ரத சப்தமி- ஒரு மீள் பதிவு! தெரியாதவங்களுக்காக!

149 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Feb 9, 2011, 10:16:13 AM2/9/11
to மின்தமிழ்

இன்று ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் "ரத சப்தமி" வரும். தஞ்சை மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு. பொதுவாகவே சப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆனதின் பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும், ரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள். இன்று கோலம் போடும்போது கூடத் தேர் வடக்கே நகருவது போலப் போடுவதே வழக்கம். (ஹிஹி, போன வருஷம் இதை எழுத மறந்து போச்சு, இன்னிக்குக் காலம்பர கோலம் போடறச்சே நினைச்சேன், எழுதினேனா பார்க்கணும்னு, எழுதாமல் விட்டிருக்கேன்.) தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.

அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. "பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.

வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்," என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.imagesஎருக்கு.jpg

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது. மாறுபட்ட இன்றைய சூழ்நிலையில் எருக்க இலை என்றாலே யாருக்கும் தெரியறதில்லை, யாரும் குளிக்கிறதும் இல்லை எருக்க இலைகளை வைத்துக் கொண்டு. இருந்தாலும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லவா? .
imagesஎருக்கு.jpg

Geetha Sambasivam

unread,
Feb 9, 2011, 10:18:08 AM2/9/11
to மின்தமிழ்
ஷைலஜா அவர்கள் வேறொரு இழையில் ரத சப்தமி பற்றி விசாலத்தை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார்கள்.  இது கிட்டத் தட்ட ஒவ்வொரு வருடமும் நான் மீள் பதிவு செய்து வருவது.  அதை இங்கே இன்று மீள்பதிவு செய்துள்ளேன்.  நன்றி.

2011/2/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 9, 2011, 10:18:55 AM2/9/11
to மின்தமிழ்
நாளை 10-2-11   ரதசப்தமி

2011/2/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Feb 9, 2011, 10:35:16 AM2/9/11
to mint...@googlegroups.com
கட்டுரைக்கு மிக்க நன்றி கீதா.
மரபு விக்கியில் இணைத்து விடுங்கள்.
 
-சுபா

2011/2/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

imagesஎருக்கு.jpg

Geetha Sambasivam

unread,
Feb 9, 2011, 8:46:49 PM2/9/11
to mint...@googlegroups.com
நன்றி, சுபாஷிணி, இணைத்து விடுகிறேன்.

2011/2/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>
கட்டுரைக்கு மிக்க நன்றி கீதா.
மரபு விக்கியில் இணைத்து விடுங்கள்.
 
-சுபா

LK

unread,
Feb 9, 2011, 8:48:27 PM2/9/11
to mint...@googlegroups.com
எருக்கம் இலைத் தேடி அலுத்து விட்டேன் :(

2011/2/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

shylaja

unread,
Feb 9, 2011, 9:05:24 PM2/9/11
to mint...@googlegroups.com
நன்றி  கீதா. சூரியனின் ஏழு குதிரைகளும் ஏழு நாட்களாம் ரதத்தின் 12 சக்கரங்களும் 12 மாதங்களாம்...படித்ததும் நினைவிற்கு வந்தது.

2011/2/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஷைலஜா அவர்கள் வேறொரு இழையில் ரத சப்தமி பற்றி விசாலத்தை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார்கள்.  இது கிட்டத் தட்ட ஒவ்வொரு வருடமும் நான் மீள் பதிவு செய்து வருவது.  அதை இங்கே இன்று மீள்பதிவு செய்துள்ளேன்.  நன்றி.

2011/2/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

இன்று ரதசப்தமி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
shylaja
 
 /பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
நிறமெழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்
/
 
பெரியாழ்வார்

Geetha Sambasivam

unread,
Feb 9, 2011, 9:08:31 PM2/9/11
to mint...@googlegroups.com
இங்கே நிறைய இருக்கு! :)

Geetha Sambasivam

unread,
Feb 9, 2011, 9:09:12 PM2/9/11
to mint...@googlegroups.com
நன்றி ஷைலஜா.

2011/2/10 shylaja <shyl...@gmail.com>
நன்றி  கீதா. சூரியனின் ஏழு குதிரைகளும் ஏழு நாட்களாம் ரதத்தின் 12 சக்கரங்களும் 12 மாதங்களாம்...படித்ததும் நினைவிற்கு வந்தது.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

S.Partha sarathy

unread,
Feb 10, 2011, 4:40:45 AM2/10/11
to mint...@googlegroups.com
/// சூரியனின் ஏழு குதிரைகளும் ஏழு நாட்களாம் ரதத்தின் 12 சக்கரங்களும் 12 மாதங்களாம்...////
இந்துக்களின் புராணங்களில் திதி தானே குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதும் ஆகம முறைகளில் திதிதானே உபயோகிக்கப்படுகின்றன. "வாரங்கள்" எந்த காலத்தில் இருந்து கடைபிடக்கப்பட்டுவருகின்றன என தெரிந்து கொள்ள விருப்பம். 
அன்புடன்
சே. பார்த்தசாரதி 

2011/2/10 shylaja <shyl...@gmail.com>

D Bala sundaram

unread,
Feb 10, 2011, 9:02:11 AM2/10/11
to mint...@googlegroups.com
ஏழு நாட்களைக்கொண்ட வாரம் (வீக்) இந்தியாஉக்கு  கி பி  3 ஆம் நூற்றாண்டில் தான்  வந்ததாம்.
 
பாலசுந்தரம்


 
2011/2/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
D Balasundaram
Coimbatore

imagesஎருக்கு.jpg

Astrologer Vighnesh சென்னை

unread,
Feb 10, 2011, 9:56:29 AM2/10/11
to mint...@googlegroups.com
பார்த்த சாரதி அவர்களே
ஹிந்துக்கள் ஆகம விதி என்று கூறுகிறீர்கள். ஆகையினால் ஒரு சின்ன விளக்கம்.  சுபம் மற்றும் அபர காரியங்களுக்கு திதி. வாரம். நக்ஷத்திரம்.யோகம் கரணம் ஆகிய ஐந்தும் கடைபிடிக்கப்படுகின்றன. இவையே பஞ்சாங்கம். பஞ்ச 5 அங்கம் என்றால் விபாகம்.
அதே மாதிரி சூரியனுடைய ஒளிக்கற்றையை பிரித்தால் VIBGYOR என ஏழு நிறங்கள் என பலர் தவறாக கூறுவார்கள். கிரகங்கள் 9 அதே போல infra Red and Ultra Violet ரெண்டையும் சேர்த்தால் மொத்தம் 9 கலர்கள். இந்த ரெண்டும் ஸ்பெஷல் உபகரணம் பயன் படுத்தி தான் அறிய முடியும். அதேபோல ராகு கேது என்பது கண்களுக்கு புலப்படாத ஒரு மேத்தமேடிக்கல் பாயிண்டு in Universe.
எறுக்கு (அர்க்) சூரியனுடைய சமித்து. ஆகையினால் சூரியனுக்கு ப்ரீதியாக எருக்கு இலை வைத்து வழி படும் விதம்.
இன்னும் பலது இருக்கு.
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrovighnesh.com


2011/2/10 S.Partha sarathy <spsar...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 10, 2011, 12:59:44 PM2/10/11
to mint...@googlegroups.com
தகவலுக்கு நன்றி திரு.பாலசுந்தரம் அவர்களே!

சே.பார்த்தசாரதி 

2011/2/10 D Bala sundaram <balasun...@gmail.com>
imagesஎருக்கு.jpg

S.Partha sarathy

unread,
Feb 10, 2011, 1:06:41 PM2/10/11
to mint...@googlegroups.com
///சுபம் மற்றும் அபர காரியங்களுக்கு திதி. வாரம். நக்ஷத்திரம்.யோகம் கரணம் ஆகிய ஐந்தும் கடைபிடிக்கப்படுகின்றன.///
ஐயா வாரம் எங்கு கடைபிடிக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டு சொன்னால் நன்று. எனக்குத் தெரிந்தவரை  சூலம் பார்ப்பது. 
அது தவிர வேறு எங்கு என குறிப்பிடவும்.
அன்புடன்
சே. பார்த்தசாரதி 


2011/2/10 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

Astrologer Vighnesh சென்னை

unread,
Feb 10, 2011, 9:28:29 PM2/10/11
to mint...@googlegroups.com
பானு வார சப்தமி ப்ருகுவார(வெள்ளி) சுக்ல ஷஷ்டி ஸ்திரவார(சனி) கிருஷ்ண த்ரயோதசி ஆகியவைகள் குறிப்பாக சூரியன். முருகன். ஈஸ்வரனை கும்பிட நல்லது. இதில் எல்லாம் வாரம் முக்யத்துவம் கொண்டது.  செவ்வாய், வியாழன். ஞாயிற்றுக்கிழமைகளில் குறிப்பாக ஆயுர்வேத மருந்துகளை ஆரம்பிப்பது நல்லது. மேலும் நான் குறிப்பிட்டிருந்த படி பூஜையில் சங்கல்பத்தில் வாரம் ஒரு அங்கம்.  வார சூலை பிரயாணம் மேற் கொள்ளும் போது பார்ப்பது.

S.Partha sarathy

unread,
Feb 11, 2011, 3:58:09 AM2/11/11
to mint...@googlegroups.com
////அதே மாதிரி சூரியனுடைய ஒளிக்கற்றையை பிரித்தால் VIBGYOR என ஏழு நிறங்கள் என பலர் தவறாக கூறுவார்கள். கிரகங்கள் 9 அதே போல infra 
Red and Ultra Violet ரெண்டையும் சேர்த்தால் மொத்தம் 9 கலர்கள். ///

முதலில் கண்ணுக்குப் புலப்பாட்டால்தான் அது கலர். இல்லையேல் வெறும் கதிர்.
ஐயா, கல்லாரை கற்றாராக்கவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கற்றாரை மூடராக்கவேண்டாம்.
 
///இந்த ரெண்டும் ஸ்பெஷல் உபகரணம் பயன் படுத்தி தான் அறிய முடியும். அதேபோல ராகு கேது என்பது கண்களுக்கு புலப்படாத ஒரு மேத்தமேடிக்கல் பாயிண்டு in Universe.////

ஏன் IR உடன் நிறுத்திக்கொண்டீர்கள்? மின்காந்த அலைவரிசையில் அதையும் தாண்டி மைக்ரோ அலைவரிசை வரை உள்ள அனைத்துக் கதிர்களும் கண்ணுக்குப் புலப்படாதவையே! அதே போன்றுதான் UV யையும் தாண்டி காமாக் கதிர்கள் வரை உள்ள அனைத்துக் கதிர்களும் கண்ணுக்குப் புலப்படாதவையே!  அப்படியானால் எத்தனை ராகு கேது உள்ளன.

சூரியன் ஏழு குதிரைகளில் வருகிறான் என்று ஆன்மிகவாதிகள் நம்புகிறார்கள் என்றால் அது அவர்கள் மத நம்பிக்கை. அதில் நான் தலையிடப்போவதில்லை. ஆனால் அதை அறிவியலாக்க முயலவேண்டாம். அறிவியல் என்று வந்துவிட்டால் அனைத்து ஐயங்களுக்கும் பதில் சொல்லி ஆகவேண்டும்.

அன்புடன்
சே. பார்த்தசாரதி
2011/2/10 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
பார்த்த சாரதி அவர்களே

Astrologer Vighnesh சென்னை

unread,
Feb 11, 2011, 5:07:13 AM2/11/11
to mint...@googlegroups.com
நீங்களும் காணவில்லை முழுமையாக. ஆனால் ஜாதகத்தில் கண்னுக்கு புலப்படாத 10 உப கிரகங்கள் உண்டு. இவைகளுக்கு ஆற்றல் அதிகம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. நீங்கள் சொல்லும் அல்ப்பா. காமா,. தீட்டா. இவைகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடும். இத்துடன் ப்ளூட்டோ. யுரேனஸ். நெப்ட்யூன் மேலும் ஆராய்ச்சிகள  நடந்து கொண்டிருக்கு. ஆகையினால் தான் திறந்த மனதுடன் அறியும் பக்குவம் வேண்டும். எல்லாம் தெரிந்தவர் என்கிற பாணியிலே கற்றுக் கொள்ள முடியாது. முன் முடிவுகளுடன் வாதத்தை தொடர முடியாது
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrovighnesh.com


2011/2/11 S.Partha sarathy <spsar...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 11, 2011, 6:18:56 AM2/11/11
to mint...@googlegroups.com
வாரங்கள் தாமதமாகவே வந்திருக்கட்டும்.  திதிகளோ, மற்றவைகளோ முக்கிய தினங்களுக்குக் கடைப்பிடிக்கப் படுகின்றன. என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது என்று கூற முடியாதே! வகைப்படுத்தியது பின்னர் இருந்திருக்கலாம்.  மேலும் ஜோசியம் ஒன்றும் மூட நம்பிக்கை என்றும் கூற முடியாது.  அதுவும் அறிவியலைச் சார்ந்ததே. கணித சாஸ்திரமும், வான சாஸ்திரமும் அடிப்படையாக அமைந்த ஜோசியத்தை இன்றைய நாட்களில் வியாபாரம் ஆக்கிவிட்டனர்.  துல்லியமாய்க் கணக்கிடும் ஜோசியர்கள் இருந்திருக்கின்றனர்.  இப்போதும் இருப்பார்கள்.

2011/2/10 S.Partha sarathy <spsar...@gmail.com>
/// சூரியனின் ஏழு குதிரைகளும் ஏழு நாட்களாம் ரதத்தின் 12 சக்கரங்களும் 12 மாதங்களாம்...////
இந்துக்களின் புராணங்களில் திதி தானே குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதும் ஆகம முறைகளில் திதிதானே உபயோகிக்கப்படுகின்றன. "வாரங்கள்" எந்த காலத்தில் இருந்து கடைபிடக்கப்பட்டுவருகின்றன என தெரிந்து கொள்ள விருப்பம். 
அன்புடன்
சே. பார்த்தசாரதி 


--

360.gif

LK

unread,
Feb 11, 2011, 6:22:31 AM2/11/11
to mint...@googlegroups.com
இப்பொழுதும் இருக்கின்றார்கள் 

2011/2/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

S.Partha sarathy

unread,
Feb 11, 2011, 6:29:35 AM2/11/11
to mint...@googlegroups.com


2011/2/11 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 11, 2011, 6:50:26 AM2/11/11
to mint...@googlegroups.com
//என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது////
கீதா அம்மா என்னுடய கேள்வி ஏன் மற்ற இரண்டு கிரகங்களை சேர்க்கவில்லை ?

//மேலும் ஜோசியம் ஒன்றும் மூட நம்பிக்கை என்றும் கூற முடியாது.  அதுவும் அறிவியலைச் சார்ந்ததே. கணித சாஸ்திரமும், வான சாஸ்திரமும் அடிப்படையாக அமைந்த ஜோசியத்தை இன்றைய நாட்களில் வியாபாரம் ஆக்கிவிட்டனர்/
//
ஒத்துக்கொள்கிறேன் - நம்மை சுற்றும் அவற்றை நாம் சுற்றாமல் இருந்தால்...



2011/2/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
Feb 11, 2011, 6:57:50 AM2/11/11
to mint...@googlegroups.com
சரியே, மற்ற இரண்டும் சாயா கிரஹங்கள் என்பதால் அவை இடம் பெறவில்லை என்றும், பின்னர் ராகுவும், கேதுவும் இடம்பெறவேண்டும் என்பதாலேயே ராகுகாலம், குளிகை என்பவை ஏற்பட்டன என்றும் என் தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  மேலும் வார சூலை நாட்களும், ஆதிசிவன் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தன் சூலாயுதத்தைத் தன் கைகளில் இருந்து விடுவிப்பார் எனவும்.  சூலாயுதம் நல்லவர், கெட்டவர் என இல்லாமல் எதிரில் காணும் எவரையும் அழிக்கும் வல்லமை கொண்டது என்பதால் வாரசூலை நாட்களில் குறிப்பிட்டிருக்கும் திசைகளில் பயணம் செய்தல் கூடாது என்றும் சிறு வயதில் சொன்னவை.  எங்களைப் பொறுத்தவரை இவற்றைக் கடைப்பிடிக்கிறோம்.  இதைச் சொல்லுவதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை. 

மற்றபடி நம்பிக்கை என்பது பக்திபூர்வமானது.  ஆன்மீகம் வேறே, பக்தி உணர்வு வேறே என்பது தாங்கள் அறியாததா?  எனக்கு இருப்பது பக்தி மட்டுமே. ஆன்மீகப் பாதையில் முதலடி கூட எடுத்து வைக்காமல் அதன் உயரத்தைப் பார்த்து மலைத்துக்கொண்டு இருக்கிறேன்.  நன்றி, உங்கள் பல விளக்கங்களையும் பார்த்துப்பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறேன்.  ஆகவே உங்கள் மேலதிக விளக்கமும் தேவை.

2011/2/11 S.Partha sarathy <spsar...@gmail.com>
//என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது////
கீதா அம்மா என்னுடய கேள்வி ஏன் மற்ற இரண்டு கிரகங்களை சேர்க்கவில்லை ?




--

--



S.Partha sarathy

unread,
Feb 11, 2011, 6:59:10 AM2/11/11
to mint...@googlegroups.com
///இத்துடன் ப்ளூட்டோ. யுரேனஸ். நெப்ட்யூன் மேலும் ஆராய்ச்சிகள  நடந்து கொண்டிருக்கு///
பண்ணுபவர் யார்? அறிவியலாளர்களா? ஜோதிடர்களா?

///ஆகையினால் தான் திறந்த மனதுடன் அறியும் பக்குவம் வேண்டும். எல்லாம் தெரிந்தவர் என்கிற பாணியிலே கற்றுக் கொள்ள முடியாது. முன் முடிவுகளுடன் வாதத்தை தொடர முடியாது. /////

ஐயா, நான் சொல்லவந்ததைத் தவறாகப் புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன்.நான் சொல்லவந்தது இதுதான்.
மதநம்பிக்கை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் இருக்கவேண்டும் என் அவசியமிலலை அல்லது தெரியாமலும் இருக்கலாம். ஆனால் ஒன்றை அறிவியல் எனக் கூறினால் அவர் மற்றவர்களின் ஐயங்களை நீக்க கடமைப்பட்டவராவார். 

இதை சொல்ல என்ன பக்குவம் வேண்டுன் எனத் தெரியவில்லை...
அன்புடன்
சே. பார்த்தசாரதி

2011/2/11 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 11, 2011, 11:56:03 AM2/11/11
to mint...@googlegroups.com
திரு. விக்னேஷ் அவர்களே,
எனது முதல் ஐயம்:
///அதே மாதிரி சூரியனுடைய ஒளிக்கற்றையை பிரித்தால் VIBGYOR என ஏழு நிறங்கள் என பலர் தவறாக கூறுவார்கள். கிரகங்கள் 9 அதே போல infra 
Red and Ultra Violet ரெண்டையும் சேர்த்தால் மொத்தம் 9 கலர்கள். ///

சூரிய ஒளி மட்டுமல்ல நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கணினியிலிருந்து வரும் வெள்ளொளியும் அவ்வாறே நிறப்பிரிகை அடையும். அதைக் காண ஒரு குறுந்தகடு இருந்தால் போதும். ஒளியால்  சூரியனையும் கிரகங்களையும் தொடர்பு படுத்திய போன்று கணினியை எதோடு தொடர்பு படுத்துவீர்கள்? உங்கள் அறையில் உள்ள மின்விளக்காக இருந்தாலும்  சிமினி  விளக்காக இருந்தாலும் அவ்வாறே நிறப்பிரிகை அடையும். 

அன்புடன்
சே. பார்த்தசாரதி  
2011/2/11 S.Partha sarathy <spsar...@gmail.com>

Astrologer Vighnesh சென்னை

unread,
Feb 11, 2011, 12:17:51 PM2/11/11
to mint...@googlegroups.com
திரு பார்த்த சாரதி அவர்களே.
நாம் எடுத்துக் கொண்டிருக்கும் விஷயம் சூரியனைப் பற்றியது. நிறத்தை பிரித்தால் 7 ஒளிக் கற்றைகள் வரும்  என்பது ஒகே. சூரிய ஓளியிலிருந்து 7 அல்ல 9 வகை ஒளிகள் வருகிறது என்று விளக்கினேன். மேலும் தாங்கள் வாரம் எவ்வாறு சம்பந்தப் படுததப் படுகிறது. திதி தானே முக்யம் என்று சொன்னீர்கள்.
நான் இப்போது பார்க்கும் வகை ஜோதிடம் சூரிய சந்திரனைக் கொண்டு திதி வாரம் பகல் இரவு இந்த அடிப்படையிலேயே. கண்னுக்கு புலனாகாத சனி செவ்வாய். புதன் . குரு. (சுக்ரன்)  ஆகிய கிரகங்களை விட்டு விட்டு பார்க்கும் ஜோதிடம். இது சித்தர்கள் கையாண்ட ஜோதிடம் இதன் சிறப்பு.
மேலும் நான் இணையத்தில் தெரிந்து கொண்டது பூமியின் விட்டத்தை 108 முறை பெறுக்கி வரும தொகை பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப் பட்ட தூரம். சூரியன் உடைய விட்டத்தை 108 ல் பெறுக்க கானும் தொகை சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைப் பட்ட தூரம். 108 என்கிற எண் ஆன்மீகத்தில் அஷ்டோத்திரம் என பல தேவதைகளுக்கு அர்ச்சனை நாமாவளி உண்டு. இவைகள் எல்லாம் நம் அறிவுக்கு எட்டாதவையாக இருந்தது. இப்போது விஞ்ஞானம் இவைகளை துல்யமாக அளந்து சொல்வதால் இவைகளை இவ்வாறாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் ப்ளூட்டோ. நெப்ட்யூன். யுரேனஸ். போன்ற கிரகங்கள் பராசரர் காலத்தில் இருந்ததில்லை. ஆனால் அவர் கூறி விட்டு சென்றது 10 உப கிரகம் இருக்கு. அவைகள் 9ஐ விட வலிமை வாய்ந்தது என்று தொட்டும் தொடாமல் கூறிச் சென்றிருக்கிறார். ஆகையினால் ஜோதிட ரீதியாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 
நான் என்ன சொல்ல வருகிறேன் எனறால் விஞ்ஞானம் என்பது அறிவு பூர்வமாக சிந்தித்து ஒரு தெளிவான பின் புல உண்மையை தெளிவாக்கிறது. நேற்று இருந்தது. நாளையும் இருககும். அன்னிக்கே இதனை ஒரளவிற்கு நம் பெரியோர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இப்போது தான் எல்லாவற்றிக்கும் விளக்கம் தேவை படுகிறது. இல்லை என்றால் பழமைவாதி. பழைய பஞ்சாங்கம் என பெயரிட்டு விடுகிறர்ர்க்ள.
இன்னமும் பல விஷயங்கள் ஜோதிடத்தில் ஆராய்ச்சி செய்யபட வேண்டிய நிலையிலேயே இருக்கு. 80 சதம் தான் பலன் கள் ஒத்து வருகிறது. இந்த அறியப்படாத 10 உபகிரகங்கள் ஜோதிடத்தில் சொல்லும் பலன்களை மாற்றி விடுகின்றன. உ-ம். குளிகன். மாந்தி. தூம்ரகேது. இந்த்ரப்ரஸ்தன். பரிவேஷ. காலன். உபகேது ஆகிய கிரகங்களை பூரணமாக புரிந்து கொண்டால் தான் சொல்லும் பலன்கள் விஞ்ஞான கணிப்பு போல் தப்பாமல் வரும்.
சூரியனிலிருந்து மைக்ரோவேவ். தீட்டா. காமா. அல்பா ரேக்கள் இந்த பரிணாம வளர்ச்சியில் எவ்வாறு பங்கு எடுத்துக் கொள்கிறது என்பதை இன்னும ஆராய்ச்சி நடைபெறுவது போல் இவைகளிலும் காலம் பதில் தரும. அது வரை ஜோதிடத்தை மட்டமாகவோ குறைபாடுடையதாகவோ எடுத்துக் கொள்ளவேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள்.

S.Partha sarathy

unread,
Feb 11, 2011, 2:04:14 PM2/11/11
to mint...@googlegroups.com
///மேலும் நான் இணையத்தில் தெரிந்து கொண்டது பூமியின் விட்டத்தை 108 முறை பெறுக்கி வரும தொகை பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப் பட்ட தூரம். சூரியன் உடைய விட்டத்தை 108 ல் பெறுக்க கானும் தொகை சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைப் பட்ட தூரம். ///
அது 108 அல்ல 110! 
இதை நீங்களேசெய்து பார்க்கலாம். ஒரு சிறிய கண்ணாடி அல்லது ஒரு காகிதத்தில்  ஒரு அங்குலம் துளையிட்டு கண்ணாடியில் ஓட்டவும். பின் அக்கன்னாடியின் முலமாக சூரிய ஒளியை ஒரு அறையினுள் செலுத்தி சூரிய பிம்பத்தை சுவற்றில் முழு வட்டமாக விழச் செய்யவும். இப்போது அப்பிம்பத்தின் விட்டத்தையும் பிம்பத்திற்கும் கண்ணாடிக்கும் இடப்பட்டத் தூரத்தை அளக்கவும். அந்த விகிதம் 110 ஆக இருக்கக் காண்க!
///சூரியன் உடைய விட்டத்தை 108 ல் பெறுக்க கானும் தொகை சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைப் பட்ட தூரம். 108 என்கிற எண் ஆன்மீகத்தில் அஷ்டோத்திரம் என பல தேவதைகளுக்கு அர்ச்சனை நாமாவளி உண்டு.////
ஐயா எதோ ஒரு நாட்டு அறிவியலாளர் கண்டுபிடிப்பை ஏற்கனவே நமக்குத்தான் தெரியுமே எனக் கூறுவது நம் நாட்டிற்கு பெருமையாகாது!
அன்புடன்,

S.Partha sarathy

unread,
Feb 11, 2011, 10:56:24 PM2/11/11
to mint...@googlegroups.com
///சூரியனிலிருந்து மைக்ரோவேவ். தீட்டா. காமா. அல்பா ரேக்கள் இந்த பரிணாம வளர்ச்சியில் எவ்வாறு பங்கு எடுத்துக் கொள்கிறது என்பதை இன்னும ஆராய்ச்சி நடைபெறுவது போல் இவைகளிலும் காலம் பதில் தரும. அது வரை ஜோதிடத்தை மட்டமாகவோ குறைபாடுடையதாகவோ எடுத்துக் கொள்ளவேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள்.///

ஐயா ஜோதிடம் மதம் சம்பந்தப்பட்டது என்று கூறினால் நான் அது உங்கள் நம்பிக்கை என விட்டுவிடுவேன். அறிவியல் சம்பத்தப்பட்டது எனில்  சிறு ஐயங்களை கூட தீர்க்கமுடியவில்லை எனும்போது  அது குறைபாடு உடையதே!

Geetha Sambasivam

unread,
Feb 12, 2011, 12:00:28 AM2/12/11
to mint...@googlegroups.com
ராகுகாலம், குளிகை என்பவை ஏற்பட்டன//

ராகுகாலம், எமகண்டம் என வாசிக்கவும்.  தவறுதலாய்க் குளிகை எனத் தட்டச்சி இருக்கிறேன்.  இப்போது தான் கவனித்தேன்.  மன்னிக்கவும். :(

2011/2/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>
சரியே, மற்ற இரண்டும் சாயா கிரஹங்கள் என்பதால் அவை இடம் பெறவில்லை என்றும், பின்னர் ராகுவும், கேதுவும் இடம்பெறவேண்டும் என்பதாலேயே ராகுகாலம், குளிகை என்பவை ஏற்பட்டன என்றும் என் தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன். 



--

--



S.Partha sarathy

unread,
Feb 12, 2011, 12:26:58 AM2/12/11
to mint...@googlegroups.com
கீதாம்மா ஜோதிடம் ஒரு vanasasthiram 

2011/2/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 12, 2011, 12:57:18 AM2/12/11
to mint...@googlegroups.com
கீதாம்மா ஜோதிடம் ஒரு வானசாஸ்திரம் என்று கூறுவதால் கேட்கேறேன்,
திதி - ஒரு வான் நிகழ்வு , நிலவின் வளர் பிறை தேய்பிறை மூலம் ஒரு   நாளை குறிப்பிடப்பயன் படுகின்றது.
நட்சத்திரம் - வானில் நிலவின் இருப்பிடத்தை குறிக்கப்  பயன்படுகிறது .
அயனம் - சூரியன் நகரும் திசையை குறிக்க
இராசி - வானில் சூரியன் இருக்கும் இடத்தைக் குறிக்க

அதே போல் இராகு காலம் எம கண்டம் என்ன வான் நிகழ்வு எனக் கூறமுடியுமா?

அன்புடன்
சே. பார்த்தசாரதி 


2011/2/12 S.Partha sarathy <spsar...@gmail.com>

S.Partha sarathy

unread,
Feb 12, 2011, 1:05:06 AM2/12/11
to mint...@googlegroups.com
// மேலும் வார சூலை நாட்களும், ஆதிசிவன் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தன் சூலாயுதத்தைத் தன் கைகளில் இருந்து விடுவிப்பார் எனவும்.  சூலாயுதம் நல்லவர், கெட்டவர் என இல்லாமல் எதிரில் காணும் எவரையும் அழிக்கும் வல்லமை கொண்டது என்பதால் வாரசூலை நாட்களில் குறிப்பிட்டிருக்கும் திசைகளில் பயணம் செய்தல் கூடாது என்றும் சிறு வயதில் சொன்னவை.  எங்களைப் பொறுத்தவரை இவற்றைக் கடைப்பிடிக்கிறோம்.///

அப்படியாயின் ஜோதிடம் மதம் சம்பந்தப்பட்டது. அறிவியல் சம்பந்தப்பட்டது அல்லவே?

அன்புடன்
சே. பார்த்தசாரதி 

2011/2/12 S.Partha sarathy <spsar...@gmail.com>

devoo

unread,
Feb 12, 2011, 4:26:58 AM2/12/11
to மின்தமிழ்
>> அப்படியாயின் ஜோதிடம் மதம் சம்பந்தப்பட்டது. அறிவியல் சம்பந்தப்பட்டது அல்லவே? <<

eclipse மதம் சம்பந்தப்பட்டதா, அறிவியல் சம்பந்தப்பட்டதா ?
அது நிகழும் நாளையும், கால அளவையும் எப்படி ஜோதிடத்தால் முன்பே கணிக்க
முடிகிறது ? கோள்களின் அமைப்பு / சாரம் குறித்து ஜோதிடம் கூறுவதிலும்,
அறிவியல் கூறுவதிலும் அதிக வேறுபாடு இல்லையே ? வெற்று நம்பிக்கையின்
அடிப்படையில் இது சாத்தியமா ?


தேவ்

On Feb 12, 12:05 am, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
> // மேலும் வார சூலை நாட்களும், ஆதிசிவன் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத்
> தன் சூலாயுதத்தைத் தன் கைகளில் இருந்து விடுவிப்பார் எனவும்.  சூலாயுதம்
> நல்லவர், கெட்டவர் என இல்லாமல் எதிரில் காணும் எவரையும் அழிக்கும் வல்லமை
> கொண்டது என்பதால் வாரசூலை நாட்களில் குறிப்பிட்டிருக்கும் திசைகளில் பயணம்
> செய்தல் கூடாது என்றும் சிறு வயதில் சொன்னவை.  எங்களைப் பொறுத்தவரை இவற்றைக்
> கடைப்பிடிக்கிறோம்.///
>
> அப்படியாயின் ஜோதிடம் மதம் சம்பந்தப்பட்டது. அறிவியல் சம்பந்தப்பட்டது அல்லவே?
>
> அன்புடன்
> சே. பார்த்தசாரதி
>

> 2011/2/12 S.Partha sarathy <spsarath...@gmail.com>


>
> > கீதாம்மா ஜோதிடம் ஒரு vanasasthiram
>

> > 2011/2/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> >> சரியே, மற்ற இரண்டும் சாயா கிரஹங்கள் என்பதால் அவை இடம் பெறவில்லை என்றும்,
> >> பின்னர் ராகுவும், கேதுவும் இடம்பெறவேண்டும் என்பதாலேயே ராகுகாலம், குளிகை
> >> என்பவை ஏற்பட்டன என்றும் என் தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  மேலும் வார
> >> சூலை நாட்களும், ஆதிசிவன் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தன்
> >> சூலாயுதத்தைத் தன் கைகளில் இருந்து விடுவிப்பார் எனவும்.  சூலாயுதம் நல்லவர்,
> >> கெட்டவர் என இல்லாமல் எதிரில் காணும் எவரையும் அழிக்கும் வல்லமை கொண்டது
> >> என்பதால் வாரசூலை நாட்களில் குறிப்பிட்டிருக்கும் திசைகளில் பயணம் செய்தல்
> >> கூடாது என்றும் சிறு வயதில் சொன்னவை.  எங்களைப் பொறுத்தவரை இவற்றைக்
> >> கடைப்பிடிக்கிறோம்.  இதைச் சொல்லுவதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை.
>
> >> மற்றபடி நம்பிக்கை என்பது பக்திபூர்வமானது.  ஆன்மீகம் வேறே, பக்தி உணர்வு
> >> வேறே என்பது தாங்கள் அறியாததா?  எனக்கு இருப்பது பக்தி மட்டுமே. ஆன்மீகப்
> >> பாதையில் முதலடி கூட எடுத்து வைக்காமல் அதன் உயரத்தைப் பார்த்து
> >> மலைத்துக்கொண்டு இருக்கிறேன்.  நன்றி, உங்கள் பல விளக்கங்களையும் பார்த்துப்பல
> >> விஷயங்களைப் புரிந்து கொள்கிறேன்.  ஆகவே உங்கள் மேலதிக விளக்கமும் தேவை.
>

> >> 2011/2/11 S.Partha sarathy <spsarath...@gmail.com>


>
> >>>  //என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது////
> >>> கீதா அம்மா என்னுடய கேள்வி ஏன் மற்ற இரண்டு கிரகங்களை சேர்க்கவில்லை ?
>
> >>>>>>  --
>
> >>>>>  --
>
> >>>  --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

S.Partha sarathy

unread,
Feb 12, 2011, 8:13:36 AM2/12/11
to mint...@googlegroups.com
தேவ் சார்,
என் நேரடியான தெளிவான கேள்விகளுக்கு எதிர் கேள்விகள்தான் வந்துகொண்டு இருகின்றன. நேரடியான  பதில்களை கொடுத்தால் மகிழ்ச்சி.
அன்புடன்
சே. பார்த்தசாரதி 

 

2011/2/12 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Feb 13, 2011, 3:15:59 AM2/13/11
to mint...@googlegroups.com
திரு பார்த்தசாரதி,

என் போன்றவர்களுக்கு அறிவியலின் எல்லை/அல்லது முடிவு ஆன்மீகம் என்பதே கருத்து.  கிரஹணங்கள் அறிவியல் தான் என்றாலும் எந்தமாதத்தில் எந்தத் தேதியில் கிரஹணங்கள் ஏற்படும் என்பதை நம் பஞ்சாங்கங்களை எழுதிய முன்னோர்கள் பல்லாண்டுகள் முன்பே கணித்துச் சொல்லிவிட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது.  அதோடு பல கோயில்களைக் கட்டிய மன்னர்களும், ஸ்தபதிகளும் அந்தக் கோயிலின் கர்பகிரஹத்தில் எந்த மாதம் எந்தத் தேதியில் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரே வந்து விழும் என்பதையும் துல்லியமாய்க் கணித்தே கட்டி இருக்கின்றனர்.  இதற்கான வான சாஸ்திரம் தெரியாமலா கட்டி இருப்பாங்க?? ஏனென்றால் வருடத்தில் குறிப்பிட்ட ஓர் நாளில் தான் அம்மாதிரிக் கதிர்கள் விழும்.  கவனிக்கவும், இங்கே கிழமை பற்றிச் சொல்லவில்லை.  குறிப்பிட்ட மாதத்தின் குறிப்பிட்ட திதியில் சூரியக் கதிர்கள் விழும்வண்ணம் கட்டுமானம் செய்யப் பட்டுள்ளது.  குடந்தை சார்ங்கபாணி கோயில், சக்ரபாணி கோயில்களில் உத்தராயன வாயில் , தக்ஷிணாயன வாயில்  என்ற இரு அமைப்புகளும் உள்ளன.

   நூற்றாண்டுகள் முன்பே இத்தகையதொரு கட்டடக் கலை நம் நாட்டில் இருந்திருக்கிறது.  ராஜராஜ சோழனோ அல்லது சிதம்பரம் கோயிலைக் கட்டிய ஸ்தபதிகளோ மழை நீர் சேமிப்பு என்னும் இன்றைய திட்டத்தைக் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால் அந்தக் கோயில்களில் பெய்யும் மழை நீரெல்லாம் நேரடியாகக் குளங்களுக்குச் சென்றடையும் வண்ணம் கட்டப் பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்பங்களை அவர்கள் அந்தக் காலங்களிலேயே கற்றிருக்கின்றனர். 

மேலே கூறிய வாரங்கள் பற்றிய குறிப்புகளை சாக்ததத்துவத்திலேயோ, எதிலேயோ படிச்சேன்.  நினைவில் இல்லை.  ஆனாலும் தேடுகிறேன்.  நேற்றே உங்கள் கேள்வியைப் பார்த்துட்டாலும் பதில் கிடைச்சதும், ஆதாரங்களோடு வர நினைச்சேன். அதனால் நேற்று பதில் கூறவில்லை.  நான் தேடுவது கிடைச்சதும், அல்லது வேறு யாரிடமாவது கேட்டுப் பதில் கூறுகிறேன்.  நான் அறிவியல் படித்தவள் அல்ல.  வணிகவியலும், ஹிந்தி இலக்கியமும் தான் படிச்சேன்.  ஆகையால் உங்கள் அறிவியல் கேள்விகளுக்கு அறிவியலை ஒட்டிய பதில் என்னால் கூற இயலாமைக்கு மன்னிக்கவும். 

2011/2/12 S.Partha sarathy <spsar...@gmail.com>

devoo

unread,
Feb 14, 2011, 12:20:12 AM2/14/11
to மின்தமிழ்
>> ஜோதிடம் ஒரு vanasasthiram <<

Astrology is an art of prediction based on observational evidences on
Astronomical (Vedic) theories I presume. Of course element of human
error is always there. Even well planned space expeditions based on
science end up in failure sometimes

Dev

On Feb 11, 11:26 pm, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
> கீதாம்மா ஜோதிடம் ஒரு vanasasthiram
>

> 2011/2/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> > சரியே, மற்ற இரண்டும் சாயா கிரஹங்கள் என்பதால் அவை இடம் பெறவில்லை என்றும்,
> > பின்னர் ராகுவும், கேதுவும் இடம்பெறவேண்டும் என்பதாலேயே ராகுகாலம், குளிகை
> > என்பவை ஏற்பட்டன என்றும் என் தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  மேலும் வார
> > சூலை நாட்களும், ஆதிசிவன் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தன்
> > சூலாயுதத்தைத் தன் கைகளில் இருந்து விடுவிப்பார் எனவும்.  சூலாயுதம் நல்லவர்,
> > கெட்டவர் என இல்லாமல் எதிரில் காணும் எவரையும் அழிக்கும் வல்லமை கொண்டது
> > என்பதால் வாரசூலை நாட்களில் குறிப்பிட்டிருக்கும் திசைகளில் பயணம் செய்தல்
> > கூடாது என்றும் சிறு வயதில் சொன்னவை.  எங்களைப் பொறுத்தவரை இவற்றைக்
> > கடைப்பிடிக்கிறோம்.  இதைச் சொல்லுவதில் எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை.
>
> > மற்றபடி நம்பிக்கை என்பது பக்திபூர்வமானது.  ஆன்மீகம் வேறே, பக்தி உணர்வு வேறே
> > என்பது தாங்கள் அறியாததா?  எனக்கு இருப்பது பக்தி மட்டுமே. ஆன்மீகப் பாதையில்
> > முதலடி கூட எடுத்து வைக்காமல் அதன் உயரத்தைப் பார்த்து மலைத்துக்கொண்டு
> > இருக்கிறேன்.  நன்றி, உங்கள் பல விளக்கங்களையும் பார்த்துப்பல விஷயங்களைப்
> > புரிந்து கொள்கிறேன்.  ஆகவே உங்கள் மேலதிக விளக்கமும் தேவை.
>

> > 2011/2/11 S.Partha sarathy <spsarath...@gmail.com>


>
> >> //என்றாலும் அதற்காக ஏழு கிரஹங்களின் பெயரில் கிழமைகள் அமையக் கூடாது////
> >> கீதா அம்மா என்னுடய கேள்வி ஏன் மற்ற இரண்டு கிரகங்களை சேர்க்கவில்லை ?
>
> >>>>>  --
>
> >>>>  --
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

S.Partha sarathy

unread,
Feb 14, 2011, 2:46:29 AM2/14/11
to mint...@googlegroups.com
கீதாம்மா, நான் கூறுவதும் அதேதான். வேத காலத்து சூரிய சித்தாந்தம் (2000BC) போன்ற text களில் கூறப்பட்டுள்ளது  வான சாஸ்திரம் மட்டுமே. எதிர்காலத்தைக் குறிக்கும் ஜோதிடம் அன்று. புராணங்களிலும் நல்ல சகுனங்களை பற்றிய நம்பிக்கை மட்டுமே  இருந்தன. ஜாதகம் பார்த்து திருமணம் நடந்ததாக இதிகாசங்களில் கூற முடியுமா? ஏன் இராசி பற்றிய குறிப்பு எங்கேனும் உண்டா? இராசி மற்றும் அதன் முலம் எதிர்காலத்தைக் கணித்தல் போன்றவை அலெக்ஸ் சண்டர் முலம் இந்தியா வந்தவை. 

அன்புடன்
சே. பார்த்தசாரதி 


2011/2/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 14, 2011, 2:58:07 AM2/14/11
to mint...@googlegroups.com
நிச்சயமாய் ஜாதகம் பொருத்தம் பார்த்துத் திருமணங்கள் நடக்கவே இல்லை.  

2011/2/14 S.Partha sarathy <spsar...@gmail.com>
கீதாம்மா, நான் கூறுவதும் அதேதான். வேத காலத்து சூரிய சித்தாந்தம் (2000BC) போன்ற text களில் கூறப்பட்டுள்ளது  வான சாஸ்திரம் மட்டுமே. எதிர்காலத்தைக் குறிக்கும் ஜோதிடம் அன்று. புராணங்களிலும் நல்ல சகுனங்களை பற்றிய நம்பிக்கை மட்டுமே  இருந்தன. ஜாதகம் பார்த்து திருமணம் நடந்ததாக இதிகாசங்களில் கூற முடியுமா? ஏன் இராசி பற்றிய குறிப்பு எங்கேனும் உண்டா? இராசி மற்றும் அதன் முலம் எதிர்காலத்தைக் கணித்தல் போன்றவை அலெக்ஸ் சண்டர் முலம் இந்தியா வந்தவை. 

அன்புடன்
சே. பார்த்தசாரதி 


2011/2/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>


Reply all
Reply to author
Forward
0 new messages