N. Ganesan
---------- Forwarded message ----------
From: Muthamizh Vendhan <muthami...@gmail.com>
Date: Aug 30, 7:30 am
Subject: மத்திய அரசின் தீவினையை நீக்கிட செங்கொடி மணிமேகலை அன்புத்
திருக்கோவிலைக் காஞ்சியில் கட்டுவோம், வாரீர்!!
மத்திய அரசின் தீவினையை நீக்கிட
செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக்
காஞ்சியில் கட்டுவோம், வாரீர்!!
1500 வருடங்களுக்கு முன்பு கோவலனின் தலை மதுரையில் அரசனின் அசிரத்தையால்
வெட்டப்பட்டது. ஆவணி மாதம் 23 ஆம் தேதி, பௌர்ணமிக்கு இரண்டு நாளுக்கு
முன்னால்
அது நடந்தது. அதே நாளில், அதே ஸ்ரீகர வருஷத்தில் மூன்று பேரை இந்திய அரசு
தூக்கில் போட உத்தரவு கொடுத்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!
இன்று அந்த கொடுங்கோல் உததரவை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி
வைத்திருக்கிறது.
கோவலனின் மனைவி கண்ணகியை கடைசியாகப் பார்த்து உரையாடியது செங்குன்றத்து
ஆதிவாசி
மக்கள். அந்த மக்களில் ஒருத்தியாகப் பிறந்த, திருமணமாகாத 21 வயது இருளர்
குலப்
பெண்ணான சரசு என்ற செங்கொடி, கண்ணகிக்கு நிகழ்ந்த அநீதி மீண்டும்
நடந்துவிடக்
கூடாது என்பதற்காகவும், கண்ணகியின் கோபம் மதுரையை அழித்ததைப் போல அரசின்
தவறான
தீர்ப்பால் தமிழக மக்களின் வாழ்வு அழிந்து நாசமாகிவிடக்கூடாது
என்பதற்காகவும்
கண்ணகியை மனதில் வேண்டி தன்னையே ஆவணி 11 ஆம் தேதியன்று நெருப்பிற்கு
இரையாக்கிக் கொண்டாள்.
அதற்கு அவள் தேர்ந்தெடுத்த இடமும், தேதியும், நேரமும்தான் நம்மை
அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது! ஆச்சர்யப்பட வைக்கிறது!!
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள தாலுகா ஆபீசின்
முன்பு,
அந்தி சாயும் நேரத்தில் அவள் நெருப்போடு ஒன்றிணைந்தாள். அதே இடத்தில்,
அதே
நாளில் (ஆவணி அமாவாசை), அதே நேரத்தில்தான் ( சூரிய அஸ்தமனத்தின் போது)
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்து துறவியாக மாறிய மணிமேகலை
( சரசுவின்
அதே 21 வயதில் ) அமுத சுரபியை கையிலேந்தி உலகில் பசித்திருக்கும் அனைத்து
உயிர்களுக்கும் அன்பு என்ற வற்றாத அன்னத்தைப் படைக்கப் புறப்பட்டாள்.
அரச அநீதியில் இருந்து கோவலனைக் காப்பாற்றத் தவறிய மதுரையையும், அதன்
குடிகளையும் கண்ணகியின் கோபம் அழித்ததைப்போல, முருகன், சாந்தன்,
பேரறிவாளன்
ஆகிய மூவருக்கு அரச அநீதி ஏற்பட்டு அதன் காரணமாகத் தமிழக மக்களின்
குடும்பங்கள்
அழிந்து போகாமல் தடுக்கவே மணிமேகலையின் பேரன்பை மனதில் ஏற்றி, நம்மைக்
காக்கும்
நெருப்புத் தடுப்பரணாக செங்கொடி தன்னை மாற்றிக் கொண்டாள்.
நம்மை சூழ்ந்துகொண்டிருக்கும் தீவினைகளை மனிதர்களான நாம் அறிகிறோமோ
இல்லையோ
இயற்கையும், பிராணிகளும் நன்கே அறிந்துள்ளன. 2004 ஆம் வருஷம் டிசம்பர் 24
அதிகாலை வந்த சுனாமிப் பேரலையை பிராணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே
உணர்ந்து கொண்டன. காடுகளில் உள்ள பாம்புகள் கூட்டம் கூட்டமாக இடம்
பெயர்ந்தன.
அதுபோலவே, இந்த ஆடிப் பௌர்ணமியன்று ( ஆகஸ்டு 13 ) கண்ணகி, மாதவி மற்றும்
கோவலன்
பிறந்த நகரான காவேரிப் பூம்பட்டிணம் என்ற பூம்புகாரிலும் அதனைச்
சுற்றியுள்ள
சோழ மண்டலத்தின் பெரும் பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
செங்கொடி
அக்கினித் தாயாக மாறிய அடூத்த 12 மணி நேரத்தில் தூக்குக் கயிறை
எதிர்நோக்கியிருக்கும் மூவரை அடைத்துவைத்திருக்கும் வேலூர் சிறையும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளும் பூகம்பத்தால் அதிர்ந்து குலுங்கியிருக்கின்றன.
மேலும் தமிழகத்தின் வடக்கில் உள்ள ஏலகிரி மலையில் இருந்து தெற்கில் உள்ள
பொதிகை
ம்லைவரை உள்ள அனைத்து மலைகளிலும், அவற்றின் வனப்பகுதிகளிலும் உள்ள
பிராணிகள்
இடம் பெயரத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக பாம்புகள் கூட்டம் கூட்டமாக
காடுகளில் இருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன.
இந்தத் தீவினைகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தினரையும்
காப்பாற்றிக்
கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
சுமங்கலிப் பெண்கள் அனைவரும் மதுரையைக் காக்கும் அன்னையான மீனாட்சி
அம்மனை
மனதில் துதிக்க வேண்டும்.
மாகாளி அவதாரம் எடுத்த கண்ணகியின் உஷ்ணத்தைத் தனிக்கவல்ல கடலின் நீல
வண்ணத்திலான உடுப்பணிந்து செங்கொடியும், மணிமேகலையும் உலகிற்கு அன்பு
செய்யத்
துவங்கிய காலமான அந்திசாயும் நேரத்தில் அம்மன் கோவிலுக்கு தினமும் செல்ல
வேண்டும். மத்திய அரசின் அநீதியால் தூக்கிலிடப்படவுள்ள மூவரையும் அநீதி
அரசாணையில் இருந்து விடுவிக்கக ஐப்பசி அமாவாசை வரை கார்த்திகைத்
திருவிளக்கு
ஏந்தி அம்மனிடம் பரிசுத்த மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அம்மனின் கோபத்தைத் தனிக்க தினமும் ஒருவேளை விரதமிருந்து
வெள்ளிக்கிளமைகள்தோறும் நீல உடுப்பணிந்து, அக்னி சட்டியை எடுத்தால்
கூடுதல்
நன்மைகள் உண்டாகும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாதரசிகள் புலால் உணவை
மறுத்தல் அவசியம்.
மேலும் ஆவணி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை நடக்கும் திருமணங்கள்
அனைத்திலும்
மணமேடையின் பின்புறத்தை நீலத் துணியால் அலங்கரிப்பதுவும், மணமக்களின்
வல்து
மணிக்கட்டில் நீலத் துணியைக் கட்டிக் கொள்வதும் அம்மனின் கோபத்தைத்
தணிக்கும்
செயல்களாகும்.
செங்கொடியும் மணிமேகலையும் உலகின் அனைத்து உயிர்களையும்
காப்பாற்றுவதற்காக
அன்புருவம் ஏற்ற அதே இடத்தில் அவர்களின் பெயரில் அன்புத் திருக்கோவிலைக்
கட்டுவதே மாகாளித் தாயின் சினத்தை முற்றிலும் தனிக்கும் செயலாகும்.
செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக் காஞ்சி மாநகரில் கட்டும்
பணியில்
ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணின் குடும்பமும் விருத்தியடைந்து, சகல வளங்களையும்
பெறும் என்பது நிச்சயம்.
- பத்துமலை முருகையன்,
ஆன்மீக அறிஞர்,
பத்துமலை, மலேசியா
--
RR Srinivasan,
OHO PRODUCTIONS
106/2 First floor,Kanaga durga complex,
Gangai Amman koil street,
Vadapalani,
Chennai - 600 026.Tamilnadu India.
PH-094440-65336 , 044-24839293
Mail: rr18sriniva...@yahoo.com
www.poovulagu.org
http://www.facebook.com/r.r.srinivasan
--
என்றும் அன்புடன்,
கீற்று நந்தன்
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சிறிதரன்
நீதி மன்ற / நீதிபதி தீர்வுகளை “மத்திய அரசு” என காண்பிப்பது தவறு. எந்த
ஜனநாயகத்திலேயும் Executive Judiciary Parliament என 3 சுயமான பகுதிகள்
உள்ளன. அரசாங்கம் Executive . நீதிமன்றம் அரசாங்கத்தின் ஒரு பகுதியில்லை.
இரண்டையும் ஒன்றாக குழப்பியிருக்கும் தலைப்பில் உள்ள பிழையை சுட்டிக்
காட்டினேன்.
ஒரு அரசியல் தற்கொலையை ஒரு தெய்வச்செயலாக பார்த்து, அதற்கு கோவில்
கட்டுவது ஆகாது, சரி இல்லை. அதையும் சுட்டிக் காட்டினேன்.
இதைத்தான் emotional bulldozing and emotional blackmail என
குறிப்பிடுகிறேன். மற்றவர்கள் என் கருத்துடன் - தற்கொலை மீதான
கருத்துடன், தற்கொலையை மதச்செயலாக கணித்து போற்றாவிட்டால் , என உணர்வுகளை
மதிக்கவில்லை, அதனால் அவன் வாயை மூடு.
நான் என்ன சொன்னேனோ அதற்கு உடனடியாக உதாரணம் செய்துகாட்டி விட்டீர்கள்.
நான் உங்களையோ, மற்றவர்களையோ மத, இனம், ஜாதி, உருவம், பால், மொழி வேறு
எந்த அடிப்படையிலும் இழிவாகப் பேசவில்லை
விஜயராகவன்
எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும் இம்மாதிரி மடல்கள் ஏன் தொடர்ந்து
வருகின்றன எனத்தெரியவில்லை.
அதுவும் கணேசனார் எம் நிலை அறிந்தும் அரசியல் இடுகைகளை இங்கு ஏன்
இடுகிறார் என்று தெரியவில்லை? நாமென்ன பரபரப்பிற்கு ஏங்கி நிற்கும்
குழுவா? இல்லை, நீங்காமல் அட்ரிநிலின் உயர் மட்டத்தில் நிற்க வேண்டும் என
முயலும் குழுமமா?
காலக்கணக்கு சொல்ல வருகிறார் எனில் அம்மடலில் சொல்லப்படும் கால விவரத்தை
மேற்கோள் காட்டிப்பேசமுடியாதா?
ம்ம்ம்..என்ன சொல்ல?
நா.கண்ணன்
2011/8/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
I sent this message for 2 reasons
(a) to see how the ancient Marabu
of the Tamil Kavyas - Kannaki and Manimekalai
are invoked, and temples are going to
be built for the Irula girl, Senkodi Manimekalai,
as the Manimekalai epic goddess temple
at Kanchipuram.
(b) to show how old Tamil calender is still
working in the minds of traditional Tamil
scholars.
May help in your research,
N. Ganesan
On Aug 30, 12:50 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> When two elephants fight the grass suffers much
>
> Let Min Tamil remain value neutral without taking sides
>
> It is a fact that every human heart with milk of kindness will empathize
>
> Why we need to discuss this explosive topic to paint our face black
>
> Dr.Na.Ganesan is a perpetual posting machine
>
> Let us read without reacting
> Nagarajan
>
> 2011/8/30 விஜயராகவன் <viji...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Special Correspondent
The Hindu
Tamilnadu-Chennai
Children protest incarceration of Dr. Binayak Sen

Drumming up support: Members of Kanchi Makkal Mandram performing in Chennai on Thursday as part of a protest to seek the release of Dr. Binayak Sen.
அவருடைய தனிப்பட ஆர்வம் ஈழத்த்மிழர்கள் துயரத்தை நாட்டுப்புறக்கலை மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com