


சீரார் இன்சொல்மாலைகள் !
நீங்கள் கற்பிக்கும் விதம் மேலும் இனிமை சேர்க்கிறது.
*வாசி வல்லீர்! இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!*
எம்பெருமானுக்கு இவர் கூறும் வன்சொற்களே உகப்பைத் தருகின்றன போலும்!
தேவ்
என்ன குமரன்? இப்படித் திடீரென்று?
~காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்~ என்றார்படி..
கொட்டித்தீர்த்துவிட்டீர்!
எத்தனை அமுதமுதான பாசுரங்கள். ஒவ்வொன்றாய், கற்கண்டை வாயிற் போட்டு
மெல்லுவது போல் சுவைக்க வேண்டாமோ? இப்போது கூட பதிலெழுத வேண்டுமேயென்று
வாசித்து முடித்தேன்.
என்ன நடை! என்ன பாவம்!
பரகாலநாயகி X பாராங்குச நாயகி என்பதே ஒரு பெரும் தலைப்பாச்சே!
பரகாலநாயகிக்கு துடுப்பு அதிகம். நன்றாக கேட்கத்தெரியும். எல்லாம்
`மடியைப்பிடி` கேள்விகள். இவர்களிடம் மாட்டிக்கொண்டு மாலன் :-)
அற்புதம்..அற்புதம்...
வாழ்த்துக்கள். ஜமாய்ச்சுட்டீர்!!
கண்ணன்
இவ்வளவு அழகான தலைப்புக் கொடுத்து இருக்கிறீர்களே! அதையும் கொஞ்சம்
விளக்கிச் சொல்லுங்கள்.
ஆமாம் என்ன திவாகர் ஒன்றும் சொல்லவில்லை? கலியன் உறவாச்சே அவர்? :-)
க.>
நன்றி தேவ் ஐயா. அனைத்துமே முன்னோர் உரைகள். சிறிதே புதுமை சேர்த்தேன். தன் துணைவியாருடன் சேர்ந்தே காட்சி தரும் ஆழ்வார் இவர் மட்டும் தானே; அதனால் 'எம்மை', 'எங்களை' போன்ற பன்மைச் சொற்றொடர்களைப் பாசுரத்தில் பார்த்ததும் இவர்கள் இணைந்தே காட்சி தருவது நினைவிற்கு வந்து பரமபாகவதையான நாச்சியாரும் இணைந்தே இப்பாசுரங்களைப் பாடுவது போல் பொருள் உரைத்தேன். இதில் இருக்கும் அனைத்துமே முன்னோர் சொன்னது. பிழைகள் இருப்பின் அடியேன் புரிதல் பிழைகளே. எழுத்துப்பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இருந்தால் சொல்லி அருள வேண்டும்.
அன்பன்,
குமரன்.
உண்மை தான் கண்ணன் ஐயா. ஒவ்வொறு பாசுரமாய் ஆழ்ந்து அனுபவிப்பதே முறை. இந்த முறை இரவிசங்கர் கட்டளையால் திருவிந்தளூர் பாசுரங்கள் அனைத்தும் ஒரே இடுகையில் எழுதிவிட்டேன். திகட்டாத அமுதம் எனினும் இடுகை கொஞ்சம் நீளமாகத் தான் அமைந்துவிட்டது.
வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
//தன் துணைவியாருடன் சேர்ந்தே காட்சி தரும் ஆழ்வார் இவர் மட்டும் தானே;
அதனால்
'எம்மை', 'எங்களை' போன்ற பன்மைச் சொற்றொடர்களைப் பாசுரத்தில் பார்த்ததும்
இவர்கள் இணைந்தே காட்சி தருவது நினைவிற்கு வந்து பரமபாகவதையான
நாச்சியாரும்
இணைந்தே இப்பாசுரங்களைப் பாடுவது போல் பொருள் உரைத்தேன்//
நல்ல ரஸிகத்தன்மை !
எழுத்துப்பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இருந்தால்..//
இது கூடியிருந்து குளிர்ந்து அனுபவிக்கும் குழாம்;
தவறான பாடங்கள் பரவிவிடக் கூடாது என்னும் நோக்கில்
ஒன்றிரண்டு கூர நேரலாம்.
மஹா யோகீசுவரர்களான பல ஆழ்வார்களும்
அந்தர்யாமியான அச்சுதனையும் ஒதுக்கிவிட்டு அர்ச்சையில்
மண்டிக்கிடந்தனரே !
எத்தகுதியுமற்ற நாம் அவனை இழந்துவிடக் கூடாது என்னும் பெருங்கருணை
மட்டும்தானே காரணம். அருளிச்செயல்கள் இல்லையென்றால்
இப்பேறு நமக்கு வாய்க்குமா ?
தேவ்
உண்மை திவாகர். இப்பாடல் என்னையும் ஆட்கொண்டது!
கம்பனைக் கவர்ந்திருக்க வாய்ப்புண்டு. சூரிச்சில் நடந்த கம்பன் விழாவில்
ஆழ்வார்களும், கம்பனும் என்று பேசினேன். கம்பன் நம்மாழ்வார் வரிகள்
கொண்டு தொடங்கி (அலகிலா விளையாட்டுடையான்), குலசேகரரின் பாவனைகளை
உள்வாங்கிக் கொண்டு, கலியனின் கவித்துவத்தை ரசிக்கிறான் என்று சொல்லலாம்.
ஆழ்வார்களுக்குள்ளேயே எவ்வளவு எடுத்தாளுமைகள்! குமரன் சுட்டியபடி,
பெரியாழ்வார் திருமொழிக்கும், பெரிய திருமொழிக்கும் உள்ள குடுக்கல்
வாங்கல். இதை தொண்டரடிப்பொடி ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார், |
பேசிற்றே பேசலல்லால்| என்று. அதுதான்!! ஆழ்வார்களுக்குள் புகுந்தால்
அவர்கள் பாசுரங்களே reference point வேறெங்கும் போக வேண்டிய அவசியமே
இல்லை.
வாழ்க!
கண்ணன்
இதை அப்படியே வழிமொழிகிறேன். சில நேரங்களில் நான் கூட கடுமையாக
எழுதிவிடுவதுண்டு. காரணம் அருளிச்செயல்களும், அதற்கு ஆச்சர்யர்கள்
ஆழங்காட்பட்டு கண்டு சொன்ன பொருள்களும் பிறழ்ந்துவிடக்கூடாது என்ற
அக்கறையால்தான்.
அதே நேரத்தில் நான் தவறாக எழுதும் போது திருத்துவதை ஏற்றுக்கொள்கிறேன்.
இதே காரணத்தால்.
நான் பாசுரமடல்களை எழுதிவிட்டு, உ.வே.வேங்கடகிருஷ்ணன் சுவாமிகளிடம்
கொடுத்தேன். அவர் கேட்டார், `நீர் ஆழ்வார்களை ஏற்றுக்கொள்கிறீர்களோ?;
“ஆம்”, ஆச்சர்யர்களை ஏற்றுக் கொள்கிறீர்களோ, “ஆம்” அப்படியெனில் கவலை
இல்லை. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் உம் எழுத்தை” என்று. அது எவ்வளவு
உண்மை. நடை பயிலும் குழந்தை போல் நாம் ஆழ்வார்களிடம் நடை பயின்றாலும்,
ஆச்சார்யர்கள் அல்லவோ அம்மொழிக்கு பாதுகாவலர்கள். அவர்கள் `இதத்தாயாக`
இருந்து காலப்போக்கில் நெறிப்படுத்திவிடுவர் என்பவைக் கண்கூடாகக் கண்டு
வருகிறேன்.
ஆழ்வார்கள் வாழி, அருளிச்செயல் வாழி
தாழ்வாது மில்குரவர் தாம் வாழி - ஏழ்பாரும்
உய்ய, அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.
இதுவே நமது குழாமின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். இது பொருள்
பொதிந்தது.
கண்ணன்
குமரனுக்குச் சின்னப் பையன் நான் நியமனம் பண்ண முடியுமா? அடியேன்
பொடியேன்! :)
பாசுரத்தை ரசித்தாரும் புசித்தாரும்.....இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
On Apr 9, 10:26 am, meena muthu <rangame...@gmail.com> wrote:
> அடடா! பாருங்கள் இந்த பாடலை பாடிப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே
>
> அதிவேகத்தில் மனம் பதில் பொத்தானை அமுக்கச்செய்துவிட்டது!எல்லாம் பாடலின்
> மஹிமை!! :))))))
>
> 2009/4/9 meena muthu <rangame...@gmail.com>
>
>
>
>
>
> > 2009/4/9 V, Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >> *முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
>
> >> பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
> >> பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
> >> இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே
> >> *
> >>> தேவ்- Hide quoted text -
>
> - Show quoted text -
இராமானுசர் மாறன் பாசுரங்களை வாசித்த பின் யானை போல கம்பீரமா அமைதியா
நடப்பாராம்! ஆனால் திருமங்கை கலியன் பாசுரங்களை வாசித்த பின் சிங்கம் போல
கொஞ்சம் மூரி நிமிர்ந்து முழங்கியே புறப்படுவாராம்!
பண்டு அரு மாறன் பசுந்தமிழ், ஆனந்தப் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்!
"கலி"மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு, தன் உள்ளம் தடித்து, அதனால்
வலிமிக்க சீயம் இராமானுசன்!
அது போல இப்ப உங்க நிலைமை குமரன்! :)
On Apr 9, 12:07 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> > - Show quoted text -- Hide quoted text -
எப்படியெல்லாம் சொல்லைக் கோக்குறாரு பாருங்க!
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான்
திசையும் இருநிலனும் ஆய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோம் ஆல்....
தாய் எம்பெருமான், தாய் எம்பெருமான்
தாய் எம்பெருமான், தாய் எம்பெருமான்
சான்ஸே இல்லை!
எங்கள் ராபின்ஹூட் ஆழ்வாரில் ஆழ்வார் ஆழ்வாரே!
இதை அப்படியே வழிமொழிகிறேன். சில நேரங்களில் நான் கூட கடுமையாக
எழுதிவிடுவதுண்டு. காரணம் அருளிச்செயல்களும், அதற்கு ஆச்சர்யர்கள்
ஆழங்காட்பட்டு கண்டு சொன்ன பொருள்களும் பிறழ்ந்துவிடக்கூடாது என்ற
அக்கறையால்தான். //
'சம்பறுத்தார்க்கைக்குப் போகவேணுமோ' என்னும் ஓர் உவமை
'சம்பறுத்தார் கைக்குப் போகவேணுமோ' என்று பலகாலும் பயிலப்பட்டுப் பொருள்
தெரியாமலேயே
போய்விட்டது; 'க்' எனும் ஓர் எழுத்து மறைந்ததன் விளைவு.
பின்னர்ப் புத்தூர்ப் பெரியவரின் முயற்சியால் சீர் பெற்றது.
நாம் அந்த அளவு பேரறிவாளிகள் இல்லையெனினும் தெரிந்த பிழைகளைக் களைவதையும்
ஒரு கைங்கர்யமாகவே செய்ய வேண்டும்; பிறர் கூறுவனவற்றையும் ஏற்க வேண்டும்.
'த்ராவிட வேத ஸாகரம்' என்பது ஓர் அலங்காரமான அடைமொழியன்று.
தேவ்
"coincidence" இல்லை :-)
இந்தக் கண்ணபிரான் இருக்காரே, இவர் நியூயார்க்கில் இருந்து கொண்டு
திருவாலியில் திருவாராதனம் ஒழுங்காய் நடக்கிறதா? என்று கவனிப்பவர்.
இவரும், குமரனும் சேர்ந்துவிட்டால் ஒரே கலக்கல்தான்.
இப்ப பாருங்க கலியனை 'ராபின்ஹூடு' என்கிறார். இதுவும் பாந்தமாகத்தான்
உள்ளது ;-)
க.>
வேண்டுவதெல்லாம் அவனது கல்யாணகுணங்களில் ஈடுபட வேண்டும். அவனை இனிமையாக,
கூட்டாக அனுபவிக்க வேண்டும் என்ற உந்தல். மற்றதை அவன் கவனித்துக்
கொள்வான்.
நம்மையொரு பொருளாக்கி, மண்ணை மதியாக்கி மாநிலத்தில் உலவவிடும் அவன்
விந்தை! இதைக் 'கைதவம்' என்கின்றார் நம்மாழ்வார். ஆச்சர்யமான பிரயோகம்.
மாயை என்றும் சொல்லலாம்.
கூட்டாக குள்ளக்குளிர அனுபவிக்கும் போது இப்படியான ஆச்சர்யமான
விளக்கங்கள் வந்துவிழும் (ஸ்புரிக்கும் என்பார் பரனூர் பெரியவர்). அது
உன்னது/என்னது என்றில்லை. அவனது என்பதே உண்மை.
ஒரு பெரிய காரியத்தில் ஈடுபடுத்தியுள்ளான் உங்களை, நம்மை. அவன் அருளால்
அவன் தாள் வணங்குவோம்.
க.>
On Apr 10, 2:34 pm, Thirumalai Vinjamoor Venkatesh