Re: [MinTamil] சங்ககாலத் தமிழக நாணயவியல் - தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை

241 views
Skip to first unread message

Nagarajan Vadivel

unread,
Aug 5, 2012, 11:47:06 PM8/5/12
to mint...@googlegroups.com
//3. ''நாகர்கள் நக்க சாரணர் என்று ஆடை இல்லாத மனித மாமிசம் உண்ணுபவர்கள்
என்று நீங்கள் மேற்கோள் காட்டும் ஆவணங்களிலேயே உள்ளது" என்று தமிழர்
அநாகரிகத்தவர் என்று பொருள் பொதியும் வார்த்தையை மட்டும் எடுத்துத்
தந்துவிட்டு நான் "Aborigines என்ற சொல்லுக்காகப் பயன்படுத்தியது
காட்டிமிராண்டி" என்ற சொல்லை பயன்படுத்தினேன் என்று பொய் கூறுபவர்களின்
முகத்திரையை கிழிக்கலாம்.//

மட்டுறுத்துநர்காள்
என்னையே பேசவிடாமல் சபையை விட்டுத் துரத்தியாகியிற்று
இப்ப என் முகத்திரையைக் கிழிக்க வேண்டுமென்கிறார் தென்காசியார்
அவர் எழுதுவதே மற்றவர்கள் திருத்துவார்கள் என்று நம்பி எழுதப்படும் விக்கிப்பிடியா
ஆராய்ச்சிச் சஞ்சிகைகளில் இதெல்லாம் சபை ஏறாது
நான் எழுதிய அனைத்தும் அறிஞர் பெருமக்களால் வெளியிட்டு ஆய்வுலகம்
ஏற்றுக்கொண்ட கருத்துக்கள். மானுடவியலார் காட்டுமிராண்டி என்றும்
பறையர்கள் என்றும் எழுதியிருப்பதைச் சொன்னால் கேட்டுக்கனும்.
உணர்ச்சிவசப்படக் கூடாது
நாகராசன்

2012/8/5 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:
> தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து
> நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த
> மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற
> பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில
> மன்னர்கள் போண்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும்
> பொருளாதாரத்தையும், மற்ற மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக்
> கொண்டு இந்தியப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம். தமிழகத்தில் கிடைத்த
> வேற்று நாட்டு மன்னர்களின் நாணயங்களையும் கடலோடிகளின் குறிப்புகளையும் கொண்டு
> பண்டைய இந்தியாவின் பண்டமாற்று முறைகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும்
> கணிக்க முடிகிறது.
>
> இதன் முக்கியத்துவம்
>
> 1. தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் பொ.மு. 5ஆம் நூற்றாண்டு முதல்
> பொ.மு. இரண்டாம் நூற்றாண்டின் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் நிறுவப்
> பயன்படுகிறது. முதலில் இவற்றைப் போன்ற முத்திரைக் காசுகள் வட இந்தியாவில்
> இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள்
> கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை
> வெளியிட்டுள்ளதால், இக்காசுகள் வட இந்தியா வழியே தமிழகத்துக்கு வந்தவை என்ற
> கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து வட இந்தியா வழி
> முத்திரைக்காசு என்ற கருதுகோள் மாறத்தொடங்கியது.[4] அதற்கு வழுச்சேர்க்குமாறு
> தமிழகத்தில் முத்திரைக் காசுகளை வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள்
> கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
>
> 2. பெருவழுதி நாணயம் என்பது சங்ககால பாண்டியர் வெளியிட்ட செப்பு நாணயமாகும்.
> சிலர் பேரரசர்களான மூவேந்தர்களும்குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள்
> நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் அவர்கள் மௌரிய பேரரசின் நாணயங்களையே
> பயன்படுத்தினர் என்றும் கூறி வந்தனர். இந்நாணயம் கிடைத்த பிறகு சங்க காலத்தில்
> பண்டமாற்று முறையே இருந்ததென்றும் நாணயங்கள் புழக்கத்தில் இல்லை என்றும் நிலவி
> வந்த கருத்து மாறியது. சங்ககால பாண்டியர்களின் பட்டப்பெயரான பெருவழுதி என்பது
> இந்நாணயங்களில் பொறிக்கப் பட்டிருப்பதையும் இந்நாணயங்கள் 2300 ஆண்டுகள் பழமை
> வாய்ந்தவை என்பதைக் கொண்டும் சங்ககாலம் பொ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே
> தொடங்கியிருந்ததை அறியலாம்.[5]
>
> 3. ''நாகர்கள் நக்க சாரணர் என்று ஆடை இல்லாத மனித மாமிசம் உண்ணுபவர்கள் என்று
> நீங்கள் மேற்கோள் காட்டும் ஆவணங்களிலேயே உள்ளது" என்று தமிழர் அநாகரிகத்தவர்
> என்று பொருள் பொதியும் வார்த்தையை மட்டும் எடுத்துத் தந்துவிட்டு நான்
> "Aborigines என்ற சொல்லுக்காகப் பயன்படுத்தியது காட்டிமிராண்டி" என்ற சொல்லை
> பயன்படுத்தினேன் என்று பொய் கூறுபவர்களின் முகத்திரையை கிழிக்கலாம்.
>
> எப்படி என்று கேட்பவர்கள் கி.மு. 300களிலேயே எழுத்துப் பொறிப்புடன் காசு
> வெளியிட்டிருப்பின் தமிழர் அதற்கு முன்னரே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று
> சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது தவிர்த்து தமிழகத்தில் முத்திரைக் காசுகளை
> வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள் கிடைத்ததை வைத்து தமிழர் அந்த
> வார்ப்புக் கூடுகளை செய்ய எவ்வளவு காலம் முயன்றிருப்பர் அக்கூட்டின்
> பயன்படுத்தப்பட்ட உலோக உருக்கு முறை தோன்றி அது தமிசகத்தில் முழு வழக்கில் வர
> எவ்வளவு நூற்றாண்டுகள் பிடித்திருக்கும் என்று என்னிப்பார்ர்க்க வேண்டும்.
> அப்படி ஆராய்வோமானால் குறைந்தது கி.மு.1500கலிலேயே தமிழர் உயர்ந்த நாகரிகத்தை
> கொண்டிருந்தனர் என அறியலாம். அநாகரிக காட்டு மிராண்டி சமுகத்துக்கு இது ஒத்து
> வராது. இதன் பிறகு தான் நாகர் பற்றி எல்லாம் அறிய இயலும்.
>
> நாகர்களில் நக்க சாரணர் என் உருவாக்கினர், தமிழ் மற்றும் பௌத்த இலக்கியங்களில்
> கூறப்படும் நாகர்கள் எத்தனை வகை என்று இலக்கிய ரீதியாக நான் நிரூபிக்கும்
> கட்டுரை இன்னும் ஓரிரண்டு மாதங்களில் வெளியாகும். அதை வைத்து நாகர்கள் அனைவரும்
> "நக்க சாரணர் என்று ஆடை இல்லாத மனித மாமிசம் உண்ணுபவர்கள்" என்று பொய்
> கூறுபவர்களின் முகத்திரையை கிழிப்பேன்.
>
> இன்னும் இது தவிர்த்து தமிழ் விக்கி கட்டுரையில் பின்வரும் தலைப்புக்கள்
> சங்ககாலத் தமிழக நாணயவியல் கட்டுரையில் (http://ta.wikipedia.org/s/lv7) உள்ளன.
> அதைப்பார்த்து முழுவதையும் தெரிந்து கொள்ளுங்கள். அவை,
>
> 2 நாணயத்தின் பகுதிகள்
> 3 பொருளாதார நிலை
> 4 சங்ககால தமிழக வரலாற்று நிறுவலில் நாணயவியல் பங்கு
>
> 4.1 முத்திரைக்காசு
> 4.2 பாண்டியர் நாணயங்கள்
>
> 4.2.1 பெருவழுதிநாணயம்
>
> 4.3 சங்ககால சோழர் நாணயங்கள்
> 4.4 சங்ககால சேரர் நாணயங்கள்
> 4.5 மலையமான் காசுகள்
> 4.6 வேற்று மாநிலத்தவர்
>
> 4.6.1 ஆந்திர சாதவாகனர்
>
> 4.7 அயல்நாட்டுத் தொடர்புகள்
>
> 4.7.1 கிரேக்கர்
> 4.7.2 உரோமானியர்
> 4.7.3 சீன நாணயங்கள்
> 4.7.4 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
>
> 5 மேற்கோள்கள்
> 6 மூலம்
>
>
> இது தவிர்த்து சங்ககாலத் தமிழக நாணயவியல் தொடர்பாக நான் எழுதிய அனைத்து
> கட்டுரைகளும் (http://ta.wikipedia.org/s/14so) அவை,
>
> சங்ககாலத் தமிழக நாணயவியல்
> செழியன் காசு
> சோழர்களின் சீனத் தொடர்பு
>
> த
>
> தமிழக முத்திரைக் காசு வார்ப்புக் கூடுகள்
> தமிழக முத்திரைக் காசுகள்
>
> த தொடர்ச்சி
>
> தமிழகத்தில் கிரேக்கக் காசுகள்
> தமிழகத்தில் சசானியக் காசுகள்
> தமிழகத்தில் சாதவாகனர் காசுகள்
> தமிழகத்தில் பினீசியக் காசுகள்
> தமிழகத்தில் ரோமானியக் காசுகள்
> தமிழர் காசு இயல் (நூல்)
>
> த தொடர்ச்சி
>
> தாய்லாந்தில் சோழக் காசுகள்
>
> ந
>
> நடன காசிநாதன்
>
> ப
>
> பெருவழுதி நாணயம்
>
> ம
>
> மலையமான் காசுகள்
>
>
>
> நிற்க
>
> இக்கட்டுரைகளில் ஏதும் தவறிருப்பின் நான் மாற்றிக்கொள்ளத் தயார். சங்ககாலத்
> தமிழக நாணயவியல் கட்டுரையை நான் எழுதியவுடன் aதை விரிவக்கியவர் பார்வதி என்ற
> ஆசிரியப் பெருந்தகை. இக்கட்டுரை மூலங்கள் அனைத்தும்
>
> ௧. சி.க. சிற்றம்பலம் என்பவர் எழுதிய பண்டைய தமிழகம்
> http://noolaham.net/project/45/4438/4438.pdf
> ௨. காசிநாதன் என்பவர் எழுதிய தமிழர் காசு இயல் (நூல்)
> ௩. கிருஷ்ண முர்த்தி என்ற நாணயவியல் அறிஞர் தினமலரில் எழுதிய கட்டுரைகள்
> போன்றவற்றில் இருந்து எடுத்தவை. அவர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழர் அனைவரும்
> அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2012, 12:14:02 AM8/6/12
to mint...@googlegroups.com
நாகர்களைப் பற்றி எழுதும்போது இந்த ஆவணமும் உங்களுக்குப் பயன்படலால்.
நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் முன்னோர்கள் நாகர்கள் என்று முதல்
கட்டுரையில் குறிப்ப் உள்ளதைக் காண்க

இது ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால் அந்த மடலைப் பொருட்படுத்த வேண்டாம்

seshadri sridharan

unread,
Aug 6, 2012, 12:33:01 AM8/6/12
to தென்காசி சுப்பிரமணியன், mint...@googlegroups.com
உங்கள் வரவு உண்மையில் மின்தமிழுக்கு ஒரு நல்வரவே. தமிழ் மரபு செல்வங்களை காப்பதற்கே இந்த தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. 

இந்த பெருவழுதி காசுகள், சேரர் காசுகள், மலையமான் காசுகள் உள்ளிட்ட காசுகளை சேமித்து உள்ள தினமலர் ஆசிரியர் திரு இரா. கிருஷ்ணமூர்த்தி மிக்க மலிவான விலைக்கு அவை குறித்த நூல்களை அச்சிட்டு வெளியிட்டு உள்ளார். சென்னையில் கடந்த சனவரி நிகழ்ந்த நூல் கண்காட்சியில் அவற்றை நான் 150 உரூபாய்க்கு வாங்கினேன் 25% கழிவைப் பெற்றுக்க கொண்டு.

தொல்காப்பியத்தில் காசு, பணம் என்ற சொல் ஆளப்படாததால் தொல்காப்பியம் காசு புழக்கத்திற்கு வந்த பொ. மு. 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று சொல்லுவார் பேரா. இரா. மதிவாணன். உலக வரலாற்றில் அச்சிட்ட காசுகள் பொ. மு. 6 ஆம் நூற்றாண்டளவிலேயே வந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆக நீங்கள் சொல்வது போல் காசுகளும் வரலாற்றை நாகரிகத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. இதில் தமிழ்கம் முன்னணியில் இருந்துள்ளது என்பது அண்மைக் கால நாணவியல் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

சேசாத்திரி

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2012, 11:55:28 AM8/6/12
to mint...@googlegroups.com
தென்காசியாரே
தனி இழை தொடங்கி அங்கே வாருங்கள் கச்சேரியை வச்சுக்கலாம்

வரலாற்று ஆய்வளனுக்கு மிகவும் இன்றியமையாதது paradigm என்ற ஆய்வுமுறை.
ஆய்வுக்கான ஆவணம் முன்னர் நடந்த ஆய்வுகளின் தொகுப்பு ஆகியவற்றை
ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்ட நெறீப்படி நடத்தப்பட்ட
ஆய்வுமுடிவுகளைமட்டுமே ஆய்வுலகம் ஏற்கும்

நான் எடுத்துக்கொண்ட தலைப்பு பழந்தமிழர் பற்றிய ஆய்வு. மொழியியல்,
மானுடவியல், தொல்லியல் மற்றும் வாழ்வியல் மரபு ஆகிய நான்கு தளங்கலில்
1920-ஆம் ஆண்டுக்குமுன் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதினேன்

எழுதிய ஒவ்வொரு செய்தியையும் மேற்கோளுடன் மறுதளிப்பதே ஆய்வாளர்களின்
அனுகுமுறையாகும். கி.மு 5-ஆம் நூற்றாண்டுபற்றி நீங்கள் பல செய்திகளைத்
தொகுத்துல்ளீர்கள் அது ஒரு ஆய்வு என்று ஆய்வுலகம் ஏற்றுக்கொள்ளது என்ற
கருத்தில் கூறினேன்

பொது மன்றில் முகத்திரையைக் கிழிப்பேன் என்பதெல்லாம் உங்கள்
வயதுக்குமீறிய செயல். நயத்தக்க நாகரிகத்துக்குட்பட்டதன்று

ஆய்வு அடிப்படையிலான விவாதத்துக்கு நான் தயார்
40 கருத்துக்களைப் பட்டியலிட்டு எழுதியுள்ளேன் அதைப்படித்தபின்
வாதத்துக்கு வாருங்கள்
தலைப்பிலே நின்றுகொண்டு வாதம் செய்வது பொருந்தாச் செயல்
வருக வருக என வரவேற்கும்
நாகராசன்

2012/8/6 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:
> நான் கூறிய முகத்திரை என்ன என்பதை கூறுகிறேன்.
>
> ௧. //நான் படித்த நூல்களும் ஆதாரங்களும் 1920-க்கு முற்பட்டவை.//
>
> என்று கோரிய நிங்கள் தான்
>
> // இதுவரை கிடைத்திருக்கும் ஆவண ஆதார அடிப்படையில் //
>
> என்று முரண்படக் கூறியவர். அக மொத்தம் 1920-க்கு பிறகு நூல்களே
> வெளிவறவில்லையா?
>
> ௨. //மானுடவியலார் காட்டுமிராண்டி என்றும் பறையர்கள் என்றும் எழுதியிருப்பதைச்
> சொன்னால் கேட்டுக்கனும். உணர்ச்சிவசப்படக் கூடாது//
>
> அக மானுடவியலார் அனைவரும் ஒட்டு மொத்த தமிழர் அனைத்தும் காட்டுமிராண்டிகள்
> என்று கூரவருகிரார்களா...?
>
> பக்தவத்சல பாரதி எழுதிய தமிழர் மானிடவியல், நூலை படித்திர்களா? தமிழர்கள்
> பற்றிய பல கோணம் அவர் எழுத்தில் தெரிந்தது. ஆனால் நீங்கள் செய்த பிரச்சாரம்
> "ஒட்டு மொத்த தமிழர் அனைத்தும் காட்டுமிராண்டிகள்" என்று மற்றும் கூறுவதாய்
> இருந்தது.
>
> ௩. //நெக்ரீடோ இனம் - பறையர் இனம் - ராமாயணத்தின்படி வானரர்கள்//
>
> இராமாயணத்தை யாரப்பா உங்களுக்கு தொல்லுயிரியல் நூலாக eதுத்துக் கொள்ளக்
> சொன்னது. அப்படியே நீங்கள் அதை நம்பினாலும் இராமாயணத்தில் கூறப்பட்ட
> பாண்டியர்கள் பற்றி அறியாமல் இருக்க மாட்டிர்கள். அதை என் கூறவில்லை.
>
> ௩. //அவர் எழுதுவதே மற்றவர்கள் திருத்துவார்கள் என்று நம்பி எழுதப்படும்
> விக்கிப்பிடியா ஆராய்ச்சிச் சஞ்சிகைகளில் இதெல்லாம் சபை ஏறாது//
>
> உங்களுடைய "பழந்தமிழன் காட்டுமிராண்டி" என்ற பிரச்சாரத்தை மட்டும்
> முதற்பக்கத்தில் காட்சிப்பப்படுத்தி விடுவார்கள் என்று நிங்கள் நினைத்தால்
> உங்களுடைய மூட நம்பிக்ககைக்கு என் அழ்ந்த அனுதாபம்.
>
> ௪. //அவர் எழுதுவதே மற்றவர்கள் திருத்துவார்கள் என்று நம்பி எழுதப்படும்
> விக்கிப்பிடியா//
>
> உங்களை போன்ற முகமூடி பிரச்சாரம் செய்பவர் வந்து கட்டுரை எழுதினால் என்ன
> செய்வது? அதற்காகத்தான் விக்கிப்பிடியாவில் கட்டுரைகள் கண்காணிக்கப்படுகின்றன.
> நான் இங்கு குறிப்பிட்ட கட்டுரைகள் எவற்றையும் விக்கிப்பிடியர் திருத்தவில்லை.
> ஏனென்றால் ஒவ்வொன்றும் தகுந்த மேற்கொலோடு எழுதப்பட்டது. நிறைய பேர் அதை
> விரிவக்கினார்கள்.
>
> எனக்குத் தெரியாதது பல பெயருக்கு தெரியும் என்றிருக்கையில், "நான் மட்டும்
> எழுதியதை தன ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறும் உங்கள் ஒருவருடைய ஆதிகக
> மனப்பான்மை எனக்கில்லை. விக்கிப்பிடியாக்கும் இல்லை.
>
> //விக்கிப்பிடியா ஆராய்ச்சிச் சஞ்சிகைகளில் //
>
> விக்கிப்பீடியா ஆராய்ச்சி சஞ்சிகை அல்ல. அது ஒரு கலைக்கலஞ்ச்சியம். ஒரு விஷயம்
> குறித்த அனைவரின் ஆராய்ச்சிகளும், அனைத்து பார்வைகளும் , எதிர் ஆராய்ச்சிகளும்,
> மக்களிடையே நம்பப்படும் நம்பிக்கைகளும் முறையே அவை வரலாற்று அராய்ச்சி, அதன்
> பார்வை, எதிர் வாதம் கொண்ட அராய்ச்சி, தொன்மம் என்ற தலைப்புகளில் இடம்பெறும்.
>
> உங்களைப் போல் இராமாயணத்தை தொல்லுயிரியல் நூலாக கொண்டு யாரும் அங்கு தமிழ்ர்களை
> காட்டுமிராண்டி என்று கூறமாட்டார்கள்.
>
> //இதெல்லாம் சபை ஏறாது//
>
> விக்கிப்பிடியாவில் எதெல்லாம் சபை ஏறாது என்று வரிசையாக கூற வேண்டுகிறேன்.
> உங்களை போல் ஓர வஞ்சனை படைத்தவர எழுதும் கட்டுரைகள் தான் சபை ஏறாது. முடிந்தால்
> உங்கள் "பழந்தமிழன் காட்டுமிராண்டி" என்ற கட்டுரையை அங்கு இட்டுப்பாருங்கள்.
>
> ஆக மொத்தம் தமிசர்கள் பற்றி நீங்கள் கூறும் தொன்மங்களிலும், மற்ற மானுடவியல்
> நூல்களிலும் எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கையில் அதை எல்லாத்தையும் தெரிந்து
> கொண்டும் அவற்றை மறைத்து விட்டு, தமிழர் காட்டுமிராண்டி என்று பொருள் மட்டும்
> படும் படி கூறும் உங்கள் குறுகிய பார்வை நீங்கள் 1920-க்கு முற்பட்ட நுல்களை
> மட்டும் கையாண்டதிலே தெரிகிறது. ஒரு வரலார்ராய்சியாளன் என்ற உங்கள் முகமூடியில்
> உங்கள் கருத்துகளுக்கு சார்பானவர்ரை மட்டும் எடுத்தாளும் ஓர வஞ்சனை படைத்த
> முகம் ஒன்று ஒழிந்து கொண்டிருக்கிறது. அதையே கிழிப்பேன் என்று கூறினேன். அது
> ஏற்கனவே கிழிந்த பாடு தான் போலும்.
>
> //உணர்ச்சிவசப்படக் கூடாது//
>
> உணர்ச்சிவசப்படுபவன் "நாகர்கள் நக்க சாரணர் " என்று நீங்கள் கூறுவதை என்னைப்
> போல் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
> நாகர் பற்றி பல உங்களுக்குத் தெரிந்திருந்தும் "நக்க சாரணர்" என்பதை மட்டும்
> வைத்து ஒட்டு மொத்த நாகரையும் காட்டுமிராண்டி என்று கூறும் நீங்கள் தான் ஓர
> வஞ்சனையும் உணர்ச்சிவசமும் படுபவர்.
>
> இனி நீங்கள் எழுதும் இனம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் இரு பக்க சார்பாகவும்
> நிலவும் கருத்தக்களை எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். அப்படி இல்லை
> என்றால் அக்கட்டுரை "வரலார்ராய்சி என்ற முகமூடி அணிந்த ஓர வஞ்சனை படைத்த
> கட்டுரை'' என்று தான் எடுத்துக் கொள்ளப்படும்.

K R A Narasiah

unread,
Aug 6, 2012, 12:02:16 PM8/6/12
to mint...@googlegroups.com
வழுதி என்ற பெயருடன் உள்ள காசைக் கண்டெடுத்தவர் ரா. கிருஷ்ணமூர்த்தி. (தினமலர் ஆசிரியர்) இச்செப்புக்காசின் உருவத்தை நான் ஆலவாய் நூலில் சேர்த்துள்ளேன். 
நரசய்யா

2012/8/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

seshadri sridharan

unread,
Aug 6, 2012, 10:19:35 PM8/6/12
to தென்காசி சுப்பிரமணியன், mint...@googlegroups.com
செழியன் நாணயங்கள் பற்றி நான் குறிப்பிடவில்லை அவர் அதை நூலில் எங்கு குறிப்பிடவில்லை.

அவருடைய நூல்கள் சங்க காலச் சோழர் நாணயங்கள், சங்க கால மலையமான் நாணயங்கள், பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், சேர நாட்டில் தமிழ் வட்டெழுத்து, பற்காலத் தமிழ் வட்டெழுத்து, சங்க கால  கொங்கு நாணயங்கள், சங்க காலச் சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு சில வரலாற்றுச் செய்திகள்.  இவை யாவும்  அண்மைக் கால பதிப்புகள்

பொதுவாக தமிழக நாணயவியல் பற்றிய செய்திகள் 1980 களுக்கு பிறகே அதிக அளவில் வெளிவரத் தொடங்கின. அதில் மிக்க் குறிப்பிடத் தக்கவர் திரு. இரா. கிருஷணமூர்த்தி

சேசாத்திரி

2012/8/6 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>
//தினமலர் ஆசிரியர் திரு இரா. கிருஷ்ணமூர்த்தி மிக்க மலிவான விலைக்கு அவை குறித்த நூல்களை அச்சிட்டு வெளியிட்டு உள்ளார். //
 
ஆனால் செழியன் காசை அவர் வெளியிட்ட மாதிரி தெரியவில்லை. நீங்கள் கூறிய நூலில் அவை உள்ளதா? தினமலர் கட்டுரையில் கருத்திட்டாலும் அவர்கள் அதை வெளியிட்டதாக தெரியவில்லை,
 
அக்காசின் பின் பக்கம் சரியாகத் தெரியவில்லை எனக் கூறினார். ஒரு வேளை அது வேரெவராவது ஊகித்தால் இன்னும் பல விசயங்கள் தெரிய வாய்ப்பிருக்கிறது. அவரைத் தெரிந்தவர் எவராவது இருந்தால் அதை வெளியிடச் சொல்லலாம்.

Geetha Sambasivam

unread,
Aug 7, 2012, 1:30:06 AM8/7/12
to mint...@googlegroups.com
தென்காசி சுப்பிரமணியன்,

உங்கள் வயதுக்குரிய துடிப்புடன் இருப்பதை வரவேற்கிறேன்.  அதே சமயம் 70 வயதை நெருங்கும் பேராசிரியரின் (நாகராஜன்) வயதுக்கும், அனுபவத்துக்கும், அனுபவபூர்வமான எழுத்துக்கும் கொஞ்சம் மதிப்புக் கொடுத்து, மரியாதையும் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இது உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள்.  புரிதலுக்கு நன்றி.  

2012/8/6 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>
நான் கூறிய முகத்திரை என்ன என்பதை கூறுகிறேன்.

௧. //நான் படித்த நூல்களும் ஆதாரங்களும் 1920-க்கு முற்பட்டவை.//

ஆக மொத்தம் தமிசர்கள் பற்றி நீங்கள் கூறும் தொன்மங்களிலும், மற்ற மானுடவியல் நூல்களிலும் எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கையில் அதை எல்லாத்தையும் தெரிந்து கொண்டும் அவற்றை மறைத்து விட்டு, தமிழர் காட்டுமிராண்டி என்று பொருள் மட்டும் படும் படி கூறும் உங்கள் குறுகிய பார்வை நீங்கள் 1920-க்கு முற்பட்ட நுல்களை மட்டும் கையாண்டதிலே தெரிகிறது. ஒரு வரலார்ராய்சியாளன் என்ற உங்கள் முகமூடியில் உங்கள் கருத்துகளுக்கு சார்பானவர்ரை மட்டும் எடுத்தாளும் ஓர வஞ்சனை படைத்த முகம் ஒன்று ஒழிந்து கொண்டிருக்கிறது.  அதையே கிழிப்பேன் என்று கூறினேன். அது ஏற்கனவே கிழிந்த பாடு தான் போலும். 

//உணர்ச்சிவசப்படக் கூடாது//

உணர்ச்சிவசப்படுபவன் "நாகர்கள் நக்க சாரணர் " என்று நீங்கள் கூறுவதை என்னைப் போல் ஏற்றுக் கொள்ள மாட்டான். 
நாகர் பற்றி பல உங்களுக்குத் தெரிந்திருந்தும் "நக்க சாரணர்" என்பதை மட்டும் வைத்து ஒட்டு மொத்த நாகரையும் காட்டுமிராண்டி என்று கூறும் நீங்கள் தான் ஓர வஞ்சனையும் உணர்ச்சிவசமும் படுபவர். 

இனி நீங்கள் எழுதும் இனம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் இரு பக்க சார்பாகவும் நிலவும் கருத்தக்களை எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். அப்படி இல்லை என்றால் அக்கட்டுரை "வரலார்ராய்சி என்ற முகமூடி அணிந்த ஓர வஞ்சனை படைத்த கட்டுரை'' என்று தான் எடுத்துக் கொள்ளப்படும்.
35B.gif

N D Logasundaram

unread,
Aug 7, 2012, 2:50:57 AM8/7/12
to mint...@googlegroups.com, M.A.Siva Kumar
அன்பு மிகு
தென்காசி சுப்பிரமணியன் அவர்களுக்கு,
 
தென்னிந்திய நாணயம் >>>> ஓர் கருத்து  
 
கிரேக்க ரோமானிய நாணயங்கள்  பெருமளவில் கரூர்
போன்று பாலக்காட்டு கணவாய்க்கு அடுத்து வளமான
அக்காலத்தேயே  நாகரீகம் மிக்கு விளங்கிய உள்நாட்டு
தமிழக பகுதி என்பதால் தான்.
 
தென்னிந்தியா தீபகற்பத்தில் மேற்குக் கரையில்  சூரத்திலிருந்து கன்னியா
குமரிவரை இடை இன்றி வரிசையாக மலைகள் நிற்பதால் மேற்கத்திய
நாடுகளிளிருந்து கடல் வழி வருவோர் மக்கள் வாழ்ந்த நிலப்பகுதிக்குள்
மலை ஏறி இறங்கும் சிரமம் ஏதும் இன்றி எளிமையாக  நுழைய  பாலைக்காட்டு
கணவாய் என்னும்  ஒரே ஒரு பகுதி தான் இருந்தது
 
 எனவேதான் கரூர் போன்று நுழை வாயிலாக நிற்கும் இடத்தில் மிக மிக
அதிகமாக ரோமானிய கிரேக்க காசுகள் கிடைத்துள்ளன
அதான்று ,
 
இந்தியாவிற்குள்  வேறு இனத்தினர் நுழைந்தது கைபர் போலன் கணவாய்
வழியாக என சில வரலாற்று ஆசிரியர்கள் குறித்தாலும் அவ்வழியே  வந்தவர்
இயற்கையாக வாழ வழிதேடி வந்த சிறு சிறு கூட்டத்தினரே ஆகலாம் ஆனால்
நாகரீக/அரசியல்/வாணிப பின்னணியுடன் கூடியோர் கடல் வழிவந்து மிக
அருகமைந்த நிலப் பகுதியாம் சிந்து கங்கை எனும் வளமை மிக்க இதியாவின்
வடபகுதியில் நுழைந்தனர்  அதனால்தான் துவாரகை (நுழைவாயில்) எனும்
பெயருடைய மிகப் பழங்கால கடற்கரை நகரம் அமைந்தது .
 
அதற்கு அடுத்து அதிகமான  தூரத்தில் வேறு மக்கள் வாழும் இடம் என கேள்வியுற்று
தேடுபவர்களுக்கு தென்னிதியாவில் நுழைய பாலக்காடு ஒன்றுதான் இருந்தது
 
மேலும் மேற்கிலிருந்து வருபவர்களுக்கு கடல் வழிதான் எளிதானது நிலம் வழி
ஐரோப்பவி லி ருந் து  இந்திய விற்குள் நுழைய , மிக்கு,  நீண்டு,  தவரங்கள் ஏதும்
இல்லாத, உயர்ந்த, மலைகள், சுரங்கள், கடங்கள் என்னும் பூகோள அமைப்பினால்,
 எளிதாக கைகொள்ள முடியாத படி கடினமாகத்தான் இருந்திருக்கும் .
 
மேலும் எகிப்தியர்கள் ரோமானியர்கள் கிரேக்கர்கள் கடல் சார் நாட்டினில்
வாழ்ந்தவர்கள் கடல்வழி செலவினை நன்கு பழகியவரகளாகும்
 
இணைத்துள்ள இரு படங்கள் மேலும் விளக்கும் என நினைக்கின்றேன்
 
 
அன்புடன்
நூ த லோ சு
மயிலை
 
2012/8/7 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
tedious route.jpg
navalamthivu.jpg

OAGAI NATARAJAN

unread,
Aug 7, 2012, 1:57:01 PM8/7/12
to mint...@googlegroups.com


2012/8/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

தென்காசி சுப்பிரமணியன்,

உங்கள் வயதுக்குரிய துடிப்புடன் இருப்பதை வரவேற்கிறேன்.  அதே சமயம் 70 வயதை நெருங்கும் பேராசிரியரின் (நாகராஜன்) வயதுக்கும், அனுபவத்துக்கும், அனுபவபூர்வமான எழுத்துக்கும் கொஞ்சம் மதிப்புக் கொடுத்து, மரியாதையும் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இது உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள்.  புரிதலுக்கு நன்றி.  
 
 
 
ஒருவருடைய வயதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்றால் அவர் கருத்தை ஏரனத்துக்கு உட்படாமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதா பொருள்? aborigin என்ற சொல்லுக்கு காட்டுமிராண்டி என்று எந்த அகராதியிலும் பொதுப் புழக்கத்திலும் இல்லாததை சொல்லிவிட்டு அதற்கான சப்பைகட்டுடன் முழு மூச்சாக பதில் சொல்பவரை எப்படித்தான் எதிர்கொள்வது?  
35B.gif

Nagarajan Vadivel

unread,
Aug 8, 2012, 4:03:11 AM8/8/12
to mint...@googlegroups.com
அன்புடையீர்
விக்‌ஷனரியில்
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

பழந்தமிழனைப்பற்றி ஆய்வு செய்தவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்கள்.  சிலர் சமஸ்கிரிதச் சார்புடைய வரலாற்று ஆய்வாளர்கள். வெகு சிலரே தமிழ் அறிந்த தமிழ் ஆய்ந்த அறிஞ்ர்கள்

ஆய்வாளன் என்ற நிலையில் பல அறிஞர்கள் பல்வேறு சார்பு நிலையில் சொன்ன கருத்துக்களை அறிந்துகொள்வது அவசியமாகிறது

காட்டுமிராண்டி என்பது இங்கே ஒரு ஆய்வுக்கருத்துரு.  அன்றாடம் வழக்கில் பயன்படுத்தும் வசைமொழி அன்று

தமிழன் யார்? எங்கிருந்து வந்தான்? என்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. அந்தவிடைக்காகப் பலதளங்களில் பலர் கருத்துக்களைப் படிக்க வேண்டியது அவசியம்

நாகராசன்



2012/8/7 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

--
35B.gif

Nagarajan Vadivel

unread,
Aug 11, 2012, 1:35:26 PM8/11/12
to mint...@googlegroups.com
//௪. ஆக நிங்களும் தமிழர்களை தாழ்த்த தான் அதை பயன் படுத்தியது உங்கள் வாயிலாகவே தெரிகிறது.
௫.நீங்கள் விக்கிப்பிடியாவை விமர்சித்ததை வைத்தும், விக்சனரியில் விமர்சிக்கப்பட்ட சொல்லை ஏதோ அதாரம் போல் தருவதும் மிண்டும் உங்கள் இயலாமையையும் குறுகிய பார்வையையும் முகமூடி பிரச்சாரத்தையும்  எடுத்துக் காட்டுகிறது. விக்கித்திட்டங்கள் பற்றி உங்களுக்கு சரியான புரிதலில்லை.

மிண்டும் உங்கள் இயலாமைக்கும் குறுகிய பார்வைக்கும் என் அழ்ந்த அனுதாபம்.//

நான் எழுதியது என்ன அதற்கு நீங்கள் எழுதும் பதில் என்ன என்பதை படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள்
எழுத்து எழுத்தோடு இருக்கட்டும்.  வார்த்தைகளை வீசுவதை விட்டுவிட்டு உங்கல் கருத்தை எழுதுங்கள் முடிவைப்  படிப்பவர்களுக்கு விட்டு விடுங்கள்
முக்கியமாக MIND YOUR LANGUAGE


பழந்தமிழனைப்பற்றி ஆய்வு செய்தவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்கள்.  சிலர் சமஸ்கிரிதச் சார்புடைய வரலாற்று ஆய்வாளர்கள். வெகு சிலரே தமிழ் அறிந்த தமிழ் ஆய்ந்த அறிஞ்ர்கள்

ஆய்வாளன் என்ற நிலையில் பல அறிஞர்கள் பல்வேறு சார்பு நிலையில் சொன்ன கருத்துக்களை அறிந்துகொள்வது அவசியமாகிறது

காட்டுமிராண்டி என்பது இங்கே ஒரு ஆய்வுக்கருத்துரு.  அன்றாடம் வழக்கில் பயன்படுத்தும் வசைமொழி அன்று

தமிழன் யார்? எங்கிருந்து வந்தான்? என்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. அந்தவிடைக்காகப் பலதளங்களில் பலர் கருத்துக்களைப் படிக்க வேண்டியது அவசியம்

நாகராசன்
2012/8/11 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>
விகசனரியில் கூறியிருப்பது என்ன என்பதை நன்கு பாருங்கள்.

// ஐரோப்பியநோக்குள்ளவர்கள் பழங்குடிகளின் பண்படாததன்மைக்கு ஆதாரமாக அவர்களின் போர்களில் உள்ள வன்முறை, அவர்களின் சமூக கட்டமைப்பில் உள்ள கடுமை , ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களை காட்டுமிராண்டிகள் (savage) என்று சொன்னார்கள். வெறுமே தங்கிவாழ்வதற்காக, இயல்பான மிருகஉந்துதல்களின் அடிப்படையில் போரிடும் பழங்குடிகள் காட்டுமிராண்டிகள் என்றால் வெறும் லாபநோக்குக்காக அவர்களை கோடிக்கணக்கில் கொன்று பூமியின்முகத்தில் இருந்தே அழித்த நாம் மட்டும் நாகரீகமானவர்களா? ('மிருகங்களின் மனஉயர்வு உண்மையானதா?, ஜெயமோகன்) //

௧. அது முதலில் ஜெயமோகன் கருத்து என்று எடுத்துக்காட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
௨. அதிலும் இணை சொற்கள் என்று aborgines கொடுக்கப்படவில்லை.
௩. ஐரோப்பியர் எதோ தங்களை மட்டும் உயர்த்தி, பழங்குடிகளை தாழ்த்த தான் அந்த வார்த்தை பயன்பட்டதாக அவர் கூறுகிறார்.
௪. ஆக நிங்களும் தமிழர்களை தாழ்த்த தான் அதை பயன் படுத்தியது உங்கள் வாயிலாகவே தெரிகிறது.
௫.நீங்கள் விக்கிப்பிடியாவை விமர்சித்ததை வைத்தும், விக்சனரியில் விமர்சிக்கப்பட்ட சொல்லை ஏதோ அதாரம் போல் தருவதும் மிண்டும் உங்கள் இயலாமையையும் குறுகிய பார்வையையும் முகமூடி பிரச்சாரத்தையும்  எடுத்துக் காட்டுகிறது. விக்கித்திட்டங்கள் பற்றி உங்களுக்கு சரியான புரிதலில்லை.


மிண்டும் உங்கள் இயலாமைக்கும் குறுகிய பார்வைக்கும் என் அழ்ந்த அனுதாபம். 
Reply all
Reply to author
Forward
0 new messages