நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்

319 views
Skip to first unread message

Desingh R

unread,
Sep 3, 2012, 12:13:41 AM9/3/12
to

நல்லெண்ணெய்யைக்
கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும்
தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது ‘ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன.

இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்,
பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி
லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே
ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும்.

இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெய்யின் தன்மை இருக்கும்.

பின்னர் நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும் இதனை நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். மூன்று முறையும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

ஆயில் புல்லிங் எதற்கெல்லாம் நல்லது?

மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல் மற்றும் சளி, பல் மற்றும் வாய்
சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல்
நோய்கள், மலச்சிக்கல், மூலம், களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா,
வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக
குணப்படுத்துகிறது.

மேலும் தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. அதிலும் ஒற்றைத் தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை.

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன்
நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு
சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துவதாக மருத்துவர்களில் ஒரு தரப்பினர்
தெரிவிக்கின்றனர்.

Innamburan Innamburan

unread,
Sep 3, 2012, 4:01:10 AM9/3/12
to mint...@googlegroups.com
'நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.'

~எங்கே சொல்லியிருக்கிறார்கள் என்ற ஆதாரத்தையும், மூல செய்தியையும் பகிர்ந்து கொள்ளுமாறு 
பணிவன்புடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன், திரு. தேசிங்கு.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

2012/9/2 Desingh R <desi...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Desingh R

unread,
Sep 3, 2012, 4:07:32 AM9/3/12
to mint...@googlegroups.com
http://www.usetamil.com/t26392-topic#40716

ivaridam ketkalam...,

2012/9/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 3, 2012, 5:45:54 AM9/3/12
to mint...@googlegroups.com
அவர் எழுதியதை நீங்கள் காபி & பேஸ்ட் செய்துள்ளீர்கள். அவரும் ஆதாரம் ஒன்றும் அளிக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் மரபு,யாதெனில், 
நீங்கள், அவரை கேட்டு, அந்த உசாத்துணையை கூறி, ஆதாரம் இருந்தால் எழுதுவது மட்டுமே. இத நம்பி யாரும் மோசம் போகக்கூடாது அல்லவா. நாம் என்ன 'இதயம் நல்லெண்னைய்க்குப் பிரச்சாரம் செய்பவர்களா?
மின் தமிழன் இன்னம்பூரான்

2012/9/3 Desingh R <desi...@gmail.com>

Desingh R

unread,
Sep 3, 2012, 5:51:56 AM9/3/12
to mint...@googlegroups.com
நீங்கள் இங்கு போடுவது எல்லாமே ஆராய்ந்து போடுவது போல பேசவேண்டாம் நண்பா... நல்லதை சொன்ன கேட்கணும், ஆராய கூடாது.. அனைத்தையும் சந்தேக பார்வையில் பார்க்கவேண்டாம் நண்பா,,,

எனக்கு வந்தா மடலை உங்களுக்கு அனுப்பினேன்,, copy and paste செய்வது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதற்கு ஒரு விளம்பரம் தேடுவது ஏன்....?????

cool friend..

Regards
Desingh.R

"Helping Hands are Better than Praying Lips" 

Subscribe (New Mail Alert) : http://tinyletter.com/desingh
[Fun, Tips & Tricks and Job]
Blog  : www.desinghraja.blogspot.com

2012/9/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

Desingh R

unread,
Sep 3, 2012, 5:53:14 AM9/3/12
to mint...@googlegroups.com
இது இதயம் நல்லெண்ணைக்கு விளம்பரம் இல்லை...

Regards
Desingh.R

"Helping Hands are Better than Praying Lips" 

Subscribe (New Mail Alert) : http://tinyletter.com/desingh
[Fun, Tips & Tricks and Job]
Blog  : www.desinghraja.blogspot.com

2012/9/3 Innamburan Innamburan <innam...@gmail.com>
அவர் எழுதியதை நீங்கள் காபி & பேஸ்ட் செய்துள்ளீர்கள். அவரும் ஆதாரம் ஒன்றும் அளிக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் மரபு,யாதெனில், 

Innamburan Innamburan

unread,
Sep 3, 2012, 6:05:27 AM9/3/12
to mint...@googlegroups.com

2012/9/3 Desingh R <desi...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 3, 2012, 6:06:33 AM9/3/12
to mint...@googlegroups.com
மின் தமிழா!
உன்னை ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்.

2012/9/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

Dhivakar

unread,
Sep 3, 2012, 6:43:32 AM9/3/12
to mint...@googlegroups.com
இ சார்

இதன் மூலம் ராஜமுண்ட்ரி என்கிற ராஜமுந்திரி என்கிற ராஜமகேந்திரபுரம் (சோழன் கட்டிய ஊர் சார் இது). இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த ஆயில் புல்லிங் பற்றி தெலுங்கில் ஒரு புத்தகம் போட்டு (நம் திரைப்படப் பாடல் சைஸ்) ரயிலில் விற்றார்கள். நானும் வாங்கினேன் (ரூ 2 என நினைக்கிறேன்). தெலுங்கு கொஞ்சம் சுமார் படிப்பு என்றாலும் இந்த ஆயில் புல்லிங் செய்தால் சகல வியாதிகளும் போயே போய் விடும் என்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. இதை எழுதிய மகானுபாவர் தான் இந்த தெலுங்கு மக்களுக்கு ஏதேனும் இலவச சேவை செய்ய விரும்புவதாகவும், இதைச் செய்து பார்த்து அனுபவித்துப் பிறகுதான் இந்தப் புத்தகம் எழுதியதாகவும் (ஒருவேளை அவருக்கு அத்தனை நோயோ என்னவோ) சொல்லியிருந்தார். நல்லெண்ணெய் என்றல்ல, எந்த எண்ணெயாக இருந்தாலும் ஒரு டீஸ்பூன் வாயில் போட்டுக்கொள்ள வேண்டியது, கொப்புளிக்க் வேண்டியது.. ஒரு மணி நேரம் கழித்து இந்த ஆயில்னெஸ் போய் நுரையாக வரும்போது துப்ப வேண்டியது.. அவ்வளவுதானாம்.. ஒரு மாதம் செய்து பாருங்கள் என்றார், உடம்பில் எந்த நோயும் தங்காதாம். (யாரேனும் டாக்டர்கள் சிரித்தால் நான் பொறுப்பல்ல)

இதை நான் ஜோக்காக எடுத்துக் கொண்டு என் நண்பர்களிடம் விவாதித்திருக்கிறேன். அத்தனையும் டூப் என்றார்கள் விவரம் தெரிந்தவர்கள். பிறகு கொஞ்ச நாளில் இந்த மயக்கம் மறைந்து போனது இங்கே. சமீபத்தில்தான் ஒரு டி.வி.யில் விளம்பரம் பார்த்தேன். இதயம் நல்லெண்ணெய் பாக்கெட் ஒனறு வாங்கிக் கொப்பளிக்கச் சொல்லி.  ஆஹா.. முன்பு தெலுங்கர்கள்.. இப்போது தமிழர்களா என்றுதான் நினைப்பு வந்தது. 

ஸோ, இது கொஞ்ச காலம் கழித்து கர்நாடகம், கேரளம், வட மாநிலங்கள் எல்லாம் பயணம் செய்து ஓய்ந்து விடும்.. ஆனாலும் என்ன, அந்த கொஞ்ச காலத்திலாவது லாபம் பார்த்தால்தான் உண்டு. 

எத்தனையானாலும் இந்த ஃபுல் கிரெடிட் முதன்முதலாக ஒரு புத்தகமே போட்டாரே, அந்த ராஜமுந்திரி எழுத்தாளருக்குதான்.. நிச்சயம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார், தாம் எப்போதோ விளையாட்டுக்காக புத்தகத்தில் போட்டது இப்படி தமிழ்கம் போய் இணையம் மூலமாக பரவும் என்று...

2012/9/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 3, 2012, 7:08:00 AM9/3/12
to mint...@googlegroups.com
நன்றி, திவாகர்,

இதனால் தான் 'சுகாதாரம்' பற்றிய இழை தொடங்க தயங்குகிறேன். உங்களுக்குத் தான் தெரியுமே. நான் வசிக்கும் இடத்தில் ஆதார பூர்வமான சுகாதார செய்திகளை, ஆய்வு தொடருடன், அரசு மக்களுக்கு இலவசமாக தருகிறது என்று. அந்த ஆதாரத்துடன் கூடிய தகவல்களை ஆங்கிலத்திலும், முடிந்தவரை தமிழிலும் தருவதை ஒரு சமுதாய சேவையாக செய்யலாம் என்று நானும், ஒரு மின் தழிழ் நண்பரும் திட்டமிட்டோம். அதற்கு கடுமையாக உழைக்கவேண்டும். கேள்விகளுக்கு பொறுப்புடன் பதில் தரவேண்டும். திடீரென்று யாரோ ஒரு ஆர்வலர், ' வெங்காயத்தின் வேரை பசும்தயிரில் தோய்த்து நாள்தோறுமம் நாற்பது முறை, கடிக்காமல் முழுங்கினால், செத்துப்போனாலும் கக்குவான் இருமல் வராது' என்று எழுதுவார். திசை மாறி போகும். சமுதாயம் ஏமாந்து போகும். என் செய்வது? தமிழ்நாட்டின் பழவினை.

இன்னம்பூரான்

2012/9/3 Dhivakar <venkdh...@gmail.com>

Dhivakar

unread,
Sep 3, 2012, 7:16:37 AM9/3/12
to mint...@googlegroups.com
இ சார்
சென்ற வாரத்தில் நான்கு நாட்கள் என்னுடைய விருந்தினராக மலேசிய இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரன் அவரது மனைவி சித்ரா இங்கு வருகை புரிந்தனர். இதுவரை முப்பதாயிரம் நோயாளிகள் பார்த்த கை, மலேசிய மன்னருக்கும் பிரதமருக்கும் பல்லாண்டுகளாக தனிப்பட்ட மருத்துவராக சேவை செய்தவர், இப்போது ஓய்வு பெற்று அங்கே கேடா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு உபாத்தி தொழில். பல விஷயங்கள் பேசினார். ஒரு வலைப் பூ இடவேண்டுமென இருக்கிறேன். நான் பெற்ற பாக்கியம் அனைவரும் பெறட்டுமே..

ஆகையினால் நீங்கள் சுகாதாரம் பற்றி எழுதுங்கள்.. நாலு பேருக்கு நல்லது எனும்போது நாள் பார்ப்பார்களா?

அன்புடன்
திவாகர்

2012/9/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

Raja sankar

unread,
Sep 3, 2012, 8:59:24 AM9/3/12
to mint...@googlegroups.com
நாமெல்லாம் ஹோமியோபதியையே நம்பும் ஆட்கள். இதை நம்புவது கடினமா என்ன? :-). தமிழ் பத்திரிக்கைகளில் ஹோமியோபதி மருந்துகளுக்கு வரும் விளம்பரங்களை கட்டுரைகளை எடுத்துப்பாருங்கள். இது ரொம்ப பரவாயில்லை என தெரியும்.

இன்னோன்று காயகல்பம் தேடும் ஆட்கள் நாமெல்லாம். சித்தர் பாடல்களில் இருக்கும் ஒரே ஒரு மூலிகை போதும் என்றல்லவா தேடுகிறோம்.

பிரச்சினை ஆரோக்கியத்திற்கும் நோய்க்கும் வித்தியாசம் உணரப்படுவதில்லை.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/9/3 Dhivakar <venkdh...@gmail.com>

Kamala Devi

unread,
Sep 3, 2012, 9:21:00 AM9/3/12
to mint...@googlegroups.com
திவாகர்
இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
so நல்லெண்ணேய் கொப்புளித்தல் வெறும் புரட்டுதானா?
நிங்ஙள் எல்லோரும் சிரித்து கேலி செய்வதைப்பார்த்தால், --
ஹ்ம்ம். ஒருமுறை, தலைவலி தாங்காமல் போனபோது, என்னுடைய தோழி இந்த வைத்யம் சொல்லி ஞான் ஒருவாரம் செய்திருக்கிறேன்
[ப்லீஸ், யாரும் சிரிக்கவேண்டாம்]
என் டெ தலைவலி போகவே இல்லை.கேரள்த்திலிருந்து ஈலயம்ம
தலைக்கு குளிக்கும் வீட்டில் காய்ச்சிய எண்ணெய் அனுப்பியபிறகுதான்
நலமானது
எப்வ்வளவு ஸ்டுப்பிடாக இருந்திருக்கிறேன்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 3/9/12, Dhivakar <venkdh...@gmail.com> wrote:

Kamala Devi

unread,
Sep 3, 2012, 9:22:19 AM9/3/12
to mint...@googlegroups.com

http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 3/9/12, Kamala Devi <saahi...@yahoo.com.sg> wrote:

From: Kamala Devi <saahi...@yahoo.com.sg>
Subject: Re: [MinTamil] நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்
To: mint...@googlegroups.com
Date: Monday, 3 September, 2012, 1:21 PM

திவாகர்
இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
so நல்லெண்ணேய் கொப்புளித்தல் வெறும் புரட்டுதானா?
நிங்ஙள் எல்லோரும் சிரித்து கேலி செய்வதைப்பார்த்தால், --
ஹ்ம்ம். ஒருமுறை, தலைவலி தாங்காமல் போனபோது, என்னுடைய தோழி இந்த வைத்யம் சொல்லி ஞான் ஒருவாரம் செய்திருக்கிறேன்
[ப்லீஸ், யாரும் சிரிக்கவேண்டாம்]
என் டெ தலைவலி போகவே இல்லை.கேரள்த்திலிருந்து

Innamburan Innamburan

unread,
Sep 3, 2012, 9:23:03 AM9/3/12
to mint...@googlegroups.com
நான் ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி, இயற்கை வைத்தியம், ஹோமியோ ஆகியவற்றை புறக்கணிக்கச்சொல்லவில்லை. ராஜாசங்கர் சொல்கிறமாதிரி, ஆரோக்கியத்திற்கும் நோய்க்கும் வித்தியாசம்  தெரியாமல் குருட்டாம்போக்கில் கெட்டலையக்கூடாது என்றே கவலை படுகிறேன். திவாகர் நற்செய்தி ஒன்றை தந்திருக்கிறார். மலேசிய இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரன் அவரது மனைவி சித்ரா அவர்களின் ஆதரவுடன், வலைப்பூ ஒன்றை தொடங்குவோம். அதன் கட்டுரைகளை மின் தமிழ், தமிழ் வாசல், வல்லமை, அதீதம் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வோம். எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். பல இணைய தளங்களை அறிமுகப்படுத்துகிறேன். பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். தமிழாக்கம் செய்ய ஆர்வலர்கள் தேவை.
இன்னம்பூரான்

2012/9/3 Raja sankar <errajasa...@gmail.com>

Jana Iyengar

unread,
Sep 3, 2012, 9:25:38 AM9/3/12
to mint...@googlegroups.com
ஐயா நான் சொல்லவா? இதை எல்லாம் நம்பி அடியேனின் மனைவி ஒரு ஆண்டு காலத்துக்கு [இருவருக்கும்] from a popular brand satche வருவித்தார். இன்றோ எஞ்சியிருப்பவை அடியேனுக்கு சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க பயன்படுகின்றன. மனைவியோ கால் வலியால் அவதி படுகின்றார்.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன்

2012/9/3 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Jana

Innamburan Innamburan

unread,
Sep 3, 2012, 9:39:50 AM9/3/12
to mint...@googlegroups.com
புரியறது, சார்.

2012/9/3 Jana Iyengar <iyenga...@gmail.com>

D Bala sundaram

unread,
Sep 3, 2012, 9:26:00 AM9/3/12
to mint...@googlegroups.com
இது உண்மை அல்ல. நான் மருத்துவர்களிடம் விசாரித்து இதை சொல்லுகிறேன். இது நல்லெண்ணை வியாபாரிகளின் கதை.

பாலசுந்தரம்

2012/9/3 Desingh R <desi...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
D Balasundaram
Coimbatore

rajam

unread,
Sep 3, 2012, 7:49:32 PM9/3/12
to mint...@googlegroups.com, Kamala Devi
அனியத்தி கமலம்,
இன்று காலையிலிருந்து எனக்கு ஒரே தலைவலி (உடல் அலுப்பும் மின்தமிழின் ஓர் இடுகையும் காரணம்.). உங்கள் தலைவலி அனுபவத்தைக் கேட்டவுடன் வாயார வயிறாரச் சிரித்து என் தலைவலிக்கு விடிவு வந்தாலும் வரும் போன்ற நம்பிக்கை!
தலையில் மிளகாய் அரைப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் ... அனியத்திக்குச் சும்மா எண்ணெய் குடுத்தே நல்லா ஏமாத்தலாம்போல! நல்லாயிருக்கு!
அன்புடன்,
சேச்சி 

Kamala Devi

unread,
Sep 3, 2012, 9:22:14 PM9/3/12
to mint...@googlegroups.com
சேச்சி
இப்பொழுது நினைத்தால் எனக்கு சிரிப்பும்ம்வருகிறது.வெட்கமாகவும் இருக்கிறது
அனியத்தி

http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 3/9/12, rajam <ra...@earthlink.net> wrote:

pathykv

unread,
Sep 4, 2012, 2:48:22 AM9/4/12
to மின்தமிழ்
This 'Oil Pulling' was recommended some decades back to the 'Guindy
Alumni Association' of Bangalore by its then President who had been
practicing it for years and had made it his life's mission. He was my
senior and an industrialist.
I have been following this practice for many decades in addition to
other health practices like Sudarsha Kriya of Sri Sri Ravishankar,
Simplified physical exercises of Sri Vedathri Maharishi as well as
Meditation.
I am now 80 and in good health which is admired by my friends.
I do believe that 'oil pulling' has benefited me in maintaining my
health.
K.V.Pathy

> --- On Mon, 3/9/12, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:

>
> From: Dhivakar <venkdhiva...@gmail.com>
> Subject: Re: [MinTamil] நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்  என்கின்றனர் மருத்துவர்கள்
> To: mint...@googlegroups.com
> Date: Monday, 3 September, 2012, 11:16 AM
>
> இ சார்சென்ற வாரத்தில் நான்கு நாட்கள் என்னுடைய விருந்தினராக மலேசிய இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரன் அவரது மனைவி சித்ரா இங்கு வருகை புரிந்தனர். இதுவரை முப்பதாயிரம் நோயாளிகள் பார்த்த கை, மலேசிய மன்னருக்கும் பிரதமருக்கும் பல்லாண்டுகளாக தனிப்பட்ட மருத்துவராக சேவை செய்தவர், இப்போது  ஓய்வு பெற்று அங்கே கேடா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்
>  கழகத்துக்கு உபாத்தி தொழில். பல விஷயங்கள் பேசினார். ஒரு வலைப் பூ இடவேண்டுமென இருக்கிறேன். நான் பெற்ற பாக்கியம் அனைவரும் பெறட்டுமே..
> ஆகையினால் நீங்கள் சுகாதாரம் பற்றி எழுதுங்கள்.. நாலு பேருக்கு நல்லது எனும்போது நாள் பார்ப்பார்களா?
> அன்புடன்திவாகர்
>

> 2012/9/3 Innamburan Innamburan <innambu...@gmail.com>

>  நன்றி, திவாகர்,
> இதனால் தான் 'சுகாதாரம்' பற்றிய இழை தொடங்க தயங்குகிறேன். உங்களுக்குத் தான் தெரியுமே. நான் வசிக்கும் இடத்தில் ஆதார பூர்வமான சுகாதார செய்திகளை, ஆய்வு தொடருடன், அரசு மக்களுக்கு இலவசமாக தருகிறது என்று. அந்த ஆதாரத்துடன் கூடிய தகவல்களை ஆங்கிலத்திலும், முடிந்தவரை தமிழிலும் தருவதை ஒரு சமுதாய சேவையாக  செய்யலாம் என்று நானும், ஒரு மின் தழிழ் நண்பரும் திட்டமிட்டோம்.
>  அதற்கு கடுமையாக உழைக்கவேண்டும். கேள்விகளுக்கு பொறுப்புடன் பதில் தரவேண்டும். திடீரென்று யாரோ ஒரு ஆர்வலர், ' வெங்காயத்தின் வேரை பசும்தயிரில் தோய்த்து நாள்தோறுமம் நாற்பது முறை, கடிக்காமல் முழுங்கினால், செத்துப்போனாலும் கக்குவான் இருமல் வராது' என்று எழுதுவார். திசை மாறி போகும். சமுதாயம் ஏமாந்து  போகும். என் செய்வது? தமிழ்நாட்டின் பழவினை.
> இன்னம்பூரான்

> 2012/9/3 Dhivakar <venkdhiva...@gmail.com>

>   இ சார்
> இதன் மூலம் ராஜமுண்ட்ரி என்கிற ராஜமுந்திரி என்கிற ராஜமகேந்திரபுரம் (சோழன் கட்டிய ஊர் சார் இது). இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த ஆயில் புல்லிங் பற்றி தெலுங்கில் ஒரு புத்தகம் போட்டு (நம் திரைப்படப் பாடல் சைஸ்) ரயிலில் விற்றார்கள். நானும் வாங்கினேன் (ரூ 2 என நினைக்கிறேன்). தெலுங்கு கொஞ்சம் சுமார் படிப்பு என்றாலும் இந்த ஆயில் புல்லிங் செய்தால்  சகல வியாதிகளும்
>  போயே போய் விடும் என்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. இதை எழுதிய மகானுபாவர் தான் இந்த தெலுங்கு மக்களுக்கு ஏதேனும் இலவச சேவை செய்ய விரும்புவதாகவும், இதைச் செய்து பார்த்து அனுபவித்துப் பிறகுதான் இந்தப் புத்தகம் எழுதியதாகவும் (ஒருவேளை அவருக்கு அத்தனை நோயோ என்னவோ) சொல்லியிருந்தார். நல்லெண்ணெய் என்றல்ல, எந்த எண்ணெயாக இருந்தாலும் ஒரு டீஸ்பூன்  வாயில்
>  போட்டுக்கொள்ள வேண்டியது, கொப்புளிக்க் வேண்டியது.. ஒரு மணி நேரம் கழித்து இந்த ஆயில்னெஸ் போய் நுரையாக வரும்போது துப்ப வேண்டியது.. அவ்வளவுதானாம்.. ஒரு மாதம் செய்து பாருங்கள் என்றார், உடம்பில் எந்த நோயும் தங்காதாம். (யாரேனும் டாக்டர்கள்

> ...
>
> read more »

செல்வன்

unread,
Sep 4, 2012, 11:38:52 AM9/4/12
to panb...@googlegroups.com, mintamil
Mechanism of oil-pulling therapy -In vitro study

Sharath Asokan1, TK Rathinasamy2, N Inbamani3, Thangam Menon4, S Senthil Kumar4, Pamela Emmadi5, R Raghuraman5
1 Department of Pediatric Dentistry, Meenakshi Ammal Dental College, Chennai, India
2 Department of Chemistry, VHNSN College, Virudhunagar, India
3 Department of Zoology, VHNSN College, Virudhunagar, India
4 Department of Microbiology, Dr. ALM Post Graduate Institute of Basic Medical Sciences, University of Madras, Taramani, Chennai, India
5 Department of Periodontics & Microbiology, Meenakshi Ammal Dental College, Chennai, India

http://www.ijdr.in/article.asp?issn=0970-9290;year=2011;volume=22;issue=1;spage=34;epage=37;aulast=Asokan

Background: Oil pulling has been used extensively as a traditional Indian folk remedy without scientific proof for many years for strengthening teeth, gums and jaws and to prevent decay, oral malodor, bleeding gums and dryness of throat and cracked lips.
Aim: The aim of this study was to evaluate the antibacterial activity of sesame oil and lignans isolated from sesame oil on oral microorganisms and to check whether saponification or emulsification occurs during oil-pulling therapy.
Materials and Methods: The in vitro study was carried out in three different phases: (1) Antibacterial activity of the lignans and sesame oil were tested by minimum inhibitory concentration assay by agar dilution method and agar well diffusion method, respectively. (2) Increase in free fatty acid level of oil and the quantity of sodium hydroxide (NaOH) used up in the titration are good indicators of saponification process. This was assessed using analytical tests for vegetable oils. (3) Swished oil was observed under light microscope to assess the status of the oil, presence of microorganisms, oral debris and foreign bodies.
Results: Sesamin and sesamolin isolated from sesame oil did not have any antibacterial effect against oral microorganisms like Streptococcus mutans, Streptococcus mitis and Streptococcus viridans. Emulsification of sesame oil occurs during oil-pulling therapy. Increased consumption of NaOH in titration is a definite indication of a possible saponification process.
Conclusion: The myth that the effect of oil-pulling therapy on oral health was just a placebo effect has been broken and there are clear indications of possible saponification and emulsification process, which enhances its mechanical cleaning action.
--
செல்வன்

Subashini Tremmel

unread,
Sep 4, 2012, 12:02:21 PM9/4/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/9/3 Desingh R <desi...@gmail.com>

நீங்கள் இங்கு போடுவது எல்லாமே ஆராய்ந்து போடுவது போல பேசவேண்டாம் நண்பா... நல்லதை சொன்ன கேட்கணும், ஆராய கூடாது.. அனைத்தையும் சந்தேக பார்வையில் பார்க்கவேண்டாம் நண்பா,,,

எனக்கு வந்தா மடலை உங்களுக்கு அனுப்பினேன்,, copy and paste செய்வது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதற்கு ஒரு விளம்பரம் தேடுவது ஏன்....?????

நண்பரே,

திரு.இன்னம்புரான் சொல்வதில் இருக்கும் காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நம்மிடையே பலர் ஏதாவது ஒரு தகவல் கிடைத்தால் அதனை உடனே நம்பி செயலில் இறங்கி விடுகின்றனர். அதிலும் குறிப்பாக உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிக மிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம். மின் தமிழில் வந்த செய்தியைப் பார்த்து அதனை சாப்பிட்டு உடல் நிலை மோசமானது என்று யாரும் சொல்லிக் கொள்வதை மின் தமிழ் நிர்வாகத்தினர் மட்டுமல்ல மற்ற நண்பர்களும் கூட விரும்பமாட்டோம். ஆக மருத்துவ குணம் பற்றிய தகவல்கள் ஏதாகினும் பகிர்ந்து கொள்ள நினைத்தால் அதன் நம்பகத்தனை பற்றி ஆதாரம் இருப்பதை உறுதி செய்து கொண்டு பகிர்ந்து கொள்வதே சாதாரண வாசகர்களுக்கு நாம் செய்யும் நன்மையாக அமையும்.

அன்புடன்
சுபா
மட்டுறுத்துனர்.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Vasudevan Letchumanan

unread,
Sep 6, 2012, 10:16:59 PM9/6/12
to mint...@googlegroups.com
கனிந்த வணக்கம்.
 
'வியத்தகு எண்ணெய் மருத்துவம்: ஓர் எளிய மருத்துவம்' எனும் நூல் தமிழில் :கோ.கிருஷ்ணமூர்த்தி ( மூலம் ஆயில் புல்லிங்-அற்புத சிகிச்சை[ தெலுங்கில்]: தும்மல கோட்டேசுவரராவ் ) என்பவரால் எழுதப்பட்டு செல்வி பதிப்பகம், 25, இரண்டாம் தெரு, லூர்துசாமி குடியிருப்பு,காசாமலை,திருச்சிராப்பள்ளி -620023 ; வெளியீடு: டிசம்பர் 1997.
=======================================================================
இயற்கை மருத்துவம் மட்டுமே நம் ஆயுளை நீட்டும்.
 
நூலிலிருந்து குறிப்பு:
பத்து மில்லி லிட்டர் சூரிய காந்தி எண்ணெயைக் கொண்டு மனித உடலைப் பலப்பல நோய்க் கொடுமைகளிலிருந்து விடுவித்துக் காப்பாற்றும் ஒரு மிக எளிமையான சரியான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை அந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த டாக்டர் மெத்கராஷ் என்பவர் மனித சமுதாத்துக்கு அருட் கொடையாகத் தங்துள்ளார். இந்த எளிய பாதுகாப்பான மலிவான மருத்துவக் கோட்பாட்டினைக் கொண்டு எத்தனை எத்தனை நோய்கள் மாயமாய்க் குணமாகின்றன எனத் தெரிந்து கொண்டால் வியப்புத் தோன்றுகிறது. டாக்டர் மெத்கராஷின் கூற்றுப்படி 
புற்று நோயிலிருந்து இதயவலி வரையிலான பல்வகைப்பட்ட நீண்டகால நோய்களை எண்ணெய் மருத்துவத்தைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும்.
 
---   டாக்டர் நூதக்கி வெங்கடேஷ்வர ராவ்  ( நூல் அணிந்துரை ) 
 
நூலைத் தேடி வாங்கி நம்பிக்கை வந்த பிறகு 'எண்ணெய்க் கொப்பளிப்பு' ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தத் தகவல்.
 
அன்புடன்,
இல.வாசுதேவன்,
ஜொகூர்,மலேசியா.
 
From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Sent: Wednesday, 5 September 2012, 0:02
Subject: Re: [MinTamil] நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்

2012/9/3 Desingh R <desi...@gmail.com>
நீங்கள் இங்கு போடுவது எல்லாமே ஆராய்ந்து போடுவது போல பேசவேண்டாம் நண்பா... நல்லதை சொன்ன கேட்கணும், ஆராய கூடாது.. அனைத்தையும் சந்தேக பார்வையில் பார்க்கவேண்டாம் நண்பா,,,

எனக்கு வந்தா மடலை உங்களுக்கு அனுப்பினேன்,, copy and paste செய்வது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதற்கு ஒரு விளம்பரம் தேடுவது ஏன்....?????

நண்பரே,

திரு.இன்னம்புரான் சொல்வதில் இருக்கும் காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நம்மிடையே பலர் ஏதாவது ஒரு தகவல் கிடைத்தால் அதனை உடனே நம்பி செயலில் இறங்கி விடுகின்றனர். அதிலும் குறிப்பாக உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிக மிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம். மின் தமிழில் வந்த செய்தியைப் பார்த்து அதனை சாப்பிட்டு உடல் நிலை மோசமானது என்று யாரும் சொல்லிக் கொள்வதை மின் தமிழ் நிர்வாகத்தினர் மட்டுமல்ல மற்ற நண்பர்களும் கூட விரும்பமாட்டோம். ஆக மருத்துவ குணம் பற்றிய தகவல்கள் ஏதாகினும் பகிர்ந்து கொள்ள நினைத்தால் அதன் நம்பகத்தனை பற்றி ஆதாரம் இருப்பதை உறுதி செய்து கொண்டு பகிர்ந்து கொள்வதே சாதாரண வாசகர்களுக்கு நாம் செய்யும் நன்மையாக அமையும்.

அன்புடன்
சுபா
மட்டுறுத்துனர்.
 
cool friend..

Regards
Desingh.R

"Helping Hands are Better than Praying Lips" 

Subscribe (New Mail Alert) : http://tinyletter.com/desingh
[Fun, Tips & Tricks and Job]

2012/9/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

2012/9/3 Desingh R <desi...@gmail.com>
http://www.usetamil.com/t26392-topic#40716

ivaridam ketkalam...,

2012/9/3 Innamburan Innamburan <innam...@gmail.com>
2012/9/2 Desingh R <desi...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

http://subastravel.blogspot.com/- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com/ - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com/ - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com/ - Suba's Musings
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

pathykv

unread,
Sep 7, 2012, 7:20:29 AM9/7/12
to மின்தமிழ்
"'வியத்தகு எண்ணெய் மருத்துவம்: ஓர் எளிய மருத்துவம்' எனும் நூல்
தமிழில் :கோ.கிருஷ்ணமூர்த்தி ( மூலம் ஆயில் புல்லிங்-அற்புத
சிகிச்சை[ தெலுங்கில்]: தும்மல கோட்டேசுவரராவ் ) "
Col. T.Koteeswara Rao was the person who was President of Guindy
Alumni Association at Bangalore and has been propagating this idea
selflessly.
K.V.Pathy

On Sep 7, 7:16 am, Vasudevan Letchumanan <vivegam_...@yahoo.com>
wrote:

> கனிந்த வணக்கம்.
>
> 'வியத்தகு எண்ணெய் மருத்துவம்: ஓர் எளிய மருத்துவம்' எனும் நூல் தமிழில் :கோ.கிருஷ்ணமூர்த்தி ( மூலம் ஆயில் புல்லிங்-அற்புத சிகிச்சை[ தெலுங்கில்]: தும்மல கோட்டேசுவரராவ் ) என்பவரால் எழுதப்பட்டு செல்வி பதிப்பகம், 25, இரண்டாம் தெரு, லூர்துசாமி குடியிருப்பு,காசாமலை,திருச்சிராப்பள்ளி -620023 ; வெளியீடு: டிசம்பர் 1997.
> =======================================================================
> இயற்கை மருத்துவம் மட்டுமே நம் ஆயுளை நீட்டும்.
>
>
> நூலிலிருந்து குறிப்பு:
> பத்து மில்லி லிட்டர் சூரிய காந்தி எண்ணெயைக் கொண்டு மனித உடலைப் பலப்பல நோய்க் கொடுமைகளிலிருந்து விடுவித்துக் காப்பாற்றும் ஒரு மிக எளிமையான சரியான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை அந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த டாக்டர் மெத்கராஷ் என்பவர் மனித சமுதாத்துக்கு அருட் கொடையாகத் தங்துள்ளார். இந்த
>  எளிய பாதுகாப்பான மலிவான மருத்துவக் கோட்பாட்டினைக் கொண்டு எத்தனை எத்தனை நோய்கள் மாயமாய்க் குணமாகின்றன எனத் தெரிந்து கொண்டால் வியப்புத் தோன்றுகிறது. டாக்டர் மெத்கராஷின் கூற்றுப்படி
> புற்று நோயிலிருந்து இதயவலி வரையிலான பல்வகைப்பட்ட நீண்டகால நோய்களை எண்ணெய் மருத்துவத்தைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும்.
>
> ---   டாக்டர் நூதக்கி வெங்கடேஷ்வர ராவ்  ( நூல் அணிந்துரை )
>
>
> நூலைத் தேடி வாங்கி நம்பிக்கை வந்த பிறகு 'எண்ணெய்க் கொப்பளிப்பு' ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தத் தகவல்.
>
> அன்புடன்,
> இல.வாசுதேவன்,
> ஜொகூர்,மலேசியா.
>
>
>
>

> ________________________________
> From: Subashini Tremmel <ksubash...@gmail.com>
> To: mint...@googlegroups.com
> Cc: Subashini Tremmel <ksubash...@gmail.com>

> Sent: Wednesday, 5 September 2012, 0:02
> Subject: Re: [MinTamil] நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்
>

> 2012/9/3 Desingh R <desing...@gmail.com>

>
> நீங்கள் இங்கு போடுவது எல்லாமே ஆராய்ந்து போடுவது போல பேசவேண்டாம் நண்பா... நல்லதை சொன்ன கேட்கணும், ஆராய கூடாது.. அனைத்தையும் சந்தேக பார்வையில் பார்க்கவேண்டாம் நண்பா,,,
>
> >எனக்கு வந்தா மடலை உங்களுக்கு அனுப்பினேன்,, copy and paste செய்வது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதற்கு ஒரு விளம்பரம் தேடுவது ஏன்....?????
>
> நண்பரே,
>
> திரு.இன்னம்புரான் சொல்வதில் இருக்கும் காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நம்மிடையே பலர் ஏதாவது ஒரு தகவல் கிடைத்தால் அதனை உடனே நம்பி செயலில் இறங்கி விடுகின்றனர். அதிலும் குறிப்பாக உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிக மிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம். மின் தமிழில் வந்த செய்தியைப் பார்த்து அதனை சாப்பிட்டு உடல் நிலை மோசமானது என்று
>  யாரும் சொல்லிக் கொள்வதை மின் தமிழ் நிர்வாகத்தினர் மட்டுமல்ல மற்ற நண்பர்களும் கூட விரும்பமாட்டோம். ஆக மருத்துவ குணம் பற்றிய தகவல்கள் ஏதாகினும் பகிர்ந்து கொள்ள நினைத்தால் அதன் நம்பகத்தனை பற்றி ஆதாரம் இருப்பதை உறுதி செய்து கொண்டு பகிர்ந்து கொள்வதே சாதாரண வாசகர்களுக்கு நாம் செய்யும் நன்மையாக அமையும்.
>
> அன்புடன்
> சுபா
> மட்டுறுத்துனர்.
>
> cool friend..
>
>
>
>
>
>
>
>
>
> >Regards
> >Desingh.R
> >"Helping Hands are Better than Praying Lips"
>
> >Subscribe (New Mail Alert) :http://tinyletter.com/desingh
> >[Fun, Tips & Tricks and Job]
> >Blog  :http://www.desinghraja.blogspot.com/
>

> >2012/9/3 Innamburan Innamburan <innambu...@gmail.com>

>
> >அவர் எழுதியதை நீங்கள் காபி & பேஸ்ட் செய்துள்ளீர்கள். அவரும் ஆதாரம் ஒன்றும் அளிக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் மரபு,யாதெனில்,
> >>நீங்கள், அவரை கேட்டு, அந்த உசாத்துணையை கூறி, ஆதாரம் இருந்தால் எழுதுவது மட்டுமே. இத நம்பி யாரும் மோசம் போகக்கூடாது அல்லவா. நாம் என்ன 'இதயம் நல்லெண்னைய்க்குப் பிரச்சாரம் செய்பவர்களா?
> >>மின் தமிழன் இன்னம்பூரான்
>

> >>2012/9/3 Desingh R <desing...@gmail.com>
>
> >>http://www.usetamil.com/t26392-topic#40716
>
> >>>ivaridam ketkalam...,
>
> >>>2012/9/3 Innamburan Innamburan <innambu...@gmail.com>

>
> >>>'நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம்
> >>>>உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.'
>
> >>>>~எங்கே சொல்லியிருக்கிறார்கள் என்ற ஆதாரத்தையும், மூல செய்தியையும் பகிர்ந்து கொள்ளுமாறு
> >>>>பணிவன்புடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன், திரு. தேசிங்கு.
> >>>>நன்றி, வணக்கம்,
> >>>>இன்னம்பூரான்
>

> >>>>2012/9/2 Desingh R <desing...@gmail.com>

>
> >>>>>நல்லெண்ணெய்யைக்
> >>>>>கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும்
> >>>>>தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம்
> >>>>>உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
>
> >>>>>இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது ‘ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும்
>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Sep 7, 2012, 7:25:12 AM9/7/12
to mint...@googlegroups.com
2012/9/7 Vasudevan Letchumanan <viveg...@yahoo.com>:

> பத்து மில்லி லிட்டர் சூரிய காந்தி எண்ணெயைக் கொண்டு மனித உடலைப் பலப்பல நோய்க்
> கொடுமைகளிலிருந்து விடுவித்துக் காப்பாற்றும் ஒரு மிக எளிமையான சரியான
> மருத்துவக் கோட்பாடு ஒன்றினை அந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த டாக்டர்
> மெத்கராஷ் என்பவர் மனித சமுதாத்துக்கு அருட் கொடையாகத் தங்துள்ளார். இந்த எளிய
> பாதுகாப்பான மலிவான மருத்துவக் கோட்பாட்டினைக் கொண்டு எத்தனை எத்தனை நோய்கள்
> மாயமாய்க் குணமாகின்றன எனத் தெரிந்து கொண்டால் வியப்புத் தோன்றுகிறது. டாக்டர்
> மெத்கராஷின் கூற்றுப்படி புற்று நோயிலிருந்து இதயவலி வரையிலான பல்வகைப்பட்ட >நீண்டகால நோய்களை எண்ணெய் மருத்துவத்தைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும்.
>

அன்று என் ஜெர்மன் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது இப்பழக்கம்
ஜெர்மனியிலும் இருப்பதாகச் சொன்னார்கள். அதிகாலையில் உணவிற்கு முன்
இப்படி எண்ணெய் வைத்து வாய் கொப்பளிக்கும் வழக்கம் உள்ள ஒருவர் சொன்னார்.

ஆனால், அறிவியல் பூர்வமாக யோசிக்கும் போது பலன் எப்படித்தோன்றும் என்று
விளங்கவில்லை. சோப்பு நுரை போன்ற எஃப்கெட்டுதான் பலன் என்று தோன்றுகிறது!

நா.கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages