சேவல் பாக்குலாம் வாங்க!!!

2,104 views
Skip to first unread message

பழமைபேசி

unread,
Aug 9, 2010, 3:52:13 AM8/9/10
to ezhil, முத்தமிழ், மின்தமிழ், tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, ilakkiy...@yahoogroups.com, kalac...@googlegroups.com

நான் கண்ட சேவல்கள்!!!

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சேவல்கள் உருவத்தின் அளவால் சிறுவடை, பெருவடை மற்றும் காட்டுச் சேவல் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முதலான பல பற்றியங்களைச் சென்ற இடுகையில் கண்டோம். அதைப் போலவே, நிறத்தாலும் பல வகைகளாகப் பெயரிடப்பட்டு உள்ளன.

கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன. கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள்எனப்படுகின்றன. கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.

வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவைபேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம் என்பனவாகும். சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை, வீரத்துடன் வாழும் இச்சேவல்கள் தன்னை வளர்த்துப் பராமரிக்கும் பராமரிப்பாளனுக்கு விசுவாசமாகவும், குறிப்பறிந்து வாழக்கூடிய வகையிலும் இருப்பனவாகும்.

சேவல்களுக்குத் தடிமன்(சளி) வந்தால், அதன் குரலை வைத்து எளிதில் தெரிந்து கொள்வோம் என்கிறார் கிணத்துக்கடவு சேவல் பராமரிப்பாளர் முருகன். சளிப்பிடித்த சேவல்களுக்கு, குறுமிளகு, பூண்டு, சிறிதளவில் மிளகாய்த்தூள் அடங்கிய உருண்டைகளைக் கொடுப்பதன் மூலம் அவற்றைக் குணப்படுத்தலாம் என்கிறார் அவர்.

மேலும் வெள்ளைக் கழிச்சல் எனும் நோயைக் குணப்படுத்த இயலாது; வருமுன் காத்தலே மிக அவசியம் என்றும் கூறுகிறார். இந்நோய் தாக்குண்ட சேவல்கள், வெள்ளையாகக் கழிக்கும்; மேலும் உடன் இருக்கும் சேவல் மற்றும் கோழிகளுக்கும் தொற்றுவிடக் கூடிய அபாயமும் உண்டு. சேவல்கள் இருக்கும் இடத்தை, சுண்ணாம்பு கலந்த நீரால் தெளித்து, கட்டுத்தறி முழுதும் சுண்ணாம்புக் கலவையைப் பூசுவதுமூலம் இதைத் தடுத்து நிறுத்தலாம்.

கண்ணைச் சுற்றி பேன்கள் ஆக்கிரமிப்பதைத் தடுக்க, சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டு மற்றும் இஞ்சியை இட்டு, பிறகு அந்த எண்ணெயை கண்களில் இடுவதன் மூலம் பேன் தொல்லையில் இருந்து காப்பாற்ற முடியும்.

நாம் பார்த்த சில சேவல்களின் பெயர் கீழே வருமாறு:

கோழி வள்ளுவர்,
காக வள்ளுவர்,
கீரி வள்ளுவர்,
பூத வள்ளுவர்,
பொன்ற வள்ளுவர்,
பொன்றக் காகம்,
செங்காகம்,
கருங்காகம்,
வெண்காகம்,
செங்கீரி,
காகக் கீரி,
பொன்றக் கீரி,
வள்ளுவர்க் கீரி,
பூதிக் கீரி,
காக பூதி,
பொன்ற பூதி,
செம்பூதி,
பொன்ற வெள்ளை,
புள்ளி வெள்ளை,
காகக் கருப்பு,
பேய்க்கருப்பு,
சேவப்பேடு,
கோழிப்பேடு,
கரும்பேடு,
வெண்பேடு,
பொன்றப்பேடு,
பூதப்பேடு,
காகப்பேடு,
சித்திரப்புள்ளி,
நூலாவள்ளுவர்


கோழி வள்ளுவர்


சித்திரப்புள்ளி


பொன்றக்கீரி


பேய்க்கருப்பு


காகவள்ளுவர்


வள்ளுவர்


செங்காகம்


வெள்ளை வள்ளுவர்


பொன்ற வெள்ளை


பொன்றக்கால் காகச் சேவல்


காகச் சேவல்


காகக்கருப்பு


பொன்றக்கால் காகம்


வள்ளுவக்கீரி


பொன்றக்கால் செங்காகம்


நூலாவள்ளுவர்


பொன்றம்


சாணிப்பச்சக் காகம்


காகவள்ளுவர்


நூலாவள்ளுவர்


பொன்றக் காகம்


காகச் சேவல்



காகக்கருப்பு



சல்லிப்பொன்ற வள்ளுவர்



காகப் பேடு



பூதி வள்ளுவர்



பூதி வள்ளுவர்



பொன்றக் கீரி



பொன்றக் கீரி


காக வள்ளுவர்ப் பேடு

கொங்கு நாட்டின் மேற்குக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, கிராமியத்தைக் கண்ணுறச் செய்வதில் உதவிய வாகன ஓட்டுனர் வசந்த் அவர்களுக்கும், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள வெள்ளக்கிணறு சுப்பன் அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.



முன்னறிவிப்பு: கிட்டத்தட்ட முந்நூறு விதமான சேவல்களைப் படம் பிடிப்பதாக இருந்தோம். எதிர்பாராத காரணத்தால் அது தடைபட்டு விட்டது. எனினும் வரும்காலங்களில் நல்லதொரு வாய்ப்பு கிட்டும் என நம்புகிறோம். விரைவில், சுப்பன் மற்றும் வசந்த் அவர்களின் பேட்டி, எழிலாய்ப் பழமை பேசும் வலைப்பதிவில் இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

--கொங்குநாட்டில் இருந்து உங்கள் பழமைபேசி

N. Kannan

unread,
Aug 9, 2010, 6:32:06 AM8/9/10
to mint...@googlegroups.com
பழமைபேசி:

எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
genetic variation in the same species (polymorphism)? அல்லது
அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!

இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?

உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!

கண்ணன்

2010/8/9 பழமைபேசி <pazam...@gmail.com>

N. Ganesan

unread,
Aug 9, 2010, 6:57:55 AM8/9/10
to மின்தமிழ்

> கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை
> *வள்ளுவர்ச் சேவல்* என அழைக்கப்படுகின்றன.

வளைதல் என்ற வினையடிப் பிறந்த பெயர்: வள்ளுவச் சேவல்.
வளைந்த கீத்து, கீத்தாய் உள்ள வரிகள் கொண்ட சேவல்.

தாளக் கருவி முரசத்தின் தோலை வார்கொண்டு கட்டுவது
வள்ளுவன் தொழில். ’வள்வார் முரசு’ - சங்க இலக்கியம்.
அரசனின் ஆணையை யானை மீதேறி முரசெறிந்து
அறிவிப்பவன் வள்ளுவன், இதனை முதன்முதலில்
கொங்குவேள் செய்த பெருங்கதை தெரிவிக்கிறது.
வையாபுரிப்பிள்ளை வள்ளுவன் பற்றிய கட்டுரையில்
பெருங்கதைக் குறிப்பைக் கொடுத்துள்ளார். குறள்
ஆசிரியர் சமணர் என்று முதலில் நிறுவின கட்டுரை அது.

வாரணச் சண்டை என்று கம்பன் சேவக்கட்டை
வருணித்துள்ளான். கம்பரை அறிந்தோரை நாடினால்
உடனே அந்தச் செய்யுள் கிட்டும். சிலநாளில், நானும் பார்த்துத்
தருகிறேன்.

கம்போடியாவின் அங்கோர் வாட் விஷ்ணு கோவிலில் மிக அழகான
புடைச்சிற்பமாய் சேவற்கட்டு காட்சி உள்ளது. ஊரே கலந்துகொள்கிறதை
போட்டோ மாதிரி சிலைசெய்த சமத்தர்கள் கம்போடியர்.

அன்புடன்,
நா. கணேசன்


N. Ganesan

unread,
Aug 9, 2010, 7:21:01 AM8/9/10
to மின்தமிழ், மு இளங்கோவன்

பழமைபேசியின் பயணங்களுக்கு இம்முறை
ஈரோடு வலைப்பதிவர் வட்டம் மிக உதவியாய் உள்ளது.
அருட்சுடர் பதிப்பகம் ஆரூரன் அவர்களும்,
ஈரோடு கதிரும், பேரூர் திருமடத்து அடியார்
வேளராசி அவர்களும் பேருதவி புரிந்துள்ளனர்.

சிறப்புமிகு தமிழ்க் கல்லூரி (கோவை),
சென்னிமலை, பெருந்துறை பொறியியற்
கல்லூரிகளில் வலைப்பதிவுகள் பற்றிப்
பேசியுள்ளார். நல்ல ஆர்வமாய் மாணவர் பலர்.
http://maaruthal.blogspot.com/2010/08/blog-post_07.html

ஈரோடு வலைப்பதிவர் வட்டம்
மக்கள் சிந்தனைப் பேரவை (ஸ்டாலின்
குணசேகருடன் சேர்ந்து) பல ஊர்களில்
இணையம் பற்றி பட்டறைகள் நடத்தலாம்.
’ஆரூரனைத் தெரியும், வரச் சொல்லுங்கள்’
என்றார் ஸ்டாலின். பெருமழை அண்மையில்
சென்றுவந்த மு. இளங்கோவனார் போன்றோரையும்
சேர்த்துக் கொள்ளலாம்.

மதுரையில் ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்கள் 100+
ஆண்டுகளுக்கு முன்னம் பதித்த
வரலாற்று நூல் ‘மதுரைத் திருப்பணி மாலை’.
என் வேண்டுகோளில் அதனை முனைவர்
பட்டத்திற்கு எடுத்துக்கொண்ட பேரா. பாலசுப்ரமணியன்
திருப்பத்தூர் புனித சிலுவைக் கல்லூரியில்
தமிழ்த் துறையில். அவர் அறிமுக உரை ஆற்ற
மு. இளங்கோ அவர்கள் வலைப்பதிவு
பற்றித் திருப்பத்தூரில் இவ்வாரம் பேசுகிறார்.
விழா சிறப்பாக நடக்கட்டும்!

பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில்
தமிழ் தட்டெழுத்து (அஞ்சல் (அ) போனடிக்),
வலைப்பதிவு தொடங்கல், எல்லாக் கல்லூரியிலும்
ஒரு விருப்பப் பாடமாக வைத்தல் - அரசு செய்தால்
தமிழ் இணையம், பதிவுலகு, விக்கிப்பீடியா, ....
எல்லாம் வளரும். அரிய சொற்கள் தமிழில்
புகும், மரபுகளும், பழைய நூல்களும்
தெரியவரும், பிடிஎப் ஆகும். அரசு செய்யுமா?

நா. கணேசன்


On Aug 9, 5:32 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பழமைபேசி:
>
> எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
> கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
> அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
> சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
> கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
> பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
> genetic variation in the same species (polymorphism)? அல்லது
> அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
> ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
> சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!
>
> இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?
>
> உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
> அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!
>
> கண்ணன்
>

> 2010/8/9 பழமைபேசி <pazamaip...@gmail.com>


>
>
>
>
>
> > நான் கண்ட சேவல்கள்!!!
>

> > தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சேவல்கள் உருவத்தின் அளவால் சிறுவடை, பெருவடை மற்றும் காட்டுச் சேவல் என இனம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது முதலான பல பற்றியங்களைச் சென்ற இடுகையில் கண்டோம். அதைப் போலவே, நிறத்தாலும் பல வகைகளாகப் பெயரிடப்பட்டு உள்ளன.- Hide quoted text -
>
> - Show quoted text -

பழமைபேசி

unread,
Aug 9, 2010, 9:33:17 AM8/9/10
to மின்தமிழ்
நாம் திரட்டும் எதுவும் மரபுவிக்கிக்கு உரியதே.... ஏற்கனவே சகோதரி என்னை
பயனர் கணக்குத் துவங்கி, பதியச் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத்தான்
காலநேரம் அமையவில்லைங்க ஐயா.

On Aug 9, 6:32 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பழமைபேசி:
>
> எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
> கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
> அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
> சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
> கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
> பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
> genetic variation in the same species (polymorphism)? அல்லது
> அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
> ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
> சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!
>
> இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?
>
> உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
> அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!
>
> கண்ணன்
>

> 2010/8/9 பழமைபேசி <pazamaip...@gmail.com>

பழமைபேசி

unread,
Aug 9, 2010, 9:37:54 AM8/9/10
to மின்தமிழ்
//கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்

அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம்
என்று
சொன்னவர் அவர்//

இதையேதானுங்க, நாம, நம்ம சிறுகதைத் தொக்குப்பான, “நனவுகள்”ல விவராமச்
சொல்லி இருக்கோம்.

On Aug 9, 6:32 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> பழமைபேசி:
>
> எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ந்திருப்பார்.
> கட்டை மாட்டு வண்டியின் பாகங்களை முறையாக அறிந்து கொள்வதன் மூலம்
> அப்பெயர்களையே இதர வாகனங்களுக்கும் (விமானம் உட்பட) பயண்படுத்தலாம் என்று
> சொன்னவர் அவர். ஆயினும் நகரமயமாகிவிட்ட நம் வாழ்வில் புதிது புதிதாய்
> கலைச்சொல் உருவாக்குகிறோமே தவிர தமிழிலுள்ள கலைச்சொற்களை நாம்
> பயன்படுத்துவதில்லை! சேவல்களில் 300 வகையா? ஆச்சர்யமாக உள்ளது! இது என்ன
> genetic variation in the same species (polymorphism)? அல்லது
> அவையெல்லாம் வெவ்வேறு இனங்களா? (species or subspecies). உயிரியல்
> ஆய்வாளர்களுக்கு சுரங்கம் போன்ற தரவுகளைத்தந்துள்ளீர்கள். கொங்குநாட்டின்
> சிங்கமே! நீர் உண்மையிலேயே மரபுச் செல்வர்!
>
> இதை நம் மரபுவிக்கியில் நிச்சயம் சேர்த்து வைக்க வேண்டும். அனுமதி உண்டா?
>
> உங்கள் கொங்கு நாட்டுப்பயணம் இப்படி எங்களுக்கும் பயனளிப்பதாய்
> அமையட்டும். மிகவும் பெருமையாக உள்ளது உம்மை நினைத்து!
>
> கண்ணன்
>

> 2010/8/9 பழமைபேசி <pazamaip...@gmail.com>

பழமைபேசி

unread,
Aug 9, 2010, 9:49:14 AM8/9/10
to மின்தமிழ்
மிக்க நன்றிங்க அண்ணா!!!

பழமைபேசி

unread,
Aug 9, 2010, 9:49:36 AM8/9/10
to மின்தமிழ்
தங்களுடைய உதவியும் இதில் அடக்கம்!!!

On Aug 9, 7:21 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> பழமைபேசியின் பயணங்களுக்கு இம்முறை
> ஈரோடு வலைப்பதிவர் வட்டம் மிக உதவியாய் உள்ளது.
> அருட்சுடர் பதிப்பகம் ஆரூரன் அவர்களும்,
> ஈரோடு கதிரும், பேரூர் திருமடத்து அடியார்
> வேளராசி அவர்களும் பேருதவி புரிந்துள்ளனர்.
>
> சிறப்புமிகு தமிழ்க் கல்லூரி (கோவை),
> சென்னிமலை, பெருந்துறை பொறியியற்
> கல்லூரிகளில் வலைப்பதிவுகள் பற்றிப்

> பேசியுள்ளார். நல்ல ஆர்வமாய் மாணவர் பலர்.http://maaruthal.blogspot.com/2010/08/blog-post_07.html

Subashini Tremmel

unread,
Aug 10, 2010, 5:28:58 PM8/10/10
to mint...@googlegroups.com
சேவல்களில் இத்தனை வகை.:! அவற்றிற்கான பெயர்களைப் படங்களோடு பார்க்க அருமை.  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பழமைபேசி.
-சுபா

2010/8/9 பழமைபேசி <pazam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages