நேர்ச்சை என்றால் என்ன?

416 views
Skip to first unread message

sivakumj sivakumj

unread,
Sep 6, 2009, 4:07:04 AM9/6/09
to minT...@googlegroups.com
வணக்கம் தோழர்களே,

நேர்ச்சை என்றால் என்ன?
இது தமிழ்ச் சொல்லா?

இது ஈழத்தவர் கூறும் நேர்த்தி என்ற சொல்லை ஒத்ததாக இருக்குமா?

தயவு செய்து விளக்கம் தரவும்.

என்றும் அன்புடன்
சிவகுமார்

Tirumurti Vasudevan

unread,
Sep 6, 2009, 4:14:26 AM9/6/09
to mint...@googlegroups.com


2009/9/6 sivakumj sivakumj <siva...@yahoo.de>


நேர்ச்சை என்றால் என்ன?
இது தமிழ்ச் சொல்லா?

பழகு தமிழ்ன்னு நினைக்கிறேன்.

இது ஈழத்தவர் கூறும் நேர்த்தி என்ற சொல்லை ஒத்ததாக இருக்குமா?

 அதே அதே
கடவுளே இதை காப்பத்திக்கொடு உன் கோவிலுக்கு வந்து ஆராதனை பண்ணுகிறேண் மாதிரி வேண்டிக்கொள்ளுதல்.
திவா


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

sivakumj sivakumj

unread,
Sep 6, 2009, 4:17:20 AM9/6/09
to mint...@googlegroups.com
நன்றி திவா !! !
நானும் இதைத் தான் நினைத்தேன்.


என்றும் அன்புடன் சிவகுமார்


Von: Tirumurti Vasudevan <agni...@gmail.com>
An: mint...@googlegroups.com
Gesendet: Sonntag, den 6. September 2009, 10:14:26 Uhr
Betreff: [MinTamil] Re: நேர்ச்சை என்றால் என்ன?

devoo

unread,
Sep 6, 2009, 4:18:02 AM9/6/09
to மின்தமிழ்
Sep 6, 1:07 pm, sivakumj sivakumj
நேர்ச்சை என்றால் என்ன?இது தமிழ்ச் சொல்லா?//

மன விருப்பம் நிறைவேற வழிபடு கடவுளர்க்கு நேர்ந்து கொள்வது
ஒரு பழக்கம்,மரபு.

”நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து* பராவி வைத்தேன்..”

நாச்சியார் சோலைமலை அழகனுக்கு நேர்ந்துகொண்டது
ஒரு சான்று. நேர்த்திக் கடன் என்றும் சொல்வர்.

தேவ்

sivakumj sivakumj

unread,
Sep 6, 2009, 4:19:55 AM9/6/09
to mint...@googlegroups.com
இது பழகு தமிழ் எனில் இதற்குரிய தமிழ் சொல் கூறுங்களேன்.



Von: Tirumurti Vasudevan <agni...@gmail.com>
An: mint...@googlegroups.com
Gesendet: Sonntag, den 6. September 2009, 10:14:26 Uhr
Betreff: [MinTamil] Re: நேர்ச்சை என்றால் என்ன?

Kamala Devi

unread,
Sep 6, 2009, 4:23:36 AM9/6/09
to mint...@googlegroups.com
இப்பொழுதுதான் கணிணிக்கு வந்தேன். முதல் கடிதமே/----
நேர்ச்சை என்றால் ஈஷ்வரனுக்கு நேர்ந்து[வேண்டிக்] கொள்வது,.
பிறகு அந்த நேர்த்திக் கடனைக்கழிக்க, கிராமத்திலுள்ள குலதெய்வம் க்‌ஷேத்திரத்துக்கு போய்
கடனை நிவர்த்தி செய்வோமில்லையா? அதுதான்.,
அதனால் இது மலையாள பதமோ என்று முத்திரை குத்திவிட வேண்டாம்.
வட்டார வழக்குத்தொடரில் நாஞ்சில் நாடன், பொன்னீலன் போன்றோரின் எழுத்தில் இப்பதம்
ரொம்ப அழகாக விளி இடுகையில், மொழிலயமாக ,கதையோட்டத்தில், இரண்டறக் கலந்திருக்கும்.
அடுத்த சான்று------தமிழ்க் கலவை---எழுதியவர் --Dr.ஸ்ரீனிவாசன்
நூல் வெளியீடு கண்ட ஆண்டு 1898ல், அந்நூலில் இப்படி எழுதுகிறார்.
” தமிழை எப்படியெல்லாம் அழகு படுத்தலாம் என்பதை இலக்கியவாதிகள்
கண்டறிந்த .வழியை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.ஒவ்வொரு வட்டார வழக்கும்
ஒவ்வொரு பொருளில் நம்மை கவர்வது  பெரிய விஷயமல்ல. தமிழில் எப்படி இவர்கள் இரண்டறக் கலந்து
நம்மை ஆட்கொள்கிறார்கள் என்பது தான் இக்கட்டுரையின் சாரம் , எனத் தொடர்கிறார்,”
கமலம்





From: sivakumj sivakumj <siva...@yahoo.de>
To: minT...@googlegroups.com
Sent: Sunday, 6 September 2009 4:07:04
Subject: [MinTamil] நேர்ச்சை என்றால் என்ன?


New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

Kamala Devi

unread,
Sep 6, 2009, 4:32:33 AM9/6/09
to mint...@googlegroups.com
தேவ் சார்,
சந்தோஷிக்கிறேன் என்று ஒற்றைச்சொல்லில் நிறுத்திவிட முடிய வில்லை.
நேர்ச்ச என்றால் மலையாளம் தான் என்று சொபவர்களிடம் பதில் தெரிந்தாலும் கூட சர்ச்சைக்கு அஞ்சி
தயங்கியிருக்கிறேன். சான்றுகளோடு கதைகளில் இன்றும் நிரூபிக்க, புதிய எழுத்தாளர்கள் கூட
இப்பதம் பிரயோகித்து எழுதுகிறார்கள்.
ஆயின் இது மலையாளம் மட்டுமல்ல. தமிழிலிருந்து கிளை பிரிந்த குஞ்சுக்குழந்தை மொழி
என்றும் கூறிடலாம்..இப்படி பல சொற்கள், தமிழில் உண்டு.
கமலம்.
New Email names for you!
Get the Email name you&#39;ve always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!
http://mail.promotions.yahoo.com/newdomains/sg/

chithan

unread,
Sep 6, 2009, 6:05:42 AM9/6/09
to மின்தமிழ்
வணக்கம்
ஆண்டவனுக்கு நேர்ந்து, கோயில் நேர்த்திக்கடன் ---இதிலிருந்து
பிறக்கிறது. நேர்ச்சைச் சோறு என்றால் கோயில் பிரசாதம் - பொங்கல் போன்று,
லட்டு போன்று. உதாரணமாக, அனுமாருக்கு வடைமாலை சாற்றுவதாக நேர்ந்து
கொண்டு, பிரார்த்தனை முடிந்ததும் நேர்ச்சை வடை வாங்கி- அல்லது முஸ்லிம்
பள்ளிவாசலில் ரம்ஜான் நோம்பிற்குப் பிறகு நேர்ச்சை சோறு என்று பிரியாணி
சோற்றைக் கூறுவார்கள். முடி எடுப்பதும் நேர்ச்சையே. மலையாளத்தில்,
நாஞ்சில் தமிழில் இப்பொழுதும் புழக்கத்தில் உண்டு. ஊண் உறக்கம் போன்ற
வார்த்தைகளைப் போல. சுவாரஸ்யமான வார்த்தைப் பிரயோகம் மட்டக்களப்பு
பகுதிக்கும் இந்த இந்திய பகுதிகளுக்கும் உண்டு,. உதாரணம், எழுவான்கரை -
கிழக்கு / படிஞாயிறு - மேற்கு ( மலையாளத்தில் படிஞாறு) வார்த்தைகளைப்
பிரித்து நீங்களே பொருள் கொள்ளலாம்.
இப்போதும் மட்டகளப்புப்[ பகுதியில் இவை புழக்கத்தில் உள்ளதாக அறிகிறேன்
சித்தன்


Geetha Sambasivam

unread,
Sep 6, 2009, 7:52:02 AM9/6/09
to mint...@googlegroups.com
வேண்டுதல் என்று சொல்லலாமோ?? நேர்த்தியும் இதே அர்த்தத்தில் தான் வருகிறது. நேர்ச்சை என்பது வட்டார வழக்குச் சொல் என நினைக்கிறேன்.
நேர்த்திக்கடன், பிரார்த்தனை, வேண்டுதல் இது தான் அர்த்தம் வரும்னு நினைக்கிறேன்.

2009/9/6 sivakumj sivakumj <siva...@yahoo.de>
Reply all
Reply to author
Forward
0 new messages