மண்ணின் குரல்: மே 2014: கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

148 views
Skip to first unread message

Suba.T.

unread,
May 9, 2014, 6:18:07 AM5/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வெளியீட்டு வரிசையில் மேலும் ஒரு சிறப்பு மிக்க கோயில்.!

​கங்கை கொண்ட சோழபுரம்

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2014/05/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=IA-Gs86bh4c

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவல்களை நமக்காகப் பகிர்ந்து கொள்பவர் தமிழகத் தொல்லியல் துறையின் டாக்டர்.பத்மாவதி.

இக்கோயிலைப் பற்றிய சிறந்த அறிமுகத்தை வழங்கும் ஒரு கட்டுரையை இவ்வெளியீட்டில் இணைத்திருக்கின்றோம். இதனை தட்டச்சு செய்து வழங்கிய கீதா சாம்பசிவம், செல்வன் ஆகிய இருக்கும் நம் நன்றி.

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

நூல்: தமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச்சின்னங்களும்
ஆசிரியர்: வி.கந்தசாமி எம்.ஏ., எம்.எட்.

கங்கை கொண்ட சோழபுரம்

திருச்சி மாவட்டத்தில், கும்பகோணத்திலிருந்து 27 கிமி தொலைவில் 'கங்கை கொண்ட சோழபுரம்' உள்ளது. (தஞ்சாவூரிலிருந்து 71 கிமி). இவ்வூரின் வரலாற்று சிறப்பினையும், கலை சிறப்பினையும் இங்கே காணலாம்.

வரலாற்றுச் சிறப்பு

தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டிச் சீரும் சிறப்புமாக ஆட்சி புரிந்தவர் இராஜராஜ சோழன். இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராசேந்திர சோழன் ஆவார். இவரது ஆட்சிகாலம் கிபி 1012 முதல் 1044 வரை ஆகும். இவர் தம் தந்தையை போல் சிறந்த வெற்றி வீரராக விளங்கினார். இலங்கையை முழுவதும் வென்றார். வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகள் பெற்றார். 'கடாரம்' வரை சென்று வெற்றி பெற்றார். கங்கைவரை சென்று வெற்றிபெற்ற இம்மன்னன் 'கங்கை கொண்ட சோழன்' என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கங்கைவரை தாம் அடைந்த வெற்றிக்கு அறிகுறியாக 'கங்கை கொண்ட சோழபுரம்' என்ற புதிய நகரை உருவாக்கினார். கங்கைகொண்ட சோழபுரம் உருவாகு முன்பு அந்த இடம் 'வன்னியபுரம்' என்ற ஒரு சிற்றூராக இருந்தது. கிபி 1023ல் புதிய நகர் உருவாகும் பணி தொடங்கபெற்றது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்புமிக்க அரண்மனை கட்டபட்டது. பலத்த கோட்டைகள் எழுப்பபட்டன. 'கங்கை கொண்ட சோழீசுவரம்' என்ற சிவாலயம் எழுப்பபட்டது. 'கோழகங்கம்' என்ற மிகபெரிய ஏரி வெட்டபட்டது. கிபி ஏறகுறைய 1025ல் கங்கைகொன்ட சோழபுரத்தை இராஜேந்திர சோழர் தமது அரசின் புதிய தலைநகராக கொண்டார். சோழர் தலைநகர் தஞ்சையிலிருந்து கங்கை கொன்ட சோழபுரத்துக்கு மாற்றபட்ட்து.

வடகே துங்கபத்ரா நதி முதல் தெற்கில் இலங்கை வரை உள்ள சோழப் பேரரசிற்கு கங்கை கொன்ட சோழபுரம் தலைநகராயிற்று. முதலாம் இராசேந்திர சோழனுக்கு பின் வந்த சோழ மன்னர்களுக்கும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. கங்கை கொன்ட சோழபுரம் சோழபேரரசின் தலைநகராக்ச் சுமார் 250 ஆண்டுகள் பெருமையுடன் விளங்கியது. இத்துணை சிறப்புமிக்க நகரம் எங்கே போயிற்று? கி.பி. 13ம் நூற்றாண்டில் பெருமையுடன் விளங்கிய பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251- 68) படையெடுப்பினால் இந்நகரம் அழிவுற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுந்தரபாண்டியனுக்குப் பின் ஆட்சிபுரிந்த மாறவர்மன் குலசேகரன் (1268 - 1310) மூன்றாம் இராஜேந்திரன் என்ற கடைசி சோழ மன்னரைக் கி.பி. 1279ல் தோற்கடித்துச் சோழராட்சி மறைந்திடச் செய்தார்.

மறைந்த தலைநகரின் எஞ்சிய பகுதிகள் சிலவற்றை இன்று நாம் காணலாம். கங்கை கொண்ட சோழபுரத்திற்கு 2 கி.மி தென்கிழக்கிலுள்ள 'மாலிகை மேடு' என்ற இடத்தில் இராஜேந்திர சோழன் வாழ்ந்த மாளிகையின் அடையாளங்கள் உள்ளன. இங்கு அகழ்ந்து காணப்பட்ட தொல்பொருள்கள் தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையினரால், மாளிகை மேட்டுப் பகுதியிலேயே காட்சிப்பொருள்களாக வைக்கபட்டுள்ளன.

கங்கை கொண்ட சோழபுரத்தின் ' கோ இல்' மறைந்த பின்னும், 'கோவில்' மட்டும் அழியாது நின்று, இராசேந்திர சோழனின் பெருமையைக் கூறுகிறது. தொல்பொருள் துறையினரின் ஆராய்ச்சியில் இந்நகரம் இருந்து வருகிறது.

கங்கை கொண்ட சோழிசுவரத்தின் சிறப்பு

இராசேந்திர சோழர் தம் தந்தையைப்போல் ஒரு சிவபக்தராக விளங்கினார். தம் தந்தை அமைத்த பிரகதிஈஸ்வரர் ஆலயம் புகழுடன் விளங்கினாலும், தம் புதிய தலைநகருக்கு ஒரு சிவாலயம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், சிவன் மீது கொண்ட பக்தியினாலும் தம் புதிய தலைநகரத்தில் ஒரு சிவாலயத்தை எழுப்பினார்.  இது 'கங்கை கொண்ட சோழீசுவரம்' எனப்பட்டது.  கங்கை கொண்ட சோழீசுவரத்தின் சிறப்பினைச் சிறிது இங்கு பார்ப்போம்.

1. விமானம், அகமண்டபம், முக மண்டபம், அம்மன் கோவில் திருச்சுற்று மாளிகை, திருமதில், கோபுரங்கள் முதலிய அங்கங்கள் உள்ளிட்டு யாவும் ஒரே காலத்தில் கட்டப்பட்ட சிறப்பினைக் கங்கை கொண்ட சோழீசுவரம் கோவில் கொண்டுள்ளது.

2. கோவிலின் கட்டடப் பகுதிகள் யாவும் கருங்கல்லினாலானவை.  போக்குவரவு வசதி இல்லாத கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வெகு தூரத்திலிருந்து பல டன் எடையுள்ள கருங்கற்களைக் கொண்டு வந்து ஒரு பெரிய கற்கோவிலமைத்திருப்பதை யாரும் பாராட்டாமலிருக்க முடியாது.

3. கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயமும், தஞ்சாவூரிலுள்ள சிவாலயமும் கட்டட மற்றும் சிற்பக் கலையில் பல அம்சங்களில் ஒன்று போலிருக்கின்றன.  கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தஞ்சைக் கோவிலைப்போல் உயரமான அதிட்டான மேடை மீது ஏற்றிக் கட்டப்பட்டுள்ளது.  இருப்பினும் இக்கோயிலின்  அதிட்டான மேடை, கட்டடக் கலையில் தஞ்சைக் கோவிலையும் விஞ்சும் அளவில் உள்ளது.  ஆனால் தஞ்சைக் கோவிலின் அடித்தளம் கண்டுபிடிக்கப்படாத புதிராக உள்ளது.

4. தஞ்சைப் பெரிய கோவிலைப் போல் கங்கை கொண்ட சோழபுரக் கோவிலும் சிறப்பு மிக்க விமானத்தைப் பெற்றுள்ளது.  தஞ்சை விமானத்தைப் போல் இவ்விமானமும் கவர்ச்சி மிக்கது.  மூலவருக்கு மேலுள்ள விமானத்தின் கட்டுக்கோப்பு தஞ்சையைப்போல் அடிமுதல் ஸ்தூபி வரை கருங்கல்லாலாகியது.  ஆனால், தஞ்சை விமானத்தை விட உயரத்தில் குறைவாக உள்ளது.  தஞ்சை விமானத்தின் உய்ரம் 61 மீட்டர். கங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் விமானம் 55 மீட்டர் உயரமுள்ளது. தஞ்சைக் கோயில் விமானத்தைப் போல் இக்கோவிலின் விமான நிழல் பூமியில் விழாதபடி கட்டப்பட்டுள்ளது.  விமானத்தின் அடி முதல் ஸ்தூபி வரை உள்ள சிற்பங்கள் தென்னிந்தியாவில் உள்ள யாவற்றிலும் வனப்பும் சிறப்பும் பொருந்தியவையாகக் கருதப்படுகின்றன.  விமானத்தின் பிரம ரந்திரத் தளக்கல் தஞ்சைக் கோவிலைப் போல் ஒரே கல்லாலானது.  இவ்வூருக்கு அருகிலுள்ள பரணம் என்ற கிராமத்திலிருந்து சாரம் அமைத்து இக்கல்லை விமானத்தின் சிகரத்தில் ஏற்றினார்களாம்!

5. விமானத்தின் சுவர்களிலுள்ள தேவ கோட்டங்களில் உயிர்ச் சிற்பங்களாகக் காட்சியளிக்கும் பல தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன.  தெற்குச் சுவரில் நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, ஹரிஹரன், நடராஜர் ஆகிய திருவுருவங்கள் உள்ளன.  மேற்குச் சுவரில் கங்காதரர், லிங்கோத்பவர், உபயதேவிகளுடன் கூடிய திருமால், தேவேந்திரன், உமாமகேஸ்வரர் ஆகிய திருவுருவங்கள் உள்ளன.  வடக்குச் சுவரில் காலசம்ஹாரர், விஷ்ணு, துர்கை, பிரமன், பைரவர், காமதகன மூர்த்தி ஆகிய திருவுருவங்கள் உள்ளன.  கிழக்குச் சுவர்களில் சண்டேச அனுக்கிரஹ மூர்த்தி, ஞான சரஸ்வதி, பிக்ஷாடனர், கஜலக்ஷ்மி ஆகிய திருவுருவங்கள் உள்ளன.  இச்சிற்பங்கள் யாவும் சோழர் காலச் சிற்பிகளின் உன்னதப் படைப்புகள் ஆகும்.  இவை பார்ப்போர் யாவரையும் மெய்ம்மறக்கச் செய்கின்றன.  இவை இந்து சமய வரலாற்றினையும் சிறந்த கலை நுணுக்கத்தையும் கொண்டுள்ளன. சண்டேச அனுக்கிரக மூர்த்தியின் சிற்பம் அதிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.  இச்சிற்பமும் இதர சில சிற்பங்களும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பணியினால் புதியன போல் காட்சியளிக்கின்றன.

6. துவார பாலகர்கள் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு மிக்க அம்சம் ஆகும்.  கிழக்கு, தெற்கு, வடக்கு வாயில்களிலும், கோயிலுள்ளும் 10 துவார பாலர்கள் சிற்பங்கள் உள்ளன.  இவை சுமார் 4 மீட்டர் உயரத்தில் ஒரே கல்லினால் ஆனவை.  இத்துவாரபாலர் சிலைகள் கோவிலில் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றன.

7. கோவிலின் வாயிலை அடுத்து வலப்புறத்திலுள்ள நவக்கிரகச் சிலை புகழ் மிக்கதாகும்.  ஒரே கல்லால் அமைக்கப்பட்ட இந்த நவக்கிரகச் சிலையைப் போல் இந்தியாவில் எங்கும் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  நவக்கிரகம் உள்ள மகா மண்டபத்தில் மேலும் பல அரிய சிற்பங்கள் உள்ளன.

8. கர்ப்பக்கிருகத்திலுள்ள லிங்கம் இக்கோவிலின் மிக முக்கியமான அம்சம் ஆகும்.  மூல லிங்கம் மிகப் பெரிய வடிவுள்ளது.  ஒரே கல்லாலானது.  தஞ்சைக் கோவிலிலுள்ள விங்கத்தை விடச் சற்றுப் பெரியது.  இந்த லிங்கம் உலகிலேயே பெரியது என்று கூறப்படுகிறது.  பகலில் எந்தவித மின் விளக்குச் சாதனமும் இல்லாத இருட்டான சூழ்நிலையில் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது மட்டும் சூரிய ஒளி பிரதிபலிப்பு ஏற்படுவது விநோதமாக உள்ளது.

9. கோவிலிலுள்ள செப்புத் திருமேனிகள் சிறப்பு மிக்கவை.  இவற்றுள் குறிப்பிடத் தக்கது சோமாஸ்கந்தர் சிலையும் சுப்பிரமணியரது சிலையும் ஆகும்.  இவை சோழர் காலத்து வார்ப்புக் கலைத்திறனைக் காட்டுகிறது.

10. சிங்கக் கிணறு இக்கோவிலின் மற்றொரு சிறப்பு ஆகும்.  இராசேந்திர சோழர் தனது வட இந்தியப் படையெடுப்பின் பொழுது கொண்டு வந்த கங்கை நீரின் ஒரு பகுதியை இக்கிணற்றில் ஊற்றினார் என்று கூறப்படுகிறது. இக்கிணற்றின் நீர் இன்றும் பயன்படும் நிலையில் உள்ளது.  உடையார் பாளையம் நிலக்கிழாரால் சிங்கமுகம் கட்டப்பட்டதாகும்.

கோவிலின் வாயிலில் இராசேந்திர சோழன் காலத்தில் அமைத்த கோபுரம் இன்று பாழடைந்த சில கற்களின் அடித்தளத்துடன் மட்டும் காணப்படுகிறது.  இந்ந்கரிலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ள கொள்ளிட நதியில் ஓர் அணையைக் கட்டுவதற்குப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இக்கோவிலின் கோபுரத்திலிருந்தும் மதில் மற்றும் முன் மண்டபங்களிலிருந்தும் கருங்கற்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். (1836)

கோவிலைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் உத்தர கைலாச அம்மன் கோவில், சண்டிகேஸ்வரர் கோவில், தக்ஷிண கைலாசம், மஹிஷாசுர மர்த்தினி கோவில் ஆகியவை உள்ளன.

கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தமிழ் மக்கள் பண்பாட்டின் பெருமையைக் கூறும் ஓர் உன்னதச் சின்னம் ஆகும்.  இக்கோவில் முதலாம் இராசேந்திர சோழன் நமக்கு விட்டுச் சென்றுள்ள தலை சிறந்த மரபுரிமைச் செல்வம் ஆகும்.  தஞ்சைச் சோழர்கள் ஆட்சிக்காலம், 'தமிழகக் கோவில் வரலாற்றில் பொற்காலம்' என்பதை உலகிற்குக் காட்டும் கலைக்கோவிலாகும்.

N. Kannan

unread,
May 9, 2014, 8:55:32 AM5/9/14
to மின்தமிழ்
சுபா:

மிக அற்புதமான விழியம். அருமையான ஒளி/ஒலிப்பதிவு. நல்ல தகவல் சேகரிப்பு. பத்மாவதியின் நிலையான துணையுடன் இன்னுமொரு சிறப்பு வெளியீடு இது. வாழ்த்துகள்.

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan S.Soundararajan

unread,
May 9, 2014, 9:05:10 AM5/9/14
to mintamil
நன்றி பல, மார்க்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. போன ஆகஸ்டு தரிசனம் செய்து விட்டு வந்தேன்.

Suba.T.

unread,
May 10, 2014, 5:55:41 AM5/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-09 14:55 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
சுபா:

மிக அற்புதமான விழியம். அருமையான ஒளி/ஒலிப்பதிவு. நல்ல தகவல் சேகரிப்பு. பத்மாவதியின் நிலையான துணையுடன் இன்னுமொரு சிறப்பு வெளியீடு இது. வாழ்த்துகள்.

நா.கண்ணன்

​இந்த வீடியோ பதிவை 4 மாதங்களுக்கு முன்னரே வெளியிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் டேட்டா  கரெப்ஷன் ஆனதில் பதிவை எடிட் செய்து பதிவேற்ற முடியாமல் ஆனது. பின்னர் பேக்கப் ட்ரைவில் இன்னொரு காப்பி சேர்த்து வைத்திருந்ததால் அதனை எடிட் செய்து இப்போது தான் வெளியிட வாய்ப்பு கிடைத்தது.

அதோடு இக்கோயில் தொடர்பான விரிவான தகவல்களைத் தரும் வி.கந்தசாமி அவர்களின் கட்டுரை ஒன்றும் என்னிடம் இருந்தது. பல விளக்கங்களைத் தரும் கட்டுரை இது. சென்ற வாரம் இதனை தட்டச்ச உதவி கேட்டு 2 நாட்களுக்குள் கீதாவும் செல்வனும் தட்டச்சு செய்து தந்து இந்த வெளியீடு சிறப்பாக அமைய உதவியிருக்கின்றனர். 

நமது சேகரத்தில் சிறப்பு சேர்க்கும் ஒரு பதிவு இது.

இக்கோயிலின் சிற்பங்கள் மிகச் சிறப்பானவை. நேரில் சென்று பார்க்கும் போது மட்டுமே உணர முடியும். 

இங்கு நர்த்தனமாடும் நடராஜரின் முகத்தில் தெரியும் புன்சிரிப்பு அபூர்வமானது. பார்த்துக் கொண்டேயிருந்தால் நாமும் சிரித்துக் கொண்டிருப்போம்.

யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட வேண்டிய சின்னங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகின்றது இவ்வாலயம்.
தமிழகம் செல்வோர் யாவரும் சென்று பார்த்து நமது சிற்பக்கலை அழகையும் கோயில் கட்டுமான அழகையும் பார்த்து ரசித்து வரவேண்டும்.
 
சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Suba.T.

unread,
May 10, 2014, 5:56:27 AM5/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-09 15:05 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
நன்றி பல, மார்க்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. போன ஆகஸ்டு தரிசனம் செய்து விட்டு வந்தேன்.
​உங்கள் பரீட்சைக்கு உதவினால் எனக்கும் மகிழ்ச்சியே. ​:-)

coral shree

unread,
May 10, 2014, 7:09:56 AM5/10/14
to மின்தமிழ்
நல்லதொரு பதிவு சுபா. படங்களும், விழியமும் அருமை. வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
May 10, 2014, 7:15:42 AM5/10/14
to mint...@googlegroups.com

லோட் ஆக கஷ்டப்படுகிறது.:(:(

ஊருக்குப் போய் பார்க்கிறேன் .

sent from iphone.
அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

Singanenjam Sambandam

unread,
May 10, 2014, 1:58:36 PM5/10/14
to mint...@googlegroups.com
ஒரு முறை அல்ல-பலமுறை பார்த்து மகிழ்ந்தேன்....நன்றி...நன்றி....நன்றி....வாழ்க நீடு...

நிலைப்படமும் அருமை.......

ஒரு சில திருத்தங்கள்..

1. இத்திருக் கோவில் உள்ள இடம் தற்போது திருச்சி மாவட்டம் அல்ல- அரியலூர் மாவட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்...

2. இராசேந்திரன் ஆட்சிக் காலம், 1012-1044 , விழியப் பதிவின் விளக்க உரையில் 1012-1014 என கேட்கிறது..

3.##.தஞ்சைக் கோயில் விமானத்தைப் போல் இக்கோவிலின் விமான நிழல் பூமியில் விழாதபடி கட்டப்பட்டுள்ளது.  ##

இது எப்படி சாத்தியம்.....ஒருவேளை, விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் , மிக அகலமான பரப்பில் அமர்ந்திருந்தால் அந்தக் கலசத்தின் நிழல் அந்தப் பரப்பிற்குள்ளேயே விழக் கூடும்.விமானத்தின் நிழல் பூமியில் விழாது என்பது புரியவில்லை- தெரிந்தவர்கள் தெளிவிக்க வேண்டும்.....

Singanenjam Sambandam

unread,
May 10, 2014, 2:00:18 PM5/10/14
to mint...@googlegroups.com
முத்தாய்ப்பு மிக அருமை....பத்மாவதித் தாயாருக்கும் நன்றி.....

Suba.T.

unread,
May 10, 2014, 2:13:36 PM5/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-10 19:58 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
ஒரு முறை அல்ல-பலமுறை பார்த்து மகிழ்ந்தேன்....நன்றி...நன்றி....நன்றி....வாழ்க நீடு...

​மிக்க மகிழ்ச்சி.
நிலைப்படமும் அருமை.......

ஒரு சில திருத்தங்கள்..

1. இத்திருக் கோவில் உள்ள இடம் தற்போது திருச்சி மாவட்டம் அல்ல- அரியலூர் மாவட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்...
​அப்படியா. நான் ​திரு.கந்தசாமி அவர்களின் கட்டுரையில் உள்ள தகவல்களையே அதில் பயன்படுத்தியுள்ளேன். அரியலூர் மாவட்டம் என உறுதியானால் வீடியோ description   பகுதியில் இந்தத் தகவலைநான் இணைத்து விடலாம்.

2. இராசேந்திரன் ஆட்சிக் காலம், 1012-1044 , விழியப் பதிவின் விளக்க உரையில் 1012-1014 என கேட்கிறது..
​ஆமாம். இன்று காலை நானும் இதனை கேட்ட போது சற்று வருத்தமாகி விட்டது. தவறாக 14 என உச்சரித்திருக்கின்றேன். ​ description   பகுதியில் இத்தகவலை நான் இணைத்து வைக்கின்றேன்.

3.##.தஞ்சைக் கோயில் விமானத்தைப் போல் இக்கோவிலின் விமான நிழல் பூமியில் விழாதபடி கட்டப்பட்டுள்ளது.  ##

இது எப்படி சாத்தியம்.....ஒருவேளை, விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் , மிக அகலமான பரப்பில் அமர்ந்திருந்தால் அந்தக் கலசத்தின் நிழல் அந்தப் பரப்பிற்குள்ளேயே விழக் கூடும்.விமானத்தின் நிழல் பூமியில் விழாது என்பது புரியவில்லை- தெரிந்தவர்கள் தெளிவிக்க வேண்டும்.....

​என்னிடம் இதற்கான விளக்கம் இல்லை. கோயில் கலைகள் அறிந்தோர் இது பற்று மேலதிக தகவல்கள் வழங்கினால் நன்று.
கட்டுரையில் ​தமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச்சின்னங்களும் (ஆசிரியர்: வி.கந்தசாமி எம்.ஏ., எம்.எட்..) சில பகுதிகளே இந்தப் பதிவில் வருகின்றன. 

அன்புடன்
சுபா

.
​.​

--

jayasree shanker

unread,
May 11, 2014, 7:39:20 AM5/11/14
to mint...@googlegroups.com
சென்ற வருடம் இதே நேரம், திரிவேணி சங்கம் சென்றிருக்கையில், அங்கு ஒரு அறிவுப்புப் பலகை தமிழில் இருந்ததைப் ஆச்சரியத்துடன் படிக்க நேர்ந்தது. " இங்கு வரும் யாத்திரிகர்கள், தங்களால் இயன்றால் குறைந்தது ஒரு லிட்டர் அளவாவது கங்கையின் புனிதநீர் எடுத்து வந்து சென்னையில் கீழிருக்கும் கைபேசிக்கு தொடர்பு கொண்டால் நாங்களே தங்களது இருப்பிடம் வந்து அந்த நீரைப் பெற்றுக் கொள்கிறோம்- அந்தப் புனித கங்கையின் நீர் கங்கை கொண்ட சோழபுரத்து சிவலிங்கத்துக்கு நித்தம் அபிஷேகத்துக்காக தேவைப் படுகிறது. என்ற வாசகத்தைப் படித்ததும், இருபத்தைந்து லிட்டர் பிடிமானமுள்ள ஒரு கேனை வாங்கி அதில் கங்கை நீர் எடுத்து வந்தேன். கூடவே அந்த விளம்பரத்தின் தொலைபேசி எண்ணையும் மறக்காது எழுதி வைத்துக் கொண்டேன். கங்கை நீரோடு சிதம்பரம் வந்து சேர்ந்தாயிற்று. ஆனால் கைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் அங்கு யாரும் எடுக்காதது ஏமாற்றமாய் இருந்தது. இருந்தாலும், இந்த நீரை எப்படியாவது  கோவிலுக்குள் சேர்த்து விடவேண்டும் என்ற எண்ணம் அதிகமானது.

எதிர்பாராத விதமாக , (அக்னி நக்ஷத்திரம் சமயத்தில்), கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு தானாக அமைந்தது.மறக்காமல் கங்கை நீரையும் எடுத்துக் கொண்டு சென்றோம். சரியாகக் கோயிலுக்குள் சென்றபோது , அப்போது தான் அபிஷேக நேரம் என்று அறிந்து அதிலும் ஒரு மகிழ்ச்சி. கங்கை நீரை அங்கு பூசை செய்பவரிடம் விஷயத்தைச் சொல்லி கொடுத்து விட்டு வந்தோம். கோயில் தஞ்சைப் பெரிய கோவிலின் அத்தனை அம்சத்தையும் கொண்டது போலவே இருக்கும். அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதைக் காணக் கண்கோடி வேண்டும்.கூடை கூடையாக சுடச் சுட சாதத்தை பெரிய ஏணி வைத்து அதிலேறி சாதத்தை அபிஷேகம் செய்து சிவலிங்கத்தை அன்னத்தால் மூடி அபிஷேகம் செய்வார்கள். மிகவும் பிரம்மாண்டமான சிவ லிங்கம் முழுதும் அன்னத்தால் மூடி இருப்பது பார்க்கப் பார்க்க பரவசம். அதைக் கண்டு களிக்க ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூட்டம். அதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்தது தங்களின் இந்தப் பதிவு. 

மிக்க நன்றி .

அன்புடன் 
ஜெயஸ்ரீ ஷங்கர்.

10 மே, 2014 11:43 பிற்பகல் அன்று, Suba.T. <ksuba...@gmail.com> எழுதியது:

Suba.T.

unread,
May 11, 2014, 12:53:36 PM5/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-11 13:39 GMT+02:00 jayasree shanker <jayashr...@gmail.com>:
சென்ற வருடம் இதே நேரம், திரிவேணி சங்கம் சென்றிருக்கையில், அங்கு ஒரு அறிவுப்புப் பலகை தமிழில் இருந்ததைப் ஆச்சரியத்துடன் படிக்க நேர்ந்தது. " இங்கு வரும் யாத்திரிகர்கள், தங்களால் இயன்றால் குறைந்தது ஒரு லிட்டர் அளவாவது கங்கையின் புனிதநீர் எடுத்து வந்து சென்னையில் கீழிருக்கும் கைபேசிக்கு தொடர்பு கொண்டால் நாங்களே தங்களது இருப்பிடம் வந்து அந்த நீரைப் பெற்றுக் கொள்கிறோம்- அந்தப் புனித கங்கையின் நீர் கங்கை கொண்ட சோழபுரத்து சிவலிங்கத்துக்கு நித்தம் அபிஷேகத்துக்காக தேவைப் படுகிறது. என்ற வாசகத்தைப் படித்ததும், இருபத்தைந்து லிட்டர் பிடிமானமுள்ள ஒரு கேனை வாங்கி அதில் கங்கை நீர் எடுத்து வந்தேன். கூடவே அந்த விளம்பரத்தின் தொலைபேசி எண்ணையும் மறக்காது எழுதி வைத்துக் கொண்டேன். கங்கை நீரோடு சிதம்பரம் வந்து சேர்ந்தாயிற்று. ஆனால் கைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் அங்கு யாரும் எடுக்காதது ஏமாற்றமாய் இருந்தது. இருந்தாலும், இந்த நீரை எப்படியாவது  கோவிலுக்குள் சேர்த்து விடவேண்டும் என்ற எண்ணம் அதிகமானது.

எதிர்பாராத விதமாக , (அக்னி நக்ஷத்திரம் சமயத்தில்), கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு தானாக அமைந்தது.மறக்காமல் கங்கை நீரையும் எடுத்துக் கொண்டு சென்றோம். சரியாகக் கோயிலுக்குள் சென்றபோது , அப்போது தான் அபிஷேக நேரம் என்று அறிந்து அதிலும் ஒரு மகிழ்ச்சி. கங்கை நீரை அங்கு பூசை செய்பவரிடம் விஷயத்தைச் சொல்லி கொடுத்து விட்டு வந்தோம். கோயில் தஞ்சைப் பெரிய கோவிலின் அத்தனை அம்சத்தையும் கொண்டது போலவே இருக்கும். அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதைக் காணக் கண்கோடி வேண்டும்.கூடை கூடையாக சுடச் சுட சாதத்தை பெரிய ஏணி வைத்து அதிலேறி சாதத்தை அபிஷேகம் செய்து சிவலிங்கத்தை அன்னத்தால் மூடி அபிஷேகம் செய்வார்கள். மிகவும் பிரம்மாண்டமான சிவ லிங்கம் முழுதும் அன்னத்தால் மூடி இருப்பது பார்க்கப் பார்க்க பரவசம். அதைக் கண்டு களிக்க ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூட்டம். அதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்தது தங்களின் இந்தப் பதிவு. 

​ஓ. மிக்க மகிழ்ச்சி.

சுபா

Suba.T.

unread,
Jul 25, 2014, 1:58:16 AM7/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-09 12:18 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
வணக்கம்.

​வணக்கம்.

மே மாதம் நாம் வெளியீடு செய்த இப்பதிவை ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆண்டு விழா கொண்டாட்டச் சிறப்பு வெளியீடாக இன்று மீள்பதிவு செய்கின்றேன்.​

​இதுவரை வாசித்திராதவர்கள் வாசித்தும் விழியத்தைப் பார்த்திராதவர்கள் பார்த்தும் கருத்துப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வோம்.

சுபா

கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தமிழ் மக்கள் பண்பாட்டின் பெருமையைக் கூறும் ஓர் உன்னதச் சின்னம் ஆகும்.  இக்கோவில் முதலாம் இராசேந்திர சோழன் நமக்கு விட்டுச் சென்றுள்ள தலை சிறந்த மரபுரிமைச் செல்வம் ஆகும்.  தஞ்சைச் சோழர்கள் ஆட்சிக்காலம், 'தமிழகக் கோவில் வரலாற்றில் பொற்காலம்' என்பதை உலகிற்குக் காட்டும் கலைக்கோவிலாகும்.

Suba.T.

unread,
Jul 25, 2014, 2:00:11 AM7/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
கங்கை கொண்ட சோழ புரத்தில் கடந்த மார்ச் மாதம் விழியப் பதிவை செய்யச் சென்றிருந்த போது பதிந்த சில படங்கள்..

Inline image 1

Inline image 2

Inline image 3

மேலும் சில படங்களை மாலை பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Jul 25, 2014, 6:27:28 AM7/25/14
to mintamil, Subashini Tremmel
பல தடவை போய் வந்திருந்தாலும், இதை படித்ததிம் அரும்பயனாக, மறுபடியும் ஆகஸ்ட் 2015ல் கனபொருத்தமான கூட்டத்துடன் போய் வருவதாக உத்தேசம்.

--

coral shree

unread,
Jul 25, 2014, 8:58:16 AM7/25/14
to மின்தமிழ்
​அருமையான பகிர்விற்கு நன்றி சுபா.

அன்புடன்
பவளா​

2014-07-25 11:30 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.
Reply all
Reply to author
Forward
0 new messages