தமிழ்நாட்டு பேய்கள்

168 views
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 22, 2011, 3:54:49 AM3/22/11
to mintamil, தமிழமுதம், பண்புடன்
தமிழ்நாட்டு பேய்களை பற்றி ஏன் எழுதலை என சண்டைக்கு வந்ததால் தமிழ்நாட்டு பேய்களை பற்றிய கட்டுரை

ஆவி

இது ரொம்ப பொதுவான பேய்.பல நாடுகளுக்கும் இது பொது.தமிழ்நாட்டு பேய்கள் பெரும்பாலும் பெண்கள்.வெள்லை சேலை,தலைவிரிகோலம் தான் யூனிபாரம்.சுடுகாடு தான் பேவரைட் இடம்.பேய் பிடித்தால் மந்திரவாதியை கூட்டி வந்து வேப்பிலை அடிக்கலாம்.ஓடிவிடும்.முருகன் டாலர், தாயத்து மாதிரியான சமாசாரங்களுக்கு பயப்படும்.

6.jpg

மோகினி பிசாசு

இருப்பதிலேயே கிளுகிளுப்பான பேய்..கல்யாணம் ஆகாமல் இறந்த கன்னிகள் மோகினியாக மாறி சுடுகாட்டு பக்கம் அலைவார்கள்.அந்த பக்கம் போகும் இளைஞனை நிறுத்தி, மயக்கி மரத்துக்கு மேலே கொண்டுசென்று உறவு கொண்டு அதன்பின் கடித்து தின்றுவிடுவார்கள்.(சுடுகாட்டில் இளம்பெண் யாராவது லிப்ட் கேட்டால் வண்டியை நிறுத்தாதீங்க)

மோகினியை கொல்ல ஒரே வழி அதை பொம்மையில் ஏற்றி ஆணி அடித்து மரத்தில் நிறுத்துவதுதான்

jagan-mohini01.jpg

பழையனூர் நீலி (courtesy: பதிவர் : ஜெகதீஸ்வரன்)

659px-isakki.jpg?w=460&h=418

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

பூதம்

பூதங்களில் நற்குணங்களை கொண்ட பூதங்கள் உண்டு.ஆனால் கெட்ட பூதங்களும் உலகில் அலைவது உண்டு.அவற்றை அவ்வப்போது முனிவர்கள் பிடித்து பாட்டிலில் அடைத்து கடலில் வீசிவிடுவார்கள்.அந்த பாட்டில் உங்கள் கையில் கிடைத்தால் அதை திறந்தால் அந்த பூதம் உங்களுக்கு அடிமையாகிவிடும்.அப்புறம் நீங்கள் சொன்ன வேலைகளை செய்யும்.லவ்வுக்கு கூட உதவும் (எப்படி என அறிய பட்டிணத்தில் பூதம் பார்க்கவும்)
images?q=tbn:ANd9GcRX1MgwXJMDtUmwaJd58m_yHnyvu3dScBiB7ulufaXval2YOypf&t=1
--
செல்வன்

"பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின் அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும். மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன் ராண்ட்
-

www.holyox.blogspot.com

LK

unread,
Mar 22, 2011, 3:58:17 AM3/22/11
to mint...@googlegroups.com
hmm

2011/3/22 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Mar 22, 2011, 4:30:08 AM3/22/11
to mint...@googlegroups.com
நீலி என்பதும் நீலகேசி என்பதும் ஒன்றே
தமிழ்க் கிராமப் பெண்தெய்வங்கள் பேய் என்றும் பேச்சி என்றும் வழங்கப்பட்டது
தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் தழைத்தோங்கியிருந்த பெண்ணியத்தை மறுத்து ஆண் கடவுளர் குறிப்பாக சிவன் விஷ்ணு முதன்மை பெற, பெண் ஆணுக்கு அடிமை என்று நம்பச்செய்ய அல்லி அரசானி, பவளக்கொடி, புலந்திரன் களவுமாலை போன்ற கதைகள் வலியுறுத்தப்பட்டன
ஆய்ந்து முடிவெடுத்தபின் தமிழ் கிராமத் தெய்வங்கள் குறிப்பாகப் பென் தெய்வங்கள் பேய்கள் என்று முத்திரை குத்துவது நல்லது
நாகராசன்

2011/3/22 செல்வன் <hol...@gmail.com>
தமிழ்நாட்டு பேய்களை பற்றி ஏன் எழுதலை என சண்டைக்கு வந்ததால் தமிழ்நாட்டு பேய்களை பற்றிய கட்டுரை

kalairajan krishnan

unread,
Mar 22, 2011, 7:59:46 AM3/22/11
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
ஐயா ​செல்வன் அவர்களுக்கு வணக்கம்,

ப​ழையனூர் நீலி க​தை பிரமாதம்,
இந்த ஊர் எங்​கே உள்ளது?

திருப்பூவணத்துக்குத் ​தெற்​கே ப​ழையனூர்  என்று ஒரு ஊர் உள்ளது,
அங்​கேயும் நீலிக​தை பற்றிக் கூறுகின்றனர்,
"ப​​ழையனூர் காரி ​கொடுத்த க​​ளைக்​கொட்டும்" என்ற வரிகளில் உள்ள ஊர் பற்றியும் தகவல் இருந்தால் அன்புடன் அறியத்தரவும்.
அன்பன்
கி.கா​ளைராசன்

Geetha Sambasivam

unread,
Mar 22, 2011, 8:16:47 AM3/22/11
to mint...@googlegroups.com
இங்கே அரக்கோணத்துக்கு அருகே இருக்கிறதாய்க்கேள்வி.

2011/3/22 kalairajan krishnan <kalair...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2011, 7:28:29 AM3/22/11
to mint...@googlegroups.com
இடுபிணம் தின்னும் இடாகினி
காளிக்கு ஆடும் கூளி இன்னும் செல்வனுக்கு காட்சி தரலையோ?
 
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

devoo

unread,
Mar 22, 2011, 8:20:40 AM3/22/11
to மின்தமிழ்
>> ப​ழையனூர் நீலி க​தை பிரமாதம்,
இந்த ஊர் எங்​கே உள்ளது? <<

காளை ஐயா,

பழையனூர் - தொண்டை மண்டலம்

தொண்டை மண்டலத்தின் மிகப் பழமையான வேளாளர் சபை, பழையனூர்
திருவாலங்காட்டில் இருந்தது.

கணவனால் வஞ்சித்துக் கொல்லப்பட்ட நீலி என்பவள் பேயாக அலைந்து
கொண்டிருந்தாள். அவளது கணவன், மறுபிறப்பில் தரிசனச் செட்டி என்ற பெயரில்
வாழ்கிறான் என்பதை அறிந்து அவனைப் பழி தீர்ப்பதற்காகப் பின்தொடர்ந்து
செல்கிறாள். இரவு நேரத்தில் பழையனூர்ச் சத்திரத்தில் அவன் தங்க
நேர்கிறது. நீலி, தரிசனச் செட்டியின் மனைவி என்று கூறிக்கொண்டு, அவன்
தன்னைக் கைவிட்டுச் செல்ல முயல்வதாகப் பழையனூர் வேளாளர்களிடம்
முறையிடுகிறாள். தரிசனச் செட்டி, அவள் தன் மனைவியல்லள் என்றும் தன்னைக்
கொல்லத் துடிக்கும் பேய் என்றும் கூறி அவளைத் தன்னுடன் தங்க அனுமதிக
வேண்டாமென்று வேளாளர்களிடம் மன்றாடுகிறான்.

நீலியின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கிய வேளாளர்கள், இரவு நேரமென்பதால்
மறுநாள் காலையில் இந்த வழக்கை விசாரித்துக் கொள்ளலாம் என்று
முடிவுசெய்து, தரிசனச் செட்டியின் பாதுகாப்பிற்குத் தாங்கள் பிணை ஏற்பதாக
வாக்களித்து நீலி அவனுடன் தங்குவதற்கு அனுமதிக்கின்றனர். அன்றிரவில் நீலி
தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்கிறாள். மறுநாள் காலையில், தாங்கள்
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேளாளர்கள் எழுபது பேரும், “சொன்ன சொல் காக்கத்
தவறியவர்கள்” என்று தங்கள் மேல் - நீலியின் வஞ்சனை காரணமாக -
சுமத்தப்படக்கூடிய பழியைக் கழுவுவதற்காகத் தீக்குளித்து உயிர்
துறக்கின்றனர். இந்நிகழ்வு, கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
திருஞானசம்பந்தரால்,

"--------------முனை நட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே"

என்ற தேவாரப் பாடல் (முதல் திருமுறை, திருவாலங்காட்டுப் பதிகம்,
பா. 1) வரிகளில் குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம்
(மும்மையால் உலகாண்ட சருக்கம், பா. 113),

நற்றிரம்புரி பழையனூர்ச் சிறுத் தொண்டர் நவை வந்
துற்றபோது தம் உயிரையும் வணிகனுக் கொரு கால்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கி அச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையின் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு

என்று இந்நிகழ்வைச் சுட்டுகிறது.

http://www.sishri.org/velaalar3.html

தேவ்

On Mar 22, 6:59 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:

கி.கா​ளைராசன்

unread,
Mar 22, 2011, 8:52:16 AM3/22/11
to mint...@googlegroups.com, devoo
பண்டிட்ஜீ அவர்களுக்கு வணக்கம்,

மிகவும் அரு​மையான தகவல்க​ளைத் தந்துள்ளீர்கள்
நன்றியு​டை​யேன்

அன்பன்
கி.கா​ளைராசன்

2011/3/22 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Geetha Sambasivam

unread,
Mar 22, 2011, 8:55:30 AM3/22/11
to mint...@googlegroups.com
திருவாலங்காடு தான் பழையனூரா?? புதிய செய்தி,  அங்கே போனப்போ யாரும் இது பற்றிச் சொல்லவே இல்லை!  சொல்லி இருந்தால் ஒரு அலசு அலசி இருக்கலாம்! :(

2011/3/22 devoo <rde...@gmail.com>
>> ப​ழையனூர் நீலி க​தை பிரமாதம்,
    இந்த ஊர் எங்​கே உள்ளது? <<

காளை ஐயா,

பழையனூர் - தொண்டை மண்டலம்

தொண்டை மண்டலத்தின் மிகப் பழமையான வேளாளர் சபை, பழையனூர்
திருவாலங்காட்டில் இருந்தது.

என்று இந்நிகழ்வைச் சுட்டுகிறது.

http://www.sishri.org/velaalar3.html

தேவ்

கி.கா​ளைராசன்

unread,
Mar 22, 2011, 9:14:13 AM3/22/11
to mint...@googlegroups.com, devoo
​பே​யை நிஜமாகப் பார்த்தவர் பற்றிய க​தை இது,
அப்​போதுதான் நான் புதிதாக வீடுகட்டி குடி​பெயர்ந்திருந்​தேன்,
ஊரின் ஓரம்.
எனது வீட்​டைச் சுற்றிலும் கரு​வை மரங்கள்,
பணப்பற்றாக்கு​றையினால், அப்​போ​தைக்கு, சுற்றுச்சுவர் எடுக்கமுடியவில்லை,

மா​லை​​நேரங்களில் என்வீட்டில் அ​னேகமாக அருகில் இருப்​போர் அனைவரும் கூடிவிடுவர்.
ஆள் ஆளுக்கு அறிந்தவற்​றைப் பகிர்ந்து ​கொள்வர்.
அதில் ஒருவர், திரு.​செந்தில் என்பவர்...
ஆன்மிகம் பற்றி அதிகமாக​வே ​பேசுவார்,  எனது இல்லா​ளை "அக்கா" என்று அன்புடன் அ​ழைப்பார்.
ஒருநாள் ​வெள்ளிக்கிழ​மை இரவு ​பேசிக்​கொண்டிருக்​கும்​போது மின்சாரம் நின்றுவிட்டது. கும் இருட்டு.  ​பேய்பற்றிய ​பேச்சு வந்தது.
பலர் எழுந்து ​சென்று விட்டனர்.
சிலர் அமர்ந்து ​கேட்டனர்.

​செந்தில் ​சொன்னார்,
சார், உங்களுக்கு ஒன்று ​தெரியுமா?  இந்த ​ரோடு முடியும் இடத்தி​லே, ஆஸ்பத்திரி இருக்குதி​லே!
அந்த இடத்தில் நான்கு ​பேய்கள் த​லையில்லாமல் முண்டம் மட்டும் நடமாடுகின்றன என்றார்.

அவரது "அக்கா" உட்பட, அ​​னைவரும் அவ​ரைத் திட்டிவிட்டு, எழுந்து ​சென்றுவிட்டனர்.
நானும் அவரும் மட்டும் ​பேசிக் ​கொண்டிருந்​தோம்.

​செந்தில், சும்மா பிறர் கூறும் கட்டுக்க​தைக​ளை இங்​கே வந்து என்னிடம் கூறாதீர்கள்.  நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? என்று ​கேட்​டேன்.

நான்தான் பத்துமணியான, படுத்துத் தூங்கி விடுகி​​வே​னே! பார்த்தது இல்லை என்றார்.
சரி இன்று ​சென்று நாம் இருவரும் பார்த்து வரு​வோமா? என்று ​கேட்​டேன்.
எழுந்து நின்று ஒரு​பெரிய கும்பிடு ​போட்டார்! ஐயா சாமி ஆ​ளை விடுங்கள் என்று கூறி கிளம்பிவிட்டார்.

எனக்​கோ, எப்படியும் பார்த்துவிட​வேண்டும் என்ற ஆ​சை நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்​கொண்​டே ​சென்றது. ​நேரம் ​மெதுவாக நகர்ந்து ​கொண்டிருந்தது.

மின்சாரம் வந்தபாடில்​லை.
எல்​லோரும் சாப்பிட்டுவிட்டுத் தூங்கி விட்டனர்.  எனது இல்லாளும் மகளும் இருக்கமாகப் ​பொத்திக்​கொண்டு தூங்கிக் ​கொண்டிருந்தனர்.
சரியாக 11-45 மணியான உடன் எழுந்து, ​பேய்கள் நடமாடுவதாகச் ​செந்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் ​சென்​றேன்.
பார்த்​தேன், பார்த்​தேன், பார்த்​தேன்
அங்​கே ஒரு கருப்பு உருவம் அ​சைந்து அ​சைந்து ......
வருகிறதா?
​போகிறதா? என்று ​தெரியவில்​லை.  உள்ளம் உணர்விழந்தது. உடல் நடுங்கியது.
​.....​ விடிந்தவுடன் க​தை தொடரும்.

meena muthu

unread,
Mar 22, 2011, 9:20:39 AM3/22/11
to mint...@googlegroups.com
பேய்க்கதையெல்லாம் இரவில் கேட்டா(சொன்னா)ல்த்தான் சுவாரஸ்யம் :))

2011/3/22 கி.கா​ளைராசன் <kalair...@gmail.com>

LK

unread,
Mar 22, 2011, 10:04:29 AM3/22/11
to mint...@googlegroups.com
நல்லவேளை நான் இப்பவே படிச்சிட்டேன்

2011/3/22 meena muthu <ranga...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

devoo

unread,
Mar 23, 2011, 12:48:33 AM3/23/11
to மின்தமிழ்
>> திருவாலங்காடு தான் பழையனூரா?? புதிய செய்தி, அங்கே போனப்போ யாரும் இது பற்றிச் சொல்லவே இல்லை! <<

இத்தலத்திற்குத் தொடர்புடைய ‘பழையனூர்’ கிராமம், பக்கத்தில் 2
கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள இறைவன் - அம்மையப்பர் ; இறைவி - ஆனந்தவல்லி. மேற்கு
நோக்கிய சந்நிதி.

பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு
கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்
பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த ‘தீப்பாய்ந்த மண்டபம்’ உள்ளது.
திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம்
தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய
உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போன்ற
சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் ‘சாட்சி
பூதேஸ்வரர்’ காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.

தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள்
நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச்செல்லும் மரபை
நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து
செல்லும் இவர்கள், இம்மரபைப் பிற்காலத்தோரும் அறியும் வகையில்
“கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை”
என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில் உயர்ந்த
படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.

இம்மரபினரின் கோத்திரமே ‘கூழாண்டார்கோத்திரம்’. அதாவது
தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்குச்
சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி
நெஞ்சை நெகிழவைக்கின்றது.

http://www.tamilvu.org/slet/l41H0/l41H0pag.jsp?x=79

தேவ்

கி.கா​ளைராசன்

unread,
Mar 23, 2011, 3:07:34 AM3/23/11
to mint...@googlegroups.com, devoo
பண்டிட்ஜீ அவர்களுக்கு வணக்கம்

அரு​மையான தகவல்க​ளைத் தந்து உதவியுள்ளீர்கள்,
எனக்கு ஒரு நீண்ட நாள் ஆ​சை.
திரு​வெண்காடு ​சென்று  வழிபட​வேண்டும் என்று ஆவல்,
ஒருமு​றை ​சென்று வழிபட்டு வருகி​றேன்,
நன்றியுடன்

அன்பன்
கி.கா​ளைராசன்

திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

கி.கா​ளைராசன்

unread,
Mar 23, 2011, 3:10:25 AM3/23/11
to mint...@googlegroups.com
2011/3/22 meena muthu <ranga...@gmail.com>

பேய்க்கதையெல்லாம் இரவில் கேட்டா(சொன்னா)ல்த்தான் சுவாரஸ்யம் :))
அதுசரி.
க​தை​கேட்க சுவராசியமாக இருக்கும்,
படம் பார்த்தால் சற்று பயமாக இருக்கும்,
​நேரில் பார்த்தால் எப்படியிருக்கும்?

பார்த்துப் பயந்து ​போன எங்களுக்கு அல்லவா ​தெரியும்!
அன்பன்

கி.கா​ளைராசன்

unread,
Mar 23, 2011, 5:35:08 AM3/23/11
to mint...@googlegroups.com, devoo

சரியாக 11-45 மணியான உடன் எழுந்து, ​பேய்கள் நடமாடுவதாகச் ​செந்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் ​சென்​றேன்.
பார்த்​தேன், பார்த்​தேன், பார்த்​தேன்
அங்​கே ஒரு கருப்பு உருவம் அ​சைந்து அ​சைந்து ......
வருகிறதா?

​போகிறதா? என்று ​தெரியவில்​லை.  உள்ளம் உணர்விழந்தது. உடல் நடுங்கியது.

​பேய் வருகிறதா? போகிறதா? என்னால் திட்டமாகச் சொல்ல முடியவில்லை.  என்ன செய்வது? என்று ஏதும் விளங்கவில்லை

கால்கள் இல்லாத ​பே​​யைக் கண்டு என் கால்கள் ஆடிக் கொண்டிருந்தன.

கால்கள் ஆடியதால் ஓடித் தப்பி முடியவில்லை.  வாய் எல்லாம் பயத்தில் கட்டிக் கொண்டதுகத்துவதற்குக்கூட குரல் வெளியே வரவில்லை.

என் மனம் என்னையே நொந்து கொண்டதுவரும் போது டார்ச்லைட்டை எடுத்து வந்திருக்கலாம்மின்சாரம் இல்லாத இந்த இருட்டில் சம்சாரத்தைத் தனியே விட்டுச் ​செல்கி​​றோ​மே என்று,  அவள் அருகில் இருந்த டார்ச்லைட்டை எடுத்து வரவில்​லை.

பேயெல்லாம் ஒன்றுமில்லை 

எல்லாம் பம்மாத்து வேலை.

வெட்டிப் பேச்சு என்று வீராப்பாய் நி​னைத்து, அசட்டுத் துணிச்சலில் வந்து விட்​டோ​மே.  இப்போது நினைத்து வருந்தி என்ன செய்வது

டார்ச்லைட்டை எடுத்து வந்திருந்;தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். 

இன்னும் அந்த உருவம் அசைந்து கொண்டே இருந்தது

வருகிறதா?  போகிறதா?  நின்ற இடத்திலேயே நின்று அசைந்து கொண்டிருக்கிறதா? என என்னால் சரியாகக் கணிக்க முடியவில்லை. 

கத்தவும் முடியவில்லை.   கால்களை எடுத்து வைத்து நடக்கவோ ஓடவோ முடியவில்லை.

ஆனால் நேரம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.

எனது உடலும் உள்ளமும் முற்றிலும் செயல் இழந்து விட்டன.

அசட்டுத் துணிச்சலில் வந்து ஆவியிடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று எண்ணி வருந்தினேன்.

எனது முன்னோர்களும். எனது தெய்வங்களும் என்னைக் காத்தருளும் என்ற நம்பிக்கை மட்டுமே என்னிடம் இருந்தது.

ஒருசிலநிமிடங்கள் கூடக் கடக்கவில்​லை.  ஆனால், உடம்பு எல்லாம் வேர்த்து இருந்துது. பயத்தின் உச்சத்தில் நான் நடுங்கிக் ​கொண்டு நின்​றிருந்​தேன்அப்போது ஒன்று நடந்தது...

.... ​தொடரும்

LK

unread,
Mar 23, 2011, 5:36:46 AM3/23/11
to mint...@googlegroups.com
பேய் நடந்ததோ ??

2011/3/23 கி.கா​ளைராசன் <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.கா​ளைராசன்

unread,
Mar 23, 2011, 5:46:46 AM3/23/11
to mint...@googlegroups.com, LK
2011/3/23 LK <karthik.lv@gmail.com>
பேய் நடந்ததோ ??
காலும் இல்​லை
த​லையும் இல்​லை.  முண்டம் மட்டும்.
எப்படி நடக்கும்?

அ​சைந்து அ​சைந்து 
வருகிறதா?  ​போகிறதா? என்னால் கணிக்க முடியவில்​லை

Geetha Sambasivam

unread,
Mar 23, 2011, 6:09:20 AM3/23/11
to mint...@googlegroups.com
நல்லா சஸ்பென்ஸ்

Tthamizth Tthenee

unread,
Mar 23, 2011, 6:12:16 AM3/23/11
to mint...@googlegroups.com
இல்லை 1  நடந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/23 கி.கா​ளைராசன் <kalair...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 23, 2011, 7:12:20 AM3/23/11
to mint...@googlegroups.com, கி.கா​ளைராசன், devoo

23 மார்ச், 2011 5:35 am அன்று, கி.கா​ளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

ஒருசிலநிமிடங்கள் கூடக் கடக்கவில்​லை.  ஆனால், உடம்பு எல்லாம் வேர்த்து இருந்துது. பயத்தின் உச்சத்தில் நான் நடுங்கிக் ​கொண்டு நின்​றிருந்​தேன்அப்போது ஒன்று நடந்தது...

.... ​தொடரும்

அந்த உருவம் பீடி குடிச்சா ஆண் பேய்.
 
--

Chandrasekaran

unread,
Mar 23, 2011, 1:26:11 PM3/23/11
to mint...@googlegroups.com
இது குறித்து நாங்கள் சென்ற மரபுச் சுற்றுலாவில் எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

J. chandrasekaran

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

devoo

unread,
Mar 23, 2011, 1:43:35 PM3/23/11
to மின்தமிழ்
நன்றி சந்திரா சார்.

காரைக்கால் அம்மையார் சிவ தரிசனம் பெற்ற இடம் என்று சமய குரவர்களும்
தலத்தில் கால் வைக்கக் கூசினராம். அண்டோ பீடர் அவர்களின் திட்டத்தில்
இத்தலம் கட்டாயம் இடம் பெற வேண்டும்

தேவ்

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
>

> J. chandrasekaran
>
> To save culture & heritage visit:www.conserveheritage.orghttp://templesrevival.blogspot.comhttp://reachhistory.blogspot.com

> joinhttp://groups/yahoo.com/temple_cleaners

S.Partha sarathy

unread,
Mar 23, 2011, 11:32:23 PM3/23/11
to mint...@googlegroups.com
தற்போதெல்லாம் மின்தமிழ் மடல்களை பகல்பொழுதில்தான் படிக்கின்றேன் !.... 

சாரதி 

2011/3/23 கி.கா​ளைராசன் <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
344.gif

Geetha Sambasivam

unread,
Mar 24, 2011, 12:02:36 AM3/24/11
to mint...@googlegroups.com
நன்றி சந்திரா.

2011/3/23 Chandrasekaran <plastic...@gmail.com>

கி.கா​ளைராசன்

unread,
Mar 25, 2011, 4:54:14 AM3/25/11
to mint...@googlegroups.com, devoo

நேரம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.

எனது உடலும் உள்ளமும் முற்றிலும் செயல் இழந்து விட்டன.

அசட்டுத் துணிச்சலில் வந்து ஆவியிடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று எண்ணி வருந்தினேன்.

எனது முன்னோர்களும். எனது தெய்வங்களும் என்னைக் காத்தருளும் என்ற நம்பிக்கை மட்டுமே என்னிடம் இருந்தது.

ஒருசிலநிமிடங்கள் கூடக் கடக்கவில்​லை.  ஆனால், உடம்பு எல்லாம் வேர்த்து இருந்துது. பயத்தின் உச்சத்தில் நான் நடுங்கிக் ​கொண்டு நின்​றிருந்​தேன்அப்போது ஒன்று நடந்தது...

உண்​மைக் க​தை ​தொடர்கிறது....

நல்ல​வே​லையாக, அப்​போது ​மின்சாரம் வந்து விட்டதுதெருவிளக்குகள் (டியூப்லைட்டுகள்) ஒவ்வொன்றாக விட்டு விட்டு எரியத் துவங்கின.

அந்த உருவம் இப்போது வந்த பாதையில்  திரும்பிச் சென்று மறைந்து விட்டது.  வெளிச்சம் ​தெரிந்தவுடன் எனக்கு சற்று பலம் கூடியது.

வந்த உருவம் வெளிச்சத்தைக் கண்டதும் மறைந்து விட்டதை எண்ணி சற்று ஆறுதல் அடைந்தேன்.  சிறிது சுதாரித்துக் கொண்டேன்.

மெதுவாக வீடு வந்து சேர்ந்து கதவைத் திறந்தேன்.  சப்தம் கேட்டு எனது மனைவி மின்விளக்கைப் போட்டாள்.  "எங்கே இந்த இருட்டில் சென்று வருகின்றீர்கள்?" என்று கேட்டாள்.  பதில் ​​சொல்லும் நி​லையில் நான் இல்​லை.  அதனால், ஒன்றும் சொல்லாமல் முகம் கை கால்களைக் கழுவிக் கொண்டு தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்துக் கொண்டேன்.

இரவு முழுவதும்  தூக்கம் வரவில்லைசெந்தில், "நாலு முண்டம்" என்று சொன்னாரே, ஆனால் ஒன்றுதானே வந்தது? மற்றவை எங்​கே? அவை வருவதற்குள் மின்சாரம் வந்துவிட்டதோ?  "நல்லவேலை சாமிபுண்ணியத்தில் தப்பித்தோம் பிழைத்தோம்" என்று மீண்டும் மீண்டும் மனம் எண்ணிக் கொண்டே இருந்தது.

எப்போது தூங்கினேன் என்று எனக்குத் ​தெரியாது?

காலையில் "ஏங்க டீ சாப்பிடலையா?" என்ற எனது மனைவியின் குரல் கேட்டு எழுந்தேன்.

எனது மனைவி என்னிடம், "இரவு எங்கே சென்றீர்கள்?

போகும்போது எங்களிடம் ஒரு வார்த்தையாவது சொல்லிக் கொண்டு செல்ல மாட்டீர்களா?" என்று கடிந்துகொண்டாள். 

நான் பதில் எதுவும் பேசாமல் இருக்கமாக இருந்துகொண்டேன் .

எனது பேசாமுகத்தைப் பார்த்து அவளும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்துவிட்டாள்.

நான்கைந்து நாட்கள் சென்றுவிட்டன. நான் பையப்பைய பழைய நிலைக்கு வந்துவிட்டேன். ஒருநாள் மாலை முடிந்த இரவு நேரம்

வழக்கம் போல்  என் வீட்டு வாசலில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். செந்தில் மட்டும் வர​வேயில்லைஎனது மனைவியிடம் "எங்கே உன் தம்பி?  ஆளைக் காணோம்" என்று கேட்டேன். 

"தம்பிக்கு காய்சலாம், அம்மா சொன்னார்கள்" என்றாள்.   "சரி, சென்று பார்த்துவிட்டு வருவோம்" என்று மறுநாள் காலையில் அவர்களது வீட்டிற்குச் சென்றேன். செந்திலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

அவரது அம்மாதான் என்னை வந்து வரவேற்றார்.

"என்னம்மா செந்திலுக்குக் காய்ச்சலா?" என்று நலம் விசாரித்தேன்.

"அதையேன் கேட்கிறாய், தம்பி, காய்ச்சல் என்றால் காய்ச்சல் நெருப்பா கொதிக்குது, ஊசிபோட்டால் போய்விடுகிறது, பின்பு சாய்ந்திரம் வந்து விடுகிறது, சாய்ந்திரம் ஒரு ஊசி போட்டால் போய் விடுகிறது, அதிகாலையில் மீண்டும் காய்ச்சல் வந்துவிடுகிறது, முதலில் பூளுகாய்ச்சல் என்றார்கள், ரத்தம் நீர் எச்சில் மலம் எல்லாம் சோதித்துப்பார்த்துவிட்டு இப்போது பூளுகாய்ச்சல் இல்லை,

இது வேறு ஏதோ காய்ச்சல்" என்கின்றனர்.

"இப்பவும் காய்ச்சல் அடித்துக் கொண்டுதான் இருக்கிறதுசமையலை முடித்துவிட்டு 10மணிக்குமேலே அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச்செல்ல வேண்டும்" என்றார், ​செந்திலின் அம்மா.

"அவங்க அப்பா இருந்தால் எனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் இல்லை,

புண்ணியவான் போய்ச் சேர்ந்து விட்டார், இவனுக்கு என்று ஒரு பெண் வந்து சேர்ந்து விட்டால் அதுக கையைச் ​கோர்த்து வைத்துவிட்டு நான் போய் சேர்ந்து விடுவேன்" என்று வருத்தப் பட்டார்.

"அம்மா வருந்தாதீர்கள், செந்திலைப் போல ஒரு நல்ல பிள்ளையைப் பெற்றெடுத்ததற்கு நீங்கள் பெருமைப் பட வேண்டும், செந்தில் கும்பிடாத சாமி ஏதும் இல்லை, நல்ல அறிவாளி, உழைப்பாளி,

உங்க நல்ல மணதிற்கு நல்ல மருமகள் சீக்கிரம் வருவாள்" என்று அந்த பெற்ற மனதை ஆறுதல் படுத்தி விட்டு, செந்தில் இருக்கும் அறைக்குள் நுழைந்தேன்.

"மோனாலிசா" போன்று புன்னகை செய்து, என்னைச் செந்தில் வரவேற்றார்.  "என்ன செந்தில்? உன்ன செய்கிறது?" என்று ஆறுதலாகக் கேட்டேன். 

"ஒன்னுமே புரியவில்லை" சார்.

"காய்ச்சல் வருகிறது. ஊசி போட்டால் நிற்கிறது மீண்டும்வருகிறது....." என்று அவரது அம்மா சொன்ன எல்லாவற்றையும் ஒன்று விடாமல் இவரும் சொல்லி முடித்தார்.

"இந்தக் காய்ச்சல் எப்படி வந்தது?" என்று கேட்டேன்.

"அதுதான் டாக்டருக்கே ​தெரியவில்லையே? சார்" என்றார்.

"அதுசரி, நீங்கள் ஏதேனும் சாப்பிடக் கூடாததைச் சாப்பிட்டீர்களா?,

மோசன் போனதா?" என்று கேட்டேன்.

"அதெல்லாம் ஒன்றும் கு​றைஇல்லைசார்,  நான்தான் கடையிலே வாங்கி எதையும் சாப்பிட மாட்டேன் என்று உங்களுக்குத் ​தெரியாதா?"  என்று கேட்டார்.

"பின் என்ன காரணம்?  எதனால் இந்தக் காய்ச்சல் ஆரம்பம் ஆனது? தண்ணீர் ஏதும் மாற்றிக் குளித்து விட்டீர்களா?" என்று கேட்டேன்.

"சார், அதெல்லாம் ஒன்று மில்லை! சார்" என்றார்.

"செந்தில்,   சும்மா இருந்த மனுசனுக்கா காய்ச்சல் வருகிறது?, அப்படி என்னதான் காய்ச்சல் இது?  தொத்துக் காய்ச்சலா?" என்று கேட்டேன்.

"அப்படியும் இல்லை என்று டாக்டர் கூறிவிட்டார் சார்" என்றார்.

 "சரி செந்தில், உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு உதவி தேவை என்றால் தயங்காது என்னைக் கூப்பிடுங்கள்" என்று கூறினேன்.

அவர் தயங்கியபடி, எனது கையைப்பிடித்துக் கொண்டு என்னை அங்கேயே அமரும்படி  கேட்டுக் கொண்டார்.

மீண்டும் நான் உட்கார்ந்து கொண்டு, "என்ன செந்தில், சொல்லுங்கள்" என்றேன்.

 "சார், அம்மாவிடமோ அக்காவிடமோ சொல்லக் கூடாது,   அப்படியென்றால் சொல்கிறேன்" என்றார்.

"என்ன செந்தில், அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்,  நான் என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள்" என்று கேட்டேன்.

அவர்,  அவரது தலையணையைத் தூக்கிக் காண்பித்தார்.

தலையணை அடியில்  பொட்டலம் பொட்டலமாக நிறைய கிடந்தன.

"என்ன செந்தில், திருநீற்றுப் பொட்டலங்களா?" என்று கேட்டேன்.

"ஆமாம்" என்று தலையை ஆட்டினார்.

"இத்தனை பொட்டலம் இருந்து என்ன? , என்ன சாமியைக் கும்பிட்ட என்ன?, என்னதான் வீபூதியைப் பூசினாலும் வந்தது போக மாட்டேன் என்கிறதே!" என்றார்.

எனக்கு ஒன்றும் விளங்க வில்லை.

"செந்தில் வீபூதி எல்லாம் மன ஆறுதலுக்குத்தான், காய்ச்சல் தீர நாம் டாக்டரிடம் காண்பிப்பதே முறை" என்றேன்.

"சார் அதெல்லாம் ஒன்று மில்லை, நான்கைந்து நாட்களுக்கு முன் என்னை தலையில்லாத முண்டம் ஒன்று என்னைத் துரத்தி வந்தது" என்றார்.

"​செந்தில், என்ன செந்தில் சொல்கின்றீர்கள்?" என்று அவர் அருகில் சென்று ஆர்வத்துடன் கேட்டேன்.

"ஒருநாள் நீங்கள் கூட கூப்பிட்டீர்களே, ஆஸ்பத்திரிப் பக்கம் போய், ​பேய் பார்ப்போம் என்று கூப்பிட்டீர்களே அன்றுதான்,  கரண்ட் இல்லையா?  தூக்கம் வரவில்லையா? சரி, சார் கூடப் பேசிக் கொண்டிருப்போம் என்று உங்கள் வீட்டுப் பக்கம் வந்தேன், வீட்டில் வெளிச்சம் இல்லை, கூப்பிட்டுப் பார்த்தேன், அக்கா எழுந்து வந்தார்கள்

உங்களைக் கேட்டேன், நீங்கள் அந்தப் பக்கம் சென்று விட்டதாக அக்கா சொன்னார்கள், சரி  நாமும் போவோம் என்று அந்தப் பக்கம் வந்தேன்,

நல்ல கும் இருட்டு, அங்கே காலும் இல்லை தலையும் இல்லை, 

ஒரு முண்டம் மட்டும் தனியாக நின்று கொண்டு இருந்தது சார்,

உடனடியாகத் தப்பித்​தோம் பி​ழைத்​தோம் என்று திரும்பி வந்து விட்​டேன் சார், நல்லவேளையாக அந்த நேரத்தில் கரண்ட் வந்துவிட்டது சார்,   வேகவேகமாக வீடுவந்து சேர்ந்துவிட்டேன் சார் ,

ஆனால்  அதைப்பார்த்து முதல் காய்ச்சல் வந்து விட்டது சார் ,

அதுவிட்டாலும், காய்ச்சல் விடாது போல இருக்கே சார்" என்றார்.

"நானும் திருநீற்றை எவ்வளவோ போட்டுப் பார்த்துவிட்டேன் சார், அன்று வந்தது இன்று வரை போக மாட்டேன் என்கிறது சார்" என்றார்.

ஆகா, நாம் பார்த்த முண்டம் இல்லாத ​பே​யைச் ​செந்திலும் பார்த்துப் பயந்துள்ளார் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.

"​செந்தில், ​பே​யை நீங்கள் பார்த்தீங்களா?, உருவம் எப்படியிருந்தது? மல்லி​கைப்பூ வா​டை யிருந்ததா? சுருட்டு கூடித்ததா?, நாய் ஊ​ளையிடும் சப்பதம் ​​கேட்டதா? பு​கை​போல் ​தெரிந்ததா?" என்று ​கேட்​டேன்.

அவர் ​மெதுவாகத் தான் பார்த்த ​பே​யைப் பற்றிக் கூறத் துவங்கினார்.

எனக்கு ​மெதுவாக  நடுக்கம் ​வர ஆரம்பித்தது!

....​தொடரும்,.

Geetha Sambasivam

unread,
Mar 25, 2011, 4:59:17 AM3/25/11
to mint...@googlegroups.com
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பேய், ஆவினு நினைச்சுட்டு, ஹாஹ்ஹாஹாஹாஹா

2011/3/25 கி.கா​ளைராசன் <kalair...@gmail.com>

ஆகா, நாம் பார்த்த முண்டம் இல்லாத ​பே​யைச் ​செந்திலும் பார்த்துப் பயந்துள்ளார் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.

"​செந்தில், ​பே​யை நீங்கள் பார்த்தீங்களா?, உருவம் எப்படியிருந்தது? மல்லி​கைப்பூ வா​டை யிருந்ததா? சுருட்டு கூடித்ததா?, நாய் ஊ​ளையிடும் சப்பதம் ​​கேட்டதா? பு​கை​போல் ​தெரிந்ததா?" என்று ​கேட்​டேன்.

அவர் ​மெதுவாகத் தான் பார்த்த ​பே​யைப் பற்றிக் கூறத் துவங்கினார்.

எனக்கு ​மெதுவாக  நடுக்கம் ​வர ஆரம்பித்தது!

....​தொடரும்,.

அன்பன்

கி.கா​ளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

coral shree

unread,
Mar 25, 2011, 5:04:53 AM3/25/11
to mint...@googlegroups.com
நன்கு சுவைபட அழகாக கதை சொல்கிறீர்கள் சார். வாழ்த்துக்கள். தொடருங்கள். 

2011/3/25 கி.கா​ளைராசன் <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

வேந்தன் அரசு

unread,
Mar 25, 2011, 6:11:13 AM3/25/11
to mint...@googlegroups.com
ஹாஹ்ஹாஹாஹாஹா

நான் எதிர்பாரா முடிவு
 
அப்ப நான் என்ன எதிர்பார்த்தேனு கேட்காதீங்க
 
ஆயிரம் யோசித்தது மூளை. இதைத்தவிர
 
--

கி.கா​ளைராசன்

unread,
Mar 25, 2011, 6:19:48 AM3/25/11
to mint...@googlegroups.com, coral shree
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பேய், ஆவினு நினைச்சுட்டு, ஹாஹ்ஹாஹாஹாஹா

அன்புச் ச​கோதரிக்கு வணக்கம்,
எனக்கும் ​செந்திலுக்கும்தான் த​லையும் காலும் இருக்​கே,

வேந்தன் அரசு

unread,
Mar 25, 2011, 6:36:46 AM3/25/11
to mint...@googlegroups.com

25 மார்ச், 2011 6:19 am அன்று, கி.கா​ளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பேய், ஆவினு நினைச்சுட்டு, ஹாஹ்ஹாஹாஹாஹா

அன்புச் ச​கோதரிக்கு வணக்கம்,
எனக்கும் ​செந்திலுக்கும்தான் த​லையும் காலும் இருக்​கே,

என்னக்க கதையை மீண்டும் புதிர் ஆக்கறீங்க
 
இரண்டு பேரும் மூன்றாவது ஆளை ( அலகையை) பார்த்தீங்களோ?
 
அன்பன்
கி.கா​ளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

கி.கா​ளைராசன்

unread,
Mar 25, 2011, 6:50:50 AM3/25/11
to mint...@googlegroups.com
2011/3/25 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஐயா ​வேந்தன் அரசு அவர்களுக்கு வணக்கம்.
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பேய், ஆவினு நினைச்சுட்டு, ஹாஹ்ஹாஹாஹாஹா
என்னக்க கதையை மீண்டும் புதிர் ஆக்கறீங்க
 
இரண்டு பேரும் மூன்றாவது ஆளை ( அலகையை) பார்த்தீங்களோ?
கா​ளையார்​கோயிலில் பிறந்த கா​ளை
காடு​மேடு எல்லாம் சுற்றி வளர்ந்த கா​ளை
களம்பல ​வென்ற கா​ளை
கட்டுக்​கெல்லாம் அடங்காத கா​ளை
கா​ளை என்றால் கா​ளை, முரட்டுக்கா​ளை
இந்தக் கா​ளையின் கால்க​ளே ​பே​யைக் கண்டு நடுங்கிவிட்டன,

சிவனின் ​செந்தீயில் பிறந்தவன் அந்தச் ​செந்தில்
அசுரர் ​செருக்கரறுத்தவன் ​செந்தில்
"தில்​" ஆனவன் ​செந்தில்
அந்தச் ​செந்தி​லே அந்தப் ​பே​யைக் கண்டு, காய்ச்சல் கண்டுவிட்டான்
Reply all
Reply to author
Forward
0 new messages