நாயகன் திரைப்படத்தில் படம் இரண்டுமணி நேரம் ஓடி முடியப்போகும்போது பேரன் தாத்தவைப் பார்த்து நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று கேட்பதும் தாத்தா தெரியலியே என்று சொல்வதும் உச்ச கட்டம். பெரியாரும் புதிய தலைமுறையின் நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு நடுநிலை இல்லாமல் நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் இரு பிரிவினர் தொடர்ந்து நடத்தும் வாதப்போரால் முடிவுகட்ட முடியாது. பெரியாரின் சிந்தனைகளும் அது தொடர்பான இரு தரப்புக் கருத்துக்களும்புதிய கோணத்தில் அவர் படைப்புகளைப் பார்ப்பதும் ஆய்வுலகில் தொடங்கி வளர்ந்து வருகிறது
ஒரு சிலர் அவர் 40 வயதுவரை நல்லாத்தானே இருந்தார் 40 க்குமேல் ஏன் இந்தப்புத்தி என்று கேட்பதும் செல்வச் செழிப்பும் கொள்கைப்பிடிப்பும் மக்களைக் கவரும் எழுத்தும் பேச்சும் இருந்த அவர் ஏற்றதாழ்வுமிக்க தமிழகத்தில் பொதுத்தொண்டாற்றவும் சமூகத் திருத்தம் செய்யவும் வரவில்லை என்றால் என்றோ தமிழகம் குப்பைக்காடாக மாறியிருக்கும் என்று இன்னொரு சாரார் சொல்வதும் ஆய்வுப்புலத்தில் புதிய ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லும் முனைப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இணையவெளியில் தங்கள் வெறுப்பையும் வக்கிரத்தையும் உக்கிரமாக வெளிப்படுத்தும் லாவணிக் கச்சேரிகளைத் தாண்டி பெரியாரின் ஆளுமையைச் சரிவரத் தெரிந்துகொள்ள இந்த ஆய்வுகள் பெரிதும் துணை செய்கின்றன
தமிழக அரசியலில் 1916 முதல் 1922 வரையிலான காலம் அதிரடி அரசியல் ஆயாராம் காயாராம் அரசியல் குதிரை வணிகம் என்று பல குழப்பங்களைக் கொண்டதாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் இரட்டை ஆட்சிமுறையில் பிராமணர்கள் தங்களை அழுத்துகிறார்கள் என்று சொல்லி ஆறு ஆண்டுகள் ஆட்சி நடத்திய நீதிக்கட்ச்சியை தாழ்த்தப்பட்டவர்களும்சிறுபான்மையினரும் மண்ணைக் கவ்வ வைத்தனர். சென்னையில் மையம் கொண்டிருந்த அன்னிபெசன்ட் தலைமையிலான ஸ்வராஜ்யக் கட்சி சுயேச்சைகளுடன் கைகோர்த்து நீதிக்கட்சியை வென்று டாக்டர் சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைத்திருந்தது. தோல்வியடைந்த நீதிக்கட்சியில் இருந்து தலைவர்கள் எல்லாம் காங்கிரசில் தஞ்சம் புகுந்திருந்தனர்
பெரியார் தன்னுடைய ஒரே நோக்கமான அழுத்தப்பட்ட பிரிவினருக்குச் சமூக நீதி அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பு விகிதாசார அடிப்படையில் செயல்படுத்தத் தீர்மானம் போடவேண்டும் என்று 1921 முதல் 1925 வரை ஒவ்வொரு ஆண்டும் தீமானம் கொண்டுவந்து அது நிறைவேறாததால் சினம்கொண்டு காங்கிரசில் ஒதுங்கியிருந்தார். ராஜாஜி எப்படியாவது பெரியாரை மீண்டும் காங்கிரசுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரசில் உள்ள சில பிராமணர்கள் தன்னுடைய முயற்சிக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதையும் காந்தியார் இந்திதான் இந்துஸ்தானிக்குப் பதிலாகத் தேசிய மொழி என்றும் வர்ணாசிர தர்மம் ஒரு சிறந்த சமுதாய அமைப்பு அதைத் தவறாக[ பயன்படுத்தும் சில பிராமணர்களைத் தன் வழிக்குக் கொண்டுவர முடியும் என்று தொடர்ந்து காந்தியார் பேசியதால் அவர்மீது அவநம்பிக்கையும் கொண்டிருந்தார்.
அனாதை ஆனந்தனாக மாறிப்போன நீதிக்கட்சியில் எஞ்சியிருந்த தலைவர்கள் காங்கிரசின் மீது வெறுப்பில் உள்ள பெரியாரை நீதிக்கட்சிக்கு அழைத்துவரத் தூண்டில் போட்டுக்கொண்டிருந்தனர். நீதிக்கட்சியின் விதிப்படி பிராமணர்களைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளத் தடை இருந்தது. (முனுசாமி நாயுடு நீதிக்கட்சியின் முதல்வராக இருந்தபோது விதியை மாற்றி பெரியார் நீதிக்கட்ட்சியில் தலைவரானபோது நீதிக்கட்சியில் ப்ராமணர்கள் சேரலாம் என்று விதி மாற்றப்பட்டது) அதுபோன்றே நீதிக் கட்சியில் இருப்பவர்கள் காங்கிரசில் போய்ச் சேர்ந்துகொள்ள நாட்டம் கொண்டிருந்தனர். இந்நிலையில் கோவையில் நடந்த நீதிக்கட்சியின் கூட்டத்துக்கு காங்கிரசில் விரக்தியுடன் இருந்த மூன்று தலைவர்களான பெரியார், வரதராஜுலு மற்றும் திருவிக ஆகியோரை அழைத்து நீதிக் கட்சியினர் காங்கிரசில் சேருவதுபற்றியும் பிராமணர்களை நீதிக்கட்சியில் சேர்வது பற்றியும் ஆலோசனை நடத்தினர். பெரியார் மட்டும் பிராமணர்களை நீதிக்கட்சியில் சேர்த்தக்கூடாது காங்கிரசில் வெறுப்புடன் உள்ள பிராமணரல்லாத காங்கிரஸ்காரர்கள் நீதிக்கட்ட்சிக்கு வருவதைத் தடுக்கும் என்று பேசினார். நீதிக்கட்சியின் இந்த முயற்சி பெரியாரை நீதிக்கட்சியில் சேர்வது நல்லதல்ல என்று எச்சரிக்கை செய்ததால் அவர் நீதிக்கட்சியில் சேரவில்லை
அதே காலகட்டத்தில் காங்கிரசில் இருந்து கதராடையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் முனணியில் இருந்த தஞ்சையைச் சேர்ந்த சைவ வேளாளர் பிரிவைச் சேர்ந்த ராமனாதன் காங்கிரசில் உள்ள பிராமணர்கள் வர்ணாசிர தர்மத்தைக் கடைப்பிடித்து பிராமணர் அல்லாதவர்களை அழுத்தியும் சிறுமைப்படுத்தியும் நடந்துகொள்வை எதிர்த்து சில காங்கிரசில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து சுயமரியாத இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தைப் பதிவு செய்தனர். சரியான தலைமை போதுமான நிதிவசதி இல்லாமல் சில ஆண்டுகள் நடந்த இந்த இயக்கத்தைச் சேர்ந்த ராமனாதன் பெரியார அவருடைய சுயமரியாதைச் சங்கத்துக்குத் தலைவராகப் பொறுப்பேற்குமாறு வேண்டிக்கொள்ள அதை ஏற்று பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்
இந்தக் கால்கட்டத்தில் காங்கிரசில் இருந்துகொண்டே பெரியார் காங்கிரசின் வர்ணாசிரமக் கொள்கையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். தானாக விலகமாட்டேன் என்றும் காங்கிரஸ் கட்சி தன்னை வெளியேர்ரட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார் (காங்கிரஸ் கட்சி தீர்மானம்போட்டு பின்னர் அவரைக் கட்டம்கட்டி காங்கிரசிலிருந்து விலக்கியது). இன்னொருபுறம் நீதிக்கட்சியில் உறுப்பினராக இல்லாமல் வெளியில் இருந்துகொண்டே தன்னுடைய பிற்பட்டோருக்கான விகிதாசாரக் கொள்கையை ஏற்றுகொள்வார்களா என்று ஆழம்பார்த்த்துக்கொண்டு இருந்தார். மூன்றாவதாக ராமனாதனின் சுயமரியாத இயக்கத் தலைவராக இருதுகொண்டு அங்கே தன்னுடைய விகிதாசாரக் கொள்கை வேலை செய்யுமா என்றும் ஆழம்பார்த்துக்கொண்டிருந்தார்
சுயமரியாதை இயக்கத்துக்கு உதவி செய்வதுபோல் ராஜாஜி முதலமைச்சராகி காங்கிரசின் இந்திமொழியை அறிமுகப்படுத்தி பெரியாருக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க இந்தி எதிர்ப்பை முன்னெடுத்து தமிழினக் காவலராகவும் அழுத்தப்பட்டவர்களின் ஒரே தலைவராகவும் மாறிப்போனார். காலி பெருங்காய டப்பாகவாகப்போன நீதிக்கட்சியை தன்னுடைய விகிதாசார அரசியலுக்குக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ள நீத்க்கட்ட்சியைக் கையகப் படுத்திக்கொண்டார். எனினும் இரண்டு இயக்கத்திலும் அவருடைய பிராமண எதிர்ப்புக்கும் கடவுள் ம்றுப்புக்கும் பலத்த எதிர்ப்பு இருந்ததாலும் நீதிக்கட்சி அறிமுகப்படுத்திய விகிதசாரக்கொள்கை உச்ச நீதிமன்றத்தில் முடக்கப்பட்டதாலும் போகவேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் போய்த் தொலைக்கட்டும் அண்ணாதுரை மட்டும் இருந்தால்போதும் என்று முடிவெடுத்து அண்ணாவை வைத்து நீத்க்கட்சியைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றி ஒரு தேர்தலில் நாட்டம் இல்லாத அரசியல் இயக்கத்தை உருவாக்கினார்
அவருடைய காரியத்துக்கு அவ்வப்போது வெளியில் இருந்து காமராசரையும் அண்ணாவையும் கலைஞரையும் ஆதரித்தும் அவருடைய இட ஒதுக்கீடு அவருடைய வாழ்நாளில் நிறைவேறாத நிராசையாகப் போனது. பிராமண எதிர்ப்பு கடவுள் மறுப்பு பகுத்தறிவுவாதம் சுயமரியாதை எல்லாமே அவருடைய ஒரே கொள்கைக்கான இட ஒதுக்கீட்டுக்காக நடத்திய அரசியல் அதிரடி என்று சில ஆய்வுமுடிவிகள் வெளிவந்துள்ள நிலையில் பெரியார் நல்லவரா கெட்டவரா காரியவாதியா அரசியல்வாதியா என்ற கேள்வி ஆய்வுக்குரிய கேள்வியாக முதன்மை பெறுகிறது.
மாயாவி