My homage to the legend
Su.Ravi
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
My homage to the legend
Su.Ravi
On Apr 9, 2015 1:06 AM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
Take life as it comes.All in the game na !!Pavala SankariErode.Tamil Nadu.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
ஆழ்ந்த கருத்துகள்.சிந்திக்க வைக்கும் எழுத்துகள்.அன்னாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.அன்புடன்பவளா
தமிழுக்குத் தப்பிக்கிடைத்த எழுத்தாளர். "நீ ஸொஸ்தமாயிட்டே கொழந்தே "என்று ஒரு வாளி கிணற்றுநீர் வசனம் தெளித்து பெண்ணினத்தின் களங்கம் போக்கிக்
கழுவாய் தேடிய சமூக சீர்திருத்தவாதி.கடைசித்தமிழச்சியும்
கைதொழுவாள் உம் திசை நோக்கி. போய் வாரும் ஜெயகாந்தரே! விழிநீர்மாலைகள் உம் பயணத்திற்கு இடையூறாகிவிடும்.
சென்னை: இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் அருமை நண்பர் ஜெயகாந்தன் என்று திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.
.jpg)
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துக்கள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இலக்கிய உலகத்தில் "ஜே.கே." என்று அன்பொழுக அழைக்கப்பட்ட - எழுத்துலகச் சிற்பி, அருமை நண்பர் ஜெயகாந்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிச்சியுற்றேன். "துயரம் தனித்து வருவதில்லை" என்பது எவ்வளவு உண்மை! நேற்றிரவு இசைமுரசு நாகூர் அனீபா மறைந்த செய்தியைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் மறைவுச் செய்தி இன்று அதிகாலையில் கிடைத்தது.
தொடக்கத்தில் திராவிட இயக்கத்தின்மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு காலப் போக்கில் மாறியது; அவருடைய அணுகுமுறையும் மாறிற்று. என்மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் "இசபெல்லா" மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியினை அறிந்து, என் மனைவி ராஜாத்தியும், என் மகள் கனி மொழியும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டுவந்து என்னிடம் கூறியதும், அப்போது முதலமைச்சராக இருந்த நான் உடனடியாக அவரை "அப்பல்லோ" மருத்துவமனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன்.
உடல் நலம் அப்போது தேர்ச்சியடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிய போது கூட, தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மா.ராஜேந்திரனிடம் "நான் வீட்டிற்குச் செல்லும்முன் கலைஞரைப் பார்த்து நன்றி கூறி விட்டுத் தான் செல்வேன்" என்று பிடிவாதமாகக் கூறி, நேரில் என்னை வந்து சந்தித்து, "என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்" என்ற ஜெயகாந்தனின் சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.
மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்றவர் - பத்ம பூஷண் விருதைப் பெற்றவர் - சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்றவர் - "முரசொலி" அறக்கட்டளை சார்பில் இலக்கியத்திற்கான விருதைப் பெற்றவர். பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கிப் பழகியவர். என்னிடம் மாறாத அன்பு கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து கலந்து கொண்டவர்.
இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் அருமை நண்பர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துக்கள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
source:http://www.vikatan.com/news/article.php?module=news&aid=44935
நான் மிகவும் ஆசை ஆசையாக வாசித்த அமரர் ஸ்ரீ ஜெயகாந்தன் அவர்களின் புதினம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர (பெயர் சரி தானே......மங்கலான நினைவு)
அன்பர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் பேசிய ஒரு கூட்டத்தில்........... அவருக்கு அடுத்துப் பேசிய அமரர் ஸ்ரீ ஜெயகாந்தன் அவர்கள்........... மிகக் காட்டமாக தன் எதிர்க்கருத்துக்களை கோர்வையாக முன்வைத்தமையும் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் தான் எங்கேயோ வாசித்ததாக நினைவுக்கு வருகிறது. கிடைத்தால் பகிருகிறேன்.
நான் மிகவும் ஆசை ஆசையாக வாசித்த அமரர் ஸ்ரீ ஜெயகாந்தன் அவர்களின் புதினம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர (பெயர் சரி தானே......மங்கலான நினைவு)

Yes.. Its very very sad for everyone.. I like avargal ulay irukirargal..
By
Manimuthu
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

அமெரிக்கன் கல்லூரி, மதுரை. இளம்கலை அறிவியல் மாணவனாக ஜெயகாந்தனை முதலில் காண்கிறேன். கல்லூரி முழுவதும் சுவரொட்டி, “சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் வருகை” என்று. ஜெயகாந்தன் மேடை ஏறுகிறார், “எவன் என்னை சிறுகதை மன்னன் என்று எழுதியது?” முதலடியே, நெத்தியடி. யாருக்கும் ஈயாடவில்லை. மாணவர்கள் முழிக்கிறோம். ஆசிரியர்களோ நடுங்குகிறார்கள். விருந்து புறத்துவிடுமோ? என அஞ்சி. ஆனால் ஜெயகாந்தன் அடுத்து சொல்கிறார்கள், “அதில் பிழை திருத்தம் தேவை! ”நான் சிறுகதை மன்னன் இல்லை சிறுகதை சக்ரவர்த்தி!” என்று. அது!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அடடே இதல்லவோ சுயமரியாதை.
அமெரிக்கன் கல்லூரி, மதுரை. இளம்கலை அறிவியல் மாணவனாக ஜெயகாந்தனை முதலில் காண்கிறேன். கல்லூரி முழுவதும் சுவரொட்டி, “சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் வருகை” என்று. ஜெயகாந்தன் மேடை ஏறுகிறார், “எவன் என்னை சிறுகதை மன்னன் என்று எழுதியது?” முதலடியே, நெத்தியடி. யாருக்கும் ஈயாடவில்லை. மாணவர்கள் முழிக்கிறோம். ஆசிரியர்களோ நடுங்குகிறார்கள். விருந்து புறத்துவிடுமோ? என அஞ்சி. ஆனால் ஜெயகாந்தன் அடுத்து சொல்கிறார்கள், “அதில் பிழை திருத்தம் தேவை! ”நான் சிறுகதை மன்னன் இல்லை சிறுகதை சக்ரவர்த்தி!” என்று. அது!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நான் மிகவும் ஆசை ஆசையாக வாசித்த அமரர் ஸ்ரீ ஜெயகாந்தன் அவர்களின் புதினம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர (பெயர் சரி தானே......மங்கலான நினைவு)
”• இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள், அதாவது தமிழில்?
படிக்கிற மாதிரி எதுவும் இல்லை... அதாவது தமிழில்.”
கடைசியாக, ஒரு வேண்டுகோள் வைக்கிறார் ஜெயகாந்தன்:
”ஒரே வேண்டுகோள்: தமிழையும் படியுங்கள், தமிழுக்கு நல்லது! “
நா. கணேசன்
நான் அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று சொன்ன போது “ என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்” என்று கேட்டு எனக்குள் நம்பிக்கை விதையை விதைத்தவர் ஜெயகாந்தன்.
தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர். தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜேகே. தமிழ் எழுத்துலகின் புத்தெழுச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தார். புதிய படைப்பாளிகளின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார். தற்கால தமிழ் இலக்கியத்திற்கும், தமிழர்களுக்கும் அவர் செய்த தொண்டு மறக்க முடியாதது. தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன். அவர் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிலைத்து நிற்பார்.
ஜெயகாந்தன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இன்று மாலை திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இளையராஜா.
ஜெயகாந்தன் என்பது ஒற்றைச்சொல்லில் ஒரு சரித்திரம், அது இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல; அவர் எழுத்துக்களே ஞானபீடம்தான்.
சூரிய வெளிச்சம்கூட எட்டிப் பார்த்திராத வாழ்க்கையை தன் கலைக்கண்களால் பார்த்துப் பதிவு செய்தவர்; விளிம்புநிலை மனிதர்களை உலக இலக்கியக் கதாபாத்திரங்களாய் உலவச் செய்தவர் ஜெயகாந்தன்.
சமரசம் செய்து கொள்ளாததே அவரது வாழ்வின் கிரீடம் என்று நான் கருதுகிறேன். அதனால் அவர் வாழநினைத்த சத்தியத்தின் வெளியிலேயே அவரது வாழ்வு கழிந்தது.
எழுத்தாளனுக்கென்று வார்க்கப்பட்ட ஒரு தொங்கிப்போன உருவத்தை அவர் துடைத்தழித்தார்; கம்பீரமே அவரது உருவமாயிற்று.
பாரதி எழுத வந்த பிறகு கவிதைக்கு மீசை முளைத்தது போல ஜெயகாந்தன் எழுத வந்த பிறகு உரைநடைக்கு மீசை முளைத்தது.
அரசியலால் இலக்கியத்தையும், இலக்கியத்தால் அரசியலையும் செழுமைப்படுத்த முயன்றவர். 60களிலேயே தமிழுக்கு ஒரு மாற்றுத்திரைப்படத்தை முன்வைத்தவர்.
இலக்கியத்தின் எல்லா வடிவங்களுக்கும் பங்களிப்புச் செய்திருக்கிறார். பல எழுத்தாளர்களின் முதல் எழுத்துக்கு உந்துசக்தி தந்திருக்கிறார். புதுமைப்பித்தன் விட்டுப்போன இடத்தை ஜெயகாந்தன் இட்டு நிரப்பினார். அழியாத பல சிறுகதைகளையும் சில நாவல்களையும் படைத்திருக்கிறார்.
அழியும் உடல் கொண்டுதான் மனிதன் அழியாத காரியங்களை ஆற்றிப் போகிறான். அவரது பௌதிக உடல் மறையும்; படைப்புகள் மறைவதில்லை.
ஜெயகாந்தன் புகழை உயர்த்திப் பிடிக்கும் கூட்டத்தின் முன்வரிசையில் நானுமிருப்பேன்.
ஜெயகாந்தன் படைப்பே நீ வாழ்க.
- வைரமுத்து, கவிஞர்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஜெயகாந்தன் மறைவையொட்டி சன் நியூஸ் விவாதமேடை:சாருநிவேதிதா, மனுஷ்யபுத்ரன், சுப. வீ., அருணன்.
நா. கணேசன்

‘பதின்வயதுகளில் அவரது எழுத்துகளைப் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அவர் என்னோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். இனியும் உரையாடுவார். மரணத்தின் மூலம் நிச்சயமாக எங்கள் உரையாடல் தடைபடாது’.
ஜெயகாந்தனின் மரணச்செய்தி கிடைத்த நிமிடத்தில் என் மனதில் தோன்றியது இதுதான். செய்தி கிடைத்த அரைமணிநேரத்தில் நானும், நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜேகே இல்லத்தில் இருந்தோம். உள்ளே சென்று கண்ணாடிப் பெட்டிக்குள் கண் மூடி படுத்திருந்தவரை சில நிமிடங்கள் பார்த்து விட்டு வெளியே வந்து நின்று கொண்டோம். மனநல மருத்துவர் ருத்ரன், கவிஞர் இளையபாரதி உட்பட ஒரு சிலரே அங்கிருந்தனர். ஜெயகாந்தனை ‘அப்பா’ என்றழைக்கும் நண்பர் அன்பு அவர்களில் ஒருவர். ஒன்றிரண்டு ஊடகத் தோழர்கள் வந்தனர். ராமகிருஷ்ணனிடம் பேசச் சொல்லி மைக்கை எடுக்க முனைந்த போது ‘வேண்டாம்’ என்று மறுத்தார், ராமகிருஷ்ணன்.
‘ஏன் ராமகிருஷ்ணன்? பேச வேண்டியதுதானே! ஜே.கேயப் பத்திப் பேசறதுக்கு எவ்வளவோ இருக்கே?’
‘இல்லீங்க. எங்கெ வச்சு பேசறதுன்னு இருக்குல்ல! இந்த இடத்துல அவர் பேசித்தானே நாம கேட்டிருக்கோம்! இன்னிக்கு அவர் போயிட்டாருன்ன உடனே நாம பேசலாமா? வேண்டாம்’ என்றார்.
சில நிமிடங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். நாகூர் ஹனீஃபாவின் உடலுக்கு மரியாதை செய்து விட்டு வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஜே.கேயின் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தவரை நோக்கி, தயாராக நின்ற மைக்குகள் நீட்டப்பட்டன. மங்கிய குரலில் சம்பிரதாயமான சில வார்த்தைகள் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.
‘நெக்ஸ்ட் யார் வருவாங்கன்னு தெரியலியே! அதுக்குள்ள இந்த பைட்ஸை அனுப்பிடலாம்’.
‘காலைல ஹெவி ஒர்க் இருக்கு. நெறய கவர் பண்ணனும்.’
‘என்னாலல்லாம் ஃபுல் நைட் ஸ்பென்ட் பண்ண முடியாதுடா. சொன்னேன்ல, நாளைக்கு என்ன ப்ரோக்ராம்னு!’
‘மச்சான்! ஒரு டீ அடிச்சுட்டு வந்திரலாமா?’
ஒரு ஆட்டோவில் வந்திறங்கிய ஒரு மூதாட்டியை கையைப் பிடித்து அழைத்து வந்தனர். ஆட்டோவிலிருந்து இறங்கியதிலிருந்தே ‘காந்தா காந்தா! இனிமெ ஒன்ன நான் எங்கெ பாப்பேன்’ என்று கதறி அழுதபடியே வீட்டுக்குள்ளே சென்ற அந்த அம்மாள், ஜெயகாந்தனின் சகோதரியாக இருக்கலாம். உள்ளே சென்ற அந்தப் பெண்மணியின் அழுகைக் குரல், வெளியே இருந்த அனைவரையும் கலங்கடித்தது.
நள்ளிரவில் ஜே.கே வீட்டு வாசலில் நின்றபடியே பேசிக்கொண்டிருந்த என்னையும், ராமகிருஷ்ணனையும் பார்த்து ஜே.கேயின் இளையமகள் தீபா, ‘எவ்ளோ நேரம் ஸார் நின்னுக்கிட்டு இருப்பீங்க? இந்தாங்க, முதல்ல டீ சாப்பிடுங்க’ என்று நாற்காலிகளை எடுத்துப் போட்டார். நான் ‘தவறுகள் குற்றங்கள் அல்ல’ பற்றியும், ராமகிருஷ்ணன் ‘எங்கோ, எப்போதோ, யாருக்காகவோ’ பற்றியும் பேசிப் பேசி நள்ளிரவைக் கழித்தோம். இளையபாரதி, அவருக்கும், ஜெயகாந்தனுக்குமான உறவைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தனது அபிமானி ஒருவருக்கு தன் தலைமையில் திருமணம் செய்து வைத்து, மணமக்களை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார வைத்து ஜெயகாந்தனே அந்த சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டி வந்தது உட்பட இன்னும் பல சம்பவங்களை நினைவு கூர்ந்தார், இளையபாரதி.
‘வீட்டுக்குப் போயிட்டு சட்டையை மாத்திட்டு வந்திரலாம்’.
கிளம்பும் முன் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ஜே.கே உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் சொல்லாமல் சென்று வந்து விடலாம் என்றுதான் தோன்றியது.
காலையில் சென்றபோது எதிர்பார்த்த மாதிரியே ஜெயகாந்தன் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைய முடியவில்லை. வாசலை மறைத்தபடி மைக்குகள், கேமராக்கள். அரசியல் கட்சித்தலைவர்கள் அணிவகுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், ரங்கராஜன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்(அதுதானே?) தலைவர் ஜி.கே.வாசன், பீட்டர் அல்ஃபோன்ஸ், திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பலர் வந்தனர். ஜெயகாந்தனை வாழ்நாளெல்லாம் திட்டித் தீர்த்தவர்கள் உட்பட, அதுவரை பார்த்தறியாத பல முகங்களைப் பார்க்க முடிந்தது. முதுபெரும் எழுத்தாளர் கோவி மணிசேகரன் வந்து கதறி அழுதார். கவிஞர் நா. காமராசன் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டார். கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, பழநிபாரதி வந்தனர். நேருக்கு நேராக முதன்முறையாக கவிஞர் போகனைப் பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நானாகப் பேசியிருக்கலாம். ஆனால் அந்த இடம் முதல் சந்திப்புக்கான இடமாகத் தோன்றவில்லை. தவிர, பார்த்த மாத்திரத்தில் ஜெயகாந்தனை மறந்து விட்டு ஜெயமோகனைத் திட்டுகிற அவரது அன்றாடப் பணியைச் செய்து விட்டால் எப்படி சமாளிப்பது என்கிற யோசனையும் அவரிடம் பேசவிடாமல் தடுத்தது. திரைப்பட இயக்குனர்கள் லிங்குசாமியும், சீனு ராமசாமியும் வந்தனர். சீனு கூட்டத்துக்குள் என்னைப் பார்த்து, ‘அண்ணே! நீங்களும் கூட வாங்க’ என்று இழுத்துச் சென்றான். கோவையிலிருந்து சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா வந்திருந்தார். ‘பெசன்ட் நகர்ல தகன ஏற்பாடுகள கவிஞர் செஞ்சுக்கிட்டிருக்காரு’ என்றார். சொல்கிறவர் மரபின் மைந்தன் என்பதால் அவர் சொன்ன ‘கவிஞர்’ ‘கவிப்பேரரசு வைரமுத்து’ என்று புரிந்து கொண்டேன். ஜெயகாந்தனின் பதிப்பகத்தார் விஜயா பதிப்பகம் வேலாயுதம், கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் மற்றும் காந்தி கண்ணதாசன் போன்றோர் வந்திருந்தனர். தி ஹிந்துவில் ஜெயகாந்தனுடனான தனது அனுபவங்கள் குறித்து கட்டுரைத் தொடர் எழுதி வருகிற பி.ச.குப்புசாமி ஐயா அதிகாலையிலேயே திருப்பத்தூரிலிருந்து வந்திருந்தார். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் முகத்தில் கலக்கமில்லை. ஜே.கேயை நல்ல படியாக அனுப்பி வைக்க வேண்டுமே என்கிற கவலையும், பொறுப்பையும் மட்டுமே அவரிடம் பார்க்க முடிந்தது. குப்புசாமி ஐயாவிடம் மட்டுமல்ல. ஜே.கேயின் நெருக்கமான நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த கே.எஸ், மணி, கணையாழி இதழின் ஆசிரியர் மா.ராஜேந்திரன் போன்றோரிடமும் இந்த உணர்ச்சிதான் தென்பட்டது. ஜே.கேயின் தீவிர அபிமானியான கலை இயக்குனர் ஜே.கே தன் குடும்பத்துடன் வந்திருந்தார்.
திடீரென்று சஃபாரி உடையணிந்த ஒரு சிலர் வந்து கையில் இஞ்ச் டேப்புடன் ஜே.கேயின் வீட்டுக்குள் செல்லும் நடைபாதையின் நீளம், அகலத்தை அளந்தனர். சிறிது நேரத்தில், மரத்தினாலான தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. தனது மகள் கவிஞர் கனிமொழியுடன், கலைஞர் கருணாநிதி வந்தார். ஜெயகாந்தனின் உடலருகே கலங்கிய முகத்துடன் சிறிது நேரம் இருந்து விட்டுக் கிளம்பிச் சென்றார்.
‘இந்த மனிதரை நமக்குப் பிடிக்கலாம். பிடிக்காம போகலாம். ஆனா, ஆயிரந்தான் சொல்லுங்க. இந்த மாதிரியான அடிப்படையான மரியாதைகள்ல இந்தாள அடிச்சுக்க முடியாதுங்க’.
பின்னால் அமர்ந்திருந்த யாரோ சொல்வது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அந்தக் குரலுக்கான முகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நொடிகளில் அந்தக் குரல் என்னுடையது போலத் தோன்றியது.
திரைப்பட நடிகர்களில் நான் பார்த்தவரைக்கும் நாசர், பிறகு சிவகுமார், அப்புறம் கமலஹாசன் போன்றோர் வந்தனர். சிவகுமார் அஞ்சலி செலுத்த வந்த போது, ‘நெறய ஃபுட்டேஜ் குடுப்பாருப்பா. நல்ல மனுஷன்’ ஊடகத் தோழர்கள் மத்தியில் அத்தனை திருப்தி.
ஜெயகாந்தனின் வீடு அமைந்திருக்கும் தெரு ஓரங்களில், சுவர்களில் பல சிறுவர்கள், இளைஞர்கள்.
‘ரஜினி வருவாராடா?’
‘ஏன்டா? கமல் வந்தா, ஒடன்னே ரஜினியும் ஒனக்கு?’
‘விஜய் வருவாருன்னு சுந்தர் சொன்னான் மச்சான்’.
‘விஜய் சேதுபதி வந்தா ஃபோட்டோ எடுக்கலான்டா’.
‘டேய்! இவனப் பார்றா. அமலா பால் கூட ஃபோட்டோ எடுக்கணுமாம்’.
தொடர்ந்த வேடிக்கைப் பேச்சுகள், சிரிப்பு.
ஊடகத்தில் இருக்கும் இளைஞர்கள் சிலரே இந்த அளவில்தான் இருக்கிறார்கள். ‘இவர் யார் ஸார்? இவர் யார் ஸார்?’ என்று வரிசையாக ஒவ்வொருவரையாகக் காட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் ஊடக இளைஞரிடம், ‘பிரதர்! உங்களுக்கு ஜெயகாந்தன் யாருன்னு தெரியுமா?’ என்று கேட்டேன். ‘ஸார். ஃபிராங்கா சொல்றேன்.ரைட்டர்னு தெரியும். அதுக்கு மேல எதுவும் தெரியாது’ என்றார்.
திரைப்பட நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு, வழக்கறிஞர் சுமதி, எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, இரண்டு தலைமுறையாக ஜெயகாந்தனுடன் உறவாடி வரும் படத்தொகுப்பாளர் பி.லெனின், எழுத்தாளர் திருமதி சிவகாமி, கவிஞர் இளம்பிறை போன்றோரும் வந்து ஜே.கேயின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
நண்பர் ஜெயமோகனால் வர இயலவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். முதல் நாள் இரவு எனக்கு செய்தி கிடைத்த உடனேயே அவருக்கு தகவல் சொல்லியிருந்தேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் யாராவது வந்து மரியாதை செய்தார்களா என்று தெரியவில்லை. பரவலாக அறியப்படாத எத்தனையோ எழுத்தாளர்களைத் தேடிப் பிடித்து கௌரவித்து விருதளிப்பதைக் கடமையாகச் செய்கிற அவர்கள், ‘ஆசான்களின் ஆசான்’ ஜெயகாந்தனுக்கு மரியாதை செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
வெற்றிமாறன் ஃபோன் பண்ணினான்.
‘அண்ணே! இப்பதாண்ணே எனக்குத் தெரியும். அங்கெதான் இருக்கீங்களா? கிளம்பி வரட்டுமா?’ என்றான்.
‘3 மணிக்கு எடுப்பாங்க. அதுக்குள்ள வா’ என்றேன்.
ஆங்கில இலக்கியம் படித்த வெற்றிமாறனுக்கு ஜெயகாந்தன் மேல் பெரிய மரியாதை வரக் காரணமாக இருந்தவர், அவனது தாயார். கூடவே ஜே.கேயின் தீவிர வாசகரும், நண்பருமான வாத்தியார் பாலுமகேந்திரா. தான் காலமாவதற்கு சில தினங்களுக்கு முன், ‘ஜே.கேயைப் பாக்கணும் போல இருக்கு. என்னைக் கூட்டிட்டுப் போயேன்’ என்று கேட்டிருந்தார். அவர் கேட்டு என்னால் செய்ய முடியாமல் போனதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தேன். இப்போது ஜே.கேயே வாத்தியாரைப் பார்க்கக் கிளம்பிச் சென்று விட்டார்.
தனது இறுதி யாத்திரைக்கு ஜே.கே கிளம்பியபோது, வாசலுக்கு அவர் மனைவியும், கௌசல்யா மாமியும் அழைத்து வரப்பட்டனர். மாமியின் முகத்தில் உணர்ச்சியில்லை. ‘பத்திரமா போயிட்டு வாங்க, ஜே.கே’ என்று சொல்வது போல அமைந்திருந்தது அவரது முகம்.
பெசன்ட் நகர் மின்மயானக்கட்டிடத்தின் வாசலிலேயே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செந்தில்நாதன் உட்பட அதன் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். ஜே.கேயின் நெருங்கிய நண்பரான தேவபாரதியை இரண்டு பேராகச் சேர்ந்து பிடித்தபடி அழைத்து வந்தார்கள். மின்மயானத்துக்கு ஜே.கேயின் மகள்கள் இருவரும் வந்தனர். கவிஞர் வைரமுத்து அங்கே ஏற்கனவே வந்துக் காத்திருந்தார். ஜே.கே யின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு ஓரமாகக் கைகட்டி நின்று கொண்டார். வழக்கறிஞர் அருள்மொழி, பவா செல்லத்துரை, ஷைலஜா, பாரதி கிருஷ்ணகுமார் போன்றோரும் வந்து சேர்ந்தனர். ரஷ்யன் கான்ஸலேட்டிலிருந்து சூட் அணிந்த ஒருவரும், ஒரு பெண்மணியும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். மின் தகனத்துக்கு ஜே.கே தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் உரத்த குரலில்
‘வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே’
என்று சிவபுராணம் பாடிக் கொண்டிருந்தார்.
எல்லா சடங்குகளையும் படம்பிடித்துக் கொண்டிருந்த கேமராக்கள் மின் தகனத்துக்குச் செல்ல இருக்கும் கடைசி நிமிடத்தையும் சுற்றி நின்று பதிவு செய்து கொண்டிருந்தன. மின் மேடைக்கருகே ஒரு சிலர் கடைசியாக ஜே.கேயின் முகத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் ஏறினர்.
‘நாமளும் போகலாமா?’ என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டேன்.
‘வேண்டாம். நமக்குத் தாங்காது’ என்றார் ராமகிருஷ்ணன்.
‘சரிதான். வாத்தியார் விஷயத்துல இதுதான் ஆச்சு’.
அங்கேயே நின்று கொண்டோம். பி.ச. குப்புசாமி ஐயாவை லண்டனிலிருந்து ஜே.கேயின் அபிமானியும், ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் எழுதிய கதைகளை அழகாகத் தொகுத்து சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டவருமான டாக்டர் ராம் கைபேசியில் அழைத்தார். ‘வணக்கம். . . ஆமா . . . ஜே.கே கிளம்பிட்டார். . . இப்பதான் புறப்பட்டு போனார்’ என்றார், குப்புசாமி ஐயா. அத்தனை நேரம் ஜே.கேயின் மரணத்தை எளிதாக எடுத்துக் கொண்டு உறுதியாக இருந்த என்னை பி.ச.குப்புசாமி ஐயாவின் இந்த வார்த்தைகள் அசைத்து விட்டன. உள்ளே பெரும் கூக்குரல்கள் கிளம்பின. ஒரு வயதான இஸ்லாமியர் கண்களைத் துடைத்துக் கொண்டு கதறி அழுதபடியே வெளியே வந்தார். எனக்கு கண்கள் கலங்கத் துவங்கின. ‘ராமகிருஷ்ணன். இனி நம்மால தாக்குப் பிடிக்க முடியாது. வாங்க வெளியே போயிருவோம்’ என்று சொல்லியபடி, சட்டென்று வெளியே வந்து விட்டேன்.
பவா செல்லத்துரையின் தலைமையில் அங்கேயே ஓர் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே பேசுவதற்கு மறுத்து வந்த ராமகிருஷ்ணன் அப்போதும் பேச மறுத்தார். பாரதி கிருஷ்ணகுமாரும் மறுத்தார். ‘கெளம்பலாம்’ என்றார், ராமகிருஷ்ணன். நாங்கள் கிளம்ப இருக்கையில், பெயரறியா ஒரு தோழர் வந்து, ‘அரசாங்கம் என்ன செய்யுது தோழர்? ஞானபீடம், பத்மபூஷன் வாங்கினவரு. மத்த மொழிக்காரங்கக்கிட்ட நமக்கான மரியாதைய ஏற்படுத்திக் குடுத்தவரு. பாருங்க. இங்கே நாம எத்தனை பேரு இருக்கோம்! நெஞ்சு கொதிக்குது தோழர்’ என்றார்.
யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அவராகப் பேசிக் கொண்டிருந்தார்.
தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊர்க்காரனான தம்பி மாரி செல்வராஜ் அருகில் வந்தான். ‘என்ன ஸார்! கூட்டமே இல்ல?’ என்றான். தோழரின் ஆதங்கத்தை ஒத்திருந்தது மாரியின் குரல்.
மாரி செல்வராஜ் கேட்டது வாஸ்தவம்தான். அஞ்சலிக் கூட்டத்தில் இருப்பவர்களையும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களையும் சேர்த்து மொத்தமாக அந்த இடத்தில் நூறு பேர் இருந்திருப்பார்கள்.
‘இதென்ன கேரளாவாடே! தமிள்நாடுல்லா!’ என்றேன்.

ஜெயகாந்தன்!
தமிழ் இலக்கிய உலகில் பளீரென்று தோன்றிய விடிவெள்ளி! இவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததில்லை. இவ்வாறு சொல்ல நேர்ந்ததில் வெட்கம்தான். ஆனாலும் உண்மை. கவிதா பதிப்பகம் இவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. அதைச் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியது உண்மையானாலும், முழுவதுமாய்ப் படிக்க முடியவில்லை. படைப்பு வேலைகள் குறுக்கிட்டன. எனினும் படித்தவரையில் இவருக்கு ஈடானவர் மிகச் சிலரே என்று தோன்றியது.
நல்ல வேளை! சூடாமணி அவர்களைப் புறக்கணித்தது போல் சாகித்திய அகாதெமி இவரைப் புறக்கணிக்கவில்லை. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கு விருது அளித்தது. அதனை அவருடைய நெருங்கிய நண்பர் திரு கே. எஸ். சுப்பிரமணியன் “Men and moments” என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தினமணி கதிரில் தொடராக வந்தபோது அதைப் படிக்க வாய்க்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னால்தான் திரு கே.எஸ்.எஸ். அனுப்பி வைத்த அருமையான இந்த மொழிபெயர்ப்பைப் படித்து ரசித்தேன். (எனினும் இது திரைப்படமாக வந்த போது பார்த்து ரசித்துள்ளேன்.)
ஜெயகாந்தனின் சில கருத்துகளோடு நமக்கு ஒப்புதல் இல்லாதிருக்கலாம். ஆனால் அவர் உண்மையானவர். அவரது எழுத்தின் விரைவும் அதில் ஒலித்த சத்தியமும் அதனை உணர்த்தும். பிறரின் பாராட்டுகளைப் பெரும் பொருட்டு அவர் தமக்கு உடன்பாடில்லாத எதையும் பொய்யாக எழுதியதில்லை என்பதே அவரது சிறப்பாகும். தமது கருத்துகளில் மாற்றம் விளைந்த போது மற்றவர் அந்த முரணுக்காகத் தம்மைக் கேலி செய்வார்களே என்கிற தயக்கம் இன்றி அதனை வெளிப்படுத்திக்கொண்டவர். திறமை மட்டுமின்றி, வாய்ப்புகளும், சூழலும் பெரிதும் சாதகமாக இருந்த பெரும் பேறால் புகழின் உச்சியில் இருந்தவர்.
ஜெயகாந்தனை முதன் முதலில் 1969 இல் அவரது இல்லத்துக்கு என் தங்கையுடன் சென்று சந்தித்தேன். 1968 இல் ஆனந்த விகடனில் அறிமுகமான என்னைப் பற்றி அதன் தலைமை உதவி ஆசிரியர் அமரர் மணியன் அவரிடம் பேசியிருக்கிறார். ‘அந்தப் பெண்ணை நான் சந்திக்க வேண்டுமே!’ என்று அவர் சொல்லியுள்ளார். இந்தத் தகவல் என் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அமரர் குயிலி ராஜேஸ்வரி மூலம் எனக்குத் தெரியவந்தது. அவர் அப்படிச் சொன்னதன் பிறகு நானே சென்று அவரைப் பார்த்துப் பேசுவதுதான் முறை என்று தோன்றியது. மணியன் அவர்களிடமிருந்து ஜெயகாந்தனின் இல்லத்து முகவரியைப் பெற்றுக்கொண்டு ஒரு நாள் மாலையில் என் தங்கையுடன் சேத்துப்பட்டில் இருந்த அவரது வீட்டுக்குப் போனேன்.
பேச்சு வாக்கில் தாம் சமுதாயத்துக்கு நீதி போதனை எதுவும் தம் கதைகளில் சொல்லுவதில்லை என்று குறிப்பிட்டார். அப்போது பெரிதும் பேசப்பட்ட தமது “அக்கினிப் பிரவேசம்” கதைக்கு விளைந்த முரண்பட்ட கருத்துகள் பற்றிப் பேசினார். அதற்கு எதிர்ப்புகளே அதிகம் வந்ததைக் குறிப்பிட்டார். அப்போதுதான் தாம் தம் எழுத்தின் வாயிலாக நீதி போதனை எதையும் செய்வதில்லை என்று தெரிவித்தார்.
“அதில் நீதி போதனை இல்லை என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? பெண்களுக்கு அதில் மிகப் பெரிய எச்சரிக்கையும் படிப்பினையும் உள்ளனவே!” என்று நான் அவரை இடைமறித்தேன்.
“அதில் நான் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. போதனையும் செய்யவில்லை!” என்று ஜெயகாந்தன் வலுவாக மறுத்தார்.
“நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ‘முன் பின் அறிமுகம் இல்லாத ஆண்பிள்ளை எவனேனும் மழையில் சிக்கிய ஒருத்தியைக் காரில் ஏறுமாறு அழைத்தால் அவள் அதில் ஏறிக்கொள்ளுவது முட்டாள்தனம். எனவே, பெண்கள் அப்படி நம்பிச் செல்லக்கூடாது’ எனும் எச்சரிக்கை அதில் அடங்கியுள்ளது! அதன் விளைவு என்னவாகும் என்கிற படிப்பினையும் அதில் உள்ளது!” என்ற எனது கூற்றை அவர் ஏற்க மறுத்தார்.
நான் சொன்ன கருத்தை விவாதிக்காமல், “அப்படியானல் எந்த ஆண்மகனும் நம்பிக்கைக்கு உரியவன் அல்லன் என்றா சொல்லுகிறீர்கள்? இந்த உங்கள் கருத்து மிகவும் தவறானது!” என்றார்.
“எல்லா ஆண்களும் கெட்ட நோக்கம் கொண்டவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஒன்று எறும்புப் புற்றா, அல்லது பாம்புப் புற்றா என்று புற்றினுள் கையை விட்டுப் பார்ப்பது புத்திசாலித்தனமா? அதைத் தவிர்ப்பதுதானே புத்திசாலித்தனம்? நம்பி ஏமாறுவதை விடவும் நம்பாமல் தற்காத்துக்கொள்ளுவதுதானே ஒரு பெண்ணுக்கு நல்லது? நீங்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அந்தக் கதை பெண்களுக்கான எச்சரிக்கைதான்! படிப்பினைதான்!” என்றேன்.
ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். “ஆண்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் தவறானது!’ என்றே மறுபடியும் கூறினார்.
‘இது ஆண்கள் பற்றிய கண்ணோட்டம் இல்லை!’ என்று பிடிவாதமாக வாதிட நான் விரும்பவில்லை. அவரது வீட்டுக்குச் சென்று அவரை எதிர்த்து வாதாடுவதில் ஒரு சங்கடம் தோன்றியது. எனவே வாயை மூடிக்கொண்டேன்.
அதன் பின் பொதுவாகப் பேசியபின், எனக்குச் சில அறிவுரைகள் கூறினார். என்னை நிறையப் படிக்கச் சொன்னார். நான் விடைபெற்றுப் புறப்பட்டதும் தெரு முனை வரை எங்களோடு நடந்து வந்து விடை கொடுத்தார். பின் வேறு வழியில் சென்று நடந்தார். விடைபெறும் முன், “நிறைய எழுதுங்கள்!” என்றார். அவரது கம்பீரமான அந்தக் குரல் இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.
முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
ஜெயகாந்தனிடம் 10 கேள்விகள் - பொக்கிஷ பகிர்வு..

1.எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?
நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப் பத்திரிகைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதுமில்லை. நான் கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ படித்தவனல்ல, அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு! நான் நடைபாதையில், குழாயடியில், சில நாட்கள் வேலைக்குப் போன சிறிய தொழிற்சாலைகளில் பொதுவான நடைமுறை வாழ்க்கையில்தான் இலக்கியத்தைக் கற்றேன். பிறகு, அங்கேதான் எழுத்தும் இலக்கியங்களுமே பிறக்கின்றன என்று அறிந்தேன். அறிந்ததை - வாழ்க்கை எனக்கு அறிவித்ததை - திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். வந்தவன்தான் போவான். நான் வந்தவனும் இல்லை; போகிறவனும் இல்லை!
2.ஓர் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
பிழைப்பு என்றாலே ரொம்பச் சிரமமான காரியம்தான். 'என்ன பிழைப்பு?’ என்பது அலுப்புக் குரல். இலக்கணப்படிப் பார்த்தால், பிழைப்பு என்பது குற்றம் என்றும் பொருள்படும். எழுத்தை வெறும் பிழைப்பாகக்கொள்வது ஒரு குற்றமே. பிழைக்க முடியுமா என்பதல்ல; கூடாது என்பது என் கொள்கை. என்னைப் பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்குக் காசு தருகிறார்கள். ஆனால், நான் எழுதுவதே காசுக்காக அல்ல. கல்லடி கிடைத்தாலும் நான் எழுதுவேன். எழுத்து, காசு தராவிட்டால்தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்!
3.தனித் தமிழில் எழுதுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதில் யாரும் எழுதுவதில்லையே! எழுத வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஆசைக்கு ஒரு கடிதம், ஒரு கட்டுரை எழுத சிலர் முயலலாம். கதை எழுத முடியாது. கதை என்பது, இன்றைய வாழ்வின் பிரச்னை. இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழனுக்குப் பிரச்னை, தமிழின் தனிமையல்ல!
4. தங்கள் மனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? விமர்சகர் யார்?
கவர்ச்சி என்பதே ஒன்றின் வளர்ச்சி பற்றிய பிரச்னை. சின்னப் பிள்ளைக்கு, மண் பிடிக்கும், வாலிபனுக்கு, பெண் பிடிக்கும். வயது முதிர்ந்தால் அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப கவர்ச்சிகள் பேதப்படும். அதே போல் எனது ரசனை வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவரைப் பிடித்திருந்தது; பிடிக்கிறது. ஏதோ நீங்கள் கேட்டதற்காகச் சொல்வது என்றால், டால்ஸ்டாய் என்பேன். இந்தக் கவர்ச்சிக்குக் காரணம் கேட்பீர்களோ? என் வளர்ச்சிதான். விமர்சகரா? நானறிந்தமட்டில் அப்படி ஒருவர் இங்கே இல்லை ஐயா.
5.நீங்கள் ஏன் தொடர் கதைகள் எழுதுவதில்லை?
நான்தான் தொடர்ந்து கதை எழுதி வருகிறேனே! தொடர் கதை என்று இலக்கியத்தில் ஒரு பிரிவு கிடையாது. மேல் நாட்டில் மிகப் பெரிய எழுத்தாளர்களின் நாவல்களைக்கூட சில பத்திரிகைகள் வசதிக்காக அவ்விதம் பிரசுரித்தது உண்டாம். எனினும், அவை தொடர் கதைகள் என்பதற்காகப் பாராட்டப்படவில்லை. இங்கேயோ அது பெரும்பான்மை வாசகரை மயக்கும் ஒரு தந்திரமாகவே கையாளப்பட்டு வருகிறது. பத்திரிகைகளோ, வாசகரோ என்னிடம் அதை எதிர்பார்க்கவில்லை. எனக்கும் அதில் பழக்கமோ, விருப்பமோ இல்லை!
6.ஜனரஞ்சகமாக எழுதக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆம். ஜனங்கள் வளர்ந்துகொண்டே இருப்பவர்கள். வளர்ந்துகொண்டிருக்கும் ஒன்றின் அருகே குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக்குச் சமமாகப் போய் நின்றுவிட்டால், நாளைக்கு நாம் குறைந்துவிடப் போகிறோம் என்று அர்த்தம். ஜனங்களை விட்டு ஒதுங்கிவிடவும் கூடாது; கலந்துவிடவும் கூடாது. எப்போதும் ஓர் அடி முன்னே சென்றால்தான் ஜனங்களை இழுத்துச் செல்லவும் முடியும். அவர்கள் எதை வேகமாக விரும்பி ஏற்கிறார்களோ, அதை அவர்கள் அதே வேகத்தோடு வீசியும் எறிகிறார்கள். ஜனரஞ்சகம் என்ற பெயரால் என் எழுத்துக்கள் எறியப்பட வேண்டாம் என்றும் நான் நினைக்கிறேன்!
7.தாங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருக்கிறீர்களா? அதனால் உங்கள் எழுத்து பாதிக்கப்படுகிறதா?
நான் ஒரு கம்யூனிஸ்ட். வாழ்க்கையின் எத்தனையோ பாதிப்புகளினால்தான் எழுத்தே உருவாகிறது. பாதிக்கட்டுமே!
8.ஓர் எழுத்தாளன் என்ற முறையில் தமிழ்ப் பட உலகைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?
நான் தமிழ்ப் படம் பார்த்து மூன்று வருஷம் ஆகிறது. ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அபிப்பிராயம் சொன்னால்... வேண்டாம் சார், விடுங்கள்!
9.திரைப்படங்கள் எதற்கேனும் எழுத உத்தேசித்திருக்கிறீர்களா?
எழுத உத்தேசமில்லை; எடுக்க உத்தேசம் உண்டு. அப்போது ஒருவேளை எழுதலாம்!
10.உங்கள் மாத வருமானம் என்ன? அது போதுமானதாக இருக்கிறதா? இல்லையென்றால் பற்றாக்குறைக்கு என்ன செய்து சமாளிக்கிறீர்கள்?
வாழ்க்கை ஐம்பது ரூபாயிலும் இருக்கிறது, நூறு ரூபாயிலும், ஆயிரம் ரூபாயிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் வாழ்க்கை வண்டியில் எல்லா 'கிளாஸ்’களிலும் பிரயாணம் செய்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கு ரூ.350-ல் தாங்குகிறது. நாளைக்கு முடியாவிட்டால், வேறு 'கிளாஸு’க்கு இறங்கி விடுகிறேன். முடிந்தால் உயரே போவது. ஆனால், கடன் வாங்க மாட்டேன். பொருளாதார வாழ்க்கை என்பது, வாழத் தெரிந்தவர்களுக்கு ரொம்பச் சாதாரணமானது. பொருளாதார வீழ்ச்சியும் சரி, உயர்வும் சரி ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியோ உயர்வோ ஆகாது. அவை யாவும் அனுபவங்கள் அல்லவா? எனக்குப் பிரச்னை, என்னுடைய ஆன்மிக வாழ்க்கையும், பிறருடைய சமூக வாழ்க்கையும்தான். பிரச்னைகளுக்குப் பற்றாக்குறை ஏது?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தினமணி கதிர் 19-04-2015 ஜெயகாந்தன் சிறப்பிதழ்
படைப்பதனால் என் பேர் இறைவன்!
வே.சபாநாயகம்
எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் ஜெயகாந்தன். 1957இல்தான் அவரது படைப்பை நான் "சரஸ்வதி' இதழில் படித்தேன். பிறகு "ஆனந்தவிகடனி'ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர் நாவல்களும் என்னை அவரது தீவிர ரசிகனாக ஆக்கின.
அதற்குப் பிறகு புதுமைப்பித்தனைப் படிக்க நேர்ந்த போது, ஜெயகாந்தன் அவரது வாரிசாகவும், அவரது இடத்தை நிரப்புகிறவராகவும் எனக்குத் தெரிந்தார்.
1962இல் அரியலூரில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் பேச வந்தபோது, மன்றத்தின் அப்போதைய செயலாளரும், என் உறவினருமான ஏ.ஆர்.சீனிவாசன், நான் ஜெயகாந்தனின் ரசிகன் என்பதை அறிந்திருந்ததால், அவரை எனக்கு அறிமுகப்படுத்துவதற்காக என்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார். நானும் ஆர்வத்துடன் சென்றேன். சீனிவாசன் என்னை ஜெயகாந்தனுக்கு அறிமுகப்படுத்தியதோடல்லாமல் இன்னொரு அரிய வாய்ப்பினையும் எனக்கு நல்கினார். அன்றைய விழாவுக்குத் தலைமை தாங்க வேண்டியவர் வராத நிலையில், என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். ஜெயகாந்தனைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் வந்த எனக்கு, அவரது கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் வாய்ப்புக் கிட்டுமென்று நான் கனவு கூடக் கண்டதில்லை. அதனால், அவரது பிரம்மாண்டம் கருதி அதை ஏற்கத் தயங்கினேன். பேராசிரியர் எம்.எஸ்.நாடாரும் அவ்விழாவுக்கு வந்திருந்தார். அப்போது நான் "ஆனந்தபோதினி', "பிரசண்டவிகடனை'த் தாண்டி, மெல்ல, ஆனந்தவிகடனில் எழுதும் வளர்ச்சி பெற்றிருந்தேன். அதனைச் சுட்டிக் காட்டி சீனிவாசன்,"" நீங்களும் எழுத்தாளர் - அதோடு அவரது தீவிர ரசிகர் என்பதால், நீங்கள் தலைமை ஏற்கத் தகுதியானவர்தாம். தயங்க வேண்டாம்'' என்று சொல்லி, தலைமை ஏற்க வைத்தார்.
மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் ஜெயகாந்தன் என் பக்கம் திரும்பிப் பார்க்கவோ சுமுகம் காட்டவோ இல்லை. அப்போதைய அவரது மனநிலையில் என்னைப் போன்ற கற்றுக்குட்டி எழுத்தாளர்களோ ரசிகர்களோ அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். நெருக்கமற்ற எவரிடமும் அவர் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார் என்ற பேச்சும் இருந்தது. எனவே அவரது உதாசீனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது கூட்டத்துக்குத் தலைமையேற்கும் வாய்ப்புக் கிடைத்த பூரிப்பில் அப்போது நான் இருந்தேன்.
எனது தலைமை உரையில், ""ஜெயகாந்தன் புதுமைப்பித்தனுக்குப் பிறகு நமக்குக் கிடைத்த அரிய எழுத்தாளர். புதுமைப்பித்தனைப் போலவே அற்புதமாக எழுதுகிறார்'' என்றேன்.
ஜெயகாந்தன் தனது உரையில், ""சபாநாயகம் நான் புதுமைப்பித்தனைப் போல எழுதுவதாகச் சொன்னார். இல்லை. நான் புதுமைப்பித்தனைவிடவும் மேலாக எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போல எழுதுவதற்கு இன்னொருவர் எதற்கு? நான் ஜெயகாந்தனாக எழுதுகிறேன்'' என்று வெட்டினார். அப்போது யார் என்ன பேசினாலும் வெட்டிப் பேசுவது அவரது பாணியாக இருந்தது.
கூட்டம் முடிந்து சீனிவான் வீட்டில் மதிய உணவுக்குப் பின் பேசிக் கொண்டிருந்தபோது, ""நீங்கள் என்ன புத்தகம் படிப்பீர்கள்?'' என்று ஒரு வாசகனின் அசட்டு ஆர்வத்தோடு கேட்டேன். ""நான் எதுவும் படிப்பதில்லை'' என்று மறுபடியும் என்னை வெட்டினார். மேலும் அவருடன் பேச்சைத் தொடர முடியாதபடி எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
பின்னாளில் அவருடன் நெருக்கமாகப் பழகும் நிலை ஏற்பட்டபோது, ஒருமுறை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர் பல புத்தகங்களைக் குறிப்பிட்டார்.
உடனிருந்த நான், ""என்ன ஜே.கே உங்களை நான் முதன்முதல் சந்தித்தபோது, நான் எதுவுமே படிப்பதிலை என்றீர்களே?'' என்று கேட்டேன். ""அதுவா அப்போது நீங்கள் புதுசில்லையா? ஒரு மிரட்சிக்காக அப்படிச் சொல்லி வைத்தேன்'' என்று சிரித்தார். அப்போது அவருடன் ஒரு படமும் எடுத்துக் கொண்டேன்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அவருக்குப் பல நண்பர்கள் உண்டு. அவர்களில் எனது நண்பரான பி.ச.குப்புசாமி அவருக்கு மிகவும் அணுக்கமானவர். சென்னையில் அவருக்கு அலுப்பு ஏற்படும்போதெல்லாம் திருப்பத்தூருக்கு வந்து விடுவார். அப்படி அவர் வரும் போதெல்லாம் குப்புசாமி எனக்கு எழுதி அங்கு என்னையும் அழைத்துக் கொள்ளுவார். இரண்டு மூன்று நாட்கள் இலக்கிய போதையோடு நண்பர் குழாம் மெய்மறந்து நிற்கும்.
அப்படி ஒரு முறை, திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஜம்னாமரத்தூர் என்கிற மலைகிராமத்தில் அங்குள்ள பயணியர் மாளிகையில் குப்புசாமியின் ஏற்பாட்டின்படி நண்பர்கள் புடைசூழ ஜெயகாந்தனுடன் கழித்த மூன்று நாட்கள் மறக்கவியலாதவை. கூடத்தின் நடுவே, அக்கிராசனர் போல் கட்டிலில் அவர் சம்மணமிட்டு, நடராஜரின் சடாமுடி போல தலைமுடி விரிந்து பிடரியில் தொங்க, மீசையை முறுக்கியபடி, ஒரு சிம்மம் போல் அமர்ந்திருக்க, நாங்கள் கட்டிலைச் சுற்றி அமர்ந்திருப்போம். திரையுலக நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள மற்றும் அந்த மலைப் பிரதேசத்துப் பிரஜைகள் சிலரும் அதில் அடக்கம். பாரதியை தனது குருவாகக் கொண்ட அவரது பேச்சில், பாரதியின் கவிதை வரிகள் உணர்ச்சி பொங்க, வெள்ளமாய்க் கொட்டும். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு நல்ல பயிற்சி இருந்ததால், "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த....' போன்ற பாடல்களை இடையிடையே அவர் பாடும் போது, கேட்கச் சிலிர்ப்பாக இருக்கும். "கள்ளால் மயங்குவது போலே, கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்' என்கிற பாரதியின் வரிகளைத்தான், அவரது பேச்சிலும் பாட்டிலும் கிறங்கி நின்ற எங்கள் நிலைக்குச் சொல்ல முடியும். ஒரு மேதையின் சந்நிதானத்தில் நிற்கிற ஒருவித பரவசத்தை நான் அப்போது அனுபவித்தேன்.
திடீரென்று எழுந்து திறந்தவெளிக்கு வந்து, அவரது "ஆலமரம் ஆலமரம், பாலூத்தும் ஆலமரம்...' என்கிற அற்புதமான பாடலைத் தனி ராகத்தில் பாடுவார். எல்லோரும் வெளியில் வந்து அதை ரசிப்போம். சிலரை அழைத்து அதைப் பாடச் செய்வார். உடனே காட்சி மாறும். அவரது "ஒருமனிதன், ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஹென்றி பாடுவதாக வரும், "சோப்பெங்கப்பா....... சோப்பெங்கப்பா...... சொல்லி விட்டு, குனிந்து நிமிர்ந்து சோப்பெங்கப்பா....... சோப்பெங்கப்பா......' என்று சுற்றிச் சுற்றி வந்து நடனமிடுவார். அது முன்பே பரிச்சயமான குப்புசாமி போன்றவர்களும் உடன் அப்படியே பாடி ஆடியபடி, சுற்றி வருவர். தீராத விளையாட்டுப் பிள்ளையாய் அப்போது அவர் தோன்றுவார்.
பிறகு உள்ளே சபை மறுபடியும் கூடும். கேள்வி நேரம் தொடங்கும். பலரும் பல்வித வினாக்களைத் தொடுப்பர். அவரும் அவருக்கே உரித்ததான சமத்காரத்துடன் பதில் அளிப்பார். அப்போது அங்கிருந்த திருப்பத்தூர் கல்லூரி மாணவர்களில் ஒருவர், ""ஐயா, உங்களது சிறுகதைத் தலைப்புக்களைத் திருடி, தம் படங்களுக்கு, - உதாரணமாக "புதிய வார்ப்புகள்' போன்று பெயரிடுகிறார்களே......என்று இழுத்தார். அதற்கு ஜே.கே சற்று அதட்டலாக, ""ஏம்பா அந்தக் கதையை நீ எழுதினியா'' என்று கேட்டார். மாணவர் மிரட்சியுடன் ""இல்லை ஐயா, நீங்கதான் எழுதுனீங்க'' என்றார். ""கதையை எழுதின நானே கவலைப்படலே, உனக்கென்ன? நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எவரும் எடுத்தாளுவர். போ'' என்றார். அதுதான் ஜெயகாந்தன்.
70களில் நான் உளுந்தூர்பேட்டைக்கு அருகில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் என்னும் ஊரில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தேன்.
ஒரு நாள் மாலை பொழுது சாயும் நேரத்தில், என் பகுதிக்கு வரும் மாடிப்படியில் "சாமியே சரணம் ஐயப்பா' என்று சத்தம் கேட்டது. அது எனக்குச் சம்பந்தமற்றதும் அந்த நேரத்துக்குப் பொருத்தமற்றதுமாக இருந்ததால், நான் அதிர்ந்து எழுந்து படிகளை நோக்கிப் போனேன். கருப்பு உடையில் கழுத்தில் துளசிமணி மாலைகளுடன் நண்பர் பி.ச.குப்புசாமி படியேறி வந்து கொண்டிருந்தார். எனக்கு வியப்பு அதிகமாயிற்று. இந்த நேரத்தில் இவர் எப்படி என்று நான் புருவம் உயர்த்தியதும், அவர் மறுபடியும் "சாமியே சரணம் ஐயப்பா' என்று ராகம் இழுத்தபடி, ""என்ன சபா தெரியலியா'' என்றார். ""அய்ய இது என்ன வேஷம் குப்புசாமி?'' என்று கேட்டேன். ""சபரிமலைக்குப் போறோம் கீழே ஜே.கே காரில் இருக்கிறார்'' என்றார். ""அப்படியா?'' என்று பரபரத்தபடி கீழே ஓடினேன்.
வீட்டு வாசலில் அவரது வெள்ளைக் கார் நின்றிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஜே.கே என்னைக் கண்டதும், ""சாமியே.... சரணம்'' என்றார். காரின் உள்ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் அதே சரணத்தை வழி மொழிந்தன. அவர்கள் - திருப்பத்தூர் வையவன், தண்டபாணி, வெள்ளக்குட்டை ஆறுமுகம் ஆகியோர். எல்லோரும் ஜே.கே. உட்பட கறுப்பு உடையில் கழுத்தில் துளசிமணி மாலைகளுடன் இருந்தனர். ""வாங்க ஜே.கே மேலே போகலாம்'' என்று அழைத்தேன். ""நாங்க விரதத்தத்துலே இருக்கோம்.
மலைக்குப் போய்த் திரும்பும் வரைக்கும் இல்லம் எல்லாம் விலக்கம். உங்க பள்ளிக் கூடம் எங்கே இருக்கு? அங்கே போகலாம்'' என்றார். ""போகலாம், கொஞ்சம் இருங்க.
ராத்திரி ஆகாரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டு வரேன்'' என்றேன். ""அதெல்லாம் வேணாம் எல்லாம் கொண்டு வந்திருக்கோம். பாலுக்கு மட்டும் சொல்லுங்க. ஏறுங்க போவோம்'' என்றார். நான் மேலே ஓடி என் மனைவியிடம் பால் காய்ச்சி அனைவருக்கும் அனுப்பச் சொல்லிவிட்டு வந்து காரில் ஏறிக் கொண்டேன்.
பள்ளிக்கூடம் கூப்பிடு தொலைவில்தான் இருந்தது. விளையாட்டு மைதானத்தை ஒட்டிய திறந்த காற்றோட்டமான அறையில், கார் டிக்கியிலிருந்து அவர்களது மூட்டை முடிச்சுகள் - உணவுப்பண்டங்கள் அடங்கியவை - இறக்கப்பட்டன. வகுப்பு சாய்வு மேஜைகளை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, வட்டமாக உட்கார சிமிண்ட் தரை விஸ்தாரமாக்கபட்டது. சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்த பின் பள்ளிக் கிணற்றில் அனைவரும் குளித்து, சந்தனப் பூச்சணிந்து அறைக்குத் திரும்பி, அய்யப்பப் பாடல்கள் ஒலிக்கப் பூஜை நடத்தினார்கள். பிறகு மூட்டைகளைப் பிரித்து, கொண்டு வந்திருந்த கடலை, பொரி உருண்டைகள், அதிரசம், பழங்களை உண்டு பாலருந்தினார்கள். என்னையும் சாப்பிட வைத்தார்கள்.
பிறகு ஆரம்பித்தது சபை. வழக்கம் போல ஜே.கே. சபை நடுவில் சம்மணமிட்டு அமர, நாங்கள் அனைவரும் சுற்றிலும் உட்கார்ந்ததும் பாரதி பாடம் ஆரம்பமாயிற்று. பின்னர் அவரது இனிய கர்நாடக இசைப்பாடலில் கிறங்கி நின்றோம். அப்போது நடுநிசியாகி இருந்தது. ""வாங்க நிலவொளிக்குப் போகலாம்'' என்று ஜே.கே எழுந்ததும் நாங்களும் தொடர்ந்தோம். எதிரே இருந்த மைதானத்தில் வட்டமாகக் கூடினோம்.
நிலவு பளிச்சென்று பரவி இருந்தது. எல்லோரும் கறுப்பு உடையில், நான் மட்டும் வெள்ளை உடையில். திடீரென்று ஜே.கே, "சிலும்பிப் போடடா.....' என்றபடி கைகளை உயர்த்தி எம்பிக் குதித்தார். உடனே எல்லோரும் அவரைப் பின்பற்றி, "சிலும்பிப் போடடா.... சிலும்பிப் போடடா.....' என்று கூவியபடி, வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்துச் சுற்றி வந்தார்கள். எனக்கு அந்த விளயாட்டு பரிச்சயமில்லாததால் வட்டத்துக்கு நடுவில் நழுவினேன். நிலவு வெளிச்சப் பின்னணியில், கறுப்பு உடையில் என்னைச்சுற்றிச் சுற்றி வந்து நடனமாடினர்கள். இந்த விளையாட்டு முடிந்ததும், ""சோப்பெங்கப்பா போடுங்கப்பா'' என்று ஜே.கே சொல்லி அவரே ஆட ஆரம்பித்ததும்,
என்னைத் தவிர எல்லோரும் ""சோப்பெங்கப்பா...சோப்பெங்கப்பா......'' நடனம் ஆடினார்கள். எனக்குக் கூச்சமாக இருந்ததுடன், அந்த ஊரில் தலைமை ஆசிரியராக இருக்கும் நான் அப்படிக் கூத்தாடுவதை ஊர்க்காரர்கள் யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயமும் காரணமாய் நடுவில் நின்றபடி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி பாட்டும் கூத்தும் பிரசங்கமுமாய் பொழுது புலர்ந்தது. கையெழுத்து புலனாகும் முன்பாக ஜே.கேயும் நண்பர்களும் ""சாமியே சரணம் ஐயப்பா'' என்று விளித்தபடி காரில் ஏறி விடை பெற்றார்கள். அந்த அற்புதமான அனுபவம் - 45 ஆண்டுகள் கடந்தும் அந்த இனிய அனுபவம் - இன்னும் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றது.
கடந்த 4 ஆண்டுகளாக முதுமை காரணமாக தொலைதூரப் பயணம் முடியாமையால் சென்னை சென்று அவரைப் பார்க்க முடியவில்லை. கடைசியாக நெய்வேலி புத்தக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக 4 ஆண்டுகளுக்கு முன் வந்தபோது போய்ச் சந்தித்ததுதான். இப்படி எத்தனையோ சந்திப்புகள் அவருடன் இந்த 50 ஆண்டுகளில் அவர் எவ்வளவு நெருக்கமாக நம்மோடு பழகினாலும், அவரோடு சரிசமமாக வைத்து எண்ண முடியவில்லை. இந்த நூற்றாண்டின் மகத்தான இலக்கிய மேதையின் முன்னிலையில் உள்ளோம் என்பதும் அவரது நட்பு என்பது பெரும்பேறு என்பதுமே நினைவில் நிற்கிறது.
இறப்பு என்கிற நிதர்சனத்தை மறுக்க முடியாது என்றாலும் என்னைப் பொறுத்தவரை மனதளவில் அவர் இறக்கவில்லை. அவரே சொன்னபடி, ""வாழ்வதன் முன்னால் நான் செத்திருந்தேன், செத்ததின் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்'' என்றபடி அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
_____________________________________________
தினமணி கதிர் 19-04-2015 ஜெயகாந்தன் சிறப்பிதழ்
படைப்பதனால் என் பேர் இறைவன்!
வே.சபாநாயகம்
அன்புடையீர்!
வணக்கம்
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவையொட்டி அம்ருதா இதழ் வெளியிட்டு இருக்கும் ஜெயகாந்தன் நினைவிதழில் 'நந்தவனத்திலோர் ஆண்டி' என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறேன். அக்கட்டுரையின் முதற்பத்தி இது:
"இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்லவேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் . . . அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒருதனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது" என 1969ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரைமறைந்த பொழுது அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழகத்தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற் பேசியவர்ஜெயகாந்தன். எனவே தனிமனிதராகிய அவரது மரணத்தின் பொருட்டு அவரைப் பற்றிய அவரதுபடைப்புகளையும் சிந்தனைகளையும் பற்றிய எதிர்நிலைக் கருத்துகளை, ‘நாகரிகம்’ கருதி நம் மனதிற்குள்புதைத்துக்கொண்டு, அவரது தோளில் புரளும் தலைமுடியையும் முறுக்கிவிடப்பட்ட மீசையையும்சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் தன்வீட்டு மொட்டைமாடியின் கீற்றுக் கொட்டகைக்குள் தான் கூட்டியசபையின் நடுவில் அவர் அமர்ந்து ‘சிலுப்பி’யை ஒயிலாய்ப் பிடித்து கஞ்சாப்புகையை உள்ளிழுத்து மெல்லமெல்ல விடுகின்ற அழகை(?)யும் விதந்தோதி ‘அக்காட்சியைக் கண்டதே தனது பிறப்பின் பேறு’ எனப்பிதற்றுவது ‘இலக்கியத் தரம்’ அற்ற ‘அநாகரிகம்’ என்பதனால் அவரது வாழ்க்கையையும் படைப்புகளையும்சிந்தனைகளையும் அவரது மரணத்தின் பொருட்டு ஒரு பறவைப் பார்வையேனும் பார்த்து, அவற்றிலிருந்துஇந்தக் குமுகம் எதனையேனும் கற்றுக்கொண்டு தன்னை உன்னதப்படுத்திக் கொள்ள இயலுமா எனஆராய்வதே அவருக்குச் செலுத்தும் பொருத்தமான நினைவஞ்சலியாக இருக்கும் என நம்பியதன் விளைவேஇக்கட்டுரை.
கட்டுரையை முழுமையாகப் படித்து பின்னூட்டமிட வேண்டுகிறேன். கட்டுரையைக் காண கீழே உள்ளஉரலியைச் சொடுக்குக:
http://ariaravelan.blogspot.in/2015/05/blog-post.html