
On Feb 17, 6:09 am, coral shree <cora...@gmail.com> wrote:
> *
> *
> *[image: T_500_289.jpg]
> *
> *
> *
> *வர்த்தகச் செய்தி மலர் *:
> *
> *
> ** சுதந்திரமான வர்த்தகம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்*
>
> டோக்யோ, பிப்.16- இந்தியா-ஜப்பான் இடையே சுதந்திரமான வர்த்தகத்தை
> அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் இன்று டோக்யோவில் முறைப்படி கையெழுத்தானது.
> இதன் மூலம் இருநாடுகளும் பரஸ்பரம் 90 சதவீத வரிகளை குறைத்துக் கொள்ள முடிவு
> செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்த நடைமுறை 10 ஆண்டுகள் அமலில்
> இருக்கும்.
>
> டோக்யோவில் உள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தில் இதற்கான ஒப்பந்தம் இன்று காலை
> கையெழுத்தானது. ஜப்பான் வெளியுறவு அமைச்சர் செய்ஜி மெஹரா, இந்திய தொழில்துறை
> அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
>
> "இந்தியா-ஜப்பான் இடையே பொருளாதார கூட்டுறவு மேலும் வலுப்பட இந்த ஒப்பந்தம்
> உதவியாக இருக்கும்" என்று இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
> "சுதந்திரமான வர்த்தகத்துக்காக தற்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம்
> இருநாடுகளுக்கும் மிகவும் பயன் அளிக்கக்கூடியது" என்று ஜப்பான் அமைச்சர் மெஹரா
> கூறினார்.
>
> **ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்*
>
> பிப்ரவரி 16,2011,15:57
>
> மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன்
> முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் ஏற்ற இறக்கத்துடன்
> காணப்பட்ட வர்த்தகம் முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
> சென்செக்ஸ் 27.10 புள்ளிகள் அதிகரித்து 18300.90 புள்ளிகளோடு காணப் பட்டது.
> தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.70 புள்ளிகள் அதிகரித்து 5481.70
> புள்ளிகளோடு காணப்பட்டது
>
> ** தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு*
>
> பிப்ரவரி 16,2011,12:49
>
> சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை
> சவரனுக்கு ரூ.96 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத்
> தங்கத்தின் விலை ரூ.1903 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20460 ஆகவும்
> இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.55 க்கும், பார் வெள்ளி ரூ.47230
> க்கும் விற்பனை செய்யப்பட்டது
>
> *விளையாட்டுச் செய்தி மலர் :*
> *ஆன்மீகச் செய்தி மலர்* :
>
> ** அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோவில்.*
>
> மூலவர் : அட்டாள சொக்கநாதர்
> உற்சவர் : பிரதோஷ நாயனார்
> அம்மன்/தாயார் : அங்கயற்கண்ணி
> தல விருட்சம் : சரக்கொன்றை
> தீர்த்தம் : கிணறு
> ஆகமம்/பூஜை : காரணாகமம்
> பழமை : 500 வருடங்களுக்கு முன்
> -
> ஊர் : மேலப்பெருங்கரை
> மாவட்டம் : ராமநாதபுரம்
> மாநிலம் : தமிழ்நாடு
>
> *தல சிறப்பு:*
>
> மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு அம்சத்துடன், சதுர பீடத்தில்
> காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து
> அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச சிவன்' என்ற பெயரும்
> உண்டு.
>
> மதுரை சொக்கநாதர் சன்னதி போலவே, இங்கும் சுவாமி சன்னதியை எட்டு யானைகள்
> தாங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர், "அட்டாள சொக்கநாதர்' என்று
> அழைக்கப்படுகிறார். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு
> விசேஷமாக நடக்கும்.
>
> இத்தலவிநாயகர் அனுக்ஞை விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
>
> பிரகாரத்தில் அசுர மயிலுடன் முருகன் இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானை
> இல்லை. "யோக பைரவர்' தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருடன் நாய் வாகனம்
> இல்லை. மகாவிஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகளும் உள்ளது.
>
> இத்தலம் கரிக்குருவிக்கு உபதேசித்த தலம் என்பதால் கோயில் முகப்பில் சிவன்
> கரிக்குருவிக்கு உபதேசம் செய்த சிற்பம் மற்றும் வேடன் வடிவில் வந்த சிவன்,
> அம்பிகை சிற்பங்கள் இருக்கிறது.
>
> *பிரார்த்தனை *
>
> நோய்கள் நீங்க, வியாபாரம் சிறக்க, முன்வினைப் பாவங்கள் நீங்க இங்கு
> வேண்டிக்கொள்கிறார்கள்.
>
> மனநிம்மதி இல்லாதவர்கள், தேர்வில் தோல்வியடைந்து, முன்பு ஒழுங்காக
> படிக்கவில்லையே என வருந்துபவர்கள் வியாழக்கிழமைகளில் இங்கு
> வேண்டிக்கொள்கிறார்கள்.
>
> இங்குள்ள ஜுரதேவர் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை மூர்த்தியாவார்.
>
> *தலபெருமை*:
> *தல வரலாறு:*
> முற்காலத்தில் இப்பகுதி கடம்ப வனமாக இருந்தது. தர்மங்கள் பல செய்த ஒருவன்,
> அறியாமல் சில தவறுகள் செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்திருந்தான். பிற
> பறவைகளால் துன்புறவே, வருத்தமடைந்த கரிக்குருவி இப்பகுதிக்கு வந்தது. ஒரு
> மரத்தில் அமர்ந்து தனக்கு உண்டான நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கிடைக்காதா?
> என்ற வருந்தியது. அம்மரத்தின் அடியில் மகரிஷி ஒருவர், தன் சீடர்களுக்கு சிவனைப்
> பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ""எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவராக
> இருந்தாலும் மதுரை தலத்தில் உறையும் சொக்கநாதர் அருள் இருந்தால் பாவ விமோசனம்
> கிடைக்கும்,'' என்றார்.
>
> இதைக்கேட்டதோ இல்லையோ கரிக்குருவிக்கு மனதில் நம்பிக்கை உண்டானது. தனக்கு
> உண்டான பாவத்திற்கு சிவனால் விமோசனம் கிடைக்கும் என்று எண்ணிய கரிக்குருவி,
> சொக்கநாதரை எண்ணி வழிபட்டது. அதற்கு இரங்கிய சிவன், அம்பிகையுடன் காட்சி
> தந்தார். அதனை தன் கையில் ஏந்தி, ""தர்மங்கள் செய்பவராக இருந்தாலும் எந்த
> சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. மீறி பாவம் செய்வதானால், செய்த
> தர்மத்திற்கும் பலனில்லாமல் போய்விடும்,'' என குரு ஸ்தானத்தில் இருந்து
> உபதேசித்தார். கரிக்குருவி விமோசனம் பெற்றது. அதன் வேண்டுதலுக்காக சுவாமி
> லிங்கமாக எழுந்தருளினார்.
>
> இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி
> "சொக்கநாதர்' என்று பெயர் பெற்றார்
>
> *சிறப்பம்சம்*:
> அதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக குரு
> அம்சத்துடன், சதுர பீடத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை
> ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு "ருத்ராட்ச
> சிவன்' என்ற பெயரும் உண்டு.
>
> *திருவிழா:*
>
> சிவராத்திரி, தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் விழா,
> திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.
>
> *திறக்கும் நேரம்:*
>
> காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
> திறந்திருக்கும்
>
> *ஆன்மீகச் சிந்தனை மலர்* :
>
> ** அன்பான ஒரு வார்த்தை போதும்! - புத்தர்*
>
> * ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு
> வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும்
> நல்லவையாக இருக்க வேண்டும்.
>
> * நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை
> நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.
>
> *வினாடி வினா *:
>
> *வினா* - உலகத்தின் விண்வெளியில் முதல் காஸ்மோனேட் மனிதன் யார்?
>
> *விடை* - யூரி காகரின் [ரஷியா - 1961]
>
> *இதையும் படிங்க *:
>
> *ஸ்டெம் செல் மூலம் நோய்கள் தீர்வு!: பெங்களூரூ டாக்டர்கள் சாதனை*
> T_500_289.jpg
> 69KViewDownload
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil