பாரதி ஆனிகத்திற்கு திரும்பிய தருணமாக இருக்க வேண்டும்.
முதன் முதலில் சாதாரண மனிதன் "தேடுவோராக"
seeker மாறும்போது என்ழும் கேள்விகள், எத்தனை எளிமையான ஒரு வெளிப்பாடு.
அந்த பாடல் முழுவதும் தெரிந்தவர் / கிடைக்குமிடம் தெரிந்தவர் உதவலாமே!
பாரதி ஆனிகத்திற்கு திரும்பிய தருணமாக இருக்க வேண்டும்.
அந்த பாடல் முழுவதும் தெரிந்தவர் / கிடைக்குமிடம் தெரிந்தவர் உதவலாமே!
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.
திரைப்படப்பாடலில், இந்தக் கடைசி நான்கடியை விட்டு விட்டார்கள்!
திரு.ஹரிகி! காலை உணவை, இனிமேலாவது காலந்தாழ்த்தாமல் காலையிலேயே உண்ணப்
பழகுங்கள்! இப்போது உச்சி நேரம் வந்துவிட்டது.
--------------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Feb 25, 10:58 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
2011/2/25 Nagarethinam <nataraj...@gmail.com>harathஇயுடயதே
அந்த பாடல் முழுவதும் தெரிந்தவர் / கிடைக்குமிடம் தெரிந்தவர் உதவலாமே!
முழு வடிவத்தை அனுப்புகிறேன். படத்தில் கடைசி இரண்டு (அல்லது சில) அடிகளை விட்டுவிட்டார்கள். மணி 11,30. இன்னமும் சரைக்கவில்லை; குளிக்கவில்லை; காலை உணவு அருந்தவில்லை. முடிச்சப்புறம் அனுப்புகிறேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து. ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர் எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தப்பாடல் பாரதியுடையதே என்று என் நண்பன் ஒருவன் என்னோடு சண்டை செய்யவே வந்துவிட்டான். யாரும் இனிமேல் மயங்கதீர்கள்அடியேன் ஜனா ராமானுஜதாசன்.
இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து. ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர் எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை.
--
--
ஆம் ஹரிகி.அது சிறப்பான பதில். பலருக்குத் தெளிவையும் தந்தது.ரெ.கா.
பாரதியும் அத்வைதமும் பற்றிய ஒரு விளக்கம்
(ரெ.கார்த்திகேசு)
நண்பர் சை.பீர் முகம்மதுவின் "மலேசிய இலக்கியத்தில் உரத்த சிந்தனை" கட்டுரையில் (நேசன், ஜூன் 15) பாரதியைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியுள்ளார். "நிற்பதுவே நடப்பதுவே" என்னும் பாடலில் அவனுடைய இறுதி வரிகளை விட்டு விட்டே படத்தில் காட்டியுள்ளார்கள். 'மாயா வாதம்' என்ற கருத்தை பாரதி தனது பாடலின் இறுதி வரியில் மறுத்துள்ளான். படத்தில் பாரதி மாயா வாதத்தை ஏற்றுக் கொள்வதுபோல பாடலை எடுத்துள்ளார்கள்."
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கும் இந்த ஐயப்பாடே என்றும் எழுவதுண்டு. பாடல் முழுவதும் மாயா வாதத்தைச் சந்தேகிப்பது போலவே தொனிக்கிறது. படத்தில் தோன்றாத அதன் இறுதி வரிகள் அவர் மாயா வாதத்தை தீர்க்கமாக மறுப்பதாகவே உள்ளன.
சைபீரின் கூற்று பெரும்பாலும் சரியென்றாலும், பாரதி மாயா வாதத்தை முற்றாக மறுத்தான் என்பதை அறுதியான முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாது. பாரதி வேதாந்தி. சைவ சமயத்தில் கூட பாரதிக்கு அவ்வளவு ஒட்டு இல்லை. ஆகவே வேதாந்தத்தின் அடிப்படைகளில் முக்கியமான மாயா வாதத்தை அவன் ஒதுக்கித் தள்ளியிருக்க முடியாது.
இந்தச் சந்தேகம் பற்றி என் இணைய நண்பரும், கம்பனையும் பாரதியையும் தன் இருகண்களாகக் கருதிப் பயின்று புரிந்திருப்பவருமான சென்னை ஹரிகிருஷ்ணனிடம் மின்னஞ்சலில் கேட்டிருந்தேன். என் கேள்வியையும் அவர் (மின்னஞ்சல்) பதிலையும் அவருடைய அனுமதி பெற்றே இலேசாகச் சுருக்கிக் கீழே தருகிறேன். வாசகர்களுக்குப் பயனாக இருக்கும்.
அன்பு ஹரி,
பாரதி "நிற்பதுவே நடப்பதுவே" பாடலை:
"காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம், இந்தக் காட்சி நித்தியமாம்"
என்று முடிக்கிறார். அப்படியானால் இவருக்கு அத்வைதம் சம்மதமில்லை என்று பொருளா? இயற்கையை இத்தனை கோடி இன்பம் என்று எண்ணி எண்ணி ரசித்தவருக்கு மாயை பிடிக்காது எனக் கொள்ளுவதில் ஆச்சரியமில்லை. இருந்தாலும் வேதாந்தம் அறிந்தவர் ஆயிற்றே! விளக்குங்கள்.
ரெ.கா.
அன்புள்ள ரெ.கா.,
பாரதி அத்வைதச் சிந்தனையை மறுத்தவன் என்பதற்கு ஆதாரம் இல்லை.
பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினை நாம் இங்கு எடுத்துப் புகலக் கேளாய்
சாமிநீ சாமிநீ கடவுள் நீயே
தத்வமசி தத்வமசி நீயே அஃதாம்
பூமியிலே நீகடவுள் இல்லை என்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே
என்று பாரதி அறுபத்தாறு முடிகிறது. பாரதி, ஆறாயிரம் பாடல்கள் பாட எண்ணியிருந்தான். அறுபத்தாறிலேயே நிற்கிறது என்று அறிகிறோம். இந்தப் பகுதியைத் தன்வரலாற்றோடு சேர்த்துப் பதிப்பிக்கிறார்கள். அவனுடைய வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை, அவனுக்குக் குருவாக வாய்த்தவர்களைப் பற்றி ஆங்காங்கே சொல்வதனால், அப்படிச் சேர்ப்பதற்கு இடமிருக்கிறது. இருந்த போதிலும், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் காட்டிலும், அவனுடைய இறைச் சிந்தனையே நெடுகிலும் காணப்படுகிறது. முதற்காண்டம் என்று தலைப்பு தந்திருக்கிறான். பெரிய நூலாகச் செய்யத் திட்டமிருந்திருக்கிறது என்பது தெளிவு. அவனுடைய சிந்தனைகள் முற்றாக வெளிப்படவில்லை. எனவே தன் வரலாறு என்பது வெறும் மேம்போக்கான பார்வை மட்டும்தான். பாரதியின் இறைமைக் கருத்துகளை அறிவதற்கான களம் இது.
சங்கரரின் அத்வைதத்தை ஏற்ற போதிலும் மாயையைப் பற்றிய அவன் சிந்தனை மாற்றம் பெற்றிருக்கிறது. அவனுடைய எழுத்தைக் காலவாரியாகப் பார்த்தால்தான் இதைப் பற்றி விரிவாகப் பேச முடியும். அதற்கு முன்னால், மாயை குறித்த தெளிவு வேண்டும். அதாவது எனக்கு. நான் இன்னும் இதைப் பற்றி அறிய வேண்டியதிருக்கிறது. அதனால் இதைப் பற்றி அதிகம் பேசுவதை இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.
1908ல் எழுதிய 'மாயையைப் பழித்தல்' பாடலில் இப்படிச் சொல்கிறான்:
இருமை அழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப மாயையே - தெளிந்து
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ - மாயையே
இதை இன்னும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய
மறை வலோர் தம் உரை பிழை அன்று காண்.
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரதம் அன்றெனல் யானும் அறிகுவேன்
'எனக்கும் அதெல்லாம் தெரியும்' என்று ஒரு 'ம்' போடும் போதே, 'ஏய், அதெல்லாம் இருக்கட்டுமையா, அதிலே நமக்குக் கொஞ்சம் மாறுபாடு உண்டு' என்ற தொனி கேட்கிறது.
பாழ் கடந்த பரநிலை என்றுஅவர்
பகரும் அந்நிலை பார்த்திலென். பார்மிசை
ஊழ் கடந்து வருவதும் ஒன்று உண்டோ?
உண்மை தன்னில் ஓர் பாதி உணர்ந்திட்டேன்
என்று தொடரும் போது 'இதைப் பற்றி இன்னும் நான் ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை' என்று ஆழ்ந்திருக்கும் கவிமனம் வெளிப்படையாகவே சொல்கிறது.
அப்புறம் சொல்கிறான். 'மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்.' சரி. நல்லாத் தெரிஞ்சிடுச்சு. அப்புறம் வேற என்ன? 'மற்றும் இந்தப் பிரமத்து இயல்பினை ஆய நல் அருள் பெற்றிலன்.' 'இது வரைக்கும் பிரமத்தின் இயல்பு எனக்குச் சிக்கவில்லை. 'ஒமக்குத் தெளிவில்லாட்டி என்னய்யா? தெளிஞ்சவங்க சொல்லியிருக்காங்க இல்ல, அத எடுத்துக்கறது? 'தன்னுடை அறிவினுக்குப் புலப்படல் இன்றியே, தேய மீது எவரோ சொலும் சொல்லினைச் செம்மை என்று மனத்திடைக் கொள்வதாம் தீய பக்தி இயற்கையையும் வாய்ந்திலேன்.' சொல்றவங்க சொல்றதை எல்லாம் எடுத்துக்க என்னால முடியாது. எனக்கு, என் அறிவுக்குத் தெளிவாக வேண்டும். அது வரைக்கும் அவங்க சொல்றதை அப்படியே எடுத்துக்க முடியாது.
(இந்த 'தீய பக்தி இயற்கை' என்பது ஒரு நிலை. நம்பிக்கை என்பது இன்னொரு நிலை. 'நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பிவிட்டோம். கும்பிட்டு என்னேரமும் சக்தியென்றால், உன்னைக் கும்பிடுவேன் மனமே' என்று சொல்லும் போது குறிப்பிடும் நம்பிக்கையும், இந்த 'இயற்கையும்' ஒன்றில்லை.)
அதாவது, ஒரு பகுதியை ஏற்க முடிகிறது. அத்வைதச் சிந்தனையில் எந்தச் சிக்கலுமில்லை. அப்படியே ஏற்கிறேன். இருமை அழியும். அப்போது மாயையும் செயலிறும். இன்னொரு பகுதியை ஏற்கச் சிரமமாயிருக்கிறது. உலகம் பொய் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. எனக்குப் புலப்படாத வரையில் நான் அறிவு நிலையில் இருந்து அதை ஏற்க மாட்டேன். சரிதான் வேய். என்னதான் பண்ணப் போறீரு? 'சிறிது காலம் பொறுத்து இனும் காண்பமே.' கொஞ்சம் பொறுத்திருந்தால் தெளிவு கிடைக்கும். பாக்கலாம். 1910ல் இந்த நிலை. அவனுடைய சிந்தனை இந்த வடிவத்திற்கு வந்திருக்கிறது.
அப்ப என்னதான் சொல்றீரு? கனவா, கனவில்லையா? 'அட அப்படித்தான் இருந்துட்டுப் போகுது போ.' 'உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்.' அப்ப உலகம் அநித்யம், ஒப்புக்கறீரு?
'அட போடா வைதீகம்! வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இவளிடத்திலே இன்னும் சில வ்யவஹாரங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.' 'சில தினங்கள் உயிர்க்கு அமுதாகியே செப்புதற்கு அரியதாகுமால் திலத வாள்நுதலார் தரு மையலாம் தெய்விகக் கனவு, அன்னது வாழ்கவே!'
உலகம் கனவுதான். கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை கனவுதான். அந்தக் கனவுக்குள்ளே சில தினங்கள் காதல் ஏற்படுகிறதில்லையா, அது உண்மை. அது சத்தியம். என் பெண்டாட்டி மேல் எனக்கிருக்கும் காதல் சத்தியம். அவளுக்கு என் மேல் இருக்கும் காதல் சத்தியம். இருவரின் காதலையும் சத்தியமாக்கும் காமமும் சத்தியம். ஒனக்கு வேணும்னா கனவுன்னு சொல்லிக்கோ. ஆனா அது தெய்விகக் கனவு. அதை ஒன்னால கூட மறுக்க முடியாது.'
மனைவியும் காதலும் சத்தியமா? அப்பனே கொஞ்சம் யோசி. 'காதே காந்தா கஸ்தே புத்ரா ஸம்ஸாரோயம தீவ விசித்ர:' யார் உன் மனைவி? யார் உன் மகன்? உண்மையில் இந்த சம்சாரம் மிகவும் விசித்திரமானதே.'
ஓய்! காஷாயம் கட்டின நீர் வேண்ணா அப்படிச் சொல்லிக் கொள்ளும். வீட்டுக்குள்ளே அந்த வார்த்தை வரக் கூடாது. "ஸந்யாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அதைப் பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்தி லிருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ? தங்கச் சிலை போலே நிற்கின்றாள் மனைவி... அவள் பொய்யா? .... பெற்றவரிடம் கேட்கின்றேன், குழந்தைகளும் பொய்யா? நமது வீட்டில் வைத்து வழிபடும் குலதெய்வம் பொய்யாகுமா?"
இது பாண்டிச்சேரி வாசத்தின் கடைசியில் எழுந்த ஆக்ரோஷமான சிந்தனை.
அதே காலகட்டத்தில் எழுதிய பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம்.
இருபத்து மூன்றாவது சூத்திரத்துக்கு விளக்கம் எழுதும் போது, இப்படிச் சொல்கிறான்.
"மாயையாவது யாதெனில், ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை." இது மிகச் சுருக்கமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கருத்து. மிக மிக இளக்கினால் ஒழிய புரிந்துகொள்வது கடினம்.
தொடர்கிறான். "இது பூர்வத்தில் சங்கராச்சார்யர் சொன்ன லக்ஷணத்துக்குப் பேதப்பட்டது. மாயையைத் தவிர ஜகத்தேயில்லை யென்று சங்கராச்சாரியர் சொன்னார். ஸர்வ மங்களகரமான ஜகத்தில் ஜீவன் கற்பனையால் செய்துகொள்ளும் தீமையே மாயை என்று "நாம்" சொல்கிறோம்."
அதாவது, ஆதி சங்கரர் மாயை என்று சொன்னது வேற. நான் மாயை என்று சொல்வது வேற. இங்கே, பாரதியின் சிந்தனைக்கு ஒரு வடிவம் கிடைக்கிறது. ஆனால் அதை முழுமையாகப் பார்க்க இன்னும் உழைக்க வேண்டியிருக்கிறது.
அன்புடன்
ஹரிகிருஷ்ணன்.
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com
On 2/25/11, Jana Iyengar <iyenga...@gmail.com> wrote:
> இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து.
> ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர்
> எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தப்பாடல் பாரதியுடையதே என்று
> என் நண்பன் ஒருவன் என்னோடு சண்டை செய்யவே வந்துவிட்டான். யாரும் இனிமேல்
> மயங்கதீர்கள்
> அடியேன் ஜனா ராமானுஜதாசன்.
> 2011/2/25 Hari Krishnan hari.har...@gmail.com
>
>> 2011/2/25 Nagarethinam
>> <nataraj...@gmail.com>harathஇயுடயதே<nataraj...@gmail.com%3Eharathiyudayathe>
--
ஒவ்வொரு ஆன்மிகரின் வாழ்க்கையும் மேலோட்டமாக அலசினால் அதில் ஒரு
நிகழ்ச்சி சாதாரண் மனித வாழ்க்கையிலிருந்து ஒரு திருப்பம்
காணப்படும்.சித்தர்களாகட்டும் சேஷாத்ரி ஸ்வாமிகளாகட்டும். ரமணர் புத்தர்
என்று எந்த ஒரு மகானின் வாழ்வாகட்டும். ராமலிங்கவள்ளலார் மாத்திரம் ஒரு
சிறிய விதிவிலக்காக தெரிகிறார்.
பாரதி ஒரு ஆசிரிய்ர் பத்திரிக்கையாளராக தொடங்கி, பசியின் கொடுமை
உணர்ந்து, மனிதனை மட்டுமல்லாது எல்லா உயிர்களின்
பசிக் கொடுமையையும் உணர்ந்து, ஸ்மூகக் கொடுமை பெண் விடுதலை என்று ஒரு
சிறந்த சமூக சிந்தனையாளராக உருவெடுத்தார். பின் விடுதலைக் கவியாக
வளர்ந்தது நாடறியும்.
ஆன்மிகம் என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ எனக்குத் தெரியவில்லை.
மனிதரில் பெரும்பாலோர், சாதாரணராக பிறந்து கண்கள் கண்டதை மநால் பிடித்து,
அதைக் கையில் பிடிக்க முயன்று சில வெற்றிகளும் பல தோல்விகளும் துரத்த,
வாழ்னாளின் இறுதியை அடைந்து
சாதாரண வாழ்க்கை.
ஏதோ ஒரு காரணம் (மேலோட்டமான ஜகணிப்பு) உந்த, காயமே இது பொய்யடா இது
காற்றடைத்த பையடா என்று சாதாரண வாழ்க்கையிலிருந்து வழிமாறி - உண்மை,
கடவுள் என்று தேடி, தாடிவைத்து, காட்டில் சிலர் புகுந்து .. இது கட்டம்
இரண்டு.
இங்கே, வேதங்கள், ஜென் சித்தந்தங்கள், யோகா, குரு என்று தேடி
இல்லறத்தை துறந்து திரிவது இந்த கட்டத்தை நான் திருப்பம் என்கிறேன்.
இதில் முற்றி காயமே இது நிஜன் தான். கடவுளை அறிய தாடியைவிட இந்த காயமே
அவசியம் என்று உணர்ந்து
காய கல்பம் சாப்பிட்டு உடலை பேணி பாதுகாத்து, தியானத்தில் லயித்து,
படிப்படியாக பிரமன் விஷ்ணு ஆகியோருடன் கைகுலுக்குவது ஆன்மிகராக
பரிமாணமாற்றம் அடைந்ததன் அறிகுறி.
இதில் பாரதி பராசக்தியிடன் ஒரு பட்டியல் போட்டு அதைத்தா, இதைத்தா என்று
எழுதிய காலத்தில் அவர் ஆன்மிக சிந்தனையை தொடவில்லை. ஒருவருக்கு உணவில்லை
என்றால் ஜகத்தினை அழிக்க சூளுரைப்பது ஆன்மிகப் பாதையில் கால் வைக்காத
நேரம்.
இப்போ நான் சொல்ல வந்த திருப்பம் என்ன என்று தெரிகிறதா.?
இந்த பரிணாம மாற்றங்க்களை குறிக்கும் அழகிய ஜென் கவிதை என்றை என்
பிளாகில் எழுதுகிறேன்.
உங்கள் குழப்பம் எனக்குப் புரிகிறது கோவிலுக்கு போனாலே சாமியை
கும்பிட்டாலேயே ஆன்மிகம் என்ற பொதுவான கருத்து
உங்க்ளையும் பாதித்திருக்கிறது.
னன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று, அடம் பிடிக்காமல் மாற்று
சிந்தனையை / கருத்தை அறிய விரும்பினால் காணுங்கள்,
எழுதுங்கள்.
நன்றி
http://shake-hands-with-bramma.blogspot.com/
On Feb 25, 10:57 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/2/25 Nagarethinam <natarajan.n...@gmail.com>
இது எங்கே கிடைத்தது?
இதே போல வேறு ஒரு பாடலைத்தேடிவருகிறேன். பாரதி பாட்டில்லை. ஆசிரியர்
தெரியாது.
அணுவுக்குள் நுழைந்தேன் ஏழேழு உலகம் கண்டேன்
என்ற வரி அதில் உண்டு.
மீண்டும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி
நட்புடன்
நடராஜன்
பாரதி ஆன்மிகத்தை முதல் முறை தொடடதற்கு இந்த பாடல் ஒரு திருப்பு முனை.
சாட்சி.
முதன் முதலில் பொருள் உலகின் மாயையிலிருந்து விடுட்டதற்கு இது அறிகுறி
பாரதியார் பாடல்கள் என்று பார்த்த புத்தகண்க்களிலெல்லாம் வாங்கி தேடி
கிடைக்காமல், திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அனுப்பித்தந்தார்கள்.
அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.
நட்புட்ன்
நடராஜன்
On Feb 25, 11:50 am, Jana Iyengar <iyengar.j...@gmail.com> wrote:
> இது பாரதிக்கு அநீதி இழைத்த பாடல். என்றன் நினைப்பில் இதை எழுதியவர் வைரமுத்து.
> ஏன் இப்படி ஒரு பாடல் படத்துக்கு அவசியப்பட்டது மேலும் இதை எழுத கவிஞ்ஞர்
> எவ்வாறு இசைந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தப்பாடல் பாரதியுடையதே என்று
> என் நண்பன் ஒருவன் என்னோடு சண்டை செய்யவே வந்துவிட்டான். யாரும் இனிமேல்
> மயங்கதீர்கள்
> அடியேன் ஜனா ராமானுஜதாசன்.
> 2011/2/25 Hari Krishnan hari.harikrish...@gmail.com
>
>
>
>
>
>
>
>
>
> > 2011/2/25 Nagarethinam <natarajan.n...@gmail.com>harathஇயுடயதே<natarajan.n...@gmail.com%3Eharathiyudayathe>
>
> >> அந்த பாடல் முழுவதும் தெரிந்தவர் / கிடைக்குமிடம் தெரிந்தவர் உதவலாமே!
>
> > முழு வடிவத்தை அனுப்புகிறேன். படத்தில் கடைசி இரண்டு (அல்லது சில) அடிகளை
> > விட்டுவிட்டார்கள். மணி 11,30. இன்னமும் சரைக்கவில்லை; குளிக்கவில்லை; காலை
> > உணவு அருந்தவில்லை. முடிச்சப்புறம் அனுப்புகிறேன்.
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
எல்லோருக்கும் தனது எண்ணங்ககளிலும் கருத்துகளிலும் பிறந்த்திலிருந்து
இறக்கும் வரை மாறுபடாமல் இருந்ததில்லை.
வள்ளலார் காலத்தில் அவரை அவரது இளமைகால அறிவுறையிலிருந்து பிற்காலத்தில்
மாறுபட்ட கருத்து தெரிவித்ததை சாடியிருக்கிறார்கள்.
நம்மைப்போல பலருக்கு அறிவு வளாராவிட்டால் அதே கருத்தைக் கொண்டிருப்போம்.
அவர் முன்னல் நாம் என்ன? அவர் ஞானி ஐய்யா! அந்த சிறிய காலத்தில் அவர்
சாதனைதான் என்ன? நாம் எல்லாம் அற்ப பதருகளே!
மாயா - கர்மா எல்லாமே ஞானிகள் பரிசோதனைக்கு பயன் படுத்திய
மாடல்களில் வெளிப்பாடு. அதை நிஜம் என்றோ தவறு என்றாலும்
அண்டத்தில் மாற்றம் வ்ருவதில்லை. மாற்றம் நமது மனதில் தான்.
மாயை கர்மா தியரியை எனது 62 ம வயதில் மறுத்து - Science of Spirituality
என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளேன்.
படிச்சு பாகரிங்க்களா?
அவ்ளோதான்
நன்றி
நட்புடன்
நடராஜன்
On Feb 25, 3:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/2/25 karthi <karthige...@gmail.com>
> ...
>
> read more »
னன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று, அடம் பிடிக்காமல் மாற்று
சிந்தனையை / கருத்தை அறிய விரும்பினால் காணுங்கள்,
எழுதுங்கள்.
நன்றி
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
naan enni paarthen...
en kaila muyale illa..