தாய்மாமன் உறவு .. ஒரு அற்புதம்.

5,228 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 25, 2015, 5:45:01 AM7/25/15
to mintamil, vallamai, தமிழ் மன்றம், housto...@googlegroups.com
நண்பரொருவர் அனுப்பியிருந்த பதிவு கவர்ந்ததால் பகிர்ந்துள்ளேன்.
தாய்மாமன் உறவு குறித்த தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்த
இழையில் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

அழிக்க முடியாத உறவு - " தாய்மாமன் "
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள்
தாய்மாமன் உறவு என்று தான்.
பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும்
பசங்களிடம் ஒரு காலத்தில் ( தற்போது அல்ல ) எங்க மாமா வீட்டுக்குப்
போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப் பொருள்
வைத்திருந்தால் யாருடா வாங்கிக் கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க
மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது
தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே "வாழ்வாங்கு வாழ்வான்”
என்பது சொல்வடை.
உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை,
தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு
வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும்
இல்லாது வருவது.
தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய்,
நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அதன் முகத்தில்
அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார்
என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..
தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான்.
அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர்
பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை
எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும்,
கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.
தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா
என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன்,
அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ
வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தாள் என்றால் அண்ணன் மாடி மீது
மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன்
எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.
சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு
இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி
விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன்
உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய
முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும்
நிகரனாவன் அல்லவா?
உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.
ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில்
இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம்
தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும்
தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது
என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...
நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக
நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை
பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி
விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மாமனுக்கு முன்னின்று 60ம்
கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர்
சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.
நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது
வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம்
மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை
பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் அவா.

dr.ponmudi

unread,
Jul 25, 2015, 9:58:55 AM7/25/15
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, housto...@googlegroups.com, karu...@gmail.com
உண்மை!

நான்கூட பள்ளிவிடுமுறையில் மாமாவீட்டுக்குத்தான்போவேன். அங்கே எங்கள் அத்தை மீன்குழம்புவைத்து சுடச்சுடபோடும். நானும்
 மாமாவீட்டுப்பையனுடன் ஆற்றில் பாசியரிக்கச்செல்வேன். மெதுவாய்நகரும் நீருக்கடியில் ஓரடியீரடிக்குவளர்ந்திருக்கும் ஒருவகை பாசியை னீரில் மூழ்கியபடி கையால் அரித்துக்கொண்டுவருவோம். நூல்போல் மெலிந்திருக்கும் அந்த பாசியை காயவைத்து புகையிலைவிதைவிடுமிடத்தில் அந்த மேடையின்மேல் அதை தூவிவிடுவார்கள். நீர்தெளிக்கும்போது முளைத்துவரும் முளை பாதுகாப்பாயிருப்பதற்கு அது உதவும்.

மாமா எங்களோடு மிகவுமன்பாயிருப்பார். அவர் இருந்தவரை அம்மாவுக்கு சீர்கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயால் அவர் இறந்துவிட்டார். அதன்பின் அவரது ஒரேமகன் அம்மாவுக்கு அம்மா இறக்கும்வரை சீர்கொண்டுவந்துதந்துகொண்டிருந்தார். 

சென்றவாரங்கூட ஊருக்கு எங்கள் குலதெய்வத்துக்கு (நல்லவீரன்) கிடாவெட்டி பூசைபோடப்போயிருந்தபோது அவரும்வந்திருந்தார். "ஊருக்குப்போகும்போது வீட்டுக்குவந்துபோகவேண்டுமச்சான்!" என்றார். எங்கள் அக்காவீட்டுக்குப்போய்விட்டு அவர்வீட்டுக்கும்போய்வந்தோம். எல்லாம் பக்கத்துப்பக்கத்துக்கிராமங்கள். இருவரும் நிறைய கொடுத்தனுப்பினார்கள்!

இக்காலத்துப்பிள்ளைகள் நகரவாழ்க்கையிலிருப்பதால் சொந்தக்காரர்களைப்பற்றி அவ்வளவாக அக்கறைகொள்வதில்லை. நாம் அவர்கள்வீட்டுக்கு போகும்போதுகூட நம்மை கண்டுகொள்வதில்லை. விருந்தினர்வருவதெல்லாம் பெரியவர்களைப்பார்ப்பதற்கென்றும் நமக்கும் அதற்கும் தொடர்பில்லையென்பதுபோலுமிருக்கிறார்கள். உறவுகளின் பெருமையை சொல்லித்தான்வளர்க்கவேண்டும். 

ஆனால் சொன்னாலும் அவர்களுக்கெல்லாம் நம் பழையகாலத்தைப்போல் ஒட்டுறவெல்லாம் வருவதில்லை!

இறுதியாக சீர்தந்தகாட்சி. (மாமாமகன், அம்மா, தம்பி, நான்)

அன்புடன் பொன்முடி
IMG_20130114_121938.jpg

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 26, 2015, 11:27:21 AM7/26/15
to dr.ponmudi, மின்தமிழ், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, housto...@googlegroups.com
On 7/25/15, dr.ponmudi <dr.pon...@gmail.com> wrote:
உண்மை!
நான்கூட பள்ளிவிடுமுறையில் மாமாவீட்டுக்குத்தான்போவேன்.
மாமா எங்களோடு மிகவுமன்பாயிருப்பார். அவர் இருந்தவரை அம்மாவுக்கு
சீர்கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயால் அவர் இறந்துவிட்டார். அதன்பின்
அவரது ஒரேமகன் அம்மாவுக்கு அம்மா இறக்கும்வரை
சீர்கொண்டுவந்துதந்துகொண்டிருந்தார்.
இறுதியாக சீர்தந்தகாட்சி. (மாமாமகன், அம்மா, தம்பி, நான்)
அன்புடன் பொன்முடி//

நெஞ்சத்தை தொடும் பதிவு திரு பொன்முடி. எங்கள் தாயார் பொங்கல் வரும்
நாட்களில் டென்சன் ஆகிவிடுவார்கள். எவ்வளவு இருந்தாலும் பொங்கல் பானைக்கு
அவர்கள் அண்ணன் மகன் அனுப்புகிற பத்து ரூபாய் மணியாடருக்குக்
காத்திருப்பார்கள். மணியார்டர் வந்ததும் அவர்கல் முகத்தில் மகிழ்ச்சி
பூரிப்பு காண கண் கோடிவேண்டும்.

கருத்திட்டமைக்கு நன்றி திரு தோத்திரி ஐயா,திரு யோகியார்,திருமிகு
பவளா,திருமிகு தேமொழி. பாசமலர் பாடலுக்கு ஈடில்லை.

Suba.T.

unread,
Jul 26, 2015, 2:59:32 PM7/26/15
to மின்தமிழ், Subashini Tremmel
வாசிக்கும் போதே இந்த உறவின் நெருக்கம் மனதை தொடுகின்றது. எனது தாயாரின் 2 சகோதரர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் வேறொரு சாதியைச் சார்ந்த பெண்ணை மணந்ததால் என் தாயாரின் தாத்தா அவரை  குடும்பத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. மிக மிக நல்லவர். அன்புள்லம் கொண்டவர். சாதி எந்த அளவிற்கு மனித உறவுகளைப் பாதிக்கின்றது என்பதற்கு நான் என் குடும்பத்திலேயே நேரடியாக உணர்ந்த  அனுபவம் இது.

ஆனால் என் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தாயார் வழி மீண்டும் எங்களுக்கு தொடர்பு வந்தது. ஆனாலும் நாங்கள் மலேசியா, அவர் தமிழகம் என்பதால் உறவைத் தொடர முடியவில்லை. 4 வயதில் தமிழக கிராமத்தில் என்னைப் பார்த்தவர். பிறகு செம்மொழி மானாட்டின் போது நான் தமிழகம் வருவதாக கேள்விப்பட்டு கோவைக்கு வந்து நான் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு வந்து எனக்கு அறிமுகம் செய்து கொண்டார். அவரும் அவரோடு வந்திருந்த  மற்றொரு உறவினரும் என்னுடன் 2 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த மகிழ்ச்சி... சொல்ல முடியாதது. அங்கிருந்த நமது த.ம.அ நண்பர்கள் .. கண்ணன் ஆகியோரிடம் என்னை நன்கு பார்த்துக் கொள்ளச் சொல்லி கண்ணீர் விட்டார்.. மனதில் அக்காட்சி இன்னமும் நினைவில். எப்படி விவரிப்பது இந்த அன்பை..  திரு.சொ.வி அவர்களின் பதிவு இண்டஹ் நினைவுகளை கொண்டு வந்து விட்டது.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 27, 2015, 2:41:00 AM7/27/15
to mintamil, Subashini Tremmel, Jothi Themozhi, N. Kannan, Oru Arizonan, Geetha Sambasivam
30 வருடங்களுக்குப் பின்பாகத் தாய்மாமாவைக் கண்டது நெகிழ்ச்சியானது. அவர் கண்கலங்கி நண்பர்களிடம் பார்த்துக்கொள்ளும்படி கூறியது தன்னால் இயலவில்லையே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு. இன்றைக்கும் வெளிநாட்டில் வாழுகின்ர பேத்திகளுக்கும் நாளை இந்த நிலையே என்று தோன்றுகிறது. தன் கல்யாணத்தில் பார்த்த உறவினரை 35 ஆண்டுகள் கழித்து இவ்வாண்டு தாயகம் வந்தபோது பார்த்ததாக திரு அரிசோனன் கூறி மகிழ்ந்தார். திரு கண்னனுக்கு அவர் மருமான் டி.வி திரு ஸ்ரீதர் அவர்களைப்பற்றி எழுதும்போது பொங்குகிற மகிழ்ச்சியைக் காண்கிறேன். தாய்மாமன் உறவு அற்புதம் தான்.

தமிழகத்தில் காதலுக்காக மகனை ஒதுக்கிய தாத்தாவின் பேத்தி இன்று ஜெர்மனியின் மருமகள் ஆகியுள்ளது உறவுகள் உலகம் முழுவதும் வியாவிப்பதைக் காட்டுகிரது. மகிழ்ச்சிக்குரியது. எங்கள் பகுதிகளில் கூட காதல்மணத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.

தாய் மாமா உறவு குறித்து
1.கேரளத்தில் அக்காலத்தில் வித்தையைச் சகோதரி மகனுக்குத் தான் கற்றுத்தருவார்களாம்.
2.சகுனி முன்விரோதம் காரணமாகத் துரியோதனன் அழிவுக்குக் காரணமானான் என்பார்கள். ஆனால் அக்கதை மகாபாரதத்திலோ,வில்லியிலோ இல்லை என்று படித்தேன். இயல்பாகத் தன் சகோதரி மகனின் நல்வாழ்வுக்கு எது சரியென்று தன் மனதில் பட்டதோ அதனைச் சகுனி செய்துள்ளார். தாய்மாமன் பாசம் அறிவை மயக்கவல்லது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-07-27 0:29 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
வாசிக்கும் போதே இந்த உறவின் நெருக்கம் மனதை தொடுகின்றது. எனது தாயாரின் 2 சகோதரர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் வேறொரு சாதியைச் சார்ந்த பெண்ணை மணந்ததால் என் தாயாரின் தாத்தா அவரை  குடும்பத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. மிக மிக நல்லவர். அன்புள்லம் கொண்டவர். சாதி எந்த அளவிற்கு மனித உறவுகளைப் பாதிக்கின்றது என்பதற்கு நான் என் குடும்பத்திலேயே நேரடியாக உணர்ந்த  அனுபவம் இது.

 ஆனால் என் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தாயார் வழி மீண்டும் எங்களுக்கு தொடர்பு வந்தது. ஆனாலும் நாங்கள் மலேசியா, அவர் தமிழகம் என்பதால் உறவைத் தொடர முடியவில்லை. 4 வயதில் தமிழக கிராமத்தில் என்னைப் பார்த்தவர். பிறகு செம்மொழி மானாட்டின் போது நான் தமிழகம் வருவதாக கேள்விப்பட்டு கோவைக்கு வந்து நான் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு வந்து எனக்கு அறிமுகம் செய்து கொண்டார். அவரும் அவரோடு வந்திருந்த  மற்றொரு உறவினரும் என்னுடன் 2 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த மகிழ்ச்சி... சொல்ல முடியாதது. அங்கிருந்த நமது த.ம.அ நண்பர்கள் .. கண்ணன் ஆகியோரிடம் என்னை நன்கு பார்த்துக் கொள்ளச் சொல்லி கண்ணீர் விட்டார்.. மனதில் அக்காட்சி இன்னமும் நினைவில். எப்படி விவரிப்பது இந்த அன்பை..  திரு.சொ.வி அவர்களின் பதிவு இந்த நினைவுகளை கொண்டு வந்து விட்டது.

தேமொழி

unread,
Jul 27, 2015, 3:06:38 AM7/27/15
to மின்தமிழ், karu...@gmail.com, karu...@gmail.com

On Saturday, July 25, 2015 at 2:45:01 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

தாய்மாமன் உறவு குறித்த தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்த
இழையில் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சொ வி ஐயா, எனது ஓவிய ஆர்வத்தை வளர்க்க உதவியவர்களில் ஒருவர் எனது மாமா (சின்ன மாமா, உலகநாதன், அவர் மறைந்துவிட்டார்)

ஒரு கட்டுரையில் நான் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அது கீழே...

[...]

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது எனக்கு வண்ண ஓவியம் தீட்ட ஆசை வந்தது.  வண்ணங்களும் தூரிகைகளும் வாங்கித் தரச் சொல்லி அம்மாவை நச்சரித்தேன். அம்மா மிகவும் சிறு வயது என நினைத்திருக்கக் கூடும், வாங்கித் தரவில்லை.  ஊரிலிருந்து மாமா வந்தார். கடைத்தெருவுக்கு அழைத்துப் போய் ஏதாவது வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்கு திரும்பிச் செல்வது அவர் வழக்கம்.  ஆனால் அவர் ஏதாவது வேண்டுமா என்று கேட்டால், நாங்கள் அதை வாங்கிக் கொடுங்கள், இதை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்கக் கூடாது என்பது அம்மாவின் கண்டிப்பானக் கட்டளை.  ஆனாலும் அதை மீறி, மாமாவிடம் வண்ணங்கள் வேண்டும், தூரிகை வேண்டும் என்று கேட்டகவும் அவர் எதிரிலேயே அம்மாவிடம் திட்டு வாங்கினேன்.  மாமாவும் தனது தங்கையை சமாதானப் படுத்திவிட்டு நான் கேட்டவைகளை வாங்கிக் கொடுத்தார்.  இதனால் அவரும் என் கலை ஆர்வத்திற்கு தன்னால் இயன்ற பங்கைச் செய்திருக்கிறார். 

[...]

..... தேமொழி 

தேமொழி

unread,
Jul 27, 2015, 3:34:17 AM7/27/15
to மின்தமிழ், jsthe...@gmail.com, jsthe...@gmail.com

On Saturday, July 25, 2015 at 2:45:01 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

தாய்மாமன் உறவு குறித்த தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்த
இழையில் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சொ வி ஐயா இந்தக் கதையை நீங்கள் படித்திருப்பீர்கள்... உங்களுக்கு நினைவிருக்கும்...

இதில் வருவது எனது பெரிய மாமாவும், எனது தங்கையும்தான்...http://www.vallamai.com/?p=31902

எங்கள் பள்ளி நாட்களில் நடந்த நிகழ்ச்சி அது.    

இந்த மாமா மிக மிக மிக புத்திசாலி.... கணக்கில் பிய்த்து  உதறுவார், என்றும் முதல் மதிப்பெண் மட்டுமே வாங்குவார்.   பொறியியல் படிக்க மிகவும் ஆசை பட்டார்.  ... கல்லூரி சென்றிருந்தால் PUC  ஃ பர்ஸ்ட் பாட்சாக (1956-57)  இருக்க வேண்டியவர். எனவே 1956 இல் SSLC முடித்தவர்.

எனது தாத்தா உடல்நிலை மோசமாகிறது என்று, மூத்த மகனான இவரை வியாபாரத்தை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டார்களாம், கொஞ்ச நாட்களில் திருமணமும்  செய்து வைத்தார் ...போகும் முன் பேரக் குழந்தைகளைப் பார்க்கும் ஆசை அவருக்கு. [  இளைய மகனை கல்லூரிக்கு அனுப்ப சொல்லியிருக்கிறார். சின்ன மாமா ஆங்கிலத்தில் சுட்டி, பள்ளியில் ஆங்கிலத்தில் முதல் பரிசு அவருக்கே.  ]

பெரிய மாமா அழுது ஆர்ப்பாட்டம் செய்து, உண்ணாவிரதம்  உள்ளிருப்பு போராட்டம் எல்லாம் செய்தாராம்.  எங்கள் தாத்தாவிற்கு மிகவும் செல்லப் பெண் எனது அம்மா. அவரும் பெரிய மாமாவும் மிகவும் ஒட்டுதல் எனவே எனது அம்மா இருவருக்கும் இடையில் தூதுவராக வேலை பார்த்தும் எந்த சமாதான உடன் படிக்கையும் கையெழுத்தாகவில்லை.  அவர் கல்விக்காக மிகவும் ஏங்கியவர், கல்வியைத் தொடரமுடியாத ஒரு அறிவாளி.

திருமணம் முடிந்து என் மாமா மனைவியுடன் சென்று முதலில் பார்த்த படம் சிவாஜி நடித்த 'உத்தம புத்திரன்' (1958)  தையில் திருமணம் நடந்திருக்க வேண்டும். உத்தம புதிரனாகவே நடந்து கொண்டதை சுட்டிக் காட்ட எண்ணியிருப்பாரோ? 

..... தேமொழி 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 27, 2015, 3:46:45 AM7/27/15
to mintamil, தேமொழி
வண்ணத்தூரிகை ஓவியங்கள் பார்த்தேன். அருமை. சிறந்த மேற்கோள் வரிகள். இன்றைக்கு கைவீசு அம்மா பதிவில் நல்ல சிந்தனை விதைத்துள்ளீர்கள்.
மூக்காலே அரைக்கால் கதையும் முன்பு படித்தது நினைவிற்கு வந்தது.

பன்முகத்தன்மைக்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள்.

மாமாவிடம் கேட்டுப்பெறுவது தனி உரிமை. மிக மகிழ்ச்சி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

K R A Narasiah

unread,
Jul 27, 2015, 8:01:16 AM7/27/15
to mintamil
எனது தாய் மாமன் சிட்டி சுந்தரராஜன் எனது தாயாரின் இளய சகோதரர். அவர் மூலமாக நான் ந. பிச்சமூர்த்தி, வ, ரா., கு. ப. ராஜகோபாலன, வி. ரா. ராஜகோபாலன், ஸ்டாலின் ஸ்ரீனிவாசன், சி சு செல்லப்பா, கலாசாகரம் ராஜகோபால், பி. எஸ். ராமைய்யா, சி எஸ். ஸ்ரீனிவாசன், மதுரை மணீ அய்யர், கிருத்திகா, திருலோக சீதாராம், தி ஜானகிராமன், முதலியோரைச் சந்தித்துள்ளேன். 
நரசய்யா
On Mon, Jul 27, 2015 at 12:29 AM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ksuba...@gmail.com) Add cleanup rule | More info

வாசிக்கும் போதே இந்த உறவின் நெருக்கம் மனதை தொடுகின்றது. எனது தாயாரின் 2 சகோதரர்களில் ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் வேறொரு சாதியைச் சார்ந்த பெண்ணை மணந்ததால் என் தாயாரின் தாத்தா அவரை  குடும்பத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. மிக மிக நல்லவர். அன்புள்லம் கொண்டவர். சாதி எந்த அளவிற்கு மனித உறவுகளைப் பாதிக்கின்றது என்பதற்கு நான் என் குடும்பத்திலேயே நேரடியாக உணர்ந்த  அனுபவம் இது.

ஆனால் என் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தாயார் வழி மீண்டும் எங்களுக்கு தொடர்பு வந்தது. ஆனாலும் நாங்கள் மலேசியா, அவர் தமிழகம் என்பதால் உறவைத் தொடர முடியவில்லை. 4 வயதில் தமிழக கிராமத்தில் என்னைப் பார்த்தவர். பிறகு செம்மொழி மானாட்டின் போது நான் தமிழகம் வருவதாக கேள்விப்பட்டு கோவைக்கு வந்து நான் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு வந்து எனக்கு அறிமுகம் செய்து கொண்டார். அவரும் அவரோடு வந்திருந்த  மற்றொரு உறவினரும் என்னுடன் 2 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த மகிழ்ச்சி... சொல்ல முடியாதது. அங்கிருந்த நமது த.ம.அ நண்பர்கள் .. கண்ணன் ஆகியோரிடம் என்னை நன்கு பார்த்துக் கொள்ளச் சொல்லி கண்ணீர் விட்டார்.. மனதில் அக்காட்சி இன்னமும் நினைவில். எப்படி விவரிப்பது இந்த அன்பை..  திரு.சொ.வி அவர்களின் பதிவு இண்டஹ் நினைவுகளை கொண்டு வந்து விட்டது.

சுபா

Venkatachalam Dotthathri

unread,
Jul 27, 2015, 12:47:34 PM7/27/15
to mintamil
​ஓம் அன்புடையீர்
பாடல்கள் நினைவிருந்த அளவு படைத்தவர்கள்​ பற்றிய பிசகிய ஞாபகம்.
(கலைஞரும் கண்ணதாசனும்)

Tthamizth Tthenee

unread,
Jul 27, 2015, 12:57:46 PM7/27/15
to mint...@googlegroups.com
பொதுவாகவே  நான் சிறு வயதிலிருந்தே  என் சின்ன மாமாவைத்தான் எல்லாவற்றுக்கும்  யோசனை கேட்பேன், அன்பாக  அதே நேரத்தில்  நல்ல யோசனைகளைக் கூறிவிட்டு    நீ கெட்டிக்காரண்டா  சரியாத்தான்  செய்யறே   என்று பாராட்டிவிடுவார். அதனால்   அவர் கூறும் யோசனைகளை நான் அப்படியே கடைப்பிடிப்பேன்,

மிகுந்த குறும்புக்காரத்தனமும்   நகைச்சுவை உணர்வும் உள்ளவர், 

ரத்த  தொடர்பான  உறவுகளில்  மாமனுக்கு மிஞ்சி யாருமில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

செல்வன்

unread,
Jul 27, 2015, 5:16:15 PM7/27/15
to mintamil

என் அறையில் தங்கியிருந்த ஆந்திரா நண்பன் தன் குடும்பத்தை பற்றி பேசுகையில் சில உறவினர்களை திட்டியும், சிலரை பாராட்டியும் பேசினான்.

"நீ திட்டும் உறவினர்கள் எல்லாரும் உன் தந்தை வழி உறவினர்கள். நீ பாராட்டும் உறவினர்கள் எல்லாரும் உன் தாய்வழி உறவினர்கள். காரணம் பிள்ளைகள் தன் தாயின் கோணத்திலேயே உறவுகளை பார்க்க பழகிவிடுகிறார்கள்" என்றேன்

யோசித்துவிட்டு அறையில் இருந்த இன்னும் இருவரிடம் பேசினான். அதன்பின் "எல்லாருமே தாய்வழி உறவினர்களை தான் அதிகம் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்" எனக்கூறினான்.

தாய்மாமன் மேல் இருக்கும் எமோஷனல் அட்டாச்மெண்ட் ஏன் சிற்றப்பன், பெரியப்பன், அத்தை மாதிரியானவர்களிடம் இருப்பதில்லை?

பழைய ஜென்ரெஷனில் இதற்கு ஒரெ விதிவிலக்கு தாத்தா, பாட்டி..கூட்டு குடும்பம் இருந்ததால் பலருக்கும் தாய்வழிபாட்டி/தாத்தாவை விட தந்தை வழி பாட்டி/ தாத்தாவையே அதிகம் பிடிக்கும். இப்ப நியூக்ளியர் குடும்பங்களாக மாரிவிட்டதால் இதுவும் மாறிவருகிறது. பல அமெரிக்க குழந்தைகளுக்கு தாய்வழி பாட்டி/ தாத்தாவையே அதிகம் பிடிப்பதை காண்கிறேன்

தேமொழி

unread,
Jul 27, 2015, 6:52:50 PM7/27/15
to மின்தமிழ், hol...@gmail.com, hol...@gmail.com
பணம்  ...பணம்...பணம்....

தந்தை வழி ஆண்கள், ஆண் உறவுகள்  யாவரும்  பங்காளிகள்.

எல்லாம்... சொத்து படுத்தும் பாடு.

சொத்தில் பங்கு கேட்காதவரை எல்லோரும் நல்லவரே. 

அதுவே அவர்கள் தந்தை வழி அத்தையுடன் நல்லுறவுடன் இருப்பார்கள். அந்த அத்தையின் பிள்ளைகள் மாமா மாமா என்று உறவாடும். 

டாக்டர் பொன்முடி கொடுத்த படத்தில் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் தனது அப்பாவின் சகோதரிக்கு சீர் கொடுக்கிறார் அவரது மச்சான். 

அதுவே அப்பா வழி சித்தப்பா பெரியப்பா, அவர்கள் மகன்களான அண்ணன்மார் தம்பிமார் ...விரைவில் சந்திப்போம் நீதி மன்றத்தில் என்பது போன்ற நிலையில் இருப்பார்கள்.  

வரப்பு தகராறில் இருந்து ஆரம்பித்து எந்த வகையிலும் தகராறு செய்து கொள்வார்கள். 

சொத்து எதிர்பார்க்காத (யார் கொடுத்தார்களாம்) பெண்கள் தந்தையிடமும், தாயிடமும், சகோதரர்களுடனும், சகோதரிகளுடனும் அவர்களது உறவுடனும் பாசமாக இருப்பார்கள்.

என்ன... நல்ல நாள், பெரிய நாள் என்றால் தனக்கும்  உறவுகள் உண்டு .... தனக்கும் சொந்தத்தில் மதிப்பு இருக்கிறது.... தனக்கும் ஆதரவுக்கு ஆள் இருக்கிறது என்று கணவர் வீட்டில் பெருமையாக காண்பித்துக் கொள்ள அவர்களிடம் இருந்து சீர் போன்ற பரிசு வந்தால் மகிழ்வார்கள்.  

இல்லாவிட்டாலும் அதற்காக வீட்டிற்கு அவர்கள் வரும்பொழுது  முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். இக்காலத்திலும் நமக்கு பிறந்தநாள் போன்ற நாட்களில் யாராவது பரிசு கொடுத்தாலோ வாழ்தினாலோ மகிழ்ச்சிதானே (என்ன பொன் சரவணன் நான் சொல்வது சரியா?:)). 

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே பாடல் இப்பொழுது மனத்திரையில் ஓட்ட வேண்டும்.

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் 
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிகள் தானடா.  

.... தேமொழி

Megala Ramamourty

unread,
Jul 27, 2015, 7:15:25 PM7/27/15
to மின்தமிழ்
//காரணம் பிள்ளைகள் தன் தாயின் கோணத்திலேயே உறவுகளை பார்க்க பழகிவிடுகிறார்கள்"//

இந்த ஸ்டேட்மெண்டை நான் நூறு சதவீதம் ஆமோதிக்கிறேன் செல்வன். :-)

அம்மாவின் கோணத்திலேயே (பெரும்பாலும்) பிள்ளைகள் தம் உறவுகளைப் பார்க்கிறார்கள்; பழகுகிறார்கள் என்பது உண்மையே. ஏனெனில் பிள்ளைகள் (தந்தையைக் காட்டிலும்) தாயுடன் செலவிடும் நேரமே அதிகம். அதுமட்டுமல்லாமல் உறவுகளைப் பற்றி வாய் ஓயாமல் நிறைகுறைகளைப் பேசிக்கொண்டிருப்பவர்களும் தாய்மார்களே.  :-))

//தாய்மாமன் மேல் இருக்கும் எமோஷனல் அட்டாச்மெண்ட் ஏன் சிற்றப்பன், பெரியப்பன், அத்தை மாதிரியானவர்களிடம் இருப்பதில்லை?//

இதன் காரணத்தை நாம் திறந்த மனத்துடன் அணுகவேண்டும். தாய்மாமன் மீது பிள்ளைகளுக்கு எமோஷனல் அட்டாச்மெண்ட் ஏற்படுவதற்குக் காரணமும் தாய்தான்!

ஒரு பெண் தன் சகோதரன்மீது அன்பைப் பொழிவதற்குக்காரணம் அவளுடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளுமே. அவளுக்குத் திருமணம் செய்துவைப்பது தொடங்கி (தந்தையில்லாமல் போனால்) பிள்ளைப்பேறு, குழந்தைகளுக்கு மொட்டையடித்துக் காதுகுத்துதல் (உண்மையில் அது தாய்மாமனுக்கு அடிக்கப்படும் மொட்டையே) :-) என்று அனைத்துச் செலவுகளுக்கும் யார் பொறுப்பாளி? பாவப்பட்ட அந்தத் தாய்மாமன்தானே!  :-)

அதனால்தான் ஒரு பெண்ணின் கணவன் கடலுக்கு முத்துக்குளிக்கப் போனால் கூடவே அவள் சகோதரனையும் அனுப்பிவைத்திருக்கிறார்கள். ஏன்? என்று கேட்டால் அவன்தான் அப்பெண்ணின் கணவனைக் கவனமாகப் பார்த்துக்கொள்வான் என்று பதில் கிடைக்கும். பின்னே? முக்குளிக்கும் வேளையில் அப்பெண்ணின் கணவனுக்கு ஏதாவது ஆகிப்போனால் பின்பு காலமெல்லாம் அப்பெண்ணை அவன்தானே பார்த்துக்கொள்ள வேண்டும். (ஆமாம்! அன்று கணவனை இழந்த பெண்கள் அடைக்கலம் புகுந்தது சகோதரனிடம்தான்!  இன்றும் அது தொடர்கிறதா எனத் தெரியவில்லை.)

கூடப்பிறந்த ஒரே காரணத்துக்காக தன் சகோதரிகள் அனைவரின் நல்வாழ்விற்காகவும் கடைசிவரையில் உழைக்கவேண்டும் என்றொரு எழுதாச் சட்டம் உடன்பிறந்த ஆண்மக்களுக்கு (குறிப்பாகக் குடும்பத்தில் மூத்த ஆடவனுக்கு) இருப்பதால்தான் தாய்மார்கள் தங்கள் சகோதரன்மீது பாசத்தை மழையாகப் பொழிவதும், ’மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலைபேசுவார்’ என்று பாட்டெல்லாம் பாடித் தம் பிள்ளைகள் நெஞ்சில் மாமன் உறவை ஆழ விதைப்பதும்!  :-)

ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி என்பது பழமொழி. ”ஐந்து சகோதரிகளைப் பெற்ற  ஆடவனும் ஆண்டிதான்!” இது (நான் கண்டுபிடித்த) புதுமொழி!  :-))

Monitory benefits ஏதும் தாய்மாமனிடமிருந்து கிடைக்காவிட்டால் அவருக்கு ஏது இவ்வளவு மரியாதை?

’சீர் கொண்டுவந்தால்தான் சகோதரி’ என்ற ’தூக்குத்தூக்கி’ திரைப்பட வசனம் எனக்கு ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே!  :-)

இவ்வளவு செண்டிமெண்டான தாய்மாமன் உறவு இன்று முக்கியத்துவம் இழந்ததன் காரணம்...இன்றைய பெண்களில் பலர் பொருளாதாரத் தேவைகளுக்குச் சகோதரர்களைச் சார்ந்திராமல் தற்சார்போடு இருப்பதே! 

அன்புடன்,
மேகலா

செல்வன்

unread,
Jul 27, 2015, 7:21:27 PM7/27/15
to தேமொழி, மின்தமிழ்

2015-07-27 17:52 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பணம்  ...பணம்...பணம்....

தந்தை வழி ஆண்கள், ஆண் உறவுகள்  யாவரும்  பங்காளிகள்.

எல்லாம்... சொத்து படுத்தும் பாடு.

சொத்தில் பங்கு கேட்காதவரை எல்லோரும் நல்லவரே. 

சரி..பங்காளி, பகையாளி எல்லாம் கூட பிறந்தவர்களுக்கு தான் பொருந்தும். தாத்தா, பாட்டி விஷயத்திலும் அம்மா வழி தாத்தா/ பாட்டி மேல் பிள்ளைகளுக்கு பாசம் அதிகமாக இருக்க காரணம் என்ன?

--

செல்வன்

unread,
Jul 27, 2015, 7:27:09 PM7/27/15
to mintamil

2015-07-27 18:15 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
ஏனெனில் பிள்ளைகள் (தந்தையைக் காட்டிலும்) தாயுடன் செலவிடும் நேரமே அதிகம். அதுமட்டுமல்லாமல் உறவுகளைப் பற்றி வாய் ஓயாமல் நிறைகுறைகளைப் பேசிக்கொண்டிருப்பவர்களும் தாய்மார்களே.  :-))

ஆமாம்...தன் அண்ணாவின் நிறையையும், தன் கணவன் வீட்டாரின் குறைகளையும் பேசுவார்கள் பெண்கள் :-) அதனால் தான் பிள்ளைகளுக்கு மாமா மேல் ஹீரோ இமேஜ் இருக்கும்.

என் அம்மாவுக்கு இறந்துபோன அண்ணா ஒருவர் இருந்தார். அம்மாவுக்கு 12 வயது, அவருக்கு 17 வயது. 17 வயதில் மில்லுக்கு வேலைக்கு போவாராம். முழங்கால் வரை பூட்ஸ் அணிந்து நடந்துவந்தால் தெருமுனையில் இருந்தே அண்ணா வருவதை அம்ம கண்டுபிடித்துவிடுவாராம். தாத்தா ஒருமுறை அம்மாவை பெல்ட்டால் அடிக்கடியில் அண்ணா மேலே விழுந்து அடியை எல்லாம் வாங்கிகொண்டாராம். ....இப்படி இறந்துபோன என் மாமா மேல் எனக்கு இன்னும் ஒரு ஹீரோ இமேஜ் இருக்கிறது. காரணம் அம்மா தான்.

ஆண்கள் குழந்தைகளுடன் அதிகநேரம் செலவு செய்யவேண்டும் என நான் கூற காரணம் இதுதான் :-)

--

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 28, 2015, 1:40:22 PM7/28/15
to mint...@googlegroups.com, தேமொழி, Megala Ramamourty, செல்வன்
On 7/28/15, செல்வன் <hol...@gmail.com> wrote:

சரி..பங்காளி, பகையாளி எல்லாம் கூட பிறந்தவர்களுக்கு தான் பொருந்தும்.
தாத்தா, பாட்டி விஷயத்திலும் அம்மா வழி தாத்தா/ பாட்டி மேல்
பிள்ளைகளுக்கு பாசம் அதிகமாக இருக்க காரணம் என்ன?//

அருமையாக உளவியல் தொட்டு கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள் த்
செல்வன்,திருமிகு மேகலா, திருமிகு தேமொழி.

அம்மா வழி தாத்தா/பாட்டி உறவு நெருக்கத்திற்குக் காரணமும் தாய் தான்.

மாமியார் மருமகள் உறவு நெருடலானது. மகள் தாய் உறவு நெருக்கமானது.
தாய் தன் அன்னை/தந்தை மேல் காட்டும் அன்பு பிள்ளைக்கும் தொற்றிக்கொள்கிறது.
எங்கள் பக்கத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். தாய் வழி தாத்தா/பாட்டி பீ
க்கு சொந்தமாம். தந்தை வழி தாத்தா/பாட்டி பிள்ளைக்குச் சொந்தமாம். ஆயா
வீட்டில் பிள்ளை சிறுபிராயத்தில் வளர்ந்தாலும் அது சென்று சேரும் இடம்
தந்தை வீடே! (தற்காலத்தில் ஓரிரு பிள்ளைகள் இருப்பதால் ஆயா வீட்டில்
யாரும் வளரவிடுவதிலை.)

Suba.T.

unread,
Jul 28, 2015, 5:49:05 PM7/28/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-07-28 0:52 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பணம்  ...பணம்...பணம்....

தந்தை வழி ஆண்கள், ஆண் உறவுகள்  யாவரும்  பங்காளிகள்.

எல்லாம்... சொத்து படுத்தும் பாடு.

சொத்தில் பங்கு கேட்காதவரை எல்லோரும் நல்லவரே. 

அதுவே அவர்கள் தந்தை வழி அத்தையுடன் நல்லுறவுடன் இருப்பார்கள். அந்த அத்தையின் பிள்ளைகள் மாமா மாமா என்று உறவாடும். 

​இந்த வகை பிரச்சனையை நெருங்கிய உறவினர் வகையிலேயே நான் அறிந்திருக்கின்றேன். பொதுமைப்படுத்தவிலை. ஆயினும் உடன் நினைத்துப் பார்த்தால் .. அதிலும் என் சுற்றம், நெருங்கிய நட்பு வட்டம் எனும் போது தந்தை வழி சொந்தங்கள் ஏதாவது ஒரு வகையில் பணப்பிரச்சனையை அடிப்படையாக வைத்து விவாதங்களில் ஈடுபட்டு குடும்பத்தில் பிரச்சனை உண்டாக்குவது என்பது நிகழ்கின்றது.
​தாய் வழிச் சொந்தங்களுக்கிடையே நல்ல நட்பு தொடர்ந்து இருப்பதையும் காண்கின்றேன்.

சுபா

டாக்டர் பொன்முடி கொடுத்த படத்தில் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் தனது அப்பாவின் சகோதரிக்கு சீர் கொடுக்கிறார் அவரது மச்சான். 

அதுவே அப்பா வழி சித்தப்பா பெரியப்பா, அவர்கள் மகன்களான அண்ணன்மார் தம்பிமார் ...விரைவில் சந்திப்போம் நீதி மன்றத்தில் என்பது போன்ற நிலையில் இருப்பார்கள்.  

வரப்பு தகராறில் இருந்து ஆரம்பித்து எந்த வகையிலும் தகராறு செய்து கொள்வார்கள். 

சொத்து எதிர்பார்க்காத (யார் கொடுத்தார்களாம்) பெண்கள் தந்தையிடமும், தாயிடமும், சகோதரர்களுடனும், சகோதரிகளுடனும் அவர்களது உறவுடனும் பாசமாக இருப்பார்கள்.

என்ன... நல்ல நாள், பெரிய நாள் என்றால் தனக்கும்  உறவுகள் உண்டு .... தனக்கும் சொந்தத்தில் மதிப்பு இருக்கிறது.... தனக்கும் ஆதரவுக்கு ஆள் இருக்கிறது என்று கணவர் வீட்டில் பெருமையாக காண்பித்துக் கொள்ள அவர்களிடம் இருந்து சீர் போன்ற பரிசு வந்தால் மகிழ்வார்கள்.  

இல்லாவிட்டாலும் அதற்காக வீட்டிற்கு அவர்கள் வரும்பொழுது  முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். இக்காலத்திலும் நமக்கு பிறந்தநாள் போன்ற நாட்களில் யாராவது பரிசு கொடுத்தாலோ வாழ்தினாலோ மகிழ்ச்சிதானே (என்ன பொன் சரவணன் நான் சொல்வது சரியா?:)). 

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே பாடல் இப்பொழுது மனத்திரையில் ஓட்ட வேண்டும்.

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் 
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிகள் தானடா.  

.... தேமொழி

On Monday, July 27, 2015 at 2:16:15 PM UTC-7, செல்வன் wrote:

என் அறையில் தங்கியிருந்த ஆந்திரா நண்பன் தன் குடும்பத்தை பற்றி பேசுகையில் சில உறவினர்களை திட்டியும், சிலரை பாராட்டியும் பேசினான்.

"நீ திட்டும் உறவினர்கள் எல்லாரும் உன் தந்தை வழி உறவினர்கள். நீ பாராட்டும் உறவினர்கள் எல்லாரும் உன் தாய்வழி உறவினர்கள். காரணம் பிள்ளைகள் தன் தாயின் கோணத்திலேயே உறவுகளை பார்க்க பழகிவிடுகிறார்கள்" என்றேன்

யோசித்துவிட்டு அறையில் இருந்த இன்னும் இருவரிடம் பேசினான். அதன்பின் "எல்லாருமே தாய்வழி உறவினர்களை தான் அதிகம் பிடித்திருப்பதாக சொல்கிறார்கள்" எனக்கூறினான்.

தாய்மாமன் மேல் இருக்கும் எமோஷனல் அட்டாச்மெண்ட் ஏன் சிற்றப்பன், பெரியப்பன், அத்தை மாதிரியானவர்களிடம் இருப்பதில்லை?

பழைய ஜென்ரெஷனில் இதற்கு ஒரெ விதிவிலக்கு தாத்தா, பாட்டி..கூட்டு குடும்பம் இருந்ததால் பலருக்கும் தாய்வழிபாட்டி/தாத்தாவை விட தந்தை வழி பாட்டி/ தாத்தாவையே அதிகம் பிடிக்கும். இப்ப நியூக்ளியர் குடும்பங்களாக மாரிவிட்டதால் இதுவும் மாறிவருகிறது. பல அமெரிக்க குழந்தைகளுக்கு தாய்வழி பாட்டி/ தாத்தாவையே அதிகம் பிடிப்பதை காண்கிறேன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jul 28, 2015, 6:26:35 PM7/28/15
to மின்தமிழ், ksuba...@gmail.com, ksuba...@gmail.com

நானும் அனுபவத்தில்தான் சொன்னேன் சுபா.

என் அம்மா, பெரியம்மா, சித்தி இவர்களுக்குள் எந்தத் தகராறும் இருக்காது (இப்பொழுது மூவருமே இல்லை).  இவர்கள் குடும்ப உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் அண்ணன் தங்கை அக்கா தம்பி என்று மிகவும் பாசமாக இருப்பது வழக்கம்.

எனது பெரியண்ணன், சின்ன அண்ணன் (பெரியம்மாவின் மகன்கள்) பற்றி நினைத்துப் பார்க்கவும் மகிழ்ச்சி தரும் தருணங்கள் எத்தனையோ உண்டு. 

இந்தச் சகோதரிகளுக்கும் சகோதர்களுக்கும் உறவும் நன்றாகவே இருந்தது.

ஆனால் இரண்டு மாமாகளுக்குள்ளும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளும் நல்லுறவு கிடையாது.  யோசித்துப் பார்த்தால் அதற்க்குக் காரணமும் இருக்காது, சொத்துப் பிரச்சனை தவிர.

பெண்கள் உறவுகளுக்குள் மனவருத்தம் வந்தால் நீ செய்தது சரியா என மனத் தாங்கலைக் கொட்டி விட்டு அடுத்த உறவினர் நிகழ்ச்சியில் ஒன்றுமே நடக்காதது போல பழகிக் கொண்டிருப்பார்கள்.  

ஆனால் ஆண்கள்...!!!!

தேவர் மகன் படம் பார்த்தீர்கள்  என்றால் அது ஒரு குடும்பத்து சகோதர்களுக்குள் நடக்கும் சச்சரவில் ஊரே இரண்டு பட்டு வெட்டுப்பழி குத்துப்பழி நடந்து  கொண்டிருக்கும்.

இந்தப் பழக்கத்தை பெண்களிடம் நான் குழுமத்திலும் பார்த்திருக்கிறேன்.  கருத்து வேறுபாடு பாட்டிற்கு அது ஒரு பக்கம் இருக்கும்.  ஒவ்வொருவருக்கும் உள்ள  இயல்பு அது என்று விட்டுவிட்டு பிறகு  கூடி கூடி வேலை செய்வோம், ஒருவரை ஒருவர் வாரியும் விட்டுக் கொள்வோம்.

ஆனால் மறுசாரார்?????   

 எப்பொழுதும் மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்க, அவர்கள்  ஆணோ பெண்ணோ.... பிறவி எதிரி போலவே பார்ப்பார்கள்.  பாவிப்பார்கள்.

மற்றொன்று நான் கவனித்தது, பெண்கள் ஈடுபடாதது ஜாதி சண்டை, மத சண்டை.

உலகின் துன்பத்திற்கு யார் காரணம் என்று இதிலிருந்து தெரிகிறது. 

எல்லாம் கவனிப்பதை வைத்துச் சொல்வதுதான். 

இப்பொழுது பெண்களுக்கும் சொத்து என்றவுடன் அவர்களை வெட்டிவிட எவ்வளவு முயற்சி செய்யலாமோ அந்த அளவு முயற்சியும் உண்டு, சொத்து தொடர்பான தகராறுகளும் உண்டு. 

Seshadri Sridharan

unread,
Jul 29, 2015, 12:51:50 AM7/29/15
to mintamil
On 7/28/15, செல்வன் <hol...@gmail.com> wrote: 
//சரி..பங்காளி, பகையாளி எல்லாம் கூட பிறந்தவர்களுக்கு தான் பொருந்தும். தாத்தா, பாட்டி விஷயத்திலும் அம்மா வழி தாத்தா/ பாட்டி மேல் பிள்ளைகளுக்கு பாசம் அதிகமாக இருக்க காரணம் என்ன?//

ஆயா (ஆய்[க்கு] +ஆய்) வீட்டில் பிறக்கின்றோம் என்பதோடு. நம் தாயின் அடுத்தடுத்த மகப்பேற்றின் போது நம்மையும் அல்லவா சேர்த்தே ஆயா வீட்டிற்கு சில மாதங்கள் அனுப்பி வைக்கிறார்கள். நாம் அங்கேயே உண்டு உறங்கி சில மாதங்களை பிள்ளைப்பருவத்தில் கழிப்பதால்  பாட்டி வீட்டை விட ஆயா வீட்டை அதிகம் நேசிக்கிறோம். 

நம்பன் 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 30, 2015, 2:17:11 AM7/30/15
to மின்தமிழ்
//////
2015-07-29 3:56 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

இப்பொழுது பெண்களுக்கும் சொத்து என்றவுடன் அவர்களை வெட்டிவிட எவ்வளவு முயற்சி செய்யலாமோ அந்த அளவு முயற்சியும் உண்டு, சொத்து தொடர்பான தகராறுகளும் உண்டு. ///////

லட்சத்தில் ஒரு வார்த்தை!. நல்ல நோக்கத்திற்காக செய்யப்பட்ட விஷயம் இது. ஆனால் நடைமுறை?!.. பங்காளிகளாகவே சகோதரிகளும் பார்க்கப்படுவதன் விளைவு மிகவும் சங்கடத்தை அளிப்பதாகவே உள்ளது!.. தாய்மாமன் உறவின் மகத்துவம் குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்!.​

பார்வதி இராமச்சந்திரன்.

​​
2015-07-29 3:56 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
​               
Reply all
Reply to author
Forward
0 new messages