வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்

8 views
Skip to first unread message

JANARDHAN G

unread,
Apr 10, 2026, 2:27:28 AM (yesterday) Apr 10
to மின்தமிழ்
வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்.
Amazon.in: Buy Volga Mudhal Gangai Varai [Paperback] Rahula Sankrityayan  and Yuma Vasuki [Paperback] Rahula Sankrityayan and Yuma Vasuki Book Online  at Low Prices in India | Volga Mudhal Gangai Varai [Paperback] Rahula
இந்நூலைப் பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் கொடுத்தது  ஆகச்சிறந்த முன்னுரையாகும். மனித சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாக இந்த நூல் உள்ளது. கிமு6000 முதல் கிபி1942 வரை உள்ள முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட 20 கதைகள் நம் முன்னே காட்சிபோல உள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகளும்தத்துவங்களும்வேதம் மற்றும் உபநிடதங்களும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை எடுத்து எளிமையான கதைகளாக ராகுல்ஜி நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் இதை படிக்கும் பொழுது இந்தியதேசத்தில் வடபகுதியில் உள்ள மனித சமுதாயம் எவ்வாறு நாகரிக வளர்ச்சி அடைந்தது என்றும். அவர்களின் பூர்வீகம் எங்கிருந்து என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய நிலவரத்தில் கைபர் கணவாய் வழியாக ஆரியர்களின் வருகையை மறுக்கும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு.
இந்தப் புத்தகத்தில் வட இந்திய நாகரீகம் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது, ராகுல்ஜிக்கு தென்னிந்திய-தமிழக தொன்மையான கலாச்சாரமும் பாரம்பரியமும் அறிய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். அப்பொழுது தமிழ் சம்பந்தமான ஆராய்ச்சிகளும் கட்டுரைகளும் அவ்வளவாக வெளிவரவில்லை என்றே தோன்றுகிறது. நேருஜியின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகம் இந்த படைப்பிற்கு மேலும் வலுவூட்டுகிறது என்றே கூற வேண்டும். புத்தக விரும்பிகள் இன்றைய நிகழ்காலத்தில்  பாடத்திட்டத்தில் உள்ள வரலாற்றை இந்த புத்தகத்தில் உள்ள உண்மையான நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்த்து தெளிய வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 1990களில் வெளிவந்த பாரத் ஏ கோஜ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தூர்தர்ஷனில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளாக வெளிவந்தது அதையும் நீங்கள் கண்டு களித்து நிதர்சனத்தை அறிந்து கொள்ள வேண்டுகிறேன். இந்த நூலுக்கு அடிப்படையாக இருந்த மனித சமுதாயம்இந்து தத்துவ இயல் ஆகிய நூல்கள் NCBH ல் கிடைக்கிறது.  நண்பர்கள் அதையும் படித்து தெளிவு பெற வேண்டுகிறேன்.

இங்ஙனம்
ஜனா

Reply all
Reply to author
Forward
0 new messages