முதுசொம் பயணம்

110 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jan 28, 2012, 4:35:50 AM1/28/12
to மின்தமிழ்
முதுசொம் என்றால் பிதுர்ராஜ்ஜியச் சொத்து என்று பொருள். எந்தக்
காப்பிரைட் பிரச்சனையும் இல்லாமல் நமக்கு வரும் சொத்து. நல்ல உதாரணம்
கோயில். எல்லோரும் நலமாக இருக்க வேண்டுமென்று இறைவன் சில இடங்களில்
சுயம்புவாகத் தோன்றுகிறான். சிலர் கனவில் வந்து கோயில்
எழுப்புவிக்கிறான். ஒரு கோயில் உருவானவுடன் அங்கு பூசனைகள் தோன்றுகின்றன.
புராணங்கள் தோன்றுகின்றன. புலவர்கள்/அருளாலர்கள் வந்து பாடுகின்றனர்,
சிற்பிகள் தங்கள் கலைவண்ணத்தைக் காட்டுகின்றனர், இசைக்கலைஞர்கள் வந்து
இசைக்கின்றனர். இப்படி மெல்ல மெல்ல கோயில் ஒரு பல்கலைக்கழகமாகிவிடுகிறது.

எங்கள் பயணத்தில் பல கோயில்களைச் சென்று பார்த்தோம். இறைவனின்
அருளாட்சியைப் பற்றி எழுதுவது சிரமம் என்று முன்பே சொல்லிவிட்டேன். எனவெ
அது தவிரப் பிற விஷயங்கள் பேசுவோம்.

முற்றும் வழிபாடற்ற சமண/இந்துக் கோயில்களைக் கண்ணுற்றோம். மிகவும்
வழிபாடுள்ள ஆலயங்களையும் தரிசித்தோம். முன்னதன் பிரச்சனை வேறு, பின்னதன்
பிரச்சனை வேறு. வேலியற்ற நிலத்தில் எதுவும் விளையும், யாரும் வருவர்,
போவர். பெரும்பாலான சமணக்கோயில்களில் வழிபாடு இல்லை. இருக்கின்ற
தீர்த்தங்கரருக்கும் பட்டை அடித்து விபூதி பூசிவிட்டனர். சமணப்படுக்கைகள்
கள்ளக் காதலர்கள் படுக்கையாகி புனிதம் கெட்டு, கற்கால பாறை ஓவியங்களின்
மேல் காதலர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன!

புனிதமான இடமென்றாலும் தமிழன் மரபு காக்கிறான் என்று பொருள் இல்லை.
தர்மபுரி மல்லிகார்ஜுனா கோயில் அழகான கோயில். அங்குதான் நான் முதன்
முறையாக மண்ணில் கால் பாவாத தூண்களைக் கண்டேன். இது என்னவகையான பொறியியல்
என்று ஈரோடு பேச்சிமுத்து-ஜெகந்நாதன் பொறியிய் கல்லூரியில் விவாதித்தோம்.
அம்பாள் சந்நிதி அமையும் கோயில் அடிச்சுற்றில் நிறைய இராமாயணச்
சிற்பங்கள் உள்ளன. அவை முழுவதுமாக ஆவணமாக வேண்டும். இராமாயணப்படி என்பது
பல்வேறு வகையானது. இது கம்போடிய இராமாயணம் என்கிறார் பூசாரி.
ஆவணப்படுத்து முன் அருகிலுள்ள சந்நிதியின் அபிஷேகப்பாலும், நீரும் சேறாக
அம்பாள் கோயிலைச் சுற்றி ஒடுவதை முறைப்படுத்த வேண்டும். ஒரு கோயிலைப்
பற்றிய தெளிவான சரித்திர, கலை, ஆகம விவரங்கள் தெரிந்த ஒருவர்
வழிகாட்டியாக அமர்த்தப்பட வேண்டும். நம் கோயில் என்பது வெறும்
வழிபாட்டுத்தலம் என்று அடாவடித்தனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.
கோயில் நம் முதுசொம். அதன் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொண்டு
பாராட்ட வழி செய்தல் வேண்டும்.

கோயில் சிற்பங்களை நாயைக் கூண்டுக்குள் அடைப்பது போல் அடைத்து
வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் வர வழியில்லை.
எனவே உள்ளே இருக்கும் சிற்பத்தை ஒரு இந்து உடைப்பான் என்ற பயத்தில் சிறை
வைத்திருப்பது நம்மை நாமே சிறுமைப் படுத்துவது ஆகும். ஒரு சிலையை
கையாளும் மன முதிர்ச்சி கூட இல்லாதவன் கோயிலுக்குள் ஏன் நுழைய வேண்டும்?
இது சிக்கலான கேள்விதான். மெய்நிகர் குழுமத்திலும் இது போன்ற கேள்விகள்
கேட்கப்படுகின்றன. ஒரு கோயிலை பவித்திரமாகக் காணும் பயிற்சி நமக்கு
வேண்டுமென்று தோன்றுகிறது. பூசாரிக்குப் பயிற்சி கொடுப்பது போல்
கோயிலுக்குள் போவோருக்கும் பயிற்சி தர வேண்டும். தற்போது அணுமின் நிலையம்
பற்றி ’உண்மை பரப்பும் ஆவணங்கள்’ வருகின்றன. அது போல் கோயிலுக்குள்
போனால் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்று
சொல்லிக்கொடுக்க வேண்டும்.

கோயிலுக்குள் படமெடுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் என்று இதுவரை யாரும்
விளக்கவில்லை. சரி பிளாஷ் போட்டால் தப்பு. அருங்காட்சியக மோடில் எடுக்க
அனுமதிக்க வேண்டும். முதுசொம் என்றால் எல்லோருக்கும் சொந்தமானது என்று
பொருள். ஆள், ஆளுக்குக் கார்வார் பண்ணும் பழக்கம் ஒழிய வேண்டும்.

இன்னும் வரும்...

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 28, 2012, 5:02:34 AM1/28/12
to mint...@googlegroups.com
கண்ணன் ஐயா

பொதுவா போட்டோ எடுத்தாலே போட்டோ எடுக்கப்படுபவருக்கு ஆயுசு குறைந்துவிடும் என்ற மூட நம்பிக்கை நம் மக்களிடத்தில் உண்டு. ஒருவேளை சாமியைப் போட்டா எடுத்தால் அதற்கும் ஆயுசு குறைந்து விடுமோ என்னவோ. :))))

எல்லாம் பணத்திற்காகத் தான் ஐயா போட்டோ எடுக்க அனுமதிப்பதில்லை.பல இடங்களில் பணம் கொடுத்தால் போட்டோ எடுக்க அனுமதிக்கும் பூசாரிகள் உண்டு. 

தற்போது கோயில் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் லெவலுக்கு வந்துவிட்டது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள மிகவும் பயன்படுகிறது. 

போன தை அமாவசைக்கு எங்கள் ஊர் சிவன் கோவிலுக்கு மாலை 6.30 மணிக்கு சென்றிருந்தேன். அங்கே அருமையான பஜனை நடந்து கொண்டிருந்தது. ஆனால் அங்கே பாட்டுப் பாடுகின்ற 4 பேரைத் தவிர யாருமே இல்லை. நான் ஒரு அரை மணி நாம் அங்கிருந்து இசையினை ரசித்தேன். அந்த 1/2 மணி நேரத்தில் எத்தனையோபேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். ஆனால் யாரும் அங்கே நின்று கூட கேட்கவில்லை.

எல்லாம் கலி காலம்! என்ன கற்றுக் கொடுத்தாலும் திருந்த மாட்டார்கள்.

அன்புடன்,

தி.பொ.ச.






2012/1/28 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

கவி.செங்குட்டுவன்

unread,
Jan 28, 2012, 5:27:31 AM1/28/12
to mint...@googlegroups.com
அய்யா கண்ணன் அவர்களுக்கு வணக்கம். மிக நல்ல கருத்து ஆழமாக பதிவு
செய்துள்ளீர்கள். தமிழகக் கோயில்கள் இன்று வெறும் வழிபாட்டிடமாகத்
திகழலாம். ஆனால் அவை தமிழரின் தொண்மை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்
கண்ணாடிகள் அவற்றில் சிறு கீறல் விழுந்தாலும் கூட அனைத்தும் மாறியும்
மறைந்தும்விடும்.

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
http://kaviyinkural.blogspot.com
http://mazalaiootru.blogspot.com
http://kaviugi.blogspot.com/
http://crcmittapalli.blogspot.com/

கி.காளைராசன்

unread,
Jan 28, 2012, 10:59:32 AM1/28/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/1/28 N. Kannan <navan...@gmail.com>
கோயில் சிற்பங்களை நாயைக் கூண்டுக்குள் அடைப்பது போல் அடைத்து
வைத்திருக்கிறார்கள். 
எனவே உள்ளே இருக்கும் சிற்பத்தை ஒரு இந்து உடைப்பான் என்ற பயத்தில் சிறை
வைத்திருப்பது நம்மை நாமே சிறுமைப் படுத்துவது ஆகும்.
அரியக்குடியில்,  வாயிலுக்கான காவல்தெய்வங்களையே (துவார பாலகரையே) இரும்புக் கூண்டுக்குள் வைத்து அடைத்துள்ளனர்.  மனதிற்கு நெருடலான விசயம் இது.  என்ன செய்வது.

ஆனால், சிலைகளை உடைத்து விடுவார்கள் என இவ்வாறு செய்வதில்லை.
விபூதியோ, குங்குமமோ, அல்லது சுண்ணாம்போ ஏதோ ஒன்று, 
கையில் இருக்கும் மீதத்தை சிலைகளின் மேல் தடவி விடுகின்றனர் சிலர்.

இப்போது எல்லாக்கோயில்களிலும் ஆங்காங்கே இதற்கொன ஒரு வசதி செய்துள்ளனர்.

கோயில்கள் நன்கு மாறிவருகின்றன.  பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இதற்குக் காரணம்.

மற்றபடி தாங்கள் சொல்வது போல், ஒவ்வொரு கோயிலுக்கும் வழிகாட்டிகள் நியமிக்கப்பட வேண்டும்.  அதற்கான வகுப்புகள் நடத்தப் பெற வேண்டும்.

இப்போது அர்ச்சர்களுக்கா வகுப்புகள் தனியாரால் நடத்தப்படுகின்றன. 

இனிவரும் 10 அல்லது 15 ஆண்டுகளில் தென்னிந்தியக்கோயில்கள் அனைத்தும் பண்டைப் பாரம்பரியத்தில் மிளிரும் என நம்புகிறேன்.

நல்லதொரு சிந்தனையான பகிர்வுக்கு நன்றி ஐயா,
அன்பன்
கி.காளைராசன்

Innamburan Innamburan

unread,
Jan 28, 2012, 11:18:17 AM1/28/12
to mint...@googlegroups.com
அன்பன் காளைராஜன் சொல்வதும் சரி தான். இன்னம்பூர் பெருமாள் (உத்ஸவர்) ராத்தாங்குவது ஒரு பக்தர் வீட்டில், 40 வருடங்களுக்கு முன்னால். களவு பயம். பெரிய தென்ன்ந்தோப்பு. வருமானம், நாத்திக 'அறங்காவலருக்கு'! மதுரை மீனாக்ஷி கோயிலில் கொற்றவை படும் பாடு ~ தம்மாத்தூண்டு வேண்டுதல்களுக்காக, பக்த சிரோன்மணிகள் வெண்ணெய் உருட்டு வீசி எறிவார்கள். அது வியாபாரம். அதற்கு ஒரு தேவஸ்தான ஒப்பந்தம்! தஞ்சை பெரிய கோயிலில், அம்பாள் சன்னதியின் விமானத்தில் வரைந்திருக்கும் சித்திரங்கள் மீது புகை/கரி மண்டலம். இந்த பின்னணியில், சிற்பங்களை, சிற்பங்களாக மட்டும் பாவித்து, பூட்டி வைக்க வேண்டியிருக்கிறது. சராசரி ஹிந்து பக்தன் விக்ரஹ ஆராதனையில் நம்பிக்கை இல்லாதவன். பாவ்லா காட்டுவதுடன் சரி. சென்னை மைலாப்பூரில் ஒரு அழகிய ஶ்ரீனிவாச பெருமாள் கோயில். கெஞ்சி, கூத்தாடி, நன்கொடை வாங்கி அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்தார்கள். கோயிலை அசுத்தம் செய்யாதே என்று கெஞ்சும் நோட்டீஸ். பத்தாம்பசலிகள் தாம் முதல் அசுத்தாதிகள்! அனுமான் போன்ற வரப்பிரசாதிகளின் சிற்பங்களுக்கு ஆபத்து ஜாஸ்தி. எது எப்படியோ, கண்ணனின் உவமையை நான் ரசிக்கவில்ல்லை.
இன்னம்பூரான்

2012/1/28 கி.காளைராசன் <kalair...@gmail.com>

N. Kannan

unread,
Jan 28, 2012, 12:25:31 PM1/28/12
to mint...@googlegroups.com
2012/1/28 Innamburan Innamburan <innam...@gmail.com>:

> எது எப்படியோ, கண்ணனின் உவமையை நான் ரசிக்கவில்ல்லை.
> இன்னம்பூரான்
>

அது தமிழனுக்கு உறைக்க வேண்டுமென்று சொன்னது ஐயா!

3000 வருடங்கள் தாக்குபிடித்த பெருங்கற்கால கல்லறைகளும், ஓவியங்களும்
21ம் நூற்றாண்டுத் தமிழனால் சூறையாடப்படுகின்றன. நமது கோயில்களிலேயே நம்
சிலைகளுக்கு விலங்கு பூட்ட வேண்டியுள்ளது. மதுரை மீனாட்சி கோயிலில்
வெண்ணெய் சாத்தி காளியை அசிங்கப்படுத்துகின்றனர். கோயிலைச் சுற்றி மனிதக்
கழிவு. இவனெல்லாம் ஆத்திகன் என்று சொல்லுவான். இந்து மதம் பற்றி வாய்
கிழியப்பேசுவான். நாம் அந்த பக்தியை நம்ப வேண்டும்? கடவுள்கள் விலை
பேசப்படும் ஒரு அநாகரீகமான மண்ணில் இருக்கிறோம் ஐயா! ‘தண்ணீர் விட்டா
வளர்த்தோம்! சர்வேசா! இப்பண்பாட்டை! அழியத்திருவுளமோ?

நா.கண்ணன்

Innamburan Innamburan

unread,
Jan 28, 2012, 1:52:14 PM1/28/12
to mint...@googlegroups.com
True. I share your anger.
Innamburan

2012/1/28 N. Kannan <navan...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 28, 2012, 5:50:57 PM1/28/12
to mint...@googlegroups.com
கோயில்கள் அரசின் பிடியிலிருந்து வெளிவந்தால் ஓரளவுக்கு இவை நடக்கலாம்.  சிதம்பரம் கோயிலில் இம்மாதிரி எதுவும் செய்ய முடியாது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கோயில் திறந்திருக்கும் நேரம் எந்த வரிசையிலும் நிற்காமல் தரிசனம் செய்யலாம்.  ஒரு உண்டியல் கூட இல்லாமல் இருந்த கோயிலில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே வலுக்கட்டாயமாக அரசால் உண்டியல் வைக்கப்பட்டது.  ஆனாலும் கோயிலின் அன்றாட நடைமுறைகளை மாற்ற முடியவில்லை.  திருவிழா நேரத்திலேயே மக்கள் அமைதியும், ஒழுங்கும், கட்டுப்பாடும் காத்து அனைவரும் நன்றாக தரிசனம் செய்ய வழி வகுக்கிறார்கள் என்பதைச் சென்ற ஆண்டு ஆருத்ரா தரிசனத்திற்காகச் சிதம்பரத்தில் தங்கி இருந்த மூன்று நாட்களில் புரிந்து கொண்டேன். முக்கியமாக எந்த விஐபிக்கும் தனி மரியாதை கிடையாது. அவர்கள் தனியாக தரிசனம் செய்வதும் முடியாது.  அவர்களோடு சேர்ந்து நாமும் தரிசனம் செய்யமுடியும்.  இதையும் சென்ற ஆண்டு திருவாதிரை சமயம் கவனித்தேன்.  ஆகவே கெடுபிடி செய்வது எல்லாம் சாதாரண, சாமானிய, கோயிலுக்கு இறைவன் உருவைக் காணச் செல்லும் பக்தன் அல்ல. 


மீனாக்ஷியே மதுரையில் சிறையில் தான் இருக்கிறாள்.  அவளைப் பார்ப்பது என்பது எளிதல்ல. வால் போல் நீண்ட வரிசை உள்ளே சந்நிதியில் ஆரம்பித்துத் தெற்கு கோபுர வாசல் வரை நீண்டு, சில சமயம் தெற்குச் சித்திரை வீதியிலோ, சில சமயம் தெற்கு ஆடி வீதியிலோ நீளும் வரிசை.  மணிக்கணக்காய்க் காத்திருந்து நீங்க சந்நிதிக்கு அருகே செல்லும் சமயம் வழி மறிக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்படுவீர்கள்.  கோயில் பணியாளர்களுக்குத் தெரிந்தவர்களோ, காவல் துறையின் முக்கிய அதிகாரிகளோ, அரசு அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ வருவார்கள்.  அவங்க போனதுக்கப்புறம் தான் உங்களுக்கு தரிசனம்.  2007-ல் போனப்போ மீனாக்ஷியைத் திட்டிவிட்டு வந்து விட்டேன்.  இனி அவளாகக் கூப்பிட்டால் தான்! :((((((

2012/1/28 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 28, 2012, 9:16:17 PM1/28/12
to mint...@googlegroups.com
பபல கோயில்களுக்கு பூர்வீகமாக ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தும் அவற்றை யாரோ அரசியல்வாதிகள் ஆளுமை செய்துகொண்டிருக்கிறார்கள், அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்
கோயில்களில்  இருக்கும்  தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யக் கூட பிறர் கையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அவல நிலையை பல கோயில்களில் கண்டேன்
 
அதே போல் சிற்பங்களைப் பராமரிக்க  யாருமில்லை,
 
நாத்திகம் பேசிப் பேசியே  நம்  புராதனச் சின்னங்களை அழியவிட்டுவிட்டார்கள்
 
நாத்திகமோ ஆத்திகமோ சிற்பங்கள் பழங்கலையல்லவா?
 
மண்டபத்திலிருக்கும் தூண்களில் உள்ள  சிற்பங்கள் எப்படிப்பட்ட புராதனமான நுணுக்கமான கலையின் வெளிப்பாடு  அல்லவா
 
மொத்தத்தில் நம்மவர் நம் புராதனங்களை  சுரண்டி விட்டனர்
 
நம் மக்கள்  அவர்களின் மூதாதையர்களின் கைபட்ட, முக்கியமான பொருட்களையே பாதுகாக்கத்  தவறியவர்கள்
 
பொதுச் சொத்தான கோயில்களையா பாதுகாக்கப் போகிறார்கள்?
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 
 
2012/1/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

LK

unread,
Jan 28, 2012, 9:18:39 PM1/28/12
to mint...@googlegroups.com
பெரிய கோவில்களுக்கு செல்வதில்லை என்ற முடிவை எடுத்து ரொம்ப நாளாச்சு.

கீதாம்மா , இப்ப சிதம்பரம் நிலை என்ன ? கண்டிப்பா மாத்தி இருப்பாங்க

2012/1/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com



 

N. Kannan

unread,
Jan 28, 2012, 9:55:31 PM1/28/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
2012/1/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> 2007-ல் போனப்போ மீனாக்ஷியைத் திட்டிவிட்டு வந்து
> விட்டேன்.  இனி அவளாகக் கூப்பிட்டால் தான்! :((((((
>

சரிதான்! அவ, உங்களையும் கைவிட்டாளா? என்னை மட்டும்தான் என்று எண்ணியிருந்தேன்.

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் நல்ல தரிசனம் தந்தாள். என் தந்தைக்கு
அருள்தந்த அன்னை (படங்கள் சுபாவுடன் போய்விட்டன. அங்கு சந்நிதிக்கு
அருகில் பொதுமக்கள் கொட்டும் விபூதி, குங்குமத்தைச் சுத்தம் செய்யும்
‘உழவாரப்பணியாளர்களைப் படமெடுத்தேன். அவர்கள் தூண், தூணாகச் சுத்தம்
செய்யும் அழகே அழகு! அது சரி நம்ம மதுரை ஜனங்களுக்கு என்ன ஆகிவிட்டது?)

பரசாரபட்டர் எனும் பெரியவர் ரங்கநாயகி-திருவரங்கனை அம்மா, அப்பாவைப் போல்
பார்த்துக் கொள்வாராம். அந்த பாவம் நமக்கு வந்தால் ‘அம்மா முகத்தில்
வெண்ணெயை ஓங்கு, ஓங்கி அடிப்போமா?’ நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது!

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Jan 29, 2012, 2:26:53 AM1/29/12
to மின்தமிழ்
தனித்தன்மை மிக்க, மிக அபூர்வமான படிமங்கள்
நம் ஆலயங்களில் உள்ளன; பணம் செலுத்திப்
படமெடுத்தாலும், ஆலய நிர்வாகம் விளம்பரம்
செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைப்பதும் உண்டு.
என்ன செய்வது ? கடத்தல் ஸாம்ராஜ்யத்தின்
வலிமை அத்தகையது. விரிவாகப் பேசினால்
மீண்டும் ஹிந்துத்வ ஸமாச்ரயணம் நடக்கும்


தேவ்

N. Kannan

unread,
Jan 29, 2012, 5:38:24 AM1/29/12
to mint...@googlegroups.com
கோயில்கள் என்றவுடன் எத்தனையோ நினைவுகள்.

மதுரை மீனாட்சி கோயில் என்பது என் பள்ளிப்பாசறை, ஆடிவீதி என் விளையாட்டுத்திடல். ஸ்வாமி சந்நிதி வெள்ளை யானையும், கல்யானைக்குக் கரும்பு கொடுத்த சித்தரும் என் பள்ளிப் பிரம்மிப்புகள். இப்படித்தான் கோயில்கள் நம்முடன் ஒன்றுகின்றன. பின் ஊனுடம்பு ஆலயம் எனும் நிலைக்கு நம்மை மெல்ல, மெல்ல இட்டுச் செல்கின்றன. மீனாட்சிக்குக் கிராக்கியென்றால் நம்மைக் கைவிட்டு விடுவதில்லை. வேற ஊரைக் காட்டுகிறாள். தன் சாநித்யம் உள்ள மற்றொரு இருக்கையை அடையாளம் காட்டுகிறாள். அப்படித்தான் முன்னொரு பயணத்தில் திருப்பூவணம் சௌந்தர்யநாயகி காட்டப்பட்டாள். கூட்டம் நெருக்குகிறது என்றால் நாமே நாசுக்காக விலகி, விளக்கு வைக்கக்கூட ஆளில்லாத கோயில்களுக்குப் போய் அவைகளைப் பிரபலப்படுத்த வேண்டும். அப்படி எத்தனை கோயில்கள்!!

விஜயமங்கலம் ஜீந ஆலயம் அப்படியொரு உணர்வை என்னுள் எழுப்பியது.

Vijayamangalam.jpg

இக்கோயிலை சற்று உற்றுக் கவனிக்காவிடில் இது சமணக்கோயிலென்று நமக்குத் தெரியாது. கோயில்கலை என்பது அடிப்படையில் தமிழ் மரபு சார்ந்து அமைவதால் நமக்கு ஒரு சிவன்/விஷ்ணு கோயிலுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எங்களுடன் ஒரு பள்ளியின் மாணவர்கள் வந்திருந்தனர். அதில் ஸ்வேதா என்றொரு பெண். அவள் வடநாட்டு ஜெயின். அவர்களுக்கு உடனே இது நம் கோயில் என்ற உணர்வு வருவதில்லை. நாம்தான் உருவாக்க வேண்டும். அவர்களுக்குள் திகம்பர, ஸ்வேதாம்பர போன்ற உட்பிரிவுகள் இருப்பதுடன், வடக்கு/தெற்கு கலாச்சார வேறுபாடு வேறு உள்ளது. ஒருமுறை ஆக்ஸ்போர்டு வைஷ்ணவத்துறைப் பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்த போது செழிப்பான தமிழக சமணம் பற்றிக் கூறினேன். அவருக்கு ஆச்சர்யம்! குறைந்தது 2000 வருடப் பாரம்பரியம் என்று கூறினால் நம்ப முடியவில்லை.

ஜெயின் குடிகள் வளமான வணிகக்குடிகள். அவர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து இம்மாதிரி வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்ச் சமணக் கோயில்களை அரவணைத்தால் தமிழ்ச் சமணம் மீண்டும் பொலிவு பெறும் என்று நம்பலாம்!

நா.கண்ணன்

பிகு: உடன் வந்த பேரா.புலவர் இராசு, “கண்ணன் இங்கு 5 சிலைகள் இருந்தன, காணவில்லை! என்றார். பகீர் என்றது. இறங்கியவுடன் ஒரு பெரிசு எங்கள் கார் அருகில் வந்து, ‘உள்ளே மாடு மேய்க்க வ்டுறானுக’ என்று புகார் செய்தார். ஏன் நம் மரபுப் பேணுதல் என்பது ஒரு அவசர கால நடவடிக்கை போல் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென்பது இப்போது புரிந்திருக்கும்!
Vijayamangalam.jpg

Geetha Sambasivam

unread,
Jan 29, 2012, 12:06:57 PM1/29/12
to mint...@googlegroups.com
சிதம்பரம் கோயிலின் நிலைமையை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது எல்கே.  நாங்க 2011 ஆகஸ்டில் போனப்போ கூட எதுவும் மாற்றமில்லை.  அப்படி ஏதேனும் ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் உடனடியாகத் தகவல் வந்துவிடும்.  

2012/1/28 LK <karth...@gmail.com>
பெரிய கோவில்களுக்கு செல்வதில்லை என்ற முடிவை எடுத்து ரொம்ப நாளாச்சு.

கீதாம்மா , இப்ப சிதம்பரம் நிலை என்ன ? கண்டிப்பா மாத்தி இருப்பாங்க


360.gif

Geetha Sambasivam

unread,
Jan 29, 2012, 12:08:52 PM1/29/12
to mint...@googlegroups.com
மதுரை ஜனங்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். பொற்றாமரையைச் சுற்றி இருந்த பழைய நாயக்கர் காலத்து ஓவியங்களை அழித்தபோதே எதிர்க்காத மதுரை மக்கள் இதற்கு என்ன செய்ய முடியும்? பழகிப் போயிருக்கும்! :(((((((

2012/1/28 N. Kannan <navan...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
Jan 29, 2012, 12:11:51 PM1/29/12
to mint...@googlegroups.com
தன் சாநித்யம் உள்ள மற்றொரு இருக்கையை அடையாளம் காட்டுகிறாள். அப்படித்தான் முன்னொரு பயணத்தில் திருப்பூவணம் சௌந்தர்யநாயகி காட்டப்பட்டாள். கூட்டம் நெருக்குகிறது என்றால் நாமே நாசுக்காக விலகி, விளக்கு வைக்கக்கூட ஆளில்லாத கோயில்களுக்குப் போய் அவைகளைப் பிரபலப்படுத்த வேண்டும். அப்படி எத்தனை கோயில்கள்!!  //

உண்மையே;  இப்போதெல்லாம் அப்படித்தான் திருப்தி அடைகிறோம்.  மீனாக்ஷியைப் பாரத்தே பல ஆண்டுகள் ஆகின்றன. அதனால் என்னனு விட்டுட்டேன்.  விஜயமங்கலம் ஜீனர் கோயிலில் மட்டுமில்லாமல் பல கோயில்களிலும் மாடுகள் மேய்வதைப் பார்க்கலாம். 

2012/1/29 N. Kannan <navan...@gmail.com>
கோயில்கள் என்றவுடன் எத்தனையோ நினைவுகள்.

அப்படித்தான் முன்னொரு பயணத்தில் திருப்பூவணம் சௌந்தர்யநாயகி காட்டப்பட்டாள். கூட்டம் நெருக்குகிறது என்றால் நாமே நாசுக்காக விலகி, விளக்கு வைக்கக்கூட ஆளில்லாத கோயில்களுக்குப் போய் அவைகளைப் பிரபலப்படுத்த வேண்டும். அப்படி எத்தனை கோயில்கள்!!

விஜயமங்கலம் ஜீந ஆலயம் அப்படியொரு உணர்வை என்னுள் எழுப்பியது.

பிகு: உடன் வந்த பேரா.புலவர் இராசு, “கண்ணன் இங்கு 5 சிலைகள் இருந்தன, காணவில்லை! என்றார். பகீர் என்றது. இறங்கியவுடன் ஒரு பெரிசு எங்கள் கார் அருகில் வந்து, ‘உள்ளே மாடு மேய்க்க வ்டுறானுக’ என்று புகார் செய்தார். ஏன் நம் மரபுப் பேணுதல் என்பது ஒரு அவசர கால நடவடிக்கை போல் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென்பது இப்போது புரிந்திருக்கும்!

--

Prakash Sugumaran

unread,
Jan 29, 2012, 2:19:41 PM1/29/12
to mint...@googlegroups.com
 சமணப்படுக்கைகள் கள்ளக் காதலர்கள் படுக்கையாகி புனிதம் கெட்டு, கற்கால பாறை ஓவியங்களின் மேல் காதலர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன!//
காதலை கடந்த கடவுள் இருப்பார் என யார் சொன்னது ?

 கோயிலை பவித்திரமாகக் காணும் பயிற்சி நமக்கு
வேண்டுமென்று தோன்றுகிறது.
உலக மக்களின் நிரந்தர பிரச்சினை இது. பவித்ரம் என எதுவுமே இல்லை.
 
படமெடுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் என்று இதுவரை யாரும்
விளக்கவில்லை.
கோவில்கள் அருங்காட்சியகங்கள் இல்லை. சில விஷயங்கள் புரியாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது. நாத்திகர்கள் என்பவர்கள் ஆத்திகர்களை விட கடவுள், கோவில், வழிபாடு போன்ற சமாசாரங்களை நன்கு புரிந்தவர்கள்.
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள மிகவும் பயன்படுகிறது//
இதை விட பயனுள்ள, புண்ணியமான ஒரு இடம் வேறு எங்கு உள்ளது ?
 
சராசரி ஹிந்து பக்தன் விக்ரஹ ஆராதனையில் நம்பிக்கை இல்லாதவன். பாவ்லா காட்டுவதுடன் சரி//
நம்ப முடியாத உண்மையை சாதாரணமாக தெரிவித்து உள்ளீர்கள்.
 
 
2012/1/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

N. Kannan

unread,
Jan 29, 2012, 9:57:02 PM1/29/12
to mint...@googlegroups.com
2012/1/30 Prakash Sugumaran <praka...@gmail.com>

>
>  சமணப்படுக்கைகள் கள்ளக் காதலர்கள் படுக்கையாகி புனிதம் கெட்டு, கற்கால பாறை ஓவியங்களின் மேல் காதலர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன!//
> காதலை கடந்த கடவுள் இருப்பார் என யார் சொன்னது ?
>
>  கோயிலை பவித்திரமாகக் காணும் பயிற்சி நமக்கு
> வேண்டுமென்று தோன்றுகிறது.
> உலக மக்களின் நிரந்தர பிரச்சினை இது. பவித்ரம் என எதுவுமே இல்லை.
>

இதற்கு சமணர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் :-)


> படமெடுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் என்று இதுவரை யாரும்
> விளக்கவில்லை.
> கோவில்கள் அருங்காட்சியகங்கள் இல்லை. சில விஷயங்கள் புரியாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது. நாத்திகர்கள் என்பவர்கள் ஆத்திகர்களை விட கடவுள், கோவில், வழிபாடு போன்ற சமாசாரங்களை நன்கு புரிந்தவர்கள்.
> ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள மிகவும் பயன்படுகிறது//
> இதை விட பயனுள்ள, புண்ணியமான ஒரு இடம் வேறு எங்கு உள்ளது ?
>

உற்றுக் கவனித்தால் நீங்களே இங்கு உங்களுடன் முரண்படுவது தெரிகிறது.

ஒரு மடலின் தொணி அதன் முழுமையில் உள்ளது. வெட்டி/ஒட்டிப் போட்டு
மறுக்கும் போது ஜீவன் போய்விடுகிறது :-) (நான் என்ன சொல்ல வருகிறேன்
என்பது உங்களுக்குப் புரியாமல் இல்லை!)


> சராசரி ஹிந்து பக்தன் விக்ரஹ ஆராதனையில் நம்பிக்கை இல்லாதவன். பாவ்லா காட்டுவதுடன் சரி//
> நம்ப முடியாத உண்மையை சாதாரணமாக தெரிவித்து உள்ளீர்கள்.
>

இது நான் சொன்னது அல்ல. வெட்டி/ஒட்டும் வினை இது :-(

நா.கண்ணன்

Chandrasekaran

unread,
Jan 29, 2012, 10:32:20 PM1/29/12
to mint...@googlegroups.com
கண்ணன் அய்யா
இந்த பிரச்னைகள் எல்லாம் புதியன அல்ல. உங்களுக்கும் தெரியாதது அல்ல. இம்மாதிரியான கவனிப்பாரற்று கிடக்கும் கோயில்கள் ஆவணப்படுத்தவும், பராமரிக்கவும், மின் தமிழின் பங்கு என்ன? செயல் திட்டம் என்ன என்று எளியவர்களுக்குச்  சொன்னால், நாங்கள் ஏற்கனவே செய்யும் பணிகளுக்கு தங்கள் மின் தமிழ் குழுமமும் கை கொடுக்கிறது என்று பொருள் இல்லையேல் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் இந்தியர்கள், பூர்வ  குடிகள் குறைப் பாட்டு பாடுவது என்ன பலன்? வேண்டுமென்றால் பதிவாக மின்தளத்தில் வெளியிடலாம். அவ்வளவே. ஆக்க பணிகள் வழிமுறை, செயல் திட்டம், அதற்கான பண உதவி, அதற்கு ஏற்ப ஆட்கள் பலம் போன்றவை பற்றிய ஒரு action plan சொன்னால் ஒழிய, இது வெறும் புலம்பல் மேடை ஆகிவிடக்கூடாது என்பது அடியேனின் கோரிக்கை. அதனால் தான் நானும் இன்னொமொரு நூறு மேற்கோள்கள் காட்டாமல், பணித்திட்டம் கேட்கிறேன். 
நன்றி
சந்திரா

N. Kannan

unread,
Jan 30, 2012, 6:45:15 AM1/30/12
to mint...@googlegroups.com
ஐயா பிளாஸ்டிக் சந்திரா:

ஊரார் சிரிக்கச் சொல்வர் உற்றார் உறைக்கச் சொல்வர் என்பது பழமொழி.

I'm talking about general civic responsibilities. அதை வெளிநாடு
போய்விட்டு வந்துதான் சொல்ல வேண்டுமென்றில்லை. பெரியாரும்
சொல்லியிருக்கிறார். நானும் சொன்னேன்.

உங்கள் அரிய பணி வாழ்க!

நா.கண்ணன்

2012/1/30 Chandrasekaran <plastic...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Jan 31, 2012, 7:23:12 AM1/31/12
to mint...@googlegroups.com
வெட்டி ஒட்டி கட்டி சுட்டிக்காட்டும் தகவல்

what is religion, Hindu Religion and a Hindu temple is, and what are its ceremonial precepts.

The substratum of any religion lies in the rocky foundation of its ancient beliefs, rituals and practices. Religion is ordinarily referable to the expression of all men's belief in and reverence for a superior human power recognised as creator and governor of the universe. Sanctimoniousness is not a necessary creed annexed to a firm religious tenet. But Hindu religion, whose origin is so ancient has maintained throughout, its ethics, practices and mandates, that they have lived through every changing time, but maintaining at all times its pristine usefulness and its inhered capacity to demand respect and reverence to such tenets. The varied facets of such respectable practices are demonstrated in our Puranas, which continue even now as divine guidelines for errancipation. But what was achieved by meditation in Kritayuga, by various sacrifices, in Tretayuga, by personal service in Dwapa-rayuga, can be obtained in Kaliyuga by constant worship and strict adherence to immemorial religious practices. One such accredited practice in Hindu religion is worship in temples and that too in a prescribed manner. If there are certaini well-laid practices regarding the mode of worship in a Hindu temple and if such ordainrrents are backed up by Agama

Religion is a matter of faith with individuals or communities and it is not necessarily theistic. A religion may hot only lay down a code of ethical rules for its followers to accept, it might prescribe rituals and observances, ceremonies and modes of worship which are regarded as integral parts of religion, and these forms and observances might extend even to matters of food and dress.

What constitutes the essential part of a religion is primarily to be ascertained with reference to the doctrines of that religion itself. If the tenets of any religious sect of the Hindus prescribe that offerings of food should be given to the idol at particular hours of the day, that periodical ceremonies should be performed in a certain way at certain periods of the year or that there should be daily recital of facred texts or oblations to the sacred fire, all these will be regarded as parts of religion

what is a temple and the ceremonious laws relating to it and its importance (Agamas).'
The temples are popularly understood as the sole repository of "Divine power", to which supreme entity, a sincere worshipper having a belief in such theology approaches with feivour and faith. They are of very ancient origin and the ceremonious law relating to the temples are generally stated in what are accepted as Agamas.

In the Nirvachanapaddhathi it is said that Sivadwijas should worship in the Garbhagraham, Brahmins from the ante chamber of Sabah Mantapam, Ksha-triyas, Vysias and Sudras from the Mahamantapam, the dancer and the musician from the Nritharnantapam east of the Mahamantapam and that castes yet lower in scale should content themselves with the sight of the Gopuram.

The Agamas contain elaborate rules as to how the temple is to be constructed, where the principal deity is to be consecrated and where the other Devatas are to be installed and where the several classes of worshippers are to stand and worship. Where the temple was constructed as per directions of the Agamas the idol had to be consecrated in accordance with an elaborate and complicated ritual accompanied by chanting of mantras and devotional songs appropriate to the deity. On the consecration of the image in the temple the Hindu worshippers believe that the divine spirit has descended into the image and from then on the image of the deity is fit to be worshipped. Rules with regard to daily and periodical worship have been laid down for securing the continuance of the divine spirit. The rituals have a two-fold object. One is to attract the lay-worshipper to participate in the worship carried on by the priest or Archaka. It is believed that when a congregation of worshippers participates in the worship a particular attitude or aspiration and devotion is developed and confers great spiritual benefit. The second object is to preserve the image from pollution, defilement or desecration. It is part of the religious beliefs of a Hindu worshipper that when the image is polluted or defiled the Divine Spirit in the image diminishes or even vanishes. That is a situation which every devotee or worshipper looks upon with horror. Pollution or defilement may take place in a variety of ways. According to the Agamas, an image becomes defiled, if there is any departure or violation of any of the rules relating to worship. In fact, purificatory ceremonies have to be performed for restoring the sanctity of the shrine.

The classes of persons mentioned hereunder shall not be entitled to enter or offer worship in a temple or bathe in or use the waters of any scared tank, well, spring or watercourse appurtenant to the temple whether situate within or outside the precincts thereof or any sacred place. including a hill or hillock, or a road, street, or pathway which is requisite for obtaining access to the temple:

(a)Persons who are not Hindus;

(b)Persons under pollution arising out of birth or death in their families.

(c)Women at such times during which they are not by custom and usage allowed to enter a terrple;

(d) Drunken or disorderly persons;

(e) Persons suffering from any loathsome or contagious disease;

(f) Persons of unsound mind except when taken for worship under proper control. and with the permission of the executive authority of the temple concerned;

(g) Professional beggars.

Persons who are not Hindus shall be admitted into temples provided:

(i) they are admitted only during the time when pooja is not performed.

(ii) they are permitted to enter into Mahamandapam and not to the Ardha-mandapam.

(iii) They inform the temple autrorities of the object of their, visit, obtain a pass and enter into the temple, with a temple guide or if there is no guide a servant of the temple.

(iv) they abide by the customs and usages prevailing in the temple.

(v) they safeguard the general and special sanctity and honour of the temple.

(vi) They do not take photographs of any part of the temple without the permission of the appropriate authoririty.


The principal compartments of an ordinary Siva temple are (1) the Garbagriham where the principal fixed image is established and which is the holiest part of the temple; (2) the next outer hall called the Arthamantapam (Half-hall) and (3) a further outer hall which is called the Maha Mantapam or Big Hall. As the principal image usually faces east, these three rooms or halls lie usually east of one another. (In the Siva Temples the big outer Nanthi, the Flag staff and the Balipitam lie still further to the east). The two outer Mantapams (the Artha Mantapam and the Maha Mantapam) are, under a more elaborate classification subdivided into fractional portions. The Artha Mandapam is divided into (a) Antharala (b) Mukha Mantapa (c) Dwara Mantapa (d) Snapana Mantapa and (e) Vrisha Mantapa. The Maha Mantapam is subdivided into (a) Bahir Mantapam and (b) Nritha Mantapam. In the smaller temples (like the one in dispute), the only practical distinction is between the Garbhagriham and the portion east of 1ts gate up to the Flag staff so far as access of caste Hindus is concerned. The technical names "Artha Mantapa " and "Maha Mantapa," etc., do not at all appear in the evidence in the suit and though slight mention appears of a Thorana light and Thornakal,

" all those who can enter the temple " (that is, west of the Flag staff) " can go as far as the Sabapathy Sannadhi," that is, up to the gate of the Garbhagriham and that no sub-division is made of the space into Artha Mantapa, Maha Mantapa, Nritha Mandapa, etc, as regards the right of access.

as the (Garbhagriham) is concerned, it is only the Brahmins who belong to the temple priest sect that could stand inside it for the purpose of worship. Ordinary Brahmins, Pillais and Mudahars are entitled to worship from the outer Mantapam.

The origin of image worship in temples is stated in the authoritative Puranas to have been in the Threthayugam and subsequent ages. In the first or Krithayugam, God was worshipped by mankind (which consisted of only one caste,) as immanent in the heart of everything and worship consisted solely in the service to one's fellow creatures. As the spirit of universal brotherhood decayed in the second age and notions of inferiority and superiority among men were indulged in, the inferior man was asked to worship God's higher manifestations irP the superior man. Then, disputes naturally rose about relative superiority and inferiority and the sages considered it expedient to introduce image worship in order to prevent quarrels about superiorities and in order that all men (who had now become divided into four distinct castes) without unseemly squabbles about their relative excellences might worship God in common image (see the 4th Sloka in the 7th Skanda 14th chapter of Sreemath Bhaghavatam). Though image worship was thus recommended and laid open to all castes, it was clearly recognised as not the highest form of worship. (See succeeding slokas). The appropriate mode of worship for the Brahmins was held to be through the media of the Fire and the Sun and the highest form of worship for all castes was always recognized as that which prevailed in the first age. It is clear from the above that temples were intended for the worship of people belonging to all the four castes without exception. Even outcastes were not wholly left out of the benefits of temple worship, their mode of worship being however made subject to severe restrictions as they could not pass beyond the Dwajastambam (and sometimes not beyond the temple outer gate) and they could not have a sight of the images other than the procession images brought out at the times of festivals. The Agamas and the Thanthras which regulated the worship in the temples laid down rules as regards what caused pollution to a temple and as regards the ceremonies for removing pollution when caused. There are, it is well known, Thanthries in Malabar who are specialists in these matters of pollution. As the temple priests have not the special Saivite initiation of Dheeksha which entitled them to touch the innermost image and as the touch of the persons who have got no such initiation even though they be Brahmins was supposed to pollute the image, even Brahmins other than the temple priest Brahmins were in many temples not allowed to go into the Garbhagraham. In one of the Agamas, it issaid (as freely translated) thus:--" Saivite Brahmin priests are entitled to worship in the Antharala portion. Brahmins learned in the Vedas are entitled to worship in the Arthamantabha. Other Brahmins in the front Mantabha, Kings and Vysyas in the Dwaramantabha. Initiated Sudras in the Bahir Mantabha,'' and so on.

There is no Mantabham or hall for worship east of Dwajasthambam and it is plain from the Tanthras and Agamas that the Sudras and all castes above Sudras (including the Anuloma mixed progeny of the four castes) are entitled to stand and worship at appropriate spots west of the Dwajastamba.

There are certain castes whose touch causes pollution not only to Brahmins but also to Sudras. They are usually spoken of as Yeenjathiyars. Of course even among Sudras, those who consider themselves more respectable will try to avoid the touch of the less respectable classes though there is no ceremonial pollution caused by such touch. For instance D.W.I, says in this case I am a Sudra, Caste, Vellala. I do not touch the lower class of Vellalas." This is not because their touch causes any religious pollution to the higher class but simply out of the exaggeration and aberration of caste sentiments, the exaggeration being due to " class " sentiment having come in recent times to reinforce caste sentiment. So D.W.I. says " I will not touch a Maravar or Edayan" though he admits that Maravars, Edayans, Asaries and Kammalas, Pillais, Mudaliars and Pillais of inferior caste, all stand in the next compartment to the Brahmin's compartment mixed up together. See page 21, lines 20 and 21 of the Printed Book. D.W. 14 adds " Koravars, Reddis and Naiyakas are entitled to enter the temple " which means entering the outer hall. The plaintiffs community, though of the Sudra caste, was a rather poor and uninfluental community till a few years ago while the Pillais and Mudaliars have been influential classes all along.

Tamil word "Vaniyan " is derived from the Sanskrit "Vanija. " Vanija (Baniya in the Northern Vernacular) merely means a Vysia who has trade as his occupation. The term ' Vaniya ' in Tamil when used by itself has come to mean a trader in oils. A trader in oil especially when he crushes seeds to obtain the oil is considered to follow a sinful occupation. Vaniyans who press oil are also called Sekkans, sekku being the oil pressing machine. In the Census Report of 1901 Mr. Francis says at page 182 that for some obscure reason Manu classed oil-pressing as a base occupation. " The reason is, however, clear enough. In chapter 4, sloka 85, Manu says that an oil-press (which destroys the lives of innumerable vegetable seeds is not better than a slaughterhouse and that is the reason why the caste of the Sekkan or Thilavaniyan (shortly called Vaniyan) is considered an impure caste.

The Shanars were excluded from access into the temple because overwhelming evidence proving that they belong to a caste whose touch was pollution (to Sudra), whose occupation of toddy drawing was of a sinful kind and who were therefore lower than Sudras in status

Though there are 28 Sivagamas, the Kamitagama is the Agama most quoted in these matters and the substance of the other Agamas has been digested in 18 paddhathies, of which Sakala-gamasara, Varunapaddhathi and Nirvachanapaddhathi are those most frequently referred to. In the Nirvachanapaddhathi it is said that Sivadwijas should worship in the Garbhagriham, Brahmins from the ante chamber or Sabah Mantabam, Kshatriyas, Vysias and Sudras from the Mahamantabham, the dancer and the musician from the Nrithamantabham east of the Mahamantabham and that castes yet lower in scale should content themselves with the sight of the Gopuram.

Devout Hindus  exemplify the importance of a temple, its Gopurams, its Mandapams etc. A reference is also made to the purificatory ceremonies undertaken by the temple authorities if any defilement is caused and if anybody dies in the vicinity of the temple. A reference is also made to several Agamas which prescribe that any transgression or pollution, even in the matter of place of worship inside the temple would result in the reconsecration of the deity. Mr. R. Raghava Bhattar of Srirangam, who is an authority on Parameswara Samhita (Pancharathra Agamam) explains what is Ardha Mahdapam, Mahamandapam and Garbagraham and says that if Mlechas (non-Hindus) enter the temple, it is derogatory to the other devotees who worship the Lord. If for some reason, they enter the temple, Maha Samprok-shanam and Shanthi have to be performed. This view is also fortified by another devout Hindu well-versed in Saiva Agamas.

Nagarajan








2012/1/30 N. Kannan <navan...@gmail.com>

DEV RAJ

unread,
Jan 31, 2012, 12:12:18 PM1/31/12
to மின்தமிழ்
On Jan 28, 2:35 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>> முதுசொம் என்றால் *பிதுர்ராஜ்ஜியச் சொத்து என்று பொருள்<<<

*பித்ரார்ஜிதம் - சரியான வடிவம்

முனைவர் கண்ணன் அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான்;
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆர்வலர்கள்
முழு மனத்துடன் விளம்பரமில்லாமல் ஆலயத் தொண்டு புரிந்து வருகின்றனர்.
மறைந்த திரை இயக்குநர் கே.பி.நாகராஜன் அவர்களின் புதல்வர்
திரு நல்லசிவம் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து வருகிறார்.
இதுபோல் வேறு சில குழாங்கள் உள்ளன.
ஆலயங்கள் ISO தரச் சான்றிதழ் பெற்று வருகின்றன.
இன்னும் பெரிய அளவில் பரவலாக வேண்டும்.
’குமுதம் ஜோதிடம்’ ஆலயப் பணிகளின் தேவையை
விடாமல் எழுதி வருகிறது. அன்பர் காளைராசன் அவர்கள்
நன்கு அறிவார்.


>>>>> கோயில் சிற்பங்களை நாயைக் கூண்டுக்குள் அடைப்பது போல் அடைத்து
வைத்திருக்கிறார்கள். <<<<

பெரிய கற்சிலைகளையும் கிராதிக்குள் காக்க வேண்டிய
கட்டாயம். கோவைக்கருகில் பேரூர்ச் சிற்பங்கள்
மிக நுணுக்கமானவை. அவை போன்றவற்றை அருமை தெரியாமல்
பாழ் படுத்த நேரலாம்.ஆலயம் சார்ந்த கல்வியையும்
கட்டாயமாக்க வேண்டும்


MADURAI, March 11, 2011
The Meenakshi Sundareswarar Temple here has been accorded ISO
9001:2008 certification
becoming only the fourth temple in the State to gain this
accreditation.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1526794.ece


Jul 6, 2010, 03.15am ISTChennai: The Kapaleeswarar temple in Mylapore
was
on Monday awarded ISO 9001:2008 certification.

http://articles.timesofindia.indiatimes.com/2010-07-06/chennai/28308467_1_quality-management-system-iso-certificate-kapaleeswarar-temple

Chennai, 17 August, (Asiantribune.com):

Three famous temples in Tamil Nadu will soon get the coveted ISO
9001:2008 certification.
"The Tiruchendur Subramanya Swamy temple, Madurai Meenakshi Amman
temple and
Palani Dhandayuthapani temples in Tamil Nadu are next in line to get
the ISO certification.

http://www.asiantribune.com/news/2010/08/17/three-temples-tamil-nadu-gets-iso-certification

தேவ்

கி.காளைராசன்

unread,
Jan 31, 2012, 12:30:38 PM1/31/12
to mint...@googlegroups.com
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

2012/1/31 DEV RAJ <rde...@gmail.com>

ஆலயங்கள் ISO தரச் சான்றிதழ் பெற்று வருகின்றன.
இன்னும் பெரிய அளவில் பரவலாக வேண்டும்.
இன்னும் 10 - 20 ஆண்டுகளில் பெரிய அளவில் பரவலாக எல்லாக் கோயில்களும் பண்டையப் புகழை அடையும் என நம்பலாம்.
 
’குமுதம் ஜோதிடம்’  ஆலயப் பணிகளின் தேவையை
விடாமல் எழுதி வருகிறது. அன்பர் காளைராசன் அவர்கள்
நன்கு அறிவார்.
குமுதம் ஜோதிடம் ஆசிரியரின் பணி ஒப்பற்றது.    தனிமனித வளங்களை எல்லாம் ஒன்று கூட்டுவித்து ஒவ்வொரு ஆலயமாகப் புனர்நிர்மாணம் செய்து வருகிறார்.  இது ஒரு மகத்தான மகேச சேவை.
இவர்போல் இன்னும் சிலர் இருந்துவிட்டால், இந்தியாவில் இடிந்த ஆலயங்களே இல்லை யென்றாகும்.
இறையருளைப் பிராத்தித்துக் கொண்டு எல்லோரும் அவரவருக்கு இயன்றதைச் செய்வோம். நமது சொத்தை நாம்தானே பாதுகாக்க வேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்


--
அன்பன்

கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,




N. Kannan

unread,
Jan 31, 2012, 10:29:09 PM1/31/12
to mint...@googlegroups.com
2012/1/31 கி.காளைராசன் <kalair...@gmail.com>:

> இன்னும் சிலர் இருந்துவிட்டால், இந்தியாவில் இடிந்த ஆலயங்களே இல்லை யென்றாகும்.

இடிந்த கோயிலைச் சீர் செய்வது என்பது வேறு. அது பற்றி நான் பேசவில்லை.
நான் பேசுவது ஆலயம் என்பது தொழுதளம் மட்டுமன்று என்பதே. இறைவன் மீது
நம்பிக்கை இல்லாதவன் கூட வந்து ரசிக்கும் பல அம்சங்கள் நம் கோயிலில்
உண்டு. அதன் பன்முகத்தன்மை அப்படியே போற்றி காக்கப்பட வேண்டும்.

கோயில் என்பது பற்றி பள்ளிப்பருவத்திலிருந்து பாடங்கள் எடுக்கப்பட
வேண்டும். ஒரு 500 வருடங்கள் முன் கோயிலுக்குள் போய் கோயில் சிலையைச்
சிதிலப்படுத்தும் அநாகரீகம் இருந்ததில்லை. இன்று ஏன் நாம் பயப்படுகிறோம்
என்று யோசிக்க வேண்டும்.

கோயிலுக்கு சர்டிபிகேட் கொடுப்பது என்பது வேறு. அவனவன் ஊர் கோயில்
அவனவனுக்குப் பெரிசு. அப்படித்தான், ‘கோயில் இல்லா ஊரில் குடிருக்க
வேண்டாம்’ எனும் முதுமொழி வந்திருக்க வேண்டும். கோயில் பற்றிய தெளிந்த
அறிவு சமகாலத்தேவை. அது பற்றியே என் மடல் பேசுகிறது.

நா.கண்ணன்

K R A Narasiah

unread,
Jan 31, 2012, 10:52:22 PM1/31/12
to mint...@googlegroups.com
In Telugu Sommu is wealth and mudhu is old. Therefore Muhusom is old wealth Pithurarajitham or heritage treasure.

Yesterday I was on NDTV HINDU saying about teh heritage act that has not happened in Tamiulnadu whiole many other states have already have acts in place. 

I highlighted this point plus what Justice Padmnabhan committee has identified as heritaf=ge buildings and what action should be taken; in addition how senselessly the Banquet hall was demolished to build teh new Secretarait. How the heritage buildings must be LIVED IN nad just not locked; what is teh strategy for maintenance.

As I didnot kbow the time of telecast I couldnt tell teh members about it. Similarly 4 days back I was live broadcast on Radio mirchi on heritage points. I dont know if anyone has heard it.
Narasiah

2012/2/1 N. Kannan <navan...@gmail.com>

K R A Narasiah

unread,
Jan 31, 2012, 10:53:24 PM1/31/12
to mint...@googlegroups.com
Sorry there are number of typographical errors!
N

2012/2/1 K R A Narasiah <naras...@gmail.com>

N. Kannan

unread,
Feb 1, 2012, 1:39:18 AM2/1/12
to mint...@googlegroups.com
கோயில் என்பது ஒரு வரலாற்றுக்காப்பகம். கிருஷ்ணகிரியில் நாங்கள் போன எல்லாக் கோயில்களிலும் கல்வெட்டுகள் இருந்தன. அவையெல்லாம் முறையாக படியெடுக்கப்பட்டு அந்தக் கோயிலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

penneswara.jpg

பென்னேஸ்வரர் கோயில் கல்வெட்டு

இவ்வகைக்கல்வெட்டுக்களின் மூலம் ஒரு கோயிலின் தொன்மை, அதற்குண்டான அறக்கட்டளைகள், திருப்பணி செய்யப்பட்ட காலம், செய்தவர்கள் போன்ற பல சேதிகள் கிடைக்கும். கொரியாவில் ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய சேதிக்குறிப்புகள் இருக்கும். ஐரோப்பாவில் கோயில் (தேவாலயம்) பற்றிய குறிப்படங்கிய சிறு புத்தகங்கள் கிடைக்கும். நம் கோயில்களில் ஐதீகம் சார்ந்த ஓவியங்கள் (புதிதாய் வரையப்பட்டவை) அல்லது நாயன்மார்/ஆழ்வார் பாடிய பாடல்கள் மட்டுமே வைக்கப்படுவதிலிருந்து நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளோம் என்பது தெளிவு. ஒரு காலத்தில் கோயில் சரிதம் என்பது கோயிலின் பன்முகத்தன்மையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பது கண்கூடு.

(இன்னும் வரும்)

penneswara.jpg

karuannam annam

unread,
Feb 1, 2012, 4:08:59 AM2/1/12
to mint...@googlegroups.com


2012/2/1 N. Kannan <navan...@gmail.com>
கோயில் என்பது ஒரு வரலாற்றுக்காப்பகம். 

இவ்வகைக்கல்வெட்டுக்களின் மூலம் ஒரு கோயிலின் தொன்மை, அதற்குண்டான அறக்கட்டளைகள், திருப்பணி செய்யப்பட்ட காலம், செய்தவர்கள் போன்ற பல சேதிகள் கிடைக்கும்.
 
 நம் கோயில்களில் ஐதீகம் சார்ந்த ஓவியங்கள் (புதிதாய் வரையப்பட்டவை) அல்லது நாயன்மார்/ஆழ்வார் பாடிய பாடல்கள் மட்டுமே வைக்கப்படுவதிலிருந்து நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளோம் என்பது தெளிவு. ஒரு காலத்தில் கோயில் சரிதம் என்பது கோயிலின் பன்முகத்தன்மையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பது கண்கூடு.

மிகவும் சரியான கருத்து. நாயன்மார்/ஆழ்வார்கள் பாடல்கள் கூட அண்மைக்காலங்களில் கற்பலகைகளில் பதியப்படவில்லை. 1960, 70 களில் வைக்கப்பட்டவை/சுவரில் எழுதப்பபட்டவை. நான் விரும்பிப்படிப்பதுண்டு. எனக்கு முதல் நாயன்மார்/ஆழ்வார் பாடல்கள் அறிமுகம் இவையே.

அண்மைக்காலங்களில் குடமுழுக்கு விழாவுக்கு வருகை தந்த ச்ன்னிதானங்கள், அரசு அதிகாரிகள், கோவில் ஆணையர், திருப்பணியாளர் பெயர்கள் தான் கற்பலகைகளில் பதியப்படுகின்றன,
மேலும் இதுவரை ஒரு பூசகரும் கோவிலின் சரித்திரச் சான்று பற்றியோ ஆண்ட அரசர், ஆவணங்கள், சிற்பச் சிறப்புக்கள் பற்றியோ எடுத்துச் சொல்லிக் கேட்டதில்லை. பல யுகங்கள் முன்பு நடந்தவை தவிர.

மேலும் எழுதுங்கள் திரு கண்ணன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


Dhivakar

unread,
Feb 1, 2012, 4:29:44 AM2/1/12
to mint...@googlegroups.com
>>மேலும் இதுவரை ஒரு பூசகரும் கோவிலின் சரித்திரச் சான்று பற்றியோ ஆண்ட அரசர், ஆவணங்கள், சிற்பச் சிறப்புக்கள் பற்றியோ எடுத்துச் சொல்லிக் கேட்டதில்லை. பல யுகங்கள் முன்பு நடந்தவை தவிர<<

பூசகர்கள் என்றால் அர்ச்சகர்கள், சரிதானா.. ஆனால் இவர்கள் வேலையே பூசை செய்வதும் அந்த ஸ்தலத்தின் மகிமையை புராணகாலத்தில் எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது என்பதை அவர்கள் பெரியோர்கள் சொல்லக்கேட்டதை விவரிப்பது மட்டும்தானே.. மேலும் அவர்களிடம் ஏன் கோயில் கல்வெட்டுகள் பற்றி எதிர்பார்க்கவேண்டும்.. அரசாங்கம் எல்லா வருமானம் வரும் கோயில்களையெல்லாம் எடுத்துக்கொண்டு அதன் பலனை மட்டும் அனுபவிக்கும்போது அந்த அரசாங்கத்தார்தான் இப்படிப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய செய்தியை எடுத்துச் சொல்லவேண்டும். பூசகர்களைக் குறை சொல்வதிலோ, அவர்களிடம் விஷயம் எதிர்ப்பார்ப்பதிலோ என்ன பலன்?

அத்துடன் இன்னொன்று: இன்றைய நிலையில் கோயிலுக்கெனச் செல்பவர்கள் யாருமே (99%) ஏனைய விஷய்ங்களான கல்வெட்டுகள், சிற்பங்கள் இவைகள் பற்றிய விஷய்ங்களைத் தெரிந்து கொள்ள ஆவல் கொள்வதில்லை. அதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு கோயிலைப் பற்றி அறிந்துகொள்ள சிறந்த வழி - அங்குள்ள சமூகநல அமைப்போ அல்லது பெரும் செல்வந்தர் குடும்பமோ, பக்கத்தில் உள்ள தொழிலமைப்புகளோ மனது வைத்து, அந்தக் கோயிலைப் பற்றி ஒரு சிறு குறிப்பேடு ஒன்றை தயாரித்து,  கேட்பவருக்குக் கொடுப்பது .(இலவசமாக). 

 


2012/2/1 karuannam annam <karu...@gmail.com>


2012/2/1 N. Kannan <navan...@gmail.com>
கோயில் என்பது ஒரு வரலாற்றுக்காப்பகம். 

இவ்வகைக்கல்வெட்டுக்களின் மூலம் ஒரு கோயிலின் தொன்மை, அதற்குண்டான அறக்கட்டளைகள், திருப்பணி செய்யப்பட்ட காலம், செய்தவர்கள் போன்ற பல சேதிகள் கிடைக்கும்.
 
 நம் கோயில்களில் ஐதீகம் சார்ந்த ஓவியங்கள் (புதிதாய் வரையப்பட்டவை) அல்லது நாயன்மார்/ஆழ்வார் பாடிய பாடல்கள் மட்டுமே வைக்கப்படுவதிலிருந்து நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளோம் என்பது தெளிவு. ஒரு காலத்தில் கோயில் சரிதம் என்பது கோயிலின் பன்முகத்தன்மையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பது கண்கூடு.

மிகவும் சரியான கருத்து. நாயன்மார்/ஆழ்வார்கள் பாடல்கள் கூட அண்மைக்காலங்களில் கற்பலகைகளில் பதியப்படவில்லை. 1960, 70 களில் வைக்கப்பட்டவை/சுவரில் எழுதப்பபட்டவை. நான் விரும்பிப்படிப்பதுண்டு. எனக்கு முதல் நாயன்மார்/ஆழ்வார் பாடல்கள் அறிமுகம் இவையே.

அண்மைக்காலங்களில் குடமுழுக்கு விழாவுக்கு வருகை தந்த ச்ன்னிதானங்கள், அரசு அதிகாரிகள், கோவில் ஆணையர், திருப்பணியாளர் பெயர்கள் தான் கற்பலகைகளில் பதியப்படுகின்றன,


மேலும் எழுதுங்கள் திரு கண்ணன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

K R A Narasiah

unread,
Feb 1, 2012, 6:11:13 AM2/1/12
to mint...@googlegroups.com
ஆலவாய் நான் எழுதுகையில் எனக்கு உதவியது ஸ்தானிகர் வரலாறு தான். அவர்கள் தான் கோயிலின் சரித்திரத்தை காண்பிப்பவர்கள். அதேபோல ஸ்ரீரஙத்துக் கோயிலொழுகு தான் ஒரு சிறந்த சான்று.
நரசய்யா

2012/2/1 Dhivakar <venkdh...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 1, 2012, 12:18:29 AM2/1/12
to மின்தமிழ்

On Jan 31, 7:52 pm, K R A Narasiah <narasiah...@gmail.com> wrote:
> In Telugu Sommu is wealth and mudhu is old. Therefore Muhusom is old wealth
> Pithurarajitham or heritage treasure.
>

Muthusom is also used in Jaffna, in old colonial documents.
I think Telugu sommu has to do with Sanskrit svaya-

N. Ganesan

> Yesterday I was on NDTV HINDU saying about teh heritage act that has not
> happened in Tamiulnadu whiole many other states have already have acts in
> place.
>
> I highlighted this point plus what Justice Padmnabhan committee has
> identified as heritaf=ge buildings and what action should be taken; in
> addition how senselessly the Banquet hall was demolished to build teh new
> Secretarait. How the heritage buildings must be LIVED IN nad just not
> locked; what is teh strategy for maintenance.
>
> As I didnot kbow the time of telecast I couldnt tell teh members about it.
> Similarly 4 days back I was live broadcast on Radio mirchi on heritage
> points. I dont know if anyone has heard it.
> Narasiah
>

> 2012/2/1 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2012/1/31 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>:


> > > இன்னும் சிலர் இருந்துவிட்டால், இந்தியாவில் இடிந்த ஆலயங்களே இல்லை
> > யென்றாகும்.
>
> > இடிந்த கோயிலைச் சீர் செய்வது என்பது வேறு. அது பற்றி நான் பேசவில்லை.
> > நான் பேசுவது ஆலயம் என்பது தொழுதளம் மட்டுமன்று என்பதே. இறைவன் மீது
> > நம்பிக்கை இல்லாதவன் கூட வந்து ரசிக்கும் பல அம்சங்கள் நம் கோயிலில்
> > உண்டு. அதன் பன்முகத்தன்மை அப்படியே போற்றி காக்கப்பட வேண்டும்.
>
> > கோயில் என்பது பற்றி பள்ளிப்பருவத்திலிருந்து பாடங்கள் எடுக்கப்பட
> > வேண்டும். ஒரு 500 வருடங்கள் முன் கோயிலுக்குள் போய் கோயில் சிலையைச்
> > சிதிலப்படுத்தும் அநாகரீகம் இருந்ததில்லை. இன்று ஏன் நாம் பயப்படுகிறோம்
> > என்று யோசிக்க வேண்டும்.
>
> > கோயிலுக்கு சர்டிபிகேட் கொடுப்பது என்பது வேறு. அவனவன் ஊர் கோயில்
> > அவனவனுக்குப் பெரிசு. அப்படித்தான், ‘கோயில் இல்லா ஊரில் குடிருக்க
> > வேண்டாம்’ எனும் முதுமொழி வந்திருக்க வேண்டும். கோயில் பற்றிய தெளிந்த
> > அறிவு சமகாலத்தேவை. அது பற்றியே என் மடல் பேசுகிறது.
>
> > நா.கண்ணன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

karuannam annam

unread,
Feb 1, 2012, 7:55:31 AM2/1/12
to mint...@googlegroups.com


2012/2/1 Dhivakar <venkdh...@gmail.com>

>>மேலும் இதுவரை ஒரு பூசகரும் கோவிலின் சரித்திரச் சான்று பற்றியோ ஆண்ட அரசர், ஆவணங்கள், சிற்பச் சிறப்புக்கள் பற்றியோ எடுத்துச் சொல்லிக் கேட்டதில்லை. பல யுகங்கள் முன்பு நடந்தவை தவிர<<

பூசகர்கள் என்றால் அர்ச்சகர்கள், சரிதானா.. ஆனால் இவர்கள் வேலையே பூசை செய்வதும் அந்த ஸ்தலத்தின் மகிமையை புராணகாலத்தில் எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது என்பதை அவர்கள் பெரியோர்கள் சொல்லக்கேட்டதை விவரிப்பது மட்டும்தானே.. மேலும் அவர்களிடம் ஏன் கோயில் கல்வெட்டுகள் பற்றி எதிர்பார்க்கவேண்டும்.. அரசாங்கம் எல்லா வருமானம் வரும் கோயில்களையெல்லாம் எடுத்துக்கொண்டு அதன் பலனை மட்டும் அனுபவிக்கும்போது அந்த அரசாங்கத்தார்தான் இப்படிப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய செய்தியை எடுத்துச் சொல்லவேண்டும். பூசகர்களைக் குறை சொல்வதிலோ, அவர்களிடம் விஷயம் எதிர்ப்பார்ப்பதிலோ என்ன பலன்?

அவர்களிடம் குறை காணத் தாங்கள் எழுதியுள்ளதைப்போல எந்த வாய்ப்பும் இல்லை.
ஆனால் முப்போதும் திருமேனி தீண்டுபவர்களுக்கும் எப்போதும் கொவிலுடன் இருக்கும் அரசுப்பணியாளருக்கும் சரித்திர, கல்வெட்டு, ஆவண முக்கியத்வமும் தெரிந்து ஆர்வமும் இருந்தால் அவற்றின் காப்புக்குக் காவலராக விளங்குவார்கள். 
ஆர்வலர்களை ஊக்குவிக்கும் பெருஞ்சக்தியாக விளங்குவார்கள் அப்படி அமைவதும் ஒரு கொடுப்பினையே.

N. Kannan

unread,
Feb 1, 2012, 7:56:18 AM2/1/12
to mint...@googlegroups.com
2012/2/1 Dhivakar <venkdh...@gmail.com>

> பூசகர்கள் என்றால் அர்ச்சகர்கள், சரிதானா.. ஆனால் இவர்கள் வேலையே பூசை செய்வதும் அந்த ஸ்தலத்தின் மகிமையை புராணகாலத்தில் எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது என்பதை அவர்கள் பெரியோர்கள் சொல்லக்கேட்டதை விவரிப்பது மட்டும்தானே.. மேலும் அவர்களிடம் ஏன் கோயில் கல்வெட்டுகள் பற்றி எதிர்பார்க்கவேண்டும்.. அரசாங்கம் எல்லா வருமானம் வரும் கோயில்களையெல்லாம் எடுத்துக்கொண்டு அதன் பலனை மட்டும் அனுபவிக்கும்போது அந்த அரசாங்கத்தார்தான் இப்படிப்பட்ட கல்வெட்டுகள் பற்றிய செய்தியை எடுத்துச் சொல்லவேண்டும். பூசகர்களைக் குறை சொல்வதிலோ, அவர்களிடம் விஷயம் எதிர்ப்பார்ப்பதிலோ என்ன பலன்?

அன்பின் திவாகர்:

இம்முறை எனக்குத்தோன்றியது என்னவெனில் கோயில் பற்றிய நமது மதிப்பீடு
முற்றும் மாற வேண்டும் என்பதே. கோயிலின் முழுமையைப் புரிந்து கொள்ளும்
ஒரு holistic view நமக்குத்தேவை. இதைப் பூசகர் தன் மதிப்பினால் செய்வாரா?
இல்லை நல்லி செட்டி போன்ற நல்லோர் செய்வாரா? இல்லை அரசாங்கம் செய்யுமா?
என்று தெரியாது. இந்த விழிப்புணர்வு காலத்தின் தேவை. இப்போது நாம்
விழித்துக் கொள்ளாவிடில் நம்மாலேயே நம் பழமை அமுங்கிப்போகும். முழுமை
உணரப்படாமல் போகும். ஒரு பெரிய தேசிய எழுச்சி இது. இது வெறும் கனவாய்
போகலாம்! இறைவன் இன்னருள் வேண்டுவோம்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Feb 1, 2012, 7:58:23 AM2/1/12
to mint...@googlegroups.com
2012/2/1 N. Ganesan <naa.g...@gmail.com>:

>
> Muthusom is also used in Jaffna, in old colonial documents.
> I think Telugu sommu has to do with Sanskrit svaya-
>

இம்மன்றத்தில் இச்சொல்லை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர் என் நெடுந்தீவு
நண்பர் சுசீந்திரன். அவர் முதுசெம் என்றார். யாழ் வழ்க்கப்படி. இரா.ம.கி
‘முதுசொம்’ என்று பின்னால் விளக்கினார்.

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Feb 1, 2012, 9:34:34 AM2/1/12
to mint...@googlegroups.com
படம் அருமை அய்யா

சேசாதிரி







2012/2/1 N. Kannan <navan...@gmail.com>
penneswara.jpg

N. Kannan

unread,
Feb 3, 2012, 3:34:19 AM2/3/12
to mint...@googlegroups.com
தமிழக முதுசொம் பயணம் என்பது ஸ்ரீரங்கம் மோகன ரங்கனைக் காணாமல் முடிவதில்லை, ஏனெனில் அவரது திருப்பாற்கடல் என்பது பழைய புத்தகங்கள். அதில் அவர் சயனித்து இருப்பவர். 

Rangan_Sridhar.jpg

அவருடன் இருப்பவர் மின்தமிழ் அன்பர் ஸ்ரீதரன் ராகவன். என்ன? மோகன் எழுதுவதே இல்லை? என்று இவர் கேட்க அவரையும் அழைத்துக்கொண்டு நேரே நங்கநல்லூர் போய் விசாரித்துவிட்டோம். No news is good news! என்பது ஜெர்மன் வழக்கு. இவரது கணினி படுத்துவிட்டது. சரிதான்! நல்லதாய் போய்விட்டது என்று கிருஷ்ணசைதன்யரில் இறங்கிவிட்டார் மனிதர். விடுவோமா? அவருக்கு ஒரு மடிக்கணினி கொடுத்து உள்ளே இழுக்க ஆயத்தமாகி வருகிறோம்!
Rangan_Sridhar.jpg

Kalyan

unread,
Feb 3, 2012, 4:32:11 AM2/3/12
to mint...@googlegroups.com

தலையில் உள்ளஅனைத்தையும் மடியில் இறக்கி வைக்கும் முயற்சி போலும்
வாழ்த்துக்கள்

Kind Regards kalyanji 

On 3 Feb 2012, at 08:34, "N. Kannan" <navan...@gmail.com> wrote:

தமிழக முதுசொம் பயணம் என்பது ஸ்ரீரங்கம் மோகன ரங்கனைக் காணாமல் முடிவதில்லை, ஏனெனில் அவரது திருப்பாற்கடல் என்பது பழைய புத்தகங்கள். அதில் அவர் சயனித்து இருப்பவர். 

<Rangan_Sridhar.jpg>

அவருடன் இருப்பவர் மின்தமிழ் அன்பர் ஸ்ரீதரன் ராகவன். என்ன? மோகன் எழுதுவதே இல்லை? என்று இவர் கேட்க அவரையும் அழைத்துக்கொண்டு நேரே நங்கநல்லூர் போய் விசாரித்துவிட்டோம். No news is good news! என்பது ஜெர்மன் வழக்கு. இவரது கணினி படுத்துவிட்டது. சரிதான்! நல்லதாய் போய்விட்டது என்று கிருஷ்ணசைதன்யரில் இறங்கிவிட்டார் மனிதர். விடுவோமா? அவருக்கு ஒரு மடிக்கணினி கொடுத்து உள்ளே இழுக்க ஆயத்தமாகி வருகிறோம்!

இன்னும் வரும்..

--

LK

unread,
Feb 3, 2012, 4:34:25 AM2/3/12
to mint...@googlegroups.com
ரங்கனார் எங்கே ???

2012/2/3 Kalyan <guru...@hotmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com



 

Dhivakar

unread,
Feb 3, 2012, 4:36:53 AM2/3/12
to mint...@googlegroups.com
ரங்கன் வீடா இது? இல்லை போல இருக்கிறது.. நான் ஒருமுறை சென்றபோது அறைகள் பூராவும் புத்தகங்கள், மத்தியிலிருந்து ஒரு தாடி முகம் எழுந்து எட்டிப் பார்த்தது. கொஞ்சம் ப்யந்துதான் போனோம் ((

2012/2/3 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Rangan_Sridhar.jpg

N. Kannan

unread,
Feb 3, 2012, 7:57:39 AM2/3/12
to mint...@googlegroups.com
2012/2/3 Dhivakar <venkdh...@gmail.com>

>
> ரங்கன் வீடா இது? இல்லை போல இருக்கிறது.. நான் ஒருமுறை சென்றபோது அறைகள் பூராவும் புத்தகங்கள், மத்தியிலிருந்து ஒரு தாடி முகம் எழுந்து எட்டிப் பார்த்தது. கொஞ்சம் ப்யந்துதான் போனோம் ((
>

இப்போது அடுத்த நிலைக்கு நகர்வு. புத்தகங்களையெல்லாம் கழித்துக் கட்டப்
போகிறாராம். இன்னம்பூரானோ இங்கிலாந்தில்!!

‘வந்ததடி! காளைக்கு ஆபத்து! எனும் வீரபாண்டியக்கட்டபொம்மன் வசனம் போல்
இருக்கிறேன் நான் இப்போது! இதற்கு ஒரு காப்பகம் தேட வேண்டுமே?

சரஸ்வதிக்கு இருப்பிடம் அளிக்க இங்கு முன் வருவோர் யார்?

நா.கண்ணன்

s.bala subramani B+ve

unread,
Feb 3, 2012, 8:02:14 AM2/3/12
to mint...@googlegroups.com


2012/2/3 N. Kannan <navan...@gmail.com>

2012/2/3 Dhivakar <venkdh...@gmail.com>
>
> ரங்கன் வீடா இது? இல்லை போல இருக்கிறது.. நான் ஒருமுறை சென்றபோது அறைகள் பூராவும் புத்தகங்கள், மத்தியிலிருந்து ஒரு தாடி முகம் எழுந்து எட்டிப் பார்த்தது. கொஞ்சம் ப்யந்துதான் போனோம் ((
>

எனக்கும்  அந்த  அனுபவம்  உண்டு   

N. Kannan

unread,
Feb 3, 2012, 8:31:08 AM2/3/12
to mint...@googlegroups.com
தமிழகத்தின் அழகியல் குறித்தும், குமுகாயப் பொறுப்புணர்வு குறித்தும் நாம் இங்கு பேசியுள்ளோம். கடலோடி நரசய்யா அவர்கள் சென்னையிலுள்ள இராஜாஜி ஹாலின் பாதுகாப்புப் பற்றி ஹிந்துவில் பேசி இருக்கிறார்.

http://www.thehindu.com/news/cities/chennai/article2851475.ece

1753-ல் உருவாக்கப்பட்ட சரித்திரபூர்வமான இக்கட்டிடம் இடிக்கப்படலாமோ? எனும் சூழல் உருவாவது குறித்து கவலை தெரிவிக்கிறார். நாகரீகமடைந்த எல்லா சமூகங்களும் தங்கள் பழமையைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் கொள்கின்றன. அதுவே ஒரு பெரிய பீடு என்ற அளவில் ஐரோப்பாவில் பார்க்கப்படுகிறது. அங்கு நகரின் நடுவில் முன்பு (18/19ம் நூற்றாண்டில்) கட்டப்பட்ட தனியார் வீடுகளைக் கூட அழித்து புதிப்பித்துவிடமுடியாது. ஊரின் அழகாக, பீடாக அது பார்க்கப்படுவதால்!

முதலாம் உலகில் காலடி எடுத்து வைக்கும் இந்தியா எவ்வளவு கவனமாக தன் முதுசொம்மைக் கண்காணிக்க வேண்டும்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருங்கற்கால பள்ளிப்படைகள் கேட்பாரற்று சிதிலப்படுத்தப்பட்டு, ஜல்லிக்கல்லாகவும், வீட்டு நிலைப்படிக் கல்லாகவும் உடைத்து நொறுக்கப்படுகின்றன. அது பற்றி வனத்துறைக்கோ, தொல்பொருள் துறைக்கோ அக்கரை இருப்பதாகத் தெரியவில்லை. சில பத்தாண்டுகளுக்கு முன் கூட 300 என்ற கணக்கிலிருந்த இப்பள்ளிப்படை இன்று ஒன்று, இரண்டு என்றாகிவிட்டன.

SAM_3421.JPG

நேற்று சென்னையிலுள்ள பிரம்மஞான சபை வளாகத்திற்குச் சென்றோம். இன்று சென்னையில் ஒரு ஆக்சிஜன் பிரேக் வேண்டுமென்றால் அங்கு செல்ல வேண்டிய நிலை. மனித ஆக்கிரமிப்பு என்பது எல்லை கடந்து போய்விட்டது. வெறும் குப்பையும், எரிவாயுவும் தின வாழ்வு என்று ஆகிப்போன சென்னையில் பாதிக்கு மேல் மெண்டலாக இருக்கின்றனர். காரணம் அழகைக் காணாத நிலைதான். இதற்கு மாற்றாகத்தன் அழகின் மொத்த வடிவமாக நம் கோயில்களை அமைத்து, அதற்கு முன் ஓர் ஊரணி அமைத்து கொஞ்சம் ஆறுதல் செய்து வைத்தனர். எங்கெல்லாம் அழகு அழிக்கப்படுகிறதோ அங்கு பயித்தியங்கள் கூடும். அழகை ஆராதிக்கத் தெரிந்த ஓர் சமூகம் சீரழிந்து போய் இருப்பதை முதுசொம் பயணம் எனக்குக்காட்டியது!

இன்னும் வரும்...
SAM_3421.JPG

Geetha Sambasivam

unread,
Feb 3, 2012, 8:41:22 AM2/3/12
to mint...@googlegroups.com
சென்னைக்காதலர்கள் இதற்கு ஏதாவது செய்யணும். :(

2012/2/3 N. Kannan <navan...@gmail.com>
தமிழகத்தின் அழகியல் குறித்தும், குமுகாயப் பொறுப்புணர்வு குறித்தும் நாம் இங்கு பேசியுள்ளோம். கடலோடி நரசய்யா அவர்கள் சென்னையிலுள்ள இராஜாஜி ஹாலின் பாதுகாப்புப் பற்றி ஹிந்துவில் பேசி இருக்கிறார்.

http://www.thehindu.com/news/cities/chennai/article2851475.ece

1753-ல் உருவாக்கப்பட்ட சரித்திரபூர்வமான இக்கட்டிடம் இடிக்கப்படலாமோ? எனும் சூழல் உருவாவது குறித்து கவலை தெரிவிக்கிறார். நாகரீகமடைந்த எல்லா சமூகங்களும் தங்கள் பழமையைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் கொள்கின்றன. அதுவே ஒரு பெரிய பீடு என்ற அளவில் ஐரோப்பாவில் பார்க்கப்படுகிறது. அங்கு நகரின் நடுவில் முன்பு (18/19ம் நூற்றாண்டில்) கட்டப்பட்ட தனியார் வீடுகளைக் கூட அழித்து புதிப்பித்துவிடமுடியாது. ஊரின் அழகாக, பீடாக அது பார்க்கப்படுவதால்!

முதலாம் உலகில் காலடி எடுத்து வைக்கும் இந்தியா எவ்வளவு கவனமாக தன் முதுசொம்மைக் கண்காணிக்க வேண்டும்?

Innamburan Innamburan

unread,
Feb 3, 2012, 8:44:55 AM2/3/12
to mint...@googlegroups.com
'சென்னையில் பாதிக்கு மேல் மெண்டலாக இருக்கின்றனர்...இன்னும் வரும்...
~ அச்சமிக ஆகுதடி, தோழி, 
   மிச்சம் இருப்பவர் எல்லாம்,
   சொச்சமாயினும் பத்திரம் செய்து
   கச்சம் கட்ட வேண்டும்.
இன்னம்பூரான்


2012/2/3 N. Kannan <navan...@gmail.com>

--
SAM_3421.JPG

Innamburan Innamburan

unread,
Feb 3, 2012, 8:46:11 AM2/3/12
to mint...@googlegroups.com
கச்சம் கட்டு என்றேன்!
வந்து நின்றார், தேனி.
இஹி

2012/2/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Swarna Lakshmi

unread,
Feb 3, 2012, 9:01:50 AM2/3/12
to mint...@googlegroups.com
கண்ணன், உங்கள் கருத்துடன் 100 சதவிதம் ஒத்துப்போகிறேன். இந்தப்பதிவுக்கு ஒரு ‘லைக்’ ஐகான் போட விரும்புகிறேன்.
 
கீதா, சென்னையில் காதல் போன்ற அழகுணர்ச்சிக்கெல்லாம் இடம் இருக்கிறதா தெரியவில்லை. சென்னையின் மிக அழகான கல்ச்சுரல் அழகு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவின் வேறு எந்த நகரத்திலும் இல்லாத சில அற்புதங்கள் சென்னைக்கே உரியன - ஆனால் அவை மிக வேகமாக காலாவாதியாகிக் கொண்டிருக்கின்றன - அல்லது கமர்ஷியலாகிக் கொண்டிருக்கின்றன...

--

N. Kannan

unread,
Feb 3, 2012, 10:26:40 AM2/3/12
to mint...@googlegroups.com
அழகியல் என்றவுடன் சொல்ல மறந்து போன சேதி.

ரங்கனைப்பார்த்துவிட்டு வரும் போது ரங்கநாதன் தெருவழியாக வர வேண்டிய
நிர்பந்தம். கரும்புச் சாறு பிழிந்துவிட்டு சக்கை குவியலாய் நடுவீதியில்.
எல்லாக்கடை குப்பையும் நடு ரோட்டில். நடுவே நெல்லிக்கய் விற்கும் கிழவி,
பாய் டீக்கடை, ரசித்துக் குடிக்கும் குடும்பம், இரவுச் சாப்பாட்டுக்கடை.
எல்லோரும் கழிவின் கழிவாய் நுகரும் காட்சியைக் கண்டபோது ‘தமிழ் அழகியல்’
என்று ஏதாவது ஒன்றுண்டா? என்ற கேள்வி எழுந்தது! மாட்டுத்தொழுவம்,
பன்றிக்கொட்டில், ஆட்டுக்கிடை, ரஙநாதன் தெரு. வித்தியாசமே இல்லை. சே!
ஈதென்ன வாழ்வு? கோடி புரளுகிறது சரவணா பவனில், அருகிலுள்ள கடைகளில். ஒரு
காலத்தில் கசங்கிய அழுக்குப்பிடித்த, பாக்டிரியாக்கள் நிரம்பிய
காசைத்தின்ன வேண்டிய காலம் வரலாம். இங்குள்ளோர் தின்று வாழ்வார்கள்!!

நா.கண்ணன்

2012/2/3 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

Tthamizth Tthenee

unread,
Feb 3, 2012, 10:33:44 AM2/3/12
to mint...@googlegroups.com
மனிதர்கள் மனதிலேயே அழுக்கு  படிந்திருக்கிறது
 
அதனால்தான் அழுக்கு ,குப்பை இவைகளுக்கு நடுவே வாழப் பழகிவிட்டார்கள்
 
அழுக்கையும் ,குப்பையைும் அகற்றாத அரசை தட்டிக் கேட்க மறந்து வி்ட்டார்கள்
 
மக்களுக்கு  தன்னம்பிக்கையும், சுய கௌரவமும், சுற்றுப்புற சுகாதாரமும் மறந்து போய் வெகு நாட்களாகிவிட்டன
 
அதனால்தான் மாம்பலம் பக்கம் வருவதற்கே வெறுப்பு கொள்வேன்  நான்
 
இன்னமும் மற்ற பகுதிகளையும் பார்வை இடுங்கள் மீண்டும் கொரியாவுக்கே போய்விடலாம் என்னும் முடிவுக்கு வந்துவிடுவீர்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/2/3 N. Kannan <navan...@gmail.com>
அழகியல் என்றவுடன் சொல்ல மறந்து போன சேதி.

Swarna Lakshmi

unread,
Feb 3, 2012, 11:24:48 AM2/3/12
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனி சார், சென்னையும் சுற்றுப்புறங்களும் தான் இத்தனை மோசம். காஞ்சி, நெல்லை, தஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற முக்கியமான சுற்றுலா/ கோயில் நகரங்கள் இன்று இந்த விஷயத்தில் சென்னையுடன் போட்டி போட துவங்கி விட்டன. நான் ஒவ்வொரு முறையும் இங்கே போகும்போதெல்லாம் நேரடியாக மாவட்ட ஆணையர்களை நேரில் சந்தித்து பேசி பல ஆலோசனைகளை சொல்வதாக கற்பனை செய்து கொள்வேன் (ரத்தத்தில் ஊறிய மார்க்கெட்டிங் பழக்கம்). ஆனால், உண்மையில் முயற்சி செய்ய பயம் - அங்கே திரியும் தெரு நாய்களைப் போல் நடத்தப்படுவோமோ என்று. அதனால், இதுவரை ரிஸ்க் எடுக்கவில்லை :((
 
மற்றபடி, இந்த பெரு நகரங்களை சுற்றியுள்ள சிறு நகரங்களும் கிராமங்களும் இன்றும் கொஞ்சம் அழகை தக்கவைத்துக்கொண்டுள்ளன. கண்ணன், இதற்காக நீங்கள் கொரியா திரும்ப வேண்டாம். இன்றைய டெக்னாலிஜியின் கைகொண்டு சிறு ஊர்களில் வாழ்ந்து கொண்டும் பெரியதாக சாதிக்கலாம். உங்களை இதற்காக நம் நாடு இழக்க வேண்டாம்.
 
ஸ்வர்ணா
From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 3 February 2012 9:03 PM

Subject: Re: [MinTamil] Re: முதுசொம் பயணம்

Nagarajan Vadivel

unread,
Feb 3, 2012, 11:30:59 AM2/3/12
to mint...@googlegroups.com
நுகர்பொருள்சார் குமுகத்தில் நுகரத் தெரிந்தவர்களுக்கு நுகர்ந்த எச்சத்தை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என்றோ அல்லது எப்படி அதை மறு சுழற்சி செய்வது என்றோ அல்லது அதை எப்படி மாசுப்பொருளாக மாறமல் அகற்றுவது என்பதோ தெரியாமல் வாழும் நிலைமாறி மனமாற்றம் பெற்று சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் வல்லமை பெறாதவரை குப்பைகளோடு குப்பையாகத்தான் வாழமுடியும்.
அதனால்தான் குடும்பவாழ்வில் வெற்றிபெற்ற இல்லத்தரசிகள் நான் முப்பது ஆண்டு குப்பைகொட்டினதாகப் பெருமை பேசுகிறார்கள்
நாகராசன்

2012/2/3 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Swarna Lakshmi

unread,
Feb 3, 2012, 11:39:06 AM2/3/12
to mint...@googlegroups.com
>>நுகர்ந்த எச்சத்தை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என்றோ அல்லது எப்படி அதை மறு சுழற்சி செய்வது என்றோ அல்லது அதை எப்படி மாசுப்பொருளாக மாறமல் அகற்றுவது
 
 சூரிய ஒளி போல நம் நாட்டில் பல resources  வீணாக போவது தெரிந்த விஷயம் தானே... கரும்பு சக்கையை கட்டடம் கட்ட உபயோகப்படுத்த முடியும்.  நாம் ஏன் கவலை பட போகிறோம்...
 
 
From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 3 February 2012 10:00 PM
Subject: Re: [MinTamil] Re: முதுசொம் பயணம்

N. Kannan

unread,
Feb 3, 2012, 12:09:40 PM2/3/12
to mint...@googlegroups.com
2012/2/3 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:

>  சூரிய ஒளி போல நம் நாட்டில் பல resources  வீணாக போவது தெரிந்த விஷயம் தானே.. கரும்பு சக்கையை கட்டடம் கட்ட உபயோகப்படுத்த முடியும்.  நாம் ஏன் கவலை பட போகிறோம்...

நான் போகும் இடமெல்லாம் இது பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறேன் 1985 லிருந்து....

தீதற்ற வளர்ச்சி என்பதே காலத்தின் தேவை. திட்டமிடுதல் என்பதே இல்லாமல்
வளர்ச்சி இருக்கக்கூடாது.

இத்தனை புத்திஜீவிகள் உள்ள ஒரு நாடு இப்படி இருப்பது என்னை
ஆச்சர்யப்படுத்துகிறது. எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது இந்தியா?
இன்னொரு எமெர்ஜென்சி? இன்னொரு அவதாரம்?

ரங்கராஜன் தெரு இருக்கும் அதே சென்னையில் பிரம்மஞான சபை வளாகம் (அல்லது
கலாக்ஷேத்ரா).

சென்னைக்கு அருகில்தான் பாண்டிச்சேரியும்.

பரபிரம்மங்கள் உலவும் அதே பூமியில்தான் இத்தனை அழுக்கும், அசிங்கமும்.

ஏனிப்படியொரு நாடு? ஏன் இதில் என் பிறப்பு? ஏனிந்தப் புலம்பல்?
கேள்விகள்தான் எஞ்சி நிற்கின்றன.

கும்பகர்ணன் தூக்கம் = இந்தியா!

நா.கண்ணன்

Chandrasekaran

unread,
Feb 3, 2012, 12:18:15 PM2/3/12
to mint...@googlegroups.com
குமபகர்ணனை எழுப்ப ஒரு ராமர் வரவேண்டும். புலம்பல்கள் குறையவேண்டும்.
என்னால் முடிந்தது, நெடு நாளைய ஏக்கம், கிராமங்களுக்கு தூய குடிநீர் கிடைக்கவில்லையே என்று. இரண்டு ஆண்டுகள் போராடி இன்று குடிநீர் வடிகட்டி தயாரித்து மக்களுக்குத் தருகிறேன். (www.cleanwater.co.in)

உலகத்திலேயே குறைந்த விலை குடிநீர் வடிகட்டி என்னுடையது ஆகத்தான் இருக்கும். யூ.எஸ் டாலரில் 12. இந்திய விலையில் 600ரூ.
வாய்ச்சொல்லில் வீரரகள் பலர். செயல் வீரர்கள் இன்று உடனடி தேவை. மாற்றங்கள் கொண்டு வரலாம்.
சந்திரா


2012/2/3 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

J. chandrasekaran

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

Geetha Sambasivam

unread,
Feb 3, 2012, 12:19:19 PM2/3/12
to mint...@googlegroups.com
சென்னையைத் தாண்டினால் அழுக்கையும், குப்பையையும், கொடிக்கம்பங்களையும், பறக்கும் கட்சிக் கொடிகளையும், கட்சித் தலைவர்களின் கட் அவுட்களையும் அதிகம் காண முடியாது.  அதிலும் கர்நாடகம் (இப்போ எப்படியோ) மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இவற்றைக் காணவே முடியாது.  உ.பி. விதிவிலக்கு. :( ஆனால் குப்பை அதிகம் கண்டதில்லை. அதே போல் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாலைவனம் இருந்தாலும் தண்ணீருக்குச் சண்டை போடும் மக்களைக் கண்டதில்லை.  எட்டு வருஷம் குடித்தனம் ராஜஸ்தானில்.ஐந்து வருஷம் குஜராத் ஜாம்நகரில்.  ஒரு நாள் கூட மக்களின் சண்டையைப் பொது இடங்களில் கண்டதில்லை.  முதல்மந்திரியாகவே இருந்தாலும், மோதிபாய்னு பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசலாம். சர்வசாதாரணமாகவே இருப்பார்கள். 


தமிழ்நாட்டில் குப்பை அள்ளுவதையும், குப்பையை அகற்றுவதையும் அரசாங்கம் வந்து தான் செய்யவேண்டும் என அடம் பிடிப்பவர்களை எங்கள் தெருவிலேயே கண்டு கொண்டிருக்கிறேன்.  நடுத்தெருவில் குப்பை கொட்டாதே என்று சொன்னதற்கு உங்க அப்பன் வீட்டு ரோடா? போட்டால் அரசாங்கத்து ஆளுங்க வந்து அள்ளிக் கொண்டு போவாங்க, உனக்கு என்னனு கேட்கிறாங்க. கொடுமை!   நிறைய அனுபவிச்சாச்சு.
2012/2/3 N. Kannan <navan...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 3, 2012, 12:20:09 PM2/3/12
to mint...@googlegroups.com
அப்படியும் விடலை. போராடிட்டுத் தான் இருக்கோம். :(

2012/2/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Feb 3, 2012, 2:34:42 PM2/3/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ஆஹா. .ரொம்ப நாள் இந்த முகத்தைப் பார்க்கவில்லையே. கணினி உபயம் மிக நல்ல ஐடியா.
கண்ணன் - நீங்கள் தொலைபேசியில் பேசினால் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும்.
சுபா

2012/2/3 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Rangan_Sridhar.jpg

Subashini Tremmel

unread,
Feb 3, 2012, 2:35:34 PM2/3/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2012/2/3 Dhivakar <venkdh...@gmail.com>

ரங்கன் வீடா இது? இல்லை போல இருக்கிறது.. நான் ஒருமுறை சென்றபோது அறைகள் பூராவும் புத்தகங்கள், மத்தியிலிருந்து ஒரு தாடி முகம் எழுந்து எட்டிப் பார்த்தது. கொஞ்சம் ப்யந்துதான் போனோம் ((

ஞாபகம் இருக்கு. இது திரு.ரங்கனின் ப்ளாட் தான்

சுபா


Subashini Tremmel

unread,
Feb 3, 2012, 2:38:52 PM2/3/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2012/2/3 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

மனிதர்கள் மனதிலேயே அழுக்கு  படிந்திருக்கிறது
 
அதனால்தான் அழுக்கு ,குப்பை இவைகளுக்கு நடுவே வாழப் பழகிவிட்டார்கள்
 
அழுக்கையும் ,குப்பையைும் அகற்றாத அரசை தட்டிக் கேட்க மறந்து வி்ட்டார்கள்
 
மக்களுக்கு  தன்னம்பிக்கையும், சுய கௌரவமும், சுற்றுப்புற சுகாதாரமும் மறந்து போய் வெகு நாட்களாகிவிட்டன

இப்படித்தான் நானும் உணர்கிறேன்.

சுபா

Innamburan Innamburan

unread,
Feb 3, 2012, 3:06:44 PM2/3/12
to mint...@googlegroups.com
நான் இன்று அவருடன் பேசினேன். ஜாலிவாலியா இருக்காரு.


2012/2/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Feb 3, 2012, 3:09:11 PM2/3/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இப்போது உடல் நிலை தேறி விட்டதா திரு.வினைதீர்த்தான் அவர்களே.
உங்கள் மடலுக்கு உடன் பதில் எழுத முடியவில்லை.  பல அலுவல்கள்.. தொடர்கின்றன :-)

உங்கள் ஊருக்கு வந்தும் உங்களைப் பார்க்க முடியவில்லை. அடுத்த முரை வாப்பமைந்தால் சந்திப்போம்.

சுபா

2012/2/1 karuannam annam <karu...@gmail.com>


2012/2/1 N. Kannan <navan...@gmail.com>
கோயில் என்பது ஒரு வரலாற்றுக்காப்பகம். 

இவ்வகைக்கல்வெட்டுக்களின் மூலம் ஒரு கோயிலின் தொன்மை, அதற்குண்டான அறக்கட்டளைகள், திருப்பணி செய்யப்பட்ட காலம், செய்தவர்கள் போன்ற பல சேதிகள் கிடைக்கும்.
 
 நம் கோயில்களில் ஐதீகம் சார்ந்த ஓவியங்கள் (புதிதாய் வரையப்பட்டவை) அல்லது நாயன்மார்/ஆழ்வார் பாடிய பாடல்கள் மட்டுமே வைக்கப்படுவதிலிருந்து நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளோம் என்பது தெளிவு. ஒரு காலத்தில் கோயில் சரிதம் என்பது கோயிலின் பன்முகத்தன்மையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்பது கண்கூடு.

மிகவும் சரியான கருத்து. நாயன்மார்/ஆழ்வார்கள் பாடல்கள் கூட அண்மைக்காலங்களில் கற்பலகைகளில் பதியப்படவில்லை. 1960, 70 களில் வைக்கப்பட்டவை/சுவரில் எழுதப்பபட்டவை. நான் விரும்பிப்படிப்பதுண்டு. எனக்கு முதல் நாயன்மார்/ஆழ்வார் பாடல்கள் அறிமுகம் இவையே.

அண்மைக்காலங்களில் குடமுழுக்கு விழாவுக்கு வருகை தந்த ச்ன்னிதானங்கள், அரசு அதிகாரிகள், கோவில் ஆணையர், திருப்பணியாளர் பெயர்கள் தான் கற்பலகைகளில் பதியப்படுகின்றன,
மேலும் இதுவரை ஒரு பூசகரும் கோவிலின் சரித்திரச் சான்று பற்றியோ ஆண்ட அரசர், ஆவணங்கள், சிற்பச் சிறப்புக்கள் பற்றியோ எடுத்துச் சொல்லிக் கேட்டதில்லை. பல யுகங்கள் முன்பு நடந்தவை தவிர.

மேலும் எழுதுங்கள் திரு கண்ணன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Feb 6, 2012, 6:09:06 AM2/6/12
to mint...@googlegroups.com
தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் திருமழிசை ஆழ்வாருக்கும் தொடர்புண்டு. இது பற்றி பலமுறை நான் இங்கு பேசியுள்ளேன். ஞாயிறன்றுதான் திருமழிசை சென்று பிரானடி தொழும் வாய்ப்புக் கிட்டியது!

டாக்டர் பத்மாவதியும், ஸ்ரீதரன் தம்பதியரும் வந்திருந்தனர். கனைத்தில்லம் நாடும் தாய்ப்பசு கொள்ளும் வாஞ்சையை எம் ஆழ்வாரிடம்தான் காண முடியும். அவர் கொட்டிலில் சில மணி நேரம் இருந்ததே ஒரு யுகம் பூகோள வைகுந்தத்தில் இருந்தது போன்ற திருப்தி!

SAM_3716.JPG

உற்சவம் நடந்து கொண்டு இருந்தது. ஜெகந்நாதப்பெருமாள், திருமழிசை ஆழ்வார், கூரத்தாழ்வான் திருமஞ்சனம் கண்டு மகிழ்ந்தோம்.

SAM_3708.JPG

கோயில் வாசலில் கோலமிடும் மங்கை, அதைக் கண்டு அதிசயக்கும் சிறுமி!

SAM_3706.JPG

கோயில் தேர் சீரமைக்கப்பட்டு வருகிறது. அற்புதமான மரச்சிற்பங்கள்.

அடுத்து ஸ்ரீபெரும்புதூர்...


SAM_3716.JPG
SAM_3706.JPG
SAM_3708.JPG

s.bala subramani B+ve

unread,
Feb 7, 2012, 12:23:57 AM2/7/12
to mint...@googlegroups.com
please brief about Puri- orissa connection with the temple

2012/2/6 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/
SAM_3716.JPG
SAM_3706.JPG
SAM_3708.JPG

N. Kannan

unread,
Feb 7, 2012, 1:09:53 PM2/7/12
to mint...@googlegroups.com
entrance.jpgகாஞ்சி வரதராஜர் கோயிலில் வெறும் தீர்த்தக்கைங்கர்யம் (இறைமுழுக்கிற்கு நீர் இறைத்து சந்நிதிக்கு எடுத்துச் செல்லுதல்) செய்து கொண்டிருந்த ஓர் இளைஞர் இந்தியா முழுவதும் இன்புரும் வண்ணம் வைணவ தரிசனம் அளித்தது இறையருள்! நம் பாக்கியம். இவரைப் பற்றி அறிய, அறிய வியப்பே மேலிடுகிறது. என்ன ஒரு ஆளுமை! நான்கு வேத பண்டிதத்திலா? நாலாயிரம் திவ்யப்பாசுரங்களிலா? பக்தியிலா, கோயில் மேலாண்மையிலா? குமுகாய சமநீதி குறித்த சீரிய சிந்தனைகளிலா? இவரொரு political revolutionary, religious reformer, world teacher, manager, trend setter இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த யுக புருஷர் எப்படி இருந்தாரோ அப்படியே சிலை வார்க்க அதைக் கண்டு “தான் உகந்த திருமேனி” என இவர் பாராட்ட அது ஆயிரம் வருஷமாக ஆராதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது எனில், அதைக் காண்பது முதுசொம் கிளைமாக்ஸ் இல்லையா? எவ்வளவோ ஏக்கத்திற்குப் பிறகு, இப்பயணத்தில் நல்லதொரு வாய்ப்பாக அது அமைந்தது. நாங்கள் போன நாள் எம்பெருமானாரின் ஜென்ம நட்சத்திரம் - திருவாதிரை! எனவே உற்சவ மூர்த்தியாக உலாவில் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று வைஷ்ணவ கோஷ்டி நாலாயிரம் சேவித்துக் கொண்டு முன் வந்தது. நடு நாயமாக திரிதண்டியுடன் ஜீயர் நின்றிருந்தார். 

Jeeyar.jpg

இந்த அரிய வாய்பிற்காகவே காத்திருந்தது போல் பல அன்பர்கள் வீதியென்று பாராது, கரடு முரடான சாலையென்று கண்டு கொள்ளாமல் தெருவில் சாஷ்ட்டாங்கமாக விழ்ந்து சேவித்ததைக் கண்ணுற்ற போது 20,000 சீடர்களுடன் இராமானுஜர் எழுந்தருளும் காலம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முடிந்தது. ஆயிரம் வருடங்களுக்குப் பின்னும் முக்கோல் பகவருக்கு அதே மரியாதை! சங்க காலம் முதல் தொடரும் ஓர் நிகழ்வைக் காணுதல் முதுசொம் காட்சி!

Ramanuja.jpg

இவர் சரிதம் காலம், காலம் காலமாக வாய்மொழியாக, குருபரம்பரா வைபவமாக தமிழகத்தில் ஆயிரம் வருடங்களாக பேசப்பட்டு வருவதை கோயில் உள்ளே தஞ்சாவூர் ஓவிய பாணியில் சித்திரமாக வைத்துள்ளனர்

charitam.jpg

இராமானுஜர் சந்நிதியின் உள் முகப்பே கலை அழகு மிஞ்ச நிற்கிறது. நாயக்க மன்னர்கள் ஆசை, ஆசையாக தம் ஆச்சார்யருக்கு செய்திருக்கும் கலைப்படையல் நெஞ்சை அள்ளுகிறது. வேறு யாருக்கு இத்தனை பெருமை இந்த மண்ணில். ஸ்ரீபெரும்புதூர் என்றாலே அது இராமானுஜன் என்றல்லவோ ஆகிப்போனது! இந்த நிகழ்வே ஒரு முதுசொம்!

entrance.jpg

டாக்டர் பத்மாவதி, ஸ்ரீதரன் தம்பதியர் எங்கே நான் உற்சவமூர்த்தியுடன் அப்படியே உலாப்போய் விடுவோனோ என்று பயந்து கோயிலின் உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கிருந்த ஓர் அந்தணரிடம், ’தாம் ஆன திருமேனி’ (ஸ்ரீரங்கம்), ’தான் உகந்த திருமேனி’ (ஸ்ரீபெரும்புதூர்), ’தமர் உகந்த திருமேனி’ (மேல்கோட்டை) பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இராமானுஜர் பால் நான் கொண்டிருந்த காதலைக் கண்ணுற்ற அவர், இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்தால் ‘ஏகாந்த சேவை’ கிடைக்க வாய்ப்புண்டு என்றார். ஏற்கனவே திருமழிசையில் நினைத்ததிற்கும் மேலே தாமதமாகிவிட்டது. இருட்டிவிட்டது. இரவில் நெடுஞ்சாலைப்பயம் வேறு. சரி, அதுதான் அவரைப் தரிசித்தாகிவிட்டதே கிளம்பலாம் என்றேன் மனசில்லாமல். இதைச் சூசகமாக உணர்ந்த ஸ்ரீதரன் கொஞ்சம் பொறுப்போம் என்று சமாதானம் செய்தார். அவரது அகம் உடையாள், டாக்டர் பத்மாவதியுடன் பேச்சுக் கொடுத்து கவனத்தை மாற்றினார். உடையவர், கோயில் உள்ளே பிரவேசித்தார். சரி! ஏகாந்த சேவை ஆகிவிட்டது! என்று எண்ணி ஸ்ரீதரனைப் பார்த்தேன். அவர் பொறுங்கள் என்று சமிக்ஞை செய்தார். உடையவர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளியவுடன் நடை சார்த்தப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து மெல்லக்கதவு திறந்தது. எங்களுடன் பேசிக்கொண்டிருந்த வைணவர் எங்களை உள்ளே அழைத்தார். அப்போதுதான் அந்த ஏகாந்த சேவை!! கைக்கெட்டும் தூரத்தில், ‘தானுகந்த திருமேனி’. என்ன பாக்யம், என்ன பாக்யம். எனக்கு இராமானுஜர் நூற்றந்தாதி தெரிந்திருந்தால் சேவித்து அனுபவித்து இருந்திருப்பேன். ஒன்றுமே அறியாத என்னைப் போன்றோருக்கும் தயை செய்யும் வள்ளல் அந்த இராமானுஜன் என்று அறிந்து கொண்டேன்! வாழ் நாள் முழுவதும் கண்ணை விட்டு அகலாத காட்சி. ஒரு தமிழனுக்கு எத்தனை பெருமையை இம்மாநிலம் வழங்கி கௌரவிக்கிறது என்று எண்ணி எண்ணி இறுமாப்படைந்தேன். இவன் தமிழன் என்பதாலேயே இம்மண்ணில் தமிழ் ’கோயில் மொழி’ ஆகியது. இன்றும் கூட ’மடாதிபதி’ என்று  வேலை வாக்கிக்கொண்டிராமல் முக்கோல் பகவர் அடியாராய் இறைத்தொண்டில் ஈடுபட்டு மகிழ்கின்றனர். தீர்த்தக்குடம் சுமந்த தோள்கள் தொண்டின் பெருமையை அப்படியே தமிழ் மண்ணில் தக்க வைத்துவிட்டது! 

வரும் வழியெல்லாம் இதே பேச்சு! முழுக்க, முழுக்க மார்க்சிச சித்தாந்தத்தில் மூழ்கி, பொருள் முதல்வாதக் கருத்துடைய டாக்டர் பத்மாவதி எங்களுக்காக பொறுமையுடன் உடன் இருந்ததைக் கண்ட அவரது தொழி ஆண்டாள், ‘என்ன வழித்தடம் மாறிவிட்டாயா?’ என்று கேலி செய்தார். வரும் வழியில் பத்மாவதி பெருமூச்சுடன் ஒன்றே சொன்னார், “பக்தி”!!

நா.கண்ணன்
entrance.jpg
Jeeyar.jpg
Ramanuja.jpg
charitam.jpg

Innamburan Innamburan

unread,
Feb 7, 2012, 2:09:46 PM2/7/12
to mint...@googlegroups.com

அன்பின் கண்ணன்,
இதை நீங்கள் எழுதவேயில்லை. உங்களுடைய ஆத்மா கணினியை உள்ளிழுத்துக்க்கொண்டு, ஒரு திருவாலம்பனம், ஒரு திருவாவாஹனம், ஒரு திருவாராதனை, ஒரு திருவலங்காரம், ஒரு திருமஞ்சனம் - சொல்லிண்டே போகலாம் - திருசமர்ப்பணம் செய்து விட்டது. அஹோ பாக்யம்! நாங்கள் கூட வந்திருந்தால், என ஆம்படையாள் உங்களுக்கு சுத்திப்போட்டு இருப்பாள்.
அன்புடன்,

இன்னம்பூரான்
07 02 2012
அன்பின் ஸுபாஷிணி,
கண்ணன் சொன்னதை கருவூலத்தில் தனியே காப்பாற்றி வைக்கவும், சித்திரங்களுடன். காஞ்சி வரதன், தேவராஜன் அல்லவா!
இன்றிலிருந்து பாருங்கள். த.ம. அ. அமோகமாக செழிக்கப்போகிறது.
அன்புடன்,
இன்னம்பூரான்
07 02 2012 

Geetha Sambasivam

unread,
Feb 7, 2012, 6:16:38 PM2/7/12
to mint...@googlegroups.com
அருமை.

2012/2/7 N. Kannan <navan...@gmail.com>

--
Ramanuja.jpg
Jeeyar.jpg
entrance.jpg
charitam.jpg

கி.காளைராசன்

unread,
Feb 7, 2012, 8:33:41 PM2/7/12
to mint...@googlegroups.com
ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம் பல.

2012/2/7 N. Kannan <navan...@gmail.com>

உடையவர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளியவுடன் நடை சார்த்தப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து மெல்லக்கதவு திறந்தது. எங்களுடன் பேசிக்கொண்டிருந்த வைணவர் எங்களை உள்ளே அழைத்தார். அப்போதுதான் அந்த ஏகாந்த சேவை!! கைக்கெட்டும் தூரத்தில், ‘தானுகந்த திருமேனி’. என்ன பாக்யம், என்ன பாக்யம். எனக்கு இராமானுஜர் நூற்றந்தாதி தெரிந்திருந்தால் சேவித்து அனுபவித்து இருந்திருப்பேன். ஒன்றுமே அறியாத என்னைப் போன்றோருக்கும் தயை செய்யும் வள்ளல் அந்த இராமானுஜன் என்று அறிந்து கொண்டேன்! வாழ் நாள் முழுவதும் கண்ணை விட்டு அகலாத காட்சி. ஒரு தமிழனுக்கு எத்தனை பெருமையை இம்மாநிலம் வழங்கி கௌரவிக்கிறது என்று எண்ணி எண்ணி இறுமாப்படைந்தேன். இவன் தமிழன் என்பதாலேயே இம்மண்ணில் தமிழ் ’கோயில் மொழி’ ஆகியது.

கொடுத்து வைத்தவர்.
எங்களுக்கும் கொடுத்து வைத்து விட்டீர்கள்.
ஏது பேறு செய்தோம் இதை கண்டு உய்ய?

அன்பன்
கி.காளைராசன்

Tthamizth Tthenee

unread,
Feb 8, 2012, 2:35:43 AM2/8/12
to mint...@googlegroups.com
அருமையான விவரங்களுடன் புகைப்படங்களும்
 
நிறையக் கோயில்களின் புகைப்படங்களும் விவரங்களும் சேகரிந்து இருக்கிறேன்
நானும் உங்களைத் தொடருகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/2/8 கி.காளைராசன் <kalair...@gmail.com>

N. Kannan

unread,
Feb 8, 2012, 3:24:18 AM2/8/12
to mint...@googlegroups.com
தன்யன் ஆனேன் ஸ்வாமி!

Ramanuja is certainly a person to be admired, revered and followed.

உங்கள் தொடர்ந்த ஆசீர்வாதம் எங்களைத் தளிர்பிக்கிறது.

மிக்க மன மகிழ்வுடன்.

நா.கண்ணன்

பிகு: அன்று பாதிக்கூட்டம் தெலுங்கு தேசத்திலிருந்து. எவ்வளவு பக்தி! அடடா!

2012/2/8 Innamburan Innamburan <innam...@gmail.com>

N. Kannan

unread,
Feb 8, 2012, 3:38:07 AM2/8/12
to mint...@googlegroups.com
2012/2/8 கி.காளைராசன் <kalair...@gmail.com>:


> கொடுத்து வைத்தவர்.
> எங்களுக்கும் கொடுத்து வைத்து விட்டீர்கள்.
> ஏது பேறு செய்தோம் இதை கண்டு உய்ய?
>

டாக்டர் பத்மாவதிக்கு காப்பி சாப்பிடாமல் ரொம்ப நேரம் இருக்க முடியாது. எனவே வந்து இறங்கியவுடன் காப்பிக்கடை. கடை பேர் ‘இராமானுஜன் காப்பி’ :-)

நம் அரங்கனார் ‘எம்பார் ஜீயர்’ திருமாளிகைக்குப் போங்கள் உங்களுக்கு இரவுச் சாப்பாடு கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். அதுதான் ஏற்கனவே திருமழிசை ஆழ்வார் நன்றாக கவனித்துவிட்டாரே! கை நிறையப் பிரசாதம். எம் ‘இதத்தாய் இராமானுசனோ’ ஐந்து ஆறு பெரிய தோசைகளைப் போகிற கையோடு கொடுத்துவிட்டார்.

நெஞ்சிற்கும், வயிற்றிற்கும், இற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நோய் தீரும் மருந்து தரும் ஓர் வள்ளலை என்னென்பது?

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி * மருள் சுரந்த
முன்னைப் பழைவினை வேரறுத்து * ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் * எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.

காளை தாங்கள் அவசியம் போக வேண்டிய திருக்கோயில் ஸ்ரீபெரும்புதூர். உடையவரின் பூரண அனுக்கிரகம் கிடைக்கும்.

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ்ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே
 

(தனியன்)

அச்சுதனின் திருவடித் தாமரைகளை என்றும் தம் திருமனத்தில் நிலையாகக் கொண்டிருப்பவரும் அந்தத் திருவடித் தாமரைகளைத் தவிர்த்து மற்றிருக்கும் எல்லாவற்றையும் புல்லாக மதிப்பவரும் அடியேனின் ஆசாரியனும் அனைத்து நற்குணங்கள் நிரம்பியவரும் கருணைக்கடலும் ஆன இராமானுஜரின் திருவடிகளுக்கே அடைக்கலமாக என்னை அளிக்கிறேன்.

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பாமன்னு மாறன் அடி பணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
 

(இராமானுஜ நூற்றந்தாதி 1)

தாமரைப்பூவில் வாழும் திருமகள் என்றும் நிலையாகப் பொருந்திய மார்பினை உடைய திருமாலவனின் புகழ்களை பல்லாயிரம் பாக்களால் பாடிய மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவர் - பல கலைகளும் வல்லவர்கள் என்றும் மண்ணில் நிலைத்திருக்கும் வண்ணம் தோன்றிய இராமானுஜரின் திருவடித் தாமரைகளில் நாம் என்றும் நிலையாக இருந்து நல்வாழ்வு பெற நெஞ்சமே நீயும் நானுமாக அவர் திருநாமங்களைச் சொல்லுவோம்.

நா.கண்ணன்

Swarna Lakshmi

unread,
Feb 8, 2012, 4:58:36 AM2/8/12
to mint...@googlegroups.com
 நெகிழ வைக்கிறீர்கள் கண்ணன்!! நாங்கள் தானுகந்த திருமேனி என்று காண்போமோ தெரியாது... ஆனால் நிறைய ஆவலைக் கிளப்பி விட்டீர்கள்..

எழுத்துக்கும் பக்திக்கும் நன்றி

ஸ்வர்ணா


From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 7 February 2012 11:39 PM
Subject: Re: [MinTamil] Re: முதுசொம் பயணம்

entrance.jpg
Jeeyar.jpg
Ramanuja.jpg
charitam.jpg

DEV RAJ

unread,
Feb 8, 2012, 5:55:21 AM2/8/12
to மின்தமிழ்
On Feb 7, 11:09 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>> அது ஆயிரம் வருஷமாக ஆராதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது எனில்,
அதைக் காண்பது முதுசொம் கிளைமாக்ஸ் இல்லையா? <<<


உலகுக்கே தர்சநம் தந்தருளிய உடையவரை முனைவர் கண்ணன்
தர்சித்த விதம் நெகிழச் செய்கிறது.

‘ஸ்ரீ பவிஷ்யதார்ய விக்ரஹம்’ ஆழ்வார் திருநகரியில் இருப்பது
இதைக்காட்டிலும் தொன்மையானது; நாதமுனிகள் காலம்.
முதுசொம் க்ளைமாக்ஸ் என்று இதைச் சொல்லலாம்


தேவ்

> பகவர் அடியாராய் இறைத்தொண்டில் ஈடுபட்டு மகிழ்கின்றனர். ...
>
> read more »
>
>  entrance.jpg
> 77KViewDownload
>
>  Jeeyar.jpg
> 85KViewDownload
>
>  Ramanuja.jpg
> 96KViewDownload
>
>  charitam.jpg
> 95KViewDownload

கி.காளைராசன்

unread,
Feb 8, 2012, 6:39:52 AM2/8/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/2/8 N. Kannan <navan...@gmail.com>

நெஞ்சிற்கும், வயிற்றிற்கும், இற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நோய் தீரும் மருந்து தரும் ஓர் வள்ளலை என்னென்பது?

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி * மருள் சுரந்த
முன்னைப் பழைவினை வேரறுத்து * ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் * எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.

காளை தாங்கள் அவசியம் போக வேண்டிய திருக்கோயில் ஸ்ரீபெரும்புதூர். உடையவரின் பூரண அனுக்கிரகம் கிடைக்கும்.

அவரிட்ம் வேண்டுவது ஒன்று உண்டு.
அவசியம் சென்று வழிபட்டு வருகிறேன் ஐயா,


--
அன்பன்

கி.காளைராசன்
http://kalairajan26.blogspot.com
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,




ranganathan venkatachariar

unread,
Feb 8, 2012, 5:18:11 AM2/8/12
to mint...@googlegroups.com
மிக்க நன்றி 
அஈங்கநாதன்/////உத்திரமேரூர் 

2012/2/8 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
charitam.jpg
entrance.jpg
Ramanuja.jpg
Jeeyar.jpg

Sridharan Raghavan

unread,
Feb 8, 2012, 2:29:28 AM2/8/12
to mint...@googlegroups.com
எங்களுடன் திரு ரங்கன் அவர்களும் வருவதாக இருந்தது. ஆனால் வரவில்லை. இப்போது  அப்படிப்பட்ட தரிசனம் கிடைக்கவில்லையே  என வருந்துகிறார்.

ஸ்ரீதரன்



2012/2/8 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Feb 8, 2012, 7:06:52 AM2/8/12
to mint...@googlegroups.com
அவர் மட்டுமா  அடியேனும்தான் வரமுடியாமல் போயிற்று
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/2/8 Sridharan Raghavan <rsridh...@gmail.com>

N. Kannan

unread,
Feb 8, 2012, 7:20:42 AM2/8/12
to mint...@googlegroups.com
2012/2/8 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

>
>  நெகிழ வைக்கிறீர்கள் கண்ணன்!!


நன்றி ஸ்வர்ணா!

இதுவொரு நீண்ட நாள் கனவு. நேர்த்திக்கடன்.

என்னைப் பொறுத்தவரை த.ம.அ என்பது திருமழிசைப்பிரானின் ஆக்ஞை. அடியேனை ஏன்
இசைவித்து அப்படிச் செய்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் சந்நிதியில்
”அம்மா முன் நிற்கும் குழந்தை” போல் நெடுமே நின்றுவிட்டு வந்தேன். அவர்
சுதர்சன அம்சம். தகிக்கிறது! அங்கு தனியாக சக்கிரத்தாழ்வார் சந்நிதி
கிடையாது. குழந்தையை உச்சி முகர்வது போன்றதொரு சேவை. அவரே
ஸ்ரீபெரும்புதூர் சேவையையும் செய்வித்தான் என்பதற்கு சாட்சி ‘முதல்
தீர்த்தக்காரர் நாராயண அய்யங்கார்’ என்று எங்களுக்கு செவை செய்வ்ஹ்தவர்
திருமழிசைக்காரர்!! இவையெல்லாம் தற்செயல் என்று காண்பது அவரவர் இஷ்டம்.
பிரத்யக்ஷம் என்பது அவரவர் நோக்கு இல்லையா?

பாருங்கள்! எப்படி இன்னம்பூரான் வாயிலிருந்து ஆசிகள் வருகின்றன என்று.
இவையெல்லாம் அவன் செயல் என்று காண்கிறேன்.

நம்பினார் கெடுவதில்லை ஸ்வர்ணா! நமக்குத்துணை நாரண நாமம். மற்றவை அவன் பொறுப்பு.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Feb 9, 2012, 6:04:05 AM2/9/12
to mint...@googlegroups.com
முதுசொம் பயணம் சில உண்மைகளை எனக்குச் சொன்னது! தமிழ் வைணவம் குறித்த அக்குறிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

1. வைணவம் என்றவுடன் எல்லோருக்கும் ஐயங்கார்களும், ஸ்ரீஇராமானுஜரும்தான் மனதில் தோன்றுகின்றனர். அவர்கள் ஆளுமைகளைப் புறந்தள்ள முடியாது எனினும், வைணவம் என்பது இவர்களுக்கும் அதீதமாக உள்ளது. குறிப்பாக சுகவனம் முருகன் சொன்ன சேதி சிந்திக்க வைத்தது. புதிய கற்கால மனிதனின் வேட்டைக் கற்களைத் திருமாலாக வழிபடும் குடியினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பதாக அவர் சொன்னார். அதாவது கற்காலத்திலேயே திருமால் வழிபாடு தொடங்கிவிடுவது போல் படுகிறது. இதை ஆதரங்களோடு நிறுவ வேண்டும். தம்பி செல்வ முரளிக்கு வேலை இருக்கிறது :-)

2. ஃபாஸில் என்றழைக்கப்படும் கல்லுயிர் படிமங்களை திருமாலாக வழிபடும் வழக்கம் இன்றளவும் உள்ளது. அதைச் சாளக்கிராமம் என்றழைக்கின்றனர். இதுவுமொரு தொன்மையான வழிபாடே. இது எப்போது தோன்றியது என்று தெரியவில்லை.

3. சங்க இலக்கியத்தின் சாரம் என்று நாம் கருதும் தொல்காப்பியம், அகம், புறம் சார்ந்த இலக்கியங்கள் திருமால் நெறி பற்றிப் பரக்கப் பேசுகின்றன.

4. சங்ககாலத்தில் ‘பார்பன வாகை’ என்றொரு பிரிவு உண்டு. முக்கோல் பகவர்கள் (இன்றைய ஜீயர்கள்) தாய், தந்தையரை பிரிந்து போன தம் புதல்வியின் முகாந்திரமாக ஆற்றுப்படுத்தும் வழக்கை சங்க பாடல்கள் பதிவு செய்கின்றன.

5. இப்படி இந்தியா முழுவதும் பரந்து பட்டிருந்த ஒரு நெறியைக் காலத்தின் தேவை கருதி ஸ்ரீஇராமானுஜர் இற்றைப் படுத்துகிறார். இதைச் செய்யும் போது அவர் வைணவ பூர்வாச்சார்யர்கள் என்று அவர் காலத்தில் கருதப்படும் பலரிடம் பாடம் கேட்கிறார். ஆகம சித்தாந்தமறிய காஷ்மீர் வரை பயணப்படுகிறார். அத்வைத நெறியைப் பிழையின்றிப் பயில்கிறார். வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் என்று இப்படி அனைத்தும் கற்ற பின் ஸ்ரீவைஷ்ணவ நெறியை இந்தியாவில் நிலைப்படுத்துகிறார். ஸ்ரீஇராமானுஜ சித்தாந்தம் என்பது தமிழக எல்லை தாண்டி ஆந்திரா, கர்நாடக, வங்காளம் என்று பரவுகிறது. அவர் வாழ்ந்த 120 வருடங்களில் பலவற்றை அவரால் ஒழுங்கு படுத்த முடிந்திருக்கிறது.

   1. சங்கரருக்குப் பிறகு பிரம்ம சூத்திரங்களுக்கு பாஷ்யம் செய்து பாஷ்யக்காராகிறார் (இவரை பாஷ்யக்காரர் என்றே கல்வெட்டுக்கள் சுட்டுகின்றன).

   2. கோயில் ஒழுங்கு எனும் மேலாண்மை நெறியை எல்லாக் கோயில்களிலும் நிலைப்படுத்துகிறார். அதன்படி தமிழ் கோயில் மொழியாகிறது. தமிழ்ப் பனுவல்கள் வேதமாகின்றன.

   3. இந்நெறியைக் கேரளா, ஒரிசாவரைக் கொண்டு செல்கிறார். ஆயினும் இவரது கனவு தமிழகத்திலும், ஆந்திராவிலுமே பூரணமடைகிறது.

   4. தமிழகத்தில் முன்பே வேர் கொண்டிருந்த திருமால் நெறி ஜாதி வேறுபாடற்று அடித்தள மக்கள் வரை பரவிகிடப்பதற்கு உதாரணமாக ஸ்ரீவைஷ்ணவம் சேராத வைணவக்குடியினர் இன்றளவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பதை சுகவன முருகன் சுட்டிக்காட்டினார். வைகானச வைஷ்ணவ நெறியினர் இன்றளவும் ஸ்ரீஇராமானுஜரை ஆச்சார்யராகக் கொள்வதில்லை.

   5. எனவே இராமானுஜரின் பெரும் சக்தி அக்கால பிராமண சமுதாயத்தை ஆகம வழியில் நெறிப்படுத்துவதிலும், ஜாதி வேறுபாடு காணாத வைஷ்ணவ முறைமையை பிராமணர்களிடம் கொண்டு செல்வதிலுமே செலவழிந்தது. இச்சமுதாயம் இதைத் தாங்க ஒண்ணாது இவரை இருமுறைக் கொல்ல முயன்று தோல்வியுற்றது.

  6. அவர் வாழ்ந்த காலத்திலேயே கண்டு கொள்ளப்பட வேண்டிய அரசியல் சக்தியாக அவர் உருப்பெற்றார். இதுவே அன்றைய சோழ அரசுடன் சிக்கலை உருவாக்கியிருக்க வேண்டும். 

  7. இவர் பிராமணர்கள் பிற ஜாதியினருடன் சமரசம் செய்து கொள்ள வேண்டுமென்று சொன்னதோடு நில்லாமல் வேற்று சமயமான இஸ்லாமுடனும் சமரசம் செய்து கொள்ள வேண்டுமென்றார். இன்றளவும் துலுக்க நாச்சியார்கள் (துருக்கியப் பெண்கள்) வைணவக் கோயில்களில் இடம் பெறுவது இதனால் அன்றோ!

   8. இப்படிப் பிராமணர்களை நெறிப்படுத்தியதால்தான் இன்றொரு ஜோசப் ஐயங்கார் உருவாக வாய்ப்புள்ளது.

guru-Joseph.jpg 

ஸ்ரீஇராமனுஜருக்கு இத்தனை பெருமைகள் இருப்பதால்தான் கிராமத்தில் சொல்வது போல், ‘இவரைக் கோயிலில் வைத்துக் கும்பிடவேண்டும்” என்று தமிழகம் நினைத்திருக்கிறது. இராமானுஜர் சந்நிதிகள் திருப்பதி கோயிலில், ஸ்ரீரஙகத்தில் சிறப்புடன் வழிபடப்பட்டாலும், ஸ்ரீபெரும்புதூர் எனும் தலத்தில்தான் அவருக்கு கூடுதல் சிறப்புக் கிடைக்கிறது. அது அவர் பிறந்த ஊர். நம்ம ஊர்க்காரன் எனும் பெருமையை அந்த ஊர் இன்றும் கொண்டிருப்பதில் தவறேதுமில்லை!

gopuram.jpg

நா.கண்ணன்


guru-Joseph.jpg
gopuram.jpg

Innamburan Innamburan

unread,
Feb 9, 2012, 10:43:17 AM2/9/12
to mint...@googlegroups.com

நன்று.
'...ஸ்ரீ பூத புரீ சர் ராமா நுஜர் தான்! -நல்ல 
சீர் திருத்த வாதி நம்ம ராமா நுஜர் தான்! 
ஸ்ரீ பாஷ்யக் காரர் நம்ம ராமா நுஜர் தான்! -நம்ம 
சிந்தை யிலே நிற்ப வரும் ராமா நுஜர் தான்!
~ ஶ்ரீ ஆர்.வி.ஸ்வாமி க்ருதம்...'

N. Kannan

unread,
Feb 10, 2012, 2:59:05 AM2/10/12
to mint...@googlegroups.com
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்,
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தா யிராமானுசன்


தமிழ் மறைகள் ஆயிரம் ஈன்ற முதல் தாய் சடகோபன் எனும் நம்மாழ்வார்.
அம்மறைகளை இதமாக நமக்களித்த இதத்தாய் இராமானுசன் என்கின்றனர் பெரியோர்.
இது சாதாரணவிஷயமே அல்ல! இன்று தமிழைக் கோயில் மொழியாக்க சைவக்கோயில்களில்
படும் அவஸ்தையைக் கண்ணுறும் போது, மிக்க தொலை நோக்குடன் மாறன் செய்த
தமிழ்மறையைக் கோயில் ஒழுங்காக்கி, தமிழைக் கருவறைக்கு இட்டுச் சென்று ஓத
வைத்து தமிழின் பெருமையை ஆந்திரரும், கன்னடரும், மலையாளிகளும், பிறரும்
உணரும் வண்ணம் செய்தவன் இந்த இராமானுசன்.

பொதுவாக இறைத்தூதுவர்கள் தேவை கருதித்தோன்றுகின்றனர்.

புத்தர் தோன்றிய சூழலில் யாகமென்றும், யக்ஞமென்றும் உயிர்ப்பலிகள்
கூடியிருந்த காலம். இற்றைத் தேவைகளை (existential living) மறந்து மக்கள்
இறப்பின் பின் உள்ள வாழ்வை (metaphysical living) பிரதானப்படுத்தி
வாழ்ந்து வந்தனர். எனவே புத்தர் இற்றைத் தேவைகளை வலியுறுத்தி தர்மங்களைப்
போதித்தார். இன்று 500 மில்லியன் மக்கள் இத்தர்மத்தில் உள்ளனர்.

பகவான் யேசுவைப் பார்ப்போம். அவர் தோன்றிய காலத்தில் விவிலியம் தன்
பொருள் இழந்து யூதர்கள் வெறும் பொருளீட்டும் சமூகமாக மாறிப்போன பொழுதில்
விவிலியத்தை இற்றைப்படுத்த (update) வேண்டியிருந்தது. யேசு
எவ்வளவுக்கெவ்வளவு சமயச் சீர்த்திருத்த வாதியொ அதே அளவிற்கு சமூக
சீர்திருத்தவாதியும் கூட. அவரும் சமதர்மம் பேசியிருக்கிறார். அவரை அன்றைய
அரசு ஒரு புரட்சியாளராகவே கண்டது. அதற்கொரு தண்டனையும் கொடுத்தது. 630
கோடி உலக ஜனத்தொகையில் இன்று கிறிஸ்துவின் வழியில் 33% (ஏறக்குறைய 210
கோடிகள்) இருக்கிறார்கள். எனவே இயேசுவின் வாழ்வு வீண் போகவில்லை.

அடுத்து முகம்மது நபி வருகிறார். இவர் வாழ்ந்த காலத்தில் கள்ள மதங்கள்
பெருகிப்போய் இறை வழி என்னவென்றே தெரியாமல் மக்கள் தடுமாறி இருந்தனர்.
இவர் வந்து அவர்களை நெறிப்படுத்தி இறை வழியில் வாழ்வதற்கான தர்மங்களை
போதிக்கிறார். இவர் வழியில் இன்று 170 கோடி மக்கள் உள்ளனர்.

இந்திய சரிதத்தில் இராமானுசர் வாழ்ந்த காலத்தில் அத்வைதம் சரியாகப்
புரிந்து கொள்ளப்படவில்லை. வேத நாயகன் யார் என்பதில் தெளிவில்லை. பக்தி
என்பதன் பொருள் தெரியவில்லை. இராமானுசர் தோன்றுவதற்கு முன்னுள்ள நிலையை
இரு சமயப்பெரியவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் சரியாக விளக்குகிறது.

யோகத்தில் சிறந்த ஓர் பெரியவர். சமூகப் பிரக்ஞை உள்ள இன்னொரு பெரியவர்.
ஒருவர் கேட்கிறார், ‘இன்றைய தேவை என்ன? யோக வழியில் இந்திரியங்களை
கட்டுப்படுத்தி அகத்தில் இறைவனை தரிசிப்பதா? இல்லை ‘எங்கும் நிறை
பரம்பொருளை இழிதல் கோட்பாடு கொண்டு நிலை நிறுத்துவதா?.

சமூக அக்கறை உள்ளவர் சொல்கிறார், “வீட்டில் பிணம் கிடக்க, மணம் புணரலாமோ?”

எவ்வள பெரிய வார்த்தை பாருங்கள்! இதுதான் இராமானுசருக்கு முன்னிருந்த
தமிழகம். எவ்வளவு சீர்கெட்ட நிலையில் இருந்திருக்க வேண்டுமென்று
யூகிக்கலாம்.

எனவே சமயத்தில் ‘இற்றைப்படுத்தல்’ அவசியம் என்று தெரிகிறது. அதை இவர்
வேதாந்த நெறிமுறையில் செய்வித்தார்.

அத்வைதம் என்பதன் சரியான பொருளை தமிழ் மறைகள் கொண்டு விளங்க வைத்தார்
(சிறப்பு அத்வைதம்=விசிட்டாத்வைதம்). மாயை என்பதை எப்படிப் புரிந்து
கொள்ள வேண்டுமென்று விளக்கினார். ஆதி சங்கரரின் உளக்கிடக்கை எதுவென்று
உலகிற்குக்காட்டினார்.

ஆதி சங்கரர் செய்ய விட்டுப் போன ஒரு சமூக மாற்றத்தை முன்னிருந்து
நடத்தினார். அதுதான் பாகவத தர்மத்தில் ஜாதிக்கு இடமில்லை என்பது. இதில்
முழு வெற்றி கண்டார் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர் காலத்து
பிராமணர்களையும், உயர் ஜாதி இந்துக்களையும் இதன் தேவை குறித்து சிந்திக்க
வைத்தார். இவரும் ஏசு போல் சமதர்மம் பேசியவர்தான் அதனால் அரசியல்
புரட்சியாளர் என்ற பட்டம் பெற்றவர்தான்.

முகம்மது நபி சமுகம் சீராக நடக்க சில விதிமுறைகளை முன்வைத்தார். இவரும்
ஒரு பக்தன் என்னென்ன குணங்கள் கொண்டிருக்க வேண்டுமென்று நிறுவினார்.
கோயில் என்பது சீர்கேடு அற்று நடக்க என்னென்ன செய்ய வேண்டுமென்று வழி
வகுத்தார். கள்ள மதங்கள் பெருகியிருந்த காலத்தில் ஆழ்வார்கள், வேத
வியாசர் வழியில் எது சத்யவழி என்று காட்டினார். உள்ளங்கை நெல்லிக்கனியாக
இருக்க வேண்டிய விஷயத்தை, கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யிற்கு
அலையும் தமிழர்களுக்குக் காட்டினார்.

இன்று இந்துமதம் எனும் குடையின் கீழ் 900 மில்லியன் மக்கள் உள்ளனர்.
அதில் எல்லோரும் நாரண வழிபாடு செய்தாலும் விசிட்டாத்வைதம் எனும் வழியில்
உள்ளோர் எத்தனை கோடி என்று தெரியவில்லை. சுவாமி பிரபுபாதாவின்
உலகப்பரப்பலுக்குப் பின் இராமானுஜர் வழியில் உள்ளோர் அதிகம் என்று
துணிந்து கூறலாம்.


மன்னிய பேரிருள் மாண்டபின், கோவலுள்மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும், தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கன் புபூண்டவர்தாள்
சென்னியிற்சூடும், திருவுடையாரென்றும் சீரியரே.

”தமிழ்த் தலைவன்”, தென்பாண்டி நாட்டான், சீர்மிகு காரி மாறன் அடி
போற்றும் இராமானுஜனும் தமிழ்த் தலைவன்தானே!


வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
நாழற்றது நம் இராமானுசன் தந்த ஞானத்திலே.

விளக்கவுரை – எங்களது எஜமானராக உள்ள எம்பெருமானார், எங்களிடம் எந்தவிதமான
கைம்மாறும் எதிர்பார்க்காமல், தனது அளவற்ற கருணை காரணமாக, மிகவும்
உயர்ந்த ஞானத்தை எங்களுக்கு அளித்தார். இந்த ஞானம் காரணமாக வேதங்களை
அடியுடன் தள்ள முயன்ற பௌத்தர் போன்றவர்களும், வேதவரிகளுக்குத் தவறான
பொருள் கற்பிக்க முயன்ற யாதவப்ரகாசர் போன்றவர்களும் தங்கள் வாழ்வை
இழந்தனர். இவ்விதம் களைகள் நீக்கப்பட்ட பின்னர், பயிர்கள் தடையின்றி
வளர்வது போன்று, நீண்ட காலமாக இருந்து வரும் பரமவைதிகர்கள் தாங்கள் இழந்த
வாழ்வை மீண்டும் பெற்று, தங்களது தாழ்வு நீங்கப் பெற்றனர். இதன் மூலம்
இந்தப் பூமியானது மிகவும் உயர்ந்த புண்ணியம் பெற்றது. எம்பெருமானாரின்
ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மூலமாக வேதங்களில் கூறப்பட்ட பரம்பொருள்
குறித்த ஐயம் அனைத்தும் நீங்கிவிட்டன. (நன்றி:
http://namperumal.wordpress.com)


2012/2/9 Innamburan Innamburan <innam...@gmail.com>:

N. Kannan

unread,
Feb 11, 2012, 10:49:15 PM2/11/12
to mint...@googlegroups.com
கிருஷ்ணகிரி!

பெயருக்கு ஏற்ற படியே மிகவும் அழகான பிரதேசம். மிகவும் தொன்மையான பிரதேசம்.

தகவல் தொடர்பு நிபுணராக இருந்தாலும் செல்வ முரளிக்கு நம் பாரம்பரியத்தின்
மீது அன்பு வந்தது நம் நல்லூழ்!

மிக அற்புதமான வகையில் ஏற்பாடு செய்திருந்தார். ஒரே இளைஞர் பட்டாளம்.
இந்தப் பட்டாளத்தின் இளைய உருப்பினராக ‘ஹிரண்மயி’ எனும் கைக்குழந்தையை
ஸ்வர்ண லக்ஷ்மி அறிமுகப்படுத்தினார். திடீரென நான் அங்கு’தாத்தா’
ஆகிவிட்டேன் :-)

அன்றைய கிருஷ்ணகிரி மக்கள் ‘உயிரைத் துச்சமென’ நினைத்து இருக்கின்றனர்.
இல்லையெனில் இத்தனை நவகண்ட சிற்பங்கள் அங்கு இருக்காது! முகத்தில்
புன்னகையோடு கழுத்தில் கத்தியை வைக்கும் இளைஞனை என்ன சொல்வது? இதுதான்
ஜப்பானிய ஹிரகரி முறைமைக்கு வழி காட்டியதா? என்று ஆராய வேண்டும்.

ஒரு சமுதாயமே நினைத்தால் நவ கண்டம், தீக்குளிப்பு, நரபலி என்று இருந்தால்
அங்கு வாழும் சமயமும் அதை அங்கீகரித்துத்தானே ஆக வேண்டும்?

அதுதான் அங்கு நடந்து இருக்கிறது தர்மபுரியின் மல்லிகார்ஜுனர் ஆலயத்தில்
உயிர்கொலைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அம்பாள் கோயிலில் ஒருவர்
சூலாயுதத்தை நட்டக்குத்தாக நட்டு வைத்து, தலைகீழாக குதித்து
இருக்கிறார். அம்பாள் கைத்தாங்கலாக அவனைக் காத்ததாக ஒரு கதை. இது
காலப்போக்கில் ‘நடுகல்’ கோயிலுக்குள் வந்துவிட்டதால் ஏற்பட்ட கதையா?
இல்லை, அங்கு நடக்கும் உயிர்கொலைகளுக்கு வேறுவழியில்லாமல் அங்கீகாரம்
கொடுக்க வேண்டிய நிலையா? என்று தெரியவில்லை. சிவனுக்கு பிள்ளைக்கறி
சமைத்துக் கொடுத்த கதை எங்கு நடந்தது என்பதை ஆராய வேண்டும்.

தமிழக சமூகம் பெருங்கற்கால மன நிலையிலிருந்து அதிகம் மாறிவிட்டதாகச்
சொல்ல முடியாது. தமிழகம் தொழிபுரட்சிக்குப் பின் உண்டாகிய நவீன வாழ்வை
ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கம் இத்தகைய இரட்டை மனோநிலை என்று
தோன்றுகிறது. இம்மாதிரி பண்டைத் தொன்மங்கள் நம் மனதில் ஆழமாகப்
பதிந்துள்ளன. கோயிலுக்குள் போனாலும் இதே படிமங்கள்!! திரும்பத்திரும்ப
காணும் ஒன்று, கேட்கும் ஒன்று, செய்யும் ஒன்று நிலைத்துவிடுகிறது.

சிங்கப்பூர் போல் ஏன் சிங்காரச் சென்னை மாற முடியவில்லை? எனும் கேள்வி
இன்னும் என்னைக் குடைகிறது. நான் வந்த குறைந்த காலக் கட்டத்தில் கண்ட
சாலை விபத்துக்கள். உயிர்ப்பலிகள் என்னைப் பாதிக்கின்றன. இந்த தேசத்தின்
எதிர்காலம் என்ன என்ற கேள்வி நிற்கிறது!

நா.கண்ணன்

Swarna Lakshmi

unread,
Feb 12, 2012, 1:26:00 AM2/12/12
to mint...@googlegroups.com
தர்மபுரி கோயில் அர்ச்சகர் சொன்ன ஒரு சேதியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

நவகண்டம் என்பது ஒரு சூலத்தை தரையில் நிறுத்து அதன் மீது தலை குப்புற விழுந்து உயிர் துறப்பது - அதாவது உடலில் உள்ள ஒன்பது துளைகளும் அறுபடுவது...

ஹரிகண்டம் என்பது தான் நாம் அறிந்த கழுத்தில் கத்தியை வைத்து பலியிடுவது... 

சிவனுக்கு பிள்ளைக்கறி செங்கட்டாங்குடியில் - சிறுத்தொண்ட நாயனார் சரித்திரம். அது சுயத்தை விடுகின்ற பக்தியை காட்டுகிறது. அப்படி தான் அவருக்கு நாயனார் அங்கீகாரம் கிடைக்கிறது. அந்த அங்கீகாரம் அவருக்கு முக்கியமில்லை என்றாலும், கதை கேட்பவருக்கு பக்தி எப்படி சுயமில்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

கண்ணன் - நீங்கள் சொல்வதை என்னால் பூரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக்காலத்தில் அடிக்கடி போர்கள் போன்றவை இருந்ததால் வீரத்தையும் உயிர் பலிகள்/ தியாகங்கள் போன்றவற்றையும் போற்றினார்கள். இன்றைக்கும் நாம் army வீரர்களை கொண்டாடுகிறோமே...

நம் கோயில்களில் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமுமே தான் இருக்கின்றன... பிறப்பிலிருந்து இறப்பு வரை... பல கோபுரங்களில் சிற்றின்ப சிற்பங்கள் கூட இருக்கின்றன. அதே போலவே இதுவும். அதை நீங்கள் சொல்வது போல் ‘காட்டுமிராண்டித்தனம்” என்று என்னால் பார்க்க முடியவில்லை. சொல்லப்போனால் உலகின் எல்லா வரலாறுகளுமே இவ்வாறு தான் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல், இன்று உலக அளவில் பார்த்தாலும் வன்முறையும் சக மனித துஷ்பிரயோகமும் இருக்கத்தான் இருக்கின்றன. 

சாலை விபத்துக்களின் காரணம் வேறு - அது நம் மக்களின் அறியாமை மற்றும் அரசியல் வாதிகளின் சுய நலம் போன்றவற்றால் ஏற்படுகின்றது.

இந்தியாவின் எதிர்காலம் நாம் நம் மரபை மதிப்புகளை போற்றுவதில் இருக்கிறது. Modern வாழ்க்கையையும் நம் நல்ல மரபுகளையும் balance செய்வதில் இருக்கிறது. சக மனிதனை மதிப்பதில் இருக்கிறது.  நம் பார்வையை விரிவுபடுத்துதலில் இருக்கிறது.

நன்றி
ஸ்வர்ணா

Sent: Sunday, 12 February 2012 9:19 AM
Subject: Re: [MinTamil] Re: முதுசொம் பயணம்

N. Kannan

unread,
Feb 12, 2012, 2:11:03 AM2/12/12
to mint...@googlegroups.com
Dear Swarna:

We need to probe this question rather deeply. It is not important
whether you accept my theory or not. But ask yourself the question?
What is the difficulty in urban living in India? Why is it so hard to
keep order in a city? Why do we keep our nation dirty and be happy
about it.

Probably you never lived abroad long enough to see the significance of
this question. Keeping myself clean is good for me and good for the
person who meets me. Right? Same applies to your home, street,
country. It is about caring. Probably we don't care about anything?
Puzzling!

Korea was poorer than us in 60s. Visit the modern Korea! How do they
urbanize their people. Why do they keep themselves clean?

Germany was in ruins in 50s. Look at modern Germany. What is the
difference between Germans and Indians as human beings?

I'm asking a basic moral question? If God lives in you & outside why
can't we respect God. We may easily dissect the question, fragment it
and escape out. The loss is only ours.

Kannan


2012/2/12 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:


அதை நீங்கள் சொல்வது போல்
> ‘காட்டுமிராண்டித்தனம்” என்று என்னால் பார்க்க முடியவில்லை.

I don't say that but I see it as a residue of a primitive living.

Swarna Lakshmi

unread,
Feb 12, 2012, 7:11:34 AM2/12/12
to mint...@googlegroups.com
Kannan,
 
Well, cleanliness and hygiene is a different thing. I dont think our country was so dirty before independence... Even when I was a child - some 20 years ago - I dont remember streets being so dirty and people being so unhygienic. My home. though old style and small - was very clean, we had a nice garden in the frontyard and we had loads of space to play and even invite 2 familes to stay with us in summer. I think this is a recent addition. I feel the problem is awareness. I m not blindly saying the govt has a role to play. In Germany or Korea, the govt has certainly played a big role. We need to challenge the people who are responsible. We need to do it contiously - it must a mass movement.
 
Look at it this way - you can tell us how bad our country is environmentally - How we are heading to a doom if we dont do something abt it immedietly. If you are PM or CM wont you make it your first priority to resolve it? Wont you divert a large sum of money to universities and other organizations to find out a best way to recycle waste, use solar and other forms of renewable energy sources, look at preserving and improving forests, and save our water resources. Why is that not happening? Why is the govt. bothered abt dangerous energy sources like atomic energy. Why is it granting permission to various ports that we can do with out? Why cant we ASK them... There's no way to do it.... Or is there a way?
 
And why do we need more industries when we are the largest agricultural resource and we can be a great tourist destination? Even if you need industries, why cant we find places that are really in a bad state economically?
 
Individuals can only do so much Kannan!! If Govt. initiates some thing, you can see people following it. it is more effective and practical that way... Or it must be a mass movement and must have loads of media attention - typically headed by a cricket star or a movie star... Is any movie star ready to start this movement :((. People like you and me are no important here - We can only do so much...

From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sunday, 12 February 2012 12:41 PM
Subject: Re: [MinTamil] Re: முதுசொம் பயணம்

N. Kannan

unread,
Feb 12, 2012, 11:23:13 AM2/12/12
to mint...@googlegroups.com
2012/2/12 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:

> Individuals can only do so much Kannan!! If Govt. initiates some thing, you
> can see people following it. it is more effective and practical that way...

Hello Swarna

It is a democratic fix :-) Theoretically the power lies in people's
hand. When there is a will there is a way!

On the other hand look at Singapore and China. They are not truly
democratic countries. Things works alright there (in environmental
perspective).

Since India is a true democracy every citizen should realize this.
What I see in India is a terribly myopic public which is reflected in
the politics. Imagine if there is no givers there is no takers!!

Kannan

ps. My concern is about the population burst. We have stolen the
future of our children. We need to act urgently on this issue before
the system collapses.

Nagarajan Vadivel

unread,
Feb 14, 2012, 10:20:48 AM2/14/12
to mint...@googlegroups.com
தமிழ் குமுகம் பற்றிய புனைவுகள் உயர்வு நவிற்சியில் அமைந்திருப்பது சிந்தனையைத் திசை திருப்ப வல்லது.  தமிழ் மூவேந்தர்கள் தமிழர் குமுக அமைப்பு வாழ்வியல் மரபு பழங்குடிகள் வாழ்வுமுறைய ஒட்டி அமைந்தது.  மிக எளிய வாழ்வில் காதல் வீரம் என்ற நுண்ணிய உணர்வுகளுக்கு வடிகாலாக மொழியைப் பயன்படுத்தினர்.  வடபுலத்தில் வழங்கிய உயர்நிலை இறை மறை சார் மெய்ஞான வளங்கள் தமிழில் இல்லை என்ற குறை இருந்தது.  வைணவம் அக்குறையைத் தமிழ் வேதத்தை உருவாக்கி நிறைவு செய்தனர்.  சைவம் ஆகம முறையை வலியுறுத்தி சமஸ்கிரித வளங்களை சமஸ்கிரிதம் மூலமாகவும் சமஸ்கிரியம் அல்லாத கிரந்தம் வாயிலாகவும் தென்னாடு மட்டுமன்றி தென்கிழக்கு ஆசியாவிலும் பரவச் செய்தனர்.  ஸ்மார்த்தா குமுகம் தென்னாட்டில் வடநாட்டைவிட அதி உன்னதமான ஆகமக் கருத்துக்களை உருவாக்கினர்
எனவே மேலைநாட்டு ஆய்வுநெறி வலியுறுத்தும் காலம் ஒரு நேர்கோடு அதில் நிமழ்வுகள் சீராக முன் நிகழ்வுகள் பின் நிகழ்வுகள் என்று வகைப் படுத்தல் அவசியம் என்ற வரையரைக்குள் அமைத்து ஆய்வுசெய்ய வேண்டும் அதற்கான ஒரு காலச்சுவடை நேர் பாதையில் அமைக்க வேண்டும்.  காலச் சக்கரம் என்று சுற்றிச் சுற்றி வந்தால் மற்ற நாட்டின் வரலாற்று நிகழ்வுகளுடன் ஒப்பு நோக்க முடியாது.  இந்தக் காலச்சக்கரம்தான் நம்மை கருத்துப்பிழைக்கு இடம்கொடுக்க வைக்கிறது.  ஆங்கிலத்தில் லேட்ட்ரல் திங்கிங் என்று சொல்லப்படும் பல நேர்கோடுகளில் சிந்திக்காமல் நாம் ஒரே பாதையில் எதிரும் புதிருமாக சிந்தித்து அதனால்கருத்துமொதல்களுக்கு இடம்கொடுத்துவிடுகிறோம்
சங்க இலக்கியங்கள் ஒரு பாதையிலும் சமஸ்கிரித வளங்கள் இன்னொரு பாதையிலும் கிரந்த மணிப்பிரவாளச் சிந்தனைகள் இன்னொரு பாதையிலும் பயணித்தால் மேலைநாட்டு அறிஞர் குழுமம் ஏற்றுக்கொள்ள வகையில் நம் வரலாற்றுச் சிறப்பை உலக அரங்கில் வெளியிட முடியும்
இரு கருத்துக்களொன்றோடொன்று மோதுவதும் வெற்றிபெற்ற கருத்தை அரசும் குமுகமுகம் ஏற்றுக்கொள்வதும் தோல்வியுற்ற கருத்தை அடிச்சுவடில்லாமல் அழிப்பதும் காலம் காலமாக தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள்.  அதையே இப்போது மீன்டும் பயன்படுத்துவது தேவையா?
நாகராசன்

2012/2/10 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 14, 2012, 10:30:29 AM2/14/12
to mint...@googlegroups.com
சுருங்கச்சொல்லின், தெளிவாக பேசுக.


2012/2/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
தமிழ் குமுகம் பற்றிய புனைவுகள் உயர்வு நவிற்சியில் அமைந்திருப்பது சிந்தனையைத் திசை திருப்ப வல்லது...காலச் சக்கரம் என்று சுற்றிச் சுற்றி வந்தால் மற்ற நாட்டின் வரலாற்று நிகழ்வுகளுடன் ஒப்பு நோக்க முடியாது.  இந்தக் காலச்சக்கரம்தான் நம்மை கருத்துப்பிழைக்கு இடம்கொடுக்க வைக்கிறது.  ஆங்கிலத்தில் லேட்ட்ரல் திங்கிங் என்று சொல்லப்படும் பல நேர்கோடுகளில் சிந்திக்காமல் நாம் ஒரே பாதையில் எதிரும் புதிருமாக சிந்தித்து அதனால்கருத்துமொதல்களுக்கு இடம்கொடுத்துவிடுகிறோம். சங்க இலக்கியங்கள் ஒரு பாதையிலும் சமஸ்கிரித வளங்கள் இன்னொரு பாதையிலும் கிரந்த மணிப்பிரவாளச் சிந்தனைகள் இன்னொரு பாதையிலும் பயணித்தால் மேலைநாட்டு அறிஞர் குழுமம் ஏற்றுக்கொள்ள வகையில் நம் வரலாற்றுச் சிறப்பை உலக அரங்கில் வெளியிட முடியும்

Nagarajan Vadivel

unread,
Feb 15, 2012, 1:13:44 AM2/15/12
to mint...@googlegroups.com
//சுருங்கச்சொல்லின், தெளிவாக பேசுக//
வம்பை விலை குடுத்து வங்கனும்னு எழுதியிருக்குமோ

1. தமிழ் குமுகம் பற்றிய புனைவுகள் உயர்வு நவிற்சியில் அமைந்திருப்பது சிந்தனையைத் திசை திருப்ப வல்லது.

கல் தோன்றி மண் தோன்றாக் காலம்னு ஆரம்பித்து லெமூரியாவைச் சொல்லி ஆதாரம் இல்லாத தகவல்களைச் சொல்வது

2.  தமிழ் மூவேந்தர்கள் தமிழர் குமுக அமைப்பு வாழ்வியல் மரபு பழங்குடிகள் வாழ்வுமுறைய ஒட்டி அமைந்தது.

கோடம்பாக்கம் மசாலா கலந்து முடியுடை மூவேந்தர்கள் என்று படம் பிடித்துக்கட்டுவது. 

 3. மிக எளிய வாழ்வில் காதல் வீரம் என்ற நுண்ணிய உணர்வுகளுக்கு வடிகாலாக மொழியைப் பயன்படுத்தினர். 

அகம் புறம் காதல் வீரம் அம்ப்புட்டுதேன்.  மெய்ஞானம் விஞ்ஞானம் ஏன் இசைஞானம் கூட அறியப்படாமல் இலக்கியத்தை வடித்தனர்

4. வடபுலத்தில் வழங்கிய உயர்நிலை இறை மறை சார் மெய்ஞான வளங்கள் தமிழில் இல்லை என்ற குறை இருந்தது.

நடுகல் பெண்தெய்வங்கள் காவல் தெய்வங்களாகி கிராம தேவதைகளை வணங்கினர்

 5.  வைணவம் அக்குறையைத் தமிழ் வேதத்தை உருவாக்கி நிறைவு செய்தனர்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் தமிழ் வேதமாக உருவானது

6. சைவம் ஆகம முறையை வலியுறுத்தி சமஸ்கிரித வளங்களை சமஸ்கிரிதம் மூலமாகவும் சமஸ்கிரிதம் அல்லாத கிரந்தம் வாயிலாகவும் தென்னாடு மட்டுமன்றி தென்கிழக்கு ஆசியாவிலும் பரவச் செய்தனர்.  ஸ்மார்த்தா குமுகம் தென்னாட்டில் வடநாட்டைவிட அதி உன்னதமான ஆகமக் கருத்துக்களை உருவாக்கினர்

சைவ ஆகம வளங்கள் கிரந்த எழுத்துமுறை வடபுலத்தில் அதிகம் அறியப்படவில்லை.  இந்திய சமயக் கருத்துக்கள் கடல் கடந்து பரவ தென்னாட்டு அந்தணர்கள் செய்த பணி சிறப்புடையது.


7.எனவே மேலைநாட்டு ஆய்வுநெறி வலியுறுத்தும் காலம் ஒரு நேர்கோடு அதில் நிமழ்வுகள் சீராக முன் நிகழ்வுகள் பின் நிகழ்வுகள் என்று வகைப் படுத்தல் அவசியம் என்ற வரையரைக்குள் அமைத்து ஆய்வுசெய்ய வேண்டும் அதற்கான ஒரு காலச்சுவடை நேர் பாதையில் அமைக்க வேண்டும்.

காலம் என்பது நேர்கோட்டில் செல்வது என்பது மேலைநாட்டு ஆய்வாளர்களின் கொள்கை.  வரலாற்று நிகழ்வுகளின் கலம் இந்த அடிப்படையில் அறிஞர்கள் ஏற்றுக்கொல்லும் வண்னம் நிறுவப்படல் வேன்டும்


 8.காலச் சக்கரம் என்று சுற்றிச் சுற்றி வந்தால் மற்ற நாட்டின் வரலாற்று நிகழ்வுகளுடன் ஒப்பு நோக்க முடியாது.  இந்தக் காலச்சக்கரம்தான் நம்மை கருத்துப்பிழைக்கு இடம்கொடுக்க வைக்கிறது. 

தமிழக ஆய்வுச் சிந்தனை சக்கரம்போல் சுற்றிவரும்படி உற்றுநோக்கப்படுகிறது.

 
9ஆங்கிலத்தில் லேட்ட்ரல் திங்கிங் என்று சொல்லப்படும் பல நேர்கோடுகளில் சிந்திக்காமல் நாம் ஒரே பாதையில் எதிரும் புதிருமாக சிந்தித்து அதனால்கருத்துமொதல்களுக்கு இடம்கொடுத்துவிடுகிறோம்

பன்முகச் சிந்தனை ஒன்றுக்கொன்று மோதாமல் தனிப்பாதைகளில் இருக்குமாறு அமைக்கத் தவறிவிட்டோம்

10. சங்க இலக்கியங்கள் ஒரு பாதையிலும் சமஸ்கிரித வளங்கள் இன்னொரு பாதையிலும் கிரந்த மணிப்பிரவாளச் சிந்தனைகள் இன்னொரு பாதையிலும் பயணித்தால் மேலைநாட்டு அறிஞர் குழுமம் ஏற்றுக்கொள்ள வகையில் நம் வரலாற்றுச் சிறப்பை உலக அரங்கில் வெளியிட முடியும்

மேலைநாட்டு ஆய்வுமுறைக்கு ஒப்ப வரலாற்று நிகழ்வுகளையும் ஆவணங்களையும் கால அடிப்படையில் அமைக்க இயலவில்லை

11. இரு கருத்துக்களொன்றோடொன்று மோதுவதும் வெற்றிபெற்ற கருத்தை அரசும் குமுகமுகம் ஏற்றுக்கொள்வதும் தோல்வியுற்ற கருத்தை அடிச்சுவடில்லாமல் அழிப்பதும் காலம் காலமாக தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள்.  அதையே இப்போது மீன்டும் பயன்படுத்துவது தேவையா?

நம் கருத்துக்களை நாமே ஏற்றுக்கொள்ளாது விவாதிப்பது நமக்கு இயல்பிலேயே அமைந்துவிட்டது

நாகராசன்
2012/2/14 Innamburan Innamburan <innam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 15, 2012, 10:30:56 AM2/15/12
to mint...@googlegroups.com
நடுநிலை என்பது இதுதான். 

2012/2/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
//சுருங்கச்சொல்லின், தெளிவாக பேசுக//
வம்பை விலை குடுத்து வங்கனும்னு எழுதியிருக்குமோ


11. இரு கருத்துக்களொன்றோடொன்று மோதுவதும் வெற்றிபெற்ற கருத்தை அரசும் குமுகமுகம் ஏற்றுக்கொள்வதும் தோல்வியுற்ற கருத்தை அடிச்சுவடில்லாமல் அழிப்பதும் காலம் காலமாக தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள்.  அதையே இப்போது மீன்டும் பயன்படுத்துவது தேவையா?

நம் கருத்துக்களை நாமே ஏற்றுக்கொள்ளாது விவாதிப்பது நமக்கு இயல்பிலேயே அமைந்துவிட்டது

நாகராசன்

2012/2/14 Innamburan Innamburan <innam...@gmail.com>
சுருங்கச்சொல்லின், தெளிவாக பேசுக.




35B.gif
03D.gif

Innamburan Innamburan

unread,
Feb 16, 2012, 8:55:28 AM2/16/12
to mint...@googlegroups.com
பதினொன்றும் வபையான பாயிண்டுகளே.
'சுருங்கச்சொல்லின், தெளிவாக பேசுக.' 
~ வம்பை விலை குடுத்து வங்கனும்னு எழுதியிருக்குமோ?
வம்பு: டாட்டன்ஹாம் அறியுமோ?


2012/2/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>
35B.gif
03D.gif

N. Kannan

unread,
Mar 1, 2012, 11:34:55 AM3/1/12
to மின்தமிழ்
சுபா ஜெர்மனி திரும்பிய பின்னும் முதுசொம் பயணம் என்னளவில் இன்னும் தொடர்கிறது. இன்று சேர்வராயன் மலைக்குப் போயிருந்தேன். சேர்வராயன் என்ற பெயர் கேட்டதுதான் என்றாலும் அது ஆயிரம் பேருடையானுக்குச் சொந்தமானது என்று இன்று அறிந்தேன்!

Inline image 1
சேர்வராயன் கோயில்

ஏர்க்காடு (ஏரிக்காடு என்பதன் திரிபு) பகுதியின் உயர்ந்த மலை முகடு. சேர்வராயன். அது பெருமாளுக்குச் சொந்தம். இதுவொரு இயற்கை தந்த குடைவரைக் கோயில். பல கோடி வருடங்களுக்கு முன் பூமியின் மேல் தகடுகள் குளிர்ச்சியடையத்தொடங்கியபோது கொப்பளித்த குளம்பில் மாட்டிக்கொண்ட ஓர் வளிக்குமிழி ஏற்படுத்திய குகை. மிகவும் குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே பெருமாள், தாயார் மட்டும். தாயாரைக் காவிரித்தாய் என்கின்றனர். இகுகை தலைக்காவிரி உண்டாகும் இடத்திற்குப் போவதாக ஐதீகம். யாரும் உள்ளே சென்று பார்த்ததில்லை என்று நம்புகிறேன்.

பூசாரி, ஐயரில்லை. மந்திரம் சொல்வதில்லை! மிக நீண்ட நேரம் தொங்கும் மணியை அடித்துக் கொண்டே ஆரத்தி காட்டுகிறார். இந்த வட்டாரத்திற்கே தெய்வம் இவர்தான் என்றார்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனல்லவோ? என்று வினவினேன். என் அருகிலிருந்த சகா முனைவர் அன்பழகன் சொன்னார், ‘ஆம்! ஆனால் பெரும் மலைகளெல்லாம் பெருமாளுக்குச் சொந்தமென்றார்”. எவ்வளவு உண்மை! ஏழு மலைகள் கொண்ட திருமலைக்கு அதிபதி அவன். கள்ளர்கள் வாழும் பழமுதிர்ச் சோலை அவனுடையது. சேர்வராயன் மலைத்தொடர் அவனுக்குச் சொந்தம். கிருஷ்ணகிரி என்று பெயரிலேயே கிருஷ்ணன் உள்ள மலைத்தொடர்களில் திருமாலே பெருந்தெய்வம். அவன் பெருங்கற்கால ஆயுதமாக வழிப்படப்படுகிறான். உயிர்களின் சரிதம் சொல்லும் ஃபாஸில்களில் வாசம் செய்கிறான் (சாளக்கிராமம்). பூமி தோன்றிய போது உருவான உஷ்ணக் குமிழியில் வாசம் செய்கிறான் (சேர்வராயன்). 

Inline image 2

கோயிலின் இன்னொரு தோற்றம். தொன்மிகு பெரு மரம்! என்பது பெருமாளுக்குப் பெயர்!

அறியப்படாத என் தமிழகம் நீண்டு கொண்டே போகிறது....

நா.கண்ணன்
Temple5.JPG
Temple4.JPG

Geetha Sambasivam

unread,
Mar 1, 2012, 2:31:14 PM3/1/12
to mint...@googlegroups.com
கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது.  சேர்வராயன் மலை போனதில்லை.  போகும் ஆசையைத் தூண்டி விட்டது இந்தப் படங்களும், குறிப்புகளும். பகிர்வுக்கு நன்றி.

On Thu, Mar 1, 2012 at 10:34 AM, N. Kannan <navan...@gmail.com> wrote:
சுபா ஜெர்மனி திரும்பிய பின்னும் முதுசொம் பயணம் என்னளவில் இன்னும் தொடர்கிறது. இன்று சேர்வராயன் மலைக்குப் போயிருந்தேன். சேர்வராயன் என்ற பெயர் கேட்டதுதான் என்றாலும் அது ஆயிரம் பேருடையானுக்குச் சொந்தமானது என்று இன்று அறிந்தேன்!

அறியப்படாத என் தமிழகம் நீண்டு கொண்டே போகிறது....

நா.கண்ணன்

--

Subashini Tremmel

unread,
Mar 1, 2012, 3:07:50 PM3/1/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ரொம்ப வித்தியாசமாக இருக்கே இந்த குகைக் கோயில். கண்ணன் - இதனை நமது படச் செய்தி வலைப்பூவில் சேர்த்து விடுங்களேன். 

அறியப்படாத தமிழகம்.. கேட்க அருமையாக இருக்கின்றது. செல்லும் இடமெல்லாம் பல விஷயங்கள் புதிய செய்திகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்று நம்புகிறேன்.

சுபா

2012/3/1 N. Kannan <navan...@gmail.com>
சுபா ஜெர்மனி திரும்பிய பின்னும் முதுசொம் பயணம் என்னளவில் இன்னும் தொடர்கிறது. இன்று சேர்வராயன் மலைக்குப் போயிருந்தேன். சேர்வராயன் என்ற பெயர் கேட்டதுதான் என்றாலும் அது ஆயிரம் பேருடையானுக்குச் சொந்தமானது என்று இன்று அறிந்தேன்!
..

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Reply all
Reply to author
Forward
0 new messages