--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/aI2-uxKX20Q/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தொடர் பதிவுக்கு நன்றி தேமொழி.மூவர் தமிழ் கட்டுரையின் முதல் பகுதிக்கு ஒரு பின்னூட்டம் எழுதியுள்ளேன். அதனை இப்பகுதியில் பதிவு செய்வேன்.அன்புடன் கமலநாதன்
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
‘மூவர் தமிழ்’ ஆய்வுக் கட்டுரை மின் தமிழ் குழுமத்தில் தொடர்ந்து பதிவிடப் பட்டு வருவதை அறிவோம். இக்கட்டுரையாளர் ‘நான்மறை’ எவை என்பதை அவர் ஆய்வில் எடுத்துக் கொண்டு அவர் கருத்தை இனி வரும் தொகுதியில் முன் வைப்பார். .
முதற்பகுதியிற் வெளியிடப்பட்ட கருத்துக்குப் பின்னூட்டம் ஒன்று எழுதி வைத்திருந்தேன் அதனை முதற்பகுதில் பதிவிடுவதற்கு முன்பே இரண்டாம் பகுதி பதிவிடப்பட்டதால் இவ்விடமே அப்பின்னூட்டத்தைப் பதிவிடுகிறேன். நிற்க.
நல்வழி நூலை அருளிய ஔவையார் எனும் பெண்மணி ஒருவர் (14-ம் நூற்றாண்டைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் – க. வெள்ளைவாரணனார் ஆய்வைக் காண்க) பாடிய பாடல் ஒன்று இக்கட்டுரையின் முதல் பகுதியில் பதிவிட்டமையால் ‘நான்மறை’ – யைப் பற்றி எமது கருத்து மின் தமிழ் குழும சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு முன் வைக்கப்படுகின்றது.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்
மேற்கூறிய ‘பாடலில் திருநான்மறை முடிவும்’ என்பது வேதத்தின் அந்தமாகிய ஞானகாண்டத்தை குறித்தது என்பதே இந்நாள் வரை கண்டு வந்த விளக்கம். இதற்கு முன்னோடி தமிழக சைவ சமய அறிஞர்தாம். அவ்வாறு பொருள் கொண்டோரில் ஸ்ரீலஸ்ரீ. சுவாமிநாத பண்டிதரும் ஒருவர் ஆவார். கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் ‘திருநான்மறை விளக்க’ ஆராய்ச்சி கட்டுரைத் தொடரை விமர்சித்து அவர் திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகள்:
“இனி “திருநான்மறை விளக்கம் என்னுஞ் சொற் ‘புணர்ப்பை நுணுகி யுற்று நோக்கி ஆராய்வார்க்கு, ‘தேவர் குறளுந் திருநான்மறை முடிவும்’ என்னும் ஔவையார் அருளிச்செய்த வெண்பாவுட் போந்த ‘திருநான்மறை” எவ்வாற்றானும் இப்போதுள்ள வடமொழி வேதங்களேயே உணர்த்தி நிற்கும் மதுகை மிகுதிப்பாட்டை நன்கிதி னுணர்ந்த “விளக்க” முடையார். அதுதான் தமது கொள்கைக்கு நேரே மாறாயிருத்தலை யுணர்ந்து, அதனைச் சகிக்க லாற்றாவுளத்தராய் அதற்குத் தமிழ் நான்மறை எனப் பொருள் விளக்கக் கருதி, அதன் பின்னர் விளக்கம் என்னும் ஒரு சொற் றலைப் பெய்து “திருநான்மறை விளக்கம்” எனப் முகப்பெயரிட்டுக் கொண்டார் என்பத் தெற்றென விளங்கும். அவர் அங்ஙனம் விளக்கினும் அது விளக்கும் விளக்காகாது; என்னை? ஔவையார் தமது காலத்து வழங்கிய தேவர்குறள் முதலியவற்றோடு வழங்காத நான்மறையைச் சேர்த்து ஒன்றாகவைத்தெண்ணி “எல்லாம் ஒரு வாசகமென்றுணர்” என அருளிச் செய்யாராகலி னென்பது.”
‘மறை’ என்ற சொல்லுக்கு ‘மறைபொருள்’ என்று பொருள் கண்டு தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தில் ‘நான்மறை முற்றிய வதங்கோட்டாசான்’என்பதற்கு பேரா. நச்சினார்கினியார் உரையில், ‘தைத்திரீயமும், பௌடிகமும், தலவகாரமும், சாமமும்’ என்று பொருள் கூறியது நாம் அறிந்ததே. இதனையும் இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஆய்ந்ததைக் கண்டோம்.
தொல்காப்பியம் சைவ பக்தி இலக்கியங்களுக்கு அப்பாற்பட்ட நூல். அதுபோலவே சங்க இலக்கியங்களில் வரும் ‘நான்மறை’ எனும் சொல் நால்வேதத்தைக் குறித்தது என்பதற்கு காட்டப் படும் ஆதாரங்களைக் கொண்டு மூவர் தமிழில் பாடிய நான்மறையும் ஒருபொருள் கொண்டது என்று விளக்கம் கூற போந்தோமானால் நாம் இடறுவோம். இதற்கு காரணம் ‘நான்மறை’ எனும் சொல் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு பொருள் கொண்டமை இக்கட்டுரைத் தொடரில் காண்போம். அதுவல்லாது. 7-ம் நூற்றாண்டில் ஆளுடையைப் பிள்ளையார் ‘நான்மறை’ எனும் சொல்லை கையாண்ட விதம் ஒரு பொருளையும், 14-ம் நூற்றாண்டில் சிவஞான சித்தியாரில் சகலாகம பண்டிதர் கையாண்ட விதம் வேற்றொரு பொருளையும் தருவதை நாம் காணலாம். ‘மூவர் தமிழ்’ கட்டுரைத் தொடர் தொடர்ந்து பதிவிட எமது கருத்தும் படிப்படியாக பதிவிடப் படும்.
மேற்கூறிய தனிப்பாடல் குறித்தப் பொருள்:
1) தேவர் குறளும் - உலகியல் அறம்
2) திருநான் மறை முடிவும்
(சிவபேத ஆகமத்தின் முடிவுப்
பகுதியாகிய சரியை) - அருளியல் அறம்
3) மூவர் தேவாரமும் - பக்தி – சிவமே
பரம்பொருள் என
சிவபரத்துவத்தை
உணர்த்துவது
4) திருக்கோவை திருவாசகமும் - திருவடிப்பேற்றால்
சிவத்துடன் கலந்து பெற்ற
இன்பம் விட்டுப் போகா-
திருக்க வேண்டிய
ஞானப் புலம்பல்
5) திருமந்திரமும் - சிவாகமச் சாத்திரம் –
ஞானநெறி
இவையெல்லாம் ஒருபடை பொருள் கொண்டவை என்றுணர்கவென்றது அவையெல்லாம் வீடுபேறுக்கு வழிகாட்டுவன என்பதாம்.
உலகியலில் அறவழி நிற்போரும், சமய தீக்கைப் பெற்று சைவ ஒழுக்கங்களைப் பேணி, சிவாகம சரியை வேண்டும் இயம, நியமங்களைப் பின்பற்றி நிற்போரும் பெறவல்ல சாலோக முத்தியும், சிவனை வழிபடும் கிரியையாற் சிவமே பரம்பொருள் என்றுணர்ந்து பெருமான் திருவடிப்பேற்றாகிய சாமீப முத்தியும், அகவழிப்பாட்டால் சிவத்துடன் கலந்து பெறும் இன்பத்தால் சாரூப முத்தியும், சிவாகம ஞானநெறியில் நின்று உயரிய சாயுச்சிய முத்தியும் அடைவதற்கு வழிகாட்டும் சைவ நூல்கள் அவையென நல்வழி அருளிய ஔவையார் கூறியது பொய்யாகா.
‘திருநான் மறை முடிவும்’ என்பதற்கு பொதுவாக இதுநாள் வரை கொண்ட வேதத்தின் ஞானகாண்டம் – உபநிடதம் என்ற பொருளை ஏற்காமால் சிவபேத ஆகமத்தின் முடிவு என பொருள் கொண்டதற்கு காரணம்:-
அ) வேதாந்தத்தின் முத்தி நெறிக்கான விளக்கத்தை ஆகமத்தின் சித்தாந்தம் (ஞான பாதம்) ஏற்கவில்லை என்பதால் ‘திருநான்மறை முடிவு’ என்று ஔவையார் கூறியது வேதாந்தத்தைக் குறிக்காது என்பதை அறிவோமாக (வேதாந்த முத்தி நெறிக்கான ஆகம மறுப்பை மிருகேந்திர ஆகமத்தின் ஞானபாதத்தில் இரண்டாம் படலத்தில் காண்க);
(ஆ) அதேவேளையில், திருக்குறள் காட்டும் உலகியல் அறமும் ஆகமம் காட்டும் அருளியல் அறமும் ஒரு நிலையுடைத்து என்பதை காட்ட இவை இரண்டையும் பிரித்து நல்வழி ஔவையார் முதலில் கூறினார் என்பதையறிக.
இனி, ‘மறை’ எனும் தமிழ் சொல் முப்பொருளைக் குறிக்குமென ‘வாகீச முனிவரால் அருளப்பெற்ற ‘ஞானாமிர்தம்’ (12-ம் நூற்றாண்டு நூல்) எனும் சிவாகம ஞானபாத உரைநூல் விளக்கிச் செல்கின்றது (500 ஆண்டுகள் பழமை வாயந்த உரைநூல்) அவை முறையே (1) ஆகமம், (2) உபதேசம், (3) மந்திரம் என்பனவாகும்.
ஔவையாரின் மேற்கூறிய பாடலில் ‘மறை’ எனும் சொல்லுக்கு ஆகமமென பொருள் கொண்டது தென்னாடுடைய சைவ சமயத்திற்கு ஒக்கும். அப்பாடலில் குறித்த பிற நூல்களும் தென்னாடுடைய சைவ மண்ணில் தோன்றியவை என்பதை நினைவில் நிறுத்திக் காண உண்மை புரியும்.
ஆகமங்கள் நாற்பாதங்கள் கொண்டவை என்பது நாம் அறிந்ததே. ஆனால் சிவபேத ஆகமங்கள் பத்தும் ஞானம் முதலாகி சரியை முடிவாகக் கொண்டு விளக்குவன என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை காரணம் நாம் ஆகமத்தை ஆழமாக நோக்குவது கிடையாது. இவ்வகை நாற்பாதங்களும் தனித்தனி நூல்கள் என்பதையும் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருஞானசம்பந்தரின் தேவாரத் திருமுறையைக் கொண்டு ‘நான்மறை’ – யை விளக்கும் பொழுது மேலும் விரிவாக விவரிப்போம்.
அதனால் ‘திருநான்மறை முடிபு’ என்று ஔவையார் கூறியது சிவபேத ஆகமத்தின் சரியையன்றி வேறொன்றாகாது. இதனை அடுத்தடுத்து வரும் எமது கருத்துப் பதிவுகளின் வழி நிறுவுவோம்.
ஆகமம் மறுத்த வேதாந்த முத்திக் கோட்பாட்டை ‘‘மறை’ என்று வைதிகச்சைவர் பொருள் கொண்டதனால் மூவர் தமிழ் வேதச் சார்புடையது என அவ்வகையோரால் முத்திரைக் குத்தப் பட்டது. அது இனியும் நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறியே. சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
--
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
பேரா. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் 1925-ம் ஆண்டில் ‘”திருநான்மறை விளக்கம்” எனும் கட்டுரைத் தொடரைத் தொடக்கி இன்றுவரை 90 ஆண்டுகள் கழிந்து விட்டன ஆனால் இதற்கு ஒரு தீர்வான முடிவு இதுவரை ஏற்பட்டதில்லை. அதனை ஒட்டியும் வெட்டியும் பேசினார்களே ஒழிய யாவருக்கும் மூவர் தமிழ் மீது உண்மையான பக்தி இருந்தது போல் தெரியவில்லை. சமயவாதிகளும் தமிழ் இலக்கியவாதிகளும் அரசியல் புலவர் போல் வாதிட்டதால் யானைப்போரில் மிதியுண்டு நைந்த குறுத்துப் போன்று நைந்தது தென்னாடுடைய சைவம். சிவசிவ.
20-ம் நூற்றாண்டு கால் பகுதியில் தமிழறிஞரிடையே ஏற்பட்ட வடமொழி எதிர்ப்புப் போராட்டமும் அதனையொட்டித் எழுந்த வைதிக பண்பாட்டைக் கொண்ட வேத நெறியாளர் எதிர்ப்பும் கற்றோரையும் சமயத்தின்பால் தெளிவாகச் சிந்திக்க விடாமல் செய்து விட்டது அத்தகைய சூழலில் வெளிவந்ததே பேரா. கா.சு. பிள்ளை அவர்களின் “திருநான்மறை விளக்கம்”.
பக்தி இலக்கியத்தில் சொல்லப் பட்ட ‘நான்மறைக்கு’ தமிழ் இலக்கியப் பொருள் கொண்டு விளக்கம் தேட முயன்றார் பேரா. கா.சு. அவர் வாதத்தில் உண்மை இருந்தது. ஆனால் வாதம் மட்டுமே இறுதி வெற்றியை உறுதி செய்ய இயலாது. வாதப் பொருளில் தடம் புரண்டால் எதிர்வாதிக்கு வாதியை வீழ்த்துவது சுலுவே. பேரா. கா.சு பிள்ளை அவர்களின் கருத்தை ஒட்டி வந்ததுதான் ‘மூவர் தமிழ்’ எனும் இவ்வாராய்ச்சிக் கட்டுரையும்.
இவர்கள் எடுத்துக் கொண்ட இருபொருளுக்கு தென்னாட்டுச் சைவ நூல்களின் வழி தக்கப் பதிலைக் கொடுத்திருந்தால் வெற்றி கா.சு. கட்சிக்கே. அவ்விருபொருளும் (1) ‘நான்மறை’ (2) ஆறங்கம் என்பனவாகும்.
மூவர் தமிழ் தோன்றிய 7-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை தென்னாட்டுச் சைவம் ஆகம நெறியைக் கொண்டதாக இருந்தது. அன்று மெய்கண்ட சாத்திரங்கள் இல்லை. சமண பௌத்த நெறிகளை வீழ்த்த ஆகம ஞான நெறியே ஆளுடையப் பிள்ளையாருக்கு ஆதாரமாக இருந்தது என்பதை இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இதற்கு காரணம் ஆகமும் வடமொழியில் இருந்து அதனையும் புறம்தள்ளியதுமேயாம். ஆணிவேரை அறியாது கிளைவேரைக் பிடித்துக் கொண்டு மாமரத்தைக் குலுக்கிப் பார்த்தனர் மாங்கனி வீழவில்லை. அவர் வாதத்திற்குத்தி ருவருள் கிட்டவில்லை. நிற்க.
இனி, இக்கட்டுரைத் தொடருக்கு (2.1) வருவோம். இக்கட்டுரையாளர் ‘நான்மறை’க்குப் பொருள் காண்பதற்கு ’இதன் உண்மையைத் தேவார முதலாய திருவருணூற்கொண்டு ஆராய்ந்தே முடிவு காண்டல் வேண்டும்” மென்று கூறியது தெளிவான சிந்தனை. அப்படியானால் தேவாரத் திருமுறை அருளிய மூவரில் முதலானவர் திருஞானசம்பந்தர் ஆவாராதலின், அவர் அருளிய தேவாரத் திருமுறையில் ‘மறை’ என்ற சொல்லும், அதனையொட்டிய சொற்களும், நான்மறையும் எங்ஙனம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். அதற்கு முன்னர் சைவத்தில் திருஞானசம்பந்தர் நிலைப்பாடு என்னவென்பதை அறிய வேண்டும்.
“வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.” (தி 3:49:1)
என்று பாடியதைக் கொண்டு திருஞானசம்பந்தர் வேத சார்புடையோரென்று இன்று கூறி வருகின்றனர் வைதிகச்சைவர்.
பெருமானின் பஞ்சாட்சர மந்திரமாகிய நமசிவய-’மே வேதத்தின் மெய்ப்பொருளாவது என்று கூறியதின் காரணமென்ன? 7-ம் நூற்றாண்டுக்கு முன்னரே மீமாம்சகர் வேதம் சுயம்பு என்றதனை வேதாந்திகள் மறுக்கவில்லை அதனால் வேதமே பிரமாண நூலாகுமெனவும் சிவாகமங்களும் பிற தந்திர நூல்களும் ஒரு முதல்வனால் செய்யப் பட்டதென்பதால் முற்றழிப்பில் அவை அழியும் தன்மை உடையனவென்றும் ஆதலின் அவை பிரமாணமாகா என்ற வாதத்தை இரண்டாயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே (புராணக்காலம்) வேத நெறியாளர் முன் வைத்தனர். இதற்கான ஆதாரத்தை சிவஞான யோகியரின் ‘சிவஞானபோத விரித்தி’ உரையில் காண்க.
சிவாகம மறையோர் மீமாம்சகரின் அக்கூற்றை மறுத்து வேதமும் முதல்வனாகிய சிவபெருமானாலேயே அருளப்பெற்றது என்று கூறுவாயினர்.
நாதம் விந்து தத்துவத்திலிருந்து ‘சொற்பிரிவிலாத மறைபாடி நடனமாடுவார்” (தி. 3:78:2) என்று திருஞானசம்பந்தர் பாடிதற்கு திருநாவுக்கரசர்,
“ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே” (தி 6:38:1)
என்று ஒத்துப் பாடியதை நோக்குங்கால் பொருளற்ற ஓசையாக சூக்கும நிலையிலிருந்து மந்திரமெனும் பொருள் பொதிந்த ஒலி வடிவமான சொல் அனைத்தும் அவனிடத்திருந்து தோன்றியதல்லவா. ஆதலின் வேதம் சுயம்பு என்பது ஏற்கவியலாது என்றும் அவற்றையும் திவ்விய ஆகமங்களையும் அருளியது சிவ பெருமானே என்பதுதான் மீமாம்சகரின் கூற்றுக்கு ஆகமத்தின் பதிலாக அமைந்தது.
அவ்வாகமக்கூற்றை உணர்த்தவே திருஞானசம்பந்தர் “வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே” என்று பாடினார். அதனால் திருஞானசம்பந்தர் வேதநெறி வழி ஒழுகினார் என்பது பொருளல்ல. அதே வேளையில் வேதத்தின் முத்திக் கோட்பாட்டை விடுத்து மற்றதை மறுத்தாருமில்லை காரணம் அவ்வேதங்களும் சிவ பெருமானாலேயே அருளப்பெற்றதென்பதல்லவா தென்னாடுடைய சிவாகமத்தின் நிலைப்பாடு. இரு கண்ணில் ஒரு கண்ணைக் குத்தி ஊணமாக்கிக் கொள்ள அவர் ஞானமற்றவர் இல்லையே! அவ்வாறாகின் திருஞானசம்பந்தர் சிவாகமச் சைவ நெறியில் நின்றவர் என்பதற்கு ஆதாரமென்ன?
தேவாரத் திருமுறைகளைப் 10-ம் நூற்றாண்டில் கண்டெடுத்து முறைப்படுத்தியவர் நம்பியாண்டார் நம்பி அல்லவா. அவரே திருஞானசம்பந்தர் சிவாகம விதிகளை எடுத்தியம்பினார் என்றால் அது பொய்யாகுமா? பதினோராம் திருமுறையில் ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில்’,
“பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும்
ஒழிவின்றி நவின்றனையே” (தி 11:38)
என்று பாடிய நம்பியாண்டார் நம்பியின் உரைக்கு முதுமுனைவர் சி. அருனை வடிவேல் அவர்கள் தனது சுருக்கமான குறிப்புரையில்,
"அகப் புற நூல்களாகிய தந்திரங்களை விலக்குதற்கு, ``பரம சிவ ஆகமம்`` என்றார்" என்று கூறுவாரானார்.
விதி நூல் என்றது தந்திரங்களைக் குறிக்கும் அவ்வாறு திருஞானசம்பந்தர் காலத்திற்கு முன்பு தென்னாடுடைய சைவத்திற்கு தந்திரங்களாக விளங்கியது சிவாகமங்களும், தமிழாகமாகிய திருமந்திரமுமாகும். இதனால் நாம் அறிவதாவது திருஞானசம்பந்தர் சிவாகம நெறிவழி ஒழுகியவராவர் என்பதாகும். இதனை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் மேலும் விளக்குவோம்.
சிவாகம நெறியில் நின்ற தமிழ் விரகனார் 'வேதம்' எனும் ஒரு பொருளைக் குறிக்க வேதமென்றும், மறையென்றும் இரு சொல் கொண்டு கூறினார் என்றால் அது கூகையின் கண்ணுக்குச் செங்கதிர் தோன்றாதது போல அறியாமையில் உள்ளோருக்கு உண்மைப் பொருள் தோன்றாது என்பதற்கு ஒப்பாகும். திருஞானசம்பந்தனாரின் தமிழ் மொழி ஆளுமைத் திறனைக் காண நமக்குப் பூத கண்ணாடி தேவையில்லை? அவர் 'வேதம்' என்றும் 'மறை' என்றும் பாடியது இரு வெவ்வேறு பொருளைக் குறிக்கும் சொற்களாகும் என்பதை அறிவோமாக.
அவ்வாறு அறியாமையில் நின்றுதான் ஒரு சைவ மடத்தின் பண்டிதர்கள் ஒட்டு மொத்தமாக ஆளுடையைப் பிள்ளையார் திருமுறையில் வரும் 'மறை' என்ற சொல்லுக்கும் அதனையொட்டி வந்த சொற்களுக்கும் 'வேதம்' என்று பொருள் சொல்லுவாராயினர். அவ்வாறு சொல்ல இயலாத தருணத்தில் அச்சொல்லை இருட்டடிப்புச் செய்து அல்லது அதே சொல்லைக் கையாண்டு பொழிப்புரையும் குறிப்புரையும் எழுதுவராயினர். என்னே இவர்தம் மடைமாற்றத் திறன்?
தான் சிவாமங்களைக் கற்றோன் என்பதனைத் திருஞானசம்பந்தரே,
"சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலுநாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் பரிந்துரைத்த பத்துமேத்தி (தி 1:132:11)
என்று திருக்கடைக்காப்பில் சொல்லுவதால் தான் சிவாகம நெறிகளைக் கற்றவன் என்பதை அவரே ஒப்பினார். அதே சொல்லை (செழுமறையின் அரும்பொருள அந்திச்செம் மேனியனை) நம்பியாண்டார் நம்பியும் திருக்கலம்பகத்தில் உபயோகித்ததையும் காண்க.
இனி முன்னர் சொன்னது போல 'மறை' எனும் தமிழ் சொல் (1) ஆகமம் (2) உபதேசம் (3) மந்திரம் எனப் பொருள்படும் என்பதை மனதில் நிறுத்தி 'நான்மறை' - க்குப் பொருள் காண முற்பட்டால் எந்தைத் திருவருளால் நற்பயன் கிட்டும். சிவசிவ.
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
திருஞான சம்பந்தர் சிவாகம சைவ நெறியில் நின்றவர் என்பதை நம்பியாண்டார் நம்பி நாயனார் மேலும் ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில்’,
தங்கு புகழ்ச்சதுர் மாமறை
நாவளர் சைவசி காமணிதன் (தி 11:38:15)
என்று பாடியதில் ‘சதூர் மாமறை நாவளர் சைவ சிகாமணி” என்றது நான்மறையைக் கற்ற சைவத் தலைவன் என்று கூறுகின்றார். இதனை மெய்ப்பிக்க திருஞான சம்பந்தரே தம்மை ‘நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன்” (தி. 3:22:11) என்று தன்னிலைக் கூற்றாகச் சொல்லுகின்றார்.
ஆக சதூர் மாமறை என்பதும் நான்மறை என்பதும் சைவ நூல்கள் என்று கொள்வதே சாலப் பொருந்தும். அதுவல்லாது அவை வேதங்கள் நான்கும் என்றால் திருஞானசம்பந்தர் எங்கும் தமது திருமுறைப் பாடல்களில் வேதாந்தத்தைப் புகட்டினார் இல்லை. மாறாக சைவ சித்தாந்த நெறிகளையே ஆங்காங்கு தமது பாடல்களில் பாடி அடியார்களுக்குப் புகட்டி வந்தார் என்பதை முதல் மூன்று திருமுறைகளையும் ஆய்ந்தால் நன்கு அறிய முடியும். இதற்கு மாலைமாற்றுப் பதிகத்தின் முதல் பாடலும் தக்கச் சான்று. இதுவுமல்லாது சிவநெறியே பெருநெறியென்று (தி 1:1:11) பாடியவர் வேதநெறியில் நின்றவர் என்று கூறப் போந்தோமானால் நாம் தென்னாடுடைய சிவாகமச் சைவத்தைக் கலப்படச் சைவமாக்குகிறோம் என்று பொருளாகும்.
இவ்வாறு சிவாகமச் சைவநெறியில் நின்று ‘மறை’ என்ற சொல்லை மற்றிரு நாயனாரை விட திருஞானசம்பந்தரே தமது பாடல்களில் அதிகமாகக் கையாண்டவர். அத்தகைய ‘மறை’ என்ற சொல் தோன்றுமிடத்தெல்லாம் ‘வேதம்’ என பொருள் கூறி திருமுறைக்கு விளக்கவுரை எழுதியவர் ஒரு பெரிய சைவ மடத்தின் பண்டிதர்தாம்! தமிழ் நாட்டுச் சைவ அறிஞர் எவரும் இதனைச் சிந்தித்தாருமில்லை கண்டித்தாருமில்லை. முன் எருது போகும் பாதையிலேயே பின் எருதும் போகும் என்பது நாம் அறிந்த பழமொழி. அதுதான் அச்சைவ மடத்தின் முதல் இரண்டு பண்டிதர் தவறாக வழிகாட்ட பின்னோரும் கேள்விக் கேட்கத் தயங்கி அல்லது அம்மடத்தினரின் வைதிகச்சைவ கொள்கைக்கு ஏற்ப திருஞானசம்பந்தரின் தேவாரத் திருமுறையை வைதிகச் சைவத்திர்க்குத் திசைத்திருப்பினார் போலும். சிவசிவ.
இவ்வாறு திருஞானசம்பந்தர் சிவாகம சைவ நெறியில் நின்றவர் எனின் அதனை ஒப்பாது அவர் வேத நெறியில் நின்றவர் என்று வைதிகச்சைவர் முரண்படுவார். அதற்கு சுலுவாக அவர் காட்டும் ஆதாரத்தில் ஒன்று,
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே (தி 3:108:1)
என்பதாகும். திருஆலவாய் பதிகத்தின் பின் புலனை அறிந்து இதற்கு பதில் நாடுவது சைவர்களுக்கு நலம் பயக்கும்.
வடக்கே வேத வேள்ளி வழிபாட்டில் உயிர்பலி கொடுத்துச் செய்யும் பசுவேட்டு, அசுவமேத யாகம் போன்றவற்றைக் கண்டித்து வைதிக மதத்தை ஓரளவுக்கு இல்லையென்று ஆக்கி விட்டு தென்னகம் வந்தனர் சமணத் துறவிகள். அவர் வந்த நோக்கம் சமண நெறியைத் தென்னகத்தே பரப்புவது. தமிழை வளர்ப்பதன்று. தமிழன்றி பிராகிரதத்தின் வழி தமிழரை சமணத்திற்கு திசை திருப்ப முடியாது என்பதையறிந்து தமிழில் சமண நெறிகளைப் பரப்புவதற்கு தமிழ் மொழி கற்று தமிழ் நூல்கள் செய்தனர் சமண முனிவர். வடக்கே வைதிகர் மீது இருந்த தீராத பகைமையைத் தெற்கே வந்து காலூன்றியப் பிறகு இங்கும் வேத வேள்வியைத் தடுத்தனர். வைதிகர் எண்ணிக்கை தெற்கே சிறியது என்பதால் அவர் செய்வதறியாது முடங்கினர். களப்பிரர் காலம் தொட்டு 7-ம் நூற்றாண்டு வரை தென்னகத்தே வேத நெறி கருகியது. சைவத்தை மீட்டெடுக்குங்கால் வேத நெறியையும் தழைக்க வைக்க வேண்டிய அவசியம் திருஞானசம்பந்தருக்கு இருந்தது. அதன் காரணமாகவே வேத நெறியையும் மீட்டெடுக்கப் பாடுபட்டார் திருஞானசம்பந்தர். உயிர் காப்பான் தோழன் என்பது சைவத்தின் கொள்கை என்பதை நிருபித்தார் திருஞானசம்பந்தர். இத்தகையப் பின்னனியில்தான் சைவம் வேத நெறியையும் தற்காக்கா வேண்டியதாயிற்று. அக்காரியத்தைச் செவ்வனே செய்து முடித்தார் திருஞானசம்பந்தர் என்பதை உணர்த்துவதே மேற்கூறிய திருஆலவாய் பதிகத்தின் வழி நாம் அறிய வேண்டியது. அதுவல்லாது திருஞானசம்பந்தர் வேத நெறி வழி நின்றார் என்று வைதிகச் சைவர் சொல்வாரேயானால் அது உண்மைக்குப் புறம்பான கூற்றாகும்.
இதுகாறும் விளக்கிய வரையில் ஓரளவுக்கு ‘மறை’ என்ற தமிழ் சொல்லின் பொருள் படிப்போருக்குப் புரிந்திருக்கும்.
இனி இக்கட்டுரையாளர் முன் வைத்த கேள்வி ஒன்றைக் காண்போம்.
தேவாரத் திருமுறைகளில் வேதம், நான்மறை எனும் சொற்கள் அடுத்தடுத்து அருளிச் செய்திருப்பதை நோக்க மறை வேறு வேதம் வேறு என்ற பொருளில்தான் அப்பாடல் பாடப் பெற்றது என்று கூறுவாரானார் இக்கட்டுரையாளர்.
“பங்கமேறு மதிசேர்சடையார் விடையார் பல வேதம்
அங்கமாறு மறைநான்கவையு மானார்” (தி 1:66:1)
திருமுறைக்கு விளக்கவுரை எழுதிய ஒரு பெரிய ஆதின வித்துவானும் முனைவரும் ‘பல வேதம் அங்கமாறு மறைநான்கு அவையுமானார்” என்பதற்கு அச்சொற்களைப் பிரித்துப் பொருள் கூறாமல் அவற்றிற்கு ஒரே விளக்கமாக ‘நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்’ என்று பொருள் கூறினார். இதற்கு முன்னமே ‘மறை’ என்ற சொல்லுக்கு வலுக்கட்டாயமாக ‘வேதம்’ என்ற ஒரே பொருளைக் கொண்டு பொழிப்புரை, குறிப்புரையென்று எழுதியபிறகு அதற்கு மாறாக நிற்காமல் இருக்க மறை நான்கு என்பதற்கு பொருள் விளக்காமல் போயினர் என்றால் அது பொய்யாகாது.
இப்பாட்டில் பலவேதம், அங்கமாறு, மறைநான்கு என்று குறித்தது வெவ்வேறு நூல்களாகும். வேதங்களும் அதற்கு அங்க நூல்களாகிய ஆறும், சைவ மறைகள் நான்கிலும் சிவபெருமான் விளங்குபவராவார் என்றுதான் திருஞானசம்பந்தர் பாடினாரென்பது வைதிகச் சைவர் கொண்ட கொள்கைக்கு எதிராக இருப்பதால், நான்மறை எவை என்பதை விளக்காமல் இருட்டடிப்புச் செய்தால் அது மூவர் தமிழுக்குச் செய்யும் நிந்தனையாகும். திருஞானசம்பந்தர் கூறிய ‘நான்மறை’ எவை என்பதை தக்க நேரம் வரும்பொழுது அடையாளம் காட்டுவோம். சிவசிவ.
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
திருஞானசம்பந்தர் திருமுறையில் ‘மறை’ எனும் சொல்லும் அதன் விரிவாக்கமும் பலவாறு பாடப்பெற்றிருப்பதால் அச்சொல் இடத்திற்கு ஏற்றவாறும், அச்சொல்லுடன் கூடி வரும் சொல்லை ஒத்தும், ஒவ்வொரு பாடலிலும் குறிக்கப் படும் புறப்பொருளையும், மறைந்துள்ள பொருளையும் கொண்டு அதற்கான உண்மைப் பொருளை அறிவதே சிறப்பு. இதற்கு காரணம் மறை எனும் சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கொண்டது என்பதை முன்னமே அடையாளம் கண்டோம்.
முதல்வனால் அருளப்பெற்ற முதல் நூல் மறையாகும். ஆகையால் ‘மறைகள்’ என்று பண்மையில் பொதுவாகத் திருமுறையில் பாடப் பெற்றிருப்பின் அது ஆகமத்தையும் வேதத்தையும் சேர்த்தே குறிக்கும் காரணம் இவை இரண்டுமே சிவபெருமானால் அருளப்பெற்றதென்பது சிவாகமத்தின் விளக்கம். இதுவுமல்லாது சான்றோர் அருளிய உபதேசங்களும் ‘மறை நூல்’ எனும் தகுதிக்குடையவையே. அவ்வகையில் திருவள்ளுவ ஆசானால் அருளப்பெற்ற திருக்குறள் ‘தமிழ் மறை’ என்று புகழப்படுவதும் பொருந்துவதே. மந்திரப் பொருள் வெளிப்படையாகச் சொல்லப்படாது மறைமுகமாக உணர்த்தப்படுவதால் மந்திரமும் ‘மறை’ எனப்படலாயிற்று. ‘சிவாய’ எனும் மந்திரச் சொல் பெருமான் சொரூப நிலையில் செயலற்று இருப்பதைக் குறிக்கும். இதனை விளக்கிச் சொன்னால்தான் பலருக்குப் புரியும். இல்லையேல் அதுவும் இறைவனின் திருநாமத்தில் ஒன்றெண்ணிப் போவோம். இவ்வாறு மந்திரத்தின் மறைப் பொருள் அறிய விரும்புவோர் இரௌரவ ஆகமத்தின் கிரியை பாதத்திலும், ஞானப் பாதத்திலுமுள்ள சிவ மந்திரங்களின் பொருளைக் கற்றுணர்க. இவை வடமொழியில் உள்ளன. பேரா. எஸ்.பி. சபாரத்னம் சிவாச்சாரியாரால் ஞானப்பாதத்தில் உள்ள வடமொழி மந்திரங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது.
அதனால் மூவர் தமிழில் வரும் ‘மறை’ மற்றும் அதன் விரிவாக்கம் கொண்ட சொற்களுக்கு ‘வேதம்’ என்றொரு பொருளை மட்டுமே கொண்டு திருமுறைக்கு விளக்கவுரை எழுதிய எந்நூலும் சிறந்ததாகா. அவ்வாறு விளக்கவுரை எழுதப் பெற்ற நூற்கள் மறுவாசிப்புக்குரியன. அதனை மீண்டும் மறுவாசிப்புச் செய்து ஆராய்ந்து உண்மைப் பொருள் முன்னம் கொண்ட பொருளுக்கு வேற்றாயிருப்பின் அதனைத் திருத்தி மறுபதிப்புச் செய்வது தமிழ் நாட்டுச் சைவ மடங்களின் கடமையாகும்..
இவ்வாறு மறுவாசிப்புச் செய்து உண்மைப் பொருளை வழங்குவது எவ்வகையிலும் தவறாகாது. இதற்கு முன்னுதாரணங்கள் பல உண்டு. முன்னம் பொருள் விளக்கம் கொடுக்கப் பட்ட சில தேவாரப் பதிகங்கள் பின்னர் புதிய விளக்கவுரை கொண்டு வந்துள்ளன. இதற்கான ஆதாரத்தை டி.வி. கோபால் ஐயரின் ‘தேவார ஆய்வுத்துணை’ எனும் நூலில் 2-ம் பாகத்தில் காண்க.
அதனால் ‘மறை’ என்ற சொல்லுக்கு சிரமப்பட்டு பொருள் தேடுவது அவசியமற்றது. பேரா. கா.சு. பிள்ளை அவர்களும், ‘மூவர் தமிழ்’ ஆய்வுரை வழங்கிய இக்கட்டுரையாளரும் பல்வகையில் இதற்கு விளக்கம் கொடுக்க முற்பட்டது தலையைச் சுற்றி வந்து வாயூட்டுவதற்கு ஒப்பாகும்.
இனி ‘நான்மறை ஆராய்ச்சி’ யின் கருப்பொருளுக்கு வருவோம்.
திருஞானசம்பந்தர் பாடிய,
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே. (தி 1:53:6)
எனும் இப்பாடலைக் கொண்டு பேரா. கா.சு. பிள்ளை அவர்களின் கட்சியும் அவருக்கு எதிரணியில் நின்ற திரு. மா. சாம்பசிவபிள்ளைக் கட்சியைச் சார்ந்தோரும் கடந்த 90 வருடங்களாக சைவர்களுக்கு கொடுத்த மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. இருசாரரும் உண்மையறிய சொற்போற் செய்யவில்லை. அவர்வர் கொண்ட கொள்களை விட்டகலாமலிருக்க விவாதம் செய்வதையே கருமமாக கொண்டனர். அதனால் இருசாரருக்குமே எந்தைத் திருவருள் கிட்டவில்லை என்றே எம் ஆழ்மனம் கூறுகின்றது. தேவாரத் திருமுறையில் பாடப்பெற்ற நான்மறைக்கும் இன்றுவரை பொருள் விளங்காமல் கிடக்கின்றது.
அடுத்தடுத்தப் பதிப்பில் மேற்கூறிய பாடலில் திருஞானசம்பந்தரால் கூறப் பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்பதற்கு விடை காண முற்பட்டு பேரா. கா.சு. பிள்ளைக் கட்சி பொருள் விவாதத்தில் செய்த முதற்பிழையைக் காண்போம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
--
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே. (தி 1:53:6)
இப்பாடலில் உள்ள சில சொற்களைப் பிரித்தெடுத்து அதன் பொருளை முதலில் அறிந்து கொள்வோம்.
1) சைவ வேடந்தான் நினைந்து:
பொருள்: சிவஞானம் பெற வேண்டி சிவபெருமானின் திருவடியைப் போற்றியது
2) ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளருக்கு:
பொருள்: தருமை ஆதின முனைவர் விளக்கம்: ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினராகிய சனகர் முதலிய அந்தணாளர்.
ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினர் நிலை யாது?
(அ) பிரகிருதி மாயைப் பிணைப்பினால் வயப்பட்ட ஐம்புலனும் அந்தக்கரணங்களாகிய மனம் சித்தம், புத்தி, அகங்காரத்திலிருந்து (24 ஆன்ம தத்துவங்களிலிருந்து) நீங்கிய ஆன்மாக்களாகும். இது பதமுத்தி நிலையெனப்படும். இவ்வாறான ஆன்மாக்கள் வாழுமிடம் இப்பூவுலகமில்லை. இப்பூவுலகத்திற்கு மேலானா 14 புவனங்களிலுள்ள ஒர் உலகத்தில் முனிவர் வாழுமிடமாகும். அவரே சனகர் முதலாய முனிவர் என்றது.
3) அறம் பொருள் இன்பம் வீடு
(அ) பதமுத்தியிலிருந்து அபர முத்தியும், பரமுத்தியும் அடையும் நெறியறியாத சனகர் முதலாய முனிவர் சிவபெருமானை வேண்டி தவமிருக்க, அவர் தவத்தையேற்று காட்சியளித்து கல்லால மரத்தடியில் சின் முத்திரைகளாற் மௌன உபதேசம் (கருத்தளவில் செய்யப்படும் உபதேசமாகும்) செய்தார். அவ்வாறு உபதேசம் செய்தது ஆகமப் பொருளாகும். அவை சீலம் (சரியை), நோன்பு (கிரியை), செறிவு (யோகம்) எனும் சைவ சாதனமும், அவை கைவரப்பெற்றதால் திருவருள் துணையுடன் பெறப்படும் சிவஞானமுமாகும். சிவஞானம் பெற்ற ஞானியரே முத்தி நிலையில் உயர்ந்ததாகிய சாயுச்சிய முத்தியடைய வழிகோலும். திரிபுடை ஞானம் நீங்கி சிவத்துடன் இரண்டரக் கலத்தல் நிலையாகும். இதுவே ஆகமங்கள் அனைத்திலும் உணர்த்தப் படும் தத்துவார்த்தப் பொருளாகும்.
4) மொழிந்த வாயன்
பொருள்: சிவாகம முத்தி நெறியை உபதேசித்தவர் என்பதாகும்.
இப்பாடலில் கூறப்பெற்ற அறம் பொருள் இன்பம் வீடு என்பதற்கு சரியை, கிரியை, யோகம் ஞானத்தை இணைப்பது எவ்வாறு பொருந்தி வரும் என்று சிலர் கேட்கக் கூடும். அதற்கான விளக்கம்:
இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பட்ட ஆன்மாவை முத்திநெறி நோக்கிச் செயல்படுத்தும் முறையை முன்நிறுத்திச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று வடமொழியில் ஆகமத்தில் சொன்னதை மணிவாசகர் தமிழ்ப்படுத்திச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று பாடியதைக் காண்க,
சீல மின்றி நோன்பின்றிச்
செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை (தி 8:50:3; ஆனந்த மாலை)
சைவத்தை மீட்டெடுக்குங்கால் தமிழையும் அயலார் மொழி ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தம் திருஞானசம்பந்தருக்கு இருந்தது. சைவத்திற்கும், தமிழுக்கும் தன்னை அர்பணித்துக் கொண்ட தமிழ் விரகனாகிய திருஞானசம்பந்தர் சிந்திப்பதையும் தமிழிலேயே சிந்தித்தார். அதன் விளைவே ஆகமத்தின் முத்திக்கான நாற்பாத நெறியின் இறுதிப் பயனை முன் நிறுத்தி அறம், பொருள், இன்பம், வீடு என்று பாடினார். இதன் விளக்கம்:
(ஆ) சரியையாற் பெறப்படும் இறுதிப்பயன் அறம். அற வாழ்க்கையில் நின்று ஆன்ம பக்குவம் பெறுவதே
முதற்படி. இதில் உலகியல் அறமும், அருளியல் அறம் இரண்டுமே அடங்கும்.
(ஆ) கிரியையாற் பெறப்படும் இறுதிப்பயன் சிவப்பரத்துவத்தை அறிவது. பதி, பசு, பாச முப்பொருள்
உண்மையறிந்து சிவனே பரம் ‘பொருள்’ என உணர்ந்து கிரியையாற் மந்திரசுத்தி கலாசுத்தி அடைவதாகும்.
(இ) யோகத்தால் பெறப்படும் இறுதிப்பயன் இன்பமாகும். ஐம்புலன் அடங்கி ஆன்ம தற்போதம் நீங்கி சிவத்துடன்
கலந்து நற்போதத்தில் பெறக்கூடிய இன்பம் எனப்பட்டது.
(ஈ) அறம், பொருள், இன்பம் கைவரப்பெறின் இறைவன் திருவருளால் சிவஞானம் பெறுவதாகும்.
சிவஞானத்தைப் பெற்று ஆன்மா முத்திப் பேரின்பமடைவதே சைவம் கூறும் வீடுபேறுக்கான நெறியாகும்.
இதற்கு முன் எவரும் இவ்வாறு சிந்தித்துப் பொருள் கூறியது கிடையாது. அதனால் இக்கருத்துக்கு ஆதாரமாக சைவ நூற்களை மேற்கோள் காட்ட இயலவில்லை. இக்கருத்து மற்றவர் வியாக்கீனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவேன். சிவசிவ.
திருஞானசம்பந்தர் பாடிய அப்பாடலின் உட்கருத்தை அறிந்த பிறகு ‘மூவர் தமிழ்’ கட்டுரையில் மேற்கோள் காட்டப்பெற்ற இன்னொறு பாடலையும் சற்றே பொருள் விளக்கம் காண்போம். திருநாவுக்கரசர் பாடிய,
உரித்தானை மதவேழந் தன்னை மின்னா
ரொளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே (தி 6:662)
இப்பாடலுக்கு பொழிப்புரை வழங்கிய தருமை ஆதினத்தின் விளக்கம்:
மத யானைத் தோலை உரித்தவனாய், மின்னல் போல ஒளி வீசும் சடை முடி உடையவனாய், பார்வதி பாகனாய், பகைவர் மும்மதில்களை எரித்தவனாய், அடியார்களுடைய வினைப் பயனாம் நோய்களையும் பாவங்களையும் போக்கியவனாய், கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து முனிவர் நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்களையும் அவற்றை உணரும் கருவிகளாகிய நான்கு வேதம் ஆறு அங்கங்கள் ஆகியவற்றையும் உபதேசித்தவனாய்த் திருநாகேச்சரத்தில் உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே.
திருநாகேச்சர பதிகத்தில் திருநாவுக்கரசர் பாடிய அறம் பொருள் இன்பம் வீடு என்ற உறுதிப் பொருள்களையும் அவற்றை உணரும் கருவிகளாகிய நான்கு வேதம் ஆறு அங்கங்களின் பயன் நன்னெறிக்கு உய்ப்பது என்று பாடினார். அந்நான்கு புருசார்த்தங்களின் பொருள் தருமை ஆதின குறிப்புரையில் கொடுத்தவாறு:
“ஈதலறம்; தீவினைவிட் டீட்டல்பொருள்; எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்தொருமித்தாதரவு பட்டதே இன்பம்; பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு”
அவ்வாறே இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் பயனைக் கூறும்பொழுது பெருமானை வழிபடாதவர் நன்னெறியடையார் என்று பாடினார்.
மேலும் திருநாவுக்கரசர் இப்பாடலில் ‘ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடின்பம் ஆறங்கம் வேதந் தெரித்தானை” என்பதில், திருஞானசம்பந்தர் பாடியது போல் “ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளருக்கு” உபதேசித்தார் என்று பாடவில்லை. இதனால், வேதமும் அதன் அங்க நூல்களும் பிரகிருதி மாயையில் உள்ளோருக்கு உபதேசிக்கப் பட்டது என அறியப்படும். இதுவே ஆகமச் சைவைத்தின் நிலைப்பாடும் ஆகும்.
இத்தகைய வேறுபாட்டினால், திருஞானசம்பந்தர் பாடலில் கூறப்பெற்ற அறம் பொருள், இன்பம் வீடு ஆகமத்தின் முத்தி நெறியினைக் குறித்தது என்பதும், திருநாவுக்கரசரின் மேற்குறித்தப் பாடலில் கூறப்பெற்ற அறம் பொருள் இன்பம் வீடு என்பது வேதவழி உலகியல் அறத்தில் நின்று வீடு பேறு பெறுவதற்கான நெறிகளைக் குறித்தன என்பதனை நாம் அறிவது அவசியம்.
வேதாந்தத்தின் முத்தி நெறி பிரகிருதி மாயையில் உள்ள 24 ஆன்ம தத்துவங்களை மட்டுமே கொண்டு விளக்குமாகையால் வேதத்தின் பொருள் பிரகிருதி மாயையில் உபதேசித்தது என்பதாகும். அதன் காரணமாகவே வேதத்தில் கூறப்பட்ட அறம் பொருள் இன்பம் துய்ப்பதனால் பெறும் வீடுபேறு பத முத்தியேயாகும் என்பது சித்தாந்திகளின் முடிபு. முற்றழிப்புக்குப் பின்னர் பத முத்திப் பெற்ற ஆன்மாக்களுக்கு மறுபிறவி உண்டென்பது சித்தாந்தத்தின் நிலைப்பாடு.
‘மூவர் தமிழ்’ கட்டுரையாளரும் பேரா. கா.சு. பிள்ளை அவர்களும் அறம் பொருள் இன்பம் வீடு என்பதற்கு வேதத்தின் வழி கூறப்பெற்ற பொருளைக் கொண்டு அவை நூற்பயனைக் குறிப்பதாகும் என்றார். திருஞானசம்பந்தரால் கூறப்பெற்ற அறம் பொருள் இன்பம் வீடு வேற்றொரு பொருளைக் குறிக்கும் என்பதை உணராமல், வேதத்தின் நான்கு புருசார்த்தங்களைக் கொண்டு அவையே சைவத்தின் உறுதிப் பொருட்கள் எனக் கற்பித்துக் கொண்டு வழக்காடத் தொடங்கினர். இங்குதான் அவர் செய்த முதற்பிழை தொடங்கிற்று.
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற அறம் பொருள் இன்பம் வீடு பேற்றின் உண்மைப்பொருள் அவர் அறிவுக்குப் புலப்படாமல் போனதால் தவராண பாதையைத் தேர்ந்தெடுத்து மூவர் தமிழில் பாடபெற்ற ‘நான்மறைக்கு’ தமிழ் இலக்கியத்தில் கூறப்பெற்ற நூற்பயன் என்று கருதி விளக்கம் காணப் புகுந்தார். அதுவே குளவிக் கூட்டில் கை விட்டதற் போலாகியது. சிவசிவ.
--
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
அறம் (சீலம்), பொருள் (நோன்பு) இன்பம் (செறிவு) எனும் சைவ சானதங்களின் வழி அடையும் சிவானூபூதி நிலையில் முத்திப் பேரின்பம் கிட்டப்பெறுவது சிவாகமத்தின் கொள்கையாதலால்தி ருஞானசம்பந்தரின் “சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி” (தி 1:53:6) பாடலில் அதுவே ஆகமத்தின் நூற்பொருள் என்று கூறவந்தார் என்றால் அக்கூற்று சரியானதே. ஆகமம் அருளியல் நூல். அதனால் முற்பதிப்பில் கூறியது போல் அருளியல் வழியே ஆகமத்தின் நான்கு உறுதிப் பொருட்களை விளக்கிக் கூறினார் திருஞானசம்பந்தப் பிள்ளை. என்னே! அவர்தம் தமிழ் ஆளுமைத் திறன்.
மேற்கூறியதை திருஞானசம்பந்தரின் மற்றொரு பாடல் வழியும் அறியலாம்:
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. (தி. 1:48:1)
இறைவன் திருவடி சேர்வதற்கு ஆகமம் உணர்த்தும் நாற்பாத கொள்கையையே கல்லால மர நிழலின் கீழ் சனகாதி முனிவர் நால்வருக்குப் போதித்தார் என்பது தென்னாடுடைய சிவாகமத்தின் கூற்று. ஏன் சனகாதி முனிவர் சிவபெருமானை வேண்டி சித்தாந்த சைவம் பகரும் முத்திக் கோட்பாட்டை ஞானமாகப் பெற வேண்டும்?
சிவபெருமானிடமிருந்து வேதத்தின் வழி பெறப்பட்ட நல்லறத்தால் சனகாதி முனிவர் பெற்றது பதமுத்தியே. இம்முத்தியடையும் ஆன்மாக்கள் கலப்பு மாயைடைந்து (மிச்சிர மாயை) அதற்கும் மேலுமாகிய சிவபெருமான் திருவடியடைய சுத்த மாயை அடைவதற்கு வழியறியாது மயக்கமுற்றிருந்த நிலையில், சிவபெருமானை வேண்டிய தவத்தால் கல்லால மரத்தின் நிழலடியில் ஆகமப் பொருளை உபதேசமாகப் பெற்றனர் என்பதே மேற்கூறிய பாடலின் உட்பொருள்.
அதனால் இறைவனால் அருளப்பெற்ற முதல் நூல் இரண்டாகின. அவை வேதமும் ஆகமும் என்பதாகும். இறைவனால் அருளப்பெற்ற முதல் நூல் ஒன்றாகாமல் இரண்டாயின காரணமென்ன? இதனைச் சித்தாந்த வினா விடையாக முதுமுனைவர் சி. அருனை வடிவேல் இவ்வாறு விளக்கினார்:
மாணவன்: இறைவன் ஏதேனும் ஒரு நூலை முதல் நூலாகச் செய்யாமல், முதற்கண்ணே, ‘வேதம், சிவாகமம்’ என இரண்டு நூல்களையும், பின்னும் அவ்வாறே திருக்குறள், திருமுறை என இருவேறு வகைப்பட்ட நூல்களையும் ஏன் முதல் நூலாகச் செய்தல் வேண்டும்?
ஆசிரியர்: நல்ல வினாவே வினாவினாய்! நூலைக் கற்று அதன்வழி நின்று பயன்பெறுவார் ஒரு திறத்தினராய் இல்லாது இருதிறத்தினராய் இருத்தலே, நூலை ஒன்றாகச் செய்யாது இரண்டாகச் செய்தமைக்குக் காரணம்.
மாணவன்: இருதிறத்தினராவார் யார்?
ஆசிரியர்: அறத்தின் பெருமையை உணர்ந்து அதன்வழி ஒழுகி, இம்மை, மறுமை இன்பங்களை அடைவர் ஒரு திறத்தினர். இறைவனது அருளின் பெருமையை உணர்ந்து அதன்வழி ஒழுகி வீடின்பத்தினை அடைவார் மற்றொரு திறத்தினர். இவ்விரு திறத்தினரும் முறையே ‘உலகர்’ எனவும், சத்திநிபாதர் எனவும் சொல்லப்படுவர். உலகர் பொருட்டுச் செய்யப்பட்ட நூல் ‘அறநூல்’ எனப்படும்; அது பொது நூல். சத்திநிபாதர் பொருட்டுச் செய்யப் பட்ட நூல், ‘அருள்நூல்’ எனப்படும். அது சிறப்புநூல். “ஆரண நூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம் – நீதியினால் உலகர்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது” எனும் சிவஞான சித்தியினையும் (சூ 8-15); “வேதமோடுடாகமம் மெய்யாம் இறைவன் நூல் – ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன” என்னும் திருமந்திரத்தையும் (2397), “உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும், நிலவுமெய்ந்நெறி சிவனெறியென்பதும்” என்றருளிய சேக்கிழார் விளக்கித்தினையும் (திருஞா. பு. 820) நோக்குக. இவ்வாற்றானே ‘திருக்குறள் பொது நூல்; திருமுறைகள் சிறப்பு நூல் என்பதும் தெளிவாகும்.
மேற்கூறிய விளக்கத்தால் இதற்கு முன் பதிவிடப்பட்ட திருஞானசம்பந்தர் பாடலின் (தி 1:53:6) வழி சனகாதி முனிவருக்கு அருளியது ஆகமப் பொருளும், திருநாவுக்கரசர் பாடலின் வழி (தி. 6:66:2) சனகாதி முனிவருக்குப் போதித்தது அறநூலாகிய வேதமும் அதன் ஆறங்கமுமாகும் என்பதை நாம் அறிந்து நால்வர் திருமுறையை ஓதுவதால் பயன் மிகும்.
நால்வர் திருமுறையில் ஒரு சில பாடல்களில் கல்லால மர நிழலில் அறமுரைத்தார் என்றும் இன்னும் சில பாடல்களில் அருமறை போதித்தார் என்றும் பாடிருக்கையில் அவை முறையே வேதத்தையும், ஆகமத்தையும் போதித்தார் என்று பொருள் கொண்டால் சைவருக்கு ஏன் மயக்கம்? திருமுறைகளில் வரும் அவ்வகை பேதத்தின் உண்மைப் பொருளை சைவர் அறிந்த பிறகு இனியும் துன்பம் விளையாது என்பதை திருவருள் துணையுடன் அறிவோம். சிவசிவ. .
மேற்கண்டவாறு விளக்கியப் பிறகு சைவத் திருமுறையில் பாடப்பெற்ற ‘நான்மறை’ என்பது தமிழ் மறையென்றும், அவை அறம், பொருள் இன்பம், வீடு என உணர்த்தப் படும் தமிழ் நூல்கள் என்றும், அவை ஆதி ஊழியில் அழிந்துப் போயினவென்றும், அவற்றின் வடமொழி மொழிபெயர்ப்பே இன்றிருக்கும் வேத நூல் என்றும் புலம்பித் திரிவது தமிழருக்குத் தேவையில்லாத மடைமாற்றச் செயல். இந்நாள் வரை தான் ‘இந்து’ என்று சொல்லித் திரியும் தமிழர் தாம் சைவப் பரம்பரை என்றுணர வேண்டுமென்றால் சைவத்தைச் சைவமாக வைத்திருங்கள். அசைவைமாக்க வேண்டா.
அடுத்தடுத்தப் பதிவில் கல்லால மர நிழலில் அறத்தைப் போதித்தாகவும், அருமறையை போதித்ததாகும் உள்ள சில பாடல் வரிகளை இரு தொகுப்பாக வகுத்துப் பதிவிடுவோம். அதற்கப்புறம் மூவர் தமிழில் பாடப்பெற்ற ‘நான்மறை’யும் அதனுடன் தொற்றிக் கூறப்பட்ட ஆறங்கம் யாவை என்பதற்கு திருஞானசம்பந்தப் பிள்ளையின் திருவடியைப் போற்றி அவர் பாடல்களைக் கொண்டே விளக்குவோம். இறுதியாக ‘இந்துமத’ போர்வையில் தமிழரை வைதிகப் பண்பாட்டில் திளைக்கவைக்க இனியும் முயற்சிக்காதிர் என்ற வேண்டுதலையை வைதிகச் சைவருக்குச் சிறப்பாகவும் பிறருக்குப் பொதுவாகவும் முன் வைப்போம். சிவசிவ.
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
கல்லால மர நிழலின் கீழ் நால்வருக்கு வேதப் பொருளாகிய அறமுரைத்தார் என்றும் ஆகமக் கொள்கைகளாகிய அறம் (சீலம்), பொருள் (நோன்பு), இன்பம் (செறிவு), அதன் வழி வீடுபேற்றைப் (சிவஞானம்) பெற சிவபெருமான் போதித்தார் என்பது புராணக் கூற்று.
இப்புராணக் கூற்றின் பின்னணி அறியாது இதற்காக இரு கட்சியினரும் சொற்போர் செய்தது வருந்தத் தக்கது. இது அவர் குற்றமல்ல காலத்தின் கோலமாகும். 1925-ம் ஆண்டு ‘நான்மறை ஆராய்ச்சி’ தொடங்கிய காலத்தில் தமிழில் அச்சில் இருந்த நூல்கள் குறைவே. பல புராணக் கூற்றுகளுக்கு மூலம் பதினெண்புராணங்கள் என்பதால் அவற்றின் முழு விபரம் அன்று நூல்வழி பலர் அறிந்திலர். அனைத்தும் பண்ணெண்டுங்காலமாக செவி வழி செய்தியாகவே புகட்டப் பட்டது. இதன் காரணமாகவே பேரா. கா.சு. பிள்ளை இதனையொட்டி பல வினாக்களை எழுப்பி அவை புரியாத புதிராக உள்ளன என்றார்.
அதற்கு விளக்கமளிக்கக் கிளம்பிய திரு. மா. சாம்பவசிவ பிள்ளை அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தவர் பெயரைக் காண்கையில் எமக்குத் தலை சுற்றிற்று. எல்லாம் வைதிகச் சைவத்தில் பழுத்தப் பழங்கள். இவர் மூவர் தமிழில் குறித்த ‘நான்மறை’ எவை என்பதை அறிந்து சொல்வதற்கு பதிலாக எதிர்கட்சியினரின் கூற்றை மறுப்பதற்கு மட்டுமே பதில் சொல்வாராயினர். கற்றோர், பிழை செய்பவரைத் திருத்துவது மட்டுமல்லாமல் நல்வழியையும் காட்ட வேண்டும். பேரா. கா. சு. பிள்ளை அவர்கள் வாதத்தில் முன்வைத்த ‘நான்மறை’ தமிழ் நூல்கள் என்பதை மட்டும் மறுத்தனரே ஒழிய மூவர் தமிழில் பாடப்பெற்ற அந்த ‘நான்மறை’ எவை என்பதை விளக்கவில்லை. நான்மறை என்பது நால்வேதம் என்பதே இவர்களின் கூற்றாகவும் இருந்தது. இதற்கு காரணம் இவர்களின் வைதிகப் பற்றே. உயிர் சார்ந்ததன் வண்ணமாகும் எனும் இலக்கணத்திற்கு ஒப்ப இவர் வைதிகச் சைவப் பற்றோடு அவர்தம் கருத்துக்களை முன் வைத்தனர் என்பதில் சந்தேகமில்லை.
இனி சனகாதி முனிவர்களுக்குச் சிவபெருமான் போதனை செய்தார் எனும் புராணக் கூற்றைக் காண்போம். இக்கூற்று தொடங்கியது பதினெண்புராணங்கள் வழி என்று கூறினோம் புராணக்காலம் இற்றைய நாளிலிருந்து பின்னோக்கிச் செல்ல 2,900 ஆண்டுகளாகும் என்பது சில சமய வரலாற்று பின்னணி அறிந்த அறிஞர் கூற்றாக உள்ளது. நால்வர் காலத்திற்கு முன்பே அப்புராணங்களை வடக்கே வாழ்ந்த பௌராணிகர் இயற்றினர். அதில் ஒன்று ‘சிவ மகா புராணமாகும்’. இப்புராணத்தில் முத்திக்கான வழியறிய வேண்டி சரஸ்வதி ஆற்றங்கரையில் வேள்வி செய்த பிராமணரைக் கண்ட சனத்குமார முனிவர் அவர்களுக்கு காட்சியளித்து அவர் வேள்வியின் நோக்கத்தை வினவ, வியாச முனிவர் பதில் அளித்ததை ஆங்கில மொழியில் இங்கு பதிவிடுகிறோம்: சிவ மகா புராணத்தின் வித்தியேஸ்வர சம்ஹிதையின் நான்காம் அத்தியாயத்தில்,
“Sanatkumara said,
11. O sage, you must meditate upon the True object. The great lord shiva can be realized and seen. But wherefore do you perform the penance here unattended?
12-14. When Sanatkumara addressed him thus, the sage Vysa clarified his purpose, “By the favour of divine elders like you I have almost established the four ways of virtue, wealth, love and salvation with due adherence to the Vedic path in the world. I have become a preceptor unto all. Still it is surprising that the knowledge of the means of liberation has not downed on me. I am performing penance for the sake of salvation. But I do not know how it can be achieved.
15. O excellent brahmins, when thus requested by the sage Vysa, the competent divine sage Sanatkumara told him of the sure way of realizing salvation.
16. It has already been mentioned that there are three means in conformity with Vedic ideal viz, Sravana, Kirtna and highly efficacious Manana of Siva.
17. Formerly, I too, confounded by other means performed a great penance on the mountain Mandara.
18-19. At the bidding of Siva, the divine attendant Nandikesvara arrived there. That sympathetic lord of Ganas, witness of all, lovingly told me about the means of salvation, viz- Sravana, Kirtana and Manana all in conformity with Vedic ideals.
20. Hence, O holy sage, as advised by Siva these are the three means of salvation. Please practice them.” He repeatedly advised Vyasa thus.
21. After saying this Vysa, the son of Brahma mounted the aerial chariot accompanied by his followers and returned to his splendid and auspicious region.”
இதனால் நாம் அறியக்கடவது யாதெனில் வேத நெறியில் சொல்லப்பட்ட ‘தர்மம், அர்தா (பொருள்), காமா (இன்பம்), மோட்சம் (வீடு) ஆகிய நான்கு புருஷார்த்தங்களில் நின்றும் முத்திப்பேறு கிட்டாமால் சிவனை வேண்டி தவமிருக்கிறோம் என்று வியாச முனிவர் கூற, சனத்குமார முனிவர் தனக்கும் அத்தகைய நிலை நேர்ந்ததை எடுத்துக் கூறி பின்னர் நந்தியெம்பெருமானால் முத்திக்கு உபதேசம் பெற்ற விவரத்தையும் எடுத்துக் கூறி அதனைப் பின்பற்றி வாழ்ந்தால் முத்தி நிச்சயம் என்பதை உணர்த்தி வானூர்தியில் தனது விண்ணுலகத்திற்குச் சென்றார்.
இதனால் நாம் மேலும் அறியக் கடவது யாதெனில் வேத நெறியில் கூறப் படும் நான்கு புருஷார்த்தங்களாகிய ‘தர்மம், அர்த்தா, காமா, மோட்சா’ நமக்கு நன்னெறியைப் புகட்டி இம்மை மறுமைப் பயனை மட்டுமே அளிக்கவல்லது, அம்மைப் பேற்றை (வீடுபேறு) அளிக்க இயலாது என்பதாகும். இதனால் நாம் மேலும் அறியக் கடவது, திருக்குறள் போன்ற உலகர்க்கு உரிய நூல் கற்று அதன் வழி நிற்போர் இம்மை மறுமைப் பயன் அடையலாம். அம்மைப் பேற்றை வேண்டும் சத்திநிபாதர் சிவாகம நெறியைப் பின்பற்றியும் நால்வர் அருளிய திருமுறையைப் பொருள் அறிந்து ஓதியும் முத்திப் பேரின்பத்தை அடையலாம். சிவசிவ.
அப்புறம் ஏங்க, ‘கல்லால மரத்தின் நிழல்கீழ் சிவன் சனகாதி முனிவருக்குப் எதனைப் போதித்தார்’ என்று நமக்குள் சட்டையிட்டுக் கொள்ள வேண்டும்? என்ன அறியாமை இது? கற்றோரிடையே இப்படிப் பட்ட அறியாமை வந்ததற்கு காரணம் அவரவர் பெற்ற கல்விச் செருக்கே காரணமாகத் தோன்றுகிறது. சிவசிவ.
இந்த அளவுக்கு விளக்கி விட்டப் பிறகு இனியும் கல்லால மர நிழலில் அறத்தைப் (வேதத்தைப்) போதித்ததாகவும், அருமறையைப் (ஆகம நெறியைப்) போதித்ததாகவும் திருமுறையில் உள்ள சில பாடல் வரிகளை இரு தொகுப்பாக வகுத்துப் பதிவிடுவது பயனற்ற செயல் என்பதால் அதனை விடுவோம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
--
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
இதற்கு முன் பதிவிடப்பட்ட கருத்துக்களில் மூவர் தமிழில் குறித்த ‘நான்மறை’-யை விளக்கவேண்டியிருந்த சில தடைகளை முதலில் விளக்கி அதனை நிவர்த்திச் செய்தோம்.
இனி தேவாரத் திருமுறையில் நான்மறையைக் காணப்புகின் நமது செயல் எந்தைத் திருவருளுடன் இனிதே செய்து முடிக்க வேண்டுகிறேன். சிவசிவ.
வாகிச முனிவர் அருளிச் செய்த
ஞானமிர்த மூலமும் உரையும் - ஞானபாதம்
எனும் நூலின் பாயிர இறுதியில் மூல ஆகமங்கள் ஞானம் முதலாகி (ஞானம், யோகம், கிரியை, சரியையென வரிசைக் கிரமாக) சதுர்ப்பாதமாயிருக்கும் என்பதை விளக்கியருளிய பகுதியினைக் காண்போம்.
இதில் ‘அருமறை’ (கீழே பதிவிட்ட பாயிரத்தின் 2-வது வரி) எனும் சொல்லுக்கு ‘அரியவனவாகிய மூலசிவாகமங்கள்’ என்று பொருள் கொண்டதைக் காண்க. இதை விடுத்து வேற்றிரு இடத்தில் குறித்த ‘மறை’ என்னும் சொல்லுக்கும் ‘ஆகமம்’ என்னும் பொருளே கூறப்பட்டுள்ளது.
அடுத்து மூல சிவாகமங்கள் ஞானபாதம் முதலாகி சரியாபாதம் முடிவாக நான்கு பாதங்களாக உள்ளன என குறித்ததையும் காண்க. இதனால் நல்வழி ஔவையார் பாடலில் வரும் ‘தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்’ என்பது மூல சிவாகமத்தின் சரியாபாதத்தைக் குறித்ததென்று இதற்கு முன் கூறப்பட்டது நிறுவப்பட்டது.
ஆதலின், ‘திருநான்மறை முடிவும்’ என வரும் அப்பாடலின் கருத்து இதுநாள் வரை வேதத்தின் அந்தமாகிய ஞானகாண்டத்தைக் குறிக்குமென்று சமயாசிரியர்களாலும், உரையாசிரியர்களாலும் அறிவுறுத்தப் பட்டு வந்தது தவறாகும் என்பதை அறிந்து இனி நம்மைத் திருத்திக் கொள்வோமாக.
இனி பாயிரத்தைக் காண்போம்.
“...........
வென்சினப் பிறவி நஞ்சுக வளித்த
வருமறை யெவையுந், திருமிகு ஞான
மிலங்கொளி யோக நலங்கினர் கிரியை
சரியை யென்ற விரிதரு பாதங்
கறையறு மறைமுறை நெறியி
னறைய மற்ரோ வறிகதி லமர்ந்தே”
உரை: ....... இந்த வெவ்விய சினத்தையுடைய பிறவியென்னுஞ் சர்பத்தின் நஞ்சுகெட அருளிச்செய்த அரியவனவாகிய மூலசிவாகமங்களினும் உபாகமங்கள் பலவற்றினும் சொல்லப் படுவன, செல்வமிகுந்த ஞானபாதமும் மேதாதி யுன்மானாந்த தெரிசனமாகிய பேரொளியையுடைய யோகபாதமும் நன்மைகிளர்ந்த கிரியாபாதமுஞ் சரியாபாதமும் என்று சொல்லப்படானின்ற விரிந்த னான்கு பாதங்களும் ஆதலால் இவையிற் றைக்குற்றமற்ற உபதேசத்தின் முறைமையே நெறியாகச் சொல்லப் புத்திபண்ணியறிவாயாக.
மேற்கூறிய பாயிரத்தில் ‘மறைமுறை’ என்னும் சொற்றொடர் ‘உபதேசத்தின் முறைமையே’ என்று பொருள் கொள்ளப்பட்டதால் ‘மறை’ என்னும் சொல் ‘உபதேசம்’ என்றும் பொருள்படும் எனலாயிற்று.
மனம் வாக்கு கன்மங்களை விரித்துக் கூறியவிடத்து,
“.... வாய்மை, கல்வி, தீமையிற் றிறம்ப,
லின் மொழி யிசைத்தல், வன்மொழி மறத்த
லறிவனூல் விரித்த லருமறை கழற..”
“அருமறை கழறல்” என்பதற்கு ‘அரிய வேதாகம மோதுதல்’ என்று பொருள் கொண்டமையால் ‘மறை’ என்னும் சொல் ‘மந்திரம்’ என்னும் பொருளையும் குறிக்கும் என்பதை அறிவோமாக.
இதனால் தேவாரத் திருமுறையிலும், திருவாசகத்தில் ‘மறை’ என்ற சொல் தோன்றுமிடத் தெல்லாம் ‘வேதம்’ என்ற ஒரே பொருள் கொண்டு தமிழ் நாட்டுச் சைவ மடங்கள் திருமுறைக்குப் பொழிப்புரையும், குறிப்புரையும் எழுதியது மறுவாசிப்புக்கு உரியது என்று முன்னம் கூறியதில் உண்மையிருப்பதைக் காண்க.
இந்நூலின் உரை பரிசோதிக்கபட்டு அச்சில் பதிவிட்டக் காலம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதால் இக்காலக் கட்டத்தில் ‘மறை’ எனும் சொல் ஆகமத்தைக் குறித்தாலும் அது ‘வேதாகமம்’ என்று கூறும் வழக்கம் வந்து விட்டது என்பதை அறிய முடிகின்றது. இது வேதத்தையும் ஆகமத்தையும் பிறித்தறியாது கொள்ளும் வைதிகச் சைவப் பண்பினால் வந்த வழக்கமென்று பொருள் கொள்ளுதலில் தவறில்லை.
ஆனால் 7-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் திருமுறையில் அச்சொல் இருபொருள்பட பாடினாரென்று கொள்ளும் வழக்கு இருந்ததாகத் தெரியவில்லை. இதற்கு காரணம் திருஞானசம்பந்தப் பிள்ளை எவ்விடத்து வேதத்தைக் குறிப்பிட வேண்டுமோ ஆங்கே ‘வேதம்’ என்ற சொல்லைக் கையாண்டிருப்பதும் பிறவிடங்களில் ‘மறை’ என்ற சொல்லைக் கையாண்டு இருப்பதும் அக்காலத்தில் ‘மறை’ என்னும் சொல் சிவாகமத்தையும் அதனைச் சார்ந்த பொருளையும் குறித்ததாகக் கொள்வதே ஆளுடைய பிள்ளையாரின் பாடலுக்குத் தெளிவான பொருள் விளக்கம் கொடுக்கும். அச்சொல் முதல் மூன்று திருமுறைகளில் பயன்படுத்திய விதம் ஆகமப் பொருளைக் குறிக்கும் என்பதை பின்வரும் பதிவுகளில் விளக்குவோம். சிவசிவ.
அன்புடன்
கமலநாதன்
--
--
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
‘மறை’ என்னும் சொல் பல்பொருளைக் குறிக்குமென்று இதற்கு முன்னர் அறிந்தோம். ஆதலின், மூவர் தமிழில் அச்சொல் பல்வகையில் பயன்படுத்தப் பட்டிருப்பதால் அதற்கு தமிழ் நாட்டுச் சைவ ஆதின விளக்கவுரை நூல்களில் வேதம் ஒன்றே பொருளென்று பெருவாரியாகக் கொண்டு விளக்கவுரை எழுதிய தமிழ் சைவ அறிஞரில் பலர் கிரந்த எழுத்துக்களைக் கொண்ட சிவாகமத்தைக் கற்றறிய போதியப் பயிற்சியற்றவர் என்றே கருதவுள்ளது. தேவநகரி எழுத்துக்களைக் கொண்ட வடமொழியில் பயிற்சிப் பெற்றவர் கிரந்த எழுத்துக்களில் உள்ள ஆகமத்தையும் கற்றறிய தகுதியுடையோர் என்று கருத இயலாது. அதனால் பல்வேறு சிவ உபநிடதங்களின் பொருளையறிந்து அதன் வழி உரையெழுதினால் பானையில் உள்ளதுதானே அகப்பையில் வருமென்றெண்ணி விடலாம். ஒரு சில தமிழ் அறிஞர் ஆகமத்தைக் கற்றறிய தகுதிவுடையோராயினும் அவர்தம் வைதிகச் சைவப் பற்றின் காரணமாக ஆகமத்தைப் புறந்தள்ளியதில் ஆச்சரியமொன்றுமில்லை.
அடுத்துத் தென்னாடுடைய சைவத்தைக் காண்கையில், சிவாகம சைவ சிகாமணி திருஞானசம்பந்தர் வைதிகப் பண்பாடாகிய வர்ணாசிரத்தைப் பேணவில்லை. தலங்கள் தோரும் சென்று அடியார்களுடன் உண்டு உறங்கி உறவாடி சைவத்தை மீட்டெடுத்ததில் இது புலனாகும். தனது உபநயன சடங்கில்,
|
செந்தழ லோம்பிய
செம்மை வேதியர்க்
என்று பாடியதில் வேத மந்திரங்களினும் அஞ்செழுத்து மந்திரமே உயர்ந்தது என்று உணர்த்தியதிலும்; தமது திருமண வைபவத்தில் அந்தணர் தீவலம் வரச்சொன்னபோது,
பிள்ளையார்திரு உள்ளந் தன்னில் விருப்புறும் அங்கி யாவார் விடை உயர்த் தவரே என்று .... (தி 12:28:1241)
பிள்ளையார் சடங்கு முறையிலான தீயினை வலம் வராது போனதிலிருந்து அவர் வைதிகப் பண்பாட்டையும் பின்பற்றி நிற்கவில்லை என்பதை அறியலாம்.
மேலும் தென்னாடுடைய சிவாகமச் சைவத்தில் கோயில் கட்டித் திருமேனி நிறுவி தினசரி, சிறப்புப் பூசைகள் என்று செய்யுமிடத்து சிவாகமங்களே விதிகளை வகுத்துக் கூறுகின்றன. வேதநெறியில் திருமேனி வழிபாட்டுக்கு இடமில்லை. அப்படியாகில், திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோரும் பாடிய தேவாரத் திருமுறைகளில் ‘மறை’ என்ற சொல்லைக் கையாண்டது சிவாகமத்தையும் அதனையொட்டிய பொருளையும் குறித்ததே என்று பொருள் கொள்வதில் தவறாகாது. இதற்கு விதிவிலக்காக ஓரிரு இடத்தில் ‘மறை’ என்ற சொல் வருமிடத்தில் அப்பாட்டில் இதர சொற்களுடன் ஒத்துப் பார்க்கையில் வேதத்தைக் குறிக்குமாயின் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்வதில் தடங்கலேதுமில்லை.
இனிவரும் ‘நான்மறை’ விளக்கத்தில் திருமுறைப் பாடல்களைக் கொண்டு விளக்க வேண்டியிருப்பதால், அதற்கு விரிவான உரை எழுதிய தருமை ஆதின நூலைக் கொண்டே எங்கெங்கு அவ்விளக்கவுரை நூலில் ‘மறை’ என்ற சொல்லுக்குத் தவறாக வேதமென்று பொருள் கற்பிக்கப் பட்டுள்ளது என்றும், எவ்விடத்தில் அத்தகையச் சொல்லுக்கு பொருள் விளக்கமளிக்காமல் இருட்டடிப்புச் செய்யப் பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுவோம். இவ்வாறு சில எடுத்துக் காட்டுகளைக் கண்ட பிறகே ஆளுடைய பிள்ளையார் திருமுறையில் ‘நான்மறை’ என்று பாடியதை அடையாளங் காட்டும் பொழுது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். சிவசிவ. |
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
தமிழ் சைவ அறிஞரை சற்றே சிந்திக்க வேண்டுகிறோம். நாம் திருமேனி வழிபாட்டினர். அதற்கு முதல் நூல் எம்பெருமானால் அருளப்பெற்ற சிவாகமங்களாகும். இதனையறிந்த சைவ சமயக் குரவர் சிவாகமங்களைப் போற்றிப் பாடாமால் விட்டுவிடுவாரா? வாகிச முனிவர் அருளிய சிவாகமத்தின் ஞானபாத நூலுக்கு ‘ஞானாமிர்தம்’ என்று பெயரிட்டதின் காரணத்தை அதன் நூற்பெயர்க்கான பாயிரத்தைக் கொண்டு உரையாசிரியர் கீழ்காணுமாறு விளக்கியுள்ளார்:
”கலங்கித் துக்கப் பட்டு வலிய புண்ணிய பாவமாகிய திண்ணியவிரண்டு கையையு மேலேடுத்து விரையக் காமாதி பகையாறுமாகியமயிர் சிறிய முதுகிலேயலையப் பிறவியென்னும் பெரியதுக்கமானது சுழன்று கூப்பிட்டு நீங்கக்கெடுத்தற்கரிய இந்திரியங்கள் கேட்டையற என்னிடத்துண்டாகிய அஞ்ஞானமென்னுஞ் சமுத்திரத்திலே நின்றும் ஒளியுண்டாக ஞானத்தோற்றியதனாலே சொல்லப்பட்ட நூலாதலின் அமையாத வழக்கினையுடைய மகத்தாகிய இந்த சாத்திரத்தித்துக்கு ஞானாமிர்தமென பெயறாயிற்று.”
உயிர், பிறவிக்கடல் நீந்தி கரையேறுவதற்கு சிவாகமத்தின் நாற்பாதங்களில் சித்தாந்த கோட்பாடுகளடங்கிய ஞானபாதம் சிறந்ததென்றும் கூறுவார் வாகிச முனிவர். அதன் காரணமாகவே சிவாகமத்தை அருமறையென்றும் அதன் ஞானபாதத்தை ‘திருமிகு ஞானம்’ (செல்வமிகுந்த ஞானபாதம் – சிவனே செல்வமென்று சமயக் குரவர் தேவாரத் திருமுறையில் பாடியதைக் காண்க) என்றும் கூறுவாரானார். இதன் பொருள் உயிர் அடையவேண்டிய செல்வம் மெய்ப்பொருளாகிய சிவனே என்று அறிக. இஞ்ஞானநெறியே சித்தாந்தமாகும்.
இனி ஆளுடையப் பிள்ளையாரின் தேவாரத் திருமுறையில் வரும் ‘மறை’, ‘அருமறை’ மற்றும் அதனையொட்டிய சொல்லுக்குத் தவறாக திருமுறை விளக்கவுரை நூலில் பொருள் கூறியதைச் சில எடுத்துக் காட்டுகளுடன் காண்போம்.
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களின் காப்பாக வரும் 11-வது பாடலில் தம்மைத் தாமே (1) ‘மறைஞான சம்பந்தன்’ (2) ‘அருமறை ஞானசம்பந்தன்’ (3) ‘நான்மறை ஞானசம்பந்தன் (4) திருமாமறை ஞானசம்பந்தன் (5) மறைஞான ஞான முனிவன் என்று 24 முறை குறித்துள்ளார். இது தாம் பெற்ற ஞானநெறியைக் குறித்த அடைமொழியாகும். அப்படியென்றால் அவர் பெற்ற ஞான நெறி யாது?
திருஞானசம்பந்தர் பெற்ற ஞானநெறி சித்தாந்தமா? வேதாந்தமா? நம்பியாண்டார் நம்பி ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகத்தில் (தி. 11:38:1) “பரமசிவா கமவிதியும் நன்மறையின் விதிமுழுவதும் ஒழிவின்றி நவின்றனையே” என்று சம்பந்தரை நோக்கிக் கூறிய வாக்கு உணர்த்துவது யாது? ஆளுடையப் பிள்ளையார் பெற்றதும் உற்றதும் சிவாகமச் சித்தாந்தம்தான் என்பதை யாம் சொல்லியா தெரிய வேண்டும்?
இதனை உண்மையென நிறுவ திருஞானசம்பந்தரின் திருமுறைகளில் அவர் உணர்த்திய சித்தாந்த நெறிகளைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் ‘திருமுறைகளில் சைவ சித்தாந்தம்’ (1999 பதிப்பு) என்னும் நூலிலிருந்து எடுத்திங்கே சுருக்கமாகப் பதிவிடுகிறோம்:
(அ) சிவபெருமான் உயிருடன் ஒன்றாய், உடனாய், வேறாய் நிற்றல் – “ஈறாய், முதல் ஒன்றாய், இரு பெண், ஆண், குணம் மூன்றாய்” (தி1:11:2)
(ஆ) சித்தாந்தம் பகரும் என்றும் உளதான அநாதிப் பொருள்களாகிய பதி, பசு பாசம், ஆணவம், கன்மம், மாயை – “விலையாதோர் பரிசில்வரு பசு, பாச வேதனை ஒண்” (தி. 1.12.3)
(இ) அயன், மால், உருத்திரனாக நின்றமை – சித்தாந்தத்தில் சுத்தவித்தை - “மும் மூர்த்திகள் ஆயினை” (திருஎழுகூற்றிருக்கை: தி. 1:12:8)
(ஈ) அருளியலில் கூறிய அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும் – “மறை முதல் நான்கும்” (திருஎழுகூற்றிருக்கை: தி. 1:12:8)
(உ) கட்டப்பட்ட பாசம் என்னும் பந்தத்தை சிவன் திருவருளால் நீக்குதல் – “யா ஆசை இழியே” (மாலை மாற்றுப் பதிகம் 8-வது பாடல்)
திருமுறையில் கூறப்பட்ட சித்தாந்தங்களில் “கடலில் ஒரு துளி” என்பது போல இங்கே குறிப்பிடப் பட்டது.
திருஞானசம்பந்தர் வேதாந்தத்தின் முத்திக் கோட்பாட்டை (மாயாவதம் மற்றும் ஏகான்ம வாதம்) மறுத்துப் பாடியது:
(அ) சீவான்மாவே பரமான்மா என்று கூறிய மாயாவாதத்தையும், பொருள் ஒன்றென கூறும் ஏகான்மவாதத்தையும் ஒருங்கே மறுத்துப் பாடிய மாலை மாற்றுப் பதிகத்தின் முதல் பாடல் – “யாமாமா நீயாமாமா”.
வேதாந்தத்தின் முழுமுதற் கோட்பாட்டையே குறையுடையது என்று சொல்லிவிட்டப் பிறகு இன்னும் இதர கோட்பாடுகளை சொல்லித்தான் மறுக்க வேண்டுமா? தேவையில்லையே.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வேதாந்தத்தின் முதன்மைக் கோட்பாட்டை மறுத்தலால் முத்திக்குச் சன்மார்க்க நெறியென்று கூறும் அவ்வேதாந்த கோட்பாட்டே குறையுடையது என்றாகியது புலப்படவில்லையா? இதனை திருஞானசம்பந்தர் காலத்திற்கு முன்னமே கூறியது மிருகேந்திர மற்றும் பௌட்கர உப ஆகமங்களின் ஞானபாதமாகும். இவை முறையே காமிகாகமம் மற்றும் பரமேஸ்வர ஆகமத்தின் உப ஆகமங்களாகும்.
இவ்வளவு சான்றுகள் கண்ணுக்கெதிரே இருந்தும் தமிழ் நாட்டுச் சைவ மட ஆதினங்களின் தேசிகர்களும், அறிஞர்களும் ‘மறைஞான சம்பந்தர்” என்பதற்கு வேதங்களைக் கற்றவர் என்பதும், நால் வேதங்களைக் கற்ற ஞானசம்பந்தர் என்பதும் மூவர் தமிழைத் திட்டமிட்டு வைதிகச் சைவமாக்கியது வெள்ளிடை மலையாகத் தெரியவில்லையா? தமிழ் நாட்டுச் சைவ அறிஞர் யாரும் இதனைச் சிந்தித்தாரில்லையா? அல்லது தமிழ் நாடே வைதிகச் சைவமாகிப் போயிற்றா? சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
‘அருமறை ஞானசம்பந்தன்’ மற்றும் ‘மறை ஞானசம்பந்தன்’ என்று தம்மை உலகுக்கு அறிவித்தத் திருஞானசம்பந்தரை “சிவாகமங்களில் வல்ல ஞானசம்பந்தன்” என்று பொருள்படுத்துவதற்கு பதிலாக தமிழ் நாட்டுச் சைவ மட ஆதினங்களின் திருமுறை விளக்கவுரை நூல்களில் குறித்தவாறு “வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன்” என்று பொருள் படுத்தியது மிகுந்த பொருள் வேறுபாட்டை வரவழைக்கும்.
நம்மவரில் பெரும்பாலோருக்கு வடமொழி பயிற்சி இல்லாதலால் வைதிகச் சைவர் வடமொழியில் சொல்வதெல்லாம் நமக்கு வேத வாக்குதான். இதனை ‘மூவர் தமிழ்’ என்னும் கட்டுரைத் தொகுப்பை எழுதிய கட்டுரையாளரும் பின்னர் வரும் தொகுதிகளில் வேதம் யாதென்று கேள்விக் கேட்டு, அது வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு நூலாக தமிழருக்குப் புகட்டப் பட்டு வந்துள்ளதை எடுத்துக் கூறி பிற்காலத்தில் அது ரிக், யசூர், சாமம், அதவர்வனம் என்று காட்டித் தமிழரை வைதிகத்தின் வழி திசைத் திருப்பியது வைதிகர் சாமார்த்தியம் என்று கூறுவார்.
‘வேதம்’ என்ற வடமொழி சொல்லுக்குத் தமிழில் “நூல்” என்று பொருளுரைத்தவர் ஊ.வே.சா அவர்கள் (மணிமேகலை – மூலமும் அரும்பதவுரவுரையும் – 1931 பதிப்பு). அதனால் வடமொழியில் வேதம் என்று சொல்லும்பொழுது அது ஒரு துறையைச் சார்ந்த நூலைக் குறிக்கும் பொதுச் சொல்லாகும். இதனை சிவாகமங்களைக் கொண்டே விளக்கி விடலாம். புரோத்கீதாகமத்தின் உப ஆகம நூல்கள் இரண்டு ‘ஆயுர்வேதம்’, ‘தனூர்வேதம்’ என்று கூறப்படுவதால், ஆகமங்களும் வேதம் என்ற சொல்வழி அவை தோன்றிய காலத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளதை அறியலாம். இவ்வளவுதான் ‘வேதம்’ என்ற வடமொழிச் சொல்லின் பொருள். அதனால் வேதம் என்று யாராவது சொல்ல ஆரம்பித்து போதனையைத் தொடர்ந்தால் நாம் மயங்கிவிட வேண்டாம். இவ்விடத்தே வேத நெறியில் குறிக்கப்படும் நூல்களின் பொருளை தமிழில் புரிந்து கொள்வோம். ‘ருக் (ரிக்) – செய்யுள் வடிவில் அமைந்த வாக்கியங்கள்; யஜூஸ் (யசூர்) – உரைநடையில் அமைந்த வாக்கியம்; ‘சாம’ (சாமம்) – இசைவடிவில் அமைந்த வாக்கியம். அதர்வண வேதம் அதர்வா மற்றும் ஆங்கிரச முனிவற்களால் இயற்றப்பட்டது என்பதால் அப்பெயர் பெற்றது. இதில் அதர்வண வேதத்தின் கருமகாண்டம் இப்பூவுலகில் பெற வேண்டிய சிற்றின்பங்களைக் குறித்து இயற்றப்பட்டதால் அதனை வேதியரில் பெரும்பாலானோர் முற்காலத்தில் பின்பற்றாமல் வாழ்ந்தனர். மேலும் அதர்வண வேதம் வர்ணாசிரம பேதத்தைக் கடைப்பிடிக்காததால் முற்காலத்திய வேதியர் இருக்கு, யசூர், சாம வேதத்தை மட்டுமே பின்பற்றி வாழ்ந்தவராவார் அதனால் இம்மூன்று வேதங்களும் ‘வேதத் தீரயீ’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்படுவதாக இருந்தது. காலவோட்டத்தில் வேதியர் அதர்வண வேதத்தையும் தன்னலம் வேண்டி பயன்படுத்துபவராயினர். அதன் பின்னரே வேதங்கள் நான்கு என்ற வழக்கு நிலைத்தது. நிற்க.
இனி தேவாரத் திருமுறையில் ‘அருமறை’ என்று திருஞானசம்பந்தர் கூறியதன் பொருளை ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. வாகிச முனிவரின் ஞானாமிர்த நூலில் ‘அருமறை’க்கு அரிய சிவாகமங்கள் என்று பொருள் கூறப்பட்டது.
திருஞானசம்பந்தர் பாடிய கீழ்காணும் பாடல் ஒன்றைக் கொண்டு அருமறைக்குப் பொருள் காண்போம். :
தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே (தி. 3:23:6)
இப்பாடலுக்குத் தமிழ் நாட்டுச் சைவ மட ஆதினத்தார் கொடுத்த விளக்கம்:
பொழிப்புரை:
இறைவன் அரிய நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை அருளிச் செய்தவன். வளமையான சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். செருக்குற்று மிகுந்த கொடுமைகளைச் செய்த அசுரர்களின் முப்புரங்களை வெந்தழியும்படி செய்தவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
அப்பொழிப்புரையை சற்றே ஆய்வோம். சைவ மடத்தார் கொண்ட பொருள்:
1) அருமறை - அரிய நான்கு வேதங்கள்
2) அங்கம் - ஆறங்கம்
3) ஆகமம் - ஆகமம்
4) கூக மேவினான் - கூகம் என்னும் ஊர்.
“தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்”
இதனை ஆகமம் வகுத்தவன், தொகுத்தவன் அருமறை அங்கம் என்று சொல் மாற்றிப் பார்க்க உண்மைப் பொருள் விளங்கும்.
ஆகமம் அருளியவன் சிவபெருமான் என்று பொருள் கொண்டது சரியே காரணம் சிவாகமமே அவ்வாறு அருளுகின்றது.
“தொகுத்தவன் அருமறை அங்கம்” என்பதற்கு அரிய நால் வேதங்களுக்கான ஆறங்கங்களை இறைவன் தொகுத்தான் என்று திருமுறை விளக்கவுரை நூலில் பொருள் கூறியது சரியா?
‘அங்கம்’ தொகுத்தான் என்றால் அவை ஆறங்கம் என்று சொல்லி, (1) சிட்சை (2) கற்பம் (3) வியாகரணம் (4) நிருத்தம் (5) சந்தம் என்பனவென்று பொருள் கொண்டது அப்பாடலுக்கு உரிய தெளிவானப் பொருளாகப் படவில்லை.
வடமொழியில் இருக்கும் வேத மந்திரங்களின் உண்மைப் பொருளறிய இலக்கண நுட்பங்களையும், பொருளையும், வேத மந்திரங்கள் சந்தப் பிழையின்றி உச்சரிப்பதற்கும் மானுடர்களால் இயற்றப்பட்ட இலக்கண நூல்கள் அவை. சோதிடம் என்னும் நூல் மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நூல். அதில் மதக் கோட்பாடுகள் ஏதும் கிடையா. கால நேரம் அறிந்து அக்கினி காரியம் செய்யவே வேதத்தின் அங்க நூலாக சோதிடம் சேர்க்கப்பட்டது. பிற்காலத்தில் வானவியல் சாத்திரமானாது மானுடப் பிறவிகளின் பிறப்பின் பயனை அறிய வேண்டி பட்டித் தொட்டி முழுவதும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இப்பாடலில் திருஞானசம்பந்தர் “அங்கம்” என்றுதானே பாடினார் “ஆறங்கம்” என்று பாடவில்லையே. அப்புறம் ஏன் ‘ஆறு’ என்ற வார்த்தையைச் சேர்த்துத் திசைத்திருப்ப வேண்டும்?
ஆகமத்தை அறியாது திருஞானசம்பந்தரின் மேற்கூறிய பாடலுக்குப் பொருள் விளக்கம் காண விழைவது நம்மை சரியான பாதையில் இட்டுச் செல்லாது. . மேற்கூறிய இரண்டு அடிகளுக்கும் பொருள் விளக்கம் இரௌரவ ஆகமத்தில் உள்ளது. அப்பொருள் கீழ்காணுமாறு:
1) அரிய ஆகமத்தை சிவ பெருமான் அருளினான் (வகுத்தான்) என்று பாடினார்.
2) அவ்வாறு அருளப்பெற்ற ஆகமத்தை சிவனிடமிருந்து உணர்ந்த அனந்தேசுவர் அதனைப் பல அங்கங்களாகத் தொகுத்துக் குரு சீடன் முறைமையில் அடுத்தவருக்கு உபதேசித்தார். இப்படி வகுத்துக் கூறப்பட்ட இரௌரவ ஆகமத்தின் ஞான நெறியை, சிவத்தத்வாணி (The Scheme of Siva Tattavas) முதல் மந்திர வர்ண படல முடிவாக உபதேச படலத்துடன் சேர்த்து 10 அங்கங்களாகத் தொகுத்துக் கூறினார் அனந்தேசுவரர். இதனை அரிய சிவாகமம் என்ற பொருளில் ‘அருமறை’ என்று பாடினார் திருஞான சம்பந்தர்.
3) இரௌரவ ஆகமத்தின் ஞான பாதத்தில் மற்றவற்றுடன் சிவத்தத்துவங்கள் முப்பத்தாறையும், 103 சிவமந்திரங்களின் பொருளையும் உபதேசித்திருப்பதால் இவ்வாகமம் அரிய மறை அல்லது அருமறை என்று திருஞானசம்பந்தர் பாடியது பொருள்பொதிந்ததாகும்.
மேற்கூறியதற்கு ஆதாரமாக இரௌரவ ஆகமத்தின் ஞானபாத வடமொழிச் சுலோகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை மட்டும் இங்கே பதிவிடுகிறோம்:
102. Thus, the eternal categories, tattvas, have been expounded by Siva in this Agama, the embodiment of supreme knowledge. These have been succinctly instructed by the Guru who hailed from the pure lineage of A’treya to enlighten the disciples.
103. This Agama issued forth first from the lotus-like feet of Siva, who is the Primal Lord. This was further variegated (தொகுத்தல்) into many parts by Anantesvra whose form is in the perfect likeness of Siva. He made such division so as to present the details of mantras, kriyas, mandalas and techniques of applying these, under various contexts.
மேற்கூறியது அப்பாடலில் வரும் முதல் வரிக்கான ஆகம விளக்கம்.
அப்பாடலின் இரண்டாவது வரிக்கான ஆகம விளக்கத்தை அடுத்தப் பதிவில் காண்போம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
முற்றழிப்பிற்குப் பின் மீண்டும் படைப்பைத் தொடங்க பரசிவனுடைய சத்தி சுத்தமாயை நோக்குங்கால் சொற்பிரபஞ்சமும் பொருட்பிரபஞ்சமும் தோன்றினவென்று ஆகமங்களும் மெய்கண்ட சாத்திரங்களும் விளம்பும். .
உயிர்களுக்கு ஞானத்தை அருளும் வேதங்களும் ஆகமங்களும் சொற்பிரபஞ்சம் தோன்றுவதற்கு இடமாய் உள்ள நாத தத்துவதிலிருந்து சூக்குமை வாக்காகத் தோன்றி விந்து தத்துவத்தில் பைசந்திவாக்காகவும், மத்திமை, வைகரியென்று விருத்தியடைந்து தூல வடிவத்தில் அவை குரு பரம்பரையாக உபதேசிக்கப் பட்டது. இவ்வாறு வேதாகமங்கள் அருளிய சிவன் வீற்றிருக்குமிடம் 36 தத்துவங்களில் முதல் தத்துவமாகிய சிவ தத்துவமாகும். இது சிவனின் தடத்த நிலை.
இனி இதற்கு முந்திய பதிப்பில் ஆராய்ந்த பாடலை மறுபடியும் காண்போம்.
“தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்” (தி. 3:23:6)
மேற்கூறிய பாடலில் இரண்டாவது வரி ‘ஆகமம் வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்’ என்பதற்கு பொழிப்புரையில்,
“சிவாகமங்களை அருளிச் செய்தவன் வளமையான சோலைகளையுடை கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன்”
என்று சைவ மடங்களின் அறிஞர் விளக்கியது அச்சொற்றொடருக்கு மேலோட்டமாக பொருள் கொண்டதாகத் தெரிகின்றது. “கூக மேவினானன்” என்பதைப் பிரித்து “கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் சிவன்” என்று பொருள் கொண்டார் போலும்! டி.வி. கோபால் ஐயரின் ‘தேவாரம் ஆய்வுத்துணை’ நூலின் அருஞ்சொற்பொருள் விளக்கத்திலும் ‘கூகம்” என்பது ‘ஓர் ஊரின் பெயர்” என்றே பொருள் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.
மேற்கூறிய சொற்றொடருக்கு இதனை விட சிறந்த வேற்றொரு பொருள் கிட்டுமா என்று இரௌரவ ஆகமத்தைக் கொண்டு ஆராய்கையில் எமக்கு அச்சொற்றொடரின் பொருள் வேறு விதமாகத் தெரிந்தது.
“வளர்பொழிற் கூக மேவினான்’ என்ற சொற்றொடரில் “கூக” என்பது தமிழ் எண்ணிக்கையாக கொண்டால் அது ஆங்கில எண்ணிக்கையில் “61” என பொருள்படும். “மேவினான்” என்பதற்கு ‘தங்கியிருப்பான்” என பொருள்படும். அவ்வாறு பொருள் கொள்ளுமின் அதற்கான ஆகம விளக்கம் இவ்வாறாகும்:
நாம் வாழும் இந்த பிரமானந்த பிரபஞ்சத்திலிருக்கும் 25 புவனங்களையும், தத்துவங்கள் 36 –ஐ கடந்து முதல் தத்துவமாகிய சிவத்தத்துவத்தில் (25+36 = 61) சிவன் வீற்றிருக்கிறான் என பொருள்படும். புவனங்கள் 25 என்பது காலாக்கினி (1), நரக (1), சொர்கம் (1), பூமி (1), அதற்கும் மேலுள்ள 14 புவனங்கள், அதற்கும் மேலான மேலுலகங்கள் 7 - க் குறிக்கும்.
“வளர்பொழில்” என்பது “பொழில்’ என்னும் சொல் ‘உலகத்தை”யும் குறிக்குமாதலால் ‘நெடிய தூரமுள்ள உலகத்தில்’ என்று பொருள் கொள்ள இடமுள்ளது.
ஆதலின், ‘ஆகமம் வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்” என்பதன் பொருள் ‘சிவன் 25 புவனங்களையும், 36 தத்துவங்களைக் கடந்து ஆக மேலுள்ள சிவத்தத்துவமாகிய நெடிய தூரமுள்ள உலகத்தில் வீற்றிருக்கும் அவன்” என்று பொருள் கொள்ளலாம்.
ஆனால் இவ்வாறு சிரமப்பட்டுச் சிந்திக்காமல் வெறுமனே ‘கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன்” என்று சொல்லி விட்டால் யாருக்கு என்ன நட்டம் வரப் போகின்றது! இப்பொழுது அந்த கூகம் என்ற ஊர் எங்கிருக்கின்றது என்று கேட்டால் அது ‘அத்திப்பட்டி’ போன்று காணாமல் போயிற்று என்று சொன்னால் யாருக்கு என்னத் தெரியப் போகின்றது!.
விளக்க முடியாத “கூகம் என்ற ஊரில் வீற்றிருக்கிறான் அவன்” என்று பொருள் கொள்வதைக் காட்டிலும் சைவ சித்தாந்தத்தைக் கொண்டு நம்மால் விளக்கக்கூடிய தெளிவான பொருள் கொள்வதே அச்சொற்றொடருக்கு சிறந்த விளக்கமாகும் என்பது எமது கருத்து. சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
மூவர் தமிழில் ‘மறை’ வேதமாகிய மாயத்தை சில எடுத்துக் காட்டுகளுடன் கண்டு வருகின்றோம். அதன் விளக்கத்தை மேலும் தொடருவோம்.
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத் திருமுறையில் ‘மறை’ என்னும் சொல் அடங்கிய இன்னும் சில பாடல்களைக் காண்போம்.
நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. (தி. 2:11;1)
இப்பாடலுக்குத் தருமை ஆதின பொழிப்புரை:
“நன்மையே வடிவானவன். நான்கு மறைகள், அவற்றோடு இயலும் ஆறு அங்கங்கள் ஆகியனவற்றில் வல்லவன். அவற்றைக் கற்றுணர்ந்த அந்தணர்பால் நிறைந்து அவர்கள் ஓதும் துதிகளைத் தன் வடிவாகக் கொண்டவன். பழமையான மதில்கள் சூழ்ந்த காழிப்பதியில் விளங்கும் கோயிலைத் தனது வீடாகக் கொண்டவன். அத்தகையோனை ஏத்துவோர்க்கு இன்பம் உண்டாம்.”
இப்பாடலில், சீகாழி கோயிலில் குடிகொண்ட சிவபெருமானைப் போற்றி வழிபடுவார்க்கு இன்பமே என்று திருஞானசம்பந்தர் கூறுமிடத்து எந்நூலை? யார்? கற்றுணர்ந்து ஓத வேண்டும் என்பதனையும் விளக்கினார். அவ்வாறு கூறியது:
1) நான்மறை ஆறங்கம் : நான்கு மறைகள் அவற்றோடு ஆறு அங்கங்கள்
2) வல்லான் : அருளிய சிவபெருமான்
3) வல்லவர் : நான்மறை ஆறங்கத்தைக் கற்றுணர்ந்தோர்.
கோயில் கட்டித் திருமேனி நிறுவி பிரம்ம, அங்க மந்திரங்களும் மற்றவையும் ஓதி வழிபட சிவபெருமான் அருளிய முதல் நூல் சிவாகமங்கள். அப்படியானால் இங்கு ‘நான்மறை’ என்று பாடியதில் ‘சிவாகமங்கள்’ என்ற ஒரு பொருள் மட்டுமே கிட்டும் காரணம் ‘நான்மறை’ என்பதற்கு ‘நால்வேதம்’ என்று ஆதின வித்துவான்கள் பொருள் கூறுவாறேயானால் அது பிழையாகும். வேதத்தில் திருமேனி வழிபாட்டுக்கு இடமில்லை, விதியுமில்லை. அதன் காரணமாக இப்பாடலில் ‘நான்மறைக்கு’, ‘நால்வேதம்’ என்று பொருள்கூற இடமில்லையாதலின் பொழிப்புரையில் ‘நான்கு மறை’ என்ற அதே சொல்லைக் கையாண்டு தடம் புரண்டார் அவ்வித்துவான்.
அடுத்து இப்பாடலுக்குப் பொழிப்புரை வழங்கிய மற்றொரு வித்துவான் தமது குறிப்புரையில் இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்:
“நல்லான் - மங்களவடிவினன், சிவன். நான்மறை - சைவத்திற்கு உரியனவாயிருந்த பழைய நான்கு மறைகள். \\\\\\\\\\\\\\"தத்து வாதீதமெனச் சாற்றுங்காண் சைவமறை அத்துவா எல்லாம் அற\\\\\\\\\\\\\\" (துக ளறுபோதம். 20) ஆறு அங்கம் - சிக்ஷை. வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் என்பன. இவை சைவமறைக்கும் உரியன. `மறைகள் - வேதம்`. (தி.2 ப.12 பா.7) வல்லான் - வன்மையுடைய சிவபிரான், வல்லவர் - வன்மையுடைய அந்தணர். பால் - ஏழனுருபு. மலிந்து - நிறைந்து. சொல்லான் - துதிவடிவானவன். கோயிலாம் இல்லான் - கோயில் என்னும் பெயரினதாய வீட்டினன். நின்றார் - நிலைத்தவர். இன்பம் உளது; உளது - அழியாது என்றும் இருப்பது.”
இக்குறிப்புரையில், ‘நான்மறை’ என்பதற்கு ‘சைவத்திற்கு உரியனவாயிருந்த பழைய நான்கு மறைகள்’ என்று கூறிய இதே தேசிகர் இப்பாடலுக்கு முன்னும் பின்னும் ‘நான்மறைக்கு’ இக்கருத்தைச் சொல்லவில்லையே! அதற்குப் பதிலாக ‘நான்மறை’க்கு ‘நால்வேதம்’ என்ற ஒரே கருத்தை மட்டுமே கொண்டிருந்ததன் காரணமென்ன? திருடன் கையிற் தேள் கொட்டினாற் போலில்லை? அத்தோடு நில்லாமல் ‘சைவதிற்கு உரியனவாயிருந்த பழைய நான்கு மறைகள்’ என்று கூறியவிடத்து அவை யாது என்று கூற இயலவில்லை! அதற்கு பதிலாக துகளறு போதத்தின் ‘சைவமறை’ என்று கூறிய ஒரு சொற்றொடரை தலையும் வாலுமில்லாமல் பதிவிட்டு நழுவி விட்டார்.
இதற்கு மேலும் குழப்ப இன்னொன்றையும் கூறினார். “ஆறு அங்கம் சிஷை வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் என்பன இவை சைவ மறைக்கு உரியன.”
முதலில் ‘சைவமறை’ என்பது யாது என்று தீர்க்கமான அடையாளம் காட்டாமலேயே வேதாங்க நூல்கள் சைவ மறைக்கும் உரியன என்றால் என்ன பொருள்?.
வேத விற்பன்னர் வேதாங்க (சோதிடம் நீங்க) நூல்களை இயற்றியதன் காரணமென்ன? வேதம் சில ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய சமஸ்கிருத மொழியில் உள்ளது. இன்றைய வழக்கில் இருக்கும் சமஸ்கிருத மொழி கொண்டு வேதத்தின் பொருள் அறிய புகுந்தால் அது தப்பான விளக்கங்களைத் தருவதால், வேதத்தின் உண்மைப் பொருள் அறிய (1) சிட்சை (வேத மந்திரங்க்ளை சரியாக உச்சரிக்கும் முறையை கூறும்) (2) வியாகரணம் (எழுத்து, சொல் போன்றவற்றின் பொருள் நுட்பங்களை விளக்குவன) (3) சந்தம் (வேத மந்திர செய்யுட்களின் யாப்பு விதிகளை விளக்குவன) (4) நிருத்தம் (தொன்மையான சமஸ்கிருத மொழியில் உள்ள மந்திரங்களின் பொருளை உணர்த்த ஏற்படுத்தப் பட்ட சொற்களின் தொகுப்பு நூல்) (5) கற்பம் வேள்விகளைச் செய்யும் முறைகளை விளக்கும் கிரியா காண்டம்) ஆகிய நூல்கள் மானுடரால் இயற்றப் பட்டு பயன்பாட்டில் உள்ளன.
வடமொழியில் இருக்கும் சிவாகமங்களின் பொருள் புரிந்து கொள்வதில் அதிக சிரமங்கள் இருக்க காரணமில்லை. இதற்கு காரணம் இந்நூல்கள் கிரந்தத்தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இயற்றப் பட்டிருப்பதால் இவை பல்லவர் ஆட்சி தென்னகத்தில் ஏற்பட்ட பிறகே அம்மொழியில் எழுத்து வடிவத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருக்கப் பட்டிருக்க வேண்டும். கிரந்தத்தமிழ் எழுத்துக்கள் மூவேந்தர் நாட்டில் பயன்பாட்டிர்க்கு வந்தது தோராயமாக கி.பி. 10-ம் நூற்றாண்டுக்குப் பின் என்பது எம். ஸ்ரீநீவாச ஐயங்காரின் கருத்து. சிவாகமங்கள் எதனை செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்ற விதிகளைத் தெளிவாகக் கூறுமிடத்து வேதாங்க நூல்களின் பயன்பாடு திருமேனி வழிபாட்டிற்கு மிகவும் குறைவே. இதில் சோதிடம் சமய நூல் அன்று.
உண்மை இவ்வாறிருக்க, ‘நான்மறை’ என்பது ‘நால்வேதம்’ என்றால் பொருந்துமா? பொருந்தாது என்பதற்கு திருஞானசம்பந்தரின் இப்பாடலும் தக்கச்சான்று. நான்மறை என்ற சொல்லுடன் ஆறங்கம் என்றது எந்த ஆகமத்தைக் குறித்தது என்பதும், ஏன் அவ்வாகமத்தை திருஞானசம்பந்தர் சிறப்புப் படுத்தி ஆறங்கம் என்று கூறினார் என்றும், அதற்கும் சுத்த சைவத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதையும் ‘நான்மறை’-யை அடையாளம் காட்டிய பிறகு விளக்குவோம்.
மேற்கூறிய பாடலுக்குக் குறிப்புரை வழங்கிய வித்துவான் மற்றொன்றையும் கூறினார். “மறைகள்” – ‘வேதம்” என்று பொருள் கூறினார். கற்றறிந்த பெரியோரே, திருமேனி வழிபாட்டையே ஏற்று செய்த நால்வர், எம்பெருமானால் அருளப்பெற்ற சிவாகமங்களைத் தமிழில் ‘மறைகள்” என்று கூறாமல் போனார் என்றால் இது எவ்வகை அறியாமை? கண்ணுக்கெதிரே இருக்கும் யானை தெரியவில்லை ஆனால் வடகோடியில் இருக்கும் எறும்பு தெரிகின்றது என்றால் கேட்பாருக்கு மதியில்லையா?
‘மறைகள்’ என்ற பொதுப் பெயரில் தமிழில் சொல்லும் பொழுது சிவபெருமானால் அருளப்பெற்றது சிவாகமங்கங்களும் வேதங்களும் என்று நால்வருக்கு முன் சொல்லியது சிவாகமங்கள்தானே. இவ்வாறு வேறு எந்த தென்னகச் சமய முதல் நூலும் கூறவில்லை. இத்தகைய உறுதிப்பாடு சிவாகம மறையோருக்கு மட்டுமே இருந்தது. அவ்வாறு கூறுவதற்கு காரணம் தெளிவான சித்தாந்தம் சிவாகம மறையோரிடமிருந்தது. அப்புறம் ‘ஆகமம்’, ‘தந்திரம்’ என்ற வடமொழி சொற்களுக்குப் பதிலாக தமிழில் ‘மறை’ என்று சொன்னால் அது சிவாகமங்களைக் குறிக்காது என்று தருமை ஆதின அறிஞர் எப்படி ஒருதலைப் பட்சமான முடிவுக்கு வந்தனர்? வாகிச முனிவரின் ‘ஞானாமிர்தம்’ உரைநூலை சரிபார்த்துக் கொடுத்தவரின் முன்னுரையைப் படித்தபொழுது அவர் பட்டச் சிரமத்தை உணர முடிந்தது. அப்பேர்பட்ட திருவாளர் ரா. சுப்பிரமணிய கவிராயர் ‘அருமறை’ என்ற சொல்லுக்கு ‘அரிய சிவாகமங்கள்’ என்று பொருள் கூறியதை தருமை ஆதின சைவ அறிஞர் ஒருவரேனும் படித்திலர் போலும்!.
அப்படியாகின் இவ்வாதின சைவ சமய அறிஞர் சிவாகம ஞானபாதத்தை இருட்டடிப்புச் செய்து (இதில் திருமந்திரத்திற்கும், பெரிய புராணத்திற்கும் விளக்கவுரை எழுதிய அறிஞர் விதி விலக்கு) வேதத்தை முன் நிறுத்தியதின் உள்நோக்கமென்ன?. திருக்கைலாய மரபில் வந்த தமிழ் நாட்டுச் சைவ மடத்தார் சந்தான குரவர் அருளிய மெய்கண்ட சாத்திரங்களை மட்டும் முன் நிறுத்தினால் போதும் என்று நினைத்தனரோ? சிவாகம ஞானபாதம் கூறாத சைவ சித்தாந்தம் உளதா? யாம் அறியோம் பராபரமே. சிவசிவ.
--
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
சிவாலயத்தில் முப்போதும் திருமேனித் தீண்டி சிவப்பணி செய்யத் தகுதி பெற்ற மரபினரான ஆதி சைவ அந்தணாளரையே திருஞானசம்பந்தர் நான்மறை வல்லவர் என்று குறித்தார் என்பதை கடந்த பதிவில் அறிந்து கொண்டோம்.
இனி, திருஞானசம்பந்தர் தம்மை *மாமறையோன்* என்று கூறிக் கொண்டதின் மாயமென்னவென்று அறிவோம். மூவர் தமிழில் “மறை” என்றும் “மறையோர்” என்றும் பாடப்பெற்றிருப்பின், அவை ஆகமத்தைக் கற்றுணர்ந்து அதனில் வழுவாது வாழ்ந்த ஆதி சைவ அந்தணரைக் குறித்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளலாம். இது ஏழாம் நூற்றாண்டின் நிலை. அன்று சமண பவுத்தவாதிகளால் வைதிகம் தென்னாட்டில் கருகி இருந்த காலம். வைதிகச் சைவம் தென்னாட்டில் இன்று வளர்ந்திருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, ஏழாம் நூற்றாண்டில் பாடிய மூவர் தமிழிலுக்குப் பொருள் கூற முயன்றால் நாம் இடறுவோம்.
திருஞானசம்பந்தரின் தேவாரத் திருமுறையில் பாடிய ‘மாமறை’-யை அறிவோம். திருஞானசம்பந்தரின் பாடல்களில் வரும் ‘மறை’ என்பது ஆகமத்தைக் குறிக்கும் என்று முன்னமே பல பதிவுகளில் ஆகமத்தை ஆதாரமாகக் கொண்டு கூறினோம். அதற்கு முத்தாய்ப்பு வைத்தாற் போல் திருஞான சம்பந்தரின் மேலும் ஒரு பாடல் குறிப்பைக் கீழே காண்போம்:
.தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்
ஆகமச் செல்வனாரை யலர் தூற்றுதல் காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி னேழுலகும்
ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட மொற்றியூரே. (தி. 3:57:10)
பிற நெறியாளர் சிவனைப் பழித்துக் கூறுவதைக் காண இயலாத ஆளுடைய பிள்ளையார், ஆகமம் பரம்பொருளாகப் போற்றும் சிவபெருமானைப் பலரும் அறியும்படி தூற்றும் சமண, பௌத்தர், செங்கதிரைக் காண இயலாத ஆந்தையைப் போன்று அறிவு விளக்கம் பெறாத மாக்கள் என்று கூறினார். உயிர் அறிவிக்க அறியும் என்பதற்கேற்ப உமையவளிடம் சிவஞானத்தைப் பெற்றவர் என்பதற்கு அவர் திருவாய்மொழிந்த பாடலே ஆதாரமாகும். இதுவல்லாது திருஞானசம்பந்தர் வேதத்தை ஓதாமல் உணர்ந்தார் என்பதெல்லாம் இடையே வந்தோர் கொண்ட வைதிகச் சார்பான மனோநிலையின் வெளிப்பாடேயாம். இனி அவ்வகையோர் கடை விரித்தாலும் கொள்வாரில்லையென்று விரித்தக் கடையை சுருட்ட வேண்டிய காலம் எம்பெருமான் திருவருளால் கணிந்து விட்டது.
திருஞான சம்பந்தர்,
“‘மாலி னோடரு மாமறை வல்ல முனிவனும்” (தி. 2:8:9)
என்று பாடியதால் பிரம்மாவும் திருமாலும் பெற்ற மாமறை யாது என்ற கேள்வி எழுகின்றது. வழக்கமாக நூல்கள் பிரம்மாவை வேதம் உணர்ந்தவர் என்றே பகரும். பிரம்மா தோன்றக் காரணமான திருமாலும் வேதத்தைப் பிரம்மாவுக்கு உபதேசித்தார் என்று வேத நெறி நூல்களும் வட புராணங்களும் கூறுவது நமக்குப் பழகிப் போன ஒன்று காரணம் வேதநெறி சிமிருதி மற்றும் புராண நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பு தமிழர் அறிவை அந்த அளவுக்கு ஆக்கிரமித்துள்ளன.
இனி திருஞான சம்பந்தர் கூறியதென்ன என்பதை ஆய்வோம்.
ஆகமங்கள் இருதிறப்படும். சிவ தத்துவத்தில் பிரணவர் முதல் அனந்தேசுவரர், நந்தியெம்பெருமான், ஸ்ரீ கண்டர், மும்மூர்த்திகளாகிய பிரம்மா, திருமால், உருத்திரன் ஆகியோர் சிவபெருமானிடம் இருந்து குருபரம்பரையாகப் பெற்றக் காமிகம் முதல் சுப்பிரபேதம் வரையிலான பத்து ஆகமங்கள் சிவ பேதம் எனப்படும். அடுத்தப் பதினெட்டு ஆகமங்களும் உருத்திரர் முதலானோருக்கு உபதேசித்து அவர் இன்னொருவருக்கு குருபரம்பரையில் உபதேசித்ததால் இவை உருத்திர பேதம் எனப்படும்.
சிவபேத ஆகமங்களை உபதேசமாகத் திருமால், பிரம்மா பெற்றனர் என்பதற்கு ஆதாரம் யாது? இதற்கு திருமந்திரம் பதில் அளிக்கின்றது,
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.(தி. 10:72 - ஆகமச் சிறப்பு – கழகப் பதிப்பு)
ஆகமத்தை உணர்த்திய குருபரம்பரை முறைமையை திருமூலர் கூறுங்கால் அதனுள் ‘உருத்திரர், தேவர், தவ மால்’ அடங்குவார் என்று கூறியது. மும்மூர்த்திகளையே என்பதை அறிவோமாக. இத்தந்திரத்திர்க்குப் பொருள் கண்ட முதுமுணைவர் சி. அருனை வடிவேலும், கழகப் பதிப்புக்கு விளக்கவுரை வழங்கிய சித்தாந்த பண்டிதர் ப. இராமநாதன் அவர்களும் இவ்வாறே பொருள் கொண்டுள்ளார்.
ஆகையால் திருஞான சம்பந்தர் ‘மாலி னோடரு மாமறை வல்ல முனிவனும்’ (தி. 2:8:9) என்று பாடியது உருத்திரர், திருமால் பிரம்மா மூவரும் மற்றவரோடு சிவபேத ஆகமங்கள் பத்தினை உபதேசமாகப் பெற்று சுத்த வித்தைத் தத்துவத்திலும், மேலேழுலகத்தில் உள்ள இந்திரன் முதலாகிய தேவர்களுக்கும் உபதேசித்தார் என்பதை ஆகமங்கள் உணர்த்தும். இதனை, பிரம்மாவை வேண்டி வணங்கிய முனிவருக்குப் பிரம்மதேவன் உபதேசித்ததை இரௌரவ ஆகமத்தின்கண் இரண்டாவது படலத்தில் உணர்த்தப்பட்டவாறு இங்கு ஆங்கிலதில் பதிவிடுகிறோம்:
1. Having approached the Guru, they requested Him to reveal the scheme of tattvas starting from the sivatattva. Thereupon, Lord Brahma, the lotus born, with his heart and soul full of contentment and purity, stood up and spoke these:
2.
Now I will explain the scheme of tattvas
which evolve from the sivatattva as it was revealed to me before. The Scripture
which enshrines the knowledge of sivatattvas was revealed by Anante’svara to
Nandikesvara. As directed by the Supreme Lord Siva, that Scripture was revealed
to me by Nandikesvara. This sivatattva is nectarine in nature. It is
unexcellable, unchangeable. It is of the nature of reaching the heart of all
the souls by virtue of its universal relevancy.
‘மாமறை’ என்பது எந்த ஆகமம் என்பதனை அடையாளம் காண வேண்டும். இது ஒர் ஆகமமா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆகமமா என்பதை அறிவது முக்கியம்.
‘மறை’ என்ற சொல்லுக்கு ‘மா’ என்பது உரிச்சொல்லாகும். அதன் பொருள் ‘மாபெரும்’, ‘பெருமையுடையது’, ‘சிறப்புடையது’ என்பனவாகும்.
இனி ‘மாமறை’ – யை திருஞானசம்பந்தர் எவ்வாறு குறித்தார் என்பதைக் கீழ் காணும் பாடலின் வழி காண்போம்:
தூமரு மாளிகை மாட நீடு தோணி புரத்திறையை
மாமறை நான்கினோ டங்க மாறும் வல்லவன் வாய்மையினால் (தி. 3:100:11)
என்று திருஞானசம்பந்தர் பாடியதில், மாமறை என்பது நான்கு என்பதும் அத்தோடு ஆறங்கத்தையும் கற்றுணர்ந்தவர் என்று தம்மைக் குறித்துக் கொண்டார்.
இவ்விடத்து நான்கு மாமறை என்பதற்கு தருமை ஆதின புலவர்காள் அறிந்தோ அறியாமலோ கொண்ட பொருள் ‘நான்கு வேதம்’ என்பதாகும். அவ்வேதங்களின் பொருள் அறிய மானுடரால் படைக்கப்பட்ட இலக்கணச் சூத்திரங்கள் ஐந்தும் அத்துடன் சோதிடத்தையும் சேர்த்து ‘ஆறங்கம்’ என்று பொருள் கூறுவதில் இப்புலவர்களை விட வல்லவர் வேறு யாரும் இலர் காரணம் அவர் அறிந்த ஆறங்கம் அதுவொன்றேயாம். ஆகமம் பகரும் ஆறங்கத்தை அவர் அறியார் போலும்!
முதலாவதாக, ஒரு கலையைக் கற்று தேறி அதன்கண் நிற்பவர் அக்கலையைப் பழிக்கமாட்டார். இது உலக வழக்கு. ‘கோளறு பதிகத்தில்’ திருஞானசம்பந்தர், ‘எம்பெருமான் எம் உள்ளத்திலே புகுந்ததனால்’ நாளும் கோளும் என் செய்யும் என்று பாடியதிலிருந்து அவர் சோதிடத்தையும் புறம் தள்ளினார் என்பதை நாம் அறிவோம். ஆனால் தருமை ஆதின புலவர்காள் அறியார் காரணம் அவர் திருஞானசம்பந்தரின் உள்ளக்கிடையை அறியார். அதனால் ஆறு அங்கம் என்று சொன்னதில் ஓர் அங்கத்தைப் பின்பற்றாது பிறவற்றைப் பின்பற்றினார் என்று சொன்னாலும் அது ஓட்டை நிறந்த பானையில் நீர் மொந்துவதற்கு ஒப்பாகும். தமிழ் நாட்டில் வைதிகச் சைவ சார்புடைய சைவ மடங்கள் சிலவற்றின் இவ்வகை வாதம் இனியும் நிலைக்காது காரணம் கற்ப சூத்திரங்களைப் கற்பதின் பயன் வேதத்தின் உட்பொருளை அறிந்து அதனைச் சந்தப் பிழையில்லாமல் ஓதவேயாம். திருஞானசம்பந்தர் இந்நான்கில் எதனை ஓதினார் ஓதுவித்தார்? அல்லது நான்கையும் ஓதினார் என்றால் இம்மையில் உலகியல் நன்மையடைய வேண்டி ஓதப்படும் அதர்வண வேதத்தையும் ஓதினார் ஓதுவித்தார் என்றால் அருளியலில் நின்ற அவருக்கு இழுக்கன்றோ! இவ்வித இழுக்கைத் திருஞானசம்பந்தர் மீது ஏத்த எத்தனித்த எத்தர் வித்தகர் இனி வீழ்வார்.
அடுத்து, திருஞானசம்பந்தர் இருக்கு முதலாகிய நான்கு வேதங்களைக் கற்றவர் என்றும் அதில் நின்றவர் என்றும் கூறினால் அதைவிட அபத்தமான செயல் வேறொன்றும் இருக்காது. வேதாந்தத்தைக் கற்று அதில் நின்றவர் என்றால் ஏன் ‘மாலைமாற்றுப் பதிகத்தில்’ மாயாவாதத்தையும், ஏகான்மவாதத்தையும் ஒருங்கே கேள்விக்குறியாக்க வேண்டும்? ஏன் அக்கோட்பாடுகளை மறுக்க வேண்டும்? ஆகையால் மாமறை நான்கு என்று பாடியது இருக்கு முதலாகிய ஆரிய நூல்கள் நான்கு அல்ல என்பதும் ஆறங்கம் என்று திருஞானசம்பந்தர் கூறியது வேத அங்க நூல்களாகிய ஆறுமல்ல என்பதையும் இதன்வழி தெள்ளத் தெளிவாக அறியலாம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
“தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?” என்ற கேள்வியையே தலைப்பாகக் கொண்டு தமிழண்ணல் ஒரு நூல் வெளியிட்டார் (2002 பதிப்பு). இந்நூலில் ‘ஆகமம்’ என்பது ‘அணுகுண்டு’ போல்வதா? என்ற கேள்வி கேட்டு இப்படி கூறினார்.
“எங்கள் கோயிலில் – எங்கள் நன்கொடையால், உழைப்பால், பத்திமையால் உருவான கோயிலில் எங்கள் தாய் மொழியால் வழிபட உரிமை தருக எனக் கேட்பது குற்றமா? இதற்குச் சான்று காட்ட வேண்டுமா? அகல்வானின் கீழுள்ள எதுவும் இதை மறுத்தல் இயலாதே.
அணுகுண்டுகள் போலும் கொடிய ஆயுதங்களை, மிக மறைமுகமாக உருவாக்கி, யாருக்கும் தெரியாமல் பதுக்கிறார்கள். பகை நாட்டுடன் போர்க்குரல் எழும்பும் போதெல்லாம், “எங்களிடம் அணு ஆயுதங்கள்; தாவிப் பாயும் ஏவுகணைகள் உள்ளன”; என எச்சரிக்கை விடுக்கிறார்கள். அவை உண்மையா? என்ன வகையின? எங்குள்ளன? இவை யாருக்கும் தெரியாது. இதுபோலத்தான் “ஆகமம், ஆகமம்’ என்று தமிழ்வழிபாட்டை மறுப்பவர்கள், ஒருவகை ‘மூடுமந்திரம்’ போடுகிறார்கள்.
........ தங்கள் பிழைப்பு வாய்ப்புக்காகத் தமிழ் மொழி ‘ஆகமத்திற்கு’ விரோதம் என்று கதை விடுகிறார்கள்.”
ஆகமம் ஓர் அணுகுண்டு என்பதற்கு ஆகமங்களைக் கையகப்படுத்தியோர் கூறும் காரணம் அம்முதல் நூல் பக்குவப்பட்டவர் மட்டுமே ஓதி உணர வேண்டுமென்பார். இது ஒரு வகையில் உண்மைதான். பாலர் பள்ளியில் படிக்கும் பிள்ளைக்குப் பாலர்பள்ளி பாடப் புத்தகம்தான் கொடுக்க முடியும். அதுபோல பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவரே அவர் அறிவு பக்குவதிர்க்கு ஏற்றவாறு நூல்களைக் கற்க வேண்டும். தென்னாட்டுச் சைவருக்கு ஆகமம் புனித நூல் என்பதால் முறைப்படி தீட்சைப் பெற்றோரும், சிவபக்தி உடையோரும், பக்குவப்பட்டோரும் அதனைப் பயிலுவதே தகும் என்பதில் தவறில்லை. முதலில் சைவ ஒழுக்கங்களைப் பேணி அதன் வழி ஒழுகுவாரே அந்நூல் கற்க வல்லவராவார். மேலும் அதனை ஒரு குரு வழிகாட்டுதலால் கற்பதே சிறந்தது. ஞானமுடையோரும், இறைவன் திருவருள் கூடியோரும் இக்கருத்துக்கு விதிவிலக்கு.
கிறிஸ்துவர், முஸ்லிம் மதத்தோர் எந்நாட்டில் எம்மொழியை தாய்மொழியாகக் கொண்டு வாழ்வோரானாலும் அவர்தம் தாய்மொழி வழியே அவர்தம் புனித நூலான விவிலியத்தையும், திருகுர்ரானையும் ஓதி உணர்வார். அதனால் அவர் சமய நெறி அறிந்து ஒழுங்குர சமய வாழ்க்கை மேற்கொள்கிறார். சைவத் தமிழருக்கு இன்று சாத்திர நூலாக மெய்கண்ட சாத்திர நூல்களும், தோத்திர நூலாக திருமுறையும் முதல் நூலாக தமிழில் உள்ளன. மெய்கண்ட சாத்திர நூல்கள் கூறும் சித்தாந்தத்திர்க்கு மூல நூல் ஆகமத்தின் ஞான பாதமாகும். இரண்டிற்கும் முகத்தளவில் சற்றே வேறுபாடு தெரிந்தாலும், உயிரளவில் இரண்டுமே ‘சைவம்’ என்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்தவை. மெய்கண்ட சாத்திரங்கள் மெய்கண்டார் வழி தோன்றியது என்றாலும் அதன் வழி நூலாகிய சிவஞான சித்தியார் ஆகம மெய்ப்பொருளாகிய சித்தாந்தத்தை முறைப்படுத்தி விரிவாக தமிழில் சொல்வதாக அமைந்தது. அதற்காக மெய்கண்டாரின் சிவஞான போதத்தைப் பிற்படுத்துவதாக கருதக் கூடாது. அது மெய்கண்ட சாத்திரங்களின் முதல் நூல் என்னும் தகுதியை எந்நாளும் இழக்காது. அதற்கு சிவஞான யோகிகள் வரைந்த விரித்தி உரையே தக்க சான்றாகும்.
மற்ற மதத்தவர் அவரவர் தாய்மொழியில் தத்தம் புனித நூலைக் கற்க இடமிருக்குமேயானால் தமிழரும் சிவாகமங்களைத் தமிழில் கற்பதற்கு சிவபெருமான் தடைபோடவில்லை. ஆனால் நடுத்தரகர் தடைபோட்டால் அதனைத் தட்டிக் கேட்க தமிழருக்கு உரிமை உண்டு. தங்களை சிவ ஆச்சாரியார் என்று பட்டமிட்டுக் கொண்டோரும், அவர்தம் வடமொழிப் புலமையை பறைசாற்றிக் கொண்டோரும் ஆகமங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்தாரில்லை. காமிகா ஆகமத்தின் பூர்வ உத்தர பாகத்தை தமிழில் சுருக்க உரையில் வெளியிட்ட தென் இந்திய அர்ச்சக சங்கத்தார் கிரியா பாதத்திற்கும், இல்ல கிரியை விளக்கங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஒரு நூலை வெளியிட்டனர். அவரே இவ்வாகமங்களில் சிலவற்றைத் தேவநகரி எழுத்துக் கொண்ட வடமொழியில் வடக்கே வெளியிட்டு அங்குள்ளவர் கற்றுணர வழி செய்துள்ளனர். அவ்வாறு பெற்றோர் அதனை காசி, புது தில்லியை மையமாகக் கொண்ட வடநாட்டு அச்சகத்தார் ஆங்கில மொழிப்பெயர்ப்பாகவும் தொகுப்புரை நூலாகவும் வெளியிட்டுள்ளனர்.
சிவாகமங்களை 20-ம் நூற்றாண்டு முதலில் கிரந்தத்தமிழில் அச்சில் கொண்டு வந்த பெருமை சிவஞானபோத யந்திர சாலை உரிமையாளர் திரு. அழகப்பா முதலியார் அவர்களையே சாரும். இவ்வச்சகத்தார் வெளியிட்ட ஆகம நூல்களை யார் வாங்க முடியும் என்பதை கூற வந்த இடத்தில் இதனை மேல்குலத்தார் மட்டுமே பெறமுடியும் என்னும் ஒரு தனிக் குறிப்பையும் போட்டிருந்தார்! சிவபெருமான் அருளிய ஆகமங்களைப் பட்டா போட்டு வாங்கியவர் யார்? எங்கிருந்து வந்தனர் இந்த மேல்குலத்தார்? வெள்ளாளரே ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ‘சூத்திர’ – ராக முத்திரைக் குத்தப்பட்டிருந்ததை மாற்றி தங்களை வைசியராக அரசாங்க பதிவேட்டில் அறிவிக்க வேண்டுமென்று ஆங்கிலேய அரசாங்கத்திடம் 20-ம் கால்நூற்றாண்டில் முறையிட்ட கடித மனுவையும் படித்திருக்கிறோம். இவர்களா மேல்குலத்தோர்? அக்காலத்தில் இவ்வகையராக்களும் சூத்திரன் என்றே ஆரிய பிராமணரால் முத்திரைக் குத்தப் பட்டவராவார். அப்புறம் ஏன் பொய்யான சாதிய செருக்கு? சிவபெருமான் ‘வேண்டும் வேண்டாமை இலான்’. அப்பெருமானை போற்றும் இவர்களோ வேண்டும் வேண்டாமை உடையவராயினர் என்றால் இவர் பெற்ற ஆன்ம பக்குவம் கையளவேயாம். சிவசிவ.
இன்று ’நான்மறை’ விளக்கத்திலிருந்து சற்றே விலகி ஆகமத்தைப் பற்றி பேசியதற்கு காரணம் உண்டு. அந்த அனுகுண்டை அடுத்தப் பதிவில் வெடிப்போம். சிவசிவ.
சிவசிவ
மின் தமிழ் சைவ சமய அறிஞர் சிந்தனைக்கு,
சிவாகமங்கள் தென்னாடுடைய சைவருக்குப் புனித நூல். ஆகமச் செல்வனாரை இன்று வரை செந்தமிழில் ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று மணிவாசகர் பாடிய வார்த்தையாலே ஒவ்வொரு சைவத் தமிழர் வாயிலும் மணக்கும்படி போற்றுவார். நால்வர் பெருமக்களும் தமிழ் மொழியில்தானே ஆகமச் செல்வனாரை போற்றிப் பாடினார்?. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழில் சிவாகமங்களை மொழிபெயர்த்துத் தருவதில் சிவ ஆச்சாரியார்களுக்கு என்ன தடை? வைதிகச் சைவர் சொல்வது நமக்குத் தேவையற்றது. அவர் தமிழ் என்பார் உதட்டவில். அத்தமிழ் அவருக்கு சோறு போடாது என்பதும் வடமொழியே சோறு போடும் என்பதும் அவர் எண்ணமாக இருக்கலாம். தமிழருக்கோ தமிழ்தான் சோறு மற்றைவையல்ல.
சிவாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கப் பணமில்லை என்பதும்; அது ஆகாது என்பதெல்லாம் நொண்டிச் சாக்கு. கடந்த நூற்றாண்டின் 70-ம் ஆண்டுகள் முதலே சிவாகமத்தைப் பாண்டிச்சேரியைச் சார்ந்த ‘French Indological Institute’ கழகத்தார் பேராசியர் என். ஆர். பாட் தலைமையில் பிரெஞ்ச் மொழியில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு வந்துள்ளனர். அக்கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளை ‘டிஜிட்டல் புகைப்படம்’ எடுத்து ஹவாயிலுள்ள கவாய் ஆதினத்தார் இன்று பேராசிரியர் எஸ்.பி. சபாரத்னம் சிவாச்சாரியார் தலைமையில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு வருகின்றனர். இவர்களால் எல்லாம் செய்வதற்கரியச் செயல் செய்ய முடியுமானால் கிரந்தத்தமிழ் எழுத்துக்களைக் கொண்ட சிவாகமங்களைக் கற்றறிந்த தமிழ்நாட்டுச் சைவ சமயாசிரியர்களால் செய்ய இயலாதா? தமிழ் மொழி அதன் முதன்மை நிலையை கடந்த நூற்றாண்டு முதலே நிலை நாட்டி வந்துள்ளது. வழக்கொழிந்த மொழி போலல்லாமல் வளமுடைய மொழியாக உலகமெங்கும் திகழ்ந்து வருகின்றது. இன்று தமிழ் உலக மொழி. உலகெங்குமுள்ள தமிழர் போற்றும் மொழி. தமிழில் இல்லாத இனிமையா பிரெஞ்ச் ஆங்கில மொழியில் உள்ளது? அம்மொழிகளில் நமது புனித நூலை மொழிப்பெயர்த்து கற்றுணர்வது தமிழருக்கு அவமானச் சின்னமாகாதா? தமிழ் நாட்டுச் சைவ அறிஞர் சிந்திக்க வேண்டியதை சைவம் தோன்றிய நந்நிலத்தை விட்டு கடல் கடந்து வாழும் நாங்கள் சிந்திக்கும்படி செய்து விட்டீரே!.
வடமொழி தேவபாஷை. அதனால் சிவாகமங்களைத் தமிழில் மொழி பெயற்று கற்க இயலாது என்று எவராவது கூறுவாரேயானால் அவர் தமிழ் உணர்வு அற்ற சடம் என்று புரிந்து கொள்ளாலாம். ஆனால் உண்மை அதுவல்ல. வேதத்தை அபரஞான நூல்களென்று கூறி பரஞானத்திற்கு வழிகாட்டுவதான சிவாகமங்களே போற்றத் தக்கனவென்று தென்னாடுடைய சைவத் தமிழருக்கு உண்மையை உணர்த்தினால் என்னவாகும்? ஏற்கனவே வர்ணாசிரமபேத தர்மத்தைப் பேணும் வேதத்தை ஒதுக்கி வைத்துள்ள தமிழர், சிவாகமம் கூறும் உண்மையை மேலும் அறிந்தால் தமிழரிடையே வேதத்தின் நிலைப்பாடு என்னவாகும்? வைதிகச் சைவரின் நிலைப்பாடு என்னவாகும்? சிவாலயத்தில் ஓதப்படும் காமிய வழிபாட்டு வடமொழி வேத மந்திரங்களின் நிலை என்னவாகும்? இவையெல்லாம் தற்காக்கப் பட வேண்டுமென்ற எண்ணதில்தான் சிவாகமங்கள் இன்றுவரை தமிழில் மொழிபெயர்க்கப் படாமல் தற்காத்து வந்துள்ளனர் ஒரு சாரர். இவ்வுண்மையை அறிய காமிகாகம பூர்வ பாதத்தின் தந்திர அவதார படலத்திலுள்ள (‘’Revelation and Transmission of Agamas’) ஒரு சில வடமொழி சுலோகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பதிவிடுகிறோம்.
16. The Sages, having been informed in this way, prostrated before the Lord, lying down on the ground like a staff. Having ordered them to lift themselves up from the ground, Srikantha Siva instructed this exceedingly superior Agama to them. “In the beginning, the Scripture was revealed in twofold way, in view of the difference observable in the competency of the fitting recipients. The Scripture collectively known as Sivanjana Sastras was revealed in two different streams called para and apara. These Scriptures reveal the exact nature of Pati (the Supreme Protector) and the bound souls and ultimately make known the exact nature of transcendental Parasiva. The Scripture such as the Vedas belong to the category of apara. These Scriptures reveal the nature of bound souls and bonds. Just as the eyes of human beings and the cats are observed to be of different nature during the night time, even so these Scriptures which are para and apara are recognize to be of different contents.
31. Now, the transmission of the Saiva Agamas known as ‘Siddhanta Sastras’ is told with all the details. Since it yields abundant fruits which are to be gained through the tattva-related mantras and since it safeguards the efforts taken by the Sadhakas, the Scripture is called “Tantra”. The Tantra (Agama) called Kamika, as consisted of one parardha verses, was first revealed to Pranava, this was transmitted to Trikala by Pranava and subsequently it was revealed to Hara by Trikala. O’ the much exalted Sages among the twice-borns! There are three secondary Agamas (Upagamas) for this Kamika, They are: Vaktara, Bharvottara and Narasimha (Mrugendra).
109. These Agamas are replete with statements directly issued by Lord Siva. These statements are the direction dealing with those which are to be undertaken and those which are prohibited. These directions have been given with emphasis and certainty. These are dealing with those which are desirable and which are to be abhorred. These Agamas are associated with four sections in which such directions are set forth. These are the unfailing means for the attainment of worldly enjoyments as well as the final liberation. Only these Agamas have been briefly revealed to the competent persons in this world by the Devas, excellent Sages and others after receiving these from their Gurus. Owing to the spontaneous compassion towards all the beings of the world, these Devas and the Sages instructed these Agamas briefly.
111. These Agamas are to be studied systematically by the Siva-vipras (Adisaivas) adhering to the traditional system pertaining to the lineage of Guru. These Agamas are to be taught only by the Siva-vipras. Such teaching of the Agamas should not be done by other persons. ………………..
114. Gauda tantra, Bhuta tantra, Bhairava, Vama tantra, Kapala scriptures, Pancaratra scriptures, Lakula scriptures, scriptures of Kula tradition, Pasupata tantras, Puranas, Dharma Sastras, Itihasas, Six-limbs of the Vedas, Rg Veda, Yajur Veda, Sama Veda, Athavana Veda, scriptures belonging to the system of Bauddha and Artha – all these come under the ‘not-superior’ category (apara) in view of the Agamas which are known as the Urdhva Srota (Scriptures which issued forth from the upper face) and whose authenticity could not be diminished.”
இங்கே காமிக ஆகமம் சொல்வதென்ன? வேதம், அதன் ஆறு அங்கங்கள், வேத தர்மம் அபரஞானத்தையே உணர்த்தவல்லன. (பரஞானத்தை உணர்த்தா என்பதாக அறிந்து கொள்வோம்).
117. The Kamika and other Mula Agamas, which are collectively called Sivanjaana Sastras, are always considered as representing the head portion of the form of Lord Siva. All other Scriptures represent the heart, neck and other parts of that form. Other Scriptures have been revealed by Lord Sambhu so as to constitute the prior and unsettled prima-facie part to suit the varied levels of the human beings. But, the Saiva Siddhanta Sastras (Agamas) have been revealed by Him so as to constitute the final and well-ascertained conclusive part, after setting aside all other scriptures which fail in ascertaining exactly the principles which are to be accepted and the principles which to be discarded.
‘“பரமசிவா கமவிதியும் நன்மறையின் விதிமுழுவதும் ஒழிவின்றி நவின்றனையே” என்று திருஞானசம்பந்தரை குறித்து நம்பியாண்டார் நம்பி நாயனார் கூறியதையும் மேலே காமிக ஆகமம் கூறுவதையும் நோக்குங்கால், திருஞானசம்பந்தர் பாடிய ‘நான்மறை ஆறங்கம்’ என்பது ‘நால் வேதமும் அதன் ஆறு அங்கநூல்கள்’ என்று மூவர் தமிழுக்கு தருமை ஆதின சைவ அறிஞரால் உரை எழுதியது உண்மையாகுமா? தங்கள் ஆழ்மனதை தாங்களாகவே கேட்டுக் கொள்ளுங்கள் மின் தமிழ் சைவ அறிஞர்களே. சிவபெருமான் தங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருந்தால், திருஞானசம்பந்தப் பிள்ளையைத் தாங்கள் ஞான குருவாக ஏற்றிருந்தால் அவ்வாறு ஆதின அறிஞர் பெருமக்கள் உரை வரைந்தது உண்மையல்ல என்பது புலனாகும்.
பரஞானத்தை வேண்டியே பாடிய கீதங்கள் அல்லவா திருஞானசம்பந்தரின் தேவாரம். ஆங்கு ‘மறை’, அருமறை, மாமறை, நான்மறை’ என்று பாடியது பரஞானத்தை அருளும் சிவாகமத்தைக் குறிக்குமா அல்லது அபர ஞானத்தை மட்டுமே தர வல்ல வேதத்தையும் அதன் ஆறு அங்கங்களையும் குறிக்குமா?. சிந்தியுங்கள். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்.
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
“எங்கே வாழ்க்கைத் தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைத் தெரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்” (கவிஞர் கண்ணதாசன்)
நமக்கு முன்னே இரு பாதைகள் தெரிகின்றன ஒன்று உலகியலில் நின்று பிறவிக் கடலில் விழும் இருட்டுப் பாதை. மற்றொன்று நம் உடல் வேறு உயிர் வேறு என்பதை அறிந்து சகலர் நிலையில் நிற்கும் உயிரைப் பிணித்திருக்கும் மும்மலங்களை இறைவன் திருவருளால் நீக்கப்பெற்று மேல்நிலை பெற வேண்டி பிறவிக்கடல் நீந்தி கரையேற வழி காட்டும் ஒளி நிறைந்த பாதை.
இவ்விரண்டு பாதையில் எதை தேர்ந்தெடுத்து எப்பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்பது ஆணவ மல மறைப்பால் அறியாமையில் வாழ்வோருக்குத் தெரியாது. அதனால் ஊனக் கண்ணுடைய நமக்குப் பயணப் பாதை தெரியாது என்று கூறினார் கவிஞர். ஆனால் ஞானக்கண்ணுடைய சிவபெருமானுக்குத் தெரியும். தீய ஊழ்வினையால் வன்மையாகப் பந்திக்கப்பட்டு அவர்தம் புத்தி இருட்டு வழியே போவதும், நல்வினை கிட்டிய ஆன்மாவின் புத்தி ஒளிவழி பாதையைத் தேர்ந்தெடுத்துப் போவதும் அவன் செயல் அன்றி நம் செயல் ஆகா. அதற்கு எந்தைத் திருவருளும் கூடி வரவேண்டும். அங்ஙனம் திருவருள் கூடியவரே மயக்கம் தெளிந்து இருட்டு வழியை விட்டு ஒளிவழியைத் தேடிப் போவார். இதனை தெளிவாக எடுத்துச் சொல்லியது இதற்கு முன் பதிவிடப்பட்ட காமிகாமத்தின் இறை மொழிகள். வேதம் அபர ஞானத்தையும்; சித்தாந்த சைவம் பரஞானத்தையும் அளிக்க வல்லது என்பதை முன்னம் அறிந்தலால் எந்த பாதை சரியான பாதையென்று அறிந்து நாம் தேர்ந்தெடுக்க முடியும்.
வேதம் பிறவியைக் கொண்டு உயிர்குலங்களைப் பிரித்துச் சிதறடித்தது. சித்தாந்த சைவமோ அறிவின் வழி பாகுபாடு செய்தது. முற்றறிவாளன் பதி, சிற்றறிவுடையது உயிர், அறிவற்றது பாசம் என்று உணர்த்திய பெருமை சிவபெருமான் அருளிய சிவாகமங்களையே சாரும். இப்படி அறிவார்ந்த சமய நெறியினை சிவன் திருவருளால் பெற்ற தமிழரின் இன்றைய சமய நிலைப்பாடு என்ன? எப்படி உள்ளது? சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனால் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்.
இதுவரையில் சொல்லிய வார்த்தைகளே ஒளிவழி எது இருட்டு வழி எது என்பதை படிப்போருக்கு உணர்த்தியிருக்கும். இருந்தாலும் வெகுநாளாக மூவர் தமிழில் பாடிய ‘நான்மறை’-யை ‘நால்வேதம்’ என்று நம்பித் தொலைத்து விட்ட இந்த பாழாய்ப் போன மனம், மயக்கம் தெளிந்து மாறிய பாதையை மாற்ற வேண்டி மேலும் ஒரு பதிவைச் செய்கிறோம்.
காமிகாமத்தின் உப ஆகமாகிய மிருகேந்திர (நரசிம்ம) ஆகமம் வேதாந்தத்தின் முத்திக் கோட்பாடு குறையுடையது என்பதை தருக்க ரீதியாக விளக்குவதை இப்பதிவில் காண்போம். அவ்வாகமத்தின் 2-ம் படலத்தில் (‘Refutation of the Concepts of Liberation as held in the system other than Saiva Siddhanta’) விளக்கப்பட்டதின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை இங்கு பதிவிடுகிறோம்:
1-2 Lord Shiva who, by His Own nature, is eternally free from the veiling impurity known as anava mala. Who is the all-knower and all doer, removes the host of constricting bonds from all the three kinds of souls whose power of all-knowing and all-doing has been beginninglessly obstructed by anava mala. Lord Srikantha Paramesvara who is the Lord of World, first quintessentially expressed through one verse the import of the Scripture in which three categories – Pati, pasu, pasa – have been explained under the four divisions (carya, kriya, yoga and njana); subsequently, he explained it in an elaborated way.
12-13 “The one and the only self is seen projected as the intelligent and non-intelligent. The visible world in all its entirety of moveable and immovable existents is this self only. Apart from this supreme self, nothing exist.” (‘ஏகான்மவாதம்”) So say the followers of Vedanta. This view is untenable. Without giving due consideration to the knowledge gained by reasoning (upapatti) and the contrary of the (anupapatti), this view may be accepted as mere proposition (prima facie). What authentic means is there to ascertain this proposition through reason and example? If it be said that there is scriptural testimony to validate this view, then, is that scripture the self or different from the self? If it is different from the self, then it is non-existent and therefore it cannot be a pramana (which proves) and prameya (which is proved). Where there exist both the means of knowledge (pramana) and the knowable (prameya), both the knower (pramatru) and the knowledge (pramiti) also should essentially be there.
14. In that case, there occurs the total obliteration of this advaitic view of the Vedantins, Or, if it be said that there is no such scriptural authority, then there is no valid proof for this advaitic view. Since there is no karmic effect in the form of merit and demerit apart from the one and the only self, there should be equal enjoyments (bhogas) to all the individual souls. But this is not seen. Moreover, if absorption into the Supreme Self is considered to be the liberation, such liberation does not prevail since the re-appearance of cit and acit is seen. If there is no liberation, then all the ordained means and practices and the scriptures which explain them become purposeless. If the Supreme Self is considered to be the material cause also, then He should be both cit and acit. But, both darkness and light cannot exist simultaneously in one and the same place. Therefore, in view of all these defects and contradictions, the non-dual self cannot be accepted.
இதைத்தான் திருஞானசம்பந்தர் ‘யமாமா நீ யாமாமா” என்று மாலைமாற்றுப் பதிகத்தில் கேள்வி கேட்டு வேதாந்தத்தின் ஒரு பொருள் கோட்பாட்டை மறுத்தார். அவ்வாறு மறுத்தவரா ‘நான்மறை’ என்ற சொல்லால் நால்வேதத்தைக் குறித்தார் என்பது? கேழ்விரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதியில்லையா? “நான்மறை’ என்ற சொல்லால் திருஞானசம்பந்தர் நால்வேதத்தைக் குறிக்கவில்லை என்பதை நிறுவ இத்தனை பதிப்புக்கள் செய்ய வேண்டியதாயிற்று.
படிப்போருக்கு முதலில் ‘நான்மறை’ என்பது ‘நால்வேதம்’ அல்ல என்பதை அவர் அறிந்த வழியிலே சென்று புரிய வைக்க வேண்டும். அவ்வாறு புரிய வைத்தப் பிறகே அந்த ‘நான்மறை’ யாது என்பதை காட்ட வேண்டும். இது நாமெல்லாம் அறிந்த பாடமுறைதான். அதானால்தான் இத்தனை பதிவு தேவைப்பட்டது.
திராவிட கழகத்தார் வெறுமனே புராணக்கதைகளைச் சுட்டிக் காட்டி வர்ணாசிரம பேதங் கொண்ட வைதிகப் பண்பாட்டையும் தூற்றி பாடியது அல்லாமல் அத்துடன் தென்னாட்டுடைய சித்தாந்த சைவத்தின் மேன்மையை உணராது அவர்தம் இறை மறுப்புக் கோட்பாட்டால் தமிழரை பல்வேறு மதங்களுக்குத் தாவிப் போக வழி வகுத்தனர். சிவாகமம், வேதத்தின் கரும காண்டம் அபர ஞானத்தை மட்டுமே அளிக்க வல்லதாகவும், ஞானகாண்டத்தில் கூறப்படும் முத்திக் கோட்பாடு குறையுடையதாகவும் கூறுவதை திராவிட கழகத்தார் அறிந்தால் இதனைக் கொண்டு வைதிகரையும், வைதிகச் சைவரையும் மேலும் அடிக்கத் துணிந்து விடுவார்களே! இந்த விபரீத திருவிளையாட்டில் வைதிகச் சைவர் திராவிட கழகத்தாரை மட்டுமல்லாமல் சைவ நெறியறிந்த தமிழ் சைவரையும் சேர்த்தல்லவா எதிர்நோக்க வேண்டும். கடவுள் இல்லை என்பவரை சுலபமாக வெற்றி கொள்ளலாம். ஆனால் சிவாகமத்தை மறுத்து வைதிகச் சைவர் தங்களை சிவ ஆச்சாரியார் என்று சொல்லிக் கொள்ள முடியாதே! அதனால் சிவாகமங்களைத் தமிழில் மொழிபெயர்க்காமல் வைத்திருந்தால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குத் தமிழரிடையே அவர் பெயர் போட முடியும் என்று எண்ணியிருந்தனர் போலும்! அந்த எண்ணத்தில் இன்று மண் விழுந்தது. சிவசிவ.
இப்பொழுது ‘நான்மறை’ என்று மூவர் தமிழில் பாடியது ‘நால்வேதம்’ அல்ல என்று புரிந்த பிறகு நம்மனம் திறக்கப்பட்டு புதிய கருத்தை உள்வாங்க தயாராக இருக்கும் என்பதில் எமக்கு ஐயமில்லை. அதனால் அடுத்த பதிவில் திருஞானசம்பந்தர் பாடிய ‘நான்மறை’ என்பது யாவை என்று காண்போம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
சித்தாந்த சைவம் என்பது திருமுறை, மெய்கண்ட சாத்திரங்களோடு இன்னும் பல அரிய தமிழ் சைவ நூல்களையும், புராணங்களையும் கற்றுணர்வதோடு நின்று விடுவதில்லை. சிவாகமத்தின் ஞானபாதத்தைக் கற்றுணராமல் நமது சித்தாந்த சைவத் தெளிவு முழுமைப் பெற்றதாக எண்ணிக் கொள்வது குறையுடையதாகும். மெய்கண்ட சாத்திரத்தில் சொல்லாத சித்தாந்த சைவ விளக்கங்களும், மந்திரவிதி படலமும், அத்துவாவிதி (பிரபஞ்ச தோற்றம்) என்று பல சிவாகம ஞானபாதத்தில் உள்ளன. அவற்றை அறிந்தால் மட்டுமே மூவர் தமிழுக்கு நிறைவான பொருள் காண முடியும். நமது சித்தாந்த சைவ ஞானமும் தேரும்.
சிவாகமம் வடமொழியில் உள்ளது அதனால் அதனை நாம் கற்றலாகாது என்று கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பல தமிழ் மொழி அறிஞர் பெருமக்கள் வாளாவிருந்ததனால் அவர் பெற்ற சித்தாந்த சைவ அறிவைக் கொண்டு மூவர் தமிழில் பாடப்பெற்ற ‘நான்மறை’க்குப் பொருள் கூற போந்து தோல்வி கண்டார் என்பதில் எமக்கு ஐயமில்லை. இது அவர்தம் குறையல்ல. அன்று வடமொழி சிவாகமங்கள் தமிழிலோ அல்லது வேற்று மொழியிலோ மொழிப்பெயர்த்து வெளியிடப் படவில்லை. அதனால் அவர் அதன் உட்பொருளை அறியாமலேயே வாழ்ந்து போயினர்.
மெய்கண்ட சாத்திரங்கள் உணர்த்தும் சித்தாந்த சைவத்திற்கு முழுமுதற் நூல் சிவாகமத்தின் ஞானபாதமாகும். இதனை திருக்கயிலாய மரபில் தோன்றிய தமிழ் நாட்டுச் சைவ மடங்கள் மறுக்கக் கூடும் காரணம் அவர் சந்தான குரவர் மரபில் வந்தவராகியதால் மெய்கண்ட சாத்திரங்களையே முதன்மைப் படுத்துவரானார். ஆனால் சிவபெருமான் உரையை மறுப்பதால் யாருக்கு என்ன பெருமை வந்து விடப் போகின்றது? இதுநாள் வரை கோயில் கட்டுவதும், திருமேனி நிறுவுவதும், சிவாலயக் கிரியைகளைச் செய்வது மட்டுமே சிவாகமங்கள் கூறுவனவாகவும், அவை வடமொழியில் இருப்பதால் கற்றலாகாது என்றும் சில சைவ சமயாசிரியர் கூறுவதையும் கேட்டுள்ளோம். தமிழ் சைவ நூல்கள் பலவும் சிவாகமத்தைக் குறிக்கும் பொழுது மேலோட்டமாகச் சொல்லிச் செல்வதையும் கண்டுள்ளோம்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சைவ பெரியவர்களில் தணிகைமணி திரு. வ.சு. செங்கல்வராய பிள்ளையும் ஒருவர். அவர் வரைந்த ‘தேவார காலத்தில் தமிழ் நாட்டின் நிலை’ என்ற கட்டுரையில் (‘கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு விழா மலர்’ – 1961 பதிப்பு) தமிழ் நாட்டில் வழக்கங்கள் – பழக்கங்கள் என்பனவற்றை விளக்கும் பொழுது இவ்வாறு கூறினார்:
“ஊர்களில் அந்தணர் வேள்வி, மறை ஒலி, செந்தமிழ் கீதம் – இவை சிறப்புடன் வளர்ச்சிப் பெற்றிருந்தன” என்பதற்கு ஆதாரமாக திருஞானசம்பந்தரின் கீழ்காணும் பாடலை மேற்கோள் காட்டினார்:
“அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தரப் ...
பயில்விடம் ... மழபாடியே” (3:28:3)
இப்பாடலில் வரும் ‘அருமறைத் துழனியும்’ என்ற சொற்றொடருக்கு ‘மறை’ ஒலி’ என்று பொருள் கூறினார் அப்பெரியவர். அவர் குறித்தது வேத மந்திரம் என்பதாகவே தெரிகின்றது. அதுபோலவே தருமை ஆதின பண்டிதரும் ‘வேதங்கள் ஒலிக்கவும்’ என்று பொழிப்புரையில் கூறியுள்ளார். வேள்வி என்றவுடனே நமக்குத் தோன்றுவதெல்லாம் வேத வேள்வி மட்டுமே காரணம் தமிழ் அறிஞரில் பலர் தங்களைச் சிவாகம சைவக் கிரியைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரில்லை. சிவாகமம் ‘சிவாக்கினி காரியத்தை’ ஏற்று அதற்கான மந்திரங்களை ‘மந்திர அவதார விதி படலத்தில்’ கூறும். அம்மந்திரங்கள் திருமேனி வழிப்பாட்டுக்கும், சிவாக்கினி காரியத்திற்கும் உரியன என்பதை அறியாததனால் ‘அருமறைத் துழனியும்’ என்பதற்கு ‘வேத ஒலி’ என்று பொருள் கூறுவாயினர். இவர்களின் அறியாமையை அறிந்த வைதிகச் சைவர் அவ்வாறே இருந்து போகட்டுமேவென்று விட்டுவிட்டனர். அதனால் திருஞானசம்பந்தர் வேத வேள்வியை ஏற்றுக் கொண்டார் என்று பொருள் கூறினால் தமிழரும் அதை நம்பித்தானே ஆக வேண்டும்!. ஆனால் வேத வேள்விக்கும், சிவாகமம் கூறும் சிவாக்கினி காரியத்திற்கும் வேற்றுமை உண்டு என்பதை தமிழரில் பெரும்பான்மையோர் அறியார். ஏதோ கோயிலுக்குப் போனோம் அர்ச்சகர் நமக்கு விளங்காத மொழியில் மந்திரத்தைச் சொன்னார். அது போதுமென்று வாழ்வதே நமது சமய வாழ்க்கையாகி விட்டது. அந்த வடமொழி மந்திரத்தின் பொருள் என்னவென்று யாராவது கேட்டிருப்போமா? அல்லது அறிந்து கொள்ளத்தான் முயற்சித்து இருப்போமா? அம்மந்திரங்கள் யாது என்பதையும், அவற்றிற்கான பொருள் என்னவென்பதையும் இரௌரவ ஆகம ஞான பாதத்தில் உள்ளது. அது போலவே பிற ஆகமங்களிலும் உள்ளன. ஆர்வமுள்ளோர் ஆங்கில மொழிபெயர்ப்பின் வழி கற்றறியுங்கள். இதனை அறியாமல் ‘வேத ஒலி’ என்று பொருள் கூறினால், குற்றம் வைதிகச் சைவர் மீது இல்லை மாறாக அறியாமையில் வாழும் நம்மீதுதான் உள்ளது.
திரு. வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்களை இப்பதிவில் குறிப்பிட்டதற்கு காரணம் அவர் ‘திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்’ என்றொரு சிறிய நூலை இயற்றியுள்ளார் (1951 பதிப்பு). (இந்நூல் த.ம.அ மின்தொகுப்பு நூற்பகுதியிலும் உள்ளது). இந்நூலில், நால்வர் பெருமக்கள் அவர்தம் தேவார திருவாசகத்தைப் பாடியதில் திருமந்திரத்தில் இருக்கும் சொற்றொடரையும், கருத்துக்களையும் எடுத்துக் கையாண்டுள்ளதை ஓர் அட்டவணையிட்டுள்ளார். அவ்வட்டவணையிலிருந்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களில் அவர் குறிப்பிட்ட ஒரு சில திருமந்திர கருத்துக்களைப் படிப்போர் கவணத்திற்கு இங்கு பதிவிடுகிறோம்.
திருமந்திரம் சம்பந்தர் தேவாரம் பாடல் எண்;
ஐந்து வென்றனன் வென்றவன் புலனைந்தும் 1-113-10
தன்னை யொப்பா யொன்றும் தன்னேர் பிறரில்லானை 2-62-3
இல்லாத் தலைமகன்
ஆரறிவார் எங்கள் அண்ணல் இவர் தன்மை அறிவார் ஆர்? 3-112-1
பெருமையை
அப்பரி செண்பத்து நான்கு உரைசேரும் எண்பத்து நான்கு 1-132-4
நூறாயிரம் .. உயிராய் நிற்கும் நூறாயிரமாம் யோனி பேதம்
போதுகந்தோறும் புரி சடையான் மலர்மிசை யெழுதருபொருள் 1-21-5
விம்மும் வெருவும் விழும் எழும் வெருவா விழுமால் 2-18-1
மெய்சோரும்
அப்பெரியவர் ஒரளவுக்கு ஆராய்ந்து இப்பட்டியலைத் தொகுத்தார். இன்றோ கணினி யுகம். நாம் முயற்சித்தால் இப்பட்டியலை இன்னமும் நீட்டலாம்.
அதுசரி, இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவதால் “நான்மறை’’ ஆராய்ச்சிக்கு என்ன பயன் என்று சிலர் கேட்கலாம். காரணமில்லாமல் காரியமில்லை.
திருஞானசம்பந்தர் திருமந்திரத்தில் உள்ள சொற்றொடரைக் கொண்டே நான்மறை யாவை என்று நமக்கு அடையாளம் காட்டினார். நாம்தான் அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத் தவறினோம். தவறு நம்முடையது அல்ல. மூவர் தமிழுக்கு விளக்கவுரை எழுதிய தமிழ் சைவ அறிஞர் ‘நான்மறை’க்கு ‘நால்வேத’ மென்று ஒரே பொருளைக் கொண்டதனால் நாம் நான்மறையை அடையாளம் காணவியலாமல் போயிற்று. அதனை அடுத்தப் பதிவில் அறிவோம். சிவசிவ.
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி திருமுறையை முறைப்படுத்தியவர் என்பதால் நம்மை விட அவரே மூவர் தமிழை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். அதன் காரணமாகவே ‘பரமசிவாகம விதியும் நன்மறையின் விதிமுழுவதும் ஒழிவின்றி நவின்றனையே’ என்று திருஞானசம்பந்தரை கூறுவதாக அறிந்தோம். ‘விதி’ நூல் என்று கூறியதால் அவை தந்திரமே ஆகும். அவ்வாறான சைவ மறைகள் சிவாகமும், தமிழாகமமாகிய திருமந்திரமே 7-ம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்தன என்பதை நாம் அறிய முடிகின்றது.
நம்பி நாயனாரின் இக்கூற்றை திருஞானசம்பந்தர் திருவாயாலேயே திருவாழ்கொளிபுத்தூர் பதிகத்தில் உறுதிப்படுத்துகின்றார்,
கல்லுயர்மாக்கட னின்றுமுழங்குங் கரைபொரு காழியமூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்
வல்லுயர்சூலமும் வெண்மழுவாளும் வல்லவன்வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லியபாடல்கள் வல்லார் துயர்கெடுதல்லெளி தாமே.(தி. 1:40:11)
இப்பாடலில் வரும் ‘நல் உயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்’ என்பதற்கு தருமை ஆதின வித்துவான் பொழிப்புரையில் ‘உயர்ந்த நான்மறை ஓதும் நாவினை உடைய நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்று விளக்கினார். குறிப்புரை வரைந்த முனைவரோ திருஞானசம்பந்தர் ஓதிய நான்மறை யாதென்று கூறாமலேயே விலகிக் கொண்டார். மற்றப் பாடல்களுக்குப் பொருள் கூறிய மாதிரியே இவ்விடத்தும் ‘நான்மறை’க்கு நால்வேதம் என்று பொருள் கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? அவ்வாறு கூறியிருந்தால் இரண்டு கருத்து எழும்:
1. நம்பியாண்டார் நம்பியின் கருத்தை இக்கால திருமுறை உரையாசிரியர்கள் மறுத்தார் என்பதாகும்;
2. தான் பின்பற்றாத வைதிக பண்பாட்டையும், தானே ஏற்றுக் கொள்ளாத வேதாந்த முத்திக் கோட்பாட்டையும் தமது
அடியவரை பின்பற்றுமாறு உபதேசித்தார் என்ற குற்றச் சாட்டு திருஞானசம்பந்தர் மீது எழும்;
நம்பியாண்டார் நம்பியின் கருத்தை மறுத்தால் அதை விட அபத்தமான செயல் வேரொன்றும் இருக்காது. இன்றைய திருமுறை உரையாசிரியரின் விருப்புக்கு அல்லது அவர் தொண்டூழியம் புரிந்த ஆதினத்தின் விருப்புக்கு ஏற்றவாறு கருத்து எழுதினார் என்ற மாற்றுக் கருத்தும் முன் வைக்கப்படும். ஆதலால் திருஞானசம்பந்தர் ‘பரமசிவாக விதியை’ தன் அடியவருக்கு தேவாரத் திருமுறையின் வழி போதித்தார் என்றும், பெருமானைப் பாடிப் புகழ்ந்தாரென்றும் கொள்வதன்றி வேற்றுவழி இல்லாததால் ‘நால்வேதம்’ என்று கூறாமல் ‘உயர்ந்த நான்மறை ஓதும் நாவினை உடைய நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்று கூறி போந்தார் போலும் அவ்வித்துவான். கற்றவருக்குகே உரிய சாதூரியமான முறையில் கேள்விக்குப் பதில் சொல்லாமலேயே, பதில் சொல்லும் வித்தையை இவர் கற்றவர் போலும்!. சிவசிவ.
அடுத்து, தானே பின்பற்றாத வைதிக பண்பாட்டையும், தானே ஏற்றுக் கொள்ளாத வேதாந்த முத்திக் கோட்பாட்டையும் பின்பற்றுமாறு சிவனடியாருக்குத் திருஞானசம்பந்தர் உபதேசித்தார் என்ற கருத்தை முன் வைப்பவருக்கு நற்கதி கிட்டாது. இது சமயக் குரவர் நிந்தனையுமுமாகும்.
திருமுறைக்கும், நாயன்மார்களுக்கும் இத்தகைய களங்கம் ஏற்படக் கூடாதென்றால் அப்பாடலில் கூறப்பட்ட ‘நான்மறைக்கு’ ஒரு பொருள் மட்டுமே கொள்ள முடியும். திருஞானசம்பந்தர் பாடலில் பாடப்பெற்ற ‘நான்மறை’ என்பது நான்கு சிவாகமங்கள் என்றே பொருள்படும்.
அப்படியானால் 28 மூல ஆகமங்கள் இருக்குமிடத்தில் நான்கை மட்டுமே சிறந்ததென்பதின் மாயமென்ன? அந்நான்கு சிவாகமங்கள் யாவை? என்று எழும் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லையேல் எமது கூற்று பொய்யாகும்.
நந்தியெம்பெருமானிடமிருந்து தான் பெற்ற மூல ஆகமங்கள் ஒன்பது என்று திருமூலர் கூறுமிடத்து (திருமூலர் திருவடியைப் போற்றி தொடருகிறோம்) அவை யாவை என்பதை உணர்த்தும் பாடல்,
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. (தி. 10:1: ஆகமச் சிறப்பு)
“பெற்ற நல் ஆகமம் காரணம் (1) காமிகம் (2) உயர் சிந்தம் (3) வாதுளம் (4) நான்குமாகும் என்று திருஞானசம்பந்தருக்கு முன்னமே திருமூலர் அறிவித்ததை நன்மறை (திருமந்திர) விதி முழுவதையும் அறிந்த திருஞானசம்பந்தரும் பின்பற்றிச் சொன்னார் என்றால் அதில் சிவாகமச் சைவர் கருத்து வேறுபாடு கொள்ளக் காரணமில்லை. இதற்கு முந்தைய பதிப்பில் திருமந்திர கருத்தையும், அதன் சொற்றொடரையும் எடுத்தாண்ட திருஞானசம்பந்தர் இவ்விடத்தும் திருமூலர் காட்டிய வழியையே பின்பற்றினார் என்றால் பிழையாகுமோ? மஞ்சக் காமாலைக் கண்ணனுக்குப் பிழையாகத் தெரியலாம். ஆனால் திருஞானசம்பந்தனார், திருமூல நாயனாரின் பாதத்தைப் போற்றி குருவாக வழிபடும் சிவனடியாருக்கு அது பிழையான கருத்தாகத் தெரியாது.
திருமூலர் உபயோகித்த அதே சொற்களை திருஞானசம்பந்தர் எடுத்தாண்டு “நல்லுயர் நான்மறை” என்று கூறியதால் இக்கண் யாமே எழுப்பிய கேள்விக்குத் திருமந்திரத்தைக் கொண்டு தக்க பதில் அளித்தோம்.
சிவனிடமிருந்து வெவ்வேறானவர் உபதேசமாகப் பெற்ற மூல ஆகமங்கள் 28 ஆகினும் அவை ஒரே பொருளை வெவ்வேறாக வகுத்தும் விரித்தும் கூறியதானது அவ்வாகமங்களை உபதேசமாகப் பெற்று மற்றவருக்கு உபதேசித்த முறைமையினால் ஏற்பட்டதாகும். ஆதலால் திருமூலர் கூறியவாரே ‘காரணம், காமிகம், சிந்தம், வாதுளம்’ ஆகிய நான்கு சிவாகம மறைகளையும் கற்றுணர்ந்தால் மற்ற ஆகமங்களையும் கற்ற பயனைப் பெறலாம் என்பதாலே திருஞானசம்பந்தர் அந்நான்கு ஆகமங்களை ‘நான்மறை’ என்று குறித்தார் என்றால் அது தகும். இதனை அடியேன் மட்டும் சொல்லவில்லை, திருமந்திரத்திர்க்கு விளக்கவுரை வழங்கிய முதுமுனைவர் சி. அருனை வடிவேலும் அச்சிவாகமங்களைக் குறிப்பிடுகையில் இவ்வாறே பொருள் கொண்டார். அவர் வார்த்தைகளாவன:
“ஆகமங்கள் பலவும் தனித்தனி வேறு வேறு பொருளைக் கூறுவன அல்ல; எல்லா ஆகமங்களும் எல்லாப் பொருளையும் கூறு வனவே எனினும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் கூறுமாற்றால் வேறு வேறு ஆகமங்களாயின. ஆகவே, நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்களை உணரின், அனைத்து ஆகமங்களை யும் உணர்ந்ததாம். அவற்றின் பொருளையே கூறினமையால், இந் நூலை உணரினும் அனைத்து ஆகமங்களும் உணர்ந்தவாறாதல் அறிக.”
இதன்கண் திருஞானசம்பந்தரின் தேவாரத் திருமுறையில் பாடிய ‘நான்மறை’ யாவை என்பதை அவர் வார்த்தையாலேயே நிறுவினோம். இவை வெற்று ஊகங்கள் அல்ல. தக்க சான்றுகளுடன் பெறப்பட்டனவையே. இங்கே ஒரு கருத்துக் களமாகப் பதிவிடுவதால் இவ்வளவே சுருக்கமாக கூற முடியும். இதனை பிற சைவர் மறுக்கப் புகுந்தால் யாம் பெற்ற மற்ற அறிவையும் எமது ஒய்வு நேரத்திர்க்கு ஏற்றவாறு பகிர்ந்து கொள்வோம்.
இனி (1) ஏன் அந்த நான்மறைகளும் நல்லுயர் ஆகமங்களாகும் என்பதனையும், (2) அந்நான்மறைகள் தமிழில் இருந்தனவா? என்பதனையும் (3) திருஞானசம்பந்தரின் திருமுறையில் ‘நான்மறை ஆறங்கம்’ என்று பாடியதில் அவர் ‘ஆறங்க’மாக எந்த ஆகமத்தைக் குறித்தார்? என்பதனையும், ஏன் அதனைத் தனியாகக் குறித்தார் என்பதனையும் அறிவோம். அதன் பிறகே, மூவர் தமிழில் பாடிய ‘நான்மறை ஆறங்கத்திற்கு’ ஒரு தெளிவு பிறக்கும். இனியும் நாம் வைதிகச் சைவரிடம் முரண்படத் தேவையில்லை. நாம் பெற்ற சிவாகம சித்தாந்த சைவத்தில் நிற்போம். அவர் போற்றும் வைதிகச் சைவத்தில் நிற்கட்டும். யாவருக்கும் அதனால் நட்டம் ஏற்படப் போவதில்லை. உண்மையை மட்டுமே சிவனடியார் ஒருவர் வேண்டினார் என்பதை உலகம் அறிந்தால் போதும். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
“பெற்ற நல் ஆகமம் காரணம் (1) காமிகம் (2) உயர் சிந்தம் (3) வாதுளம் (4) நான்குமாகும் என்று திருஞானசம்பந்தருக்கு முன்னமே திருமூலர் அறிவித்ததை நன்மறை (திருமந்திர) விதி முழுவதையும் அறிந்த திருஞானசம்பந்தரும் பின்பற்றிச் சொன்னார் என்றால் அதில் சிவாகமச் சைவர் கருத்து வேறுபாடு கொள்ளக் காரணமில்லை. இதற்கு முந்தைய பதிப்பில் திருமந்திர கருத்தையும், அதன் சொற்றொடரையும் எடுத்தாண்ட திருஞானசம்பந்தர் இவ்விடத்தும் திருமூலர் காட்டிய வழியையே பின்பற்றினார் என்றால் பிழையாகுமோ? மஞ்சக் காமாலைக் கண்ணனுக்குப் பிழையாகத் தெரியலாம். ஆனால் திருஞானசம்பந்தனார், திருமூல நாயனாரின் பாதத்தைப் போற்றி குருவாக வழிபடும் சிவனடியாருக்கு அது பிழையான கருத்தாகத் தெரியாது.
ஐயா, சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருமூலர் 11 அல்லது 12 நூற்றாண்டில் வாழ்ந்தவர், சம்பந்தருக்கும் பிற்காலத்தவர் என்ற ஒரு கருத்தும் உண்டு.
https://en.wikipedia.org/wiki/Tirumular
The scholar and lexicographer S. Vaiyapuripillai, however, suggested that he probably belonged to the beginning of the eighth-century CE, pointing out that Tirumular could not very well be placed earlier given that he appears to refer to the Tevaram hymns of Sambandar, Appar and Sundarar, that he used "very late words" and that he made mention of the weekdays.[2]
Others wish to push the date still later: Dominic Goodall, for instance, appears to suggest, on the grounds of religious notions that appear in the work with Sanskrit labels for which a certain historical development can be traced in other datable works, that the Tirumantiram cannot be placed before the 11th- or 12th-century CED.[3] Yet another view, alluded to for instance by Vaiyapuripillai (ibid.), is that the text may contain an ancient core, but with "a good number of interpolated stanzas" of later date. Whatever the case, allusions to works and ideas in the Tirumantiram cannot, at least for the moment, be used as useful indicators of their chronology.
உங்களின் விளக்கம் சம்பந்தருக்கும் முன் வாழ்ந்தவர் என்று காட்டுகிறீர்கள். இது குறித்து (காலம் குறித்து) உங்கள் கருத்துகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
..... தேமொழி
On Monday, January 9, 2017 at 8:26:10 AM UTC-8, தேனீ wrote:
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
--
--
சிவசிவ,
தேமொழி அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக இந்த விளக்கம்.
திருமூல நாயனார் காலம்
‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய’ மூத்தக் குடி தமிழர் இனம் என்று சங்ககால புலவர் ஒருவர் சொல்லிப் போனார். ஆனால் இந்த இனத்திற்கு தன் வரலாற்றை எழுதி வைக்கக் கூட ஒருதொடர் ஆண்டு முறை இல்லை! அப்படியானால் தமிழர் என்பதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு? இன்றும் கி.மு., கி.பி என்றுதானே தமிழர் வரலாற்றை எழுதி வருகிறோம். அதனையும் ‘சக ஆண்டு’ கணக்கையும் மாற்றி, 1921-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ் அறிஞர் பெருமக்கள் ‘திருவள்ளுவர் ஆண்டு’ முறையே தமிழர் பண்பாட்டைக் குறிக்க வல்லது என்று கூறி அதனை தை முதல் நாள் கொண்டாடும் வண்ணம் முன்மொழிந்து ஏற்றுக் கொண்டனர். ஆனால் அயலார் நெறியிலேயே ஊறித் திளைத்த தமிழர் என்பாரில் பலர் இதனை ஏற்க கூட மனமில்லாமல் போனால் தமிழர் வரலாற்றை தமிழாண்டு முறையில் அறிவது எப்படி? அதனால்தான் வரலாற்றை தொலைத்து விட்ட இனமாக தமிழர் இன்றுவரை வாழ வேண்டியுள்ளது. நிற்க.
தொடர் தமிழாண்டு கொண்டு தமிழர் வரலாற்றை எழுதும் முறை இல்லாது போனதால் கிறிஸ்துவ ஆண்டு கணக்கையே இன்றும் எழுதி வருகின்றோம். அதனால்தான் நாயன்மார் காலத்தையும் தோராயமாக சொல்லும் நிலை நமக்கு.
திருமந்திரம் அருளிய காலத்தை விளக்கிய தருமை ஆதின இணையம் கொடுத்த விளக்கம்:
திருமந்திரம் அருளிய காலம்:
“இனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த
சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான்
திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப்
போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில்,
திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்
களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம்
கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு."
திருமூலரின் காலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னது என்பதை நிறுவ இதுவே போதுமான ஆதாரமாகும்.
இதற்கு மேலும், டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் ‘சைவ சமய (கட்டுரைகள்)” என்னும் தலைப்பில் வெளியாகிய கட்டுரைத் தொகுப்பு நூலில் (இந்நூல் த.ம.அ மின்தொகுப்பு திட்டப் பகுதியிலும் உள்ளது) பக். 62 & 63-ல் திருமந்திர சிறப்பைப் பற்றி கூறுமிடத்தில்,
“ஆகமாந்தம் அல்லது சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்பன சுமார் கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றன எனலாம். குப்தர்கள் காலத்தில் கோதாவரியாற்றங்கரையில் மந்த்ர காளேசுவர் என்ற இடத்தில் மந்த்ரகாளேசுவர் கோவிலைச் சுற்றி நான்கு சைவ மடங்கள் இருந்தன. அங்கு ஆகமச் சைவர்கள் இருந்தார்கள். இந்த 4,5,6-ஆம் நூற்றாண்டுகளில் திருமூலர் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவராதல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டது. திருமூலருக்கு முன் தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சைவ சித்தாந்த நூல் இல்லை. அவர் செய்த திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் நூல் என்பது தெளிவு. ஆதலின் இந்நூல் பின் வந்த அப்பர், சம்பந்தர் சுந்தரர் முதலிய சமயாசாரியர்கட்கும் அவர்களால் பரப்பப்பட்ட சைவ சமயத்திற்கும் ஆதார நூலாயிற்று. அவர்கள் திருமந்திரத்தை நன்கு படித்தவர்கள் என்பதற்கு சான்றுகள் பல காட்டலாம். இடம் போதாமையால் சில சான்றுகள் இங்குத் தருவோம்.
1. “குருவே சிவமெனக் கூறினன் நந்தி” – திருமந்திரம்
- “ஒருவராயிரு மூவரு மாயவன் குருவ தாய குழகன்” – அப்பர் தேவாரம்
2. “சாத்திரமோதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்த இப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவி டோடுமே” – திருமந்திரம்
இதே அறிவுரையை அப்பர் கூறுதல் காண்க:
“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்தி ரமுங்கு லமுங்கொண்டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென் பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே” – அப்பர் தேவாரம்
3. வேயன தோளிக்கு வேந்தொன்றுந்தானே” – என்பது திருமந்திரம்
“வேயுரு தோளிபங்கன் விடமுண்டகண்டன்”
என்பது சம்பந்தர் தேவாரம்"
இதுவுமன்றி திரு. வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் ‘திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்’ நூலில் மூவர் முதலிகள் திருமந்திரத்திலிருந்து எடுத்தாண்ட சொற்றொடர் மற்றும் திருமந்திரக் கருத்துக்களைச் சுட்டிக் காட்டி ஒரு நீண்ட அட்டவனையே கொடுத்துள்ளார். இதுவே திருமந்திரம் அருளிய காலம் 7- நூற்றாண்டுக்கும் முந்தையது என்பதை தெளிவாக விளக்கும்.
வைக்கிபீடியாவில் உள்ள தகவல் சரிபார்க்கப் படாதது என்று அந்த இணைய பதிப்பாளரே தெரிவித்து இருப்பதால் அதனைத் தக்க ஆதாரமாக எடுத்துக் கொள்வதற்கு இடமில்லை. பேரா. ச. வையாபுரிபிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரையை முழுமையாகப் படித்தால் அவருடைய கருத்துக்கு மறுமொழி கூற முடியும். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
--
The scholar and lexicographer S. Vaiyapuripillai, however, suggested that he probably belonged to the beginning of the eighth-century CE, pointing out that Tirumular could not very well be placed earlier given that he appears to refer to the Tevaram hymns of Sambandar, Appar and Sundarar, that he used "very late words" and that he made mention of the weekdays.<sup id="m_7514528096778426857cite_ref-Vaiyapuripillai_2-0" class="m_7514528096778426857reference" style="line-height:1;uni
2017-01-10 21:26 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
திருமூல நாயனார் காலம்
திருமந்திரம் அருளிய காலத்தை விளக்கிய தருமை ஆதின இணையம் கொடுத்த விளக்கம்:
திருமந்திரம் அருளிய காலம்:
“இனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள் களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு."
திருமூலரின் காலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னது என்பதை நிறுவ இதுவே போதுமான ஆதாரமாகும்.
இதற்கு மேலும், டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் ‘சைவ சமய (கட்டுரைகள்)” என்னும் தலைப்பில் வெளியாகிய கட்டுரைத் தொகுப்பு நூலில் (இந்நூல் த.ம.அ மின்தொகுப்பு திட்டப் பகுதியிலும் உள்ளது) பக். 62 & 63-ல் திருமந்திர சிறப்பைப் பற்றி கூறுமிடத்தில்,
“ஆகமாந்தம் அல்லது சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்பன சுமார் கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றன எனலாம். குப்தர்கள் காலத்தில் கோதாவரியாற்றங்கரையில் மந்த்ர காளேசுவர் என்ற இடத்தில் மந்த்ரகாளேசுவர் கோவிலைச் சுற்றி நான்கு சைவ மடங்கள் இருந்தன. அங்கு ஆகமச் சைவர்கள் இருந்தார்கள். இந்த 4,5,6-ஆம் நூற்றாண்டுகளில் திருமூலர் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவராதல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டது. திருமூலருக்கு முன் தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சைவ சித்தாந்த நூல் இல்லை. அவர் செய்த திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் நூல் என்பது தெளிவு. ஆதலின் இந்நூல் பின் வந்த அப்பர், சம்பந்தர் சுந்தரர் முதலிய சமயாசாரியர்கட்கும் அவர்களால் பரப்பப்பட்ட சைவ சமயத்திற்கும் ஆதார நூலாயிற்று. அவர்கள் திருமந்திரத்தை நன்கு படித்தவர்கள் என்பதற்கு சான்றுகள் பல காட்டலாம். இடம் போதாமையால் சில சான்றுகள் இங்குத் தருவோம்.
ஐயாதிருமூலர் காலத்தை அப்பர் சம்பந்தர் கால ஒப்புமையோடு பொருத்துவதை போல அவரது நண்பர்களான வியாக்கிரபர், பதஞ்சலி காலத்தொடும் ஒப்பிட்டு அறிய முடியும்."தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வியாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!நாதர் என்ற பெயர் நாத மரபு (natha cult) சித்தர்கள் கொண்ட பின்னொட்டுப் பெயர். இவர்கள் 5 ஆம் நூற்றாண்டுக்கு பின்பே உருவானவர்கள். அவ்வழியில் வந்த நந்தி ஒருவரிடம் திருமூலர், பதஞ்சலி, வியாகிரபர் ஆகிய மூவரும் ஓகம் பயில்கின்றனர். பதஞ்சலியின் மாணாக்கர் தான் உத்தர மீமாம்சையை பரப்பிய கௌடபாதர். இவரது மாணாக்கர் கோவிந்தபாதரின் மாணாக்கர் தான் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் 8 ஆம் நூற்றாண்டினர் என்றால் திருமூலர் காலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் இராது அல்லவா? மேலும் திருமூலரின் மொழியில் அதிக சமற்கிருத பயன்பாடு உள்ளது என்பதையும் நோக்கினால் அவர் காலம் 4 - 6 நூற்றாண்டிற்கு எல்லாம் போகாது.பாத என்ற பின்னொட்டு பெயர் கொண்ட துறவாளர்கள் 8 ஆம் நூற்றாண்டில் உண்டானதாவே கொள்ளத்தக்கது. கௌடபாதர். கோவிந்தபாதர் சங்கரபகவத் பாதர் (ஆதிசங்கரர்), பத்மபாதர், மண்டுகோபநிசத்து காரிகா படலத்தை எழுதிய கௌதமபாதர்.நாவுக்கரசர் இரண்டாம் மகேந்திரனின் (668 - 670) காலத்தவர் என்றால் 640 - 720 வரை வாழ்ந்தவர். கூன் பாண்டியன் Arikesari Maravarman (r. c. 670–700 CE) காலத்தவர் சம்பந்தர் .காத்தன் தொன்னன்
ஐயா, சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருமூலர் 11 அல்லது 12 நூற்றாண்டில் வாழ்ந்தவர், சம்பந்தருக்கும் பிற்காலத்தவர் என்ற ஒரு கருத்தும் உண்டு.
https://en.wikipedia.org/wiki/Tirumular
The scholar and lexicographer S. Vaiyapuripillai, however, suggested that he probably belonged to the beginning of the eighth-century CE, pointing out that Tirumular could not very well be placed earlier given that he appears to refer to the Tevaram hymns of Sambandar, Appar and Sundarar, that he used "very late words" and that he made mention of the weekdays.[2]
Others wish to push the date still later: Dominic Goodall, for instance, appears to suggest, on the grounds of religious notions that appear in the work with Sanskrit labels for which a certain historical development can be traced in other datable works, that the Tirumantiram cannot be placed before the 11th- or 12th-century CED.[3] Yet another view, alluded to for instance by Vaiyapuripillai (ibid.), is that the text may contain an ancient core, but with "a good number of interpolated stanzas" of later date. Whatever the case, allusions to works and ideas in the Tirumantiram cannot, at least for the moment, be used as useful indicators of their chronology.
உங்களின் விளக்கம் சம்பந்தருக்கும் முன் வாழ்ந்தவர் என்று காட்டுகிறீர்கள். இது குறித்து (காலம் குறித்து) உங்கள் கருத்துகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். - ..... தேமொழி
2017-01-10 21:26 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
திருமூல நாயனார் காலம்
திருமந்திரம் அருளிய காலத்தை விளக்கிய தருமை ஆதின இணையம் கொடுத்த விளக்கம்:
திருமந்திரம் அருளிய காலம்:
“இனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள் களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு."
திருமூலரின் காலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னது என்பதை நிறுவ இதுவே போதுமான ஆதாரமாகும்.
இதற்கு மேலும், டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் ‘சைவ சமய (கட்டுரைகள்)” என்னும் தலைப்பில் வெளியாகிய கட்டுரைத் தொகுப்பு நூலில் (இந்நூல் த.ம.அ மின்தொகுப்பு திட்டப் பகுதியிலும் உள்ளது) பக். 62 & 63-ல் திருமந்திர சிறப்பைப் பற்றி கூறுமிடத்தில்,
“ஆகமாந்தம் அல்லது சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்பன சுமார் கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றன எனலாம். குப்தர்கள் காலத்தில் கோதாவரியாற்றங்கரையில் மந்த்ர காளேசுவர் என்ற இடத்தில் மந்த்ரகாளேசுவர் கோவிலைச் சுற்றி நான்கு சைவ மடங்கள் இருந்தன. அங்கு ஆகமச் சைவர்கள் இருந்தார்கள். இந்த 4,5,6-ஆம் நூற்றாண்டுகளில் திருமூலர் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவராதல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டது. திருமூலருக்கு முன் தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சைவ சித்தாந்த நூல் இல்லை. அவர் செய்த திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் நூல் என்பது தெளிவு. ஆதலின் இந்நூல் பின் வந்த அப்பர், சம்பந்தர் சுந்தரர் முதலிய சமயாசாரியர்கட்கும் அவர்களால் பரப்பப்பட்ட சைவ சமயத்திற்கும் ஆதார நூலாயிற்று. அவர்கள் திருமந்திரத்தை நன்கு படித்தவர்கள் என்பதற்கு சான்றுகள் பல காட்டலாம். இடம் போதாமையால் சில சான்றுகள் இங்குத் தருவோம்.
ஐயாதிருமூலர் காலத்தை அப்பர் சம்பந்தர் கால ஒப்புமையோடு பொருத்துவதை போல அவரது நண்பர்களான வியாக்கிரபர், பதஞ்சலி காலத்தொடும் ஒப்பிட்டு அறிய முடியும்."தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வியாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!நாதர் என்ற பெயர் நாத மரபு (natha cult) சித்தர்கள் கொண்ட பின்னொட்டுப் பெயர். இவர்கள் 5 ஆம் நூற்றாண்டுக்கு பின்பே உருவானவர்கள். அவ்வழியில் வந்த நந்தி ஒருவரிடம் திருமூலர், பதஞ்சலி, வியாகிரபர் ஆகிய மூவரும் ஓகம் பயில்கின்றனர். பதஞ்சலியின் மாணாக்கர் தான் உத்தர மீமாம்சையை பரப்பிய கௌடபாதர். இவரது மாணாக்கர் கோவிந்தபாதரின் மாணாக்கர் தான் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் 8 ஆம் நூற்றாண்டினர் என்றால் திருமூலர் காலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் இராது அல்லவா? மேலும் திருமூலரின் மொழியில் அதிக சமற்கிருத பயன்பாடு உள்ளது என்பதையும் நோக்கினால் அவர் காலம் 4 - 6 நூற்றாண்டிற்கு எல்லாம் போகாது.பாத என்ற பின்னொட்டு பெயர் கொண்ட துறவாளர்கள் 8 ஆம் நூற்றாண்டில் உண்டானதாவே கொள்ளத்தக்கது. கௌடபாதர். கோவிந்தபாதர் சங்கரபகவத் பாதர் (ஆதிசங்கரர்), பத்மபாதர், மண்டுகோபநிசத்து காரிகா படலத்தை எழுதிய கௌதமபாதர்.நாவுக்கரசர் இரண்டாம் மகேந்திரனின் (668 - 670) காலத்தவர் என்றால் 640 - 720 வரை வாழ்ந்தவர். கூன் பாண்டியன் Arikesari Maravarman (r. c. 670–700 CE) காலத்தவர் சம்பந்தர் .
காத்தன் தொன்னன்
ஐயா, சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருமூலர் 11 அல்லது 12 நூற்றாண்டில் வாழ்ந்தவர், சம்பந்தருக்கும் பிற்காலத்தவர் என்ற ஒரு கருத்தும் உண்டு.
https://en.wikipedia.org/wiki/Tirumular
The scholar and lexicographer S. Vaiyapuripillai, however, suggested that he probably belonged to the beginning of the eighth-century CE, pointing out that Tirumular could not very well be placed earlier given that he appears to refer to the Tevaram hymns of Sambandar, Appar and Sundarar, that he used "very late words" and that he made mention of the weekdays.[2]
Others wish to push the date still later: Dominic Goodall, for instance, appears to suggest, on the grounds of religious notions that appear in the work with Sanskrit labels for which a certain historical development can be traced in other datable works, that the Tirumantiram cannot be placed before the 11th- or 12th-century CED.[3] Yet another view, alluded to for instance by Vaiyapuripillai (ibid.), is that the text may contain an ancient core, but with "a good number of interpolated stanzas" of later date. Whatever the case, allusions to works and ideas in the Tirumantiram cannot, at least for the moment, be used as useful indicators of their chronology.
உங்களின் விளக்கம் சம்பந்தருக்கும் முன் வாழ்ந்தவர் என்று காட்டுகிறீர்கள். இது குறித்து (காலம் குறித்து) உங்கள் கருத்துகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். - ..... தேமொழி
திருமூல நாயனார் காலம்
திருமந்திரம் அருளிய காலத்தை விளக்கிய தருமை ஆதின இணையம் கொடுத்த விளக்கம்:
திருமந்திரம் அருளிய காலம்:
“இனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள் களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு."
திருமூலரின் காலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னது என்பதை நிறுவ இதுவே போதுமான ஆதாரமாகும்.
இதற்கு மேலும், டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் ‘சைவ சமய (கட்டுரைகள்)” என்னும் தலைப்பில் வெளியாகிய கட்டுரைத் தொகுப்பு நூலில் (இந்நூல் த.ம.அ மின்தொகுப்பு திட்டப் பகுதியிலும் உள்ளது) பக். 62 & 63-ல் திருமந்திர சிறப்பைப் பற்றி கூறுமிடத்தில்,
“ஆகமாந்தம் அல்லது சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்பன சுமார் கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றன எனலாம். குப்தர்கள் காலத்தில் கோதாவரியாற்றங்கரையில் மந்த்ர காளேசுவர் என்ற இடத்தில் மந்த்ரகாளேசுவர் கோவிலைச் சுற்றி நான்கு சைவ மடங்கள் இருந்தன. அங்கு ஆகமச் சைவர்கள் இருந்தார்கள். இந்த 4,5,6-ஆம் நூற்றாண்டுகளில் திருமூலர் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவராதல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டது. திருமூலருக்கு முன் தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சைவ சித்தாந்த நூல் இல்லை. அவர் செய்த திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் நூல் என்பது தெளிவு. ஆதலின் இந்நூல் பின் வந்த அப்பர், சம்பந்தர் சுந்தரர் முதலிய சமயாசாரியர்கட்கும் அவர்களால் பரப்பப்பட்ட சைவ சமயத்திற்கும் ஆதார நூலாயிற்று. அவர்கள் திருமந்திரத்தை நன்கு படித்தவர்கள் என்பதற்கு சான்றுகள் பல காட்டலாம். இடம் போதாமையால் சில சான்றுகள் இங்குத் தருவோம்.
ஐயா, சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருமூலர் 11 அல்லது 12 நூற்றாண்டில் வாழ்ந்தவர், சம்பந்தருக்கும் பிற்காலத்தவர் என்ற ஒரு கருத்தும் உண்டு.
https://en.wikipedia.org/wiki/Tirumular
The scholar and lexicographer S. Vaiyapuripillai, however, suggested that he probably belonged to the beginning of the eighth-century CE, pointing out that Tirumular could not very well be placed earlier given that he appears to refer to the Tevaram hymns of Sambandar, Appar and Sundarar, that he used "very late words" and that he made mention of the weekdays.[2]
Others wish to push the date still later: Dominic Goodall, for instance, appears to suggest, on the grounds of religious notions that appear in the work with Sanskrit labels for which a certain historical development can be traced in other datable works, that the Tirumantiram cannot be placed before the 11th- or 12th-century CED.[3] Yet another view, alluded to for instance by Vaiyapuripillai (ibid.), is that the text may contain an ancient core, but with "a good number of interpolated stanzas" of later date. Whatever the case, allusions to works and ideas in the Tirumantiram cannot, at least for the moment, be used as useful indicators of their chronology.
உங்களின் விளக்கம் சம்பந்தருக்கும் முன் வாழ்ந்தவர் என்று காட்டுகிறீர்கள். இது குறித்து (காலம் குறித்து) உங்கள் கருத்துகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். - ..... தேமொழி
இன்றைய திருமந்திரம் சுயமானது அல்ல. அதில் பல்வேறு இடைச் செருகல் செய்யப் பட்டுள்ளதால் அது தமிழாகமம் என்ற நற்பெயரை இழந்து விட்டது. சிவாகமம் அதற்கு முன்பே வடமொழியில் இருந்ததை தமிழில் அருளினார் என்றால் அதில் சமஸ்கிருத சொல் இருப்பதில் வியப்பெபென்ன?தங்களுடைய கண்டுப்பிடிப்பை எவ்வொறு சைவ அறிஞரும் ஏற்றுக் கொண்டாரில்லை காரணம் தாங்கள் கூறும் மானுட நந்தியும் திருமூலருடன் மற்ற எழுவருக்கு உபதேசித்த நந்தியும் ஒருவரல்ல. ஏதாவது ஒரு கற்பனையைக் கொண்டு வாதிடுவதில் தாங்கள் சிறந்தவரே. தங்கள் கூற்றை உண்மை என்று சொன்னால் திருஞாசம்பந்தரைப் பற்றிய நம்பியாண்டாரின் கூற்று பொய்யாகி விடும். சைவர் உங்களை நம்புவதா நம்பியாண்டாரை நம்புவதா? நாங்கள் தெளிவாக இருக்கோம். தங்களுக்கு தெளிவில்லையானால் மற்றவரையும் குழப்ப வேண்டாம். நன்றி.
முதலில் தாங்கள் சைவ நெறியில் நிற்கவில்லை என்பது தங்களின் பிற கருத்துப் பதிப்பின் வாயிலாக அறிய முடிகின்றது. சிவநெறியில் நிற்காதவர் மனதில் சிவனும் நிற்கமாட்டார், நாயன்மார்களின் செயலையும் அறியமாட்டார்.திருமூலர் 'சுந்தரன்' என்ற பெயரில் இயம மலைப் பகுதியிலிருந்து காசி வழியாக தெற்கே வந்தவர் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த கதைதான்.இதில் 'நாதர்' என்பதை வடக்கே வாழ்ந்த ஒரு மரபினாராக கொள்வது தங்களுக்குப் பொருந்தும். 'நாதன்' என்ற வடச்சொல் 'தலைவன்' என்பதைக் குறிக்கும். அதனை ஒருமையில் சொல்லாது சிவப்பெரியோருக்கு 'நாதர்' என்ற பண்மை அடைமொழியைக் கொண்டு சொல்வது தமிழர் பண்பாடு என்பதை புரிந்து கொண்டால் தங்களின் கற்பனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.தங்கள் கூற்றின்படி சித்தாந்த பண்டிதர் ஐயா திரு. ப. இராம 'நாதர்' அவர்களும் அடியேன் கமல 'நாதர்' அவர்களும் 'நாதர்' மரபில் வந்தர்களா? எவ்வகை அறியாமை இது?நாயன்மார்களின் செயலை நம்மைப் போன்ற அர்ப்ப பதர்களின் செயலுக்கு ஒப்பிடுவது சைவர்களுக்குத் துன்பத்தை அளிக்கும்.ஓரு சித்தராக இருந்து சிவஞானம் பெற்றவர் திருமூல நாயனார். அவர்தம் உடலை பல்லாயிரமாண்டு காத்து வர வல்லமையும் அதற்கான செயல்முறையும் அறிந்தவர் என்பதை உணர்த்துவர்க்காக திருமந்திரத்தில் உள்ள பல பாடல்களை ஆதாரமாக எடுத்துக் காட்டி நிறுவுவார் சித்தாந்த பண்டிதர் திரு. ப. இராமநாதன் ஐயா அவர்கள். அதனைக் கற்றறிந்து உண்மையை உணர்வது ஒவ்வொரு சைவரின் கடமையுமாகும். அவர் மூவாயிரம் ஆண்டுகளாக நற்போதத்திலிருந்து வருடம் ஒரு பாடல் பாடினார் என்று சேக்கிழார் பெருமான் சொல்வதை ஏற்காத சைவர் ஒருவர் இருப்பாரேயானால் அவர் அனைத்து நாயன்மார்களின் வரலாற்றையும் மறுப்பவர் ஆகின்றார். அதே வேளையில் சேக்கிழார் பெருமானையும் "பொய்யர்" என்று முத்திரைக் குத்துவதாகும். இது சைவத் துரோகமாகும். சைவர் இத்தகைய செயலைச் செய்யார். சைவர் நூல்கள் அவர்தம் புனித நூல்கள் ஆகும். திருத்தொண்டர் புராணமும் அது போலவே.தாங்கள் சைவ நெறியில் நிற்காதவர் என்பதால் தாங்கள் சைவ நூல்களின் கூற்றை ஏற்காமல் போவதில் ஆச்சரியமேதுமில்லை. அதுபோல தமிழருக்கும் வர்ணசிரமத்தை ஏற்க வேண்டுமென்ற வேண்டுதலை ஏதும் இல்லை. அப்படி இருந்தும் வர்ணசிரமத்திர்க்கு பல்வேறு புது விளக்கங்களைக் கொடுத்து மீண்டும் அதனை தமிழர் தலையில் வைக்க தாங்கள் செய்யும் முயற்சியை ஏற்க எம்மைப் போன்றோருக்கு தலையெழுத்து ஏதும் இல்லை. அக்காலம் இறந்த காலமாகி விட்டது.இக்கால மானுடர் அவர்தம் உடலை 80 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாத்து வாழ வழி தெரியாமல் போனால் சித்தரையும் அவ்விடத்தில் வைத்துப் பார்க்கும் அறியாமையைக் காண்கையில் ஆச்சரியமேதுமில்லை.
சிவசிவ
நிலத்தடி நீர் சுரக்கும் கிணறு தூய்மையான நீரைத் தேக்கி அதனை நாடி இன்புற வேண்டுவோருக்குத் தொடர்ந்து கொடுத்தருளும். அது அள்ள அள்ள குறையாத அமுத சுரபி. இத்தகைய நீர் அயற்பொருள் சேர்க்கையின்மையால் தொடர்ந்து பண்ணெடுங்காலமும் துய்மையான நீரைக் கொடுத்துத் தாகமெடுத்தோருக்கு வஞ்சனையில்லாமல் வாஞ்சையுடன் அருளும் தன்மையுடையது. அத்தகையதே தென்னாடுடைய சித்தாந்த சைவமும்.
வடக்கே தோன்றிய பல்வேறு சைவ மார்க்கங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போனபின்பும், வேத நெறியின் பல நூற்றாண்டு தாக்கத்திலும் சாயாத ஆலமரமாக விழுது விட்டு இன்றும் நிலையாக நிற்பதற்கு காரணம் அதன் தெளிவான சித்தாந்த நெறியே. இல்லையேல், புயல்போல் வந்த அயலார் நெறி என்றோ இந்த ஆலமரத்தைச் சாய்த்து விட்டிருக்கும். இத்தகைய அறிவார்ந்த சித்தாந்த சைவ நெறியைப் பெற்று வளர்த்த மரபில் வந்தவர் தமிழ் நாட்டுத் தமிழர்.
இப்படிப்பட்ட அமிர்தமான இறைநெறியை வளர்த்தவர்தானே திருமூல நாயனார். ஐம்புலங்கள் அடங்கி தற்போதம் நீங்கி நற்போதம் பெற்று திருவாவடுத்துறையில் நெடுநாளாக நித்திய தியானத்திலிருந்து சிவத்துடன் கலந்து இன்புற்று தாம் பெற்ற வியாபக அறிவால் ஆகமப் பொருளை தமிழாகமாக அருளியவருக்கு மொழிபேதம் ஏற்பட வாய்ப்பேது? சாதாரன மனிதர் நிலையில் நின்று கொண்டு ஒரு நாயனாரை தம் ஊனக்கண் கொண்டு எடைபோட தகுதிப் படைத்தோர் என்று கூறி அதற்கு தெற்கே காணாத வரலாற்றை பக்கபலமாகக் கொள்வோருக்குத் தென்னாடுடைய சைவ அருளியலில் என்ன வேலை?
திருமூல நாயனார் ‘சுந்தரன்’ என்ற தொன்மையான பெயரைக் கொண்டவர் என்பதை விளக்கும் பாடலும் அதற்கு குறிப்புரை வளங்கிய தருமை ஆதின முதுமுனைவர் சி. அருனை வடிவேல் அவர்களின் குறிப்புரையையும் கீழ்காணலாம்.
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. (தி. 10:1:பாயிரம் 38)
குறிப்புரை:
"இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே."
திருமூலர் “நாதன்” எனப் பேர் பெற்றது
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே (தி. 10:1: பாயிரம் 7)
பொழிப்புரை: முதுமுனைவர் சி. அருனை வடிவேல்.
"நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர்பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்."
இதுவே திருமூல நாயனார் நாதன் என்ற பெயர் பெற்றதற்கான காரணம். இது திருமந்திரம் கொடுக்கும் விளக்கம். இதுவன்றி வடக்கே இருந்த நிலையை தெற்கே கொண்டு வந்து அவர் குழம்பியதும் அல்லாமால் நம்மையும் குழப்புவது தேவையற்றது. விளக்கம் எதுவும் கொடுக்க வேண்டுமானால் அது தென்னாடுடைய சித்தாந்த சைவ நூல்களின் ஆதார அடிப்படையில் விளக்கினால் அதனைக் கேட்டு இன்புற தயார். சிவசிவ.
நிலத்தடி நீர் சுரக்கும் கிணறு தூய்மையான நீரைத் தேக்கி அதனை நாடி இன்புற வேண்டுவோருக்குத் தொடர்ந்து கொடுத்தருளும். அது அள்ள அள்ள குறையாத அமுத சுரபி. இத்தகைய நீர் அயற்பொருள் சேர்க்கையின்மையால் தொடர்ந்து பண்ணெடுங்காலமும் துய்மையான நீரைக் கொடுத்துத் தாகமெடுத்தோருக்கு வஞ்சனையில்லாமல் வாஞ்சையுடன் அருளும் தன்மையுடையது. அத்தகையதே தென்னாடுடைய சித்தாந்த சைவமும்.
வடக்கே தோன்றிய பல்வேறு சைவ மார்க்கங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போனபின்பும், வேத நெறியின் பல நூற்றாண்டு தாக்கத்திலும் சாயாத ஆலமரமாக விழுது விட்டு இன்றும் நிலையாக நிற்பதற்கு காரணம் அதன் தெளிவான சித்தாந்த நெறியே. இல்லையேல், புயல்போல் வந்த அயலார் நெறி என்றோ இந்த ஆலமரத்தைச் சாய்த்து விட்டிருக்கும். இத்தகைய அறிவார்ந்த சித்தாந்த சைவ நெறியைப் பெற்று வளர்த்த மரபில் வந்தவர் தமிழ் நாட்டுத் தமிழர்.
திருமூல நாயனார் ‘சுந்தரன்’ என்ற தொன்மையான பெயரைக் கொண்டவர் என்பதை விளக்கும் பாடலும் அதற்கு குறிப்புரை வளங்கிய தருமை ஆதின முதுமுனைவர் சி. அருனை வடிவேல் அவர்களின் குறிப்புரையையும் கீழ்காணலாம்.
திருமூலர் “நாதன்” எனப் பேர் பெற்றது
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே (தி. 10:1: பாயிரம் 7)
பொழிப்புரை: முதுமுனைவர் சி. அருனை வடிவேல்.
"நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர்பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்."
இதுவே திருமூல நாயனார் நாதன் என்ற பெயர் பெற்றதற்கான காரணம். இது திருமந்திரம் கொடுக்கும் விளக்கம். இதுவன்றி வடக்கே இருந்த நிலையை தெற்கே கொண்டு வந்து அவர் குழம்பியதும் அல்லாமால் நம்மையும் குழப்புவது தேவையற்றது. விளக்கம் எதுவும் கொடுக்க வேண்டுமானால் அது தென்னாடுடைய சித்தாந்த சைவ நூல்களின் ஆதார அடிப்படையில் விளக்கினால் அதனைக் கேட்டு இன்புற தயார். சிவசிவ.
சிவ சிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
நல்லுயர் நான்மறை யாது என்பதற்கு,
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
...
.... (தி. 10:1: ஆகமச் சிறப்பு)
என்று திருமூலர் தான் பெற்ற சுத்த சைவத்திற்குரிய ஆகமங்களில் நல்லுயர் நான்கினைக் கூறிப் போந்தார். திருஞானசம்பந்தர் ‘நான்மறை’ என்று தமது பாடல்களில் அச் சிவாகமங்களைக் குறித்துப் பாடினார் என்று இதற்கு முன் விளக்கினோம். இவ்விடத்து தான் உற்றது வீர சைவம் என்று கூறவும் மறக்கவில்லை திருமூல நாயனார். இதனால் சிவாகமங்களில் சில வீர சைவத்திற்குரிய கோட்பாடுகளையும் சாதனங்களையும் விளக்கியுள்ளன என்று கூறினால் இதனை அறியாத பலர் வியக்கக் கூடும். ஆறங்கத்தை விளக்கும்பொழுது இதனை மேலும் விளக்குவோம்.
அப்படியானால் அத்திருமந்திர தந்திரத்தின் மூன்றாவது அடியில் சொல்லப்பட்ட ஆகமங்களின் நிலை என்ன?
“மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்”
இதற்கு விளக்கம் கொடுத்த முதுமுனைவர் சி. அருனை வடிவேல் அவர்கள்:
“இத்திருமந்திரத்தின் மூன்றாம் அடி, `நாயனார் திருமொழியன்று` என்பது தெளிவாய்த் தெரிகின்றது. எவ்வாறெனில், `யாமளமாகும் காலோத்தரம்` என்பது பெரும்பான்மையும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாய் உள்ளது. அவ்வாறு கொண்டால், ஒன்பது கூறவந்தவர் ஒன்றனை மறந்தார் ஆவர். `யாமளம், ஆகும் காலோத்தரம்` என இரண்டாகக் கொள்ளினும், யாமளம் சைவாகம மன்று; வாம தந்திரம். அது சைவத்திற்குப் புறம்பானது. `காலோத்தரம்` என்ற பெயரில் பல உள. ஒன்றேனும் மூலாகமம் அன்று. அதனால், வாம மதத்தினர் ஒருவர் தமது தந்திரத்தையும் திவ்வியாகமங்களில் ஒன்றாக்கிக்கொள்ள இத்திருமந்திரத்தைத் திரித்துவிட்டார் போலும்! அவ்விடத்தில் நாயனார் கூறிய இரு ஆகமங்கள் இவை என்பது அறியப்படாது போயினமை வருத்தத்திற்குரியது. “
வருத்தம் ஒருபக்கம் கிடக்க, இத்தகைய இடைச்செருகல் செய்யப் பட்ட காலம் யாது? திருஞானசம்பந்தர் காலத்திற்கு முன்பா அல்லது அதற்கு பின்பா? இதுவரை தமிழ் நாட்டுச் சைவ சமய அறிஞர் யாரும் இதனை ஆராய்ந்தாரில்லை. திருஞானசம்பந்தர் தமது தந்தைக்கு வரைந்த சித்திரக்கவியான “திருஎழுகூற்றிருக்கை” பதிகத்தில் இவ்விடைச்செருகல் திருஞானசம்பந்தர் காலத்திற்கு முன்பே ஏற்பட்டது என்று கருதுவதற்கு ஒருசில தடயங்களை விட்டுச் சென்றுள்ளார். அது இவ்விடத்தில் விவரிக்க ‘நான்மறை ஆறங்க” ஆய்வு திசை திரும்பி விடும் என்பதால் விலக்கி மேல் செல்வோம்.
இந்த நான்மறையைத் தவிர திருஞானசம்பந்தர் இதர ஆகமங்களைப் போற்றிப் பாடவில்லையா? இதற்கு முந்தைய பதிவுகளில் ‘இரௌரவ’ ஆகமத்தை ‘அருமறை’ என்று குறித்துப் பாடினார் என்பதை ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் காட்டி விளக்கினோமே! மேலும் ஓர் எடுத்துக்காட்டினை இப்பதிவில் காண்போம்.
“அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன் (தி. 1:109:2)
“அங்கமொடு அருமறை அருள் புரிந்தான்” என்பதற்கு வழக்கம்போல் தருமை ஆதின தேசிகர் இருவரும் “ஆறங்கங்களோடு அரிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும்” என்றே பொருள் கொண்டார்.
வாகிச முனிவரின் ஞானாமிர்தத்தில் ‘அருமறை’ என்பதற்கு அரிய சிவாகமங்களைக் குறிக்குமென்பதை இத்தேசிகர் அறிந்தாரில்லை. அது போலவே திருஞானசம்பந்தர் ‘இரௌரவ” ஆகமத்தை “அருமறை” என்று பாடினர் என்பதையும் இவர் அறியார் போலும்!
இரௌரவ ஆகம ஞானபாதத்தின் தாரனை விதிப் படலத்தில் (‘7. Directions for the yoga-practice of Dharana’) ஐந்தாவது வடமொழிச் சுலோகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை இங்கு பதிவிடுகிறோம்:
5. Yoga is said to be consisting six steps (six angas emphasis is mine) – pratyhara, dhyana, pranayama, dharana, tarka and Samadhi. Of these steps, dharana is now explained.
வழக்கமாக அட்டமா சித்தியடைய எட்டுப் படிமுறைகளை விளக்கிச் சொல்லுமிடத்தில் இரௌரவ ஆகமத்தில் யோக பாதம் ஆறு அங்கங்கள் மட்டுமே கொண்டு விளக்குகின்றது என்று மேலே குறிப்பிட்ட இரௌரவாகம ஞானபாத சுலோகம் தெளிவுப்படுத்துகின்றது. இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்த, ‘French Indological Institute’ கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் என்.ஆர். பாட் அவர்களின் மதங்க பரமேச்சுவர ஆகமத்திற்கான ஆங்கில முன்னுரைச் சுருக்கத்தில் இரௌரவ ஆகமத்தின் யோக பாதத்தைக் கீழ்காணுமாறு விளக்கிக் கூறுகின்றார்:
“The Matanga like the Raurava list six anga-s only for the Yoga (prathyahara, dhyna, pranayama, dharana, tarka, Samadhi); after a quick survey of the position in the other agama-s and specially in the Mrgendra, we explain how one can understand the order of the anga-s according to the Matanga,…..”
இரௌரவ ஆகமத்துப் போலவே, பரமேச்சுவர ஆகமத்தின் உப ஆகமாகிய மதங்க பரமேச்சுவரத்திலும் யோக பாதம் ஆறு அங்கங்களாக வகுத்துக் கூறப்படும். அப்படியாகில் ‘ஆறங்கம்’ என்று திருஞானசம்பந்தர் பாடியதில் அது ஒரு சில சிவாகமத்தின் பாதங்களை ஆறு அங்கங்களாக வகுத்துக் கூறியதைக் குறிக்க வல்லதாயும் உள்ளது என்பதை இதன்வழி அறிகிறோம்.
அதனால், “அங்கமொடு அருமறை அருள் புரிந்தான்” (தி. 1:109:2) என்பது இரௌரவ ஆகமத்தோடு கூடிய ஆறங்க யோக பாதத்தைக் குறிக்குமென்பதில் ஐய்யப்பாடு ஏதுமில்லை. இது அகச்சான்று மற்றும் புறச்சான்று கொண்டு விளக்கப் பட்டதாகும். ஆகையால், நான்மறை மட்டுமின்றி ஏனைய அரிய சிவாகமங்களையும் தமது தேவாரங்களின் வழி அடையாளம் காட்டத் தவறவில்லை திருஞானசம்பந்தப் பெருமான். இதன்வழி, தருமை ஆதின தேசிகர் அவ்வரிக்கு ‘ஆறங்கங்களோடு அரிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும்’ என்று பொருள் கொண்டது தவறாகும் என்பதை இங்கு நிறுவுகிறோம்.
“வேதமோடு ஆறங்கம்” என்று திருமுறைகளில் பாடப்பெற்றிருக்குமிடத்து அது ‘வேத அங்க நூல்களை மட்டுமே குறிக்குமென்று கொள்வதே சரியாகும். ஆனால் ‘நான்மறை ஆறங்கம்” என்று திருஞானசம்பந்தர் பாடியிருக்குமிடத்து அது சிவாகமத்தைக் குறித்தது என்பதை மேலும் ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை அடுத்தப் பதிவில் தொடர்ந்து ஆராய்வோம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
--
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
திருஞானசம்பந்தர் ஏன் வீரசைவத்தைத் தனித்து விடாமல் அதனைச் சுத்த சைவ ஆகமங்களுடன் சேர்த்துக் கூற வேண்டும் என்பதை ‘ஆறங்கம்’ விளக்கம் முடிந்தவுடன் வைத்துக் கொள்வோம். இனி ‘ஆறங்க’ விளக்கத்தைத் தொடர்வோம்.
*சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்*
*சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்*
*சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்*
*சைவம் சிவானந்தம் சாயுச் சியமே*
(திருமந்திரம்: 1486 - கழகப் பதிப்பு)
மேற்கூறிய மந்திரத்தின் பொழிப்புரை முதுமுனைவர் சி. அருனை வடிவேல் குறித்தவாறு:
“’சைவம்` என்னும் சொல்லின் பொருள் `சிவனுடன் தொடர்புற்று நிற்றல்` என்பது, ஆகவே, சீவன்தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து அவனைச் சார்ந்து நிற்றலே நிறை வான சிவநெறியாம். சிவனைச் சார்ந்து நின்றபின்னும் அவனை யன்றிப் பிறிதொன்றையும் சாராது அற விடுத்தலும் அந்நெறி நிறை வுடையதாதற்கு இன்றியமையாதது. அத்தகைய நிறைவான சிவ நெறி யின் பயன் சிவனது பேரின்பமே. அவ்வின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சமாம்.”
திருமந்திர ஐந்தாவது தந்திரத்தில் ‘சாயுச்சியம்’ என்னும் தலைப்பின் கீழ் இரண்டாவது மந்திரப் பொருளைக் காண்போம்:
சாயுச் சியஞ்சாக்கி ராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துள் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே. (திருமந்திரம்: 1487 – கழகப் பதிப்பு)
இம்மந்திரத்திற்கு முதுமுனைவர் சி. அருனை வடிவேல் எழுதிய பொழிப்புரை:-
“சாயுச்சம், சீவன் முத்தி நிலையில் சாக்கிராதீதமாய் அமைதியிற்படுத்தி, சிவம் அன்றிப் பிறிதொன்றும் தோன்றாமல் சிவம் ஒன்றையே தோற்றுவித்து, அறிவின்கண் சிவனது குணமான எல்லையில் இன்ப வெள்ளத்தைத் தந்து நிற்கும்.”
மேற்கூறிய இரு மந்திரமும் ஒரு பொருளை விளக்கும் தொடர் கருத்தாகும்.
“சைவம்” என்பதன் பொருள் சீவான்மா சிவத்துடன் சம்பந்தம் ஆகுதல் என்பதாகும். சீவான்மாவின் இறுதி இலக்காக சிவத்துடன் கலந்து வியாபக அறிவினைப் பெற்று முத்திப் பேரின்பம் பெறுவதை ஆறு அங்கமாக விளக்கினார் திருமூலர். இதுவே சாயுச்சிய முத்திக்கு ஒரு சிவபக்தன் பக்தி நெறியில் பின்பற்ற வேண்டிய வழியாகும். அவ்வழிமுறையை திருமூலர் வகுத்துக் கூறியதை இங்கே காண்போம். சிவபக்தனானவன்,
1. சைவ ஒழுக்கங்களைப் பேணி பக்தன்
சிவனை தம் இறைவனாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் – சிவனுடன் சம்பந்தமாகுதல்;
2. பக்குவப் பட்ட பக்தன்
தன்னையறிந்து சிவத்தைச் சார்ந்து நிற்றல் – தன்னையறிந்தே சிவம் சாருதல்;
3. பக்தன் சிவனன்றிப் பிற தெய்வங்களைச்
சாராமல் நீங்குதல் என்பதும் அங்ஙனமே பாசத்தை விட்டு நீங்கலுமாம் – சிவமன்றிச் சாராமல்
நீங்குதல்;
4. இவ்வாறு முழுமைப்பெற்ற பக்தி
நெறியைப் பின்பற்றி இருத்தலாலே பக்தனுக்கு இறைவன் திருவருளால் அருளப்பெறுவது சிவானந்த
பேரின்ப நிலையாகும் – சிவானந்தம் சாயுச்சியமே.
இதுவே சாயுச்சிய முத்திக் வழி என்பதை மேற்கூறிய முதல் மந்திரத்தில் உணர்த்தினார் திருமூலர்.
தொடர்ந்து இரண்டாவது மந்திரத்தின் முதல் இரண்டு அடிகளில்,
5. சீவான்மா சுத்த நிலையை அடைவது – சாக்கிராதீதம் சாருதல்;
6. சீவான்மா, திரிபுடை ஞானமற்ற
நிலையில் சிவத்துடன் கலந்து செயலற்று இருத்தலாகும் – உப சாந்தத்துள் தங்குதல்.
இறுதியான இரண்டு அடிகளில் சாயுச்சிய முத்தியின் பயனைக் கூறினார் திருமூலர். அவ்விரு மந்திரங்களுக்கானப் பொருளை செவ்வனே உணர்த்திய முதுமுனைவர் சி. அருனை வடிவேல், இவ்வாறு எந்த சிவாகமத்தில் உணர்த்தப் பட்டது என்ற செய்தியை சொல்லாது போனதால் இம்மந்திரங்களுக்கும் சிவாகமத்திற்கும் இருக்கும் தொடர்பை நாம் அறியாமல் போனோம். திருமந்திரம் தமிழாகமம்தானே? அப்படியால் இக்கொள்கையை உணர்த்திய ஆகமம் எதுவென்று கூறியிருந்தால் நமக்கேன் இன்றும் ‘நான்மறை ஆறங்கம்’ எதுவென்ற அறியாமை இருக்கப் போகின்றது. இது அவர் குற்றமல்ல. அவர் காலத்தில் சிவாகமங்கள் பிற மொழிகளில் மொழிப்பெயர்த்து அச்சில் வெளியாகியது குறைவே. அவர் வடமொழி அறிந்திருந்தாலும் அவர் தொண்டூழியம் செய்த ஆதின மடத்தாருக்குச் சிவாகமம் தேவையற்றதாகப் போய் விட்டதால் அவ்வழியிலேயே இவரும் சென்றார் என்று கூறினால் அது மிகையாகாது.
திருமூலர் இவ்விரு மந்திரங்களால் உணர்த்தியப் பொருள் வீரசைவத்தை மிகுதியாக விளக்கிக் கூறும் பரமேசுவர ஆகமத்தின்கண் கூறப்பட்ட கொள்கையாகும். அப்படினால் இது வீரசைவருக்கு உடையது என்று கருதி சுத்த சைவர் விலக்கி விடலாமா? அவ்வாறு பொருள் கொள்வது பொருந்தாது காரணம் நால்வர் பெருமக்களும் இவ்வாறே பக்தி நெறியில் நின்று இறைவன் திருவருளால் முத்திப் பேரின்பம் பெற்றார். மேலும், ஆகமங்கள் வகுத்தப் பொது கொள்கைகள் இரு நெறியாராலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தத்தம் நெறிக்கு மட்டுமே உரிய சிறப்பு இயல்புகளை இரு தரப்பினரும் பிரித்தே பின்பற்றியுள்ளனர். மேற்கூறிய இரு மந்திரத்திர்க்கும் பரமேசுவர ஆகமத்திற்கும் உள்ள தொடர்பை அடுத்தப் பதிவில் மேலும் விரிவாகக் காண்போம். சிவசிவ.
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
சுத்த சைவத்தின் முத்திக் கோட்பாடானது, பிரகிருதி மாயையில் சகலர் நிலையில் அறியாமையில் அழுந்தியிருக்கும் உயிரானது பக்குவப்பட்டு சிவனின் திருவருளால் மாயை கன்மம் என்னும் இரு மலங்கள் நீங்கப் பெற்று ஆணவ மலமும் சற்றே ஒடுங்குதாலால் பிரளயாகலர் ஆன்மாவாக மேம்படும். பிரளயாகலர் ஆன்மாவை பந்தியிருக்கும் ஆணவமலம் இறைவனின் திருவருள் முன்னே ஒடுங்கி அம்மல வாசனை மட்டுமே நிற்க விஞ்ஞானகலர் ஆன்மாவாக மேம்பட்டுச் சுத்த மாயையை அடையும். தத்துவ சுத்திப் பெற்று அதன்பின் பரமுத்தியடைய சிவத்துடன் கலந்து பேரின்ப நிலை அடைவதாகும். இதுவே சாயுச்சிய முத்தி என்று முந்தைய பதிவில் கூறப்பட்டது.
அதேபோல், பரமேசுவர ஆகமமும் வீரசைவ மரபினருக்கு ஆன்மா முத்தியடையும் உபாயமாக ஆறு தலங்களையும் ஆறு அங்கங்களையும் கொண்டு விளக்குகின்றது. ஆறு தல படிமுறையில் அங்கம் எனப்படும் உயிரும் லிங்கம் எனப்படும் சிவனும் இணைகின்ற இடத்தை ‘தலம்’ என கொண்டது வீரசைவருக்கு உரிய முத்திநெறி. ஒவ்வொரு தலத்திலும் ‘அங்கம்’ எனப்படும் உயிரானது வெவ்வேறு நிலையில் மேம்பட்டு இறுதியாக ஐயிக்கியத் தலம் என்னுமிடத்தில் சிவத்துடன் கலக்கும். ஆறு தலங்களிலும் அங்கத்தின் (உயிரின்) நிலையை வீரசைவம் கீழ்காணுமாறு விளக்குகின்றது:-
(அ) பக்தன் (ஆ) மாகேசுவரன் (இ) பிரசாதி (ஈ) பிராணலிங்கி (உ) சரணன் (எ) ஐக்கியன்
மேற்கூறிய ஆறு தலங்களில் அங்கம் (உயிர்) அடையும் பக்குவ நிலையும் முத்தி நிலையும் திருமந்திர
ஐந்தாம் தந்திரத்தின் சாயுச்சிய முத்தி தலைப்பின் கீழ் (முந்தைய பதிப்பைக் காண்க) விளக்கிய
நிலையையடைய மேம்படும் படிமுறையைக் கொண்டுள்ளது.
இதனால் திருஞானசம்பந்தர் ‘நான்மறை ஆறங்கம்’ என்று பாடியதில் ‘ஆறங்கம்’ என்பது வீரசைவ நெறியில் சீவான்மா முத்தியடையும் படிநிலையைக் குறிக்கும். இதனை விரித்துக் கூறுவது பரமேசுவர ஆகமமாகும்.
இப்படி பொருள் கண்டால் திருஞானசம்பந்தர் சிவாகம சைவ நெறியில் நின்று, ‘நான்மறை’ இல் கூறப்படும் சுத்த சைவ முத்தி நெறியையும்; வீரசைவம் கூறும் ஆறங்க முத்தி நெறியையும் விளக்கவே அவ்வாறு பாடினார் என்பது புலனாகும். இவ்வாறு அல்லாமல்; தமிழ் நாட்டுச் சைவ மடங்கள் கூறும் ‘வேதத்தின் ஆறங்க’ நூற்கள் என்று பொருள்படுத்துவது தவறாகும்..
அவ்வாறு சைவ மடங்கள் பொருள் கொள்வது தவறாகும் என்று சொல்வதற்கு காரணம் வேதாங்க நூற்கள் ஆறிலும் முத்தியடையும் சாதனங்கள் ஏதும் விளக்கப் படவில்லை என்பதேயாம். அடியேன் உணர்த்தியவாறு திருஞானசம்பந்தர் பொருள் பொதிந்த ஆறங்கத்தைக் கூறினார் என்றால் இதுவே சிறப்புடைய விளக்கமாகும். அச்சொல்லுக்குச் சைவ மடங்கள் கொண்ட பொருள்விளங்கா விளக்கத்தால் தேவார திருமுறைக்குச் சிறப்பு ஏதும் ஏற்படப் போவதில்லை மாறாக அத்தகைய விளக்கமானது திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தை அவர்தம் கொள்கைக்குப் புறம்பாக வைதிகச் சைவ சார்புடையதாக்குவற்கு ஒப்பாகும். அவ்வாறு திரிப்போர் அவர்தம் சுயநலத்திற்காக சமயக் குரவரை நிந்தனை செய்கிறார் என்பது தெளிவாகும்.
அடுத்து பரமேசுவர உப ஆகமங்களாகிய பௌட்கர ஆகமத்தின் ஞான பாதமும், மதங்க பரமேசுவர ஆகமமும் எவ்வாறு அவ்வாகமங்களில் முத்திக் கோட்பாட்டை ஒவ்வொரு சாதனங்களிலும் (சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாதங்களில்) ஆறங்கங்களாக வகுத்துக் கூறியுள்ளன என்பதை அறிவோம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
“மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்”<span lang="EN-MY" style="font-size:9pt;font-family:latha,sans-s
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
சிவாகமங்கள் சுத்தசைவருக்கும் வீரசைவருக்கும் உரியன என்பதை விளக்குவதற்காக கடந்த பதிவில் பரமேசுவர ஆகமத்தை மேற்கோள் காட்டினோம். இன்னும் சில சிவாகமங்கள் வீரசைவ நெறிகளை விளக்கிக் கூறுவனவாகவும் உள்ளன.
மேற்கூறிய கருத்துக்கு வலுவூட்ட 1910-ம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடைப்பெற்ற ‘சைவ சித்தாந்த மாநாட்டில்’ வீரசைவ சமயத்தைப் பற்றி கட்டுரை ஒன்றை சமர்ப்பித்த திரு. பி.ஜே பாசவலிங்கப்பா அவர்களின் உரையில் ஒரு சிறு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்:
“.. One mistaken notion about the antiquity of Virasaivism is that some people argue that, because of the prefix Vira is applied to Saivism in the word Virasaivism, this Virasaivism should be a later religion developed from the original Saivism. This idea is false, because, as regards prefix, it is not only Virasaivism that has got any prefix to its name, but all the well-known four branches of Saivism have got prefixes in their names which help to explain the peculiarity of the respective religion. When the word Saivism merely is expressed, it does not apply to any one branch of Saivism, but it means all the branches of Saivism, so that when the word Saivism is expressed it does not mean that it does not include Virasaivism. The four branches of Saivisim according to Vathulagama (which Siva relates to Shanmukha) are Samanyasaiva, Misrasaiva, Suddhasaiva and Virasaiva. A brief account of the characteristic of these four branches are as follows: Samanyasaiva means an ordinary worshipper of sivalinga in Sthavara form, Misrasaiva means a worshipper of Sivalinga in Pita in conjunction with Vishnu, Uma, Ganapathi, Surya and others. Suddhasaiva means a worshipper of Sivalinga in Pita, but who does not show devotion to any other deity except Siva. Virasaivism means a worshipper of Sivalinga in the palm of the hand who wear Linga on the body enclosing it in a case made of wood or metal. From these facts, it is a serious mistake to call Virasaiva a later Saivism or a reformed Saivism as some try to put it without knowing the meaning of Vira which is given in Agamas. The word Vira does not mean reformed but it means exercising in the science of uniting the life principle with the supreme spirit which is termed Siva by which he attains Salvation.”
மேற்கூறிய பத்தியில் விளக்கப்பட்ட நால்வகை சைவ நெறிகள் திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரத்தில் (1) சுத்த சைவம் (2) அசுத்த சைவம் (3) மார்க சைவம் (4) கடுஞ்சுத்த சைவம் என்று குறித்திருப்பதைக் காண்க. இதில் ‘கடுஞ்சுத்த சைவம்’ என்பதை ‘மெய்கண்டார் செந்நெறி’ என்று கழகப் பதிப்பில் குறிப்பது ஏற்க முடியாத விளக்கமாகும் காரணம் திருமந்திரம் தோன்றிய காலத்தில் மெய்கண்ட சாத்திரங்கள் இல்லை. இதற்கு வாதுள ஆகமத்தில் காணப்படும் பொருள் கொள்ளுமின் ‘கடுஞ்சுத்த சைவம்’ என்பது வீரசைவத்தையே குறித்தது என்பதை அறியமுடியும்.
மேலும் அவ்வுரையின் வேற்றொரு பகுதியில் குறித்த கருத்தையும் இங்கு பதிவிட, சிவாகமத்தில் சொல்லப்படும் சுத்தசைவமும் வீரசைவமும் ஒரு மலை உச்சியில் கிளைந்த இரு நதிகள் என்பதை அறியமுடியும்.
“The Saiva Siddhantis of Tamil Country are Suddhasaivas according to the Agamic description referred to above and the Linga-wearing Saiva Siddhantis of the Karnataka country are Virasaivas according to the same description. The Saiva Siddhantis of the Tamil country and the Virasaivas of Karnataka are more closely related to each other historically and in strictness of the sole devotion to Siva than with the other two branches of Saivas who are Samanya Saivas and Misra Saivas. For the latter Saivas are not strict in their devotion to one deity (Siva); they also pay their obeisance to Vishnu and others along with Siva. In this way, Virasaivas and Suddhasaivas from one section of strict Saivas who worship only Siva and not other deities, and Samanyasaivas and Misrasaivas form another section of loose Saivas who worship Siva and other deities.”
இதன்வழி அறியப்படுவதாவது, சுத்தசைவமும் (சித்தியாரில் குறித்தபடியல்ல) வீரசைவமும் சிவாகம நெறியாளருக்கு இரு கண்கள் போன்றதாகும். நம்மில் பலருக்கு இவ்விரு சைவ மார்க்ககங்களுக்குமிடையே இருக்கும் சிவாகம உறவை அறியாது வீரசைவத்தை ஒதுக்கி வைத்து விட்டு ‘ஆறங்கம்” என்னவென்பதை அறிய முற்பட்டால் அது புரியாதபுதிராக இருக்குமென்பதால் இவ்விளக்கம் வேண்டியதாயிற்று.
இனி, பவுட்கர உபாகமத்தின் ஞான நெறியில் முத்திக்கான நெறி ஆறு அங்கமாக வகுத்துக் கூறியிருப்பதை பேரா. எஸ்.பி. சபாரத்னம் சிவாச்சாரியார் வடமொழி சுலோகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததை இங்கு பதிவிட்டு அறிவோம். முதல் படலமாகிய பதி படலத்தின் 5-8 வது சுலோகங்களின் பொருளில் ஆறங்க உண்மை கூறப்பட்டுள்ளது:
5. O Lord!, we have already been installed by your grace in the exalted state of preceptorship befitting us. Is it not true? The ultimate purpose of preceptorship, liberation and the complete manifestation of sivatva, would be brought out only by the true realization of njana section. Therefore, be kind enough to impart this njana section.
6. O, the sages, the foremost among the twice borns!, the section through which the nature of six realities (eternal categories) from Pati to Karaka is fully known is called Jnana-pada. For the Guru and the initiated disciples, this njana-pada serves as an effective means for the attainment of sivatva (oneness with Siva).
7. Being in inseparable relationship with Siva, there is Sakti who is of the nature of pure consciousness. That Sakthi is free from any defilement or obscuring factor. That Sakthi herself is called Njana. By virtue of the power of this Njana, the knowledge gained through the systematic study of the Agama becomes capable of granting more efficacious knowledge which ultimately results in the attainment of sivatva.
8. (i) Pathi (Lord), (ii) Kundalini (pure maya), (iii) maya (impure maya), (iv) pasu (the bound self), (v) pasa (bonds) (vi) karaka (effective means) (முத்திக்கான உபாயங்கள்) – these are six realities which are explained in this Agama.
இதன் வழி அறியப்படுவதாவது, பவுட்கர உபாகமத்தில் முத்திக்கான ஞான நெறி ஆறு அங்கமாக வகுத்துக் கூறப்பட்டுள்ளது என்பதாகும். அடுத்தப் பதிவில் மதங்க பரமேசுவர உபாகமத்தின் நாற்பாதங்களிலும் முத்திக்கான நெறியை ஆறு அங்கங்களாக வகுத்துக் கூறியுள்ளதை எடுத்துரைத்து விட்டு ‘நான்மறை ஆறங்கம்’ என்பதில் ‘ஆறங்கம்’ எதனைக் குறித்ததென்பற்கு ஒரு முடிவுரையை எழுதுவோம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
--
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
“திரும்பிப் பார்” என்றொரு தமிழ்ப் படம் 1953 - ல் வெளியீடானது. அப்படத்தில் “கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம், அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்” என்று ஒரு பாட்டு தொடங்கும். இப்படி தென்னாடுடைய சைவ சமயத்திலும் கலப்படம் செய்து வாழ சில நூற்றாண்டுகளாக பழகிவிட்டத் தமிழருக்கு அதை எடுத்துச் சொன்னால்தான் புரியும்.
தமிழரிடையே தொன்றுதொட்டு இருந்து வந்த நம்பிக்கை அடிப்படையிலான மரபு வழிபாட்டில் மக்கள் அழுந்தியிருந்த காலம் போய் அறியாமையில் அழுந்தியிருந்த மக்கள் பக்குவப் பட வேண்டி சிவபெருமானால் அருளப்பெற்ற அறிவார்ந்த சமய நெறியாக வந்தது சித்தாந்த சைவம் என்னும் இறை நெறி. தென் நாட்டுக்குச் சொந்தமான இந்த சித்தாந்த சைவ நெறியை வளர்த்தப் பெருமை சுத்தசைவ சிவ மறையோருக்கும் வீரசைவ மரபினருக்கும் உடையது என்பதை விளக்கவே கடந்த இரண்டு பதிப்புகளில் சுத்தசைவத்திற்கும் வீரசைவத்திற்கும் ஆகமங் காலந்தொட்டே இருந்த தொடர்பைப் பற்றி விளக்கி வந்தோம். இவ்விரு சைவ மார்க்கங்களுமே பரம்பொருள் சிவனே என்றுணர்ந்து ஓர் இறை கோட்பாட்டில் நின்றன.
நால்வர் காலத்திற்கு பின் சுத்தசைவ மறையோரிடையே வைதிகச் சைவ கலப்பு படிப்படையாக மேம்பட்டு 14-ம் நூற்றாண்டு வாக்கில் தமிழரிடையே தோன்றிய மெய்கண்ட சாத்திர வழிநூலாகிய சிவஞான சித்தியாரிலும், சார்பு நூலாகிய சிவப்பிரகாசத்தின் வழியாகவும் வைதிகச்சைவ கோட்பாடுகள் மெய்கண்ட சாத்திர நூல்களில் கலப்புற்றன. இதன் காரணமாகவே, அதற்கு பின்னர் வைதிகச் சைவம் தமிழரிடையே வளர்ச்சி கண்டு சிவாகம சித்தாந்த சைவம் பல தெய்வ வழிபாட்டுக்கு உருமாற்றம் கண்டது. சிவாகமத்தின் கிரியா பாதத்தில், சிவகுடும்பம் என்ற புராணங்களின் அடிப்படையில் பரிவார மூர்த்தங்களாக பிற தெய்வங்களை நிறுவ (பிரதிஷ்ட்டை செய்ய) வழிவகை செய்யப்பட்டது. இன்றோ, களைகளாக கிளர்ந்த பரிவார மூர்த்தங்கள் பயிருக்கு மேல் வளர்ந்து களையே பயிராக பொய்த்தோன்றமளிக்கச் செய்து விட்டது. தமிழரில் பெரும்பாலோர் சிவாகம சித்தாந்த சிவ நெறியை மறந்தார். அதனால் கலி வாட்டுகின்றது. சிவசிவ.
கலப்பட சைவத்தில் நின்று கொண்டு கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக சைவ அறிஞர் பெருமக்கள் தேவார திருமுறைக்குப் பொருள் விளக்கம் கொடுக்க முற்பட்டால் ‘நான்மறை ஆறங்கம்’ என்பதற்கு எப்படி விளக்கம் காண முடியும்? திருமேனி வழிப்பாட்டுக்கு வழிகாட்டிய முதல்வன் நூலாகிய சிவாகமத்தின் அடிப்படையில் விளக்கம் காண முற்படாமல், திருமேனி வழிப்பாட்டை இன்றுவரை ஏற்க மறுக்கும் வேத நெறியாளரின் முதல் நூல் வழியே விளக்கம் கொடுக்க முற்பட்டனர் தமிழ் நாட்டுச் சைவ சமய அறிஞர்! கண்ணுக்கெதிரே யானையைப் போல் தெரியும் இத்தகைய முரண்பாட்டை தமிழ் நாட்டுச் சைவ அறிஞர் பெருமக்களில் யாரேனும் இதுநாள் வரை கேள்விக் கேட்டுத் திருத்தினார் இல்லை!. தங்களைச் சைவ சமய அறிஞர் என்று கூறிக் கொள்வோர், சிவனுக்குப் பயந்தாரில்லை! சிவனை உண்மைக்குப் பணிந்தாரில்லை!. பாவனையாக சிவனைப் பணிவோரே நம்மிடையே நிரம்பியுள்ளனர். அதனால்தான் வைதிகச் சைவருக்குப் பயந்து வேத நெறிக்கும் திருமேனி வழிபாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க துணிவில்லாமல் நிற்கின்றனர்! இதுதான தென்னாடுடைய சைவ அறிஞர் சிவத்தொண்டு? சித்தாந்த சைவத்தில் முனைவர் என்றும் முதுமுனைவர் என்றும் பட்டம்பெற்று தங்களுக்கு மற்றவரிடையே இருக்கும் பெருமையை தற்காத்துக் கொள்ள உண்மையை எடுத்து விளம்பாமல் போனால் ‘மிகுசைவத் துறை விளங்குமா? சிந்தியுங்கள்.
ஆறங்க பதிவின் முடிவுரையையே இன்று முன்னுரையாக எழுத வைத்து விட்டான் எம்பெருமான்.
இதற்கு மேல் மதங்க பரமேசுவர ஆகமத்தின் நாற்பாதங்களில் முத்திக்கான நெறிகள் ஆறங்கமாக அருளப்பெற்றதை எழுத ஆரம்பித்தால் இப்பதிவு நீண்டு விடும் என்பதால் அதனை அடுத்தப் பதிவில் பகிர்ந்து கொள்வோம். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
சிவ சிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
தமிழ் நாட்டில் வீரசைவ சித்தாந்த நெறியில் நின்று சைவ சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் கோவை பேரூர் ஆதின தோற்றுனர் தவத்திரு சாந்தலிங்க அடிகளாவார். அப்பேரூர் ஆதின மரபில் தற்சமய குருமகா சன்னிதனமாக பொறுப்பேற்றிருக்கும் தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகளார், ‘சிவஞானபோதத் திருநெறியுரை’ (மகாவித்துவான் சி. அருனை வடிவேலு அவர்கள் முயற்சியால் நிறைவு செய்யப்பட்ட உரை) என்னும் நூலுக்கு வரைந்த முன்னுரையை இவ்வாறு தொடக்கினார்,
“தமிழர்க்கு உயிர் உணர்வை ஊட்டும் சமயங்கள் பலவற்றுள்ளும், சிறந்து ஒப்புயர்வற்ற நிலையில், அனைவருக்கும் விடைகூறி ஆன்ம நிலையை விளக்குவது சைவ சமயம் ஆகும். இத்தகைய சமய உண்மைகள் மக்கள் அறிவுடையவர்களாக வாழத் தலைப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டதெனினும், இடையே பல அயலாதிக்க சூழ்ச்சிகளால் இவ்வுண்மைகளை உணவர்தற்கு தடைகள் ஏற்பட்டன. அத்தகைய தடைகளையும் தன் உண்மையாற்றலால் விலக்கித் தலை நிமிர்ந்து நிற்பது சைவ சமயம்” என்று கூறுவாரானார்.
தவத்திரு குருமகா சன்னிதானம் சொன்னது உண்மைதான்.
திருஞானசம்பந்தர் பாடிய ‘நான்மறை ஆறங்கம்’ என்பதில் ‘ஆறங்க’மானது வீரசைவ கொள்கைகளை விரித்துக் கூறும் பரமேசுவர ஆகமத்தின்கண் உணர்த்திய முத்திக்கான சாதனங்கள் ‘ஆறங்க’ பகுப்பைக் கொண்டவை. இந்த உண்மையை அவ் ஆதினமே உணராத வண்ணம் தடைபட்டதற்கு காரணம் அயலாதிக்க சூழ்ச்சிகள்தான். அத்தகைய அயலாதிக்க சூழ்ச்சிகளிலிருந்து இன்று நாம் விடுபடுகிறோம்.
இனி, மதங்க பரமேசுவர உபாகமத்தின்கண் அதன் நாற்பாதங்களிலும் முத்திக்கான நெறி ஆறு அங்கங்களாக வகுத்துக் கூறப்பட்ட உண்மையை அறிவோம். இவ்வுபாகமத்தின் நாற்பாதங்களும் ‘French Indological Institute’ கழகத்தினர் வித்தியா பாதத்தை ஒரு நூலாகவும், கிரியை, யோகம், சரியையாகிய மூன்று பாதங்களையும் தனியொரு நூலாக பிரெஞ்சு மொழியில் கடந்த நூற்றாண்டு இறுதியில் வெளியிட்டுள்ளனர். இம்மதங்க பரமேசுவர ஆகமத்தின் ஞான பாதத்தை ஆங்கில மொழிபெயர்ப்புச் செய்து கவாய் ஆதின தயவில் வெளியுட்டுள்ளார் பேரா. எஸ்.பி. சபாரத்னம் சிவாச்சாரியார். இந்நூல்களின் உதவியுடன் முத்திக்கான நெறியை ஒவ்வொரு பாதத்திலும் ஆறங்கமாக வகுத்துக் கூறியதை இப்பதிவில் விளக்கிக் கூறுவோம்.
முதலில், கிரியை, யோக, சரியை பாதங்கள் கூறும் ஆறங்கத்தையும் பேரா. என். ஆர் பாட் அவர்கள் கொடுத்த ஆங்கில விளக்கவுரை சுருக்கத்தையும் இங்கு பதிவிடுகிறோம்.
கிரியா பாத ஆறங்கம் – தீக்கை முறைகளால் முத்திப்பேறு அடைதல்
1) முத்திரை இலட்சணங்கள்;
2) மண்டலங்கள்;
3) மந்திர உபதேசம்;
4) தீக்கைச் சேத்திரங்கள்;
5) திரவியங்கள்;
6) தீக்கைப் பெற வேண்டிய சமியி, தீக்கைப் பெறுவதற்கு முன் பெற்றிருக்க வேண்டிய சைவ ஒழுக்கங்களும், பக்குவங்களும்.
ஆங்கில விளக்கம்:
Chapter 1: The accessories of the initiation (diksanga)
“After having shown why the initiation is the only way to obtain the liberation, the text presents the six accessories of the initiation beginning with the mudra-s of which five kinds are described (see fig.1 to 5). There are three types of mandala: Mahamandala (for the cult of Paramesvara together with his attendant deities, before the tattva and bhuvanadiksa), the navanabhamandala (cult of Paramesvara alone for the navatattvadiksa) and the mandala of Candesa, such mandala-s are to be drawn in a yagamandapa which is described (see fig. 6 to 8). The third accessory is the mantra and mainly vyomaviyapin in 81 words. The fourth is the “place” (ksetra) fit for the initiation; we are given list of auspicious places in India, together with the rule for the examination of the ground. After that come the dravya-s about which we are given particulars like quantities or methods of substitution. The last accessory is the devotee who wants to be initiated, he must have specific qualities, failing which if initiated he himself together with his guru would be considered as unfit.
யோக பாத ஆறங்கம்
1) பிரத்தியாகாரம்
2) தியானம்
3) பிராணாயாமம்
4) தாரணை
5) தர்க்கா
6) சமாதி
ஆங்கில விளக்கம்
Chapter 1: General characteristics of the Yoga
“The mala is of two kinds, the first one is subtle, it is the sahajamala; the second kind is gross which causes false knowledge, and to practice the Yoga one must be freed from it. We are given afterwards the list of the six accessories of the Yoga described in the next chapter (see too above).
Chapter 2: The six accessories of the Yoga (sad-anga)
“Pratyahara, dhyana, pranaayama, dharanah, tarka, Samadhi are explained in detail; the asana (see fig. 10 to 13) and the karana which do not belong to the main anga-s according to the Matanga are described together with the pranayama.
சரியா பாத ஆறங்கம்
1. யோகத்தைக் கடைப்பிடித்தல்
2. மந்திர உத்தாரணம்
3. ஆகம சாத்திரங்களைக் கேட்டல்/கற்றல், சிந்தித்தல்
4. இலிங்க வழிபாடு
5. குரு தொண்டு
6. அடியார் தொண்டு
ஆங்கில விளக்கம்:
Chapter 2: Practices
“Even the sadhaka must follow the saiva rules of the mundane practice which are listed in this chapter. The five main duties (sakti) of the saiva are the practice of the Yoga, the repetition of mantra-s, the study of the agama-s, the cult of the Linga and the service of the guru which is the most important. We are given too details on the evacuation of excrements and we are told how to help the devotees of Siva who are destitute or old.
மேற்கூறிய ஆங்கில விளக்கச் சுருக்கம் ‘French Indological Institute’ வெளியிட்ட சரியா, கிரியா, யோக பாத நூலிலிருந்து இங்கு மறுபதிப்புச் செய்யப்பட்டது. அதே நூலில் சரியா பாதத்தின் ஐந்தாவது அத்தியாயத்தின் சுருக்கம் கீழ்காணுமாறு குறிக்கப் பட்டுள்ளது.
Chapter 5: Three kind of practices
“This chapter deals with the karmin, the yogin, and th jnanin; the karmin must practice all the rituals, the yogin attains his goal by yogic practices and the jnanin must be attached to the pure knowledge. As for the karman is well known as of the three kinds in Dharmasastras but none of them is acceptable to the saivism. This is followed by Saiva views on the value of the vedic rituals. Paramesvara explains that as far as the saivadiksa is concerned the Sudra-s are on the same level with the three other castes: the rule being that the initiation must be given to the members of the four castes, the acarya even if he is a Brahmin, must initiate on Sudra fit for the initiation. In the end of the chapter we are given more details about the daily practices of the karmin, yogin and jnanin.
சரியா பாதத்தின் மேற்கூறிய ஐந்தாவது அத்தியாயம் உணர்த்துவதாவது, பரமேசுவராகம நெறியைப் பின்பற்றுவோர், மூவகை வேத தர்மங்களை பின்பற்றக் கூடாது என்பதாவது அவை இவ்வாகம நெறியோருக்கு ஏற்புடையதல்லவாம். மேலும், தகுதியுடைய ஒரு சூத்திரனுக்கு, ஆச்சாரியார் பிராமணராக இருந்தாலும், அவர் தீக்கை செய்விக்க கடவரே என்பதும் விதியாகும்.
இனி, மதங்க பரமேசுவர ஆகம ஞான பாதத்தை பேரா. எச்.பி. சபாரத்னம் சிவாச்சாரியார் மொழிபெயர்த்தவாறு இரண்டாவது அத்தியாயமானது ‘உத்தேச பிரகாரணம்’ (A Brief Summary of the Contents of this Agama), வடமொழி சுலோகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பதிவிடுகிறோம்.
1-3 To put an end to the occurrence of series of different states originated by the ladder-like karmic effects and in order to manifest the essential nature of the self within a perfect sadhakas, which nature is characterized by the power of all-knowing (sarnjanatva) and the power of all-doing (sarva kartrutva), this Agama is being instructed now. The transmission of this Agama is also for the sake of those persons who are in the pursuit of worldly enjoyments. In this Agama is contained the nectar of siva-njana. Being free from contradictions and inconsistencies, this is meant for the attainment of inexhaustible source of supreme Bliss and great fruits which are not to be attained through other means. This is incomparable and supreme. This Agama is embellished with the gems of six categories, strung together charmingly with the thread of elegant words. This is much brightened by the resplendent rays of tattvas, buvanas and others. This shines forth with the inspiring and ennobling characteristic of well-reasoned inference and other valid proofs. This garland of Agama is duly kept in continued instructions for the sake of attaining perfection and purification and for the sake of transcending the limitations of self-knowledge effected by the principle of intellect (buddhi tattva).
14-15. Among the six categories explained in the vidya-pada of this Agama, Pati is proclaimed to be first category. The exposition of this category include in itself the concepts about the three principles known as laya, bhoga and adhikara. The relation between the enjoyment and state of being the enjoyer, the principle known as maya-tattva which exists as the supreme source for the provision of enjoyment and the fitting bodies of the enjoying souls, the array and assemblage of bodies and worlds pertaining to suddha-vidya realm, its principal cause known as suddhavidya tattva, the nature of 41 bhuvanas existing in the maya-tattvas as the suddha-vidya tattva. Lord’s Kriya Sakhti, His Njanasakthi and group of 81 padas starting with ‘vyoma viyapi’ for which the abode is in the suddhavidya-tattva-all these are explained in the category known as Sakti. This is the second category enumerated in this Agama.
16-17 In this Agama the third category is known as ‘triparva padartha’ (the category in its threefold division). This category comprises bhuta, bhava and tattva originated from maya. O, the supreme sage!, the souls are, beyond doubt, in the stage of bondage. In its limited state, the soul is dependant, being veiled by anava mala; it is the enjoyer; it is associated with a fitting body. The category known as ‘pasu’ meaning bound self, is the fourth one in this Agama.
18-19 The effects of both the good and the evil deeds exist in the buddhi-tattva in the form of lingering impressions (vasanas or samskara). During the embodied state of the bound soul, they remain mutually helping for the sake of maturation. The accomplished and the means of accomplishing are governed by these. They are the real causes for happiness and misery. The karmic effects are generally known as bhoga. This bhoga is considered to be the fifth category in this Agama.
20-21. Those mantras such as Siva-Bhattaraka and so forth, who exist in the pure realm (suddha vidya), those mudras begining with Sakti and others and those conducts and disciplines to be followed and practiced after initiation in three modes nitya (daily), naimittika (occasional) and kamya (optional) serve as the means in all three sections – carya, kriya and yoga and serve as the primary way for the deliverance of the souls from the repeating cycles of birth and death. This upaya (means) (சாதனம்) is considered to be the sixth category in this Paramesvara Agama.
மதங்க பரமேசுவர ஆகமத்தின் ஞானபாதத்தில் சொல்லப்படும் ஆறு அங்கங்களாவன: (1) பதி (2) சத்தி (3) திரி பதார்த்தங்கள் (பூத, பவ, தத்துவம்) (4) பசு தத்துவம் (5) போக தத்துவம் (6) உபாயங்கள் (முத்திக்குச் சாதனம்).
திருஞானசம்பந்தரின் தேவாரத் திருமுறையில் பாடப்பெற்ற ‘நான்மறை ஆறங்கம்’ என்பதில் ‘ஆறங்கம்’ என்பது முத்திக்கான நெறிகளை வெவ்வேறு பாதங்களில் ஆறு அங்கங்களாக வகுத்துக் கூறப்பட்ட ஆகமங்களைக் குறித்தாகும். இதுவன்றி, வேத அங்க நூல்கள் என்னும் தமிழ் நாட்டுச் சைவ அறிஞர் கருத்து பொருந்தாது. சைவ அறிஞரின் அத்தகைய கருத்து தேவார திருமுறைக்கு முரண்பாடான விளக்கத்தை கொடுப்பதை அடியேன் இதற்கு முன் பதிவு செய்த கருத்துகளின் வழி அறியலாம்.
திருஞானசம்பந்தர் குறித்த நான்மறை ஆறங்கத்திற்கு இவ்வாறு விரிவான விளக்கம் கண்டோமானால் நமக்கு எதற்கு வைதிகச் சைவம்? சிந்தியுங்கள். தொடரும். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
“திரும்பிப் பார்” என்றொரு தமிழ்ப் படம் 1953 - ல் வெளியீடானது. அப்படத்தில் “கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம், அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்” என்று ஒரு பாட்டு தொடங்கும். இப்படி தென்னாடுடைய சைவ சமயத்திலும் கலப்படம் செய்து வாழ சில நூற்றாண்டுகளாக பழகிவிட்டத் தமிழருக்கு அதை எடுத்துச் சொன்னால்தான் புரியும்.
சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
திருஞானசம்பந்தர் ‘நான்மறை ஆறங்கம்’ என்று தேவாரத் திருமுறையில் பாடியது:-
(1) “நான்மறை’ என்பது நல் உயர் ஆகமங்களாகிய ‘காரணம், காமிகம், சிந்தியம் வாதுளத்தை குறித்தாக அகச்சான்றையும் புறச்சான்றையும் மேற்கோள் காட்டி விளக்கினோம்.
அப்படியானால் மற்ற
ஆகமங்களின் நிலைப்பாடு என்னவென்பதை யாமே கேள்விக் கேட்டு அதனில் இரௌரவ ஆகமத்தை
அருமறை என்று திருஞானசம்பந்தர் பாடியதை சில எடுத்துக் காட்டுகளுடன் நிறுவினோம்.
(2) “ஆறங்கம்” என்பது வீரசைவ
நெறிகளை மிகுந்து கூறும் பரமேசுவர ஆகமத்தையும் அதன் உப ஆகமங்களாகிய மதங்க
பரமேசுவரமும், பவுட்கராகமும் முத்திக்கான
சாதனங்களை ஆறங்கமாக வகுத்துக் கூறியுள்ளதை மேற்கோள் காட்டி அவற்றைக் குறித்ததாக
விளக்கினோம்.
வாதுள, பரமேசுவர ஆகமங்கள் பகுத்துக் கூறும் சைவ மார்க்கங்களில் சுத்தசைவமும், வீரசைவமும் சிவனே பரம்பொருள் என்னும் சைவநெறியில் ஒர் இறைக் கோட்பாட்டில் நின்றதனாலும் தாமும் அவ்வாரே சைவத்தைப் பின் பற்றி நின்றதைக் கொண்டு {ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த (தி. 1.1.11)} திருஞானசம்பந்தர் பாடிய ‘நான்மறை ஆறங்கம்’ என்பது சிவாகமங்ளைக் குறித்தது என்பதை விளக்கி வந்தோம். இவ்விடம் அருநெறியமறை வல்லமுனியகன் (தி. 1.1.11) என்பதற்கு பிரம்மா இரௌரவ ஆகமத்தின்கண் (ஞான பாதம்) விளம்பிய சிவத்தத்துவங்கள் முப்பத்தாறையும் உபதேசித்ததைக் காண்க. இதனையறியாமல் மேற்கூறிய பாடலில் வரும் முதல் அடிக்கு “வேதத்தில் வல்ல பிரம்மா” என்று தருமை ஆதின சைவ அறிஞர் பொருள் கொண்டது அவர்தம் சிவாகமத் தெளிவின்மையையே காட்டுகின்றது.
இதற்கு முன்னர் பேரா. கா.சு. கட்சிக்காரர்களும், மூவர் தமிழ் கட்டுரையாளரும் ‘நான்மறை’ என்பது ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் உலகியல் அறம் முதலானவற்றைக் குறித்த தமிழ் நூல்கள் என்று பொருள் கொள்வாரானார். ஆனால் இக்கருத்துக்கு, திருஞானசம்பந்தர் காலத்திற்கு முன்பே இருந்த, திருக்குறளைத் தவிர்த்து, மறுக்கவியலாத தமிழ் நூல் ஆதாரங்களை அவர்களால் முன் வைக்க முடியாது போனதால் அக்கருத்து பெருவாரியாக மறுக்கப் பட்டது. அதேபோல், ‘ஆறங்கம்’ என்பதற்கு அவை மேற்கூறிய நாற்பொருளை விளக்கும் கருவி நூல்கள் என்று பொருள் கொண்டார். அதற்கான நூல்களையும் அடையாளம் காட்டத் தவறி ஆருடங்களைக் கொண்டு தமது வாதத்தை முன் வைத்ததில் சைவ சமய நெறியில் நின்றோர் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போய் விட்டது. இதனை வைதிகச் சைவர் அவருக்குச் சாதகமாக்கிக் கொண்டனர்.
இது பேரா. கா.சு கட்சிக்காரர்கள் குற்றம் என்று கூற மாட்டோம். இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப காலம் வரை அயலார் நெறிகொண்டோர் தமிழ்மொழியைப் பிற்படுத்தி வடமொழியே சிறந்தது என்று நம் தாய்மொழியை சிறுமைப்படுத்தி வந்த காலக்கட்டத்துடன் ஒப்பு நோக்குகையில், ஆங்கே சைவ சமயம் முன் நிற்கவில்லை மாறாக தமிழ் மொழியின் சிறப்பே முன் நிறுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிய முடியும். இதன் காரணமாகவே இறைவன் திருவருள் கிட்டாமால் அவர் இருள்வழியை கொண்டார் என்பது எமது கருத்து.
இவ்வாறு பேரா. கா.சு. கட்சிக்காரர்கள் தவறான பாதையைக் கொண்டதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அக்காலத்தில் தென்னாடுடைய சித்தாந்த சைவ சாத்திரத்திற்கு முதல்வன் அருளிய முதல் நூலாகிய சிவாகமங்கள் தமிழிலோ அல்லது அவர் அறியவல்ல வேற்று மொழியிலோ மொழிபெயர்த்த நூல் கிடைக்கப் பெறவில்லை. இந்நிலை கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றம் கண்டு பிரெஞ்ச், ஆங்கிலம், தேவநகரி எழுத்துரு கொண்ட வடமொழியில் மொழிபெயர்த்து பல்லோரும் சிவாகமப் பொருளை அறியும் பாக்கியத்தைப் பெற்றோம். ஆதலால், திருஞானசம்பந்தர் கூறிய ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்னும் நூற்பொருள் அருளியலைச் சார்ந்தது என்பதையும், அவை சிவாமகச் சித்தாந்த சைவத்தின் வழி இறைவனால் அருளப்பெற்றது என்பதையும் அறியாமல் போனார். இதற்கு அவர்தம் தவக்குறைவே காரணமாகும். சிவசிவ.
நான்மறை ஆறங்கத்திற்கு திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களைக் கொண்டு அடியேன் கண்ட பொருள் தடம் மாறி போவதாக பொருள் கொள்ள முடியுமா? அல்லது அது வேதத்திற்கு புறம்பான கருத்து என்று பொருள் கொள்ள முடியுமா? சைவத் தமிழர் வெகு காலமாக ஒன்றை மறந்து வாழ்ந்து வருகின்றனர்.
“இந்து மதம்” என்றொரு சொல் ஆங்கிலேயரால் அறிமுகப் படுத்துவதற்கு முன் இந்தியாவில் தோன்றிய மதங்கள் / சமயங்கள் அனைத்தும் தனித்தனியே தோன்றி தத்தம் மதம் / சமயத்திற்கு முழுமுதற் நூல்களைத் தனித் தனியே கொண்டிருந்தன என்பது உண்மைதானே? இன்றைய நிலையும் அதுவே என்பதை யாரும் மறுக்க முடியாது அல்லவா? வெவ்வேறான மதம் / சமயம் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு அவர்தம் சமய முதல்வன் அருளிய முதல் நூற்பொருளே உயர்ந்தது என்றும் உண்மைப் பிரமாணம் என்றும் முடிவு கொண்டிருப்பதும் உண்மையல்லவா? இன்றைய தமிழர் இந்த உண்மையை அறிந்து அவர்தம் சித்தாந்த சாத்திரத்திர்க்கு முதல் நூலாகிய சிவாகமத்தைப் பின்பற்றி போவது ‘தடம் மாறி போவதாக’ பிறர் ஏன் பொருள் கொள்ள வேண்டும்? சித்தாந்த சைவ நெறியில் நிற்காதோர் எப்படி சித்தாந்த சைவ நெறியில் நிற்கும் தமிழ்ச் சைவருக்கு அறிவுரை கூற தகுதி பெற்றோராகினர் என்பதை அடியேன் அறியேன்? சித்தாந்த சைவம் என்றவுடன் சித்தியாரில் வேதத்தை மறுத்தால் ‘கதி’ இல்லை என்று கூறியதை மேற்கோள் காட்டினால், சகல ஆகமங்களிலும் வல்லவரானவர் ஆகமப் பொருளிலிருந்து தடம் மாறினார் என்று பொருள் கொள்ளவும் வழி பிறந்துவிடுமே!. பெரியோருக்கெதிரான குற்றத்தைச் செய்ய அடியேன் விரும்பவில்லை. சிவசிவ.
இனி, நால்வேதங்களும் அதன் ஆறங்கங்களும் கூறும் பொருள் ஆகமத்தின்கண் கூறப்பட்ட பிரமாணத்திர்க்கு நிகராகாது என்பதை ஒரு சில ஆகமத்தைக் கொண்டே விளக்குவோம்.
காமிகா ஆகமம் – பூர்வ பாதம்
112-114. Garuda tantra, Bhuta tantra, Bhairava, Vama tantra, Kapala scriptures, Pancaratra scriptures, Lakula scriptures, scriptures of Kula tradition, Puranas, Dharma Sastras, Ithihasa, Six-limbs of the Vedas, Rg. Veda, Yajur Veda, Sama Veda, Atharvana Veda, scriptures belonging to the system of Bauddha Artha – all these come under the ‘not-superior’ category (apara) in view of the Agamas which are known as Urdhva Srota (Scriptures which issued forth from the upper face) and whose authenticity could not be diminished.
115-117. The Kamika and other Mula Agamas, which are collectively called Sivanjana Sastras, are always considered as representing the head portion of the form of Lord Siva. All other Scriptures represent the heart, neck, and other parts of that form. Other scriptures have been revealed by Lord Sambhu so as to constitute the prior and unsettled prima-facie part to suit the varied levels of the human beings. But, the Siddhanta Sastras (Agamas) have been revealed by Him so as to constitute the final and well-ascertained conclusive part, after setting aside all other scriptures which fail in ascertaining exactly the principles which are to be accepted and the principles which are to be discarded.
இரௌரவ ஆகமம் – வித்தியா பாதம் – இரண்டாவது படலம்
1. The sages who have abstracted themselves from the misleading and unfit path and whose fettering bonds of ma’ya, karma and a’nava have been severed. Prostrated before the feet of the Lord who was the Guru of suras and asuras. They stood before Him with humility observing the rules prescribed in the Scriptures.
சந்திரஞான ஆகமம் – முதலாவது அத்தியாயம்
Brhaspati enquires,
O, the ocean of Grace the only substratum of all knowledge, O’ God, if you would not have invented the different Samhitas of the Agama scriptures, then the whole world would have been plunged into the deep darkness of ignorance due to the absence of the light of knowledge (4). No one is more ignorant than the person who thinks himself learned in this world without knowing the Agama scriptures advocated by you (5). I have been able to be teacher of the devas and solve their problems only after receiving the nectar of the Agamas by your grace (6). I have learnt the different passages of the benign Candranjanagama. Now please convey to me the main teachings of Lord Shiva. (7). I have heard that the means of attaining moksa (liberation) have specially been described in this portion of Agama. If you enlighten me with this knowledge, I shall be enriched with all the attainable knowledge (8).
சிவாகமங்களின் உயர் நிலையை அறிந்து அதனை அருளவேண்டி தேவர்களும், முனிவர்களும் மண்டியிட்டுப் பெற்ற ஞான மறையை நாம் மறவாது ஏற்க வேண்டியது ஒவ்வொரு சைவத் தமிழரின் கடமையாகும். இறைவன் திருவருளால் சீவான்மாவை பக்குவமடையச் செய்து சிவத்துடன் கலந்து வியாபக அறிவைப் பெற்று பேரின்பமடைய விளக்கொளியாக விளங்குவது சிவாகமங்களாகும் என்று கூறுவதை சிற்றறிவு படைத்த நாம் மறுத்தால் நமக்குச் சிவகதி கிட்டுமா என்பதை சிந்திக்க வேண்டுகிறோம். சிவசிவ.
மேற்கூறிய காரணங்களால், ‘நான்மறை ஆறங்கம்’ என்று திருஞானசம்பந்தர் பாடியது அருளியலில் முத்திக்கு வழிகாட்டும் சிவாகமங்களைக் குறித்ததே என்று பொருள் கொண்டால், நாம் ஒரு காலமும் வேதத்தைப் புறக்கணிக்றோம் என்றோ அல்லது தடம் மாறி போகின்றோம் என்றோ யாரும் நம்மை குற்றம்குறை கூற இயலாது. இது சிவாகமத்தையே முந்நிறுத்திப் பெற்ற சிவஞானம் என்பதால் இன்றைய சைவத் தமிழர் அருளொளி பெற்ற நிலையாகும். “அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை“ (தி. 4:2). தொடரும். சிவசிவ.
அன்புடன் கமலநாதன்
--
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
<p class="MsoNormal" style="text-align:justify;l
நன்றி ஐயா.மறைமலை அடிகளாரின் நூற்களைக் கற்றதுண்டு. அவர் சிந்தனைகளை தேவையான அளவுக்கு ஏற்றதுண்டு. ஆனால் இங்கு எழுதப்படும் எமது கருக்குக்கள் அவர் சிந்தனையில் தோன்றியது அன்று.
அன்புடன் கமலநாதன்
On Thursday, December 22, 2016 at 7:45:18 AM UTC-8, தேனீ wrote:சிவசிவ
மின் தமிழ் சைவ அறிஞர் சிந்தனைக்கு,
சிவசிவதிரு. கமலநாதன் மடல்களில் மறைமலையடிகள் தாக்கம் காண்கிறேன்.ரவி வைத்தீஸ்பரன் (யாழ்) பிஎச்டி படித்தபோது சில நூல்களைப் படிக்கச் சொல்லியுள்ளேன்.இன்று அவரது புத்தகம் பற்றிய கட்டுரை கண்டேன்,The Enlightened Theology of a Tamil Saivite
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/aI2-uxKX20Q/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/aI2-uxKX20Q/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
த.ம.அ கட்டுரை வெளியீடு: மூவர் தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரை மின்னாக்கக் குழுவின் தொடர் முயற்சியில் ஆய்வுக் கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு மின்னாக்கம் செய்யப்படுகின்றன . அந்த வகையில் தமிழ்ப்பொழில்: துணர் 5; மலர் 7 & 8; பக்கம்: 283-293 வெளிவந்த "மூவர் தமிழ் (ஆராய்ச்சி) - இருக்கு சாமம் ஆறங்கம்" என்ற கட்டுரை இன்று வெளியிடப்படுகின்றது. இதனைத் தட்டச்சு செய்து வழங்கிய திருமதி. மைதிலி தியாகு
(ஹுஸ்டன்) அவர்களுக்கு நமது நன்றி.
தமிழ்ப் பொழில் - தஞ்சை, கரந்தை தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடு
துணர் - 5; மலர் - 7 & 8;
பக்கம்: 283-293
மூவர் தமிழ் (ஆராய்ச்சி)
இருக்கு சாமம் ஆறங்கம்
திரு. சாமி வேலாயுதம் பிள்ளையவர்கள், BA, LT, உரத்தநாடு.
(முற்றொடர்ச்சி 199)
மறை,வேதம் என்னும் இரு சொற்களும் இருக்கை முதன்மைத்தாகவுடைய நான்கு ஆரிய வேதங்களைத்தான் குறிக்கின்றனவெனல் பொருந்தாதென்றும், தமிழ் நூற்களையுங் குறிக்கின்றனவென்றும் அருண்மொழியாளர் வழக்காற்றிலிருந்தே நிறுவினாம், இனி இருக்கு சாமம், ஆறங்கம் என்னுஞ் சொற்கள் எக்குறிப்பின வென ஆராய்வாம்.
வடமொழி மறைகள் நான்கனுள் இருக்குஞ் சாமமுந் தொடு மிடந்தொறும் மூவர் தமிழுள் எடுத்தியம்பப் பட்டிருப்ப, யசுரும் அதர்வணமுமாகிய ஏனைய விரண்டும் ஓரிடத்தும் ஒதப்பெறாதது பெரும் வியப்புறுத்துவ தொன்றன்றோ? யசுரும் அதர்வணமும் ஏனைய விரண்டையும் போல் அத்துணைச் சிறந்ததன்றாதலின் இயம்பப் பெருதொழிந்தன வெனல் கூடும். ஆனால் இறை வழி பாட்டினர் (சைவர்கள்) இன்புடன் கையாளுகின்ற திருவைந் தெழுத்தும் திருஉருத்திரமும் யசுர் வேதத்துள்ளும், இறைக் குறியின் (சிவலிங்கத்தின்) குறிப்பும் பலப்பல அறிவுறுத்தல்களையுடைய பல உபநிடதங்களும் அதர்வண வேதத்துள்ளுங் காணப்படுவதால் இவற்றுற் சிறப்புறும் இவ்விரு வேதங்களினும் இவற்றுற் சிறப்புறு ஏனைய விரண்டும் இறை வழிபாட்டு முதல்வர்களுக்கு எவ்வாறு மிகச் சிறப்புடையனவாகும்? ஆதலின் இருக்கு சாமத்தினும் யகரும் அதர்வணமுமே அவர்களால் நீக்கப்பெறும் இயல் புடையன வல்லவன்றோ?
இனி, "ஒன்றின முடித்தல், தன்னின முடித்தல்" என்னும் உத்தியால், ஒன்று கூறின் யாவுங் கூறப்பட்டவேயெனின், முதலாவதாகிய இருக்கு மட்டுங் கூறப்படாது மூன்றாவதாகிய சாமமுங் கூறப்படுவானேன்? இரண்டாவதும் நான்காவதும் மறந்துங் கூறப்பெறா தொழிவானேன்? ஆதலின் இருக்கு, சாமம் ஆகிய இவ்விரு சொற்களும் இவ் வேதங்களைத்தான், அல்லது நால் வேதங்களையுங் குறிக்குமெனல் பொருந்தாது. பிற் காட்டப் பெறுமாறு இந்நால் வேதங்களுக்கும் பொதுவாகிய இரு சிறப்பியல்புகளையே குறிக்கின்றனவென்றும் எண்ண இடமிருக்கிறது.
‘இருக் குருவாம் எழில் வேகத்தினுள்ளே' [1] என்னுந் திருமந்திரம் இருக் கென்னுஞ் சொல் வேதத்தின் உருவைக் குறிக்கு மென்று குறிப்பிடுகின்றது. இதற் கேற்பவே பூர்வமீமாம்சை யிலும் "தேஷாம் ருக்யத்ர அர்த்தவ ரெக பாதவ்யவஸ்தா' (என்பது அர்த்தத்திற்காக எங்கே அடி அடியாக-அதாவது செய்யுள் வடிவாக-இருக்கிறதோ அதற்கு ரூக் என்று பெயர்) என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கிணங்கவே கந்த புராணத்தும்
“ மையு லாவரு களத்தினன் அளப்பிலா மறைகள்,
செய்ய வாகமம் பற்பல புரிந்ததிற் சிலயா
னுய்யு மாறருள் செய்தன னவையுணர்ந் துடையேன்"
என்று நான்முகன் கூற, அதற்குமுருகவேள் "அவற்றினுளிருக்கா மொன்று நீ விளம்புதி" [2] என ஒர் பா வினவினதாகக் கூறப்பட்டுளது. இதுவே இச் சொல்லின் முதற்பொருளாகும்.
இரண்டாவதாக, இச் சொல்லை நிறை மொழி (மந்திரம்) - என்னும் பொருளில்
"இருக்கியல் பாயின இன்னம் பரான்ற னிணையடியே" [3]
“இருக்காலே நினைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு…….. மணிமார்பா" [4]
என்ற பல்வேறிடங்களிற் பயனுறுத்தியமை உற்று நோக்கிற் றெரியும். இருக் கென்னுஞ் சொல்லிற்கு ஆரியத்தில் (மந்திரம்) நிறைமொழி யென்னும் பொருளுண்மையாலும், மேற் கண்ட் முதன் மேற்கோளில் ‘இருக்கு வேதத்தின் தன்மையது-அல்லது-அதனியல் புடைத்து இறைவன் றிருவடி’ என்று பொருள் கூறு வதினும், நிறை மொழி வடிவினது அவன் திருவடி என்னும் பொருளே " மந்திரமுந் தந்திரமுமாய வடி’ [5] என்பதற் கிணங்கப் பொருத்த முடைத்தாதலானும் இரண்டாவது மேற்கோளில் இடையீடின்றி ‘நினைந்து துதித்து ' முருகக் கடவுளை நாவி னெஞ் சிலிருத்துவதற்கு இருக்கு முதலாய வேதங்களினும் ஆறெழுத்து, ஆறுமுகம் முதலிய நிறை மொழிகளே (மந்திரங்களே) சிறந்தன வாதலானும் இவை யிரண்டு மேற்கோள்களிலும் நிறை மொழிகளே குறிக்கப்பட்ட தொருதலை. அந் நிறைமொழிகளுள் இறைவன் திருவடி வடிவடையன தமிழினத்தனவே யாதலானும் நினைந்து துதிப்பதற்குத் தமிழ் நிறை மொழிகளே யாவார்க்கு முரித்தாவவன்றி இறைவனுற் பெரிதும் விரும்பப்படுவவாதலானும் இவ் விருக் கென்னுஞ் சொல் தமிழ் நிறைமொழிகளையே குறிக்கின்றன வென்று சொல்லவுந் துணிவேம். இதற்குச் சான்றாக வேதம் ஓதுதற்கு உரிமையற்றவரென் றெண்ணப்படுகிற வேளா ளராகிய அப்பரடிகள்
தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
கொண்டி ருக்கோதி டாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே [6]
என்று அவர் அருள் பெறுமுன் தமக்கு உரிமை யற்ற இருக்கோதி யாட்டாது பொழுதைச் செவ்வனே கழிக்காததை நினைந்து வருந்துவதையும், அருள் பெற்ற பின்
"சலம் பூவொடு தூப மறந் தறியேன்
தமிழோ டிசை பாடன் மறந் தறியேன்" [7]
என்று கூறுவதையும் நோக்க, தாம் பாடியருளும் இத் தமிழோடிசையையே முந்திய மேற்கோளில் இருக் கென்று குறித்தது நன்கு விளக்கும். இதற்கிணங்கவே இத்தமிழ்மூவரும் பாடி யருளிய தமிழ்ப் பாக்களை உமாபதிசிவம்
மந்திரங்க னெழுகோடி யாதலினான் மன்னுமவ
ரிந்தவகை திருமுறைக ளேழாக வெடுத்தமைத்து [8]
என்று நிறை மொழியாகக் கணக்கிட்டிருக்கின்றனர். இவ்வாறு இருக்கு என்னுஞ் சொல்லின் இரண்டாம் பொருள் நிறைமொழி ஆகின்றது.
மூன்றாவதாக " இருக்கு, சுருதி, மறை, எழுதாக்கிளவி, ஆதிநூல், சாகை, ஆரணம், வேதம் ' என்ற திவாகரம் இச் சொல் மறை அல்லது வேதத்தைக் குறிக்குஞ் சொல்லாகக் காட்டுகிறது. இவ்வேத மென்னுஞ் சொல் எல்லா அறிவு நூற்களையுங் குறிக்குமென்று முன் நிறுவியதற்கிணங்க, இருக் கென்னுஞ் சொல்லுங் குறிக்கின்ற தென்பதை நிறுவ, குமரகுருபா அடிகள் எல்லா அறிவு நூற்களுக்கும் பிறப்பிடம் முருகன் அடிச் சிலம்பு என்பதை ‘இருக் கோவிடும் பரி புரக் கோலமும்’ [9] என்று விளக்குகின்றனர். ஆதலின் இச் சொல்லின் மூன்றாவது பொருள் "அறிவு நூற்கள்” என்பதாம்.
இப் பொருளில் இச் சொல் ஆகமங்களையுங் குறிக்கின்றது. எவ்வாறெனின் இறையோன் கோயில்களில் எல்லாச் செயல்களிலும் ஆகம நிறை மொழிகளே ஒதப் பெறுவதாலும், இறை வழி பாட்டினரியற்றும் நாட் செயல்களிலும் (நித்திய கருமம்), உயிர் வழிபாட்டிலும் (ஆன்மார்த்த பூசை) அம் மந்திரங்களே பயிலப் படுவதாலும், இருக்காதி வேத நிறைமொழிகள் கோயில்களில் மட்டும் எல்லாச் செயல்களும் முடிந்தபின் அவைகளைப் பெருமைப் படுத்துவதற்காகச் சிறிதே ஒதப் பெறுவதாலும்
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவன் [10]
என்ற விடத்தும் இத்தகைய பல்வேறிடங்களிலும் இருக் கென்னுஞ் சொல்லால் ஆகமங்களே குறிக்கப்பட்டமை விளங்கும். ஈண்டு இருக்கு மந்திர மென்றது வேத மந்திரமென்றும் பொருள் பட்டு வேதத்தில் ஆகமும் அடங்குமென்று முற் காட்டியபடி [11] ஆகமமந்திர மென்று பொருள் படுவதும் பொருத்த முடையதே. இவ்வாறு பாவினம், நிறைமொழி, மறை என்னும் முப் பொருளுடைய இச் சொல் யாண்டும் இருக்கு வேதத்தையே குறிக்கு மெனல் பொருந்தாக் கொள்கையாம்.
இனிச் சாமம் என்னுஞ் சொல்லைப் பெரிய புராணத்தில் காழியாகிய ‘காமர் திருப்பதி’.........தேமரு மென்சுரும் பிசை யால் செழுஞ் சாமம் பாடுமால்’ [12] என்று பயனுறுத்தி யிருப் பதை நோக்க, அதற்கு இசை யென்னும் பொதுப் பொருளே ஈண்டு உரித்தாகின்றது. இனி இராவணன் பாடியதும் இறைவனால் ‘சாம வேதம் பெரிது கப்பானை’ [13] என்பதற் கிணங்கப் பெரிதும் விரும்பப்பட்டதும் இப்போது வழக்காற்றிள்ள வட மொழிச் சாம வேதமேயா மென்று சிலர் சாற்றினும், சாமம் என்ற சொல்லிற்குப் பதிலாக வன்றெண்டர் ‘குறி கொள் பாட லின்னிசை’ [14] என்று குறிப்பிடுகின்றதை நோக்கியும், இது போது வழங்கும் வடமொழிச் சாம வேதத்தில் இசை விரும்புங் கூத்தனாகிய இறைவனைப் பெரிதும் உவப்பிக்கக் கூடிய செயலில்லாததைக் கண்டும் அதை ஒப்பமுடியவில்லை. பின் இக் குறி கொள் பாடல் யாதென ஆராயும் பொழுது அஃது அவனைக் குறியாகவுடைய ஐந்தெழுத்தே யென்பதைத் திருஞான சம்பந்தர் "பண்டை யிராவணன் பாடியுய்ந்தன.அஞ்செழுத்துமே "[15] என்றும், இலங்கை மன்னன்.மலங்கி வாய் மொழி செய்தவனுய்வகை, நலங் கொள் நாமம் நமச்சிவாயவே’ [16] என்றும் நவில்கின்றனர். இதற்கிசையவே அப்பாடிகளும் ‘முன்கையா னரம்பு வெட்டி முன்னிருக்கிசைகள் பாட-அங்கை வாளருளினால்’ [17] என்று இருக்காய (ஐந்தெழுத்து) நிதைமொழியைப் போல் பல்வேறிசையிற் பாடினதாகக் குறிக்கின்றனர். இவ்வாறு ஒரு நிறை மொழியைப் பன்னெடுங்காலம் பாடுதல் இயலுமோ வென ஐயுறுவார்க்குச் சேக்கிழார், ஆனாய நாயனார் வேய்ங் குழலால் இறைவனை யேத்தி இன்பும் வீடும் எய்தியது திரு வைந் தெழுத்தாலேயே யென்பதை ஒருமுறையின்றி அறுமுறை குறிப்பதுடன் [18] அவற்றைப் பாடுந் தமிழிசை முறையையும் விரித்து,
“மாறுமுதற் பண்ணின்பின் வளர்முல்லைப் பண்ணாக்கி
ஏறியதா ரமும்உழையும் கிழமைகொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடைமுடியார் அஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங் கொடிப்பாலை யினில்நிறுத்தி ” [19]
என்றும் இயம்புகின்றனர். இன்னும் சாம வேதம் இறைவியின் ஊடலை ஒழிக்கப்பாடிய தென்றும் அஃது இறைவனின் கூத்திற் குடனிகழு மென்றும் திருநாவுக்கரசு நாயனார்
சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்
கூடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடில வேலி யதிகைவீ சட்ட னாரே [20]
"சாமுண்டி சாம வேதங் கூத்தொடும் பாடவைத்தார்” [21] என்ற பாடல்களினாற் குறித்திருப்பதையும், வடமொழிச் சாமவேகத்தில் ஊடலை ஒழிக்கக் கூடிய செய்தியுஞ் செயலும் இல்லை யென்பதையும், இவ்வேதத்திற்குங் கூத்திற்கும் பல்காத தூரமென்பதையும் நோக்க, அப்பாடிகள் இவ் வடமொழிச் சாம வேதத்தையே குறித்திருக்க முடியாதென்பது வெள்ளிடை. திருஞானசம்பந்தர் “தமிழினீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல, முழவ மொந்தை மல்கு பாடல் செய்கை யிடமோவார்”[22] என்று குறித்திருப்பதனையும், காரைக்காலம்மையார் கைலை வெற்பில் இறைவனை "வேண்டு நான் மகிழ்ந்துபாடி யறவா நீ யாடும் பேரதுன்னடியின் கீழிருக்க " வென்று வேண்டிக் கொண்டபடி “ஆதியோ டந்தமில்லா னருணடமாடும்போது கீதமுன் பாடு மம்மை" [23] ‘கொங்கை திரங்கி’, ‘எட்டியிலவ மீகை’ என் றெடுத்துத் தமிழ்ப்பதிகம் தமிழிசை முறையிற் பாடியதுமன்றி இன்னும் பாடிக்கொண்டிருப்பதைச் சேக்கிழார் எடுத்தியம்பி யிருக்கின்றதையும், இத்தமிழ் வழங்கு நிலத்திலேதான் இறைவன் ஐந்து அம்பலம் வகுத்துக் கூத்தாடுகின்றதையும் நோக்க, இறைவன் திருக்கூத்திற்குத் தமிழ்ப்பாடலே உடனிகழு மென்றும், அதனால் சாம மென்றது தமிழிசையையும் உட்படுத்தியோ அல்லது மேற்காட்டியபடி சில விடங்களில் அவற்றையே குறித்தோ நிற்கும் என்றும் உணர்க. இவ்வாறே
“ பண்பொலி நான்மறை பாடியாடிப் பலவூர்கள் போய்
உண்பலி கொண்டுழல் வானும் " [24]
"பண்ணமரு நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்" [25]
“ பண்ணினார் மறை பாடலன் ஆடலன்” [26]
“ பண்ணார் மறைபாடப் பரமனதிகையுள்
விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே. [27]
என்றற் றெடக்கத்த பல் வேறு பாசுரங்களிலுள்ள பண்ணார்"
மறை பண் முறையில்லா ஆரியமறையாகாது. தமிழ் மறையே யாமென்று தெளிக. இன்னும்
"முன்னொரு நான் மறை யாறங்கம் பழியாமை
பண்ணிசை யான பகர்வானை" [28]
" பாடினாய் மறையோடு பல் கீதமும்" [29]
" மன்னி நான் மறையோடு பல் கீதமும்
பன்னி னாரவர் பாலைத் துறையரே " [30]
" சாம வேதக் கந்தருவம் விரும்புமே " [31]
என்ற பாடல்களில் இப் பண்ணார் தமிழ் மறையையே இன்னிசை,
கீதங் கந்தருவ மென்ற சொற்களால் குறிப்பதையும், அவை
முன்னொரு நான்மறையாகிய ஆரிய மறையால் பழிக்கப்படாமல் அதினும் பெருமையுறப் பகரப் பட்டமையை விளக்குவதையும் உற்றுப்பார்க்க, இவை ‘பழமறைகண் முறையிடப் பைந் தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே ' [32] என்ற எண்ணத்திற்கும், "வேத வேள்வியை சிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடுதோ " [33] ருக்கு முன் நிந்திக்க முடியாத படி “பல்லார்களும் பரவத் தமிழ்ப் பாசுரம் சொன்ன" [34] உண்மைக்கும் ஒத்துவருவதை உற்று நோக்குக. அன்றியும் மேற் குறித்த முதலாவது மூன்றாவது மேற்கோள்களுள் நான்மறை யுடன் பண்ணிசையும் பல கீதமும் பன்னப்படுவதாகக் குறிக்கப் பெறுவதால் அவ்விசை ஆரியத்தில்லாத் தமிழோ டிசையாவதையுங் கண்டு களிக்க.
இவ்வாறு இறைவன் ஆடற்குப் பாடும் தமிழ்மறை யாதென வினவுவோர் அவை இறைவனின் அரும் பெருஞ் செயலாகிய உலகத் தோற்ற நிலை இறுதிக் கேற்றதாதலானும், அஃது அழுக்கு மறைப்புடைய எம் போலியர்க்கு மறைந்தும் அருள் பெற்ற அறிஞர்க்குப் புலனாகியும் உள்ளதென்றும் அதை உணர்ந் நியற்றியதே தேவாரம் முதலிய தமிழ்மறை யென்று முணர்வாராக. இப் பன்னிரு திரு முறை தோன்றுவதற்கு முன்னர்த் தமிழ் மறைபுண்டோ வென வினவுவார்க்குத் தமிழ் நிறைமொழிகளிலிருந்தமையை முன்னர் விளக்கினாம். மூவர் தமிழ் போன்ற தமிழ் மறை இருந்திருக்கக் கூடுமென்பதைப் பின்ன்ர்க் காட்டுவாம்.
இதனால் எனைய வேதங்கள் மூவர் தமிழில் எடுத்தியம்பப்பெறாது இருக்குஞ் சாமமுமே போற்றப் பெறுவது அவை முறையே நிறைமொழி, இசை யென்னுஞ் சிறந்த பொருள்களைக் குறித்து நிற்பதனாலேயேதான் என்று காணக்கிடக்கின்றது. இதற்கேற்பவே ‘ஆனபாடலுகந்த திருக்கையே " என்னுஞ் சம்பந்தர் வாக்கு "சாம வேதம் பெரிதுகப்பானை' என்னுஞ் சுந்தரர் வாக்கிற்கு முரண்படுவதாகத் தோன்றிலும் இவ்விரு மறைகளும் நிறை மொழி, இசை யென்னும் பொருள் பெற்று முரணாகாது விளங்குதல் தெளிக.
இனி ஆறங்கம் என்னுஞ் சொல்லைப்பற்றி ஆராய்வாம். அஃது (1) ஒலி வேறுபாட்டினால் ஒலிக்கு முறையை உணர்த்தும் ஒலி முறையியல் (சிக்ஷை) யென்னும் நூலையும் (2) மறைச் செயல்களைப் புரியும் வழியை யுணர்த்தும் மறைநெறி (கற்பம்) என்னும் நூலையும் (3) எழுத்தியல், சொல்லியல், பொருளியலை புணர்த்தும் எழுத்து என்னும் நூலையும் (வியாகரணம்) (4) மறைப் பொருளை உணர்த்தும் நிகண்டு (திருத்தம்) என்னும் நூலையும் (3) காயத்திரி முதலிய யாப்புக்களின் பெயர் எழுத்தை விரிக்கும் இசை நுணுக்கம் (சந்தோவிசிதி) என்னும் நூலையும், (6) மறைச் செயல்களைச் செய்யும் நேரத்தைக் குறிக்கும் ஒரு நூலும் (சோதிடம்) ஆகிய அறு நூற்களைக் குறிக்கும் ஒரு தொகைச் சொல்லாம். இவை மறையை உணர்த்துவதற்கெனத் தொகுக்கப் பட்டன வேனும் அதற்காக மட்டும் இயற்றப்பட்டன அல்லது பயன் படுத்தப்பட்டன வென்று எண்ன இடமில்லை. இவ்வாறனுள் மறை நெறியைத் தவிர்த்து ஏனைய ஐந்தும் மறையன்றி ஏனைய நூல்களை உணர்வதற்கும், ஏனைய செயல்களைச் செய்யும் பொழுதை அறிவதற்கும் பயன்படுக்கப்பட்டன. பயன்படுத்தப் படுகின்றன வென்பது யாவரும் அறியக்கிடக்கின்றது. இதற் கேற்பவே ‘பங்கமில் பதினெட்டொடு நான்குக் குணர்வுமாய், அங்கமாறுஞ் சொன்னானுமை யாறுடையையனே ‘ [35] என நான்மறை யன்றிப் பதினெட்டு வரலாறுகளையும் உணர்த்து வதற்கென இவ்வாறங்கம் இயம்பப்பட்டன வெனச் சம்பந்தர் தெரிவிக்கின்றனர். ஆதலின் இவ்வாறனுள் ஒலிமுறையியல், எழுத்து, நிகண்டு, இசை துணுக்கம் என்றும் நான்கும் ஒரு மொழியை நன்குணர்த்துவதற்கு வேண்டிய மொழிவரையறையும், ஏனைய விரண்டும் ஓர் நெறியை நன்கு பின்பற்றும் முறையும் உதவுவ.
இவ்வாறாக, ஓர் நாட்டின்கண் விளங்கும் மறைகளும் அவற்றுற் குறிக்கப்பெற்ற நெறிகளும் தமிழிவிருப்பின் ஆங்கு இவ்வாறுறுப்புகளுத் தமிழிலிருக்க வேண்டுமன்றோ! எனவே தமிழ்ப் பெரியார்களால் மறை, வேதம், இருக்கு, சாமம் முதலிய சொற்கள் தமிழ் நூற்களையுங் குறித்தே கையாளப் பெற்றிருக்கின்றன வென்று முன் நிறுவியதற்கிணங்க அத்தமிழ் நூற்களை விளக்குவதற்கும், அத்தமிழ் நெறியை வகுத்துரைப்பதற்கும் தமிழ் உறுப்பு நூற்கள் இருக்க வேண்டுமன்றோ? அவ்வாறு மலிந்துகிடக்கும் பல தமிழ் உறுப்பு நூற்களையும் [36] ஆறங்க மென்னும் இச் சொல் குறிக்கின்ற தென்பது பொருந்து மென்றறிக.
இக் கட்டுரைக் கருத்து யாதெனின் இருக்கு, சாமம் என்னும் இருசொல்லே தமிழ் மூவரால் பயனுறுத்தப் பட்டிருப் பதால் அவற்றிற்கு வேறு உட்பொருளுண்டென்றும், அவற்றுள் இருக் கென்னுஞ்சொல் பாட்டு, நி றைமொழி, அறிவு நூல் என்னும் பொருள்படுமென்றும், சாமி மென்னுஞ் சொல் இன்னிசை, இசை நூற்களைக் குறிக்குமென்றும், அவ்விசை நூற்களுள் தமிழ் மூவரால் தமிழிசை நூற்களே குறிக்கப்பட்டன வென்றும், இறைவன் பாடும் இசையின் றன்மை சிற்றுயிர்களின் உள்ளத்திற் கெட்டாததோன் றென்றும், எனவே இருக்கு சாம மென்னுமிரு சொற்கள் மட்டும் பயனுறுத்தப் பட்டமை அவை முறையே நிறைமொழி நூற்கள், இசைநூற்கள் என்னும் இரு பொதுப் பொருள்களையே குறிப்பதற்காகவே என்றும், ஆறங்க மென்னுஞ் சொல் தமிழ் நூற்களையுங் குறிக்கிறதென்றும், எனவே இவை ஆரியச் சொற்களேனுந் த மிழர்களாற் கையாளப்படும் பொழுது தமிழற்குப் பெரிதும் உரித்தான தமிழ் நூற்களையே குறிக்கின்றனவே யன்றி ஆரிய நூற்களைக் குறிக்கவில்லை யென் றும் கூறுவதேயாம்.
[தொடரும்]
____________________________________________________
1. திருமந்திரம்-வேதச் சிறப்பு-3வது பாட்டு
2. கந்தபுராணம்-அயனைச்சிறைபுரி படலம்
3. திருநாவுக்கரசர்.திரு விருத்தம்-திருவின்னம்பர் 10)
4. திருப்புகழ்-திருப் போரூர்
5. திருநாவுக்கரசர்-திருவதிகைத்திருவீரட்டானம்-திருவடித்
6. திருநாவுக்கரசு.தனித்திரு நேரிசை (1) [திருத்தாண்டகம் (8)
7. பண்கொல்லி-திருவதிகை (6)
8. திரு முறை கண்ட புராணம் (28)
9. முத்துக் குமரசுவாமி பிள்ளைத் தமிழ்
10. திருஞான சம்பந்தர்.பழர்தக்க ராகம்-திருக்கோளிலி (3)
11. தமிழ்ப்பொழில் துணர் 2-பக்கம் 375.
12. திருஞானசம்பந்தர் புராணம் (9)
13. சுந்தார்-தக்கேசி-திருவேகம்பம் (6)
14. சுந்தார்.தக்கேசி-திருப்புன்கூடர் (9)
15. பண்-ஏந்தாரா பஞ்சமம்-திருப்பஞ்சாக்கரப்பதிகம் (8)
16. கெளசீகம்-நமச்சிவாயத் திருப்திபகம் (8)
17. திருநேரிசை-திருமறைக்காடு. 2-வது பதிகம் (10) ஈண்டு இருக் கென்றது இருக்கு வேதத்தை குறிப்பிடாததினாலும், நிறை மொழிகளும் இறைவனுக்குப் பெரிதும் உவப்பினைத் தரக்கூடிய தொன்றதலானும் இருக்கென்னுஞ் சொல்லால் இம் மேற்கோளில் நிறை மொழிகளே குறிக் கப்பட்டன இம் மேற்கோளுக் கிசையவே பரஞ்சோதியாகும்.
‘பொருப்பகழ்ந் தெடுத்தோன் சென்னி புயமிற மிதித்தாய் போற்றி யிருக்கிசைத்தவனே படவிரங்கிலாழ்கொடுத்தாய் போற்றி" என்றார்,
18. ஆனாய நாயனார் புராணம் 14, 22, 25, 26, 29,39-ம் பாடல்களிற் கண்டு கொள்க
19. 25-வது பாடல்
20. திருநேரிசை - திருவதிகை-3ம் பதிகம் (2)
21. திருநேரிசை-திருப்பயற்றூர் (4)
22. தக்கேசி-திருக்கானூர் (8)
23. காரைக்காலம்மையார் புராணம் (60, 66)
24. திருஞானசம்பந்தர். சாந்தார பஞ்சமம்.திருக்கடவூர் (6)
25. காந்தாரம்-திருநல்லூர் (1)
26. பழந்தக்கராகம்.திருக்காவீரம் (5)
27. தக்கராகம் - திருவதிகை (4)
28. திருஞானசம்பந்தர்.இந்தனம்-திருமணஞ்சேரி (6)
29. காந்தார பஞ்சமம்.கோயில் (1)
30. திருநாவுக்கரையர்.திருக்குறுங்தொகை.திருப்பாலைத்துறை (3)
31. அடையாளத் திருத்தாண்டகம்-திருவதிகை (1)
32. மீனாஷியம்மை பிள்ளைத் தமிழ்.காப்புப்பருவம்.திருமால் துதி
33. திருஞானசம்பந்தர்.ஈரடிமேல்வைப்பு-திருவாலவாய் (1)
34. கெளசிகம்-திருவாலவாய்-திருப்பாசுரம் (12)
35. திருஞானசம்பந்தர்-திருவையாறு
36. தொல்காப்பியம் முதலிய அத்தகை நூற்களை வழக்காற்றிலிருந்து கண்டு கொள்க.