இலக்கியத் துணிச்சல் இழையில் நான் எழுதுவதால் சிலர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவஸ்தைப் படலாம். எதற்கு நம்மால் சிரமம்? எனவே எனக்கென்று இருக்கும் ’இலக்கிய கர்வம்’ இருக்கவே இருக்கிறது. இனி ஏதாவது எழுதினால் இதில் எழுதலாம் என்று உத்தேசம்.கூடு பாய்தல்********************--காக்கைகள் மரத்தில்கணக்கிலவாய் சப்திக்கின்றன;ஏனென்று தெரியாத ஓர் ஏக்கம்அவற்றின் குரல்களில்எனக்கு மட்டும் கேட்கிறது;காகமாய் இருந்து நான்ஆறுதல் சொல்லக்கற்றேனில்லை கூடுபாயும் வித்தை;ஒரு வேளை காகங்களின் கேலிக் குரலோ?என் உளத்தின் எதிரொலியில்ஏக்கச் சாயம் பூசியதோ?போக்கற்ற வழிப்போக்கன் முனகுவதாய்ச்சிலசமயம் காக்கைகள் கழறும்;கலி முற்றிப் போயிற்றென்றுஅடித்துக்கொண்டு அங்கலாய்க்கும் ஒன்று;காதலித்த பெண்ணாள்கைவிட்ட காமுகனாய்க் கரையும் ஒன்று;கடவுள் சந்நிதாநத்தில்கள்ளம் உருகக்கீதம் இசைப்பதுவாய் ஒரு காகம்;ககன வெளியெங்கும் பறந்துகாணாத ரகசியத்தைக் கண்டுவிண்டு ஒலிப்பதுவாய் ஒரு வித்தகம்;காலித்தனத்தை ஓடஓட விரட்டுவதாய்ஒரு பெண் சீற்றம்;போலித் தனத்தைக் கிழிப்பதுபோல்ஒரு செத்த எலி உடலின் பாடம்;மரக்கிளையில், மதகுகளில்,மாடிகளில், மாலை நேரம்கூடடையும் கோதுகலத்தில்,ரயில் வண்டி நிலையங்களில்,ஆற்றோரம், வீதிகளில்அகலக் கைபரப்பி விரிந்த டவர்களில்,கோபுரத்தில், கொலுவீற்ற மண்டபத்தில்,கருவாட்டுக் கூடைகளின்ஆலவட்ட அண்மைகளில்,சேலோடும் விழிகளில்சிவந்தோடும் நாணப்புன் நகையாரொப்பகடைக்கண் வீசி எக்களிக்கும் இறுமாப்பில்,இருட்பால் திரிந்தெங்கும் இறகு விரித்ததெனக்கருப்பால் மிளிரும் கூரலகுக் கானவளம்மறுக்கின்ற காதுகளின் ஓரங்களில்,தம்மினத்தின் இறப்பொன்றில்தாம் கூடி ஓலமிடும் துயர்க் குழுவில்,எங்கெங்கோ திரிந்துஇதுவரையில் காத்திட்ட தன்னுயிரைஇயலாமல் விட்டதுவோ,மின் சுட்டு விழுந்ததுவோ,புன்மைக் கவட்டைக் கல்புட்டத்தில் பட்டதனால்பட்டுப் போய்விட்டதுவோ,ஏனென்று தெரியாமல்ஏதும் பொருள் புரியாமல்ஏக்கப் பார்வையொன்றைஇறக்குங்கால் வாக்குமூலம்ஆக்கிவிட்டு ஆதிமூலம்நோக்கிடவே நடுரோட்டில்போக்கறியா காக்கையொன்றின்பொன்னுடலம் என்விழிநீரில்;சமன் செய்த செங்கோலாய்ச்சென்றுவிட்ட டயர் ஒன்றின்அச்சைச் சுமந்தபடிஅய்யோவெனக் கிடக்கும் அக்காக்கை;குறையோ முறையோவெனக்கூடியினம் அரற்றியபின்கரையா விதிகிழிக்கவொண்ணாக்கூரலகின் வண்ணவுடல்;விதியின் வழித்தடத்தில்விரையும் வினைவண்டிஅரைத்துப் பொடியாக்கியதில்அங்காந்து கிடக்கின்ற சீவன் நானொருவன்;வெங்காந்த அருளுக்குவேகாத வேதாந்தவாயாடிப் போய் வீழ்ந்தவீணன் எனை விடவும்வித்தகக் காக்கை மேலென்றுவிட்டுவந்தேன் இருசொட்டு.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன் ஆகியோருக்கு.திரு நடராஜன் சார், ஏதோமயக்கத்துல இருக்கீங்க. என்னோட பழகினாத்தான் என் பவிசு என்னன்னு தெரியவரும். எழுத்தைக் கண்டு ஏமாறாதீர்கள்.வேறு குழுமத்தில் இப்படித்தான் என்னை நானே யார் என்று யோசித்துப் பார்க்கும் நிலையில் ---என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.அறிஞன் -- ஒத்துவராது;ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது;புனிதன் -- காத தூரம்;நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்;அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது;ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்;சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும்அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது.‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’ என்ற அலுப்பு.***
2011/1/21 sk natarajan <sknatar...@gmail.com>
நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன் ஆகியோருக்கு.திரு நடராஜன் சார், ஏதோமயக்கத்துல இருக்கீங்க. என்னோட பழகினாத்தான் என் பவிசு என்னன்னு தெரியவரும். எழுத்தைக் கண்டு ஏமாறாதீர்கள்.வேறு குழுமத்தில் இப்படித்தான் என்னை நானே யார் என்று யோசித்துப் பார்க்கும் நிலையில் ---
என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.அறிஞன் -- ஒத்துவராது;ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது;புனிதன் -- காத தூரம்;நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்;அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது;ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்;சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும்அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது.‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’ என்ற அலுப்பு.***
2011/1/21 sk natarajan <sknatar...@gmail.com>
தேவரீரை அடியேன் வகைப்படுத்தலாமா ? கோவப்பட மாட்டீரே
நீவிர் துணிச்சலில் பிரகலாதாழ்வான்; செருக்கில் இரணியன்
(அதனால்தான் இலக்கியத் துணிச்சலையும், இலக்கியச் செருக்கையும்
ஒருசேரக்காண முடிகிறது)
”ஜ்ஞாநே ப்ரயாஸமுபதாஸ்ய நமந்த ஏவ
ஜீவந்தி ஸந்முகரிதாம் பவதீய வார்த்தாம்”
என்னுமொரு பாகவத ச்லோகம் நினைவுக்கு வருகிறது.
ஸ்மாரயே த்வாம் ந சிக்ஷயே
தேவ்
On Jan 21, 8:56 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன்
> ஆகியோருக்கு.
>
> திரு நடராஜன் சார், ஏதோமயக்கத்துல இருக்கீங்க. என்னோட பழகினாத்தான் என் பவிசு
> என்னன்னு தெரியவரும். எழுத்தைக் கண்டு ஏமாறாதீர்கள்.
>
> வேறு குழுமத்தில் இப்படித்தான் என்னை நானே யார் என்று யோசித்துப் பார்க்கும்
> நிலையில் ---
>
> என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.
>
> அறிஞன் -- ஒத்துவராது;
>
> ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது;
>
> புனிதன் -- காத தூரம்;
>
> நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்;
>
> அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது;
>
> ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்;
>
> சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.
>
> கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும்
>
> அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது.
> ‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’
> என்ற அலுப்பு.
> ***
>
> 2011/1/21 sk natarajan <sknatarajan...@gmail.com>
>
> > ஐயா அருமை , அருவி போன்ற நடை , சித்தர் போன்ற சிந்தனை , உம் அருகே நான் அமர
> > எனக்கு கிடைத்ததே பாக்கியம்
> > ஒரு விண்ணப்பம்
> > ஒரு முழு திரைக்கதையும் மூச்சு வாங்காமல் சொல்லியது போல அமைந்துள்ளது
> > என் போன்ற ஒன்றும் தெரியாதவர்க்கு பகுதி ,பகுதியாக வழங்கினால் உங்களது ஓடையில்
> > நாங்களும் பயணிக்க ஏதுவாக இருக்கும்
> > தவறாக என்ன வேண்டாம்
> > குற்றம் இருப்பின் மன்னிக்கவும்
>
> > என்றும் அன்புடன்
> > சா.கி.நடராஜன்.
> >http://tamizhswasam.blogspot.com/
>
> > 2011/1/21 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> >> இலக்கியத் துணிச்சல் இழையில் நான் எழுதுவதால் சிலர் சொல்லவும் முடியாமல்
> >> மெல்லவும் முடியாமல் அவஸ்தைப் படலாம். எதற்கு நம்மால் சிரமம்? எனவே எனக்கென்று
> >> இருக்கும் ’இலக்கிய கர்வம்’ இருக்கவே இருக்கிறது. இனி ஏதாவது எழுதினால் இதில்
> >> எழுதலாம் என்று உத்தேசம்.
>
> >> *கூடு பாய்தல் *
> >> ********************* *
> >> *
> >> *
> >> *
> >> *
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
>
> ...
>
> read more »
கூடடையும் கோதுகலத்தில்- எனக்குப் பொருள் புரியவில்லை.குதுகலமா
என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.
நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன் ஆகியோருக்கு.
திரு நடராஜன் சார், ஏதோமயக்கத்துல இருக்கீங்க. என்னோட பழகினாத்தான் என் பவிசு என்னன்னு தெரியவரும். எழுத்தைக் கண்டு ஏமாறாதீர்கள்.வேறு குழுமத்தில் இப்படித்தான் என்னை நானே யார் என்று யோசித்துப் பார்க்கும் நிலையில் ---
என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.
அறிஞன் -- ஒத்துவராது;ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது;புனிதன் -- காத தூரம்;நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்;அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது;ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்;சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும்அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது.‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’ என்ற அலுப்பு.***
2011/1/21 sk natarajan <sknatar...@gmail.com>
”சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.
சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.
என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.

இலக்கியத் துணிச்சல் இழையில் நான் எழுதுவதால் சிலர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவஸ்தைப் படலாம். எதற்கு நம்மால் சிரமம்? எனவே எனக்கென்று இருக்கும் ’இலக்கிய கர்வம்’ இருக்கவே இருக்கிறது. இனி ஏதாவது எழுதினால் இதில் எழுதலாம் என்று உத்தேசம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருலோக சீதாராமனின் கவிதைகளைத் தொகுத்துக்
காலவரிசைப்படி அளிக்கலாம்.
புத்தகங்கள் அச்சிடப் பல பதிப்பகங்களும் இருக்கின்றன.
அடுத்த தலைமுறை அவர் கவிதைகள் வாசிக்க
வாய்ப்பாகும்.
அன்புடன்,
நா. கணேசன்
On Jan 22, 1:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> இலக்கியவாதியின் ஆளுமையை உற்றுநோக்கி அவர் படைக்கும் இலக்கியத்துக்கு மற்றொரு
> கவிஞரின் தாக்கம் (திருச்சிற்றம்பலக் கவிராயர்) இருப்பதை ஒட்டி இவர்
> திருவரங்கக் கவிராயர் அல்லது திருவரங்கக் கவியரசு என்று அழைக்கலாம்
> நாகராசன்
>
திருச்சிற்றம்பலக் கவிராயர் தனித்தமிழா?
நா. கணேசன்
> 2011/1/22 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
>
>
> > 2011/1/21 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> >> என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன்.
>
> > உங்களை நீங்களே வகைபடுத்தி கொள்வது முறையல்ல.
>
> > நான் வகைபடுத்துகிறேன்.
>
> > "பண்டிதர்"
>
> > --
> > செல்வன்
>
> > வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
> > பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
> > நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
> > நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
> > படிப்பினை தந்தாகணும்.
>
> > www.holyox.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
நன்றி ஆசீர்வதித்த பெரியவர்கள் இன்னம்பூரர், திரு வினைதீர்த்தான், திரு நடராஜன் ஆகியோருக்கு.
On Jan 23, 9:27 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> நுவல்வதிலே திருலோகன் அஞ்சா நெஞ்சன்
> தக்க நூற்கள் ஆய்ந்தோன்’
>
நூற்கள் என்பதில் சந்தி சரியா?
ஆராதி, நீங்கள், ராஜம், ஹரிகி, ... கருத்துரைக்க
வேண்டுகிறேன்.
நா. கணேசன்
> --- என்று.
>
> (தொ...)
> *
> *
நூற்கள் என்பதில் சந்தி சரியா?
ஆராதி, நீங்கள், ராஜம், ஹரிகி, ... கருத்துரைக்க
வேண்டுகிறேன்.
நா. கணேசன்
On Jan 23, 8:34 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > நூற்கள் என்பதில் சந்தி சரியா?
> > ஆராதி, நீங்கள், ராஜம், ஹரிகி, ... கருத்துரைக்க
> > வேண்டுகிறேன்.
>
> > நா. கணேசன்
>
> பொதுவாக நூல்கள், கால்கள், வேல்கள், சால்கள், பால்கள் (ஆண்பால், பெண்பால்)
> என்றுதான் வரும். -கள் விகுதியில் பொதுவாக வலி மிகாது. வாழ்த்துகள், போத்துகள்
> என்றுதான் வரும். வாழ்த்துக்கள், போத்துக்கள் என்று வருவதி்ல்லை.
>
ஆம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்
> அது இருக்கட்டும். உங்களுக்குதான் இந்த இலக்கணத்தில் எதுவுமே பொருந்தாதே!
> நீங்கதான் பீற்றர் உடற ஆளாச்சே! பீற்றர் சரி என்றால் நூற்கள் சரி. நூற்கள்
> சரியில்லை என்றால்..... வேணாப்பா....அன்ட்ரமீடா (ஓகோகோ மடந்து விற்றேன்.....
> அன்றமீறா) வாருங்கள். நுற்பமாக நூல் விற்றுக்கொள்ளலாம். :)
>
ஆங்கில t எப்படி எழுதுவது என்பதில் வேறுபாடுகள் உள்ளன.
மலையாளத்தில் t என்பது கிரந்த ட் வைத்து எழுதலாம்
என்றும் குறிப்புள்ளது.
அன்புடன்,
நா. கணேசன்
ஆங்கில t எப்படி எழுதுவது என்பதில் வேறுபாடுகள் உள்ளன.
On Jan 23, 8:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
j (jean) - ழ என்று குறிக்கலாமா? :)
j (jean) - ழ என்று குறிக்கலாமா? :)
--
ஹரிகி,ஆங்கிலத்தில் பல இடங்களில் சி கே ஆவது உங்களுக்கு தெரியுமே. அதுனால் அது லோக் க்கும் விச்சும் சரிதானே
“எங்கு சென்றதோ அச்சோதிஎன்னுள்ளே மறைந்தது”
என்று முடித்திருந்தேன். உற்றுக் குவிந்த முகத்தில் ஏதோ ஒரு பெரும் புதையலையே கண்டுவிட்டது போல் ஆர்வம் ததும்ப,“
மாகவிஞன் திருலோகம் 1....இத்தகைய கவிப்பெருமிதம் அவரிடம் சூழலிட்டுக் கொண்டிருந்ததற்கு இக்கட்டுரையாளனும் அத்தாட்சி. கவிதையை மட்டும் பார்த்த அவருடைய செவிகள், கண்ணில் தெரியும் மேல் தோற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்பதற்குச் சான்றாக என் நினைவில் குமிழிடும் சம்பவம் ஒன்று. நான் அப்பொழுது சிறுவன். மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவன். வீட்டிற்கு வந்திருந்த கவிஞரிடம் தந்தையார், ‘இவன் ஏதோ கவிதையென்று சிலவற்றை எழுதிக்கொண்டிருக்கிறான். நீங்கள்தாம் அதைக் கேட்டு அவனைச் சரியான வழியில் செலுத்த வேண்டும்’ என்று கூறினார். மகிழ்ச்சியும், பயமும் கலந்த மனநிலையில், குறிப்பேட்டின் கடைசிப் பக்கத்தில் எழுதி வைத்திருந்த கவிதை ஒன்றைப் படித்துக் காண்பித்தேன்.வானிலிருந்து ஜோதி ஒன்று வந்ததாகவும், அது கடவுள் என்று தோற்ற, அதனிடமே, கடவுளை இல்லையென்பாரும், உளது என்பாருமாய்க் கூறுவோர் பலராக இருக்கும் அதிசயத்தைக் கேட்பதுபோல் ஆரம்பிக்கும் அந்தக் கவிதை. அந்த ஒளியும் அதற்குப் பதிலாகத் தானே அனைவருள்ளும் இருந்து, அனைத்துவிதமாகவும் உரைப்பதாகவும் கூறியது மேலும் அதிசயமாக இருக்க, விழித்த என் முன்னிருந்து,
“எங்கு சென்றதோ அச்சோதிஎன்னுள்ளே மறைந்தது”என்று முடித்திருந்தேன். உற்றுக் குவிந்த முகத்தில் ஏதோ ஒரு பெரும் புதையலையே கண்டுவிட்டது போல் ஆர்வம் ததும்ப,
“அங்குதான், அந்தக் கடைசி வரியில்தான் இருக்கிறது கவிதை” என்று கவிஞர் ஆர்ப்பரித்தது என் நினைவில் பதிந்து, கவிதையை இனங்காணும் பயிற்சியை எனக்குத் தந்திருக்கிறது. அவர் சொன்ன பின்னர்தான் என்னுடைய கவிதையே எனக்கே புதிய ஒளியில் அன்று, எழுதும் கணத்தில் இருந்த சுய ஒளியில் தெரியத் தொடங்கியது. நான் அவரிடம் எதிர்பார்த்த எதிர்வினை, ‘பேஷ்! நன்றாக எழுதுகிறாயே! மேற்கொண்டு நிறைய எழுது. நன்கு படியும்’ என்பது போன்ற உபதேசத்தைத்தான். ஆனால் அவரோ கவிதையை மட்டும்தான் பார்த்தார்.அப்படி அவர் இயற்றிய கவிதைத் தவம்தான் என்ன? எந்த நோன்பிருந்து அத்தகைய சித்தி கைவரப் பெற்றவர் ஆனார்? கவிதைகளை மனப்பாடம் செய்யும் பயிற்சியா? அல்லது வாக்சாலமாக உரையாற்றும் திறமையா? இவைகளை வைத்துக்கொண்டு அவரை அடையாளம் காட்டுவோரும் உண்டு என்றாலும், கவிதை என்னும் கட்டெழில் களிபொங்கித் ததும்ப, அவர் கைக்கொண்ட குளிகை என்ன என்று நாம் அவர் எழுத்துக்களிடையே, அவர் பேசிய பேச்சுக்களிடையே, அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிடையே தேடித்துருவிப் பார்த்தால் சில தடயங்கள், தகவல்கள் கிடைக்கின்றன.உதாரணமாகக் கவிஞர் எழுதுகிறார், தமது ‘இலக்கியச் சுவை’ என்ற கட்டுரை ஒன்றில்.“தமிழ்க் கவிதைகளை அவற்றின் தொனிப் பொருளும், கற்பனை வண்ணமும் பொலிய இசைத்துக் காட்டும் இயல்பு எனக்குண்டு...கவிதைகளை இசைப்பதில் நான் கையாளும் முறையை மகிழ்ந்தவர் பலராயினும், அம்முறையை விளக்கிக் காட்டுமாறு என்னை அணுகுவோர் வெகு சிலரே. இன்னும் சிலராவது இதைக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.”இவ்வாறு கவிதை இசைப்பதில் உள்ள சூட்சுமம் என்ன? எவ்வாறு இசைத்தால் தமிழ்க்கவிதை தன் ஆழ்பொருள் சுரந்து நிற்கும்? என்பதற்கு ஒரு சம்பவம், எங்கள் வீட்டில் நடந்தது, நினைவிற்கு வருகிறது.(தொ..)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாகவிஞன் திருலோகம் 1....
திருவரங்கத்தில் ஒரு நாள் மாலை அப்பொழுதுதான் தந்தை அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். வாசலில் கவிஞர் கூப்பிடும் குரல் கேட்க, வந்த அலுப்பெல்லாம் எங்கோ மறைந்துவிட, எங்கள் அனைவருக்கும் பொழுதே பொன்னாக மாறத்தொடங்கியது. கவிஞர் வந்திருக்கிறார் என்றதும், எதிர்சாரியில் இருந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் (பெயர் வேண்டாம் என்று நினைக்கிறேன்) கவிஞரைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற்காக வந்தார். வந்தவர் பாரதியைப் பற்றி உணர்ச்சி பொங்கப் பேச ஆரம்பித்து, ‘பாரதி கவிதைகளைச் சொன்னாலே உணர்ச்சி நமக்கும் வந்துவிடும் அளவிற்கு அமைந்து இருக்கின்றன. உதாரணமாக ‘வீரத்திருவிழிப் பார்வையும் வெற்றிவேலும் மயிலும் உடன் நின்றே’ என்ற பாடலின் ஆரம்ப வரிகளைச் சாதாரணமாக இசைகூட்டி ராகத்திற்கேற்பப் பாடுவதுபோல் பாடத்தொடங்கினார். பாடகர்கள் சாதாரணமாக இப்படித்தான் பாடுகிறார்கள் என்பதால் எங்களுக்கு ஒன்றும் வித்யாசமாகத் தெரியவில்லை. ஆனால் கவிஞரால் பொறுக்க முடியவில்லை. பாய்ந்தார்.“நிறுத்துங்கள். தமிழ்க் கவிதையில் அதற்குள்ளேயே இசை அமைந்து இருக்கிறது. நெடிலை நீட்டி, குறிலைக் குறுக்கிச் சொன்னால் அந்த இயல்பான இசை தன்னைப் போல் வெளிப்படும்.. அதை விட்டுவிட்டு நீங்கள் யார் புதிதாக ஓர் இசையை அதன்மேல் ஒட்டவைப்பதற்கு? நெடிலையும், குறிலையும் குற்றுயிராக அடித்துவிட்டு? நெடிலை நீட்டினால் போதும், குறிலைக் குறுக்கினால் போதும்; இந்தச் சூட்சுமம் ஒரு தமிழ் படித்த முண்டத்துக்கும் தெரிய மாட்டேன் என்கிறது” என்று பொழிந்து தள்ளிவிட்டார்.எங்களுக்கு ஒரு பக்கம் பேராசிரியரைக் கண்டு ‘ஐயோ பாவம்’ என்ற அநுதாபம்தான் என்றாலும் அன்று நாங்கள் கற்றுக் கொண்ட பாடம்தான் எத்தனை மதிப்புடையது! (அதை அந்தப் பேராசிரியரும் உடனே உணர்ந்துகொண்டார் என்பதையும் சொல்ல வேண்டும்) அந்தப் பாடத்திற்குப் பின் தமிழ்க் கவிதை எங்களோடு எவ்வளவு நேசம் கொள்ளத் தொடங்கியது என்பது அனுபவத்தில் கண்ட பலன்.ஆனால் கவிஞரின் இந்த ஒளிவு மறைவற்ற உண்மையான எதிரியக்கத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள், ‘அவரா? வல்வாயர், கர்வி’ என்று தங்கள் காயங்களைத்தாம் தடவி விட்டுக்கொண்டு போனார்கள்.இவ்வாறு இயங்கும் போது கவிஞர் எந்த உண்மையில் உணர்வுக்கால் ஊன்றி நிற்கிறாரோ அதே உண்மையில் ஊன்றி நின்றுதான் ஒரு சிறுவன் எழுதிய கவிதை வரிகளையும் கவனித்திருக்கிறார். கவிதையைக் கண்டதும் மகிழ்ச்சியும், செவிகாணும் கவிதையைச் சொல்பவர் மறைக்க முயல்வதைக் கண்டு சீற்றமும் எனக்கு என்னவோ ஒன்றாகத்தான் தெரிகிறது. உணர்ச்சிகள் என்ற வடிகாலின் பிரிவுகளைக் கணக்கில் எடுக்காமல், ஊற்றுக்கண் ஒன்றே என்று பார்த்தால் இது புரியும்.(தொ..)--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாகவிஞன் திருலோகம் 1....
நாமக்கல்லில் பாரதி பேச்சின் சந்தர்ப்பத்தில் சற்றே நேரம் கடந்துவந்த கவிஞரைக் காசிராஜன், திரு சத்தியசீலன், திரு அறிவொளி, திரு புத்தனாம்பட்டி ராஜகோபாலன் ஆகியோர் அவருடைய கவிதை ஒன்றை அவர் வாயால் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். அப்பொழுது தாம் பாடிய ‘சந்தையில் கவிதை’ என்ற கவிதையை இசைத்துக் காட்டினார்.“மச்சு வீடுதான்,மாடியில்.....கூரை இல்லை.என்னினும்..இருள்வான் உண்டே !உச்சியில் கொடுங்கைஉளுத்துக் கொட்டும்உள்ளத் தினவின்ஒளித்துகள்,அதனை ஒத்தி எடுத்துஒன்றாய்த் திரட்டிஒற்றைத் தெருவின் மூலையில்நின்று கத்தினால் ---தணியாக் காமமும்கள்ளும்கள்ள விலைக்குக் கவிதைக் கொசுரும்வாங்கிடும் புண்ணியவான்கள்யாரும் வரலாமன்றோ!வாசலில் சேவல்கூவிடு முன்னம்கோட்டை மணியும் குழைந்தது;கனவு குலைந்தது.போ, போபைத்தியம்உலகப் பக்குவம் இன்னும் பெற்றிலை,கவிதையோர் பிழைப்பா?உலர்ந்தவாய் வெற்றிலைக்குவக்கிலை என்றுஅசை போட்டுவெறும் வாய் வெளுத்தனை பொழுதாய் !உச்சிப் பிள்ளையார்ஊமையாய்ச் செவிடாய்உறங்கிப் போன மலைமணிவைகறைப்பச்சைப் பிள்ளைபாலுக்கழுவதைப்பாரோர் கேட்கப் பறையறைகின்றது;அவரவர் எழுந்து அவதிகள் எண்ணித்தலைப் பொறியாகத் தவிப்பார்.சந்தை இரைச்சலில்கவிதை யாருக்கு வேணும்?கற்பனை விட்டுக் கணக்கிதைப் போடு;நேற்று மாலையில் நீட்டி முழக்கிக்கோற்றேன் கவிதை கொப்பளித் திருந்தகவிஞன் பெற்றியைக் கற்பனை விந்தையைக்கதைத்தாய் !விமரிசனக் கடையும் விரித்தாய்.கூட்டம் கொஞ்சமா?கொண்டவர் யாரும் உண்டா?அந்த உருப்படிஅச்சில் வார்த்தால்யாரும் வாங்கிட வருவரா?பிரதிகள்அன்பளிப்பாகஆளுக்கொன்றாய்அளித்தால் “நன்றே ஆ ! ஆ!’ என்பர்.வெட்டிப் பிழைப்புவிடிந்தால் நாளைஎட்டையா புரத்தில் எழிலார் சென்னையில்இன்னும் பற்பல இனைய பல்லூரில்எந்தமிழ்த் தந்தைஇணையிலாக் கவிஞன்இறந்த நாளைஎத்துணை மகிழ்வாய்க்கூடித் திருநாள் கொண்டா டுவர், பார் !மந்திரி மாரும் மகரா சர்களும்போனவன் பெருமை புகழ்வார்ப்புகழவீணன் உனக்கும் வேலையுண் டாங்கேபாரதி உறங்கும் பளிக்குக் கல்லறைபக்கத் தின்னும் பற்பல !ஒன்றில் முடங்கலாம் நீயும்;மூன்றா நாளில் எழுந்தும் வரலாம்.இணையிலாக் கவி நீ !இல்லையென் றாரே இயம்பினார்?இன்றுபிழைக்கும் வழியைப் போய்ப்பார்உடனேபுறப்படென் றொருகுரல் கேட்கப்போர்வையை விலக்கிப் புறப்பட் டேனே.(தொடரும்)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாகவிஞன் திருலோகம் 1....
இவ்வாறு இயங்கும் போது கவிஞர் எந்த உண்மையில் உணர்வுக்கால் ஊன்றி நிற்கிறாரோ அதே உண்மையில் ஊன்றி நின்றுதான் ஒரு சிறுவன் எழுதிய கவிதை வரிகளையும் கவனித்திருக்கிறார். கவிதையைக் கண்டதும் மகிழ்ச்சியும், செவிகாணும் கவிதையைச் சொல்பவர் மறைக்க முயல்வதைக் கண்டு சீற்றமும் எனக்கு என்னவோ ஒன்றாகத்தான் தெரிகிறது. உணர்ச்சிகள் என்ற வடிகாலின் பிரிவுகளைக் கணக்கில் எடுக்காமல், ஊற்றுக்கண் ஒன்றே என்று பார்த்தால் இது புரியும்.(தொ..)--
மாகவிஞன் திருலோகம் 1....
தந்தையாரோ, ‘அதெல்லாம் உங்களைப் போன்ற சில மேதைகளுக்குச் சரிப்பட்டு வரும்.
***
(தொ...)--
மாகவிஞன் திருலோகம் 1....
, இதற்கெல்லாம் விடிவாகத் தாம் அந்தச் சீட்டையே பேசாமல் பதிப்பகத்தாருக்கே திருப்பி அனுப்பிவிடுவதாகவும், இதனால் பணம் வரவில்லையானாலும் குறைந்தது தம்மிடம் உள்ள நல்ல பண்புகள் குறையாமலாவது இருக்கும் என்று தாம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு கடிதத்தோடு அந்தச் சீட்டைப் பதிப்பகத்தாருக்கே திருப்பி அனுப்பச் சொல்லிவிட்டார் கவிஞர்.நண்பருக்குக் குழப்பமாக இருந்தாலும், கவிஞரிடம் உள்ள பெரும் விச்வாசத்தினால் ஒரே மனத்துடன் அவ்வாறு செய்துவிட்டார். ஒரு லாபம் அவருக்குக் கைமேல் பலனாய்க் கிடைத்தது. பிரச்சனை ஒழிந்தது என்று நிம்மதி லாபமாகியது. அப்புறம் அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஆச்சரியம் சிறிது நாள்களில் பதிப்பகத்தாரிடமிருந்து மன்னிப்புக் கடிதத்துடன் அவருக்கு உரிய பணமும் வந்து சேர்ந்தது.
(தொ...)--
மாகவிஞன் திருலோகம் 1....
இன்னும் பற்பல இனைய பல்லூரில்எந்தமிழ்த் தந்தைஇணையிலாக் கவிஞன்இறந்த நாளைஎத்துணை மகிழ்வாய்க்கூடித் திருநாள் கொண்டா டுவர், பார் !
(தொடரும்)
On Jan 30, 9:48 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *மாகவிஞன் திருலோகம் 1.... *
> *
> *
> நாமக்கல்லில் பாரதி பேச்சின் சந்தர்ப்பத்தில் சற்றே நேரம் கடந்துவந்த கவிஞரைக்
> காசிராஜன், திரு சத்தியசீலன், திரு அறிவொளி, திரு புத்தனாம்பட்டி ராஜகோபாலன்
> ஆகியோர் அவருடைய கவிதை ஒன்றை அவர் வாயால் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.
> அப்பொழுது தாம் பாடிய ‘சந்தையில் கவிதை’ என்ற கவிதையை இசைத்துக் காட்டினார்.
>
இந்தக் கவிதை அச்சில் இருக்கிறதா?
(அ) முதல்முறை எழுத்து வடிவம் பெறுகிறதா?
திருலோகத்தின் கவிதைகள் முழுதும் சில தொகுதிகள்
ஆகவேண்டும். உங்களைப் போன்ற அன்பர்கள்
சேர்ந்தால் அந்த முயற்சி நிறைவேறும். நீங்கள்
தலைமையேற்று அந்த அரிய பணியை
நடத்த வேண்டுகோள் விடுக்க்றேன்.
அன்புடன்,
நா. கணேசன்
இந்த மாகவிஞன் தன் காலத்தில் அந்தப் பகுதியில் - குறிப்பாக தஞ்சை, திருச்சியில்- உள்ள அத்தனை அறிஞர்களையும் தன் பால் தன் கவிதையால் ஈர்த்தவர் என்பது நம் ரங்கனாரின் பதிவின் மூலம் மட்டுமல்லாமல் திரு டி.என்.ராமச்சந்திரன் (சேக்கிழார் அடிப்பொடி) மூலமும் ஏற்கனவே தெரிந்து ஆச்சரியப்பட்டவன். இங்கு 10 வருடங்களுக்கு முன்னால் நடந்த கண்ணதாசன் விழாவில் கண்ணதாசனை துளியூண்டு சொல்லி விட்டு திருலோகம் பற்றி ஆரம்பித்து விட்டார் சேக்கிழார் அடிப்பொடி. பின்னால் காரணம் கேட்டோம். கவிதை என ஆரம்பித்தவுடன் இந்த மாகவிஞன் என் நாவில் வந்து விட்டார்.. என்ன செய்வது என்றார்..’கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்காசிருந்தால் வாங்கலாம்’ என்ற கண்ணதாசனின் கவிதையை சொல்லிவிட்டுசந்தையில் கவிதை வரிகளையும் அவர் சொல்லியது என் நினைவுக்கு வருகிறது..
தொடருங்கள் ரங்கனாரே!
யாரும் வாங்கிட வருவரா?பிரதிகள்
ஒரு கிருஷ்ணமூர்த்தி இந்தத் தொடரை எழுதச் சொல்லிக் கட்டாயப் படுத்தியவர். திருலோகத்தின் குடும்பத்தினரோடு தொடர்பு உடையவர்.நீங்களோ சுந்தர கிருஷ்ணமூர்த்தி. கவிஞரோடு பழகி, சிவாஜியில் எழுதி, இங்கே என்னை ஆசிர்வதிக்கவும் வந்துள்ளவர்.மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.“இருவராய் வந்தார்; என்முன்னே நின்றார்”
2011/1/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அப்படியா திரு கிருஷ்ணமூர்த்தி!என்ன பெயரில் எழுதினீர்கள் சிவாஜியில்? உங்கள் சொந்தப் பெயரிலேயேவா?
2011/1/31 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>
அப்படியா திரு கிருஷ்ணமூர்த்தி!
என்ன பெயரில் எழுதினீர்கள் சிவாஜியில்? உங்கள் சொந்தப் பெயரிலேயேவா?
2011/1/31 S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com>
அன்புமிக்க மோஹனரங்கன்!
| I shot an arrow into the air, It fell to earth, I knew not where; For, so swiftly it flew, the sight Could not follow it in its flight. I breathed a song into the air, It fell to earth, I knew not where; For who has sight so keen and strong, That it can follow the flight of song? Long, long afterward, in an oak I found the arrow, still unbroke; And the song, from beginning to end, I found again in the heart of a friend. ] |
2003 ஏப்ரல் என்று நினைவு. இலக்கியச் சிந்தனை அமைப்பில் ‘திருலோக சீதாராம்’ பற்றி ஓர் உரையாற்றினென்.யார் நினைவில் கொண்டார்களோ இல்லையோ அருமை நண்பர் திரு சைதை முரளி அதை அப்படியே குறிப்பெடுத்துத் தம் ப்ளாக்கில் 2007ல் ஏற்றி வைத்திருக்கிறார்.அது மட்டுமன்று. மின் தமிழில் வந்த என்னுடைய போட்டோவையும் பின்னர் போட்டு தம் ப்ளாக்கில் மகிழ்ந்திருக்கிறார். இது எதேச்சையாக ப்ரௌஸ் செய்யும் போது என் கண்ணில் தட்டுப் பட்டது. என்னிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி மூச்சு விடவில்லை மனிதர்.புரியவில்லை. நாம் செய்யும் செயலின் விளைவுகள் நம் கையில் இல்லை என்பது உண்மைதான்நன்றி என்று சொல்ல எனக்கு அதிகாரம் உண்டா தெரியவில்லை.2011/1/31 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அத்வைத நிலையிலும்....?-----------------------------------------------------ஒரு காலும் தாண்டிவிட முடியாதசுவர்களின் பின்னே நின்றபடிதான்ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம்கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள்அல்லது கண்களைத் தடை செய்யாதுவெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர்.மிகமிக நேரிடையான சுருக்கு வழியும்சுற்றிவளைத்த சுழல்வழி எனசார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும்இணையும் கைகளுக்கு நடுவிலும்அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர்.சுவர் சமயத்தில் பல உடுப்புகளும்வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு.ஆண் பெண் கிழவர் குழந்தைஅந்நியள், நம்மவள், எவனோ, இவளோஇவரோ, அதுவோ,அவர்களோ, இவர்களோ, உவர்களோஎனப்பல எனப்பல எனப்பலநினைப்பினில், நடப்பினில்,நனவினில் நடைமுறை நிஜத்தினில்கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில்தடைச்சுவர் கண் மறைக்காமல்எண் மறைக்காமல்எங்கோ எப்படியோ எவ்விதமோதட்டுப்படும் தடைச்சுவர்தோன்றாமல் தோன்றி.நீயும் நானும் வேறிலாது நிற்கநயந்தாலும் நளினமான விலகல்பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவுஅயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம்கடக்க முனைந்த கால்தூரப்பட்டுப் பின்னடையும் மாயம்இத்தனைக்கும் நீயும் நானும்பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம்.இன்னும் சொல்லப் போனால்என்னுள் நீயும் உன்னுள் நானும்உயிர்த்த கணங்களும் உண்டுதானே!ஆயினும் தொலைவு இடையிட்டபாடுடைப் போலிகளோ நாம்?போயினும் வருவோம்என்ற நம்பிக்கையில்விலகிச் சேயிடைப்படா நிற்கும்ஓருயிரின் பல பிம்பங்களாய்ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த்தனித்தனி உயிர்களின்பிம்பங்களே மெய்மைகளாய்அம்புவியில் வளைய வரும்நெருக்க விழைவின் முறிவுகளாய்உருவு சுமந்த அந்நியங்களாய்உருக்கரந்த அந்நியோந்நியமாய்வெருவரத் திரிதரும்உயிர்க்குலக் கரவறப்பயிலொளி அன்பென நின்றதும்எதுவென அறியா முனைப்பினில்கதுவிடும் மோனம் முகிழ்த்திடும்சதுரது சத்தியம் என்றிடும்குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும்யதுகுல முரளியின் பண்களோ?ஆயினும்உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன்என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன்நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன்நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன்நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்றுமற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன்சுற்றமாய்க் கலந்து கலக்கஉற்றதும் உறுவதுமாய்நிலவிடும் ஒரு பெரும் விழைவுஅகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம்அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்?அத்வைத நிலையிலும் தீருமோஇந்த அணுகலால் விலகும் மாயமும்விலகிட அணுகிடும் விழைவும்?
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒரு சிறுகதை:நீ.....
ஆனால் பாவம், இந்த ஆண்பிள்ளைகள் அச்சுப் பிச்சுக்கள் பாவம். நமக்காவது காதல் என்பதற்குக் காதலன் தெய்வம் இருக்கிறது. இதுகளுக்குக் காதலி தெய்வம் எங்கிருக்கிறது? எல்லாம் அம்மா அம்மா என்று சொல்லிக் காதலியைத் தெய்வமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டதுகள். ஏதோ பாரதியே கஷ்டப்பட்டுக் கண்ணம்மா என்றெல்லாம் சொன்னாலும் மரபில் வரவில்லையே! ஒரு வேளை காதலி தெய்வம் ஏற்படாத காரணம்தானோ இதுகள் எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு மண்ணாந்தைகளாய் ஆகிவிடுகின்றன. ச ... ரொம்ப பாவம்...
ஒரு சிறுகதை:நீ.....அன்று காலையிலிருந்தே தான் ஆகிய ஜெனி ஏதோ எங்கோ மறந்து வைத்துவிட்டவளைப் போல்தான் பொருந்தாமல் இருக்கிறாள்.கைவிரல் நகங்கள் கச்சிதமாகக் கடிக்கப்பட்டுவிட்டன. முன்னத்தி மயிர்ச்சுருள் இறுக்கி, நெகிழ்த்தி, இறுக்கிப் பல ஆவ்ருத்தி ஆகிவிட்டது.பிரபாகரன் அவளுக்குக் காலையில் காப்பிப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தவனைப் பார்த்து, “நீ...” என்றவள்தான் பிறகு ஒன்றும் பேசவில்லை. பிரபாகரன் நயமறியும் ஜீவன். ஏதோ எண்ண ஓட்டம் என்று எடுத்துக்கொண்டு அவள் செய்யும் வழக்கமான வேலையை எல்லாம் தானே முடித்துவிட்டான். தெரியும் அவனுக்கு. அவளை இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வேலை செய்யத் தொணப்பினால் பல குளறுபடிகள் நடக்கும்.அவன் சுறு சுறுவென்று வேலை செய்வதை நெட்டுக்குத்தினால் போல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். ஏதும் அவள் அறியாள் என்பதும் உண்மை. ஆனால் அவன் தடுமாடும் போது தன்னிச்சையாக அவள் வாயும் பழக்கமும் சில உதவிக் குறிப்புகள் கொடுப்பதை வைத்து அவள் மனத்தில் பதிந்திருக்கும் இதெல்லாம் என்பது சொல்ல முடியாது.பிரபாகரனுக்குப் புதிதில்லை. ஆயினும் அவனுக்கு இது புரிபடவில்லை.பெரிய அக்கா ஒரு சமயம் அலுத்துக்கொண்ட போதும் அவனிடமிருந்து எந்த உடன்பாட்டுப் பதிலும் இல்லை --- ‘இதுக்குத்தான் வீட்டுல பெரியவா பார்த்துப் பண்ணி வைக்கணும்ங்கறது’அந்தச் சொல் ஜெனியின் மனத்தில் எப்படி தைத்தது என்று அவனுக்குப் புரியவில்லை. பின்னொரு சமயம் அவள் கேட்டாள் அவனை -- பெரியவா பார்த்து ஒரு பெண்ணை நீ பண்ணிக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா?பெரிய அக்கா கிடக்கிறா விடு!ஏன் பெரிய அக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?அவள் சொன்னதைத்தானே நீ கேட்கிறாய்?இல்லை. எனக்குத் தெரியாது அவள் சொன்னாளா என்று. ஏதோ எனக்குத் தோன்றியது.அவள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்வது சரி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் பிரபாகரன்.‘ஏன்? இவ்வளவு மாவு இருக்கிறதே. எதற்கு இப்பொழுது மீண்டும் ஊறப்போட்டாய்?’இல்லை. மிகவும் புளித்துப் போய்விட்டது. அது வேண்டாம்.இவனோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு. பால் பூத்திலா? இல்லை எதாவது நிச்சயம் ஏதோ கடையில்தான். என்னமோ ஒரு துள்ளல். இவனே வேறு மாதிரிதான் தெரிந்தான். அதுதான் இவனா? அல்லது இவன் தான் அதுவா? இது ஒன்றும் புரிந்து கொள்ள சுளுவாய்த் தெரியவில்லை. அக்கறை அன்பு கடமை பொறுப்பு இதில் எல்லாம் ஒன்றும் குறைவு இல்லை. இலட்சியக் கணவனா என்பது அநாவசியக் கேள்வி. நம்முடைய வாழ்க்கையை வேறு எங்கோ மாட்டிவைத்து ஒப்பிடுவது. ஆனால் அன்று நம் கண்ணுக்குப் பட்ட அந்தக் காதலன்...என்ன ஆனான்? அல்லது நாமும்தான் அவன் கண்ணுக்கு அப்படித்தானோ?ரொம்பப் பண்ணாத! தலைமுடி உதிரும் பார்த்து.சரி காதல் என்பதுதான் என்ன? உடல் இச்சைக்கு உள்ளம் பூசும் சாயமா? அப்படி என்றால் உடலோடு போய்த் தொலையாமல் உள்ளத்தை இந்தப் பாடு படுத்துவானேன். அன்று தேவ குமாரனாய்க் காட்சி தந்தவன் இன்று ஏன் மடைப்பள்ளி பரிசாரகன் போன்று ஆகிவிட்டான்? அவனுக்குத் தான் செய்யும் எந்தப் பணிவிடையிலும் அவன் தனக்குச் செய்ய என்றும் சளைத்தவனில்லை என்றாலும் அந்தக் காதல் மனிதன் மறைந்தவன் தான். காணவில்லை. இத்தனைக்கும் அன்று, காதல் காலத்தில் பேசிய பேச்சு எல்லாம் பிதற்றல். இன்றோ உளறாமல், தடுமாறாமல் எந்தச் சூழலையும் சமாளிக்கும் நேர்த்தி மிக்கவன். ஆனாலும் அந்தப் பிதற்றலில் திகழ்ந்த வாழ்வின் ஆழம் அடிமண் இட்டுப்போய் வாழ்வே கணுக்கால் அளவு ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.சாப்பிட்டுவிடு. ஆறுகிறது பார். மறுபடியும் கொஞ்சம் சூடு பண்ணிவிடவா?இல்லை. இப்படியே இருக்கட்டும்.எல்லாப் பெண்களின் வாழ்விலும் இப்படித்தானோ? காதலன் ஒரு தோற்ற மயக்கம் தானோ? கண்ணுக்கு மையிட்டுக் காணும் மயல் காட்சியோ? முன்னொரு முறை இதைப் பற்றி வினவியபொழுது வாழ்க்கை வேறு, கற்பனை வேறு என்று சொல்லிப் போய்விட்டான். ஆனால் அந்தக் காதலனை விரும்பித்தானே நான் இவனை மணந்தேன். அவன் மறைந்து போன இவனின் மிச்ச வடிவத்தை வைத்து வாழ்வு ஓடுவதை எப்படிச் சீரணித்துக்கொள்வது? எல்லாப் பெண்களுமே இப்படிக் காதலனை இழந்து இப்படிக் கொடுப்பினை இருந்தால் பரிசாரகனுடனோ அல்லது துரதிருஷ்டம் என்றால் பாதகனுடனோ தான் காலம் தள்ளுவர் போலும். ஆதியிலிருந்தே அப்படித்தானோ? அதனால்தான் வாழ்வின் முடை நாற்றங்களில் சிக்காத நிதய கற்பனையாக, கற்பனைக்கும் எட்டாத நிதய காதலனாக கிருஷ்ணனை வைத்தார்களோ? ஆஅம் அவன் ஒருவன் தான் காதலனாக இருக்க முடியும். மனிதர்கள் எப்படிக் காதலர்களாக இருத்தல் கூடும்? இங்குதான் நடைமுறை என்னும் தரைமட்டப் பிசாசு அனைத்துக் காதல்களையும் துடைத்துவிடுகிறதே. ராதையும் உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை. கிருஷ்ணனும் உலகத்தைச் சேர்ந்தவன் இல்லை. காதல் என்பதே உலக சமாச்சாரம் இல்லை.கையை அலம்பிண்ட்ரேன், காயறது பாரு.....ஹலோ....ஜெயபத்மாசினி...ஹாங்....அப்ப காதல் என்பதை யார் தமக்குள் நிரந்தரமாகக் குடிகொள்ள வைத்துவிடுகிறார்களோ அவர்களிடத்தில் கிருஷ்ண பிரஸன்னம் என்று கொள்ளலாமா? ராதையின் லீலை என்று சொல்லலாமா? ஆனால் பாவம், இந்த ஆண்பிள்ளைகள் அச்சுப் பிச்சுக்கள் பாவம். நமக்காவது காதல் என்பதற்குக் காதலன் தெய்வம் இருக்கிறது. இதுகளுக்குக் காதலி தெய்வம் எங்கிருக்கிறது? எல்லாம் அம்மா அம்மா என்று சொல்லிக் காதலியைத் தெய்வமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டதுகள். ஏதோ பாரதியே கஷ்டப்பட்டுக் கண்ணம்மா என்றெல்லாம் சொன்னாலும் மரபில் வரவில்லையே! ஒரு வேளை காதலி தெய்வம் ஏற்படாத காரணம்தானோ இதுகள் எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு மண்ணாந்தைகளாய் ஆகிவிடுகின்றன. ச ... ரொம்ப பாவம்...என்ன ஒரே யோசனை? இப்படியேவா உட்கார்ந்துண்ட்ருக்கப் போற?
ம் இல்லல்ல........... நீ....சாப்பிட்டாயா?சரிதான். இவ்வளவு நேரம் நீதானே பரிமாறினே.....சரி வா தூங்கு. ராத்திரி கண் முழிக்காத.*
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***





கண்ணால் வாங்கிக் கொண்டும் கையால் வேண்டாம் என்று சொல்லியபடியும் வாயை இறுக்க மூடியபடி நட்ந்தது சுசி.
வேலையின் பளுவில் இவ்விழைக்குள் நுழைய அவகாசமே இல்லை. என் காட்டில்
மட்டும் மழை இல்லை. உலகம் பூரா கொட்டி இருக்கிறது! எப்போ நான் இவ்விழையை
முழுசாப்படிக்க!
http://thiruvarangan.blogspot.com/2011/01/1.html
சிறுகதை பற்றிய அட்டகாசமான அலசல். இது போல் நிறைவாக இத்துறை பற்றிப்
பேசியவர் எழுத்தாளர் சுஜாதா.
என்னைப் பொறுத்தவரை தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பல்வேறு சோதனைகள்
செய்தவர். சிறுகதை குறித்த பட்டறைகள் நடத்தியவர். சிறுகதை குறித்து
கேள்வி-பதில் தொடர் நிகழ்த்தியவர். எல்லா வயதினருக்கும் பொருந்தும்
வண்ணம் கதை எழுதியவர்!
சிறுகதை என்பது வெண்பா இல்லாக்கவிதை என்பதில் எனக்கு உடன்பாடே!
ஆனால் சிறுகதை எப்படி இருக்க வேண்டுமென்று பல உதாரணங்கள் அளித்தாலன்றி
உங்களது புரிதலை மற்றவர் உணர்தலரிது. ஏனோ கானல்நீர் கண்டு தாகம் தீர்க்க
ஓடிய மானின் கதையாகிப்போகும்!
நம்மிடம் சிறுகதை கிடையாது என்று சொல்லிவிட்டு, அதுவும் நம் பௌராணிக
கதையாடலை கிண்டல் செய்துவிட்டு மீண்டும் தாங்கள் வியாசரிடமும்,
வால்மீகியிடமும் தஞ்சம் புகுவது அக்கதையாடல் மரபிலிருந்து தாங்கள்
இன்னும் முழுமையாய் வெளியேறும் முன் திறனாய்வு செய்யப்புகுந்தீரோ என்றொரு
சம்சயத்தை வாசகர் மனதில் எழுப்புகிறது..
சிறுகதை இதுதான், இதோ இதுதான் என்று விண்ணை நோக்கிக்காட்டும் பம்மாத்தாக
நம் எழுத்து அமையாமல், என் ரசனையில் இது, இதுதான் ரசிக்கிறது. இது, இது
கதையே அல்ல என்று உதாரணங்கள் காட்டினால் இன்னும் தெளிவு வரும்! (அதில்
நம் ரே.கா சம்ர்த்தர்)
உரைக்கட்டு என்று ஆண்டாள் பேசுவது எவ்வகை இலக்கியம் என்று தெரியத்தான்
இல்லை. சிறுகதைப் பரிணாமம் தமிழ் மொழியில் எப்படி என்று விரிவாக அலச
வேண்டிய கருதுகோள். சிறுகதை என்பது கதை சொல்லுதலின் ஒரு அம்சம் என்றுதானே
நீங்கள் காண்கிறீர்கள். நமக்கு நீண்டநெடிய கதை சொல்லும் மரபு உள்ளது.
கேட்டலே போஜனம் என்று சொல்லும் மரபு இது. இம்மரபு உருவாக்கும் சிறுகதை
ஆங்கில மரபு காட்டும் சிறுகதை போல் இருக்குமா? இருக்கத்தான் வேண்டுமா?
என்றும் கேட்டுக்கொள்ளலாம்.
ஒரு கதை என்பது சொல்பவனையும், கேட்பவனையும் பாதிக்க வேண்டும்.
அதற்காகத்தான் இந்த வழக்கமே முதலில் வருகிறது. காட்டில் வேட்டையாடிவிட்டு
வரும் மனிதன் மற்றோருக்கு கதை சொல்கிறான். அவன் அனுபவம் பூரணமாக
உள்வாங்கப்படும் போது அது கேட்பவனின் உயிரைக் காக்கும் அரிய
பொருளாகிப்போகிறது. கலாச்சார பரிணாமத்தில் கதை சொல்லுதலின் பங்கு மிக
அதிகம் கல்வி என்பதே கதை சொல்லலின் நீட்சிதான். கதை சொல்லுதல்தான் நம்மை
இவ்வளவு நெடிய பரிணாம வளர்ச்சியை குறுகிய காலத்தில் அளித்திருக்கிறது.
எனவே எழுத்து என்பது மனிதனை மாற்ற வேண்டும். மாறவிரும்பாதவன் படிக்கவே
வரக்கூடாது. சங்கப்பாடல் சொல்வது போல் ஒரு தாய் பெற்ற நால்வருள் கல்வி
கற்றோன் வேறுபட்டு, உயர்ந்த இடத்திற்குப் போய்விடுகிறான். கதையின்
வரைவிலக்கணத்தில் இதற்கும் இடமுண்டு.
இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளும் முன் தகவல்தொழில் நுட்பம் வேறொரு
தாவலில் இலக்கியத்தை வேறொரு இடத்திற்கு நகர்த்திவிட்டது.
ஆறாம்திணையின் பரிமாணங்களைப் புரிந்து கதை எழுதுமுன், நகர்நுட்பம்
(mobile devices, application) கதைகளை கையக்கத்திரைக்கு நகர்த்திவிட்டது.
சிறுகதையே அச்சின்னத்திரையில் பெரும் காவியமாகத் தோன்றும்.
அத்தொழில்நுட்பம் காட்டும் formatting க்குள் அடங்கும் இலக்கியம்
எத்தகையது? அது என்ன ஜ்ழானர்?
சின்னச் சின்ன வரிகள். அடர்த்தியான வரிகள். அதே நேரத்தில் தாங்கள்
சொல்லும் இலக்கணங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். பெரிய சவால்தான்.
அன்று நானும் முத்தெழிலனும் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். புதிய
முயற்சியிது. முயல வேண்டும்.
சிந்தனையின் வெளிப்பாடுதான் இப்பிரஞ்ச வியாபாரமே என்கிறது வேதம்! நம்
சிந்தனை செழிக்க உங்கள் திறனாய்வு இன்னுமொரு டானிக்.
வாழ்த்துக்கள்.
நா.கண்ணன்
வாசித்துப்பார்த்தேன்....ஒன்றுமே புரியவில்லை! ஆனாலும் அந்தக் கேள்வி
உள்ளே புகுந்துகொண்டு, மூச்சு முட்டுகிறது.
----------------------------
கதையா காரணமா
புரியாமல்
கிருஷ்ணமூர்த்தி
On Feb 20, 8:26 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
அஷ்ட வசுக்கள்தாம் உண்டு. அதில் ஒரு வசு பீஷ்மர்இங்கு கதையில் பிறந்து உடனே இறந்து படும் குற்றுயிர்களைக் குறிக்க 8 --1 =7 என்பது ஒரு குறியீடுதலைச்சன் மட்டும் இல்லை இறந்த முன்னோர்கள் எல்லாம் பித்ருக்கள் உலகத்திற்குப் போகிறார்கள் என்பது போல இந்த மாதிரி பிறக்க மட்டுமே வருகின்ற ஜீவன்கள் போகும் உலகம் தான் ஸப்த வசுக்களோ என்றபடிபுராணத்தை அப்படியே பொருத்திப் பார்த்தால் இந்தக் கேள்விகள் எழும். அல்பாயுசு என்ற இயற்கையின் மர்மத்திற்கு ஒரு விளக்கெரிப்பு என்பதுபோல் கொண்டால் இந்த லைசென்ஸ் பொருந்திவரும்:-)
2011/2/20 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
// When you live in the hearts of those you love, remember, then you never die."
-- Rabindranath Tagore ///
இப்படிக்கதை கேட்ட நினைவு இருக்கிறது//இதேபோல கம்சனைக்கொல்ல ஏழு குழந்தைகளும் கொல்லப்பட்டு எட்டாவதாகவே கண்ணன் அவதாரம் நிகழ்ந்தது.ஏழின் குறியீடு இங்கு யோசிக்கவைக்கிறது. ஆமாம் சாபம் நீங்க வேண்டுமானால் இறப்புதான் அதற்கான விமோசனமா?பித்ருக்களின் உலகம் என்பதாலா்மோகனரங்கனின் சிறுகதையும் யோசிக்க வைக்கிறது.
சாபம் நீங்க வேண்டுமானால், இறப்புத்தான் அதற்கு விமோசனம் என்று
சொல்லும்போது "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று தெரு முனைகளில் கோஷிக்கிற
ஒரு கூட்டத்தை நினைவு படுத்துகிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்,
சாபமோ, வரமோ இந்தக் கர்ம பூமியில் பிறந்த அத்தனையும் ஒரு நாளில்
மரணத்தைச்சந்தித்துத் தானாக வேண்டியிருக்கிறது இல்லையா?
இங்கே பிறந்தது ஒரு கர்மச்சங்கிலியில் சிக்குண்டதால்! எட்டு வசுக்களில்
எழுவருடைய தவறு சிறியது என்பதால், சாபம், அவர்கள் பிறந்தவுடனேயே
இறந்து,கர்மவினையில் இருந்து விடுபடுவது என்றாகிறது. எட்டாவது வசு,
காமதேனுவை அபகரித்த குற்றத்திற்காக பூமியில் மனிதப்பிறப்பெடுத்து நீண்ட
நாள் வாசம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைக் கதையே சொல்கிறது.
பூமியில் மனிதப் பிறப்பெடுத்தவர்கள் மரணமடையும்போது போவது தான் பித்ரு
லோகம். அஷ்டவசுக்கள் அதையும் தாண்டி இருப்பவர்கள். அவர்களுக்குப்
பித்ருலோகம் என்பதே பொருந்தாத ஒன்றாக இருக்கிறது.
ஆக, இந்தக் கதையில் ஏழு என்பதை ஒரு குறியீடாக, அல்லது வேறு விதமாக
எடுத்துக் கொள்ள முடியுமா?
//இறந்த முன்னோர்கள் எல்லாம் பித்ருக்கள் உலகத்திற்குப் போகிறார்கள்
என்பது போல இந்த மாதிரி பிறக்க மட்டுமே வருகின்ற ஜீவன்கள் போகும்
உலகம் தான் ஸப்த வசுக்களோ என்றபடி புராணத்தை அப்படியே பொருத்திப்
பார்த்தால் இந்தக் கேள்விகள் எழும். அல்பாயுசு என்ற இயற்கையின்
மர்மத்திற்கு ஒரு விளக்கெரிப்பு என்பதுபோல் கொண்டால் இந்த லைசென்ஸ்
பொருந்திவரும்//
என்கிறார் அரங்கர்! எட்டு மைனஸ் ஒன்று = ஏழு இப்படி ஒரு சமன்பாட்டை
வைத்து இதை முழுமையடையாத ஒன்றாக, விடையைத் தேடி அலையும் ஒரு ஜீவனின்
கேள்வியாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாமே தவிர, ஏழு என்பதை வைத்து
விசேஷமான குறியீடு, வியாக்கியானம் செய்ய முடியாது என்று தான் எனக்குப்
படுகிறது.
----------------------
ஆஹா!நானும் கோனார் நோட்ஸ் எழுதக்
கற்றுக் கொண்டுவிட்டேன்!!
--
விளக்கம் அபாரம். சிந்திக்கவைக்கிறது மிகவும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Feb 22, 2:42 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> ஏழு முக்கியமான எண் என்பார்கள். ஏழேழு பிறவி. ஏழு உலகங்கள் என்று எல்லாமும்
> ஏழாகவே வருமே. வாரத்தில் ஏழு நாட்கள். அவங்க கர்மா பிறப்பு எடுக்கணும் என்பதோடு
> முடிஞ்ச்சுடும், அப்படிப்பட்ட ஜீவன்களே பிறந்த உடனேயே அல்லது வயிற்றில்
> இருக்கும்போதோ இறக்கும் என்பார்கள். இப்படி ஒரு பிறவிச் சங்கிலியைக்
> கழிக்கவேண்டி என்பார்கள். மோகனரங்கன் விளக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
>
> 2011/2/22 shylaja <shylaj...@gmail.com>
சப்த வசுக்கள் என்ற அரங்கனாரின் சிறுகதைக்கும், நீங்கள் இங்கே ஏழேழாக
அளந்துவிட்டிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?
ஏழு என்ற எண்ணிக்கை விசேஷமாக இருக்கலாம், இருந்துவிட்டுப் போகட்டும்!
இலக்கிய கர்வம் என்ற இந்த இழைக்குக் கொஞ்சம் பொருத்தமானதாக ஏதேனும்
சொல்லுங்களேன்!
----------------------------
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகைதானறியேன்
கிருஷ்ணமூர்த்தி
On Feb 23, 7:25 pm, tirumalainumbakkam <tnkesa...@gmail.com> wrote:
கிருஷ்ண மூர்த்தி ஐயாவைக் கோவப்பட வைத்தாலும் பொறுமையாகச் செய்த நல்ல
முயற்சிதான்; பாராட்டு(க்)கள்
தேவ்
> மேலும் படிக்க...http://movingmoon.com/home/node
> மனிதன் தன் அறிவு நிலையை வெளிப்படுத்துவது ஏழாகிய 'சப்தத்தால்'
> தான்.> அதாவது சிந்திப்பது பேசுவது என்கிற அவ்வளவுமே சப்தமாகிய ஏழால் தான்.
> > இந்த ஏழாகிய பேச்சால் மற்றும் சிந்தனையால் அவன் எட்டுவதே ஒன்பதாகிய இறைநிலை.
> > எப்போதும் இறைநிலையை எட்டுவதற்கு அல்லது இறையருளை எட்டுவதற்கு ஏழுதான் துணை
> > புரிவதாக உள்ளது.
>
> ஏழு எனும் சப்தம் ஏழுஸ்வரங்களுக்குஆதாரமாகிறது.> ஜோதிடசாஸ்திரத்தில் ஏழாம் கட்டத்தைத்தான் உன்னிப்பாக கவனிப்பார்கள்.
> > அதில்தான் நமது இல்லறம் எப்படிப்பட்டது போன்ற ரகசியங்கள்
> > திருவரங்கம்!
>
> ரங்கவிமானம்
>
> > காவிரிக்கரையில் நிலைபெற்றது
> > ஏழு சுற்றுக்கள் ஏழு பிராகாரங்கள் நடுவிலேதான் கோயில் அமைந்துள்ளது.
> > மாடங்கள் சூழ்ந்த முதல் சுற்று பூலோகம்
> > திரிவிக்கிரமன் உலாவந்த சுற்று புவர்லோகம்
> > கிளீச்சோழன் பேரால் அமைந்த சுற்று ஸீவர்லோகம்
> > திருமங்கைமன்னன் பேரால் அமைந்த சுற்று மஹர்லோகம்
> > குலசேகரன் சுற்று ஜநோ லோகம்
> > ராஜமகேந்திரன் சுற்று தபோலோகம்
> > தர்மவர்மன் சோழன் சுற்று கர்ப்க்ரஹம் உடைய சத்யலோகம் என உணரப்படுகிறது
> > இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து
> > அரங்கனை வணங்குபவர்களுக்கு அவர்களது ஏழாம்கட்ட கர்மங்கள் கெட்டதாக இருந்தால்
> > நீங்கிவிடும் நல்லதாக இருந்தால் நன்மை பெருகிவிடும்
> ஏழாகிய
> > இசைவசப்படும்.. ஏழாகியமந்திரம் வசப்படும். ஏழாகிய சப்தம்
>
> ...
>
> read more »
சப்த வசுக்கள் என்ற அரங்கனாரின் சிறுகதைக்கும், நீங்கள் இங்கே ஏழேழாக
அளந்துவிட்டிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?
ரங்கன் சிலம்பு மட்டுமா ஆடுகிறார்?
அரங்கனாருடன் இந்த சூக்குமத்தை ஏற்கெனெவே தனிப்பட விவாதித்தாயிற்று.
இங்கே அந்த சிறுவனின் கேள்வி தான் முக்கியம், தலைச்சன் என்னவாக எங்கே
போயிருக்கும் என்பது கதையைக் கேட்கப்போகும்போது எழும் கேள்வி,
நண்பர்களுடன் சேர்ந்து சுடுகாட்டுக்கெல்லாம் போய்...அந்தத்
தனயனைத்தகப்பன் ஒருவன் தான் புரிந்துகொள்கிறான்.இதை ஏற்கெனெவே என்னுடைய
முந்தைய பதிலுளும் ஒரு கோடி காட்டி விட்டுப் போயிருந்தேன்.
இதை சிறுகதை வல்லுனர்கள், அபிமானிகள் தாங்களாகவே
கண்டுபிடித்துச்சொல்கிறார்களா என்று பொறுமையாகக் காத்திருந்தேன். ஆனால்
நம்முடைய திருமலை நும்பாக்கம் சிறுகதைக்கு சம்பந்தமே இல்லாமல் என்னென்னவோ
சொல்ல ஆரம்பித்து நுங்கு எடுக்க ஆரம்பித்தார் பாருங்கள், அதற்காகச்
சொன்னது அது!
------------------------------
இதற்காகத்தான் நான் சிறுகதையே எழுதுவதில்லை
அடுத்தவரை அவஸ்தைப்பட விடுவதில்லை
:-))))
கிருஷ்ணமூர்த்தி
On Feb 24, 6:46 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
கோவப்படாமெ இதுக்கு மட்டும் இன்னொரு தரக்க நோட்சு போட்டு புரியுதாப்புல
சொல்லுங்க ஐயா
தேவ்
On Feb 24, 1:06 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> சிறுகதைக்கு ஏன் கோனார் நோட்ஸ் போடுகிறாய் என்று கண்டனங்கள் எழுந்தாலும்,
> விளக்காமல் சிறுகதையைப் புரிந்துகொள்ளும் முயற்சி பலிதம் ஆகும் அளவிற்கு
> இன்னும் இலக்கிய ப்ரக்ஞை மக்களிடையே எழவில்லை போலும். எனவே தண்டனையை, எழுதியவன்
> அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
>
> ஓர் இளம் உள்ளத்தின் விசாரத்தனமான முனைப்பின் முளை -- இதைக் கவனப்
> படுத்துவதுதான் இந்தச் சிறுகதையான ‘ஸப்த வசுக்கள்’.
>
> புராணக் கதை எதனோடும் சம்பந்தம் உடையதன்று.
> However much the readers choose to carry themselves away by the chance
> references of some Puranic names used as articles in the story.!
>
> பிறந்து உடனே மரிக்கும் உயிர்களின் நிகழ்வு ஏற்படுத்தும் ஒரு சலனம்,
> சமிக்ஞையாகவும், சங்கடமாகவும் ஓர் சிறு பாலகனின் உள்ளத்திற்குச் சென்று பதியும்
> போது ஏற்படும் சமுதாய கவனம் -- இதுதான் ‘ஸப்த வசுக்களின்’ சூழல் விஸ்தாரம்.
>
> வசுக்கள் என்னவோ அஷ்ட வசுக்கள்தாம். ஆயினும் பிறந்து உடனே மரிக்கும் சிசுக்கள்
> என்ற எண்ணத்துடன் கதையைக் கேட்கும் அந்தச் சிறுவனின் உள்ளத்தில், தங்கிப்போன
> வசுவைத் தவிர, பிறந்து உடனே மரித்த மிச்சம் ஸப்த வசுக்கள் தன்னுடைய உள்ளத்தின்
> சங்கடத்திற்கு ஒரு குறியீடாய் ஆகிவிடுகிறது அந்தச் சிறுவனுக்கு.
>
> தெளிவானவர்களால் சிறிதும் கவனிக்கப் படாமல் போகும் சிறுவர்களின் விசாரங்கள்,
> சமுதாயத்தில் பைத்தியமாகிப் போனதாகப் புழங்கும் ஓர் உயிரால் அக்கறைக் குரலைப்
> பெறுகின்றன. அந்தக் குரல் யாராலும் சற்றும் கவனிக்கப் படாமல் சந்தை இரைச்சலாக
> ஆனாலும் அந்தக் குரலின் ஒலிப்பில் மௌனத்தை அடைகிறது சிறுகதை.
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> ***
>>சமுதாயத்தில் பைத்தியமாகிப் போனதாகப் புழங்கும் ஓர் உயிரால் அக்கறைக் குரலைப் பெறுகின்றன. அந்தக் குரல் யாராலும் சற்றும் கவனிக்கப் படாமல் சந்தை இரைச்சலாக ஆனாலும் அந்தக் குரலின் ஒலிப்பில் மௌனத்தை அடைகிறது சிறுகதை. <<கோவப்படாமெ இதுக்கு மட்டும் இன்னொரு தரக்க நோட்சு போட்டு புரியுதாப்புல
சொல்லுங்க ஐயா
> எனக்கேட்டு மெனக்கெட்டு
> மனக்கட்டில் முனைப்பெட்டும்
> நிர்மூடம் அதுவும் யாரோ?
தாளக்கட்டு நிற்கிறது :-))
> தனிமைக்கே தலைப் பிள்ளையாகத்
> தவிட்டிற்கே விற்ற தாயாய்த்
> தலைப்பு நுனி மூடிச் சிரிக்கும்
> கலை வல்ல காளி!
அருமையான நிலை விளக்கம்!
அந்த தவிட்டிற்கு விற்ற பிள்ளை யார் கவிஞனா? காளியா?
> அன்றேனும் முலைகடுக்கும் உன்னருளின்
> நிலம் பாய்ச்சுகின்ற நிபாதம்
> நீக்குக என் உயிரின் தாகம்.
> *
அது என்ன முலைகடுக்கும் உன்னருள்?
முலை மழலைக்கு கடுக்குமா என்ன?
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
க.>
2011/3/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
வெறும் புத்தக வாசிப்பில் மட்டும் வருவதில்லை இது. தன்னுடைய அனுபவத்தைக்
குழைத்து வார்த்ததைகளில் பேசும்போது, அப்படி ஒரு அனுபவம் இருக்கிறது
என்பதே தெரியாத என்னைப் போன்ற பலருக்கு, அந்த வார்த்தைகளின் தாக்கத்தைப்
புரிந்து கொள்ளப் பல மாதங்கள் கூட ஆகலாம்! (நாலுநாட்களில் புரிந்து
கொள்கிற உம்மைப்பார்த்து, நிறையவே பொறாமை!எவ்வளவு புகைகிறது பாருங்கள்!)
கண்ணன் எழுப்பிய சந்தேகம் தான் என்னைக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. மடி
கனத்துப் போன பசு, க்ன்றுக்காகக் குரல் கொடுப்பதுபோல, சமீப கால
வரலாற்றில், 'என்னுடைய அற்ப ஆயுளில் இன்னொரு நாள் முடிந்து போனதே!
இன்னும் என் குழந்தைகள் தேடிவரக் காணோமே!" என்று காளியிடம் கதறிய ஸ்ரீ
ராம கிருஷ்ண பரமஹம்சர் கதையும் மறந்து போனதோ!
அதுவே இங்கே தலைகீழாக,
தனிமைக்கே தலைப் பிள்ளையாகத்
தவிட்டிற்கே விற்ற தாயாய்த்
தலைப்பு நுனி மூடிச் சிரிக்கும்
கலை வல்ல காளி!
அலைகின்ற வாழ்வில் ஒருநாள்
அன்றேல் வாழ்வின்
அலை ஓய்ந்த பின்னர் ஒருநாள்
அன்றேல் உன் சிரிப்பின்
கலைவேய்ந்த கணத்தில் ஒருநாள்
நிலைகுத்தி நிற்கும் உன் பார்வை
அன்றேனும் முலைகடுக்கும் உன்னருளின்
நிலம் பாய்ச்சுகின்ற நிபாதம்
நீக்குக என் உயிரின் தாகம்.
தவிட்டிற்கு விற்றாயோ என்று தாயிடத்தில் சண்டை போடுகிற பிள்ளையாய், என்
உயிரின் தாகம் தீர்ப்பாய் என்ற வேண்டுகோளைக் கொஞ்சம் உரிமையோடு
மிரட்டலாகவே வெளிப்படுகிறது, அரங்கனின் சொந்த அனுபவம்!
-----------------------------
கிருஷ்ணமூர்த்தி
எல்லாம் ஒரு கவன ஈர்ப்புத்தான் தோழரே! :-))
இருப்பினும், `முலைகடுக்கும் உன்னருளின்` எனும் சொல்லாட்சி கொஞ்சம்
வித்தியாசமாக இருந்தது.
அதன் பின்னுள்ள பொருள் அவள் காருண்யத்தைக் காட்டினும், `கடுக்கும்
உன்னருள்` என்ற சொற்கள் அருகருகே நின்றது என்னை ஆச்சர்யப்படுத்தியது :-))
நா.கண்ணன்
2011/3/21 N. Kannan <navan...@gmail.com>
--கடுக்கும் என்பதற்குப் பின் நானே நிறைய ஸ்பேஸஸ் விடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிறைய இடைவெளிகள் விட்டால் அதையெல்லாம் சதுரம் சதுரமாக ஜன்னல் போல் காட்டுமே என்பதால் செய்யவில்லை.:-))


கிராமப்புறத்தில் பால் வடியும் தாய்மார்கள் பிற பிள்ளைகளுக்கு முலைப்பால் தானம் செய்வது வழக்கு. கோகுலத்தில் அது நிச்சயம் நடந்திருக்கும்.க.>
--
தாங்கள் பாவத்தில் ஆழ்வாரை விஞ்சி நிற்கிறீர்கள்!
பூதணை தந்தது உயிர்ப்பால் என்று இதுவரை நான் கேட்டதில்லை. என்ன கவித்துவம்!
கண்ணன்
2011/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
--
கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக் கூடாதா?:-)(சரி கவிதையில் உள்ளே புக ஆர்வம் இல்லையென்றால்வேறு வேலை பார்ப்போம்.)
கிருஷ்ணமூர்த்தி
On Mar 21, 6:03 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> *"கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக்
> கூடாதா? *
> *:-)"
>
> **:)))))))**
>
> *
> 2011/3/21 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
2011/3/21 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
கவிதை புரியாதபோதும், தத்துவம் பேசிக் கொஞ்சம் பயமுறுத்தும்போதும்
கவியரங்கம் வெறும் அரட்டை அரங்கமாகத் திரும்பிவிடும்!ஏனெனின் அது எளிது!
:-))))
---------------------------
இப்பல்லாம் கவிதை எழுதறப்பவே கூடவே
கோனார் நோட்சும் போட்டுடறது நல்லது!
கிருஷ்ணமூர்த்தி
ஓ அதுதான் பிரச்சனையா! சரி சரி! நமது செல்வக் குமரன் இருக்கிற சபையில் விரிவான நோட்ஸ் தேவையிருக்காது என்று நினைத்து விட்டுவிட்டேன். மன்னிக்கவும். விளக்கம் தந்துவிடுகிறேன்.விண்ணின் விழி என்பது பரம்பொருள்.தானே தன்னைக் காட்டுவதாகவும், தானே தன்னைக் காண்பதாகவும், தன்னைக் காணத் தானே விழியாக நிற்பதாகவும் இருக்கும் அந்த பரம்பொருள் விண்ணின் விழி.ஜகத் ஏக சக்ஷுஷே! என்கிறது சாத்திரம்.இதை மனத்தில் கொண்டுதான்“கண்ணும் ஆருயிரும் என நின்றாள்காளித்தாயிங்கு எனக்கருள் செய்தாள்”என்று பாடுகிறார் பாரதி.அந்த விழியில் இழிந்த கண்ணீர் என்பதுதான் உயிரூக்கம்.என்ன உயிரூக்கம்?தன்னை விட்டுப் பிரிந்த இந்த உயிர் மீண்டும் தன்னை நோக்கி என்று வருமோ என்று பரம்பொருளின் ஏக்கம், தயை, இரக்கம், கருணை.இது ஆத்மாவிற்குள் புகுந்து இயக்கவிலையேல் பின் இந்த ஜீவன் என்றுதான் பரம்பொருளை நோக்கித் திரும்பும்?இந்த பகவத் கிருபை, பரம்பொருளின் ஸ்வாபாவிக தயை இந்த தயை, அருள் ஒரு ஜீவனிடம் பயன் விளைக்கத் தொடங்கியது என்றால் அங்கு வெறுமை கவ்வும்.அந்த நிலையைத் தாங்குவது கடினம்.இந்த புதிரான அருளியக்கம் எப்படி வாழ்வில் இயங்குகிறது என்பது நம் கையடக்கத்தில் இல்லை.பூசும் வெறுமையெல்லாம் அருளின் சங்கேதம் என்று பொருளுமன்று.This suspended suspense is inexplicable; patience is the only guide.ஆனால் பைம்புனல் என்று கூறப்பட்டிருக்கிறதே? எனில் அது பின்னர் அருள் சாதனையானபின், பாலை வறட்சியைக் கடந்தபின் பின்னோக்கில் காணுங்கால் தோன்றும் யதார்த்தக் காட்சி.ஆனால் இந்த அகங்காரம் சும்மா விடுமா?அந்த அருட்புனலில் தன்னால் உறிஞ்சியது மட்டும் சாகசம் என்று அது ஆடும் வித்தகம் இருக்கிறதே -- அதன் விளைவு -- அனைத்தும் பகற்கனா!இந்த இரட்டை ஆட்சியால் விளைவது அயிர்ப்பும் மாறி உயிர்ப்பும்.இதில் கைகண்ட பலன் அயர்வு.(தொடர்வேன்)
On Mar 21, 6:03 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> *"கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக்
> கூடாதா? *
> *:-)"
>
> **:)))))))**
>
> *
> 2011/3/21 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> > கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக்
> > கூடாதா?
> > :-)
>
> > (சரி கவிதையில் உள்ளே புக ஆர்வம் இல்லையென்றால்
> > வேறு வேலை பார்ப்போம்.)
--
"
கொஞ்சம் இந்த சிரமத்தையெல்லாம் கவிதையின் உள்ளே போவதற்கு எடுத்துக் கொள்ளக் கூடாதா?:-)(சரி கவிதையில் உள்ளே புக ஆர்வம் இல்லையென்றால்வேறு வேலை பார்ப்போம்.)
2011/3/21 N. Kannan <navan...@gmail.com>
இப்படிக் கோபித்துக் கொண்டு போனால் யாருக்கு லாபம்?
எனக்கு இங்கே ஒரு சொல்லாட்சி நெருடல் -- "முலைக் கடுப்பு"சாதாரணமாக ... "கடுப்பு" என்ற சொல் negative பொருள் தருவது. ஒப்புமை காண்க: "நீர்க் கடுப்பு" "வயிற்றுக் கடுப்பு"மனிதர்களுக்கும் "கடுப்பு" உண்டாகும்.எதனால் கடுப்பு உணர்ச்சி உண்டாகிறதோ அது வெளியே தள்ளப்படும்போது கடுப்பு நீங்குகிறது. வெளியேறிய பொருள், அதாவது கடுப்பிற்குக் காரணமானது, நல்ல பொருள் இல்லை. அது வெளியே தள்ளப்படவேண்டியது. துன்பம் தருவது. பிறருக்குப் பயன்படாதது."முலைக் கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப் போலே" என்று ஈடு (1, 1, 1,) சொல்கிறது. அங்கேயும் ... முலைக் கடுப்பினால் பீச்சப்படும் சரக்கு ("பால்") தரையில் போகும் என்ற பொருளே கிடைக்கிறது; 'அருந்துவதற்கு' என்று தெரியவில்லை.அப்படி இருக்கும்போது ... இந்தக் கவிதையில் ... அருளையும் முலைக்கடுப்பையும் தொடர்பு படுத்துவது எனக்கு ஒத்துவரவில்லை. அவ்வளவே.இங்கே என் தனி அனுபவம் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் என் தோழியிடமும் கேட்டு உறுதி செய்துகொண்டேன். நாங்கள் "முலைக் கடுப்பு" என்ற வழக்கைப் பயன்படுத்தியதே இல்லை. தாய்க்குப் பால் கட்டிய நேரத்திலும், கட்டிய பாலை வெளியேற்றும்போது அதைக் குழந்தைக்குக் கொடுப்பதில்லை.இத்துடன் இந்த இழையில் என் பங்கு முடிகிறது. பிற பெண்கள் யாரும் எழுதாததால் குறுக்கிட்டேன். கவிதைப் போக்கிற்கு இனி என் குறுக்கீடு இருக்காது! :-) :-) :-)அன்புடன்,ராஜம்
அக்கா! தாங்கள் காட்டியிருக்கும் ஈடு பகுதியே என் மனத்தில் இருப்பது.மேலும் தாங்கள் கவனப் படுத்தியிருக்கும் இந்த அம்சமே கவிதையின் தொனிப் பொருளாய்ப் பின்னர் வரும்.சற்றே அவகாசம் தரக் கூடாதா? இப்படிக் கோபித்துக் கொண்டு போனால் யாருக்கு லாபம்?ஆனால் நஷ்டம் எனக்கல்லவோ!பொதுவாகச் சொன்னதைத் தங்களுக்கு என்று கொள்ளலாமா ?அப்புறம் காதைத் திருகும் அக்கா உரிமையெல்லாம் வெறும் போலியா?கொஞ்சம் பொறுத்தருள்க.
On Mar 21, 7:03 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அடடா! இன்று என்ன நடக்கிறது இங்கு!!
>
> தாங்கள் பாவத்தில் ஆழ்வாரை விஞ்சி நிற்கிறீர்கள்!
>
> பூதணை தந்தது உயிர்ப்பால் என்று இதுவரை நான் கேட்டதில்லை. என்ன கவித்துவம்!
>
> கண்ணன்
>
ஏன் பலர் பூதணை என்று எழுதுகிறீர்கள்?
”பூதனை” தான் சரி.
கணேசன்
> 2011/3/21 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:
>
>
>
>
>
> > பூதணை கொடுத்தது உயிர்ப்பால்
> > ஆனால் கண்ணன் உண்டது முலைப்பால்
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> > 2011/3/21 N. Kannan <navannak...@gmail.com>
>
> >> அவர்கள் மட்டுமா!
>
> >> பூதணை எதற்கு வந்தாள் என்கிறீர்கள்?
>
> >> முலைப்பால் கொடுக்கத்தான்!! இது எல்லார் பாலும் சாப்பிட்டுவிட்டு
> >> கொழுத்ததுதான் :-))
>
> >> க.>
>
> >> 2011/3/21 Tthamizth Tthenee rkc1...@gmail.com
>
> >>> கோபிகா ஸ்த்ரீகள் தேவகிகளே
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> >> visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send
> >> email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
On Mar 20, 6:43 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/3/20 கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com>:
இந்த இழை நியூ யார்க் மெட் ம்யூஸியத்தில் உள்ள
யசோதை பால்புகட்டும் க்ருஷ்ண விக்கிரகத்தை
நினைவுக்குக் கொணர்கிறது. சோழர்களின் ஒரு மாஸ்டர்பீஸ்!
http://www.flickr.com/photos/lao_ren100/4010290834/
http://www.metmuseum.org/toah/works-of-art/1982.220.8
இடதுபுறம் இருக்கும் 3 சிற்றோவங்களை (ஐக்கான்ஸ்) சொடுக்கவும்.
-------------
நாரை விடுதூது -
அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆஆஎன்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்ந்தார்க்குஎன் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செயுமோ
ஈட்டின் விளக்கவுரையைப் பார்க்கலாம்: அஞ்சிறை -
'அம் சிறைய- குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாம்கிடக்க, மார்பிலே வாய்
வைக்குமாறு போன்று, பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண்
வைக்கிறாள்..நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த
மகிழ்ச்சி வடிவிலே தொடை
கொளலாம்படி( அறியலாம்படி) இருக்கின்றதாதலின், 'அம் சிறை ' என்றார்.
குழவிக்கு தாயின் பாற்கொங்கை! அதுபோல் நாரைக்கு சிறப்புறுப்பு அஞ்சிறை!
நா. கணேசன்
இதற்கு ஒரு பெரியாழ்வார் திருமொழி இருக்கிறது ;-)
க.>
On Mar 21, 5:49 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/3/22 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> >http://www.flickr.com/photos/lao_ren100/4010290834/
>
> இதற்கு ஒரு பெரியாழ்வார் திருமொழி இருக்கிறது ;-)
>
> க.>
இருமலைபோல் எதிர்ந்தமல்லர் இருவரங்கம் எரிசெய்தாய்!* உன்
திருமலிந்து திகழ்மார்வு தேக்கவந்து என்னல்குலேறி*
ஒருமுலையை வாய்மடுத்து ஒருமுலையை நெருடிக்கொண்டு*
இருமுலையும் முறைமுறையா ஏஙகிஏங்கி இருந்துணாயே. (8)