சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்

109 views
Skip to first unread message

Santhanam Swaminathan

unread,
Dec 18, 2011, 4:01:11 PM12/18/11
to minT...@googlegroups.com
சுமேரியாவில் தமிழ் பறவை
Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and Tamilnadu
 
சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
 
Swami
020 8904 2879
07951 370 697

rajam

unread,
Dec 18, 2011, 6:34:59 PM12/18/11
to mint...@googlegroups.com
தகவலுக்கு நன்றி! ஆனால், எனக்கு ஒரு பெரிய குறை ... வலைத்தளத்தின் பின்னணி நிறம் (background color) வெள்ளையாக இல்லாவிட்டாலும் சரி, பிற நீர்க்கோலங்களோடு அமைந்திருந்தாலும் சரி, என்னால் அதைப் படிக்க இயலுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஓர் அடிப்படைக் காரணம் என் கண் வலிக்கும். இன்னொரு காரணம் ... பின்னணியின் நிறமோ/அழகோ முக்கியமா, தட்டியெழுதப்பட்ட எழுத்தின் கருத்து முக்கியமா என்பது என்னைப் பொருத்த அளவில் முக்கியமான கேள்வி. இதை Web design ஆட்களோடு வாதாட நான் தயார்! :-) :-) :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Dec 18, 2011, 6:35:59 PM12/18/11
to மின்தமிழ்

சுவாமி,

சுமேரியாவின் இருதலைப்புள் சிந்து சமவெளி நாகரீகத்தின்
கடைசி காலங்களில் இந்தியா வந்துவிடுகிறது.

தேவாரத்தில் யாளிகளைக் கண்டு யானைகள் அஞ்சும் என்று
பாடியுள்ளனர் தேவாரமுதலிகள். அந்த ஆளிகளே
போற்றிக் கொண்டாடும் இருதலைப்புள் கர்நாடக
மாநிலத்தின் சின்னமாக இன்றும் உள்ளது.
http://en.wikipedia.org/wiki/File:Seal_of_Karnataka.svg
மைசூர் உடையார்களின் ஆட்சியின் எச்சம் இஃது.

இருதலைப்புள் யாளிகளைப் போன்றே ஆனைகளைத் தூக்க வல்லதாம்:
http://www.kamat.com/kalranga/prani/ganda.htm

மைசூர் மஹாராஜாவின் லலிதமஹால் பேலஸ் இன்று
5 நக்ஷத்ர ஹோட்டல் ஆகிவிட்டது. அங்கே கண்டபேருண்டப் புள்:
http://en.wikipedia.org/wiki/File:Ganberunda.jpg

தஞ்சை பெருவுடையார் கோயில் (மராத்தியர்காலச் சித்திரம் என நினைக்கிறேன்):
http://www.flickr.com/photos/avanibhajana/2315926697/

மத்யகீழைத் தேயங்களில் (> ரோம்) இருதலைப்புள்:
http://en.wikipedia.org/wiki/Double-headed_eagle

நா. கணேசன்

N. Kannan

unread,
Dec 18, 2011, 10:35:52 PM12/18/11
to mint...@googlegroups.com
மிக்க நன்றி.

கிமு 1380. எவ்வளவு பழசு. நம் வேதக்கடவுளர் இந்திரன், வருணன் போன்றோர்
Bogazkoy எனும் இடத்தில் கிடைத்த கல்வெட்டில் உள்ளனர்! நம்
தொல்காப்பியரும் இத்தெய்வங்களை வைத்துத்தானே திணைப்பகுப்பு செய்கிறார்!

இருதலைப்புள் கொண்டு தமிழ்ப் பண்பாட்டின் காலத்தை கிமு 3800க்குத் தள்ள
முடிகிறது! நல்ல சேதி. நானொரு தகவல் கொரிய-தமிழ் இழையில் இடுகிறேன்
விரைவில்!

நா.கண்ணன்

2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Dec 18, 2011, 10:37:20 PM12/18/11
to mint...@googlegroups.com
எனக்கும் உங்கள் கருத்தோடு உடன்பாடு உண்டு. ஆப்பிள் நிருவனம்
மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறதே வாசிப்பிற்கு இனிமை வெள்ளைப்
பின்னணியில் கருப்பு எழுத்துக்கள் என்று. வேறு எப்படிப் போட்டாலும்
கஷ்டம்தான்.

க.>

2011/12/19 rajam <ra...@earthlink.net>:

rajam

unread,
Dec 18, 2011, 10:44:37 PM12/18/11
to mint...@googlegroups.com
எந்தத் தளத்திற்குப்
போனாலும் அதில் உடனடித்
தெளிவில்லை என்றால் ஒரு
நொடிகூட என்னால் அதைப்
பார்க்க முடியாதபடிக் கண்
வலிக்கும்.


இங்கே இவருடைய
கட்டுரையைப் படிக்க
என்னால் முடியவில்லை. :-(
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

s.bala subramani B+ve

unread,
Dec 18, 2011, 11:01:22 PM12/18/11
to mint...@googlegroups.com
பேராசிரியர் சந்தானம் சுவாமிநாதன் அவர்களுக்கு 

 உங்கள் கட்டுரைகளை விரும்பி படிக்கிறேன் நன்றி 
உலகத்தின் தொன்மை தொடர்பான பல  கேள்விகளுக்கு இந்த மண்ணில் விடை இருக்கிறது என்பதை ,உங்களின்  சங்க இலக்கியத்தின் மீதான அணுகுமுறை தெளிவாக  விளக்குகிறது 

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் உலக தமிழ் பேரவையின் ஆண்டுமலரில் கடல் கோள் பற்றிய உங்கள் கட்டுரையை விரும்பி படித்து உங்கள் எழுத்துக்களை தேடி கொண்டு இருந்தேன் 

தமிழ் மரபு அற கட்டளைக்கு நன்றி 

கண்ணன் அவர்களுக்கு 

தமிழ் மரபு அற கட்டளை மற்றும் மின்தமிழ் குழுமத்தால் பயன் அடைந்தவர்கள் அதை  வெளி படுத்தும் விதமாக தனி இழை ஒன்றை ஆரம்பிக்க சில மாதங்கள் முன்னர் சொல்லி இருந்தேன் 
மறுபடியும் ஞாபக படுத்துகிறேன் 

அன்புடன் 

சிவ பாலசுப்ரமணி 


2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Santhanam Swaminathan

unread,
Dec 19, 2011, 12:21:11 AM12/19/11
to mint...@googlegroups.com
Dear all
Thanks for the comments.
My articles are available on four sites.
swamiindology site
tamilandvedas.wordpress,com
speakingtree of Times of India

But your suggestion regarding the background colour is taken on board.
I am a zero when it comes to technical matters.
I will ask my son to change it.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: s.bala subramani B+ve <sunke...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, December 19, 2011 4:01 AM
Subject: Re: [MinTamil] சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்

Santhanam Swaminathan

unread,
Dec 19, 2011, 12:42:25 AM12/19/11
to mint...@googlegroups.com
Dear Kannan
I have got several new research articles in Tamil.
Where do I put them?
Do we have a site for Tamil articles?
 
Swami
020 8904 2879
07951 370 697



From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, December 19, 2011 3:37 AM
Subject: Re: [MinTamil] சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்

N. Kannan

unread,
Dec 19, 2011, 3:14:28 AM12/19/11
to mint...@googlegroups.com, coral shree, Geetha Sambasivam
ஐயோ!

நீங்கள் வந்தது கற்பகதரு! என்று எங்கள் விக்கி குழுவிற்குத் தெரியுமோ? :-)

உங்களை உடனே திருமிகு பவளசங்கரி, கீதா சாம்பசிவம் அணுகுவர்.

அன்புடன்
நா.கண்ணன்

2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:

--

N. Kannan

unread,
Dec 19, 2011, 3:16:46 AM12/19/11
to mint...@googlegroups.com
2011/12/19 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:


> கண்ணன் அவர்களுக்கு 
>
> தமிழ் மரபு அற கட்டளை மற்றும் மின்தமிழ் குழுமத்தால் பயன் அடைந்தவர்கள் அதை 
> வெளி படுத்தும் விதமாக தனி இழை ஒன்றை ஆரம்பிக்க சில மாதங்கள் முன்னர் சொல்லி
> இருந்தேன் 
> மறுபடியும் ஞாபக படுத்துகிறேன் 
>

அன்பின் பாலு

நன்றிக்கு ஓர் தமிழ் மரபு அறக்கட்டளை!

எனும் தலைப்பில் ஒரு இழையைத் தாங்களே ஆரம்பித்து விடுங்களேன். நான் எப்படி ஆரம்பிப்பது? :-)

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Dec 19, 2011, 12:07:00 AM12/19/11
to mint...@googlegroups.com
ஐயா
 
இழையை நகர்த்தினால் சட்டென்று மறைந்து போகின்றது. நீங்கள் சரி செய்தால் பார்க்க முடியும்.
 
சேசாத்திரி

2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

Geetha Sambasivam

unread,
Dec 19, 2011, 6:44:01 AM12/19/11
to N. Kannan, Santhanam Swaminathan, mint...@googlegroups.com, coral shree
திரு சுவாமிநாதனுக்கு மடல் அனுப்பியுள்ளேன்.  நன்றி.

2011/12/19 N. Kannan <navan...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 19, 2011, 7:42:48 AM12/19/11
to மின்தமிழ்

On Dec 18, 9:35 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> மிக்க நன்றி.
>
> கிமு 1380. எவ்வளவு பழசு. நம் வேதக்கடவுளர் இந்திரன், வருணன் போன்றோர்
> Bogazkoy எனும் இடத்தில் கிடைத்த கல்வெட்டில் உள்ளனர்! நம்
> தொல்காப்பியரும் இத்தெய்வங்களை வைத்துத்தானே திணைப்பகுப்பு செய்கிறார்!
>
> இருதலைப்புள் கொண்டு தமிழ்ப் பண்பாட்டின் காலத்தை கிமு 3800க்குத் தள்ள
> முடிகிறது! நல்ல சேதி. நானொரு தகவல் கொரிய-தமிழ் இழையில் இடுகிறேன்
> விரைவில்!
>

சுமேரியாவில் யாழ்கள் சுட்டி நீங்கள் கேட்டதால் கொடுத்தேனே.

> நா.கண்ணன்
>
> 2011/12/19 Santhanam Swaminathan <swami...@yahoo.com>:


>
>
>
>
>
>
>
>
>
> > சுமேரியாவில் தமிழ் பறவை
> > Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and
> > Tamilnadu
>
> > சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
> > நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
> > ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
> > ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
> > இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
>
> > Swami
> > 020 8904 2879
> > 07951 370 697
> > Blog: swamiindology.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post

N. Kannan

unread,
Dec 19, 2011, 8:16:55 AM12/19/11
to mint...@googlegroups.com
2011/12/19 N. Ganesan <naa.g...@gmail.com>:

>
> சுமேரியாவில் யாழ்கள் சுட்டி நீங்கள் கேட்டதால் கொடுத்தேனே.
>

ஆம்! நன்றி!

அதில் காட்டியுள்ள எருது யாழ் இங்குள்ளதா? என்று தெரியவில்லை. கொரிய
இசைக்கருவி வீணையின் ஒரு crude form. அதன் ஒலியில் ஒரு இனிமை
இருப்பதில்லை. நமது வீணை, சிதார், சந்தூர் இவை யாழின் வழி வந்தவை எனில்
நம்மவர் இசை வித்தகர் என்பதில் எச்சந்தேகமும் கிடையாது.

கிரேக்க, ரோம இதிகாசங்களில் யாழ் பயன்பாடு கேள்விப்பட்டு இருக்கிறேன்.
இவர்களுக்கு யாழ் முதலில் இருந்ததா? அது எங்கிருந்து வந்தது? நேரடியாக
அங்கிருந்தா? இல்லை தமிழகம் வழியாகவா? என்பது போன்று கேள்வி கேட்டு விடை
தேடலாம்!

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Dec 19, 2011, 8:27:07 AM12/19/11
to மின்தமிழ்

On Dec 19, 7:16 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/12/19 N. Ganesan <naa.gane...@gmail.com>:


>
>
>
> > சுமேரியாவில் யாழ்கள் சுட்டி நீங்கள் கேட்டதால் கொடுத்தேனே.
>
> ஆம்! நன்றி!
>
> அதில் காட்டியுள்ள எருது யாழ் இங்குள்ளதா? என்று தெரியவில்லை.

எருத்தியாழ் ஏன் இல்லை? வித்யாதரர் cult தமிழில் பற்றி வாசித்தால்
தெரியும்.
மணிமேகலை காப்பியத்தில் விளக்கமாக உள்ளது.

பொருநர் என்றால் போரிடும் வீரர், அந்தக் காலத்துப் போர்களுக்கு
முன்னால் பாணர்கள் யாழ், விறலியர் நடன நாட்டியம் எல்லாம்
உண்டு. பாணருக்கும் பொருநர், வயவர் என்ற பெயர்கள் உள்ளன.
கன்னடத்தில் இன்றும் பொட்டுக்கட்டி விடப்படும் தேவதாசிகளுக்கு
வயவி என்ற பழந்தமிழ்ப் பெயர் (பஸவி), அக்குல ஆண்களுக்கு
யாழோருக்குப் பெயர் வயவர் (பஸவர்).

சிந்து சமவெளியில் பட்டமஹிஷி காளையை புணருவதாய்
முத்திரைகள் உள்ளன. அதுவே, சிந்து நாகரிகம் அழிந்தபோது,
காளை (வயவர்) குதிரையாக மாறியது. அசுவமேத யாகம்
என்றானது. அசுவமேத யாகத்தில் என்ன நடந்தது என
தேவ் ஸார், சேசாத்திரி, ... போன்றோர் அறிவர்.
பின்னர் யாழோர் பலிகொடுக்கப்பட்டனர். அந்த யாழோர்
தான் வித்தியாதரர் ஆவிகள். சங்கீத விச்சைகளுக்கு
விச்சாதரர்கள். காமனையும் இரதியையும் சுற்றி
வித்யாதரர் சிற்பங்களில் அமைப்பது மரபு.

வித்தியாதரர் பற்றி இன்னொரு இழையில் சொல்லலாம்.

நா. கணேசன்

N. Kannan

unread,
Dec 19, 2011, 8:34:29 AM12/19/11
to mint...@googlegroups.com
2011/12/19 N. Ganesan <naa.g...@gmail.com>:

>> அதில் காட்டியுள்ள எருது யாழ் இங்குள்ளதா? என்று தெரியவில்லை.
>
> எருத்தியாழ் ஏன் இல்லை? வித்யாதரர் cult தமிழில் பற்றி வாசித்தால்
> தெரியும்.
> மணிமேகலை காப்பியத்தில் விளக்கமாக உள்ளது.
>

நான் சொன்னது கொரியாவில்.

சுமேரியா, தமிழகம் இங்குள்ள யாழ் போன்ற (வடிவில் அதையொத்த) கருவியை நான்
இன்னும் இங்கு காணவில்லை. அகப்படலாம்!

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Dec 19, 2011, 8:37:20 AM12/19/11
to மின்தமிழ்

On Dec 19, 7:34 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/12/19 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>

> >> அதில் காட்டியுள்ள எருது யாழ் இங்குள்ளதா? என்று தெரியவில்லை.
>
> > எருத்தியாழ் ஏன் இல்லை? வித்யாதரர் cult தமிழில் பற்றி வாசித்தால்
> > தெரியும்.
> > மணிமேகலை காப்பியத்தில் விளக்கமாக உள்ளது.
>
> நான் சொன்னது கொரியாவில்.
>
> சுமேரியா, தமிழகம் இங்குள்ள யாழ் போன்ற (வடிவில் அதையொத்த) கருவியை நான்
> இன்னும் இங்கு காணவில்லை. அகப்படலாம்!
>

கொரியா - தமிழ் பற்றி எனக்கு தெரியாது. நீங்கள் சொல்லுங்கள்.

நா. கணேசன்

> நா.கண்ணன்

விஜயராகவன்

unread,
Dec 19, 2011, 10:20:04 AM12/19/11
to மின்தமிழ்

You mention in your blog "From 3800 BC until today this mythical bird
is used as a symbol of royalty."

Questions:

Is the 2 headed bird mentioned in the sangam lit. eagle and not a
bird?

The doubleheaded eagle is a royal/national symbol in Greek Orthodox
empire , it's successor Russian Orthodox empire , etc. After the fall
of communism in 1990, Russia went back to the Tsarist symbol of double
headed eagle.

In Tamilnadu, such a symbolism is sporadic and infrequent. It has not
been a Royal ensignia - whether 2 haeded eagle or any other bird) in
ancient Tamilnadu or even much later.

More appropriate wording of the heading would be

சுமேரியாவின் இருதலைப் புள் அகநானூற்றில்.


You can make a much better case that TN borrowed it from Sumeria or
Greek Orthodox empire , if indeed 'borrowing' is the theme of the
essay

VCV

N. Ganesan

unread,
Dec 19, 2011, 1:40:14 PM12/19/11
to மின்தமிழ்

Yes. Clearly Tamil borrowal from Sumeria.
when did this happen? we have evidences from Indus seals right after
its
classical era.

Gandabherunda - one of the oldest descriptions in India is in CTamil
(செந்தமிழ்)
texts. Is the bird described that early in Sanskrit texts, I'd love to
know.

N. Ganesan

Santhanam Swaminathan

unread,
Dec 19, 2011, 3:06:13 PM12/19/11
to mint...@googlegroups.com
வடமொழியில் பஞ்சதந்திரக் கதையில் ganda berunda pakshi உண்டு.மற்ற இடங்களில் இருக்கலாம்.மஹாரஷ்டிர பக்தர் ஏகனாத் இதை அவர் செய்யுளில் பயன் படுத்துகிறார். புள் என்றால் கருடன் என்பது தமிழில் பல இடங்களில் வருகிறது. திருமாலை புள்கொடியுடையோன் என்ற குறிப்புகள் நிறைய இடங்களில் உண்டு. அதை கருடன் என்றோ அதே இனத்தைச் சேர்ந்த கழுகு என்றோ கொள்வதில் தவறு இல்லை.என்னிடம் ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன.ஏராளமான படங்களும் உள்ளன.நானே தபால் தலை காசுகள் சேகரிப்பதால் என்னிடம் இருதலைப் புள் அஞ்சல் தலைகளும் உள்ளன.பத்து ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் மியூசியத்தில் ஒரு சொற்பொழிவு கேட்டதிலிருந்து விஷயங்ளைச் சேகரித்து வருகிறேன். தமிழில் எழுத நாம் ஒரு தளம் உருவாக்கினால் இன்னும் பல விஷயங்களை ஒரிஜினல் வரிகளுடன் விவாதிக்கலாம்.ஆங்கிலத்தில் எழுதுவதால் தமிழர்களின் பெருமை மற்றவர்களுக்கும் தெரியும்.ஆகையால் முடிந்தவரை தமிழ் மேற்கோள்களைக் கொடுத்  வருகிறேன்.speaking tree (of Times Of India) போன்ற தளங்களை தமிழர்களை விட வடக்கத்தியர்களே அதிகம் படிக்கிறார்கள்.அதிலும் எல்லா கட்டுரைகளையும் ஏற்றுகிறேன்.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Monday, December 19, 2011 6:40 PM
Subject: [MinTamil] Re: சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Santhanam Swaminathan

unread,
Dec 19, 2011, 3:23:25 PM12/19/11
to mint...@googlegroups.com
Dear Seshadri
I will ask my son to look in to it.
If you have any difficulty in accessing the swamiindology.blogspot.com 
Speaking tree of Times of India website is also good, but I am a small fry there.
It may be difficult for you to locate my article.
Big shots like Ravishankar, Sukhabodananda, Deepak Chopra and others have
 got thousands of followers in it.
I will definitely improve the Indology site.
 Thanks for reading it.
Swami
020 8904 2879
07951 370 697



From: seshadri sridharan <ssesh...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, December 19, 2011 5:07 AM
Subject: Re: [MinTamil] சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்

ஐயா
 
இழையை நகர்த்தினால் சட்டென்று மறைந்து போகின்றது. நீங்கள் சரி செய்தால் பார்க்க முடியும்.
 
சேசாத்திரி

2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>
சுமேரியாவில் தமிழ் பறவை
Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and Tamilnadu
 
சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
 
Swami
020 8904 2879
07951 370 697

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

s.bala subramani B+ve

unread,
Dec 19, 2011, 8:27:00 PM12/19/11
to mint...@googlegroups.com
வணக்கம் 

தாங்கள் மும்பையில் இருப்பதால் 
இந்திய கடல் சார் பற்றி பல நூல்கள் எழுதிய கார்டோக்ராபர் ப. அருணாசலம் அவர்களுடன் உங்களுக்கு தொடர்புகள் இருக்கும் என நம்புகிறேன் 
அவரின் south indian maritime history என்ற நூலில் உங்களுடிய வியட்நாம்  பாண்டியன் கல்வெட்டுகளை பற்றி குறிப்பிட்டு உள்ளார் 

அதே போல் மராத்திய திராவிடம் என்ற நூலை எழுதிய  ப்போனவில் வசிக்கும் சாகித்ய விருது பெற்ற விஸ்வநாத கைரே அவர்களுடனும் நீங்கள் உரையாடினால் இன்னும் அறிய செல்வங்கள் எங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்  

s.bala subramani B+ve

unread,
Dec 20, 2011, 12:07:33 AM12/20/11
to mint...@googlegroups.com


2011/12/20 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
வணக்கம் 

தாங்கள் மும்பையில் இருப்பதால் 
இந்திய கடல் சார் பற்றி பல நூல்கள் எழுதிய கார்டோக்ராபர் ப. அருணாசலம் அவர்களுடன் உங்களுக்கு தொடர்புகள் இருக்கும் என நம்புகிறேன் 
அவரின் south indian maritime history என்ற நூலில் உங்களுடிய வியட்நாம்  பாண்டியன் கல்வெட்டுகளை பற்றி குறிப்பிட்டு உள்ளார் 

அதே போல் மராத்திய திராவிடம் என்ற நூலை எழுதிய பூனாவில்  வசிக்கும் சாகித்ய விருது பெற்ற விஸ்வநாத கைரே அவர்களுடனும் நீங்கள் உரையாடினால் இன்னும் அறிய செல்வங்கள் எங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்  

சிவ பாலசுப்ரமணி 


N D Logasundaram

unread,
Dec 20, 2011, 6:31:46 AM12/20/11
to mint...@googlegroups.com
நூ  த லோ சு
மயிலை
திருவாளர் சாமி அவர்களுக்கு,
 
இருதலைப்புள் பற்றி தங்களது இந்த மடலாடல் குழுவில் கண்டேன்
ஓர் நல்ல இடுகை
மதுரைத் திட்டத்தில் தகடூர் யாத்திரை எனும் ஓர் நூல் உள்ளீடு செய்தேன்
அதனிலும் இதற்கு இணையாக இருதலைப் புள்ளின் எடுத்துக் காட்டு உள்ளது
 
ஈங்கு உடன் பிறந்தவர்களாகிய  இருமன்னர்  இடையே வளர்ந்த
சினத்தைத்  இருதலைப்புள் எடுதுக்காடினைக் காட்டி "தவிர்க்க"
என அறிவுறுத்துகிறார் புலவர்  >>>>>  வரிகள் இங்கே
 
                             தகடூர் யாத்திரை
    8         இணைக்குறள்ஆசிரியப்பா
ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய
வெளிறில் வெண்கோட்டு களிறுகெழு வேந்தே
வினவுதி யாயின் கேண்மதி சினவாது
ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்
இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல
                  5
அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
கண்உறு பொழுதில் கைபோல் எய்தி
நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே,
நோதக
முன்னவை வரூஉங் காலை நும்முன்             10
நுமக்குத் துணையா கலும்உரியன்,
அதனால்
தொடங்க உரிய வினைபெரி தாயினும்
அடங்கல் வேண்டுமதி அத்தை அடங்கான்    15
துணைஇலன் தமியன் மன்னும் புணைஇலன்
பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத்
தாழ்தல் அன்றோ, அரிது தலைப்படுதல்
வேண்டின் பொருந்திய
வினையின் அடங்கல் வேண்டும்                      20
அனையமா கீண்டறிந்திசி னோர்க்கே
(பொரு30மன்னரைச்சேர்ந்துஒழுகுதல்1)௭௭௩

 

 

2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

DEV RAJ

unread,
Dec 20, 2011, 8:50:32 AM12/20/11
to மின்தமிழ்
*இருதலைப் புள்ளின் ஓர் உயிர் போல*

ஆகா,
ஒற்றுமையை வலியுறுத்துவதற்கு என்ன அழகான உவமை !


தேவ்

On Dec 20, 4:31 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> நூ  த லோ சு
> மயிலை
> திருவாளர் சாமி அவர்களுக்கு,
>
> இருதலைப்புள் பற்றி தங்களது இந்த மடலாடல் குழுவில் கண்டேன்
> ஓர் நல்ல இடுகை
> மதுரைத் திட்டத்தில் தகடூர் யாத்திரை எனும் ஓர் நூல் உள்ளீடு செய்தேன்
> அதனிலும் இதற்கு இணையாக இருதலைப் புள்ளின் எடுத்துக் காட்டு உள்ளது
>
> ஈங்கு உடன் பிறந்தவர்களாகிய  இருமன்னர்  இடையே வளர்ந்த
> சினத்தைத்  இருதலைப்புள் எடுதுக்காடினைக் காட்டி "தவிர்க்க"
> என அறிவுறுத்துகிறார் புலவர்  >>>>>  வரிகள் இங்கே
>

>                              *தகடூர் யாத்திரை *


>     8         இணைக்குறள்ஆசிரியப்பா
> ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய
> வெளிறில் வெண்கோட்டு களிறுகெழு வேந்தே
> வினவுதி யாயின் கேண்மதி சினவாது

> *ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்
> இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல*                  5


> அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
> கண்உறு பொழுதில் கைபோல் எய்தி
> நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே,
> நோதக
> முன்னவை வரூஉங் காலை நும்முன்             10
> நுமக்குத் துணையா கலும்உரியன்,
> அதனால்
> தொடங்க உரிய வினைபெரி தாயினும்
> அடங்கல் வேண்டுமதி அத்தை அடங்கான்    15
> துணைஇலன் தமியன் மன்னும் புணைஇலன்
> பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத்
> தாழ்தல் அன்றோ, அரிது தலைப்படுதல்
> வேண்டின் பொருந்திய
> வினையின் அடங்கல் வேண்டும்                      20
> அனையமா கீண்டறிந்திசி னோர்க்கே
> (பொரு30மன்னரைச்சேர்ந்துஒழுகுதல்1)௭௭௩
>

> 2011/12/19 Santhanam Swaminathan <swami...@yahoo.com>


>
>
>
>
>
>
>
> >     சுமேரியாவில் தமிழ் பறவை
> > Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and
> > Tamilnadu
>
> > சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
> > நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
> > ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
> > ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
> > இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
>

> > *Swami
> > 020 8904 2879
> > 07951 370 697*
> > *Blog: swamiindology.blogspot.com*
> > *
> > *


>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Ganesan

unread,
Dec 20, 2011, 9:28:19 AM12/20/11
to மின்தமிழ்

On Dec 20, 5:31 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> நூ  த லோ சு
> மயிலை
> திருவாளர் சாமி அவர்களுக்கு,
>
> இருதலைப்புள் பற்றி தங்களது இந்த மடலாடல் குழுவில் கண்டேன்
> ஓர் நல்ல இடுகை
> மதுரைத் திட்டத்தில் தகடூர் யாத்திரை எனும் ஓர் நூல் உள்ளீடு செய்தேன்
> அதனிலும் இதற்கு இணையாக இருதலைப் புள்ளின் எடுத்துக் காட்டு உள்ளது
>
> ஈங்கு உடன் பிறந்தவர்களாகிய  இருமன்னர்  இடையே வளர்ந்த
> சினத்தைத்  இருதலைப்புள் எடுதுக்காடினைக் காட்டி "தவிர்க்க"
> என அறிவுறுத்துகிறார் புலவர்  >>>>>  வரிகள் இங்கே
>

>                              *தகடூர் யாத்திரை *


>     8         இணைக்குறள்ஆசிரியப்பா
> ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய
> வெளிறில் வெண்கோட்டு களிறுகெழு வேந்தே
> வினவுதி யாயின் கேண்மதி சினவாது

> *ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்
> இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல*                  5


> அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
> கண்உறு பொழுதில் கைபோல் எய்தி
> நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே,
> நோதக
> முன்னவை வரூஉங் காலை நும்முன்             10
> நுமக்குத் துணையா கலும்உரியன்,
> அதனால்
> தொடங்க உரிய வினைபெரி தாயினும்
> அடங்கல் வேண்டுமதி அத்தை அடங்கான்    15
> துணைஇலன் தமியன் மன்னும் புணைஇலன்
> பேர்யா றெதிர்நீந்தும் ஒருவன் அதனைத்
> தாழ்தல் அன்றோ, அரிது தலைப்படுதல்
> வேண்டின் பொருந்திய
> வினையின் அடங்கல் வேண்டும்                      20
> அனையமா கீண்டறிந்திசி னோர்க்கே
> (பொரு30மன்னரைச்சேர்ந்துஒழுகுதல்1)௭௭௩
>

கண்டபேரண்டப் பறவை பற்றி இந்தியாவில்
ஒரு பழங்கதை வழங்கிவருகிறது.
ஒருதலைக்கு நல்ல சுவையும் இனிப்பும் மிக்க
பழம் கிடைக்க மறு தலைக்கு தராமலே
தின்றுவிட்டதாம். அதனால் சினமுற்ற
இன்னொரு தலை விஷப் பழம் என்று
பாராமல் அதை மற்றதுக்கும் தராமல்
தின்றதாம். விளைவு: இருதலைப் புள்ளே
செத்துவிட்டது. ஆக ஒற்றுமையாய்
இருந்து, ஆராய்ந்து செயலில் ஈடுபடுக
என்று வலியுறுத்தும் கதை.

அக் கதையைத் தகடூர் யாத்திரையுடையார்
குறிக்கிறார்:
> *ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்
> இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல* 5


> அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக்
> கண்உறு பொழுதில் கைபோல் எய்தி
> நும்மோர்க்கு நீதுணை ஆகலும் உளையே

பஞ்சதந்த்திரத்தில் வரும் இருதலைப் பக்ஷி கதை என்ன?
சுவாமியைக் கேட்போம்.

நா. கணேசன்

> 2011/12/19 Santhanam Swaminathan <swami...@yahoo.com>


>
>
>
>
>
>
>
> >     சுமேரியாவில் தமிழ் பறவை
> > Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and
> > Tamilnadu
>
> > சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
> > நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
> > ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
> > ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
> > இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
>

> > *Swami
> > 020 8904 2879


> > 07951 370 697*
> > *Blog: swamiindology.blogspot.com*
> > *
> > *
>

> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Santhanam Swaminathan

unread,
Dec 20, 2011, 3:12:18 PM12/20/11
to mint...@googlegroups.com
Dear Ganesan and other Min Tamil members

I have mentioned Thakadur Yaththirai (quoted in Purath thirattu Ref 785) in my article.
But so far I have not read the original lines.
Thanks for giving me the Thakadur Yaththirai original lines.

In Panchatantra it comes in the Pigeons (Dove) and the Hunter story.
When they were discussing various ways to get out of the net,
one pigeon insists that they should take united action.
It is a "kathaikkul kathai" (story within a story). The pigeon tells the story of the 2 headed bird.
The two heads fights between themselves and when one of the two heads
drank poison the bird died. The other head was fighting for amrita.

Panchatantra story is not only for children, but also for elders.
The book is full of quotations and references for adults.
Please read Arthur Ryder or Chandra Rajan's (Penguin) translation.

Thanks for all the comments made so far. 

Swami
020 8904 2879
07951 370 697



From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Tuesday, December 20, 2011 2:28 PM
Subject: [MinTamil] Re: சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

MANICKAM POOPATHI

unread,
Dec 20, 2011, 5:10:57 PM12/20/11
to mint...@googlegroups.com
அரிய படங்கள்.. சிறப்பான கட்டுரை..!

இரும்புள் மோஸ்தரில்  (Motif)
ஜம்பை (பவாணி) ஜமுக்காளம்
ஒருகாலத்தில் உலகை வலம் வந்ததுண்டு...
[பழம்பெருமை கிழம்பெருமை :-) :-) :-)
ஏதும் பேசுவதாகப் எவருக்கேனும் பட்டால்
அடியேனின் பிழை பொருத்தருள வேண்டும்] _/\_

நெய்வதற்கு மட்டுமல்ல
பின்னுவதற்குங் கூட
அலகு நீண்ட பறவை ஆதலால்  8v)
அதைப் பக்கவாட்டில்  காட்டினால்தான்
அது சிறப்பாக வரும்.. ?

பாக்கியிடத்தில்
அதன்  பிரதியினை  பலித்து
சமன்படுத்திக் காட்டுவதாகக்கூட   இருக்கலாம்..?
(simple negative binomial  distribution?)

நண்பர்களுக்குத் தெரியும்
மண்ணுளு(ம்பி)ப் பாம்பிற்கு
இரண்டு தலைகள் இல்லை..  இல்லீங்களா..?

மற்றபடி..
ஈருடலும் ஒருயிருமாய்
இணை (யை) பிரியாது வாழும் பறவையினை
இரும்புள் என்றும் அழைப்பதுண்டு..?

மற்றது பெரிய முரட்டுப் பேராந்து  (angry bird)
(இரும்பொறை  = பெரும்பொறை)

நடுவானில் மிதந்து பறக்கும்...
சூரியனுக்குள் பார்க்கும்.. ஒரே பட்சியான
கழுகு / சாவகக் கழுகு (கருடன்)
இந்து/புத்த மதங்களில் தேவ கணங்களுள்
ஒன்றாக வைத்து.. வழி பட்டு வந்தமைக்கான
சான்றுகள்.. ஏராளம் காணக் கிடக்கின்றன...

சொல்லப் போனால்..
ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த
(மன்னிக்கணும்..  இதான் கட்டங்கடைசி  பழம்பெருமை..?)
இரும்புள் தலை  புத்தஸ்தூபி ஒன்றினை..  இன்றைக்கும்கூட
காந்தார மண்ணில்  காணலாம்.. ?

மிக்க நன்றி..  வணக்கம்..!



அன்புடன்,,,/பூபதி

 




--
Self-righteous morality is jealousy with a halo.  -- HG Wells
IrumbuL med.jpg

DEV RAJ

unread,
Dec 20, 2011, 9:47:09 PM12/20/11
to மின்தமிழ்
Bherunda is one of the samyukta (both hands used conjointly) hastas
mentioned in Abhinaya Darpanam: The last few such hastas in the list
are
Matsya , KUrma, Varaha, Garuda, Naga bandha, Khatva and Bherunda. the
hand gestures for Bherunda indicates a bird - actually a pair
(from Samskrita group)


ஶ்ரீ விஜயீந்த்ர தீர்த்தர் (1490 – 1592) எழுதிய 'சைவ ஸர்வஸ்வ கண்டநம்'
எனும் நூலில் இருப்பதாகத் தெரிகிறது. இவர் கும்பகோணத்தில் வாழ்ந்தவர்.
ஶ்ரீ வ்யாஸ ராயரின் சீடர். பல்கலை வித்தகர்


தேவ்

Santhanam Swaminathan

unread,
Dec 21, 2011, 12:43:43 AM12/21/11
to mint...@googlegroups.com
Thanks.
I am getting more information which I can to my file on Dobule H Bird.
I hear that there is a Vahana (Mount of Gods)at Mannarkudi or some other temples.
Is there any information about Berunda Pakshi Vahana for any of our Gods?
Please send me any information, if possible vahana pictures as well.
 
Swami
020 8904 2879
07951 370 697


From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>

Santhanam Swaminathan

unread,
Dec 21, 2011, 12:54:28 AM12/21/11
to mint...@googlegroups.com
நன்றி. எனக்கு இவை அனைத்தும் புதிய தகவல்கள்.
எப்ப்போதாவது படங்கள் கிட்டைத்தால் அனுப்பவும்.
 
Swami
020 8904 2879
07951 370 697


seshadri sridharan

unread,
Dec 21, 2011, 12:54:50 AM12/21/11
to mint...@googlegroups.com
ஐயா  எனக்கு ஒரு நினைவு 1993 இல் போளுர் அருகே உள்ள பர்வதமலைக்கு சென்ற போது. மலை ஏறு பாதையில் உச்சிக்கு திருப்பத்தில் எனக்கு 250 மீட்டர் தொலைவில் இரண்டு வெள்ளை நிற பேருரு கொண்ட பராந்துகளைப் பார்த்தேன். அடுத்த வாரமே ஒரு நாளேடில் இரயிலில் அடிப்பட்டு ஒரு ராடசதப் கழுகு இறந்து விட்டதாகவும் அதன் ஒவ்வொரு சிறகும் 15 அடி நீளருடையன என்ற செய்தியைப் படித்ததும் நான் கட்டால் கண்ட காட்ச மெய் என உணர்ந்தேன். இதை ஆங்கலத்தில் Roc என்பர். சிந்து பாத்து கதைகளில்  இவை வருவதுண்டு.
 
சேசாத்திரி 

2011/12/21 MANICKAM POOPATHI <poop...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Dec 21, 2011, 5:20:38 AM12/21/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்.

சுமேரியாவில் தமிழ் பறவை
Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and Tamilnadu
நல்லதொரு பதிவு
2head bird.JPG

தாங்கள் வெளியிட்டுள்ள இதே படத்தை அச்சு அசலாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் வண்ணச் சித்திரமாகப் பார்த்துள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்


2head bird.JPG

Nagarajan Vadivel

unread,
Dec 21, 2011, 5:50:04 AM12/21/11
to mint...@googlegroups.com
http://en.wikipedia.org/wiki/Gandaberunda
doublehead1.jpgdoublehead2.jpg

Nagarajan

2011/12/21 கி.காளைராசன் <kalair...@gmail.com>
doublehead1.jpg
2head bird.JPG
doublehead2.jpg

DEV RAJ

unread,
Dec 21, 2011, 6:59:06 AM12/21/11
to மின்தமிழ்
> ஆவுடையார் கோயிலில் வண்ணச் சித்திரமாகப் பார்த்துள்ளேன்.<

காளைராசன் அவர்கள் சொல்வது இந்த ஓவியமாக இருக்கலாம் -
http://karthigainathan.files.wordpress.com/2011/04/1390622959_.jpg


தேவ்

On Dec 21, 3:20 pm, கி.காளைராசன் <kalairaja...@gmail.com> wrote:
> ஐயா வணக்கம்.
>
> சுமேரியாவில் தமிழ் பறவை
> Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and
> Tamilnadu
> நல்லதொரு பதிவு
> [image: 2head bird.JPG]
>
> தாங்கள் வெளியிட்டுள்ள இதே படத்தை அச்சு அசலாக புதுக்கோட்டை மாவட்டம்

>


> அன்பன்
> கி.காளைராசன்
>

>  2head bird.JPG
> 61KViewDownload

rajam

unread,
Dec 21, 2011, 4:43:58 PM12/21/11
to mint...@googlegroups.com
இதையும் பாருங்கள்: இருதலைக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி ... 



On Dec 18, 2011, at 9:21 PM, Santhanam Swaminathan wrote:

Dear all
Thanks for the comments.
My articles are available on four sites.
swamiindology site
tamilandvedas.wordpress,com
speakingtree of Times of India

But your suggestion regarding the background colour is taken on board.
I am a zero when it comes to technical matters.
I will ask my son to change it.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: s.bala subramani B+ve <sunke...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, December 19, 2011 4:01 AM

Subject: Re: [MinTamil] சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்

பேராசிரியர் சந்தானம் சுவாமிநாதன் அவர்களுக்கு 

 உங்கள் கட்டுரைகளை விரும்பி படிக்கிறேன் நன்றி 
உலகத்தின் தொன்மை தொடர்பான பல  கேள்விகளுக்கு இந்த மண்ணில் விடை இருக்கிறது என்பதை ,உங்களின்  சங்க இலக்கியத்தின் மீதான அணுகுமுறை தெளிவாக  விளக்குகிறது 

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் உலக தமிழ் பேரவையின் ஆண்டுமலரில் கடல் கோள் பற்றிய உங்கள் கட்டுரையை விரும்பி படித்து உங்கள் எழுத்துக்களை தேடி கொண்டு இருந்தேன் 

தமிழ் மரபு அற கட்டளைக்கு நன்றி 

கண்ணன் அவர்களுக்கு 

தமிழ் மரபு அற கட்டளை மற்றும் மின்தமிழ் குழுமத்தால் பயன் அடைந்தவர்கள் அதை  வெளி படுத்தும் விதமாக தனி இழை ஒன்றை ஆரம்பிக்க சில மாதங்கள் முன்னர் சொல்லி இருந்தேன் 
மறுபடியும் ஞாபக படுத்துகிறேன் 

அன்புடன் 

சிவ பாலசுப்ரமணி 


2011/12/19 Santhanam Swaminathan <swam...@yahoo.com>
சுமேரியாவில் தமிழ் பறவை
Double headed Eagle in Sumeria,Russia,Albania,Turkey,Karnataka,Andhra and Tamilnadu
 
சற்று முன்னர் அகநானூறு,பரிபாடல்,கலித்தொகை ஆகிய
நூல்களில் கபிலர்,நல்லந்துவனார்,மருதன் இளநாகனார்
ஆகியோரல் குறிப்பிடப்படும் இரு தலைப் புள் குறித்து
ஒரு ஆய்வுக் கட்டுரையை எனது பிளாக் கில் ஏற்றியுள்ளேன்.
இத்துறையில் ஆர்வமுடையோர் படிக்க வேண்டுகிறேன்
 
Swami
020 8904 2879
07951 370 697

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Dec 21, 2011, 6:05:53 PM12/21/11
to mint...@googlegroups.com
This is simply amazing!

The legend of two headed bird and the conversation they had turned out
to be true. Isn't it. Simply amazing!

That's why I believe that our legends (ஐதீகம், புராணம்) have a grain
of truth somewhere!

Kannan

2011/12/22 rajam <ra...@earthlink.net>

Hari Krishnan

unread,
Dec 21, 2011, 9:27:15 PM12/21/11
to mint...@googlegroups.com


2011/12/22 rajam <ra...@earthlink.net>

இதையும் பாருங்கள்: இருதலைக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி ... 

சொல்ல நினைத்து நினைத்து மறந்துகொண்டிருக்கும் ஒரு செய்தி.  சென்னை எல்ஐசி கட்டடத்துக்கு அருகில் ஒரு கைரளி இருக்கிறது.  (நினைவு தடுமாறுகிறது. எல்ஐசிக்கு அடுத்ததா அல்லது ஸ்பென்ஸர் ப்ளாஸாவுக்கு எதிரில் உள்ளதா என்று நினைவில்லை.  ஆனால் அங்கே ஒரு கைரளிதானே இருக்கிறது!) கேரளக் கைவினைப் பொருட்களை விற்கும் நிலையம்.  அந்தக் கடையின் வெளிப்புறச் சுவரில் இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு மனிதனுடைய புடைப்புச் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.  இதுதான் Janus faced என்பதோ என்று அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

சென்னை அன்பர்கள் யாரேனும் இந்த உருவத்தைப் புகைப்படம் எடுத்து இடலாமே!

--
அன்புடன்,
ஹரிகி.

Nagarajan Vadivel

unread,
Dec 21, 2011, 9:41:55 PM12/21/11
to mint...@googlegroups.com
I do not wish to get confused with the genetic freaks and  the mythology/motif in puranas/sculpture/painting
Nagarajan

2011/12/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

rajam

unread,
Dec 21, 2011, 9:47:25 PM12/21/11
to mint...@googlegroups.com
Hmmm... You may not, but I do wish to believe that "mythology" has some basis which may have been forgotten over time. 

--rajam

Hari Krishnan

unread,
Dec 21, 2011, 9:47:38 PM12/21/11
to mint...@googlegroups.com


2011/12/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

I do not wish to get confused with the genetic freaks and  the mythology/motif in puranas/sculpture/painting
Nagarajan

Much obliged Professor.  I made that request to friends in Chennai.  I have reasons to believe that that more than one person from Chennai is a member of MinTamil.

And, my mail coming after the genetic freak news item is incidental. I am comfortable with my ten headed Ravana and Six headed Lord whom I worship.  Let me be banished forever to the land of myth, be it Xanadu or Kailasa.

My best wishes for your remaining in the aura of Wisdom.

கி.காளைராசன்

unread,
Dec 22, 2011, 2:37:47 AM12/22/11
to mint...@googlegroups.com
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

2011/12/21 DEV RAJ <rde...@gmail.com>

காளைராசன் அவர்கள் சொல்வது இந்த ஓவியமாக இருக்கலாம் -
http://karthigainathan.files.wordpress.com/2011/04/1390622959_.jpg

நான் குறிப்பிட்ட ஓவியம் இது அல்ல ஐயா.

நான் ஆவுடையார் கோயிலில் பார்த்தது முன்னரே குறிப்பிட்டுள்ளது போல்,
ஒரு இருதலைப் பறவையானது எட்டு(?)யானைகளைத் தூக்கிச் செல்வது போன்றதொரு வண்ணஓவியம்.

அங்கே அன்னதானம் வழங்கிவரும் ஒரு நண்பரை அறிவேன்.  அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.  படம் எடுக்க முடிந்தால் வெளியிடுகிறேன்.

கி.காளைராசன்

unread,
Dec 22, 2011, 2:42:22 AM12/22/11
to mint...@googlegroups.com
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.

2011/12/22 rajam <ra...@earthlink.net>

இதையும் பாருங்கள்: இருதலைக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி ... 


...This is simply amazing!

The legend of two headed bird and the conversation they had turned out
to be true. Isn't it. Simply amazing!....

N. Ganesan

unread,
Dec 22, 2011, 7:00:58 PM12/22/11
to மின்தமிழ்


On Dec 21, 6:41 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> I do not wish to get confused with the genetic freaks and  the
> mythology/motif in puranas/sculpture/painting
> Nagarajan
>

Agreed.

N. Ganesan

N. Ganesan

unread,
Dec 22, 2011, 7:05:52 PM12/22/11
to மின்தமிழ்

On Dec 21, 3:59 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> > ஆவுடையார் கோயிலில் வண்ணச் சித்திரமாகப் பார்த்துள்ளேன்.<
>
> காளைராசன் அவர்கள் சொல்வது இந்த ஓவியமாக இருக்கலாம் -
http://karthigainathan.files.wordpress.com/2011/04/1390622959_.jpg
>
> தேவ்
>

Avudaiyar Kovil is a late structure influenced by motifs from
Islamicate rulers of N. India.

This is not kavaiththalaippuL that Swami is talking about.
Your picture looks like some kind of pheasant, not the mythical
kavaiththalai eagle.

Varieties of pheasants:
http://en.wikipedia.org/wiki/Pheasant

N. Ganesan

கி.காளைராசன்

unread,
Dec 22, 2011, 9:36:30 PM12/22/11
to mint...@googlegroups.com
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

> நான் ஆவுடையார் கோயிலில் பார்த்தது முன்னரே குறிப்பிட்டுள்ளது போல்,


> ஒரு இருதலைப் பறவையானது எட்டு(?)யானைகளைத் தூக்கிச் செல்வது போன்றதொரு
> வண்ணஓவியம்.
>
> அங்கே அன்னதானம் வழங்கிவரும் ஒரு நண்பரை அறிவேன். அவருடன் தொடர்பு கொள்ள
> முயற்சிக்கிறேன். படம் எடுக்க முடிந்தால் வெளியிடுகிறேன்.

எனது நண்பருடன் தொலைபேசியில் பேச முடிந்தது.
அவர் அந்தப் பறவை ஓவியம் இருப்பதை உறுதி செய்தார். எட்டுயானைகளைத்
தூக்கிச் செல்வதையும் உறுதி செய்தார். அந்தப் பறவைக்க “அண்டரண்டப்
பட்சி“ என்று பெயர் சொன்னார்.
ஆனால் ஓவியம் சிதிலமடைந்து காணப்படுவதாகக் கூறினார்.

அந்த அண்டரண்டப் பட்சியைப் படம் எடுத்து இந்த இழையில் வெளியிட முயற்சிக்கிறேன்.

Santhanam Swaminathan

unread,
Dec 23, 2011, 12:27:41 AM12/23/11
to mint...@googlegroups.com
காளைராசன் அவர்களுக்கு வணக்கம் பல. தயவு செய்து அந்தப் படத்தை எடுக்கச் செய்யுங்கள். ஆவுடயார் கோவிலில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன. ஏன் இவைகளை யாரும் பாதுகாக்கவில்லை என்பதை நினைத்து மிகவும் வருந்தினேன்.நான் ஒரு இலங்கை நண்பரையும் அழைத்துச் சென்றிருந்தேன். ரோம் நகரில் வாத்திகனில் சிஸ்டன் சாப்பலைப் பார்க்க மில்லியன் கணக்கில் வருகிறார்கள். எனக்கு ஆவுடையார் கோவில் ஓவியங்களைப் பார்த்தபோது சிஸ்டர்ன் சாபல்தான் (The Sistine Chapel where you can find all the renaissance paintings of Michael Angelo and others. It has become more famous after the release of Don Bronwn's book) நினைவுக்கு வந்தது
 
Swami
020 8904 2879
07951 370 697



From: கி.காளைராசன் <kalair...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, December 23, 2011 2:36 AM
Subject: Re: [MinTamil] Re: சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்

Nagarajan Vadivel

unread,
Dec 23, 2011, 12:39:02 AM12/23/11
to mint...@googlegroups.com

கி.காளைராசன்

unread,
Dec 23, 2011, 2:50:28 AM12/23/11
to mint...@googlegroups.com
ஐயா அவர்களுக்கு வணக்கம்.

2011/12/23 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

தயவு செய்து அந்தப் படத்தை எடுக்கச் செய்யுங்கள். ஆவுடயார் கோவிலில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன.
தங்களது அன்பிற்கு இணங்கி 
படம் எடுக்க முழு முயற்சி மேற்கொள்கிறேன் ஐயா.
 
ஏன் இவைகளை யாரும் பாதுகாக்கவில்லை என்பதை நினைத்து மிகவும் வருந்தினேன்.
கோயில்கள் அரசின் கையிலும் மடங்களின் கையிலும் உள்ளன.
இவற்றைப் படம் எடுப்பதற்கு நிர்வாக உத்தரவு வாங்குவது மிகவும் கடினமாக உள்ளது.
மேலும் வருமானம் இல்லாமல் அதற்காகப் பொருட் செலவு ஆகிறது.  எனவே யாரும் அக்கரை காட்டுவதில்லை.

எனக்கு ஆவுடையார் கோவில் ஓவியங்களைப் பார்த்தபோது சிஸ்டர்ன் சாபல்தான் (The Sistine Chapel where you can find all the renaissance paintings of Michael Angelo and others. It has become more famous after the release of Don Bronwn's book) நினைவுக்கு வந்தது

ஐயா ஆவுடையார் கோயில் எல்லாவகையிலும் ஒரு தனிச்சிறப்புடைய கோயில் (different in all aspects). அதனை ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியம்.  
என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறேன்.
அந்தக் கோயிலை இடம் வரவேண்டும், வலம் வரக்கூடாது என்பது எனது கருத்து, இதை நிருவ முயல்கிறேன்.

ஆவுடையார் அருகில் வசிக்கும்
கையில் கேமிரா வைத்திருக்கும்
நண்பர் யாரேனும் உதவினால் நலம்பயக்கும்.

கி.காளைராசன்

unread,
Dec 23, 2011, 2:53:53 AM12/23/11
to mint...@googlegroups.com
ஐயா அவர்களுக்கு வணக்கம்

2011/12/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இதில் பல நல்ல படங்கள் உள்ளன.
இவற்றுடன் மற்ற சிற்பங்களையும் அவற்றில் உள்ள நுணுக்கமான கலையம்சங்களையும் படம்பிடித்துப் பதிவு செய்ய வேண்டும்.

கி.காளைராசன்

unread,
Jul 2, 2012, 11:00:11 AM7/2/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

நேற்று (01/07/2012) திருப்பெருந்துறைக்கும் ஆவுடையார்கோயிலுக்கும் சென்று வழிபடும் வாய்ப்பு கிடைத்தது.

ஆவுடையார் கோயிலில் உள்ள வண்ணஓவியங்கள் மிகவும் சிதலமடைந்த நிலையிலேயே காணக்கிடைக்கின்றன.

அண்டரண்டப் பட்சி இரண்டு தலைகளுடன் யானைகளைத் தூக்கிச் செல்லும் படங்கள் மாணிக்கவாசகர் சந்நிதியின் மேற்கூரையில் வலத்தில் ஒன்றும், இடத்தில் ஒன்றுமாக இரண்டு உள்ளன.


Inline image 1
மாணிக்கவாசகர் சந்நிதியில் மேற்கூரையில் இடதுபுறம் உள்ள படம்.

Inline image 2
மாணிக்கவாசகர் சந்நிதியின் மேற்கூரையில் வலதுபுறம் உள்ளபடம்.
கரியநிறத்தில் யானைகள் தென்படுகின்றன.
யானைகள் நான்கா? எட்டா? எண்ணமுடியவில்லை!

இப்படங்களைப் பார்த்து யாரேனும் நன்றாக ஒரு படத்தை வரைந்தால் நன்றாக இருக்கும்.

அன்பன்
கி.காளைராசன்


2011/12/23 Santhanam Swaminathan <swam...@yahoo.com>
DSC00812.JPG
DSC00811.JPG

Subashini Tremmel

unread,
Jul 2, 2012, 4:34:58 PM7/2/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அருமையான பகிர்வு முனைவர் காளைராசன்.

இவ்வகைச் சித்திரங்களை இப்படியே விட்டு வைத்தாலும் கூட பரவாயில்லை. சிலர் அதன் மேலே கிறுக்கி வைப்பதும்... சிலர் புணரமைக்கின்றேன் பேர்வழி என்று வெள்ளை சாயம் அப்பி வைப்பதும் கொடுமை..

சுபா

2012/7/2 கி.காளைராசன் <kalair...@gmail.com>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

DSC00811.JPG
DSC00812.JPG

N. Kannan

unread,
Jul 2, 2012, 5:08:01 PM7/2/12
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள்!
நல்ல முதுசொம் இடுகைகள்!

நா.கண்ணன்

2012/7/2 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jul 2, 2012, 9:54:16 PM7/2/12
to mint...@googlegroups.com


2012/7/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

அருமையான பகிர்வு முனைவர் காளைராசன்.

இவ்வகைச் சித்திரங்களை இப்படியே விட்டு வைத்தாலும் கூட பரவாயில்லை. சிலர் அதன் மேலே கிறுக்கி வைப்பதும்... சிலர்
 
புணரமைக்கின்றேன்

புனர் + அமைக்கிறேன். புன: - மீண்டும். -- வடமொழி. 

புனஹ என்பது உச்சரிப்பில் புனர் என்று வரும். அதனுடன் அமைக்கிறேன் என்னும் சொல் சேர்ந்து ’புரமைக்கிறேன்’ என்ற வடிவம் ஆகும். 

(புனர் அபி ஜனனம் புனர் அபி மரணம் 
புனர் அபி ஜனனீ ஜடரே சயனம் 

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு 
மீண்டும் தாயின் வயிற்றில் கிடப்பு ) 

இரண்டு சுழி மூன்று சுழி ஆனால்......விபரீதம் !

***
DSC00812.JPG
DSC00811.JPG

கி.காளைராசன்

unread,
Jul 2, 2012, 10:03:35 PM7/2/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2012/7/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

அருமையான பகிர்வு முனைவர் காளைராசன்.
நன்றி. 

இவ்வகைச் சித்திரங்களை இப்படியே விட்டு வைத்தாலும் கூட பரவாயில்லை. சிலர் அதன் மேலே கிறுக்கி வைப்பதும்...
உண்மை, கைக்கு எட்டிய அளவில் உள்ள சிற்பங்கள் கிறுக்கப்பட்டே உள்ளன.

இந்தக் குறிப்பிட்ட படங்கள் மேல்கூரையில் உள்ளதால் தப்பி விட்டன.
 
 
சிலர் புனரமைக்கின்றேன் பேர்வழி என்று வெள்ளை சாயம் அப்பி வைப்பதும் கொடுமை..
முன்பு ஐயா கண்ணன் அவர்கள் வேறு ஒரு இழையில் குறிப்பிட்டதுபோல, அந்தக் கோயில் பட்டர்களுக்கும், சிப்பந்திகளுக்கும் அந்தக் கோயில் பற்றிய சிறப்புகள் அனைத்தையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் முன்பெல்லாம் மன்னர்கள் கோயிலுக்கு வந்தார்கள்.  கோயில் பூசை முடித்தவுடன்தான் உணவு கொண்டனர்.  எனவே மக்களும் அப்படியே வாழ்ந்தனர்.

நாட்டை ஆள்வோர் கோயிலுக்குத் தினமும் செல்லவேண்டும்.  அவ்வாறு செய்தால், அவரைப் பின்பற்றி அனைவரும் கோயிலுக்குச் செல்வர்.
அவர்களும் நன்றாக இருப்பர்.  கோயிலும் நன்றாக இருக்கும்.

கி.காளைராசன்

unread,
Jul 2, 2012, 10:03:46 PM7/2/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/7/3 N. Kannan <navan...@gmail.com>

வாழ்த்துக்கள்!
நல்ல முதுசொம் இடுகைகள்!
நன்றி ஐயா,

அன்பன்

Hari Krishnan

unread,
Jul 2, 2012, 10:28:20 PM7/2/12
to mint...@googlegroups.com


2012/7/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

புனர் அபி ஜனனம் புனர் அபி மரணம் 
புனர் அபி ஜனனீ ஜடரே சயனம் 

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு 
மீண்டும் தாயின் வயிற்றில் கிடப்பு ) 

புன என்ற சொல்லைப் பார்க்கும்போதெல்லாம் நினைவில் நிழலாடும் இடம்:

kim aaha siitaa vaidehii bruuhi saumya punaH punaH |
pipaasum iva toyena sincantii vaakya vaariNaa || 5-66-8

(சீதையைக் கண்டது பற்றி அனுமன் சொல்லி முடித்த பிறகும், ராமன் சொல்கிறான்)

அன்பானவனே!  விதேஹ மன்னன் மகள் சீதை சொன்னதையெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்.  உன் சொல்லென்ற குளிர்ந்த ஓடையால், தாகமெடுத்தவனுக்கு நீர் வார்ப்பதுபோல் என்னை நனை.

புன புன (புனஃப்புன? தேவ்?) = திரும்பத் திரும்ப, மீண்டும் மீண்டும். 

இரண்டு சுழி, மூன்று சுழி ஆனால் விபரீதத்துக்கு என்ன இருக்கிறது?  ‘சேர்த்து வைக்கிறேன்’ என்று பொருள்கொண்டால் போயிற்று! 

Mohanarangan V Srirangam

unread,
Jul 2, 2012, 10:46:52 PM7/2/12
to mint...@googlegroups.com


2012/7/3 Hari Krishnan <hari.har...@gmail.com>



இரண்டு சுழி, மூன்று சுழி ஆனால் விபரீதத்துக்கு என்ன இருக்கிறது?  ‘சேர்த்து வைக்கிறேன்’ என்று பொருள்கொண்டால் போயிற்று!  
--
அன்புடன்,
ஹரிகி. 

ஓஹோ! சுழி மாறிப்போனாலும் சரி, சுழி அதிகமாகப் போனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாங்கறேள். சரி சரி : 


Hari Krishnan

unread,
Jul 2, 2012, 11:02:00 PM7/2/12
to mint...@googlegroups.com
2012/7/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓஹோ! சுழி மாறிப்போனாலும் சரி, சுழி அதிகமாகப் போனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாங்கறேள். சரி சரி

தலைச்சுழி என்றும் தடம்புரட்டும் என்றால்
வலைசுழிக்கா இல்லை வழி?

Geetha Sambasivam

unread,
Jul 4, 2012, 11:09:59 AM7/4/12
to mint...@googlegroups.com
அருமையான பகிர்வுக்கு நன்றி.

2012/7/2 கி.காளைராசன் <kalair...@gmail.com>
வணக்கம்.

Innamburan Innamburan

unread,
Jul 4, 2012, 9:57:49 PM7/4/12
to mint...@googlegroups.com
மூன்று சுழி இரு சுழிக்கு மூலாதாரம்.


2012/7/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
DSC00811.JPG
DSC00812.JPG

கி.காளைராசன்

unread,
Jan 24, 2013, 9:55:26 AM1/24/13
to mintamil, naga rethinam
வணக்கம்.

நேற்று மானாமதுரை சுவாமிஜி அவர்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கப்பெற்றேன்.

அப்போது சுவாமிஜி அவர்கள் இருதலைப் பறவையானது ஆறு (6) யானைகளைத் தூக்கிச்
செல்வதாகக் குறிப்பிட்டார்கள். மேலும், சாலமன் என்ற அரசன்தான்
முதன்முதலாக இந்த இருதலைப்பறவைக்குக் கோயில் கட்டி வழிபட்டான் என்றும்
குறிப்பிட்டார்கள்.

தகவலுக்காக,

அன்பன்
கி.காளைராசன்

>> *Swami
>> 020 8904 2879
>> 07951 370 697*
>> *Blog: swamiindology.blogspot.com*
>> *
>> *
>>
>> ------------------------------
>> *From:* கி.காளைராசன் <kalair...@gmail.com>
>> *To:* mint...@googlegroups.com
>> *Sent:* Friday, December 23, 2011 2:36 AM
>> *Subject:* Re: [MinTamil] Re: சுமேரியாவில் அகநானூற்று இருதலைப் புள்
--
http://pulikkarai-iyanar.blogspot.in/
http://thiruppuvanam1.blogspot.in/
http://kaalaiyarkovil.blogspot.in/
http://sakkudi.blogspot.in/

http://temples-kalairajan.blogspot.in/
http://myletters-kalairajan.blogspot.in/
http://thirukural-kalai.blogspot.in/
http://tours-kalairajan.blogspot.in/
http://books-kalai.blogspot.in/

http://kovillormadam.blogspot.in/
http://kalairajanletters.blogspot.in/
http://kalairajan26.blogspot.in/
Reply all
Reply to author
Forward
0 new messages