ஆகமவுளவியல் பயிற்சி
பாடம் 1 இடுகை 1
அன்பர்களே
நேற்று எனக்கு பெரிதும் மனநிறைவு தந்த ஓர் நிகழ்ச்சி நடந்தது, முனைவர் சிவக்குமார் என் நெடுங்கால மாணவர். நான் கற்று தெளிவாக்கி போதித்த அனைத்தையும் திறம்பட கற்று இன்னும் இன்னும் பல புதிய கோணங்களில் அவற்றை வளர்த்து வருபவரும் ஆவர்
நான் வளர்த்த பல நூலியல் அறிவியல் துறைகளில் ( Hermeneutic Sciences) தருத் தேர்வு, குடும்ப சித்திரத் தேர்வு போன்ற ஆழ்நுழைவுத் தேர்வுகளை மையமாகக் கொண்ட ஆகமவுளவியல் எனும் நூலிய அறிவியல் துறையை விளக்கி இன்னும் பலரும் அதில் பயிற்சி பெறும் வகையில் பல பாடங்கள் நடக்கத் தொடங்கியுள்ளதே என் மகிழ்ச்சிக்குக் காரணம்
இது ‘மெய்கண்டார் அறிவாலயம்’ என்று நான் வளர்த்து வரும் என் இல்லத்தின் மண்டபத்திலேயே இனிதே தொடங்கியது. ஆர்வமுல்ல இந்து சமயத்தையும் இன்னும் ஆழமாக புரிந்து கொல்லும் விருப்பின் ஆண்களும் பெண்களுமாக 16 பேர்கள் கலந்து கொள்ள, முதல் பாடமாக அறிமுகப் படலம் செவ்வே நடந்து முடிந்தது. இன்னும் 5 பாடங்கள் இரண்டு வார இடைவெளியில் நடக்க விருக்கின்றன.
பாடங்களை நடத்துபவர் முனைவர் சிவக்குமார் அவர்களே. நானும் உடன் அமர்ந்து இடை இடையே பல கருத்க்களையும் தெரிவித்து விளக்கி வருகின்றேன்
முதல் பாடத்தின் அடிப்படை இந்து சமயத்தில் அதுவும் கோயிலை மையமாக் கொண்ட ஆகமநெறியில் பல நூலிய அறிவியல் துறைகள் இருக்கின்றன அவை யாவை என்று விளக்கப்பட்டது அதில் வர்ம நெறி, யோகக் கலை போன்றவை எவ்வாறு அறிவியல் சான்ற துறைகளாக விளங்குகின்றன என்று விளக்கப்பட்டது
ஆகமவுளவியல் என்பது பண்டைய தாந்தரீக நெறி வளர்த்த தந்திரக் கலை மந்திரக் கலை உபதேசக் கலை என்றவாறு சென்ற ஆழ் உளவியல் துறை. ஆழ்நுழைவுத் தேர்வுகளாக தருத் தேர்வு குடும்பச் சித்திரத் தேர்வு போன்றவற்றை அகப்படுத்தி புதிப்பிக்கப்பட்ட ஓர் பழைய அறிவியல் துரையாகும்
மரபு வழி வந்த சித்தர்களால் பெரிதும் வளர்க்கப்பட்டதுமாகிய இக்கலை, ஐரொப்பிய அறிவியல் முறையியலின் தாக்கத்தால் சோதனைக் கருவிகளாக தருத் தெர்வு என்றும் குடும்பச் சித்திரத் தேர்வு என்றும் பல தேர்வுகளை அகப்படுத்து உபதேசக் கலையையும் Hermeneutic Counselling என்றவாறு ஆலோசிக கலையாக புதிப்பிக்கப்பட்ட தமிழர்களின் ஓர் பழைய நூலியல் அறிவியல் துறையாகும்.
இதன் மையமான கருத்தே மனச்சிக்கல்கள் பலவற்றால் அவதிபடும் ஓர் ஆன்மா, தன்னுள் தானறியாது இருக்கும் தெய்வங்களை எழுப்பி தன் ஆன்மா அவற்றோடு ஒன்றுபட்டு நிற்க அதன்வழி அகத்தூய்மை அடைந்து மனச் சிக்கல்களிருந்து தானே விடுபட உதவுவதாகும்
ஒவ்வொரு ஆன்மாவும் தானே தனக்கு ஓர் குருவாக அமையலாம், தானே தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் இந்த உளவியல் துறை செல்கின்றது, ‘ஆகமீயம்’ என்றால் தன்னையேத் தான் ஆக்குவது, திருத்தி அமைப்பது என்றவாறு பொருள்படும்
இங்கு தருத்தேர்வும் அதனைத் தந்து அவை உணர்த்தும் உளப்பண்புகளை பெயர்த்து விரிக்கும் ஞானபோதகரும், சிக்கல்களில் அவதியுறும் ஆன்மாவிற்கு தன்னைப் பற்றிய மெய்ந்நிலையை உணரவைத்து மனச் சிக்கல்களின் மூலங்களை விளக்கி தெளிவு படுத்தி அதன்வழி அவர் அந்த உழைச்சலிலிருந்து விடுபட்டு அமைதி நிலை அடைய உதவும் ஓர் உதவியாளர்தான். ஓர் குரு போல நின்று ஆனால் அந்த ஆன்மாவை தன்னையேத் தொழும் ஓர் அடிமையாக்காது, தனக்குத் தானே ஓர் குருவாக உயர உதவுவர் ஆகும்
தொடரும்
உலகன்
பாடம் 1 இடுகை 2
இவ்வாறு புதிய உபதேசக் கலையின் வடிவத்தை விளக்கியபின். முனைவர் சிவக்குமார் பயிற்சி மாண்வர்கட்கு ஓர் தேர்வு தந்துவிட்டு அதனை பரீசீத்டுதுக் கொண்டிருக்க, நான் இந்த தருத்தேர்வின் வரலாற்றை அது எப்படி புதுத் தருத் தேர்வாக மாற்றப்பட்டு ஆகமவுளவியலுக்கு அடிப்படை யாக்கப்பட்டது என்ற வரலாற்றுக் குறிப்புகளை விளக்கினேன்
மரபு வழி வந்த தாந்தரீகக் கலையில் சோதனைக் கருவிகளாக (testing instruments) யாதும் இல்லை. சித்தர்கள் போன்றவர்கள் கடப்புரு காண திறம் வந்தமைய திரிகால ஞானிகள் ஆகி, மன உலைச்சலில் உள்ளவர்க்கு நடந்ததை நட்ந்து கொண்டிருப்பதை நடக்க விருப்பதை எல்லாம் உணர்த்தி அவர்களை நல்வழி படுத்தியுள்ளனர். இதனையேத் தான் சாதாரணமாக அனைவரும் செய்யும் வகையில் ஆழ்நுழைத் தேர்வுகள் உதவுகின்றன
இத்தகையத் தேர்வுகள் நுதிப்புத் தேர்வுகள் (projective tests) எனப்படும். எப்படி கனவுகள் உள்ளத்தின் ஆழத்தில் கிடப்பவற்றை உணர்வில் கொண்டு வந்து அறிவுப்பொருளாக ஆக்குகின்றதோ அதுபோல இந்த நுதிப்புப் தேர்வுகள் ஆகும்
இவற்றில் மிக சிறந்தது இந்த தருத் தேர்வாகும்,. ஜெர்மனியைச் சேர்ந்த Hilt Brunner என்பார், C.G.Jung வழியில் சென்ற ஓர் ஆழ்வுளயல் ஆய்வாளர் ஆகும். அவர் தொல் புராணங்கள் காவியங்கல் போன்றவற்றை ஆய்ந்த பொழுது அங்கே மர வழிப்பாடு செழித்திருந்ததை அறிந்து, மரத்தையே சித்திரப் பொருளாக ஆக்கினால், ஆழ் உள்ளத்தில் கிடப்பவை மிக எளிதாக நுதிக்கப்பட்டு வெளியாக்கப்படும் என்று ஊகித்து மரத்தை வரையும் வகையில் தருத் தேர்வை வடிவமைத்தார். பிறகு யப்பானிய பேராசிரியர்கள் குழந்தைகளின் புத்தி எவ்வாறு வாழும் சூழலால் பாதிப்படுகின்றது என்பதைக் கண்டறிய இந்தத் தேர்வினை பயன்படுத்தினர், அவர்களில் இதனை மிகத் தீவீரமாகவும் பரவலாகவும் செய்தவர் பேராசிரியர் Kimio Yoshikawa என்பவர் ஆகும்
இவரே ஆராய்ச்சி நிமித்தம் மலேசியக் குழைந்தைகளையும் ஆய மலேசியா வந்த பொழுது, பினாங்கு அறிவியல் பல்கலையில் உளவியல் துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த என்னை துணைவேந்தர் தேர்ந்து, அவரோடு ஆய்வு செய்ய பணித்தார். அந்த ஆய்வும் பல மாதங்கள் செவ்வே நடைபெற்று பிறகு இருவரும் இணைந்து ஓர் நூல எழுதி வெளியிட்டோம்
புது தருத்தேர்வும் ஆகமவுளவியலும்
பேராசிரியர் யோஷிகாவா அவர்கள் ஜெர்மானியர்களின் “ ஓர் மரத்தைச் சித்திரமாக எழுதுக” என்ற ஆணையை சிறிது மாற்றி “ பழங்கள் உள்ள ஓர் மரத்தை சித்திரமாக எழுதுக’ என்றாக்கி தனது ஆய்வினை தொடர்ந்தார். இவ்வழியே சென்று பிறகு இதில் வேண்டப்படும் பல விஷயங்கள் வெளிபடாதே இருக்க, நான் ஒரு படத்திற்குப் பதிலாக நாங்கு படங்களை வரையும் வகையில் தேர்வின் ஆனைகளை கீழ்வருமாறு மாற்றினேன்
A.
மனதிற்கு வருகின்ற பழங்கள் உள்ள மரத்தை எழுதுக.
B.
இப்பொழுது உலகத்தில் இயற்கையாய் எவ்வாறு இருக்கின்ரதோ அவ்வாறே பழங்கள் உள்ள மரத்தை எழுதுக.
C.
இப்பொழுது நீயே படைக்கின்ற பழங்கள் உள்ள மரத்தை எழுதுக
D.
இப்பொழுது உலகதிலேயே இல்லாத பழங்கள் உள்ள ஓர் கற்பனை மரத்தை எழுதுக,
இவ்வாறு ஆணைகளை மாற்றி உருவாக்கப்பட்ட தருத்தேர்வே New Baum Test எனப்பட்டது, இங்கு Baum என்றால் ஜெர்மன் மொழியில் ‘மரம்’ என்று பொருள் படும்
இந்த புதிய தருத் தேர்வே , உளத்தின் மறைகளை செவ்வே வெளிப்படுத்தும் ஓர் கருவியாக அமைந்து விட்டது
இதில் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது மேலே தரப்பட்ட ஆணைகள் வழி எழுதப்பட்ட தருக்களில் C D ஆகிய தருக்களில் யந்திரங்கள் போன்றவை நாகம் செந்தாமரை தேவதை பிசாசு ஈட்டி போன்றவையும் நேராகவும் மறையாகவும் எழுதப்பட்டது தான், மிகவும் வியப்பான ஒன்றாக பலமுறை சோதிக்கப்பட்டதாக இருந்தது இசுலாமிய மலாய்காரர்களும் புத்த சமய சீனர்கள் உட்பட இந்து இளைஞிகள் சிவலிங்கம் போன்ற உருவங்களை எழுதியதுதான். மரங்களையே எழுதச் சொல்ல, இப்படிப்பட்ட யந்திரங்களும் சமயச் சின்னங்களும் வர, அனைவர் உள்ளத்திலும், அவர்கள் வாழும் சமய பண்பாட்டு வேற்றுமைகளைக் கடந்து ஆழ்வுள்ளத்தில் பல பொதுவான உருவங்கள் இருக்கின்றன, இந்த உருவங்கள் ஓர் ஆன்மாவை பந்தித்து அவர்கள் அறியாதே அவர்களின் நோக்கங்கள் இச்சைகள் நாட்டங்கள் போன்றவற்றை நிறுத்துகின்றன என்று அறிய வருகின்றோம்
இந்த தேர்வினை செய்து தருக்களை எழுத்கின்றவர், தான் ஏன் இவ்வாறான தருக்களை எழுதுகின்றேன் என்று தெளிவாக அறியாதே எழுதுகின்றனர். உளத்தில் பல சிக்கல்கள் எழ, அந்த சிக்கல்களின் வடிவம் இந்த தருக்களின் சில கூறுகளாக வெளிப்படும். காட்டாக ஓர் மரத்தை இந்த நாங்கு கட்டங்களில் எதிலும் வரையும் போது, மொட்டை மரமாக வரைந்தால், உடன் அவர் ஓர் விரக்தி மனநிலையில் இருக்கின்றார், பெருஞ் சோகத்தில் இருக்கின்றார் என்றெல்லாம் காட்டும். சில சமயங்களில் தற்கொலை எண்ணங்களும் வரலாம்.
இந்த சமயத்தில் போதகர், அந்த தருவின் பொருளை எடுத்துச் சொல்லி, அதன் உண்மையை தேர்வாளர் உண்ணரச் செய்து, அது ஏன், அந்த மன நிலை எவ்வாறு சனித்தது, அது எங்கு கொண்டு செல்லும் என்றெல்லாம் சிந்திக்க வைத்து அகத்திலே ஓர் தெளிவைக் கொண்டு வந்துவிட்டால் விரக்தியும் அதனோடு வரக்கூடிய தற்கொலை எண்ணமும் இல்லாது போகும்
இப்படி இயங்குவதே பண்டைய உபதேசக் கலையின் புதிய வடிவம் ஆகும்
இத்துறையில் ஆர்வம் உள்ளோர் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆணைகள் படி நாங்கு கட்டங்களாக வகுக்கப்பட்ட A4 அளவிலான ஓர் தாளில் தருக்களை வரைந்து பாருங்கள், அதன் வழி உங்களில் ஆழ் உள்ளத்தை இன்னும் சற்று தெளிவாக உங்களாலேயே புரிந்துகொள்ள முடியும்
தொடரும்
உலகன்
பாடம் 1 இடுகை 3
இப்பொழுது இந்த ஆகமவுளவியல் பயிற்சியின் அடிப்படைக்கு வருகின்றோம். மேலே எவ்வாறு அடுத்தடுத்து 4 தருக்கள் வெவ்வேறு ஆணைகட்கு ஏற்ப எழுதப்படுகின்றது என்று கண்டோம் இனி அடுத்ததாக பல கேள்விகள் எழுகின்றன,
இவ்வாறு A B C D என்று எழுதப்படும் தருக்களின் முறையியலில், யாதும் உண்டோ என, அதுவே இந்த புதிய தருத்தேர்வின் மையமாக அமைவதின் அது விளக்கப்பட்டது. இவை ஆன்மாக்களின் இயல்பான வரலாற்று புரிந்துணர்வைக் காட்டும். ஒவ்வொரு ஆன்மாவும் தனக்கு நடந்தது என்ன, நடந்து கொண்டிருப்பது என்ன நடக்கப் போவது என்ன? என்ற கேள்வியிலே வாழ்க்கையை ஓட்டுகின்றன. முனைவர் சிவக்குமார் கூறியது போல, உயிர்த்தல் என்றாலே ‘அது தான் ஆகவேண்டும்’ ‘இதனை சாதிக்க வேண்டும்” என்றெல்லாம் ஓர் நுதிப்பு வயப்பட்டு வாழ்வதுதான். இது எதிர்காலம் எனும் குறிப்புக் கால உணர்வோடு வருவதாகும். ‘தான் இன்றில்லா அது தான் நாளை ஆகவேண்டும்” என்றவாறு இந்த நுதிப்புக்கள்( projections) இருக்கும்,
வாழ்க்கைக்கு ஓர் நாட்டத்தினை தருகின்ற இந்த நுதிப்பு D தருவில் சித்திரமாக வெலிப்பட்டு நிற்கும். இது இன்னும் மெய்யாகாது ஆனால் உள்ளத்தில் ஆழ வேரூன்றி நிற்கைன்ற ஓர் நாட்டமாகும்.
இவ்வகையில் இதற்கு முன் வருகின்ற C & B தருக்க்ள் இன்றைய நடைமுறை வாழ்க்கையை விளக்குவனவாக அமையும். மேலும் முதலில் வரையப்படும் A தரு, வாழ்க்கையில் இதுவரை நடந்து முடிந்த நிகழ்வுகள் எவ்வாறு மனதில் பதிவாகி உள்ளது என்பதைக் காட்டும்
மக்களது தன்னறிவு, இவ்வாறு தனக்கு நடந்தது இது, நட்ந்துகொண்டிருப்பது இது, நடக்கவிருப்பது இது என்றவாறு முக்காலவுணர்வினதாய் வரலாற்று புரிதலாக ( Historical understanding) இருக்கும்
இந்த புரிந்துணர்வைத் தான் இந்த நான்கு அங்க புதியத் தருத் தேர்வு சித்திரமாக காட்டி நிற்கின்றது.
இது ஏன் மிகவும் முக்கியமான ஓர் கண்டுபிடிப்பு, அதாவது ஒருவனின் தன்னைப்பற்றிய வரலாற்று அறிவை சித்திர வடிவில் வெளிப்படுத்தும் இந்த உத்தி?
எதிர்காலத்தில் தனக்கு நடக்கவிருப்பதை இன்றே அறிந்துவிட்டால், அது நல்லதே எனின் கவலைப்பட ஒன்றுமில்லை, நடப்பது நடக்கட்டும் என்றிருக்கலாம். ஆனால் தீமையான ஒன்று என்றால்? நோய்வாய் படுதல், சண்டை சச்சரவில் மாட்டிக்கொள்ளல், காவலர்களால் கைது செய்யப்படுதல், விபத்தில் மாட்டிக்கொள்ளல், பேரிழப்புக்கு ஆளாதல், பலவகையான குடும்ப்பிரச்சனையால் மணமுறிவு வருதல் போன்ற எண்ணற்ற தீய விரும்பத் தகாத கவலையை இன்னும் அதிகரிக்கும் பல நடப்புக்கள் இருக்கின்றனவே? இப்படிப்ப்டவற்றை தவிர்க்க முடியுமா?
முடியும் என்கின்றது ஆகவுளவியல்.
இந்த நான்கு தருக்களுக்கிடையே கன்மத் தொடர்பு உண்டு, A காட்டும் வாழ்க்கை நிகழ்ச்சிகள், B காட்டும் வாழ்க் நிகழ்ச்சிகட்கு காரணமாக அமையும் C-உம் இவ்வாறு D-க்கு. இன்று நடந்து கொண்டிருப்பது முன்பு நடந்ததின் காரணமாக எழுவது.
இனி இதேப்போலத்தான் இனி நடக்கவிருப்பதாகிய D காட்டும் வாழ்ககை, C காட்டும் வாழ்ககையின் விளைவு, பயன். ஆயினும் அது தீயதாக இருந்தால், காட்டாக வரவிருக்கும் முக்கியமான ஓர் தேர்வில் மோசமாக தோல்வி அடைவது என்பதை இன்று வாழும் C தரு காட்டும் வாழ்க்கையால் சம்பவிப்பது என்பதால், இன்று வாழும் வாழ்க்கையை C காட்டும் வாழ்க்கையை தக்க முறையில் மாற்றி அமைத்டுக்கொண்டால், வரவிருக்கும் படுதோல்வியை தவிர்க்க முடியும், ஒரு மாணவனிடம் அவன் வாழும் இன்றைய வாழ்க்கையே ( பாடங்களைப் படிக்காது சினிமா மற்றும் பல கேளிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை) அவனது எதிர்கால படுதோல்விக்குக் காரணம், அதனை தக்க முறையில் இன்றே மாற்றி அமைத்துக்கொண்டால், வரவிருக்கும் படுதோல்வியை தவிர்த்து விடலாமென்று காட்டி விட்டால், அவன் அதனை உணர்ந்துவிட்டால் மோசமான ஓர் எதிர்கால விளைவு தவிர்க்கப்படுகின்றது
இது மிக எளிதான ஓர் விசயமாக இங்கு படலாம். ஆனால் ஆகமவுளவியலின் பிரச்சினைகள் இங்கு தான் எழுகின்றன
எப்படி மாணவனை இதுதான் நடக்கவிருப்பது என்பதை நம்ப வைப்பது?
இங்குதான் Hermeneutics Semiotics என்ற கலை மிகவும் தேவைப்படும் ஒன்றாகின்றது. தமிழில் இதனை ‘உள்ளுறை பொருளியல்’ என்று கூறலாம்.
எழுதப்படும் ஒவ்வொரு தருவும் ஓர் நூல்-- நடந்தது நடக்கின்றது நடகக்விருப்பது ஆகியவை ஓர் சித்திர வடிவில் இங்கு நமக்குக் கிடைக்கின்றன. அந்த சித்திர வடிவம் குறிக்கும் உள்ளுறை யாதென்று உணர்ந்து போதகன் மாணவனுக்கு உணர்த்தினால தான், அந்த மாணவனுக்கு இந்தக் கலையில் நம்பிக்கை பிறக்கும் நடந்ததை நடந்துகொண்டிருப்பதை சரியாகவே சொல்லும் இவர், நடக்கவிருப்பதையும் சரியாகத் தானே சொல்லுவார் என்று அவன் கருத , போதகர் கூறும் வாழ்க்கை விளக்கத்தில் நம்பிக்கை பிறக்கும்
இது/ முனைவர் சிவக்குமார் விளம்பியது போல, சித்தர் மரபில் வரும் சித்தர் ஆரூடம் போன்றது என்பதைக் காண்க, உணமையான சித்தர்கள் திரிகாலஞானிகளாக விளங்க, இப்படிப்பட்ட சோதனைக் கருவிகள் இல்லாது, கடப்புரு காண் திறத்தின் ஒருவனுக்கு எதிர்காலத்தில் நடக்க விருப்பதை இன்றே கண்டு, அது ஏன் எனபதையும் உணர்ந்து அதனை எவ்வாறு தவிர்ப்பது என்பதற்கு வழி இருந்தால் அதனையும் தெரிவித்து உதுவுவார்.
அது போன்று தான் இங்கும். ஆனால் போதகர் ஓர் சித்தனாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, நல்ல ஆய்வாளனாக இருந்தால் போதும்
இனி அடுத்ததாக இந்த உள்ளுறை பொருளியல் என்பதுதான் என்ன? இதனை அடுத்து காண்போம்
தொடரும்
உலகன்
பாடம் 1 இடுகை 4
குழந்தைகள் பதின்மர் இளவல்கள் முதியவர்கள் எனவரும் மக்களால் எழுதப்படும் தருக்களைக் காண, ஓர் மலைப்பே ஏற்படும். பல ஒற்றுமைக் கூறுகள் இருந்தாலும் பெரும்பாலும் தனித்துவம் உடையதாகவே இருக்கும். சிலர் வாழை மரத்தை எழுதுவர், சிலர் தென்னை போன்றன மரங்களை, சிலர் ஆலவிருடம் மற்றும் பழங்கள் தொங்கும் மாமரம் பப்பாளி மரம் போன்றவற்றை எழுதுவர். இன்னும் சிலர் பட்டுபோன மரம், கீழே சாய்ந்து கிடக்கும் மரம் வெட்டுப்பட்ட மரம் மொட்டை மரம் என்றவாறும் எழுதுவர்.
சிலர் மரங்களே எழுதமாட்டார்கள். மாறாக வட்டம் வட்டத்திற்குள் வட்டம் முக்கோணம், பல அடுக்கு முக்கோணம். வட்டத்திற்குள் முக்கோணம, திரிசூலம், சதுரம் சதுரத்திற்குள் வட்டம் என்றெல்லாம் எந்திரங்களைப் போன்று வரைவர்.
சிலர் கனிகளை மாத்திரம் எழுதுவர், சிலர் பூக்களை மாத்திரம் அதிலும் குறிப்பாக தாமரையை எழுதுவர். இன்னும் சிலரோ ஐந்தலை நாகம் போன்ற புரான உருக்கலை எழுதுவர். சிலர் இந்த பாம்புகளை தென்னை மரத்திலன் தண்டிலும் படரும் கொடிகளிலும் காட்டுவர்.
இவற்றை எல்லாம் விரிப்பில் பெருகும். ஆயினும் நமது கேள்வி: இவ்வாறு ஓர் தரு எழுதப்படும் பொழுது அதன் பொருள் என்ன? என்பதே
ஓர் குழந்தை வாழை மரத்தை எழுத, அத்னால அது குறிக்கும் பொருள்தான் என்ன ? அந்த சித்திரம் என்ன வாழை மர ஆராய்ச்சியை காட்டுவதா? இல்லை வேறொரு பொருளைக் காட்டுகின்றதா?
வேறொரு பொருளைக் காட்டுகின்றது என்பது தான் தருத்தேfவில் வரும் உண்மை. அந்த பொருளைத்தான் ‘உள்ளுறைப் பொருள்’ என்று கூறி, இத்தகைய ஆய்வினை ‘உள்ளுறைப் பொருளியல்” ( Hermeneutic Semiotics) என்கிறோம்
இது ஒன்றும் புதியதல்ல. தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாட்டியல் போன்றவற்றோடு தொடர்புடையது. மேலும் இன்னும் நெருக்கமாக முனைவர் சிவக்குமார் சுட்டியது போல, பரத நாட்டியக் கலையில் ஒன்பான் சுவைகளைக் காட்டும் முதிரைகளோடும் மற்றும் இன்னும் பல ஆழமான அர்த்தங்களைக் காட்டும் அபிநயங்களோடும் தொடர்புடையது/ பரத நாட்டியத்தைப் பற்றி சில நூற்றாண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட ‘மாபாரத சூடாமணி’ எனும் நூல் இதனை விரிவாக விளக்கும்
இதனைத்தான் ‘உள்ளுறைப் பொருளியல்” அதாவது Hermeneutics Semiotics என்கின்றோம்,
இது கனவு ஆராய்ச்சியோடும் தொடர்புடையது. ஒருவன் தனது தோட்டத்தில் உள்ள வாழை மரத்தை அது தாவரவியல் நிபுணர் போல் வரைவது வேறு, தருத் தேர்வில் வரைவது வேறு. தருத் தேர்வில் அது வர அதற்கு ஓர் ஆழ் பொருள் உண்டு, கனவில் வரும் வாழை மரத்திற்கு உள்ளது போல்.
இந்த உள்ளுறை பொருளை, மறைபொருளை யாதென்று நாம் போதகர் என்ற முறையில் கண்டறிய வேண்டும். அதுவே பொருளாக இருக்கலாம் என்று தரு எழுதுவோரிடம் கூறி, உடன்பாடும் காண வேண்டும் உடன்பாடு இல்லை என்றால் மீண்டும் மீண்டும் உள்ளுறையை மாற்றி அமைத்து உடன்பாடு கொண்டு வரவேண்டும். காட்டாக வாழை படர்ந்த இலை மென்மை போன்றவற்றைக் கொண்டிருப்பதால் அதனை எழுதுவோர் அன்பு நிறைந்தவராகவும் மென்மையான சுவாபம் உடையவராக, அருட்குணம் மிக்கிருப்ப்வராக தனைக் காட்டிகொள்கின்றார் என்று கூறலாம்.
இப்படியே ஏனைய வடிவங்கட்கும்
இது அனைவராலும் முடியுமா?
இது பெரும்பாலும் முடியும் என்பதை முனைவர் சிவக்குமார் ஓர் சோதனை மூலம் பயிற்சியாளர்கட்கு திறம்ம்பட உணர்த்தினார். ஓர் எடுத்துக்காட்டு.
இரண்டு சம அளவிலான நீள்சதுரங்கள ஓர் தாளில் எழுதிக் கொள்ளுங்கள், அதில் ஒருவர் நடுவில் ஓர் சிறிய வட்டத்தை எழுத, இன்னொருவர் அந்த நீள்சதுரத்தையே அடைக்கும் வகையில் ஓர் பெரிய வட்டத்தை எழுதுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஓர் கேள்வி: இவ்விருவரில் யார் அடக்கம் நிறைந்தவ்ர்?
இந்த கேள்விக்கு அநேகமாக அனைவரும் சிறிய வட்டம் எழுதுகின்றவர்தான் அடக்கம் நிறைந்தவர் என்று கூறுவார்கள், இது உணமையும் கூட. ஆக இங்கு சிறிய வட்டம் எனும் சின்னமச் சித்திரம் எழுதுவோனின் குணமாகிய ;அடங்கி நிற்றல்’ என்பதை உணர்த்தி நிற்கின்கின்றது, இந்த சிறிய வட்டம் சுட்டும் உள்ளறை பொருள் ‘அடக்கம்’ எனும் குணமாகும்
இப்படியே மேலே விரிக்கப்பட்ட எல்லாத் தருகளுக்கும் உள்ளுறைப் பொருளை வெளிப்படுத்தி எழுதுவோனின் சிந்தனை ஓட்டங்களை நலமே கணித்து அவனுக்கு அவனையே உணர்த்த முடியும்
இதனோடு முதல் பாடம் முடிகின்றது, அடுத்த பாடம் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு.
பாடம் 2 இடுகை 1
நேற்று ( 28-9-13) ஆகமவுளவியல் பயிற்சியின் இரண்டாம் பாடம் சிறப்புற நடந்தது, முன்று மணி நேரம் நீடித்த இந்த விளக்க உரையை முனைவர் சிவக்குமார் அவர்கள் எவ்விதத் தொய்வுமின்றி பயிற்சியாளர்களின் கவனத்தை எல்லாம் ஈர்த்து மிகச் சிறப்பாக தருத்தேர்வின் அடிப்படைகளை விளக்கினார்.
முதலில் ஏன் தருத்தேர்வு? அது ஏன் தமிழர்களின் பண்பாட்டிற்கு பெரிதும் ஒத்துவரும் ஒன்று என்பதை பல சான்றுகளோடு விளக்கினார்.
மரவழிபாடு
மிகப் பண்டைய காலத்திலிருந்தே தமிழர்களின் பண்பாட்டின் ஓர் மையக் கூறாக மரவழிபாடு இருந்திருக்கின்றது, இன்றும் அது செவ்வே தொடர்கின்றது இறையிலி கொள்கையினரில் பலர் இதனை குருட்டு நம்பிக்கை என்று கூறி அதனை வன்மையாக கண்டிப்பர். ஆயினும் உலகெங்கும் மாந்தர்கள் தொல்காலத்திலிருந்தே ஏன் மரத்தை தெய்வீகமாகக் கருத வேண்டும் ?, மரத்தில் தெய்வங்கள் இருக்கின்றன என்று ஏன் நினைக்கவேண்டும்? அந்த நினைப்பில் மரங்களைத் ஏன் தொழ வேண்டும்? தமிழர்களிடையே ஆல் அமர் செல்வனாக சிவபெருமான் கருதப்படுகின்றார், அதேப் போல வேப்ப மரத்தில் அம்மன் குடிகொண்டிருப்பதாக மக்கள் பொதுவாக நம்புகின்றனர். சில சமயங்களில் வேம்புவிற்கும் ஆல மரத்திற்கும் அவை பின்னிப் பினைந்து வளர்ந்திருக்க, திருமணமும் செய்து வைக்கின்றனர். ஏன் இப்படி?
உற்றே அறியும் ஓருயிர் சீவனாகிய மரத்தின் அமைப்பிற்கும் தெய்வங்களின் அமைப்பிற்கும், மனித உளத்தின் அமைப்பிற்கும் ஏதோவோர் தொடர்பு இருக்கத்தான். இந்த மரவழிபாடு உலகெங்கும் பரவி இருப்பதாகத் தெரிகின்றது. அது தமிழர்களிடையே மிக வலுவாகப் பரவி இருக்கின்றது
மரமும் மானிட உடம்பும் உள்ளமும்
மரத்திற்கு உடம்புதான உண்டு, உள்ளம் இல்லை, மாந்தர்கட்கு உடலோடு உள்ள்மும் உண்டு என்பதொடு அந்த உள்ளத்தில் பலவற்ரை மறைத்து வைத்தல் புதைத்து வைத்தல் போன்றவையும் நடக்கும். ஒருவனை பார்த்த மாத்திரத்தில் பிறகு சிறிது உரையாடியப் பிறகும் உள்ளத்தில் என்ன தான் இருக்கின்றது என்று எளிதில் அறிய முடியாது. அந்த மாந்தன் மறைத்து வைக்காது வெளிப்படையாக அனைத்தையும் பகிரங்கமாக கூறும் இயல்புடையவன் என்றாலும் அவன் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் பல விசயங்களை பாதி அறிந்தும் பாதி அறியாதேயும் இருக்கின்றான. அவனே அவனுக்கு முற்றிலும் விளங்கிக்கொள்ள முடியாத ஓர் புதிராகவும் இருக்கின்றான்
இப்படிப்பட்ட பிரச்சினை ஓரறிவு உயிர்களாகிய மரஞ் செடிகொடிகளுக்கு இல்லை அவ்ற்றிற்கு கரப்பாட உதவும் உள்ளம் என்று ஒன்றில்லை. யாது அதற்கு நடக்கின்றதோ அதனை செவ்வே தனது வடிவில் காட்டி விடும்
இதனை பல எடுத்துக்காட்டுகளோடு முனைவர் சிவக்குமார் நலமே விளக்கி ஏன் தருத்தேர்வு ஓர் ஆழ்நுழைவுத் தேர்வாகின்றது என்பதை விளக்கினார். மாநதர்களின் உள்ளத்தை , உடம்பின் உணமையான நிலவரத்தை படம் பிடித்துக் காட்டும் ஓர் கருவியாக தருத் தேர்வு விளங்குகின்றது
இது எப்படி ?
ஓர் மரம் பல ஈர்ப்புகட்கு ஆளாகி வளர்கின்றது. அதற்கு நீர் இல்லாது, நல்ல மண் இல்லாது வேண்டியக் காற்றும் ஒளியும் போன்ரவை இல்லாவிட்டால் அதன் வளர்ச்சியில் குன்றி தனது உருவில் அதனைக் காட்டிவிடும். நல்ல ஒளி கிடைக்கும் சூழ்நிலலயில் நலமே உயர்ந்து கிளைகள் விட்டு வளர்ந்து செழித்து நிற்க, அந்த ஒளிக்குத் தடை என்றால் மரமும் நேராக வளராது வளைந்து நெளிந்து குறுகிக் குன்றி விகாரமுற்றுத் திகழும்
மாந்தர்களின் நரம்பு மண்டலமும் மூளையும் இந்த மரங்களின் உருவ அமைப்பையேக் கொண்டிருக்கின்றன. மாந்தர்களின் உள்ளத்தை நாம் உள்ளவா அறிய முடியாது என்ற போதிலும், உள்ளத்தின் ஆன்மாவின் செயல்பாடுகளை இந்த நரம்பு மண்டலம் வழியாக மூளையின் பல்வேறு தொழிற்ப்பாடுகள் வழியாக உணர்ந்து கொள்ள முடியும் இந்நிலையில் நரம்பு மண்டலத்தின் மூளையின் செயல்பாட்டு நிலையை நாம் படம் பிடித்துக் கண்டால், உள்ளத்தின் செயல்பாடுகளை சிந்தனை ஓட்டங்களை மற்றும் பல தெற்றென புலனாகாது கிடக்கும் பல கூறுகளை அறிய வரலாம் அல்லவா?
மாந்தர்கலின் நரம்பு மண்டலமும் மூளையும் தருப்போன்ற அமைப்பை உடையன என்பதொடு. இந்தத் தருத் தேர்வில் மரங்கலை தரப்படும் ஆணைகட்கு ஏற்ப சித்டிரங்களாக் எழுதும் போது, எழுதோவொனின் நரம்பு மண்டலம் எப்படி இருக்கின்ரது, மூலைஅயில் செயபாடு என்ப்படி இருக்கின்றது என்றெல்லாம் அரிய முடியும்
உள்ளதின் செயல்பாடு நரம்பு மண்டலத்தோடும் மூலையின் செய்ல்பாட்டொடும் தொடர்புற்று இருக்கம். இவற்றின் அமைப்பை நாம் ஒருவாறு அறிய வர, உள்ளத்தின் செயல்ப்பாடுகளையும் ஒருவாறு அறிய வருகின்றோம்
ஆன்மா தான் குடிகொண்டிருக்கும் உடம்பின் அல்லது மூளையின் நரம்பு மண்டலத்தின் நிலையை ஒருவாறு அறிந்தே இருக்கின்றது. சாதாரண முறையில் சொற்களால் அதனை விளக்க முடியாது போனாலும் தருத்தேர்வு போன்ற ஆழ்நுழைவுத் தேர்வுகளில் அது வெளிப்பட்டு விடுகின்றது, இதனால் மறைந்தும் ஒளிந்தும் அல்லது அவனுக்கே தெரியாது உள்ளத்தில் புதைந்து கிடக்கும் பல கூறுகளும் இந்த தருத் தேர்வின் வழியாக வெளிப்பட்டு நிற்க அது ஓரளவு காணவும் வருகின்றது
ஓர் இளைஞன ஓர் பெண்னை கற்பழிக்க எண்ணி இருந்தால் இந்த எண்ணம் அவனை மீறி இந்த தருத்தேர்வில் வந்து விடும்
தொடரும்
உலகன்
பாடம் 2 இடுகை 2
மேலே மாந்தர்களின் நரம்பு மண்டலத்திற்கும் மூளையின் அமைப்பிற்கும் மரங்களின் உருவத்திற்கும் ஓர் தொடர்பு இருப்பதைப் பற்றி விளக்கப்பட்டது. இனி அடுத்ததாக மனிதனின் நாட்டங்கட்கும் அவர்கள் எழுதும் தருக்களுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கம் தரப்பட்டது.
எவ்வாறு உலகில் ஓர் மரம் பலவகையான ஈர்ப்புகட்கு ஆளாகியே நன்றாகவும் தடைபட்டும் தடையை நீக்கியும் வளர்கின்றதோ அவ்வாறே தான் மாந்தர்களின் உள்ளமும் ஆகும். ஆன்மாவும் அகத்தே பல ஈர்ப்புகட்கு ஆளாகியே பல செயல்களைச் செய்து வாழ்கின்றது. அவர்கள் எழுதும் தருவில் எப்படிப்பட்ட ஈர்ப்புகள் அவர்கள் உள்ளத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டு பிடித்து அதன் வழி மனசிக்கல்களின் மூலத்தை அறிந்து அதற்கேற்ப உபதேசம் கூறி சிக்கல்களை தீர்க்க முடியும்
நாட்டங்களும் ஈர்ப்புகளும்
நன்றாக வள்ரும் ஓர் மரம் அடிப்படையில் இரண்டு வகையான ஈர்ப்புகட்கு ஆளாகியே வளர்கின்றது, அடிப்படையானது ஒளி ஈர்ப்பு (phototropism) நீர் ஈர்ப்பு(aquatropism) என்பவற்றோடு ஏனைய பஞ்சபூதங்களின் ஈர்ப்பு என்றும் இவை ஆகும் ஒளி ஈர்ப்பு மரத்தை உயர்ந்து உயர்ந்து விண் நோக்கி அல்லது சூரியனை நோக்கி வளரச் செய்ய, நீரின் ஈர்ப்பு மரம் ஆழமான வேர்களை விட வைக்கின்றது. இந்த வேர்களும் நீரைத் தேடி பலவாறு கீழ் நோக்கி படர்கின்றன.
மரத்டை பார்த்து அதற்கு சூரிய ஒளியும் நீரும் வேண்டிய அலவு கிடைக்கின்றதா அல்லையா என்றெல்லாம் கணித்துக் கூற முடியும்
அதேப் போலத்தான் மனித ஆன்மாவும் அதன் நாட்டங்களின் தோற்றமும்
ஆன்மாக்களின் அடிப்படை ஈர்ப்புக்களைக் காண, அவை இரவிமதி ஈர்ப்பு( Numenotropism) என்றும் அதன் எதிராக ஆணவமல ஈர்ப்பு( Giggotropism) என்றும் ஆகும். இங்கு இரவிமதி ஈர்ப்பு மரங்களில் ஒளி ஈர்ப்பினைப் போல மாந்தர்களை மேலே மேலே ஞான வழியில் உயர்ந்து செல்லுமா ஊந்தும், இழுக்கும்.
இந்த இரவிமதியே , அருட்பெருஞ்சோதியே பிரிந்து நாதத்தின் இரவி என்றும் விந்துவின் மதி என்றும் விளங்கி அகத்தே இடைகலை பிங்கலை நாட்டங்களை உருவாக்கும். இவற்றையே இடகலை நாடி என்றும் பிங்கலை நாடி என்றும் சித்தர்கள் கூறுவர்
இனி இந்த நாட்டங்களே பலவகையான அடிப்படை வேட்க்கைகளை அகத்தே நிறுத்துகின்றன. இடகலை நாட்டம் அதிகார வேட்கையை நிறுத்த, பிங்கலை நாட்டம் இன்ப நாட்டத்தை நிறுத்துகின்றது. இவை இரண்டும் இணைந்தே நடக்கும் சுழுமுனை நாட்டத்தில் ஞான நாட்டமே ஆக ஞான வேட்கையே ஓங்கி இரூக்கும்
இப்பட்டிப்பட உளவியல் கருத்துக்கள் எல்லாம் புதியதல்ல, சித்தர்கள் பண்டே விளக்கியது, நாடி சாத்திரத்தின் ஓர் கூறாக விளங்குவது
இனி ஓர் கேள்வி எழுகின்றது. மனித உள்ளத்தில் நாம் காணும் நாதவிந்து ஈர்ப்புக்களும் அவற்றால் எழும் வேட்கைகளும் எவ்வாறு மரங்களில் விளங்குகின்றன? அங்கு நாதமும் விந்துவும் அவற்றின் எதிரான மலமும் உண்டா?
உண்டு என்றே ஆய்வுகள் நிறுத்துகின்றன
உலகெல்லாம் பரந்த ஓர் ஆய்வில் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோடு என்றும் புள்ளி என்றும் ஓர் கிறுக்கலில் தொடங்கி பிறகு ஓர் வட்டம் என்றும் அதனை முட்டும் ஓர் தூண் போன்ற வடிவத்தையும் எழுதுகின்றனர், மேலும் இந்த தூண் மேல் வட்டத்தைக் கிழித்துக் கொண்டு உட்புகுந்தால் அடுத்தபடி வளர்ச்சியாக கிளைகளும் இலைகளும் தோன்றுகின்றன.
இங்கு புள்ளி வட்டம் போன்றவையே விந்து ஆக கோடும் தூணும் நாதம் ஆகின்றது, இரண்டும் இனைந்ததே தலைகீழ் சிவலிங்கம் ஆகும்.
இப்படிப்பட சிவலிங்கம் இப்படி உலகெல்லாம் வெளிப்பட்டு நிற்க, அது சைவ சமயம் சார்ந்த சின்னம் மாத்திரம் அல்ல, மாறாக அனைவர் உள்ளத்திலும் இருப்பவை யாகும்.
சரி, இங்கு எப்படி ஆணவமலத்தின் உண்மை வெளிப்படுகின்றது?
பல வடிவங்களிலும் வகையிலும். முதலில் மிகக் குறைந்த அறிவுள்ள ( I.Q < 80) சிறார்கள் தருத் தேர்வில், தண்டை எழுதினால் சிரசை எழுதாதும், சிரசை எழுதினால் தண்டை எழுதாதும் போகின்றனர். இங்கு நாதமும் விந்துவும் இணைந்து செயல்படாது போக, அறிவின் வளர்ச்சியே குன்றுகின்றது. இப்படிச் செய்வது யாதாக இருக்கும் எனும் போது, அது ஆணவ மலமாக இருக்கலாம் என்று தெரிகின்றது.
மேலும் கொடூரமான எண்ணங்களும் ஆழ்ந்த துக்கம் துயரம் விரக்கி மனவுலைச்சல் கலக்கம் போன்றவை காட்டும் மரங்களில் கிளைகளை வெட்டல், மரத்தையே சிதைத்தல், கீறி கீறி கருப்பாக்கள் போன்றும் இன்னும் பலவாறும் தருச் சிதைவுகள் தோன்ற அவை அனைத்தும் ஆணவ மலத்தின் தாக்கத்தால் எழுவன என்று கொள்ளலாம்
தொடரும்
உலகன்
பாடம் 2 இடுகை 3
நான் பன்முறை வற்புறுத்தி இருப்பதுபோல முனைவர் சிவக்குமார் அவர்களும் தொல்காப்பிய பொருளதிகாரச் சிந்தனைக்கும் ஆகமவுளவியலுக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இரூப்பதையும் பல சான்றுகளோடு விளக்கினார். அதனைப் பற்றி இக்கட்டுரையில் விளக்கப்படும்
தொல்காப்பியமும் ஆகமவுளவியலும்,
இதுவரை நாம் விளக்கியதிலிருந்து ஆன்மா எனும் உள்ளம் ஓர் தனிப்பட்ட பொருள் எனினும் அது உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தை ஆகவே மூளையைக் கருவியாகவேக் கொண்டு செயல்படுகின்றது என்றும் கண்டோம். ஆன்மாவின் அனுபூதிகள் நரம்பு மண்டலத்தைத் தாக்க, அந்த நரம்பு மண்டலத்தின் அமைப்பு தருத்தேர்வின் வழி வெளிப்பட, உள்ளத்தின் போக்கினை ஒருவாறு கணிக்கவும் முடிகின்றது.
இங்கு உள்ளத்தின் அமைப்பு ஓர் தருவாகக் காணப்பட, உடன் நமக்கு தொல்காப்பியத்தின் பொருளதிகார திணைப் பாகுபாட்டை நினைவு படுத்துகின்றது. அங்கு ஒவ்வொரு ஒழுக்கமும் ஓர் திணைக்கு உரியதாக்கப்ப்ட்டு அந்தப் திணையும் ஓர் தெய்வத்தின் ஆட்சியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்தத் திணைகளும் புறத்தே விளங்கும் நிலத்திணைகள் என்றும் அகத்தே விளங்கும் ஆன்மத் திணைகள் என்றும் கொளப்படுவதையும் காண்கின்றோம்
சில சூத்திரங்கள்
947
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப
918
அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்தியப் பண்பே
காட்டாக ஒன்று, அடர்ந்த கானகத்தில் நீண்ட நெடிய பராரை மரங்கள் செழித்து வளர, அது குன்றுகள் நிறைந்த குறிஞ்சி எனும் நிலத்திணை என்பதொடு, அதிக அளவில் காமவேட்கை எனும் உரிப்பொருளைக் காட்டும் ஆன்மத்திணை என்றும் கூறப்பட்டு அதன் அதிதெய்வமாக திருமுருகன் கொளப்படுகின்றான் இதேப்போன்று ஏனைய திணைகளாகிய முல்லை மருதம் பாலை நெய்தல் போன்றவை.
இவற்றை அன்பின் ஐந்திணை என்று பாராட்டி, இவற்றிற்கு புறம்பாக தெய்வங்களின் ஆட்சி இல்லாத ஆன்மத் திணைகளாக ஒருதலைக் காமத்து கைக்கிளையையும் ஒவ்வா காமத்து பெருந்திணையையும் கொள்வர்.
இதற்கு சில சூத்திரங்கள்
949
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை
950
முதல் எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புனர்ந் தோரே
951
மாயோன் மேய காடுரை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மஎஉதம் நெய்தலெனக்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
இங்கு சூத்திரம் 949-இல் வரும் ‘பாடலுட் பயின்றவை” என்பதை ‘தருத்தேர்வில் எழுதப்படும் தருக்களில்’ என்று கொண்டால் தொல்காப்பியத்திற்கும் ஆகமவுளவியலிற்கும் உள்ளத் தொடர்பு தெற்றென விளங்கும். எழுதப்படும் தருக்கள் ஆன்மாவின் உளத்திணையை முதல் கரு உரி என்ப்படும் பொருட்களைக் காட்டி நிற்க, இவற்றில் உள்ளத்தின் ஈர்ப்பு நிலையை வேட்கை நிலையை காட்டும் உரிப்பொருள் ஆகமவுளவியலுக்கு உதவும் ஒன்றாகின்றது
இந்த உரிப்பொருள் என்றால் என்ன?
இதனையும் ஓர் தொல்காப்பியச் சூத்திரம் நலமே விளக்குகின்றது
960
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலை திணைக்குரிப் பொருளே
இங்கு உரிப்பொருள் என்பவை உள்ளத்தின் நிலைகளைக் காட்டுவதாக இருப்பதைக் காண்க, குறிஞ்சித் திணையின் புணர்தலும் அதன் நிமித்தமும் ஆழமான காமவேட்கை அகத்தே இருப்பதைக் காட்டும் என்று கூறப்படுவதைக் காண்க
ஆக ஒருவன் எழுதும் மரங்களைக் கொண்டு அவனது உள்ளம எந்தத் திணையில் இருக்கின்றது ஆகவே எவ்வகையான வேட்கை நிலையில் இருக்கின்றது என்று கணித்துக் கூறமுடியும். சங்கத் தமிழர்கள் வழக்கு செய்யுள் என்ற இருவகை கிளவியாக்கங்களையே கருவியாக கொண்டு உள்ளத்தை அளக்க, இங்கு தருத் தேர்வின் வழி, எழுதப்படும் தருக்களைக் கொண்டே உள்ளத்தின் வேட்கை நிலையை நாம் கணிக்கின்றோம்
ஐம்பூதங்களும் திணைகளும்
நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்று தொல்காப்பியம் கூறும் பிற்காலத்தில் உண்மைவிளக்கம் போன்ற சைவ சாத்திரங்களில் இந்த ஐந்து பஞ்சபூதங்களாகிய மாயையால் உருவாக்கப்பட்டதே உயிர்களின் உடலும் அங்கு நிலவும் நரம்பு மண்டலம் போன்ற அகவுறுப்புக்களும் என்று கூறப்படும்
உலகத்தில் நிலவும் நிலத்திணகளுக்கு ஏற்ப உடம்பிலும் ஆகவே உள்ளத்திலும் இந்த திணைகள் உண்டு.
இதனை இப்படிக் கானலாம். பாலை என்பது தீ மிக்கிருக்க நீர் குன்றி இருக்க தோன்றும் நிலப்பகுதியாகும். மருதம் என்பது இதற்கு மாறாக நீர் நிறைந்திருக்க தீயும் அளவோடு இருக்க, மண் நிறைந்த பூமியாகும். முல்லை என்பது இந்த ஐம்பூதங்களில் அனைத்தும் அளவோடு இருப்பதாகும். நெய்தல் என்பது மண் குறைந்து ஏனைய பூதங்கள் அளவோடு இருக்கும் நிலையாகும்
இந்தத் திணைகளில் தெய்வங்களின் ஆட்சியுண்டு. ஆனால் கைக்கிளை பெருந்திணையில் இல்லை. இவற்றிற்கு நிலமும் இல்லை,
ஆக இதன் பொருள் என்ன?
எங்கு ஆணவ மலம் மிக்கிருக்கின்றதோ அங்கு ஐம்பூதங்களின் மயக்கத்தால் வரும் நிலங்கள் விழுங்கப்பட, நிலத்திணைகள் தோன்றாது போகின்றன. ஆகவே தெய்வங்களின் ஆட்சியும் இல்லாது போகின்றன
குறிப்பு:
இந்த தொல்காப்பிய நிலத்திணை ஆன்மத்திணை ஆய்வுகள் விண்ணில் விளங்கும் கோள்களுக்கும் இராசி மண்டலங்களுக்கும் தொடர்பு படுத்தியும் முனைவர் சிவக்குமார் சோதிடக் கலையை ஓர் புதிய கோணத்தில் காண்கின்றார். மேலும் இப்படிப்பட்ட சோதிடச் சிந்தனைகள் சித்தர்கல் வளர்த்த ‘அகக்கிரக மார்க்கம்” என்பதற்கும் ஒத்துவரும் என்பதையும் காண்க.
தொடரும்
உலகன்
பாடம் 2 இடுகை 4
தமிழர்களின் இந்தியர்களின் சிந்தனை பாரம்பரியத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன. வாழ்க்கையில் நடப்பன பற்றி உள்ளதை உள்ளவாக் கண்டு ஆய்ந்து தெளிந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பதைக் காணமுடியாது. வேதங்களுக்கும் மற்றும் சாத்திரங்களுக்கும் விரோதமாக எதுவும் கூற முடியாத சூழ்நிலையை இந்து மதம் உருவாக்கி மக்களின் சிந்தனையை சிறைபிடித்து வைத்துவிட்டது. இதனால் தான் ஐரோப்பியர்களோடு தொடர்பு பல நூற்றாண்டுகளாகியும் இன்றும் தமிழர்களிடையே உளவியல் குமுகவியல் மாந்தரியல் போன்ற துறைகள் தோன்றவில்லை,
இவ்வகையில் ஆகமவுளவியலை உருவாக்கிய காலத்திலேயே ஓர் பெரும் குறையைக் கண்டேன்
மானிடர்களின் செயல்களை வகைப்படுத்தி முறைபடுத்தி ஓர் நல்ல விளக்கத்தினை, செயல் தெரியத்தை ( Theory of Action) காண முடியவில்லை,
உளச் சிக்களில் அவதியுறத்தரும் பீதி அச்சம் கடுஞ்சினம் குரோதம் வெறுப்பு கொலைவெறி காமவெறி போன்ற பொல்லாத செயல்கள் எப்படித் தோன்றுகின்றன என்ற கேள்விகட்கு தக்க விளக்கம் இல்லை,
பழைய கன்மக் கோட்பாடு இவற்றையெல்லாம் விளக்குவதாக இல்லை, ஆகாமியம் சஞ்சிதம் பிராப்தம் என்பவை ஏன் ஒருவனுக்கு குரோதம் காமவெறி போன்றவை வருகின்றன என்பதை விளக்கமுடியாது. ஒரே விளக்கம்” இவை எல்லா பூர்வ கன்ம வினை, பிராப்தத்தின் ஒரு கூறு’ என்று சொல்லி மழுப்பி விடுவர். இதனால் வற்றை மாற்ற முடியாது என்றும் உணர்த்துவர்
இங்கு தான் ஓர் புதியத் தெரியம் தேவப்படுகின்றது என்பதை உணர்ந்து எனது ‘சித்தாந்தத் திருநெறி’ எனும் சிறுநநூலைல் எழுதியவற்றை முனைவர் சிவகுமார் தக்க நேரத்தில் பரிந்துரைக்க இந்த செயல் தெரியம் நல்ல விளக்கம் கண்டது
ஆகமவுLaவியலின் செயல் தெரியம்( Therory of Actions)
மேலே தருக்கள் எவ்வாறு பல ஈர்ப்புகட்கு ஆளாகியே வளர்கின்றன என்று கண்டோம். மேலும் அதனைப்போல ஆன்மாவும் பல ஈர்ப்புகட்கு ஆளாகியே செயல்களில் இறங்குகின்றன என்றும் கண்டோம் ஆன்ம ஈர்ப்புகளைக் காணும் போது அவற்றை இரவிமதி ஈர்ப்பு என்றும் இது பிரிந்து இரவி ஈர்ப்பு மதி ஈர்ப்பு என்றும் மேலும் இவற்றை எல்லாம் அழிக்கும் மல ஈர்ரப்பும் செயல்படுகின்றன என்றும் கண்டோம். இவையே சுழுமுனை நாடி இடகலை நாடி பிங்களை நாடி என்றும் மலத்தால் வரும் நாட்டங்களை மரணநாடி என்றும் வகுக்கப்பட்டுள்ளதைக் கண்டோம்
இந்த அடிப்படை நாட்டங்களை நிறுத்தும் நாடிகள் ஐரோப்பிய பண்பாட்டில் யுங் ப்ரய்டு போன்றோரிடையே instincts எனப்படுவனவற்றோடு ஒப்பிடத் தக்கன. ஆயின் சித்தர்களின் இந்த நாடிகள், நரம்பு மண்டலத்தின் நாடித் துடிப்பொடு தொடர்புற்றிருக்க instincts அப்படி இல்லை என்றே தெரிகின்றது.
ஆயினும் இந்த நாடிகள் வழி நாட்டங்கள் நமக்கு ஓர் செயல் தெரியத்தை உருவாக்க உதவியுள்ளது. தருத் தேர்வில வரும் பல கூறுகளை வைத்து மாந்தர்களின் செயல்களை கணிக்க முடிகின்றது
பொதுவாக எல்லா வினைகளையும் உழற்சி வினைகள், கழற்சி வினைகள், ஊழ்ச்சி வினைகள் மலர்ச்சி வினைகள் என்பனவற்றோடு இவற்றிற்கு எதிராக இருக்கும் வீழ்ச்சி வினைகள் என்று வினைகள் வகுக்கப்படுகின்றன
இவற்றில் வீழ்ச்சி வினைகள் என்பன அகத்தே செறிந்திருக்கும் ஆணவ மல ஈர்ப்பால் செய்யப்படும் வினைகள். இவையே தொல்காப்பியர் கூறிய கைக்கிளை பெருந்திணை ஆகியவற்றின் அன்பில்லாத பொல்லாத தீய ஒழுக்கங்கள் ஆகும் இங்கேயே வன்முறை கொலைவெறி கடுங்குரோதம் போன்றவையும் அவற்றால் எற்படக்கூடிய மன கலக்ங்களும் வருத்தங்களும் பீதிகளும் இன்னும் இவை போன்றவை அகத்தே இருப்பதைக் காட்டும்
இவையே உளவியல் உபதேசக் கலைக்கும் பெரிதும் வேண்டியையும் ஆகும்
இனி இந்த மல ஈர்ப்பிற்கு ( giggotropism) எதிராக பாவங்கள் அல்லாத வினைகளை உளதாகும் ஈர்ப்பு இரவிமதி எனூம் அருட்பெருஞ்சோதி ஈர்ப்பும் அதன் கிளைகளாகிய இரவி மதி ஈர்ப்புகள ஆகும். இவற்றால் எழுவனவே உழற்சி வினைகள் போன்றவை.
இங்கு உழற்சி வினகள் என்பன உள்ளப் பண்பாட்டில் பக்குவத்தில் எவ்வித உயர்வையும் கொண்டு வராதவை யாகும். உழல்தல் மீண்டும் மீண்டும் அதே நிலைக்குத் தள்ளபடுதல் ஆகும்
இடகலை பிங்கல நாட்டங்களால் அமையும் செயல்கள் இத்தன்மையன
இனி கற்று அறியாமை நீக்கி தத்துவக் கழற்சிகள் செய்து பக்குவதில் உயர ஏதுவான காரியங்கலே கழற்சி வினைகள் ஆகும். இங்கு அகத்தே சுத்தமாகுதல் இறைவனை நோக்கி இன்னும் நெருங்கல் போன்றவை மெய்யாகும்.
இனி இன்னும் தீவிரமாக தத்துவக் கழற்சிகள் நடக்க அவற்றால் ஆதார சக்கரங்களில் மேலே மேலே உயர்ந்து செல்வதற்கு உதவுவனவே ஊழ்ச்சி வினைகள் ஆகும். ஊழ்தல் என்றால மலர்தல் என்று பொருள்படும். அதனால மீகவும் சுத்தமாகி அன்பும் அருளும் கூடி நிற்கும் நிலைக்குக் கொண்டு செல்வனவே ஊழ்ச்சி வினைகள்
இவை அனைத்தும் இரவிமதி ஆட்சியின் எழும் ஈர்ப்பில், சுழுமுனை நாடிச் செலவில் அமையும் செயல்களாகும்
இனி மலர்ச்சி வினைகள் என்பன, கன்ம ஈட்டம் தராத செய்யப்படும் அனைதும் சிவச்செயலேயாக, மக்கள் நலங் கருதி செய்யப்படும் தொண்டேயாக அமையும் செயல்கள் ஆகும், இவை குருநாடிச் செலவில் அமைவனவும் ஆகும்
குறிப்பு:
இங்கு இத்தகைய வினை பாகுபாடு மிக சுருகமாகவே விளக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இத்தகைய வினைகள் தருத்தேர்வின் வழி கணிக்கலாம் என்பதை அடுத்து வரும் பாடங்களில் விளக்கப்படும
இத்தோடு இரண்டாம் பாடத்தின் அடிப்படைக் கூறுகள் விளக்கப்ப்பட்டன. இனி அடுத்து வரவிருப்பவை மூன்றாம் பாடம் நடந்த பின்
தொடரும்
உலகன்
பாடம் 3 ; இடுகை 1
நேற்று (12-10-13) மெய்கண்டார் அறிவாலயமாக வளர்ந்து வரும் எனது இல்லத்து மண்டபத்தில் ஆகமவுளயில் பயிற்சியின் மூன்றாம் படத்தை பல புதுமைகளோடு முனைவர் சிவக்குமார் நடத்தி வைத்தார். கூடுதலாக பலர் வந்திருக்க, பெருகி வரும் ஆர்வைத்தைக் கண்டும் பலவகையான ஆய்வுச் செய்திகளை முனைவ சிவக்குமார் தொடுத்து பல சசன்றுகளோடு விளக்கிய நேர்த்தியையும் கண்டு ஆகமவுளவியல் தமிழர்களின் ஓர் அற்புதமான ஆழ்வுளவியல் துறையாக வளர்ந்து உலகெல்லாம் பரவி நல்லது செய்யும் என்று எனக்கு நம்பிக்கைப் பிறந்துவிட்டது
இந்த மூன்றாம் பாடத்தில் தருத் தேர்வின் முதற் கட்டமாகிய உள்ளுறைப் பொருளியலிற்கே( Hermeneutic Semiotics) வருகின்றோம். மிகவும் சிக்கலானதும் அதன் முக்கியக் கூறுகள் பல நூற்களிலும் ஆய்வுக் கட்டுரைகளிலும் விரிவிக் கிடக்க அவற்றை முறைப்படுத்தி தொகுத்து வழங்கும் பணியை முனைவர் சிவக்குமார் திறன்பட செய்திருக்க, இங்கு மேலும் சில வரலாற்றுக் குறிப்புக்களையும் சேர்த்து பாடங்களைத் தருகின்றேன்
பிற்காலத்தில் இந்த பாடங்கள் ஓர் நல்ல நூலாகவும் வெளிவந்து பலருக்கு பயன்படும் என்றும் எனக்குப் படுகின்றது
முதல் பகுதி: இயற்கைத் தருக்களும் நாத விந்துக்களும்
சிவலிங்கம் என்பது நாதம் விந்து எனும் சிவதத்துவங்களின் சேர்க்கை, ஓர் உலகப் பொது, ஆய்வுகள் வழியாக இது உலகமெங்கும் அனைவர் உள்ளத்திலும் இருக்கும் ஒன்று என்பதை நிறுத்த முடியும்
குழந்தைகளின் கிறுக்கல்களை ஆய்ந்ந்தால் தொடக்கத்தில் புள்ளி என்றும் கோடும் என்றும் தனித் தனியாக கீறும் அவர்க: பிறகு இரண்டையும் இணைத்து வட்டம் என்றும் அதனைத் தொடும் ஓர் தூண் என்றுமாக எழுதுவார்கள், இது 3 வயது குழந்தைகளின் கிறுக்கல்களில் காணமுடியும். அதன்பிறகே தூணாகிய நாதம் விந்துவாகிய வட்டத்தை கிழித்து உள்ளே நுழைந்து கிளகள் விட்டு வளரவே தான் ஓர் இயற்கையான தரு சித்திர வடிவில் நமக்குக் கிடைக்கின்றது, இது 5 அல்லது 6 வயதிலிருந்தே தொடங்குகின்றது. இங்குதான் இது தென்னை என்றோ வாழை என்றோ அடையாளம் காணக் கூடிய வகையில் குழந்தைகள் தருக்களை இயல்பான வடிவங்களில் எழுதத் தொடகுகின்றனர்.
இங்கு சில குழந்தைகள் தென்னை போன்ற மிக எளிதான மரங்களையும் இயற்கையாக எழுதுவதற்கு தாமதம் செய்வர். வயது 8 அல்லது 9 வரைகூட இந்தத் திறன் அமையாது போகலாம்
இப்படி இருந்தால் குழந்தைகளின் பார்வையில் அவர்கள் பொருட்களைக் கண்டு அவற்றின் குணாதிசயங்களை அறிவதில் ஏதோ ஓர் சிக்கல் இருக்கின்றது என்றும் உணர்ந்து தக்க பரிகாரங்களை எடுக்க வேண்டும்
மூளைச் சிதைவு
நாதமும் விந்துவும் இணைந்து வளர்ந்தால்தான் அறிவு இயல்பான முறையில் வளரும். இங்கு சிவக்குமாரும் மற்றும் தமிழ்கச் சித்தர்களும் பண்டே வற்புறுத்தியுள்ளதுதுபோல், விந்து எனபது ‘வித்து’ ஆகும், அனைத்தையும் தன்னுள் சூக்கும வடிவத்தில் கொண்டிருருக்கும் ஓர் குண்டம். நாதம் என்பது ஓர் பரந்து விரிந்து ஊடுறுவிச் சென்று துளைக்கும் ஓர் ஆற்றல். இதுவே வட்டக் குண்டமாகிய விந்துக்குள் புகுந்து அங்கு துளைத்துத் துளைத்து பல கிளர்ச்சிகளை உண்டாக்க, சூக்கும வடிவத்தில் விந்துக்குள் இருக்கும் பல வெளிப்படவே தான் அறிவு வளர்கின்றது, பலவகையான சிந்தனைகள் கருத்துக்கள் கற்பனைகள் போன்றவை அகத்தேத் தோன்றுகின்றன. அறிவும் பல்வேறு தடங்களில் செயல்பட்டு பலவகையான வளர்ச்சிகளை பதிவு செய்கின்றது.
இங்கு 15 வயதாகியும் அறிவுத் திறனில் குன்றிய குழந்தைகளிடம் இந்த தருத்தேர்வை கொடுத்தால்ல் சில நுட்பமான் ஆழமான அறிவின் வளர்ச்சியைப் பற்றிய விசயங்களை அறிய வருவோம்
இத்தகையக் குழந்தைகளிடமிருந்து இப்படிப்பட்ட சித்திரத் தருக்க்ளைப் பெறுவது நேரம் பிடிக்கும் ஒர் காரியம் என்பதொடு மிகப் பொறுமையாகவும் இருக்க வேண்டிய ஒன்றுமாகும். பன்முறை மீண்டும் மீண்டும் சொல்லியே ஊக்கி இந்த தருக்களைப் பெற வேண்டும்
ஆயினும் ஓர் வியப்பான கண்டுபிடிப்பு: இத்தகையக் குழந்தைகள் சிரசினை எழுதினால், தண்டினை எழுதுவதில்லை, தண்டினை எழுதினால சிரசினை எழுத முடிவதில்லை!
ஆக இவர்களால் வட்ட சிரசும் தூண்போன்ற தண்டையும் இணைத்து ஓர் தருவை எழுதமுடியாது போகின்றது.
ஏன் இப்படி? மூளையின் செயல்பாட்டினைப் பற்றி இது என்ன உணர்த்துகின்றது?
சிரசு விந்து என்றால் தூணைப் போன்ற தண்டு நாதமாகும். ஆக இவர்கள் மூளையில் நாதம் செயல்பட்டால் விந்து செயல்படுவதில்லை; விந்து செய்லபட்டால நாதம் செயபடுவதில்லை, இரண்டும் இணைந்து செயல்படுவது இல்லை,
நாதம் எனூம் துளைப்பு விந்து எனும் குண்டத்தை துளைக்காது போக, இயல்பான தரு அறிவில் தோன்றும் வகையில் மூளை செய்படாது போகின்றது
இதுவே அவர்களது அறிவு மிகவும் குன்றிய நிலையில் ( I.Q< 80_) இருப்பதற்குக் காரணாமகின்றது
மானிடர்களின் மூளை வலதுபக்கத்தில் விந்துவின் ஆட்சியையும் இடது பக்கத்தில் நாதத்தின் ஆட்சியையும் கொண்டுள்ளது, ஆக இங்கு வலது மூளையும் இடது மூளையும் இணைந்து இயங்காது தனித்தே இயங்க, ஒரு பகுதி இயங்கினால் இன்னொரு பகுதி இயங்காது போக, அறிவு வளர்ச்சி குன்றிவிடுகின்றது, ஏனைய சாதாரண குழந்தைகள் போல் இவர்களால் கற்க முடியாது போகின்றது
மெது குழந்தைகள் (slow learners)
இங்கு மெது குழந்தைகள் என்பார் The Slow learners ஆகும். விரிவான பல கள ஆய்வுகளில் தெரிய வந்த ஓர் விசயம: இத்தகையக் குழந்தைகள் இயல்பான தருக்களை எழுதுவார்கள் என்ற போதிலும், சிரசின் வட்டத்த்கிற்குள்ளேயே பல கிளைகளை கிறுக்கி சிரசை உடைதுது விரியாதே எழுதுவார்கள், இதனால் இவர்களால் தென்னை வாழை மா பப்பாளி போன்ற இது இன்னது என்றவாறு அடையாளம் தெரிகின்ற வகையில் தருக்கள் எழுத முடியாது தவிப்பார்க்ள்,
அதிவிரைவுக் குழந்தைகள் 6 வயதிலேயே தென்னை போன்ற தருக்களை எழுத, இத்தகைய மெதுகுழந்தைகள் 10 வயதிலும் இத்தகைய தருக்களை எழுத முடியாது தவிப்பார்கள்,
இவர்கள் அகத்தே குண்டத்து விந்துவே மிக உறுதியாக இருக்கும் அல்லது துளைத்து வட்டத்தை உடைக்கும் நாதக் கூறு வலுவிழந்து கிடக்க இப்படி ஆகின்றது என்று நாம் ஊகித்து அறியலாம்
இது வளர்ப்பு முறையில் அளவிற்கு மீறிய புறக் கட்டுப்பாடுகள் இருப்பதாலும் வருவதாக இருக்கலாம். மேலும் ஊட்டச் சத்து குறைந்த உணவுவையே உண்பதாலும் வரலாம்
தொடரும்
உலகன்
பாடம் 3 ; இடுகை 2
ஏறக்குறைய 6 வயது போல் குழந்தைகள் இது தென்னை வாழை என்றெல்லாம் அடையாளம் காணக் கூடிய வகையில் தருக்களை எழுதும் திறமை வளர்வது ஆய்வில் நலமே தெரிய வருகின்றது. இயற்கையான வட்டம் எழுதும் விந்துவின் ஆட்சியும் தண்டு எழுதும் நாதத்தின் ஆட்சியும் இணைந்து நலமே செயல்படும்போதே குழந்தைகளால் இயல்பான தருக்களை எழுத முடிகின்றது.
ஆயினும் இவ்வாறான இயல்பு தருக்கள் எத்தனையோ கூறுகளைக் கொண்டிருக்க இவையே ஆய்விற்குரியதாகின்றன.. இனி இவற்றைப் பற்றி அவை உணர்த்தும் குழந்தைகளின் குணத்தைப் பற்றி சிறிது விளக்குவோம்
பொதுவாக முனைவர் சிவக்குமார் பாடத்தின் போது விளக்கியவாறும் பேராசிரியர் யோஷிகாவா என்னிடம் பகிர்ந்துகொண்டவாறும், எழுதப்படும் தருக்களில் மூன்று பகுதிகள் மிக முக்கியமானவை: தூண்போல் உறுதியாக நிற்கும் நாதமாகியத் தண்டு, இலைகள் கனிகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும் சிரசு மற்றும் அடியில் பாதாளம் பாய்ந்து மண்ணைக் குடைந்துகொண்டு செல்லும் வேர்கள் ஆகிய இம்மூன்றே மிக முக்கியப் பகுதிகள்,
இவற்றில் காணக் கூடிய பல்வேறு இலக்கணங்களைக் கொண்டு தரு எழுதும் நபரின் குணத்தை அறிவின் தொழிற்பாடு போன்றவற்றைக் கணித்துக் கூறலாம்
தென்னையும் வாழையும்
அதற்கு முன்பு மிக அதிகமாக எழுதப்படும் தருக்களாக விளங்கும் தென்னையும் வாழையும் என்னதான் கூறுகின்றன என்பதை இங்கு ஓர் சிறிது விளக்குவம்
முதலில் நாம் காணவேண்டியது தென்னை மரம் சூரிய கலையின் நேரடி வடிவாக விளங்குவதையும் வாழையும் இதனைப் போன்ற படரிலை நீர் நிறைந்த வள மரங்கள் போன்றவை விந்துவின் மேலாதிக்கத்தையும் காட்டுவதைக் காண்க. நாதமும் விந்துவுமே மர வடிவில் எழுந்து நிற்பதாக இந்த இரண்டு தருக்களையும் கொள்ளலாம்
இவற்றை ஓர் நபர் எழுதினால், அதன் பொருள் என்ன?
இது அந்த நபரின் வயதினைப் பொறுத்தும் அமையும். ஆனால பொதுவாக தென்னை ஆண்மையை உணர்த்த அதனோடு வரும் வீரம் போன்றவற்றை உணர்த்த வாழை மென்மையையும் அன்பையும்ம் பரிவு பாசம் போன்ற குணங்களையும் உணர்த்தும்
இளைஞ்சிறார்கள் தென்னை எழுதினால தன் தந்தைக்கு நெருக்கமானவர்கள் என்றும் வாழை எழுதினால் தாய்க்கு நெருக்கமானவர்கள் என்றும் பொருள் படும்
பருவ பெண்கள் வாழை எழுதினால் அவர்கள் யாரோ ஒருவனைக் காதல் செய்கின்றார்கள் என்றும் வாழையில் தார்கள் இருந்தால் ஆழமான சுத்தமான இன்பமே தரவல்ல காதல் இருக்கின்றது என்றும் பொருள் படும்
ஓர் ஆடவர் வழை எழுதினால் அவர் அன்பு பாசம் நேசம் போன்ற மென்மை குணங்கள் நிறைந்தவர் என்று பொருள் படும்
புறக் குறிகள்
ஓர் கொடி போன்று நெடுக உயர்ந்து வளரும் தென்னையின் தண்டு பல மறைக்குறிகட்கும்( symbolic elements) இடந்தருகின்றது
முதலில் இந்த தண்டு நீண்டு வலது பக்கம் சாயும் வகையில் ஓர் ஈட்டிபோல் எழுதப்பட்டால், அதனை எழுதும் நபர் கிரியாவாதி என்றும் மனோதைரியம் உடையவர் முன்னேறத் துடிப்பவர் என்றும் பொருள் படும்
பின்னோக்கி வளைந்து இடது பக்கம் சாய்ந்திருந்தால், இவர் மாறுதற்கு விருப்பம் இல்லாதவர், ஓர் பழமைவாதி அகத்தே அதிகம் துணிவு இல்லாதவர் என்றெல்லாம் பொருள் படும். இங்கு வளைவையும் இடதுபக்க சாய்வையும் தருவது நாதத்தை ஊடுறுவும் விந்துவாகும்
இனி தேங்காய்கள் கொத்துக் கொத்தாக இருந்தால் தரு எழுதும் நபர் பலரோடு நலமே இணங்கி வாழ்பவர் என்று பொருள் படும். இந்தக் குலையிலிருந்து தேங்காய்கலள் தரை நோக்கி விழுவதுபோல் எழுதப்பட்டால், அந்த நபர் தனிமையில் வாடுகின்றார் வேறிடம் நோக்கிச் சென்று இடம் மாற விரும்புகின்றார் என்று பொருள் படும்
இனி தண்டு தடித்து உயர்ந்து இருந்தால் நபர் அதிராகத்தி விரும்பி பிறரை அடக்கி ஒடுக்கி வாழ விரும்புபவர் என்று பொருள், ஆணவச் செருக்கு நிறைந்தவர் எளிதில் விட்டுக் கொடுக்காதவர் என்றும் பொருள் படும் அவர் இருக்கும் இடத்திலே அவர் சொற்படியே அனைவரும் நடக்க வேண்டும் என்று விரும்புவர் என்றும் பொருள் படும்
ஊடுறுவுங் குறிகள்
இனி வாழை அகத்தே மறைந்திருக்கும் பல வேட்கைகள் வெளிப்பட அதிகம் இடந்தராது போக தென்னை அப்படி இல்லை. கொடிபோல் நீண்டு உயர்ந்து வளரும் தன்மையயின் தண்டு ஆழ அகத்தே புதைந்து கிடக்கும் பல புதைப்பொருட்கள் வெளிபட்டு நிற்க இடந் தருகின்றது.
பலர் நீண்ட தண்டினை எழுதும் போது, தென்னை மரத்தையே வளைந்து நெளிந்து உயர்ந்து செல்லும் ஓர் பாம்பாகவே எழுதுவர்,
சிலர் ஒரு தெனனைக்குப் பதிலாக பாம்பு போன்ற இருத் தென்னை மரங்கள் பின்னிப் பிணந்து உயர்வது போல எழுதுவர்.
இவை எழுதுவோர் அகத்தே காம வேட்கை மிக அதிகமாகத் தோன்றி விட்டது என்றும் பருவ வயதினாரக இருந்தால் திருமண எண்ணம் அல்லது கலவி எண்ணம் தோன்றி அவர்களை வருத்தியவாறு இருக்கின்றது என்றும் பொருள் படும்
திருமணமாகியர்கள் எழுதினால அவர்கட்கு விரைவில் மகட்பேறு கூடி வரலாம் என்பதை உணர்த்தும்
குறிப்பு:
பாம்பெனப் பின்னிப் பிணையும் தென்னைகள் காட்டும் பாம்புப் பின்னல் பல கோயில்கள் மக்கள் வணங்கும் தெய்வ வடிவங்களாகவே பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன, மகட்பேறு வேண்டுவோர் இதனை பூசித்து வழிபடுதலும் உண்டு
தொடரும்
உலகன்
பாடம் 3 ; இடுகை 3
தருத் தேர்வு பற்றி ஆகவே ஆகமவுளவியல் பற்றி இங்கு தரப்படுபவை எல்லாம் அடிப்படைக் குறிப்புக்களே. யாகும். ஒவ்வொருவரும் எழுதும் தருக்களைக் காண, பல ஒற்றுமைகள் இருந்தாலும் தனித் தனமைகளும் இருக்க, உபதேசிக ஆலோசகர் தானே காணப்படும் குறிகளை வைத்து உள்ளத்தின் போக்குகளை பழுதற தெரரிந்துகொண்டு ஆலோசனை கூற வேண்டும்
இங்கு உபதேசித்தல் ‘ஆகமீயம் கூறல்’ என்று கூறப்படும். அதாவது ஓர் ஆலோசகர் ஓர் நபருக்கு அவர் எவ்வாறு தன்னையேத் தான் உணர்ந்து அவர் செல்லும் நெறி சரியில்லை என்றால் எவ்வாறு தன்னையேத் தான் திரித்திக்கொள்ள முடியும் என்று உணர்த்துவது ஆகும்.
இந்த பீடிகையோடு, இப்பொழுது இயற்கையான தருக்கள் காட்டும் உளவியல் கூறுகளை ஒருவாறு காண்போம்
முக்கூற்றுத் தரு
மேலே விளம்பியவாறு ஒருவனால் எழுதப் படும் தரு ஓர் இரட்டுருவின் நூல்--- புறவுரு என்றும் புதையுரு என்றும் இரண்டு உருக்கள் இருக்க, புறவுருவிலிருந்து உள்ளமாகிய புதையுருவிற்கு செல்வதே ஆகமவுளவியலின் முதற் படியாகும். இதற்கு உதுவுவனவே முக்கூறுகள் ---- தருவின் தண்டு, அது தாங்கி நிற்கும் சிரசு, அதனின்று கீழ் நோக்கிச் செல்லும் வேர்கள்.
இம்மூன்று கூறுகளும் உள்ளத்தின் வெவ்வேறு பண்புகளை உணர்த்தி நிற்கின்றன.
தண்டின் பொருள்
தண்டு என்பது சிவலிங்கத்தில் ஆவுடையாரை ஆதாரமாகக் கொண்டெழும் இலிங்கமாகியத் தூண் ஆகும். இதுவே நாதமும் ஆகும்.
இது மிக உயர்ந்தும் குட்டையாகவும் தடித்தும் மெலிந்தும் , அடுத்தடுத்து வரும் கிளைகள் விட்டும், ஒரே புள்ளியிலிருந்து விசிறிபோல் இரேகைகள் போல் பிரியும் கிளைகளை உடையதாகவும் இன்னும் பலவாறும் விளங்கும்
முதலில் தண்டு குட்டையாகவும் சிறியதாகவும் மெலிந்தும் இருந்தால் அந்த நபர் ஆண்மையின் வீரம் குன்றியவர், துணிச்சல் இல்லாதவர், பெரிதும் தயங்குபவர் உள்ளத்தில் அச்சம் உள்ளவர், பழமையிலேயே சுகங் காண்பவர் என்றெல்லாம் பொருள் படும்
மிக உயர்ந்து வலது இடது என்று கிளைகள் விட்டு உயர்ந்து இருந்தால், ஆண்மை மிக்கவர், நன் முறையில் ஆழச் சிந்திக்க வல்லவர், அகத்தே வீரம் மிக்கவர், எதிர்த்துப் போராட வல்லவர் பிறரை அடக்கி ஆளும் திறத்தவர், தலமைப் பொறுப்பிற்கு ஏற்றவர் என்றெல்லாம் பொருள் படும்
இனி எழுதப்படும் மரத்திற்கு இயல்பான அளவில் அல்லாது பெரிதும் தடித்து விக்காரமுற்று மரத் தண்டு இருந்தால், இது ஓர் வித மனநோயைக் காட்டி நிற்கும். இதுபோன்ற தருக்களை எழுதும் நபர், தானே தலைவனாக இருக்க வேண்டும், தனக்கு அடங்கியே பிறர் எல்லாம் வாழவேண்டும் தன் சொல்லிற்கு எதிர்ப்பு வரவேக் கூடாது, அப்படி யாராவது எதிர்த்து வாதிட்டால இவருக்குக் கடுஞ் சினம் வரும் என்றெல்லாம் பொருள் படும்
இப்படிப்பட்டாவ்ர்கள் பிறரோடு பழகும் போது அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்துகொண்டே இருக்கும்
இனி இப்படிப்பட்டோர் பல சண்டை சச்சரவுகளைச் சந்தித்து பிறகு மனம் மாறி தண்டினை இயல்பான அளவிற்கு எழுதத் தொடங்களும் கூடும் அதுபொழுது இவர் வேண்டும் பொழுது பணிந்து செல்லும் வகையில் மாறியுள்ளார், பலருடன் இனிதாகப் பழகும் பண்பினையும் இப்பொழுது வளர்த்துள்ளார் என்று பொருள் படும்
தண்டு கொடியாதல்
தண்டு இலிங்கத்தின் ஆகவே நாதத்தின் வெளிப்பாடு. அது எந்த அளவிற்கு நாதக் கூறு தரு எழுதும் நபர் அகத்தே ஆட்சி செய்கின்றது என்பதைக் காட்டும் ஆனால் இங்கு நாததை விழுங்கி விந்துவே மேம்பட்டு இருந்தால் தண்டு உறுதித் தூணாக இல்லாது கொடிபோல் ஆகி வளைந்து வளைந்து செல்லும். சில சமயங்களில் ஓர் தூணைப் பற்றிக் கொண்டு மேலே எழுவதும் உண்டு,
இப்படிப்பட்ட தருக்களை பெரும்பாலும் பருவப் பெண்கலே எழுதுவார்கள். அச்சம் நாணம் மடம் போன்ற குணங்கள் மிக்கிருக்க, ஓர் ஆடவனின் துணையின்றி வாழமுடியாதும் தவிப்பார்கள், இவர்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கவும் தயங்குவார்கள், பிறரைச் சார்ந்தே பிறருக்கு அடி பணிந்தே வாழும் இயல்பினராகவும் விளங்குவர்.,
தண்டில் பல குறியீடுகள்
இங்கு மிக முக்கியமானது பல பதின்மர்களால் எழுதப்படுவது தண்டின் அகத்தே சுழிப் போன்ற குறியீடுகள் ஆகும். இது வந்தால் தரு எழுதும் நபர் பெற்றோர்கட்குத் தெரியாமல் தவறான ஏதோ ஒன்றைச் செய்கின்றார்கள் என்றும் பொருள் படும். யாதென்று உறுதியாக்த் தெரியாத நிலையில் அந்த நபரைக் கேட்டே அந்த விசயம் யாதென்று கண்டுபிடிக்க வேண்டி இருக்கும்
தண்டு வெட்டுப்படல்
பலர் எழுதும் தருக்களில் கிளைகள் வெட்டப்பட்டும் ஏன் தண்டே அடியிலேயே வெட்டுப்பட்டும் இருக்கும். சில சமயங்களில் மரமே சாய்ந்தும் கிடக்கும். இவை எல்லாம் தரு எழுதும் நபர் பல தண்டணைகட்கும் எதிர்ப்புகட்கும் வேதனைகட்கும் ஆளாகி உள்ளத்தளவில் முயற்சி எல்லாம் இழந்து அடிமைப் பட்டுகிடக்கின்றார் என்று பொருள் படும் பள்ளிகளில் அளவிற்கு மீறியும் அடிக்கடியும் தண்டிக்கப்படும் மாணவர்கள் இத்தகையத் தருக்களை எழுதுவர்.
இரட்டை மரங்கள்
சில சமயம் அதிலும் குறிப்பாக பருவ மங்கையரிடையே இரட்டை மரங்கள் அல்லது இரண்டு உறுதித் தூண்களோடும் மிக நெருங்கியும் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். சில சமயங்களில் இரண்டு வெவ்வேறு மரங்கள் பின்னிப் பிணைந்து இருப்பதாகவும் எழுதப்படும்
இது மிகத் தெளிவாக அர்த்தநாரீயாக இறைவன் தரு எழுதுவோர் அகத்தே குடிகொண்டு இருப்பதைக் காட்டும் இப்படிப்பட்ட தருக்கலை எழுதுவோர் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பர். இவ்வாறு எழுதுவோர் தன் காதலனையோ அல்லது கணவனையோ மிக மிக ஆழமாக நேசிப்பவர் என்றும் எவ்வகையான சண்டைசாச்சரவுகள் வெடித்தாலும் பிரிவே வராது என்றும் பொருள் படும்
குறிப்பு:
இங்கே விளக்கப்பட்ட குறிகளும் குணங்களும் மிக அடிப்படையானவை. மேற்கொண்டு இருக்கும் பல குறியீடுகளின் பொருளை அனுபவ பூர்வமாகவே அறிந்துகொள்ள வேண்டும்
தொடரும்
உலகன்
பாடம் 3 ; இடுகை 4
எழுதப்படும் மரத்தின் தூண் நாதம் அல்லது இலிங்கம் என்றால், அதன் சிரசு விந்துவாகும். இங்கு சிவலிங்கத்தின் வட்ட பீடமாகிய ஆவுடையார் மேலே உயர்த்தப்பட்டு சிரசாக விளங்குகின்றது. விந்து குடமாகவும் விளங்கும். மரத்தின் சிரசும் பெரும்பாலும் தலைகீழாக கவிழ்க்கப்பட்ட ஒர் குடமாகவே தோன்றுவதைக் காண்க
இனி சிரசின் அமைப்பு வழி உள்ளுறை பொருள் அறிய உதவும் உறுப்புக்களாக அமைவன : இலைகள், பூக்கள் கனிகள் என்பவற்றோடு இவற்றை எல்லாம் தாங்கி நிற்கின்ற கிளைகளும் ஆகும்.
இலைகளின் பொருள்
இலைகள் பலவகை. எழுதப்படும் தருவிற்கு ஏற்ப இவை அமையும், பொதுவாக எழுதப்படும் இலையின் வடிவம் பொருளுடையது எனினும், பொதுவானக் கூறுகளே இங்கு விளக்கப்படும்
விந்துவின் விருத்தியே இலைகள் பூக்கள் கனிகள் போன்றவை என்றாலும் ஒவ்வொன்றும் விந்துவின் வெவ்வேறு விருத்திகளைக் காட்டி பொருள் வேறுபாட்டைக் உணர்த்தும், இவ்வகையில் இலைகள் பொதுவாக சிந்தனைகளை புத்தியின் இயக்கத்தைக் காட்டி நிற்கும்.
அளவிலும் எண்ணிக்கையிலும் அளவோடு இருந்தால் சிந்தனை சீராகச் செல்கின்றது, புத்தி நன்றாகவே செயல்படுகின்றது என்று பொருள் படும். அளவோடு நியதி பிழையாது சிந்திக்க வல்லவர் என்று காட்டும் ஆனால இலைகளின் எண்ணிக்கை அளவிற்கு மீறி இருந்து சிரசின் எல்லா இடங்களிலும் மிக அடர்த்தியாக ஆகவே சிறியதாக எழுதப் பட்டிருந்தால், தரு எழுதும் நபர் கற்பனை உலகில் வாழ்பவர் என்றும் முறைப்படி ஒழுங்காக சிந்திப்பதற்கு சிரமப்படுபவர் என்றும் பொருள் படும்
ஒன்றினை ஒருவர் கூற அதனை கேட்கும் இவர் வீணான பல கற்பனைகளில் இறங்கி சொல்லாததை எல்லாம் சொன்னதாக நினைத்து பல மன உலைச்சல்கட்கு ஆளாகுவர்
உதிரும் இலைகள்
சிலர் தரு எழுதும்போது மர உச்சியிலிருந்து இலைகள் தரை நோக்கி விழுவதாக எழுதுவர். இது அவர் உள்ளம் ஓர் பெரும் வேதனையில் இருக்கின்றதென்றும். அவர் தங்கும் இல்லம் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரி பணி செய்யும் இடம் போன்றவை பெரும் மனவருத்தத்தைத் தர, அந்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு ஓர் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணி இருப்பவர் என்று பொருள் படும்
இடமாற்றம் மன அவதியை குறைக்கவும் செய்யலாம்
மொட்டை மரங்கள்
எல்லா இலைகளும் காய்ந்து விழுந்து இல்லாதுபோய் மரம் மொட்டையாக நின்றால், இவர் பாலைவன வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார் என்று பொருள்படும். மனதில் மகிழ்ச்சியே இல்லாது பல கவலைகள் கலக்கங்கள் ஆட்கொள்ள பெரும் வேதனையில் இருக்கின்றார் என்றும் பொருள் படும். ஆனால் இது ஓர் தற்காலிக நிலையே யாகும். இது வரை தன்னுள் இருந்த குணங்களில் சில, பல காரணங்களால் விழுந்து இல்லாது போக, ஓர் குண மாற்றத்த்தை கொண்டு வரும் வகையில் அதற்கு முன்னோடியாக இப்படிப்பட்டத் தருக்கள் இருக்கலாம்
மலர்களும் கனிகளும்
மனமகிழ்ச்சி நெகிழ்ச்சி உவகை மனநிறைவு போன்ற மெய்ப்பாடுகளைக் காட்டுவன பூக்களும் கனிகளும். ஒவ்வோரு பூவும் கனியும் ஒவ்வொரு வகையான இன்பம் அனுபவிப்பதைக் காட்டும். பல எண்ணங்கள் நினைவுகள் வழியாக அனுபவிக்கப்படும் மகிழ்ச்சிகளையும் இவை காட்டி நிற்கும் இவற்றில் சில முக்கியமானவற்றையே இங்கு தருகின்றோம்
திராட்சை காம எண்ணங்களால் வரும் உவகையைக் காட்டும். இதேப் போன்ற மாங்கனிகளும் ஆகும். மாங்கனிகள் தொங்கும் மாமரம் எழுதினால அந்த நபர் காம இன்பத்திற்கு ஏங்குகின்றார் என்று பொருள் படும் பெரும்பாலான இளம்பெண்கள் மாங்கனிகள் நிறைந்த மாமரம் எழுதினால திருமண வாழ்க்கையை வேட்கின்றனர் என்று பொருள் படும்
இனி கனிகள் கொத்தாக எழுதப்பட்டால் பலரோடு இணைந்து மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டும்
கனிகளை புள்ளி போன்று தனித்தனியாக அல்லது கொத்தாக எழுதினால், உள்ளத்து மகிழ்ச்சி அவ்வளவு சிறப்பாக இல்லை என்று பொருள் படும்
தனி கனிகள்
இங்கு ஒரு சிலர் கனிகளை மாத்திரம் எழுதுவார்கள் அது மாங்கனி ஆப்பில் முட்பழம் என்றவாறும் இருக்கலாம். இத்தகையோர் தக்க உபதேசம் வேண்டியவர்களாக இருப்பர். நாதச் சரம் முற்றிலும் வீழ்த்தப்பட்டு விந்து சரம் அளவிற்கு மீறி இருக்கும்போதுதான் தனியான பழங்கள் மாத்திரம் எழுதும் போக்கு மெய்யாகும். இத்தகையோர் பிறர் உணர்வுகளையும் நீதி நியாயம் அறம் போன்றவற்றை எல்லாம் புறந்தள்ளி தனது இன்பத்தையே முதன்மைப் படுத்தி அதனை அடையும் கருத்தாகவே இருப்பர். ஆண்களாக இருந்தால் காமுகனாகவும் இருக்கலாம.
தனி பூக்கள்
சிலர் அதிலும் குறிப்பாக வயது பெண்கள் தாமரை மலரை பல கோணங்களில் எழுதுவர். மேலடுக்கும் கீழ் அடுக்கும் உடையதாகவும் எழுதுவர். இது மிகவும் மங்களகரமான உள்ளத்தை, மகா இலக்குமி அகத்தே குடிகொண்டிருக்கும்படியான ஒர் நிலையைக் காட்டும். இத்தகையப் பெண்டிர் அற்புதமான மனையாளாகவும் விளங்குவர்
குறிப்பு:
இங்கு மிக முக்கியமான அடிக்கடி தருவில் வரக் கூடியக் கூறுகளே விளக்கப்பட்டதுள்ளது, இன்னும் பல உண்டு. அனுபவம் வழியாக அறிந்துகொள்ள வேண்டும்
தொடரும்
உலகன்
பாடம் 3 ; இடுகை 5
இனி எஞ்சிய தரு உறுப்பாக இருப்பது வேர்கள் ஆகும். இதனைப் பற்றி இன்னும் விரிவாக முனைவர் சிவக்குமார பாடம் நடத்தவில்லை என்றாலும் இயைபு கருத்தி இதுவும் மூன்றாம் பாடத்திலேயே அடக்கப்படுகின்றது,
மிகவும் சிக்கலான உறுப்பு இந்த வேர்கள். ஆயினும் எவ்வாறு ஓர் மரத்திற்கு வேர்ககே சீவநாடி என்பதுபோல தருத் தேர்வு எழுதும் நபர்கட்கும் இந்த வேர்களும் ஆகும். ஆயினும் அலசுதற்கு மிக சிக்கலான ஒன்றும் ஆகும்
வேர் வகைகள்
வேர்கள் தனியாக பெரும்பாலும் எழுதிக் காட்டபடாதே ஆனால் மறைந்து இருப்பதாக மறைமுகமாக உணர்த்தப் பட்டே இருக்கும். வெளிபடையாக எழுதப்படும் போதும் அல்லது எழுதப் பட்டு வெட்டுகள் போன்ற குறிகள் காட்டப்படும் போதும் பல பிரச்சினைகள் உண்டு என்றும் பொருள் படும்
காமவேட்கையும் வேர்களும்
பொதுவாக மரஞ் செடி கொடிகட்கு எவ்வாறு வேர்களே ஊட்டங்கள் அனைத்தையும் மண்ணிலிருந்து நீரின் உதவியால மேற்கொணருகின்றதோ அதேப் போலத்தான் உள்ளத்தில் எழுந்து மூலாதாரப் பகுதியைத் தாக்கும் காமவேட்கையும் ஆகும். இந்த காம வேட்கை இருக்கத்தான் உயிர்கள் அதனை நினைத்தும் அனுபவித்தும் குண்டலினி சத்தி ஈட்டி உடல் நலம் மன நலம் ஆகியவற்றோடு நலமே வாழ்கின்றன.
இந்த காமக் குண்டலினிப் பாய்வு தடைபட, அதனை வேட்டு அளவிற்கு மீறிய காம வேட்கையுடன் ஓர் பருவ மங்கையோ இளைஞனோ இருந்தால். அவர்கள் பாம்பு போல நெளிந்து நெளிந்து செல்லும் வேர்கள் எழுதுவார்கள், மேலும் பல்வேறுவகையில் காமவேட்கைத் தூண்டப்பட்டு மிக்கிருந்தாலும் இவ்வாறே வரும்
இனி இதே வேர்கள் பாம்பு போல் அன்றி ஈட்டிகள் போல கூராக இருந்தால், கமவேட்கைத் திரிந்து கடுஞ்சினமாக மாறிவிட்டது என்றும் பொருள் படும்
இதே வேர்கள் மெலிந்தும் குட்டையாகியும் புற்கலின் வேர்கள் போல் ஆழஞ் செல்லாது படர்ந்திருந்தால், வேண்டிய அளவிற்கு காமவெடகை இலை என்றும் பொருள்படும்
தகாத காமங்கள்
இனி இளவல்களிடையே அதுவும் குறிப்பாக இளம்பெண்களிடையே, தகா காம எண்ணங்களும் செயல்களும் இருக்கலாம். இவர்கள் சதுப்பு நிலைத்தில் air roots எனப்படும் காற்று வேர்களை, தரைக்கு மேலேயே விளங்கும் வகையில் எழுதுவார்கள். சில சமயங்களில் அழுக்கு நீர் தேங்கி ஓர் குட்டை போல் இருக்கும் தரையில் இவர்கள் எழுதும் மரங்கள் வேர் விடுவதாகவும் இருக்கும்
தரையில் கோடு
இனி பலர் தரு எழுதும் போது, அது தரையில் சேரும் இடத்தில் ஓர் கோடு கிழித்து வேர் பகுதியை வெட்டி இல்லாது ஆக்க முயல்வதைக் காணலாம். இது திருமணம் ஆகி இருந்தால் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் காரணமாக அன்பு குறைந்தும் காம உறவுகள் இல்லாதும் போய் விட்ட நிலையைக் காட்டும். ஒருவர் இப்படி எழுத இன்னொருவர் அப்படி இல்லை என்றால், திருமண வாழ்க்கையில்,பெரும் பிரச்சினைகள் உண்டு எனப் பொருள் படும். இவர்கட்கே மிகவும் கவனமாக உபதேசம் வழங்கப்பட வேண்டும்
தலைகீழ் மரங்கள்
இனி பலர் தரு எழுதும்போது தலைகீழாக எழுதுவார்கள், கீழே சிரசு இருக்க மேலே வேர்கள் வளர்ந்து வானை நோக்கிச் செல்லும். இங்கு பிரச்சினை யாதும் இல்லை என்றாலும் இத்தகையோர் அளவிற்கு மீறிய சுறுசுறுப்போடு காரியமே கண்ணாக இருந்து ஓய்வே எடுக்காது பல செய்த வண்ணம் இருப்பார்கள்
வேர்களில் குறியீடுகள்
இனி வேர்களில் பலவகையான குறிகள் விளங்கவும் செய்யும். இவையும் பல பொருள் உள்ள குறிகள் ஆகும். இவற்றில் மிக முக்கியமானது ‘x’ போன்று வரும் வெட்டுக் குறிகள் ஆகும். வேர்களில் இவை நெடுக படர்ந்திருக்க, உடம்பில் ஏதோவோர் நோய் உடலிற்கு வேண்டிய ஊட்டச் சத்துகள் போய் சேராது தடுப்பதாக பொருள் படும். புற்றுநோய் போன்ற நோய்கள் தொடங்குவதையும் இவை காட்டலாம்.
மேலும் ஓரளவு விரியும் வகையைல் கீழ் நோக்கி வேர்களை எழுதி பிறகு அவை தொடர்ந்து வளர்வதற்கு தடை செய்வதுபோல, ஓர் வட்டம் எழுதி அவற்றை சிறை செய்தால், இதுவும் ஓர் நோய் வந்து தாக்கியவண்ணம் இருக்கின்றது என்று பொருள் படும்,
குறிப்பு:
மீண்டும் நினைவு கூர்தல் வேண்டும் இங்கு இவ்வாறு சில அடிப்படையான கூறுகள் தாம் விளக்கப்ப்டுள்ளன, கணக்கற்ற கூறுகள் வேர்களிலும் உண்டு. மேலே கூறியவற்றை ஓர் உதவியாகக் கொண்டு தொடர்ந்து வேறு வகையான கூறுகட்கும் பொருள் கண்டு தக்க உபதேசம் வழங்கவேண்டும்
இத்தொடு மூன்றாம் பாடம் முடிகின்றது.
தொடரும்
உலகன்
பாடம் 4 ; இடுகை 1 : எந்திராயணம்
நேற்று (23-11-13) மெய்கண்டார் அறிவாலயத்தில் ஆகமீயவுளவியல் பயிற்சி 4-ஆம் பாடம் இனிதே முனைவர் சிவக்குமாரால் நடத்தப்பட்டது. யானும் இடையே சில விளக்கங்கள் கொடுத்து உதவினேன், ஆகமீயவுளவியலைப் பற்றி நான் ஆய்ந்து கூறியுள்ளதை எல்லாம் ஆழக்கற்று பல புதிய கருத்துக்களையும் கூறி இந்தத் துறையை இன்னும் இன்னும் சிவக்குமார் வளர்த்துள்ளதைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். புதியதாக சிலர் ஈப்போவிலிருந்து வந்து அங்கும் இப்படிப்பட்ட வகுப்புக்களை நடத்த வேண்டும் என்ற விண்ணப்பமும் செய்தனர். அத்தோடு பினாங்கு மாநிலதிலேயே பல தமிழாசிரியர்கள் தங்களுக்கும் இந்தப் பயிறிகளைத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிய, என் உள்ளத்திலும் இன்னும் பல்ர் உள்ளத்திலும் ஆகமீயவுளவியல் வழி இந்து சமயமே ஒர் புதிய எழுச்சியைக் காணும் என்று எண்ணம் தோன்றியது. சாத்திரங்களையும் தெய்வீகப்பாடலகளையும் பாடிப்பாடியே சமய ஞானத்தை வளர்த்த நிலை போய் அறிவியல் முறையில் தத்தம் உள்ளத்தின் போக்குகளை தாமே உணர்ந்து அதன் வழியாக உண்மையான சமய வாழ்க்கையை வாழும் ஓர் வழி பிறந்துவிட்டதாகத் தெரிகின்றது.
இந்திய மண்ணில் தோன்றாத இந்த சைவ சமய, இந்து சமய புரட்சியும் மற்மலர்ச்சியும் மலேசிய மண்ணில் தோன்றி உலகெல்லாம் பரவும் சூழ்நிலை பிறந்து விட்டதை நலமேக் காண முடிகின்றது.
தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஓர் பெரும் மகிழ்ச்சி தரும் விசயமாகும். திருமூலரும் இன்னும் பல சித்தர்களும் வளர்த்த நூலியல் அறிவியல் துறைகளில் ஒன்று மீண்டும் ஓர் புதிய பயனுள்ள முறையில் மறுமலர்ச்சி பெறுவதும் அது மக்களால பெரிதும் வரவேற்கப்படுவதும் நம்பிக்கை தரும் நல்ல மாற்றங்கள் எனக் காண வரும் போது பல வருடங்களின் கடுமையான உழைப்பு வீண்போகவில்லை என்று உணர்ந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்
நாங்காம் பாடம் : மந்திராயணம்
இந்த நான்காம பாடத்தின் அடிப்படைகள் எந்திராயணம் தந்திராயணம் என்பவற்றொடு இவற்றிற்கு மூலமான மந்திராயணமும் ஆகும்
இந்தப் புதியத் தருத் தேர்வில், நாங்கு வெவ்வேறு ஆணைகட்குத் தக எழுதப்படும் தருக்களில் இரண்டாம் மூன்றாம் நாங்காம் தருக்களில் பலர் இயற்கையான கனிமரங்கட்கு மாறாக பல்வேறு யந்திரங்களை வரைவதை நாம் காணலாம். முன்பே விளக்கப்பட்ட ஆணைகளில் மூன்றும் நாங்கும் மூளையின் ஆழப்பகுதிகளைத் தொட்டு ஆங்கு புதைந்து கிடப்பதை வெளிப்படுத்த அவையே பல்வேறு யந்திரங்களாக வெளிப்படுகின்றது. புறத்டில் மரங்கலால இருப்பதை ஆழத்தில் யந்திரங்களாக இருக்கின்றன.
ஐரோப்பியர்கள் அதிலும் குறிப்பாக பேராசிரியர் யுங் அவர்களைச் சார்ந்தோர் இவற்றை alchemical diagrams என்பார்கள், காரணம் பல நூற்றாண்டுகட்கு முன்பு தமிழக்த்தில் தோன்றிய சித்தர் வேத்தியல் அராபியா சென்று alchemia ஆகி பின் ஐரோப்பா சென்று அங்கு alchemy ஆகி அவர்கள் ஆயவில் எழுந்த பல யந்திரங்கள் இவ்வாறு கூறப்பட்டன.
இவை யாதோவோர் துரிய ஞானநிலையில் ஒரு சிலருக்கே தோன்றுவது போய், பலர் உள்ளத்தில் ஓர் ஆழத்தில் புதைந்து கிடக்கும் இவை இந்த புதியத் தருத் தேர்வில் அவர்கள் எழுதும் சித்திரங்களாக எழுவது வியப்பான ஒன்றே. பல உணமைகளை இவை உனர்த்துகின்றன.
1,
யந்திரங்கள் என்பன (ஆகவே மந்திரங்கள்) ஏறக்குறைய எல்லார் உள்ளத்திலும் புதைந்து உள்லத்தின் ஆழத்தில் கிடந்தவாறு செயல்படுகின்றன
2.
கனவுகள் மற்றும் ஆழமான தியான நிலைகளில் அல்லாது இப்படிப்பட்ட தருத்தேர்வுகளில் அவை எழுதப்படும் சித்திரங்களாக வெளிப்படவும் செய்கின்றன
3
தருக்கள் அல்லது மரங்கள் என்பன அவற்றின் அமைப்பில் இபடிப்பட்ட யந்திராங்களைக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிகின்றது
ஆக நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் வாழை தென்னை ஆலம் அரசு வேப்ப மரம் மற்றும் ஏனைய கனிமரங்கள் போன்றவை தம் அகத்தே யந்திரங்களைக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வருகின்றது. ஒவ்வொருத் தருவும் ஓர் யந்திரம் அல்லது பல யந்திரங்களின் தொகுப்பு என்று நாம் முடிக்கலாம். மேலும் இது எல்லா செடிகொடிகட்கும் பொருந்துவதாக இருக்கலாம்
யாவை இந்த யந்திரங்கள்?
முக்கோணம் அறுகோணம் வட்டம் சதுரம்ம் நீள்சதுரம் போன்றவற்றோடு முக்கோணத்தில் வட்டம் , வட்டத்தில் முக்கோணனம், அடுக்கு முக்கோணனம் அடுக்கு வட்டங்கள என்றவாறு தனியாகவும் கலந்தும் வருகின்ற இவையே யந்திரங்கள எனபடுகின்றன.
இத்தகைய யந்திரங்கள் திருமூலர் காலத்திலிருந்து சித்தர் பெருமக்களாலும் சிவஞானிகளாலும் போற்றப்பட்டு வந்துள்ளன. கீழான சித்தர்கள் இவற்றை மந்திரவாதத்திற்கும் பயனப்டுத்தியுள்ளனர்.
மேலும் இவை அக்கர சக்கரங்களாக நாம் அறியும் போது, மந்திரங்களின் இன்னொரு வடிவமே இந்த யந்திரங்கள் என்றும் தெரிய வருகின்றது. இதனால் இந்த யந்திரங்களை அதிட்டித்து அவற்றை செயல் படுத்தும் தெய்வங்களும் அகத்தே உண்டென அறிய வருகின்றோம்
சில தருக்களில் இந்த தெய்வங்களும் ஓரளவு வெளிப்பட்டு இவை அகத்தே குடிகொண்டிருக்கின்ற உண்மையையும் தெளிவாக்குகின்றன.
ஆக இங்கு பல கேள்விகள் எழுகின்றன.
1.
இந்த யந்திரங்கட்குப் பொருள் உண்டா? முக்கோணம் அறுகோணம் என்றெல்லாம் வருகின்றனவே. இவற்றிற்கு உள்ளுறை பொருள் என்று யாதாவது உண்டா?
2.
இந்த யந்திரங்களை அதிட்டித்து நிற்பவை தெய்வங்கள் எனில், தருக்களில் தெய்வங்கள் உண்டா? உண்டு என்பதால்தான் பண்டுதொட்டே மக்களால மரங்கள் தெய்வமே என வணங்கப்படுகின்றனவா?
இனி அடுத்தடுத்து வரும் இடுகைகளில் இவை எல்லாம் நலமே விளக்கப்படும்
தொடரும்
உலகன்
பாடம் 4 ; இடுகை 2 : எந்திரங்களின் உள்ளுறைப் பொருள்
எந்திரங்கள் ஆராய்ச்சி மிகப் பழமையானது என்பதொடு பல குழப்பங்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. மேலான ஞான சித்தர்கள் ஒருவாறு விளக்க, கீழான சித்தர்கள் மந்திரவாதம் கூறி அதனை வசியம் உச்சாடனம் மாரணம் போன்ற மாந்தீரிக கலைகட்கு உதவும் ஒன்றாக அதன் தரத்தைக் கீழே இருக்கிவிட்டனர். யந்திரங்களை தகடுகளில் எழுதி ஓரிடத்தில் புதைத்து வைத்தால் செல்வம் பெருகும் வாணிபம் சிறக்கும் உடற்பிணிகள் மனப்பிணிகள் எல்லாம் போய்விடும் என்றெல்லாம் கூறிய கதைகளும் உண்டு, சில இடங்களில் இன்றளவு நடக்கவும் செய்கின்றது,
அம்மை வழிபாட்டின் ஓர் அங்கமாக ஸ்ரீவித்தியா எந்திரம் போன்றவற்றை கோயில்களில் பிரதிட்டை செய்வது இன்றளவு தொடரும் ஓர் பழக்க மாகும். சில கோயில்களில் பலவகையான எந்திரங்கள் வண்ணக் கோலங்களாக தீட்டப்பட்டும் உள்ளன. அவற்றிற்கு பல பூசைகளும் செய்யப்படுகின்றன.
திருமூலரின் திருமந்திரத்திலும் இதுபோன்ற சில எந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றாகிய ‘உண்மை விளக்கம்” எனும் நூலில் ஐம்பூதங்களோடு தொடர்புடையதாக இதுபோன்ற சில எந்திரங்கள் கருதப்படுகின்றன. காண்க:
பாடல் 4:
நாற்கோணம் பூமி புனல் நண்ணு மதியின் பாதி
ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும்-- ஆர்க்கும்
அறுகோணம் கால் வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாயம் இவற்றால் உற்று
இதன் பொருள்: ஆன்மாவிற்கு உடம்பு பூமி புனல் அனல் காற்று ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களால் இயன்றது. அவற்றில் பூமி நாற்கோணமாய் புனல் பாதி மதியாய் அனல் முக்கோணமாய் காற்று அறுகோணமாய் ஆகாயம் வட்டமாய் தோன்றும் என்பதாம்
இப்படிப்பட்ட விளக்கங்கள் ஆகமீயவுளவியலின் தருத்தேர்விற்கு பொருந்துவதாக இல்லை, எழுதப்படும் எந்திரங்கள் ஆழ்வுள்ளத்தில் புதைந்து கிடப்பதை வெளிபடுத்த அவற்றின் உள்ளுறைப் பொருள் உளக்கூறுகள் அறிவின் பண்புகள் என்றவாறே இருக்கவேண்டும். இவையும் நாத விந்துக்களோடு தொடர்புடையதாக இருக்கலாமேத் தவிற பஞ்ச பூதங்களோடு அல்ல என்றே தெரிகின்றது.
மேலும் இப்படிப்பட்ட விளக்கங்கள் இந்த எந்திரங்களோடு வரும் மந்திரங்களையும் அதிட்டிக்கும் தெய்வத்தையும் அந்த தெய்வங்களால் ஆகும் தந்திரங்களையும் தெளிவு படுத்துமாறு இல்லை. ஆகவே ஓர் புதிய கோணத்தில் ஆகமீயவுளவியலில் எந்திராயண ஆய்வுகள் நடத்தப்படுகின்றன என்பதை இங்கு வறுபுறுத்த வேண்டும்.
முனைவர் சிவக்குமார் தனது பாடத்தில் இவை எல்லாம் எவ்வாறு சிவ தத்துவங்களாகிய நாத விந்துக்களின் வெளிப்பாடு என்பதை நலமே விளக்கினார்.
முக்கோணத்தின் பொருள்
இந்த எந்திரங்களில் சிறுவர்கள் விடலைகள் இளைஞர்கள் முதியவர்கள் ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி அடிக்கடி வெளிப்படும் எந்திரம் முக்கோணம் ஆகும். இவை பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் நான்காம் தருக்களிலேயேத் தோன்றும்
இது தனித்து ஓர் முக்கோணமாய், அடுக்கி வரும் முக்கோணங்களாய் . இரண்டு முக்கோணங்கள் கலந்து ஓர் அறுகோணான்மாய், வேல் போன்று முக்கோணம் ஒன்றும் நீண்டவோர் தண்டோடு வருவதாய் மற்றும் இன்னும் பலவாறாய் வரும்
இது உடன் நமக்கு திருமுருகனை நினைவு படுத்துகின்றது. ஞான வேல் இல்லாத திருமுருகன் உருவம் இல்லை, சில இடங்களில் இந்த ஞான வேலே திருமுருகனாகவும் தொழப்படுகின்றது. மற்றும் பல ஓவியங்களில் அறுகோணமும் திருமுருகன் ஓவியத்தில் வரும். ஆக இவ்வாறு முக்கோணங்கள் அறுகோணங்கள் வரும் போது அங்கு நெருப்பு காற்று போன்றவை மிக்கிருக்கின்றது என்று பொருள் தராது.
கள ஆய்வு என்ன சொல்கின்றது?
யார் இத்தகைய எந்திரங்களை எழுதுகின்றார்களோ அவர்கள் கூர்த்த மதியினர், பகுத்தறிவுச் சிந்தனை (analytical thinking) மிக்கவர்கள் என்றெல்லாம் பொருள் படும். இதனால இவர்கள் கணிதம் அறிவியல் போன்ற பாடங்களில் துறைகளில் சிறந்து விளங்குவர் என்றும் பொருள் படும்
ஓர் விடலைப் பருவத்து மாணவனோ மாணவியோ இப்படிப்பட்ட எந்திரங்களை எழுதினால், அவர்கள் படிப்பில் அதிலும் குறிப்பாக கணித மற்றும் அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்குவார்கள் என்று பொருள் படும்
நாதமும் இடதுபக்க மூளையும்
சிவதத்துவங்களாகிய நாதமும் விந்துவுமே இத்தகைய எந்திரங்களை ஆன்மாவின் ஆழ்வுள்ளத்தில் உருவாக்கி அறிவினை பல்வேறு வகையில் செலுத்துகின்றன. இங்கு முக்கோணம் அறுகோணம் என்றவாறு வெளிப்படும் எந்திரம் நாதத்தின் கூறாக விளங்க. அவை மூளையின் இடது பக்கத்தில் எழுந்து அறிவினை ஒருவாறு தொழிற்பட வைக்கின்றது. ஆக உடம்பின் வலது பக்கத்தை இந்த நாதம் ஆளவும் செய்கின்றது என்றும் நாம் கூறலாம்.
மேலும் நாத தத்துவம் இடது பக்க மூளையில் மிக்கிருக்க சுவாசத்தையும் இது பாதிப்பதாக, மூச்சு பெரும்பாலும் வலது நாசியில் ஓடுவதாகவும் இருக்கலாம்.
இனி ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, இத்தகைய எந்திரங்களை எழுதுவோர், பகுத்தறிவில் சிறந்து விளங்குவோர்களா இருக்க. கல்விக் கேள்விகளில் நல்ல நாட்டமும் திறமையும் உடையவர்களாகவும் விளங்குவர் என்பதாம்.
இனி அடுத்து விந்து தத்துவம் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதைக் காண்போம்
தொடரும்
உலகன்
பாடம் 4 ; இடுகை 3: விந்துவின் வட்டம்
சிவத் தத்துவங்களில் ஒன்றாகிய நாதம் முக்கோணம் அறுகோணம் என்றெல்லாம் மற்றும் இவையே பல மடங்கு விரித்டியாகி சூரியனைப் போன்ற வடிவுகளில் ஆகவே இரவியாக வெல்லாம் தருத் தேர்வில் வெளிப்படும் என்று கண்டோம். அதன் உள்ளுறைப் பொருளும் பகுத்தறிவில் சிறந்து விளங்குவதை கூர்த்த அறிவு திகழ்வதைக் காட்டும் என்றும் அறிந்தோம். இவர்களே அரம் போலும் கூர்மையர் ஆகும்.
இனி இதனோடு தொடர்புற்று இருப்பதே விந்து வட்டமாகும்.
இதுவும் தூய்தாக வட்டமாகவும் மறைமுகமாக குடம் குண்டம் தாமரைப் பூ போன்ற வடிவங்களில் வெளிப்படும். மேலும் வட்டமான கனிகளாகவும் வெளிப்படும். கருவுற்று இருக்கும் மாதர்கள் பிரசவம் நெருங்கி வரும்போது கொங்கைகள் மிகப் பெரியாதாக இருக்கும் வகையில் தொல்கால அம்மை வடிவில் தருக்களை எழுதுவதும் உண்டு, கள ஆய்வில் இதனை உறுதி செய்யலாம்.
அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கணத்த கொங்கைகள் பெருத்த வயறு புட்டம் ஆகியவை விளங்கும் தொல்கால அம்மை வடிவம் இன்றும் கர்ப்பினி பெண்டிர் அகத்தே தோன்றும் அம்மையின் திருவடிவம் ஆகும்
விந்துவின் வெளிப்பாடுகள்
ஐம்பூதங்களில் ஒன்றாகிய ஆகாயமே வட்டமாகத் தோன்றும் என்று ‘உண்மை விளக்கம்’ கூறுவது போல் கள ஆய்வில் தெரியவில்லை. எழுதப் பட்டத்தை ஆகாயத்தோடு எவ்வாறும் தொடர்பு படுத்தவும் முடியவில்லை
இனி கள ஆய்வினைக் காண. வட்டம் தனியாகவும் குடம் குண்டம் போன்ற உருவங்களிலும் மற்றும் ஓர் முக்கோணத்தினை தன்னுள் கொண்டும் அல்லது ஓர் முக்கோணத்தில் தான் அடங்கியும், ஓர் முத்துச் சரம்போல பல வட்டங்கள் கோர்த்து நின்றும் ஒன்றிற்குள் ஒன்று என்று அடங்கியும், ஒன்றிற்கு மேல் ஒன்று என்று அடுக்கியும் தோன்றும்
இவை எல்லாம் பக்குவ முதிர்ச்சியுடையவர் சுத்தமாயையோடு அறிவு கலந்திருக்கும்போது வெளிப்படும் விந்துவின் வடிவங்கள். அசுத்த மாயையோடு கலந்திருக்கும் பொழுது. இயற்கைப் பொருக்களாகிய கனிகள் குடங்கள் அகல்விளக்குகள் போன்றவற்றில் வெளிப்படும்
வட்டங்கள் மிக்கிருக்கும் பல்வகைக் கோலங்களாக வெளிப்படுவதும் உண்டு,
விந்துவின் உள்ளுறைப் பொருள்
இங்கு முனைவர் சிவக்குமார் கூறிய ஓர் கருத்தை நாம் நினைவுக் கூர வேண்டும். ஆணோ பெண்ணோ கடுங் குரோதம் மற்றும் அச்சம் போன்ற ஓர் அகவிறைப்பு நிலையில் (inner tension) இருந்தால் வட்டங்கள் எழுதுவது சிரமாக இருக்கும். கோடுகள் முக்கோணங்கள் ஈட்டி போன்ற வடிவங்களே இயல்பாக எழுத வரும். ஆக சாதாரண முறையில் வட்டங்கள் அல்லது வட்டங்கள் சார்ந்த எந்திரங்கள் போன்றவற்றை எழுதுவோர் உள்ளம ஓர் அமைதியில் இருப்பதாக ஓர் சாந்த நிலையில் இருப்பதாக பொருள் படும்
இனி வட்டம் விந்துவின் ஆட்சியைக் காட்டும் என்பதால், இவர்கள் இளம்பெண்களாக இருந்தால் உள்ளத்தில் காமம் அனபு பாசம் பரிவு போன்றவை இருக்க அக அழகு என்பவற்றோடு புற அழகும் சேர்ந்திருக்க ஆடவர்கட்கு இவர்கள் கவர்ச்சி உடைய்வர்களாக விளங்குவார்கள். வட்டங்கள் எழுதுவது ஆடவர்களாக இருந்தால் பாசம் நேசம் போன்ற மென்மையாக குணங்கள் மிக்கிருப்பவர்களாக விளங்குவர் என்பதாம்
விந்துவும் வட்டமிடுதலும்
உள்ளத்தில் அமைதி இல்லாது தவிக்கும்போது, கோயிற்குச் சென்று அங்கு ஓர் அர்ச மரத்தையோ அல்லது கருவறையையோ வட்டமிட்டு வருதல் ஓர் சடங்காகும். இதுபோன்ற சரியைகளில் விந்துவின் வட்டம் ஓர் செயல் வடிவில் காட்டப்படுகின்றது.
இப்படிப்பட்ட சரியைகள் அகத்தே தூரமாகி இருந்த விந்துவின் வட்டத்தை ஆன்மாவிற்கு அருகே கொண்டு வந்து அகத்தில் ஓர் சாந்தத்தை அமைதியைக் கொண்டு வரும் அனுபவ உணமையாகும்
விந்துவும் ஆழமான அன்பும்
கர்ப்பினை பெண்டிர் சிலர் எழுதும் தருக்களில் குண்டம்போன்று கொங்கைகள் பருத்து இருப்பதாக தொல்கால உலகம்மை வடிவம் மீண்டும் எழுதப்படுவதை கள ஆய்வில் காணலாம். இதன் பொருள் என்னவாக இருக்கும்? ஆய்வின் படி இது தனக்குப் பிறக்க விருக்கும் சிசுவிற்கு தாய்ப்பால் ஊட்டியே வளர்க்க வேண்டும் என்ற தீர்மானம் அந்தப் பெண்னின் உள்ளத்தில் இருப்பதைக் காட்டும் அதே பொழுது அந்த சிசுவை தன் உயிரைக் கொடுத்தாவது மிக சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற தீர்மானம் உடையதையும் காட்டும். இதனால் இந்த மாது அற்புதமான ஓர் தாயாராக, உலகம்மை எல்லா உயிர்களையும் ஓம்புவது போல, தன் சிசுவையும் ஓம்பி வளர்ப்பால் என்றும் காட்டுகின்றது
தொடரும்
உலகன்
பாடம் 4 : இடுகை 4 திருமூலரின் நாதமும் விந்துவும்
இதுவரை தருத்தேர்வில் வெளிப்படும் முக்கோணங்கள் போன்றவற்றையும் வட்டங்கள் போன்றவற்றையும் அலசி அவற்றின் உள்ளுறைப் பொருள் யாதென்று விளக்கினோம். இவை எல்லாம் கற்பனைகளோ ஊகங்களோ அல்ல. தருத் தேர்வில் கள ஆய்வுகள் வழி கிடைக்கப்பெற்றவைகளை விளக்கும் வகையில் தெரியங்களின் (theories) கூறுகளாக விளக்கினோம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்து சமயத்தில் அதிலும் குறிப்பாக சைவ சமயத்தில் ஓர் கருவி கொண்டு கள ஆய்வு (field work) வழி உண்மை நிலை அறிந்து அதற்கு விளக்கம் தர முயல்வது இதுவே முதன் முறையாகும். அறிவியல் கூறுகள் ஏனைய தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளோடு இணைந்து வருகின்றது அதிலும் குறிப்பாக சித்த மருத்துவம் போன்றவற்றில் என்றாலும் ஆழ்வுளவியல் துறையில் ஆகவே சமயத் துறையில் நடப்பது இதுவே முதன் முறையாகும்.
ஆயினும் இதில் வியப்பாக இருப்பது நம் பண்டையோர் மரங்களை வழிப்பட்டு அதன் வழி ஓரளவு ஞானத் தெளிவு பெற்று யந்திரங்களைக் கண்டு அவற்றை அக்கர சக்கரங்களுக்கு இறக்கி அங்கு தெய்வ வடிவங்களையும் கண்டு தந்திராயணம் வளர்த்தது வியப்பிற்குரிய ஒன்றாகும்
இதுவும் ஓரளவு அறிவியல் சான்ற ஓர் அணுகுமுறைதான் ஆயினும் பெரும்பாலும் ஞானக் கனவுகள் வழியாகவே நடந்துள்ளன என்பதின் ஒரு சிலருக்கே உரித்தான ஓர் கலையாகவே இருந்திருக்கின்றது.
ஆயினும் இப்பொழுது அப்படியல்ல. வேதங்களையும் ஆகமங்களையும் புராணங்களையும் அதிகம் நம்பாது, உண்மை நிலவரங்களைத் தரு தேர்வின் வழி கள ஆய்வில் கண்டு உளப்பிரச்சினைகள் உடல் பிரச்சினைகள் யாதென்று கண்டு அதற்குத் தக சிகிச்சைகள் அளித்து நோய்களை அதிலும் குறிப்பாக மனநோய்களைப் போக்கும் ஓர் அறிவியல் துறை ஆகமீயவுளவியல் என்ற பெயரில் உருவாகி வருகின்றது
இங்கு வளர்ந்து வரும் இத் துறைக்கும் பண்டே சித்தர்களில் மிக சிறந்தவராகிய திருமூலர் தம் கருத்துக்கட்கும் தொடர்புகள் இருப்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதிலும் குறிப்பாக மிக அடிப்படையான சிவ தத்துவங்களாகிய நாத விந்துக்களை எப்படி திருமூலர் புரிந்து கொண்டிருந்தார் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இதன் வழி சைவ சமயத்தின் மிக பழைய தெரியங்களுக்கும்(theories) மர வழிபாட்டிற்கும் மற்றும் தந்திராயணத்திற்கும் உள்ல தொடர்புகளை வெளிப்படுத்துவதே இங்கு நடப்பதாகும். எல்லா மரங்களுமே சிவலிங்கத்தின் பல்வேறு திரிபுகளே. இந்த சிவலிங்கத்தின் வழியாகவே பீடம் விந்துவென்றும் தூண் நாதம் என்றும் சித்தர்கள் அறிவில் பட்டிருக்க வேண்டும். இதனை மிக சிறப்பாக பாடிச் சென்றவர் நம் திருமூலரே யாகும்
திருமூலர் கண்ட நாதம் விந்து
நாதம் விந்து கருத்துக்கள் மிகப் பழமையானது, சுமேருத் தமிழ் காலத்திற்கேச் செல்வது என்றாலும் இன்றும் நடமாகின்ற தமிழ் இலக்கியங்களில் முதன் முதலில் தமிழில் கீழ்வரும் திருமந்திரப் பாடல்களிலேயே இவற்றை பற்றி நாம் அறிய வருகின்றோம்
இரண்டாம் தந்திரம் ‘சர்வ சிருஷ்டி’ எனும் தலைப்பில் வரும் முதல் இரண்டு பாடல்களையே நாம் இங்கு சிறிது அலச விருக்கின்றோம்
381
ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதமதாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரை யதன் பால் திகழ் நாதமே
பொருள்:
ஆதியும் அந்தமும் இல்லாது பரமும் அபரமும் முற்றாக இணைந்த இறைவனே பராபரம். ஆணவமலத்து அந்தகாரத்தில் கிடக்கும் ஆட்மாக்களை இரட்சிக்கும் பொருட்டு போதகம் புரிய உயிர்களின் அறிவில் கலந்திடும் வடிவே பராபரையாகிய சத்தி. இந்த பராபரையின் வடிவமே அருட்பெருஞ்சோதி வடிவமாகும். பரனாகிய சிவன் அதில் தோன்ற அதில் எவ்வித மலமும் குறையும் இல்லாத பரை தனித்துத் தோன்ற அதில் தோன்றும் ஓங்கார சொரூபமாகிய நாதம்
இப்படி நாதத் தத்துவம் தோன்ற எவ்வாறு தோன்றும் வட்டத்தின் விந்து?
இதனை அடுத்து விளக்குகின்றார் நம் திருமூலர்.
382
நாதத்தில் விந்துவும் நாதவிந்துக்களில்
தீது அற்று அகம் வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே
பொருள்
மேலே பரையில் தோன்றும் ஓங்கார நாதத்தில் ஓர் தனி கூறாக பிரிந்து விந்து தத்துவம் தோன்றும். இந்த நாத விந்துக்களை அதிட்டித்து இறைவன் சிவன் என்றும் சத்தி என்றும் எல்லா உயிர்கள் அகத்தும் ஆங்கு நிலவும் தீதுகளை அகற்றும் முகமாக வெளிப்படுவர். இனி இவ்வாறான அகப்பதிவில் நாத விந்துக்களால் இச்சாசக்தி ஞான சக்தி கிரியாசத்தி பிறக்க, இவற்றிற்கெல்லாம் மூல எழுச்சியாகிய இச்சா சக்தியின் மூலமாக விந்து தத்துவம் வந்தெழும் என்பதாம்
ஆக நாதமும் விந்தும் இறைவனை சிவசத்தியாக்கி அவற்றின் வழி உயிர்கட்கு இச்சை ஞான கிரியை போன்ற வேட்கைகளை எழுப்பி பற்பல செயல்களை செய்ய வைத்து அவற்றின் வழி கற்க வைத்து ஆணவ மலத்தின் வல்லியப் படியிலிருந்து அவர்கள் படிப்படியாக விடுதலை பெறுமாறு உதவும் என்று தெரிகின்றது.
ஆக சிவ தத்துவங்களாகிய நாத விந்துக்களின் ஆட்சியில். இறைவனே சிவசத்தியாகத் தோன்றி எல்லா உயிர்களின் அகத்தே பதிய அதனால் இச்சைகளும் அவற்றை அடைவான் பொருட்டு செய்ல்களும் அதன வழி கற்றளு நடக்க அதன் வழி அஞ்ஞான நீக்கமும் நடை பெறுகின்றது என்று அறியக்கிடக்கின்றது.
அப்படி என்றால் ஓர் கேள்வி எழுகின்றது.
இவ்வாறெனில் ஏன் மன கலக்கங்களை மனநோய்களை தீரா வேதனைகள் போன்றவற்றைத் தரும் நிகழ்வுகள் மெய்யாகின்றன? ஏன் ஒருவன் நற்செயல்களையே செய்யாது தீய செயல்களிலும் ஈடுபடுகின்றான்? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன
ஆகமீயவுளவியலிற்கு இவை அடிப்படியானவை என்பதால், அடுத்தக் கட்டுரையில் இவை சிறிது விளக்கப்படும்
தொடரும்
உலகன்
பாடம் 4 : இடுகை 5: முனைப்புக்களும் செயல் வகைகளும்
ஆழ்வுளவியல் சார்பாக ஆகவே சமயம் சார்பாக ஓர் ஆய்வுக் கருவியோடு கள ஆய்வு செய்து உண்மை நிலவரத்தை நேரில் கண்டு மனநோய் அல்லது வேறு பிரச்சினைகள் இருந்தால் அவற்றின் விளங்காத மூலத்தைக் கண்டு சிக்கலின் தோற்றுவாயைக் புரிந்துகொண்டு தக்க உபதேசக் கலை வழி பிரச்சனையைத் தீர்ப்பதே ஆகமீயவுளவியலின் முறையியல் ஆகும். ஆய்வுக் கருவி நான்கு ஆணைகட்கு ஏற்ப பழங்கள் உள்ள மரங்களை சித்திரங்களாக எழுதுதல் தான்.
இந்த ஆணைகள் நான்கும் ஒன்றாகவே இருக்க, அனைவரையும் பல்வேறு வகையில் பழங்கள் உள்ள மரங்களையே எழுதச் சொல்ல, பெரும்பாலோர் அப்படியே தருக்களை எழுத ஏன் ஓர் கணிசமான தொகையினர் பல்வேறு யந்திரங்களை எழுதுகின்றனர்?
இதுவே இந்தப் புது தருத்தேர்வினை நான் அறிமுகப்படுத்தி பல ஆய்வுகளைச் செய்த போது நான் காணவந்த ஓர் வியப்பிற்குரிய கண்டுபிப்பாகும். தருக்களுக்குள் யந்திரங்கள இருக்கின்றன அவை ஒரு சிலரால் உணரப்பட அவர்கள் அறியாதே அந்த தருக்களுப் பதிலாக யந்திரங்களை எழுதி விடுகின்றனர்.
ஏன் இப்பட்டி என்ற கேள்வி எழ, ஓர் புதிய செயல் வகையியல் ( Theroy of Actions) வேண்டப்படுவதாயிற்று. நமது சமய சாத்திரங்களைக் காண பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது, கன்மக் கோட்பாடு என்று கூறி செயல்களை ஆகாமீயம் பிராப்தம் சஞ்சிதம் என்றெல்லாம் கூறி அதனோடு அடங்கிவிட்டனர். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக இதையேக் கூறி ‘நிஷ்காம கர்மமே’ சிறந்தது என்றெல்லாம் சாதாரண மக்களால் முடியாத ஒன்றை பறைசாற்றி மக்களுக்கு உருப்படியாக யாதும் செய்யாது போய்விட்டனர்.
இதனைக் கண்டு நான் பலவாறு சிந்தித்து பல கருத்துக்களைக் கூறி இருக்க முனைவர் சிவக்குமார் அவற்றையெல்லாம் திறன்பட கற்று ஒருகிணைத்து ஓர் புதிய வினைகோட்பாடையே உருவாக்கியுள்ளார். அதனை இங்கு சிறிது விளக்க இருக்கின்றோம்
முனைப்பு வகைகளும் ஆழிழுப்புக்களும்
முதலில் நாம் காண இருப்பது முனைப்பு வகைகள் ஆகும்.. பல்வேறு அக இழுப்புகட்கு ஆளாகும் ஆன்மா, பல முனைப்புகளையும் எழச் செய்து அவற்றின் அடிப்படையைல் பல செயல்களில் இறங்குகின்றது.
ஆன்மாக்கள் இருக்க அவற்றிற்கு பற்பல செயல்களில் இறங்குமாறு முனைப்புக்கள் அல்லது ஊக்கங்கள் எங்கிருந்து எப்படி வருகின்றன?
காந்தப் பசாசம் போல எல்லா ஆன்மாக்களையும் இறைவன் தன் பால ஈர்க்கின்றான் என்று மெய்கண்டார் கூறுவர். இந்த ஈர்ப்புக்கள் எவ்வாறு வெவ்வேறு முனைப்புக்களாக மாறுகின்றன?
இதற்கு பதில் சொல்லும் முன், இந்த முனைப்புக்களை நாம் வகைபடுத்த வேண்டும்
பொதுவாக நாம் மாந்தர்களின் செயல்கலை அலசும்போது அவற்றிற்கு மூலமாக இருக்கின்ற வேட்கைகளை ஊக்கங்களை முனைப்புக்களை காணும் போது அவற்றை
1. தன்முனைப்பு 2. சிவமுனைப்பு மற்றும் 3,,. அருள் முனைப்பு என்றவாறு வகுக்கலாம
மிக சுருக்கமாக இவற்றை இவ்வாறும் விளக்கலாம்
தன்முனைப்பு என்பது தனக்கென ஒருவன் பல செய்வது. காட்டாக செல்வந்தன் ஆகவேண்டும் என்று கடுமையாக உழைப்பது போன்றவை. சிவமுனைப்பாவது தன்னை மறந்து நாட்டிற்கென மொழிக்கென, சமயதிற்கென இன்னும் இதுபோன்ற பல பொதிநலங்களுக்காக கடுமையாக உழைப்பது. இவற்றிற்க்கெல்லாம் மேலானது அருள் முனைப்பாகும். இதுவே எவ்வித சுயநலமும் பாராது, எந்தவொரு எதிர்ப்பார்பும் இல்லாது அன்பு மேலீட்டால் நல்லதையே செய்வதாகும்
தருத்தேர்வில் இத்தகைய முனைப்புகளை நாம் அடையாளம் கண்டு ஒருவரின் பக்குவத்தை உணர்ந்துகொள்ளலாம். பக்குவ முதிர்ச்சி என்பது படிப்பினால் வருவது அல்ல செல்வச் செழிப்பினால் வருவது அல்ல. மற்றும் பிறப்பினால வருவதும் அல்ல. மாறாக உளப்பண்பாட்டால வருவது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இயற்கையான தருக்களை எழுதுவோரைக் காட்டிலும் யந்திரங்களை எழுதுவோர் பக்குவத்தில் உயர்ந்தவர்கள் ஆவர். இதனால் இவர்களது முனைப்புக்கள் பெரும்பாலும் சிவமுனைப்பு அருள்முனைப்பு போன்றவையாகவே இருக்கும்
இவை எப்படி மெய்யாகின்றன?
இங்கு திருமூலர் பெரிதும் பண்டே விளக்கிய சிவதத்துவங்களாகிய நாத விந்துக்கள் உதவுகின்றன. இந்த தத்துவங்கள் குண்டலினி சத்தியோடுப் புணர, அகத்தே அவை இரவியாக மதியாக இரவிமதியாக எழுகின்றன. இரவியின் தாக்கமே முக்கோணம் போன்றவை, மதியின் தாக்கமே வட்டம் போன்றவை, இரண்டும் கலந்த இரவிமதியின் தாக்கமே மிகவும் தெளிவான சுத்தமான தாமரை போன்ற எந்திரங்கள் ஆகும்
இங்கு இரவியின் ஓர்வகைய தாக்கத்தால் தன்முனைப்புக்கள் தோன்ற மதியின் தாக்கத்தால் சிவமுனைப்புக்கள் தோன்ற , இரவிமதியின் தாக்கத்தல் அருள்முனைப்புக்கள் தோன்றுவதாகக் கூறலாம.
இவையே சித்தர்களால் இடகலை பிங்கலை சுழிமுனை நாடி என்றும் கூறப்படுகின்றன
இனி இவை எப்படிப்பட்ட செயல் வகைகளை நிறுத்துகின்றன?
இதனை அடுத்தக் கட்டுரையில் காண்போம்
தொடரும்
உலகன்
பாடம் 4 : இடுகை 6: வினை வகைகளும் ஐங்கலைகளும்
மானிடர்களிடையே இருக்கின்ற பக்குவ வேறுபாடுகள் தருத்தேர்வில் நலமே வெளியாகின்றன. இவை நிச்சயமாக பிறப்பு ஒட்டி ஆகவே சாதி வர்ணம் இனம் மதம் போன்றவற்றை ஒட்டி வருவதில்லை. பெரும்பாலோர் எழுதும் தருக்களில் இயல்பான தருக்களே விளங்க, பலர் தருக்கள் எழுதும் போது பல வகையான யந்திரங்களை எழுதுகின்றார்கள். இந்த யந்திரங்களும் சிவ தத்துவங்களாகிய நாத விந்துக்களின் தாக்கத்தால் வருவனவாக இருக்க, ஓர் கேள்வி எழுகின்றது. மக்களிடையே அதுவும் சாதி மத பண்பாட்டுப் பேதங்களைக் கடந்து ஏன் இப்படிப்பட்ட தரு வேறுபாடுகள்?
இதனை விளக்கும் முயற்சியில் நாம் இறங்கி முதற்கண் செயல்கட்கு மூலமாக இருக்கும் முனைப்புக்களை தன்முனைப்பு சிவமுனைப்பு அருள்முனைப்பு என்று வகைப்பட்டுத்தி அதன் வழி வினை வகைகளை விளக்க முறபட்டுள்ளோம். இது புதியதாக உருவாக்கப்பட்ட Theory of Actions ஆகும். முனைவர் சிவக்குமார் அவர்கள் இதனை சைவ சித்தாந்தத்தில் பயிலும் பஞ்ச கலைகளுடனும் தொடர்பு படுத்தி காண்பர்.
முதற்கண் இந்த வேறுபாட்டை இப்படி விளக்கலாம். இயல்பான தருக்களை எழுதுவோர் மாயையின் அசுத்தமாயையில் ஆழப்பதிந்து கிடக்க, யந்திரங்களை எழுதுவோ சற்றே உயர்ந்து சுத்த மாயையில் வதிந்து வாழ இப்படிப்பட்ட பேதங்கள் என்று கூறலாம். யந்திரங்கள் நாத விந்துக்களின் சுத்தமாயை வடிவங்கள், கூரான கொம்பு ஈட்டி போன்ற கிளைகள் வேர்கள் வட்டமான கனிகள் பூக்கள் போன்றவை அசுத்தமாயையின் நாதவிந்து வடிவங்கள்.
இந்த விளக்கம் களவாய்விலும் பொருந்துவதைக் காணலாம். யந்திரங்கள் எழுதுவோர் ஓர் வகையான அகச் சுத்தம் உள்ளவர்களும் ஆவர்.
ஆனால் ஏன் இப்படி?
இதனை விளக்கவே நாம் மக்கள் பொதுவாக செய்கின்ற செயல்களை வினைகளை வகைப்படுத்திக் காண முயல்கின்றோம். இங்கு பழைய ஆகாமீயம் பிரார்த்தம் சஞ்சிதம் போன்ற கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய கோணத்தில் மாந்தர்களின் செய்ல்களை வகுத்து புரிந்துகொள்ள முயல்கின்றோம்
இங்கு முதலில் ‘சித்தாந்தத் திருநெறி’ எனும் சிறு நூலில் யான் விளம்பியவாறு வினைகளின் பாகுபாடு.
மாந்தர்கள் செய்யும் செயல்கள 1. உழற்சி வினைகள். 2 கழற்சி வினைகள். 3. ஊழ்ச்சி வினைகள். 4. மலர்ச்சி வினைகள் என்றும் மேலும் இவற்றிற்கெல்லாம் எதிராக இருக்கும் 5. வீழ்ச்சி வினைகள் என்றும் வகுக்கலாம்.
இவற்றில் உழற்சி வினைகள் என்பன, தன்முனைப்பு மிக்க நிலையில் ஆற்றப்படும் செயல்களாக இருக்க. இவை கன்ம ஈட்டத்திற்கு காரணமாகி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வகையைல் ஆகவே உழன்று திரியும் வகையில் ஆன்மாவை படுத்துவன ஆகும்.
கழற்சி வினைகள் என்பன, ஒருவாறு தத்துவக் கழற்சிகள் பதிவு செய்வன ஆகும். இதனால் ஓர் வகையில் பாசக் கட்டுகளிலிருந்து சிறிது நீங்கி சுத்தமாகி உயர்ந்த ஓர் பக்குவ நிலைக்கு உயர்வதாக இருக்கலாம்.
இப்படிப்பட்ட கழற்சி வினைகள் செய்பவர்களே அசுத்த மாயையின் பிடியிலிருந்து விடுபட்டு சுத்தமாயையில் தம்மை இருத்தி வாழ்வதாக இருக்கலாம்
இப்படிப்பட்ட வினைகள் தன்முனைப்பு குறைந்த நிலையில் ஆனால் மக்களின் பொது நலத்திற்கே வாழவேண்டும் என்ற எண்ணத்தில் அதாவது சிவமுனைப்பின் எழு செயல்கலை செய்வதால் வரும் பக்குவ உயர்வாக இருக்கலாம். இப்படிப்பட்ட அக மாற்றங்களைக் கொண்டு வருவனவே கழற்சி வினைகள் ஆகும்
இவற்றிற்கு அடுத்ததாக வருவனவே ஊழ்ச்சி வினைகள் ஆகும்,. இப்படிபட்ட வினைகள் தத்துவக் கழற்சிகள் செய்வதோடு பக்குவத்தில் உயர்ந்து கற்றளிப் பெயர்ச்சி அல்லது சக்கரப் பெயர்ச்சி போன்ற பக்குவ உயர்வுகளைத் தருவனவாகும்
இந்த அற்புதமான தருத்தேர்வில் தரு எழுதும் ஒருவன் எந்த ஆதார சக்கரத்தில் இருக்கின்றார் என்றும் கூற முடியும். அவ்வகையில் ஆதார சக்கரங்கள் என்ற கருத்து, அவற்றை மாந்தர்கள் அடுத்தடுத்து கடந்து உயர்கின்றார்கள் என்பதும் களவாய்வில் மெய்யாக காண வரும் ஒன்றாகும்
இப்படிப்பட்ட ஊழ்ச்சி வினைகள் நாம் அருள்முனைப்பின் எழு செயல்களோடு தொடர்பு படுத்தலாம். தூய அன்பின் அடிப்படையில் செய்யப்படு செயல்களே இப்படிப்பட்டவை என்று கருதி இவையே மேலான பக்குவ முதிர்சியயைக் கொண்டு வருவன என்றும் கூறலாம்
இனி முடிவாகக வரும் மலர்ச்சி வினைகள் என்பன. சிவச் செயலேயாகும். இறைவன் ஆன்மாவை அதிட்டித்து அவன் வழி பஞ்சகலைகளை அல்லது பஞ்ச கிருத்தியங்களை செய்யும்போது அமைவதே மலர்ச்சி வினைகள் ஆகும். ஆக இவற்றால் கன்ம ஈட்டம் மெய்யாகாது போக. வீடுபேற்றிற்கு உதவும் செயல்களாக அமையும்.
இங்கு இத்தகைய மலர்ச்சி வினையாளர்கள் தருதேர்விற்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்
இனி வீழ்ச்சி வினைகள் என்பன இவற்ரிற்கெல்லாம் மாறான ஆணவ மலத்டின் இழுப்பிற்கு ஆளாகி ஒருவன் செய்கின்றன் கொலை கொள்லை கற்பழிப்பு போன்ற பாவகாரியங்கள் ஆகும். சுய சிந்தனை இழந்து போதைப் பித்தனாகி வீழ்தலௌம் இதில் அடங்கும்
இவர்கள் எழுதும் தருக்கள் இயற்கையானவும் அன்றி அடையாளம் காணவாரா வகையில் பேய் பிசாசுகள் அரக்கர்கள் போன்ற வடிவங்களோடு ஒப்பிடத்தக்கனவாக இருக்கும்.
பஞ்ச கலைகள்
இவ்வாறு தருத்தேர்விற்கும் அப்பாலாகி இறைவனது பஞ்சகிரித்தியங்களே தானும் செய்யும் வகையைல் மலர்ச்சி வினைகளாக செய்யும் வகையில் எவ்வாறு ஓர் ஆன்மா உயர முடிகின்றது? என்ற கேள்வியும் எழுகின்றது.
இங்கு முனைவர் சிவக்குமார் விளக்கிய பஞ்சகலைகளின் செயற்பாடுகள் வேண்டியதாகின்றது.
இந்த பஞ்ச கலைகள் ஆவன: நிவிர்த்தி பிரதிட்டை வித்தியை சாந்தி சாந்தியாதீதை என்பனவாகும்
நிவிர்த்தி என்பன ஒருவன் கழற்சி வினைகளைச் செய்ய அதனால் தத்துவக் கழற்சிகள் மெய்யாக்கி சுத்தமாக்கும் இறைச் செயலாகும்
பிரதிட்டை என்பது பக்குவ முதிர்ச்சியின் கற்றளிப் பெயர்ச்சியை மெய்யாக்கி மேலானதோர் சக்கரத்தில் அல்லது கற்றளியில் ஆன்மாவை இருத்துவதாகும்
வித்யை என்பது இந்த புதிய மேலான சக்கரத்திற்கு ஏற்ப புதியப் புதிய திறன்கள் ஆன்மாவிற்கு அமையும் வகையில் அருள் வதாகும். முன்பு இல்லாத ஆழ் நுழைவு போன்றவை அமைவது இந்த வித்யை எனும் கலையால என்று தெரிகின்றது.
இனி சாந்தி சாந்தியாதீதை போன்றவை மன மகிழ்ச்சி உற்சாகம் ஆனந்தம் மனநிறைவு போன்றவற்றை அருளும் இறைச்செயல்களாகும். இவையே உடல் நலம் மனநலம் ஆகியவற்றிற்குக் காரணமாக அமைகின்றன
குறிப்பு:
இப்படிப்பட்ட கருத்துக்கள் மிகக் குழப்பமாக இருக்கலாம். ஆனால் தருதேர்வில் களவாய்வு செய்து ஆங்கு பார்வைக்கு வரும் தருக்களையும் யந்திரங்களையும் மற்றும் இவற்றையெல்லாம் கடந்தும் சிலர் இருப்பதையும அறிந்து ஓர் விளக்கம் தர முற்படும்பொழுது இத்தகைய கருத்துக்கள் பெரிதும் பொருளுள்ளவையாக விளங்கும்
இத்தோடு 4ஆம் பாடம் ஓர் முடிவிற்கு வருகின்றது
தொடரும்
உலகன்
பாடம் 5: இடுகை 1: சில பொதுக்கூறுகள்
கடந்த 11-1-14 அன்று, மெய்கண்டார் அறிவாலயத்தில் ஆகமீயவுளவியல் பயிற்சி 5-ஆம் பாடம் நலமே நடந்தேறியது. இன்னும் ஓரிரு பாடங்களில் இந்த பயிற்சி ஓர் நல்முடிவிற்கு வரும். ஆயினும் அதற்கு ஆகமவுளவியல் இனி மிகச் சிறப்பாக மலேசியாவிலும் தமிழகத்திலும் வளரும் என்பதைச் சுட்டும் வகையாக சில விசயங்கள். இப்பொழுதே விரைவில் தைப்பிங் எனும் நகரிலும் ஈப்போ எனும் நகரிலும் இத்தகைய பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று நல்லவோர் அன்பர்க்ள் கூட்டம் வற்புறுத்தத் தொடங்கிவிட்டது. முனைவர் சிவக்குமாரும் அதனைப் பற்ரி சிந்திக்கத் தொடங்கிவிட்டார். மேலும் இத்துறையில் தீவிர நாட்டம் கொண்ட இன்னும் சிலர், இந்த ஆகமவுளயில் பாடங்களை இன்னும் பன்மடங்கு விரித்தி செய்து வளர்த்து ஓர் பட்டப்படிப்பு வரை கொண்டு சென்று இத்துறையில் பட்டதாரிகளாகப் பலர் எழவேண்டும் என்ற விண்ணப்பமும் முன் வைத்தனர். இதற்குக் காரணமே அன்பர்கள் இதன் நுட்பங்களையும் பயன்களையும் எவ்வாறு தமிழக மெய்யறிவு பாரம்பரியத்தோடு இது ஒத்து வருகிறது என்பதையும் அறிந்து சைவ சமயத்தை ஓர் புதிய வழியில் அறிவியல் முறையில் வளர்க்க இது உதவும் என்பதை அறிந்து இப்படிப்பட்ட விண்ணப்பங்கள் முன்வைக்கப்படுகின்றன. முனைவர் சிவகுமாரும் யானும் இதனைக் கருத்தில் கொள்வதாகக் கூறி விரைவில் தக்க ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கூறினோம்.
இதனைத் தொடர்ந்து இதுவரை விளக்கப்படாது பல ஆகமீயக் கூறுகளை முனைவர் சிவகுமார் விளக்கத் தொடங்கினார். இதன் வழி எவ்வளவு நுட்பகானதும் சிக்கலானதும் எந்த அளவிற்கு ஆகமங் கூறுதலில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதும் அனைவருக்கும் தெளிவாயிற்று
இதுவரை நாம் எவ்வாறு தருத்தேர்வு செய்வது என்பதொடு, எவ்வாறு பொருள் கண்டு ஆகமங்கூறி உபதேசிப்பது என்றும் விளக்கியுள்ளோம். எழுதப்படும் தருக்களின் பொருள்காணல் என்பதை ‘உள்ளுறைப் பொருளியல்’( Hermeneutic Semiotics) என்று கூறி அதன் பல முக்கியக் கூறுகளை ஒருவாறு விளக்கியாயிற்று. இனி எஞ்சியப் பல கூறுகளையும் விளக்கினார் முனைவர் சிவகுமார். அதற்கு முன் ஓர் தொகுப்புரையாக இதுவரை இத்துறை எவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளது என்று காண்போம்
உள்ளுறைப் பொருளியல்: இதுவரை
முதலில் எல்லாரும் உடனடியாக உணரவல்ல பொதுக்கூறுகள் என்பன. நல்ல அழகிய மரம் என்பதொடு பேய்போன்ற ஓர் மரத்தை எழுதியிருந்தால், உடன் தருத்தேர்வு நபரின் உள நிலையைப் பற்றி நாம் உடன் ஊகித்து ஒன்றைக் கூறமுடியும். இந்த பொது ஊகிப்பு ( Basic Common Sense) உள்ளத்தின் கூறுகளை அறிய உதவும் ஒன்றே.
இதற்கு அடுத்து பல வகையான உறுப்பாய்வும் செய்து வேர்கள் தண்டு கிளைகள் இலைகள் கனிகள் போன்றவற்றினை அலசி பொருள் கண்டு உள்ளத்தின் உணர்வு நிலையினை அறிந்து அளக்கவும் முடியும். எவ்வுறுப்பு யாதை உணர்த்துகின்றது என்று நலமே சற்று விரிவாக விளக்கப்பட்டது. காட்டாக வேர்கள் தெளிவாக எழுதப்பட, அது புதைந்திருக்கும் இச்சைகளைக் காட்டும் என்று கூறப்பட்டது.
இதேப் போல ஒப்புமை நயங்களைக் கண்டு எப்பொருள் இந்த ஒப்புமைக் கூறுகளால் உவமங்களால் உணர்த்தப்படுகின்றது என்றும் கண்டோம் ( analogies, similitude and metaphors)
இதனை அடுத்துப் பலர் இயல்பான தருக்களுக்குப் பதிலாக பலவகைய யந்திரங்களை எழுத, ஏன் யந்திரங்கள் எழுதப்படுகின்றன, அவற்றை வகைப் படுத்துவது எப்படி, நாத விந்து தத்துவங்கட்கும் அவற்றிற்கும் என்ன தொடர்பு ஏன் சிலரே யந்திரங்கள் எழுதுகின்றார்கள் என்றெல்லாம் சற்று விரிவாக விளக்கினோம். இங்கு திருமூலர் மெய்கண்ட சாத்திரங்கள் சில கூறும் யந்திரப் பொருளாய்வுகளையும் தக்க சான்றுகளோடு விளக்கினோம்
இனி எஞ்சி இருப்பனவாக கீழ் வருங் கூறுகள் இருக்கின்றன.
1. தருக்கள் காட்டும் உடம்பியல் மற்றும் உளநிலைக் கூறுகள் போன்றவை.
2. தருக்களின் சிறுமை பெருமை எனும் அளவுகள் காட்டும் பொருள்
3. தருக்களின் இடப்பகுப்பு இடஒதுக்கீடு போன்றவைக் காட்டும் பொருள்
4. தருக்களில் கனவுக் கூறுகள் வந்தால் எப்படிப் பொருள் காண்பது எனும் கனாவியல் துறை
வரலாற்றுச் சிந்தனை
மேலே விரிக்கப்பட்டத் துறைகள் ஆகமீயவுளவியலின் ஓர் பகுதிதான், அடிப்படையானப்ப் பகுதி. ஆயினும் இவை எல்லாம் ஏன் 4 தருக்களை எழுதுமாறு தொடர்புடைய ஆனால் வெவ்வேறான நான்கு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன என்பதை விளக்காதவை. மேலே விளக்கப்பட்டத் துறைகள் ‘தனித் தரு அலசல்’ துறைகளாகும். இவை A B C D என்ற வரிசையில் எழுதப்பட்டாலும் ஒன்றோடொன்று உள்ள முறையியலை கருதாது பொருள் சொல்வதாகும். ஆனால தருக்களின் பொருளை இது முற்றாக விளக்க முடியாது போக. இந்த நான்கு தருக்களை அவை எழுதப்படும் முறைமையை கருத்திற் கொண்டு அதனால் வெளிப்படும் தருநபரின் ‘வரலாற்றுச் சிந்தனையை” வெளிப்படுத்துவது ஆகமவுளவியலின் மையத் துறை என்பதொடு அடிப்படையானதும் ஆகும். இதுவே ‘தொடரியல் தரு ஆய்வு’ ஆகும் தருநபரின் எதிர்கால நுதிப்பு என்ன, நிகழ்கால சிந்தனையின் போக்கு என்ன, இறந்த காலத்தை எப்படி மனதில் பதிவு செய்துள்ளார் என்பதை எல்லாம் இந்த வரலாற்றியல் தரு முறைமை வெளிப்படுத்தும்
இதனை தெளிவாக அறிதலே ஆகமங் கூறுதலுக்கு அடிப்படை என்றும் விளக்கப்பட்டது.
இனி எஞ்சி நிற்கின்ற தனித்தரு பொருளாய்விற்கு வருவோம்
தொடரும்
உலகன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பாடம் 5: இடுகை 2: உடற் கூறு விசயங்கள்
தனித் தரு ஆய்வில் ஓர் முக்கியமான விசயம் ஆன்மா தன் உடலில் நிகழ்வனப் பற்றி அறிந்திருப்பதும் அவ்வறிவு எழுதப்படும் தருக்களின் சில கூறுகளாக வெளிப்படும் என்பதே. இது சாதாரண ஓர் விசயம் என்பதாகப் படலாம். உடம்பில் சோர்வு காலில் குத்தல் வயிற்றில் வலி இருதய பலவீனம் தலைவலி போன்ற விசயங்களை உயிர் அறிந்திருக்க அவை தருக்களில் வெளிப்படுவது வியப்பிற்குரிய ஒன்றல்ல என்று கூறலாம். ஆயினும் உளவியலிற்கும் மருத்துவத்திற்கும் உதவும் இக்கூறு தருத் தேர்வில் சில தனி சிறப்புக்களைக் கொண்டிருக்கின்றது. இதில் முக்கியமாக எழுதப்படும் C தரும் D தருவும் வரவிருக்கும் எதிர்காலத்தை காட்டுவதால், அதில் ஓர் வியாதியின் வரவினைக் காட்டும் கூறுகள தருக்களில் காணப்பட்டால், அந்த வியாதி உடம்பில் வளரா முன்பே அதனைக் கண்டு தக்க சிகிச்சை பெற்று குணமடைய வாய்ப்புண்டு
இவ்வாறு இன்னும் பல விசயங்கள். இவற்றை ஒருவாறு இங்கு சுருக்குமாக விளக்குவோம்
.1.
தண்டில் அல்லது கிளைகளில் கூர் கூராக கொம்பு போன்ற வடிவங்களை நெடுக எழுதப்பட்டால் தரு நபர் TENSION எனப்படும் மன உலைச்சலுக்கு ஆளாகி நரம்பு முறுக்கி நிற்கும் நிலைக்குச் சென்றுள்ளார் என்று பொருள்படும் தக்க நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்காது போய்விட்டால பக்க வாதம் போன்றவை சம்பவிக்கலாம்
2.
இனி அடுத்து X போன்ற தடைக் குறிகள் வேர்களில் தண்டில் மற்றும் கிளைகளில் எழுதப்பட்டால், புற்று நோய் போன்ற ஏதோவோர் கொடூரமான நோய் தாக்கவிருகின்றது அல்லது தாக்கிவிட்டது என்றும் பொருள் படும். இவை A அல்லது B தருக்களில் இருந்தால் தாக்கிவிட்டது என்று பொருள்படும் C அல்லது D எனும் தருக்களில் இருந்தால் தாக்கவிருக்கின்றது என்று பொருள் பட்டு தக்க நேரத்தில் தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புண்டு.
3.
இனி எழுதப்படும் மரம் சாய்ந்து கிடந்தால், உடலும் சாய விருக்கின்றது என்று பொருள் படும். பெரும்பாலான சமயங்களில் இது உளச்சோர்வைக் காட்டுவதாகவும் இருக்கலாம்
4,
இனி எழுதப்படும் தருவில் கிளைகள் வலமும் இடமும் வெட்டப்பட்டு இருந்தால, தருநபர் பல உடல் வழி தண்டனைகட்கு ஆளாகி, உள்ளத்தில் பல ஆழமான தடைகள் உண்டெனக் காட்டும். முனைப்பெல்லாம் இழந்த முயற்சி செய்வதெல்லாம் இழந்த ஓர் மனநிலையைக் காட்டுவதாக இது இருக்கலாம்
5.
இனி யாராகிலும் தான் எழுதும் தருக்களின் வேர்களைச் சுற்றி ஓர் வட்டம் இட்டு அது வளர விடாது தடுப்பதுபோல் எழுதினால், இது உடனடியாக மருத்துவ சோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும். இத்தன்மையத் தரு நபருக்கு ஏதோ ஒர் காரணமாக மரணம் நெருங்கி வருவதை இது காட்டி நிற்கின்றது. ஏதோ ஒரு நோய் இவரைத் தாக்கி உடம்பிற்கு சத்தி ஊட்டம் நடைபெறாது தடுப்பதாக இதன் பொருள் ஆகும்.
இவ்வாறு இன்னும் பல உடற்கூறுகள் தருத் தேர்வில் வெளிப்படுவனவாக இருக்கின்றன. இதுவரை மேலே விளக்கப்பட்டவை அனைத்தும் ஆனண் பெண் எனும் இருபாலாருக்கும் பொது.
பெண்களும் உடம்பும்
இந்தத் தருவும் பொதுவான அறிவினை உறுதி செய்வதாக இருந்தாலும், பெண்களுக்கு தாம் மகிழும் உடம்போடு ஓர் சிறப்பான நெருக்கமும் தொடர்பும் இருப்பதுபோல் தெரிகின்றது, உடம்பில் தோன்றும் பல பெண்மையின் பல்வேறு மாற்றங்கள் வெளிப்படையாக காணும் வகையில் அவர்கள் எழுதும் தருக்களில் வெளிப்படுகின்றன. அவற்றில் சில இங்கு
1.
ஏறக்குறைய 11, அல்லது 12 வயது அடைந்துவிட்ட நிலையில் சிறுமிகளாகி இருக்கின்ற பெண் குழந்தைகட்கு பூப்பெய்தும் பருவம் வரும். அது சில சிறுமிகட்கி அச்சத்தைத் தருவதாக அமையலாம். ஆனால் முன் கூட்டியே இதன் வரவைத் தெரிந்துகொண்டால், தாயார் அதனைப் பற்றி எடுத்துக்கூறி, அந்த சிறுமியை அதற்குத் தயார் படுத்தி வீணான அச்சத்தைப் போக்கலாம. பூப்பு வரும் போது, இத்தகைய சிறுமிகள் தங்களது பெண் உறுப்பையே சித்திரமாக எழுதும் வாய்ப்புண்டு.
2.
இனி பருவம் எய்திய எல்லா இளம் பெண்களும் உடல் அளவிலும் மன அளவிலும் திருமணத்திற்குத் தயாராக இருப்பதில்லை, ஆனால் தக்க உடல்நிலை வரும்போது இளம்பெண்கள் உடம்பளவில் திருமணத்திற்கு தயாராக அது தருத்தேர்வில் கருதரிப்பது போன்ற சித்திரங்களாக வெளிப்படும். கன்னிப் பெண்களாக இருந்தாலும் இப்படி வருவதுண்டு, இதன் பொருள் அவர்கள் திருமணம் செய்துகொண்டு தாயமைப் பேற்றை மகிழவேண்டும் என்ற விருப்போடு இருக்கின்றார்கள் என்பதே யாகும்
3.
இனி திருமணமாகி கரு உண்டாகி விட்டால அதுவும் தருவில் பலவகையில் வெளிப்படும். ஆனால் கருத் தரிக்க தாமதம் ஆனால், உடம்பில் யாதாவது குறை இருந்தால், அதுவும் தருத்தேர்வில் வெளிப்பட்டு விடும். தருக்களின் சில பகுதிகள் வெட்டப்பட்டு இல்லாது போக்கப்பட்டவாறு தருக்கள் எழுதப்படும். இதுபோன்ற குறிகள் கருத் தரிப்பதற்கு பல உளத் தடைகள் உடற் தடைகள் உண்டெனக் காட்டும். சில சமயம் பிரசவத்தை நினைத்து அகத்தே பேரச்சம் நிலவினால், இப்படிப்ட்ட கருத்தடைகள் தோன்றும். இவை தக்க உபதேசங்கள் வழியாகவே நீக்கப்படவேண்டிய தடைகள் ஆகும்.
4.
இனி வியப்பான ஓர் கண்டுபிடுப்பு என்றே சொல்லலாம். கருவுற்று சுக பிரசவம் காணவிருக்கும் சில பெண்கள், தமையே தருக்களாக எழுதி அதில் பால் சுரக்கும் கொங்கைகளை தொல்கால அம்மை வடிவங்கள் போல, மிகவும் பெரிதாக விகாரப்படுத்திக் கண்பிப்பர். தொல்கால அம்மன் சிலைகள் குண்டிகளும் வயறும் பெருத்ததாகக் காட்டபடுவது இங்கு கொங்கைகளே மிகப் பெரிதாகக் காட்டப்பட்டு நிற்கும். ஆயினும் இத்தகையைத் தருக்கள் C யிலும் D யிலும் வர, சுகமான பிரசவம் மெய்யாகும் என்று பொருள் படும்
குறிப்பு:
மேலே விளக்கியவை எல்லாம் ஒரு சிலவே, கள ஆய்வில் இறங்கி பலரின் தருக்களை சேகரித்து விரிவாக ஆய்வு செய்தால், இன்னும் பல நுட்பங்கள் தெளிவாகும். உயிர் வேறு உடம்பு பேறு என்றும் உயிர் உடம்பெங்கும் பரவி இருக்க, உடம்பில் முக்கியமான உறுப்புக்களில் சில மாற்றங்கள் வந்துவிட்டால், உணர்வில் அவை படுமுன் உயிரில் பட அவை தருத்தேர்வில் சில குறிகளாக வெளிப்பட்டுவிடுகின்றன
தொடரும்
உலகன்
சிலர் அதிலும் குறிப்பாக வயது பெண்கள் தாமரை மலரை பல கோணங்களில் எழுதுவர். மேலடுக்கும் கீழ் அடுக்கும் உடையதாகவும் எழுதுவர். இது மிகவும் மங்களகரமான உள்ளத்தை, மகா இலக்குமி அகத்தே குடிகொண்டிருக்கும்படியான ஒர் நிலையைக் காட்டும். இத்தகையப் பெண்டிர் அற்புதமான மனையாளாகவும் விளங்குவர்
உங்களுடைய மேற்கண்ட கூற்றில் கவரப்பட்ட, திரு சிவகுமாரிடம் பயிற்சி பெற்ற இளைஞர் திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது பெண்ணை தருத் தேர்வுக்கு ஆட்படுத்தித் தள்ளவும் கூடும்.
ஒரு படத்திற்கு விளக்கம் அளிக்கும் போது விளக்கம் அளிப்பவரின் எண்ணம், உளவியல் என்ற Subjectivity அதில் வந்து விடுகிறது.
சோசியத்தின் பேரால், எண் கணிதத்தின் பேரால், கைரேகையின் பேரால், வாஸ்து, கற்கள் போன்று பலவற்றின் பேரால் மூட நம்பிக்கை வளர்ந்து நிற்பது போல தருத்தேர்வு ஆகம உளவியலும் மூட நம்பிக்கைய வளர்க்கவல்லது. பலருடைய பொன்னான் நேரத்தை வீணாக்கவும், விளக்கமளிப்பவர் பாதகமான் ஒன்றைச் சொல்லிவிட்டால் மன் உளைச்சலைத் தரவும் கூடியது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
எழுதப்படும் தருக்கள், ஆழ் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் உணர்வுகளை தருத் சித்திரம் போன்ற சித்திரங்களில் நுதிக்க்ப்படுகின்றது.( gets projected) இதனால் சாதாரண முறையில் அறியமுடியாது ஆழ்வுள்ளத்து விசயங்கள் ஒருவாறு இப்படிப்பட்ட சித்திரங்களாக அறிய முடிகின்றது.
விளக்கம் கொடுப்பது என்பது உள்ளுறைப் பொருளியல் கூறி தெளிவு கொண்டு வருவதாகும். ( an exercise in Hermeneutic Semiotics ) இங்கு மூட நம்பிக்கை யாதும் இல்லை, உள்ளுறைப் பொருளியல் கூறுவது பெரும்பாலும் ஓர் நியதி வாய்ப்பட்ட செயலாகும்.
இது மெய்யா பொய்யா என்று யாரும் சோத்த்தித்துப் பார்க்கலாம.
இப்படி சோதித்து மெய்யா அல்லையா என்று யாராலும் நிறுத்தவல்ல தன்மையே இதனை ஓர் அறிவியல் துறை ஆக்குகின்றது. ஆக இது நிச்சயமாக ஓர் புதிய மூட நம்பிக்கை அல்ல,
பொறுமையான பதிலுக்கு நன்றி ஐயா.
--
பாடம் 5: இடுகை 3: இட வகுப்பு
தருத் தேர்வில் உள்ளத்தின் பல ஆழ்வுணர்வுகள் கனவில் வெளிப்படுவதுபோல, தருச் சித்திரங்களில் வெளிப்படுகின்றன. எழுதப்படும் தரு செயற்கை முறையில் ஒன்றை மறைப்பதற்காக திரித்து எழுதப் பட்டால் அது நம்பகத் தன்மை ( reliability) உடையது அல்ல என்று ஒதுக்கி விடலாம். மெய்யான தருக்கள் நபரின் உள்ளத்திலிருந்து வரவேண்டும் இந்த தேர்வில் அனுப்வம் கூடி வர, யார் எந்த சூழ்நிலையில் எப்படிப்பட்ட தருக்களை எழுதுவார்கள் என்று முன்கூட்டியேக் கணிப்பது ஏறக்குறைய முடியாத ஒன்றாகும். எவ்வாறு உறங்கப் போகுமுன் கனவுகள் வருமா அல்லையா அப்படியயே வரவிருந்தாலும் எப்படிப்பட்ட கனவுகள் வரும் என்று கணித்துக் கூற முடியாதோ அப்படித்தான் இங்கும்
தரப்படும் ஆணைகட்கு ஏற்ப, ஆய்வு நபரிடமிருந்து அவரே சுயமாக எழுதும் தருக்களைப் பெறுவது முதற்படி. நம்பகத் தன்மையின் தருக்களைப் பெற்ற பிறகே நாம் அவற்றை அலசி உள்ளுறைப் பொருள் கண்டு ஆகமீயங் கூறி மனநலம் உடல்நலம் ஆகியவற்றிற்குப் பாடுபடவேண்டும்
இங்கு அறிவியல் துறையின் Validity எனும் மெய்மைக் கூறு வெளிப்படுகின்றது. தருநபர் உள்ளத்தின் ஆழத்டின் கூறப்படும் உள்ளுறைபொருள் இருக்கின்றதா என்பதை அவர் ஆலோசகரோடு உடன்படுதல் வழியும் பிற ஆலோசகர்கள் அனுபவத்டில் இதேப் போன்ற சூழல்கள் வர அவரோடு உடன்படுதல் வழியும் கூறப்படும் உள்ளுறைப் பொருளின் உண்மை உறுதி செய்யபப்டுகின்றது. பல்லோர் ஒத்டிட இங்கு பொருள் பகர்வு நடைபெறுதலைன், கற்பிதங்கட்கும் ஒருவரின் தனிப்பட்ட கருத்டிற்கும் ( subjectivity) இடம் இல்லாது போய் விடுகின்றது
இதுவரை விளக்கப்பட்டுள்ள உள்ளுறைப் பொருளியல் இப்படிப்பட்ட உண்மைகளே யாகும். சில இடங்களில் ஐயப்பாடுகள் இன்னும் இருக்கலாம. ஆனால் அடிப்படைகள் நன்றாக சோதித்து நிறுத்தப்பட்டவையே ஆகும்.
இனி எஞ்சி இருப்பவற்றுள் அடுத்து தருக்கள் காட்டும் இட ஒதுக்கீடுகள் உணர்த்தும் உள்ளுறைப் பொருளை விளக்க முற்படுவோம். இங்கு இத்தகைய ஆய்வுகள் இன்னும் விரிவாக செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருப்பதையும் சுட்ட வேண்டும்
இட வகுப்பு அல்லது இட ஒதுக்கீடு
இங்கு இட ஒதுக்கீடு என்றால், ஓர் நீள் சதுரக் கட்டத்திற்குள் தருநபர் தான் எழுதும் தருவை எந்த இடத்தில் எந்த அளவில் வைக்கின்றார் என்பதை அறிவதே யாகும். சிலர் தருவை மிகச் சிறியதாக எழுத, சிலரோ அந்த சதுரத்தின் எல்லைகளைக் கடந்துபோகும் அளவிற்கு மிக பெரியதாக எழுதுவார்கள். அத்தோடு எழுதப்படும் தரு சிறியதாக இருந்தால் நடுவில் வைப்பது இடது பக்கம வலது பக்கம் என்று தள்ளுவது, மேலும் வடகிழக்கு வடமேற்குப் பக்கங்கட்குத் தள்ளுவது கீழே தள்ளுவது என்றவாறு பலவகையான தள்ளல் முயற்சிகள் காட்டப்படும்.
இப்படிப்ப்ட இட ஒதுக்கீடுகள் தரு நபரின் பல வகையான சாதாரண முறையில் அறிய முடியாத உளப்பண்புகளைக் காட்டி நிற்கும். இவை பல குமுகாய உறவுகள் தொடர்பாகப் பல உளச்சிக்கல்களை உணர்த்தி நிற்க, ஆகமீயம் கூறி உபதேசம் செய்ய, இவற்றின் உள்ளுறைப் பொருள் மிகவும் தேவையான ஒன்றாகும்.
அவை யாவை என்பதை கீழே சுருக்கமாக விளக்குவோம்
1
தரு அளவில் மிகப் பெரியதாக கட்டத்தைக் கடந்து செல்லும் வகையில் இருப்பது
பொருள்: இது தருநபர் எந்த குழுவில் குமுகாயத்தில் இருந்தாலும் தன்னையே முன் நிறுத்தி அனைவரையும் விஞ்சி நிற்கவேண்டும் எனும் வேட்கை உடையவர். பதின்மர்களில் பலர் இந்த மனோபாவம் உடைவர்கள். இதனால் குமுகாய உறவில் ( social relationships) பல சிக்கல்கள் கலக்கங்கள் சம்பவிக்கலாம்
2.
தரு மிகச் சிறியதாக ஏதோவொர் மூலையில் இருப்பது போன்று அமைவது.
பொருள்: இது மேலே உள்ளத்தின் பண்புகட்கு மாறானது, எதிரானது. தன்னம்பிக்கை இல்லாது எதிலும் பின்வாங்கி தயக்கம் காட்டி நிற்பவர். இருந்தும் இல்லாததுபோல் பின்புலத்தில் இருப்பர். வயதில் முதியவர்கள் உலகப் பற்று அற்று ஓய்ந்துவிட்ட நிலையில் இப்படிப்பட்ட தருக்களையே பெரும்பாலும் எழுதுவர், இளைஞர்கள் இப்படி எழுதினால, உலகப் பற்றும் நலமே உழைத்து வாழவேண்டும் என்ற ஊக்கமும் மிகக் குறைந்தவராக இருப்பர்.
3.
இனி எழுதப் படும் தரு அளவில் சரியாக இருந்து ஆனால் வலது பக்கமாக (வடகிழக்கு பக்கமாக) சாய்ந்திருப்பதாக பலர் எழுதுவார்கள். இது பெரும்பாலும் இளைஞர்களால் இவ்வாறு எழுதப்படும். தருவும் பெரும்பாலும் கூரான வடிவில், ஏறக்குறைய முக்கோண வடிவில் இருக்கும்
பொருள்: இத்தகையோர் முற்போக்குச் சிந்தனையோடு உயர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும் உடையவர்களாக விளங்குவர். அகத்தடை மிக குறைவு. நல்ல துணிவும் மாற்றங்களை விரும்புவர்களாகவும் இருப்பர். புதியக் கருத்துக்கள் வந்தால் அவற்றை ஏற்றுக் கொண்டு தக்கபடி மாறுவதற்கும் தயங்க மாட்டார்கள்
4.
இனி எழுதப்படும் தரு இடது பக்கம் அல்லது வடமேற்குப் பக்கம் சாயந்திருப்பதாக எழுதுவோரும் உண்டு,. இது பெரும்பாலும் இளம் பெண்களால் இவ்வாறு எழுதப்படும்
பொருள்: கருத்து மாற்றதிற்கு அஞ்சுவார்கள், தயங்குவார்கள். ஓர் முடிவு எடுத்து விட்டால அதில் மாறாது மிக உறுதியாக இருப்பார்கள். காதலில் விழுந்த இளம் பெண்கள், பல சோதனைகள் வந்தாலும் தாம் கொண்ட காதலிலிருந்து எளிதில் மாற மாட்டார்கள்
குறிப்பு:
அ) ஆன்மாவின் இடக்லை பிங்கலை சுழிமுனை நாடிச் செலவுகட்கும் இத்தகையத் தருக்களுக்கும் ஓர் நெருங்கியத் தொடர்புண்டு. எழுதப்படும் தருக்கள் நேராக சாய்வில்லாதும் சமச்சீர் ( summetry) உடையனவாக இருந்தால், அது தருநபர் சுழிமுனை நாடச் செலவில் இருக்கின்றார் என்றும் படும். வலது பக்கச் சாய்வு இடகலைக் காட்ட இடதுப் பக்கச் சாய்வு பிங்கலை நாடியின் ஆட்சியைக் காட்டும். மேலும் இவை நாதமும் விந்துவும் இணைந்து செயல்படுவதையும் நாதம் அதிகமாகவும் விந்து அதிகமாக்வும் செயல்படும் நிலைகளையும் காட்டும்
ஆ) மேலும் இவற்றை மூளையின் செயல்பாட்டிற்கும் கொண்டு செல்லாம். சுழிமுனை நாடி செலவு இருபக்க மூளையும் பயன்படுத்தப் படுவதைக் காட்ட, இடகலை வலது பக்க மூளையும் பிங்கலை இடபக்க மூளையும் மிகுதியாக செயல்படுவதையும் காட்டுவதாக இருக்கலாம்
தொடரும்
உலகன்
பாடம் 5: இடுகை 4: தருவில் கனவுகள்
மேலே விளக்கப்பட்ட இட ஒதுகீட்டின் அடிப்படைகளைத்தான் இதுவரை சிறிது விளக்கியுள்ளோம். முனைவர் சிவகுமார் அவர்கள் இதனை இன்னும் விரிவாக ஆய்ந்துள்ளார். உடம்பின் மூளை செயல்பாடு, நரம்பு மண்டலத்தின் நிலைப்பாடு போன்றவற்றை மிக எளிமையான முறையில் தருத் தேர்வில் காணமுடியும்
இனி இந்த தனித்தரு ஆய்வில் எஞ்சியதாக இருப்பது கனவுகளோடு எழுதப்படும் சில தருக்கள் ஒத்திருப்பதேயாகும். இதனால் தருக்களில் உள்ளுறைப் பொருளை முற்றாக விளக்க கனவு ஆய்வும் ஆகவே புராண ஆய்வும் தேவைப்படும் ஒன்றாகின்றது.
தருக்களும் கனவுகளும்
நான் 1987ஆம் ஆண்டு வாக்கில் யப்பானியப் பேராசிரியர் யோஷிகாவாவுடன் இந்த ஆய்வினை எவ்வாறு சுற்றுச் சூழல்கள் குழந்தைகளின் மூளையின் செயல்பாட்டினை பாதிக்கின்றது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அவர் அந்த முதல் தருவிலேயே நிற்க, நான் அந்த ஆய்வு முடிந்த கையோடு, நான்கு தருக்கள் எழுதும் வகையில் இந்தத் தருத் தேர்வை புதுக்கி பல மாணவர்களை ஆய்வு செய்ய, பல வியப்பான விசயங்களை அறிய வந்தேன். அவற்றில் முதன்மையானது C D தருக்களில் விந்தையான மிருகங்களும் யந்திரங்களும் மற்றும் இன்னும் பல தருவே இல்லாத பல உருவங்கள் எழுதப்பட்டதைக் கண்டு திகைத்தேன். யந்திரங்கள் பழக்கமானவை தான். ஆனால் விசித்திரமான பல உருவங்கள் அதுவும் சமய வழ்பாட்டில் திகழும் உருவங்கள்?
பிறகே அவை ஆழ்வுள்ளத்தில் இருக்கின்ற புதையுருக்களோடு, அதாவது சாதாரண முறையில் கனவில் வெளிப்படும் அவற்றோடு தொடர்புடையது என்று அறிய வர, மிக விரிவான கனவு ஆய்விலும் இறங்கி ஓரளவு அதனையும் வளர்த்து தருத்தேர்விற்கு கொண்டு வந்தேன்.
இவையே இயல்பான சமய வாழ்க்கையின் அடிப்படைகளை விளக்குவனவாக அமைந்தன. தருத் தேர்வும் சமய வாழ்க்கையை ஓர் அறிவியல் முறையில் விளக்கும் ஓர் சாதனமாகவும் ஆகியது. உபதேசக் கலைக்கும் இது பெரிதும் உதவியது
கீழே என் அனுவத்திற்கு வந்த சில கனவுக் கூறுகளை மாத்திரம் விளக்குகின்றேன்
1.
பாம்புகள்
இவற்றில் பல வகை உண்டு. சுருக்கமாக பொருள் இங்கே
A) கோரமான பற்களைக் காட்டும் வெறி பிடித்த முரட்டுப் பாம்பு
பொருள்: இது ஓர் சீன 18 வயது இளைஞன் எழுதியது. தான் விரும்பும் ஓர் இளம்பெண் இவன் காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவன் அவளை கற்பழிக்க எண்ணி இருந்தது இதன் அர்த்தமாகும். இது D தருவில் வர, எதிர்காலத்தில் நடக்க விருப்பதாக இருந்தது, முன்கூட்டியே அவனது இந்த எண்ணத்தை வெளிப்படுத்தி ஓர் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வந்து அவனைக் காப்பாற்றினேன். அந்தப் பெண்ணையுந் தான்
B) ஐந்தலை நாகம், C தருவில்
இது ஓர் 30 வயது கணவனிடமிருந்து பிரிந்திருந்த ஓர் மாது எழுதியது. கடும் விரக தாபத்தில் இருக்க, இன்னொரு ஆடவனுடன் காதல் வந்து அமைதி அடைந்தாள். ஆனால் அதுவே பல சிக்கல்க்ளைக் கொண்டும் வந்தது
C) நேராக பாம்பு எழுதாது தென்னை மரம் கொடி போன்றவற்றை பாம்பாக வளைத்தும் முறுக்கியும் எழுதுவது
இது பெரும்பாலும் பருவ மங்கைகளால் எழுதப்படுவது. ஓர் ஆண் துணைத் தேடி அவர்கள் நிற்பதைக் காட்டும். இத்தகையப் பெண்கள் விரைவில் திருமனம் செய்துகொண்டு தாய்மைப் பேற்றை அடைவர்.
2.
சிவலிங்கங்கள்
D) பல வகையான சிவலிங்கங்கள். இவை பெரும்பாலும் கன்னிப் பெண்களாலும் திருமணம் ஆகியப் பெண்களாலும் எழுதப்படுவனவாகவும் இருக்கும், மொழி சமயப் பண்பாட்டு பேதங்கள் எல்லாங் கடந்து இவை பரவலாக எழுதப்படுவனவாகும்.’
பொருள்; பொதுவாக கன்னிப் பெண்களுக்கு திருமண் நாட்டத்தையும் திருமண ஆகிய பெண்களுக்கு கற்புறுதியையும் மகட்பேறு விருப்பத்தையும் காட்டும். என் ஆய்விற்கு வந்த ஓர் மாது 5 குழந்தைகளை ஈன்று மகிழ்ந்தாள், கணவனுடன் மிக நெருக்கமாகவும் கற்புறுதியோடும் வாழ்ந்தாள்.
3.
அலங்காரங்கள்
E)
இனி எழுதப்படும் மரங்களின் கிளைகளில் குருவிக் கூடு கட்டுவது, ஊஞ்சல் கட்டி விடுவது போன்ற அலங்காரங்கள் எழுதுவோரும் உண்டு. இவை பெரும்பாலும் பெண்களாலேயே எழுதப்படும்
பொருள் :இது பெரும்பாலும் மகட் பேறு வேட்கை வலுவாக இருப்பதைக் குறிக்கும், குடும்ப வாழ்க்கைஅயை ஆழ விரும்புவதையும் காட்டும்
குறிப்பு:
இப்படி இன்னும் பலக் கனவுக் கூறுகள் உண்டு. கள ஆய்வின் போது இவற்றை அடடையாளங் கண்டு தக்க் முறையில் உள்ளுறைப் பொருள் கூறி இந்த கலையை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
இத்தோடு 5ஆம் பாடத்தின் கடைசி இடுகை முடிகின்றது
தொடரும்
உலகன்
பாடம் 6: இடுகை 1: தொடரியல் தரு ஆய்வு-1
நேற்று ( 25-1-14) அன்று 6-வது பாடம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இதுவரை நடந்ததெல்லாம் இந்த தொடரியல் தருத்தேர்விற்கு ஓர் முன்னுரைதான். இன்றே முனைவர் சிவகுமார் அவர்கள் ஏன் இந்த புதியத் தருத் தேவில் 4 தருக்கள் அதுவும் தொடர்புடைய வெவ்வேறு ஆணைகட்கு ஏற்ப என்பதை விளக்கினார். இந்த திருப்பத்தை நான் 1987ஆம் ஆண்டு கொண்டு வந்ததையும் அதன் சிறப்பையும் அது எவ்வாறு சைவ சித்தாந்தத்தோடு ஒத்து வரும் வகையில் அதேபொழுது எவ்வாறு அது Freud Jung போன்றார் கருத்துக்களோடு ஒருபுடை ஒத்தும் ஆனால் பல்வேறு வகையில் வேறுபட்டும் பல தனி சிறப்போடும் விளங்குகின்றது என்பதையும் விளக்கிட, வந்திருந்த அனைவரும் மிக ஆர்வத்தோடும் பெரும் வியப்போடும் இந்த 3 மணி நேரம் போனதேத் தெரியாமல் மிக உன்னிப்பாக கேட்டு இன்னும் பல தெளிவுகளைப் பெரும் வகையில் பல நுணுக்கமான கேள்விகளையும் கேட்டனர். உளவியல் துறையில் முதுகளை பட்டப்படிப்பு படித்து வரும் செல்வி சங்கரி வியந்து இதுபோன்று தானும் ஓர் புது உளவியல் துறையை வளர்க்க வேண்டும் என்று என்னிடம் வந்து கூறினாள்
ஆகமவுளவியலின் புதுமை ஆழம் என்பவற்றோடு எவ்வாறு அது சைவ சித்தாந்தக் கோட்பாடுகளோடு பெரிதும் ஒத்து வருகின்றது என்பதையும் கண்டு, சைவ சித்தாந்தத்தின் ஓர் புதிய வடிவமே ஆகமவுளவியல் என்று நினைக்கவும் தொடங்கி விட்டனர்.
இந்த 6ஆவது பாடத்தோடு இந்த பயிற்சி முடியவிருந்தது. ஆனால் பாதியிக்லேயே அது முடியாது என்பதை உணர்ந்தும் பயிற்சியாளர்களின் தணியாத ஆர்வத்தையும் கண்டு, இந்த பயிற்சியை இன்னும் இரண்டு முறை நடத்த வேண்டி இருக்கின்றது, அப்பொழுதுதான் தருத்தேவின் வழி ஓரளவு நனறாக உபதேசங்கூறி மக்களை அதிலும் குறிப்பாக மாணவர்களை வழி நடத்த முடியும் என்ற எண்ணமே இந்த நீட்டிப்பிற்கு அடிப்படை. அனைவரும் ஆர்வத்தோடு இதனை வரவேற்றார்கள்,. இந்த ஆர்வத்தைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். எத்தனையோ ஆண்டுகளாக இப்படிப்பட்ட ஆர்வத்தை நான் தமிழர்களிடமிருந்து எதிர்ப்பார்த்தேன். ஆனால சீனர்கள் பேரார்வம் காட்ட தமிழர்கள் அவ்வாறு இல்லை, ஆனால் இப்பொழுது நிலமை மாறி வருகின்றது. நல்ல ஆர்வங் கூடி வர, இந்தக் கலை மிகப் பெரிதாக வளர்ந்து ஓர் பண்பாட்டு மறுமலர்ச்சியையே கொண்டு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நாங்கு தருக்களின் தனைச் சிறப்பு
ஜெர்மானிய Hilt Brunner என்பார் “ மரம் எழுதுக” என்றே இக்கலையை தொடங்கி வைக்க, பின் யப்பானிய யோஷிகாவா என்பார் “பழங்கள் உள்ள மரம் எழுதுக” என்று அதனை மாற்றி தனது ஆய்வினைத் தொடர, யான் அவரிடமிருந்து இதனைக் கற்று பல வகையில் ஆய்வு செய்யும் போது, ஆணைகளை விருத்தி செய்து அடுத்தடுத்து A B C D என்றவாறு நான்கு தருக்களை எழுதும் வகையில் இந்த புதிய தருத்தேர்வினை வடிக்க அதுவே பெரும் புரட்சியாகி விட்டது. அத்தோடு இதுவே சைவ சித்தாந்தத்தோடு மிக நெருக்கமான ஓர் உறவையும் கொண்டு வந்து சைவ சித்தாந்த்தையே புதிய ஓர் கோணத்தில் விளக்கும் ஓர் கலை ஆகிவிட்டது.
அப்படி என்ன இங்கு ஓர் புரட்சி?
அனைவர் உள்ளத்திலும் ஓர் வரலாற்றியல் புரிந்துணர்வு இருக்கின்றது ( Historical Understanding). இதுவே அனைவருக்கும் அடிப்படையானது. இறந்தது நிகழ்வது எதிரது என்றவாறே நம் சிந்தையும் செயல்பாடுகளும் விளங்குகின்றன. “இன்று, இப்பொழுது” என்றவாறு வரும் தற்காலிக கணிப்பில் யாரும் வாழ்வதில்லை. எதிரதுவாக ஓர் நுதிப்பு ( Projection) இருந்துகொண்டே இருக்கின்றது. எவ்வாறு ஒருவனின் நுதிப்போ அவ்வாறே அவனின் இன்றைய ஒழுக்கம். இப்பேற்பட்ட வரலாற்றியல் சிந்தனையை மிகவும் எளிதாக அதேபொழுது ஓர் சித்திரக் கதையாக நாம் காணத் தருவதே இந்த நான்கு தருக்கள் எழுதும் தருத்தேர்வும் ஆகும்
இங்கு தொகாப்பியர் விளக்கிய குறிப்புக்காலவுணர்வும் (Intentional Time) வெளிப்படுகின்றது. குறிப்புக் காலம் என்றும் அதன் அடிப்படையில் எழும் உலகியல் இயக்கங்களைச் சார்ந்த சுட்டுக்காலம் என்றும் வரும் இருவகைக் காலவுணர்வுகளுள், நான்குத் தருக்கள் எழுதும் தருத்தேர்வு, ஒருவனின் குறிப்புக்கால அறிவினை படம் பிடித்துக் காட்ட, அவனது ஒழுகலாற்றின் மூலங்களையே நமக்குக் காட்டி விடுகின்றது. ஒழுக்கத்தில் ஓர் சிக்கல் இருக்குமேயாகில், அதன் மூலம் அவன் எவ்வாறு இந்த வரலாற்றியல் சிந்தனைய வடித்திருக்கின்றான் என்பதிலிருந்து நாம் ஊகித்துச் சொல்ல முடியும்
இங்கு Heidegger எனும் ஜெர்மானிய தத்துவ மேதையோடு நாம் ஒத்துப் போகின்றோம். “Mind is projective” என்றார் அவர். அதாவது அனைவரும் யாதவதோர் நுதிப்பினை அகத்தே இருத்தியே உலகில் பல செய்கின்றோம். இந்த நுதிப்பு பெரும்பாலும் ஓர் மறைபொருள், சிலர்க்கு தெளிந்த ஒன்றாக இருக்க பலருக்கு அவ்வளவு தெளிவாக இல்லாது குழப்பமான ஒன்றாகவே இருக்கும். இந்த நுதிப்பு தெளிவான உறுதியான ஒன்றாக இருந்துவிட்டால், ஒழுகத்தில் எவ்விதப் பிரச்சினையும் வராது. ஆனால் தெளிவற்ற ஒன்றாயும் பிழையான ஒன்றாயும் இருந்துவிட்டால், ஒழுக்கத்தில் மனதில் பல சிக்கல்கள் தோன்றும். ஒருவகையான மனோவியாதி போன்ற சித்தக் கலக்கமும் உண்டாகலாம.
மேலும் முனைவர் சிவகுமார் அவர்கள் சைவ சித்தாந்த்தில் விளங்கும் மனம் புத்தி அகங்காரம் சித்தம் எனும் நாங்குறுப்பு மனோவியலோடும் இதனை தொடர்பு படுத்தி காண்கின்றார். மேலும் இந்த நான்கு தருக்களும் ஒருவனின் அநாதி பொருளியல் (பிரமாணவியல்) இலக்கணவியல் சாதனவியல் பயனியல் ஆகியக் கூறுகளையும் காட்டுவதாகவும் கூறி இவ்வகையில் எவ்வாறு இது Freud Jung போன்றோர் கூறாத அல்லது கூறுவதற்கு தய்ங்கிய விசயங்கள் இந்த புதியத் தருவின் ஆகமவுளவியல் கூறி இன்னும் சிறப்பான ஓர் கலையாக சுடர்கின்றது என்று தெளிவாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்தினார்.
இனி அடுத்துவரும் கட்டுரைகளில் இவை எல்லாம இன்னும் விரிவாக விளக்கப்படும்
தொடரும்
உலகன்
பாடம் 6: இடுகை 1: தொடரியல் தரு ஆய்வு-1
நேற்று ( 25-1-14) அன்று 6-வது பாடம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இதுவரை நடந்ததெல்லாம் இந்த தொடரியல் தருத்தேர்விற்கு ஓர் முன்னுரைதான். இன்றே முனைவர் சிவகுமார் அவர்கள் ஏன் இந்த புதியத் தருத் தேவில் 4 தருக்கள் அதுவும் தொடர்புடைய வெவ்வேறு ஆணைகட்கு ஏற்ப என்பதை விளக்கினார். இந்த திருப்பத்தை நான் 1987ஆம் ஆண்டு கொண்டு வந்ததையும் அதன் சிறப்பையும் அது எவ்வாறு சைவ சித்தாந்தத்தோடு ஒத்து வரும் வகையில் அதேபொழுது எவ்வாறு அது Freud Jung போன்றார் கருத்துக்களோடு ஒருபுடை ஒத்தும் ஆனால் பல்வேறு வகையில் வேறுபட்டும் பல தனி சிறப்போடும் விளங்குகின்றது என்பதையும் விளக்கிட, வந்திருந்த அனைவரும் மிக ஆர்வத்தோடும் பெரும் வியப்போடும் இந்த 3 மணி நேரம் போனதேத் தெரியாமல் மிக உன்னிப்பாக கேட்டு இன்னும் பல தெளிவுகளைப் பெரும் வகையில் பல நுணுக்கமான கேள்விகளையும் கேட்டனர். உளவியல் துறையில் முதுகளை பட்டப்படிப்பு படித்து வரும் செல்வி சங்கரி வியந்து இதுபோன்று தானும் ஓர் புது உளவியல் துறையை வளர்க்க வேண்டும் என்று என்னிடம் வந்து கூறினாள்
ஆகமவுளவியலின் புதுமை ஆழம் என்பவற்றோடு எவ்வாறு அது சைவ சித்தாந்தக் கோட்பாடுகளோடு பெரிதும் ஒத்து வருகின்றது என்பதையும் கண்டு, சைவ சித்தாந்தத்தின் ஓர் புதிய வடிவமே ஆகமவுளவியல் என்று நினைக்கவும் தொடங்கி விட்டனர்.
இந்த 6ஆவது பாடத்தோடு இந்த பயிற்சி முடியவிருந்தது. ஆனால் பாதியிக்லேயே அது முடியாது என்பதை உணர்ந்தும் பயிற்சியாளர்களின் தணியாத ஆர்வத்தையும் கண்டு, இந்த பயிற்சியை இன்னும் இரண்டு முறை நடத்த வேண்டி இருக்கின்றது, அப்பொழுதுதான் தருத்தேவின் வழி ஓரளவு நனறாக உபதேசங்கூறி மக்களை அதிலும் குறிப்பாக மாணவர்களை வழி நடத்த முடியும் என்ற எண்ணமே இந்த நீட்டிப்பிற்கு அடிப்படை. அனைவரும் ஆர்வத்தோடு இதனை வரவேற்றார்கள்,. இந்த ஆர்வத்தைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். எத்தனையோ ஆண்டுகளாக இப்படிப்பட்ட ஆர்வத்தை நான் தமிழர்களிடமிருந்து எதிர்ப்பார்த்தேன். ஆனால சீனர்கள் பேரார்வம் காட்ட தமிழர்கள் அவ்வாறு இல்லை, ஆனால் இப்பொழுது நிலமை மாறி வருகின்றது. நல்ல ஆர்வங் கூடி வர, இந்தக் கலை மிகப் பெரிதாக வளர்ந்து ஓர் பண்பாட்டு மறுமலர்ச்சியையே கொண்டு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நாங்கு தருக்களின் தனைச் சிறப்பு
ஜெர்மானிய Hilt Brunner என்பார் “ மரம் எழுதுக” என்றே இக்கலையை தொடங்கி வைக்க, பின் யப்பானிய யோஷிகாவா என்பார் “பழங்கள் உள்ள மரம் எழுதுக” என்று அதனை மாற்றி தனது ஆய்வினைத் தொடர, யான் அவரிடமிருந்து இதனைக் கற்று பல வகையில் ஆய்வு செய்யும் போது, ஆணைகளை விருத்தி செய்து அடுத்தடுத்து A B C D என்றவாறு நான்கு தருக்களை எழுதும் வகையில் இந்த புதிய தருத்தேர்வினை வடிக்க அதுவே பெரும் புரட்சியாகி விட்டது. அத்தோடு இதுவே சைவ சித்தாந்தத்தோடு மிக நெருக்கமான ஓர் உறவையும் கொண்டு வந்து சைவ சித்தாந்த்தையே புதிய ஓர் கோணத்தில் விளக்கும் ஓர் கலை ஆகிவிட்டது.
அப்படி என்ன இங்கு ஓர் புரட்சி?
அனைவர் உள்ளத்திலும் ஓர் வரலாற்றியல் புரிந்துணர்வு இருக்கின்றது ( Historical Understanding). இதுவே அனைவருக்கும் அடிப்படையானது. இறந்தது நிகழ்வது எதிரது என்றவாறே நம் சிந்தையும் செயல்பாடுகளும் விளங்குகின்றன. “இன்று, இப்பொழுது” என்றவாறு வரும் தற்காலிக கணிப்பில் யாரும் வாழ்வதில்லை. எதிரதுவாக ஓர் நுதிப்பு ( Projection) இருந்துகொண்டே இருக்கின்றது. எவ்வாறு ஒருவனின் நுதிப்போ அவ்வாறே அவனின் இன்றைய ஒழுக்கம். இப்பேற்பட்ட வரலாற்றியல் சிந்தனையை மிகவும் எளிதாக அதேபொழுது ஓர் சித்திரக் கதையாக நாம் காணத் தருவதே இந்த நான்கு தருக்கள் எழுதும் தருத்தேர்வும் ஆகும்
இங்கு தொகாப்பியர் விளக்கிய குறிப்புக்காலவுணர்வும் (Intentional Time) வெளிப்படுகின்றது. குறிப்புக் காலம் என்றும் அதன் அடிப்படையில் எழும் உலகியல் இயக்கங்களைச் சார்ந்த சுட்டுக்காலம் என்றும் வரும் இருவகைக் காலவுணர்வுகளுள், நான்குத் தருக்கள் எழுதும் தருத்தேர்வு, ஒருவனின் குறிப்புக்கால அறிவினை படம் பிடித்துக் காட்ட, அவனது ஒழுகலாற்றின் மூலங்களையே நமக்குக் காட்டி விடுகின்றது. ஒழுக்கத்தில் ஓர் சிக்கல் இருக்குமேயாகில், அதன் மூலம் அவன் எவ்வாறு இந்த வரலாற்றியல் சிந்தனைய வடித்திருக்கின்றான் என்பதிலிருந்து நாம் ஊகித்துச் சொல்ல முடியும்
இங்கு Heidegger எனும் ஜெர்மானிய தத்துவ மேதையோடு நாம் ஒத்துப் போகின்றோம். “Mind is projective” என்றார் அவர். அதாவது அனைவரும் யாதவதோர் நுதிப்பினை அகத்தே இருத்தியே உலகில் பல செய்கின்றோம். இந்த நுதிப்பு பெரும்பாலும் ஓர் மறைபொருள், சிலர்க்கு தெளிந்த ஒன்றாக இருக்க பலருக்கு அவ்வளவு தெளிவாக இல்லாது குழப்பமான ஒன்றாகவே இருக்கும். இந்த நுதிப்பு தெளிவான உறுதியான ஒன்றாக இருந்துவிட்டால், ஒழுகத்தில் எவ்விதப் பிரச்சினையும் வராது. ஆனால் தெளிவற்ற ஒன்றாயும் பிழையான ஒன்றாயும் இருந்துவிட்டால், ஒழுக்கத்தில் மனதில் பல சிக்கல்கள் தோன்றும். ஒருவகையான மனோவியாதி போன்ற சித்தக் கலக்கமும் உண்டாகலாம.
மேலும் முனைவர் சிவகுமார் அவர்கள் சைவ சித்தாந்த்தில் விளங்கும் மனம் புத்தி அகங்காரம் சித்தம் எனும் நாங்குறுப்பு மனோவியலோடும் இதனை தொடர்பு படுத்தி காண்கின்றார். மேலும் இந்த நான்கு தருக்களும் ஒருவனின் அநாதி பொருளியல் (பிரமாணவியல்) இலக்கணவியல் சாதனவியல் பயனியல் ஆகியக் கூறுகளையும் காட்டுவதாகவும் கூறி இவ்வகையில் எவ்வாறு இது Freud Jung போன்றோர் கூறாத அல்லது கூறுவதற்கு தய்ங்கிய விசயங்கள் இந்த புதியத் தருவின் ஆகமவுளவியல் கூறி இன்னும் சிறப்பான ஓர் கலையாக சுடர்கின்றது என்று தெளிவாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்தினார்.
இனி அடுத்துவரும் கட்டுரைகளில் இவை எல்லாம இன்னும் விரிவாக விளக்கப்படும்
தொடரும்
உலகன்
பாடம் 6: இடுகை 2: தொடரியல் தரு ஆய்வு-2 ஆழ்வுளவியல்
முனைவர் சிவகுமார் மெய்கண்டாரின் ‘சிவஞானபோதம்’ எனும் நூலை மிக சிறப்பாகக் கற்றவர். இதற்கு ஓர் வகையில் யானே பொறுப்பு. பல வகையில் சிவஞான போதத்தைக் கற்று பலருக்கு பாடங்கள் நடத்தியதின் காரணத்தால் இளமையிலேயே முனைவர் சிவகுமார் நல்ல ஓர் மாணவராக விளங்கி, இந்த நூலை நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றார். புதியத் தருத் தேர்வின் ஆகமவுளவியலையும் அவர் தேர்ந்தபோது, சிவஞானபோதத்தில் மெய்கண்டாரால் பரிந்துரைக்கப்பட்ட பல கருத்துக்கள் அறிவியல் முறையில் நிறுத்தப்படக்கூடிய ஆழுண்மைகளாக திகழ்வதைக் கண்டு வியந்து அதனை பயிற்சியாளர்கட்கும் மிகத் தெளிவாகவும் உறுதியாக தெரிவித்தார். இந்திய தரிசனங்கள் எதற்கும் இல்லாத பெருமை சைவ சித்தாந்தத்திற்கு உண்டு என்பது ஓர் பெரியத் திருப்பமே.
எப்படி?
முதலில் இந்த நான்கு தருக்கள் எவ்வாறு சைவ ஆழ்வுளவியலின் அடிப்படையோடு ஒத்து வருகின்றது என்பதை விளக்கினார், மெய்கண்டார் கூற்றுப்படி உள்ளம என்பது மனம் புத்தி ஆங்காரம் சித்தம் எனும் நாங்கு பகுதிகளை அல்லது உறுப்புக்களைக் கொண்டது என்றும் ஆன்மா இவற்றில் ஒன்று அல்ல என்றும் ஆனால் ஆன்மா இந்த உறுப்புக்களை கருவிகளாகப் பயனபடுத்தியே அறிவினை வளர்க்கும் என்று கூறியுள்ளார். போதம் 4ஆம் சூத்திரத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது, காண்க:
எடுத்துக்காட்டு 4.1.2
சிந்தித்தாய் சித்தம் தெளியாதாய்; ஆங்காரம்
புந்தியாய் ஆய்ந்து மனமாகிப் -- பந்தித்து
வெவ்வேறு தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம்
அவ்வேறாம் போது போல் ஆங்கு.
அந்தகரணங்களில் சித்தப்பகுதியில் ஓர் ஐயம் எழ, ஆங்காரப் பகுதி முனைந்து எழுந்து புத்தியாய் நின்று பலவாறு சிந்தித்து பின் உறுதி செய்ய மனத்தோடு ஒன்றித்து உலகை ஆய்கின்றது என்றவாறு இங்கு விளக்கம் செல்லும். ஓர் நாள் எவ்வாறு காலை பிற்பகல் மாலை இரவு என்று மாறுகின்றதோ அதுபோல ஆன்மா இந்த அந்தக்கரணங்களோடு ஒன்றித்து செயல்படுவதின் காரணமாக மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்றாகின்றது ஆனால் ஆன்மா இவற்றில் ஒன்று அல்ல.
இதுவே மெய்கண்டார் விரிக்கும் ஆழ்வுளவியல் ஆகும்
நான்கு உறுப்பு தருத் தேர்வும் இதனையே விளக்குகின்றது.
முதல் ஆணை : மனதிற்கு வருகின்ற பழங்கள் உள்ள மரத்தை எழுதுக
இந்த ஆணை உடன் மனத்தைத் தொழிற்படுத்தி நினைவுக் கூர்தலை மையம்மாக்கிட, கழிந்ததை நினைக்கத் தருவதோடு, அந்தக்கரணங்களில் முதலாகிய மனத்தையும் தொழிற்பட வைக்கின்றது. மறத்தல் நினைத்தல் மீக்கூர்தல் போன்றவை எல்லாம் மனத்தின் செயல்பாடுகள்,
இரண்டாம் ஆணை: உலகில் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே பழங்கள் உள்ள மரத்தை எழுதுக
இங்கு ‘உலகில் உள்ளவாறு’ என்று ஆணை வற்புத்துவதின், மெய்யோ பொய்யோ உண்மை எது என்றவாறு விசாரிக்கத் தூண்டும் வகையில் புத்தி எனும் அந்தக்கரணம் செயல்படுவதை ஊக்குவிக்கின்றது. ஆன்மா புத்தியோடு ஒன்றித்துத்தான் உலகியல் சிந்தனையில் விழும்.
மூன்றாம் ஆணை: உனது சொந்தப் படைப்பாக பழங்கள் உள்ள மரத்தை எழுதுக
இங்கு ‘சொந்தப் படைப்பு’ எனும் ஆணை ஆங்காரத்தைத் தட்டி எழுப்பி தன்னை முற்படுத்தி செயல்படுமாறு செய்கின்றது. ஆங்காரம் எழுந்தாலதான் ‘யான்’ எனும் உணர்வோடு தன்னையே வெலிப்படுத்தும் தரு எழுதப்படும். இதனால் ஆன்மாவின் இன்றைய நிலையை அறிய முடிகின்றது.
நான்காம் ஆணை: உலகத்திலேயே இல்லாத முற்றிலும் கற்பனையான பழங்கள் உள்ள மரத்தை எழுதுக.
இங்கு ‘உலகத்திலேயே இல்லாத ஓர் கற்பனை மரம்’ எனும் ஆணை ஆன்மாவை மிக ஆழத்திற்கே கொண்டு சென்று சித்தப்பகுதியையே தொடவைத்து அகத்தே இருக்கின்ற மிக ஆழமான ஆனால் அதே பொழுது இன்னும் மெய்யாகாத எண்ணங்களை கருத்துக்களை தான் தேற்றியுள்ள சாத்தியங்களை உணரவைத்து அதனை ஓர் தருச் சித்திரமாக வெளிப்பட வைக்கின்றது.
இங்கு தருநபர் தான் எழுதும் தருச் சித்திரங்களின் உள்ளுறைப் பொருளை எல்லாம் மிகத் தெளிவாக உணர்ந்தவராக இருப்பார் என்பதற்கில்லை. பெரும்பாலும் பாதி தெளிந்து பாதி தெளியாதுமாக இவர்களது அறிவு இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த கடைசி D தரு காட்டும் உண்மைகள் ஆகும். ஆயினும் ஒன்று-- ஓர் நல்ல பயிற்சி பெற்ற தரு ஆய்வாளருக்கு, தருநபர் யாதும் சொல்ல வேண்டியதில்லை, இந்த தரு சித்திரங்களே அவர் எப்படிப்பட்ட அனுபவங்களை உடையவர் எதை அவர் மிகவும் விரும்புன்றார் எதை வெறுக்கின்றார், உளச் சிக்கல்கள் இருந்தால் யாவை அவை அவரது எதிர்கால நுதிப்புக்கள் யாவை எதனை நோக்கி அவர் வாழ்க்கை இயங்குகின்றது என்றெல்லாம் உடன் கூற முடியும்
மேலும் இந்த தருக்களே முனைவர் சிவகுமார் பன்முறை வற்புறுத்திச் சொல்லியவாறு ஒருவனது தத்துவ வாழ்க்கையை பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியல் என்றவாறு காணவும் தருகின்றது.
எவ்வாறு இது என்று அடுத்தக் கட்டுரையில் காண்போம்
தொடரும்
உலகன்
பாடம் 6: இடுகை 3: தொடரியல் தரு ஆய்வு-3 : தத்துவ ஞானம்
எல்லா உயிர்களும் மெய்யறிவை யாதாவதோர் வகையைல் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில் எல்லா ஆன்மாக்களும் தத்துவ ஞானிகளே யாவர். சிலர் இத்துறையில் மிகச் சிறந்திட அவர்களே ஆழமான ஞானப் பனுவல்களை எழுதுவோராகிட, பெரும்பாலோர் தமக்கேற்ற முறையில் ஓர் தத்துவ விளக்கம் அல்லது வாழ்க்கை விளக்கம் கொண்டுள்லவர்களாகவே விளங்குகின்றனர்.
அவரவர் கொண்டுள்ள வாழ்க்கை விளக்கத்தை இந்த நான்கு தருக்கள் எழுதும் புதியத் தருதேர்வு விளக்குகின்றது என்பதே முனைவர் சிவகுமார் வற்புறுதிய ஒன்றாகும்.
எப்படி?
ஒவ்வொருவரும் ஓர் நுத்திப்பிற்கு ஆளாகி ஒன்றினை அடைவான் வேண்டி உழல்கின்றனர், பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது பொதுவாக அனைவர் பாலும் இருக்கின்ற இயல்பாகும். விதிவிலக்காக ஒரு சிலரே எதிலும் அக்கரையில்லாது ஆகவே எவ்வித முயற்சியும் இன்றி விளங்குவர்,
பெரும்பாலோர் ஓர் தேடலில் இருக்க, அதன் அடிப்படைகள் தான் என்ன? எனும் போதே இந்த தத்துவ ஞானம் வெளிப்படுகின்றது.
எப்படி?
பிரமாணவியல்
முதலில் ஒவ்வொருவருக்கும் அவர் அறிந்த புரிந்துகொண்ட ஓர் உலகம் இருக்கும். இதுவே அவரது பொருளுலகு ஆகும். ஆங்கிலத்தில் இதனை Ontology என்பர். தொல்காப்பியர் இதனைப் பொருளுலகு என்று கூறி அதனை முதல் கரு உரி என்றவாறு வகுத்துக் கூறுவர். ஒவ்வொருவருக்கும் அவரது அனுபவத்திற்கு வந்திருக்கின்ற ஓர் பொருளுலகு அதனது உண்மையான பொருளுலகு இருக்கும். இந்த அனுபவ பொருளுலகு பொய் அல்லது கற்பனை என்றால அவரால இயல்பாக வாழமுடியாது. அவர்கள் சித்ப்பிரமை போன்ற மனோவிகாரங்கள் உள்ளவர்களாக இருப்பர்,
ஒருவரின் இந்த உண்மை உலகே பிரமாணவியல் ஆகின்றது.
ஒருவர் தருத் தேர்வில் A தருவை எழுதும்போது அவரது அனுபவ உலகை, அவரது பிரமாணவியலை அறிய வருகின்றோம். மனதெனும் அகக்கரணத்தின் செயல்பாட்டால் அவர் அதுவரை அறிந்துள்ள பழகியுள்ள உலகு யாதென்று நாம் அறிய வருகின்றோம்
இலக்கணவியல்
இனி இரண்டாவது ஆணை வழி தருவினை எழுதும் போது அவர் அறிந்துள்ள பொருளுலகில் அவரைக் கவர்ந்த பொருளின் இலக்கணங்கள் கூறப்படுவதின், இங்கு இலக்கணவியல் கிடைக்கின்றது. ஓர் இளம்பெண் B தருவில் கூரான இலைகளை உடைய தென்னை மரத்தை எழுதினால், நாத தத்துவத்தை விளக்கும் இது அவள் விரும்பும் ஆண் மகனைக் காட்டி நிற்க, கூரான கீற்றுகள் அந்த இளைஞன வீரனாக இருப்பதாக அவள் இலக்கணங் கண்டுள்ளாள் என்பதையும் காட்டி நிற்கின்றது.
சாதனாவியல்
இனி இதற்கு அடுத்தாற்போல் எழுதப்படும் C தரு, சுயப் படைப்பாக இருக்க, தரு நபரின் சாதனாத்திறத்தை விளக்குவதாக இருப்பதின், யாது யாது அவரால் ஆகும், அவரது திறமைகள் தான் என்ன என்பதை விளக்குவதாக இருக்க, இது சதனாவியல் ஆகின்றது. தரு நபரின் படைப்பாற்றல் திறமைகளை வெளிப்படுத்துவதாக இத்தரு அமைகின்றது
பயனியல்
இனி நான்காவது D தரு கற்பனைத் தருவாக உலகத்திலேயே இல்லாது கனிமரம் என்பதின். தரு நபரின் எதிர்கால நுதிப்புக்களை வெளிப்படுவதின், இது பயனியல் ஆகின்றது. இதுவரை தான் கண்ட உலகு, அந்த உலகில் இருக்கின்ற பொருட்களின் இலக்கணங்கள், தான் இதுவரை கற்றுள்ள சாதனங்கள் என்பவை தருநபருக்கு ஓர் நுதிப்பைத் தர, அதுவே இதுவரை அவர் வாழ்கையில் நடந்ததின் பயனாக அமைய இதுவே பயனியலாகின்றது
நுதிப்பும் உபதேசமும்:
இனி தொடர்ந்து செல்வதற்கு முன்பு, ஒருவனின் எதிர்கால நுதிப்பு வெளிப்படும் D தரு இதனால உபதேச கலைக்கு மிகவும் தேவையான ஒன்றாகின்றது என்பதைப் பற்றி ஓர் சிறிது விளக்குவோம்.
இங்கு ஓர் சங்கிலிச் தொடர்ச்சி இருக்கின்றது என்பதை நம்மால் காண முடிகின்றது. முதல் தருவாகிய A யினால் தான் இரண்டாம் தருவாகிய B உம். அதன் காரணமாக மூன்றாம் தருவாகிய C உம் , அதன் காரணமாக நான்காம் தருவாகிய D உம் அமைகின்றன. இங்கு C தரு இன்று நடப்பதைக் காட்ட அதன் விளைவு யாதென்று D தரு காட்ட, அந்த வரவிருக்கும் எதிர காலத்தை மாற்ற வேண்டுமெனின், ஓர் உத்தி நமக்குக் கிடைக்கின்றது. காட்டாக ஒருவன் D தருவில் சிறையில் விழுந்து நோய்வாய்ப் படுவான் என்று வந்தால், அதற்கு காரணம் அவன் இன்று அதாவது C தருவில் செய்கின்ற காரியங்களேயாக, அவற்றை அவன் உடன் மாற்றிவிட்டால் அந்த பொல்லாத எதிர்காலம் மாற்றம் காணும். அவன் சிறைக்குப் போகாது தப்பித்து விடும் சூழ்நிலைகள் பிறக்கலாம்
இப்படிப்பட்ட உபதேசங்கள், எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை இன்றே அறிந்து அது பொல்லாததாக தீயதாக் துன்பம் தருவதாக இருந்தால், இன்றைய ஒழுக்கங்களை மாற்றுவதின் வழி அதனை தவிர்க்கலாம் என்பது இங்கு நடக்கும் சித்தராரூடம் போன்றவை யாகும்.
இதனையே ஆங்கிலத்தில் Hermeneutic Counselling என்று கூறி அதனை வளர்த்துள்ளோம்
இவற்றைப் பற்றி பிறகு இன்னும் விரிவாக
தொடரும்
உலகன்
பாடம் 6: இடுகை 4: தொடரியல் தரு ஆய்வு-4: முத்தி முன்னறிவு
இந்த நான்கு தருக்களை எழுதக் கோரும் புதியத் தருத்தேர்வு, சைவ சித்தாந்தத்தின் ஓர் புதிய வடிவாக எழுவதை காண்கின்றோம். தொடகத்தில் இவை எல்லாம் புலனாகவில்லை. ஆனால் இக்கலை வளர வளர, இந்த உண்மை தெளிவாயிற்று. இதனால் மெய்கண்டாரின் சிவஞானபோதம் ஆகமவுளவியலிற்கு ஓர் தனிச் சிறப்புடைய நூலாயிற்று.
இதில் இன்னொரு கூறையும் இங்கு விளக்க இருக்கின்றோம். நான்கு தருக்களை எழுதும் நபர், தானே ஓர் குறு சங்காரகாரணனாக இருக்கின்றார் என்பதும் ஒரு தருவிலிருந்து இன்னொரு தருவிற்கு பெயர்க்கும் போது அந்தமாதித்தல் எனும் செயலைச் செய்தே முன்னேறுகின்றார் என்றும் இதில் கடைசியாகிய D தருவில் எழுதப்படுவது ஓர் நுதிப்பு ஆகவே எதிரது போற்றலாக அமைந்து விட, அதுவே அவரது முத்தி முன்னறிவின் வெளிப்பாடு என்றும் ஆகின்றது என்பதும் இந்த புதிய தருத்தேர்வின் தனிச் சிறப்பாகும்.
Episodization எனும் நிகழ்ச்சி பகுப்பு
எழுதப்படும் ஒவ்வொருத் தருவும் காலக் குறிப்போடு கூடிய நிகழ்ச்சி தொகுப்பாகும். இந்த நான்கு தொகுப்புக்களும் ஓர் அதிகார முறைமையைக் கொண்டுள்ளது. முதலது A , அடுத்தது B அடுத்தது C அடுத்ததும் கடைசியதும் D என்றவாறு இந்த அதிகார முறைமை செல்லும். எவ்வாறு இப்படிப்ப்ட்ட நிகச்சிகளின் குழூஉப் பகுப்பு நடக்கின்றது?
இதைத் தான் ஆங்கிலத்தில் Episodization என்று கூறுகின்றோம்
தரு நபர் இந்த தருக்களை எழுதும்போது ஒவ்வொருத் தருவும் ஓர் நிகழ்ச்சித் தொகுப்பினை விளக்கும் வகையில் அவற்றை வகைப்படுத்திக் கொடுக்கின்றார். இங்கு இந்த வகைப்படுத்தலில் அமையும் ஆன்மவினையே ‘அந்தமாதி
செய்தல்’ என்கின்றோம் ( terminating-initiating). அதாவது A தருவை எழுதும் போது, அதுவரை தனக்கு நடந்ததை எல்லாம் மீக்கூரி வரிசை படுத்தி இறந்தது அல்லது நடந்துவிட்டது என்று கணித்து தொகுத்து அவற்றை ஓர் பெருநிகச்சி ( episode) ஆக்கிட, அங்கு அந்தித்தல் ஆகிய முடிததலாகும். அதே சமயத்தில் ஆதித்தல் எனும் ஓர் புதிய நிகச்சியைத் தொடங்களும் நடப்பதை காண்கின்றோம். பல நிகச்சிகளைத் தொகுத்து அவற்றை ஒன்றாக்கி ஓர் பெருநிகழ்ச்சியாக முடிக்கத்தால்தான், அடுத்ததாக பிறிதொரு பெருநிகழ்ச்சியை தொடங்க முடியும்.
ஓர் நூலை எழுதும் போது படலம் படலமாக வகுத்து முதல் படலத்தை எழுதி முடித்தால் தான் இரண்டாம் படலத்தைத் தொடங்க முடியும். அதுபோலத்தான் இதுவும். ஓர் நெடியக் கட்டுரையை பத்தி பத்தியாகப் பிரித்தலும் இதுபோன்றதே யாகும்.
இனி தொல்காப்பியர் மரபியலில் நூலுத்திகளை விரிக்கும் சூத்திரத்தில், ஓர் நுனித்தகு புலவர் எழுதிய நூலை பழதற புரிந்துகொள்ள, அந்த நூலின் அதிகார முறைமையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறுவதை இங்கு நாம் நினைவு கூர வேண்டும்.
தருநபர். தான் தன்னைப் பற்றி கொண்டிருக்கின்ற புரிந்துணர்வை, நான்கு தருக்கள் விளங்கும் இந்த தருத்தேர்வில் ஓர் நூலாகவே அல்லது காட்சி காட்சியாக மாறும் ஓர் நாடகமாகவே நம் முன் நிறுத்துகின்றார். ஆயினும் சொற்களாலன்றி தருச் சித்திரங்களாக இருக்க இவற்றை நாம் தக்க முறையில் பெயர்த்து அறியக் கடமைப்பட்டுள்ளோம்
நாட்டமும் நோக்கமும்
இங்கு D தரு முடிவானது என்று அதுவே தருநபர் கொண்டிருக்கும் நுதிப்பைக் காட்டும் என்று கண்டோம். இது ஓர் இளம்பெண் தன் திருமணத்தை எதிர்நோக்கி நிற்பதாக, ஓர் இளைஞன தான் தேடித் திரியும் ஓர் பணி கிடைப்பதாக ஓர் மாணவன் தான் மிக சிறப்பாக தேர்வில் தேர்ச்சி பெறுவதாக ஓர் அரசியல்வாதி தான் இச்சிக்கும் ஓர் பதவி கிடைப்பதாக இன்னும் பலவாறும் இருக்கலாம். இதற்கு முன் வரும் தருக்களும் அதன் நிகழ்ச்சிகளும் இந்த D தருவின் பொருளை மெய்யாக்குவதற்காகவே இருக்கும் ஒன்றாகும். இதற்கு முன் நடந்த அனைத்தின் பயன் இந்த முடிவான D தரு காட்டும் பொருளேயாகும்.
இங்கு அந்த உய்ரின் ஓர் இயக்கம் இருக்கின்றது, இதனை முடித்து இது என்றவாறு இயங்கி இப்பொழுது D எனும் தருவில் காட்டப்படுவதற்காக காத்திருக்கும் நிலை.
ஆக முதல் தருவிலிருந்து கடைசித் தருவரை ஓர் நாட்டம் ( intention) இருப்பது தெளிவு, அந்த நாட்டம் D தருவில் வெளிப்பட்டு நிற்பதும் ஆய்வில் நாம் காணக்கூடியது. இந்த நான்கு தருக்களில் காட்டப்படும் உயிரின் இயக்கம் ஓர் நுதிப்பினை மெய்யாக்கும் நோக்கம் உடையது.
எவ்வாறு இப்படிப்பட்ட நுதிப்புகள் ஒவ்வொரு உயிரின் இயல்பாக இருக்கின்றது? என்ற கேள்வியை எழுப்பினால், எல்லா உயிர்களும் இயல்பாகவே ஓர் முடிவான நாட்டத்தை உடையனவாக அதனை அடைவதற்கே இவ்வாறெல்லாம் இயங்குவதாகத் தெரிகின்றது.
இந்த முடிவான நாட்டமே முத்தி அல்லது வீடுபேறு ஆகும். ஆயினும் இடைப்பட்ட நுதிப்புக்கள் முத்தி அடைய நினைப்பது அல்ல ஆனால அதனை நோக்கி நகர்வதாக இருக்க, இது முத்தி முன்னறிவு என்ற ஓர் நிலையாகும் எல்லா ஆன்மாக்களையும் இயங்க வைப்பது பற்பல செய்யத் தூண்டுவது இந்த முத்தி முன்னறிவே யாகும்
இப்படிப்பட்ட ஓர் விளக்கத்தை ஐரோப்பியர்களால் தர முடியாது. அவர்கள்தம் வாழ்க்கை விளக்கத்தில் முத்தி என்ற கருத்தே இல்லை.
இதனை இன்னும் விளக்கமாக அடுத்து விரிப்போம்
தொடரும்
உலகன்
பாடம் 6: இடுகை 5: தொடரியல் தரு ஆய்வு 5: கால அகலம்
ஆகமவுளவியல் இந்திய வரலாற்றில் அதிலும் குறிப்பாக இந்து சமய வரலாற்றில் ஓர் பெரும் புரட்சியை செய்து வருகின்றது. இந்துச் சிந்தனை சுருதி ஆதிக்கச் சிந்தனை யாகும். எதற்கெடுத்தாலும் வேதங்களையும் ஆகமங்களையும் அதனைச் சார்ந்தெழுந்த பிற சாத்திரங்களையும் சப்தம் என்றோ ஆப்த வாக்கு என்றோ ஆகம பிரமாணம் என்றோ கூறி அதனால் அது உண்மையாகும் என்றவாறு நையாயிகச் சிந்தனையிலேயே அடங்கி நிற்பர். உண்மை உலகில் இருக்கின்றது அந்த உலகிற்கேச் சென்று உண்மையை அறியவேண்டும் என்ற தொல்காப்பிய மரபு இறந்துவிட்ட ஒன்றாக இருக்கும் போது, தருத்தேர்வை மையமாக கொண்ட ஆகமவுளவியல், சுருதிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கள ஆய்வில் இறங்கி ஒருவன் உள்ளபடியே எவ்வாறு எவ்வாறெல்லாம் சிந்திக்கின்றான் என்று அறியத் தருவதால் இது ஓர் அறிவியல் துறை ஆகின்றது, ஆன்மீகம் அறிவியல் ஆக்கப்படுகின்றது.
சுருதி ஆதிக்கத்தை உடைத்தெரிந்து உலகின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வருகின்றது. உண்மை சாத்திரங்களில் இல்லை உலகில் தான் உண்டு என்று மீண்டும் மானிடச் சிந்தனையை உலகிற்கேக் கொண்டு வருகின்றது,
இவ்வகையில் மேலே கூறியவாறு நான்கு தருக்கள் எழுதவைக்கும் புதியத் தருத் தேர்வு, ஒருவனின் வாழ்க்கை புரிவினையே படம் பிடித்துக் காட்டிவிட, அவனது சிந்தனை ஓட்டங்கள எப்படி இருக்கின்றன, அவனது அடிப்படையான நுதிப்பு எப்படி இருக்கின்றது என்று அறியத் தர, உலகில் மனித இயல்பு மாந்தர்களின் ஆளுமை எல்லாம் எப்படி இருக்கின்றது என்று நமக்கு அறியத் தருகின்றது. மக்கள் உள்ளபடியே எவ்வாறு சிந்திகின்றார்கள் எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றார்கள், எதை எதை இச்சிக்கின்றார்கள் என்ரெல்லாம் நமக்கு அறியத் தருகின்றது. வேதாந்திகள் போல உலகம் பொய் என்று சிந்திப்பார் சித்ததப் பிரமை பிடித்தவர்களாகத் தான் இருக்கின்றனர். சாதாரண மக்கள் அனைவருக்கும் இந்த உலகு உண்மையே, அதன் உனர்வின் அடிப்ப்டையிலேயே அவரகள் இயங்குகின்றார்கள், வாழ்கின்றர்ர்கள்
இனி இந்தத் தருத் தேர்வு வெளிப்படுத்தும் சில ஆளுமைக் கூறுகளை( personality factors) விளக்க இருக்கின்றோம்
கால அகலம்
ஒருவன் தன் வாழ்க்கையை நோக்கும்போது, அதனை ஓர் வரலாறாக காணும் போது எந்த அளவிற்கு அவன் முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்கின்றான்? இவை குறுகியும் இருக்கலாம் நீண்டும் இருக்கலாம். இந்த குறுக்கம் நீட்டம் ஆகியவையே இங்கு ‘கால அகலம்’ என்கின்றோம்
சிலரின் முன்னோக்கம் ஒர் சில நாட்களுக்கு மேல் அவர்களது எதிர்காலத்தை குறிக்க முடியாது. அதேப் போலத்தான் அவரகளது பின்னோக்கலும். நடந்ததை மீக்கூரும்போது ஒருசில நாட்களுக்கு முன்பு நடந்ததையே மீக்கூர முடியும்.
இதற்கு மாறாக சிலர் மிக மிக நீண்ட முன்னோக்கில் தமது எதிர்காலத்தை ஒருவாறு கணித்து வைத்திருப்பார்கள்.
ஆனால் தருத்தேர்வில் இதனை எப்படி கண்டு பிடிப்பது?
எழுதப்படும் தருக்களின் பொருள் இதனை தெற்றென விளக்கிவிடும். ஆனால் தருக்களைப் பார்த்த உடனேயே இந்த வேறுபாடுகளை அறியவும் முடியும்.
இதற்கு இந்த நான்கு தருக்கலையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு காண வேண்டும். ஒருவன் எழுதும் A B C D எனும் தருக்களின் உருவ ஒற்றுமையை நாம் ஒப்பிட்டுக் கண்டால, கால அகலத்தை ஒருவாறு கணிக்க முடியும். இந்த தருக்களை ஒன்றோடொன்று ஒப்பிடும் போது Gestalt Psychology என்படும் துறையின் பல கண்டுபிடிப்புக்களை நாம் பயன்படுத்ததலாம் என்று முனைவர் சிவகுமார் கூறி பல பயிற்சிகளையும் அளித்தார். அங்கு இன்னும் கண்டுபிடிக்காத சில கூறுகளையும் அகப்படுத்தி நாம் ஆயலாம. காட்டாக யந்திரங்கள் இந்த ஐரோப்பிய முழுசியல் ( Gestalt) துறையில் இல்லை, ஆனால் அதனை இங்கு அகப்படுத்தியே தருக்களிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை கணிக்க முடியும்
இதில் இந்த நான்கு தருக்களும் ஒன்றோடொன்று மிகவும் ஒத்துப்போய் வேற்றுமைகள் அதிகம் இல்லாது இருந்தால், உடன் நாம் தருநபரின் கால அகலம் மிகவும் குறுகலானது என்றும் ஆகவே அவர் தன் எதிரகாலத்தை பற்றி சிந்துக்கும்போது மிகக் குறிய அளவிலேயே சிந்திப்பார் என்றும் தெரியவருகின்றது.
இத்தகையர் தொலை தூர நோக்கினர் அல்ல. குறுகிய நோக்கினர், தினம் தினம் எப்படியோ வாழ்ந்தால் போதும் என்றிருப்பவர்கள் ஆகும். இதனால் இவர்கள எளிதில் மாறக் கூடியவர்களாகவும் சந்தர்ப்பவாதிகளகவும் இருப்பர் என்பதாம்.
இப்படி இன்னும் பல இருக்கின்றன. எல்லா தருக்களும் இயற்கையாக இருப்பது, C D தருக்களில் யந்திரஙகள் வந்திருப்பது, மேலும் இதே தருக்களில் தெய்வங்கள் போன்ற கனாவடிவங்கள் வந்திருப்பது போன்றவை எல்லாம் தரு நபரின் ஆளுமைகளைக் காட்டி நிற்கும்.
இவை எல்லாம் வரவிருக்கும் பாடங்களில் விளக்கப்படும்
இக்கட்டுரையோடு பாடம் 6 ஓர் முடிவிற்கு வருகின்றது
தொடரும்
உலகன்
பாடம் 7: இடுகை 1: தொடரியல் தரு ஆய்வு 6 : படைப்பாற்றல்
தமிழ் பண்பாட்டு வரலாற்றில் ஓர் பெரும் சிந்தனைப் புரட்சியை அறிமுகப்படுத்தி வளர்த்து வருகின்றது தருத் தேர்வை மையமாகக் கொண்ட ஆகமவுளவியல். தருத் தேர்வு என்பது ஜெர்மனியில் தோன்றினாலும் அது அடிப்படையில் மாற்றப்பட்டு நான்கு தருக்கள் எழுதும் ‘புதுத் தருத் தேர்வு” என்றாகி மக்களின் உள்ளத்தை அகழ்ந்தெடுத்து ஆயும் ஓர் கருவியாக இது வளர்க்கப்பட்டுள்ளது, இவற்றில் நான்கு தருக்களும் எவ்வாறு ஒன்றோடொன்று ஒற்றுமைப் பட்டும் வேறுபட்டும் விளங்குகின்றன, அது எப்படிப்பட்ட உளப் பண்புகளை காட்டி நிற்கின்றன என்பதை கள ஆய்வில் கண்டறிந்த வண்னம் விளக்குவதே இந்த கட்டுரைத் தொடர்களின் நோக்கம்
இந்த 7ஆம் வகுப்பு கடந்த 22-2-14 சனிக்கிழமை அன்று முனைவர் சிவகுமாரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த தருத்தேர்வின் வழி யான் அறிய வந்த உள்ளத்தின் ஆழுண்மைகளை எனது அழிவிலுண்மை நூலில் விளக்கியுள்ளேன். அதனை விடாது பாடங் கேட்டு வரும் முனைவர் சிவகுமார் அவர்கள் அதனையும் அகப்படுத்தி புதுமையாகவும் பல கூறுகளை அறிமுகப்படுத்தி இந்த பாடங்களை நடத்தி வருகின்றார். அதன் ஆழத்தையும் நுட்பத்தையும் உண்மையயையும் கண்டு கலந்துகொண்டவர்கள் அனைவரும் வியந்து பாராட்ட, எனக்கு தமிழ் பண்பாட்டின் அடிப்படைகளை விளக்கும் ஓர் புதியக் கலையை படைத்துவிட்டோம் என்ற எண்ணம் உண்டாக நான் பெரிதும் மகிழ்ந்தவாறு அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன்
முனைவர் சிவகுமார் அவர்கள் இடை இடையே Freud Jung போன்றார் கருத்துக்களோடு, Gestalt Psychologists எனப்படும் அவர்களோடும் ஒப்பிட்டு தன் கருத்துக்களை விளக்கிச் சென்றார். அது பொழுது எவ்வாறு ஆகமவுளவியல ஐரோப்பிய ஆழ்வுளச் சிந்தனைகளோடு ஒன்றுபட்டும் வேறுபட்டும் நிற்கின்றது என்பதும் தெளிவாக்கப்பட்டது
படைப்பாற்றலை அளத்தல்
புதுமைகளைப் படைக்கும் திறமையே இங்கு படைப்பாற்றல் எனப்படுகின்றது. ஏன் சிலர் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருக்க, பெரும்பலோர் அப்படி இல்லை என்பது உளவியல துறையில் நல்ல ஓர் கேள்வி. ப்ராய்ட் போன்றாரும் Cognitive psychologists எனப்படும் புத்தியியல் உளவியல் துறையினரும் இதற்கு பலவாறான விளக்கம் அளித்துச் சென்றுள்ளனர்.
ஆகமவுளவியல் தனக்கே உரிய ஓர் முறையில் இதனை விளக்கி செல்கின்றது.
Sequential Structural Analysis எனப்படும் தருத் தொடரியல் அலசலில் இந்த பண்பினை ஓரளவு அளந்து நிறுத்த முடியும்.
எப்படி?
நான்கு தருக்களை எழுதக் கோரும் இந்த புதியத் தருத் தேர்வில், A B C D என்றவாறு வரும் இவற்றில் இதே வரிசை முறையில் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தால் படைப்பாற்றலை ஓரளவு கணித்து விடலாம்.
இவற்ரை ஒன்றோடொன்று வரிசை முறையில் ஒப்பிடும்போது சிலர் அத்க மாற்றம் இலாதே தருக்களை எழுதுவர். தரு A ஐ அடுத்து வரும் Bயுடன் ஒப்பிடும்போது அதிகம் மாற்றமில்லாது இருக்கும். இதேப் போலத்தான் C D எனும் தருக்களும். அப்படியே சில மாற்றங்கள் இருந்தாலும் பெரிதும் மாறுபடாதே இருக்கும். Dயைப் பார்தால் C யைப் பார்தாற்போலவே இருக்கும்
இப்படி ஆணைகள் வேறுபாட்டாலும் அதற்கேற்ப வெவ்வேறு தருக்களை எழுதமுடியாது ஏறக்குறைய ஒரே வகையான தருக்களை எழுதுவோர், படைப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகுவர்,
ஆயினும் இந்த தொடர்பில் வெவ்வேறு ஆழத்திற்கு சிந்தனையை இட்டுச் செல்லும் இந்த ஆணைகட்கு ஏற்ப, வேறு வேறு தருக்கலை எழுதி, முன்னதிற்கும் அடுத்ததற்கும் அதிக ஒற்றுமை இல்லை, வேறுபாடுகளே மிகுதி என்றவாறு புதுப் புது தருக்களாக ஒருவர் எழுதினால், அவர் படைப்பாற்றலில் சிறந்து விளங்குகின்றார் என்று கூற முடியும்
இத்தகையோர் தாம் முன்பிருந்த மனநிலையிலிருந்து அல்லது சிந்தனை ஓட்டத்திலிருந்து கழன்று ஓர் புதிய மனநிலைக்கு அல்லது சிந்தனை ஓட்டத்திற்கு பெயரும் பண்புடையவர் என்று காட்டும்
படைப்பாற்றல் என்பது மிகவும் சிக்கலான ஓர் உளவியல் பண்பு. இவ்வாறான தருத் தேர்வின் வழி இந்த பணபைக் கண்டு பிடித்துச் சொல்வது ஒருவகையான கற்பனை திறத்தை, தரு நபர் ஆணைகட்கு ஏற்ப ஆகவே பொதுவாக சந்தர்ப்ப சூழ்நிலைகட்கு ஏற்ப மாறக்கூடிய திறத்தவர் என்றும் காட்டும்
இனி இந்த பண்பாடு வெற்று ஓர் குணவியல் பண்பாக (qualitative aspects) காண்பதொடு எண்மை அலசலாகவும்( numerical analysis) காணலாம. இதற்கு வெவ்வேறு தருக்களிடையேக் காண வரும் ஒற்றுமை வேற்றுமைக் கூறுகளை தக்க முறையில் துல்லியமாக அளக்கும் வகையில் கணக்கிட்டு எண்மை படுத்த புள்ளியியல் வகையில் மிகத் துல்லியமாக அலசவும் முடியும்.
இனி இத்தகையோர் வாழ்கையில் பழமைவாதிகளாக இருப்பது போய் புதுமையை வரவேற்பவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத் திறன் படைத்தவர்களாகவும் புதுமை விரும்பிகளாகவும் இருப்பார்கள்
தொடரும்
உலகன்
If we go by a hypothesis that c d reflect more of dream process, could be expected different from normal reasoning concious or sub...this would also make the presentation innovative or different or twisted when this is not happening mat be the person strongly affected or influenced with single Mind as in depression or the snake which considers frontal attack or mesmorized by movements and can be caught from behind or such fixation of Mind or thoughts...as I suppose
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (33) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
...................................![]()
__,_._,___
பாடம் 7: இடுகை 2: தொடரியல் தரு ஆய்வு 7 : ஆளுமையும் ஆழமும்-1
ஆளுமை என்பது ( personality) உளவியல் துறையில் மிக விரிவாக ஆராயப்படும் ஓர் விசயமாகும். மேற்கில் Theories of Personality என்றோர் பெருந்துறையே இருகின்றது. இங்கு தருத்தேர்வை மையமாகக் கொண்ட ஆகமவுளவியல் இந்த மானிட ஆளுமையை சைவ மரபினை மீட்டெடுக்கும் வகையில் ஆயமுடிகின்றது.
இது மீண்டும் தொடரியல் ஆய்வு வழி வெளிப்படும் ஓர் பண்பு ஆகும்.
நாம் ஏற்கனவே கூறியுள்ளதைப் போல, நான்கு தருகளை வெவ்வேறு ஆணைகள் வழி எழுதக் கோரும் இந்த புதியத் தருத் தேர்வில் C யிலும் D யிலும் பலரிடம் யந்திரங்கள் தெய்வ வடிவங்கள் ஐந்தலை நாகம் போன்ற புராணவுருக்கள் போன்றவை எழுதப்படுவதைக் காண்கின்றோம்,
ஆனால் பெரும்பாலோர் நான்கு தருக்களிலும் இயற்கையான தருக்களையே எழுத ஏன் சிலர் யந்திரம் போன்ற தருக்களை எழுதுகின்றார்கள், அது எதைத்தான் உணர்த்துகின்றது என்ற கேள்வி தொடக்கக் காலத்திலேயே எழுந்துவிட்டது.
ஆளுமை ஆழம்
இதற்கு விளக்கமாக பல கருத்துக்களைக் கூறலாம். முனைவர் சிவகுமார் திருமூலரின் திருமந்திரம் தொடங்கி பலவாறு அலசப் பட்டுள்ள அவத்தைப் பேதங்களை கொண்டு வந்து ஓர் நல்ல விளக்கம் தர முயன்றார். இதனை தொடர்புடைய பல்வேறு பார்வைகள் வழியாகவும் விளக்கலாம்.
யார் நான்கு தருகளையும் இயற்கையான தருக்களாகவே எழுத்கின்றார்களோ அவர்கள் சாதாராண அனைவருக்கும் பொதுவான விழிப்புணர்வின் சாக்கிராவத்தையில் விழுந்து அதனின்று விடுபட்டு ஆழஞ்சென்று சொப்பனாவத்தை சுழுத்தி துரியம் துரியாதீதம் போன்ற மேலான அவத்தைகளை அனுபவிக்க முடியாதிருப்ப்வர்கள் ஆகின்றனர்.
பொறிலிய ஆளுமை (உலகாயத ஆளுமை)
இனி சாக்கிராவத்தை என்பது ஐம்புலன் நுகர்ச்சியாகிய பொறிலியப் பார்வையிலேயே அடங்கி நூலியப் பார்வை நுதலியப் பார்வை போன்ற ஆழப்பார்வைக்குப் பெயராதிருப்பதின், இவர்கள் பொறிலியப் பார்வையிலேயே கட்டுண்டவர்கள் ஆகும். இதனால் இவர்களது ஆளுமை பொறிலிய ஆளுமை என்றோ அல்லது உலகாயத ஆளுமை என்றோ கூற முடியும்
இத்தகைய ஆளுமையர்கள் ஆழமில் ஆளுமை உடையவர்கள் ஆகும்
இவர்கட்கும் ஏனையோருக்கும் நூலியப் பார்வை இருக்கும் ஒன்று எனினும் அதனை பெரும்பாலும் புறக்கணித்தே வாழ்வர். மேலும் இவர்கட்கும் மற்றும் ஏனையோரும் உறங்கும் போது அமையும் சொப்பனாவத்தை உள்ளபோதிலும், இப்படிப்பட்ட கனவு சார்ந்த விசயங்களில் நம்பிக்கை இல்லாது பிழையாக புத்தியின் விகாரங்கள் என்றே கூறி நகையாடுவர்.
நூலியப் பார்வை இருந்தும் அதனைப் போற்றாது போக, இவர்கட்கு சித்துப் பொருட்கள் தெய்வங்கள் போன்றவை உண்டெனும் அறிவு இல்லாதே இருக்கும். அப்படியே உண்டென அறிய வந்தாலும் உடன்படாது மறுத்தே நிற்பர்
பொறிலிய அறிவியலாகிய விஞ்ஞானம் போன்றவற்றில் நாட்டமுடையவர்களாக இருக்கலாம். ஆனால் தெய்வ நம்பிக்கை போன்ற விசயங்களில் பெரும்பாலும் அவநம்பிகையே விளங்கும்
ஆனால் இங்கு வற்புறுத்த வேண்டிய விசயம், இப்படிப்பட்ட அலசல் பெரும்பாலோருக்கு ஒத்து வரும் ஒன்று எனினும், எல்லாருக்கும் அல்ல. மற்ற மற்ற தருப் பண்புகளையும் நாம் கருத வேண்டும்
இனி புராணவுருக்களும் யந்திரங்களும் தருக்களில் தோன்றினால், அது எப்படிப்பட்ட ஆளுமையைக் குறிக்கும்?
இதனை அடுத்துக் காண்போம்
உலகன்
தொடரும்
பாடம் 7: இடுகை 3: தொடரியல் தரு ஆய்வு 7 : ஆளுமையும் ஆழமும்-2
மேலே சாக்கிராவத்தை எனும் விழிப்புணர்வில் கட்டுண்டு அதற்கு மேல் அல்லது ஆழம் செல்லா மாந்தர்கள் ‘ஆழமில் ஆளுமை’ அல்லது ‘உலாகத ஆளுமை” உடையவர்கள் என்று கண்டோம்
இனி அடுத்ததாக புராணவுருக்கள் விளங்கும் தருக்கள் எழுதுவோரின் ஆளுமையைப் பற்றி நாம் இங்கு விசாரிக்க இருக்கின்றோம்
புராணவுருக்கள் என்பன ஐந்தலை நாகம், சாதாரண பாம்பு பலவகையான தாமரை மலர்கள் மரத்தில் ஊஞ்சல் கட்டுவது, குருவிக் கூடு கட்டுவது மரத்திற்கு பதிலாக அல்லது அருகே ஓர் பெரும் வீடு எழுதுவது தேவைதல் அரக்கர்கல் அல்லது அரக்கத் தனமை மிருகங்கள் போன்ற கனவுகளில் புராணங்களில் வரும் உருவங்களே ஆகும். இவை பெரும்பாலும் இரவில் நலமே ஆழ உறங்கும் போது கனவுகளாக வெளிப்படுபவை.
வியப்பு என்னவென்றால் இத்தகைய கனாவுருக்கள் தருத்தேர்வில் அதிலும் குறிப்பாக C D தருக்களில் வருவதுதான்
இதனை முதல் முதலில் கண்டுபிடித்தபோது நான் பெரும் வியப்பில் ஆழ்ந்து ஏன் இப்படி என்றேல்லாம் சிந்தித்துத் தெளியத் தொடங்கினேன்
முதலில் இது உறங்கும்போது அல்லாது விழிப்பு நிலையிலேயே ‘சொப்பானவத்தை’ எனும் அவத்தையின் சில உடகிடக்கைகளை வெளிப்படுத்துகின்றது என்னும் உண்மையே யாகும். இது கணா உணர்வுகளைப் பற்றி Freud-உம் அவரைச் சார்ந்தோரும் கூறும் கருத்திற்கு வேறாக மாறாக பிறிதொரு கருத்து முன்மொழிகின்றது. இதுவும் பல ஆழ்வுளத் துறைகளில்ல் பகரப் படும் ஓர் கருத்துக்களோடு ஒத்து வருகின்றது.
Frued அவர்கள் நமக்குத் தோன்றும் பொல்லாத அருவருக்கத்தக்க அதிலும் குறிப்பாக கைக்கிலை பெருந்தினை சார்ந்த காமவுணர்வுகளை அறிவு ஏற்ருக்கொள்ள் பெரிதும் தயங்கை அதனை புதைக்கவே அவ்வுணர்கள் புதையுண்டு ஆழத்ஹ்டில் படிய பிறகௌ உறைங்கௌம் போது, தற்காப்பு யந்திரங்கள் செயலிழந்து கிடக்க அவை கனவுகலாக் வெளிப்பட்டு உணர்வவகின்றது என்பர்.
ஆனால் இங்க் அப்படி நாம் விளக்கவிலை. நம் மூளையில் அல்லது நரம்பு மண்டலதில் கனவு இயக்கங்கள் என்றும் நடந்து கோண்டே இருப்பவைதான். பெரும்பாலும் அவை நம் உணர்வை எட்டுவதில்லை. ஆனால் உறங்கும் போது சில சமயங்களில் உணர்வில் பட அது நமக்கு ஓர் கனவாக அனுபவமாகின்றது
சிலருக்கு உறங்கும்போது மாத்திரம் அல்லாது விழிப்பு நிலையிலும் இந்த கணாபோன்ற ஆனால் காட்சி அனுபவங்கள் மெய்யாகும். பாரத்த பண்பாட்டில் இது பண்டே அறியவந்துள்ள ஒன்றாகும். சமணர்கள் இதனை ஞான பரியாயக் காட்சிகள் என்பர். சைவர்கள் இதனை யோகக் காட்சி என்றும் விஞ்ஞானக் காட்சி என்றும் கூறுவார்கள்
ஆக பொதுவாக இத்தகைய அனுபவங்கள் மறைபொருள் அனுபவங்கள் (experiencing the unconscious) என்று கூறலாம்
மறையுணர்வு ஆளுமை
ஆக யார் இந்தத் தருதேர்வில் இயற்கை மரங்களோடு அல்லது அவ்ற்றின் ஊடேயோ ( தென்னை மரத்தை பாம்பு போல் வளைத்தல்) அல்லது அவற்றிற்குப் பதிலாகவோ மேலே கூறப்பட்ட புராணவுருக்களை எழுதினால், அவர் ‘மறையுணர்வு ஆளுமை” உடையவர்கள் என்று கூறலாம்
விடலைப் பருவத்தினரும் இப்படிப்பட்ட ஆளுமை உடையவர்களாக பலர் இருப்பது தருத் தேர்வு காட்டுகின்றது. ஆயினும் பெரும்பாலும் இது வளர்ந்த ஆண் பெண் என்ற பேதமில்லாது காணப்படும் ஓர் கூறாகும்
ஓர் ஆளுமைக் கூறு இவர்கட்கு இயல்பாகவே அமைந்துள்ளதைக் காட்டுகின்றது. அதுவே இறை நம்பிகை அமைந்திருப்பதுதான், பிறவியிலேயே இது அமைந்துருக்கலாம். அவர்களது ஆன்மா அகத்தே ஆழத்தில் நடந்து கொண்டே இருக்கும் இந்தக் கனா இயக்கங்களை ( dream processes) ஒருவாறு உணர்ந்தவர்களாக இருக்கத்தான் C மற்றும் D தருக்களில் அவற்றை எழுதுகின்றனர்.
இந்த C D தருக்களுக்கு உள்ள ஆணைகள் அநேகமாக இவர்களது ஆன்மாவை புத்தி ஆங்காரம் போன்ற அந்தக் கரணங்களைத் தொட வைக்க இப்படிப்பட்ட புராணவுருக்கள் எழுதப்படுகின்றன போலும்
இங்கு அருணந்தியார் யோகக் காட்சிகள் என்பன மலங்களை வாட்டி அவற்றின் வன்மையைக் குறைப்பதால் வருவது என்று கூறுவதைக் காண்க. ஆக இத்தகைய தரு நபர்கள் இயல்பாகவே மும்மலத்தின் அதிலும் குறிப்பாக ஆணவ மலத்தின் தாக்கம் குறைந்தவர்களாக இருக்கவே தான் இப்படிப்பட்ட புராணவுருக்களை என்ழுதுகின்றார்கள் என்று தெரிகின்றது
இனி இதனோடு தொடர்புடையதே யந்திரங்கள் எழுதும் பண்பாகும். இதுவும் ஓர் வகைய ஆழ ஆளுண்மையைக் குறிக்கும். இதனை அடுத்துக் காண்பம்
தொடரும்
உலகன்
பாடம் 7: இடுகை 4: தொடரியல் தரு ஆய்வு 8 : ஆளுமையும் ஆழமும்-3
இனி பலவகையான புராணவுருக்களுக்கும் மூலமாக இருக்கும் யந்திரசொர்ருபங்கட்கு வருகின்றோம். இதுவே தருத்தேர்வைப் பொறுத்த வரை மிக ஆழமான ஆளுமையைக் குறிக்கும் தடயமாகும், இதனால் இதற்கு மேற்பட்ட ஆளுமைகள் இல்லை என்பதில்லை, இருக்கின்றன ஆனால் அவை தருத் தேர்விற்கு அப்பாற்பட்டவை, மேலான ஞான சித்தர்கள் உண்மையான சிவயோகிகள் சிவஞானிகள் போன்றோர் தருத்தேர்வைக் கடந்தவர்கள். அவர்களை இந்த சாதாரண தருத்தேர்வின் வழி அலந்து நிறுத்த முடியாது.
எனது அனுபவத்தில் மிக உயர்ந்த பக்குவத்தில் உள்ள ஒருவர் நான்கு தருக்களிலும் இரண்டடுக்கு பல்லிதழ் தாமரையையே பல ஆண்டுகளாக எழுதி வந்த பிறகு எதுவும் எழுதமுடியாது எல்லாக் கட்டங்களிலும் தூய வெளியையே ஒளியையே காட்டி நின்றார்.
இவர்கள் எல்லாம் தருதேர்வுக்கு அப்பாற்பட்டவர்கள், ஆனால் சாதாரண மக்கள் அப்படியல்ல. அவர்களில் நல்ல உயர்ந்த பக்குவத்தில் இருப்பவர்கள் பலவகையான யந்திரங்களை எழுகின்றனர்.
தந்திரீக உளவியலும் ஆகமவுளவியலும்
யந்திரங்கள் என்பன பல வகையான அக்கர சக்கரங்கள் ஆகும். தாந்தரீக நெறியில் மிகவும் பழமையான ஓர் கூறு இதுவாகும். மேலான மந்திரயானத்திலும் கீழான மாந்தரீகத்திலும் இவை விளங்குகின்றன. தமிழில் இவற்றைப் பற்றி மிக விரிவாக திருமந்திரம் போன்ற சித்தர் நூற்களில் காணலாம். வடமொழியில் சௌதந்ரியலகிரி போன்ற நூற்களிலும் இவை மிக விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஓர் வகையான வேதாந்த மரபில் ஸ்ரீசக்கர வழிபாடு மிகவும் விரிவாக விளக்கப்டுகின்றது. தமமிழகத்தில் இந்த சக்கர வழிபாட்டிற்கே தனிக் கோயில்களும் உண்டு.
இந்த அக்கர சக்கரங்களை ஓரளவு விரிவாக திருமூலர் தம் திருமந்திரத்தில் காணலாம். தமிழில் இதுவே மிகப் பழமையான மந்திர நூல் ஆகும். தொல்காப்பியத்தில் இத்தகைய நூற்கள் குறிக்கப்பட்டாலும் இதுவரை யாதும் கிடைகவில்லை. சுமேருத் தமிழ் கோயில் பாட்டுகளில் அங்குமிங்குமாக மந்திரங்கள் குறிக்கபடுகின்றன
இதனை தழுவியே ஆதிசங்கரர் மேல் ஏற்றி அவர் புனைந்ததாக கூறப்படும் ‘சௌந்தரயலஹரீ” எனும் நூலாகும் இதற்கு ஓர் விரிவான பாஷ்யம் உண்டு. தமிழில் இது மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது, இது மாயாவாத வேதாந்த ஆதி சங்கரரால் இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை. யந்திர மந்திர வழிபாட்டின் தாந்தரீகம் வேத வேதாந்த மரபிற்கு முரணாணது என்பதொடு அதற்குப் புறனான ஒன்றும் ஆகும், இவை எல்லாம் கோயில் வழிபாட்டோடு மிக நெருங்கியத் தொடர்புடையன.
இப்படிப்பட்ட நூற்களிலும் இன்னும் மாந்தரீகம் சார்ந்த வேறு நூற்களிலும் பலவகையான யந்திரங்களைப் பற்றிய குறிப்புக்கள் உண்டு, இன்றும் மாந்தரீக வழிபாட்டின் ஓர் அங்கமாக யந்திரங்களை பிரதிட்டை செய்வது வழக்கத்தில் உண்டு,
தருக்களும் யந்திரங்களும்
முக்கோணங்கள் பல்லடுக்கு முக்கோணங்கள் வட்டங்கள் வட்டங்களுள் வட்டங்கள். வட்டங்களுக்குள் முக்கோணங்கள் அறுகோணங்கள் போன்ற யந்திரங்களோடு பல்லிதழ் தாமரைகளையும் இங்கு நாம் சேர்த்துக் கொள்ளலாம். தாமரை இதழகளும் வட்டங்களும் முக்கோணங்களும் இணைந்ததே ஸ்ரீ வித்தியா யந்திரம் என்று அழைக்கப்படும் அந்த மிக உன்னதமான யந்திரமாகும்
இதேப் போன்று தருத்தார்வில் எழுதுவோரை இதுவரை நான் சந்தித்ததில்லை, ஆனால் அதற்கு நெருங்கி வரும் சிலரை சந்தித்ததுண்டு. இவர்கட்ட்கு யந்திரங்களைப் பற்ரி யாதும் தெரியாதே இவற்றை எழுதினர்.
ஏன் தருக்களை எழுதக் கோரும் போது, இவ்வாறான யந்திரங்களை சிலர் எழுதுகின்றார்கள்? இவர்கள் எல்லாம் சித்தர்களோ சிவயோகிகளோ மகான்களோ அல்ல, நல்லவோர் பக்குவத்தில் இருக்கும் சாதாரண மக்களே. இதில் வேறுபாடின்றி ஆண்களும் பெண்களும் அடங்குவர்.
மந்திர ஆளுமை
தரு நபர்கள் இப்படிப்பட்ட யந்திரங்களை எழுதும் திறத்தினராக இருக்கும் போது, அவர்களது இரண்டாம் தருவின் புத்தியும் மூன்றாம் தருவின் ஆங்காரமும் மேலும் நான்காம் தருவின் சித்தப்பகுதியும் மந்திர உலகை மறையுணர்வாக பெற்ரூள்ள திறத்தை காட்டுகின்றது. இத்தகைய ஆழங்கள் பயிற்சியாலனறி பிறப்பால் அமைவதாகவும் இருக்கலாம்.
தக்க பயிறிகளால் இத்தகைய திறமைகளை வளர்க்க முடியுமா என்பது ஓர் ஆய்விற்குரிய பொருளாகவே இங்கு குறிக்க விரும்புகின்றோம்
யந்திரங்களின் உள்ளுறைப் பொருள்
இவற்றில் எல்லா யந்திரங்களும் சிவ தத்துவங்களாகிய நாத விந்துக்களால் இயனறவை ஆகும். நாதத் தத்துவமே சதுரமாக நீள்சதுரமாக முக்கோணமாக அறுகோணமாக பல அடுக்கு முக்கோணமாக திருசூலாம் போன்ற யந்திரமாக வெல்லாம் தோன்றும்
இது விடலைப் பருவத்தினரும் எழுதுவதை மிக எளிதாகக் காணலாம். யார் இதனை எழுதுகின்றார்களோ அவர்கள் நல்ல அறிவாளிகள், புத்திக் கூர்மையுடையவர்கள், எளிதில் கற்று மேபடவல்லவர்கள் என்ரெல்லாம் பொருள் படும்
இங்கு முக்கோணமும் அறுகோணமும் ஞான பண்டிதனாகிய திருமுருகனின் வடிவங்களாகவும்ம் கொள்ளப்படுவதைக் காண்க.
கூர்மையான அறிவினைத் தந்து கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வைப்பது இந்த யந்திரம் தான். இதுவே திருமுருகனின் ஞானவேலும் ஆகும் என்று தெரிகின்றது
இனி பண்டையோர் குறிப்பிட்டுள்ளது போல, விந்துவே வட்டமாக தருத்தேர்வில் எழுதப்படுகின்றது. இது மென்மை அழகு கவர்ச்சி அன்பு தாய்மை போன்ற பண்புகளைக் குறிக்கும்.
இந்த விந்து சிறிது நாதத்துடன் கலக்கத் தோன்றுவதே தாமரை இதழும் அதன் வழி ஓரடுக்கு ஈரடுக்கு தாமரை போன்ற வடிவங்கள்,
இவை எல்லாம் இலக்குமி வடிவ அம்மையின் தோற்றங்கள் என்பதும் வரலாற்றில் உண்டு
முடிவுரை:
இதுவரை மூன்று வகையான ஆளுமைகளையே விளக்கியுள்ளோம்: உல்காயத ஆளுமை, மறையுணர்வின் ஆளுமை மந்திர ஆளுமை என்றவாறு இவை விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இது ஓர் பகுதிதான். ஆளுமைகள் இதனை மீறி இன்னும் பலவுண்டு, முடிவானது வீடுபேற்றையே விரும்பி அதற்கே வாழும் முமுட்சு ஆளுமை அமையும். இவை எல்லாம் தருத் தேர்விற்கு அப்பாற்பட்ட விசயங்களாக இருக்க, அவற்றின் விளக்கும் இங்கு விடப்பட்டுள்ளது. ஆயினும் சாதாரண வாழ்க்கையில் பெரும்பாலோர் இத்தகைய மூன்று ஆளுமைகளிலும் அவற்றின் பல உட்பிரிவுகளிலும் அடக்கி விடலாம்
தொடரும்
உலகன்
பாடம் 8: இடுகை 1 ; சித்தச் சிதைவுகள்-1
இங்கு சித்தச் சிதைவுகள் என்பன இயல்பான நிலை பிறழ்ந்து ஆனால் பிராந்தி சித்தப் பிரமை போன்ற பிறழ்ந்த மனநிலைக்கள் அல்லாது, உபதேசங்கள் வழியாக சமய சடங்குகள் யந்திரப் பயிற்சிகள் போன்ற சாதனங்கள் வழியாக தீர்க்கப்படக்கூடிய உளப் பாதிப்புக்கள் ஆகும். மும்மலங்களைக் கண்ட சைவ சித்தாந்தம் இத்த்கைய சித்தச் சிதைவுகளை பண்டே ஆய்ந்துள்ளன.
மிக அற்புதமான அருணந்தியாரின் இருபா இருபது எனும் நூலில், இந்த சித்தச் சிதைவுகள் விசாரிக்கப்பட்டுள்ளன. சித்தர்கள் இதனை பலவாறு விசாரித்து சித்த மருத்துவத்தில் ஓர் கூறாக இக்கலையை வளர்த்துள்ளனர்.
கீழே இருபா இருபதில் வருகின்ற மெய்கண்டாரின் மேல் ஏற்றி அருணந்தியாரால் கூறப்படும் சித்தச் சித்தச் சிதைவுகளை சிறிது பார்ப்போம். ஆகமவுளவியலில் இவை தருத் தேர்வின் அடிப்படையில் வகுக்கப்பட்டு விளக்கவும் படும். சில சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும்
சித்தைச் சிதைகள் என்றால் என்ன?
இதனை ஒருவாறு இருபா இருபது விளக்குகின்றது.
.>>>>>
கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கின் விகற்பங் கற்பங்
குரோதம் மோகங் கொலை அஞர் மத நகை
விராய் எண்குணனும் ஆணவம் என விளம்பினை
In explaining how ANavam as a Deep Structure element determines the forms
of observable human behavior, Thou hast mentioned the following forms as the
evidences: the tendency to differentiate self from others and
becoming egoistic thereby, fantasizing and imagining uncontrollably and
irrationally, continuos disposition of excessive anger and hatred,
irrational and blind infatuations, murderous inclinations, the tendency
to oppress and repress and through that exult in creating misery and
unhappiness, excessive and groundless self-conceit and finally losing the
rational capabilities and becoming insane and abnormal.
அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம்
பைசால சூனியம் மாச்சரியம் பயம்
ஆவேழ் குணனும் மாயைக்கு அருளினை
The following seven traits or behavioral dispositions that are irrational
are attributed to maayai, the delusion-producer: the absence of
illumination or ignorance; taking the false as true and having no doubts
about it; irrational passions and unthinking desires; believe in the magical
and miraculous; unquestioning credulity or blind faith; and unnecessary
and excessive fear and anxiety.
இருத்தலுங் கிடத்தலும் இருவினை இயற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவல் என்றெடுத்த
அறுவகைக் குணனுங் கருமத்து அருளினை
To kanmam Thou hast attributed the following dispositions: nonassertive
indolence; total disinterestedness and indifference; always bothered with the
moral issues in effecting actions; abstaining from doing what one ought
to do and enjoying belittling and ridiculing others.
>>>>
இங்கு ஆணவ மலத்தின் தாக்கமாக : வீணாக கற்பனை செய்தல், இல்லாத பேதங்களை உண்டென நினைத்தல், கடுஞ் சினம் , ஒருதலைக் காமம் போன்ற மோகம். வீணாக பிறரைத் துன்புறுத்தல் எனும் அஞர், கொலைவெறி மதம் பிடித்து அடங்காது திரிவது. காரணமின்றி சிரிப்பது அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நகையாடுவது போன்றவை ஆணவ மலத் தாக்கத்தால் வரும் சித்தச் சிதைவுகள் ஆகுமாம்
இனி அறிவிற் குறைந்த மடவனாக அஞ்ஞானியாக இருத்தல், வீணாக பொய் பேசுதல் சோம்பல் மேவர அயர்ந்து கிடத்தல் கீழான ஆசைகள் எனும் மோகங்கள், மாந்தரீகக் கலைகளில் நம்பிகை, பைசாசம் சூனியம் போன்ற மாந்தரீகக் கலைகளி ஈடுபடல், மூடநம்பிகைகள் பலவற்றில் ஈடுபாடு காட்டும் மாச்சரியம், வீணாக பலவற்றை எண்ணியும் நினைத்தும் பீதி கொள்ளல் ஆகியவை மாயாமலத்தால் வருகின்ற சித்தச் சிதைவுகளாம்
இனி கன்ம மலத்தால் ஆகுவனவாக வீணாக செயலற்று இருத்தல், கடுஞ் சோம்பு மேவர வாளா செயல் யாதும் செய்யாது கிடத்தல், பாவ காரியங்கள் பலவற்றை அறிந்தும் அறியாதும் செய்தல், பிறரை நிந்தித்து வெறுத்து ஒதுக்கல் பொன்றவையும் அதனோடு சார்ந்தவையும் கன்ம மலத்தால் வரும் தீங்குகளாம்
இனி இவ்வாறு சுமுகாய வாழ்வில் பிரச்சனைக்குரிய இத்தகைய குணங்களே சித்தச் சிதைகள் எனப்படும். மேலே கூறியவாறு சித்தப்பிரமை மனோபிராந்தி போன்ற மிக மோசமான நிலைக்குப் போகா முன், உபதேசம் போன்ற கலைகளால் தீர்க்கப்படவல்ல சித்தநோய்கள் போன்றவைவே இங்கு சித்தச் சிதைவுகள் எனப்படுகின்றன.
இவை தருத்தேர்வில் எப்படி வெளிப்படும்? மேலே கண்டவாறே வகைப்படுத்த முடியுமா? இவற்றின் சிகிச்சைதான் என்ன? என்ற கேள்விகள் இனி ஒருவாறு விளக்கப்படும்.
தொடரும்
உலகன்
...
[Message clipped]
Is there any reference on cure it would be a great contribution if BAUM could indicate in advance Gilgamesh was treated with sea mist and seven days sleep by then utna-prai-siththi
__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
Abraham Pandithar’s ‘Raga Sputa Method’(RSM) (3)
Improvising RSM & Overcoming the short comingsBy discovering the Raga Sputa Method (RSM), Abraham Pandhithar had become a great milestone in the history of world music. Identifying the short-comings in RSM and overcoming them to develop computer based application software will prove to be a tribute to him. Like Newton’s discoveries paved the way for new discoveries some over ruling his findings, Abraham Pandhithar’s music discoveries also will have to travel a similar path.To understand the short-comings in RSM, let us recall that the basic principle of RSM is to construct viable sub-structure of the music notes to join to develop a melody. We had seen about the eight tables consisting of related music notes structures were generated following the RSM. Both the RSM by Abraham Pandithar and his tables had provision only for the next notes above or below to the referred note in the ascending and descending order of the music notes of a raga as the adjacent note, and not for the other notes.The first reason for the above short coming was due to Abraham Pandithar’s wrong interpretation of the relation among the music notes.There are four kinds of musical relation with respect to the music notes employed in a composition. Explanation for the four kinds of musical relation with evidences contradicting Abraham Pandithar’s interpretation could be found in http://www.musicresearch.in/categorydetails.php?imgid=61 .The second reason was Abraham Pandithar’s interpretation of the Equal Temperament (ET) as the ‘vattap pAlai’ of the ancient Tamil Music. Abraham Pandithar was greatly impressed by the success of ET in solving the modulation problems and comma experienced in the Just Intonation. Unfortunately he could not have access to the short comings of ET, conclusively proved especially with respect to the perfect intervals, the basis for good music. I had explained about it in my doctoral thesis of ‘Physics of Tamil Music’ (1996), later published in the book ‘ thamizh icaiyiyal – puthiya kaNtupitippukaL’(2009) – 'Tamil Musicology – New Discoveries.'In a vocal composition, the adjacent musical notes corresponding to the musical sound of the letters may be the same musical note or the next musical note in the musical scale of the composition. Or it may be the 3rd or 4th or 5th or 6th note with respect to the previous note for which there was no provision in the RSM by Abraham Pandithar and his tables.'izhai' (thread in music) , discovered in the ancient Tamil texts, was related to the connecting role involving the adjacent musical notes and its percussion tone structure and the continuity of the melodic movement.The above discovery of the musical threads was published in Sangeet Natak (Vol XLII, Number 3, 2008)The scope for employing different kinds of the adjacent musical notes with respect to the referred note in a composition could be found in cilappathikAram சிலப்பதிகாரம், dealing with the four kinds of pAlai –1. AyappAlai ஆயப்பாலை, 2. vattappAlai வட்டப்பாலை, 3. cathurappAlai சதுரப்பாலை , & 4. thirikONappAlai திரிகோணப்பாலை.Abraham Pandithar tried to interpret the above four in terms of ET.In his book ‘karuNAmirtha Sagaram’(pages 872-880), Abraham Pandithar explained the method of calculating the 12 equal intervals of ET. He had also explained that in ‘vattap pAlai’ the 12 intervals were further divided into 24 equal intervals, of which 2 were excluded and the remaining 22 were employed in ‘vattap pAlai’. Also he had explained about the employment of the further divisions into 48 equal intervals in cathurappAlai , and further divisions into 96 equal intervals in thirikONappAlai . If Abraham Pandithar had access to the short comings of ET, especially with respect to the perfect intervals, the basis for good music, he might not have undertaken the futile exercise of applying ET to the four kinds of pAlai.The four kinds of pAlai in the light of the four kinds of the musical relations among the music notes, would help to overcome the shortcoming in Abraham Pandithar’s RSM regarding the scope for employing different kinds of the adjacent musical notes with respect to the referred note in a composition. Applying this discovery would lead to the construction of more tables for the different kinds of the adjacent musical notes with respect to the referred note in a composition.The refined RSM would lead to the developing of the computer based Raga Sputa application software to assist the music composers to compose a melody in any musical form in a desired musical scale. Using the tables and the developed methodology, computer based Raga Sputa Application software could be developed to assist the music composers.All viable music notes sub-structures in the opted musical scale from various world wide sources of music including the sounds from the nature, will be played with the sound in score view. Using the creative skills, the composer can choose the structures matching the musical feeling of the content of the intended composition. Using the selected music notes structures, their joining in the required musical form will help building the musical architecture.The above skeleton musical building will then be improvised with ornamentation using the creative skills of the composer. Refined RSM and the related application software would lead to a paradigm shift in music composing, providing maximum scope for focusing the energy of the music composer towards creativity, commanding the computer to provide the music building materials. In other words like the advancements in the building architecture , the refined RSM would lead to corresponding advancements in the musical building architecture.
From http://musicdrvee.blogspot.in/__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.