ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 April 2026
(வெருளி நோய்கள் 1276-1280 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1281 -1285
திறனாய்வு அல்லது இடித்துரை குறித்த வரம்பற்ற பேரச்சம் திறனாய்வு வெருளி.
நிறை காண்பதற்கான குறை கூறுதல் என்பது வரவேற்கத்தக்கதுதான். எனினும் தங்கள் செயல் அல்லது படைப்பைப் பற்றித் தவறாகக் கூறுவதாக எண்ணி அஞ்சுவோர் உள்ளனர். சிலர் நடுநிலை தவறித் தனிப்பட்ட தாக்குதலாகத் திறனாய்வு செய்வர். இதனால் திறனாய்வு என்றாலே தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
enissein என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குறை / பழிமொழி.
00
1282.திறன் கருவி வெருளி – Dachoingphobia / Ergalilektriphobia
திறன் கருவி குறித்த வரம்பற்ற பேரச்சம் திறன் கருவி வெருளி.
உரிய கையேட்டைப்படித்துப் பார்த்துப் பயன்படுத்தினால் இடர் எதுவும் வராது. அவ்வாறில்லாமல் – படித்துப் பார்க்காமலேயே – கருவிகளைக் கையாளும் பொழுது காயம் ஏற்படல், மின் அதிர்ச்சிக்கு ஆளாதல் போன்ற துன்பங்கள் நேர்கின்றன.
ergaleio என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கருவி எனப் பொருள்.
ilektrismos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மின்சாரம் எனப் பொருள்.
00
தீ எச்சரிக்கை மணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீ மணி வெருளி.
தீத்தடுப்புப் பயிற்சிகளால் பள்ளிச் சிறுவர்கள் தீவிழிப்பொலி குறித்துப் பேரச்சம் கொள்வதாகவும் இதனால் பள்ளி செல்ல அஞ்சுவதாகவும் ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்கு அஞ்சுபவர்கள் உரத்த ஒலி எது கேட்டாலும் அஞ்சுபவர்களாக உள்ளனர். உரத்த ஒலி எது கேட்டாலும் கேடு அல்லது அழிவு வரப்போவதாகத் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
igni terroremo என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தீ விழிப்பொலி / தீ எச்சரிக்கை மணி எனப் பொருள்.
00
தீ நாகம் (dragon)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீ நாக வெருளி.
கீழை நாட்டுத் தீ நாகம் பாம்பு போல் இருப்பதாகக் கூறப்பட்டாலும் மேலை நாடுகளில் இறக்கைகள் இருக்கும். பறக்கம் தீ நாகம் எனலாம்.
கட்டுக்கதைகளிலும் தொன்மக்கதைகளிலும் தீ நாகம் பற்றிக் கூறப்பட்டாலும் சில மத நெறிகளிலும் முதன்மையான இடத்தைத் தீ நாகம் பெறுகிறது.
திரைப்படங்களில் அல்லது படங்களில் அல்லது கதைகளில் தீ நாகத்தைப் பார்த்தாலோ இது குறித்துக் கேட்டாலோ அளவுகடந்த பேரச்சத்திற்குச் சிலர் ஆளாகின்றனர். இப்படி ஓர் உயிரினம் (இப்பொழுது) இல்லை என்றாலும் தீ நாகம் குறித்துத் தேவையற்று அஞ்சுவோர் உள்ளனர்.
draco என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தீ நாகம் (dragon) எனப் பொருள்.
00
தீய நாற்றம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீ நாற்ற வெருளி.
இத்தகையோர் அழுக்கைக் கண்டு அஞ்சும் இயல்பினராக இருப்பர். கையைத் தூய்மையாக்குவதாகப் பன்முறை கழுவுவதும் இவர்கள் வழக்கம்.
நறுமண வெருளி/நறை வெருளி(Olfactophobia/Osmophobia, Osphresiophobia)
என்பனவற்றின் எதிர் நிலை
auto, dys, osmo ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு முறையே தான், தீய, மணம் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 April 2026
(சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046
| 1043. Axiom | ஏற்புடைமை சான்று தேவையில்லாமல் மெய்யாக அறியப்படும் வெள்ளிடையுண்மை; பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுவது. ஏற்புடைமை அடிப்படை யிலேயே வாதங்கள் எழுவதால் அடிப்படைக் கோட்பாடு எனக் கொள்ளப்படுகிறது. சட்டம் சார்ந்த வாதத்திற்கான அடிப்படைத் தளமாகவும் செயல்படுகிறது. சான்றாக, ஒப்பந்தச் சட்டத்தில், ஒப்பந்தத்திற்கு இரு தரப்பின் ஒப்புமை தேவை என்பது அடிப்படைக் கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. |
| 1044. Axiomatic | வெளிப்படையாகத் தெரிந்த மூதுரையார்ந்த தானே தெளிவான, ஐயத்திற்கு இடமில்லாத(சந்தேகமில்லாத), மறுக்க முடியாத, புரிந்து கொள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட, அறிந்தேற்பு பெற்ற, உறுதியான, திருத்தத் தேவையில்லாத அடிப்படைக் கருத்தாகும். இவை சட்ட ஏரணங்களில் (legal reasoning)அடிப்படைக் கூறுகளாகச் செயற்படுகின்றன. காண்க Axiom-ஏற்புடைமை |
| 1045. Axion | மறுக்கொணா உண்மை பெச்சி-குயின் கோட்பாடு(Roberto Peccei and Helen Quinn in 1977) என்பதன் அடிப்படைக் கூறு ஆகும். இவ்வாறு தொழில் நுட்பம் சார்ந்த விளக்கமே பெரிதாகக் கையாளப்படுகிறது. ஆனால், சட்டத்துறையில் ஒரு சான்று அல்லது வாதம் வேறு எவ்வகை ஆதாரமும் தேவையின்றி மறுக்க இயலாத மெய்மையாக உள்ளதைக் குறிக்கிறது. |
| 1046. Ayacut | ஆயக்கட்டு “ஆயக்கட்டு” (Ayacut) என்பது, நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்ப் பாசன வசதி பெற உரிமையுள்ள நிலங்களைக் குறிக்கிறது. குறிப்பாக, 1908-ஆம் ஆண்டின் சென்னை பண்ணை நிலச் சட்டத்தின் பிரிவு 136அ-இல் இது வரையறுக்கப்பட்டுள்ளது; இப்பிரிவின்படி, ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தின் ஆயக்கட்டு என்பது, அந்தத் திட்டத்தின் கீழ்ப் பாசனம் பெறும் அனைத்து நிலங்களையும் உள்ளடக்கியதாகும். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்