தோடு, தொங்கட்டான், ஜிமிக்கி ...

1,621 views
Skip to first unread message

rajam

unread,
Dec 24, 2010, 2:46:11 PM12/24/10
to மின்தமிழ், Narayanan Kannan
கோவலனைப் பிரிந்த கண்ணகியை "கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்" என்று சொல்கிறார் இளங்கோ அடிகள்.
இதை உரை செய்பவர்கள் கண்ணகி காது வளர்த்திருந்ததாகச் சொல்லுவார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தோடு
--------
தொடக்க காலத்தில் நமக்குத் தெரிந்த இலக்கியங்களிலிருந்து தெரிவது ... இது "பனந்தோடு" ("பனையோலை") என்ற பொருளோடு தொடர்பு உடையது. 
கோயில் சிலைகளில் காணும் நகைகள் பற்றியும் பிறர் அணியும் நகைகள் பற்றியும் பல தமிழர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். இப்போது அவை என் அணுக்கத்தில் இல்லை. எனவே உடனடி விவரம் தர இயலவில்லை.
தோடு என்படு காதோடு (ear lobe) ஒட்டியது. அதிலிருந்து எந்தப் பகுதியும் கீழே தொங்காது.
[காது -- ear lobe; செவி -- ear hole]
"தோடுடைய செவியன்" "குழைக் காதன்" என்ற தொடர்கள் பொருள் பொதிந்தவை. அவை "தோடு" எங்கே அணியப்படுகிறது; "குழை" எங்கே அணியப் படுகிறது என்று விளக்கும்.
என் "தோட்டுப்பூ" பார்க்க விரும்பினால் ... இங்கே:

தொங்கட்டான்
-------------------
இது தோட்டிலிருந்து தொங்கும் நகை.   இதை "லோலக்கு" "டோலக்கு" என்றும் சொல்வார்கள்.

எங்கள் குடும்பங்களில் காதில் அணியும் நகைக்கு மட்டுமே "தொங்கட்டான்" என்ற பெயர் சொல்லுவோம். கழுத்தில் அணிவதின் பெயர் தொங்கட்டான் இல்லை.
ஜிமிக்கி
---------
இது "தொங்கட்டானில்" ஒரு வகை. கீழ் அமைப்பு ஒரு குடை போல் இருக்கும். அந்தக் குடை வெறும் தங்கத்தாலோ அல்லது பல கற்கள் பதித்ததாகவோ இருக்கும்.
இயற்கையில் ... ஜிமிக்கிப் பூவும் இருக்கு! வைரம் அவர்களின் குறிஞ்சிப்பாட்டுப் பூக்கள் பற்றிய படங்களில் தெரியும்.
================================

இங்கே இணைத்துள்ள படங்களில் தொங்கட்டானையும் ஜிமிக்கியையும் பார்க்கலாம்.

பார்த்து மகிழ்க? சிரிக்க? :-) :-) :-)

++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே நாங்கள் அணிந்திருப்பது "தொங்கட்டான்."
---------------------------------------------------------- 
இங்கே நான் அணிந்திருப்பது ஜிமிக்கி
--------------------------------------------
இங்கே இந்தச் சிறுமியரும் என் பிற்கால நாத்தனாரும் அணிந்திருப்பவை தொங்கட்டானும் ஜிமிக்கியும்
-------------------------------------------------------------------------------------------------------------------

அன்புடன்,
ராஜம்

Hari Krishnan

unread,
Dec 24, 2010, 9:49:19 PM12/24/10
to mint...@googlegroups.com


2010/12/25 rajam <ra...@earthlink.net>

தொங்கட்டான்
-------------------
இது தோட்டிலிருந்து தொங்கும் நகை.   இதை "லோலக்கு" "டோலக்கு" என்றும் சொல்வார்கள்.

ஓகோகோகோ.... ரொம்ப நாள் புரியாம இருந்த வாலிசார் (கவனிக்கவும் ‘சார்’ போட்டுதான் பேர் சொல்லணும்.  பாரதின்னா சார் வேணாம்.  வாலின்னா சார் வேணும்.) இயற்றியருளிய
லாலாக்கு டோல் டப்பிமா என்பதற்குப் பொருள் சூட்சுமம் இங்கேதான் இருக்கிறதோ! :))

--
அன்புடன்,
ஹரிகி.

rajam

unread,
Dec 24, 2010, 9:55:57 PM12/24/10
to mint...@googlegroups.com
புரியலையே ஹரிகி!???


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Dec 24, 2010, 10:01:07 PM12/24/10
to mint...@googlegroups.com


2010/12/25 rajam <ra...@earthlink.net>

புரியலையே ஹரிகி!???


புரியல்லன்னா ஹரியோடய வால் ரொம்ப ஆடுது; தலைகொழுத்து ஆடுதுன்னு அர்த்தம். :))

லாலாக்கு டோல்டப்பிமா உன் இடுப்ப சுத்தி என்னப் பாரம்மா என்ற மஹாவாக்கியத்தை இயற்றியருளியவர் வாலிசார் என்ற பெருங்கவிஞர்குலதிலகர்.  கவிப்பேராதிபேபேபேரரசர்.  அந்த லாலாக்கு டோல் என்றால் என்ன என்பதைக் கொஞ்சம் போற மாத்தி லோலாக்கு, டோலாக்கு என்று போட்டுப் பார்த்தேன்.  ஓகோ....ஜிமிக்கி போட்ட பேரழகியைப் பற்றிய கவித்திறன் வாய்ந்த வருணனையோ என்று கவியின்பத்திலும் இலக்கிய மழையிலும் கணநேரம் நனைந்து என்னை மறந்தேனா.... அதான் தும்மிட்டேன். :))

வுட்டுருங்க்க்கா..  ஸொம்மா டமாஸ் பண்ணேன்.  வோல்தான்.  

rajam

unread,
Dec 24, 2010, 10:20:36 PM12/24/10
to mint...@googlegroups.com
ஓஓ! இப்பொ புரிஞ்சிது! நன்றி'ப்பா!
ஒங்க ஒவ்வோரு தும்மலுக்கும் ... நாங்க இந்தப் பக்கத்லெருந்து ... ஹரிகிக்கு ஒரு நூறு ஆயுசு கூடும்படி வாழ்த்தறொமே ... எங்கெ தப்பிச்சுப் போயிடுவீங்க--னு பாப்பம்!

karuannam annam

unread,
Dec 25, 2010, 12:49:30 AM12/25/10
to mint...@googlegroups.com
அருமையான நிழற்படங்கள். கண்டு மகிழத்தந்தமைக்கு நன்றி.
அங்கயல்கண்ணி ஊஞசலில் ஆடுகிறபோது அவள் காதின் தொங்கல் ஆடுகிற அழகை பல வருடங்களுக்கு முன் படித்த அனுபவம். இலக்கியம் பெயர் மறந்துவிட்டது. அதுபோன்ற பாடல் அறிந்தவர்கள் எழுதவும்.
  காரைக்குடி கொப்புடையம்மன் அருளால் செழிக்கிறது என்ற நம்பிக்கையுண்டு. கொப்பு என்ற காதணி பற்றி விவரம் அரிய ஆவல்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

2010/12/25 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Dec 25, 2010, 2:19:22 AM12/25/10
to mint...@googlegroups.com
சொ. வி, ஐயா, நல்ல சொல்லுக்கு நன்றி ஐயா!
இந்த "கொப்பு" என்ற சொல் பற்றி இன்னோரு வலைப்பதிவில் பார்த்தேன்.
"யாழ் மண்" என்ற வலைப்பதிவு ( http://webcache.googleusercontent.com/search?q=cache:T_A-n9VAhykJ:www.yarlmann.lk/head_view.asp%3Fkey_c%3D314+கொப்பு&cd=6&hl=en&ct=clnk&gl=us&client=safari) .
அதில் கண்டபடி:
+++++++++++++++++++++++++++++++++++++++
பழங்காலத்தில் 'கொப்பு' என்ற காதணியும் புழக்கத்தில் இருந்தது என்பது எமக்குத் தெரியவருகிறது. அவ்வாபரணம் தோடு என்ற ஆபரணத்தில் இருந்து வேறுபட்டு பெண்களின் காது மடல்களில் அணிகின்ற அமைப்புடன் இருந்துள்ளது. ஆனாலும் 'கொப்பு' என்ற காதணியை இஸ்லாமிய பெண்கள் அதிகமாக அணிந்துள்ளனர்.

'சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே'
என்பது ஆண்டாள் நாச்சியாருடைய பாடல்களில் உள்ள சொற்களாகும். இங்கு சூடிக்கொடுத்த நாச்சியார் செவிப்பூ எனக்குறிப்பிட்டது காதணியை ஆகும்.

மேலும் தமனீயக்கொப்பு, குதம்பை, குண்டலம், மகர குண்டலம், வாளி போன்ற காதணிகள் சிறு சிறு வேறுபாடுகளுடன் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன. 'கொப்பு' என்றால் காது மடல்களில் அணிகின்ற அணி எனவும் 'தமனீயம்' என்றால் பொன் எனவும் பொருள் கொள்ள முடியும். குண்டலம் மற்றும் மகர குண்டலம் என்பது அசையக்கூடியதாக இருந்ததுடன் தற்காலத்து வளையம் என்ற ஆபரணத்தை ஒத்ததாக வாளி என்னும் காதணி இருந்துள்ளது. 

அக்காலத்தில் பல வகையான ஆபரணங்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான பிரதான காரணம் என்னவெனில் அக்காலத்து மக்கள் அழகுக் கலையில் கொண்டிருந்த தீராத காதல் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். இயற்கையோடு வாழ்ந்த தமிழ் இன மக்கள் செடி, கொடி, தளிர், மலர் போன்றவற்றை ஆரம்ப காலத்தில் அணிந்த காரணத்தால், பின்னர் தாம் உருவாக்கிய பொன், வெள்ளி, தந்தம், சங்கு போன்ற ஆபரண்ங்களிலும் அப்பூவேலைப்பாடுகளை விரும்பி உருவாக்கி அணிந்து மகிழ்ந்தார்கள்.

'கடுத்து வாழ்தர வொருத்திபொன் னோலைகா தணிந்தாள்'
என்ற பிரபுலிங்க லீலை - சிவப்பிரகாச சுவாமிகளின் வரியில் இருந்து 'பொன்னோலை' என்ற காதணி பற்றிய தகவல் எமக்குக் கிடைக்கிறது.

'கொப்பழகு குழைமடந்தை பள்ளியறை தனிலிருந்து கோயில் புகும் ஏகாந்த சமயம் சகியே'
என்பது திருக்குற்றாலக்குறவஞ்சியில்இடம்பெற்றுள்ள திருக்கூட ராசப்ப கவிராயரின் வரியாகும். இங்கு கொப்பு, குழை எனக்குறிப்பிடப்பட்டிருப்பது காதணிகளை ஆகும்.

'தண்ணொளி ததும்புங் குதம்பையொடு காதுக்கோர் தமனியக் கொப்பு மிட்டு'
என்பது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமர குருபரரின் வரிகளில் இருந்து காதணிகள் பற்றிய தெளிவான பழமையான பெயர்கள் எமக்குக் கிடைக்கின்றன.

'பழையாய் புதியாய் சரணம் பணிலக் குழையாய் சரணம்'
என்று திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் கூறியுள்ளார். இங்கு பணிலம் என்பது சங்கு எனவும் குழை என்பது காதணி எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.

'அழிதகன் குறுகுவான்முன் னங்கயற்கண்ணி தந்தக் குழையிரு காதுங்கோத்து'
என்று திருவிளையாடல் புராண வரிகளில் மீண்டும் காதணியை குழை என சிறப்பித்துக் கூறுகிறார் பரஞ்சோதி முனிவர்.

காதுகளில் அணிகின்ற அணிகளை மகரக்குழை என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள். மகரம் என்பது மீன் என்ற அர்த்ததைக் கொடுக்கிறது. 'மகரக் குழை நெடுங் காதன்' என்றும் பழைய இலக்கியங்களில் குறிப்பிடப்படுவது மீன் வடிவத்தை ஒத்த காதணியை ஆகும்.

'தோளில் மகரக்குழை தவழ' 
என்பது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள வரி ஆகும். தோளைத் தொடக் கூடிய அளவிற்கு காதணியை அணிந்திருந்ததாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'வடிந்து வீழ் காதினர்'
இவ்வாறு கூறும்போது பெண்களும் தமது காதுகளில் துளைகளைப் பெரிதாக இட்டு, தாழ்த்தி, தொங்கக்கூடிய அளவிற்கு காதணிகளை அணிந்திருந்தார்கள் என்பது எமக்குப் புலனாகிறது. 

'கடிப்பிரு காதில் கனங்குழை தொடர' 
என்ற தொடரில் இருந்து தொங்கக்கூடிய அளவிற்கு காதணிகளாக அணிந்த ஆபரணத்திற்கு 'கடிப்பு' என சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

'மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசு மென்கிறாளானால்' 
என்று திருமங்கையாழ்வார் கண்ணபுரத் திருமாலை பரவுகின்றார். இங்கு மணிகள் கொண்டு உருவாக்கப்பட்ட மகரக் குண்டலங்கள் ஒளி வீசுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

'காதில் கனவயிர குண்டலங்கள் சேர்த்தி'
என ஆளுடையப் பிள்ளையார் திருவுலா மாலையில் நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிடுகிறார். ஒளி வீசும் வைரக்கற்களைக் கொண்ட குண்டலங்கள் என்பது அவரின் கருத்தாகும். 

'வெய்ய குதம்பை வளர்த்தகலை விழுநீர் வள்ளைக் காதினிடைத் துய்ய பசும்பொன் மணிகுயின்ற துணைத்தோடமையத் தோன்றினாள்'
இங்கு சிவப்பிரகாசர் அவர்கள் 'வள்ளை மலர் போன்ற காதுகளில் மணிகள் பதிக்கப்பட்ட துணைத்தோடு (இரண்டு தோடு) அமையத் தோன்றினாள்' என பிரபுலிங்கலீலையில் குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்து அக்காலத்து செல்வச்செழிப்பு நமக்குத் தெளிவாகப் புலனாகிறது.

'இன்னிசை வீணையிருவோ ரிசைந்தாடப் பொன்னூசல் போற் குழைகள் பூட்டியே'
என்று கடம்பர் கோவில் உலாவில் கூறுவதற்கு 'அஸ்வதர் மற்றும் கம்பளர் ஆகிய இருவரும் இசைந்தாட ஊஞ்சல் போல ஆடக்கூடிய குழைகள் பூட்டிய' என பொருள் கொள்ளமுடியும். 

இவ்வாறு காதணிகள் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் மேற்கூறப்பட்ட கருத்துக்களில் இருந்து காலங்காலமாக சிறு சிறு வித்தியாசங்களுடன் இன்றைய 'தோடு' ஆபரண அமைப்பை அவை ஒத்திருந்தன என்பது எமக்குத் தெரியவருகிறது. மேலும் தமிழர் தம் வாழ்வில் காது குத்தல் என்பது மரபு சார்ந்த ஒரு விழாவாகக் கொண்டாடப்படுவதுடன் அதில் தாய் மாமன் உறவுக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்,
ராஜம்


Tthamizth Tthenee

unread,
Dec 25, 2010, 2:24:49 AM12/25/10
to mint...@googlegroups.com
“தமிழர் தம் வாழ்வில் காது குத்தல் என்பது மரபு சார்ந்த ஒரு விழாவாகக் கொண்டாடப்படுவதுடன் அதில் தாய் மாமன் உறவுக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. “ 
 
 
மிக  அருமையான  விவரங்கள்,
 
காது குத்துதல்  என்பது  அக்கு பன்க்ச்சர்  எனப்படும் ஒரு விதமான  வைத்தியமும் கூடத்தான்
 
காது குத்துதல், மூக்கு குத்துதல்,  போன்றவைகள்  எல்லாமே  ஒரு வித வைத்தியம் தான்
 
அதே போல்  மொட்டை அடித்தலும்  அவ்விதமே.
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2010/12/25 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Dec 26, 2010, 2:43:36 PM12/26/10
to mint...@googlegroups.com, karuannam annam
அங்கயல்கண்ணி ஊஞசலில் ஆடுகிறபோது அவள் காதின் தொங்கல் ஆடுகிற அழகை பல வருடங்களுக்கு முன் படித்த அனுபவம். இலக்கியம் பெயர் மறந்துவிட்டது.


மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடலைச் சொல்கிறீர்களா, ஐயா?
++++++++++++++++++++++++++
இருபதுமு மென்குரற் கிண்கிணியு முறையிட்
டிரைந்திடு மரிச்சிலம்பும்
இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொ
னெழுதும்செம் பட்டு வீக்குந்

திருவிடையு முடைதார மும்மொட் டியாணமுஞ்
செங்கைப் பசுங்கிள்ளையுந்
திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
திருநாணு மழகொழுகநின்

றருள்பொழியு மதிமுகமு முகமதியி னெடுநில
வரும்புகுறு நகையுஞான
ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொ
டமராடு மோடரிக்கட்

பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே

(நன்றி: மதுரைத் திட்டம்)
++++++++++++++++++++++++++++++


  காரைக்குடி கொப்புடையம்மன் அருளால் செழிக்கிறது என்ற நம்பிக்கையுண்டு. கொப்பு என்ற காதணி பற்றி விவரம் அரிய ஆவல்.

"கொப்பு" பற்றி ஒரு நல்ல வலைப்பதிவு பார்த்தேன்:
அதோடு, ... ஆத்தூர் பக்கத்தில் "கொப்புடைய பெருமாள்" கோயில் உண்டு எனக் கேள்வி. தெரிந்தவர்கள் மேலும் விளக்கம் தந்தால் நல்லது.
எனக்குத் தெரிந்தவரை ... "கொப்பு" என்பது காதின் மேல் மடலில் அணியப்படுவது -- திருகாணியுடன்.
அன்புடன்,
ராஜம்


On Dec 24, 2010, at 9:49 PM, karuannam annam wrote:

karuannam annam

unread,
Dec 27, 2010, 2:18:05 AM12/27/10
to mintamil


---------- Forwarded message ----------
From: karuannam annam <karu...@gmail.com>
Date: 2010/12/27
Subject: Re: [MinTamil] தோடு, தொங்கட்டான், ஜிமிக்கி ...
To: rajam <ra...@earthlink.net>


மிக்க நன்றி அமமா. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் மதித்து மறுமொழி தருகிறீர்கள். பெரியவர்களுடன் கூட்டுவித்த நற்பேறுக்கு 
மகிழ்ச்சி.
பாடலைக் கூறிய பங்காளி பெரியவர் காப்பியக்கவிஞர் திரு மீனவன் அவர்களைத் தொடர்புகொண்டேன். பாடல் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் உள்ளது. சிவஞானமுனிவர் எழுதியது என்று சொன்னார்.
ஊஞ்சல் விதி:
மலைமகளை அலைமகளும் கலைமகளும் ஊஞ்சலில் வைத்து ஆட்டுகி றார்களாம்  காது தொங்கட்டனின் ஆடுதல் ஊஞ்சலில் ஆடுதலைவிட  வேகமாக இருந்ததாம். அதை ஈடுசெய்ய ஊஞ்சலை வேகமாக  ஆட்டுகிறார்களாம். ஆனால் காதணி அதைவிட வேகமாக ஆடியதாம். ஊசலின் வேகம் நீளத்தைப் பொறுத்தது என்ற விதியைப் பெரியவர்கள் அனுபவித்து உணர்ந்து பாடியுள்ளார்கள்.
பாடலைப் பார்த்துச் சொல்வதாகக் கூறினார்.
அன்புடனும் நன்றியுடனும்
சொ.வினைதீர்த்தான்.

2010/12/27 rajam <ra...@earthlink.net>

karuannam annam

unread,
Dec 27, 2010, 2:24:35 AM12/27/10
to mintamil
Subject: Re: [MinTamil] தோடு, தொங்கட்டான், ஜிமிக்கி ...



கணினி வேகத்தில் சரியான பாடலைத் தந்துள்ளீர்கள்!

2010/12/27 rajam <ra...@earthlink.net>
இதுவா என்று பாருங்கள் ஐயா:
  • திங்களொளி காட்டுமுக மீதுலாவு நாட்டச் செழுங்கய லுதைந்தூக்கலாற் - 
  •         செம்பொனி னிழைத்தமகரக்குழைக ளுஞ்செவிச் செங்கனக வூசலாடப்,--
  • பங்கய விருக்கைமட மாதரது நோக்கியிரு பாலுமிரு வேமாட்டவும் - 
  •         பாயுங் கயற்குல மசைக்குமவ்வூசலிற் பாய்ந்திலதிவ் வூசலெனநீள்,-- 
  • அங்கையின் வலித்துநனி யாட்டுதொறு நின்வா யரும்புநகை
அரும்பும் நகை (ஊஞ்சல்) விதியை மாற்ற முடியாது என்பதைச் சிரித்து அருள் செய்கிறது.
 
 
  • நிலவெழிலினுக்- 
  •         காங்கவர் முகத்திங்கள் சாயப் புராணமறை யாகம மளந்தறிவரும்,-- 
  • புங்கவன் மருங்கு குடி கொண்டவமு தாம்பிகை பொன்னூச லாடியருளே - 
  •         பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (5)
தெள்ளுற்ற தமிழமுதின் துளிகள் பல நூல்களில் இருந்தும் அனுபவிப்பார், தருவார் இல்லையே எனத் தோன்றுகிறது.
நன்றியுடன்
சொ.வினைதீர்த்தான்.
On Dec 26, 2010, at 10:32 PM, karuannam annam wrote:

மிக்க நன்றி அமமா. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் மதித்து மறுமொழி தருகிறீர்கள். பெரியவர்களுடன் கூட்டுவித்த நற்பேறுக்கு 
மகிழ்ச்சி.
பாடலைக் கூறிய பங்காளி பெரியவர் காப்பியக்கவிஞர் திரு மீனவன் அவர்களைத் தொடர்புகொண்டேன். பாடல் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் உள்ளது. சிவஞானமுனிவர் எழுதியது என்று சொன்னார்.
ஊஞ்சல் விதி:
மலைமகளை அலைமகளும் கலைமகளும் ஊஞ்சலில் வைத்து ஆட்டுகி றார்களாம்  காது தொங்கட்டனின் ஆடுதல் ஊஞ்சலில் ஆடுதலைவிட  வேகமாக இருந்ததாம். அதை ஈடுசெய்ய ஊஞ்சலை வேகமாக  ஆட்டுகிறார்களாம். ஆனால் காதணி அதைவிட வேகமாக ஆடியதாம். ஊசலின் வேகம் நீளத்தைப் பொறுத்தது என்ற விதியைப் பெரியவர்கள் அனுபவித்து உணர்ந்து பாடியுள்ளார்கள்.
பாடலைப் பார்த்துச் சொல்வதாகக் கூறினார்.
அன்புடனும் நன்றியுடனும்
சொ.வினைதீர்த்தான்.

2010/12/27 rajam <ra...@earthlink.net>

N. Ganesan

unread,
Dec 27, 2010, 5:32:37 AM12/27/10
to மின்தமிழ்

On Dec 26, 1:43 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> >   காரைக்குடி  
> > கொப்புடையம்மன்  
> > அருளால் செழிக்கிறது  
> > என்ற நம்பிக்கையுண்டு.  
> > கொப்பு என்ற காதணி பற்றி  
> > விவரம் அரிய ஆவல்.
>
> "கொப்பு" பற்றி ஒரு நல்ல  
> வலைப்பதிவு பார்த்தேன்:
>
> http://www.yarlmann.lk/head_view.asp?key_c=314
> ம்
>
> அதோடு, ... ஆத்தூர்  
> பக்கத்தில் "கொப்புடைய  
> பெருமாள்" கோயில் உண்டு  
> எனக் கேள்வி.  
> தெரிந்தவர்கள் மேலும்  
> விளக்கம் தந்தால் நல்லது.
>
> எனக்குத் தெரிந்தவரை ...  
> "கொப்பு" என்பது காதின்  
> மேல் மடலில் அணியப்படுவது  
> -- திருகாணியுடன்.
>

கொம்பு என்பதன் வல்லெழுத்து மிகுந்தால் கொப்பு.

கொப்பி என்பது பட்டிநோம்பு என்று
சிறப்பாகக் கொண்டாடப்படும் கொங்கின்
மாட்டுப்பொங்கல் விழாவில் காளை, எருதுகளுக்கு
கொம்பில் அணிவிக்கப்படும் அணி.
பித்தளைக் கொப்பி, வெள்ளிக் கொப்பி, தங்கக் கொப்பி, ...
எல்லாம் உண்டு. கீதா அவர்களின் வலைப்பதிவிலும்
மாடுகளுக்கான கொப்பி பற்றிெழுதியிருப்பதைப்
பார்த்தேன். கொம்பின் அணி கொப்பி.

காதின் மேல்மடலை கொம்புபோல் உயர்வாய்க்
கருதினர் போலும். கொப்புள், கொப்பளம், ...
நினைவுக்கு வருகின்றன.

நா. கணேசன்

> > இங்கே நான்  
> > அணிந்திருப்பது ஜிமிக்கி
> > --------------------------------------------
>

> > இங்கே இந்தச்  
> > சிறுமியரும் என்  
> > பிற்கால நாத்தனாரும்  
> > அணிந்திருப்பவை  
> > தொங்கட்டானும்  
> > ஜிமிக்கியும்
> > ----------------------------------------------------------------------
> > ---------------------------------------------
>

> > அன்புடன்,
> > ராஜம்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage  
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you  
> > may like to visit our Muthusom Blogs at: http://

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com
> > For more options, visit this group athttp://groups.google.com/- Hide quoted text -
>
> - Show quoted text -

Geetha Sambasivam

unread,
Dec 27, 2010, 8:23:44 PM12/27/10
to mint...@googlegroups.com
கீதா அவர்களின் வலைப்பதிவிலும்//

மாடுகளுக்கு அணிவிப்பார்கள்.  மதுரைப்பக்கம் இந்த வழக்கம் உண்டு.   பொங்கல் சமயம் எல்லா மாடுகளுக்கும் கொம்பில் வர்ணம் அடித்துக் கொப்பி அணிவித்து, அதெல்லாம் ஒரு காலம். :(

2010/12/27 N. Ganesan <naa.g...@gmail.com>


மாட்டுப்பொங்கல் விழாவில் காளை, எருதுகளுக்கு
கொம்பில் அணிவிக்கப்படும் அணி.
பித்தளைக் கொப்பி, வெள்ளிக் கொப்பி, தங்கக் கொப்பி, ...
எல்லாம் உண்டு. கீதா அவர்களின் வலைப்பதிவிலும்
மாடுகளுக்கான கொப்பி பற்றிெழுதியிருப்பதைப்
பார்த்தேன். கொம்பின் அணி கொப்பி.



நா. கணேசன்




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Aug 7, 2011, 2:48:44 AM8/7/11
to mint...@googlegroups.com, rajam
இறுதிப்படத்தில் திருமணப் பெண் காதில் அணிந்திருப்பதன் பெயர் என்ன?
படத்தில் இருப்பது நீங்களா ராஜம் அம்ம?

சுபா

2010/12/24 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

tonk-01.jpg
jammu.jpg
MeenuRaji.jpg
jimikki-1.jpg

LK

unread,
Aug 7, 2011, 3:00:18 AM8/7/11
to mint...@googlegroups.com
மாட்டல் என்று சொல்லுவார்கள்

2011/8/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com



 

jimikki-1.jpg
jammu.jpg
MeenuRaji.jpg
tonk-01.jpg

Geetha Sambasivam

unread,
Aug 7, 2011, 3:05:17 AM8/7/11
to mint...@googlegroups.com

அற்புதமான வரலாறு.  உண்மையிலேயே தென் அமெரிக்காவின் வரலாற்றை நான் சரியாக, சரியாக என்ன, முற்றிலும் அறிந்திருக்கவில்லை. எனக்குத் தெரிந்தது எல்லாம் பிரேஸிலின் காப்பிக்கொட்டை விளைச்சல் மட்டுமே. :((( இம்மாதிரியான அரிய பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. //

மாட்டல் என்று சொல்வார்கள்.

2011/8/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இறுதிப்படத்தில் திருமணப் பெண் காதில் அணிந்திருப்பதன் பெயர் என்ன?
படத்தில் இருப்பது நீங்களா ராஜம் அம்ம?

சுபா

கி.காளைராசன்

unread,
Aug 7, 2011, 3:23:17 AM8/7/11
to mint...@googlegroups.com
அக்கா, வணக்கம்.

படங்கள் அரு​மை, ​தோடு, ஜிமிக்கி, ​தொங்கட்டான், ​கொப்பு, மாட்டல் அ​னைத்து விளக்கங்களும் அரு​மை,

​கொப்பு​டையம்மன் - உற்சவசி​லையில் ​
அன்​னை ​கொப்பு அணிந்துள்ளாளா? என அறிந்து ​கொள்ள ​வேண்டும்!
ஐயா வி​னைதீர்த்தான் அவர்கள் அறிந்திருந்தால் கூறி உதவிடுமாறு ​வேண்டுகி​றேன்.

நல்ல ​தொரு விளக்கம் வழங்கியதற்கு நன்றி அக்கா.

தம்பி
கா​ளை

karuannam annam

unread,
Aug 7, 2011, 5:02:26 AM8/7/11
to mint...@googlegroups.com


2011/8/7 கி.காளைராசன் <kalair...@gmail.com>



படங்கள் அரு​மை, ​தோடு, ஜிமிக்கி, ​தொங்கட்டான், ​கொப்பு, மாட்டல் அ​னைத்து விளக்கங்களும் அரு​மை,

​கொப்பு​டையம்மன் - உற்சவசி​லையில் ​
அன்​னை ​கொப்பு அணிந்துள்ளாளா? என அறிந்து ​கொள்ள ​வேண்டும்!

கொப்புடை அம்மன் உற்சவர் சிலையில் கொப்பு அமைப்பு இல்லை. எல்லாச் சிலை உருவங்களிலும் உள்ள வளர்ந்த காது போன்ற அமைப்பே உள்ளது. எங்கள் பக்க வீடுகளில் பெரும்பாலான வீடுகளில் பிள்ளையார்பட்டிக் கணேசர், கொப்புடையம்மன் படங்கள் வைத்து வழிபடப்படுகிறது.
 அம்மனின் பழைய படங்களைப் பார்க்கும்போது தற்போது எறும்பு ஊர உலோகம் தேயும் என்பதுபோல் அபிடேகத்தால் தேய்மானம் ஏற்பட்டுள்ளது தெற்றெனத் தெரியும். பல எழுந்துஅருள் செய்கிற திருஉருவங்களுக்கும் தேய்மானம் நிகழ்ந்துள்ளது.   பழமை, நேர்த்தி பாதுகாக்கப்பட ஆர்வலர்களும் ஆன்மீகர்களும் பூசகர்களும் வழிவகை காண வேண்டும். வேல், சூலம்
போன்றவற்றுக்கு அபிடேகங்கள் செய்யலாம். திரு காளைராசனுக்கு நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

கி.காளைராசன்

unread,
Aug 8, 2011, 12:49:06 AM8/8/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்.


பழமை, நேர்த்தி பாதுகாக்கப்பட ஆர்வலர்களும் ஆன்மீகர்களும் பூசகர்களும் வழிவகை காண வேண்டும். வேல், சூலம்
போன்றவற்றுக்கு அபிடேகங்கள் செய்யலாம்.

எனது தூரத்து உறவினர் (உறவினரின் மனைவி) தற்​போது ​கொப்பு​டையம்மன் ​கோயிலில் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
என​வே தாங்கள் கா​ரைக்குடி வரும் ​போது நாம் இருவரும் ​சென்று அம்ம​னை வணங்கி இதுபற்றியும் ஆ​லோச​னை நடத்தி வரலாம்.  அவர் சிங்கம்புணரி சித்தர்  ​கோயிலில் உள்ள ஓ​லைச் சுவடிக​ளைச் சுத்தம் ​செய்ய ​​வேண்டி அவற்​றை மீட்டு எடுக்க உதவுவதாகவும் கூறியுள்ளார்.

அன்பன்

Geetha Sambasivam

unread,
Aug 8, 2011, 12:52:45 AM8/8/11
to mint...@googlegroups.com
சுபா, மாட்டல் நான் காதில் தினசரி போட்டிருக்கேனே?? கவனிக்கலை போல! பொதுவா அது அழகுக்குப் போட்டாலும் எனக்குத் தோடு தொங்குவதால் தூக்கி நிறுத்த வேண்டி தினசரிக் கட்டாயமாய்ப் போட வேண்டியதாகி விட்டது. :

2011/8/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

rajam

unread,
Aug 8, 2011, 1:48:19 AM8/8/11
to mint...@googlegroups.com, "கி.காளைராசன் krishnan"
அன்பின் தம்பி காளை,
நலமே வேண்டுகிறேன்.

எனது தூரத்து உறவினர் (உறவினரின் மனைவி) தற்​போது ​கொப்பு​டையம்மன் ​கோயிலில் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
அந்த உறவினரிடம் சொல்லி ஒரு நல்ல பொதுத் தொண்டு செய்வீர்களா?
காரைக்குடிக் கொப்புடையம்மன் கோயில் மிக மிக அழகிய கோயில். ஆனால் அந்தக் கோயிலின் முன் ரொம்ப நெரிசல். சரியான பாதைகூட இல்லை. அந்த ஊருக்குத் தேவையில்லாத நெரிசல் என்று எனக்குத் தோன்றியது. அதுவும் நான் என் நடையுதவியுடன் [with my walker] கோயிலின் முன்னால் வண்டியை நிறுத்தி இறங்கவும், பிறகு வண்டியை வரச்சொல்லி ஏறவும் ... ரொம்ப ரொம்பக் கஷ்டப்பட்டுப்போனேன். அங்கே வந்த "பக்தர்களுக்கு" என் சிரமம் புரியவில்லை. அன்புமீனாவும் கமலியும் இல்லாமல் என்னால் சமாளித்திருக்கவே முடியாது. வண்டியோட்டி குமரனுக்கும் பல்லாயிரம் முறை நன்றி சொல்லவேண்டும்.
நம் நாட்டில் வயது முதிர்ந்தவர்கள் தொகை பெருகிவருகிறது. அதோடு ... உடல் நலக் குறைபாடு உடையவர்கள் கோயிலுக்குப் போகவும் வரவும் தகுந்த ஏற்பாடுகள் இல்லை. நல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும், இல்லையா?
அன்புடன்,
ராஜம் அக்கா

rajam

unread,
Aug 8, 2011, 2:09:09 AM8/8/11
to Subashini Tremmel, mint...@googlegroups.com
இறுதிப்படத்தில் திருமணப் பெண் காதில் அணிந்திருப்பதன் பெயர் என்ன?

இந்தப் படத்தில் என் (ஒன்று விட்ட) நாத்தனார் காதில் அணிந்திருப்பவை ... மேலிருந்து கீழாக -- மாட்டல், தோடு, ஜிமிக்கி.   எல்லாம் வைரமும், தங்கமும், ... . நல்ல பெண். பாவம் ... சின்ன வயதில் புற்றுநோய்க்கு இரையானாள். 



படத்தில் இருப்பது நீங்களா ராஜம் அம்ம?
கீழே உள்ள படத்தில் ... (பார்க்கும் நமக்கு) இடது பக்கம் இருப்பதும் ....  


இங்கே இருப்பதும் அந்தக் கால நான்! நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை! :-)

இந்தப் படம் எடுத்தவரைப் பற்றியும் என் உடை, நகைகள் பற்றியும் ஒருநாள் சொல்வேன்.

அன்புடன்,
ராஜம்

சுபா

2010/12/24 rajam <ra...@earthlink.net>
<tonk-01.jpg>
இங்கே நான் அணிந்திருப்பது ஜிமிக்கி
--------------------------------------------
<jimikki-1.jpg>
இங்கே இந்தச் சிறுமியரும் என் பிற்கால நாத்தனாரும் அணிந்திருப்பவை தொங்கட்டானும் ஜிமிக்கியும்
-------------------------------------------------------------------------------------------------------------------
<MeenuRaji.jpg>
<jammu.jpg>

அன்புடன்,
ராஜம்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன்

unread,
Aug 8, 2011, 3:10:43 AM8/8/11
to mint...@googlegroups.com
காதில் அணியும் தண்டட்டி?
சிவ​பெருமான் காதில் அணிந்துள்ள கு​ழை?
இ​வைபற்றியும் அறிந்தவர்கள் கூறிடுமாறு
அன்புடன் ​கேட்டுக் ​கொள்ளுகி​றேன்.

Nagarajan Vadivel

unread,
Aug 8, 2011, 3:58:18 AM8/8/11
to mint...@googlegroups.com

நாங்க எங்க சங்கையும் கொஞ்சம் ஊதிக்கலாமா?

துத் துரூத் துத் துரூத்

எனது மனைவியின் ஊரில் ஆண்டு தோறும் நடைபெறும் நடனம்.  தமிழ் மரபுடன் பெரிதும் ஓப்புமையுடையது

இந்தப் பெண்மக்கள் உண்மையிலேயே தங்க மக்கள்தான்

http://megtourism.gov.in/videogallery/shadsukmynsiem.html

Female Dancers.

Cloth draped from waist to ankle (Ka Jingpim Shad). Full sleeve blouse with lacework at the neck (Ka Sopti Mukmor). Two rectangular pieces of gold-thread embroidered cloth, pinned crosswise at the shoulders, overlapping each other (Ka Dhara Rong Ksiar). Necklace made of red coral and foil-covered beads in parallel strings (U Kpieng Paila). Golden ear-rings (Ki Sohshkor Ksier). A gold or silver crown with a braid of very fine silver threads in the back that falls past the waist, often adorned with fresh flowers (Kapangsngiet Ksiar Ne Rupa). Large silver armlets on both arms (Ki Mahu), golden wristlets or bracelets (Kikhadu Ne Ki Syngkha). Semi-circular collar of gold/silver plate tied with a thread around the neck. A silver chain worn round the neck (U Kynjiri Tabah). Handkerchiefs tied to both hands to wipe perspiration off face and forehead (Ki Rumal Rit).

khasi_jewellery_704.jpg 

Male Dancers

Male Festive Regalia. Beautiful golden silk turban (Ka Jain spong Khor). Semi-circular collar of gold/silver plate tied round the neck (U Shanryndang). An 18-inch long 'plume 'stuck in the turban (U Thuia). A richly embroidered sleeveless jacket (Ka Jympang). A silver chain worn across the shoulders (U Taban). Silver 'quiver' with silver 'arrows' tied to the waist and an animal tail dangling from the end (Ka Ryngkap). A silver-mesh belt at the waist to cover the cord of the quiver (U Parnpoh Syngkai). Maroon silk cloth worn like a 'dhoti' (Ka Jainboh). A whisk (U Symphiah). A ceremonial sword (Ka Waitlam) and a Handkerchief (Ka Rumar).

khasi_dress_704.jpg

எல்லாம் 24 காரட்.  எளிதில் வளையும் தன்மை உடையது.  நம்ம ஊர் ஆடகப் பொண் போல். இதைச் செய்பவர்கள் தொழில் ரஹசியமாக வைத்துள்ளார்கள்
கல்யானமான புதிதில் எனக்கு கனமான கையில் போட்டுக்கொள்ளும் (ரஜனி ஒரு திரைப்படத்தில் போட்டிருப்பதுபோல்) கையணி ஒன்று கிடைத்தது.  அப்படியே வளைத்து எடுத்துக் கையில் மாட்டிக்கொள்ளலாம்
கொஞ்ச நாள் கழித்து என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்கள்
என்னான்னு கேட்டா என் மனைவி நீ முழிக்கிற முழி சரியில்லை.  அது கையில நிக்குமான்னு ஒரு சந்தேகம் அதான் நகைப் பறிப்பு என்றார்கள்
என் மகளின் திருமணத்துக்கு ஊரில் இருந்து பாதுகாப்புடன் அவர்களின் பாரம்பரிய நகைகளைக் கோண்டுவந்து மாட்டி பிறகு உடனே எடுத்துச் சென்று விட்டார்கள்
இன்னம் கை அரிக்குது
ஆனா இந்த வயசிலே எந்த ஊரிலே எந்த மருமகனுக்குத் இந்த மாதிரித் தங்கம் போட்டுக்கற வாய்ப்பிருக்கு
நாகராசன்
2011/8/8 கி.காளைராசன் <kalair...@gmail.com>
--
khasi_dress_704.jpg
khasi_jewellery_704.jpg

N. Kannan

unread,
Aug 8, 2011, 4:06:24 AM8/8/11
to mint...@googlegroups.com
கொள்ளை அழகு!

அக்கா பயித்தியம்
நா.கண்ணன்

2011/8/8 rajam <ra...@earthlink.net>


> இங்கே இருப்பதும் அந்தக் கால நான்! நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை! :-)

Subashini Tremmel

unread,
Aug 8, 2011, 7:32:31 AM8/8/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/8/8 rajam ra...@earthlink.net

 
இங்கே இருப்பதும் அந்தக் கால நான்! நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை! :-)
 
இந்தக் காலத்து ராஜம் அம்மாவை காட்டாமல் மறைத்து வைப்பது சரியா..? செட்டி நாட்டிலோ மதுரையிலோ எடுத்த படம் ஒன்றைப் போடுங்களேன்.
 
-சுபா
 

Nagarajan Vadivel

unread,
Aug 8, 2011, 7:59:04 AM8/8/11
to mint...@googlegroups.com
முன்னர் ஒருமுறை அவர் படம் இங்கு பதிவு பெற்றதாக என்கணினி ஒரு படத்தைக் காட்டுகிறது. எனினும் ஒருவரின் தனிமைக் கோட்டுக்குள் உள்நுழையாதிருப்பதே முறை என்பதால் அப்படத்தைச் சுட்டிக்காட்ட விழையவில்லை
நாகராசன்

2011/8/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

கி.காளைராசன்

unread,
Aug 26, 2012, 9:48:07 AM8/26/12
to rajam, mint...@googlegroups.com
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.

2011/8/8 rajam <ra...@earthlink.net>
காரைக்குடிக் கொப்புடையம்மன் கோயில் மிக மிக அழகிய கோயில். ஆனால் அந்தக் கோயிலின் முன் ரொம்ப நெரிசல். சரியான பாதைகூட இல்லை. அந்த ஊருக்குத் தேவையில்லாத நெரிசல் என்று எனக்குத் தோன்றியது. ...................
 கோயிலுக்குப் போகவும் வரவும் தகுந்த ஏற்பாடுகள் இல்லை. நல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும், இல்லையா?

அக்கா,
இப்போது காரைக்குடியின் மேற்குப் பகுதியில் ஒரு புறவழிச்சாலை போட்டுவருகிறார்கள்.
இதனால், இனிமேல்
வடக்குப் பகுதியிலிருந்து புதுக்கோட்டை வழியாகத் தேவகோட்டை, இராமநாதபுரம், இராமேசுவரம் செல்லும் வண்டிகள் காரைக்குடிக்குள் வரவேண்டிய தேவையில்லை.  
இதனால் கோப்புடையம்மன் கோயில் வாசலுக்குத் தேவையில்லாத வண்டிகள் வந்து நெரிசல் ஏற்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவலுக்காக,

Innamburan Innamburan

unread,
Aug 26, 2012, 10:45:57 AM8/26/12
to mint...@googlegroups.com
அதுவும் ஊருக்கு நடுவில் கல்லுக்கட்டியில் இருக்கா...


2012/8/26 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--

rajam

unread,
Aug 26, 2012, 11:47:36 AM8/26/12
to mint...@googlegroups.com, Kalairajan Krishnan
அன்பின் தம்பி காளை,
நல்ல தகவலுக்கு மிக்க நன்றி! அடுத்த முறை அங்கே போக வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages