ஹியூகோ வுட்

22 views
Skip to first unread message

RM S Viswanathan

unread,
May 17, 2022, 2:16:20 AM5/17/22
to Thenmozhi Mintamil, mint...@googlegroups.com, rms...@gmail.com

பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை

இதுதான் மிக புகழ்பெற்ற ஆனைமலை. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை. இதன் உயரமான சிகரம் ஆனைமுடி. ஆனைமுடி தான் தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்.

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாகச் செல்லும் மேற்கத்திய மலைத்தொடரின் ஒரு பகுதி ஆனைமலை மலைகள். 'ஆனை' என்றால் யானை. யானைகள் அதிகமாக நிறைந்திருந்த காடுகள் இருந்ததால் ஆனைமலை என்ற பெயர் வந்தது.

இரவில் ஒளிரும் ஆனைமலை காடுகள் ; மனதை மயக்கும் மின்மினி பூச்சிகளின் ஒளி சிதறல்கள்..!

சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்மினிப் பூச்சிகளின் இந்த ஒளி உமிழ்வு நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது என்றும், இதற்கு முன்பு கடந்த 1999-ஆம் ஆண்டு மற்றும் 2012-ஆம் ஆண்டு இந்த நிகழ்வை பார்த்துள்ளதாகவும் கூறுகின்றனர். கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகளின் இந்தக் கூட்டம், சுற்றுச் சூழல் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

டாப்ஸிலிப்:

ஆங்கிலேயர் திப்பு சுல்தானை வீழ்த்திய பின்பு, கொங்கு நாடு ஆங்கிலேயர் வசம் வந்தது. கொங்குநாட்டை நிர்வகிக்க, சென்னை மாகாண கவர்னர் ஜெனரலாக இருந்த திரு. எட்வர்டு கிளைவ் (Edward Clive) உத்தரவின் பேரில், மருத்துவ அலுவலரும் இயற்கை ஆய்வாளருமான டாக்டர் பிரான்ஸிஸ் புக்கானன் என்பவர் கிராமங்களின் வழியே நடந்து பயணம் மேற்கொண்டார்.

பொள்ளாச்சியிலிருந்து, மலபார் பயணம் செய்யும் போது அங்கிருந்த ஒரு மாபெரும் வனப்பகுதியை பார்த்துள்ளார். மலையின் அடிவாரத்திலிருந்து ஆனைமலை வரை இம்மலைக்காடுகள் படர்ந்திருந்தன. காடுகளின் வனத்தைப் பற்றியும், அதிலுள்ள தேக்கு, கடம்பு, வேங்கை, ஈட்டி உள்ளிட்ட வலிமையான மரங்களைப் பற்றியும், வெட்டி வெளியில் கொண்டு வர முடியாத அளவு அவை உயர்ந்தொங்கி வளர்ந்துள்ளது பற்றியும் அதனது பயண அறிக்கையில் சமர்ப்பித்து விட்டார்.

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவில் மிகப்பெரும் தொழில்புரட்சி ஏற்பட்டதன் காரணமாக, ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகின. இதன் காரணமாக ஓக் மரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இங்கிலாந்தின் காடுகளிலிருந்த வலிமையான ஓக் மரங்கள் அனைத்தும் வெட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாக கப்பல் கட்டவும், தொழிற்சாலைகள் அமைக்கவும், ரயில் பாதைகள் அமைக்கவும், தந்திக் கம்பங்கள் அமைக்கவும் என பல்வேறு பணிகளுக்காக பெருமளவில் மரங்கள் தேவைப்பட்டது. அப்போது அதன், தங்கள் காலனி ஆதிக்கத்திலுள்ள ஆனைமலையில் பெருமளவில் தேக்குமரம் இருப்பதை இங்கிலாந்து அரசுக்கு தெரிந்தது.

மத ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஓக் மரங்களைப் போலவே உயரமும் வலிமையும் கொண்டிருந்ததால், இந்த தேக்கு மரங்களை வெட்டும் வேலையைத் துவக்கியது இங்கிலாந்து அரசு. இதற்காக பொள்ளாச்சியிலிருந்து மலையடிவாரம் வரை மேற்காகவும், தெற்காகவும் பாதைகள் அமைக்கப் பட்டன. இதன்பின், மலைவாழ் மக்களை மரங்களை வெட்ட உத்தரவிட்டனர். கிழக்கிந்திய கம்பெனியின் தொழில் அதிபர்கள் மரங்களை வெட்டி, மன்னர்களுக்கு பரிசாக கொடுத்தனர்.

(இதன் பலனாக பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை தங்கள் கைவசப்படுத்தி, தேயிலைத் தோட்டம் அமைத்தனர். மலைமீதிருந்த பெரும் நிலங்கள் பிரிட்டிஷ் முதலாளிகளின் கைவசமானது. வால்பாறை பகுதியிலும் அதன் பின்பு உள்ள கொடைக்கானல் மலைச்சரிவிலும் இப்போது உள்ள பல தேயிலைத் தோட்டங்கள் இம்மாதிரி இயற்கையான காடுகளை அழித்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட எஸ்டேட்கள்.

மலையின் கீழேயிருந்த சிறு சிறு இடங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு, அந்த இடங்கள் ஆங்கிலேயர்கள் சொற்படி கேட்கும் இந்திய ஜமீன்தார்களுக்கு கொடுக்கப் பட்டன).

பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலிருந்த உயர்ந்தோங்கிய தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு, மலை உச்சியிலிருந்த ஒரு சமதளத்தில் கொண்டுவந்து அடுக்கப்பட்டன. (இரண்டாயிரம் அடி உயரத்திற்கும் மேலேயிருந்த அந்த மரங்களை கீழே கொண்டுவர ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பெயர்தான் ஆபரேசன் டாப்ஸிலிப்).

ராட்சத தேக்கு மரங்கள் மிகப் பெரிய கட்டைகளாக வெட்டப்பட்டு, யானைகளால் ஒரு கட்டம் வரை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மரத்துண்டுகள் கீழே தூக்கிப் போடப்பட்டன. இந்த கட்டைகள் ஆற்றின் கீழே சமவெளிக்கு மிதந்து சென்றன. காலப்போக்கில் இந்த இடத்திற்கு டாப்ஸிலிப் என பெயர் வந்தது.

இங்கிலாந்தின் தேவைக்காக பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் மொட்டையாக்கப் பட்டன. வருடத்திற்கு 40,000 மரங்கள் என வெட்டப்பட்டன. இந்தியா முழுவதுமுள்ள அரசு அலுவலங்களுக்கு தேவையான நாற்காலி மேசை செய்ய சட்டங்கள் டாப்ஸிலிப்பிலிருந்து தான் அனுப்ப பட்டன. அதிகமான மரங்களை வெட்டிய ஒப்பந்ததாரர் ஒருவருக்கு, இங்கிலாந்து, யானை தந்தத்தால் ஆன பல்லக்கு ஒன்றைப் பரிசளித்தது என்ற வரலாற்றுக் கதை ஒன்று உண்டு.

அடுத்தடுத்து ஏற்பட்ட மரங்களின் தேவைக்காக, இந்திய காடுகளை வளர்க்க வேண்டிய அவசியம் இங்கிலாந்துக்கு ஏற்பட்டது. 1885-1915, காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய லூசிங்டன்(Lushington),பிஷார் (Fischer), கேப்டன். டக்லஸ் கோமில்டன் (Douglas Hamilton), போன்ற பல அலுவலர்கள் மொட்டையாக இருந்த இந்த மலைப்பகுதியில் தேக்கு மரங்களை நடவு செய்து தோல்வியடைந்தனர்.

வந்தார் ஹீரோ:

ஆனைமலைத் தொடரில் அழிந்த காட்டுப்பகுதியை மீட்டெடுத்து, மறுசீரமைப்பு பணிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என முடிவெடுத்தனர். ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் காடுகளில் சிறப்பாக பணி செய்த அதிகாரியை, ஆனைமலை பகுதியையும் சீரமைக்க அவர்தான் சரியானவர் என முடிவு செய்ததுகாடெல்லாம் அழிந்து மொட்டையாக இருந்த 1915 வாக்கில், டாப்ஸிலிப்பிற்கு வந்தார் நமது ஹீரோ ஹியூகோ வுட் Hugo Francis Andrew Wood என்ற IFS அதிகாரி.

செயல்திட்டம்:

ஆனைமலைத் தொடரில் அழிந்த காட்டுப்பகுதியை மீட்டெடுத்து மறுசீரமைப்பு பணிக்காக, காடுகளில் பயணம் செய்தார்.

  • மரத்தை வேரோடு வெட்டாமல், நிலத்துக்கு மேல் இரண்டடி விட்டு வெட்டுவது. இதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்படும், வெட்டிய மரங்கள் மீண்டும் துளிர்க்கும்
  • குறிப்பிட்ட காட்டுப்பகுதிகளில் உள்ள மரங்களை குறைந்தது 25 ஆண்டுகளுக்கு வெட்டாமலிருப்பது
  • அப்படியே வெட்டினாலும், ஒன்றுக்கு நான்காக மரங்களை நடுவது

என செயல்திட்டத்தை சமர்ப்பித்தார். இதன்மூலம் காடுகளின் வளம் குறையாது, மரவளம் பெருகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 1916–17 ஆம் ஆண்டு 25 ஏக்கரில் துவங்கியது இவரின் திட்டம்.

திருமணம் செய்து கொள்ளாமல் காடுகளை நேசித்த இவர், வேலை போக, மீதம் கிடைக்கும் நேரத்தில் தனியாக காடுகளில் நடந்து, தன் கால் ட்ரவுசர் மற்றும் சட்டைப் பைகளில் எடுத்துச் செல்லும் தேக்கு விதைகளை, கால் போன போக்கில் நடந்து மரங்கள் வெட்டப்பட்டு வெட்ட வெளியாக இருந்த காடுகளில், தனது வெள்ளி பூண் கொண்ட ஊன்று கோலால் (Walking stick) நிலத்தில் ஒரு அடி ஆழம் வரை குழியிட்டு ஒரு தேக்குக் கொட்டையை போட்டு மூடுவார், இதேபோல் அனைத்து தேக்கு கொட்டைகளும் முடிந்த பிறகு, மீண்டும் நிரப்பி கொண்டு வந்திடுவார்.

இவ்வாறு தேக்கு விதைகளை விதைப்பதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். பல ஆண்டுகள் நடந்து நடந்து இவர் விதைத்த தேக்கு மரங்கள் தான் இன்று டாப்சிலிப் பகுதியில் வானுயர்ந்து மரங்ககளாக இன்று நிற்கின்றது.

முதலாம் உலகப் போரின் போது மரங்களின் தேவை ஏற்பட்ட போது, தர முடியாது என அரசுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இவர்.

1933 இல் மரணமடைந்த இவரின் உடல் குன்னூரிலிருந்து டாப்ஸிலிப்பிற்கு கொண்டுவரப்பட்டு தான் வசித்த வீட்டிற்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. அவர் உடலை சுமந்த சிறிய லாரியும், உடன் வந்த, பதிரோரு கார்களில் அரசு அதிகாரிகளும் தான் முதன்முறையாக டாப்ஸிலிப் மலை மீது ஏறிய வாகனங்கள்.

பரம்பிக்குளம் வனப்பகுதியிலும், ஆனைமலை வனப்பகுதியிலும் உள்ள தேக்கு மரங்கள் அனைத்துமே ஹியூகோ விட் டோட்ட விதை தான் என்கின்றனர் அங்குள்ள காடர் இன பழங்குடி இன மக்கள். அழிந்து போன ஒரு மலையை மறுசீரமைப்பு செய்துள்ளார். இதுபோல அழிந்து போன மலைகளையும் காடுகளையும் மறுசீரமைப்பு செய்ய இன்னும் ஆயிரம் ஹியூகோ வுட் நமக்கு வேண்டும்.

அடர்ந்த தேக்கு மரங்கள் நிறைந்திருக்கும் இந்த வனப்பகுதியை உருவாக்கியதில் ஹ்யூகோ வுட் என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு நிறைய பங்கு இருக்கிறது. அவர் இல்லையென்றால் இன்று நாம் பார்க்கும் வனம் இல்லை.

அதிக வயதான கன்னிமாரா தேக்கு மரம்.

thanks to S Kalu Sivalingam (https://ta.quora.com/)

--
Thanks & Regards,

------------------------------------------------------------------
S. Viswanathan
Chennai

------------------------------------------------------------------

தேமொழி

unread,
May 25, 2022, 11:23:35 PM5/25/22
to மின்தமிழ்

Minmini(fireflies) - Billions of synchronous fireflies at the Anamalai Tiger Reserve
யூடியூப் காணொளி: https://youtu.be/lYElKQQuHTA
Billions of synchronously flashing fireflies turn the pristine forests of the Anamalai Tiger Reserve into a carpet of yellowish-green. These tiny creatures rival the giants that walk these lands. 

&

Reply all
Reply to author
Forward
0 new messages