அதெல்லாம் சரி, இந்தத் தேனும் தினைமாவும்?
யாராவது சாப்பிட்டு இருக்கிறீர்களோ? (சுபா, உங்க அடுத்த பேட்டியிலே இதோட
receipe :-)
மாவைப் போட்டு தேனில் பிசைந்தால்...எனக்கென்னவோ நன்றாக இருக்கும் என்று
தோன்றவில்ல! வெறும் சக்கரைச் சத்து! விருந்திற்கு புரதம் வேண்டாமோ?
கொஞ்சம் தொட்டுக்க ஊறுகாய்? ஆமாம் சங்ககால உணவு எப்படி இருந்திருக்கும்?
க.
அதெல்லாம் சரி, இந்தத் தேனும் தினைமாவும்?
யாராவது சாப்பிட்டு இருக்கிறீர்களோ? (சுபா, உங்க அடுத்த பேட்டியிலே இதோட
receipe :-)
மாவைப் போட்டு தேனில் பிசைந்தால்...எனக்கென்னவோ நன்றாக இருக்கும் என்று
தோன்றவில்ல! வெறும் சக்கரைச் சத்து! விருந்திற்கு புரதம் வேண்டாமோ?
கொஞ்சம் தொட்டுக்க ஊறுகாய்? ஆமாம் சங்ககால உணவு எப்படி இருந்திருக்கும்?



குமுரன்:
குறளோவியம் போல் சங்கச் சித்திரம் அருமை!
எனது சிந்தனைகள் இன்னும் வேறுவிதமாக பயணிக்கின்றன.
சங்கப்பாடல்கள் புதுக்கவிதை போல் சந்தம், அலகு (meter)போன்றவைகளைக் கண்டு
கொள்ளாமல் எழுத்தப்பட்டிருக்கின்றன (விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக
அப்படித்தான் இருக்கின்றன). அப்படி இருக்கும் போது இந்தப்பாடலுக்கு
மெட்டமைத்துப் பாடுவது மிகவும் சிரமம். சங்ககால வார்த்தைப் பிரயோகங்களும்
கடினமாக உள்ளன. கண்ணதாசன் பாடல் போல் எளிமையாய் இருப்பதில்லை.
மொழியிலேயே இசை இருப்பது உண்மைதான் என்றாலும் அவை 'இசைப்பா' அல்ல (உம்.
தேவாரம், திவ்யப்பிரபந்தம்). எனவே பாணர் இந்தப்பாட்டிற்கு எப்படி இசை
அமைத்திருப்பார் என்றொரு கேள்வி எழுகிறது. இப்போதுள்ளது போல் சிம்பொனி
இசை இல்லாத காலத்தில் பாடுவதற்கு எளிய சொற்கள், சந்தம் இருந்தால்
மெட்டிசைப்பது எளிது.
சங்கப்பாடல்களை விருத்தமாகத்தான் பாடமுடியும் போல் தோன்றுகிறது. எம்.எஸ்
அம்மா சிலப்பதிகாரம் பாடியிருக்கிறார்கள். ஆனால் அப்பாடல்
வித்தியாசமானது. மதுரை சேஷகோபாலன் அமெரிக்காவில் சிலப்பதிகாரம் பாடினார்
என்று கேள்வி.
யாராவது இப்படி புறநானூறு, கலித்தொகை பாடல்களைப் பாடியுள்ளார்களா? (gazal
பாடுவது போல்!).
க.
தேனும், தினை மாவும் என்பது வெறும் representative உணவுதானா? இல்லை அதை
மட்டுமே உண்டு வந்தனரா?
This looks very poor in nourishment.
கண்ணன்
வேந்தன் அரசு ஐயா,
எனக்கு சிறுபாணாற்றுப்படை எப்போது எழுதப்பட்டது என்பதில் தெளிவில்லை. ஏன் அது கபிலரின் காலத்திற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
அன்பன்,
குமரன்.
அன்பான பாராட்டுகளுக்கு நன்றி கண்ணன் ஐயா.
நாம் இப்போது புரிந்து கொள்வது போல் மெட்டமைப்பது சங்க பாடல்களுக்கு கடினம் தான் ஐயா. ஆனால் பல சங்கப்பாடல்களுக்குக் கீழேயே அவற்றை எழுதியவர் யார்; பண்ணமைத்தவர் யார் என்ற குறிப்புகளும் கிடைக்கின்றன. பரிபாடலில் இதனை மிகுதியாகப் பார்க்கலாம். அதனால் இன்றைக்கு நமக்குப் புரியாத ஏதோவொரு வகையில் அந்தப் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
சங்க கால வார்த்தைகள் கடினமாக இன்றைக்குத் தோன்றினாலும் அன்றைக்கு அப்படி தோன்றியிருக்குமா என்பது ஐயமே. இன்றைக்குப் பாரதியின் பல பாடல்களே கடினமாகத் தோன்றுகிறது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் பதம் பிரித்தால் நமக்கெல்லாம் பாரதியார் பாடல்களும் ஆழ்வார் நாயன்மார் பனுவல்களும் புரிந்துவிடுகின்றன அல்லவா? அதே போல் சங்க இலக்கியங்களும் உரைகளின் துணையுடன் கொஞ்சம் உள் நுழைந்து பார்த்தால் எளிதாகப் புரிந்து விடுகின்றன.
சங்க இலக்கிய பாடல்களை இன்றைக்கு இசையமைத்துப் பாடியவர்களை யான் அறியேன்.
அன்பன்,
குமரன்.
பாராட்டுகளுக்கு நன்றிகள் வேந்தன் அரசு ஐயா. தங்களின் ஐயம் சரியே. தடவுவாய் என்ற சொல்லிற்கு நேரடியான பொருள் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்த்த உரையில் இல்லை. திரண்ட பொருளில் 'பெரிய இடத்தையுடைய சுனையின் கண் தழைத்த கரிய இதழையுடைய நீலத்தினது...' என்று இருக்கிறது. அதனால் 'தடவுவாய்' என்பதற்கு 'தட + உவாய்' என்று பிரித்து பொருள் கொண்டேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்வது போல் தடம் என்பதற்கு குளம்/தடாகம் என்ற பொருள் இருப்பதை உணர்கிறேன்.
இப்போது மீண்டும் அந்த உரைக்குச் சென்று பார்த்த போது இன்னொரு குறிப்பும் இருப்பதைக் காண்கிறேன். அதனை இங்கே தருகிறேன் - 'தடவு - தாழியுமாம். 'தாழிவாய்க் குவளை', 'தாழிவாய் மறைக்கும் தண்ணென்றடம்பெரும் குவளைக்கண்ணார்' (சீவக. 833, 2974); தடவுவாய்: அன்மொழித்தொகை.
அன்பன்,
குமரன்.
> "தயக்கமே வேண்டாம் அம்மையே. யாராக இருந்தாலும் எத்தன்மையராக இருந்தாலும்
> இரவலராகச் சென்றால் பாரி கட்டாயம் பரிசில் வழங்குவான்"
>
இது என்ன மனோபாவமென்று வியக்கிறேன்! கர்ணன் கதை கேட்டும் வியப்பதுண்டு!
"என்ன கொடுப்பான்? எவை கொடுப்பான்? என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன் கொடுப்பான், பொருளும் கொடுப்பான், போதாது, போதாது என்றால்
தன்னைக் கொடுப்பான், தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே!"
இது கண்ணதாசன் வரிகள். நெஞ்சில் பதிந்த வரிகள்.
ஆனால் இப்படி யாராக இருந்தாலும் எத்தன்மையராக இருந்தாலும் இரவலராகச்
சென்றால் பாரி கட்டாயம் பரிசில் வழங்குவான்!
என்னும் போது, அவனுக்கு நிதி கொடுக்க, கஜானா எப்போதும் நிறைந்திருக்க
ஏதாவது வழி வேண்டுமே? என்ன வழியது? வியாபாரம், போர்?
தன் உயிரைத்தான் கொடுத்தல் என்பது கூர்தலியல் நியமத்திற்கு மாறாக
இருக்கிறது. தற்காத்துத் தற்கொண்டாற் பேணுதல் கூர்தலியல் தகைசார்மை.
இதற்குப் புறம்பாக வாழுதல் என்ன வாழ்வியல்?
மனித பரிணாமத்தில் மட்டுமே கலாச்சாரக் கூறு (cultural evolution)
இருக்கிறது. இது அப்பாரிணாத்தின் உச்சக்கட்டம் போலும்!
கண்ணன்

எங்கு வருகிறீர்கள் என்று தெரியவில்லை ;-) வேளிர் குலக்கொழுந்து கண்ணன்.
இவன் சங்கத்தலைமை வகித்ததாக தமிழ்.வலையில் முன்பு ஜே.பி
சொல்லியிருக்கிறார்;-)
கண்ணன்
கண்ணன் ஐயா,
முழுக்கதையும் 15 பகுதிகளில் முடியும். எந்தக் கருத்தையும் முடிந்த முடிபாகச் சொல்லப் போவதில்லை. கிடைத்த தரவுகளின் படி ஒரு கதையை எழுதுகிறேன். அவ்வளவு தான். அந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பதைச் சீர்தூக்கிப் பார்த்து எது சரி எது தவறு என்று சொல்ல வேண்டியது அறிஞர் பெருமக்களின் பொறுப்பு. இங்கே தாங்களும் மற்ற அறிஞர் பெருமக்களும் இருக்கிறீர்கள். எல்லோரும் சொல்வதைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன். :-)
வேளிர்கள் துவரையம்பதியிலிருந்து வந்ததாக இலக்கியக் குறிப்புகள் இருப்பதாக அறிகிறேன். துவரையம்பதி என்றால் துவாரகை என்று சிலரும் துவாரசமுத்திரம் என்று சிலரும் சொல்வதாகவும் அறிகிறேன். வேளிர்கள் துவாரகையிலிருந்து வந்தவர்கள் என்றால் கண்ணனின் பரம்பரையினர் அவர்கள் என்று சொல்லலாம். திரு.ஜே.பி. அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்க ஆவல். அவரது கட்டுரைக்குச் சுட்டி இருக்கிறதா?
அன்பன்,
குமரன்.
வேந்தன் அரசு ஐயா,
எனக்கு சிறுபாணாற்றுப்படை எப்போது எழுதப்பட்டது என்பதில் தெளிவில்லை. ஏன் அது கபிலரின் காலத்திற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
இந்த உளவியல் புரியவில்லை?
நாடு முற்றுகையில் இருக்கும் போது பரிசிலருக்கு கொடுக்க என்ன இருக்கும்?
கோபியைருக்கு கிருஷ்ண கதை ஜீவனம் என்கிறார்கள்.
பாரிக்கு தானம் கொடுப்பதுதான் ஜீவனமா?
கொடுத்துச் சிவக்கும் கைகளையே பார்த்து, ரசித்து பழகிவிட்டது காரணமா?
கொடுக்க ஒன்றுமில்லை என்றால் என்னாகும்?
கர்ணன் கதையில் சாகும் தருவாயிலும் தான் இதுவரை பெற்ற தான தர்மத்தையும்
தாரை (இரதத்தால்) வார்த்துவிடுகிறான்.
பாரி, கர்ணனின் தமிழ் வார்ப்பா? பாரி எவ்வளவு தூரம் போகிறான்?
கண்ணன்
அவ்வளவு வள்ளல் குணமுள்ள அவனால் தன் பெண்களை கன்னிகாதானம் செய்ய
முடியவில்லை என்பது முரண். குடிப்பெருமைதான் சாதீயமாக வளர்கிறது
தமிழ்நாட்டில்! "எங்கள்" குலம், குடி, சாதி என்பதன் உளவியல் அடிப்படை
ஒன்றுதான். தான் உயர்ந்தவன் அடுத்தவன் தாழ்ந்தவன் எனும் மனோபாவம். இது
இன்றளவும் தமிழ் மண்ணில் வாழ்கிறது என்பதற்கு பாரியே சாட்சி. தன்
குடிப்பெருமைக்காக தன் உயிரைக் கொடுக்கிறான்.
இப்படியாகிவிட்டதே என்று ஒரு நண்பரும் உயிரைவிடுகிறார். எவ்வளவு
செயற்கையான விஷயங்களுக்காக இன்னுயிர் மாய்கிறது, பாருங்கள்! கலாச்சாரப்
பரிணாமத்திலும் இயற்கைத் தேர்வு (natural selection agent) எப்படியோ வேலை
செய்வது ஆச்சர்யமாக இருக்கிறது. கலாச்சாரப் பரிணாமம் இல்லையெனில் பாரி
போரில் மாண்டிருப்பான். வஞ்சிக்கப்பட்டு சாவது கலாச்சாரப் பரிணாமத்தின்
கூறு.
ஹூம்...
க.>
2008/9/10 Kumaran Malli <kumara...@gmail.com>:
பாரியின் கதை சோகமாக உள்ளது.
ஐயா. சில இடங்களில் மட்டுமே நானே பொருளைச் சொல்கிறேன். பெரும்பாலும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கும் உரை நூலில் இருக்கும் பொருளையே சொல்கிறேன். இந்த அடிகளின் பொருளும் அங்கு படித்ததாகவே நினைவு.
நன்றி.
அன்பன்,
குமரன்.
அந்தப் பாடலைப் பற்றிய குறிப்பைத் தாருங்கள் ஐயா. இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் தேடிப் படிக்கிறேன்.
அன்பன்,
குமரன்.
நீங்கள் சொல்வது சரி தான். அருகாமை என்றால் குறைவற்றல் என்ற பொருளையும் தருகிறது இல்லையா? இனிமேல் அருகாமை என்று எழுதத் தோன்றும் போது அண்மை என்று எழுதிப் பழகுகிறேன்.
நன்றி ஐயா.
கண்ணன் ஐயா.
பாரி குடிப்பெருமை கொண்டிருந்தான் என்பதற்கும் மூவேந்தர் பாரியை சதி செய்து கொன்றனர் என்பதற்கும் நேரடியான இலக்கியச் சான்றுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. இருந்தால் அறிந்தவர் சொல்லுங்கள்.
பாரி வேளிர் குலத்தவன்; அவன் மூவேந்தர்களுக்கு மகண்மறுத்தான்; அவன் மகளிரை கபிலரிடம் அடைக்கலமாகக் கொடுத்தான்; கபிலர் வேளிர் குலத்தவரான மன்னர்களிடம் சென்று பாரி மகளிரை மணக்கும் படி இரக்கிறார்; இறுதியில் வேளிர் குலத்தவனான மலையமானைப் போற்றுகிறார் - இவற்றிற்கே இலக்கிய சான்றுகள் இருக்கின்றன. கடைசியில் கபிலர் குன்றில் வடக்கிருந்து உயிரை விட்டார் என்பதற்கு இராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுச் சான்று இருக்கிறது. இவற்றை வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்/எழுதுகிறேன். பாரியின் குடிப்பெருமையைப் பற்றியும் கபிலரின் பாடல்களில் கிடைத்த குறிப்பை வைத்து மூவேந்தர் சதி செய்து பாரியைக் கொன்றனர் என்பதும் கிடைத்த இந்த சான்றுகளை வைத்தே உய்த்துணர்ந்து எழுதினேன். அவற்றிற்கு நேரடியான சான்றுகளை நான் இன்னும் காணவில்லை என்பதை இங்கே சொல்லி வைக்க விரும்புகிறேன்.
அன்பன்,
குமரன்.
அந்தப் பாடலைப் பற்றிய குறிப்பைத் தாருங்கள் ஐயா. இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் தேடிப் படிக்கிறேன்.

இதை வைத்து துல்லியமாகப் பாரியின் காலத்தைச் சொல்லிவிட முடியுமே! நம்ம
கணக்குப் புலிகள் யாராவது முயன்றுள்ளார்களா?
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்....புகை போல் பள்ளிநாட்கள் நினைவிற்கு
வருகின்றன. எத்தனை நூற்றாண்டுகள் அழிந்து போயினும் இப்பாடல் இன்னும்
வாழ்கிறதே!
வாழ்த்துக்கள் குமரன். நல்ல கதை சொல்லி!
க.>
இதை வைத்து துல்லியமாகப் பாரியின் காலத்தைச் சொல்லிவிட முடியுமே! நம்ம
கணக்குப் புலிகள் யாராவது முயன்றுள்ளார்களா?
ஓ! நம்ம கதை சொல்லி அவை நடைபெற்றதாக அல்லவோ சொல்கிறார் ;-)
மன்னனின் செங்கோல் அதைக் காத்தது என்றும்.....
க.;-)
வரட்சி
வேந்தன் ஐயா. வரட்சியா வறட்சியா? நாளிதழ்களில் எல்லாம் வறட்சி என்று படித்ததாக நினைவு.
அப்படியே....
நிருவாகம், நிறுவாகம்
இந்த "ர" "ற" பிறழ்சி பற்றி முன்பு ரெ.கா எழுதியிருக்கிறார்.
கல்வெட்டுக்களில் இது அதிகம்! நாறாயண! நாறாயண! (றஞ்சி மன்னிப்பாராக!)
க.;-)
வரட்டுத்தனம் இல்லை என்று சொன்னதற்கு நன்றிகள் ஐயா. தட்டுப்பிழையாக இருந்து நான் இப்படி கேட்டதால் மனம் வருந்தியிருந்தால் சீறி அருளாதீர்கள்.
அன்பன்,
குமரன்.
-~----------~----~----~----~------~----~------~--~---
வரட்டுத்தனம் இல்லை என்று சொன்னதற்கு நன்றிகள் ஐயா. தட்டுப்பிழையாக இருந்து நான் இப்படி கேட்டதால் மனம் வருந்தியிருந்தால் சீறி அருளாதீர்கள்.
வேந்தன் அரசு ஐயா.
என்னுடைய தவறு தான். மூலத்தில் 'மணந்த' என்று தான் இருக்கிறது. உரைநூலும் பாறையும் சிறுகுவடும் கூடிய என்று தான் பொருள் சொல்கின்றது.
அதே போல் 119ம் பாடல் வரிகளும் நீங்கள் சொன்னது போலவே இருக்க வேண்டும்.
தவறுகளைத் திருத்தி உதவியதற்கு நன்றிகள்.
அன்பன்,
குமரன்.
அப்படி என்றால் இங்கே எனக்கு நடப்பது தேர்வு என்று சொல்கிறீர்கள். அது சரி தான். ஆனால் நீங்களும் இங்கிருக்கும் மற்ற அறிஞர்களும் விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியர்கள்
முக்கியமான தடயம் கிடைத்திருக்கிறது!
நம்மாழ்வார் "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்" என்று
சொல்வதற்கு மேலும் பொருள் கூடுகிறது.
நீங்க பரீட்சையிலே பாஸ் :-))
கண்னன்
நீங்க பரீட்சையிலே பாஸ் :-))
வேந்தரே!
சங்கத்தில் நீங்கள் அல்லவோ பாஸ் ;-)
துவரம்பதி பற்றி ஓர் ஆய்வாளரை சமீபத்தில் சென்னையில் சந்தித்தேன். அவர்
தந்த வெளியீடுகளை மீண்டும் வாசித்து ஒத்த தகவல் இருந்தால் தருகிறேன்.
ஜேப்பி சொன்ன சங்கத்தலைவன் கண்ணன் என்பதற்கு எந்த ஆதாரமும் கை வசமில்லை.
தமிழ்.வலையில் தேடினால் அவரது இடுகை கிடைக்கலாம்.
உங்கள் கணக்கும் சுவாரசியமாக உள்ளது. 49 தலைமுறைகளில் சிந்து மக்கள்
எப்படித் தென்னகம் வந்தனரோ அதே போல் ஜெர்மனிவரை போயிருப்பதாக ஒரு
விரிவுரை ஜெர்மனியில் கேட்டுள்ளேன்.
கண்ணன்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
If truth is God then God is on my side.
ஏதோ மர்மமாக இருக்கிறதே! நல்நிமித்தம் இல்லாத போதும் கபிலன் சென்று அங்கு
வேண்டியதைப் பெறுகிறானே. இதன் ரகசியம் என்ன?
க.>
அவ்வளவுதானா :-)
சரி, சரி இது பகுத்தறிவு பிரவச்சனமா? ;-)
இந்தப் புள் நிமித்தம் காட்சிக்கு எதை ஆதாரமாகக் கொள்கிறீர்கள்?
க.>
அப்படி வாங்க! சங்கத்தமிழன் நல் நிமித்தம் நல்லது செய்யும் என்று
நம்பினான் எனில் அப்படித்தான் கதைப்போக்கும் இருக்க வேண்டும் ;-)
கலைஞர் குறளோவியம் போலல்லாவா ஆகிவிடும் :-))
க.>
பிகு: கோவிச்சுக்காதீங்க குமரன். இதிலே ஒரு சின்ன சூடசுமம் இருக்கு.
புரியும் என்று நம்புகிறேன்;-)
கண்ணன் ஐயா,
கலைஞர் கருணாநிதியின் குறளோவியம் படித்ததில்லை. அதனால் நீங்கள் எதனைக் குறிக்கிறீர்கள் என்று சரியாகத் தெரியவில்லை. வலிந்து 'இறை மறுப்பு, வினை மறுப்பு' போன்றவற்றை தரவிற்கு முரணாகத் தருகிறேன் என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா? இந்தப் புரிதலுடன் நான் சொல்லும் விளக்கம் இதோ.
சங்கத் தமிழனுக்கு நிமித்தங்களில் நம்பிக்கை உண்டு என்பது தான் தரவுகள் சொல்வது. இங்கும் நிமித்தங்களில் நம்பிக்கை இல்லை என்றோ நிமித்தங்கள் வருங்காலம் சொல்லாது என்றோ சொல்லவில்லை. -'னாள் நல்லதாக இல்லாமல் போனாலும், புள் நிமித்தம் நின்று தடுத்தாலும், முறையின்றிப் புகுந்தாலும், திறனில்லாதவை சொன்னாலும் மலையனிடம் பொருள் வேண்டி வந்தவர் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை' என்று சொன்ன பாடலைப் படிக்கும் போது அதனைக் கதையில் எப்படி சொல்லலாம் என்று சிந்தித்ததில் அமைந்தது இந்த கதையாடல்.
'எப்பாடும் பேர்ந்து உதறி' அவனை வேண்டிச் சென்றால் அவர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லமாட்டார்கள் என்று 'பூவை நிலை'யில் மலையனைச் சொன்னது போன்றும் தோன்றுகிறது.
'இன்று நல்ல நாள்' என்று சொல்லிக் கிளம்புகிறார் கபிலர். ஆனால் புள் நின்று தடுக்கிறது. நாம் செல்லும் காரியம் மிக முக்கியம் என்றால் நாளும் கோளும் புள்ளும் நின்று தடுத்தாலும் ஏதேனும் சமாதானம் சொல்லிக் கொண்டு முன்னேறிச் செல்வது நாமும் இப்போது செய்வது தானே. அந்த உளவியல் இங்கே சொல்லப்பட்டது. ஆனால் நிமித்தங்களில் தமிழர்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்றோ நிமித்தங்கள் வருங்காலம் உரைக்கா என்றோ சுட்டப்படவில்லை. அப்படிச் சொன்னால் தரவுக்கு ஏற்றதாக கதை அமையவில்லை என்று சொல்லலாம்.
'இன்று நல்ல நாள். ஆனால் நல்ல நாளாக இல்லாமல் போயிருந்தாலும் மலையனிடம் வேண்டியது கிட்டியிருக்கும். புள் நின்று தடுத்தது. ஆனாலும் மலையனிடம் வேண்டியது கிட்டும். முறை தவறி முண்டி மோதிக் கொண்டு புலவர்களும் இரவலர்களும் நுழைந்தனர். ஆனாலும் மலையனிடம் வேண்டியது பெற்றனர். இரவலர்கள் மொழிப்புலமை இல்லாததால் தப்பும் தவறுமாக திறனில கூறினார்கள். ஆனாலும் மலையனிடம் வேண்டியது பெற்றனர்' பாடலைக் கொண்டு கதையின் போக்கு அமைந்தது இப்படியே.
அடுத்தப் பாடல் எப்படி கதையின் போக்கினைச் சொன்னது என்றும் விளக்கலாம். வேண்டுமாயின்.
அன்பன்,
குமரன்.
வேண்டுமாயின்.....;-)
வேண்டற்பாலது!
நன்றி.
க.>
மயிலை சினி வேங்கடசாமி எழுதிய சங்க கால தமிழக வரலாறு என்ற பொத்தகத்தில் பல்யானை குட்டுவன் ஒரு போரில் உன்னமரத்தை வெட்டிச்சாய்தான் என குறிபிடுகிறார் .
உன்ன மரம் தன் இலையை உதிர்த்து தன் மன்னனுக்கு வரும் தீங்கினை முன்பே அறிவிக்கும் திறன் வாய்த்தது என ஒவ்வொரு மன்னரும் அதை அரண்மனையில் வளர்ப்பது வழக்கமாம் .
இவ்வாறு சங்ககாலத்தில் பல நிமித்தங்கள் பார்க்கப் பட்டதற்கு பல குறிப்புகள் இருப்பதாக நினைக்கிறன் .
நிமித்தம் பார்ப்பது தமிழர் வாழ்வில் சங்க காலம் தொட்டு உள்ளது .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
நிமித்தம் பார்ப்பது தமிழர் வாழ்வில் சங்க காலம் தொட்டு உள்ளது .
பண்பு வேறு; பண்பாடு வேறு. தனி மாந்தனின் இயல்பைப் பண்பு என்கிறோம்.
மக்கள் இனத்தின் இயல்பைப் பண்பாடு என்கிறோம். தமிழ் இனத்துக்கு உரிய
மொழி, இலக்கியம், கலைகள், கட்டடத் தொழில்நுட்பம், மருத்துவம், விழாக்கள்,
வழிபாட்டுமுறை, சடங்குகள், கொள்கைகள், உணவு முறை, உடை முறை, அணிகலன்கள்,
தட்டுமுட்டுகள், விளையாட்டுகள், விழாக்கள், பழக்க வழக்கங்கள்,
நம்பிக்கைகைள் முதலிய அனைத்தும் தமிழ்ப் பண்பாட்டில் அடங்கும். இவை நமது
தமிழ் இனத்துக்கு அடையாளமாக உள்ள கூறுகள் ஆகும். இந்த அடையாளத்தை நமது
இனம் மரபு வழியாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது. இந்தப் பண்பாட்டை
இழந்தால் நமது இனம் தமிழர் என்ற பெயரை இழந்து, மக்கட் கடலில் கலந்த
நீர்த்துளிகளாகி முகவரி இல்லாமற் போய்விடும். இனித் தமிழ்ப் பண்பாட்டுக்
கூறுகளில் சிலவற்றை விரிவாகக் காண்போம்.
நம்பிக்கைகள் : வேப்பமரமும் அரசமரமும் இணைந்து வளர்ந்திருந்தால் அங்கே
தெய்வம் இருப்பதாக நம்புதல், பிள்ளை இல்லாதவர்கள் அரசமரத்தைச் சுற்றுதல்,
நல்லநாள், இராகுகாலம், குளிகைகாலம் பார்த்தல், சகுனம் பார்த்தல்,
கனவுகளுக்கு விளைவு உண்டு என்று நம்புதல், பிறந்த குழந்தைக்கு மண் பொட்டு
இடுதல், மணம் முடிந்து வரும் பெண் வலக்காலை எடுத்துவைத்துப் புக்ககத்தில்
நுழைதல், தும்மினால் வாழத்துதல், கணவனை இழந்தோர் மஞ்சள் பூ, பொட்டு,
வளையல்களை விலக்குதல், ஆண்கள் புதன் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய்
வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகல், கிரகணம்
பிடித்திருக்கும் நேரத்தில் உணவு உண்ணாமை, அப்போது, கருவுற்ற பெண்கள்
துரும்பைக் கிள்ளினால் கருச் சிதையும் என்றெண்ணுதல் முதலியன சில
நம்பிக்கைகள்.