பேரா.ஔவை நடராஜன் அவர்கள் பேச்சுக் கேட்டேன்.
1. தமிழ் நாட்டில் ஓலைச் சுவடி என்ற பெயரில் நடக்கும் போலி வியாபாரத்தைக் கடுமையாகச் சாடுகிறார். அவர் பதிவியிலிருந்த காலத்தில் நடந்த மோசடிகளை எடுத்துக் காட்டுகிறார்.
2. தமிழ் மருத்துவம் என்பது ஒரு போலிக்கலை. அதில் ஆழமான சரக்கு ஏதுமில்லை என்று உரத்துச் சொல்கிறார்.
3. உ.வே.சா விற்குப் பிறகு தமிழில் இனி பதிப்பிக்க ஏதுமில்லை என்று சொல்கிறார். உ.வே.சா வோடு தமிழ்ப் பதிப்பு நிறைவு கொள்கிறது என்று சொல்கிறார்.
உ.வே.சா காலத்திலும் இப்போலிகள் இருந்ததுதானே?
யாரோ ஒருவர் 3000 ஆண்டுப் பழமையான ஓலைச் சுவடி என்று
சொன்னார்களாம். அமைச்சரை புரிய வைப்பதற்காக கார்பன் டேட்டிங் செய்து நிரூபித்தார்களாம். இதை எப்படி ஒரு வல்லுநர் சொல்ல முடியும்? ஒன்று, 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் இப்படி எழுதப்படவே இல்லை! நமது பிராமி எழுத்துச் பரீட்சியம் உள்ளவர்களுக்கு அது புரியும்.
சங்கத் தமிழனுக்கு இருந்த ஒரு தரக்கட்டுப்பாடு கூட 21ம்
நூற்றாண்டுத் தமிழனுக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது!
2. தமிழக ஓலைச் சுவடிகளில் 60 விழுக்காடு மருத்துவச் சுவடிகளே. நமக்கு அது என்னவென்று புரியவில்லை என்பதற்காக அதைக் குப்பையில் போடு என்பது சான்றோர் கடனாகாது. சாகன் பால்க் இங்கிருந்து ஜெர்மனிக்கு ஓலைகளைக் கடத்திச் சென்றதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் 15ம் நூற்றாண்டிலிலேயே நாய் கடிக்கு மருத்துவமிருந்தது. ஐரோப்பாவில் இல்லை என்பதுதான். இதிலும்
அவர் ஓர் ஆய்வாளர் போல் பேசவில்லை. பாமரன் போல் கருத்தைச் சொல்கிறார்.
ஐரோப்பாவில் நாய்க்கடிக்கு மருந்து தெரியவில்லை
. தமிழகத்தில் இருந்தும் தெரிந்திருக்கவில்லை.மணத்தக்காளி கீரையை அறிந்த போதே
, நாய்க்கடிக்கான மருந்தும் அறியப்பட்டிருக்கிறது. என்பது , அந்த தமிழ் அறிஞர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அது மட்டுமல்ல
! காட்டுவழி இருட்டில் செல்லும் போது, பாம்பு கடித்துவிட்டால் , கடித்த பாம்பு எந்த பாம்பு என்று அறிந்து கொள்ளவும் வெள்ளருகு என்னும் மூலிகை இருக்கிறது என்பதை அந்த செவிட்டுக் காதுக்கு தெரிவிக்கலாம் .
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஔவை நடராஜனின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இவர் தலைமையில் மருத்துவ அகராதி தயாரிக்க குழு அமைத்திருக்கிறார்களே? அது என்னவாகும். உண்மையில்லாத ஒரு துறைக்குப் பணியாற்ற எப்படி ஒப்புக் கொண்டார்?
பெரியார் சாமி இல்லை, சாமி இல்லை என்று சொல்லப் போக
எப்போதுமில்லாத அளவிற்கு இப்போது ஐய்யப்பன் கூட்டம் அதிகமாகிவிட்டது.
ஔவை நடராஜன் சொன்னதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஐயப்பன் கூட்டம் ஒன்றும் ஆராய்ந்து அறிந்த கூட்டமில்லை.
செம்மறி ஆடுகள்
வாழ்க தமிழ்!
நா.கண்ணன்
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:
http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
அன்பின் இரவா:
ஓலைச் சுவடிப் பட்டியல் எடுத்தல் என்பதே ஒரு பெரிய வேலை. தமிழக
நூலகங்களில் உள்ள சுவடிகள் பற்றிய முழு அட்டவணையும் உள்ளதா என்று
தெரியவில்லை. ஆனால், 80% சேதி உள்ளது என்று நம்புகிறேன். தனியார்
நூலகங்களில் உள்ள சுவடிகள் பற்றிய தகவல் இல்லை. நாம் கண்டறிந்தது ஆழ்கடல்
பனிமலையின் முகடு என்பதை சமீபத்தில் தமிழகம் தழுவிய ஓலைச்சுவடி
பட்டியலாக்கும் முயற்சி காட்டியிருக்கிறது. அரசாங்கம் எடுத்த
இந்தப்பட்டியலும் இன்னும் வெளிவரவில்லை.
வெளிநாட்டிலுள்ள ஓலைகள் பட்டியல் இன்னும் தெரியவில்லை. காரணம் தமிழ்
படிக்கத்தெரிந்தவர்கள் அங்கு இல்லாததே.
இந்நிலையில் உங்களைப் போன்ற ஆர்வமுள்ளோர் இதுவரை உள்ள சேதிகளையாவது
முறையாக வெளியிட்டு ஒரு கணக்கெடுப்பு செய்தால் நலம்.
நமது பல்கலைக் கழகங்கள் இப்பட்டியலிடும் முயற்சியில் இறங்க வேண்டும். இதை
எம்.பில் அல்லது முனைவர் பட்ட தலைப்பாக எடுத்துக்கொள்ளலாம்.
முதலில் சுவடி என்றால் அது "நாடி ஜோஸ்யம்" என்ற தவறான எண்ணத்தை தமிழர்
மனதிலிருந்து எடுக்க வேண்டும்!
கண்ணன்
____________________________________________________________________________________
Be a better friend, newshound, and
know-it-all with Yahoo! Mobile. Try it now. http://mobile.yahoo.com/;_ylt=Ahu06i62sR8HDtDypao8Wcj9tAcJ