வணக்கம்.24.03.2014 அன்று பாராம்பரிய மிக்க காரைக்குடி, இராமசாமி தமிழ்க் கல்லூரியில் செஞ்சுருள் சங்கக் கருத்தரங்கில் “வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற பொருளில் மாணவ மாணவியரிடையே சிறப்புரையாற்றும் வாய்ப்பு அமைந்தது.
என்னுடைய சிறப்புரையில் இருத்தல், பிழைத்தல், வாழ்தல் ஆகியவற்றிற்கு விளக்கமளித்துப் பேச்சைத் தொடங்கினேன். இருத்தல் பிறர் கட்டுப்பாட்டில் அல்லது ஏதோ ஒன்றின் பிடியில் சிறையில் இருப்பது போன்றது. சிலர் பிழைத்துக் கிடக்கேன் என்று கூறும்போது நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்ற பாரதியின் சொல்லை நினைவு கூர வேண்டும். மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன் மனிதனில்லை. முயற்சிசெய்து கொண்டிருப்பவனே மனிதன்! “ஒவ்வொரு நொடியும் வாழுங்கள்” என்றார்கள்.
நாம் நேற்றைய மனதிற்கு ஒவ்வாத அனுபத்தை எண்ணி உழல்வதிலும் நாளையைப் பற்றிய பயத்திலும் இந்த நொடியைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்று அறிவுறுத்தினேன்.அடுத்து மாஸ்லோவின் தேவைக் கோட்பாடுச் சட்டகத்தின் துணையோடு அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு உணர்வு, தோழமை உணர்வு தேவைகள், அடுத்து அங்கீகாரத்திற்கும், பாராட்டுக்கும் ஏங்கும் தீராத ஏக்கம் உடைய மனிதர்களின் Esteem need, மேலாகக் குறிக்கோளை அடைதல் எனும் உச்சத் தேவை ஆகியவற்றை உரைத்தேன். “குறிக்கோள் இலாது கெட்டேன்” என்ற அப்பரடிகளின் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்துளானை அடையும் குறிக்கோளையும், காந்தியடிகளின் நாட்டின் சுதந்திர வேட்கையையும் கூறிச் S M A R T வழி குறிக்கோள் பற்றி விவரித்தேன்.
ஐந்து சிறந்த சொற்கள்:- “You did a good job" பாராட்டுங்கள். பாராட்டினால் என்ன நிகழும்?. இன்சொல் இனிது ஈன்றலைக் காணுங்கள். பிறகு கடுஞ்சொல் பயன்படுத்த மாட்டீர்கள்.நான்கு சிறந்த சொற்கள்:- ”What is your opinion" கருத்துக் கேட்கிறபோது அதனுடன் உதவியும் வருகிற வாய்ப்பு உண்டு. ஒருவரை மத்தித்துக் கருத்துக் கேட்கிறபோது அவர் பெருமைகொள்கிறார்.மூன்று சிறந்த சொற்கள்:- “If you please" நெஞ்சக் கதவைத் திறக்கும் இரண்டு சாவிகள் "Keys" "Thank you and please"சிறந்த இரண்டு வார்த்தைகள்:- “Thank you" நன்றி சொல்லுங்கள். வணங்குங்கள். வாழ்த்துங்கள்.தவிர்க்க வேண்டிய சொல்:- “நான்” தன்னலத்தை முன்னிறுத்தும் போது உறவுப் பாலம் உடையும்.சிறந்த சொல்:- “You" முன் நிற்பவர் தேவையைப் பூர்த்தி செய்யும்போது, அடுத்தவர் நலத்தைப் பாராட்டும்போது உறவு மேம்படுகிறது. சுற்றியிருப்பவர் தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முயலும்போது நம் மகிழ்ச்சி பாதுகாக்கப் படுகிறது. ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்தால் நம் பிள்ளை தானே வளரும் என்பார்கள். மனைவி அடுத்தவர் மகள். அவரைப் பொற்றினால் நம் பிள்ளையை அவர் வளர்க்க அவருக்குத் தெம்பிருக்கும். அடுத்தவர் பெண்ணான மருமகளைப் போற்றினால் நம் பிள்ளையையும், பேரனையும் அவர் பார்த்துக்கொள்வார். வாழ்க்கை சொர்க்கம் தான்.நகைச்சுவை துணுக்குகள், சிறு கதைகள், திருக்குறள், இலக்கியச் சொற்கள் வழி என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன்.சிறிது நேரமளித்து மாணவச் செல்வங்களை அவர்கள் குறிக்கோள் குறித்தும், பயிற்சியில் உணர்ந்தது குறித்தும் Feed back எழுதக் கேட்டுக்கொண்டேன். அவர்களின் அற்புத எண்ணங்களும், மகிழ்ச்சி அலையும் எனக்கு உற்சாகம் அள்ளித்தருவனவாக அமைந்தன.பேராசிரியர் முனைவர் கீதா நன்றியுரையாற்றினார்.
முனைவர் செ.நாகநாதன், முதல்வர் முனைவர் புவனேஸ்வரி, முனைவர் கீதா, பேராசிரியர் திரு கணேசன் மற்ற ஆசிரியர் படங்களும் மாணவமாணவியர் கருத்தக்களை எழுதும் ஒளிப்படமும் இணைத்துள்ளேன்.
பதிவு சற்று நீண்டுவிட்டது! பொறுத்துக்கொண்டு நண்பர்கள் கருத்து எழுத வேண்டுகிறேன்.நன்றி.அன்புடன்சொ.வினைதீர்த்தான்
”புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!
என்ற அற்புத வரிகளைக் காதலுக்குச் சான்றாக நீங்கள் சுட்டியிருப்பது மிக அருமை ஐயா!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாலுணர்வு தேவைதான் எனினும் அது எல்லை மீறும்போது தொல்காப்பியம் காட்டும் ‘பெருந்திணை’ ஆகிவிடுகின்றது; இதனை “..நெறியின் புறம்செலாக் கோசலம்” எனும் கம்பனின் ’ஆற்றுப் படல’ வரிகள் கொண்டு முத்தாய்ப்பாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வலியுறுத்த ‘குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்ற அப்பர் பெருமானின் வாக்கைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பு.மூச்சுவிட்டுக்கொண்டிருத்தல் வாழ்க்கையில்லை..முயற்சி செய்வதே வாழ்க்கை என்பது அனைவருமே கைக்கொள்ளவேண்டிய அற்புத வரிகள்!
பாரதிதாசனின் குடும்பவிளக்கில் எனக்குப் பிடித்த பகுதி ’முதியோர் காதல்’. கவிஞர்கள் பலரும் இளையோர் காதலையே விடாது பாடிக்கொண்டிருக்க புரட்சிக்கவியோ அதிலும் ஓர் புரட்சியாய் முதியோர் காதலைப் பாடியிருப்பார்.
”புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!என்ற அற்புத வரிகளைக் காதலுக்குச் சான்றாக நீங்கள் சுட்டியிருப்பது மிக அருமை ஐயா!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
“வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பே அருமை சொ.வி. ஐயா. நேர்மறை கண்ணோட்டத்தில் வாழ்க்கையை அணுகும் விதத்தை இளைஞர்களுடம் நீங்கள் தொடர்ந்து பரப்பி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் தன்னார்வப் பணி சிறப்புமிக்கது. பாராட்டுகளும் வாழ்த்துகளும். மாணவர்களும் கவனமுடன் குறிப்பெடுத்துக் கொள்வதைக் காணும் பொழுது மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
பி.கு. ஏன் மாணவிகளுக்கு மட்டும் டெஸ்க் இல்லை என்ற கேள்வி என்னைக் குடைகிறது.
:))).
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நேற்றே கேட்க வேண்டும் என நினைத்தேன் திரு. சொ.வி அவர்களே.செஞ்சுருள் என இந்த சங்கத்திற்கு பெயர் வந்தக் காரணம் என்ன? செஞ்சுருள் என்பதன் பொருள் என்ன.. வித்தியாசமான பெயராக இருக்கின்றது.
2014-03-27 18:29 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
நான்கு சிறந்த சொற்கள்:- ”What is your opinion" கருத்துக் கேட்கிறபோது அதனுடன் உதவியும் வருகிற வாய்ப்பு உண்டு. ஒருவரை மத்தித்துக் கருத்துக் கேட்கிறபோது அவர் பெருமைகொள்கிறார்.மூன்று சிறந்த சொற்கள்:- “If you please" நெஞ்சக் கதவைத் திறக்கும் இரண்டு சாவிகள் "Keys" "Thank you and please"சிறந்த இரண்டு வார்த்தைகள்:- “Thank you" நன்றி சொல்லுங்கள். வணங்குங்கள். வாழ்த்துங்கள்.தவிர்க்க வேண்டிய சொல்:- “நான்” தன்னலத்தை முன்னிறுத்தும் போது உறவுப் பாலம் உடையும்.சிறந்த சொல்:- “You" முன் நிற்பவர் தேவையைப் பூர்த்தி செய்யும்போது, அடுத்தவர் நலத்தைப் பாராட்டும்போது உறவு மேம்படுகிறது
நான்கு சிறந்த சொற்கள்:- ”What is your opinion" கருத்துக் கேட்கிறபோது அதனுடன் உதவியும் வருகிற வாய்ப்பு உண்டு. ஒருவரை மத்தித்துக் கருத்துக் கேட்கிறபோது அவர் பெருமைகொள்கிறார்.மூன்று சிறந்த சொற்கள்:- “If you please" நெஞ்சக் கதவைத் திறக்கும் இரண்டு சாவிகள் "Keys" "Thank you and please"சிறந்த இரண்டு வார்த்தைகள்:- “Thank you" நன்றி சொல்லுங்கள். வணங்குங்கள். வாழ்த்துங்கள்.தவிர்க்க வேண்டிய சொல்:- “நான்” தன்னலத்தை முன்னிறுத்தும் போது உறவுப் பாலம் உடையும்.சிறந்த சொல்:- “You" முன் நிற்பவர் தேவையைப் பூர்த்தி செய்யும்போது, அடுத்தவர் நலத்தைப் பாராட்டும்போது உறவு மேம்படுகிறதுமாணவருக்கு மட்டுமல்ல படித்த எங்களுக்கும் பயன்படும் இனிய சொற்கள். நல்லதொரு வழிகாட்டுதல்.“Thank you" நன்றி
அகரமுதல இணைய இதழில் வெளியிட, இணைப்புப் படங்களின் குறிப்புகளை அனுப்ப வேண்டுகின்றேன்.
இத்தகைய செ ய்திகளை விரிவாக அகரமுதல இணைய இதழுக்கு அனுப்பி விட்டு அதில் வெ ளிவந்த பின் பகிரலாமே!
வாழ்வைக் கொண்டாடுவோம்” – சொ.வினைதீர்த்தான்
படித்தீர்களா? நே ற்று அனுப்பி இருந்தேனே