Re: அணில் - (மீ.விசுவநாதன்)

106 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 3, 2016, 9:12:36 PM9/3/16
to சந்தவசந்தம், Saravanan Palanisamy, vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panb...@googlegroups.com

On Thursday, September 1, 2016 at 9:46:00 AM UTC-7, meev1955 wrote:

அணில்

(மீ.விசுவநாதன்)

தென்னை ஓலையின் நுனியில்

தொங்கிய படியும்

கொய்யா மரக்கிளையில்

குறுக்கும் நெடுக்குமாக ஓடியும்

நல்ல ஒரு பழத்தைத் தேர்ந்து

தன் மணிவாயால்

ஒரு கடி கடிக்கிறது அணில்...

கீழே ஒருவன்

கையின் கவணுடன் குறிபார்க்க

மேலே வல்லூறு வட்டமிட

அணிலோ

பழத்தின் ருசியில் தியானம்

நானோ

அணிலின் உருவில் உலகில்.....

(01.09.2016  22.09 PM)

அழகு!  அணிலின் தோகை, அதன் ஏரோடைனமிக் பயன் பற்றியும் தமிழ்க்கவிகள் பேசவேண்டும்.

தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம் நினைவுக்கு வருகிறது:
குரங்குகள் மலையை நூக்கக் 
     குளித்துத்தாம் புரண்டிட் டோடி 

தரங்க நீ ரடைக்க லுற்ற 
     சலமிலா அணிலும் போலேன்

இராமபிரான் அணிலைத் தடவியதால் மூன்றுகோடுகள் என்பது நம் புராணம்.
காளிதாச நாகர் (Nag) என்னும் வங்கப் பேராசிரியர் சென்னைப் பல்கலையில்
மேஜிக் லேண்டர்ன் வைத்துக் காட்டிய காட்சியில் இந்தோனேசியாவில் இச்சிற்பம்
இருப்பதாகக் குறிப்பிட்டாராம் (மு. ராகவையங்கார் எழுதியுள்ளார்). 80-90 வருஷம் முன்னாடி.
 அதன் படம்தேடிக் கொண்டுள்ளேன். ஒருநாள் கிடைக்கலாம். காளிதாஸ் நாகரின் மகனும்
இப்போதைய ஆங்கிலக் கவிஞர், பெயர் சட்டென நினைவுக்கு வரலை. 

விலங்கின் வால் முடியுடையதாக இருப்பின் “தோகை” என்பது தமிழ். (திவாகரம்).
நாய், குதிரை, அணில், புலி இவற்றின் வால் தோகை எனப்படும். 
வார்த்தல் - கீழே விழுதல். ர/ல மாற்றத்தில் வார் வால் என வரும். புச்சம் என்பதும் தமிழ்முளை கொண்டதே.
நீர்-/நீலம் ~ இந்திய உபகண்டம் முழுமையும் நீலம் என்னும் தமிழ்ச்சொல் blue color-கு இருப்பது நம் தமிழின்
பழமையை அறிவிக்கிறதன்றோ? நேர்- > ஏலவே/ஏற்கெனவே என ர்/ல் மாறுபாடு:

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் - கண்ணதாசன்

ஏரோப்ளேனின் Control Surfaces ( https://en.wikipedia.org/wiki/Flight_control_surfaces ) -ல் முக்கியமானது Rudder.
கண்ணதாசன் பாட்டை கொஞ்சம் விரிவு செய்தால் “அணிலின் தோகையைக் கண்டான், விமானத்தோகை (சுக்கான்) படைத்தான்” எனலாம்.
 A squirrel’s tail helps stabilize its movements and acts as a rudder when it jumps.

File:Aileron yaw.gif

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 4, 2016, 12:20:41 AM9/4/16
to வல்லமை, மின்தமிழ்

On Saturday, September 3, 2016 at 7:11:42 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
நம் ஊர்களில் காணும் அணில் அருகருகில் உள்ள மரத்துக்குத் தாவிடும்.  ஆனால் தேக்கடி போன்ற மலைப் பிரதேசங்களில் காணப்படும் ஒரு அணில், ஒரு மரத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள மரத்துக்கு பறந்து சென்றே தாவிடும்.  இப்படிப் பறப்பதற்கு அதற்கு உதவியாக இருப்பது அதன் முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும், மார்பு வயிற்றோடு இணைத்திடும் "loose" ஆன தோல்.

இந்த வகை அணிலுக்கு விஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர்  (scientifically known as Pteromyini or Petauristini).

இப்படி அணில் பறப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.  ஆனால் அந்த சமயம் என் கையில் கேமிரா இல்லை.

Thanks

~NG
 
இதோ இணையத்தில் கண்ட ஒரு பறக்கும் அணில்:

​​
Inline image 1
(படம் www.sialis.org யில் இருந்து)

N. Ganesan

unread,
Sep 4, 2016, 12:59:14 AM9/4/16
to சந்தவசந்தம், pshara...@gmail.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
மீவியின் அணிற்கவிதை அணிலின் பழைய பெயரைச் சிந்திக்கவைக்கிறது.

அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை - பிள்ளை பெயர்பெற்ற செல்லங்கள் (pets) இந்தியாவில் பலகாலமாக உண்டு.
4200 வருஷம் முன்னால் சிந்து  யுனிகார்ன் முத்திரையில் அணிற்பிள்ளை:

சணில் என்ற சொல் துளுவிலும், பழைய கன்னடத்திலும் அணிலுக்குண்டு. செணில் என்னும் சொல் சணில் > அணில் ஆகியிருக்க வேண்டும்.
ஸஹஸ்ர > சாயிரம் (கன்னடம்) > ஆயிரம் தமிழில் 1000 என்பதன் எண்ணுப்பேர் ஆதற்போல என்க.

வேண்மாள் அந்துவஞ்செள்ளை - பதிற்றுப்பத்து. புலவர் நச்செள்ளை.

செள்- செண்- (செண்டு = பூங்கொத்து) - செண்ணம். அழகான பூங்கொத்துப் போன்ற தோகை உடைய விலங்கு = செணில்/சணில் > அணில்.
செளில் > அளில் என்று ஆகியுள்ளது எனலாம்.

DEDR 2315 Ta. aṇil, aṇilam

2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.

செண்ணம்/சென்ன- சென்னகேசவன் - வேளூரில் (Belur) செண்ணம் - வடிவு, அழகு, பூவேலை, ஒப்பனை, நுண்டொழில் (நச்சர் உரை).

2423 Ka cannu, cennu straightness, beauty, grace, niceness, properness, elegance; canna, cenna a man of beauty, a handsome man; fem. canni, canne, cenne; cannage handsomely, nicely, properly; canniga a handsome, fine man. Tu. canna handsome, well. Te. cennu beauty, grace, elegance, manner, way. Cf. 328 Ko. anv and 2328

 செண்ணம் அமைத்த செம்பொன் பட்டத்து வண்ண மணியொடு முத்து இடை விரைஇய (பெருங்கதை)

இன்தீம் பைஞ்சுனைத் தண் நறுங் கழுநீர்-இனிய தீவிய பசுமை வாய்ந்த சுனையில் உள்ள தண்ணிய நறிய குவளைப் பூவுடன் இயன்ற, ஈரணிப் பொலிந்த - பெரிய ஒப்பனையாற் பொலிவுற்ற, செண் இயல் சிறுபுறம்-கொண்டை அசைதலையுடைய முதுகினை (அகநானூறு)

ஆக,

கிளைக்குக் கிளை தாவவும், மரம் ஏற இறங்கவும் பல கோணங்களில் உதவும் அணில் தோகையின் அழகு மக்களை ஈர்த்துள்ளது. எனவே,

சினையாகுபெயராய் செணில்/சணில் என்று பெயரிட்டனர். சணில் > அணில் (Cf. சிப்பி > இப்பி).

கடுக்காய் மரத்துக்கும் இப்பெயரே உண்டு:
DEDR 119 Ka. aṇile, aḷale, aḷile, aḷule, aḷḷi, aḷḷe a large tree furnishing Indian myrobalans or ink nuts, Terminalia chebula Roxb. Tu. aṇile-kāyi gall-nut, ink-nut; aṇile-mara ink-nut tree, T. chebula; alḍe-kāyi gall-nut, T. c. DED(S) 101.
அணில்தோகை போல கடுக்காய்மர புஷ்பங்கள் இருப்பதால் இரண்டுக்கும் ஒரே பெயர்.

தேமொழி

unread,
Sep 4, 2016, 1:16:03 AM9/4/16
to மின்தமிழ்

On Saturday, September 3, 2016 at 9:59:14 PM UTC-7, N. Ganesan wrote:
மீவியின் அணிற்கவிதை அணிலின் பழைய பெயரைச் சிந்திக்கவைக்கிறது.

அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை - பிள்ளை பெயர்பெற்ற செல்லங்கள் (pets) இந்தியாவில் பலகாலமாக உண்டு.

ஆனால் 'தென்னம்பிள்ளை' செல்லம் கிடையாது. 

N. Ganesan

unread,
Sep 4, 2016, 10:28:28 AM9/4/16
to வல்லமை, மின்தமிழ், Santhavasantham

On Sunday, September 4, 2016 at 12:53:49 AM UTC-7, வையன் wrote:
2016-09-04 10:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மீவியின் அணிற்கவிதை அணிலின் பழைய பெயரைச் சிந்திக்கவைக்கிறது.

அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை - பிள்ளை பெயர்பெற்ற செல்லங்கள் (pets) இந்தியாவில் பலகாலமாக உண்டு.
4200 வருஷம் முன்னால் சிந்து  யுனிகார்ன் முத்திரையில் அணிற்பிள்ளை:

ஈற்றில் உள்ள உயிரிக்கு கால்கள் நீண்டு உயரமாக இருப்பதால்  அது கீரியாக இருக்க வேண்டும் அது அணில் அல்ல. கோடு அணி எனப்படுவதால் மூன்று கோடுள்ள உயிரி அணில் எனப்படுகிறது.

 சேசாத்திரி,

இந்தியாவில் பலவகை அணில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் கோடு இல்லை. எனவே, கோட்டை அணிந்ததால் அணில் என்பது பொருந்தவில்லை. மேலும், சணில் என்ற சொல் அணிலுக்கு உள்ளது.
மேலும்,  கடுக்காய்மரத்துக்கும் அணில், அளில் என்ற பெயர்கள் உள்ளது. செள் - செண் - (செண்டு). இதுபோன்ற பூ உடையது கடுக்காய்மரம். அதேபோல, விமானத்தின் Rudder போல, அணிலின் தோகைவால் பயன்படுகிறது. அதன் காரணமாக, வாலை செணில்/அணில் தாவுகையிலும், மரம் ஏற, இறங்கப் பயன்படுத்தும் முறையையும் வியந்த பழந்தமிழன் வைத்த பெயர் செணில்/சணில். சமணர் > அமணர்,
சாயிரம் > ஆயிரம், சிப்பி > இப்பி, .... என்பதுபோல, செணில்/சணில் > அணில் ஆகிவிட்டது. வாலின் பயன்பாட்டினால் எல்லா அணிலுக்கும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. The bushy tail of squirrels serve important functions to balance and change direction etc., just like the rudder in modern planes. The ancients named squirrel as "ceNil" due to the beauty and functionality of its tail.

நெள்ளு “கரியநிற தானியம்” > எள்ளு. நெள்ளி ‘crab, அலவன்’ > நள்ளி/நண்டு.  செள்- > செள்ளை ((1) நச்செள்ளையார், ஒரு சங்கப்புலவர்; (2) வேண்மாள் அந்துவன் செள்ளை. இன்றும் அந்துவன் கூட்டம் இருக்கிறது. இது பதிற்றுப்பத்தில்). செள் - செண் - செணில் > சணில் > அணில். (Cf. நெள்- > நள்- )

> ஈற்றில் உள்ள உயிரிக்கு கால்கள் நீண்டு உயரமாக இருப்பதால்  அது கீரியாக இருக்க வேண்டும் அது அணில் அல்ல. 

இது அணில் தான். கீரி தரையில் ஓடும். மரத்தில் வாலை நிமிர்த்திக்கொண்டு ஏறவோ, இறங்கவோ செய்யாது.

இயற்கையை நன்கு பார்த்து முத்திரைகளை வடிவமைத்தவர்கள் பண்டை இந்தியர்கள் (இந்தியா < சிந்து).
நான்கு காலும் அணில் மரம் இறங்கையில் நன்கு தெரியும்.

நா. கணேசன்

File:Funambulus palmarum 1831.jpg

The Common Striped Squirrel (Palm Squirrel) Funambulus palmarum on a Tamarind Tree.
Oriental Memoirs, Vol. III, by James Forbes ,1812-13. Drawn and painted in Bombay around 1779. 

N. Ganesan

unread,
Sep 10, 2016, 1:30:00 AM9/10/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, pshara...@gmail.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
On Saturday, September 3, 2016 at 9:59:14 PM UTC-7, N. Ganesan wrote:
மீவியின் அணிற்கவிதை அணிலின் பழைய பெயரைச் சிந்திக்கவைக்கிறது.

அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை - பிள்ளை பெயர்பெற்ற செல்லங்கள் (pets) இந்தியாவில் பலகாலமாக உண்டு.
4200 வருஷம் முன்னால் சிந்து  யுனிகார்ன் முத்திரையில் அணிற்பிள்ளை:

சணில் என்ற சொல் துளுவிலும், பழைய கன்னடத்திலும் அணிலுக்குண்டு. செணில் என்னும் சொல் சணில் > அணில் ஆகியிருக்க வேண்டும்.
ஸஹஸ்ர > சாயிரம் (கன்னடம்) > ஆயிரம் தமிழில் 1000 என்பதன் எண்ணுப்பேர் ஆதற்போல என்க.

வேண்மாள் அந்துவஞ்செள்ளை - பதிற்றுப்பத்து. புலவர் நச்செள்ளை.

செள்- செண்- (செண்டு = பூங்கொத்து) - செண்ணம். அழகான பூங்கொத்துப் போன்ற தோகை உடைய விலங்கு = செணில்/சணில் > அணில்.
செளில் > அளில் என்று ஆகியுள்ளது எனலாம்.

DEDR 2315 Ta. aṇil, aṇilam

2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.

செணில்/சணில் த- என்று திரிதலுக்கு ஒப்பீட்டு உதாரணங்கள்:

(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

N. Ganesan

unread,
May 10, 2017, 9:02:14 AM5/10/17
to மின்தமிழ், santhav...@googlegroups.com, pshara...@gmail.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Iravatham Mahadevan, K Rajan, S. V. Shanmukam, George Hart
I am attending a conference on Tirukkural at Nagercoil:

செணில் > தணில் (= அணில்), துளுவில்.

சொல்முதல் ச்- > த்- ஆதற்கு உதாரணங்கள் பல உள.

எள்ளு சிந்துவெளியில் முக்கிய வெள்ளாமை.

அதன் வடமொழிப் பெயர் தில- என்பது. தைலம் = எண்ணெய். (சிவன் சமயம் சைவம் என்பதுபோல்).

சில்- (சில்+து = சிறு) - சிறிய தானியம் என்பதற்கு சில- > தில- என்றி வட இந்தியாவில் திரிந்து வழங்குகிறது,
சில > தில எள்ளின் அளவுபற்றி பிறந்த பெயர். ஞெள்ளு/நெள்ளு > எள்ளு கருமை பற்றி எழுந்த பெயர்.

சிரீ > திரி (நம்பூதிரி, பௌவத்திரி (துறைமுகம்), ...) > திரு ...

மேலும், இதுபோன்றனவற்றிற்குக் காட்டுகள் சில!
(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

நா. கணேசன்

DEDR 2315 Ta. aṇil, aṇilam

2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.

செணில்/சணில் த- என்று திரிதலுக்கு ஒப்பீட்டு உதாரணங்கள்:

(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

N. Ganesan

unread,
Jul 9, 2018, 9:49:55 PM7/9/18
to Santhavasantham, வல்லமை, மின்தமிழ்
பொதுப்பெயராக எல்லா வகை அணிகளுக்கும் செணில்/சணில் > அணில் ( cf. சபா > சவை > அவை, சகசிரம் > சாசிரம் > ஆயிரம், ..... இன்ன பிற.) விளக்கியிருந்தேன்.

Palm squirrels என்னும் கையடக்கமான அணில்களுக்கு மாத்திரம் வெளில் என்ற சொல்லைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
வெளில் என்ற பெயர் ‘பால்ம் ஸ்குரில்’ பெறும் விதம் வெள்ளிடைமலையாம்.

தெற்கே மூவரி அணில்களும், வடக்கே ஐவரி அணில்களும் இருக்கின்றன.
வெண்மையான வரிகள் கொண்ட கையில் அடங்கும் அணில் = வெள்- + இல் (விகுதி) வெளில் என்று பெயர்.
சங்க இலக்கியத்திலே காண்க: நன்றி பேரா. ப. பாண்டியராஜா தளம்.
வெளில் “palm squrirrel"  உள்ள சங்கப் பாடல்கள் கொண்ட நூல்கள்:
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் 

மூவரி வெளில் (அ) வரிப்புறம்: https://en.wikipedia.org/wiki/Indian_palm_squirrel
ஐவரி வெளில் (அ) வரிப்புறம்: https://en.wikipedia.org/wiki/Northern_palm_squirrel

 செணில்/சணில் > அணில் : Like the rudder of an aeroplane, squirrels use their tail. Hence the name. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 9, 2018, 10:00:24 PM7/9/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan

N. Ganesan

unread,
Jul 10, 2018, 6:30:50 AM7/10/18
to Santhavasantham, வல்லமை, மின்தமிழ்
On Monday, July 9, 2018 at 1:13:05 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

ஞாயி., 8 ஜூலை, 2018, முற்பகல் 1:57 அன்று, இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com> எழுதியது:

அணி என்பதற்கு வரிசை, வரி(கோடு) எனவும் பொருள்கள் உண்டு. முதுகில் வரிசையாகக் கோடுகள் அமைந்த உயிரி அணில் எனப்பட்டது என்பார் பேராசிரியர் சி.இலக்குவனார். தொல்காப்பியர்  தொல்காப்பியம் மரபியலில் மூவரி அணில் என்றே குறிப்பிடுகின்றார். இதற்கு வலிந்து வேறு வகையாகப் பொருள் கொள்ளத் தேவையில்லை.

எனில் வெள்ளரிக்காய்க்கு அதுபோல் பெயரில்லையே? "வெள்ளணில்காய்"  ??
 
தொல்காப்பியம் பிற்கால நூல். உ-ம்: கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்குப் பின் என பிராமி கல்வெட்டுகள் தொல்லியலில் காட்டுவதை ஐராவதம் ஆராய்ந்து அறிவித்துள்ளார்.
அணில் வெள்ளை வரிகளால் ஏற்பட்ட பெயர் அல்ல.

செணில்/சணில் > அணில் உருவாகும் முறையை இங்கே ஆராய்ந்துள்ளேன் - சில ஆண்டுகள் முன்னர்,

வெளில் என்பது Palm squirrel. மலபார் அணில் வெளில் அல்ல.
வெளில் > அளில் என்று கன்னடத்திலே கூறுவர். 
விந்து > இந்து ‘ moon'; விடங்கர் > இடங்கர் ‘gharial', ... என்பதுபோல, சொன்முதல் வ் இழப்பு.
இதனை முதலில் கூறியவர் மாகறல் கார்த்திகேயனார், மொழிநூலில்.

பொதுப்பெயராக எல்லா வகை அணிகளுக்கும் செணில்/சணில் > அணில் ( cf. சபா > சவை > அவை, சகசிரம் > சாசிரம் > ஆயிரம், ..... இன்ன பிற.) விளக்கியிருந்தேன்.

Palm squirrels என்னும் கையடக்கமான அணில்களுக்கு மாத்திரம் வெளில் என்ற சொல்லைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
வெளில் என்ற பெயர் ‘பால்ம் ஸ்குரில்’ பெறும் விதம் வெள்ளிடைமலையாம்.

தெற்கே மூவரி அணில்களும், வடக்கே ஐவரி அணில்களும் இருக்கின்றன.
வெண்மையான வரிகள் கொண்ட கையில் அடங்கும் அணில் = வெள்- + இல் (விகுதி) வெளில் என்று பெயர்.
சங்க இலக்கியத்திலே காண்க: நன்றி பேரா. ப. பாண்டியராஜா தளம்.
வெளில் “palm squrirrel"  உள்ள சங்கப் பாடல்கள் கொண்ட நூல்கள்:
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் 

மூவரி வெளில் (அ) வரிப்புறம்: https://en.wikipedia.org/wiki/Indian_palm_squirrel
ஐவரி வெளில் (அ) வரிப்புறம்: https://en.wikipedia.org/wiki/Northern_palm_squirrel

 செணில்/சணில் > அணில் : Like the rudder of an aeroplane, squirrels use their tail. Hence the name. 

முற்றெதிரொலி, குற்றெதிரொலிச் சொற்கள் (Full/Partial Reduplicating Ideophones) தமிழில் ஒரு 2000 இருக்கும்.
ந்,ம்,ய்,வ்,க்,ச் : சொன்முதலாய் வரும் இவ்வெழுத்துகள் வரும்போது அவை மறைதலுக்கான
உதாரணங்களைத் தனியே தொகுக்கலாம். 
அவ்வகையில், பால்ம் ஸ்குரிலுக்கு வ் மறைகிறது: வெளில் > வளில் > அளில்.
எல்லா அணிலுக்குமான பொதுப்பெயரில் ச் மறைகிறது: செணில்/சணில் > அணில்.
In Proto-Dravidian, ceNil/caNil which changes to aNil in Sangam times, with word-initial loss of c-/

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jul 12, 2018, 12:34:24 AM7/12/18
to mintamil
///முற்றெதிரொலி, குற்றெதிரொலிச் சொற்கள் (Full/Partial Reduplicating Ideophones) தமிழில் ஒரு 2000 இருக்கும்.
ந்,ம்,ய்,வ்,க்,ச் : சொன்முதலாய் வரும் இவ்வெழுத்துகள் வரும்போது அவை மறைதலுக்கான
உதாரணங்களைத் தனியே தொகுக்கலாம். 
அவ்வகையில், பால்ம் ஸ்குரிலுக்கு வ் மறைகிறது: வெளில் > வளில் > அளில்.
எல்லா அணிலுக்குமான பொதுப்பெயரில் ச் மறைகிறது: செணில்/சணில் > அணில்.
In Proto-Dravidian, ceNil/caNil which changes to aNil in Sangam times, with word-initial loss of c-/
நா. கணேசன்///

ஓரளவுக்கு முற்றெதிரொலி &குற்றெதிரொலியைப்  புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறேன் .
ஆனால் மொழி முதல் /ந், ம், ய், வ், க், ச் /மெய்கள் மறைந்து சொற்கள் தோன்றுவது எதிரொலியில்  அடங்குமா?
இது ஒரு வகை என்று ஏற்றுக் கொள்வதா?
please explain
kanmani 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 12, 2018, 12:38:49 AM7/12/18
to மின்தமிழ்
2018-07-11 21:34 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///முற்றெதிரொலி, குற்றெதிரொலிச் சொற்கள் (Full/Partial Reduplicating Ideophones) தமிழில் ஒரு 2000 இருக்கும்.
ந்,ம்,ய்,வ்,க்,ச் : சொன்முதலாய் வரும் இவ்வெழுத்துகள் வரும்போது அவை மறைதலுக்கான
உதாரணங்களைத் தனியே தொகுக்கலாம். 
அவ்வகையில், பால்ம் ஸ்குரிலுக்கு வ் மறைகிறது: வெளில் > வளில் > அளில்.
எல்லா அணிலுக்குமான பொதுப்பெயரில் ச் மறைகிறது: செணில்/சணில் > அணில்.
In Proto-Dravidian, ceNil/caNil which changes to aNil in Sangam times, with word-initial loss of c-/
நா. கணேசன்///

ஓரளவுக்கு முற்றெதிரொலி &குற்றெதிரொலியைப்  புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறேன் .
ஆனால் மொழி முதல் /ந், ம், ய், வ், க், ச் /மெய்கள் மறைந்து சொற்கள் தோன்றுவது எதிரொலியில்  அடங்குமா?
இது ஒரு வகை என்று ஏற்றுக் கொள்வதா?
please explain
kanmani 

The word-initial loss of n,m,y,v,k,c has nothing to do with ideophones.
We can start a separate thread to collect the examples of words with initial letters  n,m,y,v,k,c getting lost in Tamil.
In Proto-Dravidian reconstructions, we need those words rather than the later words.
For example, ceNil/caNil > aNil, aNil is derived form only, not the original root word.

NG

kanmani tamil

unread,
Jul 12, 2018, 1:38:39 AM7/12/18
to mintamil
ஆம்.
சொல்லாய்வு  என்பது மூலத் திராவிட மீட்டுருவாக்கத்தை நோக்கி அமைய வேண்டியது  என்பதையே நானும் ஏற்கிறேன்.
அப்படி ஆராயும் போது பிற திராவிட மொழிகளின் வழக்காறுகளையும் சேர்த்தே ஒப்புநோக்க வேண்டியிருக்கும்.  
அதனால் தான் அணில் பற்றிய உங்கள் சொற்பிறப்பு ஆய்வை நான் என் கவனத்தில் கொள்கிறேன். 
சொல்லாய்வு நெறிமுறை என்று வரையறை(நூல் ) ஏதும் உள்ளதா?
இருப்பின் பகிர்ந்து கொள்க.
ஆர்வம் பற்றிக் கேட்கிறேன்.
கல்வி கரையில......
கண்மணி 
Reply all
Reply to author
Forward
0 new messages