Sangam song which was the basis for the MGR movie Mannathi Mannan

35 views
Skip to first unread message

வைரம்

unread,
Jun 24, 2008, 1:05:58 AM6/24/08
to மின்தமிழ்
I will first start with the poem and its translation.

குறுந்தொகை 31

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

Kurunthokai 31

Nowhere , not among the warriors at their festival,
nor with the girls dancing close in pairs,
nowhere did i see my lover.
I am a dancer;
my pride,my lover
-for love of him
these conch -shell bangles slip
from my wasting hands-
he’s a dancer too.

Poet: Adimanthiyar

Translated by A.K.Ramanujan

This poem is supposed to be written by Athimanthiyar. According to
legends she is the daughter of the Great Karikala Cholan. Her lover/
husband was from Prince form Vanji, the capital of Cheras. He was
known as Vanjikon. He was an excellent dancer hence bore the title
Attan Atti. She lost her lover in the floods of Kaveri at a port of
Kazhar during river festival. She wandered in search of him and
finally recovered him at the mouth of the great river. We come to know
about this legend from the following poems in Akananuru by Paranar.

ஆதிமந்தியார் கழார் என்னும் பதியைச் சார்ந்த காவிரித்துறையில் காதலனாகிய
ஆட்டனத்தியுடன் நீர் விழாக் கொண்டாடிய பொழுது, அவனைக் காவிரி வௌளம்
கவர்ந்துகொள்ள, இவர் அவனைக் காணாது நீரின் பின்னே சென்று கடற்கரையில்
கூவி அரற்றினாராக, இவரது கற்பின் மாண்பினால் கடல் அவனைக் கரைக்கு
அணிமையிற் கொணர்ந்து நிறுத்திக் காட்ட, இவர் அவனைத் தழுவிக் கொண்டு
மீண்டார் என்பது வரலாறு ; கடல் கொணர்ந்து நிறுத்திய காதலனை அங்கே நீராடிய
மருதி யென்பவள் இவர்பாற் சேர்த்துப் புகழ்பெற்றன ளென்பதோர் செய்தியும்
அறியப்படுகின்றது.

இவற்றை,

அகம், 376

” ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத்,
தண்பதங் கொண்டு தவிர்ந்த வின்னிசை, ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக்,
கருங்கச்சி யாத்த காண்பினவ்வயிற், றரும்பொலம் பாண்டியன் மணியொடு
தௌதர்ப்பப், புனையந் தாடும் அத்தியணி நயந்து, காவிரி கொண்டொளித் தாங்கு”

Akananuru 376

‘In the land where farms were flourishing with grains,
people gathered befored the temple adobe of Kazha Ar.
Karikalan was happy seeing the roring atmosphere.
celebrating the water festival where soothing music was played,
With water moving down the warrior anklet of his read feet,
with black crochet ,it was a beautiful site and
drum with gold bell attached it were sounding
when Atanathi the great dancer was dancing near the river
while Kaveri mesmerised by his beauty
took him away with her floods.”

Poet : Paranar

(my own rough translation)

அகம், 396

“மந்தி, பனிவார் கண்ணள் பலபுலந் துறையக், கடுந்திற லத்தி யாடணி நசைஇ,
நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்கு”

Akananuru 396

“Manthi with her eyes full of tears hating everything around her,
Enjoying beauty of the intense vigor with which her lover Attanathi
was dancing,
river Kaveri hid him with her floods.”

Poet : Paranar

(my own rough translation)

அகம், 222

“கழாஅர்ப் பெருந்துறை விழவி னாடும், ஈட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு
மொய்ம்பின், ஆட்ட னத்தி நலனயந் துரைஇத், தாழிருங் கதுப்பிற் காவிரி
வவ்வலின், மாதிரந் துழைஇ மதிமருண் டிடருழந்த, ஆதி மந்தி காதலற் காட்டிப்,
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின், மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்”
என்பன முதலிய வற்றானறிக.

Akananuru 222

“In a great port called Kazhaar where the festival was taking place,
danced a man with broad beautiful shoulders named Attanathi, seeing
his beauty Flooding Kaveri with her black tresses took him away.
Losing her senses his wife Adimanthi was searching for him in all
directions. She went into the river which indicated her where her
husband was. Like the greatness of the women in this song you too
would attain greatness.”

Poet : Paranar

(my own rough translation)

This Legend can be even found in Silapadikaram. Where the poet gives
instances of women with great chastity. Here the poet says because of
the great chastity of Adimanthi , her husband was recovered from mouth
of death.

வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு

பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி

“A daughter of the famous king,Karikala,once jumped into the sea that
had carried away her husband Vanjikon calling to him,’Lord with
shoulders like mountains!” The god of sea himself brought back her
husband to her.Clasping him like a liana,she led him to their home.

Poet: Illango Adigal

Translated by Alain Danielou

This Legend has survived even during our period. Kannadasan inspired
by this legend wrote a epic Attanathi Aadimanthi. Later he made this
into a movie called Mannadhi Mannan staring MGR as Attanathi and Angla
Devi as Adimanthi.
The movie has some very famous songs including ‘Acham enbathu
Madamaiyada’. The film also features a dance competition between
Padmini and MGR where MGR draws a tiger with his leg while he dances.
The commentary to Kurunthokai 31 says, Attanthi was behind another
women and wanted to marry her. This line is used by Kannadasan to
introduce Padmini character as another lover of MGR and shape the
script as typical Tamil movie.

——————————————————————————–

——————————————————————————–

Reference:

Literary conventions in Akam poetry by Kamil Zvelebil

Interior Landscape by A.K.Ramanujan

The lay of the Anklet by Alian Danielou

Silapadikaram commentry by Vengadaswami Natar

Kurunthokai commentry by U.V.Swaminathan Iyer

——————————————————————————–

Vairam
http://karkanirka.wordpress.com/

Narayanan Kannan

unread,
Jun 24, 2008, 1:19:49 AM6/24/08
to minT...@googlegroups.com
உங்கள் பணியின் சிறப்பு கருதி நம் 'என்ன சேதி' வலைப்பதில் தொடுப்பு கொடுத்துள்ளோம்.

தாங்களும் நமது வலைப்பதிவுகளுக்கு தொடுப்பு கொடுங்கள். நன்றி.

கண்ணன்

2008/6/24 வைரம் <vai...@gmail.com>:

வைரம்

unread,
Jun 24, 2008, 9:56:43 PM6/24/08
to மின்தமிழ்
மிக்க நன்றி .... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
நான் எதோ பொழுதுபோக்காக தொடங்கியது இன்று எதோ உபயோகம் உள்ள ஒன்றாக
மாறியதை நினைத்து பார்த்தல் மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது ....
கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு மகிழ்ச்சிதரும் நிகழ்வுகள்
நடத்துள்ளன .... ஒன்று எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தன்
பார்வையில் முக்கியம் என நினைக்கும் வலைத்தளங்களில் 'சங்க
இலக்கியப்பதிவுகள் - ஆங்கில மொழியாக்கம் மற்றும் விளக்கத்துடன்' என்று
எழுதி என் வலைத்தளத்தின் தொடுப்பு கொடுத்து இருந்தார் , மாற்ற ஒன்று
இன்று நீங்கள் 'உங்கள் பணியின் சிறப்பு கருதி நம் 'என்ன சேதி' வலைப்பதில்
தொடுப்பு கொடுத்துள்ளோம். ' என்று கூறியது .
என் மகிழ்ச்சியை வெளிபட்டது என்ன முடியவில்லை ....மிக மிக நன்றி
தமிழ் மரபு அறகட்டளை மற்றும் மின்தமிழ் வலைப்பதிவுகளுக்கு தொடுப்பு என்
தளத்தில் கொடுத்து உள்ளேன்

வைரம்

Narayanan Kannan

unread,
Jun 24, 2008, 10:39:07 PM6/24/08
to minT...@googlegroups.com
அன்பின் வைரம்:

சங்கத்தை முறையாக வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களுள்
ஏ.கே.இராமானுஜன் முக்கியமான பேராசிரியர். அடுத்து ஜியார்ஜ் ஹார்ட். இது
பல பேருக்குத் தெரிவதில்லை. உங்கள் பதிவு வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது. சங்கத்திலிருந்தான் தமிழன் வாழ்வியற் பதிவு முறையாகத்
தொடங்குகிறது. எனவே நம் வேரைச் சுட்டும் உங்கள் பதிவு 'முதுசொம் பதிவு'.
தொடர்ந்து செயலாற்றுங்கள். கூடி நின்று ஒரு மாற்றத்தைக் கொணர்வோம்.

கண்ணன்

2008/6/25 வைரம் <vai...@gmail.com>:

வைரம்

unread,
Jun 26, 2008, 12:01:54 AM6/26/08
to மின்தமிழ்
எவ்வாறு U.V.Swaminathan Iyer தமிழர்களுக்கு சங்க தமிழை அறிமுகம்
செய்தாரோ அவாரெ A.K.Ramanujan , சங்க தமிழை உலகிற்கு அறிமுகம்
செய்தார் .
என் வலையில் A.K.Ramanujan , George L Hart பற்றி எழுதியது கிழே
பதித்திருக்கிறேன் ,


இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.

I am posting two translations of the same poem,

Her bangles jingling,
she stood kicking at a crab,
her head lowered,
her face hidden by her hair.
But soon as evening with its loneliness has gone,
she will give her breasts
with all her loveliness.

Thinai - Neytal

Poet - Ammuvanar

Translated by George L.Hart

......


My love whose bangles

glitter,jingle,

as she chases crabs,

suddenly stands shy,

head lowered,

Hair hiding her face:

but only till the misery of the evening

passes,when she'll give me

the full pleasure

of her breasts.

Translated by A.K.Ramanujan

George L Hart has tried to be as close to the original as possible
with his translation, whereas A.K.Ramanujan's translation tries to
bring the exact feeling the poet wanted to describe. No wonder
A.K.Ramanujan is considered one of the best Translators in the world !
(surely I am not questioning the greatness of George L Hart...but even
Mr. Hart will accept how great a translator A.K.Ramanujan is!). Infact
as Mr.Hart quotes 'I have been helped immeasurably by A.K.Ramanujan,
who was not only my first Tamil teacher,but who has provided
invaluable insights and suggestions.'

'A.K.Ramanujan,my first Tamil teacher,whose wonderful translations and
insights first led me to realize the profoundity and importance of
Tamil anthologies.' in preface of his two books.

வைரம்

Narayanan Kannan

unread,
Jun 26, 2008, 12:25:35 AM6/26/08
to minT...@googlegroups.com
2008/6/26 வைரம் <vai...@gmail.com>:

> George L Hart has tried to be as close to the original as possible
> with his translation, whereas A.K.Ramanujan's translation tries to
> bring the exact feeling the poet wanted to describe. No wonder
> A.K.Ramanujan is considered one of the best Translators in the world !
> (surely I am not questioning the greatness of George L Hart...but even
> Mr. Hart will accept how great a translator A.K.Ramanujan is!). Infact
> as Mr.Hart quotes 'I have been helped immeasurably by A.K.Ramanujan,
> who was not only my first Tamil teacher,but who has provided
> invaluable insights and suggestions.'

மிகச்சரி! ஜியார்ஜ் ஹார்ட் அவரது மாணவர்தானே!

ஏ.கே.இராமனுஜன் வைஷ்ணவ உரையாசியர்கள் பாணியில் கவிஞனின் உள்மனக்கிடக்கையை
கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். அவருக்கு அது முதுசொம் (பிதுர்ராஜ்யச்
சொத்து) -ஆகக் கிடைத்திருக்கிறது! அவரது 'hymns for the drowning'
வாசித்தால் தெரியும் அவர் எவ்வளவு தூரம் அவ்வழியில் நிற்கிறார் என்று.

ஒரு சேதி தெரியுமோ? ஏ.கே.இராமனுஜனின் அண்ணன் நமது த.ம.அ பொருளாளர் என்று?

கண்ணன்

கண்ணன்

வைரம்

unread,
Jun 26, 2008, 1:15:26 AM6/26/08
to மின்தமிழ்
ஆ! ஆப்படிய .......
ஏ.கே.இராமனுஜனின் அண்ணன் பொருளாளர் உள்ள ஒரு அமைப்பின் மின் குழுவில்
நான் இருபதே என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது .
தமிழை கண்டு ஓடிய என்னை தமிழை மீது படிக்க செய்தது பொன்னியின் செல்வன் .
சங்க தமிழ் என்றால் என்ன என்று கற்று கொடுத்தவர் Kamil Zvelebil .....
தமிழை ரசிக செய்தவர் எ.கே.ராமானுஜர் ....

Kamil Zvelebil எழுதிய Smile of Murugan புத்தகம் தான் தமிழின் சிறப்பு
என்ன என்பதை என்னகு கட்டியது
George L Hart, எ.கே.ராமானுஜர் குறிப்பிடும் பொழுது அதே ஆசனத்தில்
Kamil Zvelebil யும் நான் வைப்பேன்.

Kamil Zvelebil உங்களை போல வே சித்தர் , சித்தர் மருத்துவம் பற்றி
புத்தகங்கள் எழுதி உள்ளார் அதில் பல சித்தர் படைகளை மொளிபயதுளர் ....

அவர் எழுதிய 'Literary conventions in Akam Poetry' மிக்கவும் அருமையாக
உள்ளது அதில் படித்த நுணுக்கமான சில செய்திகளை கொண்டே என் வலையில்
தற்போது எழுதி வருகிறேன் ....

மற்ற ஒரு சுவாரசியமான செய்தி ....Kamil Zvelebil மொழிபயர்ப்பு
புத்தகங்கள் எதுவும் எழுதவில்லை ஆனால் அவர் புதகளில் வரும் பல பாடல்களை
தானே மொழி பயர்பார் ... ஆனால் அவர் புத்தகத்தில் வரும் குறுந்தொகை
பாடல்களை மட்டும் அவர் மொழி பயர்க்க மாட்டார் .... அவர் எப்பொழுதும் தன்
மொழிபயர்ப்பை விட எ.கே.ராமானுஜர் மொழி பயர்ப்பு இனிமையாக உள்ள
காரணத்தினால் .... குறுந்தொகை பாடல்களுக்கு எ.கே.ராமானுஜர் மொழி
பயர்பையே தன் நூலில் எழுதுவர் ...

வைரம்

Narayanan Kannan

unread,
Jun 26, 2008, 2:18:09 AM6/26/08
to minT...@googlegroups.com
2008/6/26 வைரம் <vai...@gmail.com>:>

> மற்ற ஒரு சுவாரசியமான செய்தி ....Kamil Zvelebil மொழிபயர்ப்பு
> புத்தகங்கள் எதுவும் எழுதவில்லை ஆனால் அவர் புதகளில் வரும் பல பாடல்களை
> தானே மொழி பயர்பார் ... ஆனால் அவர் புத்தகத்தில் வரும் குறுந்தொகை
> பாடல்களை மட்டும் அவர் மொழி பயர்க்க மாட்டார் .... அவர் எப்பொழுதும் தன்
> மொழிபயர்ப்பை விட எ.கே.ராமானுஜர் மொழி பயர்ப்பு இனிமையாக உள்ள
> காரணத்தினால் .... குறுந்தொகை பாடல்களுக்கு எ.கே.ராமானுஜர் மொழி
> பயர்பையே தன் நூலில் எழுதுவர்

குறுந்தொகையின் ஒரு பாடலை ஏ.கே.இராமானுஜன் தனது after words எனும்
பிற்கேர்க்கையில் மிக சிலாகித்து விவரிப்பார். அதுதான் காதலி தன்
காதலனுடன் மலைப் பொய்கையில் கொண்ட கலவி பற்றியது. இப்பாடல் உருவக அணியின்
உச்சம். ஒரு வார்த்தை கூட கூடல் பற்றி இருக்காது. ஆனால், நுணுக்கமாகப்
பார்க்கும் போது அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரியும். இந்தப் பாணி
கண்ணதாசன் கவிதை வரை சினிமாவில் இருந்தது. இப்போது எல்லாம் கொச்சை.
கொச்சையாகக் காட்டுகின்றனர், கொச்சையாக எழுதுகின்றனர். சினிமா
இலக்கியத்திற்கு அளிக்கும் சம்மட்டி அடி இது!

கண்ணன்

பிகு: நீங்கள் மன்னாதி மன்னன் பற்றி சேர்த்து எழுதியை ரசித்தேன்.
கண்ணதாசன் சங்க வழியில் கவிதை செய்தவன்.

Tthamizth Tthenee

unread,
Jun 26, 2008, 3:43:24 AM6/26/08
to minT...@googlegroups.com
காமத்தைப் பற்றி கண்ணதாசன் எழுதாத வரிகளே கிடையாது
அனால் அதில் யதார்த்தமும் உண்மையும் பொதிந்திருக்கும்
 
புறிய வேண்டியவர்களுக்கு மட்டும் புறியும் விதமாக அருமையான் சொல்லாடலைக் கையாண்டிருப்பார்
 
பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து வந்தது முத்து அது மன்னவன் சொத்து
 
என்பார்
 
இனி அவர்போல் பூடகமாக எழுத ஆளில்லை
இப்போது அப்பட்டமாக காமரசத்தை வரிகளிலே
எழுதி கொச்சைப் படுத்துகிறார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/6/26 Narayanan Kannan <nka...@gmail.com>:

வைரம்

unread,
Jul 2, 2008, 7:38:46 PM7/2/08
to மின்தமிழ்
நினைவெல்லாம் நித்தியா படித்தில் வரும் பனிவிழும் மலர் வானம் பாடல்
கேட்டேன் - அதில் ' சேலை மூடும் இளம் சோலை ...மாலை சூடும் மலர் மாலை '
வரிகள் -

இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.

இந்த சங்க பாடலை தழுவி எழுத பட்ட வரிகள் போல தோன்றியது ......

வைரம்


On Jun 26, 2:43 am, "Tthamizth Tthenee" <rkc1...@gmail.com> wrote:
> காமத்தைப் பற்றி கண்ணதாசன் எழுதாத வரிகளே கிடையாது
> அனால் அதில் யதார்த்தமும் உண்மையும் பொதிந்திருக்கும்
>
> புறிய வேண்டியவர்களுக்கு மட்டும் புறியும் விதமாக அருமையான் சொல்லாடலைக்
> கையாண்டிருப்பார்
>
> பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து வந்தது முத்து அது மன்னவன் சொத்து
>
> என்பார்
>
> இனி அவர்போல் பூடகமாக எழுத ஆளில்லை
> இப்போது அப்பட்டமாக காமரசத்தை வரிகளிலே
> எழுதி கொச்சைப் படுத்துகிறார்கள்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 2008/6/26 Narayanan Kannan <nkan...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Jul 3, 2008, 5:06:51 AM7/3/08
to minT...@googlegroups.com
வைரம்:

நம்ம குழுவிலே ஒரு கவிஞர் இருக்கார். அவர் சங்கத்தைப் புரிதல்தான்
தமிழனின் உச்ச கட்ட பரிணாமம் என்று சொல்கிறார். ஆனால் அவர் பெயர் மௌனி
இல்லையென்றாலும் இந்த விஷயத்தில் இதுவரை மௌனியாகவே இருக்கிறார்.
ஏனென்றுதான் தெரியவில்லை!

கண்ணன்

2008/7/3 வைரம் <vai...@gmail.com>:

வைரம்

unread,
Jul 3, 2008, 11:36:06 AM7/3/08
to மின்தமிழ்
அவர் நிறை குடம் அதன் மௌனமாக இருக்கிறார்.... நான் குறை குடம் தானே அதான்
பேசிக்கொண்டே இருக்கிறேன் சங்கத்தை பற்றி !......

வைரம்

srirangammohanarangan v

unread,
Jul 4, 2008, 9:07:26 AM7/4/08
to minT...@googlegroups.com
அடடே  யாரந்தப்  பேசாப்  புலவர்?  சொல்லுங்கள்  நாங்களும்  தெரிந்துகொள்கிறோம் )<>(

2008/7/3 வைரம் <vai...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Jul 4, 2008, 9:16:10 AM7/4/08
to minT...@googlegroups.com
2008/7/4 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> அடடே யாரந்தப் பேசாப் புலவர்? சொல்லுங்கள் நாங்களும் தெரிந்துகொள்கிறோம்


அவர் பேசினால்தான் உண்டு ;-)

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages