உடற்பயிற்சி
(Exercise) மற்றும் யோகா இரண்டுமே உடல் நலத்திற்காக அமைந்தது என்றாலும்
இரண்டிற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது. முக்கிய வேறுபாடுகளை
கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
| உடற்பயிற்சி (Exercise) | யோகா (Yoga) |
|---|---|
| உடல் சக்தி அதிக அளவு விரயமாகும் | உடல் சக்தி விரயம் மிக மிக குறைவு. சக்தியை சேமிக்கும் |
| அதிக சக்தி விரயத்தால் அதிக உணவு சக்தி உடலுக்கு தேவை | சாதாரண உணவு போதுமானது |
| செய்யும் போது தளர்ச்சியை கொடுக்கும் | எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும் |
| அதிக நேரம் செய்ய வேண்டும் | குறைந்தது 5 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை போதுமானது. அதிக நேரம் செய்தாலும் தவறில்லை |
| சில பயிற்சிகளை செய்ய அதற்கான கருவிகள் , அதற்கான இடம் தேவைப்படும் | பிரத்யேகமாக எந்த கருவியும் தேவையில்லை |
| அதிகமாக வெளித்தசையை மட்டும் பலப்படுத்தும் | உள் உறுப்புகளையும் பலப்படுத்தும் |
| உடல் கடினத்தன்மை பெறும் | உடல் வளையும் தன்மையும் உறுதியும் பெறும் |
| செல்கள் வளர்வதை கூட்டி வயதை சீக்கிரம் அதிகமாக காட்டும் | இளமையாக காட்டும் |
| முரட்டுத்தன்மை அதிகமாகி அது பழகிவிட்டதால் நாளாக நாளாக குறையத்துவங்கும். போட்டி குணம் பெருகும் | உள்ளம் அமைதியாகி எந்நிலையையும் ஏற்கும் பக்குவம் பெறும். சாந்த குணம் வளரும் |
| அதிக வியர்வை வெளியாகும். | வியர்வை வராது. அதனால் குளித்து விட்டும் செய்யலாம். |
| உடல் உள் நோய்களை தடுக்கும் சக்தி அதிகமாக கிடையாது | யோகா தேவையான எல்லா ஹார்மோன்களையும் தேவைக்கேற்ப சுரக்க வைப்பதால் நோய்தடுப்பு மருந்தாக விளங்குகிறது |
| இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் | இரத்த அழுத்தத்தை சமச்சீராக்கும் |
| கடினமாக செய்ய வேண்டும் | எளிதாக செய்தே அதிக பலன் பெறலாம் |
| தொடர்ந்து செய்ய வேண்டும். இல்லையேல் கொழுப்பு அதிகரிக்கும். ஆண்களுக்கு தொந்தி வரும் | எந்த கெடுதலும் இல்லை |
| வேறு கருவிகள் தேவைப்படுவதால் பணச்செலவு ஆகும் | எவ்வாறு செய்வது என்பதை அறிந்து விட்டால் எந்த செலவும் இல்லை |
| உடல் திறன் மட்டும் பெருகும் | உடல் திறனுடன் அறிவுத்திறன் மற்றும் ஞாபக சத்தி பெருகும் |
| மனதிற்கான பயிற்சி கிடையாது | மனதிற்கான பயிற்சி உண்டு |
| வெளிநாட்டு வரவு | இந்திய ஆதிகால பயிற்சி |
வேறுபாடுகளை பார்த்தது போல சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
யோகாவினால் விளையும் நன்மைகள் நூற்றுக்கு நூறு சரியே. பத்து வருஷத்துக்கும் மேலாக யோகாசனங்கள் செய்துவருவதால் என்னால் அதை நன்கு உணரமுடிகிறது. வெளியூர் எங்காவது போனால் கூட முடிந்த வரையிலும் யோகாசனங்களில் சிலவற்றையாவது செய்துவிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன்.
2010/6/19 Geetha Sambasivam <>யோகாவினால் விளையும் நன்மைகள் நூற்றுக்கு நூறு சரியே. பத்து வருஷத்துக்கும் மேலாக யோகாசனங்கள் செய்துவருவதால் என்னால் அதை நன்கு உணரமுடிகிறது. வெளியூர் எங்காவது போனால் கூட முடிந்த வரையிலும் யோகாசனங்களில் சிலவற்றையாவது செய்துவிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன்.
வினோத்,
யோகஆசனங்கள் என்பது உடல்வலிமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டும் செய்யமுடியும். எல்லோராலும் அல்ல.
ஓடும் பலன் எல்லாம் யோகாவில் கிடைக்காது. :-))))
உடற்பயிற்சியை யோகாவில் இருந்து பிரிப்பதால் எந்த பலனுமில்லை. பேருக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்
உடற்பயிற்சியிலும் பிஸியோதெரபியில் எழுந்து நடக்க முடியாதவருக்கு பயிற்சிகள் உண்டு.