தமிழ்மணி - கம்பர் காலம் - தெளிவு வேண்டும்!

1,551 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jun 2, 2012, 7:25:54 PM6/2/12
to Min Thamizh

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டு, 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் (பக்.56) "கம்பரது காலம் கி.பி. 12. சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்" (ஒவையாரையும் சேர்ப்பது வழக்கம், ஏனோ விட்டுவிட்டனர்) என்று உள்ளது.

கம்பர் காலம் கி.பி. 9 என அண்மைக்கால ஆராய்ச்சி அறிஞர் மு.அருணாசலம் முதலியோர் ஆய்ந்து கூறியுள்ளனர். வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவபண்டாரத்தார் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1974இல் வெளியிட்டுள்ள, "பிற்காலச் சோழர் வரலாறு" நூல் பக்.351இல் பின்வரும் செய்தி இடம் பெற்றுள்ளது.

இனி நம் குலோத்துங்கன் 2 (1133 - 1150) காலத்தில்தான் புகழேந்திப் புலவர், சேக்கிழாரடிகள், கம்பர் ஆகிய புலவர் பெருமக்கள் இருந்தனன் என்று ஆராய்ச்சியாளருள் சிலர் எழுதியுள்ளனர். அன்னோர் கருத்து உறுதி பெறுதற்குத் தக்க சான்றுகள் இன்மையின் அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

1. புகழேந்திப் புலவர் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலமாகிய கி.பி. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,

2. சேக்கிழாரடிகள் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியின் முற்பகுதியிலும் (கி.பி.1178 - 1218),

3. கம்பர் உத்தமசோழன் ஆட்சிக் காலத்திலும் (கி.பி.970 - 985), இருந்தவர்கள் என்பது ஆராய்ச்சியால் புலப்படுகிறது.

ஆகவே, அப்புலவர் பெருமான்கள் மூவரும் வெவ்வேறு காலங்களில் நம் தமிழகத்தில் வாழ்ந்தோராவர்.

இப்பாட நூலில் இடம்பெற்றுள்ள இக்கருத்தை அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து அடுத்த பதிப்பில் இக்குறையை நீக்கவேண்டும்.

முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்

கம்பருடைய காலம் குறித்து முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் முன்வைக்கும் இந்தத் தரவுகள் தொடர்பாக, தமிழறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தக்க சான்றுகளுடன் கூடிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஐந்து நாள்களுக்குள் வரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

- தினமணி ஆசிரியர்

நன்றி:- தினமணி



Geetha Sambasivam

unread,
Jun 2, 2012, 8:31:09 PM6/2/12
to mint...@googlegroups.com
நல்ல ஆய்வுகளைக் கொடுக்கும் என நம்புகிறேன்.  அறிஞர் பெருமக்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

2012/6/3 Kannan Natarajan <thar...@gmail.com>

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டு, 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் (பக்.56) "கம்பரது காலம் கி.பி. 12. சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்" (ஒவையாரையும் சேர்ப்பது வழக்கம், ஏனோ விட்டுவிட்டனர்) என்று உள்ளது.

கம்பர் காலம் கி.பி. 9 என அண்மைக்கால ஆராய்ச்சி அறிஞர் மு.அருணாசலம் முதலியோர் ஆய்ந்து கூறியுள்ளனர். வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவபண்டாரத்தார் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1974இல் வெளியிட்டுள்ள, "பிற்காலச் சோழர் வரலாறு" நூல் பக்.351இல் பின்வரும் செய்தி இடம் பெற்றுள்ளது.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Jun 4, 2012, 4:00:03 PM6/4/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/6/3 Kannan Natarajan <thar...@gmail.com>



கம்பருடைய காலம் குறித்து முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் முன்வைக்கும் இந்தத் தரவுகள் தொடர்பாக, தமிழறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தக்க சான்றுகளுடன் கூடிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஐந்து நாள்களுக்குள் வரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கூகள் தேடலில் திரு.இராம.கி.அவர்கள் கம்பனின் காலம் 9ம் நூற்றாண்டு என்று தன் கருத்தை இங்கு சொல்கின்றார். இப்பகுதியில் விளக்கம் இல்லை. இந்த ஒரு வரி மட்டுமே உள்ளது.


அதோடு கம்பர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்ற தலைப்பில் வரதராஜன் (மா) என்பவர் எழுதிய நூல் ஒன்றும் இருப்பதாகத் தெரிகின்றது. 

சுபா
 

- தினமணி ஆசிரியர்

நன்றி:- தினமணி




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Kannan Natarajan

unread,
Jun 17, 2012, 1:26:56 AM6/17/12
to Min Thamizh

கம்பர் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவுறவில்லை. எனினும், சில அகச் சான்றுகளைக் கொண்டு "கம்பர் மூன்றாம் குலோத்துங்கன் (1178 - 1216) காலத்தவர் என்றும், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியவர்களுடைய முதுமைக் காலத்தில் உடன் வாழ்ந்தவர் என்றும் சில ஆய்வாளர்கள் முடிவு கட்டியுள்ளனர்'' என்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை, "தமிழக வரலாறு மக்களும், பண்பாடும்" என்ற தமது நூலில் (பக்.368) ஆய்வின் முடிவாகக் கூறியுள்ளார். 

கம்பர் காலம் குறித்துப் பெரும்பாலான ஆய்வாளர்கள் கி.பி.12ஆம் நூற்றாண்டு என்பதையே ஒப்புக்கொண்டுள்ளனர்.

கம்பர் காலம் பற்றி அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன், திருச்சிற்றம்பலம், மு.அருணாசலம் முதலியோர் கி.பி. 9ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால், மு.இராகவையங்கார்,
ரா.இராகவையங்கார், எஸ்.வையாபுரிப்பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், டாக்டர் மா.இராசமாணிக்கனார் போன்றோர் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக் கொள்கைகளை உடையவராயுள்ளனர். 

கம்பர் காலம் 9ஆம் நூற்றாண்டே என்பது "கம்பன் அடிப்பொடி" சா.கணேசனின் கொள்கை. இது காரைக்குடி கம்பன் கழகத்தின் கொள்கை.

"இந்திய அரசு வெளியிட்ட கம்பர் தபால் தலையிலும் 9ஆம் நூற்றாண்டு என்று அச்சிடப் பெற்றுள்ளது (கம்பன் அடிப்பொடி கைவண்ணம்)''  என்று தவத்திரு ஊரனடிகள் தமது "கம்பரும் வள்ளலாரும்" என்ற நூலில் (பக்.11) குறிப்பிட்டுள்ளார். 

கம்பர் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு என்று கூறுவதற்கு சான்றுகள் ஏதும் இல்லை. திருக்கோடிக்கா கல்வெட்டு ஒன்று சடையப்ப வள்ளலைப் பற்றிய செய்தி ஒன்றைக் கூறுகிறது. இதை வைத்தே கம்பன் அடிப்பொடி கி.பி. 9ஆம் நூற்றாண்டு என்று முடிவு செய்திருக்கலாம். 

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் வேறு; மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த - கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வேறு என்பதை ஆய்வாளர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சேக்கிழார் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. 

அதன்படி, கம்பராமாயணத்தில் திருத்தொண்டர் புராணத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால் கம்பர், சேக்கிழார் காலத்துக்குப் பிற்பட்டவர்தான் என்பதை முடிவு செய்யலாம். இது பற்றி பெரியபுராணப் பேருரையாளர் சி.கே.சுப்பிரமணிய முதலியார், "கம்பர் சேக்கிழாருக்குப் பின் 40 அல்லது 50 ஆண்டுகளில் வாழ்ந்திருத்தல் கூடும்'' என்று எழுதியுள்ளார். 

கம்பர் காலம் 9ஆம் நூற்றாண்டாக இருந்தால், சேக்கிழாரையும் திருத்தொண்டர் புராணத்தையும் அவர் அறிந்திருக்க இயலாது. கம்பராமாயணத்தில் பெரிய புராணத்தின் தாக்கம் இருந்திருக்காது.

கம்பர் காலம் 12ஆம் நூற்றாண்டாக இருந்தால், அதிலும் சேக்கிழாருக்கு முற்பட்டவராக இருந்தால் சேக்கிழாரைப் பற்றியும் பெரியபுராணத்தைப் பற்றியும் கம்பர் அறிந்திருக்க இயலாது. 

கம்பர், பெரியபுராணத்தின் சாயலில்தான் கம்பராமாயணத்தை எழுதியுள்ளார் என்பதற்கு "கம்பரில் சேக்கிழார்" என்னும் தலைப்பில் பாலூர் கண்ணப்ப முதலியாரின் சொற்பொழிவுக் கட்டுரைகள் மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. அதற்கு அவர், "சிந்தாமணியில் ஒரு தூண்டுதல் பெற்றதும், கம்பராமாயணத்துக்கு ஒரு தூண்டுதலாய் அமைந்திருந்ததுமாகிய பெரியபுராணம்'' என்று டாக்டர் ந.சஞ்சீவி எழுதிய குறிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார். 

கம்பரைப் பற்றி ஆய்வு செய்தவர் ஆய்வாளர் டாக்டர் சு.குலசேகரன். அவர் "தமிழின் பொற்காலத்தில்
ராமானுஜரும், கம்பனும் காலம் - காலநிலை ஆராய்ச்சி" என்ற நூலை 1998இல் எழுதி வெளியிட்டுள்ளார். 

அவரது ஆய்வு முடிவுப்படி, சேக்கிழார் முந்தையவர் என்பதும், கம்பர் காலத்தால் பிந்தையவர் என்பதும் தெரிய வருகிறது. ஆகவே, கம்பர் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பதும்; சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் கம்பர் காலத்தவர் என்பதும் ஏற்புடையதுதான்.


குச்சனூர் கிழார்

Kannan Natarajan

unread,
Jun 17, 2012, 1:36:11 AM6/17/12
to Min Thamizh

கம்பர் 12ஆம் நூற்றாண்டினர் என,

- அபிதான சிந்தாமணி (பக்.349)
- தமிழ்ப் புலவர் அகராதி (பக். 98)
- தமிழ் இலக்கிய அகராதி (பக்.27)
- தமிழ் இலக்கிய வரலாறு (டாக்டர் ச.சாமிமுத்து (பக்.220)
- கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் (தவத்திரு குன்றக்குடி அடிகளார், பக்.13)
- சோழர் வரலாறு (டாக்டர் மா.இராசமாணிக்கனார், பக்.324, 330, 331, 332)

முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. 

கம்பர் 9ஆம் நூற்றாண்டு மற்றும் 12ஆம் நூற்றாண்டினர் எனத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் (மது.ச.விமலானந்தம், பக்.197, தமிழண்ணல், பக்.209, டாக்டர் பூவண்ணன், பக்.202) கூறுகின்றன.

இவ்வாறே இலக்கிய வரலாற்று நூல்கள் பலவும் எந்த நூற்றாண்டு என அறுதியிட்டு உறுதியாகக் கூறவில்லை. 

கம்பர் 9ஆம் நூற்றாண்டினர் எனக் கம்பன் அறநிலை பதிப்பித்த கம்பராமாயணம் பாலகாண்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் துரை.இராசாராம் என்பவர் எழுதியுள்ள கம்பனின் சிற்றிலக்கியங்கள் (பக்.3,4) என்னும் நூலில் கம்பர் என்ற பெயரில் மூவர் இருந்ததாகவும், அவர்கள் முறையே,

- 9ஆம் நூற்றாண்டு
- 12ஆம் நூற்றாண்டு
- 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தனர் எனவும்,

9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரே கம்பராமாயணம் எழுதிய கம்பர் எனவும் குறிப்பிடுகிறார். 

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள (மறுபதிப்பு - 2004) 10ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் (பக்.48) 12ஆம் நூற்றாண்டுக்கு இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன எனவும், 9ஆம் நூற்றாண்டெனக் கருதுவாரும் உண்டெனக் கூறுகிறது.

ஆனால், 12
ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் (திருத்திய பதிப்பு - 2007) 12ஆம் நூற்றாண்டெனத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. 

ஆங்கில இணையதளங்கள் அனைத்தும் கம்பர் 12ஆம் நூற்றாண்டினர் எனக் கூறுகின்றன. இச்சான்றுகளில், 9ஆம் நூற்றாண்டிற்கான சான்றுகள் மிகமிகக் குறைவாகவே கூறப்பட்டுள்ளன. ஆனால், கம்பர் 12ஆம் நூற்றாண்டினர் என்பதற்கு இலக்கியங்களும், வரலாற்றுச் சான்றுகளும் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலத்தில் (கி.பி. 1178 - 1218) வாழ்ந்தவர் கம்பர் எனவும், கம்பரின் காலம் கி.பி. 1180 - 1250 எனவும் குறிப்பிடுகின்றன.

மூன்றாம் குலோத்துங்கனின் மகள் அமராவதியையே கம்பனின் மகன் அம்பிகாபதி காதலித்தான் எனவும், இதனால் குலோத்துங்கனுக்கும் கம்பருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கம்பர் காகதீய மன்னனான முதல் பிராதபருத்திரனிடம் (கி.பி. 1162 - 1197) சென்று தங்கியிருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளன. 

மேற்கூறிய அனைத்துக் கருத்துகளையும் ஒப்புநோக்கும்போது, "இராமாயணம் உள்ளளவும் - கம்பர் பெயர் உள்ளளவும் குலோத்துங்கன் பெயர் நின்று நிலவும் அன்றோ'' என டாக்டர் மா.இராசமாணிக்கனார், தம் "சோழர் வரலாறு" என்ற நூலில் குறிப்பிட்டுள்ள வரிகளும், கம்பரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வான அம்பிகாபதி - அமராவதி காதலும், கம்பர் 12ஆம் நூற்றாண்டினர் எனத் தெள்ளத் தெளிவாகவும் அங்கை நெல்லியென ஐயந்திரிபற அறிவிக்கின்றன. 

கம்பர் 12ஆம் நூற்றாண்டினர் என ஐயந்திரிபின்றித் தெளிவாகவும், உறுதியாகவும் தற்போதைய பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் ஐயத்திற்கிடமின்றி உறுதியாகக் கூறும்வரை, இருவேறு கருத்திற்கு இடமின்றிக் கம்பர் காலம் 12ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.


எ.முத்துக்கிருஷ்ணன்

Geetha Sambasivam

unread,
Jun 17, 2012, 2:42:59 AM6/17/12
to mint...@googlegroups.com
கம்பர் காலத்திலும் குழப்பம். 

2012/6/17 Kannan Natarajan <thar...@gmail.com>


கம்பர் 12ஆம் நூற்றாண்டினர் என ஐயந்திரிபின்றித் தெளிவாகவும், உறுதியாகவும் தற்போதைய பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் ஐயத்திற்கிடமின்றி உறுதியாகக் கூறும்வரை, இருவேறு கருத்திற்கு இடமின்றிக் கம்பர் காலம் 12ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.


எ.முத்துக்கிருஷ்ணன்

நன்றி:- தினமணி

--
360.gif

N. Kannan

unread,
Jun 17, 2012, 8:33:46 AM6/17/12
to mint...@googlegroups.com
2012/6/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>

>
> கம்பர் காலத்திலும் குழப்பம்.
>

பரம வைஷ்ணவணான கம்பனுக்கு பட்டையடித்துப் பார்க்கும் தமிழகம், அவரை எங்கு
வேண்டுமானலும் வைக்கும். மேற்சொன்ன உசாத்துணைகளில் ஏதொன்றும் வைணவ
பாரம்பரியத்தையின் அருகில் கூட வாராததே இதற்கு சாட்சி. வைணவ உலகம் கம்பனை
எங்கு வைக்கிறது என்பது சுவாரசியமாக இருக்கலாம்!

க.>

Hari Krishnan

unread,
Jun 17, 2012, 10:32:58 PM6/17/12
to mint...@googlegroups.com


2012/6/17 N. Kannan <navan...@gmail.com>

பரம வைஷ்ணவணான கம்பனுக்கு பட்டையடித்துப் பார்க்கும் தமிழகம், அவரை எங்கு
வேண்டுமானலும் வைக்கும். மேற்சொன்ன உசாத்துணைகளில் ஏதொன்றும் வைணவ
பாரம்பரியத்தையின் அருகில் கூட வாராததே இதற்கு சாட்சி. வைணவ உலகம் கம்பனை
எங்கு வைக்கிறது என்பது சுவாரசியமாக இருக்கலாம்!

வைணவம், சைவம் அல்லது வேறு எந்த வழியாயினும் சரி, கம்பனைப் பாராயண மரபில் எங்கு வைக்கிறது என்பது யாருக்காவது தெரிந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வடக்கே, துளசி ராமாயணம் அன்றாடப் பாராயண மரபில் இருக்கிறது.  அங்கே ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி என்பது கூட தெரியாது என்று சொல்கிறார்கள்.  (சொன்னவர் ஷிகா ஸென் என்பவர்.  டெல்லியில் இருக்கிறார்.  ரொமிலா தாப்பரின் மாணவி.  என்னுடைய சென்னை ஆன்லைன் தொடர்களைப் படித்துக் கொண்டிருந்தவர் என்பதால் ‘அனேக் ராமாயண்’ என்ற பெயரில் அவர் அரங்கேற்றிய ஒரு கலவை வர்ஷனில், கம்பன்-வால்மீகிக்கு என்னைத் துணைக்கழைத்தார்.  தற்போது அமெரிக்காவின் பல பல்கலைக் கழகங்களில் அனேக் ராமாயண் ப்ரெசெண்ட் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது--என் பெயர் குறிப்பிடப்பட்டுதான்!  இனிமேல் யாராச்சும், பல்கலைக் கழக லெவல் ஆய்வில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று என்னைக் கேட்டால் இதுதான் பதில்.  கபர்தார்.)

அது கிடக்க. கம்பராமாயணத்தில் ஏதாவது ஒரு பகுதியாவது அன்றாட அல்லது வருடாந்திரப் பாராயண மரபில் இருக்கிறதா, எந்தப் பகுதியை, எந்தப் பகுதியினர் (ரீஜன்) பாராயணம் செய்கிறார்கள் என்பது தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன். 

--
அன்புடன்,
ஹரிகி.

N. Kannan

unread,
Jun 18, 2012, 3:06:32 AM6/18/12
to mint...@googlegroups.com
2012/6/18 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> வைணவம், சைவம் அல்லது வேறு எந்த வழியாயினும் சரி, கம்பனைப் பாராயண மரபில் >எங்கு >வைக்கிறது என்பது யாருக்காவது தெரிந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>

ஆழ்வார்திருநகரி ஆட்களிடம் கேட்க வேண்டும். ஆழ்வார்திருநகரிக்கும்
கம்பனுக்கும் நெருக்கமான ஒரு தொடர்பு இருந்திருக்கிறது.

கம்பன் ஆழ்வார்களின் ஸ்ரீசூக்திகள் முன் செல்ல பெருமாள் தொடர வேதம்
பின்னால் வரும் இராமானுஜ மரபைச் சுட்டுவதால் அவர் இராமானுஜருக்கு
பிற்பட்டவராக இருக்க வாய்ப்புண்டு. (சடகோபரந்தாதி).

தமிழக வைணவ மரபில் காவியங்களைப் பாராயணமாக்கும் மரபு இருப்பதாகத்
தெரியவில்லை. சுத்த பக்திப் பனுவல்களை மட்டுமே இவர்கள் இங்கு
(தமிழகத்தில்) பாராயணம் செய்கின்றனர். காவியம் என்றால் பலதும் இருக்கும்.
அதுவொரு கதை. இல்லையா? கூத்து மரபில் கம்ப இராமாயணமுண்டு. சமீபத்தில் கூட
லண்டனில் கம்ப இராமாயணம் நடந்தேறியது. ஹரிகதாவிலுண்டு.

நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Jun 18, 2012, 4:21:53 AM6/18/12
to mint...@googlegroups.com
நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடம் கேட்கலாம்.  நவராத்திரி சமயம் ஒன்பது நாட்களும் ராமாயணப் பாராயணம் நடக்கும் பல செட்டியார் வீடுகளைப் பார்த்திருக்கிறேன்.  சிலர் காலை, மாலை இரு நேரமும் செய்வார்கள்.  அநேகமாய்க் கம்பராமாயணம் தான் கேட்டிருக்கேன்.  வேறு ராமாயணங்களையும் (வால்மீகி, துளசி போன்றோர்) மேற்கோள் காட்டியதாகக் கூட நினைவில் இல்லை. முழுக்க முழுக்கத் தமிழிலேயே சொல்வார்கள்.

2012/6/18 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/6/17 N. Kannan <navan...@gmail.com>



அது கிடக்க. கம்பராமாயணத்தில் ஏதாவது ஒரு பகுதியாவது அன்றாட அல்லது வருடாந்திரப் பாராயண மரபில் இருக்கிறதா, எந்தப் பகுதியை, எந்தப் பகுதியினர் (ரீஜன்) பாராயணம் செய்கிறார்கள் என்பது தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன். 

--
அன்புடன்,
ஹரிகி.

DEV RAJ

unread,
Jun 18, 2012, 5:57:23 AM6/18/12
to mint...@googlegroups.com

கம்பர் காலத்தில் தெளிவு தேடும் நோக்கில்
இழை பிறந்தது; கம்பரின் சமயத்தை ஆராயும்
திக்கில் இப்போது பயணிக்கிறது. அநேகமாக
‘சிந்தனை செய் மனமே ‘ அம்பிகாபதி
படப்பாடலோடு இழை முடிவுறலாம் :))


தேவ்

Hari Krishnan

unread,
Jun 18, 2012, 6:50:03 AM6/18/12
to mint...@googlegroups.com


2012/6/18 DEV RAJ <rde...@gmail.com>

மன்னிக்க வேண்டும்.  ‘கம்பன் கவியில் பெரியவன் என்பது உண்மைதான்; ஆனால் கம்பராமாயணம், யாராலும் பாராயணம் செய்யப்படுவதாகத் தெரியவில்லை’ என்றொரு பெரியவர் என்னிடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் சொன்னது நினைவுக்கு வந்ததால், தெளிவு பெறவும், நான் அப்போது நினைத்த (சொல்லாத) விடை சரிதானா என்று சரி பார்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டேன்.

செட்டிநாட்டில் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது என்று அப்போது சொல்ல நினைத்த, ஆனால் தகவலைப் பற்றிய உறுதியில்லாத, விடைக்கும் அடிப்படை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவிய திரு நா கண்ணன் அவர்களுக்கும், திருமதி கீதா அவர்களுக்கும் நன்றி. 

கால ஆய்வுக்குத் திரும்பலாம்.  எனக்குக் கால ஆய்வில் விருப்பமும் இல்லை; ருசியும் இல்லை.  ஆகவே, வேடிக்கை பார்த்துக்கொள்கிறேன்.

இடையூறுக்கு மன்னிக்கவேண்டி மறுபடியும் விண்ணப்பம்.

N. Kannan

unread,
Jun 18, 2012, 11:32:47 AM6/18/12
to mint...@googlegroups.com
2012/6/18 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> செட்டிநாட்டில் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது என்று அப்போது சொல்ல நினைத்த,
> ஆனால் தகவலைப் பற்றிய உறுதியில்லாத, விடைக்கும் அடிப்படை இருக்கிறது என்பதை
> உறுதிப்படுத்திக் கொள்ள உதவிய திரு நா கண்ணன் அவர்களுக்கும், திருமதி கீதா
> அவர்களுக்கும் நன்றி.
>

பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக்கொன்றை’ நாவலில் ஓரு பாத்திரம் சிதம்பரனார்
அவர்களைச் சந்திக்கும் போது, ‘என்னப்பா! இப்படி ஐயங்கார்களெல்லாம்
கம்பனைக் கைவிட்டு விட்டீர்கள்?’ என்று சொல்வது போல் வரும். ஒரு
ஆழ்வார்திருநகரிக்காரர்தான் இப்படி அங்காலாய்க்க முடியும்.
பி.ஏ.கிருஷ்ணனின் தந்தை பக்ஷி ஐயங்கார் கம்பனில் தோய்ந்தவர். அவர் சரி
பார்த்த கம்பராமாயணம் த.ம.அயிடம் உள்ளது (ஆழ்வார்திருநகரி படி). யாராவது
முன் வந்தால் அதை அப்படியே மின் நகலெடுக்கலாம்!

இதுவும் இழைக்கு புறமானதுதான் :-)

நா.கண்ணன்

Hari Krishnan

unread,
Jun 18, 2012, 2:49:34 PM6/18/12
to mint...@googlegroups.com


2012/6/18 N. Kannan <navan...@gmail.com>

அவர் சரி
பார்த்த கம்பராமாயணம் த.ம.அயிடம் உள்ளது (ஆழ்வார்திருநகரி படி). யாராவது
முன் வந்தால் அதை அப்படியே மின் நகலெடுக்கலாம்!

சென்னை அண்ணா நகரில் குடியிருந்தபோது குறுந்தகடாகவே வாங்கினேன்.  சென்னை நூலகம் சந்திரசேகர் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்தார்.  பிடிஎஃப் கோப்பாக இருக்கும் இது, திஸ்கியில் உள்ளது.  காப்பிரைட் விவகாரம் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டால், இதையேகூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இல்லையென்றால், முழு கம்பராமாயணமும் யுனிகோட் வடிவத்தில் இங்கே இருக்கிறது:

http://www.chennailibrary.com/kambar/ramayanam.html

கம்பராமாயண உரை இயற்றிய வைமுகோ, ஜகநாதாசாரியார் இருவரும் வைணவர்கள்தாம்.  (தென்கலையோ?) 

Hari Krishnan

unread,
Jun 18, 2012, 2:58:06 PM6/18/12
to mint...@googlegroups.com


2012/6/19 Hari Krishnan <hari.har...@gmail.com>

சென்னை அண்ணா நகரில் குடியிருந்தபோது குறுந்தகடாகவே வாங்கினேன். 

இது ஆழ்வார் திருநகரி பதிப்பு என்று முன்பு எப்போதோ திரு நா கண்ணன் அவர்கள் வேறு ஏதோ ஒரு குழுவிலோ அல்லது ப்லாகிலோ பதிந்திருந்தார்.  இதைத்தானே?

N. Kannan

unread,
Jun 18, 2012, 4:43:33 PM6/18/12
to mint...@googlegroups.com
2012/6/18 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> இது ஆழ்வார் திருநகரி பதிப்பு என்று முன்பு எப்போதோ திரு நா கண்ணன் அவர்கள்
> வேறு ஏதோ ஒரு குழுவிலோ அல்லது ப்லாகிலோ பதிந்திருந்தார்.  இதைத்தானே?
>

இது திருத்திய (critical edition) பதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது,
எம்மிடம் உள்ளது பக்ஷிராஜ ஐயங்கார் பார்த்து திருஞானக்கோவையார்
பதிப்பித்த ஆழ்வார் திருநகரி படி. சென்னை நூலகம் எந்தப்படி (edition)
என்று சொல்லவில்லையே!

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Jun 19, 2012, 8:00:32 AM6/19/12
to மின்தமிழ்
> அவரது ஆய்வு முடிவுப்படி, சேக்கிழார் முந்தையவர் என்பதும், கம்பர் காலத்தால்
> பிந்தையவர் என்பதும் தெரிய வருகிறது. ஆகவே, கம்பர் காலம் 12ஆம் நூற்றாண்டு
> என்பதும்; சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் கம்பர் காலத்தவர்
> என்பதும் ஏற்புடையதுதான்.

செயங்கொண்டாருக்கு பேரன் போன்ற காலத்தவர் ஒட்டக்கூத்தர். இருவரும்
கவிச்சக்கரவர்த்திகள்
என்று சோழ அரசனால் பாராட்டப்பெற்றவர்கள். ஒட்டக்கூத்தர் செயங்கொண்டாரைப்
போற்றுகிற இடங்கள் உள்ளன. பின்னர் வந்தவர் சேக்கிழார். சேக்கிழாரின்
தாக்கம்
கம்பனில் இருக்கிறது.

ஒட்டக்கூத்தர் காலத்தில்தான் தமிழ் இலக்கணத்தைச் சிவனிடம் கற்று
அகத்தியர்
உலகத்தாருக்குக் கற்றுக்கொடுத்தார் என்ற கோட்பாடு படைத்து வளர்க்கிறார்.
சைவர்கள் சமண சமயத்தாரின் இலக்கணக் கொடையை மடைமாற்றும் சமயம் இது.
ஒட்டக்கூத்தர் தான் சம்பந்தராக சமணரைக் கழுவேற்ற முருகன் அவதாரம்
எடுத்தான்
என்று பாடுபவர். பின்னர் இது எல்லா பிரபந்தங்களிலும் பாடப்படுகிறது.
கூத்தர் காலத்துக்குப் பின்னர் வந்த கம்பர், நச்சினார்க்கினியர் போன்றோர்
அகத்தியன்
தமிழ்தந்தான் என்ற ஒட்டக்கூத்தர் கருத்தாக்கத்தை வளர்த்தனர். அகத்தியர்
ஆதி இலக்கணம் ஆகிய அகத்தியம் படைத்தார். அவருக்குப் 12 மாணவர்கள்,
ஒருவர் தொல்காப்பியர் என்ற கதைகள் உருவாயின. 12 மாணவர்கள் பெயரும்
யாரும் தரவில்லை. அவற்றைத் தந்தவர் ஆறுமுகநாவலர், நாவலர் பட்டியலை
ஆங்கிலப்படுத்தியவர் சைமன் காசிச்செட்டி.

தமிழை யார் சொல்லிக்கொடுத்தனர்? பௌத்த அவலோகிதனா? அகத்தியனா?
என்ற கேள்வி ஒட்டக்கூத்தர் காலம் வரை இருந்தது. பதுமக்கொத்தர் என்று
கூத்தர் பாடுவதைக் கொடுத்து, பதுமக்கொத்தர் யார்? என்பதற்கு விடையாகக்
கட்டுரை எழுதியுள்ளேன்.

மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தனக்கு முன்வாழ்ந்த
கூத்தரின்
கருத்தாக்கத்தை ஏற்றுப் பாடுபவர்:

உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்கவி னினுமரபினாடி
நிழற்பொலி கணிச்சி மணிநெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்

’தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்’
’தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்
சேர்கிற்பீரேல்
என்றும் அவண் உறைவிடமாம் ஆதலினால் அம்மலையை இரைஞ்சி ஏகி’

கூத்தருக்குப் பின்னர் கம்பர் வளர்த்ததால் அகத்தியர் தமிழ் தந்த கதை
பெருகியது:
வில்லிபாரதப் பாயிரம் ’அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு’
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்" - சேனாவரையர்
தொல்.
உரைப் பாயிரம்.

இதன் வளர்ச்சியை, பாரதியாரின் தமிழ்த்தாய் அறிவுரை வாழ்த்தில் காணலாம்.
தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)

ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். 1

அகத்தியர் கட்டுக்கதைகளுக்கு எதிர்வினை பெரியார், பாரதிதாசன் 20-ஆம்
நூற்றாண்டில் எழுதலாயினர். அகத்தியர் தமிழ்தந்தார் என்ற கதைகளின்
ஒரு மூல ஊற்றாக ஒட்டக்கூத்தர் தமிழ்வரலாற்றில் திகழ்கிறார்.
அவர் கருத்தாக்கத்தை வளர்த்தவர் கவிச்சக்கிரவர்த்தி கம்பர்.
எனவே, 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் கம்பர்.
அவரைப் பற்றி முதலில் குறிப்பிடுபவர் வியாக்கியானச்
சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை. கம்பருக்கு சுமார் 400
ஆண்டு சென்றபின் கொங்கின் இசைராமாயணமாகிய
தக்கை ராமாயணம் பிறந்தது.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 21, 2012, 9:33:41 AM6/21/12
to mint...@googlegroups.com


2012/6/19 N. Ganesan <naa.g...@gmail.com>

கூத்தருக்குப் பின்னர் கம்பர் வளர்த்ததால் அகத்தியர் தமிழ் தந்த கதை
பெருகியது:

ஒட்டக்கூத்தர், கம்பருக்குச் சமகாலத்தவர் அல்லது பிற்பட்டவர் என்பதற்கு வலுவான சான்று, அவர் இயற்றிய உத்தர காண்டத்தில் உள்ளது.  சற்று நீளநெடுக விவரிக்க வேண்டிய இடம். ஆச்சரியம் என்னவென்றால், இந்த உத்தரகாண்டச் சான்றை இதுவரையில் யாரும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.  அல்லது பார்த்ததாகத் தெரியவில்லை.

கால ஆராய்ச்சி என்பதற்குக் கவியின் வாக்கிலிருந்து அகச்சான்று வேண்டும்.  அந்த அமிலச் சோதனைக்கு இந்தப் பாடல் அரிதிலும் அரிதாகச் சிக்கியது.  பலவருடங்களாக ஊறப்போட்டுக் கொண்டிருக்கிற தலைப்பு.  தனியே எழுதுகிறேன்.

‘கர்ணனுடைய பிறப்பு தெரிந்தாலும் தெரிந்தது; கம்பனுடைய பிறப்புதான் தெரியவில்லை’ என்று சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் இரண்டு மூன்று இடங்களில் வேடிக்கையாகச் சொல்கிறார்.

கம்பன், தன் பெயர் கம்பன் என்றுகூட தான் எழுதிய காப்பியத்தில் குறிக்கவில்லை.  சொன்னதெல்லாம் வெண்ணெய்நல்லூர் சடையனைப் பற்றிதான்.  ஆகவே, வெண்ணெய்நல்லூர் சுற்றுவட்டாரத்தில் கம்பன் வாழ்ந்திருக்க வேண்டும்.  எந்த வெண்ணெய்நல்லூர் என்பதற்கு ஆதாரம் வேற வேணும்!  கம்பராமாயணத்திலிருந்து கம்பனைப் பற்றித் தெரிய வருவதெல்லாம் மூன்றே மூன்று குறிப்புகள்:  அவன் வெண்ணெய்நல்லூர் சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்தவன்; வள்ளல் சடையப்பன் அவனை ஆதரித்தான்.  மூணாவது, கம்பன் தமிழில் இந்தக் காப்பியத்தைச் செய்திருப்பதால், கட்டாயம் தமிழன், தமிழன், தமிழனேதான்!

இதைத் தவிர சரஸ்வதி அந்தாதியோ, ஏரெழுபதோ எதுவாயினும் சரி.  கம்பனால் இயற்றப்பட்டது என்பது வாய்மொழி வரலாறே.  Going by strict rules, one cannot take them as authentic documents.  ஆனா, அமெரிக்க யுனிவர்சிடி டாக்டோரல் லெவல் ஆய்வுகளின் பீலா தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். :))

DEV RAJ

unread,
Jun 21, 2012, 10:09:15 AM6/21/12
to mint...@googlegroups.com

Hari Krishnan

unread,
Jun 21, 2012, 11:04:25 PM6/21/12
to mint...@googlegroups.com


On 21 June 2012 19:39, DEV RAJ <rde...@gmail.com> wrote:

ஆமா.  பசுபதி அவர்கள் சொல்வதுபடியான இன்னொரு நம்பிக்கையும் உண்டுதான்.  Going by the same logic. திருக்குறளுக்குத் திருக்குறள் என்ற பெயர் ஏற்பட்டது எப்போதிலிருந்து?  பெருந்தொகை, மணிமேகலை எல்லாம் அந்நூலை முப்பால் என்று குறிப்பிடுகின்றன.  பரிப்பெருமாள் (பரிமேலழகர் அல்லர்.  இவர் வேறு) இயற்றிய உரைப்பாயிரமும் நூலை முப்பால் என்றே குறிப்பிடுகிறது.  அப்ப, திருவள்ளுவர் திருக்குறளை இயற்றவில்லையா?  முப்பாலைத்தான் இயற்றினாரா?

சரி அதுவும் வேணாம்.  திருவள்ளுவருக்குத் திருவள்ளுவர் என்ற பெயர் ஏற்பட்டது எந்தக் காலகட்டத்தில்?  தொடக்க காலத்தில் பொய்யில் புலவர் என்றும் சில சமயங்களில் தேவர் என்றும்கூட அறியப்பட்டவர். 

அப்ப திருக்குறளை இயற்றிவர் திருவள்ளுவர் என்பதை எந்த அடிப்படையில் முடிவுகண்டீர்கள்?

இதான்.  கால ஆராய்ச்சிக்குள்ள நான் கம்முன்னு இருப்பதற்குக் காரணம்.  இப்ப தெர்தா? 

Kannan Natarajan

unread,
Jun 28, 2012, 3:49:47 PM6/28/12
to Min Thamizh

"கம்பர் காவியம்" என்னும் நூலில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, கம்பர் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டே என வலியுறுத்தி அதற்குச் சான்றாக ஒரு தனிப்பாடலைக் காட்டுகிறார்.

"ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூற்றொழித்துத்
தேவன் திருவழுந்தூர் நன்னாட்டு மூவலூர்ச்

சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான்

காரார் காகுந்தன் கதை''.

என்ற பாடலைக்கொண்டு "எண்ணிய சகாப்தம் எண்ணூற்றி ஏழின் மேல்'' என்ற செய்யுள் கொள்ளத்தக்கதன்று. "ஆவின் கொடைச்சகரர்" என்ற செய்யுளே கொள்ளத்தக்கது. கம்பன் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன் என்பதே தேற்றம்''

(கம்பன் காவியம், பக்.96) என வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.

கம்பராமாயணத்தில் மருந்துமலைப் படலத்தில், "அனுமன் சோழநாட்டை ஒத்த வளமான மூன்று உலகங்களைக் கண்டான்" என்று கம்பர் ஒரு பாடலில் கூறுகிறார்.

"சென்னிநாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன்''

இப்பாடல் வரியில், "தியாகமாவிநோதன்" யார் என்பதுதான் கம்பர் காலத்தைக் கணிக்க உதவும் அகச்சான்று. இங்கு குறிப்பிடப்பெறும் அரசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவான். 9ஆம் நூற்றாண்டுக் கம்பர், முந்தைய அரசனை எவ்வாறு பாட இயலும்?

மூன்றாம் குலோத்துங்கனுடைய பல்வேறு பட்டப்பெயர்களில் "இவன் பெரிதும் விரும்பியது தியாகவிநோதன் என்பது. இதனை அவன் காலத்து மக்கள் வழங்கினர். தியாகவிநோதபட்டன், தியாகவிநோத மூவேந்த வேளாண், தியாகவிநோதன் என்ற பெயர்களைக் கல்வெட்டுகளில் காணலாம். ஊர்களுக்கும் இப்பெயர் இடப்பெற்றிருந்தது. "தியாகமேகம்" என்று இராஜராஜன் வழங்கப்பெற்றான். "தியாகசமுத்திரம்" என்று விக்கிரமசோழன் குறிக்கப்பெற்றான். இச்சோழனோ "தியாகவிநோதன்" எனக் கூறப்பெற்றான். இவ்வரிய - முற்சோழர்க்கு இல்லாத - இவனுக்கே சிறப்பாக அமைந்த பெயரைத்தானே கம்பர் பெருமான் "சென்னி நாள் தெரியல் வீரன் தியாகமாவிநோதன்" என்று தமது இராமாயணத்துள் கூறி மகிழ்ந்தனர்'' (மா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு, பக்.25).

அவர் மற்றொரு சான்றும் காட்டுகிறார். "கம்பர் பெருமான் இக் குலோத்துங்கசோழன் அவைப்புலவர் என்பது அறிஞர் ஒப்புக்கொண்டதேயாகும். அவர் இச்சோழனிடம் மனம் வேறுபட்டவராய் ஓரங்கல்லைக் கோநகராகக்கொண்டு பெருநாட்டை ஆண்ட காகதீய அரசன், முதற் பிரதாப ருத்திரன் (கி.பி.1162 - 1197) என்பவனிடம் சென்று தங்கியிருந்தார் என்பது உண்மையாயின், "கம்பர் சோழர்க்குப் பகைவனான காகதீய அரசனிடம் சென்றிருந்தார் எனக்கோடலே பொருத்தமாகும்'' (பக்.242) எனக் குறிப்பிடுகிறார். ஓரங்கல் என்பது இன்றைய "வாரங்கல்" என்ற ஊராகும். இங்கு சிலகாலம் வாழ்ந்ததால்தான் கம்பர் மசரதம் (கானல் நீர்), அக்கட போன்ற தெலுங்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

"அவனி முழுதுண்டும் அயிராபத த்துள்

பவனி தொழுவார் படுத்தும் - புவனி

உருத்திரா உன்னுடைய ஓரங்கல் நாட்டில்

குருத்திரா வாழைக் குழாம்''.

எனக் கம்பர் அம்மன்னனைப் பாடியதாகத் "தமிழ் நாவலர் சரிதை" கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்து, அவனோடு போரிட்டவனே பிரதாபருத்திரன் ஆவான்.

கம்பர் பாடிய பாடல் அகச்சான்றாலும், சோழர் வரலாற்றை ஆராய்ந்த கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், மா.இராசமாணிக்கனார், வையாபுரிப்பிள்ளை,
இரா.இராகவையங்கார் ஆய்வு முடிவுகளாலும் கம்பர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டே எனத் துணியலாம்.

சபா.அருணாசலம்

Nagarajan Vadivel

unread,
Jun 28, 2012, 9:55:25 PM6/28/12
to mint...@googlegroups.com
//9ஆம் நூற்றாண்டுக் கம்பர், முந்தைய அரசனை எவ்வாறு பாட இயலும்?//
முந்தைய அரசனைப் பாடுவது வரலாறு
அவர் வாழ்நாளுக்குப் பின் வாழ்ந்த அரசர்களைப் பாடுவது புனைவு
இது என் காத்துட்டுக் கருத்து
நாகராசன்

2012/6/29 Kannan Natarajan <thar...@gmail.com>
--

Kannan Natarajan

unread,
Jul 7, 2012, 10:22:35 PM7/7/12
to Min Thamizh

மூன்று சடையப்ப வள்ளல்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு அன்று. ஒரு சடையப்ப வள்ளல்தான் இருந்துள்ளார். சடையப்பவள்ளல் பெளத்த சமயத்தைச் சார்ந்தவர். கம்பர் உவச்சர் குலத்தில் பிறந்து, சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பெற்று, பெளத்த சமயத்தில் சேர்ந்து, "அவிநவகவிநாதன்" என்ற பெயரில் பெளத்த சமயக் கருத்துகளை ஏற்றுக்கொண்டு நாடெங்கிலும் கவிபாடி வலம் வந்தவர். கம்பர் தன் மகனுக்கு பெளத்த சமய சிறுதெய்வமாகிய "அம்பாபதி" தெய்வத்தின் பெயரை இட்டுள்ளார். அம்பாபதி (அம்பிகாபதி) தான் இயற்றிய கோவையில்,

 

 "... .... அவிநவகவிநாதன்

 விழுந்த ஞாயிறு எழுவதன்முன் மறை வேதியருடன் ஆராய்ந்து

 எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவிபாடினது எழுநூறே!"

 என்று தன் தந்தையின் சிறப்பைக் கூறி, 700 பாடல் வீதம் 15 நாள்களில்  8,200 பாடல்கள் எழுதியதாகக் கூறுவான்!கம்பர் தாம் இயற்றிய இராமகாதையில் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து (விரிகடல் உலகம்...) பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் பாடிய பாசுரத்தில்,
"தொண்டையர்கோன் வணங்கு நீள்முடிமாலை வயிரமேகன்'' என வருவதால், நந்திவர்மனது பட்டப்பெயர் வயிரமேகன். இவனது காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. கம்பர் இயற்றிய இராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டதை விளக்கும்,

"எண்ணிய சகாப்தம் எழுநூற்று ஏழின்மேற் சடையன் வாழ்வு

 நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்பநாடன்

 பண்ணிய ராமகாதை பங்குனி அத்தநாளில்

 கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே''.

 என்பதுவாம். 
சாலிவாகன சகாப்தம் 807 பங்குனி மாதம் 8ஆம் நாளிலே (அட்டமியில்) திருவரங்கத்தில் அரங்கன் முன்னால் அரங்கேற்றினான். ஆதலால், திருவரங்கத்தில் கம்பனுக்குத் தனியாக சந்நிதி ஒன்றுண்டு. கம்பர் இராமகாதையைத் திருவெண்ணெய்நல்லூரில் அரங்கேற்றியதாக சிலர் கூறுவர். மேற்கண்ட பாடலில், "வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன் பண்ணிய ராமகாதை என்றுள்ளதே தவிர, வெண்ணெய்நல்லூரில் அரங்கேற்றம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை".

பெளத்தரான சடையப்பவள்ளல் பின்னாளில் வைணவராகி, "சடகோபர்" எனத் தம் பெயரை மாற்றிக்கொண்டு வைணவத்தை ஆதரித்தார். அப்போது கம்பர் "சடகோபர் அந்தாதி" எனும் நூலைப் பாடினார். பெளத்த சமயக் கொள்கையில் பிடியாய் நின்ற கம்பர், "ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக் காசில் கொற்றத்து இராமன் கதை அரோ'' என்று கூறியுள்ளமையால், இவர் பெளத்தர் எனத் தெற்றெனப் புலனாகும். மேலும், திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணியே கம்பரை இராமகாதை பாடத்தூண்டியது எனலாம்.

கவிச்சக்கரவர்த்தி என்று "நாதமுனிகளால்" (கி.பி 9) கம்பர் சிறப்பிக்கப்பட்டதாலும், திருவரங்கத்தில் கம்பர் தம் இராமகாதையை அரங்கேற்றம் செய்ததாலும், வயிரமேகன் எனும் நந்திவர்மன் பெயரை திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுக் கூறியுள்ளதாலும் (நந்திவர்மன் காலம் கி.பி.9) கம்பரது காலம் கிபி. 9ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

பேராசிரியர் கா.காளிதாஸ்

Kannan Natarajan

unread,
Jul 7, 2012, 10:31:44 PM7/7/12
to Min Thamizh

கம்பர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதற்கான சான்றுகள் வருமாறு:

 

 "ஆவின்கொடைச் சகரர் ஆயிரத்துநூறு ஒழித்து''

 "எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு''

என்னும் இரு செய்யுள்களில் (தனிப்பாடல்கள்) முதல் செய்யுளுக்கு சாதவாகன சகாப்தம் ஆயிரத்து நூறு (கி.பி.1178) என்றும், இரண்டாவது செய்யுளுக்கு சாதவாகன சகாப்தம் எண்ணூற்று ஏழு (கி.பி.885) என்றும் பொருள் கொள்ளலாம்.

"க்ஷத்திர சூடாமணி" என்னும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்டது சீவகசிந்தாமணி.
க்ஷத்திர சூடாமணி கி.பி. 898இல் இயற்றப்பட்டது. ஒரு நூலில் உள்ள கருத்துகள் இன்னொரு நூலில் இடம்பெற வேண்டும் என்றால், அந்நூல் குறைந்தது இரு நூற்றாண்டுகள் மக்களிடையே பரவி, பாராட்டப்பட்டிருக்க வேண்டும். திருத்தக்கதேவரை விட விருத்தப்பாவை சிறப்பாகக் கையாண்டவர் கம்பர். அதனால் கம்பராமாயணம் 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் அவர் கையாண்ட ஓர் உத்தியை கம்பர் தமது இராமாயணத்திலும் கையாண்டுள்ளார். இதனால் கம்பராமாயணம் பெரியபுராணத்திற்குப் பின்னையது என்பது தெளிவாகிறது.

"சென்னி நாட்டெரியல் வீரன் தியாகமா விநோதன் பொன்னி நாட்டு'' (மருந்துமலைப் படலம் - 58) என்று தம் காலத்து மன்னரைக் கம்பர் போற்றுகிறார். "தியாகமா விநோதன்" என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனின் சிறப்புப் பெயர். இவனுடைய ஆட்சிக்
காலம் கி.பி. 1178 - 1216 ஆகும்.
ஒட்டக்கூத்தர், கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளலின் தந்தை சங்கரன் என்ற சிற்றரசனிடம் உதவியாளராக இருந்தவர். கூத்தரின்  சிறப்பை அறிந்த காங்கேயன் என்பவன் அவரை உயர் பதவியில்  அமர்த்தினார். புதுவைக்கு அருகில் இருந்த திரிபுவனம் என்னும்   ஊரில் இருந்த சோமன் என்பவரும் கூத்தரை ஆதரித்தார்.

ஒட்டக்கூத்தர், விக்கிரசோழன் (கி.பி.1118 - 1135), இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1135 - 1150), இரண்டாம் இராஜராஜன் (கி.பி.1150 - 1173) ஆகிய மூன்று மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் அரசவைப் புலவராக இருந்துள்ளார். கம்பர் ஒட்டக்கூத்தருக்குப் போட்டியாக இருந்ததாக வரலாறு இருப்பதால், கம்பர் வாழ்ந்த காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டாகும். புதுவையைச் சேர்ந்த சடையப்பன் என்னும் சரராமன் என்பவரால் ஆதரிக்கப்பட்டவர் கம்பர்.

 தமிழ் இலக்கிய வரலாற்றில் பல சடையப்ப வள்ளல்கள் காணப்படுகின்றனர். கம்பவர்மனுக்கு உதவிய சடையப்ப முதலியார், ஒட்டக்கூத்தரை ஆதரித்த சடையப்ப சங்கரன், கம்பரை ஆதரித்த சடையப்ப சரராமன் என்பவர்கள் மூவரும் வேறு வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். சடையப்பன் என்னும் பெயரை வைத்து கம்பர் வாழ்ந்த காலத்தை நிறுவ முடியாது.

 சி.கே.சுப்பிரமணிய முதலியார், "ஆசிரியர் (சேக்கிழார்) வாழ்ந்த காலம் குலோத்துங்கன் (இரண்டாம்) - (அநபாயன்) காலம் என்பது இப்போது ஆராய்ச்சியாளர் பலரும் கொள்ளும் கொள்கை. அஃது இப்போதைக்கு (கி.பி.1950) எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகும். கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார் ஆசிரியர் காலத்துக்கு முன்பும், ஒட்டக்கூத்தர் அவர் காலத்து உடனாகவும், கம்பர் அவர் காலத்துக்குப் பின்னரும் வாழ்ந்திருந்தனர் என்னலாம்'' என்று கூறியுள்ளார். இம் மன்னனின் காலம் கி.பி.1133 - 1150.

இவை தவிர, கம்பர் தமது இராமாயணத்தில் கையாண்டுள்ள பல சொற்களும், அணிகளும், கி.பி.12ஆம் நூற்றாண்டையும் அதற்குப் பின் ஆன காலத்தையும் சார்ந்தவை என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே, கம்பர் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது தெளிவு.

கா.மு.சிதம்பரம்

Karuannam Annam

unread,
Jul 8, 2012, 1:55:22 AM7/8/12
to mint...@googlegroups.com
1.கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவுவதால் கிடைக்கின்ற பலன்களை அறியத்தருமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
2.ஆய்வுகள் கம்பனை பௌத்ததம் தழுவியவர் என்றும் பௌத்தக்கொள்கையை விடாமல் ஆசைபற்றி அறையலுற்றேன் என்கிறார் என்றெல்லாம் இட்டுச் செல்கிறது.
ஐயத்திற்கு இடமளிக்கும் இதனையெல்லாம் விட்டுவிட்டு கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான் 
2012/7/8 Kannan Natarajan <thar...@gmail.com>
--

OAGAI NATARAJAN

unread,
Jul 8, 2012, 2:16:33 AM7/8/12
to mint...@googlegroups.com


2012/7/8 Karuannam Annam <karu...@gmail.com>

1.கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவுவதால் கிடைக்கின்ற பலன்களை அறியத்தருமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
வரலாற்றின் புதிரொன்று அவிழ்க்கப்படுமானால் தொடர்புடைய பல செய்திகள் கிடைக்கும். இப்பதில் தொடர்ந்து வரலாற்றால் என்ன பயன் என்று கேட்கப்படுமானால் பின்னும் பின்னும் விரித்தெழுத வேண்டியிருக்கும்
 
 
 
2.ஆய்வுகள் கம்பனை பௌத்ததம் தழுவியவர் என்றும் பௌத்தக்கொள்கையை விடாமல் ஆசைபற்றி அறையலுற்றேன் என்கிறார் என்றெல்லாம் இட்டுச் செல்கிறது.
ஐயத்திற்கு இடமளிக்கும் இதனையெல்லாம் விட்டுவிட்டு
 
ஐயம் என்பதே அறிவின் விதை.
 
கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
 
 
கம்பன் பாடலை ரசிக்க இரண்டென்ன கணக்கு?
 

N. Kannan

unread,
Jul 8, 2012, 3:19:42 AM7/8/12
to mint...@googlegroups.com
தாரகையின் புன்சிரிப்பில் மலர்ந்த இக்கட்டுரையில் இரண்டொரு விஷயங்கள்
என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன:

2012/7/8 Kannan Natarajan <thar...@gmail.com>


> மூன்று சடையப்ப வள்ளல்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
> அவ்வாறு அன்று. ஒரு சடையப்ப வள்ளல்தான் இருந்துள்ளார். சடையப்பவள்ளல் பெளத்த
> சமயத்தைச் சார்ந்தவர். கம்பர் உவச்சர் குலத்தில் பிறந்து, சடையப்ப வள்ளலால்
> ஆதரிக்கப்பெற்று, பெளத்த சமயத்தில் சேர்ந்து, "அவிநவகவிநாதன்" என்ற பெயரில்
> பெளத்த சமயக் கருத்துகளை ஏற்றுக்கொண்டு நாடெங்கிலும் கவிபாடி வலம் வந்தவர்.
> கம்பர் தன் மகனுக்கு பெளத்த சமய சிறுதெய்வமாகிய "அம்பாபதி" தெய்வத்தின் பெயரை
> இட்டுள்ளார். அம்பாபதி (அம்பிகாபதி) தான் இயற்றிய கோவையில்,
>

கம்பன் முதலில் பௌத்தனாக இருந்தான் எனும் சேதி. இதுவரை கேள்விப்படாதது!


> பெளத்தரான சடையப்பவள்ளல் பின்னாளில் வைணவராகி, "சடகோபர்" எனத் தம் பெயரை
> மாற்றிக்கொண்டு வைணவத்தை ஆதரித்தார். அப்போது கம்பர் "சடகோபர் அந்தாதி" எனும்
> நூலைப் பாடினார்.


இங்கு இடிக்கிற! சடகோபரந்தாதியை பேராசிரியர் வாசித்தது இல்லையோ? ;-)

கொடை கொடுப்பவன் மதம் மாறினவுடன் கம்பன் மதம் மாறி ஆழ்வார்களில் தோய்ந்து
கம்ப காவியம் பாடியிருக்க முடியுமா? எனும் கேள்வி ஒன்று எழுகிறது.

அதே சமயம், வைணவர்கள் ‘கம்பராமாயணத்தை’ தலையில் வைத்துக் கொண்டாடாமல்
இருப்பதற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். கம்பன் ஒரு கன்வெர்ட்
என்பது காரணமாகலாம் (சரித்திரம் எவ்வளவு ரகசியங்களை உள்ளடக்கி
வைத்திருக்கிறது)

> கவிச்சக்கரவர்த்தி என்று "நாதமுனிகளால்" (கி.பி 9) கம்பர்
> சிறப்பிக்கப்பட்டதாலும், திருவரங்கத்தில் கம்பர் தம் இராமகாதையை அரங்கேற்றம்
> செய்ததாலும், வயிரமேகன் எனும் நந்திவர்மன் பெயரை திருமங்கையாழ்வார்
> குறிப்பிட்டுக் கூறியுள்ளதாலும் (நந்திவர்மன் காலம் கி.பி.9) கம்பரது காலம்
> கிபி. 9ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
>

ஆழ்வார்களின் காலக்கணக்கில் நிறையச் சிக்கல் இருப்பது புலனாகிறது. இவர்
நாதமுனிகளும் 9ம் நூற்றாண்டு என்கிறார், திருமங்கையாழ்வாரும் 9ம்
நூற்றாண்டு என்கிறார். அது எப்படி?

நா.கண்ணன்

N. Kannan

unread,
Jul 8, 2012, 3:29:22 AM7/8/12
to mint...@googlegroups.com
2012/7/8 Kannan Natarajan <thar...@gmail.com>

> "க்ஷத்திர சூடாமணி" என்னும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்டது சீவகசிந்தாமணி.
> க்ஷத்திர சூடாமணி கி.பி. 898இல் இயற்றப்பட்டது. ஒரு நூலில் உள்ள கருத்துகள்
> இன்னொரு நூலில் இடம்பெற வேண்டும் என்றால், அந்நூல் குறைந்தது இரு நூற்றாண்டுகள்
> மக்களிடையே பரவி, பாராட்டப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி யூகிக்க வேண்டிய காரணமென்ன? பாரதி காலத்தில் பிரபலமாக இருந்த
தாகூரை மொழிபெயர்க்கவில்லையா? இல்லை பாரதியை அவன் வாழ்ந்த காலத்திலும்,
அவன் மறைந்தவுடனேயும் தமிழகம் தலையில் வைத்துக் கொண்டாடவில்லையா? இருநூறு
ஆண்டுகள் ஏன் பொறுக்க வேண்டும்? நம்மாழ்வார் மறைந்த சில ஆண்டுகளுக்குள்
அவர் பாடலை மதுரைச் சங்கத்தில் இட்டு பெருமை சேர்த்தாகக் கதைகள் கூறும்.

இக்கட்டுரையின் கணிப்பே சரியாக இருக்க வாய்ப்புள்ளது. கம்பன் ஆழ்வார்கள்
காலமல்ல. பின்னால் வந்தவர் என்று கருதுவதே பொருந்தும்.

நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Jul 8, 2012, 3:55:37 AM7/8/12
to mint...@googlegroups.com
ஆஹா, இது முற்றிலும் அரிய செய்தி.

2012/7/8 Kannan Natarajan <thar...@gmail.com>



பேராசிரியர் கா.காளிதாஸ்
நன்றி:- தினமணி

--

Karuannam Annam

unread,
Jul 8, 2012, 4:26:03 AM7/8/12
to mint...@googlegroups.com


2012/7/8 OAGAI NATARAJAN <enge...@gmail.com>



ஐயம் என்பதே அறிவின் விதை.
 
 நன்மொழி!
 
கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
 
 
கம்பன் பாடலை ரசிக்க இரண்டென்ன கணக்கு?
ஒரு பேச்சுக்கு இரண்டு என்று சொன்னேன். ”ரெண்டு சோறு போடு” என்பதுபோல.
எத்தனை வேண்டுமானாலும் இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தாருங்கள்.
அன்புடன்,
சொ.வினைதீர்த்தான்.
 

Hari Krishnan

unread,
Jul 8, 2012, 6:06:14 AM7/8/12
to mint...@googlegroups.com


2012/7/8 Karuannam Annam <karu...@gmail.com>

1.கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவுவதால் கிடைக்கின்ற பலன்களை அறியத்தருமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கால ஆய்வுகள், வலுவான காரணிகள் இல்லாதவரையில் எந்த முடிவுக்கும் இட்டுச் செல்ல ஒண்ணாதவையே. 

 
2.ஆய்வுகள் கம்பனை பௌத்ததம் தழுவியவர் என்றும் பௌத்தக்கொள்கையை விடாமல் ஆசைபற்றி அறையலுற்றேன் என்கிறார் என்றெல்லாம் இட்டுச் செல்கிறது.

அடுத்தது, நம்மாழ்வார் சமணர்; திருமங்கையாழ்வர் பௌத்தர் என்றெல்லாம் ஓட்டிக்கொண்டே போகலாம்.
 
ஐயத்திற்கு இடமளிக்கும் இதனையெல்லாம் விட்டுவிட்டு கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.

உண்மை.  ஒன்று சொல்லட்டுமா?  இத்தகைய அபத்த ஆராய்ச்சியாளர்கள் கம்பனையோ, ஒட்டக்கூத்தரையோ உள்ளம் செலுத்திக் கற்றவர்கள் இல்லை.  கம்பருடைய காலத்துக்குப் பிறகே ஒட்டக்கூத்தர் காலம்--அல்லது சமகாலம்--என்பதற்கான அகச்சான்றை, ஒட்டக்கூத்தர் வாக்கின் மூலமாகவே நிறுவுகிறேன். 

உத்தரகாண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் அன்று என மறுத்தால், அதே ஏரணத்தின்படி, மற்ற காண்டங்களை இயற்றியவன் கம்பன் அல்லன் என்றுதான் சொல்ல வேண்டி வரும்.  கம்பன், தன் ராமாயணத்தில் தன் பெயரை ஓரிடத்திலும் சொல்லிக்கொள்ளவில்லை. 

தெளிவுவேண்டும் தெளிவுவேண்டும் என்று சொல்லிக்கொண்டே தெளிவாகக் குழப்புகிறார்கள்.  கம்பர்-ஒட்டக்கூத்தர் கால ஒப்பீட்டுக்கான சான்றுடன் வருகிறேன்.  நான் எடுத்துக் கொள்ளும் கேள்வி ஒன்பதா பன்னிரண்டா என்பதன்று.  ஒட்டக்கூத்தர் கம்பருக்கு முன்னா, பின்னா என்பதே.

Nagarajan Vadivel

unread,
Jul 8, 2012, 6:26:41 AM7/8/12
to mint...@googlegroups.com
தமிழ் ஆய்வில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஆய்வு கால அடிப்படையில் நிகழ்வுகளை வரையறுத்தல்
ஓரளவே கிடைத்திருக்கும் இலக்கிய ஆவணங்களையும் கல்வெட்டு ஆதாரங்களையும் வைத்து நாம் குத்து மதிப்பாகவே காலத்தை நிறுவி வருகிறோம்
கம்பரின் காலத்தை 9-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டுவரை நீட்டி ஆழ்வார்களின் கால அடிப்படையில் 9-ஆம் நூற்றாண்டு என்றும் மன்னர் வாழ்ந்த கால அடிப்படையில் 12-ஆம் நூற்றாண்டு என்றும் குறிப்பிடுவர்
தமிழகத்தில் கமப ராமாயணம் எழுதுவதற்குமுன் ராமாயணம் தமிழகத்தில் இலக்கியத்தில் வாய்மொழி நிகழ்வுகளில் வழங்கி வருவதை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்

கம்ப ராமாயணத்துக்கும் வால்மீகி ராமாயணத்துக்கும் இடையே உள்ள சிறு மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு அறிஞர் பாண்டுரங்கம் என்பவர் ஆய்வு செய்து கம்பர் ஆழ்வார்கள் வலியுறுத்திய பக்தி உணர்வை வெளிப்படுத்த ஆழ்வார்கள் பாடல்களை மூலமாகப் பயன் படுத்தியிருக்கலாம் என்று கூறும் அவர் கூற்றுப்படி கம்பர் ஆழ்வார்கள் காலத்துக்குப் பிற்பட்டவர் என்று எடுத்துரைக்கிறார்.
Inline image 1
Inline image 2
Inline image 3



Inline image 4
Inline image 5
Inline image 6
நாகராசன்

2012/7/8 Karuannam Annam <karu...@gmail.com>

kamban3.jpg
kamban2.jpg
kamban5.jpg
kamban6.jpg
kamban4.jpg
kamban1.jpg

Karuannam Annam

unread,
Jul 8, 2012, 9:34:48 AM7/8/12
to mint...@googlegroups.com
கருத்துக்கு நன்றி திரு ஹரிகி, பேரா. திரு நாகராசன்.

DEV RAJ

unread,
Jul 9, 2012, 6:08:50 AM7/9/12
to mint...@googlegroups.com
On Sunday, 8 July 2012 00:19:42 UTC-7, NaKa wrote:

>>> அதே சமயம், வைணவர்கள் ‘கம்பராமாயணத்தை’ தலையில் வைத்துக் கொண்டாடாமல்
இருப்பதற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். கம்பன் ஒரு கன்வெர்ட்
என்பது காரணமாகலாம் (சரித்திரம் எவ்வளவு ரகசியங்களை உள்ளடக்கி
வைத்திருக்கிறது) <<<




’சாக்கியம் கற்றோம் சமண் கற்றோம் ‘ என்று பாடிய ஆழ்வார் ஒருவரையும்
கன்வெர்ட் என்றுதானே சொல்வர். அவரை மட்டும்  வைணவம்
 ”உருவிய வாளை உரையிலிடாதார்” என்று ஏன் தலைமேல்
வைத்துக் கொண்டாடுகிறது ?




தேவ்

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 6:49:50 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/9 DEV RAJ <rde...@gmail.com>

On Sunday, 8 July 2012 00:19:42 UTC-7, NaKa wrote:

>>> அதே சமயம், வைணவர்கள் ‘கம்பராமாயணத்தை’ தலையில் வைத்துக் கொண்டாடாமல்
இருப்பதற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். கம்பன் ஒரு கன்வெர்ட்
என்பது காரணமாகலாம் (சரித்திரம் எவ்வளவு ரகசியங்களை உள்ளடக்கி
வைத்திருக்கிறது) <<<

இந்தக் கருத்தை நான் மாற்றிக்கொண்டுவிட்டேன்.  அண்மையில்தான் வேளுக்குடி கிருஷ்ணனுடைய திருப்பாவை உபந்யாசப் பதிவுகளைக் கேட்க நேர்ந்தது.  முப்பத்தோரு சொற்பொழிவுகள்.  முழுவதும் கேட்கச் சுமார் 50+ மணி நேரங்கள் பிடிக்கலாம்.  அதற்கு மேலும்கூட ஆகலாம்.  ஒவ்வொரு சொற்பொழிவும் சுமார் இரண்டு மணி காலத்தை அண்மிக்கிறது அல்லது கடக்கிறது.

எத்தனை இடங்களில் கம்பனை மேற்கோள் காட்டியும், மிகமிக உயர்வாகவும் ஆழ்வார் பாசுரங்களோடு ஒப்பிட்டும் பேசுகிறார் என்பதைப் பொறுமை இருப்பவர்கள் கேட்கலாம்.  வால்மீகியோடு கம்பன் மாறுபடும் இடங்கள், மற்ற நயவுரைகள் போன்றவை ஆன்மீக நோக்கில் பேசப்பட்டுள்ளன.  இலக்கியவாதிக்கு இங்கே இடமில்லை.  அந்த அங்கியைக் கழற்றி வைத்துவிட்டுக் கேட்டால் உண்மையிலேயே ஆனந்தம்தான்.   அதுவும் ஆண்டாள்--கம்பன் பார்வை அற்புதமாக இருக்கிறது.

இங்கே மொத்தச் சொற்பொழிவுகளும் அடங்கிய பக்கத்துக்கான சுட்டி இருக்கிறது:

http://www.youtube.com/playlist?list=PL10999F30A856B383

டௌன்லோட் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.  இருபத்து நான்கு சொற்பொழிவுகளைக் கேட்டுவிட்டேன்.  (இவற்றில் 17, 18 இரண்டும் இல்லை; ஒரு சில, இரண்டுமுறை பதியப்பட்டுள்ளன.)  கம்பனிடத்தில் இவர் காட்டும் விசேஷ கவனமும், நயங்களும் ரசிக்கத் தக்கவை.  வைணவர்களிலும் கம்பனை உச்சிமேல் வைத்துக் கொண்டாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Dhivakar

unread,
Jul 9, 2012, 7:25:18 AM7/9/12
to mint...@googlegroups.com
கம்பராமாயணத்தில் திளைத்தவர் யாராக இருந்தாலும் அங்கிருந்து வெளியே வரவே முடியாது. கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டாமல் இருக்கவே முடியாது (எல்லா விஷயத்திலும்) - இது என்னுடைய வார்த்தையல்ல, கண்ணதாசனுடையது. 

கம்பராமாயணம் பழைய காலத்தில் வைணவ ஆச்சாரியர்கள் எழுத்துக்களில் காணப்படுவதில்லை என்பது உண்மைதான் ஆனாலும் கம்பராமாயணம் அவர்கள் அனைவரும் படித்தனரா என்பது பெரிய கேள்வியாகும். வால்மீகிதான் முதல் பிரஃபெரென்ஸ். ஆழ்வார்கள் எழுதிய பாசுர எழுத்தைக் கொண்டே ஒரு வைஷ்ணவ ஆச்சாரியர் (பெரிய வாச்சான் பிள்ளை?) ஒரு நான்கு பக்கத்தில் முழு ராமாயணம் (பட்டாபிஷேகம் வரை) எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன்.. 

19, 20 ஆம் நூற்றாண்டில்தான் கம்பராமாயணம் மிக அதிகமாக படிக்கப்பட்டதாக என்னிடம் சில தகவல்கள் உள்ளன. அதற்கு முன்னால் கம்பராமாயணம் எந்த அளவில் பிரபலமாக இருந்தது என்பது பற்றி ஆராயவேண்டும். 

எனக்குத் தெரிந்து இந்தக் கால கட்டத்தில் உபன்யாஸம் செய்யும் நிறைய வைணவப் பெரியவர்கள் கம்பராமாயணத்தைப் படித்து வைத்திருக்கிறார்கள். 

வேளுக்குடியின் எல்லா உபன்யாஸங்களிலும் கம்பன் நிச்சயம் ஆஜராகிறார் என்றே நினைக்கிறேன்.. அப்படி ஒரு வசீகர சக்தி கம்பருக்கு. தி,தி,தே சானலில் ரிஷிகள் பற்றிய வேளுக்குடி (தொடர், தினமும் இரவு 10.30) சொல்கையில் இராமர் பற்றி ஒரு சின்ன பேச்சு வந்தது. இந்த இடத்திலும் கம்பனைத்தான் அவர் குறிப்பிட்டார். ஆரண்யகாண்டப் பாடல் இரண்டு வரி சொல்லி விவரித்த பாங்கே அழகு.


2012/7/9 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 7:34:04 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/9 Dhivakar <venkdh...@gmail.com>

கம்பராமாயணம் பழைய காலத்தில் வைணவ ஆச்சாரியர்கள் எழுத்துக்களில் காணப்படுவதில்லை என்பது உண்மைதான்

இருந்தபோதிலும் உள்ளதில் மிக உயர்ந்த உரையாகக் கொண்டாடப்படுவது வைமுகோ உரைதானே?  இவருடைய உரையில் ஒரு சில இடங்களில் எனக்குக் கருத்து மாறுபாடு உண்டு.  ஆனாலும், வைமுகோ உரை தனிச் சிறப்பு வாய்ந்ததுதான்.  (உவேசா நூலகப் பதிப்பும் அசஞா பதிப்பும் மரியாதைக்குரிய பதிப்புகளே என்பதை மறுக்கவில்லை. உவேசா நூலகப் பதிப்பில் காணப்படும் concordance குறிப்புகள் மயிர்க்கூச்சமெடுக்க வைக்கும்.  நான் படித்த முதல் பதிப்பு.  நூலக இரவல்.)

அடுத்ததாக கம்பராமாயணச் சிங்கமாக விளங்கியவர் வைமுகோ அவர்களின் மாணவரும் சென்னை விவேகாநந்தா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவருமாக இருந்த ஜகநாதாசாரியார்.

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 7:37:19 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/9 Dhivakar <venkdh...@gmail.com>

19, 20 ஆம் நூற்றாண்டில்தான் கம்பராமாயணம் மிக அதிகமாக படிக்கப்பட்டதாக என்னிடம் சில தகவல்கள் உள்ளன. அதற்கு முன்னால் கம்பராமாயணம் எந்த அளவில் பிரபலமாக இருந்தது என்பது பற்றி ஆராயவேண்டும். 

இதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

விஜயராகவன்

unread,
Jul 9, 2012, 8:20:23 AM7/9/12
to மின்தமிழ்
On Jul 8, 9:19 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>>
> அதே சமயம், வைணவர்கள் ‘கம்பராமாயணத்தை’ தலையில் வைத்துக் கொண்டாடாமல்
> இருப்பதற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். கம்பன் ஒரு கன்வெர்ட்
> என்பது காரணமாகலாம் (சரித்திரம் எவ்வளவு ரகசியங்களை உள்ளடக்கி
> வைத்திருக்கிறது

இந்த ‘சரித்திர ரஹசியம்’ பெரிய விஷயம் இல்லை. ஸ்ரீவைஷ்ணவத்தில்
ஆழ்வார்கள் பாசுரங்கள் "canonical text" என ஆக்கியபிறகு, மரபு அங்கே
இறுகலாகி விடுகிறது. அதனால் அதற்கு பின் வரும் இலக்கியங்கள் எவ்வளவு
மதிப்பு இருந்தாலும், அதை orthodox "canonical text" இல் ஏற்றுவது
கடினம். அல்லது மரபே எப்படி மேலும் வரும் இலக்கியங்களை "canonical text"
ஆக்குவதற்க்கு ஒரு வழி வைத்தால் , "canonical text" இன் தொகை அதிகமாகும்,
அப்போது கம்பரும், கம்பராமாயணமும் அதில் சேர்த்திருக்கலாம். ஆனால்
சரித்திரம் அப்படி இல்லை, தமிழ் வைணவத்தின் “ஆதி புத்தகங்கள்”
ஆழ்வார்களுடன் நின்றுபோய் விடுகிரது.


வகொவி

Dhivakar

unread,
Jul 9, 2012, 8:28:29 AM7/9/12
to mint...@googlegroups.com
நான் பழைய காலத்தில் எனச் சொன்னது 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹரிகி. என்னிடம் ஆச்சாரிய வைபவ மஞ்சரி (வடகலை) உள்ளது. எங்கும் கம்பனைக் காணோம். 

1350 இலிருந்து 1650 வரை விஜயநகரத்தார் ஆட்சி, 1650 லிருந்து 1800 வரை மராத்தியர் ஆட்சி.. இந்த இரு அரசுகள் ஆண்ட போது வடமொழிசெல்வாக்கு மிக அதிகமாக இருந்த நேரத்தில் கம்பரின் தமிழ் எந்த இடத்தில் இருந்தது என்பதைதான் நானும் தேடி வருகிறேன். தெலுங்கில் 1800 ஆம் ஆண்டுவாக்கில் தியாகய்யாவால் பாடப்பட்ட கீர்த்தனைகள்தான் ராமாயணத்தோடு முழுதும் சம்பந்தப்பட்டது. அவர் காலத்தில் புகழ்பெறவில்லை. வாயளவில்தான் பாடப்பட்ட பாடல்களாக இருந்தன. அவருக்கு முன்னால் இருந்த ராமதாசரின் கீர்த்தனைகளில் கூட ராம காவியம் முழுதாக இல்லை.  இந்தப் பாடல்கள் எல்லாம் பிரபலப்படுத்தப்பட்டது 20ஆம் நூற்றாண்டில்தான். காரணம் வால்மீகியின் ராமாயணம் அந்த அளவில் ஊறிப்போய்விட்டது. இன்று கூட தமிழக எல்லைக்கப்பால் கம்பரை யார் எனக் கேட்போர்தான் உண்டு. நம் சம்பத் இங்கு ஐந்தாறு முறை கம்பரைப் பற்றிப் பேசியுள்ளார் - தெலுங்கில். எல்லோரும் புதிதாகக் கேட்டார்கள். 

என்ன சொல்ல வருகிறேன் என்றால் தென்னகத்தில் தமிழும் தெலுங்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இரண்டாம் பட்சமாகத்தான் ஆட்சியாளர்களால் கருதப்பட்டதால் கம்பராமாயணம் எந்த அளவுக்கு அப்போது படிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சைவ மடங்கள் திருமுறைகளைப் பார்த்துக்கொண்ட அளவில் மற்ற அமைப்புகள் தமிழ் இலக்கியங்களில் அக்கறைக் காட்டியதாக தெரியவில்லை.

எனக்கு இன்னும் விவரங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன். சங்கரநாராயணன் எனும் என் நண்பர் இதே வேலையாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருக்கிறார். 

அதுவரை என்னால் எதுவும் முழுதாக, ஆதாரபூர்வமாக எழுதமுடியவில்லை.. எல்லாமே ஊகங்களில் அடிப்படையில்தான் வருகின்றன. இதுவரை கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கையில் கம்பரின் காலமும் நாதமுனி அடிகளின் காலமும் ஒன்றாக வருகிறது. சிற்பி பாலசுப்பிரமணியம் இதை முழுதுமாக ஆதரிக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் போதாது என்றே தோன்றுகிறது.

அதனால்தான் உங்கள் அகச் சான்றுகள் விவரம் கிடைத்தபோது அதிசயித்தேன். இப்படித்தான் நோண்டவேண்டும் போல.. அடியேனும் கம்பராமாயணமும் உத்தரகாண்டமும் சாதாரணமாகப் படித்துள்ளேன். ஆனால் உங்களளவில் இன்னும் ஆழமாகப் போகவில்லை. உங்களால்தான் நிறைய தரமுடியும். தமிழுக்குச் செய்யும் மாபெரும் தொண்டாக நினைத்து நீங்கள் இன்னும் விவரமாக இதைப் போல எழுதவேண்டும். அகச் சான்றுகள் மட்டுமே ஆதாரத்தின் உயிர்நாடிகள்.

நன்றி
திவாகர்

 


2012/7/9 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 8:44:11 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/9 Dhivakar <venkdh...@gmail.com>

நான் பழைய காலத்தில் எனச் சொன்னது 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹரிகி. என்னிடம் ஆச்சாரிய வைபவ மஞ்சரி (வடகலை) உள்ளது. எங்கும் கம்பனைக் காணோம். 

வேளுக்குடி தென்கலையோ?  என் இளவயது நண்பன் வடகலை--ரங்கனுடைய உறவினன். (ஆனால் ரங்கன் என்ன கலை என்பது எனக்குத் தெரியாது!).  அவர்கள் வீட்டில் பாதுகா ஸஹஸ்ரம் முதலான புத்தகங்களோடு (பூஜைக்குரிய?) கம்பராமாயணத்தின் மிகமிகப் பழைய பதிப்பு ஒன்றைப் பார்த்திருக்கிறேன்.  யுத்த காண்டத்தை உயுத்த காண்டம் என்று அச்சிட்டிருப்பார்கள். 

ஆனால் ஒன்று.  நங்கநல்லூரில் ஒரு கடும் நாத்திகர், பிராமண எதிர்ப்பாளர் உண்டு.  புலவர்கோ  சீனிவாசன் என்று பெயர்.  மிக வயதானவர்.  இப்போதும் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.  ரங்கனுக்கும் பரிச்சயம் உள்ளவர்.  ‘கம்பனைக் கற்காதவன் தமிழ் கற்காதவனே’ என்று ஓங்கிப் பேசுவார்.  பரிமேலழகர் உரையையே மனப்பாடமாக ஒப்பிப்பார்.  அப்படி--சில விதிவிலக்குகள் தவிர்த்து--நாத்திகரும் ஏற்ற கம்பனை மறுப்பார் இருப்பார்களோ?  குறிப்பிட்ட ஒருசில பிரிவினருக்கு மட்டும் மனத்தடை இருந்திருக்குமோ? 

போகட்டும்.  புத்தியை இதற்குமேல் கம்பனில் செலுத்தினால் போதும்.  Let me stop myself with my core sustenance.  உங்களுடைய ஆய்வுகள் வெற்றிபெற வாழ்த்துகள்.  களப்பணியில் இறங்க வசதியில்லாத சூழலில் உள்ளேன். மற்ற வகைகளி்ல் நான் பயன்பட்டால் அது என் பேறு.

Dhivakar

unread,
Jul 9, 2012, 8:47:20 AM7/9/12
to mint...@googlegroups.com
கம்பராமாயணம் மருத்துமலைப்படலம் - 58

வன்னி நாட்டின் பொன்மௌலி
  வானவன் மலரின் மேலான்
கன்னிநாள் திருவைச் சேர்ந்த
  கண்ணனும் ஆளும் காணிச்
சென்னிநாள் தெரியல் வீரன்
  தியாகவிநோதன் தெய்வப்
பொன்னிநாட்டுவமை வைப்பைப்
  புலன் கொள நோக்கிப் போனான்

ஹரிகி,

இந்த தியாக விநோதன் யார்.. கொஞ்சம் எழுதுங்களேன்..

2012/7/9 Dhivakar <venkdh...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 9:06:00 AM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/9 Dhivakar <venkdh...@gmail.com>

ஹரிகி,

இந்த தியாக விநோதன் யார்.. கொஞ்சம் எழுதுங்களேன்..

சோழன் என்பதே பெரும்பாலான உரைகளில் காணப்படும் விளக்கம்.  எந்தச் சோழன் என்பதற்கான குறிப்பில்லை.  ஆனால், சோழன் என்றே பலரும் உரை கண்டிருக்கிறார்கள்.  வைமுகோ உரையின் குறிப்பிட்ட பக்கத்தை இணைத்திருக்கிறேன்.  ‘கம்பர் தமது தேசாபிமானத்தால் சோழநாட்டை உவமையாகக் கூறினார்’ என்று வைமுகோ விளக்குகிறார்.  வர்த்தமானன் பதிப்பிலும் இதை ஒட்டிய உரையே காணப்படுகிறது.  அசஞா உரையின் பிரதியைக் கேட்டு வாங்குகிறேன்.  இதில் கருத்து வேறுபாடு இருப்பதாக எனக்கு நினைவில்லை.

நீங்கள் கேட்ட பாடலுக்கு முந்தைய பாடல்களில் time-zones பற்றிய குறிப்பும் இருப்பதைக் காணலாம்.
img027.jpg

OAGAI NATARAJAN

unread,
Jul 9, 2012, 11:22:47 AM7/9/12
to mint...@googlegroups.com
கம்பரின் காலம் 13ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்டது என்பதற்கான சான்றுகள்:

அ.  ஒட்டக்கூத்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாமல் கல்வெட்டு சான்றுகளாலும் இலக்கிய சான்றுகளாலும் நிறுவப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த மூன்று சோழ அரசர்களின் காலத்தில் அவர் இருந்திருக்கிறார். இவர் உத்தரகாண்டத்தை எழுதினார் என்பது கம்பன் இவர் காலத்துக்கு முற்பட்டவன் என்பதற்கு சான்றாகக் கொடுக்கப் படுகிறது. ஆனால் அதை ஏற்க முடியாதபடிக்கு பல வரலாற்று அம்சங்கள் தென்படுகின்றன.

ஒட்டக்கூத்தர் ஒரு வீர சைவர். இவர் ஒரு வைணவ காவியத்தின் இறுதிப் பகுதியை உளமாற எழுதுவாரா என்பது முதல் கேள்வி. மறந்தும் புறந்தொழாக் கோட்பாடு சில வைணவர்களுக்கு மட்டுமே உரியதாயினும் வீர சைவர்கள் சைவ வழிபாட்டு மேன்மையில் தீவிரமானவர்கள். வீர சைவ மடத்தை ஏற்படுத்தியவர் ஒட்டக்கூத்தரே. ஒட்டக்கூத்தர் தீவிர சைவர் என்பது மட்டுமல்லாமல் ஒரு வைணவ வெறுப்பாளராகவும் இருந்திருக்கிறார். இதற்குச் சான்றாக அவரது இரண்டு பாடல்களைத் தர முடியும்.

க.தில்லைத் திருமன்றின் முன்றில் சிறுதெய்வத் தொல்லைக் குரும்பு.......
       (குலோத்துங்கன் உலா பாடல் 77-78)
கா. பொன்னில் குயிற்றிப் புறம்பின் குரும்பு அனைத்தும்
       முன்னர் கடல் அகழில் மூழ்கிவைத்த சென்னி........
      (ராராஜன் உலா - பாடல் 65-66)

(முழு பாடல்கள் என்னிடம் இல்லை. சேகரித்துத் தருகிறேன்.)

ஆ. புலவர்கள் மன்னனன்றி மற்றோரால் ஆதரிக்கப்படும் நிலை எந்நாளும் இருக்கலாமென்றாலும் 13ஆம் நூற்றாண்டில் சோழ அரசு வீழ்ந்த பிறகு அதற்கான சாத்தியக் கூறுகள் மிகப் பிரகாசமாகின்றன. பொதுவாக புலவர்களால் மன்னர்கள் போற்றப்படும் மரபில் மன்னர் இடத்தில் சடையப்ப வள்ளல் வைக்கப்படுவது, சோழ அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட வேளாள சமுதாயத்தினரின் அதிகாரமிக்க எழுச்சியுடன் பொருத்திப் பார்க்கலாம். கம்பர் எழுதியதாகச் சொல்லப்படும் ஏர் எழுபது நூலும் இதற்குப் பொருந்தி வருகிறது.

இ. சடையப்ப வள்ளல் பற்றிய  மூவலூர் மற்றும் திருகோடிக்காவல் பாடல் கல்வெட்டுகளில் அவை வெட்டப்பட்ட காலம் குறிப்பிடப்படவிட்டாலும் கல்வெட்டு எழுத்தமைதியை வைத்து அக்கல்வெட்டுகள் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஈ. "சென்னிநாள் தெரியல் வீரன்  தியாகவிநோதன் தெய்வப்பொன்னிநாட்டுவமை..." என்ற கம்பன் வரிகளில் வரும் சோழ மன்னன் 13ஆம் நூற்றான்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்கன். அவனுக்கே அந்தப் பட்டப் பெயர் உண்டு. வீழ்ச்சியடைந்த சோழப் பேரரசில் வலிமையாக ஆட்சி செய்த கடைசி மன்னன் இவனே ஆவான். அதனாலேயே அவனது ஆட்சி ஒப்புமை வைக்கப்படுகிறது. இவனது மெய்கீர்த்தியும் பல ஆண்டுகள் மக்கள் மத்தியில் பிரபலமாயிருந்தது. இவனது காலம் கி.பி.1178-1218. ஒட்டக்கூத்தர் இவனுக்குக் காலத்தால் முற்பட்டவர்.


இங்கு கொடுக்கப்பட்ட கடைசி ஆதாரம் ஏறக்குறைய கம்பனின் காலத்தை 13ஆம் நூற்றாண்டு என்பதாக உறுதி செய்கிறது. கம்பன் குறிப்பிட்ட தியாகவிநோதன் மூன்றாம் குலோத்துங்கன் இல்லை என்று நிறுவினாலொழிய கம்பன் காலத்தை 13 ஆம் நுற்றான்டுக்கு முன் செலுத்துவது இயலாத காரியம். மேலும் கம்பன் மூன்றாம் குலோத்துங்கனின் சமகாலத்தவனாகக் கூட இல்லாமல் அதற்குப் பிற்காலத்தியவனாகவே இருக்க வேண்டும் என்பது அவனது ஆட்சியை உவமையாகச் சொல்வதிலிருந்து யூகிக்கலாம்.

ஓகை.







2012/7/9 Hari Krishnan <hari.har...@gmail.com>


--

N. Kannan

unread,
Jul 9, 2012, 2:46:24 PM7/9/12
to mint...@googlegroups.com
2012/7/9 விஜயராகவன் <vij...@gmail.com>:

இந்த ‘சரித்திர ரஹசியம்’ பெரிய விஷயம் இல்லை. ஸ்ரீவைஷ்ணவத்தில்
ஆழ்வார்கள் பாசுரங்கள் "canonical text" என ஆக்கியபிறகு, மரபு அங்கே
இறுகலாகி விடுகிறது. அதனால் அதற்கு பின் வரும் இலக்கியங்கள் எவ்வளவு
மதிப்பு இருந்தாலும், அதை orthodox "canonical text" இல் ஏற்றுவது
கடினம். அல்லது மரபே எப்படி மேலும் வரும் இலக்கியங்களை "canonical text"
ஆக்குவதற்க்கு ஒரு வழி வைத்தால் , "canonical text" இன் தொகை அதிகமாகும்,
அப்போது கம்பரும், கம்பராமாயணமும் அதில் சேர்த்திருக்கலாம். ஆனால்
சரித்திரம் அப்படி இல்லை, தமிழ் வைணவத்தின் “ஆதி புத்தகங்கள்”
ஆழ்வார்களுடன் நின்றுபோய் விடுகிரது.


நல்ல அலசல். பலரும் பயனுற பங்களித்துள்ளனர்.

இன்னொன்றும் தோன்றுகிறது. நாதமுனிகளைத் தொடர்ந்து, இராமானுஜர் காலத்தில்
அவர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால். ஆழ்வார் தமிழ்ப்பனுவல்களை
ஸ்ரீசூக்தம் என்று முன்மொழிவது. அது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவரை
religious orthodoxy என்பது வடமொழியில் இயங்கி வந்தது. அதன் முன் ‘மாத்ரு
பாஷாவும் தேவபாஷாவும் ஒன்று என்று கணக்குச் சொல்வது எளிதல்ல. எனவேதான்
வடி கட்டி, வடிகட்டி, ‘பகவத் விஷயம்’ மட்டும் பேச் பனுவல்களை "canonical
text" என்று அறிவித்தனர். கம்பனையும் இணைத்துக் கொண்டால் இன்னும் பல
பிரச்சிகளை சமாளிக்க வேண்டி வந்திருக்கும். அது அப்படியே நிலை பெற்று
விட்டது. [பின்னால் ஆழ்வார்களை ரிஷிகள் என்று பேசும் அளவிற்கு நெஞ்சங்களை
மாற்றியிருக்கின்றனர்)

அகவழியில் வரும் ஸ்ரீவைஷ்ணவம் அகத்துறைப்பாடல்களைக்கூட அதிகம்
கையாளுவதில்லை - வியாக்கியானத்தில். பின்னால் உரைக்கு, உரை எழுதும்
புருஷோத்தம நாயுடு நிறைய சங்கப்பாடல்களை மேற்கோள் காட்டுவார்.

பாரதி காலத்தில் கூட வடமொழி உயர்வு பெரிதாகவே இருந்திருக்கிறது, என்பதை
அவனது கட்டுரை ஒன்று பேசும். ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாவிற்கு
‘’மகாமகோபாத்யாய’ எனும் பட்டம் கொடுக்கப்பட்டபோது, ‘அது எப்படி? ஒரு
தமிழாசிரியருக்கு இத்தகைய உயர்ந்த பட்டத்தை அளிக்கலாம்?’ எனும் கேள்வி
எழுந்திருக்கிறது. பாரதி உ.வே.சாவைப் பெரிதும் போற்றி பாட்டு
எழுதுகிறான்.

இவ்விழையில் சுட்டியபடி, வேளுக்குடி போன்ற சமகால ஹரிகதா வித்வான்கள்
கம்பனை விடவில்லை என்பது மகிழ்வான விஷயமே. ஆழ்வார் திருநகரிக்கும்
கம்பனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Jul 9, 2012, 2:52:04 PM7/9/12
to mint...@googlegroups.com
ஓகையாரே!

தாங்கள் சடகோபர் அந்தாதியையும் உங்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டால்
கூடுதல் பலனளிக்கும். கம்பன், ‘தமிழ் பின்னால் போகும் பெருமாள்’ பற்றிச்
சொல்கிறான். இது போல் நிறைய எடுக்கலாம்.

http://www.chennailibrary.com/kambar/sadagoparanthathi.html

பிரபந்த இலக்கியம் பற்றிப்பேசும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் இப்படிக்
கூறுகிறது...

// 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பிரபந்த
இலக்கியங்கள் என்ற நிலையில் கண்டனலங்காரம்,
கண்டன்கோவை, சரசுவதி அந்தாதி, சடகோபரந்தாதி,
ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவற்றைக் கூறலாம்//

நா.கண்ணன்

பிகு: நாசாவின் பார்வையில் கம்பன் சடகோபர் அந்தாதி பாடவில்லை என்பது ;-)


2012/7/9 OAGAI NATARAJAN <enge...@gmail.com>:

விஜயராகவன்

unread,
Jul 9, 2012, 4:00:06 PM7/9/12
to mint...@googlegroups.com
ஒரு விதத்தில் கம்பனை வைணவர்கள் ஆழ்வார் ஆக்காதது நல்லதே- தமிழ்நாட்டுக்கு. 
 
கம்பராமாயயணம் வைணவ canoninal text  ஆக்காமல் இருப்பதால், அதை மற்ற தமிழர்கள் (95%???)  தங்கு தடையின்றி, சங்கோஜமின்றி, மத சம்பந்த ப்ரெஜுடிஸ்கள் இல்லாமல் ஒரு மகா இலக்கியமாக அணுகலாம், அணுகிகின்ரனர், அதை மத்தியகால தமிழின் மிகச்சிறந்த தமிழிலக்கியமாக பருகுகின்றனர். வைணவர்கள் மட்டுமின்றி, சைவர்கள், ஜைனர்கள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் (மு.மு.இஸ்மயில்) அதை தங்கள் இலக்கியமாகவே கருதுகின்ரனர்.  இதுவே கம்பரை ஒரு ஆழ்வாராக ஆக்கியிருந்தால், தமிழ்நாட்டு மத, ஜாதி சாய்வுகள் ஒரு மாபெரும் இலக்கியத்தை கைக்கெட்டாத தூரத்திலேயே வைத்திருக்கும். ( ஆனால் ஜேசுதாசன் தம்பதியினர் அதில் கிருஸ்துவை காண்பது எக்கச்செக்க்கம் !!!)
 
 
வகொவி

N. Kannan

unread,
Jul 9, 2012, 4:06:59 PM7/9/12
to mint...@googlegroups.com
2012/7/9 விஜயராகவன் <vij...@gmail.com>:
> ஒரு விதத்தில் கம்பனை வைணவர்கள் ஆழ்வார் ஆக்காதது நல்லதே- தமிழ்நாட்டுக்கு.
>

கம்பநாட்டாழ்வான் என்ற சொல்வழக்குண்டு! :-)


> கம்பராமாயயணம் வைணவ canoninal text ஆக்காமல் இருப்பதால், அதை மற்ற தமிழர்கள்
> (95%???) தங்கு தடையின்றி, சங்கோஜமின்றி, மத சம்பந்த ப்ரெஜுடிஸ்கள் இல்லாமல்
> ஒரு மகா இலக்கியமாக அணுகலாம், அணுகிகின்ரனர், அதை மத்தியகால தமிழின்
> மிகச்சிறந்த தமிழிலக்கியமாக பருகுகின்றனர். வைணவர்கள் மட்டுமின்றி, சைவர்கள்,
> ஜைனர்கள், நாத்திகர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள் (மு.மு.இஸ்மயில்) அதை
> தங்கள் இலக்கியமாகவே கருதுகின்ரனர். இதுவே கம்பரை ஒரு ஆழ்வாராக
> ஆக்கியிருந்தால், தமிழ்நாட்டு மத, ஜாதி சாய்வுகள் ஒரு மாபெரும் இலக்கியத்தை
> கைக்கெட்டாத தூரத்திலேயே வைத்திருக்கும்.

100% ஒத்துக்கிறேன் ;-)

க.>

OAGAI NATARAJAN

unread,
Jul 9, 2012, 10:48:42 PM7/9/12
to mint...@googlegroups.com
Absolutely acceptable.

2012/7/10 விஜயராகவன் <vij...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Jul 9, 2012, 11:51:09 PM7/9/12
to mint...@googlegroups.com


2012/7/9 OAGAI NATARAJAN <enge...@gmail.com>

கம்பரின் காலம் 13ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்டது என்பதற்கான சான்றுகள்:

அ.  ஒட்டக்கூத்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாமல் கல்வெட்டு சான்றுகளாலும் இலக்கிய சான்றுகளாலும் நிறுவப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த மூன்று சோழ அரசர்களின் காலத்தில் அவர் இருந்திருக்கிறார். இவர் உத்தரகாண்டத்தை எழுதினார் என்பது கம்பன் இவர் காலத்துக்கு முற்பட்டவன் என்பதற்கு சான்றாகக் கொடுக்கப் படுகிறது. ஆனால் அதை ஏற்க முடியாதபடிக்கு பல வரலாற்று அம்சங்கள் தென்படுகின்றன.

ஒட்டக்கூத்தர் ஒரு வீர சைவர். இவர் ஒரு வைணவ காவியத்தின் இறுதிப் பகுதியை உளமாற எழுதுவாரா என்பது முதல் கேள்வி. மறந்தும் புறந்தொழாக் கோட்பாடு சில வைணவர்களுக்கு மட்டுமே உரியதாயினும் வீர சைவர்கள் சைவ வழிபாட்டு மேன்மையில் தீவிரமானவர்கள். வீர சைவ மடத்தை ஏற்படுத்தியவர் ஒட்டக்கூத்தரே. ஒட்டக்கூத்தர் தீவிர சைவர் என்பது மட்டுமல்லாமல் ஒரு வைணவ வெறுப்பாளராகவும் இருந்திருக்கிறார். இதற்குச் சான்றாக அவரது இரண்டு பாடல்களைத் தர முடியும்.

க.தில்லைத் திருமன்றின் முன்றில் சிறுதெய்வத் தொல்லைக் குரும்பு.......
       (குலோத்துங்கன் உலா பாடல் 77-78)
கா. பொன்னில் குயிற்றிப் புறம்பின் குரும்பு அனைத்தும்
       முன்னர் கடல் அகழில் மூழ்கிவைத்த சென்னி........
      (ராராஜன் உலா - பாடல் 65-66)


அன்புள்ள ஓகை,

இதை நீங்கள் கம்பர்-ஒட்டக்கூத்தர் காலக்குறிப்பு இழையிலேயே தொடரலாம்.  மற்ற குழுக்களுக்கும், முக்கியமாக சந்தவசந்தத்துக்கும் ஒரு காப்பி அனுப்பலாம்.  இந்த உரையாடல் பரவலாக நடைபெறும்போதுதான் கவனத்திலிருந்து தப்பும் பல செய்திகள் பலரால் சொல்லப்படலாம்; அல்லது சொல்லப்படும் ஒரு தவறான தகவல் உண்மையை நோக்கி இட்டுச்செல்லும் spark ஒன்றை ஏற்படுத்தலாம்.

கால ஆய்வில் விருப்பமில்லாத என்னை இதற்குள் தலைகுப்புறத் தள்ளிவிடுவீர்களோ என்ற அச்சம்கூட எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.:)) தற்போது வேறு சில பணிகளுக்குள்ளும் தலையை விட்டுக்கொண்டிருப்பதாலு்ம், அவையெல்லாம் time-bound பணிகள் என்பதாலும் நான் இந்தத் திறக்கில் செலவழிக்கும் நேரம் பெரிதும் மட்டுப்படும்.  இதுவரையில் படித்திருக்கும் நூல்களையே புதுநோக்கில் (from another perspective) மீண்டும் தொடக்கத்திலிருந்து கடைசிவரையில் தேடி அலச வேண்டியிருக்கும்.  அவ்வளவு நேரம் இப்போதைக்கு என்னிடம் இல்லை.  என்றபோதிலும், நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் (மேற்கோள் காட்டியிருக்கும் என்பது பொருத்தம் என்றெண்ணுகிறேன்) கருத்துகளைக் குறித்து ஒருசில சொல்ல விரும்புகிறேன்.  பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்கிறேன்.  தற்போதைக்கு என் எல்லை, இந்த மடலில் நான் மேற்கோள் காட்டியிருக்கும் உங்கள் மடலின் பகுதி அளவில் நிற்கிறது.


அ.  ஒட்டக்கூத்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டு என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாமல் கல்வெட்டு சான்றுகளாலும் இலக்கிய சான்றுகளாலும் நிறுவப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த மூன்று சோழ அரசர்களின் காலத்தில் அவர் இருந்திருக்கிறார். இவர் உத்தரகாண்டத்தை எழுதினார் என்பது கம்பன் இவர் காலத்துக்கு முற்பட்டவன் என்பதற்கு சான்றாகக் கொடுக்கப் படுகிறது. ஆனால் அதை ஏற்க முடியாதபடிக்கு பல வரலாற்று அம்சங்கள் தென்படுகின்றன.

மூன்று சோழ மன்னர்களின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.  மூவருலாவின் முழுப் பாடல் பகுதிகளுக்காக நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை.  முழு நூலும் என்னிடத்தில் இருக்கிறது.  ஆரம்ப நாட்களில் மேம்போக்காக படித்து, பிறகு மூலையில் போட்டுவிட்ட நூல்.  இப்போது, இந்த உரையாடல்களின் தேவைக்காகத் திரும்பப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  (என்னிடம் இருப்பது கலாக்ஷேத்திரம், அடையாறு 1952ம் ஆண்டில் வெளியிட்ட பதிப்பு.  தற்போது பதிப்பிலிருக்கிறதா; புதுப் பதிப்புகள் வந்திருந்தால் கூடுதல் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றனவா என்பன போன்ற விவரங்கள் எனக்குத் தெரியாது.  இருக்கும் வரையில் சொல்கிறேன்.

  • ஒட்டக்கூத்தர் கைக்கோளர் (செங்குந்தர் அல்லது செங்குந்த முதலியார்) பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவர் இயற்றிய ஈட்டியெழுபது நூலில் அகச்சான்றாகக் கிடைக்கிறது. 
  • கூத்தர் என்பது இயற்பெயர்.  கூத்த முதலியர் (முதலியார்) என்ற பெயரும் இவருக்கு உண்டு.
  • மலரி என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது ‘...மலர்இவரும் கூந்தலார் மாதர் நோக்குஒன்று; மலரிவரும் கூத்தன்தன் வாக்கு’ என்ற தண்டியலங்கார மேற்கோள் செய்யுளால் தெரிய வருகிறது.  மலரி என்ற ஊரைச் சேர்ந்த கூத்தன் என்பதே ‘மலரிவரும் கூத்தன்’ என்று சொல்லப்பட்டுள்ளது.
  • விக்கிரம சோழன் ஒருமுறை, தன்மீது இயற்றப்பட்ட உலாவில் ஒரு கண்ணியை ஒட்டி, ஒரு செய்யுள் பாடும்படி வேண்ட, கேட்டதும் விரைந்து இயற்றினார். விரைந்து பாடுவதில் பந்தயம் வைத்துப் பாடும் இயல்புடையவர் என்ற காரணத்தால் இவருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் ஏற்பட்டது.  ஒட்டம் என்றால் பந்தயம் என்று பொருள்.
  • விக்கிரம சோழனுக்கு ஆஸ்தான பண்டிதராகவும்; அவனுடைய மகன் குலோத்துங்கனுக்கு வித்தியா குருவாகவும்; அவனுடைய மகன் இரண்டாம் இராசராசனுக்கும் ஆஸ்தான பண்டிதராகவும் விளங்கினார்.
  • இதனாலேயே இந்த மூன்று சோழ மன்னர்கள் பேரிலும் மூன்று தனித்தனி உலா நூல்களைப் பாடி, அது பின்னர் மூவருலா என்ற பெயரில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டது.
  • எனவே, ஒட்டக்கூத்தருடைய காலத்தைத் தீர்மானிப்பது எளிது.  மூவருலாவில் கூறப்பட்டுள்ள வம்சாவளியில் வருபவர்கள்:  1) குலோத்துங்க சோழன் I (2) விக்கிரம சோழனும் ஆளுடைய நாச்சியாரும் (3) குலோத்துங்க சோழன் II (4) இராசராச சோழன் II.

குலோத்துங்க சோழன் I எப்படி இதற்குள் வருகிறான் என்றால், ‘இன்னார் பெயரனே’ என்று ஓரிடத்தில் (இடம் நினைவில்லை.  படித்த நினைவிருக்கிறது.  நினைவுக்கு வந்ததும் அல்லது தேடிக் கிடைத்ததும் சொல்கிறேன்) குறிப்பிடுவதால் இந்த வம்சாவளியில் கூடுதலாக ஒரு மன்னன் பெயர் தென்படுகிறது.  விக்கிரம சோழன் பட்டத்துக்கு வந்தது (கிறிஸ்துவ நாள்காட்டிப்படி) கி. பி. 1118 ஜூன் மாதம் 29ம் தேதி என்று விக்கிரம சோழனைப் பற்றிய குறிப்பில் இந்த நூல் சொல்கிறது.  (மூவருலா--கலாக்ஷேத்திரா வெளியீடு, பக்கம் xxiii, 1952ம் ஆண்டு பதிப்பு).  இப்போது காலக்குறிப்பில் ஒரு notch கிடைத்தது என்று கொண்டால், கம்பனை எங்கே நிறுத்துவது என்ற கேள்விக்கு இப்போதைக்கு என்னிடம் விடை இல்லை.   உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர் இயற்றவில்லை என்று நீங்கள் நிறுவி முடித்ததன்பின் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்.

ஒட்டக்கூத்தர் ஒரு வீர சைவர். இவர் ஒரு வைணவ காவியத்தின் இறுதிப் பகுதியை உளமாற எழுதுவாரா என்பது முதல் கேள்வி. மறந்தும் புறந்தொழாக் கோட்பாடு சில வைணவர்களுக்கு மட்டுமே உரியதாயினும் வீர சைவர்கள் சைவ வழிபாட்டு மேன்மையில் தீவிரமானவர்கள். வீர சைவ மடத்தை ஏற்படுத்தியவர் ஒட்டக்கூத்தரே. ஒட்டக்கூத்தர் தீவிர சைவர் என்பது மட்டுமல்லாமல் ஒரு வைணவ வெறுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

கூத்தர் சைவர் என்பது உண்மை.  கூத்தன் என்பது நடராஜப் பெருமானைக் குறிக்கும் பெயர்.  ஆனால் மறந்தும் புறந்தொழாத வீரசைவர்தானா என்பது கேள்விக்குரிய ஒன்று.   என்னிடத்தில் உள்ள பதிப்பில் ஒட்டக்கூத்தர் வரலாறாகச் சொல்லப்பட்டுள்ள இந்தச் சான்றுகளைப் பாருங்கள்.  (அபிதான சிந்தாமணியிலும் ஏராளமான செய்திகள் இருந்தாலும் கட்டுக்கதைகள் மலிந்து கிடப்பதால் அவற்றை இங்கே நான் முற்படுத்தவில்லை.  இந்தச் சான்றுகள், கவியின் வாக்கை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க இடம்கொடுப்பவை.)

  • குலோத்துங்க சோழன் இவருக்கு அரிசிலாற்றங்கரையில் உள்ள ஓர் ஊரைக் கொடையாக அளித்தான்.  கூத்தனூர் என்ற பெயரால் அது இன்றும் அறியப்படுகிறது.
  • கலைமகளைத் தன்னுடைய இதய பீடத்தில் நிறுத்தியவராதலின், கூத்தனூரில் ஒட்டக்கூத்தர் சரஸ்வதிக்கு ஒரு ஆலயம் ஏற்படுத்தினார்.  ‘ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே’ என்ற தக்கயாகப் பரணி (813வது அடி)யால் இதை அறியலாம்.  இந்த ஆலயம் இன்றளவும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது.
  • பரணியில் தேவியைப் பற்றிப் பாடும்போதல்லாம் யாமள சாஸ்திரக் கருத்துகளைப் பின்பற்றிச் சொல்கின்ற காரணத்தால் இவருக்கு யாமள சாஸ்திரத்திலும் பயிற்சி இருந்ததாகத் தெரிகிறது.  இது, தக்கயாகப் பரணி 136வது அடியின் உரையில் சொல்லப்பட்டுள்ளது.
  • சரஸ்வதி, யாமளை இரண்டு தேவியரையும் ‘மறந்தும் புறந்தொழாத வீரசைவர்’ பாடியதில்கூட வியப்பில்லை.  இவருடைய நூல்களில் ‘சைனம் முதலிய பிறசமயங்களைப் பற்றிய செய்திகளையும், பரிபாஷைகளையும் எடுத்தாளுதலின், அச்சமய நூல்களை அறிந்தவரென்றும் சொல்லலாம்’ என்று மூவருலாவில் காணப்படும் ஒட்டக்கூத்தர் வரலாறு சொல்கிறது.
  • மறந்தும் புறந்தொழாத வீர சைவர் யாமளையைப் பாடியதில் வியப்பில்லை.  சரஸ்வதிக்கு ஆலயம் ஏற்படுத்தியதும், ஜைனம் முதலான பிற சமய நூல்களில் ஆழ்ந்த பயிற்சி அடைந்தவராக இருந்ததும்தான் ஆச்சரியத்துக்குரியன.  ஏனெனில் வேளுக்குடி கிருஷ்ணன் விவரிக்கும் அடிப்படையில் ‘ஸ்ரீவைஷ்ணவத்தில் திருமால் ஒருவன்தான் தெய்வம்.  லக்ஷ்மி தாயார்கூட இரண்டாம்பட்சம்தான்.  ஆனால் திருமாலை அடையவேண்டுமானால், ‘பெரியாரைத் துணைக்கொள்வதுபோல’ லக்ஷ்மியின் துணையோடுதான் அடையவேண்டும் என்பதனாலே, லக்ஷ்மி முக்கியத்துவம் பெறுகிறாள்.  இருந்தாலும் அவளுக்கு இரண்டாம் இடம்தான்’ என்று தெரிகிறது.  இங்கேயும் ஆராதனை மூர்த்தியில் சம இடம் இருப்பதைப்போல் வேளுக்குடியின் விவரிப்பின் அடிப்படையில் தெரியவில்லை.  தெரிந்தவர்கள் சொல்லலாம்.
  • அப்படியானால், ‘மறந்தும் புறந்தொழாத வீர சைவருக்கு’ இந்த லட்சணம் பொருந்துமா, பொருந்தாதா?  யாமளையைப் பாடியதும் பரணியில் துர்கையைப் பாடியதும் இங்கே கேள்விக்குள் வராதவை.  சரஸ்வதி எப்படி ‘மறந்தும் புறந்தொழா வீர சைவருடைய’ இஷ்டதேவதையானாள்?  வைணவர்களே கூட, ‘ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே’ என்றுதான் துதிக்கிறார்களே ஒழிய, ‘சரஸ்வதியெல்லாம் ஒங்கள மாதிரி ஆளுங்களுக்கு’ என்று என்னுடைய நண்பன் வீட்டிலேயே என்னைப் பார்த்து சொல்லப்பட்ட வார்த்தை.  இன்றளவும் இது நடைமுறையில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.  வீர சைவருக்கு இந்த நெறி பொருந்தாதா?

இவர் ஒரு வைணவ வெறுப்பாளர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் அல்லது சொல்லப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?  வைணவ வெறுப்பின் காரணமாகத்தான் இவர் உத்தரகாண்டத்தை இயற்றியிருக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுவதால், இந்த முடிபின் அடிப்படை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சரி.  வைணவ வெறுப்பாளர் என்றே வைத்துக் கொள்ளலாம். ராமனைப் பற்றிப் பாட இவருக்கு உள்ளத் தடை இருந்திருக்கும் என்று இந்த அனுமானத்தின் அடிப்படையில் கட்டியிருப்பது மணற்கோட்டை.  சீட்டுக்கட்டுக் கோட்டை.  மூவருலாவுக்குள்ளேயே, ராமனைப் பற்றி இவர் சொல்லியிருக்கும் பகுதிகளில் சிலவற்றை மாதிரிக்காகக் காட்டுகிறேன்.  இவையெல்லாம் சோழ மன்னனைப் பெருமைப்படுத்துவதற்காக, ஈடு சொல்லிப் புகழ்ந்திருக்கும் மொழிகள்:

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்

ஊராக் குலிச விடையூர்ந்தோன்

குலோத்துங்க சோழனுலா, கண்ணி 3 (முன்னோர் பெருமை)

தேவர்களுக்கு ஏற்பட்ட தீராத பகையைத் தீர்ப்பதற்காக, மற்ற மன்னர்கள் யாருமே ஊர்ந்திராத எருதை வாகனமாகக் கொண்டு போர்புரிந்தவன்.  (இக்ஷ்வாகுவின் மகனான புரஞ்சயன் இந்திரனுக்காக யுத்தம் செய்தபோது, இந்திரனே எருதாக வந்து அவனுக்கு வாகனம் ஆனான்.  எருதின் கழுத்தில் (ககுஸ்த்தம்) அமர்ந்து போர்புரிந்ததனால் புரஞ்சயனுக்கு ககுஸ்தன் என்ற பெயரும் உண்டு.  இதுவே தமிழில் காகுத்தன் என்றறியப்படுகிறது.  பின்னால் பரம்பரை பரம்பரையாக, இராமன் உள்ளிட்ட அனைவருமே காகுத்தன் என்ற பெயரால் அறியப்பட்டவர்கள்.

பொருதோர்கள் ஈரைந்தின் ஈரைவர் போர்பண்(டு)

ஒருதேரால் வென்ற உரவோன்

(மேற்படி, கண்ணி 9)

ஈரைந்து தேர்களில் அமர்ந்து வந்த ஈரைந்து பகைவர்களை ஒரே தேராலே எதிர்கொண்டவன்.  ஈரைந்து=பத்து.  தசரதனைக் குறிக்கிறது என்பது வெளிப்படை.


மலைபத்தும் வெட்டும் உருமின் மறவோன்

தலைபத்தும் வெட்டும் சரத்தோன்

(மேற்படி, கண்ணி 10)

இராவணனின் மலைபோன்ற பத்துத் தலைகளையும் இடிபோன்ற சரங்களால் வெட்டித் தள்ளிய ராமன்.  (அல்லது, வஜ்ராயுதத்தால் இந்திரன் மலைகளின் சிறகை அறுத்ததுபோல், சரங்களால் ராவணனின் மலைபோன்ற தலை பத்தும் கத்தரித்தவன் என்றும் சொல்லலாம்.)

ஒருதேரால் ஐயிரண்டு தேரோட்டி உம்பர்

வருதேரால் வான்பகையை மாய்த்தோன்

(இராசராச சோழனுலா, கண்ணி 11)


சிலையால், வழிபடு தெண்டிரையைப் பண்டு

மலையால் வழிபட வைத்தோன்

(மேற்படி, கண்ணி 12)

வில்லின் ஆற்றலால், (அம்புதொடுத்ததுமே தன்னை வந்து) வணங்கி வழிபட்ட கடலை, மலையால் (நிரப்பி அணைகட்ட ஏதுவுவாகுமாறு) தனக்கான வழியை ஏற்பட வைத்தவன்.  ராமன்.

வட்ட மகோததி வேவ ஒருவாளி

விட்ட திருக்கொற்ற விற்காணீர்

(மேற்படி, கண்ணி 84)

அன்று கடல் வற்றுமாறு அம்பு விட்டவனான ராமனுடைய வில்லுக்கு இணையானதான ராஜராஜனுடைய வில்லைப் பாருங்கள்.

முற்றக் கடல் கிடந்து வேவ முனிந்தின்னம்
கொற்றத் தனிவிற் குனியாதோ
(மேற்படி, கண்ணி 310)

அன்று கடலை வற்ற அடித்த வில், இன்று எங்கள் சோழனுடைய வில்லாக வளையாதோ

கண்ணி 309 முதல் 316 வரை சோழனைத் திருமாலாகப் பாவித்து அவனுடைய பஞ்சாயுதங்களும் தனக்குச் செய்ய வேண்டும் உதவிகளைக் கூறுகின்றான்.

சான்றுகள் போதுமா அல்லது இன்னமும் வேண்டுமா?  இன்னமும் நிறைய வைத்திருக்கிறேன்.  மறந்தும் புறந்தொழத வீர சைவர், சோழனைத் திருமாலாகப் பாவிப்பதும், திருமாலுடைய பஞ்சாயுதங்களும் சோழனுடைய ஆயுதங்களாக (ஆவிர்பவித்து) உதவவேண்டும் என்று வேண்டுவதும் எதற்காக?  சிவனுடைய சூலாயுதம் எங்கே போனது?  வைணவ வெறுப்புக்கு என்ன ஆனது?

ஆக, உங்களுடைய மூல ஆய்வாளர் தவறான முடிவுகளைக் கண்டறிந்திருக்கிறார் என்பது இதுவரையில் எடுத்து வைக்கப்பட்ட சான்றுகளால் நிறுவப்படுகிறது.  மற்ற வாதங்களுக்கு அப்புறம் வருகிறேன்.  நேர நெருக்கடியில் உள்ளேன்.

நீங்கள் அனுமதித்தால் இந்த உரையாடல்களைத் தொகுத்து மற்ற குழுக்களுக்கும், குறிப்பாக சந்தவசந்தத்துக்கு, பொதுவா மற்றவற்றுக்கு அனுப்பலாம்.  Let others also give their inputs taking whichever stance they want to. 
 

Raja sankar

unread,
Jul 10, 2012, 12:29:06 AM7/10/12
to mint...@googlegroups.com
ஹரிகி

இந்த இடத்தில் கைக்கோளர் என்று சொல்லப்படுவது கொஞ்சம் சரியாயில்லை. ஏன் என சொல்லிவிடுகிறேன், சாதியை கொண்டு ஆராயப்போனால் பெரும் சிக்கல் வரும். அப்புறம் கம்பன் எந்த சாதி, இளங்கோ அடிகள் எந்த சாதி என்றெல்லாம் ஆராயப்புகவேண்டி நேரிடும். ஏனென்றால் கம்பர் ஏரெழுபது பாடியிருக்கிறார் அதைக்கொண்டு மட்டுமே அவர் இந்த சாதி என சொல்லிவிட முடியுமா?

அடுத்து முதலி என்பது பட்டமே. கேப்டன் என்பது போன்ற பட்டம் என்பது தங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அதைக்கொண்டும் முடிவு கட்டிவிட முடியாது. பெரும்பாலான சாதிப்பெயர்கள் பட்டம் என்பதே சாதியின் பரிணாம வளர்ச்சியை காட்டும்.

ஆராய்ச்சி என செய்யும் போது அவர் என்ன சாதி/குலம்/கோத்திரம் என்பதையெல்லாம் கடைசியில் போதுமான ஆதாரங்கள் இருந்தால் செய்யலாம். இல்லையேல் வள்ளுவனைப்போல் சும்மா விட்டுவிடலாம்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 10, 2012, 12:52:11 AM7/10/12
to mint...@googlegroups.com


2012/7/10 Raja sankar <errajasa...@gmail.com>

ஹரிகி

இந்த இடத்தில் கைக்கோளர் என்று சொல்லப்படுவது கொஞ்சம் சரியாயில்லை. ஏன் என சொல்லிவிடுகிறேன், சாதியை கொண்டு ஆராயப்போனால் பெரும் சிக்கல் வரும். அப்புறம் கம்பன் எந்த சாதி, இளங்கோ அடிகள் எந்த சாதி என்றெல்லாம் ஆராயப்புகவேண்டி நேரிடும். ஏனென்றால் கம்பர் ஏரெழுபது பாடியிருக்கிறார் அதைக்கொண்டு மட்டுமே அவர் இந்த சாதி என சொல்லிவிட முடியுமா?

பெருமானே!

ஹரிகி எப்போதுமே இந்த விஷயத்தில் படா உஜார் பார்ட்டி.  தகுந்த ஆதாரமில்லாமல் பேசுவதில்லை.  குறிப்பாக சாதி விஷயங்களில்.  பாவேந்தரும் கைக்கோளர் என்பதை, பாரதி அவருக்குக் கொடுத்த கடிதம் சொல்கிறது.)

நான் சொன்ன செய்திகள் அனைத்துமே கலாக்ஷேத்திராவின் பதிப்பில் இருப்பது.  அவர்களும் ஈட்டியெழுபதை ஆதாரமாகக் கொண்டே இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.  அப்படியே, முதலி, முதலியர் போன்ற பெயர்களும் புத்தகத்தில் ஆதாரபூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளனவே.  அபிதான சிந்தாமணியைப் போன்ற கட்டுக் கதைகள் என்றால் மேற்கோளே காட்டியிருக்கமாட்டேன். (அதாவது அபிதான சிந்தாமணி, புலவர் வரலாறுகளைச் சொல்லும்போது அத்தியாவசியமாக அவற்றில் கலந்துவிடும் புனைகதைகளைச் சொன்னேன்.  அபிதான சிந்தாமணி முழுவதும் அப்படித்தான் என்று பொருளில்லை.  அதிலும் 99 சதம் ஆதாரபூர்வமான, மேற்கோள் காட்டக்கூடிய தகவல்கள் உண்டு.)

ஸ்கேன் செய்த பக்கம் இணைக்கப்பட்டிருக்கிறது.  (அப்புறம் நான்தான் சாதிக்கலவரத்தைத் தூண்டிவிட்டுட்டேன்னு கௌம்பிராதீங்கப்பே.... எஸ் ராமகிருஷ்ணர் உபயம் இன்னமும் அடங்கியபாடில்லை... அதற்குள் அரிகிஷ்டன் மாணாம்... வுட்ருங்கோஓஓவ்!)
img028.jpg

Raja sankar

unread,
Jul 10, 2012, 1:04:54 AM7/10/12
to mint...@googlegroups.com
நீங்களே இப்படி எழுதுவதா என்ற ஆச்சரியத்திலேயே எழுதினேன். :-)

இருப்பினும் இந்த வரி

”இவர் கைக்கோளர் என்னும் செங்குந்த மரபினர் என்று இவர் இயற்றியதாக கூறப்பெறும் ஈட்டியெழுபது எனும் நூலால் அறியப்பெறுகிறது”

இங்கு ”கூறப்பெறும்” நூல் சொல்கிறதே தவிர அறுதியிடவில்லை. இதை இயற்றியது வேறு ஏதாவது ஒட்டக்கூத்தராக கூட இருக்கலாம். கம்பனின் மேலும் இப்படி பல தனிப்பாடல்களை ஏற்றும் பழக்கமுண்டே.

கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் பகை என்றெல்லாம் கதைகள் உண்டு. அதுக்கும் சாதீயம் வண்ணம் பூசியிருக்கிறார்கள். இதைச்சொல்லப்போனால் அதெல்லாம் இழுக்கப்படும். அப்புறம் அதுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 10, 2012, 1:11:08 AM7/10/12
to mint...@googlegroups.com


2012/7/10 Raja sankar <errajasa...@gmail.com>

இங்கு ”கூறப்பெறும்” நூல் சொல்கிறதே தவிர அறுதியிடவில்லை. இதை இயற்றியது வேறு ஏதாவது ஒட்டக்கூத்தராக கூட இருக்கலாம். கம்பனின் மேலும் இப்படி பல தனிப்பாடல்களை ஏற்றும் பழக்கமுண்டே.

இந்தக் கூறப்பெறும் முன்னெச்சரிக்கையை நான் பார்க்கவில்லையா?  அது முன்ஜாக்கிரதையாக எப்போதுமே போட்டு வைக்கும் ஜஸ்ட் இன் கேஸ்.  முன்னெச்சரிக்கை ஆய்வாளர்கள் கையாளும் வழி.  அதனால் ஈட்டியெழுபதை ஒட்டக்கூத்தர் இயற்றவில்லை என்று பொருளாகாது.  அப்படித்தான் என்று நிறுவினால், ஏரெழுபதைக் கம்பர் எழுதவில்லை; சடகோபர் அந்தாதியைக் கம்பர் எழுதவில்லை என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

நான் சொன்னதிலும் ‘என்று கூறப்படுகிறது’ என்பதைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.  அவ்ளதானே! 

Hari Krishnan

unread,
Jul 10, 2012, 1:12:29 AM7/10/12
to mint...@googlegroups.com


2012/7/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

அதனால் ஈட்டியெழுபதை ஒட்டக்கூத்தர் இயற்றவில்லை என்று பொருளாகாது. 

சரி.  ஈட்டியெழுபதைப் பற்றி தெரியும்தானே?

DEV RAJ

unread,
Jul 10, 2012, 6:18:43 AM7/10/12
to mint...@googlegroups.com

மிகவும் சுவையான இழை; இலக்கியத்தின் அறிந்திராத
பக்கங்களை அறிஞர்கள் எடுத்துத் தருகின்றனர்.


On Monday, 9 July 2012 05:20:23 UTC-7, விஜயராகவன் wrote:
>>> ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்கள் பாசுரங்கள் "canonical text" என ஆக்கியபிறகு, மரபு அங்கே
இறுகலாகி விடுகிறது. அதனால் அதற்கு பின் வரும் இலக்கியங்கள் எவ்வளவு
மதிப்பு இருந்தாலும், அதை orthodox "canonical text" இல் ஏற்றுவது கடினம். <<<


இது உண்மையே.


On Monday, 9 July 2012 13:00:06 UTC-7, விஜயராகவன் wrote:
>>> கம்பராமாயணம் வைணவ canoninal text  ஆக்காமல் இருப்பதால், அதை மற்ற தமிழர்கள் (95%???)  தங்கு தடையின்றி, சங்கோஜமின்றி, மத சம்பந்த ப்ரெஜுடிஸ்கள் இல்லாமல் ஒரு மகா இலக்கியமாக அணுகலாம், அணுகிகின்ரனர், அதை மத்தியகால தமிழின் மிகச்சிறந்த தமிழிலக்கியமாக பருகுகின்றனர். <<<


வ கொ வி அவர்களின் இக்கருத்தை ஏற்க முடியவில்லை.
வால்மீகி ராமாயணமும்  வைஷ்ணவ canonical textன்
ஒரு முக்கியமான பகுதிதான். ராமாநுஜர் இதற்காகவே பெரிய திருமலை நம்பிகளிடம்
தனியாகக் காலக்ஷேபம் கேட்டுள்ளார். இராமாயணமும், அருளிச்செயலும்
வைணவத்தின் இரு பெரும் அரண்கள் என்று ஒரு சோழ மன்னன் கூறியுள்ளான்.
வைணவத் துறை சார்ந்தது என்று பிறர் வால்மீகி ராமாயணத்தைப் படிக்காமல்
இருப்பதில்லையே. ’பெருந்தொகை’ எனும் நூல் வகுளாபரணரிடம்
ஈடுபட்ட வைணவர் அல்லாத புலவர்களின் பாக்களைச்
சொல்வதை அரங்கனார் இங்கு எடுத்துக் காட்டினார்.

”தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற
 சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே”
இது வைணவ மரபைச் சேர்ந்திராத ஒருவரின் பாடல்.


ராமாயணம் கம்ப ராமாயணத்துக்கு முன்பிருந்தே தமிழகத்தில்
இருந்துள்ளது; ஒருகால் canonical textல் வைணவர் கம்ப ராமாயணத்தைச்
சேர்த்திருப்பினும், பிறர் அதை வாசிக்கவே செய்வர்.

வேளுக்குடி கிருஷ்ணனை விடாமல் கேட்போர் பலர் வைணவர்
அல்லாதோரே.

சில தகவல்கள் [ஆராய்ச்சிக்கு உதவலாம்] -

வைணவ ஆசாரியர்களுடன் தொடர்புள்ளோரின் குறிப்புகளை
‘பெரிய திருமுடி அடைவு’ தெரிவிக்கிறது. காவிரிப் பாசனத்தில்
பண்ணைத் தொழில் செய்துவந்த மாறநேர் நம்பிகள் பாண்டிய
நாட்டின் பராந்தக புரத்தைச் சேர்ந்தவர் எனும் குறிப்பும் அதில் உள்ளது.
இவர் ஆளவந்தாரின் சீடர்.

கம்பருக்கு ’கம்ப நாட்டாழ்வார்’ எனும் பெயர் இருப்பினும் அவரைப் பற்றிய குறிப்பு
பெரிய திருமுடி அடைவில் இல்லை. வேறு ஏதேனும் தாஸ்ய நாமம் அவருக்கு
இருந்ததா என்றும் தெரியவில்லை. சடகோபர் அந்தாதி பாடும் அளவு
அவருக்கு வைணவத்தில் ஊற்றம் இருந்ததும் உண்மை.

திருவரங்கம் கோயிலொழுகு சொல்லும் இராமாயண அரங்கேற்ற காலம்
இந்த ஆய்வுக்கு எவ்வளவு தூரம் உதவும் என்று தெரியவில்லை.

’கூத்தன்’ ஆடவல்லானுக்குரிய பெயர் எனினும்
குடமாடு கூத்தன், மாயக்கூத்தன் எனும் பெயர்கள்
மாலவனுக்கு உண்டு.


ராமாயணம், சமயம் கடந்த நூல். வைணவ - சைவ
நூல்கள் முக்கியமான புராண நிகழ்வுகளை
மறைப்பதில்லை. இராவணன் தேவியை வவ்வியதை
சம்பந்தர் பாடியுள்ளார்.


இராமபிரான், இராவணன், வாலி வழிபட்ட சிவத்தலங்கள் உள்ளன.
ஆதிசேடனின் அவதாரமான பதஞ்ஜலியை சிவ பக்தராகச் சைவம்
ஏற்றுள்ளது. சிவ கணங்கள் கேசவரை வழிபட்ட
தலம் ‘பூதபுரி’- பெரும்பூதூர். இத்தனை பீடிகை
எதற்கு என்றால் சமயச் சார்பு காரணமாக ஒட்டக்கூத்தர்
உத்தர காண்டம் எழுதியிருக்க முடியாது என்னும் கருத்துக்கு
வலிமை இல்லை என்பதை உணர்த்தவே.


இனிவருங்காலத்தில் அருணாசலக் கவிராயர் ‘இராம நாடகம்’
செய்திருப்பாரா என்றுகூடக் கேள்வி எழலாம்



தேவ்

Dhivakar

unread,
Jul 10, 2012, 6:25:04 AM7/10/12
to mint...@googlegroups.com
>>ராமாயணம், சமயம் கடந்த நூல். வைணவ - சைவ
நூல்கள் முக்கியமான புராண நிகழ்வுகளை
மறைப்பதில்லை. இராவணன் தேவியை வவ்வியதை
சம்பந்தர் பாடியுள்ளார். <<

நன்கு சொன்னீர்கள் தேவ்.. இரண்டே வரியில் அப்பர் ராமாயணத்தை
சொல்லியிருக்கிறார் தெரியுமா

"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடும்

சேதுபந் தனம்செய்து சென்று புக்குப்

பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற

போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ"(தி. 6 ப. 58 பா. 10)

தேவாரத்தில் இல்லாத ராமனா...

2012/7/10 DEV RAJ <rde...@gmail.com>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Kannan

unread,
Jul 10, 2012, 8:24:34 AM7/10/12
to mint...@googlegroups.com
2012/7/10 DEV RAJ <rde...@gmail.com>:

> வ கொ வி அவர்களின் இக்கருத்தை ஏற்க முடியவில்லை.
> வால்மீகி ராமாயணமும் வைஷ்ணவ canonical textன்
> ஒரு முக்கியமான பகுதிதான். ராமாநுஜர் இதற்காகவே பெரிய திருமலை நம்பிகளிடம்
> தனியாகக் காலக்ஷேபம் கேட்டுள்ளார். இராமாயணமும், அருளிச்செயலும்
> வைணவத்தின் இரு பெரும் அரண்கள் என்று ஒரு சோழ மன்னன் கூறியுள்ளான்.
> வைணவத் துறை சார்ந்தது என்று பிறர் வால்மீகி ராமாயணத்தைப் படிக்காமல்
> இருப்பதில்லையே.

இது இன்னொருவகையில் சிந்திக்கத்தூண்டுகிறது. ஓகையாரின் காலக்கணக்கிற்கு
இது உதவலாம். கம்பன் ஆழ்வார் காலத்தில் அல்லது அதை ஒட்டிய காலம்
என்றால்தான் இந்த canonical முக்கியத்துவம் பெருகிறது. கம்பன் 13ம்
நூற்றாண்டோ இல்லை பிற்பாடோ என்றால் இந்த canonical எல்லாம் முடிந்த பின்
வந்து சேர்கிறான் என்றாகிறது. அதாவது கடைசி ஆச்சார்ய சீலரான மணவாள
மாமுனிகளுக்குப் பிறகு (1370-1443).

ஓகையார் யோசிக்க இன்னும் சில கருத்துக்கள் இவை!

நா.கண்ணன்

விஜயராகவன்

unread,
Jul 10, 2012, 9:39:49 AM7/10/12
to மின்தமிழ்
On Jul 10, 12:18 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
> வ கொ வி அவர்களின் இக்கருத்தை ஏற்க முடியவில்லை.
> வால்மீகி ராமாயணமும்  வைஷ்ணவ canonical textன்
> ஒரு முக்கியமான பகுதிதான்.

தேவ அவர்களே

வைணவம் சமஸ்கிருதத்தில் ஒரு கால், தமிழில் ஒரு கால் வைத்துள்ளது. நாம்
இங்கு தமிழ்காலைப் பத்திதான் அலசுகிறோம். சமஸ்கிருத பக்கத்தில் பல
canonical text உம் , அதன் உரைகளும் உள்ளன.


வகொவி

Hari Krishnan

unread,
Jul 10, 2012, 11:07:55 AM7/10/12
to mint...@googlegroups.com


2012/7/10 DEV RAJ <rde...@gmail.com>

திருவரங்கம் கோயிலொழுகு சொல்லும் இராமாயண அரங்கேற்ற காலம்
இந்த ஆய்வுக்கு எவ்வளவு தூரம் உதவும் என்று தெரியவில்லை.

My Good God!  Dev!  You made my day!  How did this not occur to me!  This is the ONE AND ONLY DOCUMENTED EVIDENCE ON KAMBAN.  விவரங்கள் கிடைக்குமானால், தமிழ் மரபு அறக்கட்டளையில் ஒரு பக்கமாகச் சேர்த்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்.  கொள்ளாதவர்கள் போகட்டும்.  ஆனால், இப்படி ஒரு ஆவணம் இருக்கிறது என்பது உலகத்தின் கண்ணில் பட்டே ஆகவேண்டும். 

என் வேண்டுகோளாக இதை ஏற்றுக்கொள்ளும்படி தமஅ-வை வேண்டிக்கொள்கிறேன்.

DEV RAJ

unread,
Jul 10, 2012, 12:40:49 PM7/10/12
to mint...@googlegroups.com
On Tuesday, 10 July 2012 06:39:49 UTC-7, விஜயராகவன் wrote:
>>> வைணவம் சமஸ்கிருதத்தில் ஒரு கால், தமிழில் ஒரு கால் வைத்துள்ளது. நாம்
இங்கு தமிழ்காலைப் பத்திதான் அலசுகிறோம்.  சமஸ்கிருத பக்கத்தில் பல
canonical text உம் , அதன் உரைகளும் உள்ளன.<<<


ஆம் ஐயா. அதை மனத்தில்கொண்டுதான் நானும்
கூறியுள்ளேன். சங்கதப் பகுதியில் இருக்கும் வால்மீகியை
அனைவரும் வாசிப்பதுபோல், தமிழ்ப் பகுதியில்
அதற்கீடாக ஒருகால் கம்பனை வைத்தாலும் அதை
வைணவரல்லாதவரும் வாசிக்கவே செய்வர்



தேவ்

DEV RAJ

unread,
Jul 10, 2012, 1:02:29 PM7/10/12
to mint...@googlegroups.com

>This is the ONE AND ONLY DOCUMENTED EVIDENCE ON KAMBAN<



நன்றி ஹரிகி சார்.

இணையத் தேடலில் கிடைத்த இரு சான்றுகள் -

5.கவிச்சக்கரவர்த்தியான கம்பர் சோழப் பேரரசர்களால் ஆதரிக்கப்படாத நிலையில், நாதமுனிகள் தம் தலைமையில் கம்ப ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார்.

6. நாதமுனிகள் திருவரங்கத்தில் ஒரு பங்குனி உத்தரத்திருநாளில் தமது தலைமையில் கம்பராமாயண அரங்கேற்றத்தை நடத்தி வைத்து, கம்பநாடாருக்கு கவிச்சக்கரவர்த்தி, கம்பநாட்டாழ்வார் என்று புகழாரங்களைச் சூட்டினார்.

9.ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனை முதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநநர் என்னும் யானைமுகமுடைய நித்யஸூரியின் அம்சமாய், சோழ தேசத்தில் வீரநாராயண புரத்தில் (காட்டுமன்னார்கோயிலில்) (கி.பி. 823) சோபக்ருத்-வருடம், ஆனி மாதம், 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அனுஷ நக்ஷத்ரத்தில் ஈச்வர பட்டாழ்வாருக்குக் குமாரராக ஷடமர்ஷண கோத்ரத்திலே (சொட்டைக் குலத்திலே) அவதரித்தார்.

http://srivaishnavasri.com/page/10





கம்பன் பிறந்தநாள் இன்னதென அறியாத நிலையில், அவன் தமது காவியத்தை அரங்கேற்றம் செய்த, கி.பி. 886 பிப்ரவரி 23 அன்றைய தினத்தையே கம்பன் பிறந்த தினமாகக்கொண்டு, தாம் பிறந்த காரைக்குடி நகரில், கம்பன் கழகத்தை இனிது தொடங்கினார், கம்பன் அடிப்பொடி.

https://groups.google.com/forum/#!msg/mintamil/1VNhOREEOXo/zUyUH3pLZVEJ


இத்தகவல்களின்படி நாதமுனிகளின் 63ம் வயதில் கம்ப ராமாயணம் அரங்கேறியுள்ளது. கோயிலொழுகு சொல்லும் காலத்தை
ஏற்குமுன், வேறு சான்றுகளுடன் ஒப்பிட்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்



தேவ்

Karuannam Annam

unread,
Jul 10, 2012, 3:11:12 PM7/10/12
to mint...@googlegroups.com


2012/7/10 DEV RAJ <rde...@gmail.com>


>This is the ONE AND ONLY DOCUMENTED EVIDENCE ON KAMBAN<



நன்றி ஹரிகி சார்.

இணையத் தேடலில் கிடைத்த இரு சான்றுகள் -

5.கவிச்சக்கரவர்த்தியான கம்பர் சோழப் பேரரசர்களால் ஆதரிக்கப்படாத நிலையில், நாதமுனிகள் தம் தலைமையில் கம்ப ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார்.
 
1926ல் வெளியிடப்பட்ட அட்டாவதானம் வீராச்சாமி செட்டியாரால் எழுதப்பட்ட விநோதரசமஞ்சரி புத்தகம் எங்கள் பழைய வீட்டிலிருந்து எடுத்து வைத்திருந்தேன். அதில் கம்பரிராமாயணம் பாடி அரங்கேற்றியது என்ற எண்பது பக்கக் கட்டுரையுள்ளது. பல கம்பன் பாடல்கள், தனிப்பாடல்கள் சுவையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. நாதமுனிகள் தலைமையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. பல கர்ணபரம்பரைக் கதைகளும் 
கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுக்கும் சான்று கொடுக்கப்படவில்லை.
 
ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடியது ஒரு அத்தியாயம். சுவையான கூத்தன் பெயருடன் ’ஒட்ட’ ஒட்டியகதை.  தந்துவாயர், செங்குந்தர், கைக்கோளர் என்ற மரபு பற்றியது. வல்லான் என்பான் கதை அபாரக் கற்பனை.
ஆனாலும் சரியான சான்றுகள் புலப்படவில்லை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

OAGAI NATARAJAN

unread,
Jul 10, 2012, 11:40:29 PM7/10/12
to mint...@googlegroups.com
அண்ணா,
 
//மறந்தும் புறந்தொழாக் கோட்பாடு சில வைணவர்களுக்கு மட்டுமே உரியதாயினும் வீர சைவர்கள் சைவ வழிபாட்டு மேன்மையில் தீவிரமானவர்கள்//
 
என்றுதானே நான் சொன்னேன். ஒட்டக்கூத்தர் மறந்தும் புறம் தொழாதவர் என்று நான் சொல்லவில்லையே. அவர் கலைமகளையும் யாமளையையும் பாடியது இயல்புதனே.
 
ஒட்டக்கூத்தர் சோழ அரசில் மிகவும் செல்வாக்கானவர். அவரது வைணவ வெறுப்புக்கு பல காரணிகளைக் கூறலாம். அதற்கான இரண்டு பாடல்களை முந்தைய மடலில் கொடுத்துள்ளேன். நீங்கள் கொடுத்துள்ள சான்றுகள் சோழ அரசனைப் புகழ்வதற்காக சொல்லப்பட்டவை. சோழ குலம் சூரிய குலமென்பதால் சூரிய குல முன்னோர்களைப் புகழ்வது சோழ அரச கடமை ஆகிறது. ஆனால் அப்போதும் கூட திருமாலை ஒருபடி கீழிறக்கி ஒட்டக்கூத்தர் பாடியிருக்கிறார்.
 

திருமகன் சீராசராசன் கதிரோன்
மருமகனாகி மறித்தும் திருநெடுமால்
ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்
பாதிப் பகை கடிந்து பாதிக்கு மேதினியில்
செந்தாமரையாள் திருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனு வம்ச மாமேரு.

(இராச.உலா.கண்ணி. 67-72)

(மங்கலமான இராசராசன் என்ற பெயரை உடையவன். சூரிய குலத்தில் தோன்றியவன். திருமால் பத்து அவதாரங்களைச் செய்தார். என்றாலும் தேவர் பகை முழுவதையும் தொலைக்க முடியவில்லை. எனவே எஞ்சிய தேவர் பகையைத் தொலைக்கச் சூரிய குலத்தில் இராசராசனாகப் பிறந்துள்ளான் என்பர்.)

 

ஒட்டக்கூத்தர் காலத்தில்தான், இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் இராமனுஜர் விவகாரம் நடந்தது. தில்லைக் கோவிலில் கோவிந்தராஜபெருமாள் அகற்றபட்டதும் நடந்தது. இந்த அவையில்தான் ஒட்டக்கூத்தர் அவைப் புலவராகவும் அரசனுக்கு ஆசிரியனாகவும் இருந்தார்.

ஆகையால் உங்கள் சான்றுகள் அவர் வைண ஆதரவாளர் என்றோ அல்லது சைவ வைணவ நடுநிலையாளர் என்றோ நிரூபிக்கவில்லை.

சோழகுல (சூரிய குல) முன்னோரில் ஒருவன் என்ற முறையில் இராமனை உத்தரகாண்டத்தில் பாடியிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஒட்டக்கூத்தர் அன்றைய நிலையில் ஒரு மிகப்பெரிய ஆளுமை. இலக்கியங்கள் கல்வெட்டுகள் என்று அவருக்கான பதிவுகள் வரலாற்றில் ஏராளம். ஒட்டக்கூத்தரின் ஆளுமைக்கு இன்னொரு புலவரின் காப்பியத்துக்கு பிற்சேர்க்கை எழுதுவாரா என்ற கேள்வி பெரிதாக எழுந்து அதற்குப் பதில் சொல்கிறது.

(இதை நான் கம்பனைக் குறைத்துச் சொல்வதாக தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம்.)

 

 

 



 
2012/7/10 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

DEV RAJ

unread,
Jul 11, 2012, 1:48:35 AM7/11/12
to mint...@googlegroups.com
இதிஹாஸத்தை ஒட்டிய இலக்கியங்களை
எழுதுவதில் இந்தியாவில் சைவ - வைணவ
வேற்றுமை இருந்ததில்லை.

காளிதாஸர் தம் ரகுவம்ச காவியத்தில்
முதலில் அம்மையப்பரைத் துதித்து
எழுதிய பா மிகவும் புகழ் பெற்ற ஒன்று



தேவ்

விஜயராகவன்

unread,
Jul 16, 2012, 4:57:39 AM7/16/12
to மின்தமிழ்
வைணவம் - ஸ்ரீவைஷ்ணவம் பற்றி ஒரு நல்ல அலசல்


http://www.badriseshadri.in/2012/07/blog-post_16.html#comment-form


மத அடிப்படைவாதம்

வகொவி

Subashini Tremmel

unread,
Jul 18, 2012, 6:10:29 PM7/18/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/7/18 N. Ganesan <naa.g...@gmail.com>
On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:


2012/7/8 OAGAI NATARAJAN <enge...@gmail.com>


ஐயம் என்பதே அறிவின் விதை.
 
 நன்மொழி!
 
கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
 
 
கம்பன் பாடலை ரசிக்க இரண்டென்ன கணக்கு?
ஒரு பேச்சுக்கு இரண்டு என்று சொன்னேன். ”ரெண்டு சோறு போடு” என்பதுபோல.
எத்தனை வேண்டுமானாலும் இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தாருங்கள்.
அன்புடன்,
சொ.வினைதீர்த்தான்.
 


 விரிவாக, ஆய்வாளர்களையும், அவர்கள் நூல்களையும் பெயர்கள் கொடுத்து
தினமணி பத்திரிகை கம்பர் காலம் 12-ஆம் நூற்றாண்டு என நிறுவியுள்ளது
தமிழ் இலக்கிய ஆய்வை இளந்தலைமுறையினருக்கு பரந்துபட்ட அளவில்
 எடுத்துச் செல்லும். அவ்வகையில் தினமணி பல மூத்த புலவர்களை எழுத வைப்பது
பாராட்டுக்குரியதாகும். 

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தரும், வாணியன் தாதனும்
சமுகத்தாலும், காலத்தாலும் வேறுபட்டவர்கள். கூத்த முதலியார் கைக்கோளர்.
வாணியன் தாதன் என்னும் புலவர் செக்காரச்செட்டியார். 
வாணியன் பாடிட வண்ணான் சுமக்க என்னும் புகழ்பெற்ற காளமேகத்தின்

விருத்தம் தொடங்குவது தாதனின் ஜாதிபற்றியே தொடங்குகிறது.

இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர் ஒட்டக்கூத்தர்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரோ மூன்றாம் குலோத்துங்கன் காலம்.
அக் காலத்தவர் புலவர் வாணியன் தாதன். கம்பரும், வாணியன் தாதனும்
ஒருவருக்கொருவர் ஏசியும், வாழ்த்தியும் பாடிய பாடல்களை
17-ஆம் நூற்றாண்டில் கவிஞர்கள் சரித்திரத் தொகைநூல்கள் கொண்டுள்ளன.

இராமாயணம் ஒரு நாட்டார்கதைப்பாடலாய் இந்தோ-ஐரோப்பிய மக்கள்
வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் இருக்கிறது. உ-ம்: ருஷியா நாட்டுப்புறப் பாடல்கள்.
இராமாயணத்தின் ஏழாம் காண்டத்தை எழுதிப் பூர்த்திசெய்ய, கம்பன் 6 காண்டங்களோடு
முடித்ததைச் சோழ சக்கரவர்த்தி (குலோத்துங்கன் III) ஆதரவால் பின்னர் எழுதியவர்
வாணியன் தாதன். வாணியன் தாதன் கம்பரை உவச்சர் குலத்தவர்
என்ற செய்தி தருபவர். 

தமிழின் புகழ்மிக்க இரங்கற்பாக்களில் ஒன்று 
வாணியன் தாதன்  கம்பர் இறந்தபோது பாடிய வெண்பா:

இன்றோநம் கம்பன்  இறந்தநாள்! இப்புவியில்
இன்றோஅப் புன்கவிகட்கு  ஏற்றநாள்! - இன்றோதான்
பூமடந்தை வாழப்  புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும்  நாள்! 

e.g:

உவேசா அவர்கள் ஒட்டக்கூத்தர் காலத்தவராக கம்பர் வாழ்ந்தவர்
என்பதற்குச் சான்றுகள் இல்லை என்று எழுதியுள்ளார்கள்.

எந்த நூலில் அல்லது கட்டுரையில் உ.வே.சா அவர்கள் இப்படி குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்று தகவல் தர முடியுமா? 

சுபா

 

Banukumar Rajendran

unread,
Jul 19, 2012, 12:34:35 AM7/19/12
to mint...@googlegroups.com


2012/7/18 N. Ganesan <naa.g...@gmail.com>
மேலும், ஒட்டக்கூத்தர் நூல்களில் உத்தர ராமாயணத்தை
ஏற்காதவர். கூத்தரின் நூல்களுக்கும், பிற்காலத்தவர்
வாணியன் தாதன் செய்த உத்தர காண்டத்துக்கும் நடையில்
உள்ள வித்தியாசங்கள் பற்பல என்று புலவர்கள் காட்டியுள்ளனர்.

ஒட்டக்கூத்தர் புதிய அணுகுமுறைகளைத் தமிழில் கொணர்ந்தவர்.
அவர் குறிப்பிடும் பதுமக் கொத்தன் யார்? என்று ஒருவரும்
இணையகாலம் வரை உரை சொல்லவில்லை. Poetry in Stone
விஜயகுமார் தளத்தில் விரிவாக எழுதிய என் கட்டுரையில்
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பாடும் தமிழ் தரும் 
பதுமக்கொத்தன் யார்? என விளக்கியுள்ளேன். அது பௌத்த
போதிசத்துவர் - அவலோகிதன். கூத்தர் தம் கவிதைகளில்
அகத்தியன் தமிழைப் போதித்தவர்களில் நடுநாயகமானவர்
என்ற கருத்தைப் பலமுறை விரிவாகப் பேசுபவர் ஒட்டக்கூத்தரே.
அதற்குமுன்னர், சின்னமனூர் செப்பேடு போன்றவற்றில்
வடமொழியில் பாணியர்களின் புரோகிதர் அகத்தியர் 
என்ற அளவில்தான் உள்ளது. 
இறையனார் களவியல் உரையிலும் தமிழிலக்கணம் தந்தவர் அகத்தியர்தான்
என்று விரிவாகக் காணோம். 

இடைக்கால இலக்கியங்களில் தமிழ் இலக்கணம் அகத்தியத்துடன்
ஆரம்பிக்கிறது என்ற கருத்தை நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.
இந்தக் கருத்தாக்கங்களுக்கு விதை ஊன்றியவர் கூத்தர். 
அவர் இரண்டாம் குலோத்துங்கனைப் பாடியவர். பின்னர்
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவரான கம்பர் அகத்தியர்
இலக்கணம் தந்து தமிழை உலகத்துக்கு அளித்தான் என்ற
கதையை வளர்த்தெடுக்கிறார். நச்சினார்க்கினியர் அகத்தியர்
சிஷ்யர் தொல்காப்பியர் என்ற கதையை விரிவாக நமக்குத்
தருகிறார்.

நமக்கு முதலில் கம்பனை மேற்கோள் காட்டுபவர்
வியாக்கியான சக்ரவர்த்தி பெரிவாச்சான் பிள்ளை.
அவர் கம்பனை மேற்கோள் காட்டும் 13-ஆம் நூற்றாண்டின்
முதற்பகுதிக்கு சுமார் 100 ஆண்டு முன்னிருந்தவர் கம்பர்.



 இது மற்றொமொரு திறக்கு! பெரியவாச்சான் பிள்ளைக்கு முன் எந்த இலக்கணத்திலாவது கம்பன் பாடலை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறதா
என்றும் பார்க்கலாம். விருத்தத்தில் கோலோச்சியவர் கம்பர். அவர் பாடலை இலக்கணங்கள் நிச்சயம் மேற்கோள் காட்டியிருக்கவேண்டும்!


இரா.பானுகுமார்,
சென்னை












 

2 கவிச்சக்ரவர்த்திகள் கூத்தரும், பின்னர் கம்பரும் 
அகத்தியர் தமிழ் இலக்கணம் தரும் கதைகளை எப்படி
விரிவுபடுத்துகிறார்கள் என்று பின்னர் ஆராய்வோம்.

அகத்தியம் என்னும் இலக்கணம் தமிழுக்கு இருந்ததாய்
சொல்லப்படும் புராணக் கதைகளை வளர்த்ததில்
கூத்தரும் அவருக்குப் பின்னர் கம்பரும் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Jul 19, 2012, 3:04:33 AM7/19/12
to mint...@googlegroups.com
    கரைபொரு காண்டமேழு கதைகளாயிரத்தெண்ணூறு
    பரவிய பாடைபத்து படலநூற் றைம்பத்தாறு
    ளுரைதரு விருத்தம்பன்னீ ராயிரத் தொருபத்தாறு
    வரமிகு கம்பன்சொன்ன வண்ணமு மெண்பத்தேழே.

இச்செய்யுள் எந்த இராமாயணப்படியுடன் பொருந்துகிறது ?
காண்டம் ஏழு என எதனால் சொல்லப்படுகிறது ?



தேவ்

N. Ganesan

unread,
Jul 19, 2012, 2:46:45 AM7/19/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, santhav...@googlegroups.com, thami...@googlegroups.com, yavaru...@googlegroups.com, thamiz...@googlegroups.com

On Jul 18, 3:10 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2012/7/18 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
> > On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:
>

> >> 2012/7/8 OAGAI NATARAJAN <engee...@gmail.com>


>
> >>>  ஐயம் என்பதே அறிவின் விதை.
>
> >>  நன்மொழி!
>

> >>>> கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடை**யலாம்

> சுபா-

Dear Subha,

I'm writing an essay - 3 stages of the Agastya myth development in
Tamil, and implications
for Kampan's century (= late 12th century). will give detailes there.

3 stages of Agastya's myth in Tamil.

I. As a vedic Rsi Agastya is the southern star, Canopus.
Pl. read my college professor Abhaynkar's article on Agastya
(Canopus):
http://www.iisc.ernet.in/currsci/dec252005/2174.pdf

Because of his southern connection, he gets associated with Mt.
Pothiyil
(Manimekalai. Tevaram - Thennan/Dakshinamurti's disciple there in
Tevaram
(e.g., Cuntarar, etc.,). In this First stage, no association of
Agastya rsi
with Tamil or as the first Tamil grammarian etc., yet

This is the stage where we find numerous Agastya statues in South East
Asia,
and vedic & Sanskrit rsi only. Most South East Asian inscriptions are
in Sanskrit.

II stage. Agastya becomes the family priest of Pandya kings
- kula purohitar. He teaches mantras as well as sweet Tamil to Pandya
kings.
Not yet a grammarian for the Tamil masses. In Pandikkovai and
Chinnamnur
Velvikkudi grant (10th cenntury) Agastya is the family priest of
Pandyas
and sings Tamil (of course, Sanskrit as well) to the Royalty.

This is the time, first in wood, and then in bronze, Nataraja image
was
created by Tamil sculptors, theologians (e.g., Manickavacakar).
In the Chola country, Haradatta Sivacaharya (10th century?) writes
about Nataraja's drum
sounds are Siva sutras and Siva teaching Sanskrit to Panini, the
grmmarian.
This Sanskrit stories eventually make Tamil pulavar-s to find an
equivalent story
for Tamil grammar.

||| stage. Like Siva teaching Sanskrit to Panini, OTTakkuuttar, the
staunch saivaite makes
Agastya the first Tamil grammarian. He sings in important places about
Agastya as the first grammarian of Tamil (takkayaakap paraNi)
And oTTakkuuttar in his songs where he gets awarded the title, Poet
Laureate,
by the Chola emperor, mentions Agastya the Tamil teacher being taught
in Tamil by Gnanasambandhar whom he calls (for the first time in
Tamil)
as an avatar of Murukan, and also by Avalokita Padmapani (whom he says
is
an avatar of Dakshinamurti). And then we see this myth of Agastya as
grmmarian
in PuRapporuL veNpaamaalai. BTW, oTTakkuuttar mentions akattiyam
grammar
in relation with wearing tumpai flowers of puRapporuL themes.

Hence, oTTakkuuttar is the first poet in Tamil who assigns grammar
work
to Agastya, and creates a mythical akattiyam grammar for Tamil.
This myth of Agastya as the author of first grammar for Tamil
was followed by Kampar in his Ramayana in Kulottunga III times more
elaborately foll. oTTakkuuttar's lead.

By 12th century's end, Kampar completely disposes of shramana
reliogions'
contribution to Tamil grammars which earlier oTTakkuutar did not
forget to
mention. Also, the Choza poets, kUttar & later kampar competely leave
out
Pandya royal household's connection to Agastya, as Pandyas were
subdued
by Chozhas, and Pandya realm gets annexed to Chozha country.

A study of Agastya myth development as the grammarian of Tamil leaves
no doubt that Kampar cannot be from 9th century, but belongs to 12th
century.
Dinamani articles, I'm glad, are also pointing to the same date.

The three stages of Agastya myth (1) as a Vedic rsi living in Pothiyil
as disciple of Dakshinamurti (2) Pothiyil Malaya being symbol of
Pandyas becoming the family priest of Pandya royalty and (3) when
Pandyas were subdued by Chozhas, the Chozha country poets
Ottakkuuttar and Kampar developing the story of Agastya as the
Tamil grammarian needs to be taken into account when discussing the
date of Kampar.

Kavichakravartis
(a) JeyamkoNDar - Kulottunga I
(b) Ottakkuutar - Kulottunga II
(c) Kampar - Kulottunga III

N. Ganesan

Rajagopalan

unread,
Jul 19, 2012, 8:05:06 AM7/19/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, Santhavasantham, Dr. Krishnaswamy Nachimuthu
 
 தசமுகன் சீதையைப் பர்ணசாலையுடன் தூக்கிச் சென்றது கம்பனின் புனைவே. இந்தப்புனைவை அடிப்படையாகக் கொண்ட சிற்பமொன்று ஹொய்சள மன்னர்களின் தலைநகரான ஹளபீடு என்னுமிடத்திலுள்ள பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த  ஆலயமொன்றில் காணப்படுவதாகவும்; ஆகவே கம்பன் அதற்கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்று டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் தனது கம்பனும் மில்டனும் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். கம்பன் காட்டுகிற மும்மூர்த்தித் தத்துவம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்றும் அதற்குச்சான்றாக 9ம் நூற்றாண்டில் உருவானதாக கருதப்படும்  எலிபெண்டா குகையில் எழுந்தருளியிருக்கும் மும்மூர்த்தி வடிவத்தையும் காட்டுகிறார்.
 
அ.ரா
 
 
 
 
 

On Wednesday, 18 July 2012 19:24:07 UTC+5:30, N. Ganesan wrote:
On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:


2012/7/8 OAGAI NATARAJAN <enge...@gmail.com>



ஐயம் என்பதே அறிவின் விதை.
 
 நன்மொழி!
 
கம்பனில் இரண்டு பாடல் எடுத்து இரசிக்க, எண்ணிப்பார்க்கத் தந்தால் பயனடையலாம் என்பது என் எளிய கருத்து.
 
 

N. Ganesan

unread,
Jul 19, 2012, 9:09:51 AM7/19/12
to மின்தமிழ், Santhavasantham, vall...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu
On Jul 19, 5:05 am, Rajagopalan <appan.rajagopa...@gmail.com> wrote:
>  தசமுகன் சீதையைப் பர்ணசாலையுடன் தூக்கிச் சென்றது கம்பனின் புனைவே.
> இந்தப்புனைவை அடிப்படையாகக் கொண்ட சிற்பமொன்று ஹொய்சள மன்னர்களின் தலைநகரான
> ஹளபீடு என்னுமிடத்திலுள்ள பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த
> ஆலயமொன்றில் காணப்படுவதாகவும்; ஆகவே கம்பன் அதற்கு முன்பே வாழ்ந்திருக்க
> வேண்டும் என்று டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் தனது கம்பனும் மில்டனும் என்னும்
> நூலில் குறிப்பிடுகிறார். கம்பன் காட்டுகிற மும்மூர்த்தித் தத்துவம் 9ம்
> நூற்றாண்டைச் சேர்ந்ததென்றும் அதற்குச்சான்றாக 9ம் நூற்றாண்டில் உருவானதாக
> கருதப்படும்  எலிபெண்டா குகையில் எழுந்தருளியிருக்கும் மும்மூர்த்தி
> வடிவத்தையும் காட்டுகிறார்.
>
> அ.ரா
>

தகவலுக்கு நன்றி, அ. ரா. ஐயா. மறைந்த எஸ். ராமகிருஷ்ணன் (மதுரை) நூலைப்
பார்க்கிறேன்.

(1) ஹளெபீடு (= பழவீடு) 12-ஆம் நூற்றாண்டு அன்றோ?
http://en.wikipedia.org/wiki/Halebid

(2) மும்மூர்த்தித் தத்துவம் பிரம்மா-விஷ்ணு-சிவனா?
கஜபுரி (எலிபெண்டா) சிற்பம் மகேசமூர்த்தி உடையது அல்லவா?
கஜபுரி சிற்பத்தையா கம்பன் பாடுகிறார்? அறிந்துகொள்ள ஆவல்.

--------------------------------

கம்பன் 9-ஆம் நூற்றாண்டு என்று இன்றும் இருப்பதன்
காரணம் ரஸிகமணி டிகேசி அவர்களின் தாக்கம்.
அவரது பிரதம சிஷ்யர் ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்
நூற்றாண்டுவிழா அண்மையில் நடந்தது. அம்மலரிலும்
என் வாழ்த்துச்செய்தி இடம்பெற்றுள்ளது. இவர்கள் எல்லோரும்
இலக்கியத்தில் பெரியவர்கள். ஆனால், கால ஆராய்ச்சியில்
என்று பார்த்தால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கே முதலிடம்
கொடுக்கவேண்டியுள்ளது. ரா. ராகவையங்கார், மு. ரா. ஸ்வாமி,
எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அ. நீலகண்ட சாஸ்திரி (முதலில்
அபிதான சிந்தாமணி பேரா. ஆ. சிங்காரவேலு முதலியார் போல
12-ஆம் நூற்றாண்டின் மத்தியில் என்று எழுதியவர்,
பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலம் என்று மாறினார் க.அ.நீ.)

மரியாதைக்குரிய டிகேசி அவர்களின் பாடல் வர்ணனைககள் அழகானவை.
ஆனால் அவரது முத்தொள்ளாயிரம் 2000 வருஷமாச்சு,
கம்பன் 9-ஆம் நூற்றாண்டு, ... கொள்கைகளை அவரது சிஷ்யர்கள்
பரப்பியதை விட்டுவிடலாம். இவை, மறைமலை அடிகள், அவரது
மாணவர் நாவலர் சோமசுந்தரபாரதி போன்றோரின்
திருவள்ளுவர் பிறப்பு கி.மு. 31, மாணிக்கவாசகர் தேவார முதலிகளுக்கு
முன்னர் 3-ஆம் நூற்றாண்டு போன்றவற்றுடன் ஒப்பிடத் தக்கவை.

நா. கணேசன்

> Visit arajagopalan.blogspot.com


>
>
>
>
>
>
>
> On Wednesday, 18 July 2012 19:24:07 UTC+5:30, N. Ganesan wrote:
> > On Sunday, July 8, 2012 1:26:03 AM UTC-7, S.Vinaitheerthan wrote:
>

> >> 2012/7/8 OAGAI NATARAJAN <engee...@gmail.com>

> >http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/vol...


> > இறையனார் களவியல் உரையிலும் தமிழிலக்கணம் தந்தவர் அகத்தியர்தான்
> > என்று விரிவாகக் காணோம்.
>
> > இடைக்கால இலக்கியங்களில்
>

> ...
>
> read more »

DEV RAJ

unread,
Jul 19, 2012, 1:03:36 PM7/19/12
to mint...@googlegroups.com
On Thursday, 19 July 2012 05:05:06 UTC-7, Rajagopalan wrote:
>>> கம்பன் காட்டுகிற மும்மூர்த்தித் தத்துவம் 9ம்
நூற்றாண்டைச் சேர்ந்ததென்றும்  ......<<<


காளிதாஸரின் காவியங்களில் த்ரிமூர்த்தி தத்வம்
காணப்படுகிறதே, அவர் 9ம் நூற்றாண்டா ?

நமோ விஶ்வஸ்ருʼஜே பூர்வம் விஶ்வம் தத³நுபி³ப்⁴ரதே |
அத² விஶ்வஸ்ய ஸம்ஹர்த்ரே துப்⁴யம் த்ரேதா⁴ஸ்தி²தாத்மநே ||
                                                                                   [ரகுவம்சம்]

குமாரஸம்பவத்திலும் இருக்கிறது.

மாமல்லபுரத்தின் த்ரிமூர்த்தி மண்டபமும்
காலத்தால் முற்பட்டது



தேவ்

DEV RAJ

unread,
Jul 19, 2012, 1:58:51 PM7/19/12
to mint...@googlegroups.com
கண் மூன்றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே
தொல் மாண் துழாய் மாலையானைத் தொழல் இனிதே
முந்துறப் பேணி முக நான்குடையானைச்
சென்றமர்ந்து ஏத்தல் இனிது

                                            -
இனியவை நாற்பது

DEV RAJ

unread,
Jul 19, 2012, 11:22:16 PM7/19/12
to mint...@googlegroups.com

2. சேக்கிழாரடிகள் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியின் முற்பகுதியிலும்
(கி.பி.1178 - 1218),

- தினமணி ஆசிரியர்


On Wednesday, 18 July 2012 23:46:45 UTC-7, N. Ganesan wrote:

Kavichakravartis
(a) JeyamkoNDar - Kulottunga I
(b) Ottakkuutar - Kulottunga II
(c) Kampar - Kulottunga III


சேக்கிழாரும், கம்பரும் சம காலத்தவர்களா ?
சேக்கிழாருக்குக் கவிச்சக்கரவர்த்தி பட்டம் கிடையாதா ?



தேவ்

Hari Krishnan

unread,
Jul 19, 2012, 11:31:12 PM7/19/12
to mint...@googlegroups.com


2012/7/20 DEV RAJ <rde...@gmail.com>

சேக்கிழாரும், கம்பரும் சம காலத்தவர்களா ?
சேக்கிழாருக்குக் கவிச்சக்கரவர்த்தி பட்டம் கிடையாதா ?

Minds are stuck in eternal time warp and defy every attempt to deny light.  One prefers to remain in a state of unchanging parachronism and imagine that every other view could be rhino-ed down.  Of what use is the sun, if the eyelids refuse to open!

Hari Krishnan

unread,
Jul 19, 2012, 11:32:57 PM7/19/12
to mint...@googlegroups.com


2012/7/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

Minds are stuck in eternal time warp and defy every attempt to deny light.  One prefers to remain in a state of unchanging parachronism and imagine that every other view could be rhino-ed down.  Of what use is the sun, if the eyelids refuse to open!

This should read as:

Minds are stuck in eternal time warp and defy every point of entry for possible light.  One prefers to remain in a state of unchanging parachronism and imagine that every other view could be rhino-ed down.  Of what use is the sun, if the eyelids refuse to open!
Reply all
Reply to author
Forward
0 new messages