குறள் துணுக்கு

10 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 21, 2025, 9:22:07 PM (4 days ago) Dec 21
to மின்தமிழ்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.   (குறள் - 1151)


பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.
— மு. வரதராசன் உரை

எம் மொழியில் சொல்வதானால்:
‘வே! நீரு பிரிஞ்சு போகாம இங்கிணயே கெடப்பேருண்ணு உண்டுமானா அதை எனக்கு இப்ப சொல்லும். ஆனா, பிரிஞ்சுபோயி சட்டுண்ணு வந்திருவேன் சொல்லப்பட்ட காரியம் இருக்குல்லா, அதை நீரு வருவேர்ய் வருவேருண்ணு எவளும் காத்துக் கெடப்பா பாரும், அவளுக்குச் சொல்லும், கேட்டேரா? ‘
— நாஞ்சில்நாடன்
https://nanjilnadan.wordpress.com/2015/01/05/வல்வரவு/
Reply all
Reply to author
Forward
0 new messages