:30 Madhurabharati <madhura...@gmail.com>:
மிக இளவயதில் என் தந்தையார் எனக்குத் தந்த இரண்டு நூல்கள் திருக்குறளும் பாரதியார் கவிதைகளும். தமிழின்மீது ஆறாக்காதல் தோன்றக் காரணமாக இருந்தவை அவைதாம். இளம் உறவினர்கள் வெளிநாடு போவதாகக்கூறி என்னிடம் வந்தால் நான் இந்த இருநூல்களையும் அவர்களுக்கு என் ஆசியாகத் தருவேன்.
 
அருமை ஐயா. நான் திருக்குறளை பிள்ளைகளுக்கு தருகிறேன். மணிவாசகர் பதிப்பகத்தார் குறைவான விலையில் தரமாக வெளியிட்டுள்ளார்கள். நாட்டமுள்ள பெரிவர்களுக்கு மதுரைத்திட்டம் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள CD வழங்குகிறேன்.

சில ஆண்டுகள் நான் தொழில்நிமித்தமாகக் குடும்பத்தினரை விட்டுத் தனித்திருந்த காலத்தில் எனக்குத் துணையாக இருந்தவர் வள்ளுவர்தாம். அப்போது ஆழ்ந்து கற்றதில் பொருள், நயங்கள் புலப்பட்டதுடன் பலப்பல குறள்கள் மனதில் நின்றன. என்னுடைய பெரும்சொத்தாக, பெரும்பேறாக அவற்றை நான் கருதுகிறேன்.

இறையருளால் நான் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வாழ்நெறிகள்குறித்துப் பேசுகிறேன். அப்போது எந்தக் கருத்தென்றாலும் அதற்குத் துணையாக, வலுத்தருவதாக ஒரு குறள் சொல்வேன். ஆசிரியர்களும் மாணவர்களும் என்னிடம் வந்து அதுகுறித்து வியப்புத் தெரிவிப்பதுண்டு.
மகிழ்ச்சி ஐயா. 

ஒவ்வொரு தமிழனும் குறள்கூறும் நெறிகளை அறியவேண்டும். அதற்கு முற்றோதல் ஒரு நல்ல தொடக்கம். ஆனால், பொருளறிந்து கொண்டு, அதற்குத் தக நிற்கும்போது தமிழ்ச்சமுதாயம் புதிய உயரங்களை (இல்லை, ‘பழைய’ உயரங்களைத்தானோ!) எட்டும்.

மிகவும் உணமை. பிள்ளைகளுக்கு இன்று பொருள் புரியாவிட்டாலும் உரிய காலத்தில் பொருள் விளங்கி தக்க பலனை அளிக்கும்.
நன்றி.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 6:59:46 AM1/30/15
to vallamai, mintamil, maza...@googlegroups.com, muththamiz, housto...@googlegroups.com, தமிழ் மன்றம், tamil_ulagam
தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திரு காளைராசன். நம் பக்கத்தில் திருவாசகம் முற்றோதல், திருமுறை ஓதல், இராமாயணம் படித்தல் முதலிய நிகழ்வுகள் நடப்பதைக்கண்டுள்ளோம். பங்கெடுத்துள்ளோம்.
ஆனால் திருக்குறள் முற்றோதுதல் என்பது நான் முன்பு அறிந்திராதது. இந்நிகழ்வில் பங்கெடுத்தது மிகுந்த மனநிறைவை தந்தது.
நாம் இச்செய்தியை பகிர்ந்துகொள்கிறபோது பிற இடங்களிலும் மன்றங்கள் செயல்பட வழிவகுக்கும்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 7:13:02 AM1/30/15
to தமிழ் மன்றம், mintamil, maza...@googlegroups.com, vallamai, muththamiz, housto...@googlegroups.com, tamil_ulagam, Pandiyaraja Paramasivam
தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா. 

இணைக்கப்பட்டுள்ள படத்தில் முன்புறம் அமர்ந்து உணவு உண்ணும் இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமி தினந்தோறும் குறிப்பிடப்படுகிற மூன்று குறட்பாக்கள் மனனம்செய்துகொண்டு வந்து தடங்கலின்றி ஒப்புவிக்கிறாள். அவ்வதிகாரக் குறட்பாக்களை இரண்டுமுறை எழுதிவந்து பரிசுபெறுவதையும் கண்டேன். பல குழந்தைகளும் அவ்வாறே துடிப்புடன் பங்குபெறுகிறார்கள்.

அங்குவரும் ஏறத்தாழ ஐம்பது குழந்தைகளில் ஒருவரும் மெட்ரிகுலேசன் ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளில் படிக்கவில்லை என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-01-29 17:02 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
IMG_3446.JPG

தேமொழி

unread,
Jan 30, 2015, 4:20:43 PM1/30/15
to mint...@googlegroups.com

On Friday, January 30, 2015 at 3:49:18 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:

அருமை ஐயா. நான் திருக்குறளை பிள்ளைகளுக்கு தருகிறேன். மணிவாசகர் பதிப்பகத்தார் குறைவான விலையில் தரமாக வெளியிட்டுள்ளார்கள். நாட்டமுள்ள பெரிவர்களுக்கு மதுரைத்திட்டம் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள CD வழங்குகிறேன்.

சொ வி ஐயா...இந்த புத்தாண்டுப் பரிசாக அப்பா எனக்குக் கொடுத்த நூல்களில் ஒன்று திருக்குறள் 

படம் இணைத்துள்ளேன்...

பார்க்க ஓலைச்சுவடி போன்ற மாறுபட்ட தோற்றத்தில் தரமான பதிப்பாக இருக்கிறது...விலை 100 ரூபாய் 

 ..... தேமொழி

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 1, 2015, 8:02:24 AM2/1/15
to mintamil, தேமொழி Themozhi, vallamai, Subashini Tremmel, coral shree, Shylaja Narayan
தங்கள் தந்தையாரை போற்றுகிறேன் திருமிகு தேமொழி.

என் அலுவலகத்தோழர் ஒருவர் சென்னையில் என் வகுப்பில் கலந்துகொண்ட பிறகு ஊருக்குச்சென்று இந்த உரை நூலை எனக்கு அன்போடு அனுப்பிவைத்தார் என்பது நான் பெற்ற பரிசுகளில் சிறந்ததாகப்பாதுகாத்து வருகிறேன்.
அழகிய கட்டமைப்பில் உள்ள நூல். மு.வ, வ.சுப.மா, மணிவாசகர் பதிப்பகம் அ.மாணிக்கம் உரை ஆகியவை உள்ளடக்கத்தில் இன்னும் சிறப்பானவை. 

பரிமேலழகரை தஞ்சம் அடைவதே இறுதியில் சிறந்தது.

என்னிடம் 1909 ல் சென்னை, சூளை பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடத்தாரால் பதிப்பிக்கப்பட்ட பரிமேலழகர் உரை நூல் புத்தகம் உள்ளது. இந்நூலில் என் ஆயா வீடு நாச்சியாபுரம் வி.ராம வீடு பெயரும், என் தமையானர் கையெழுத்துமுள்ளது. பைண்டிங் செய்து நான் பாதுகாத்து வருகிறேன். 
இதில் திருவள்ளுமாலையும், சரிதமும் விரிவாக முன்னுரையில் ஓவியங்களுடன் பல பக்கங்களில் கூறப்பட்டுள்ளன. 
சில படங்கள் இணைத்துள்ளேன். நான் பிள்ளைகளுக்கு கொடுக்க வாங்கிகிவைத்துள்ள புத்தகங்கள் படமும் இணைக்கப்பட்டுள்ளது. . 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
2015-01-31 2:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Friday, January 30, 2015 at 3:49:18 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:

அருமை ஐயா. நான் திருக்குறளை பிள்ளைகளுக்கு தருகிறேன். மணிவாசகர் பதிப்பகத்தார் குறைவான விலையில் தரமாக வெளியிட்டுள்ளார்கள். நாட்டமுள்ள பெரிவர்களுக்கு மதுரைத்திட்டம் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள CD வழங்குகிறேன.

சொ வி ஐயா...இந்த புத்தாண்டுப் பரிசாக அப்பா எனக்குக் கொடுத்த நூல்களில் ஒன்று திருக்குறள்.  ஓலைச்சுவடி போன்ற மாறுபட்ட தோற்றத்தில் தரமான பதிப்பாக இருக்கிறது...விலை 100 ரூபாய்
.

IMG_3623.JPG
IMG_3615.JPG
IMG_3616.JPG
IMG_3618.JPG
IMG_3619.JPG
IMG_3621.JPG

N. Ganesan

unread,
Feb 1, 2015, 9:14:28 AM2/1/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, jsthe...@gmail.com, ksuba...@gmail.com, cor...@gmail.com, shyl...@gmail.com

On Sunday, February 1, 2015 at 5:02:21 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:
தங்கள் தந்தையாரை போற்றுகிறேன் திருமிகு தேமொழி.

என் அலுவலகத்தோழர் ஒருவர் சென்னையில் என் வகுப்பில் கலந்துகொண்ட பிறகு ஊருக்குச்சென்று இந்த உரை நூலை எனக்கு அன்போடு அனுப்பிவைத்தார் என்பது நான் பெற்ற பரிசுகளில் சிறந்ததாகப்பாதுகாத்து வருகிறேன்.
அழகிய கட்டமைப்பில் உள்ள நூல். மு.வ, வ.சுப.மா, மணிவாசகர் பதிப்பகம் அ.மாணிக்கம் உரை ஆகியவை உள்ளடக்கத்தில் இன்னும் சிறப்பானவை. 

பரிமேலழகரை தஞ்சம் அடைவதே இறுதியில் சிறந்தது.

பரிமேலழகரும் செட்டிநாட்டுக்காரர் தான். உவேசா பரிமேலழகர், அவர் ஊர், மரபு எல்லாமும்
விரிவாக எழுதியுள்ளார்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 1, 2015, 9:36:45 AM2/1/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, thami...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com

On Sunday, February 1, 2015 at 5:02:21 AM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:
தங்கள் தந்தையாரை போற்றுகிறேன் திருமிகு தேமொழி.

என் அலுவலகத்தோழர் ஒருவர் சென்னையில் என் வகுப்பில் கலந்துகொண்ட பிறகு ஊருக்குச்சென்று இந்த உரை நூலை எனக்கு அன்போடு அனுப்பிவைத்தார் என்பது நான் பெற்ற பரிசுகளில் சிறந்ததாகப்பாதுகாத்து வருகிறேன்.
அழகிய கட்டமைப்பில் உள்ள நூல். மு.வ, வ.சுப.மா, மணிவாசகர் பதிப்பகம் அ.மாணிக்கம் உரை ஆகியவை உள்ளடக்கத்தில் இன்னும் சிறப்பானவை. 

பரிமேலழகரை தஞ்சம் அடைவதே இறுதியில் சிறந்தது.

பரிமேலழகரும் செட்டிநாட்டுக்காரர் தான். உவேசா பரிமேலழகர், அவர் ஊர், மரபு எல்லாமும்
விரிவாக எழுதியுள்ளார்கள்.

சமண உரையாசிரியர்களும், புலவர் குழந்தை போன்றோரும் பரிமேலழகர் குறளின்
பொருளையே மாற்றுவதை விரிவாக எழுதியுள்ளனர்.

நாமக்கல் கவிஞர் திருக்குறள் தூக்குதண்டனையை வலியுறுத்துகிறதா?
- என்று விரிவாக ஆராய்ந்து சொல்லியுள்ளார்,

கள்வனாய் வஞ்சகத்தன்மை செய்து உலகையே ஆள் என்று
மன்னருக்கு வலியுறுத்துவாரா வள்ளுவர்? இங்கே ஆராயலாம்,
தமிழ்மறை கூறும் அடியளந்தான் யார்?

----------------------

திருவள்ளுவமாலை சங்கப் புலவர் எண்ணிக்கை ஏன்? - என்று குறிப்பிட்டுள்ளேன்.
சங்கத் தமிழ்ப் புலவர்கள் 49 பேர் என்பது இடைக்காலச் சைவ இலக்கிய மரபு. முதலில் இம் மரபை திருவள்ளுவமாலையில் காண்கிறோம். 49 என்னும் எண் வடமொழியின் எழுத்தெண்ணிக்கை ஆகும். இந்த எண்ணைக் கொண்டு கற்பனையான புலவர் பெயர்களைத் தருகிறது திருவள்ளுவமாலை. இப் புராணக்கதையின் வளர்ச்சியைத் திருவிளையாடல் புராணத்தில் ‘சங்கப் பலகை அளித்த படலம்’ அழகாகப் பாடுகிறது. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா உரையுடன் மேலும் ஆராய விரும்புவோருக்காக என் வலைப்பதிவில் தந்துள்ளேன்.

நீங்கள் குறிப்பிடும் திருக்குறள் புத்தகம் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம்
- 1907-ல் - அச்சானது தரவிறக்கிக் கொள்ளலாம். அச்சிட்டு பேராளர் சம்பந்தனுக்கும்
அளிக்கலாமே.

ஆறுமுக நாவலரவர்கள் அச்சிட்ட பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், ....
போல வுட்-ப்ளாக் எனப்படும் அரிய மரக்கட்டை கரிய மையோவியங்கள்
இது போன்ற புத்தகங்களின் சிறப்பம்சம். ஐரோப்பிய ஓவியங்களுடன் ஒப்பிட்டால்
சைத்ரீகக்கலை இன்னும் 2-டைமன்ஷலல் ஆகவே இருப்பது தெரியும்.

தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாரருளிச்செய்த திருக்குறள்இதற்கு பரிமேலழகருரையைக்கொண்டியற்றிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் திருவள்ளுவமாலை மூலமும் உரையும் சரித்திரமும் ஆகிய (Google eBook)

Front Cover
ஸன் ஆப் இந்தியா பிரஸ், 1907 - Didactic poetry, Tamil - 597 pages
 
நா. கணேசன்

என்னிடம் 1909 ல் சென்னை, சூளை பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடத்தாரால் பதிப்பிக்கப்பட்ட பரிமேலழகர் உரை நூல் புத்தகம் உள்ளது. இந்நூலில் என் ஆயா வீடு நாச்சியாபுரம் வி.ராம வீடு பெயரும், என் தமையானர் கையெழுத்துமுள்ளது. பைண்டிங் செய்து நான் பாதுகாத்து வருகிறேன். 
இதில் திருவள்ளுமாலையும், சரிதமும் விரிவாக முன்னுரையில் ஓவியங்களுடன் பல பக்கங்களில் கூறப்பட்டுள்ளன. 
சில படங்கள் இணைத்துள்ளேன். நான் பிள்ளைகளுக்கு கொடுக்க வாங்கிகிவைத்துள்ள புத்தகங்கள் படமும் இணைக்கப்பட்டுள்ளது. . 

தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனாரருளிச்செய்த திருக்குறள்இதற்கு பரிமேலழகருரையைக்கொண்டியற்றிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் திருவள்ளுவமாலை மூலமும் உரையும் சரித்திரமும் ஆகிய (Google eBook)

Front Cover
ஸன் ஆப் இந்தியா பிரஸ், 1907 - Didactic poetry, Tamil - 597 pages

Oru Arizonan

unread,
Feb 1, 2015, 10:06:27 AM2/1/15
to mintamil
வினைதீர்த்தான் அவர்களே,

தங்கள் நூலில் (1909) திருவள்ளுவர் திருநீறு அணிந்து திருவள்ளுவ நாயனாராகக் காட்சி தருகிறார். இப்பொழுது அவர் சமணர் ஆக்கப்பட்டு வருகிறார்.  அடுத்த நூற்றாண்டில் அவர் எந்தச் சமயத்திற்கு மாற்றப்படுவாரோ, அந்த இறைவனுக்கே வெளிச்சம்!

ஒரு அரிசோனன்  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Feb 1, 2015, 10:21:51 AM2/1/15
to mint...@googlegroups.com

On Sunday, February 1, 2015 at 7:06:27 AM UTC-8, oruarizonan wrote:
வினைதீர்த்தான் அவர்களே,

தங்கள் நூலில் (1909) திருவள்ளுவர் திருநீறு அணிந்து திருவள்ளுவ நாயனாராகக் காட்சி தருகிறார். இப்பொழுது அவர் சமணர் ஆக்கப்பட்டு வருகிறார்.  அடுத்த நூற்றாண்டில் அவர் எந்தச் சமயத்திற்கு மாற்றப்படுவாரோ, அந்த இறைவனுக்கே வெளிச்சம்!

ஒரு அரிசோனன்  

பழைய நூற்றாண்டுகளில் திருவள்ளுவர் சமணராகவே இருந்துள்ளமை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
உ-ம்: ஐராவதம் மகாதேவன்.

1907 புத்தகம் கொடுத்துள்ளேன். அதில் சைவராக ஆக்கப்பட்டுள்ளார் வள்ளுவர்.
தமிழறிஞர்கள் சமண சமயத்தவர் வள்ளுவரை இவ்வாறு 20-ஆம் நூற்றாண்டில்
சைவர் ஆக்கியதை விளக்கிவிட்டார்கள்.

கதைகளில் நீங்கள் ஏதாவது எழுதலாம். ஆனால், பல்கலைக்கழகங்கள்
கூறும் வள்ளுவர் சமண சமயத்தவர்.

நா. கணேசன்
 
Oru Arizonan

unread,
Feb 1, 2015, 11:46:32 AM2/1/15
to mintamil
உயர்திரு கணேசன் அவர்களே,
நீங்கள் நெற்றிக்கண்ணைத் திறந்தாலும், என்னைப் பொருத்தவரை திருவள்ளுவர் இந்துதான்.  அவரைச் சமணர் ஆக்க ஆயிரம் பேர் முயன்று எழுதி எழுதி வெற்றியும் கண்டு வருகிறார்கள்.  சிலர் அவர்  ஒரு கிறித்தவர் என்று சொல்லத் துவங்கி உள்ளார்கள்.  யார்கண்டது, இன்னும் நூறு ஆண்டுகளில் அவர் ஒரு கிறித்தவர் ஆக்கப்பட்டாலும் வியப்பில்லை.

N. Ganesan

unread,
Feb 1, 2015, 12:00:35 PM2/1/15
to mint...@googlegroups.com

On Sunday, February 1, 2015 at 8:46:32 AM UTC-8, oruarizonan wrote:
உயர்திரு கணேசன் அவர்களே,
நீங்கள் நெற்றிக்கண்ணைத் திறந்தாலும், என்னைப் பொருத்தவரை திருவள்ளுவர் இந்துதான்.  அவரைச் சமணர் ஆக்க ஆயிரம் பேர் முயன்று எழுதி எழுதி வெற்றியும் கண்டு வருகிறார்கள்.  சிலர் அவர்  ஒரு கிறித்தவர் என்று சொல்லத் துவங்கி உள்ளார்கள்.  யார்கண்டது, இன்னும் நூறு ஆண்டுகளில் அவர் ஒரு கிறித்தவர் ஆக்கப்பட்டாலும் வியப்பில்லை.

பல்கலைக்கழக ஆய்வுகளில் நம்பிக்கை கொண்டோர் யாரும் வள்ளுவர் ஹிந்து என்றோ, கிறித்துவர் என்றோ
எழுதுவதில்லை. 

நெற்றிக்கண் எல்லாம் கதை ஐயா.  அணங்க என்ற சொல்லின் திரிபு அனங்க- அதன் கதை சிவன் நெற்றிக்கண், ... விரிவாக பேராசிரியர்கள் எழுதியுள்ளனர். குறிப்பிட்டுள்ளேன்.

பாரதத்தின் சமய வரலாறு ஆழமானது.

Nagarajan Vadivel

unread,
Feb 1, 2015, 12:15:17 PM2/1/15
to மின்தமிழ்

2015-02-01 22:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்

​எல்லா (ஆண்)  கடவுளருக்கும் ​முக்கண் உண்டு. சிவன் இந்திரன் பற்றி மட்டும் அதிகம்தகவல் உள்ளது.  திருவள்ளுவர் கிறித்துவர் என்று போப்பாண்டவர் முன் மயிலை ஆர்ச் பிஷப் சான்றுகள் அளித்து விளக்கியுள்ளார்.  கிறித்துவம் பரவத் தொடங்கிய காலத்திலேயே கிறித்துவம் கடல்வழியாகத் தமிழகத்துள் நுழைந்துவிட்டது.  பைபிளில் சொல்லப்பட்ட பல கருத்துகள் பக்திப்பாடல்களின் தாக்கம் திருக்குறளில் இருப்பதாக கட்டுரைகளும் ஆய்வுகளும் உள்ளன

எலியோன்

N. Ganesan

unread,
Feb 1, 2015, 12:59:40 PM2/1/15
to mint...@googlegroups.com

On Sunday, February 1, 2015 at 9:15:17 AM UTC-8, எலியோன் wrote:

2015-02-01 22:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்

​எல்லா (ஆண்)  கடவுளருக்கும் ​முக்கண் உண்டு. சிவன் இந்திரன் பற்றி மட்டும் அதிகம்தகவல் உள்ளது.  

எல்லா கடவுளுக்கும் முக்கண் உண்டு என்பது புதிய செய்தி.
 
திருவள்ளுவர் கிறித்துவர் என்று போப்பாண்டவர் முன் மயிலை ஆர்ச் பிஷப் சான்றுகள் அளித்து விளக்கியுள்ளார்.  கிறித்துவம் பரவத் தொடங்கிய காலத்திலேயே கிறித்துவம் கடல்வழியாகத் தமிழகத்துள் நுழைந்துவிட்டது.  பைபிளில் சொல்லப்பட்ட பல கருத்துகள் பக்திப்பாடல்களின் தாக்கம் திருக்குறளில் இருப்பதாக கட்டுரைகளும் ஆய்வுகளும் உள்ளன

ஆனால், கிறித்துவம் கிபி முதல் நூற்றாண்டுகளில்  இருந்ததாக இலக்கியங்களோ, கல்வெட்டுக்களோ காணோமே.

நா. கணேசன்
 
எலியோன்

Reply all
Reply to author
Forward
0 new messages