ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 8

25 views
Skip to first unread message

O தோழன்:-}

unread,
Dec 22, 2008, 3:43:28 PM12/22/08
to minT...@googlegroups.com
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெறுந்துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே! அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்?

இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம் பொருளே! எம்பெருமானே! கருணை வள்ளலே!

நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைகாட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!

(எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பதிகத்தில்)

--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"

மார்கழி மஹோத்ஸவம்
http://markazhimahotsavam.blogspot.com/
http://velmurugantemple.org.uk/

வேந்தன் அரசு

unread,
Dec 22, 2008, 4:46:57 PM12/22/08
to minT...@googlegroups.com


2008/12/22 O தோழன்:-} <guru...@gmail.com>

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
 
அயன்,அரி,அரன் மூவர் எனில் இவர் யார். மும்மூர்த்திகளில் வேறானவரா?

பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெறுந்துறையுறை
 
திருப்பெருந்துறை
 
கோயிலுங் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

V, Dhivakar

unread,
Dec 22, 2008, 11:25:27 PM12/22/08
to minT...@googlegroups.com
gurukkal sir,

thiruvembaavai and thirupalli-yezhuchi mixing here, I think.

Dhivakar

2008/12/23 O தோழன்:-} <guru...@gmail.com>

Kumaran Malli

unread,
Dec 23, 2008, 10:49:25 AM12/23/08
to minT...@googlegroups.com

உங்கள் கேள்விக்கு இரு விளக்கங்கள் தரப்படலாம்.

1. இந்திரன், பிரம்மன், திருமால் என்ற மூவர்
2. பிரம்மன், திருமால், உருத்திரன் என்ற மூவர்
 
இரண்டு விளக்கங்களையும் சைவ சிந்தாந்த நூற்களில் கண்டிருக்கிறேன். உருத்திரன் சிவனின் அம்சம்; ஆனால் வேறு மூர்த்தி என்பது சிந்தாந்தம் சொல்வது.

2008/12/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

O தோழன்:-}

unread,
Dec 23, 2008, 12:29:04 PM12/23/08
to minT...@googlegroups.com
மன்னித்தருள்க

2008/12/23 V, Dhivakar <venkdh...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Dec 23, 2008, 1:03:24 PM12/23/08
to minT...@googlegroups.com


2008/12/23 Kumaran Malli <kumara...@gmail.com>

உங்கள் கேள்விக்கு இரு விளக்கங்கள் தரப்படலாம்.

1. இந்திரன், பிரம்மன், திருமால் என்ற மூவர்
2. பிரம்மன், திருமால், உருத்திரன் என்ற மூவர்

 
உருத்திரன் வேறு சிவன் வேறு என்றகிறதா?


 
இரண்டு விளக்கங்களையும் சைவ சிந்தாந்த நூற்களில் கண்டிருக்கிறேன். உருத்திரன் சிவனின் அம்சம்; ஆனால் வேறு மூர்த்தி என்பது சிந்தாந்தம் சொல்வது.

2008/12/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


2008/12/22 O தோழன்:-} <guru...@gmail.com>

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
 
அயன்,அரி,அரன் மூவர் எனில் இவர் யார். மும்மூர்த்திகளில் வேறானவரா?

V, Dhivakar

unread,
Dec 23, 2008, 11:33:57 PM12/23/08
to minT...@googlegroups.com
அடடே! பெரிய பெரிய வார்த்தைகளுக்குப் பொறுத்தமானவன் இல்லை.
நான் திருவெம்பாவை பயிலும்போது 'போற்றி என் வாழ்முதல்' பாடலை 21 ஆவது பாடலாகவே பார்த்துப் பழகிவிட்டதால் கேட்டேன்.

திவாகர்
Reply all
Reply to author
Forward
0 new messages