தஞ்சைப்பெரியகோயில் கல்வெட்டுகள்

131 views
Skip to first unread message

dorai sundaram

unread,
Mar 20, 2018, 12:50:52 PM3/20/18
to mintamil

தஞ்சைப்பெரிய கோயில் கல்வெட்டுகள்-1


தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில், தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தன. கல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும், தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தன. கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:


குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படாவிட்டாலும், கல்வெட்டில் உள்ளவையே. பொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.



கல்வெட்டுப் பாடம்

1  று கழஞ்சரை ஒட்டுவட்டில் ஒன்று பொ(ன்)...........

2  (ஒ)ன்று பொன் இருநூற்றுத்தொண்ணூ(ற்).....

3  (ண்)ணூற்று எழு கழஞ்சேய் கால் - கல(சப்பானை)...

4  (கழஞ்)சேய் கால் வெண்சாமரைக்கைய் ...

5  (பொற்)பூ ஒன்று பொன் ஐங்கழஞ்சாகத் திரு....

6  (தி)ருப்பொற்பூ ஆறிநால் பொன் இருப(த்)...

7  (பொ)ற்பூ மூன்றிநால் பொன் பதிநாற்க(ழஞ்சு)


சிறு விளக்கங்கள்;

ஒட்டுவட்டில் - ஒரு குழிவுப்பாத்திரம்

வெண்சாமரைக்கைய் -  சாமரம் என்னும் விசிறியின் கைப்பிடி (பொன்னால் செய்யப்பட்டதாகலாம்).

பொற்பூ - பொன்னாலான பூ

கழஞ்சு - பொன்னின் எடை. 

ஒரு கழஞ்சு = 20 மஞ்சாடி = 40 குன்றி(மணி) = 4.4 கிராம்

கழஞ்சரை = தற்கால வழக்கில் ஒன்றரைக் கழஞ்சு எனக் கூறுகிறோம். சோழர் காலக்கல்வெட்டுகளில் முழு எண்களுக்கும் “கழஞ்சு” என்னும் எழுத்துத் தொடருக்கும் பிற்பகுதியில் பின்னக் குறிப்பு இடம்பெறும். எனவே கழஞ்சரை. இதுபோலவே, ஐந்தரைக் கழஞ்சு என்பது ஐங்கழஞ்சரை என எழுதப்படும்.


(தொடரும்)

-------------------------------------------------------------

துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.


Suba

unread,
Mar 21, 2018, 5:52:35 AM3/21/18
to மின்தமிழ்
மிகச் சிறப்பு.
 தொடருங்கள்
நன்றி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Bala

unread,
Mar 21, 2018, 6:09:22 AM3/21/18
to மின்தமிழ்
நன்றி திரு துரைசுந்தரம் ஐயா.

இப்படியான கல்வெட்டு புகைப்படங்கள்,  அவற்றின் கணினிமயக்கப்பட்ட எழுத்துக்களுடன் ஒரு தொகுப்பாக (ஏற்கனவே) இருந்தால்,  அத்தகைய தொகுப்பைக்  கொண்டு, Machine Learning மூலம், புதுக் கல்வெட்டுப் புகைப்படங்களை, உடனுக்குடன் கணினிமயமாக்க முயற்சி மேற்கொள்ளலாம்.

நன்றி.

Innamburan S.Soundararajan

unread,
Mar 21, 2018, 6:23:02 AM3/21/18
to mintamil
இங்குள்ள கல்வெட்டுகளின் தொகுப்புகல் ஏற்கனவே பல இடங்களில் -உதாரணமாக,மதிய/மாநில தொல்லியல் துறை, EFEO -இருக்கின்றன.
பல ஆய்வுகள் நடனுள்ளன. தொல்லியல் துறையுடன் தொடர்பு கொள்ளலாம்.
இன்னம்பூரான்

Message has been deleted

dorai sundaram

unread,
Mar 21, 2018, 8:08:07 AM3/21/18
to mintamil

தஞ்சைக்கோயில், முதலாம் இராசராசனின்  வாழ்நாள் கனவு. அதன் தனித்துவம்

வேறெங்கும் காண இயலாது. அதன் கலைக்கூறுகளில் முழுமை (PERFECTION)யைக் 
காட்டியவன் இராசராசன். கல்லெழுத்துக் கலையிலும் இக்கோயிலின் முழுமையை
வேறெந்தக்கோயிலிலும் காணவியலாது. கோயிலின் தெற்குச் சுவரில் ஜகதி என்னும் 
பெரும் நீள்சதுரப்பரப்பின் முன்னாலும், உருள் குமுதம் என்னும் பெரும் உருண்டைப்பரப்பின் 
முன்னாலும் நின்று முதன்முதலாகக் கல்வெட்டு எழுத்துகளைக் காணும்போது -
கல்வெட்டுப் படிக்கும் ஒரு சிறிய பயிற்சி நமக்குக் கைகூடிய நிலையில் - 
நல்ல அச்சில் அழகாகப் பதிப்பித்த ஒரு நூலின் பக்கம் நம் முன்னால் விரித்துவைத்தது
போல் தோன்றி நம்மையறியாது ”கடகட”வென்று படிக்கத்தூண்டும் அந்த உணர்வு
வேறெங்கும் கிடைத்ததில்லை. தஞ்சைக்கோயில்  கல்வெட்டு எழுத்துகள் போல் வேறெந்தக்
கோயில் எழுத்துகளும் நம்மை மயக்கா.  ”கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல்”  என்று ஒரு 
சொற்றொடர் உண்டே, அது இந்த எழுத்துகளுக்கு மட்டுமே உரியதோ என்னும் எண்ணம் எழும்.
இதோ இரு படங்கள். காட்சியழகுக்கு. (முதல் படம் நான்  2011-ஆம் ஆண்டு எடுத்தது.அடுத்தது 
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையினருடையது.)

                                                                                                        படம்-1



                                                                                                                படம்-2        


இந்தப் பதிவுகளின் கல்வெட்டுப்படங்களைப் பார்த்துப் பதிவிலுள்ள
பாடங்களை வரிக்கு வரி படித்துவிட்டால், காளை ஐயா சொன்னதுபோல்
அனைவரும் கல்வெட்டுப் படித்துவிடலாம்.
நன்றி.
சுந்தரம்.




2018-03-21 16:22 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம் ஐயா.

வரிக்குவரி ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தேன்.  இதுபோன்று நாலைந்து படித்து விட்டால், தஞ்சைக் கல்வெட்டுகளை நானாகவே படித்துவிடும் துணிபு வந்துவிடும்.
நல்லதொரு பதிவு.  நன்றி ஐயா.

திருப்பூவணம் கோயில் கல்வெட்டுகளை எல்லாம் தொகுத்து வைத்துள்ளேன். விரைவில் மின்தமிழிலில் பதிவு செய்கிறேன். தாங்கள்தான் அவற்றை வாசித்து அளிக்க வேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages