ஜல்லிக்கட்டு - ஏறுதழுவலா அல்லது எலும்புமுறிவா!

313 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 7:56:22 PM1/14/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
கலித்தொகையில்,முல்லைக்கலியில் - ஏறுதழுவும் குறிப்புக்கள் வருகின்றன. வேறு சங்கப்பாடல்களில் இல்லை! "களிறுதரு புணர்ச்சி," "புனல்தரு புணர்ச்சி,"என்பன போல,"பகடுநேர் புணர்ச்சி" என்ற குறிப்பு இல்லை. எனவே, இது ஆயர் குடியில் அமைந்திருக்கலாம்! "ஆய மகள், ஆவின் கோடஞ்சுவானை,புல்ல விழையாள்"(கலித்தொகை). எவ்வாறோ, பொழுதுபோக்கிற்காக ஏறுதழுவல்,சேவற்போர் முதலியன நடத்தி மகிழ்ந்தினர்.நல்லவேளை! நமது நாடுகளில் காளைகளின் கொம்புகளை நறுக்குவதும், குறைப்பதுமாக வழக்கம் உள்ளது.மேலை நாடுகளில், காளைகளுக்கு இப்படி கொம்புகள் நீண்டதாகயில்லை. மேலை நாடுகளில் ஸ்பெயினில் இந்த வழக்கம் உள்ளது. எருதுகளை அடக்கும் வீரர்களுக்கு "Matador" என்ற பெயர். அந்த நாட்டின் காளையடக்கு விதிகள், முறைகள், உடனே மருத்துவ வசதிகளுக்கான குழுவினர் உண்டு. இவைகளைப் பற்றி, எள்ளவு சிந்திக்காமல், பண்பாடு வளர்ப்பதாக முற்படுவது தக்கதில்லை.
 
அயல்நாடு சென்று வந்த நீதிபதிகளோ, நாளிதழ்களோ இப்படி உலகளாவிச் சிந்திக்காமல் மரபு காப்பதும்,மறுப்பதும் வேதனை தருகிறது. தமிழகத்தில் இந்தத் தைத் திங்களில், இத்தகைய புதுமைக் கருத்துக்கள் அவர்கள் நெஞ்சைத் தழுவட்டும்.
 
"எனைமாட்சித் தாகிய கண்ணும்; வினைமாட்சி
 இல்லார்கண் இல்லது அரண்."- 750 - திருக்குறள்
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
'ஏறுதழுவுதல்' என்பது காளையை அடக்கி பெண்ணை திருமணம் முடித்தல் ஆகும். அந்தக் காலத்தில் ஓர் ஆண் மகனுக்கு வீரம்தான் 'அழகு' என கருதப்பட்டது. இப்போதோ முகஅழகு, செல்வாக்கு, பணம், அமெரிக்காவில் வேலை இப்படித்தான் மணமகனுக்கு தகுதியாகிவிட்டது.

அந்தக் காலத்தில் வீரம்தான் ஒரு பெண்ணை மற்றவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் நிலவியது.

ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்திருக்கும் போது அதே வீட்டில் பசுமாடு ஒன்று காளைக் கன்று ஈன்றிருந்தால், அந்தப் பசுவின் பாலைக் கறக்க மாட்டார்களாம். முழுவதுமாக அக்கற்றுக் குட்டியை குடிக்கவிட்டு விடுவார்களாம். ஏனெனில், அது 'கொழு கொழு'வென வளர்ந்து வரும். பிற்காலத்தில் அந்தக் காளையை அடக்குபவர் எவரோ, அவரே அப்பெண்ணுக்கு மணமகன் ஆவார்!.

இதைப் போலத்தான் ஜல்லிக்கட்டும் வந்தது.

மாடுபிடி, எருதுபிடி, காளைப் போர், மஞ்சுவிரட்டு என்று பல பெயர்களில் வருகிற இந்த வீரவிளையாட்டானது நீண்ட நாளாக தமிழ்நாட்டில் விளங்கி வந்துள்ள 'ஏறுதழுவுதல்' பழக்கத்தை ஒட்டியது.

'ஜல்லி' என்ற பெயருடைய யாதவவீரன் ஒருவன் இருந்தான் எனவும் அவன் பெயராலேயே ஜல்லிகட்டு என்ற இந்தவிழா வழங்கி வருகிறது எனவும் சிலர் கூறுகின்றனர்.

ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்துக்கு பெயர். ஜல்லி என்ற சொல்லப்படும் வளையம், பெரும்பாலும் புளிய விளாரினால் செய்யப்பட்டது. புளியநாரை முறுக்கி வளைத்து, அதைப் பல நிற சாயங்களிலே நனைத்து காய வைப்பர். பிறகு அதில் தேங்காய், பழம், பவுண் அல்லது வெள்ளி நாணயம், மோதிரம் முதலியவற்றை சேர்த்து காளையின் கழுத்திலே கட்டி விடுவார்கள். கொம்புகளைச் சீவி கூர்மை படுத்தி விடுவார்கள்.

'மஞ்சி' என்பது நார். நாரினால் கழுத்து தொங்கல் கட்டி அந்தக் காளையை மிரளச் செய்து விடுவதால் இத்திருவிழவை 'மஞ்சுவிரட்டு' என்று ராமநாதபுர மாவட்டத்தினர் கூறுவர்.

ஜல்லிக்கட்டுத் திருவிழா பெரும்பாலும் மாட்டுப் பொங்கல் நாளன்றே அமையும். கிராமங்களில் பண்ணை வீடுகளில் ஜல்லிக்கென்றே முரட்டுக் காளைகளை வளர்ப்பர்.

ஜல்லிக்கட்டு விழா நடப்பதற்கு முன்னர் ஊர் முழுவதும் பறை அறைந்து அறிவிப்பார்கள். விழா தொடக்கத்தில் காளைக்கு பூஜை செய்து உண்டு. அதை அவிழ்த்து விடும் போது தகரம் அல்லது முரசுகளை முழங்கியோ பண்டியை அறைந்தோ பலமான ஓசையை எழுப்பி மாட்டை வெருண்டோடும்படி செய்வார்கள்.

அவ்வாறு ஓடும் காளையை பிடிப்பதற்கு வாலிப வீரர்கள் பதிபோட்டு பாய்வார்கள். காளையின் கொம்புகளைப் பிடித்து அமுக்கி அது கழுத்திலே கட்டியிருக்கும். ஜல்லியை எவன் அவிழ்த்து எடுக்கிறானோ அவனே வெற்றி பெற்றவன்! அந்த ஜல்லி வளையத்திலுள்ள பரிசுகளெல்லாம் அவனுக்கே உரியன. இந்த விளையாட்டுகளில் சில சமயங்களில் உயிருக்கு கேடு விளைவதும் உண்டு.

பிடிபடாத முரட்டுக்காளையை அடக்குபவனுக்கு ஊர் தலைவரின் மகளை மணம் முடிப்பது என்கிற பழக்கம் முற்காலத்தில் தமிழ்நாட்டு கிராமங்களில் இருந்து வந்தது. ஆனால் இக்காலத்தில் அது வெறும் 'ஜல்லி' பரிசாக மட்டும் முடிந்துவிட்டது.

இந்த வீர விளையாட்டுகள் திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நடைபெற்று வருகின்றன. தென்மாவட்டங்களில் இந்த விழாவை மாட்டுப் பொங்கலில் ஓர் அம்சமாகக் கருதி பூஜை முறையிலே நடத்துகிறார்கள். மதுரை மாவட்டத்தில் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா வெகு பிரபல்யம். இதைப் பார்த்து மகிழவெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஆவலோடு வந்து போவார்கள்.
 

Narayanan Kannan

unread,
Jan 14, 2008, 8:10:42 PM1/14/08
to minT...@googlegroups.com
> 'ஏறுதழுவுதல்' என்பது காளையை அடக்கி பெண்ணை திருமணம் முடித்தல் ஆகும். அந்தக்
> காலத்தில் ஓர் ஆண் மகனுக்கு வீரம்தான் 'அழகு' என கருதப்பட்டது. இப்போதோ
> முகஅழகு, செல்வாக்கு, பணம், அமெரிக்காவில் வேலை இப்படித்தான் மணமகனுக்கு
> தகுதியாகிவிட்டது.
>


இது ஆயர் குல வழக்கம் என்று தெரிகிறது. நப்பின்னையைக் கை பிடிக்க கண்ணன்
கோகுலத்தில் 7 முரட்டு மாடுகளைத் தழுவிய சேதி பாகவதத்தில் உள்ளது.
அப்போதுதான் நப்பின்னையின் தந்தை இவனை ஆயன் என்று ஏற்றுக் கொண்டாராம்.
கண்ணன் பிறந்தது வேறொரு குலத்தில், ஆனால் வளர்ந்தது இன்னொரு குலத்தில்.
ஆயின், தானொரு சத்திரியன் என்பதை மறந்து ஆயர்களுடன் சங்கமித்துவிட்ட
கண்ணன், ஆயர்கள் போல் இயற்கை வாசனை எய்தி (மாட்டுக் கொட்டில் நாற்றம்)
'கோவிந்த பட்டாபிஷேகம்' செய்து கொண்டானாம். அதுவே அவன் வாழ்வில் மகிழ்வான
நாட்கள். "ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து
வளர" - ஆண்டாள்.

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 11:05:35 PM1/14/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
ஏருதழுவல் என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு என்றும், 4,000 ஆண்டுக் கால புறநானூற்று நாகரீகம் என்று கூறியுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. செம்மொழி 1,500 ஆண்டு பழமை உடையது என்று அரசு சொல்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் - கி.மு.200 என்று திருக்குறளைச் சொல்கிறார்! (http://www.abdulkalam.com/kalam/Upload/Arathuppal/3_kural-127Dec_6_2004_22_21_1_PM.swf)
 
ஆக, 4,000 ஆண்டுப் பழமையை நிறுவுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள்,தைத் திங்கள் முதல் நாளில்,செல்வி ஜெயலலிதா தலைமையில், "மாடு பிடி மறியலைத்" தொடங்குவாராக! தளபதி.வை.கோவிற்குப் பாராட்டுக்கள்! லல்லு பிரசாத் யாதவ் அவர்கள், யாதவர்கள்(ஆயர்கள்) குலத்தின் சார்பில், இந்த வீரவிளையாட்டிற்கு, யாதவர்களே உரியவர்கள் என்று உறுதி செய்யலாம்.
 
"பாரத ஒற்றுமை ஓங்குக!"
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
ஜல்லிக்கட்டு நட த்த த மிழக அரசு அவசர சட்ட ம் கொ ண்டுவர வேண்டும் என்று மதிமுக பொது ச் செயலாள ர் வைகோ கூ றியு ள்ளா ர் .

இது கு றி த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ றி யி ரு ப்பதாவது :

பொ ங்க ல் திருநாளை மு ன்ன ி ட்டு பல நூ ற்றா ண்டு காலமாக ல் லி க்க ட்டு வீர விளையா ட்டு நட ந்து வரு கிறது . அத ற்கு ச் நீ திம ன்ற ம் வி தி த்த தடை தமிழ‌‌ ர்களை எல்லைய ற்ற வேதனை க்கு ஆளா க் கி இரு க்‌‌ கிறது .

தமிழர்களின் பாரம்பரிய
வீர விளையாட்டுக் கலையான ஜல்லிக்கட்டு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை ஆகும் .

தமிழர் பண்பாட்டை , நாகரீகத்தை , சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்ற இன்றைய சூழலில் , தமிழர்களின் புராதனக் கலாசாரத்தை , பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு , தொடர்ந்து நடைபெற்றே ஆக வேண்டும் .

எனவே , ச்ச நீ‌‌ திம ன்ற முடிவை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை தீ விர ப்படு த்துவதோடு , ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் , அவசர சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ன்று வைகோ ந்த றி க்கை யி ல் கூ றியுள்ளா ர் . ( மூலம் - வெப்துனியா )
 

இரவா

unread,
Jan 14, 2008, 11:22:46 PM1/14/08
to minT...@googlegroups.com


கடந்த வெள்ளியன்று தமிழக முதல்வரின் ஆணையின் படி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, பழந்தமிழ் ஆவணங்களும் இலக்கியப்பதிவுகளும் திரட்டப்பட்டன. ஆவணங்கள் பற்றி என்னிடமும் கேட்டார்கள். ஏறு தழுவுதல் பற்றிய இலக்ககயச் 
சான்றுகளைத் திரட்டி அளித்தேன்.

குறிப்பொடும் நூலொடும் தில்லி சென்ற குழுவுக்கு மேலும்,,, தகவல்களை ஞாயிறு அன்றும் திரட்டினேன், புறநானூறு,
சிலம்பு போன்றவற்றிலுள்ள பகுதிகளை, நகலெழுதி வழியாகத் தில்லிக்கு அனுப்பியுள்ளோம்.


--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ: http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Jan 14, 2008, 11:31:37 PM1/14/08
to minT...@googlegroups.com
2008/1/15 Kannan Natarajan <thar...@gmail.com>:

>>
> தமிழர் பண்பாட்டை , நாகரீகத்தை , சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு
> இருக்கின்ற இன்றைய சூழலில் , தமிழர்களின் புராதனக் கலாசாரத்தை , பண்பாட்டை
> பறைசாற்றும் ஜல்லிக்கட்டு , தொடர்ந்து நடைபெற்றே ஆக வேண்டும் .
>
>
அது சரி, நம்மவூர் மாடுகள் என்ன சொல்லுகின்றன என்று யாராவது கேட்டார்களா?
Blue Cross என்ன செய்து கொண்டு இருக்கிறது?

தமிழகத்தின் வீர விளையாட்டு என்று செய்யும் ஜல்லிக்கட்டு கேலிக்கூத்து.
ஒரு ஆயிரம் பேர் மிரண்டு போன ஒரு மாட்டை தாவித்தாவிக் கவ்வுவது என்ன
வீரம்? வீரத்தைக் காட்ட வேண்டுமெனில் இவர்கள் ஸ்பானிஸ் மட்டாடர் போலோ
அல்லது அமெரிக்க கௌவ்பாய் போலோ வலுவான மாட்டுடன் ஒத்தைக்கு ஒத்தை நிற்க
வேண்டும். இவர்கள் செய்வது கண்டிக்க வேண்டிய விலங்கு வன்முறை!!

இதே கதைதான் யானைகளுக்கும்! அதன் குடும்பத்திலிருந்து பிரித்து அவைகளைக்
கோயிலில் பிள்ளையார் என்று கட்டி வைத்திருப்பது.

இதைக் கேட்பார் யாருமில்லையா?

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 11:35:14 PM1/14/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
>இது ஆயர் குல வழக்கம் என்று தெரிகிறது. நப்பின்னையைக் கை பிடிக்க கண்ணன்
>கோகுலத்தில் 7 முரட்டு மாடுகளைத் தழுவிய சேதி பாகவதத்தில் உள்ளது.
 
எனவே, இது பாகவதக் குறிப்பானதால் வடநாட்டுப் பண்பாடே என்று மோதும்(சேது) வழக்கும் வரலாம்!

இரவா

unread,
Jan 14, 2008, 11:36:17 PM1/14/08
to minT...@googlegroups.com
தேவையா, இது போன்ற கேள்விகள்.

நாகரிகமறியாத நாகரிகம்?

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 11:39:23 PM1/14/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
தங்களைப் போன்றோரின் அறிவார்ந்த சிந்தனைகள் "இறவா"ச் சிந்தனைகள். இரவாப் போக்கில் அல்ல!
 
வாழ்த்துகிறோம்.

Narayanan Kannan

unread,
Jan 14, 2008, 11:41:06 PM1/14/08
to minT...@googlegroups.com
2008/1/15 Kannan Natarajan <thar...@gmail.com>:
இந்திய உப கண்டத்தின் பிரதான கலாச்சாரம் திராவிட கலாச்சாரம் என்றுதான்
நம்புகிறார்கள். திராவிட மொழிக்குடும்பத்தின் பல மொழிகள் பலுசிஸ்தான்,
வங்காளம் போன்ற பகுதிகளில் பேசப்படுகின்றன. சிந்து சமவெளி மொழி தமிழ்
என்று நிரூபிக்கப்படும் போது இந்த வடக்கு-தெற்குக் கூனல்
நிமிர்ந்துவிடும் :-)

கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Jan 15, 2008, 12:51:00 AM1/15/08
to minT...@googlegroups.com
2008/1/15 Narayanan Kannan <nka...@gmail.com>:

> தமிழகத்தின் வீர விளையாட்டு என்று செய்யும் ஜல்லிக்கட்டு கேலிக்கூத்து.
> ஒரு ஆயிரம் பேர் மிரண்டு போன ஒரு மாட்டை தாவித்தாவிக் கவ்வுவது என்ன
> வீரம்? வீரத்தைக் காட்ட வேண்டுமெனில் இவர்கள் ஸ்பானிஸ் மட்டாடர் போலோ
> அல்லது அமெரிக்க கௌவ்பாய் போலோ வலுவான மாட்டுடன் ஒத்தைக்கு ஒத்தை நிற்க
> வேண்டும். இவர்கள் செய்வது கண்டிக்க வேண்டிய விலங்கு வன்முறை!!

ஆஹா! யாரும் இதை கேட்கவில்லையே என்று நினைத்தேன்!
நீதிமன்றத்தில் தடை விதித்ததன் காரணமே இதுவோ?

ஒண்டிக்கு ஒண்டி சரி, ஒத்துக்கலாம். அது வீரம்.

மாட்டுக்கு சாராயம் கொடுப்பது, கொம்பு சீவி விடுவது மிரட்டி ஒரு
கூட்டத்தில் ஒடவிட்டு அதை ஒரு பெரும் கூட்டமே துரத்துவது... கூடவே
ஏகப்பட்ட சத்தம். பாவம் மாடு!
இதை ஸ்பானிஷ் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

ஜல்லி கட்டை முறைப்படுத்தினால் தடை நீங்கலாமோ என்னவோ?

திவா
--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Thamizth Thenee

unread,
Jan 15, 2008, 1:17:35 AM1/15/08
to மின்தமிழ்
ஜல்லிக்கட்டு என்றவுடன்
தொலைகாட்சியில் ஒவ்வொரு முறையும் காட்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்
காட்சிகளே
இந்தக் காட்ச்சியைப் பார்க்கும் பொழுது

காளைகள் சீறிப் பாய்வதும் , பின் மக்களின் ஓங்கிய குரலால்
மிரண்டு எங்கு ஓடுவது என்று தெரியாமல்
ஜல்லிக்கட்ட்டு வீரர்களை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கவந்த
பொதுக்கூட்டத்தின் மேல் பாய்வதும்,
அங்குள்ள பொது மக்கள் எங்கு ஓடுவது என்று தெரியாமல்
ஒருவர் மேல் ஒருவர் விழுந்தும், மாடுகளால் தூக்கிஎறியப்பட்டும் காயங்கள்
அடைவதும்,தான் நினைவுக்கு வருகிறது
(நான் பட்டிணத்தில் பிறந்து பட்டிணத்தில் வளர்ந்தவன்)
தொலைக் காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது

ஒரு காலத்தில் இளைஞ்ஜர்கள் பலவிதமான பயிற்சிகள் செய்து
தங்கள் உடலை முறுக்கேற்றி வலுவுடன் வைத்திருந்தர்கள்
அவர்கள் காளையை அடக்க முற்பட்டது வீரம்
தற்போது இளைஞ்ஜர்கள் உடலையும் உள்ளத்தையும்
ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயலவில்லை
உடலிலோ,மனதிலோ வலுவில்லாத தற்கால இளைஞ்ஜர்கள் நாங்களும் மாட்டை
அடக்குவோம் ,எங்களுக்கும் வீரம் உண்டு
என்று நிரூபிப்பதற்காக தங்களால் இயலாத காரியத்தை வீம்புக்கு செய்வது
விவேகமாகப் படவில்லை
உண்மையிலேயே ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு
நம்முடைய பாரம்பரிய விளையாட்டு, வழக்கொழிந்து போகாமல் இருக்க
வேண்டுமானால்
இளைஞ்ஜர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
தங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கிய்மாக வைத்துக் கொள்ள வழிகள் தேட
வேண்டும்

பழங்கால இளைஞ்ஜர்கள் போல் தங்கள் உடலையும்,மனதையும்
ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு வீரத்தையும்
நெஞ்ஜுறுதியையும் வளர்த்துக் கொண்டு ஜல்லிக்கட்டு போன்ற வீர
விளையாட்டுக்களில் இறங்கி னால் காளைகள் என்ன, யானையையே அடக்க முடியும்

வீரத்தில் விவேகமும் உண்டு
சீறி வரும் மாடுகளைப் பிடித்து அதை அடக்குவோர்கள்
அது ஓடும் வேகத்துக்கேற்ப தாங்களும் ஓடி, அந்த மாட்டை எங்கு பிடித்தால்
அது தங்களைத் தூக்கி அடிக்க முடியாது என்னும்
சூக்க்ஷுமம் தெரிந்து பிடித்து அடக்குவர் முன் காலத்தில்
அதுவும் ஒரு கலையே அதை முறையாக தெரிந்தவர்களிடம் பயின்று , கலையாய்க்
கற்று பின் ஜல்லிக்கட்டில் ஈடுபடுவது
விவேகம் கலந்த வீரம், விவேகமில்லாத வீரம் காளைகளின் வேகத்துக்கும்
வலிமைக்கும் ஈடு கொடுக்க முடியாமல் போய்விடும்.அபாயத்தை ஏற்படுத்தும்

விவேகமில்லாது, வீரமும் இல்லாது, உடல் வலிமையும் இல்லாது
ஜல்லிக் கட்டோடு மல்லுக்கட்டுவது வேடிக்கை பார்க்கும்
கன்னியர்களை வேண்டுமானல் மயக்கலாம்
காளைகளால் தூக்கி எறியப்பட்டு மருத்துவ மனையில்
படுத்துக் கிடக்கும் போது யாரும் உதவ மாட்டார்கள்
கைகளையோ கால்களையோ இழந்து அல்லது ,சீவிய கொம்பால் குத்தப்பட்டு குடல்
சரிந்து போகும் போது பிற்கால வாழ்க்கையே பாதிக்கப் படலாம்

ஒரு பழ்மொழி உண்டு
" அடுத்த வீட்டுக்காரன் பாம்பைப் பிடித்தால்
அல்லித்தண்டு போல குளிர்ந்திருக்கும் "

என்று அது போல காளையை அடக்க யாரைத்தேர்வு செய்யவேண்டும் என்று
முறைப்படுத்தி
அவர்களுக்கும் பலத்தைப் பெருக்கிக் கொள்ள தேவையான போஷாக்கு அளித்து,
சூக்ஷுமங்களையும் கற்றுக் கொடுத்து அதிலும் முறையான தேர்வுகள் நடத்தி
முறைப்படி தேர்ந்தெடுத்து
அவர்களைமட்டும் காளைகளை அடக்க அனுமதிக்கலாம், மற்றும்
வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வேடிக்கை பார்க்க தேவையான
வசதிகளை ஏற்படுத்தி முறையான ஏற்பாடுகள் செய்து முறையாக நடத்தினால் ஒரு
அருமையான பழங்கலை அழியாமல் பாது காக்கப்படும்

முறையற்ற, பாதுகாப்பற்ற, எந்தக் கலையும் ,
பாரம்பரியமும் வளராது

அன்புடன்
தமிழ்த்தேனீ






On Jan 15, 10:51 am, "Tirumurti Vasudevan" <agnih...@gmail.com> wrote:
> 2008/1/15 Narayanan Kannan <nkan...@gmail.com>:
>
> > தமிழகத்தின் வீர விளையாட்டு என்று செய்யும் ஜல்லிக்கட்டு கேலிக்கூத்து.
> > ஒரு ஆயிரம் பேர் மிரண்டு போன ஒரு மாட்டை தாவித்தாவிக் கவ்வுவது என்ன
> > வீரம்? வீரத்தைக் காட்ட வேண்டுமெனில் இவர்கள் ஸ்பானிஸ் மட்டாடர் போலோ
> > அல்லது அமெரிக்க கௌவ்பாய் போலோ வலுவான மாட்டுடன் ஒத்தைக்கு ஒத்தை நிற்க
> > வேண்டும். இவர்கள் செய்வது கண்டிக்க வேண்டிய விலங்கு வன்முறை!!
>
> ஆஹா! யாரும் இதை கேட்கவில்லையே என்று நினைத்தேன்!
> நீதிமன்றத்தில் தடை விதித்ததன் காரணமே இதுவோ?
>
> ஒண்டிக்கு ஒண்டி சரி, ஒத்துக்கலாம். அது வீரம்.
>
> மாட்டுக்கு சாராயம் கொடுப்பது, கொம்பு சீவி விடுவது மிரட்டி ஒரு
> கூட்டத்தில் ஒடவிட்டு அதை ஒரு பெரும் கூட்டமே துரத்துவது... கூடவே
> ஏகப்பட்ட சத்தம். பாவம் மாடு!
>  இதை ஸ்பானிஷ் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
>
> ஜல்லி கட்டை முறைப்படுத்தினால் தடை நீங்கலாமோ என்னவோ?
>
> திவா
> --
> My blogs:http://nallaseithi.blogspot.com/http://kathaikathaiyaam.blogspot.com/

இரவா

unread,
Jan 15, 2008, 1:45:25 AM1/15/08
to minT...@googlegroups.com
வீரம் என்பதும் வீர விளையாட்டு என்பதும்
தமிழ் மண்ணுக்குரிய பண்பு!!

அதனை மேலை நாட்டாருடன் ஒப்பிடுவது விவாதிப்பது ஏற்புடையதல்ல!

முதன் நாள் போரில் என் கணவன் மாய்ந்தான். நேற்றைய போதில் என் உடன் பிறந்தான் மாய்ந்தான். இன்றைய பொருக்கு நீ சென்று வா! என்று பச்சிளம் பாலகன் தலைக்குப் பூச்சூடி, அவன் கையில் வேல் தந்து அனுப்பும் தாயர்கள் ஈன்றவர்கள் விளையாடும் போர்விளையாட்டு இது.

உலகில் தோன்றிய முதன் நிலம் குறிஞ்சி. அடுத்தது முல்லை. அந்நிலமக்கள் எருதுகளைத் தங்கள் உழவுக்குப் பயன்படுத்தி, உலகின் நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள். அதன் காலம் எது என்று கணித்திட இயலாத அளவுக்குப் பழமையானது.

அத்தகைய தொன்மை நாகரிக விளையாட்டை, உச்ச நீதி மன்றத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு சிலர் தடை போட்டால், அதற்குக் கைத் தட்டுவோர் எத்தகையோர்? தீவட்டிகள் விளையாடும் விளையாட்டல்ல, ஏறுதழுவுதல்.

அது வீரத்தழும்பை ஏற்கும் மறவர்கள் விளையாட்டு.

 

Vijay kumar

unread,
Jan 15, 2008, 2:11:46 AM1/15/08
to minT...@googlegroups.com

நரம்பு எழுந்து உலறிய நிரம்பர் மென்தோள்
முளரி முருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற

மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலை அறுத் திடுவேன், யான். எனச் சினைஈக்
கொண்ட வாளோடு படுபிணம் பெயராச்
செங்களம் தழாவுவோல், சிதைந்து வேரகிய
படுமகன் கிடக்கை கண்ணு ஊ
ஈன்ற ஞன்ரிநிலும் பெரிது உவந்தனலே

not sure if i got the tamil words right...but the english translation from a paper

Women's Wisdom Through Ages

Translated by R. Parthasarathy

The Battlefield

On the weak, shriveled arms of the old woman,

the veins stand out; her stomach is gnarled

as a blade of lotus. Unnerved by the fighting,

her son had turned his back on it. So folks whispered.

If he had fled in the heat of battle,

she thundered in a rage, these breasts that nursed him

I'll tear to pieces. Sword in hand,

she groped around in the bloodstained field,

turning over one lifeless body

after another. When she found her son

lying prostrate, hacked to death,

she rejoiced more than on the day he was born.

Kakkaipatiniyar Naccellaiyar,

Tamil / Purananuru 278

Kannan Natarajan

unread,
Jan 15, 2008, 4:24:04 AM1/15/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
உழவு நடைபெறுவது மருதத்தில், அதற்கு முந்தையது முல்லை. "காடு கொன்று நாடாக்கி"(Coverting the pastoral into ploughing fields). எனவே,முல்லை நிலத்து, ஆன்யினம் அவற்றின் இனமாகிய எருது,ஏருக்குப் பயன்பட்டது. எனவே, குறிஞ்சிக்கும், எறுதுகளுக்கும்,வீர விளையாட்டிற்கும் தொடர்பு இல்லை.வேலேந்திய வீரர்கள் தான் குறிஞ்சி,பாலை நில மறவர்கள்.
 
எனக்கு பிறந்தவர் எட்டுப் பிள்ளைகள். எனக்கு பிறந்த எட்டுப்பிள்ளைகளும், போரில் பட்டு வீழ்ந்தார்கள்.
 
"Victory! Sparta,I bore them but to die for thee." என்பது கிரேக்கப் பாடல்.
 
போர்மறத்தைப் புகழ்ந்து பேசும் மறத்தாயாகிய இது மூதில் மகள் பாடிய பாடலாகும். இதற்கும், ஏறுதழுவலுக்கும் என்ன தொடர்பு? கலைஞர் காதில் விழப்போகிறது! புறநானூற்றுப் போர்வரிகளாகிய, இந்தப் பாடலை("குடிசை தான்",என்று தொடங்கும்) நெருப்பு வரிகளால், எழுதிக்காட்டிப் படத்திலும், இந்த வீரவரிகளை மனோரமா பலமுறை தொலைக்காட்சியிலும் அவ்வசனத்தை பேசியும் காட்டியிருக்கிறார்.
 
நீங்கள் காட்டும் பாடல் எதற்காக?
 
உச்சநீதி மன்றத்திற்கு, இந்தப் புறநானூற்றுப் பாடலையா காட்டுகிறார்கள்!!! கலித்தொகை காட்சிகள் போதாதா!
 
வாய் திறந்தால் வடமொழியோடு ஒப்பிடுகிறவர்களுக்கு,மேலை நாடுகள் பகை நாடா! "வெளிநாட்டார் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்", என்று இரவாவிற்கு பகைவராப் பாடினார்!! (பொங்கலில் நல்ல வேடிக்கை.)

Vijay kumar

unread,
Jan 15, 2008, 4:36:44 AM1/15/08
to minT...@googlegroups.com

தமிழர் வீரம், புற முதுகு காட்டி ஓடாதவர்கள் ... என்பதை இது குறிக்கிறது என்பதால் -  நமது மடல் காளையை கண்டு பயம் இல்லாமல் எதிர் கொள்ளும் தமிழர் வீரம் என்ற பொருள் கொண்டு இத்தனை இட்டேன் . பிழை இருந்தால் மன்னியுங்கள்.

இரவா

unread,
Jan 15, 2008, 5:38:37 AM1/15/08
to minT...@googlegroups.com
உழவு நடைபெறுவது மருதத்தில், அதற்கு முந்தையது முல்லை. "காடு கொன்று நாடாக்கி"(Coverting the pastoral into ploughing fields). எனவே,முல்லை நிலத்து, ஆன்யினம் அவற்றின் இனமாகிய எருது,ஏருக்குப் பயன்பட்டது. எனவே, குறிஞ்சிக்கும், எறுதுகளுக்கும்,வீர விளையாட்டிற்கும் தொடர்பு இல்லை.வேலேந்திய வீரர்கள் தான் குறிஞ்சி,பாலை நில மறவர்கள்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என நிலம் நான்காயினும் அந்நிலங்களில் வாழ்பவர்கள் தமிழர்களே! போரில் வென்று திரும்பியவர்கள் தங்கள் காதல் மணாட்டியைக் கைபிடிக்க வீர விளையாட்டுகளில் ஈடுபடுவர்.
 
உச்சநீதி மன்றத்திற்கு, இந்தப் புறநானூற்றுப் பாடலையா காட்டுகிறார்கள்!!! கலித்தொகை காட்சிகள் போதாதா!

உச்சநீதி மன்றத்திற்கு எந்தப் பாட்டு சென்றது என்பதா கேள்வி? ஏறுதழுவுதல் வேண்டுமா வேண்டாமா? என்பதற்கு வீர வரலாறு தமிழர் வரலாறு என்பதற்கு எடுத்துக் காட்டாகக் காட்டப்பட்டது.
 

வாய் திறந்தால் வடமொழியோடு ஒப்பிடுகிறவர்களுக்கு,மேலை நாடுகள் பகை நாடா! "வெளிநாட்டார் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்", என்று இரவாவிற்கு பகைவராப் பாடினார்!! (பொங்கலில் நல்ல வேடிக்கை.)

வடமொழி, மேலை நாடு என்பதெல்லாம் எங்கு பேசவேண்டுமோ அங்கு பேசலாம். மேலை நாட்டான் எதை வணக்கம்  செய்தல் வேண்டுமாம்?  இவர் பாடியதால் மேலையன் வணங்கிப் போனானா?



தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்


--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          

இரவா

unread,
Jan 15, 2008, 5:56:51 AM1/15/08
to minT...@googlegroups.com
(பொங்கலில் நல்ல வேடிக்கை.)

நானும் அதைத் தான் கேட்கிறேன்! பொங்கலைப் பொங்கினோமா?  கொள்ளும் வரை அள்ளி உள்ளே தள்ளினோமா 
ரெண்டு ஆண்டாள், ரெண்டு நாயன்மார் பாடல்களை எடுத்துவிட்டு விட்டோமா என்றில்லாமல்,  ஏறுதழுவலா? எலும்புமுறிவா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால்? சும்மா இருக்க முடியுமா.

யார் எதைப் பேசவேண்டும் என்றில்லாமல், இணையத்தில், புல் தடுக்கிகளெல்லாம் புறநானூற்றுப் போர் பற்றி விமர்சனம் எழுதுகின்றார்களே!

போர்க்களத்தில் தன் மகன் புறமுதுகிட்டான் என்ற சொல்லைக் கேட்டவுடன், அவனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்து எறிவேன்! என்ற தாயை இன்றும் பாண்டியர் பூமியில் பார்க்கின்றேன்.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்


--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          

இரவா

unread,
Jan 15, 2008, 7:04:15 AM1/15/08
to minT...@googlegroups.com

உச்சநீதி மன்ற தடை விலக்கப்பட்டு விட்டது


On 1/15/08, இரவா <vasude...@gmail.com> wrote:

வேந்தன் அரசு

unread,
Jan 15, 2008, 8:41:31 AM1/15/08
to minT...@googlegroups.com
கைபந்து கால் பந்து போல் காளை விரட்டு விளையாட்டுக்கும் ஒரு கழகம் அமைத்து நெறிகளை வகுத்து விளையாட அனுமதிக்கலாம்
 
கார்பந்தயங்களில், மலை ஏற்றத்தில்  கூட சாவுகள் நிகழ்கின்றன். தடை செய்து விட்டார்களா என்ன?
 
ஒன்று சரி இல்லை என்றால் உடனே தடை செய் என கூச்சல் இடுவதுதான் நம் வழக்கம் அதன் குறை நீக்கி செம்மை படுத்தலாம் என்பதில் எவருக்கும் ஆர்வம் இல்லை.

நாமும் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவிக்கொண்டு இந்த தமிழ் மரபை அழிக்க ஆசைபடுகிறோம்


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Narayanan Kannan

unread,
Jan 15, 2008, 8:51:53 AM1/15/08
to minT...@googlegroups.com
<<போர்க்களத்தில் தன் மகன் புறமுதுகிட்டான் என்ற சொல்லைக் கேட்டவுடன்,
அவனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்து எறிவேன்! என்ற தாயை இன்றும்
பாண்டியர் பூமியில் பார்க்கின்றேன்>>

நண்பரே! அதே பாண்டி நாட்டில், முக்குலத்தோருடன் பழகிப் பிறந்து
வளர்ந்தவன்தான் நான். தேவர் பூமியில் எடுத்தால் வெட்டு, நினைத்தால்
குத்துதான். அது சங்க மரபின் வழிமுறையாக இருக்கலாம். ஆனால், 21ம்
நூற்றாண்டிற்கு அது ஒத்து வருமா? என்று பார்க்க வேண்டும். இது பற்றி
அதிகம் பேசினால் வன்முறையாளன் என்று தடா சட்டத்தில் உள்ளே போட்டுவிடுவர்.
கமல் தேவர் படத்தில் சொல்வதுபோல், "டேய் போங்கடா, கத்தி, அருவாளைத்
தூறப்போட்டுட்டு, பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போங்கடா!" என்று
சொல்வதுதான் புத்திசாலித்தனம். வன்முறையால் எந்த நாடு உருப்பட்டுள்ளது?
நா.கணேசன் சொல்லுவார், 600 ஆண்டுகள் பாண்டியரும், சோழரும் போர் புரிந்து
கொண்டே இருந்ததால் "சேர நாடு" திரிந்து போய் "கேரளா"வாக மாறிவிட்டது
என்று. அவர்கள் தங்களைத் தமிழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.
மலையாளத்தில் 'பாண்டி' என்றால் காட்டுமிராண்டி என்று பொருள்!

மேலும் ஜல்லிக்கட்டில் ஒத்தைக்கு ஒத்தை நிற்கின்ற அளவிற்கு தமிழ் நாட்டு
வாலிபர்களுக்கு ஊட்ட உணவு கிடையாது. ஒரு எருதின் பலம் என்னவென்று அறிய
வேண்டுமெனில் தனி மனிதன் ஏர் உழுது (இழுத்து) பார்க்க வேண்டும் -
மாட்டிற்குப் பதில்! வெள்ளைக்காரர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர்,
தனியாக மோதும் பலம் வருகிறது. சமகாலத்தமிழன் அசைவம் என்று சொல்வது வெறும்
முட்டையும், கோழியும்தான். அதை வைத்துக் கொண்டு மாட்டுடன் மோத முடியாது.

அடுத்து நமது ஜல்லிக்கட்டு விகிதம் 1000:1 என்று இருக்கிறது. இது மாட்டை
humiliate செய்வதாகும்.

சென்றமுறை தமிழகம் வந்திருந்த போது ஒரு கோயிலில் புசாரி ஆட்டின்
மென்னையைக் கடித்தே பலி கொடுப்பார் என்றும் அக்கோயிலுக்கு தமிழக அரசே ஆடு
அனுப்புவதாகவும் செய்தி படித்தேன்.

இதில் எதுவுமே ஆரோக்கியமாகத் தெரியவில்லை. I see anachronism here!
சங்கத்தமிழன் மாடு ஏவினான் என்றால் அவன் சூழல் என்ன, நம் 21ம் நூற்றாண்டு
சூழல் என்ன? என்று சான்றோர் பார்க்க வேண்டாமா? ஏதோ வீம்பு செய்வதற்காக
புறப்பட்டால் எப்படி? முதலில் பள்ளியிலிருந்து மாணவர்களை திடகாத்திரமான
தமிழர்களாக மாற்றிவிட்டு, ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுவோம். இன்னும்
கிராமங்களுக்குக் கல்வியே போகவில்லை, இதற்குள் ஜல்லிக்கட்டா முக்கியம்?

கண்ணன்

On 1/15/08, இரவா <vasude...@gmail.com> wrote:


--
"Be the change you wish to see in the world." -Gandhi

Be paid for surfing the internet. http://www.agloco.com/r/BBCP7818

Tirumurti Vasudevan

unread,
Jan 15, 2008, 10:55:04 AM1/15/08
to minT...@googlegroups.com
அரசரின் இந்த கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
விதிகளை சரி செய்வோம். பிறகு யாருக்கு எவ்வளவு வீரம் என்று பார்க்கலாம்.
ஒரு பெரிய கூட்டம் சேர்ந்து கொண்டு ஒரு காளையை துரத்துவது என்ன வீரம்?
சங்க காலத்தில் இப்படித்தான் செய்தார்களா?

மத்த நாட்டுல ஒண்டிக்கு ஒண்டி நிக்கறான் பாருயா,இவனுக்கு தமிழன்
குறைந்தவனா? என்றால் கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது!

;-)

திவா

2008/1/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


> கைபந்து கால் பந்து போல் காளை விரட்டு விளையாட்டுக்கும் ஒரு கழகம் அமைத்து

> நெறிகளை வகுத்து விளையாட அனுமதிக்கலாம் ......

Kannan Natarajan

unread,
Jan 15, 2008, 4:52:35 PM1/15/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
>உச்சநீதி மன்ற தடை விலக்கப்பட்டு விட்டது
 
அப்பாடா! சுத்த வீரம் சுப்ரீம் கோர்ட்டில் வென்றது! ஆழ்வார்களும்,நாயன்மார்களும் சக்கரம்,சூலாயுதம் வைத்திருக்கும் கடவுளர்களைப் பாடும் கோழைகள் என்று கோபம் கொள்ளவேண்டாம்!
 
>யார் எதைப் பேசவேண்டும் என்றில்லாமல், இணையத்தில், புல் தடுக்கிகளெல்லாம் புறநானூற்றுப் போர் பற்றி .விமர்சனம் எழுதுகின்றார்களே!
 
"புல்தடுக்கி வீரம்" என்றால் புல்லால் ஆன தடுக்கில் (தர்ப்பைத் தடுக்கில்), படுத்து உயிர்விட்ட பாரதப்போரை நினைவூட்டுகிறது! போர் செய்வதென்றால், புறநானூற்றுக்கு மேற்கோள் காட்டுவது தான் வழக்கம். தமிழர்கள் யாராகயிருந்தாலும் புறநானூறைக் கோடிட்டுக் காட்ட உரிமையில்லையா!!!( உ.வே.சா)
அலங்காநல்லூரில் ஒரு சிக்கல் தீர்ந்துவிட்டது! "மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்" போல,"ஏற்தழுவலை மீட்ட சோழன்" என்ற புகழையும் நாம் பெறுகிறோம்!
 
ஏற்தழுவும் இளைஞர்களுக்குக் காப்பீட்டு முறையை நடைமுறைப் படுத்தவேண்டும். கொம்பு இல்லாத காளைகளுக்கும், கொம்புள்ள காளைகளுக்கும், சேர்த்துச் சொன்ன அழகிய திருக்குறளை, இன்றைய திருவள்ளுவர் நாளில், மாட்டுப் பொங்கலோடு நினைத்து மகிழ்வோமாக!!!
 
"மடுத்தவா யெல்லாம் பகடன்னான்; உற்ற
  இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து." - 624.
 
>போர்க்களத்தில் தன் மகன் புறமுதுகிட்டான் என்ற சொல்லைக் கேட்டவுடன், அவனுக்குப் பாலூட்டிய மார்பை >அறுத்து எறிவேன்! என்ற தாயை இன்றும் பாண்டியர் பூமியில் பார்க்கின்றேன்.
 
பால் குடிக்காத குழந்தைகளும், பால் கொடுக்காத தாய்மார்களும், இனியாவது புறநானூற்றுப் பாடலைப் புரிந்து கொள்வார்கள்!!!
 
>நானும் அதைத் தான் கேட்கிறேன்! பொங்கலைப் பொங்கினோமா?  கொள்ளும் வரை அள்ளி உள்ளே >தள்ளினோமா
>ரெண்டு ஆண்டாள், ரெண்டு நாயன்மார் பாடல்களை எடுத்துவிட்டு விட்டோமா என்றில்லாமல்,  ஏறுதழுவலா? >எலும்புமுறிவா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால்?
 
காலத்திற்கேற்ற மாறுதலைக் கைகுலுக்கி வரவேற்கவேண்டும்.
ஜல்லிகட்டுக்கு மல்லுகட்டுவது போல நாராயணன் கண்ணன் சொல்லும் பள்ளிகட்டு(ம்) பணிகளும் வளருமாக.

Saravana Rajendran

unread,
Jan 15, 2008, 9:35:23 PM1/15/08
to minT...@googlegroups.com

 வர வர சுப்ரீம் கோர்ட் சுப்பிரமணி சாமி கோர்ட் ஆகிவருகிரது. திராவிர பண்பாடு என்பது மனிதர்களின் வாழ்க்கை நன்னேறியை மட்டும் கொண்டு வளர்ந்து வந்தது. எ கா திருக்குறள். எத்தனை யுகங்கள் ஆனாலும் அது மனிதர்களுக்கு தேவையான ஒழுக்க நெறியுடன் வாழ ஒரு வேதப்புத்தகமாகும்.

அது போல் தான் மரபு வழி கலைகளும், அதில் ஜல்லிகட்டையும் சேர்த்துக்கொள்ளலாம் நம் முன்னோர்கள் கொண்டதை அப்படியே எற்றுக்கொள் என்று சொல்லவரவில்லை ஆனால் காலத்திற்க்கேற்ப சில மாற்றங்கள் கொண்டு அதை மெருகூட்டி உலகிற்க்கி எடுத்து வைப்பது நம் தமிழரின் கடமை அதைவிட்டு விட்டு ஜல்லிகட்டு வேண்டாம் என்று நாமே சொல்வது அதற்க்கு சாதகமாக பல வற்றை சொல்வது இதற்க்காகவா நாம் தமிழ் மண்ணில் பிறந்தோம்.

ஒட்டு மொத்த தமிழினமே இதை இந்த தீர்ப்பை எதிர்த்தன் விளைவு தான் சுப்ரீம் கோர்ட் சுப்பிரமணி கோர்ட்டாகி போனது.




மும்பையிலிருந்து

Narayanan Kannan

unread,
Jan 15, 2008, 9:54:11 PM1/15/08
to minT...@googlegroups.com
2008/1/16 Saravana Rajendran <rajesa...@gmail.com>:

>
> அது போல் தான் மரபு வழி கலைகளும், அதில் ஜல்லிகட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்
> நம் முன்னோர்கள் கொண்டதை அப்படியே எற்றுக்கொள் என்று சொல்லவரவில்லை ஆனால்
> காலத்திற்க்கேற்ப சில மாற்றங்கள் கொண்டு அதை மெருகூட்டி உலகிற்க்கி எடுத்து
> வைப்பது நம் தமிழரின் கடமை அதைவிட்டு விட்டு ஜல்லிகட்டு வேண்டாம் என்று நாமே
> சொல்வது அதற்க்கு சாதகமாக பல வற்றை சொல்வது இதற்க்காகவா நாம் தமிழ் மண்ணில்
> பிறந்தோம்.
>

Tamils fail in marketing. சுற்றுலா வளர்ச்சி என்று பார்த்தால் கேரளமும்,
ராஜஸ்தானும் உச்சத்தில் நிற்கின்றன. காரணம்?

1. தமிழகத்தின் சிறப்பு கோயில்கள். நாம் எப்படி நம் கோயில்களை
வைத்திருக்கிறோம். குப்பையும் கூளமும். மதிற்புரம் முழுவதும் மனிதக்
கழிவுகள். தஞ்சைக் கோயில் மட்டும் மத்தியப் பராமரிப்பால் பிழைத்தது.
இப்படி இருந்தால் யார் மதிப்பர்?

2. மஞ்சு விரட்டு என்று சொல்லிவிட்டு நம் வீரத்தை நாமே கேலிக்கூத்து
ஆக்குகிறோம்! மேலை நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது!
சங்கத்தில் எப்படி மஞ்சு விரட்டு நடந்தது என்று ஆய்து அதுபோல் செய்யச்
சொல்லுங்கள். யார் வேண்டாம் என்கின்றனர். வந்து பார்ப்பவர் சிரிக்கும்படி
ஒன்றைப் பண்பாடு என்ற பேரில் செய்வதற்குப் பதில் சும்மா இருக்கலாம். அது
நம் பண்பாட்டுச் சீரழிவை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலாகும்.

இவை சில உதாரணங்களே. இப்போது வளர்ந்துவரும் "சங்கமம்" நல்ல முயற்சி.
அதில் ஒரு sophistication இருக்கிறது. முதலில் தமிழ் வரலாறு முறையாக
எழுதப்பட வேண்டும். அது முறையாகச் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். தமிழ்
நாட்டில் வாழும் அனைவருக்கும் தமிழ் கல்வி போதிக்கப்பட வேண்டும். எளிய
முறையில் தமிழ் சொல்லித்தரும் "தமிழ் பிரச்சார சபாக்களை" இந்தியாவெங்கும்
நிருவ வேண்டும். முதலில் இந்தியர்களுக்கு தமிழர் பற்றி இருக்கிற தப்பு
அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும். நம் சிறப்புகளை முறையாய் சொல்லத்தெரிய
வேண்டும். எல்லாவற்றிற்கும் வெறும் வீராப்புதான் இருக்கிறது. Marketing
இல்லை!

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jan 15, 2008, 10:26:36 PM1/15/08
to minT...@googlegroups.com
அழிவில் இருந்து காக்கப்படுமா காங்கேயம் காளை இனம்?


அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டில் முறுக்கிய திமிலும், வெறித்த பார்வையுமாக துள்ளி வருபவை காங்கேயம் இன காளைகளே. கொங்கு மண்டலத்தின் அழியா சின்னமான அவை, வண்டி இழுத்தல், உழுதல் போன்ற வேலைகளில் சோர்வின்றி உழைக்கும் திறன் வாய்ந் தவை. கடும் வெயில் காலத் திலும் எட்டு மணி நேரத்துக் கும் மேல் களைப்பின்றி வேலை செய்யக்கூடியவை காங்கேயம் எருதுகள். காங்கேயம் பசுக்கள் எந்த தீவன செலவும் இன்றி சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் பால் தரக்கூடியவை. தரிசு நிலங்களில் மேய்ந்தும், சோளத்தட்டை, கம்பந் தட்டை, புல் பூண்டுகளை மேய்ந்தும் இந்தளவு பால் தருகின்றன.

காங்கேயம் இன கால்நடைகளை கோமாரி நோய் தாக்குவதில்லை. காங்கேயம் இனப்பசுக்களில் இனவிருத்தியும் திருப்திகரமாக இருக்கும். முதல் கன்று போடும் வயது 40 மாதமானாலும், நீண்ட காலம் வாழ்ந்து எட்டு முதல் 10 கன்று வரை போடும். கனரக வாகனங்கள், டிராக்டர்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், ஒட்டுமொத்தமாகவே கால்நடைகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதன் விளைவாக, காங்கேயம் காளை, பசுக்கள் அரிதாகி வருகின்றன.

தற்போது வளர்க்கப்படும் கலப்பின பசுக்களின் 50 சத ரத்தம் நம் நாட்டு மாடுகளில் இருந்து அதுவும், காங்கேயம் இன மாடுகளில் இருந்து வந்தது தான். அதன் நோய் எதிர்ப்புத்திறனே இன்றுள்ள கலப்பின பசுக்களை நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது. கால்கட்டு, வாய்சப்பை எனும் கோமாரி நோய், பெரும்பாலும் வெளிநாட்டு இனங்களான ஜெர்ஸி போன்ற இனங்களையே இந்நோய் தாக்கும். காங்கேயம் இன மாடுகள் அவற்றை தாங்கி நிற்கின்றன.

தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மேற் கொண்ட ஆய்வில், காங்கேயம் கால்நடைகள் கோவை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் குறைவாக காணப்படுகின்றன. இந்த இனமே அழியும் நிலையில் இருப்பது தெரியவந்துள் ளது. காங்கேயம் காளை இனத்தை உருவாக்கி தந்தவர்கள் காங்கேயம் பழையகோட்டை பட்டக்காரர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தான். இன்று நாம் பார்க்கும் ஒரு சில காங்கேயம் மாடுகள், அவர்களது ஆராய்ச்சியின் பயனாக கிடைத்தவை தான்.

அத்தகைய ஒரு முயற்சி யை விவசாயிகள் தொடர்ந்து மேற்கொண்டால் தான், நமது பாரம்பரிய கால்நடை இனங்களை காப்பாற்ற முடியும். கால்நடைகள் அரிதாகி வருவது பற்றி ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன சங்க விவசாயத் தலைவர் நல்லசாமி கூறியதாவது: ஒரு காலத்தில், கால்நடைகள் செல்வமாக கருதப்பட்டன. இன்று கால்நடை, மனிதர்களுக்கு சுமையாகி விட்டது. உழவுக்கும், தண்ணீர் இறைக்கவும், பொருட்களை கொண்டு வரவும், மாடுகள் பயன்பட்டன. இன்று மாடுகள் பயன்படுத்துவது குறைந்து, டிராக்டர், லாரி, வேன் ஆகியவை வந்துவிட்டன.

மாட்டு பொங்கல் கொண்டாடுவதும் குறைந்து வருகிறது. நட்சத்திர ஓட்டல், சுற்றுலாத் தலங்களில் உற்சாக ஆட்டம் போடும் அவல நிலைக்கு பொங்கல் விழா தள்ளப்பட்டுள்ளது.ஆடு, மாடு வைத்திருக்கும் விவசாயிகள், அறுவடையில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு, அரசு பொங்கல் போனஸ் தரவேண்டும். கொங்கு மண்டலத்துக்கு பெருமை சேர்த்த காங்கேயம் இன காளை, பசுக்களை தொடர்ந்து காப்பாற்ற அனைவரும் முயற்சியெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
நன்றி - தினமலர் - www.dinamalar.com

Kannan Natarajan

unread,
Jan 16, 2008, 1:01:51 AM1/16/08
to minT...@googlegroups.com
தமிழகத்தைப் போல கர்நாடகாவிலும் நடக்கும் ஜல்லிக்கட்டு

தமிழகத்தைப் போல கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களில் காளையை அடக்கும் போட்டி காலம் காலமாக நடந்து வருகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் ஷிமோகா, ஹவேரி, தர்வாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதி கிராமங்களில் தான்  "தன பெடாரிஸ்வ ஆட்டா" என்ற பெயரில் ஜல்லிகட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், தீபாவளி (அக்டோபர்- நவம்பர்) மற்றும் சங்கராந்தி (ஜனவரி) பண்டிகைளுக்கு இடைப்பட்ட காலத்தில் இப்போட்டிகளை நடத்துவர். இந்த காலத்தில் அறுவடை முடிந்து இருக்கும். விவசாயிகளுக்கும், காளைகளுக்கும் ஓய்வு கிடைக்கும் நேரம் இது. எனவே காளையை அடக்கும் போட்டிகளை நடத்தி, கிராமங்களில் திருவிழா கொண்டாடுவர்.

போட்டியின் போது, திறந்வெளி பகுதியில் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படும். காளைக்கு ஆக்ரோஷத்தை ஏற்படுத்த, காளையின் உரிமையாளர் பட்டாசுகளை வெடிப்பார்; தொடர்ந்து மேள சத்தத்தை ஏற்படுத்துவார். மாட்டின் கொம்புகளை பிடித்து, அவற்றை அடக்க வேண்டும். கொம்பு பகுதியில் கரன்சி நோட்டுகள், தங்க செயின் உள்ளிட்ட பரிசு பொருட்கள் கட்டி வைக்கப்பட்டு இருக்கும். காளையை அடக்கும் இளைஞர் அந்த பரிசு பொருட்களை எடுத்து கொள்ளலாம். இத்துடன், காளையின் உரிமையாளர், தனியாக சில பரிசுகளை அறிவிப்பார். முன்பு, காளையை அடக்கும் இளைஞர்களுக்கு பெண்ணை பரிசாக கொடுக்கும் பழக்கம் இந்த கிராம மக்களிடம் இருந்தது. தற்போது அப்பழக்கம் இல்லை.காளையை அடக்கும் போட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தங்களது தைரியம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்போட்டிகளை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிகட்டு போட்டியின் போது சூதாட்டம் இருக்கும். கர்நாடக கிராமங்களில் இது கிடையாது.ஒவ்வொரு கிராமமும் தனித்தனியாக தான் காளையை அடக்கும் போட்டியை நடத்தும். அன்றைய தினம் கிராமமே விழாக்கோலம் பூண்டு இருக்கும். வெளிமாநிலங்களில் இருந்தும், காளைகளை வரவழைப்பது உண்டு. போட்டியை காண வருபவர்களிடம், நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.ஆனால்,
 
ஜல்லிகட்டு போட்டியை போல, "தன பெடாரிஸ்வ ஆட்டா" போட்டி ஆபத்தானதாக இருக்காது. போட்டியில் பங்கேற்பவர்களுக்கு காயம் ஏற்படுவதும், இறப்பதும் மிகவும் அரிது. அதே போல, காளைகளும் துன்புறுத்தப்பட மாட்டாது. எனவே தான், பிற பகுதிகளுக்கு "தன பெடாரிஸ்வ ஆட்டா" போட்டி குறித்து எந்த தகவலும் இதுநாள் வரை தெரியாமல் இருந்து வந்துள்ளது.

Narayanan Kannan

unread,
Jan 16, 2008, 3:37:07 AM1/16/08
to minT...@googlegroups.com
மிக அழகிய பதிவிது!

இதுவும் நான் சொல்ல வந்த விஷயங்களில் ஒன்று. மக்கள் பெருக்கம், சூழல்
அபகரிப்பு (habitat destruction and occupation), பொதுவான இரக்கமின்மை
(apathy towards animals) போன்றவை இந்தியாவின் காட்டு + நாட்டு
விலங்குகளை மீளா அழிவிற்கு இட்டுச் செல்கின்றன. சிங்கம் கடவுள் அளவிற்கு
உயர்த்திக் காட்டப்பட்டாலும் (நரசிம்மர், தேவியின் வாகனம்) தற்போது
கையால் எண்ணக்கூடிய அளவிலேயே அவை உள்ளன. இதே கதைதான் புலிகளுக்கும்.
யானையை நாம் வணங்குகிறோம். ஆனால் இரக்கமில்லாமல் அவைகளை அவற்றின்
குடும்பதிலிருந்து பிரித்து வைத்து வாட்டுகிறோம். இனிமேல் காட்டில் போய்
பிடிக்க யானைகள் இருக்காது. அவ்வினம் நம் கண்முன்னே அழிந்து வருகிறது.

நாட்டு விலங்குகளை நாம் நடத்துகிற பாடு அதைவிட! பெரும்பாலான பசுமாடுகளை
போஸ்டர் திங்க விட்டு விடுகிறோம். போஸ்டர்களில் உள்ள நச்சுப் பொருள்கள்
பாலில் கலந்து நமக்கு வந்துவிடுகின்றன. கழுதைக்கு யாராவது தீவனம்
போட்டுப் பார்த்ததுண்டோ? பாவம்! தெரு நாய்கள் பாடு அந்தோ பரிதாபம்!

மஞ்சு விரட்டு என்று சொல்லி, மாடுகளை மிரட்டி, கழிய வைத்து, பயமுறுத்திப்
பார்க்கிறோம். அதை வீர விளையாட்டு என்று பறை சாற்றுகிறோம்.

கோயிலில் வைத்து ஆடுகளின் மென்னியைக் கடிக்கிறான் ஒருவன். அதை ஈஸ்வரம்
என்று புகழ்ந்து கொண்டாடுகிறோம்.

இதையெல்லாம் உலகிற்கு அகிம்சை எனும் தத்துவத்தை தந்த இந்தியாவில்
நடக்கிறது. கொடுமை! கொடுமை!!

காங்கேயம் மாடுகள் கம்பீரமானவை. உலகிலேயே மிகவும் அழகான இனம் ஆசிய இனமே.
சமீபத்தில் கம்போடியாவில் எடுத்த படத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

வீரத்தைக் காட்ட வேண்டுமெனில், மாட்டை இம்சிக்காமல் காட்ட முடியும்.
Extreme Sports எனும் சானலைப் பார்க்கவும்.

ஏன்! காந்தி சொன்னார், சத்தியாகிரகம் வீரனுக்குரிய செயலென்று! அவனும்
மரணத்தை துச்சமென நினைப்பவனே. ஆனால், இது எந்த துன்புறுத்தலும் இன்றி
நடக்கிறது (நாம் படும் அவஸ்தை தவிர).

கண்ணன்

2008/1/16 Kannan Natarajan <thar...@gmail.com>:

DSCF1487.JPG

Vijay kumar

unread,
Jan 16, 2008, 5:35:33 AM1/16/08
to minT...@googlegroups.com
மற்றொரு இணைய குழுமத்தில் இதே விவாதம் ஆங்கிலத்தில் நடக்கிறது. ஆனால் அங்கு வேற சர்ச்சை. படத்தில் உள்ளது காளைய எருமையா என்று....
 
 
நல்ல புகை படங்கள்
 

Tthamizth Tthenee

unread,
Jan 16, 2008, 5:39:54 AM1/16/08
to minT...@googlegroups.com

"   நிழல் துரத்தும் நிஜங்கள்  "
 
பூக்கடையில் கால் வைத்தேன்
சாக்கடை வாசம்
சாக்கடை ஓரம்  பூக்கடை உபயத்தால்
சாக்கடை மீறிய பூக்கடை வாசம்
சுயநலம் ஒரு நாறும் மலம்
நாற்றமென்றால் மணம்
மணம் என்றால் நாற்றமா  ?
நல் நாற்றமா..? துர் நாற்றமா..?
நாரோடு கூடி பூக்களும் மாலையாகும்,
இறையின் தோளுக்கு சேலையாகும்
பொதுநலத்தோடு கூடினால்
மனிதற்க்கு விடிவுகாலம்

ஒவ்வொரு ஜனனமும் மலம் தானே
தன் மலத்தை தானே அள்ளும்- த்யாகம்
என்றால் அது தாய்மை ஒன்றுதானே
தன்னலமில்லாத தாய்மைக்கு மட்டும்
தானது கிட்டுமென்றால் நாமும்
ஏன் விடக்கூடாது தன்னலத்தை…?

மலம் உண்ணும் பன்றியதை.
குளிர்சாதன அறையில் வைத்து
பக்குவமாய் பரிந்தூட்டி
கொழுக்க வைத்து தாமுண்ணும்
சாகசங்கள் புறிகின்ற மானுடரே

நமக்காய் வேண்டுமென்றால்
வராக அவதாரமென்போம்
தானெடுத்த வாந்தியை தானே உண்ணுகின்ற
நாயினையும் பைரவர் என்போம்
பரிமேலமர்ந்து பயணிக்கும் மனிதர்
பக்தி வந்தால் ஹயக்ரீவரென்பார்
வளைஎலி, கடும் புலி,கொடுஞ் சிங்கம்,
அத்தனையும் கடவுள்களின் வாகனமென்போம்
கடலிலே வாழுகின்ற  கொழுத்த
கொழுமீன் கொடு மீனை நாமுண்போம்
வலை போட்டு வளைத்தெடுத்து
வற்றவைத்து பொறிய வைத்து
வகை வகையாய் நாமுண்போம்
மச்சாவதாரமும் அது தானென்போம்,
மனிதரையே குரங்குகளின்
மாறு கால வளர்ச்சியென்போம்
பால் கொடுக்கும் பசுவினையும்
கொடுக்கும் வரை லக்ஷ்மியென்போம்
குலம் காக்க வந்த கோமாதா
குலமாதா வென்போம்
மடி பால் வற்றிப் போனால் அடிமாடென்போம்

நடப்பன ,ஊர்வன  ,பறப்பன
அத்தனையும்  நாமுண்போம்
நம்பிக்கை எனும் விதையை
நயமாய் நாம் தூவி நாடகமாய்
தெய்வமென்போம், வாகனமென்போம்

இனி இல்லை உபயோகம்  என்றுணர்ந்தால்
அன்னையென்ன ,தந்தையென்ன,அண்ணனென்ன
தம்பியென்ன, மனைவியென்ன,கணவனென்ன
மக்களென்ன ,பாசமென்ன ,நேசமென்ன
அன்பு என்ன பண்பு என்ன
அத்தனையும் பட்டுப் போகும்
அடிமாடாய் ஆகிப் போகும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


On 1/16/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Jan 16, 2008, 7:08:08 AM1/16/08
to minT...@googlegroups.com
On 1/16/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:

> http://www.pbase.com/oochappan/jallikattu
>

அருமையான படங்கள். நன்றாகப் பாருங்கள் சில காட்சிகளை!

1. ஒரு காட்சியில் எருதின் திமிள் பிடித்துத் தொங்கும் மனிதர். அவர்
வேட்டி கட்டியிருக்கவில்லை. பேண்ட் போட்டிருக்கிறார் :-)

2. ஒரு மாட்டை நாலு பேர் பிடித்து அமுக்க "மாடு நாக்கு தள்ளிப் போகிறது"
:-) நாலில் ஒருவரும் நாக்கு தள்ளிப் போகிறார் :-)

3. இவ்வளவு வீர விளையாட்டு நடக்கும் போது தொப்பையும் தொந்தியுமாக
காவல்காரர் கட்டையை வைத்து கொண்டு கம்பீரமாக நிற்கிறார் :-)

4. பல ஆயிரம் பேர் சூழ்ந்து நிற்க ஒரு மாடு ஒண்ணுக்கு அடித்து கழிக்கப்
போகிறது (வால் தூக்கி தயாராக இருக்கும் போது போட்டோ கிளிக்)

இதுதான் தமிழர்தம் "வீர விளையாட்டு"

சபாஷ் !!!

Narayanan Kannan

unread,
Jan 16, 2008, 7:17:27 AM1/16/08
to minT...@googlegroups.com
On 1/16/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:

> http://www.hindu.com/2008/01/13/stories/2008011355961800.htm
>

ஹிந்து விவரமாகத்தான் செய்தி போட்டிருக்கிறது!

"CHENNAI: "Jallikattu," which is bull-baiting or bull fighting, is an
ancient Dravidian tradition that was practised about 4,000 years ago
during the Indus Valley civilisation. "

என்ன சொல்கிறது? நாம் ஏன் சங்கப்பாடல்களை மேற்கோள் காட்ட வேண்டும்,
சிந்து சமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம்தான் என்று சொல்கிறதே!!

அப்படியானால், நம்ம வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது அரசியல் என்னாவது? :-))

"Bull-baiting figures in the Mahabharatha, which describes Krishna
controlling a ferocious bull in the forecourt of Kamsa's palace."

நான் முன்பு எழுதிய பாகவத மேற்கோளை ஹிந்துவும் சுட்டுகிறது! அப்ப
மகாபாரதம் திராவிட இதிகாசம்தானோ? சங்கப்பாடல் ஒன்றில் பாண்டிய மன்னன்
ஒருவன் பாண்டவர்களுக்கு களச்சோறு போட்டதாக ஒரு வருணனை வருகிறதே! அப்ப
எல்லாம் ஒண்ணு மண்ணுதான்னு சொல்லுங்க :-))

"Outside India, bull-baiting is practised in Spain and Portugal."

அப்படின்னா, திராவிட கலாச்சாரம் சிந்து தாண்டி துருக்கி போய்,
அங்கிருந்து ஸ்பெயின், போர்ச்சுகல் போயிருக்குமோ? ஏனெனில் அவர்கள்தான்
இந்த விளையாட்டை ஒழுங்காக விளையாடுகிறார்கள். ஒத்தைக்கு ஒத்தை.

நம்ம ஆளு கன்னுக்குட்டியை கட்டி அணைக்கிறாரு (உண்மை, படத்தைப் பாருங்கள்) :-))

சங்கத்திற்கே வெளிச்சம்!!

Kannan Natarajan

unread,
Jan 16, 2008, 5:32:21 PM1/16/08
to minT...@googlegroups.com
திருவள்ளுவர் நாள் விழாவில் நேற்று(16/01/08) விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
 
இங்கே விருது பெற்ற குன்றக்குடி ஆதீனத்தின் மூத்தவருடன், நானும் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆன்மிகத்துக்கும், அறிவு இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உறவாக அதனை கருதுகிறேன். இந்த இரு இயக்கங்களும் இணைந்து நாட்டு மக்களை வாழ்விக்க அந்த சந்திப்பு உதவியாய் இருந்தது.
 
தற்போது விருது பெற்றுள்ள பொன்னம்பல அடிகளார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, இரு நாட்களாக என்னை படாத பாடு படுத்திவிட்டார். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூஏறு தழுவுதல்' என்ற பெயரில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு இருந்ததை ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாற்று அறிஞர்கள் சுட்டிக் காட்டினர். இது போன்ற விவரங்களை எடுத்து சொல்லி தடையை நீக்கப் பெற்றோம். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவைகளை சொன்னால் நல்லவை நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
 
நன்றி:தினமலர் - http://www.dinamalar.com/
 
பி.கு:சிவன் அமர்ந்திருப்பது வெண்ணிறமானக் காளையின் (விடையேறி) மீது. ஒரு வேளை, இது ஜல்லிகட்டின் தோற்றமோ! பொன்னம்பல அடிகளாரின் வேண்டுகோள் பொருத்தமானது போலும்!! அடியாருக்கு அருள் புரிந்துவிட்டார் கலைஞர்!

Kannan Natarajan

unread,
Jan 16, 2008, 5:34:42 PM1/16/08
to minT...@googlegroups.com
சிந்துவெளி நாகரீகத்தின் சில கூறுகள்,மந்தைவெளி மார்கெட்டில் மாடுகள் மிரள்வதன் மூலம் தெரிவதாக,செய்திகள் வரும் போல் தெரிகிறது!
 
கண்ணன் நடரசான்

kra narasiah

unread,
Jan 17, 2008, 12:24:03 AM1/17/08
to minT...@googlegroups.com
I was present in the meeting as I was also reieveing an award. I thought the speech of Kunrakkudi adigalar can be given ISO 9001 certification for unadulterated sycophancy! It was sickening!
narasiah


Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now.

Kannan Natarajan

unread,
Jan 17, 2008, 4:25:51 PM1/17/08
to minT...@googlegroups.com
வாழப்பாடி அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் கிராம மக்கள், நரியை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாடினர்."நரி முகத்தில் விழித்து காரியத்தை துவக்கினால் பயன் கிடைக்கும்", என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது. தை மாதத்தில் வங்கா நரியை ஓட விட்டு பிடிக்கும் வினோத ஜல்லிக்கட்டு, வாழப்பாடி சுற்று வட்டார கிராமங்களில் நடத்தப்படுகிறது. சேலம் வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நரி பிடிக்க, மேள தாளத்துடன் காட்டுக்குச் சென்றனர். வலையில் வங்கா நரி சிக்கியது. தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வங்கா நரியை கொண்டு வந்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளி மைதானத்தில் நரியின் வயிற்றில் கயிறு கட்டி ஓட விட்டு ஜல்லிக்கட்டு நடத்தி, ஆரவாரத்துடன் பொங்கல் கொண்டாடினர்.வங்கா நரி தேடி, வனப்பகுதியில் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்தோர் முற்றுகையிட்டுள்ளனர். நரி பிடிபட்டதும் நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

Kannan Natarajan

unread,
Jan 18, 2008, 12:09:40 AM1/18/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
தமிழகத்தில் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு விடயம் குறித்து, தமிழ் உலக யாகூ குழுமத்தில் நண்பர் ஆல்பர்ட் பெர்ணான்டோ,இண்டி இராமிற்கு அளித்த சில பதில்கள்.அவர்கள் இருவருக்கும் நன்றி.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
>>>இந்த கேசு முதல் முதலாக விசாரணைக்கு வந்தபோது எந்த வக்கீல்
>>>அரசு சார்பில் வாதிட்டார். கோபாலகிருஷ்ணன் தானா அல்லதுவேறு ஒருவரா.

ஆம். வேறு ஒருவர். தமிழக அரசின் சார்பில் வாதாடியவர் ஆந்தி அர்ஜுனா!
 
>>அப்போதே அவர் ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை.

அப்போது அவர் "ஜல்லிக்கட்டுக்கு" போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. தக்க மருத்துவ வசதிகள் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தைச் சொல்லி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

மிருக வதை தடுப்பு அமைப்பு சார்பில் ஆஜரான கே.கே.வேணுகோபால்,"ஜல்லிக்கட்டு" ஒரு கொடூரமான விளையாட்டு. மிருகங்கள் துன்புறுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு கூட ஒருவர் பலி ஆகி இருக்கிறார். பலர் காயம் அடைந்துள்ளனர். ஆதலால் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
 

>>கடந்த 50 ஆண்டுகளில் எவ்வளவு இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காயத்தால் உயிரிழந்தார்கள்?

மன்னிக்கவும் தலைவரே, இந்த பின்னோக்கிய தகவல்களை தேடி அளிக்கும்
சக்தி என்னிடம் கைவசம் இல்லை.
 
>>ஏன் உச்சநீதிமன்ற ஜட்ஜ்கள் அப்போதே அரசு சார்பில் உத்தரவாதம் கேட்டு கேசை பைசல் செய்திருக்கலாமே
>>எனக்கு புரியவில்லை ஒரு உச்சநீதிமன்றம் மூனு நாட்களில் தனது தீர்மானத்தை மாற்றிவிடுவது!

நியாயமான கேள்விங்க; ஆனா..இது ரெம்ப சகஜமுங்க நம்ப ஊர் கோர்ட்டுகளில்...!
அவங்க தீர்ப்பைப் படிச்சுப்பாருங்க...
 

>>தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.வி. ரவிந்திரன், ஜே.எம். பச்சால் ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் கூறுகையில், "11-ந்தேதி வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி (தடையை நீக்க) தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில் அவர்களது (தமிழக அரசு) நிலை என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இன்னொரு வழக்கு என்ன என்பதை நாங்கள் குறிப்பிட்டு சொல்ல விரும்ப வில்லை'' என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

(அந்த இன்னொரு வழக்கு ராமர் சேது பாலம் தொடர்பான வழக்கு) ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு நிபந்தனை களையும் விதித்துள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளது என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும். அவை துன்புறுத்தப்படவில்லை என்றும் சான்றிதழ் வழங்க வேண்டும்.

அனைத்து விதிமுறைகள் நிபந்தனைகள் கடைபிடிக்கப் படும் பட்சத்தில் இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாடுகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து வரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப் பில் கூறியுள்ளது.

அடிக்கோடிட்ட வரிகளை எண்ணி சிரிப்பதா? ஜல்லிக்கட்டு கிளாஸ் நடத்த வேண்டும் இவர்களுக்கு!

மதுரையில் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,"பஞ்சாபில் சீக்கியர்களின் பாரம்பரிய விளையாட்டான ரேக்ளா போட்டிக்கு தடைவிதிக்காமல் இருந்ததற்கு காரணம் சீக்கியர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் தான். தமிழர்கள் எதுவும் கேட்கமாட்டார்கள் என்பதால் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்துள்ளனர். இந்தாண்டு எங்களுக்கு கருப்பு பொங்கல் பண்டிகை. ஜன.,17 அன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவோம்,என்று கூறினர்."

(இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை விலக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதற்கு பதிலாக, போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில், "ரேக்ளா ரேஸ்" நடத்திக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.
 
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, மதுரை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்ட மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.)
உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் பலவழக்குகளில் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ஆனால் அதன்படி மதித்து கர்னாடக அரசோ,கேரள அரசோ நடந்துகொண்டது கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு காண உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்திலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மாடுகளை கசாப்புகடைகளுக்கு கொலைபட்டினியாக மந்தைமந்தையாக ஓட்டிச் செல்லுவார்கள். இப்போதும் நடக்கிறது. ஆனால் மிருகவதை தடுப்பு இயக்கத்தினர் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு இது ஒரு பப்ளிசிட்டி வேலை..!

உழவன் ஏர் பூட்டி உழும்போது, பரம்படிக்கும்போது, வாலை முறுக்கி, அதட்டி, சாட்டையால் சொடுக்கி தம் பணி செய்வது கூட பார்ப்பவர்களுக்கு மிருக வதையாகத் தானிருக்கும்! அந்த மாடு இராஜ நடைபோட ஆசாரியிடம் கொண்டுபோய் காலகளில் இலாடம் கட்டுவார்களே. மாட்டின் கால்களை கயிற்றால் பிணைத்து இலாடத்தை கால்களில் பொருத்தி சுத்தியால் ஆணி வைத்து அடிப்பதை மிருகவதை தடுப்பு இயக்கத்தினர் இதுவரை பார்க்கவில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் இதற்கும் சேர்த்து தடை வாங்கி, ஏற்கனவே உழுது உழக்கும் மிஞ்சவில்லை என்பவனை ஓரமாய் உட்கார வைத்துவிட்டு விவசாயத்துக்கு மூடுவிழா செய்தாலும் செய்யலாம். இல்லை, மாடுகளை இனி உழவுக்கு பயன்படுத்த தடைவிதித்து தகுந்த இயந்திரங்களை இனி பயன்படுத்த வேண்டும் என்று உச்சபட்சமான உத்திரவுகள் பிறப்பித்தாலும் பிறப்பிக்கலாம்!
ஒரு தீர்ப்பை மாற்ற 3 நாள் வேண்டியதில்லை. ஒரே இரவில் ஒரு தீர்ப்பும் மறுநாள் வேறு தீர்ப்பும் வழங்கிய வேடிக்கையெல்லாம் நிகழ்ந்துகொண்டுதானுள்ளது, நண்பரே!

venkatram dhivakar

unread,
Jan 18, 2008, 12:28:17 AM1/18/08
to minT...@googlegroups.com
கண்ணன் நடராசன் அவர்களுக்கு,
நல்ல விளக்கக் கட்டுரையைத் தந்துள்ளீர்கள்.
 
திவாகர்.

 

Kannan Natarajan

unread,
Jan 19, 2008, 2:02:00 AM1/19/08
to minT...@googlegroups.com
ஜல்லிக்கட்டு: தேவை-பரந்துபட்ட விவாதம்
 

ஜல்லிக்கட்டு - பாரம்பரியம் மிக்க, வீரம் செறிந்த விளையாட்டுதான். சந்தேகமில்லை; மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்தக் காலத்துக்கு அது வீரம் செறிந்ததா?

சிலரைக் கொன்று, பலரைக் காயப்படுத்தும் அப்படிப்பட்ட பாரம்பரியம் தேவைதானா? என்பது மட்டுமே கேள்வி.

ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் ஏக சர்ச்சைகளை எழுப்பி, ஏராளமானோரைக் குற்றுயிரும் குலையுயிருமாக தூக்கிச் செல்லும் காட்சிகளைக் கொண்டதாக இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் உயர் நீதிமன்றத் தடை உத்தரவை, மாநில அரசே முன்முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதால், தாற்காலிகமாகத் தடை விலகி - மீண்டும் மார்ச் மாதத்தில் முழுமையாக விசாரிப்பதற்கான உத்தரவும் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, பலத்த பாதுகாப்புக்கிடையே குறைந்தபட்சம் வருவாய்க் கோட்டாட்சியர் முகாமிட்டு, காயம்பட்டவர்களைக் கணக்கெடுத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்த ஆண்டு காயம்பட்டவர்களின் எண்ணிக்கையும், வீரமரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் இதுபோன்றே நீதிமன்றம் தடை கொடுக்கலாம், உச்ச நீதிமன்றம் தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடையை விலக்கலாம். காயம்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்களைப் போல ஏறி இறங்கலாம்.

ஆனால், ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றிய தெளிவான விவாதம் நடைபெறப் போவதில்லை. தெளிவாகக் கூற வேண்டுமானால், தமிழகத்தில் அது நிறுத்தப்படப் போவதுமில்லை.

வில்லை வளைத்து, கல்லைத் தூக்கி, மாட்டை அடக்கி பெண் பார்த்துக் கட்டிய காலம் மலையேறிவிட்டது.

இப்போதைய வீரம் சரியாகவோ, தவறாகவோ வேறாகிவிட்டது. மனித வாழ்க்கையின் இன்பம், துன்பம், வீரம், வெட்கம், சோகம், வாழ்வியல் எல்லாமும் வேறாகிவிட்டது. கீழே விழுந்த நாணயத்தை சிரமப்பட்டு குனிந்து எடுப்பதா? என்ற கேள்வி எழும் காலம் இது.

எதற்காகவெல்லாம் "ரிஸ்க்" எடுக்க வேண்டும் என்பதுதான் வெற்றியாளர்களின் ரகசியமாகக்கூட கற்பிக்கப்பட்டு வருகிறது.

வீர விளையாட்டு இன்னமும் இப்படியே இருக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

வீரம் என்பதென்ன?

ஓடி வரும் மாட்டை வளைத்துப் பிடிக்க பலரும் முயற்சித்து, குத்துப்பட்டு, ஒரு வழியாக அந்த மாடு சோர்ந்த பிறகு வேறொருவர் பரிசைத் தட்டிச் செல்வதா?

உண்மையில் வீரம் என்றால், ஒரு மாட்டை யாருமில்லாத களத்தில் அவிழ்த்துவிட்டு ஒருவர் அடக்க வேண்டும்.

விவசாயமே பிரதானமாக இருந்த காலத்தில், அதற்கு மிகவும் அவசியமான காளைகளைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்களே, அந்தத் தொழிலைச் சரியாக -  சிறப்பாகச் செய்து குடும்பத்தை நடத்த முடியும் என்பதால் இந்த விளையாட்டைத் தொடங்கியிருக்கலாம்.

அப்போதைய உணவுப் பழக்கங்கள் மனிதனை இப்போதுள்ள மனிதனைக் காட்டிலும் பல மடங்கு பலம் பொருந்தியவனாகவும் வைத்திருந்திருக்கிறது.

கல்வி நிறுவனங்களுக்கு பாடப் புத்தகங்களைச் சுமந்து செல்லாமல், ஒரே ஒரு கிலோ எடையுள்ள மடிக் கணினிகளை கையில் எடுத்துச் சென்று படிக்க வேண்டிய காலத்தில் வீரம் என்பது என்ன? என்பதற்கான விவாதத்தை பகிரங்கமாகவும், விரிவாகவும் நடத்த வேண்டிய அவசியத்தில் தமிழ்ச் சமூகம் இருக்கிறது.

அன்றாடம் நம்மை வந்து சேரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ்ச் சமூக வாழ்வியலைச் சீரழித்துவிடாமல் பாதுகாக்கும் வகையிலாவது மாற்றங்களைச் செய்து ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம்.

அந்தப் பணியில் வெற்றிடத்தை ஏற்படுத்திக் கொண்டு, உள் நுழையும் புதுமைகளைத் தெரிந்தோ, தெரியாமலோ அனுமதித்துக் கொண்டு, அவசியமில்லாத பழமைகளையும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டும் இருந்தால்?... ஆழமாக யோசிக்க வேண்டும்.

கடைசியாகப் பொருளியல் தத்துவத்தின்படி தேவையின் அடிப்படையில்தான் எல்லாவற்றையும் இறுதி விவாதத்துக்கு உள்படுத்துவது அவசியமாகிறது.

ஜல்லிக்கட்டின் இப்போதைய தேவை என்ன? அவசியம் என்ன? அப்படிப்பட்ட வீரம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் தருகிறது?

மாடுகளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை; அவை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்வரும் இளைஞர்களைக் குத்தப் பாய்ந்துதான் வருகிறது என்ற கூற்றை ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா? வீரத்தைக் காட்டி வெல்வதற்கு வேறு எந்த வழியும் இல்லையா?

இந்தக் கேள்விகளை மக்கள் மத்தியில் உலவவிட்டு, அவர்களது சிந்தனையைக் கிளற வேண்டும்- முடிந்தவரை. கருத்தே கூறாமல் இருக்கும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் வெளிப்படையாகக் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். வாக்கு வங்கியை மட்டுமே குறியாகக் கொள்ளக்கூடாது.

சா. ஜெயப்பிரகாஷ்

நன்றி: தினமணி தலையங்கம் - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080118124809&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist =

Kannan Natarajan

unread,
Feb 1, 2008, 8:41:58 PM2/1/08
to minT...@googlegroups.com

நியூயார்க் டைம்ஸில் ஜல்லிக்கட்டு!

"ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை...பின்னர் நிபந்தனைகளுடன் அந்த விளையாட்டை நடத்த அனுமதி" என்று தைப் பொங்கலையொட்டி வாடிவாசலில் இருந்து புயலெனக் களமிறங்கிய அந்தப் பிரச்சினை தமிழ்நாட்டின் பல பகுதிகளையும் உலுக்கி, வாதப்பிரதிவாதங்களை உண்டாக்கியது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இல்லாமல் போய்விடுமோ என்ற பயங்கலந்த கலக்கத்தை அதன் ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

சென்ற ஆண்டு இதே ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப் புகழ்பெற்ற "நியூயார்க் டைம்ஸ்"(http://www.nytimes.com/) நாளிதழில் நமது ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை ஒன்று பிரசுரமானது. அந்தக் கட்டுரை இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. கூடவே ஜல்லிக்கட்டு நடக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ படங்களும் அதனுடன் இணைக்கப்பட்டன.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அந்த வீர விளையாட்டைப் பார்த்து ரசிக்க முடிந்தது. அந்த ஜல்லிக்கட்டு நிகழ்வை வீடியோ படம் பிடித்தவர் எம்.வெங்கடேசன். கோவையைச் சேர்ந்த இளைஞர். டைரக்ஷன் துறையில் படித்தவர். நிறைய குறும்படங்களும் ஆவணப்படங்களும் இயக்கியிருப்பவர். எடிட்டிங்கும் அவருக்குக் கை வந்த கலை.

எம்.வெங்கடேசனைச் சந்தித்துப் பேசினோம்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்வைப் படம்பிடித்து அனுப்பியது எப்படி?

அமெரிக்காவில் உள்ள புரூக்லீன் காலேஜிலிருந்து இங்கு டான் குரூஸ்கின் என்கிற ரஷ்யன்-அமெரிக்கன் வந்திருந்தார். அவர் இப்போது அமெரிக்க பிரஜை. அவர் இங்குள்ள சிவானந்த ஆஸ்ரமம் பற்றி டாக்குமென்டரி பிலிம் எடுத்தார். அவருக்கு உதவியாக நான் அப்போது வேலை செய்தேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் அவர் ஜல்லிக்கட்டு பற்றி கட்டுரையை நியூயார்க் டைம்ஸுக்காக எழுத, நான் அதற்கான வீடியோ படங்களை எடுத்துக் கொடுத்தேன். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டைப் படம் பிடித்தேன்.

இதை வெளிநாட்டில் பார்த்துவிட்டு நிறைய பாராட்டுகள் குவிந்தன. இங்கிலாந்து, பிரான்ஸ், கியூபா, பிரேசில், ஸ்வீடன் போன்ற 12 - 13 நாடுகளில் இருந்து இதற்காக நிறையத் தொலைபேசி அழைப்புகள் வந்தன. இ-மெயில் மூலமாகவும் நிறையக் கடிதங்கள் வந்தன. வீடியோ சாட்டிங் மூலமாகவும் பாராட்டுகள் குவிந்தன.

ஜல்லிக்கட்டை நான் அதில் கவர்ச்சியான விளையாட்டுப் போலக் காட்டவில்லை. என்ன நடக்கிறதோ அதை அப்படியே படம் எடுத்து அனுப்பினேன்.

 
என்னைப் பொறுத்த அளவில் ஜல்லிக்கட்டு என்பது ரத்தத்தால் மண் நனைந்த விளையாட்டு மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பாரம்பரியமாக இருந்து வரும் நமது தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமான விளையாட்டுமாகும்.
 
மேலும் விவரங்களுக்கு - நன்றி - தினமணி (http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNK20080122232026&Title=Kadhir&lTitle=%A7%5DU%A6+L%A7o&Topic=0&dName=No+Title&Dist=)
 

வேந்தன் அரசு

unread,
Feb 1, 2008, 11:36:48 PM2/1/08
to minT...@googlegroups.com
டைம்ஸ் இருக்கு அதில் ஜல்லிகட்டை காணலையே?

2008/2/1 Kannan Natarajan <thar...@gmail.com>:

நியூயார்க் டைம்ஸில் ஜல்லிக்கட்டு!

--

Kannan Natarajan

unread,
Feb 2, 2008, 2:27:35 AM2/2/08
to minT...@googlegroups.com
ஆவணங்கள் பகுதியில் சென்ற ஆண்டு ஜனவரியில் பார்க்கவும். அமெரிக்க வாசிகள் அடையாளம் காட்டினால் மேலும் நலம் சேர்க்கும்.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

2008/2/2 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages