கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு தகவல்கள் தேவை.

398 views
Skip to first unread message

Selva Murali

unread,
Nov 27, 2009, 10:46:10 PM11/27/09
to minTamil
வணக்கம்,
விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்க்கான ப்ரத்யோக  இணைய தளம் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன்...
எனக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு மற்றும் சங்ககாலங்களில் கிருஷ்ணகிரி சம்பந்தப்பட்டிருக்கிறதா போன்ற தகவல்கள் தேவை.

நன்றி

--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

Sri Sritharan

unread,
Nov 28, 2009, 12:00:09 AM11/28/09
to minT...@googlegroups.com
இதனைப் பாருங்கள்:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

தவறாமல் உங்கள் இணையத்தளத்தை விக்கிக் கட்டுரையில் இணைத்து விடுங்கள்.

அன்புடன்
சிறீதரன்

Selva Murali

unread,
Nov 28, 2009, 12:04:38 AM11/28/09
to mint...@googlegroups.com
திரு சிறீரதன்
 இவைகளில் பலதகவல்கள் அவர்களின் மாவட்ட அரசு இணைய தளத்தில் இருந்து அடியேன் உள்ளிட்டது
நன்றி!

2009/11/28 Sri Sritharan <ksth...@bigpond.com>

விஜயராகவன்

unread,
Nov 28, 2009, 6:05:36 AM11/28/09
to மின்தமிழ்
கிரிஷ்ணகிரியின் அதிகாரபூர்வ தளம் http://krishnagiri.nic.in/index.htm
முழுக்க ஆங்கிலத்தில்தான் உள்ளது.

ஒரு பக்கம் தமிழ் தமிழ் என மாரடித்துவிட்டு, தன் வலைதளைங்களை
ஆங்கிலத்தில் எழுதுவதுதான் ’இயக்கத்தின்’ மரபு போலுள்ளது. இதைப்போல்தான்
மற்ற மாவட்ட தளங்களும் எ.கா. http://www.thanjavur.tn.nic.in/


100 வருட தமிழ் ‘மறுமலர்ச்சி’க்கு பின்பு தமிழில் எழுத அரசாங்கத்திற்க்கே
சுய நம்பிக்கை இல்லை. இது என்ன போலி மறுமலர்ச்சி ?

விஜயராகவன்


On 28 Nov, 05:04, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> திரு சிறீரதன்
>  இவைகளில் பலதகவல்கள் அவர்களின் மாவட்ட அரசு இணைய தளத்தில் இருந்து அடியேன்
> உள்ளிட்டது
> நன்றி!
>

> 2009/11/28 Sri Sritharan <kstha...@bigpond.com>


>
>
>
>
>
>
>
> > இதனைப் பாருங்கள்:
>

> >http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%...


>
> > தவறாமல் உங்கள் இணையத்தளத்தை விக்கிக் கட்டுரையில் இணைத்து விடுங்கள்.
>
> > அன்புடன்
> > சிறீதரன்
> > ----- Original Message -----
> > From: "Selva Murali" <murali1...@gmail.com>
> > | விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்க்கான ப்ரத்யோக  இணைய தளம் வெளியிட
> > ஏற்பாடு
> > | செய்து வருகிறேன்...
> > | எனக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு மற்றும் சங்ககாலங்களில் கிருஷ்ணகிரி
> > | சம்பந்தப்பட்டிருக்கிறதா போன்ற தகவல்கள் தேவை.
>
> --
> M.S.Murali (B+ve)
> 99430-94945

> ----------------------------www.visualmediaa.com- Hide quoted text -
>
> - Show quoted text -

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 28, 2009, 11:22:20 AM11/28/09
to mint...@googlegroups.com

அன்புள்ள செல்வமுரளி

உங்கள் அஞ்சல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

கிருஷ்ணகிரி ஒரு வரலாற்றுச் சுரங்கம்.  பல கல்வெட்டுக்களும் நடுகற்களும் அங்கே கிடைத்து வருகின்றன.  மிகச் சமீபத்தில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையத்தைத் துவங்கியிருக்கிறார்கள்.

திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூல் தகடூர் வரலாறு.  அதில் கி்ருஷ்ணகிரி பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன.  அந்த நூலை நான் மதிப்பீடு செய்து இருக்கிறேன்.  என்னுடைய வலைப்பூ

http://www.sanimoolai.blogspot.com

இந்த வலைப்பூவில் புத்தக மதிப்புரைகள் என்னும் தலைப்பில் அந்தக் கட்டுரை கிடைக்கும்.  ஏதாவது பிரச்னை என்றால் சொல்லுங்கள்.  நாளை தனியே அஞ்சலில் அனுப்புகிறேன்.  உங்களுக்கு வேண்டும் என்றால் என்னிடம் இருக்கும் நூலை அனுப்பி வைக்கிறேன்.

சங்க காலத்தில் கிருஷ்ணகிரிக்கு நிறைய தொடர்பு இருந்திருக்கிறது.  அது குறித்த ஆதாரம் ராமகிருஷ்ணன் நூலில் உள்ளது.  இந்த நூலை மறுப்பவர்களும் இருக்கிறார்கள். 

புது எழுத்து ஆசிரியர் மனோன்மணி (முருகன்) உங்களுக்குத் தெரியுமா?  அவருடைய தொலைபேசி எண் 09842647101  அவர் ராமகிருஷ்ணன் நூலை விமர்சித்து என்னிடம் பேசியதாக நினைவு.  அவரிடம் நிறைய தகவல்கள் இருக்கின்றன.

ஜெயச்சந்திரன் என்று ஒரு பெரியவர் காவேரிப்பட்டணத்தில் இருக்கிறார்.  அவரிடம் நிறைய தகவல்கள் உள்ளன.  சமீபத்தில் அவர் என்னிடம் பேசினார். கிருஷ்ணகிரியில் ஜெகதேவி அருகில் சிவாஜி மகாராஜா பொறித்து வைத்த மராட்டியக் கல்வெட்டுக்கள் கிடைத்ததாக சொன்னார். அவற்றின் புகைப்படங்களை எனக்கு அனுப்பியதாக சொன்னார்.  இன்னும் கிடைக்கவில்லை.  கிடைத்தால் உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.

அவருடைய எண்  098427779664

கிருஷ்ணகிரியை சுற்றி சமணப்பள்ளிகள் நிறைய இருந்திருக்கின்றன.  பென்னேஸ்வர மடம் அருகில் ஜைநூர் என்றே ஒரு ஊர் இருக்கிறது.  பென்னேஸ்வர மடம் சிவன் கோவில் பராந்தக சோழன் சமணர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றதற்கு நன்றிக் கடனாகக் கட்டிய கோவில் என்று சொல்வார்கள்.  அந்தக் கோவிலில் ஒரு வலம்புரி விநாயகர் இருக்கிறார்.  அவர் வடக்கு நோக்கி இருக்கிறார்-   அவரை அந்தக் காலத்தில் எங்கிருந்தோ தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  சிற்ப வேலைப்பாடுகளைப் பார்க்கும்போது அது நம்முடைய ஊரின் சிற்பம் போலத் தெரியவில்லை.  மகா சக்தி வாய்ந்தவர் அந்தப் பிள்ளையார் என்று கேள்விப்பட்டேன்.  சமீபத்தி்ல் நேரடியாகவும் அனுபவம் கிட்டியது.  (வேதநாயகி சமேத ஸ்ரீபென்னேஸ்வரர் எங்கள் குலதெய்வம்.  அவருடைய பெயர்தான் எனக்கு என் பெற்றோர் வைத்திருக்கிறார்கள்.)

கிருஷ்ணகிரி பகுதியில் அங்கங்கே உள்ள திரௌபதி அம்மன் ஆலயங்கள் தவிர குந்திக்கும் சகுனிக்கும் அங்கே தனியாக கோயில்கள் உள்ளன என்று சொல்கிறார்கள்.  அதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.  இரண்டாம் மைசூர் போரில் எங்கள் அரசன் ஹைதர் அலி கிருஷ்ணகிரிக்கு அருகே காவேரிப்பட்டணத்தில் வெள்ளையர்களைத் தோற்கடித்து இருக்கிறான்.

கண்ணகி மதுரையை எரித்த பிறகு கோவலன் வழி வாணிகர்கள் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு வெளியேறி கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டணத்தில் குடியேறினார்கள்.  இன்றும் அந்த ஊர் செல்வாக்கு மிகுந்த வாணிக செட்டியார்களால் மிகவும் வளமாக விளங்குகிறது.

ஒசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன்.  இவரும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையத்தில் ஆர்வமாக இருக்கிறார்.  அவரிடம் நிறைய தகவல்கள் இருக்கின்றன.  அவருடைய எண் ஜெயச்சந்திரனிடம் கிடைக்கும். 

இவர்களை எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் இருக்கலாம்.  இருந்தாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் இவர்கள் உதவுவார்கள் என நினைவுபடுத்தவே இவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவி்த்து இருக்கிறேன்.

உங்கள் இணையதளத்துக்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்று நினைத்தாலும் தெரிவியுங்கள்.  மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

நான் மிகவும் அதிகமாக நேசிக்கும் ஊர் கிருஷ்ணகிரி.  1981ல் டெல்லிக்கு வந்த போது என் பெற்றோர்களைப் பிரிந்ததை விட அந்த அழகிய ஊரை விட்டு வெளியேறுவதை நினைத்து வழியெல்லாம் அழுது கொண்டே வந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது.  இப்போதும் ஊருக்குப் போனால் மனது குழந்தை போல உற்சாகம் கொள்கிறது.  இன்றும் டெல்லிக்குத் திரும்பும்போது மனது கனத்துப் போகிறது.

இறந்தாலும் நான் ஆவியாக எங்கள் கிருஷ்ணகிரியின் மாமரங்களில்தான் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

எந்த உதவியும் தயங்காமல் கேளுங்கள்.  என்னால் இயன்றதை எவ்விதத் தயக்கமும் இன்றி செய்து தருகிறேன்.

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்

பென்னேஸ்வரன்


2009/11/28 Selva Murali <mural...@gmail.com>

விஜயராகவன்

unread,
Nov 28, 2009, 2:08:49 PM11/28/09
to மின்தமிழ்
On 28 Nov, 16:22, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:

>
> இறந்தாலும் நான் ஆவியாக எங்கள் கிருஷ்ணகிரியின்

சந்தேகமாக இருக்கா??


விஜயராகவன்

Innamburan Innamburan

unread,
Nov 28, 2009, 6:41:25 PM11/28/09
to mint...@googlegroups.com
நண்பர் பென்னேஸ்வரன்,
இது நான் எதிர்ப்பார்த்த, அருமையான இடுகை.


2009/11/29 விஜயராகவன் <vij...@gmail.com>



--
இன்னம்பூரான்

Geetha Sambasivam

unread,
Nov 28, 2009, 7:45:20 PM11/28/09
to mint...@googlegroups.com
அருமை!
 "பெற்றதாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்தனவே!"

2009/11/28 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Selva Murali

unread,
Nov 28, 2009, 7:48:53 PM11/28/09
to mint...@googlegroups.com
பென்னேஸ்வரன் அய்யா,
மிக்க நன்றி!

திப்பு சுல்தான் காலத்திய கோட்டைகளும் எங்கள் ஊரில்(மத்துர்) பெரிய
அளவில் இருந்துது. அங்கே தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கிடைத்தன..
ஆனால் சிலவருடங்களுக்கு பிறகு அரசியல் வாதிகள் தங்கள் கைவரிசைய காட்டி
கோட்டைகளையும், கோயில்களையும் இடித்துவிட்டு தற்சமயம்
பள்ளியாக்கிவி்ட்டனர் :)

நிச்சயம் உங்கள் உதவி தேவைப்படும்.
நன்றி!

Venkatachalam Subramanian

unread,
Nov 29, 2009, 11:10:48 AM11/29/09
to mint...@googlegroups.com
ஓம்.
திரு.எம்.இராதாகிருஷ்ணன் அவர்கள்(1911-1974) விடுதலை வீரர்.  பச்சையப்பன் அறநிலைய ஆட்சிக் குழுவின் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். தமிழ் நாட்டிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் இதரப் பகுதிகளிலும், பாடல் பெற, பாடல் பெறாத பல டிருக்கோயில்களுக்கு யாத்திரை சென்றுள்ளார். தேசிய நெறியாளர்,வைணவத் தொண்டர்
அவர்” தென்னாட்டுக் கோயில்கள்” என்ற புத்தகம் இரண்டு தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.
இரண்டாம் தொகுதி “ தென்னாட்டுக் கோயில்கள் புத்தகம் மட்டும் என்னிடம் உள்ளது.அதில் குறிக்கப்பட்ட 61 தலங்களில்
திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய இடங்களின் ஆலயம் இரண்டொன்றைக் கண்டிருக்கிறார். கிருஷ்ணகிரி சேலத்திலிருந்து பிரிவதற்கு முந்திய வெளியிடு. வெளியிட்டாளர்: அலயன்ஸ்  மைலாப்பூர் .
முதல் தொகுதியில் கிடைக்க வாய்ப்புள்ளாதா வென்று பார்க்கலாம்.
அதிகாலை என்று ஒரு இணையதளம், பிரகாஷ் எனும் அன்பர் வாரம் ஒரு ஆலயம் என்று வெளியிட்டுவருகிறார்.

அவருடைய மின் அஞ்சல் தொடர்புக்கு"adhikalai nprakash" <nataraj...@gmail.com>,
வணக்கம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

2009/11/29 Selva Murali <mural...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 29, 2009, 12:02:14 PM11/29/09
to mint...@googlegroups.com

அன்பு செல்வமுரளி

உங்கள் ஊர் மத்தூரில் மத்தூர் வடை என்று ஒரு சாப்பிடும் பதார்த்தம் மிகவும் பிரசித்தம்.  இது திப்புசுல்தான் காலத்தில் படை வீரர்களுக்கு விருந்தில் பரிமாறப்பட்ட பதார்த்தம்.  ஒவ்வொரு போரின் போதும் திப்புசுல்தான்  போருக்கு ஒரு நாள் முன்னர் மிகவும் பிரம்மாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்வார்.  அந்த விருந்தில் இந்த மத்தூர் வடையும் குஷ்கா பிரியாணியும் பரிமாறப்பட்டதாம். 

பிரியாணியை கிருஷ்ணகிரி வட்டாரத்தில் மட்டும் குஸ்கா என்று சொல்வார்கள்.  திப்புசுல்தான் விருந்தில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் பற்றி என்னுடைய நண்பர் சுல்தான் ஆய்வு செய்திருக்கிறார்.  அவர் பல ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் உலகெங்கம் பணியாற்றியவர்.  ஒருமுறை டெல்லி ஓபராய் ஓட்டலில் திப்பு கா தாவத் (திப்புவின் விருந்து) என்று ஒரு உணவு விழா ஏற்பாடு செய்தார்.

உங்கள் மத்தூரில் சந்தூரா என்னும் மாம்பழ வகை மிகவும் பிரசித்தம்.  அதுதான் சேலத்து மாம்பழம் என்று நம் ஊரில் விளைந்து சேலத்துக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது.  இந்த மாம்பழம் குலாம் அலி என்பவரால் திப்புவுக்கு கான்ஸ்டான்டிநோப்பிள் நகரத்தில் இருந்து வாங்கி வரப்பட்டது.  தன்னுடைய காதலிக்காக சந்தூர் என்னும் ஊரில் இந்தப் பழத்தின் முதல் கொட்டையை திப்பு நட்டான். அதுவே கிருஷ்ணகிரி மாவட்டம் அனைத்தும் மாமரங்களாகப் பல்கிப் பெருக உதவிய முதல் மாங்கனி மரம்.  இது குறித்தும் உங்கள் ஆய்வினை விரிவு படுத்துங்கள்.

கிருஷ்ணகிரி மத்தூர் போன்ற ஊர்களில் திப்புசுல்தான் Watch Tower என்று சொல்லக்கூடிய கண்காணிப்பு மதில்களை குன்றுகளின் மீது கட்டினார்.  அந்த மதில்கள் மீதிருந்து வீரர்கள் சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர் போன்ற பல்வேறு திசைகளில் இருந்து வரும் படைகளைக் கண்காணிக்க உதவியது.  அந்த மதில்களின் மீது பீரங்கிள் இருந்தன.  நான் சிறுவனாக அந்தக் குன்றுகளின் மீது விளையாடிய போது இந்தத் துருப்பிடித்த சில பீரங்கிகளை பார்த்து இருக்கிறேன்.

(நான் சிறு வயதில் திருட்டுத்தனமாக சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டது அந்த சையத் பாட்சா குன்றின் உச்சியில்தான்.  ஊரில் யாரும் பார்க்கக் கூடாது என்று குன்றின் உச்சியில் ஏறி ஒரு குகையில் ஒளிந்து சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டேன்.  அப்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்)

அந்தக் குன்றின் அடிவாரத்தில் டச்சு வியாபாரிகள் கழுதைகள் மீது உப்பு ஏற்றி வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள்.  அது குறித்த ஓவியம் ஒன்று லண்டன் அரும்பொருட்காட்சியகம் ஒன்றில் கிடைக்கிறது.  அந்த ஓவியத்தின் புகைப்படத்தை நான் இணையத்தில் பார்த்தேன்.  உங்களுக்குப் பிறகு இணைப்பை அனுப்பி வைக்கிறேன்.  அந்த ஓவியம் இன்றும் அங்கே விற்பனைக்கு உள்ளது.  மொத்தம் மூன்று ஓவியங்கள்.  பல்வேறு குறுக்குவெட்டு்த் தோற்றங்களில்.

இணையத்தில் திப்பு காலத்தில் மைசூருக்கு அனுப்ப்பட்டு திப்புவால் சிறை பிடிக்கப்பட்டு கிருஷ்ணகிரியில் வைக்கப்பட்டு இருந்த ஆங்கிலேயப் படைத்தலைவன் ஒருவனுடைய நாட்குறிப்பை இணையத்தில் கண்டுபிடித்தேன்.  அந்த இணைப்பை சேமிக்க மறந்து விட்டேன்.  மீண்டும் நோண்டித் தேடிக் கண்டு பிடித்து உங்களுக்கு அனுப்புகிறேன்.

நுளம்பர்கள் மத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் படையெடுத்து இருக்கிறார்கள்.  அது ராமகிருஷ்ணன் நூலில் உங்களுக்குக் கிடைக்கும்.  கிருஷ்ணதேவராயர் கி்ருஷ்ணகிரி ராஜூ வீதி அருகே (இப்போது அது பாரதி தெரு) ராயர் குளம் என்று வெட்டிக் கொடுத்து இருக்கிறார்.

ஹைதர் தாயாரின் சமாதி கிருஷ்ணகிரி பழையபேட்டை மசூதியில் உள்ளது என்று ஒரு நண்பர் சொன்னார்.  அது எத்தனை தூரம் உண்மை என்று தெரியாது.  அதையும் உங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

கிருஷ்ணகிரியில் வீர சைவர்கள் இருக்கிறார்கள்.  பசவராஜ் என்ற வீர சைவர் தான் திப்புவின் நம்பிக்கைக்கு உரிய படைத்தலைவராக இருந்திருக்கிறார்.  அவர் திப்புவின் சார்பாக பாண்டிச்சேரிக்கு ஒரு சேதியை எடுத்துச்செல்லும்போது கிருஷ்ணகிரி அருகே தான் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.  இது Sword of Thipu Sultan என்கிற சரித்திர ஆதாரங்களுடன் எழுதப்பட்ட புதினத்தில் உள்ளது.  சில வீர சைவர்களிடம் அந்த பசவராஜ் குடும்பத்தின் வாள், கேடயம் போன்ற பொருட்கள் உள்ளன என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஜெயச்சந்திரனை தொடர்பு கொள்ளுங்கள்.   அவர் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்.

டெல்லியில் இருந்து ஏதாவது உதவி என்றால் எழுதுங்கள்.  தயாராக இருக்கிறேன்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2009/11/29 Venkathalam Subramanian <v.dot...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 29, 2009, 12:05:57 PM11/29/09
to mint...@googlegroups.com

இறந்த பின்பு என்று எழுத வேண்டியது.  இறந்தாலும் என்று எழுதிவிட்டேன்.

சந்தேகம் எல்லாம் எனக்குக் கிடையாது விஜயராகவன்.  சொதப்பல் உண்டு.

பென்னேஸ்வரன்

2009/11/29 விஜயராகவன் <vij...@gmail.com>
On 28 Nov, 16:22, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>

devoo

unread,
Nov 29, 2009, 12:14:59 PM11/29/09
to மின்தமிழ்
பென் அண்ணா,
அரிய தகவல்களைத் தருகிறீர்கள்; குகைக்குள் ஹோமம் செய்தது கூட
சுவாரஸ்யமாய்

இருக்கிறது.

தேவ்

On Nov 29, 10:02 pm, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:

> ...
>
> read more »

N D Llogasundaram

unread,
Nov 28, 2009, 7:48:18 AM11/28/09
to mint...@googlegroups.com, mural...@gmail.com
Dear M S Murali,
 
Krishnagiri Dist was carved out of Dhramapuri dist and which in turn got parted from Selam dist.
 
Kindly note that for archived historical informations will be available by their older ref only.
 
For Example Selam dist gazetteer brought out by English administrators
 
I hope you know that during Sangam Age the Dharmapuri town is known as 'Thagadur' and a great epic by name 'takaTUr yAtirai' which was last in the palm leaf version itself during the search by mahaupathyaya UVS who missed it by thread at Tirunalvali (Srivaikundam)
 
Some how about 50+ verses were salvaged from other sources in 'poruL vazi' collections as 'puRattiraTTu' which you can see in our Project Madurai Portal (keyed-volunteered by me)
 
The land in those days called 'cEra nATu' in cangam age and as konku nATu' during later period. The dharmapuri located in 'vaTa kongku' (=North Kongu nadu) bordering 'Ganga nATu'
(Mysore+around) and 'Nolumba nadu' Kolar+ around
 
Dharmapuri dist records highest no of hero stones as per ASI They have recorded huge no of epigraphs most of them are older than Chola period and talks about local chieftains only
 
anpudan
 
NDLogasundaramuthali
Mylapore 29.11.09 
cell: 9 2 8 3 2 4 4 7 9 8
 

 
2009/11/28 Selva Murali <mural...@gmail.com>

விஜயராகவன்

unread,
Nov 29, 2009, 3:30:45 PM11/29/09
to மின்தமிழ்
என்னோட ஜோக்கு அதீதமாக இருந்தால், மன்னிக்கவும்


விஜயராகவன்


On 29 Nov, 17:05, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:


> இறந்த பின்பு என்று எழுத வேண்டியது.  இறந்தாலும் என்று எழுதிவிட்டேன்.
>
> சந்தேகம் எல்லாம் எனக்குக் கிடையாது விஜயராகவன்.  சொதப்பல் உண்டு.
>
> பென்னேஸ்வரன்
>

> 2009/11/29 விஜயராகவன் <viji...@gmail.com>


>
> > On 28 Nov, 16:22, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
> > wrote:
>
> > > இறந்தாலும் நான் ஆவியாக எங்கள் கிருஷ்ணகிரியின்
>
> > சந்தேகமாக இருக்கா??
>
> > விஜயராகவன்
>

> --http://www.vadakkuvaasal.com/

N. Ganesan

unread,
Nov 29, 2009, 4:06:53 PM11/29/09
to மின்தமிழ்

On Nov 27, 9:46 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> வணக்கம்,
> விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்க்கான ப்ரத்யோக  இணைய தளம் வெளியிட ஏற்பாடு
> செய்து வருகிறேன்...
> எனக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு மற்றும் சங்ககாலங்களில் கிருஷ்ணகிரி
> சம்பந்தப்பட்டிருக்கிறதா போன்ற தகவல்கள் தேவை.
>


செல்வமுரளி,

இந்த வாரம் சில ஆராய்ச்சி நூல்கள் பற்றிய தகவல்கள் அளிக்கிறேன்.
பிறகு நீங்களோ உங்கள் நண்பர்களோ நூல் நிலையங்களை நாட வேண்டியிருக்கும்.

நா. கணேசன்

Selva Murali

unread,
Nov 29, 2009, 10:22:10 PM11/29/09
to mint...@googlegroups.com
அடேங்கப்பா!!
எங்க ஊர் தகவல்களே ஆச்சர்யப்படுத்துகிறதே!

வடை விஷயம் புதுசா இருக்கு...
அந்த மதில்சுவர்கள், நடுகற்கள் சில நானே சிறுவயதில் கண்டிருக்கிறேன். அங்கே புதையல்கள் இருந்ததாக சொன்னவர்களும் உண்டு.

ஆமாம் சந்துுரரா பெயர்காரணம் இப்போதுதான் தெரிந்தது. சந்துர் பகுதி, மற்றும் எங்கள் பகுதியில் மாமரங்கள் நிறைய உண்டு. பெங்களுரா, சக்கரைகுட்டி, ஊறுகாய் என்று நிறைய வெரைட்டி பார்த்திருக்கிறேன்....... ஆனாலும் திருட்டு மாங்காய்தான் தித்திக்கும் :)

எந்த இடத்தில் பீரங்கிகளை பார்த்தீர்கள்....

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றில் அவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்துுர்- எல்லையாய் இருந்திருக்கிறது.


நன்றி கணேசன் அய்யா மற்றும் மற்றவர்களுக்கும்

இணைய தளம் வடிவமைப்பு வேளை முடிந்து தகவல்களுக்ாக காத்துக்கொண்டு இருக்கிறது...
இனிய திரட்டிய தகவல்களை உள்ளிடுவது மட்டும்தான் பாக்கி
நன்றி!

2009/11/30 N. Ganesan <naa.g...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 30, 2009, 12:43:03 AM11/30/09
to mint...@googlegroups.com
'திருட்டு மாங்காய் தான் தித்திக்கும்.'

எதற்கும், உப்புக்கல் இரண்டு, அரைட்ராயர் பாஒக்கெட்டில்.


2009/11/30 Selva Murali <mural...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 30, 2009, 1:18:55 AM11/30/09
to mint...@googlegroups.com
இன்னம்பூரான் சார் நாக்கில் எச்சி்ல் ஊற வைக்கிறார்.  அரை டியராயரில் உப்புடன் அலைந்த நாட்கள் அநேகம்.
 
நீங்கள் என்றாவது ஒகேனக்கல் சென்றால் பாலக்கோடு முடிந்தும் வழியெங்கும் மாந்தோப்புகளாக இருக்கும்.  எந்தத் தோப்பில் நுழைந்து காவலாளியைக் கேட்டாலும் ஒரு மூட்டை மாங்காய் பறித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  (அதியமான் பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள்.  காரி எங்கள் ஊர் சிற்றரசன்.  அவன் பெயரில் காரிமங்கலம் என்று ஒரு சிற்றூர் உள்ளது)
சரி. விஷயத்துக்கு வருவோம்.  செல்வமுரளி ஊர் திப்புவின் எல்லைக்கு உட்பட்டுத்தான் உள்ளது.  ஊத்தங்கரை தாண்டியும் திப்புவின் ஆட்சி இருந்தது.  நடுகற்கள் அந்த ஊரின் வீரர்கள் நினைவாக நடப்பட்டவை.  தன்னுடைய தலைவனின் போர் வெற்றிக்காக அந்தக் காலத்தில் வீரர்கள் தங்கள் அங்க உறுப்புக்களைக் காளிக்குப் பலியிட்டுக் கொள்வார்கள்.  அரசம்பட்டி அருகே தலையைக் கொய்து தரையில் வைத்த வீரனுக்கு நடுகல் உள்ளது.  காவேரிப்பட்டணம் துவங்கி பென்னேஸ்வர மடம் நெடுங்கல், அகரம், அரசம்பட்டி வரை நடுகற்கள் உள்ளன.  அவற்றில் பல வீரர்கள் தங்கள் கரங்களை் காளிக்குக் கொடுத்து இருக்கிறார்கள்.
 
கிருஷ்ணகிரி பகுதியில் எங்கு தேடினாலும் அல்பமான ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.  எதாவது ஒரு வகையில் ஒரு ஆள் அல்பமாக இருந்தால் அவன் வெளியூர் ஆளாகத் தான் இருப்பான்.  ஏமாற்றுக்காரர்கள் அங்கே கிடையாது.  சத்தியத்துக்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். 
 
டெல்லிக்கு வந்த புதிதில் சில மனிதர்களுக்குள் பொதிந்து இருக்கும் தந்திரங்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன்.  அவை எல்லாம் எங்களுக்குப் பழக்கமற்றவை.
 
தருமபுரியின் மக்களை தர்மபுத்திரர்கள் என்று சைன யாத்திரிகர்கள் குறிப்பிட்டதாக ஐராவதம் மகாதேவன் தன் நூலில் குறிப்பிட்டு இருப்பார்.  
 
இன்னொரு விஷயம்.  என்னைப் பார்த்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆட்களைப் பற்றி எடை போடக் கூடாது. அவர்கள் நல்லவர்கள்.  அதிபுத்திசாலிகள்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
2009/11/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Selva Murali

unread,
Nov 30, 2009, 1:27:18 AM11/30/09
to mint...@googlegroups.com
அதில்லாமல் வெளியே போகமுடியாது இன்னம்புரான் அய்யா.....
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உப்பு, மிளகாய், சர்க்கரை எல்லாம் சேர்ந்துவிடும்....

இப்பவே எச்சில் ஊருகிறது... :)

2009/11/30 Innamburan Innamburan <innam...@googlemail.com>

'திருட்டு மாங்காய் தான் தித்திக்கும்.'

எதற்கும், உப்புக்கல் இரண்டு, அரைட்ராயர் பாஒக்கெட்டில்.


Innamburan Innamburan

unread,
Nov 30, 2009, 11:59:27 AM11/30/09
to mint...@googlegroups.com
தகடூர், அதியமான், காரி, கிருஷ்ணகிரி, திப்பு சுல்தான் எல்லாவற்றையும்/எல்லோரையும் மிக்க மதிப்பவன், யான். எனவே, அகஸ்மாத்தாக அமைந்து விட்ட உடூருவலை, திசை மாற்றுகிறது என்று சொல்லி விடாதீர்கள், ப்ளீஸ்.

பென்னேஸ்வரன், செல்வமுரளி, தமிழ்த்தேனி, சந்திரா போன்ற பால்யங்களுடன் சேதி சொல்ல விழைகிறேன். ஆமாச்சு, வினோத் இவாள்ளெல்லாம் பால்யமில்லையான்னு கேட்றப்போறா. ஆனா, அவாள்ளெல்லாம், கணினி, கிணினின்னு என்னமோல்லாம் பேசறாளா. நம்ம மரமண்டைலே ஏறமாட்டேங்கிறது. அவாள்ளாம் பால்யம் தான், பழுத்த பால்யம். தேவ், ரங்கனார், ஹரிகி இவ்வாளுக்கும் பால்யமிருந்தது இல்லையான்னு, தேனியார் குறுக்கிடுவார். ஏன் இல்லை? தேவ்வுக்கு ஹிந்திப்பாடமும், ரங்கனாருக்கு, தோளுக்கினியானாக இருந்ததும், ஜாஸ்தியாப்போனா ஹரிகிக்கு, கோணங்கியாட்டம், இதெல்லாம் தான் ஞ்யாபகம் வரும். நரசய்யா தான் வயசுக்கு வந்து, உலகம் சுற்றும் வாலிபனா இருக்காரே. பதிலா போடுவார்! திவாஜி 'நாரயணா!'ம்பார். அதில்லெ மாங்காயும் அடக்கம் எனப்பொருள் கொள்க. கண்ணனோ ரண்டு பக்கமும்; வெண்ணைய் திருடுவதுமுண்டு; கீதோபதேசமும் உண்டு.  

பாடம் 1: சைகிள்லே உக்காந்தபடியே, மாங்கா அடிப்பது எப்படி?

ஸ்வாமி! இது ஒரு கூட்டறிக்கை; பல பால்யர்களின் சேஷ்டைகள் ஒருங்கிணைக்கபட்டுள்ளன். நான் என்றால் நாங்கள், நாங்கள் என்றால் நான் என்று பொருள் கொள்க.

சித்தனவாசல் டு புதுக்கோட்டை மாங்காத்தோப்புக்கள் மயம். தொண்டைமான் ஊரா! வாட்ச்மென் எல்லாம் கறார். 

தாத்தா கிட்ட ஒரு வாக்கிங்க் ஸ்டிக். பிடியைத்திருகினா, ஒரு பட்டாக்கத்தி!!!  தீட்டுத்தீட்டுன்னு தீட்டுவோம். அவருக்கு ஆத்ம திருப்தி, பேரப்பசங்க கரிசனத்தைப் பாத்து. அவரை குழையடிச்சு, வாங்கிண்டு போய்டுவோம். இரண்டு பேர் டீம் ஒர்க். ஒத்தன், . சைகிள்லே உக்காந்துண்டு, வாள் வீச்றது. இன்னொத்தான், சாக்குப்பிடிச்சு மாங்காயெல்லாம் உள்வாங்கிக்கிறது. காஷ்டமெளனம். மத்யானம் ஒரு மணி தான் பெஸ்ட். வாட்ச்மனைவியாள் கொணர்ந்த கருவாட்டை, அவன் முகரும்போது, நாங்க எக்ஸிட். அவன் பிடிச்சுட்டா? அதான் 'மார்கழித்திங்கள் மடி நிறையப்பொங்கல்ன்னு' அம்மாவை ட்பாய்ச்சு கட்டிண்டு வந்த சக்கரைப்பொங்கலை, பெருமாள் கோவில் ப்ரசாதம்ன்னு, அவங்கிட்ட படைக்கிறது. பிரிச்சுண்டு இருக்கச்ச ஜூட். ஒரு தோட்டத்து மாங்காயை, அடுத்ததோட்டத்து வாசல்லே பக்குவம் பண்றது, மல்லிகா பத்ரிநாத் ஸ்டைல்லே. அதுக்குத்தான், உப்புக்கல், மொளகாப்பொடி இத்யாதி.
.
பாடம் 2:

கேட்டா சொல்லபடும்.
இன்னம்பூரான்

2009/11/30 Selva Murali <mural...@gmail.com>

devoo

unread,
Nov 30, 2009, 12:34:57 PM11/30/09
to மின்தமிழ்
Nov 30, 9:59 pm, Innamburan Innamburan

//தேவ்வுக்கு ஹிந்திப்பாடமும், ரங்கனாருக்கு,தோளுக்கினியானாக இருந்ததும்,
ஜாஸ்தியாப்போனா ஹரிகிக்கு,கோணங்கியாட்டம், இதெல்லாம் தான் ஞ்யாபகம்
வரும்//

ஆம்,இன்னம்பூரான் சார், மற்றவர் விஷயம் எப்படியோ,
என் விஷயத்தில் நீங்கள் கூறுவது முற்றிலும் சரி;
ஆலய வழிபாடு,வடமொழி/ஹிந்தி வகுப்புகள்,பள்ளிப்பாடம் என்று கழிந்த
நாள்கள்தான் நினைவுக்கு வருகின்றன.அதுதான் இந்த அனுபவங்களைப்
படிக்கும் ஆர்வத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

தேவ்

N. Kannan

unread,
Dec 1, 2009, 12:38:37 AM12/1/09
to mint...@googlegroups.com
> தாத்தா கிட்ட ஒரு வாக்கிங்க் ஸ்டிக். பிடியைத்திருகினா, ஒரு பட்டாக்கத்தி!!!
>  தீட்டுத்தீட்டுன்னு தீட்டுவோம். அவருக்கு ஆத்ம திருப்தி, பேரப்பசங்க
> கரிசனத்தைப் பாத்து.

ஆகா! எங்க தாத்தாகிட்டேயும் இப்படியொரு வாக்கிங் ஸ்டிக் கத்தியுண்டு.
குடைக்குள் இருக்கும் கத்தியுமுண்டு.
ஆனா அதற்கு இப்படியொரு உபயோகமுண்டு என்று இது நாள் வரை தெரியாதே!

ஆத்தங்கரைக்கு அப்பால, மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கருகில்தான் மாங்காத்தோப்பு.
போய் களவாடுவதுண்டு. அது ஒட்டுமாங்கனி. மிகத்தாழ்வாக இருக்கும். எனவே
பிரச்சனை இருக்காது.
ஆனால் பெரும்பாலும் தொரட்டி கட்டி கொடுக்காப்புளிதான் பறிப்போம். அதற்கு
அவ்வளவு எதிர்ப்பு இருக்காது, மனிதர்களிடமிருந்து. ஆனால் முள் வைத்து
மரம் எதிர்க்கும்!
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பாங்காக் (தாய்லாந்து) மார்க்கெட்டில்
கொடுக்காபுளி பார்த்தவுடன் ஒரு நொடி, ஒரு துள்ளல்.

க.>

> பாடம் 2:
> கேட்டா சொல்லபடும்.


சொல்லுங்க, சொல்லுங்க!

க.>

devoo

unread,
Dec 1, 2009, 1:26:58 AM12/1/09
to மின்தமிழ்
Dec 1, 10:38 am, "N. Kannan"

> பாடம் 2:
> கேட்டா சொல்லபடும்.

சொல்லுங்க, சொல்லுங்க!//

இப்படிக் கேட்டால் உடனே சொல்லமாட்டார்;
“ஜடிதி ! சொல்லுங்கள் , தத்க்ஷணம்,”
என்று கேட்க வேண்டும்.

தேவ்

Innamburan Innamburan

unread,
Dec 1, 2009, 1:40:13 AM12/1/09
to mint...@googlegroups.com
தேவ் நம்பள்கி மாட்றாரு. நான் குறி வைத்த பென்/செல்வம்/தேனி 'கம்'னு இருக்காஹகளே என்று சோகத்தில் ஆழ்ந்திருக்கிறேன், தேவ் பாயி.


2009/12/1 devoo <rde...@gmail.com>



--

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 1, 2009, 5:38:13 AM12/1/09
to mint...@googlegroups.com
இன்னம்பூர் ஐயா
 
வடக்கு வாசல் இதழ்களை முடித்து அஞ்சலில் சேர்க்கும் தலையாய பணி மாத இறுதியிலும் மாதத்தின் முதல் தேதியிலும். 
 
அதனால் அந்த நாட்களில் நான் மதகில் உட்காவதில்லை.  அதனால் எந்த அய்யம்பேட்டை வேலையும் நடக்காது உலகம் சுபிட்சமாக இருக்கும்.
 
சரி. இப்போ வந்தாச்சு.
 
உங்களுடைய அற்புதமான அனுபவப் புதையலை ஊடுருவல் என்று சொல்கிறீர்களே.  உங்களுக்கே இது அநியாயமாக இல்லையா?
 
என்னுடைய சில பால்ய விளையாட்டுக்களை சொன்னால் நான் திரும்ப கிருஷ்ணகிரிக்குப் போக முடியாது.  இன்னும் சில வருடங்கள் கழித்து வயோதிகத்தில் போனாலும் என்னை விட சில வயதான வயோதிகர்கள் (முக்கியமாக அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளை தங்கள் வீடுகளில் வளர்த்துக கொண்டிருந்த தந்தைமார்கள்) எனக்காகவே தங்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு என்னைக் கொலை செய்த பிறகு பரமன் அடிக்குப் போய் சேருவார்கள்.
 
அதனால் நிறைய விஷயங்கள் நேர்ப்பேச்சில் மட்டும.
 
மற்றபடிக்கு செட்டியார் குளத்தில் குளித்த அனுபவங்களை சொல்லலாம்.  அதை என்னுடைய நாவலுக்காக வைத்திருக்கிறேன்.
 
அன்புடன்
 


 
2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Kannan

unread,
Dec 1, 2009, 8:57:26 AM12/1/09
to mint...@googlegroups.com
2009/12/1 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:

> அதனால் நிறைய விஷயங்கள் நேர்ப்பேச்சில் மட்டும.
>

ஆக அடுத்தமுறை டெல்லி வந்தா பாணிபூரி, சமோசா, சாய் இவைகளோட கதை கேட்கலாம்
என்கிறீர்கள். அதுவும் சரிதான் ;-)

க>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 1, 2009, 11:49:50 AM12/1/09
to mint...@googlegroups.com

கண்டிப்பாக.

நான் டெல்லியில் பிரம்மச்சாரியாக தனியாக வாசம் செய்து கொண்டிருந்தபோது என்னுடைய கதை சொல்லும் ஆற்றலைத் தாங்க முடியாமல் பல நண்பர்கள் ஓரிரு மாதங்கள் என்னுடன் அறையைப் பகிர்ந்து விட்டு தலைதெறிக்க ஓடி இருக்கிறார்கள்.

அந்த அனுபவம் உங்களுக்கும் வேண்டும் என்கிறீர்கள். 

பெருமாள் சித்தம் அப்படி இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

அன்புடன்

பென்னேஸ்வரன்

2009/12/1 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 1, 2009, 12:14:45 PM12/1/09
to mint...@googlegroups.com
தத்க்ஷணம் வந்துடுத்து.

அடுத்த பாடம்:

சிதர் தேங்காய் பொறுக்குவது எப்படி?

இது சற்றே சிக்கலான நடவடிக்கை. மாந்டேக் அஹ்லுவாலியா மாதிரி பேப்பர் திட்டமெல்லாம் உருப்படாது. இடல், பொருள், ஏவல், காலநிலை, பருவமாற்றங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கி, வருமுன் காப்போனாக, பலே திட்டம் போடணும். மத்த பசங்களும் இப்டியே செய்வதால், அதற்கும் கவசம் போட்டுத்தான் களத்தில் இறங்கவேணும். ரூல் பட்டியல் இதோ:
  1. எவ்வளவு குண்டு தேங்காயாக இருந்தாலும், எத்தனை தேங்காய் உடச்சாலும், கல்யாண வீடுகளில் சதிர் தேங்காய் பொறுக்கக்கூடாது. ஏதாவது கிழம் பாத்துட்டு, ஏடாகூடமாக, அப்பாட்டப் போட்டு கொடுத்துடும். அவர் தோலை உரிச்சுறுவார், உரிச்சு. மேலும், கல்யாணவீடுகளில், கொள்ளையே அடிக்கலாம். போயும், போயும், சிதர் தேங்கா பொறுக்குவாளோ? கல்யாணக்கொள்ளை அடுத்த பாடம், யாராவது கேட்டா? அது வரை பூடகம்.
  2. சீஸன் உண்டு சார். பரிக்ஷை, வேலை வாய்ப்பு, பெண் பாக்க வரது. அப்பெல்லாம், தேர்தல் காசு மாதிரி, பிள்ளயாருக்குத் தேங்காய். நோட்டம் விட்டுக்கணும்.
  3. மரியாதை நிமித்தமாகக்கூட, அக்காலங்களில், அனுமார் கோயிலுக்கு போகக்கூடாது. நோ தேங்காய். ஒன்லி வ்டை. எல்லாரும் என்னெனெம்மோ எழுதறா. ஆனா, ஆரும் சொல்றதில்லே,அனுமாருக்கு ஏன் இந்த பல்லுடைக்கும் பலகாரம்? னு. வடையுமில்லை; தட்டையுமில்லை; வானரங்களாலும் சுவைக்க முடியாத இப்பொருள் அனுமாருக்கு உகந்ததா? தமிழ்த்தேனியால, ஆதாரம் காட்டமுடியுமா? 
  4. வ்யூகமாத்தான் போவோம். முதல்ல, உடைக்க வந்தவனை, சூழ்ந்து கொண்டு, கருமமே கண்ணாக, தேங்கா தெரிசனம். கையைத்தூக்கச்ச, ஒரு சின்ன கூச்சல்/ சலசலப்பு பண்ணா, தடுமாறி, லேசாப்போட்றுவான். சிதறாது. மூடியே கிடைக்கலாம். லபக்!
  5. மத்த வாண்டுகள் சும்மா இருக்குமோ? கண்டது காணாது மாதிரி எல்லாம் பாயும். அணி ஃபார்ம் பண்ணிருந்தா கவலையில்லெ. அதுக்குத்தானே சடுகுடு கத்துண்டோம். சும்மா, அபிமன்யு சுழற்று தெரியுமோ உங்களுக்கு? ஆவேசம் வந்த மாதிரி, ஆரவாரமாப் புகுந்தா, எதுத்தாத்து தேவுடுவே அசந்துறுவான். இத்தனைக்குக் அவன் கல்லுளிமங்கன். ஆப்டதை எச்சப்பண்ணிடணம். அது தான் பட்டா, மனைக்கு இருக்க்றாப்ல. விட்ட்றுவாங்க பசங்க. 
  6. சும்மாச்சொல்லப்டாது. நாங்க எல்லாருமே பொதுவுடமை வாதி. எச்சப்பண்னதை அலம்பிட்டு, சமபாகம் பண்ணித்தான், கோயில் பிரகாரத்திலே, தேங்கா போஜனம். பதார்த்த்மெல்லாம் உண்டு. அப்பெல்லாம் ஹிட்லர் சண்டை. நாமெல்லாம், அவன் பக்கம், மன்சுக்குள்ளே. அஸ்கா சர்க்கரை கிடைக்காது. நாடார் மளிகை வேலு கொண்ட்ருவான். கடவுளுக்கு தெரியுமோ, தெரியாதோ, நாடாருக்குத் தெரியாது. வெல்லம், சரோஜா உபயம். அவ இருக்கறது எங்களுக்கு ஸ்டெரந்த். எது கேட்டாலும், ஓன்னு அழுவா; கேட்டவாளுக்கெ ஒரு மாதிரி ஆயிடும். கருப்ப்ட்டி, நான் கொண்டுவருவேன். ஆத்த்லெ கருப்பட்டிக்காப்பி தான். இந்த கலவையைப்போல வேஸ்ட் கிடையாது. அப்பா ஃப்ரெண்ட் ஒத்தர் கோவில்பட்டிலேர்ந்து அனுப்புவார், டிவிஎஸ் பார்சல். நான் தான் தூக்கிண்டு வருவேன். அந்த ஸ்டேஜிலெயே, நம்ம ரேஷன் பதுக்கல். நோ கருப்பட்டி காப்பி.
  7. தேங்காயைக் கூறு போட கத்தி வேணும்; சரோ அர்வாமணையே கொண்டுவந்திருப்பா.
அப்போ இத்தனை சண்டை எதற்குன்னு கேக்கறேளா? அதுலெ தாம் மவிசு. நான் சொல்லல்லை; ஹிட்லர் சொல்றான்.

வினா விடைகள்.
தேவ்! பாத்தேளா? தத்க்ஷணம்னா பெருமாள் சித்தம்க்றார், வடக்கு வாசலார்.
கண்ணன்!
இந்த பித்தக்ளோபிஉஅம் டல்ஸி இருக்கே. அத பத்தி:
"வெறுங் கொடுக்காப்புளி மரமானாலும் அதன் உபயோகம் அதிகம் உண்டு. கொடுக்காப்புளிப் பழம் ஒரு கூறுக்கு ஒரு பைசா வீதம் விலையாகும்பொழுது அதை யாராவது விட்டு வைப்பார்களா? பள்ளிக்கூட வாசலிலும், மில் ஆலைப் பக்கங்களிலும் சவரியாயி காலையில் ஒரு கூடை எடுத்துக் கொண்டு சென்றால் ஒரு மணி நேரத்தில் கூடை காலி"

நான் சொல்லல்ல. புதுமைப்பித்தன்.

அது மூலிகையாமே! சுகுமாரன் ஒத்துக்றாரா?

நான் படித்து அறிந்தது.

"கொடுக்காப்புளி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது. 

இதன் பண்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் ஆகும் 

இதன் இலைகளில் மருத்துவக் குணம் இருக்கிறது 

இலைக்கஷாயம், தொண்டைக்கரகரப்பு, சளி, இருமல் ஆகியவற்றிற்கு இது நல்ல பலன் அளிக்கிறது 

இது ரத்தச் சூட்டையும் தணிக்கிறது 

நிறத்தையும் ஒளிரச் செய்கிறது 

ஒரு தடவை மருந்தில் இலைகளின் சாறு 25 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு இலை தெரியாது. சுட்டதுன்னா, பழம், சிவப்பு கல்ந்து காணப்படும். வெள்ளையா இருந்தா காய். ரொம்ப சாப்டா, வயிரு வலிக்கும். அம்மா விளக்கெண்ணெய் கொடுக்க வந்துருவா. அந்த பாடம் நாலாவது, பெருமாள் சித்தம் இருந்தால்.

பெண்ணேஸ்வரன்,
வடக்கு வாசல் வேலை, இடக்கு இல்லாமல் நடந்துட்டாப்லே இருக்கு. எனக்கு புதுக்கோட்டை போக பயமே இல்லை. வைரிகள் எல்லாம் செத்துப்போய்ட்டா. ஆனா, இந்த நரசய்யாவோட மத்ராஸ் பட்னமிருக்கே, அங்க தான் பயம். தெருவிலே வந்தா, அடிப்பேங்க்றாங்க. அதான், வெயில்லெக்கூட கோட்டுப்போட்டுண்டு வளைய வரேன். 

வரேன்
இன்னம்பூரான்

2009/12/1 N. Kannan <navan...@gmail.com>

devoo

unread,
Dec 1, 2009, 12:49:46 PM12/1/09
to மின்தமிழ்
*கொடுக்காப்புளி*

நன்கு பழுத்திருந்தால் இனிப்பாக இருக்கும்;அதன் வாசனை அலாதியானது.
காய்வெட்டாக இருந்தால் சற்றுத் துவர்ப்பாக இருக்கும்.
நீண்ட விடுமுறையின்போது நடக்கும் பம்பர விளையாட்டின்போது மகாதேவன்
என்ற மாது பறித்துத் தருவான். திருட்டெல்லாம் கிடையாது, தெரிந்தே
செய்வோம்; மாங்காய் என்றால் ஒருவேளை அனுமதிக்க மாட்டார்கள் போல.
முள்மரம் என்பதால் வேலிக்காக வளர்ப்பார்கள்.

இன்னம்பூரார் செருகு கத்தியைக் கூர் தீட்டியதுபோல் பம்பர ஆணியைக் கூர்
தீட்டுவோம்,
ஆக்கர் வைப்பதற்காக.

தேவ்

Innamburan Innamburan

unread,
Dec 1, 2009, 12:52:39 PM12/1/09
to mint...@googlegroups.com
பலே! பலே! உம்மையும் இழுத்துக்கொண்டு வந்துட்டேனே. கல்யாணம் திவயமா இருந்தது.
இன்ன்மபூரான்

2009/12/1 devoo <rde...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 1, 2009, 1:19:35 PM12/1/09
to mint...@googlegroups.com
எவ்வளவு சாமர்த்தியமாக இந்த சிதர் தேங்காய் பொறுக்கும் வேலையைப்  பண்ணியிருக்கின்றீர்கள்.  இன்னும் என்னென்ன வரப் போகிறதோ..????:-)
 
சுபா

2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:22:23 PM12/1/09
to mint...@googlegroups.com
ஆனா, இந்த நரசய்யாவோட மத்ராஸ் பட்னமிருக்கே, அங்க தான் பயம். தெருவிலே வந்தா, அடிப்பேங்க்றாங்க. அதான், வெயில்லெக்கூட கோட்டுப்போட்டுண்டு வளைய வரேன். 

வரேன்
 
 
ஹஹஹஹஹஹஹஹஹ்  அதுக்கு  இன்னுமா  பயந்துண்டு இருக்கீங்க
 
அதெல்லாம் வெத்து வேட்டு
 
ஒருத்தர் கை வைக்க முடியுமா  உங்க மேல
 
மின் தமிழே  திரண்டு வரும்
 
அதிகாரிகளும் வருவார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


1-12-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:24:52 PM12/1/09
to mint...@googlegroups.com
தேனி 'கம்'னு
 
 
தேனீ  ஹம் பண்ணிண்டுதான் இருக்கு
 
 
சில நேரத்திலே  காது குப்புன்னு  அடைச்சுக்கும்
 
எதுவும் கேக்காது
 
அது தெரியாம  நாம்  உரக்க கத்திப் பேசுவோம்
 
கொஞ்சம் காது மந்தமாயிருப்பவர்கள்  உரக்க கத்திப் பேசுவர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
1-12-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
தேவ் நம்பள்கி மாட்றாரு. நான் குறி வைத்த பென்/செல்வம்/தேனி 'கம்'னு இருக்காஹகளே என்று சோகத்தில் ஆழ்ந்திருக்கிறேன், தேவ் பாயி.

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:27:13 PM12/1/09
to mint...@googlegroups.com
தேனியார் குறுக்கிடுவார்
 
தேனெடுக்க  வேறு வழி  ஏதையா.?
 
குறுக்கிட்டுதான் ஆகவேண்டும்
 
குறுக்கிலும்  நெடுக்கிலும் போனாதானே  மகரந்தம் மாட்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
30-11-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

Innamburan Innamburan

unread,
Dec 1, 2009, 10:28:14 PM12/1/09
to mint...@googlegroups.com
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமில்லையே! கோட்டு,கீட்டுன்னு ப்ரூடா விட்டேன்.
இ ஹி

2009/12/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:33:19 PM12/1/09
to mint...@googlegroups.com
அனுமாருக்கு ஏன் இந்த பல்லுடைக்கும் பலகாரம்? னு. வடையுமில்லை; தட்டையுமில்லை; வானரங்களாலும் சுவைக்க முடியாத இப்பொருள் அனுமாருக்கு உகந்ததா? தமிழ்த்தேனியால, ஆதாரம் காட்டமுடியுமா? 
 
 
ஒரு காலத்திலே  வடைமாலை  செய்து
,அதுவும் பக்தியோடு சுத்தபத்தமாய்  மனதும் உடலும் சுத்தமாய்
பூரண பக்தியாய்  அடியாரின் மனநிலையை ஒத்து
ப்ரசாதங்கள்  செய்தனர்
 
 
அதனால்  அப்போதெல்லாம்  வடை பல்லுடைக்கும் பலகாரமாயில்லை
 
அது மட்டுமல்ல  அப்போதெல்லாம்  உளுத்தம்பருப்பு சுயம் இழக்காமலிருந்தது
மனிதர்களும் சுயமிழக்காமலிருந்தார்கள்
 
 
அவர்கள்  பக்தியும் கலப்படமில்லாமல்  உளுத்தம் பருப்பும் கலப்படமில்லாமல்
இருந்தது
 
 
அதெல்லாம்  சரி   ப்ரும்மாஸ்ரத்தையே  தகர்த்தெரிந்த  அனுமனுக்கு  இந்த  பல்லுடைக்கும்  வடை எம்மாத்திரம்
 
ஆமாம்  நீங்கள்   நங்க நல்லூர்  ஆஞ்சனேயரின் வடை  சாப்பிட்டதில்லையா
 
வாயில் போட்டால் கரையும்
 

அன்புடன்
தமிழ்த்தேனீ
 
1-12-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
தத்க்ஷணம் வந்துடுத்து.

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:35:29 PM12/1/09
to mint...@googlegroups.com
அதனால் எந்த அய்யம்பேட்டை வேலையும் நடக்காது
 
 
அதனால்  இன்னம்புராரின் ஐயம்பேட்டை வேலை  உம்மிடம் நடக்காது  என்கிறீர்களா
 
 
உண்மை  உண்மை உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
1-12-09 அன்று, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> எழுதினார்:
2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>


அன்புள்ள
தமிழ்த்தேனீ

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:37:18 PM12/1/09
to mint...@googlegroups.com
சிதர்  தேங்காய்  பொருக்குவதிலும் நுணுக்கம் உண்டு
 
சிதர் தேங்காய்  உடைப்பதிலும்  நுணுக்கம்  உண்டு
 
அனுபவம்  பேசுகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
1-12-09 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:
2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:41:19 PM12/1/09
to mint...@googlegroups.com
இன்னம்பூரார் செருகு கத்தியைக் கூர் தீட்டியதுபோல் பம்பர ஆணியைக் கூர்
தீட்டுவோம்,
ஆக்கர் வைப்பதற்காக.

 
 
பல  பம்  பரங்கள்  சிதறும்  சிதர்த்தேங்காய்  போல
 
இரண்டே  எட்டில்  மரத்தின் உச்சிக்கு  ஏறி  மரத்தையே  உலுக்கி
 
காய்கள் சிதரவைக்கும் சாமர்த்திய  சாலிகளை
 
சென்னை  கோட்டைக்குப் போகும் வழியில்  சாலையின் இரு புறமும்  
இருக்கும் புளிய மரங்களில்  கண்டு வியந்த காலம்  உண்டு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

 
1-12-09 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:43:26 PM12/1/09
to mint...@googlegroups.com
கொடுக்காப்புளிப் பழம்

 

பேரே  கொடுக்கா  புளி
 
அனேகமாக  பழுத்த  பழம்  கிடைப்பதரிது
 
காய்வாட்டாய்  உண்டால்  தொண்டையை அடைக்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
1-12-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
தத்க்ஷணம் வந்துடுத்து.

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 10:45:59 PM12/1/09
to mint...@googlegroups.com
கையைப் பிரித்துப் பார்த்து விட்டுதான்  விழா அரங்கிற்குள் அனுப்ப உத்தரவு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2-12-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

vj kumar

unread,
Dec 1, 2009, 11:31:34 PM12/1/09
to mint...@googlegroups.com
அருமை. டமார் என்று ஒரு சத்தம் கேட்டதும், அது சதுர தேங்காய் என்றால் எல்லோரும் சத்தம் கேட்ட தெருக்கோடி  பிள்ளையார் கோயிலுக்கு ஓடுவோம். அதே கொஞ்சம் டிங் டிங் நு கேட்டா ...கண்ணாடி உடையற சவுண்ட்  - கிரிக்கெட் அலது கில்லி தாண்டா கண்ணாடியை பதம் பார்த்த சத்தம் -   கேட்டவுடன் எல்லோரும் அபீட் ஆகா வேண்டும். ( விளையாடியவன் வேடிக்கை பார்த்தவன் ..அந்த பக்கம் வந்தவன் !! எல்லோரும் தான் ) அது என்னவோ உடையற கண்ணாடி நமக்கு பிடிக்காத மாமி இல்லை ரிடைர் ஆன தாத்தா வீடா தான் இருக்கும். அப்புறம் என்ன ஒரு அரை மணி தனி ஆரோகணம் தான்.

விஜய் 
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/2 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Kannan

unread,
Dec 1, 2009, 11:32:00 PM12/1/09
to mint...@googlegroups.com
2009/12/2 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> வ்யூகமாத்தான் போவோம். முதல்ல, உடைக்க வந்தவனை, சூழ்ந்து கொண்டு, கருமமே
> கண்ணாக, தேங்கா தெரிசனம். கையைத்தூக்கச்ச, ஒரு சின்ன கூச்சல்/ சலசலப்பு பண்ணா,
> தடுமாறி, லேசாப்போட்றுவான். சிதறாது. மூடியே கிடைக்கலாம். லபக்!
> மத்த வாண்டுகள் சும்மா இருக்குமோ? கண்டது காணாது மாதிரி எல்லாம் பாயும். அணி
> ஃபார்ம் பண்ணிருந்தா கவலையில்லெ. அதுக்குத்தானே சடுகுடு கத்துண்டோம். சும்மா,

சூப்பர் தலைவா!
இந்தக் கழுகளும் இப்படித்தான் பண்ணும். அடித்த இரையை சிறுத்தை தின்னும்
முன் இவை பரக்க, பரக்க வந்து நின்று போடும் கூச்சலில், சிறுத்தை பயந்து
ஓடிவிடும். அது போல்தான் இதுவும் ;-)
இவர்கள் முட்டுகிற முட்டலைப் பார்த்து தேங்காய் உடைக்க வந்தவன், எங்கே
இவர்கள் தலையை உடைத்துவிடுவோமோவென்று பயந்து மெல்லப் போட அரைத்தேங்காய்
கிடைக்க வாய்ப்புண்டு.
பொண்டுகள் இருப்பதன் சௌகர்யம் புரிகிறது.
ஆனால் கிராமத்தில் சில அசுர வீரர்கள் உடைக்கும் போது தேங்காய் முந்நூறு
சிதறலாகி தெருமூலையில் கிடக்கும் நாய் முன்னால் போய் விழ அது தூக்கி
கொண்டு ஓடிவிடும். அதைத் துரத்திப்பிடித்து பிடுங்கித்தின்னும் கூட்டமும்
உண்டு.
சதிர் தேங்காய் தின்றே நெத்திப்பல்லான பேர்களைச் சொல்ல விட்டுப்போச்சே ;-)

நல்ல தொடர் இது.
Swami and Friends போல.

க.>

N. Kannan

unread,
Dec 1, 2009, 11:39:27 PM12/1/09
to mint...@googlegroups.com
2009/12/2 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> வ்யூகமாத்தான் போவோம். முதல்ல, உடைக்க வந்தவனை, சூழ்ந்து கொண்டு, கருமமே
> கண்ணாக, தேங்கா தெரிசனம். கையைத்தூக்கச்ச, ஒரு சின்ன கூச்சல்/ சலசலப்பு பண்ணா,
> தடுமாறி, லேசாப்போட்றுவான். சிதறாது. மூடியே கிடைக்கலாம். லபக்!
> மத்த வாண்டுகள் சும்மா இருக்குமோ? கண்டது காணாது மாதிரி எல்லாம் பாயும். அணி
> ஃபார்ம் பண்ணிருந்தா கவலையில்லெ. அதுக்குத்தானே சடுகுடு கத்துண்டோம். சும்மா,

சூப்பர் தலைவா!

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 2, 2009, 3:23:18 AM12/2/09
to mint...@googlegroups.com
இதில் இத்தனை விஷயம் உண்டா?
 
சின்ன ஊரில் இருந்ததால் தேங்காய் திருடுவது சுலபமான காரியமாக இருந்தது. சிதர் தேங்காய் பொறுக்கம் பாக்கியம் கிட்டியதில்லை.
 
வீ்ட்டில் தேங்காய் திருடி பலமுறை சினிமா பார்த்திருக்கிறேன்.  நான் பார்த்த பல எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படங்கள் எங்கள் வீட்டுத் தேங்காய் உபயம்.  நான் பி.யு.சியில் ஃபெயில் ஆனதுக்கும் இந்த சினிமாக்களும் அதற்கு மூல காரணமான தேங்காய்களும் பிரதானமான காரணங்களாக அமைந்தன என்று சொல்லலாம்.
 
எங்கள் அனுபவம் எல்லாம் ஒன்றுமே இல்லை.
 
இன்னம்பூரான் சார் ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே எழுதலாம் போல இருக்கே.  கொஞ்ச நாளைக்கு மாமாவின் ஆட்டம் நிற்காது போலிருக்கிறதே.
 
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/12/2 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Dec 2, 2009, 3:34:04 AM12/2/09
to mint...@googlegroups.com
2009/12/2 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:

>
> இன்னம்பூரான் சார் ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே எழுதலாம் போல இருக்கே.  கொஞ்ச
> நாளைக்கு மாமாவின் ஆட்டம் நிற்காது போலிருக்கிறதே.
>

இப்போ தேவ் சாரும் ஆட்டத்திலே!

பம்பரத்தில் 'ஆக்கர்' வைப்பது எப்படி என்று அவர் சமிஸ்கிருதத்தில்
விளக்குவார் :-)))

ஆமாம், இந்த 'ஆக்கர்' என்ற சொல்? தமிழா? ஆங்கிலமா? பிராகிருதமா?
(அப்பதான் வினோத் உள்ளே வருவாரு ;-)

க.>

vj kumar

unread,
Dec 2, 2009, 4:28:03 AM12/2/09
to mint...@googlegroups.com
பம்பரத்தில்  ஆக்கர் - எதிராளியின் பம்பரத்தின் மீது சரியாக குறி பார்த்து குத்தவேண்டும் -நமது  பம்பரத்தின் ஆணி அவனது பம்பரத்தின் மேல் பாயவேண்டும். குத்திய மார்க் தெரிய வேண்டும்.  அது தான் ஆக்கர்.

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/2 N. Kannan <navan...@gmail.com>

Satheesh kumar R

unread,
Dec 2, 2009, 5:17:22 AM12/2/09
to mint...@googlegroups.com
ஆக்கர், மாஞ்சா எக்ஸ்பெர்ட் விஜய் வந்துட்டாருங்கோ...
 
சதீஷ்

2 டிசம்பர், 2009 12:28 pm அன்று, vj kumar <vj.ep...@gmail.com> எழுதியது:

Satheesh kumar R

unread,
Dec 2, 2009, 5:21:22 AM12/2/09
to mint...@googlegroups.com
சில நேரங்களில் இந்த ஆக்கர் ஆப்பாகக் கூட மாறிவிடும், ஆம் எதிராளியின் பம்பரத்தை இரண்டாக பிளந்து விடும். ஆக்கருக்காக பம்பரத்தின் ஆணியை விதவிதமாக கூர்தீட்டுவர், சிலரது ஆக்கர் பம்பரங்கள் சுழலும் போது அருமையாக விசிலடிக்கும்.
 
ஹூம் இப்ப எலெக்ட்ரானிக் பம்பரம் வந்து நம்மோட ஆராயும் அறிவை பாசி பிடிக்க  வச்சிடிச்சி...
 
சதீஷ்

2 டிசம்பர், 2009 12:28 pm அன்று, vj kumar <vj.ep...@gmail.com> எழுதியது:
பம்பரத்தில்  ஆக்கர் - எதிராளியின் பம்பரத்தின் மீது சரியாக குறி பார்த்து குத்தவேண்டும் -நமது  பம்பரத்தின் ஆணி அவனது பம்பரத்தின் மேல் பாயவேண்டும். குத்திய மார்க் தெரிய வேண்டும்.  அது தான் ஆக்கர்.

N. Kannan

unread,
Dec 2, 2009, 6:05:40 AM12/2/09
to mint...@googlegroups.com
2009/12/2 Satheesh kumar R <svp...@gmail.com>:

> சில நேரங்களில் இந்த ஆக்கர் ஆப்பாகக் கூட மாறிவிடும், ஆம் எதிராளியின்
> பம்பரத்தை இரண்டாக பிளந்து விடும்.

நாங்களெல்லாம் கடையில் வாங்கும் பம்பரம் கொண்டு விளையாடும் போது, கருவேலி
மரத்தில் செய்த பம்பரங்களுடன் வருவர் பழையூர், புதூர் பசங்கள். ஆக்கர்
வைக்கவே வேண்டாம். வட்டத்துள் இருக்கும் பம்பரத்தைக் கிளப்பும் போதே பாதி
உடைந்துவிடும். நமக்கு சான்சு வந்து அவன் பம்ப்ரத்தில் ஆக்கர் வைத்தால்
ஆணி இறங்கவே இறங்காது. அது வஜ்ரம் பாய்ந்த கட்டை! அவன் திரும்பி நமக்கு
ஆக்கர் வைக்கும் போது நம் கடைப் பம்பரம் உடைந்துவிடும்! ஓ! என்று அழுது
கொண்டு ஓடும் சிறுவர்களைக் கண்டால் பாவமாக இருக்கும்!

அது சரி, ஆக்கர் தமிழ்ச் சொல்லா? வேர் மூலமென்ன? ;-)

க.>

vj kumar

unread,
Dec 2, 2009, 6:14:29 AM12/2/09
to mint...@googlegroups.com
இன்னும் ஒன்று -  டூமாங்கோலி தமிழ்  சொல்ல 

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/2 N. Kannan <navan...@gmail.com>
2009/12/2 Satheesh kumar R <svp...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Dec 2, 2009, 7:39:38 AM12/2/09
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஏதேது? மின் தமிழ் சுழல்றது

முன்னாலே சம்சய நிவாரணம்:
  • பித்தக்க்ளோஸ்யம் டல்சி, கொடுக்காப்புளிக்கு, பொடானிக்கல் நேம். இரண்டிலும் என்னே ஒலி நயம்! எதுகை, மோனையுடன், புதுக்கவிதை எழுதலாம்.
  • நம்மாத்லேயும் 5 தென்னை. ஒன்று இளநீர்வாலா. திருட்டு மாங்காய் சுகம், சிதற் தேங்காய் பொதுவுடமையிலே.
  • 'ஆக்கர்' பொயட்ரி இன் ஸ்டோன்லே தேடினேன். ஊஹூம்! எனவே அது புது வரவு. ஆக்கர் எனபது ஆங்கிலத்தில், துளை போடும் கருவி. அதை அடேப்ட் செய்து கொண்டோமோ!! டுமாங்கோலி வட்டாரச்சொல், விஜய்.
  • எனக்கு வேண்டப்பட்ட கோயில் பரிசாரகர்களிடம், ரகஸ்யமாக்கேட்டேன். பதில்: "எத்த்னையோ பேர் வேண்டிக்க்றா.அத்தனை வடை தட்டி,பொரிக்கமுடியமா? அதான் இப்டி. இல்லை; மெதுவடை கோர்க்கவருமோ? அப்றம் சுத்து வட்டாரத்துக்கெல்லாம் கொடுக்கணும். ஊசிப்போய்டுத்துனா?" அப்டினு போட்டாரே, பாக்கலாம்! இது எந்த தெய்வத்துக்கு ப்ரீதின்னு சொன்னா, தேனியார் ஹம் பண்ணுவார். எனக்கு பயமா என்ன?

  • நம்ம ஊரு உசிலம்பட்டியா? தேவமார் ஜோக்: "ஐயர் 'க்ளப்'லெ பாருடா? வடைக்குள்ளே நூல் வச்சுறுக்கார்: ஊசிப்போச்சுண்ணு சொல்லமாட்டார்கள். வருஷநாட்டுப்பண்பு.
  • கோலிக்குண்டு, பம்பரம், கிட்டிப்புள், நேடிவ் கிரிக்கெட் எல்லாம் சீசன்லே தான்.
பாடம் 3.

கல்யாணக்கொள்ளை:

இப்பெல்லாம் கல்யாணம் ஈவெண்ட். பந்தக்கால்லேருந்து, முதலிரவு முஸ்தீபு வரை காண்ட்ரெக்ட். வருமான வரி செலுத்தாத 
லக்ஷாதிபதிகள்ட்டே. 

அப்பெல்லாம், பொண்ணோட தோப்பனார் தான் எல்லாம் ரெடி பண்ணனும். கூட்டுக்குடும்பம் படையெடுக்கும், நிச்சியம் பண்ணவுடனே. பாட்டிமார் வெல்கம், அப்பளம் இட; மாமிமார் வெல்கம், வத்தல் வடாம் போட; கன்யாப்பொண்கள் வெல்கம், கோலம் போட. எப்டியும் மத்தக்கல்யாண மந்திராலோசனைகள் தொடக்கம். எல்லாமே 
எங்களுக்குக் கொண்டாட்டம், கொண்டாட்டமே. அஞ்சு நாள் கல்யாணம் வேறே. வைபோகமே. யாராத்துக் கல்யாணமா இருந்தா என்ன? எல்லாம் உள்கை.

முதல்லே பொறுப்புகளை டெலெகேட் பண்ணிடுவோம். சூத்ரம், நம்ம கைலே. சுபமா, அப்பள உருண்டைகளை, போகச்ச, வரச்சே, ஓபன்னா, எடுத்துகிறது. அது உரிமை நிலை நாட்ட. வத்தல், வடாம் போட, கூழ் காச்சுவா. அப்போ, போய் மாமிட்டே நைச்சியமா பேச்சுகொடுக்றது. அது கூட, டிப்ளமாட்டிக்க்கா. அவ நாத்தனார் பொண்ணுக்கு, அந்த குடிமிப்பையனைப் பாக்கறாலாமேன்னா, நிலைகுலைஞ்டுவாளா? கூழ் பதம் கெட்றும். அதுக்காக,'ஒழி! இந்தாக்கூழ்" னு கொடுத்துருவா. சிந்தனையில் ஆழ்ந்துருவா. அப்றம், நாமளே, கூழ் எடுத்துக்லாம். மொட்டைமாடிலே உலரப்போடச்சே, காக்கை விரட்ட, நாம தான் ஸெல்ஃப் அப்பாயிடெண்ட் கார்டியன். அரைகுறைகாய்ந்த வடாம் தனி ருசி. 

கல்யாணம் களை கட்டியாச்சு. ஜிலேபி பிழிய, ரெட்டுத்துணியோட, சாமா மாமா வந்தாச்சு. நம்மளை விரோதிச்சுக்க, அவருக்கு திராணி கிடையாது. நாம இல்லை. நோ மூக்குப்பொடி. 
மனோஹரம், கோமளா மாமி கைவண்ணம். மாமி கொஞ்சம் யங். நம்மள்ட ப்ரீதி உண்டு. தப்பு தண்டா செய்யாம, செஞ்சாலும் சொல்லாம, அள்ளிண்டு போவோம். ஐயய்யோ! நான் சொல்றது மனோஹரம். ஸ்டோர் பண்ணக்கூடிய பக்ஷணம். டின்னெல்லாம், முன்னாலேயே ரெடி.

இப்போ தான் சிகரம் வரது. மாப்பிள்ளை காசி யாத்திரைப் போகச்ச, எல்லாம் அங்கே போய் நின்னுண்டிருக்கும். நாம உக்ராண அறையில். மறு சாவி தான், என்னிக்கோ ரெடி. அப்றம், பொண்டுகள் எல்லாம் சீர் எடுத்துண்டு வருவா. நாமளோ பற்றற்றவர்கள். பொன், வெள்ளி, எவெர்சில்வர், பித்த்ளை எல்லாம், நமக்கு திரஸ்காரம். கண்ணெடுத்துப் பார்க்கமாட்டோம். வைரக்கம்மல், கமர்க்கண்டு வாங்க உதவுமோ?

பிள்ளையாத்துக்கு அத்தை எண்ணைக்குடம் எடுத்துண்டு போவாள். அவளோடு ஒட்டிக்கிறது. மாமிக்கெல்லாம் மடிசாரு வைச்சு கட்டிண்டா, கொஞ்சம் அச்சம், நாணம், வெட்கம், பயிர்ப்பு எல்லாம். அவுந்த்றுமோன்னு பயம். பற்றற்ற நிலையில் அதை பயன் படுத்தறதலே தப்பே இல்லை. லேசா, ரொம்ப, ரொம்ப லேஸா (என்ன மென்மை பாருங்கோ!), விசிறிண்டு இருக்கற புடவை தலைப்பை மிதிக்க்றது. 'தடியா! கொஞ்சம் தட்டைப்பிடிச்சுக்கோ. புடவையை சரிப்பண்ணிக்கிறேன்' னு கொடுப்பா. அப்றம் என்ன?
ஆனா, இந்த ட்ரிக் ஒரே தடவை தான் பண்ணமுடியும். அதுவும் அரைட்ராயர் பருவத்லே. அதனால், மாமியை ஸெலக்ட் பண்ணனும். அதாவது, முந்திரிப்பருப்பு நொக்கல் கொண்டு போற மாமியை மட்டும்.நொக்கல் அள்ளிக்கலாம். சேகரம் பண்ணலாம். கொயட்டா எடுக்கமுடியும். தட்டு லேசா இருக்கேன்னு நிணைச்சுண்டு போவாள். நமக்கன்னெ வந்தது. 

தார்மீக ரீதியில், ஈடு கட்டி விடுவோம். நோ சாப்பாடு; பக்கட்டில் சுத்தி சுத்தி வழிக்கிற ஐஸ்க்ரீமைத் தவிர. ஹேண்டில் சுத்துறது, நம் கட்மை யல்லவோ.

இதெல்லாம் கன்ஃபெஸ் பண்ண வெக்கமா இருக்கு. நிறுத்திக்கிறேன்.

இன்னம்பூரான்






2009/12/2 Satheesh kumar R <svp...@gmail.com>
சில நேரங்களில் இந்த ஆக்கர் ஆப்பாகக் கூட மாறிவிடும், ஆம் எதிராளியின் பம்பரத்தை இரண்டாக பிளந்து விடும். ஆக்கருக்காக பம்பரத்தின் ஆணியை விதவிதமாக கூர்தீட்டுவர், சிலரது ஆக்கர் பம்பரங்கள் சுழலும் போது அருமையாக விசிலடிக்கும்.

devoo

unread,
Dec 2, 2009, 8:32:37 AM12/2/09
to மின்தமிழ்
Dec 2, 5:39 pm, Innamburan Innamburan
* அரைகுறை காய்ந்த வடாம் தனி ருசி. *

ஆம், அதுபோல் அரைவேக்காட்டில் எடுத்த முறுக்கும்
சுடச்சுடச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்;

தேவ்

N. Kannan

unread,
Dec 2, 2009, 8:36:12 AM12/2/09
to mint...@googlegroups.com
2009/12/2 devoo <rde...@gmail.com>:

> ஆம், அதுபோல் அரைவேக்காட்டில் எடுத்த  முறுக்கும்
> சுடச்சுடச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்;

ஆம்! அதற்கு பெயர் `கிழவி முருக்கு` ;-)
(கிழவிகள் கோபித்துக் கொள்ள வேண்டாம்!)

க.>

Tthamizth Tthenee

unread,
Dec 2, 2009, 8:45:54 AM12/2/09
to mint...@googlegroups.com
ஆக்கர் என்பது  வீடு கட்டும் முன்னர்  வீடு கட்டும் நிலத்தை ஆராய்ந்து
 
அஸ்திவாரம் போடுவதற்கு 
எப்படிப்பட்ட  அஸ்திவாரம் போடலாம்  என்பதை தீர்மானித்து
 
மண்  லகுவான  மண்ணாயிருந்தால் கட்டிடம் ஸ்திரமாக  நிற்க
 
ஆக்கர் போடுவார்கள்
 
ஆக்கர்  என்பது மன்னில் துளை  போடும் கருவி
 
 
ஏறக்குறைய  மெகா அளவு   ட்ரில்பிட் போன்று இருக்கும்
 
அதை  பூமியிலே  அடித்து  கையால் சுழற்றுவார்கள்
அதன் பக்கவாட்டில்  இருக்கும் தட்டையான பாகம் மண்ணை  வெளியே  கொண்டுவந்து தள்ளி
 
பூமியை  துளை போட்டுக்கொண்டே  போகும்
 
எவ்வலவு ஆழம் போடுகிறோமோ அவ்வளவு  ஆழம்  போட்டு  தூண்கள்  கட்டி  அதன் மேல் அஸ்திவாரம் போட்டு
 
அந்தத் தூண்களை வளர்த்துவார்கள்
 
 
அதை  மேஸ்திரி  ஆக்கர் போடுவது என்பார்
 
ஆக  எவ்வளவு ஆழம்  செல்கிறோமோ  அவ்வளவுக்கு
 
கட்டிடம்  நிலையாக  நிற்கும்
 
இந்த தத்துவம்  அனைத்துக்கும் பொருந்தும்
 
நான் ஹம் பண்ணவில்லை
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2-12-09 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 2, 2009, 9:42:37 AM12/2/09
to mint...@googlegroups.com
என்ன செல்வமுரளி
 
நாங்கள் எல்லோரும் சேர்ந்து கிருஷ்ணகிரியை எங்கேயோ கொண்டு போய்விட்டோம்  இல்லையா?
 
பிள்ளையில்லாத வீட்டில் எதுவோ துள்ளிக் குதி்க்கிறது என்பார்கள்.  என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/12/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Satheesh kumar R

unread,
Dec 2, 2009, 10:18:33 AM12/2/09
to mint...@googlegroups.com
  • <<<'ஆக்கர்' பொயட்ரி இன் ஸ்டோன்லே தேடினேன். ஊஹூம்! எனவே அது புது வரவு. ஆக்கர் எனபது ஆங்கிலத்தில், துளை போடும் கருவி. அதை அடேப்ட் செய்து கொண்டோமோ!! டுமாங்கோலி வட்டாரச்சொல், விஜய்.>>>>>>>>>>>
அகராதியில அப்டேட் பண்ணிணாங்களோ இல்லையோ, நான் சின்ன பையனா இருக்கும் போதே எங்க ஊர் ஆசாரி டிரில்லிங் மிஷின எடுக்கறதுக்கு ”அந்த ஆக்கரை எடு”ன்னுதான் அவரோட அசிஸ்டண்ட் கிட்ட சொல்லுவாரு.

சதீஷ்

Satheesh kumar R

unread,
Dec 2, 2009, 10:30:33 AM12/2/09
to mint...@googlegroups.com
தேனீ ஐயா,

அது துளை போடுறதல ஒரு வகை, AUGER BORING னு சொல்லுவோம், ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு விதமான போரிங் மெத்தட் இருக்கு, நம்ம ஊர்ல இருக்கற இந்த வகையை களிமண் மற்றும் ஈரமண் இருக்கும் இடத்தில் மட்டும்தான் உபயோகப் படுத்தமுடியும். கடின பாறைகளுக்கெல்லாம் தனி வசதிகள் உண்டு.

நல்ல கடினமான மண்ணுனா ஆகரும் தேவையில்ல, பைலிங்கும் தேவை இல்லை, சாதாரண கருங்கல் அடித்தளமே போதும்.

precast pile, cast-in situ pile -  friction pile, end bearing pile, both friction and end bearing.
under reamed pile - for black cotton soil

இப்படி எத்தனையோ pile வகை இருக்கு, ஆமா pile-க்கு தமிழ் வார்த்தை என்ன?

சதீஷ்



2 டிசம்பர், 2009 4:45 pm அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதியது:

Innamburan Innamburan

unread,
Dec 2, 2009, 11:42:12 AM12/2/09
to mint...@googlegroups.com
"உங்களுடைய அற்புதமான அனுபவப் புதையலை ஊடுருவல் என்று சொல்கிறீர்களே.  உங்களுக்கே இது அநியாயமாக இல்லையா?"

இப்படியும் சொல்லிட்டு,

"பிள்ளையில்லாத வீட்டில் எதுவோ துள்ளிக் குதி்க்கிறது என்பார்கள்..."

இப்படியும் சொல்றது, உங்களுக்கே இது அநியாயமாக இல்லையா? பென்னேஸ்வரன்,

இன்னம்பூரான்

2009/12/2 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>



--

devoo

unread,
Dec 2, 2009, 12:46:51 PM12/2/09
to மின்தமிழ்
Dec 2, 8:30 pm, Satheesh kumar R

pile-க்கு தமிழ் வார்த்தை - ஆப்பு

தேவ்

Satheesh kumar R

unread,
Dec 2, 2009, 1:01:06 PM12/2/09
to mint...@googlegroups.com
http://books.google.co.in/books?id=WeyZjt9QiP4C&lpg=PA62&dq=krishnagiri&as_brr=3&pg=PA62#v=onepage&q=krishnagiri&f=false
http://books.google.co.in/books?id=Y-kanqrtVhYC&lpg=PA116&dq=krishnagiri&as_brr=3&pg=PA116#v=onepage&q=krishnagiri&f=false

இழையை தடம்புரள வைத்துவிட்டோம் என்ற சொல் வந்துவிடக் கூடாதல்லவா, அதற்குதான் இந்த சுட்டிகள். கிருஷ்ணகிரியைப் பற்றியவை...

சதீஷ்

வினோத் ராஜன்

unread,
Dec 2, 2009, 1:31:13 PM12/2/09
to மின்தமிழ்
//அது சரி, ஆக்கர் தமிழ்ச் சொல்லா? வேர் மூலமென்ன? ;-) //

ஆக்கர் என்பது பசும்பச்சை தமிழ்ச்சொல்ல்லாக்கும். பார்த்தீர்களா..
இங்கேயே ஆக்கும் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளேன்.. ஆக்கும் ஆக்கர்
இவ்விரண்டுக்கும் திராவிட வேர்ச்சொல் பொதுவாக உள்ளது என்பதை
கண்டுகொள்ளலாம்.

சரி.. நம் ஆக்கருக்கே வருவோம்.

ஆக்கர் என்பது..

(சின்ன பசங்க சொல்ற மாதிரி சொல்லி சொல்லி பார்க்கனும்.. )

அக்கு >> அக்கர் >> ஆக்கர் என்று வைத்துக்கொள்வோம் (கொஞ்சம் நம்புற
மாதிரி இருக்கு)

இது மாதிரி அடி, முடி, வேர் எல்லாம் கண்டு பிடிக்க இருக்கவே இருக்கிறது
தமிழ் லெக்ஸிகான்.. அதை கொஞ்சம் புரட்டுவோம்..

அக்கு என்று தேடினால் 9 முடிவுகள் வருகிறது. நமது ரொம்ப வசதியாக
போயிற்று.. அந்த ஒன்பதில் ஒன்று துளுமொழியில் இருந்து வந்ததாக வேறு
காட்டித்தொலைத்துவிட்டனர்.

இது துளு மொழி ஆதிக்க மன்பான்னையும் துளு மொழி சார்புடையவர்கள் இந்த
லெக்ஸிகனை தொகுத்தால் நேர்ந்தது என்பது தெள்ளத்தெளிவு ( இருந்தாலும்
நமக்கு எதெல்லாம் ஒத்து வருகிறதோ அதுக்கு எல்லாத்துக்கும் இதுல இருந்தது
தான் மேற்கோள் காட்டுவோம் என்பது வேறு விஷயம்.. நமக்கு ஒத்து வராதது
எல்லாம் கூட்டுச்சதி செய்து மாற்றியதாக இருக்கும். )

சரி.. நம்ம வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு திரும்புவோம்..

துளு மொழி சார்புடையவர்கள் தொகுத்த ஒன்றையும், வடமொழி சார்புடையவர்கள்,
உருது மொழிச்சார்புடையவர்கள் தொகுத்ததை எல்லாம் விட்டு விட்டால்.. இரண்டு
மூணு தேறுகிறது..

இவற்றில், எந்தச்சொல் நம் இஷ்டத்துக்கு இழுத்த இழுப்பு வரும் என்று ஆராய
வேண்டும்.. (இது வேர்ச்சொல் ஆராய்ச்சிக்கு ரொம்ப முக்கியம்). நம்
இஷ்டத்துக்கு இழுக்கக்கூடிய ஒரு சொல்லை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது,
அதில் இருந்து சுற்றி வளைத்து எப்படியாவது நாம சொல்ல வருவதை அது
குறிக்கிறது என்ற ரீதியில் சொல்லக்கூடிய ஒரு சொல்லை தேட வேண்டும்..

3. அக்கு akku : (page 7)

(திவ். பெரியதி. 9, 6, 1). 3. Strychnine tree. See எட்டி. (மலை.) 4.
Eagle-wood. See அகில். (மலை.) 5. Sand-paper tree. See உகா. (L.

இது நல்லா இருக்குற மாதிரி இருக்கு.. சரி இதையே வச்சிப்போம்..

சங்க காலத்தில்..ச ச ..வேணாம் வேணாம்.. சிந்து சமவெளி காலத்தில் இந்த
மரத்தை வைத்தே பம்பரங்களை செய்துள்ளனர். (சிந்து சமவெளிச்சின்னமான
"பம்பரத்துடன் சிறுவன்" என்பது "அக்கு" என்று ஒலிக்குறிப்பையே
குறிக்கிறது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.. )

அக்கு என்ற மரத்தால் செய்த பம்பரத்துக்கு ஆகுபெயராக அந்த மரத்தின் பெயரே
அமைந்தது.

அக்கின் கீழ் இருப்பது அக்கர் என்று ஆனது. (குக் செய்வது குக்கர், பிக்
அப் செய்வது பிகர் என்ற ரீதியில்"அர்" சேர்ப்பது தொல் தமிழ் பழக்கம்
என்பதை ஈண்டு நாம் நினைவு கூறுதல் வேண்டும்)

அக்கர் என்பதில் இருந்து "அடி அகரம் ஆகாரம் ஆதல்" என்று அகத்திய சூத்திர
விதிப்படி அது ஆக்கர் என்று ஆனது.

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.. ஆக்கர் என்பது
தொல்தமிழ்ச்சொல்லே.. சிந்து சமவெளி காலத்தில் இருந்து தொல்தமிழன இதை
பயன்படுத்தி வருகிறான்..

இதற்கு மாற்றுக்கருத்துடையவ்ர்கள்... எல்லாம்... தமிழை .... ... ...
வேண்டாம்.. உங்களுக்கே புரிந்திருக்கும். (வீர வசனமாக உணர்ச்சி
கொந்தளிக்க நாலு வரியை அங்கு நிரப்பி விடவும்.. )

ட்(நானும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பன்றன்.. நானும் வேர்ச்சொல் ஆராய்ச்சி
பன்றேன்.......
http://www.youtube.com/watch?v=i9R10RXCvc0 )

V

வினோத் ராஜன்

unread,
Dec 2, 2009, 1:39:03 PM12/2/09
to மின்தமிழ்
//ஆமாம், இந்த 'ஆக்கர்' என்ற சொல்? தமிழா? ஆங்கிலமா? பிராகிருதமா?
(அப்பதான் வினோத் உள்ளே வருவாரு ;-) //

வினோத் ஆஜர் ஆயாச்சு..

வினோத்துக்கு அப்பிடி இப்ப்டி ஏதேச்சும் தெரிஞ்ச எந்த விஷயம் பேசினாலும்
வினோத் வருவார். வினோத்துக்கு தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது
கிடையாது :-)

தெரிஞ்ச அப்புறம் வேணா கண்ணு காது மூக்கு இப்படி எல்லாத்தையும்
நுழைக்கலாம்.. :D

V

On Dec 2, 1:34 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/12/2 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>:

N. Kannan

unread,
Dec 3, 2009, 3:47:25 AM12/3/09
to mint...@googlegroups.com
2009/12/3 Satheesh kumar R <svp...@gmail.com>:

>
> அது துளை போடுறதல ஒரு வகை, AUGER BORING னு சொல்லுவோம்,


பாருங்கள் வேடிக்கையை!

Auger என்பதை 'ஆகர்' என்றுதான் பலுக்க வேண்டும். ஆனால், ஒற்று மிகுதியாகி
தமிழர்கள் அதை 'ஆக்கர்' ஆக்கிவிட்டனர்.
மீண்டும் திசைச் சொல் எனில் அதைத் திரிப்பது தமிழர் வழக்கம் என்று காண்கிறோம்.
ஆச்சர்யம் என்னவெனில் இச்சொல் எப்படி சிறுவர்கள் vocabulary க்குள்
புகுந்தது? எக்காலத்தில் புகுந்தது?
தமிழகமெங்கும் பரவ ஒரு சொல்லுக்கு எவ்வளவு நாள் பிடிக்கும்?

அன்றொரு நேஷனல் ஜியோகிரபிக் ஆவணப்படத்தில் இரண்டு நாகர்கள் பாம்பு
பற்றிப் பேசிக்கொண்டு போகிறார்கள். மலைவாழ் மக்கள். ஆனால்
பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்கள் பரவலாக உள்ளன.

நாம் எழுத்துத்தமிழை மட்டும் கொம்பு சீவி விட்டுத் திருத்துகிறோமே?

பரிணாமமுறும் பேச்சுத்தமிழுக்கு அணை கட்டப்போகின்றவர் யார்?

க>

annamalai sugumaran

unread,
Dec 3, 2009, 4:51:26 AM12/3/09
to mint...@googlegroups.com
பம்பர விளையாட்டில் அபீட் என்ற ஒரு வார்த்தை அடிபடுமே ! இது எந்த மொழி சொல் 
அதுவும் வட்டார வழக்கா அல்லது எங்கும் விளையாட்டில் உண்டா 
பெரியவர் தான் விளக்கவேண்டும் .

இப்போதெல்லாம் பம்பரக்கண்ணாலே என்ற சந்திரபாபு பாடல் பாடினால் பெண்களுக்கு புரியுமா  இப்போ பசங்க அஜண்டாவில் பம்பரம் உண்டா 

அன்புடன் 
சுகுமாரன் 


2009/12/3 N. Kannan <navan...@gmail.com>



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

vj kumar

unread,
Dec 3, 2009, 4:54:29 AM12/3/09
to mint...@googlegroups.com
 சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பல் வேலை நடக்கும் பொது  இந்த இரு வார்த்தைகள் கேட்கலாம்.  அறியஉடு  ( while lifting cargo with manual crane - to leave slack in the rope) , அபேஸ்  ( to tighten and pull up)


 
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/3 annamalai sugumaran <amirth...@gmail.com>

devoo

unread,
Dec 3, 2009, 5:44:19 AM12/3/09
to மின்தமிழ்
Dec 3, 1:47 pm, "N. Kannan"
//Auger என்பதை 'ஆகர்' என்றுதான் பலுக்க வேண்டும்

ஆச்சர்யம் என்னவெனில் இச்சொல் எப்படி சிறுவர்கள் vocabulary க்குள்
புகுந்தது? எக்காலத்தில் புகுந்தது? //

முதலில் ஆங்கிலேயரிடம் தச்சு வேலை செய்தவரிடம் இச்சொல் புழக்கத்தில்
வந்திருக்க வேண்டும்;
பின்னர் அவர்கள் மூலம் பரவியிருக்கும்.

தேவ்

Hari Krishnan

unread,
Dec 3, 2009, 6:38:38 AM12/3/09
to mint...@googlegroups.com


2009/12/2 N. Kannan <navan...@gmail.com>
அது auger என்ற சொல்லிலிருந்து வந்தது.   auger என்றால் Hand tool for boring holes என்பது வேர்ட்வெப் அகராதி தரும் விளக்கம்.   தச்சர்கள் துளையிடுவதற்காக வைத்திருப்பார்கள்.  துரப்பணம் என்று சொல்வார்கள். ஒரு கூரான இரும்புத்துண்டை, வயலின் வாசிப்பதுபோல் பக்கத்துக்குப் பக்கம் இழுத்துக் கடைந்து, துளையிடுவார்கள். ஆப்பு வைக்கிறது என்று இப்போது சொல்கிறார்கள்.  இட்ட துளையில் மரத்துண்டைத் திணிப்பது.  ஆகர் அல்லது ஆக்கர் வைக்கிறது என்பதற்கு, drilling something into someone's head or limbs.  Pain in the neck மாதிரி வச்சுக்கங்களேன். 

வினோத் உள்ற வரதுக்கு முந்தி வினோதன் வன்ட்டேன்.  மண்ணாஷ்ருங்க. :-))
--
அன்புடன்,
ஹரிகி.

Subashini Tremmel

unread,
Dec 3, 2009, 7:43:29 AM12/3/09
to mint...@googlegroups.com
விஜய்,
 
மலாய் மொழியில் habes என்ற ஒரு வார்த்தை உண்டே. கேட்டிருக்கின்றீர்களா. முடித்தல் என்பதன் பொருளில் வரும் சாதாரனமாக மலேசிய தமிழில்  'அபேஸ் பண்ணிட்டியா'  (முடித்து விட்டாயா) என்பது போன்ற சொல்லாடல்களில் வரும்.
 
அன்புடன்
சுபா

2009/12/3 vj kumar <vj.ep...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Dec 3, 2009, 9:01:36 AM12/3/09
to mintamil


2009/12/3 annamalai sugumaran <amirth...@gmail.com>

பம்பர விளையாட்டில் அபீட் என்ற ஒரு வார்த்தை அடிபடுமே ! இது எந்த மொழி சொல் 
அதுவும் வட்டார வழக்கா அல்லது எங்கும் விளையாட்டில் உண்டா 
பெரியவர் தான் விளக்கவேண்டும் .
up it?
அப்படித்தான் நினைக்கிறேன்.
பம்பரத்தை கயித்தால தூக்கி எடுத்து பிடிக்கணும்
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tthamizth Tthenee

unread,
Dec 3, 2009, 9:31:09 AM12/3/09
to mint...@googlegroups.com
அடக்கடி இங்கே  சிலர்   விடு ஜூட்  என்கிறார்கள்
 
இது எந்தவகை தமிழ்
 
 
 தாட் பூட் தஞ்சாவூர்
 
என்று கைகளை  தட்டி கும்மி அடித்து  சிறுவர்கள்  விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்
 
இந்த தாட்  பூட்  ,
 
பம்பரத்தில்  அப்பீட்
 
கிள்ளி என்றொரு  விளையாட்டில்    தாண்டு
 
ஒரு காலால்  நொண்டிக்கொண்டே  அடுத்தவரைத் தொட்டு  அவுட்  ஆக்கும் விளையாட்டுக்கு
 
கரண்ட்  ப்ளே  என்னும் சொல்
 
இது போன்ற சொற்கள்  எப்படியோ  தாமாக வந்து  அமைந்து விடுகின்றன
 
ஆனால்  இந்த சொற்களின் காலத்தை  கணிப்பது கடினம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
3-12-09 அன்று, Tirumurti Vasudevan <agni...@gmail.com> எழுதினார்:

வினோத் ராஜன்

unread,
Dec 3, 2009, 10:17:22 AM12/3/09
to மின்தமிழ்
லேசிய தமிழில் 'அபேஸ்
> பண்ணிட்டியா' (முடித்து விட்டாயா) என்பது போன்ற சொல்லாடல்களில் வரும்.

எங்க ஊரில் அபேஸ் பண்ணிட்டியா என்றால் திருடிவிட்டாயா என்ற பொருளில்
வரும்

சென்னை செந்தமிழ் :-))

V

On Dec 3, 5:43 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> விஜய்,
>
> மலாய் மொழியில் habes என்ற ஒரு வார்த்தை உண்டே. கேட்டிருக்கின்றீர்களா.
> முடித்தல் என்பதன் பொருளில் வரும் சாதாரனமாக ம
>

> அன்புடன்
> சுபா
>

> 2009/12/3 vj kumar <vj.epist...@gmail.com>


>
>
>
> >  சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பல் வேலை நடக்கும் பொது  இந்த இரு
> > வார்த்தைகள் கேட்கலாம்.  அறியஉடு  ( while lifting cargo with manual crane -
> > to leave slack in the rope) , அபேஸ்  ( to tighten and pull up)
>
> >http://www.poetryinstone.in
> > Here the language of stone surpasses the language of man
>

> > 2009/12/3 annamalai sugumaran <amirthami...@gmail.com>


>
> >  பம்பர விளையாட்டில் அபீட் என்ற ஒரு வார்த்தை அடிபடுமே ! இது எந்த மொழி சொல்
> >> அதுவும் வட்டார வழக்கா அல்லது எங்கும் விளையாட்டில் உண்டா
> >> பெரியவர் தான் விளக்கவேண்டும் .
>
> >> இப்போதெல்லாம் பம்பரக்கண்ணாலே என்ற சந்திரபாபு பாடல் பாடினால் பெண்களுக்கு
> >> புரியுமா  இப்போ பசங்க அஜண்டாவில் பம்பரம் உண்டா
>
> >> அன்புடன்
> >> சுகுமாரன்
>

> >> 2009/12/3 N. Kannan <navannak...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 3, 2009, 10:24:08 AM12/3/09
to mint...@googlegroups.com
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
 
அன்புடன்'
தமிழ்த்தேனீ

 
3-12-09 அன்று, வினோத் ராஜன் <vinodh...@gmail.com> எழுதினார்:

வினோத் ராஜன்

unread,
Dec 3, 2009, 10:29:15 AM12/3/09
to மின்தமிழ்
அட ஆமாம்...

கிருஷ்ணகிரி பற்றி இழையில் இது எப்படி அடிபடாமல் போனது.

"கிழிஞ்சது கிருஷ்ணகிரி" என்ற வழக்கு எப்படி தோன்றியது ?

V

On Dec 3, 8:24 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
>
> அன்புடன்'
> தமிழ்த்தேனீ
>

> 3-12-09 அன்று, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> எழுதினார்:

> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள


> தமிழ்த்தேனீ
>

> http://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com

Satheesh kumar R

unread,
Dec 3, 2009, 11:05:57 AM12/3/09
to mint...@googlegroups.com
ஒரு வேளை கிருஷ்ணன் மலையை அதாவது கிரியை தூக்கியபோது உடைந்து விட்டதோ, அதைத்தான் கிழிந்தது என்று கூறுகின்றனரோ...?

சதீஷ்

3 டிசம்பர், 2009 6:29 pm அன்று, வினோத் ராஜன் <vinodh...@gmail.com> எழுதியது:

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 3, 2009, 10:08:07 PM12/3/09
to mint...@googlegroups.com

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்.  வசனம் எழுதியது கோபு என்று நினைக்கிறேன். அவர் கி யன்னாவுக்கு கி யன்னா வேண்டும் என்று எழுதியிருக்கலாம்.

சென்னையில் இருந்து கர்நாடகாவுக்குப் போகிறவர்கள் (பைபாஸ் சாலைகள் இல்லாத அந்தக் காலத்தில் கிருஷ்ணகிரி வழியாகத்தான் போகவேண்டும்.  அதுவும் பெங்களூர் அல்லது மைசூர் போகிறவர்கள் கிருஷ்கிரியை தாண்டாமல் போகமுடியாது.  சேலம் - பெங்களூரு, பாண்டிச்சேரி - பெங்களூரு, திருப்பதி - பெங்களூரு, சென்னை - பெங்களூரு என்று எல்லாத் திசைகளில இருந்தும் கர்நாடகாவுக்குப் போகிறவர்கள் கிருஷ்ணகிரியைத் தொடாமல் போக முடியாது.  ஓரிரண்டு வழிகள் (ராயக்கோட்டை போன்றவை) கிருஷ்ணகிரி பாதை அந்தக் காலத்தில் சுளுவான பாதை.  (இதே காரணத்தினால்தான் ஹைதர் அலியும் திப்புசுல்தானும் பின்னாளில் ஆங்கிலப் படையும் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள குன்றுகளை கண்காணிப்பு மையங்களாக மாற்றி இருக்கிறார்கள். 
 
எனவே கிருஷ்ணகிரி எப்போதுமே சாலைப்பயணங்களில் முக்கியத்துவம் பெற்ற ஒரு ஊாராகும்.  தேசிய நெடுஞ்சாலை 7 (7 ஆ அல்லது 17ஆ சரியாகத் தெரியவில்லை) ல் அமைந்திருக்கிறது கிருஷ்ணகிரி.  தமிழகத்தில் இருந்து மும்பை, கர்நாடகா, ஆந்திரா போகும் லாரிகள் கிருஷ்ணகிரி வழியாகத்தான் போகும்.
கிருஷ்ணகிரியில் உணவகஙகளின் உணவு மிகவும் சுவையாக இருக்கும்.  (இன்றும்).  இதுவும் கிருஷ்ணகிரி வழியாகப் பலரும் வந்து செல்ல நேர்ந்திருக்கிறது.  சினிமாக்காரர்கள் படப்பிடிப்புக்கு கிருஷ்ணகிரியின் வாயிலில் உள்ள ஹொகேனக்கல் பகுதிக்கு நிறைய வருவார்கள்.  அப்போது அவர்களுக்கு தங்கவும் மற்ற சமாச்சாரங்களுக்கும் கிருஷ்ணகிரி நிறைய உதவியிருக்கிறது.  எனவே சினிமாக்காரர்கள் இடையில் கிருஷ்ணகிரி மிகவும் பிரபலமாக இருந்தது.

அந்த உரிமையில் கோபு அப்படி எழுதியிருக்கலாம்.  அதற்கு முன்பு அப்படி யாரும் சொல்லியிருக்கிறார்களா என்று கொஞ்ச காலம் கிருஷ்ணகிரி பகுதி முழுக்க கேட்டு அலைந்து இருக்கிறேன்.  அப்படி எல்லாம் யாரும் சொல்லவில்லை.  மேலும் எங்கள் ஊர் தெருக்கூத்து பாடல்களிலும் எங்கும் இந்த கிழிஞ்சது கிருஷ்ணகிரி இல்லை.

எது எப்படியோ அந்தக் காலத்திலேயே டைப்பிஸ்டு கோபு எங்கள் ஊரைப் பிரபலப்படுத்தினார்.

அன்புடன்

பென்னேஸ்வரன்



 

2009/12/3 Satheesh kumar R <svp...@gmail.com>
ஒரு வேளை கிருஷ்ணன் மலையை அதாவது கிரியை தூக்கியபோது உடைந்து விட்டதோ, அதைத்தான் கிழிந்தது என்று கூறுகின்றனரோ...?
Reply all
Reply to author
Forward
0 new messages