திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
கட்டுரையும் படங்களும்: சுபாஷினி ட்ரெம்மல்
நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும் என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம் திருச்செங்கோடு கோவிலைச் சென்று பார்த்து வாருங்கள் என்று குறிப்பிட்டார். திருமதி பவளா, திரு.ஆரூரன் இவர்கள் இருவருக்கும் இதனைத் தெரிவித்தபோது பயணத்தின் இறுதி நாள் காலையில் இக்கோவில் சென்று வரலாம் என்று ஏற்பாடு செய்தனர்.
இப்படிப் படங்களுடன் கட்டுரைகள் வந்தால் இறை நம்பிக்கை இல்லாதோரும் ,கோவில் என்றால் வேகமாகப் பக்கங்களைப் புரட்டுவோரும் கூட படிப்பார்கள். படங்களும் அருமை.கொடுத்த விஷயங்களும் அருமை.
உங்கள் கட்டுரை படிப்பதற்கும் பார்ப்பதற்கும் சுவையாக இருக்கிறது. இப்படிப் படங்களுடன் கட்டுரைகள் வந்தால் இறை நம்பிக்கை இல்லாதோரும் ,கோவில் என்றால் வேகமாகப் பக்கங்களைப் புரட்டுவோரும் கூட படிப்பார்கள். படங்களும் அருமை.கொடுத்த விஷயங்களும் அருமை.
வழிமொழிகிறேன் அம்மா.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
கருத்துக்கள் பதிந்த அனைவருக்கும் என் நன்றி.கோயில்கள் என்பவை ஒரு வழிபாட்டுத் தலம் என்பது மட்டுமல்லாமல் ஒரு கலைப்பொஷம் என்ற சிந்தனையை மக்கள் சிந்தனையில் கொண்டு வர ஆலயங்களைப் பற்றி அவற்றை அறிமுகப்படுத்தி பேச வேண்டியது அவசியமாகின்றது. அன்றாடம் செல்பவர்கள் கண்களில் இவ்வகை கோயில்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்ப வினோதங்களோ, கோயிலின் பழமையோ, இக்கோயில் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளோ தெரிவதில்லை. தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற என்று மட்டும் செல்பவர்கள் தான் அதிகம். அவ்வகையானோர் கோயிலைப் பற்றியும் அதன் வரலாற்று சிறப்புக்கள் என்று மேலும் அறிந்து கொண்டு சென்று பார்க்கும் போது ஏற்படும் அனுபவமே தனி தான்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருஞான சம்பந்தர் மக்களிடையே பரவியிருந்த சுரம் தனிய இங்கே வந்து பதிகம்
பாடி சுரம் தீர்த்ததாக வரலாறு. மலைக்கு கீழே நில மட்டத்தில் இருக்கும்
ஒரு பெரிய சிவாலயம் ”நிலத்தம்பிரான் கோவில்” இதுவும் பார்க்க வேண்டிய
ஒன்று. காலம் கருதி அன்று பார்க்கவில்லை. நிலத்து அமர்ந்தான் கோவில்,
நிலத்தம்பிரான் கோவில் என்று காலப்போக்கில் மாறிவிட்டதாக கூறுகின்றனர்.
மதுரையை எரித்த கண்ணகி இங்கிருந்துதான் வானுலகம் சென்றதாக ஒரு கதையும்
இங்கே உண்டு. ஒவ்வொரு ஆண்டும் கண்ணகிக்கு விழா நடத்துகின்றனர்
இவ்வூர்க்காரர்கள்.
கந்தர் அலங்காரம்
23. தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.
நன்றி
அன்புடன்
ஆரூரன்
>>> *திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்*
>>>
>>> *கட்டுரையும் படங்களும்: **சுபாஷினி ட்ரெம்மல்*
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>> நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில
>>> நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.
>>> ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும்
>>> என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன்
>>> தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம்
>>> திருச்செங்கோடு கோவிலைச் சென்று பார்த்து வாருங்கள் என்று குறிப்பிட்டார்.
>>> திருமதி பவளா, திரு.ஆரூரன் இவர்கள் இருவருக்கும் இதனைத் தெரிவித்தபோது
>>> பயணத்தின் இறுதி நாள் காலையில் இக்கோவில் சென்று வரலாம் என்று ஏற்பாடு
>>> செய்தனர்.
>>>
>>>
>>>
>>>
>>>
>>> அடிப்படையில் எந்த ஏற்பாடும் செய்யாமலேயே இந்தக் கோவிலுக்குச் செல்வோம்
>>> என்பது முடிவானது. அதிலும் திரு.திவாகர் வேறு சொல்கின்றார். நிச்சயம்
>>> மனதிற்கு
>>> நிறைவளிக்கும் ஒரு பயணமாக இது அமையும் என்ற நம்பிக்கை மனதில் இருந்தது.
>>>
>>> இக்கோவில் மூலஸ்தானத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் அமைந்திருக்கின்றதெனவும்
>>> திருச்செங்கோட்டு முருகன் பிரசித்தி பெற்றவர் என்பதும் இத்தலம் தமிழகத்தின்
>>> முக்கிய ஸ்தலங்களின் பட்டியலில் இடம் பெரும் ஒன்று என்றும் கொஞ்சம்
>>> விபரங்கள்
>>> தெரிந்து கொண்டேன். காலை உணவு முடித்து என்னுடன் கண்ணன், ஆரூரன், பவளா
>>> நால்வரும் திருச்செங்கோடு புறப்பட்டோம்.
>>>
>>>
>>>
>>> *தெய்வங்கள்*
>>>
>>> இக்கோயிலின் ப்ரதான தெய்வம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம். கோவிலுக்குள் செல்லும்
>>> போது உடனே இப்பகுதிக்கு வர முடியாது. கோயிலின் வாசல் புறத்திலிருந்து சுற்றி
>>> வந்து முதலில் முருகன் சன்னிதியைப் பார்த்து கடந்து இந்த அர்த்தநாரீஸ்வரர்
>>> இருக்கின்ற கோவில் பகுதிக்கு வரலாம்.
>>>
>>> அர்த்தநாரீஸ்வரரைப் போல திருச்செங்கோட்டு வேலவனும் முக்கிய தெய்வமாக
>>> இக்கோயிலில் அமைந்திருக்கின்றார். முருகனுக்கு தனிச் சன்னிதி
>>> அமைக்கப்பட்டுள்ளது.
>>>
>>> அடுத்ததாக இக்கோவிலின் மற்றொரு முக்கிய
>>> தெய்வமாக நாகேஸ்வரர் அமைந்திருக்கின்றார். தனிச் சன்னிதியாக மற்ற ஆலயங்களில்
>>> இல்லாத புதுமையாக ஐந்தலை நாகங்கள் பின்னிப் பிணைந்தது போன்ற வடிவத்தில்
>>> அமைந்த
>>> ஒரு பகுதி உள்ளது.
>>>
>>>
>>> இதைத் தவிர சிவலிங்கம், நடராஜர், அம்மன், பிள்ளையார் சன்னிதிகளும் உள்ளன.
>>> ஒரு பகுதியில் 63 நாயன்மார்களின் சிலைகளும் வரிசையாக வைக்கப்பட்டு வழிபாடு
>>> செய்யபப்டுகிறது.
>>>
>>> *தல விருட்சம்*
>>>
>>> இக்கோவிலின் தல விருட்சம் இலுப்பை மரம். இம்மரம் கோவிலின் வடக்குப்
>>> பகுதியில் நடராஜர் சன்னிதிக்கும், சிவலிங்க சன்னிதிக்கும் இடையில்
>>> அமைந்துள்ளது.
>>>
>>>
>>> *சிற்பக்கலை*
>>>
>>> திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு
>>> சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது
>>> உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 சிற்ப வேலைப்பாடு மிக்க ஒற்றைக்
>>> கற்றூண்கள்
>>> அமைக்கப்பட்டுள்ளன.
>>>
>>>
>>> செங்கோட்டு வேலவர் சந்திதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன்,
>>> ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லிலாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தில்
>>> கூரைப்
>>> பகுதியில் கல்லிலானா தாமரை மலர்கள், மலை, கிளிகள், கற்சங்கிலிகள் பறவைகள்,
>>> முனிவர்கள் போன்ற சிற்ப விநோதங்கள் செய்யப்பட்டுள்ளன.
>>>
>>> நாகேஸ்வரரின் கருவறை சிற்ப வேலைப்பாடு மிக்கது. கருவறை முன்மண்டபத்தில்
>>> குதிரை அல்லது யாழி மீதுள்ள வீரர்களில் கற்றூண் சிற்பங்கள் உள்ளன.
>>> கூரைப்பகுதியில் கவிழ்ந்த தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது.
>>>
>>>
>>> எல்லா தூண்களையும் கவின்மிகு சிற்ப வடிவங்கள் அலங்கரிக்கின்றன. சுவாமி
>>> சன்னிதிகளின் சுவர்களில் மிக நுணுக்கமான கலைவேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்ட
>>> சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓரளவு சிற்ப வடிவங்கள் தாரமங்கலம் கோயில்
>>> அமைப்பை ஒத்ததாகவும் அமைந்திருக்கின்றது என்றே எனக்குத் தோன்றியது.
>>>
>>>
>>> செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம்
>>> உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை
>>> எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு கோவில்களில் நான்
>>> இதுவரை
>>> பார்த்திராத ஒரு வியக்க வைக்கும் கலைப்படைப்பு.
>>>
>>>
>>> *அர்த்தநாரீஸ்வரர்*
>>>
>>> கொங்கு நாட்டில் காவிரி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் இந்தச் சிவத்தலம்
>>> கொங்கேழ் சிவத்தலங்களில் ஒன்று என்று சிறப்பித்துக் கூறப்படுவது.
>>> இக்கோயிலின்
>>> சிறப்புக்கள் பலவற்றில் முதன்மையானதும் பக்தர்கள் வியக்கும் தனமையுடையதுமாக
>>> அமைந்திருப்பது இக்கோவிலின் மூலஸ்தான தெய்வமாக வீற்றிருக்கும்
>>> அர்த்தநாரீஸ்வரர் உருவம்.
>>>
>>> சிவனை மாதொருபாகன், மங்கைபங்கன் என்றும் அழைப்போம். அதனை இங்கே உருவமாகப்
>>> படைத்து வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் சிறப்புக்குச்
>>> சிறப்பு
>>> சேர்ப்பதாக அமைந்துள்ளது.
>>>
>>> திருஞானசம்பந்தர் இறைவனை மாதொரு பாகன் என்று குறிப்பிட்டு பல பாடல்கள்
>>> பாடியுள்ளார். அது இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திற்கும்
>>> சிறப்பாகப் பொருந்துவதாக உள்ளது.
>>>
>>> வெந்தவெண்ணீறணிந்து விரிதூறிகழ் மார்மினல்ல
>>> கந்தணவும் விரளொரு பாகம் மமர்ந்தளு
>>> கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
>>> வந்தணனைத் தொழுவா ரவல மறுப்பரே
>>> -தேவாரம்
>>>
>>>
>>> *தலம், பெயர்க்காரணம்*
>>>
>>> திருச்செங்கோட்டு ஆலயம் ஒரு தெய்வத்தை மட்டும் சிறப்பிக்கும் நிலையில்லாது
>>> சிவஸ்தலம், செங்கோட்டு முருகனின் தலம், நாகதேவர் ஸ்தலம் என மூன்று வகையில்
>>> இக்கோயில் மக்களால் அறியப்படுகின்றது. மலைமேல் எழுந்தருளியிருக்கும்
>>> கோயில்கள்
>>> தமிழகத்தில் பல உள்ளன. அவற்றில் வித்தியாசமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில்
>>> அம்மையும் அப்பனும் ஒருங்கே அமையப்பெற்ற மலைமேல் அமைக்கப்பட்ட ஒரு
>>> தெய்வீகத்தலமாக இதனைக் குறிப்பிடலாம்.
>>>
>>> *பிற பெயர்கள்*
>>>
>>> திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர ஆலயம் என்பது மட்டுமல்லாது இப்புண்ணியத்
>>> ஸ்தலத்திற்கு மேலும் பல பெயர்கள் அமைந்திருக்கின்றன.
>>>
>>> - கொடிமாடச் செங்குன்றம்
>>> - தெய்வத்திருமலை
>>> - நாககிரி
>>> - அரவாகிரி
>>> - உரகவெற்பு
>>> - கட்செவிக் குன்றூர்
>>> - பணிமலை
>>> - தந்தகிரி
>>> - நகபூதரம்
>>> - புசகபூதரம்
>>> - நாகாசலம்
>>> - நாகமலை
>>> - முருகாசலம்
>>> - தாருகாசலம்
>>> - திருவேரகம்
>>>
>>> என்ற பெயர்களும் வழங்கப்பெற்றுள்ளன என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல்
>>> கூறுகின்றது.
>>>
>>> திருச்செங்கோடு என்பதன் பொருளை அழகுமிக்க சிவந்த நிறம் வாய்ந்த குன்று என்று
>>> பொருள் காணலாம்.
>>>
>>> நாகதேவருக்கு இங்கு ப்ரத்தியேகமான சன்னிதானம் அமைந்திருப்பதால் நாகத்தின்
>>> பெயரை உள்ளடக்கிய வகையில் நாககிரி, அரவகிரி, உரகவெற்பு போன்ற பெயர்களும்
>>> இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று.
>>>
>>> இக்கோயில் அமைந்திருக்கும் மலை
>>>
>>> - கோதமலை
>>> - முத்தலை
>>> - கடகமலை
>>> - துர்க்கைமலை
>>> - முத்திமலை
>>> - வாயுமலை
>>> - பொறுதுமலை
>>> - வந்திமலை
>>> - அழகுமலை
>>> - தாருமலை
>>> - சூதமலை
>>> - தவமலை
>>> - அனந்தன்மலை
>>> - தங்கமலை
>>> - யோமலை
>>> - மேருமலை
>>> - கொங்குமலை
>>> - கத்தகிரி
>>> - ஞானகிரி
>>> - இரத்தகிரி
>>> - கோணகிரி
>>> - பிரம்மகிரி
>>> - தீர்த்தகிரி
>>> - தர்மகிரி
>>> - கந்தகிரி
>>> - பதுமகிரி
>>> - தேதுகிரி
>>>
>>> என்று தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றது என்று
>>> திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.
>>>
>>> *மலையும் அதன் வடிவமுமும்*
>>>
>>> இம்மலையின் தோற்றம் குறிப்பாக மலையின் சிகரத்தின் தோற்றம் தூரத்திலிருந்து
>>> காண்பவர்களுக்குச் சிவலிங்கத்தின் அமைப்பைப் போன்று காட்சியளிக்கின்றது.
>>> கீழ்ப்பகுதி ஒரு பெரும்பாம்பு கீழ்த்திசையில் தனது பெரும்படத்தை அகல
>>> விரித்து
>>> இரு கூறாக உயர்ந்தும் ஒரு புறத்தில் பாம்பின் உடல் போலச் சிறுத்திருப்பது
>>> போலவும் காட்சியளிக்கின்றது. இம்மலை சிவப்பு மஞ்சள் கலந்த நிறமாகவும்
>>> தோன்றுகின்றது. காலை சூரியனின் எழில் கிரணங்கள் மலையின் மீது படும் போது
>>> இவ்வர்ணக்கலவை எழில் மிகு காட்சியாக கண்களுக்கு விருந்தளிப்பதை நேரில்
>>> பார்த்து ரசித்தோம்.
>>>
>>> *ஆலய ஐதீகம்*
>>>
>>> அதீசேடனும் வாயுவும் தங்கள் தங்கள் பலத்தைக் காட்ட நேர்ந்த சொற்போரில் இங்கு
>>> வந்து வீழ்ந்த ஆண் நாகச்சிகரமும்,காமதேனு பரமேஸ்வரன் அருள் பெற்று கொண்டு
>>> வந்த
>>> பெண் நாகச் சிகரமும் சிவனும் உமையும் போலக் கூடிப்பிரியாதிருக்கின்றன என்பது
>>> இங்கு ஒரு ஐதீகமாகும்.
>>>
>>> நாககிரி பால் வண்ணமும் மற்றொரு பாகம் பச்சை வண்ணமுமாக ஓர் பாகம் விளங்குவது
>>> உமை சிவன் இவர்களின் நிறங்களைப் போல் பிரகாசிக்கின்றன என்பதும் மற்றோர்
>>> ஐதீகம்
>>> (திருச்செங்கோட்டு ஸ்தல புராணம்)
>>>
>>> *தெய்வ வடிவங்களின் அமைப்பு*
>>>
>>> இக்கோவிலின் அர்த்தநாரீஸ்வர வடிவம் மேற்கு திசை நோக்கி நின்ற
>>> திருக்கோலத்திலும், முருகப் பெருமான் கிழக்கு முகமாகவும்
>>> அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்திருவுருவங்கள் கற்சிலையோ செம்பு வெண்கலம்
>>> பித்தளை போன்ற உலோகங்களோ அல்லாமல் மகத்தான யோகம் வாய்ந்த சித்தர்
>>> மூர்த்திகளால் ஆக்கப்பட்ட ஒரு வகை அமைப்பு என்று இக்கோயில் தலபுராணம்
>>> குறிப்பிடுகின்றது.
>>>
>>> கல்வெட்டு
>>>
>>> அர்த்தநாரீஸ்வரர் சிலை அருகில் மரகதலிங்கம் ஒரு பேழையுள் வைத்து
>>> பூஜிக்கப்படுகின்றது. மேற்கு திசை நோக்கிய திருமுகம் அமைக்கப்பட்டிருப்பதால்
>>> மகாமண்டபத்துக்கு மேற்கு வாயில் அமைக்கப்படவில்லை. மேற்கு மண்டபத்தின்
>>> கற்சுவற்றில் ஒன்பது துளைகளுள்ள சித்திரப் பலகணியொன்று செதுக்கப்பட்டுள்ளது.
>>> இப்பகுதிக்கு வருவதற்கு தெற்குப் பகுதி வாயிலிலிருந்து உள்ளே வந்து இறைவனை
>>> தரிசிக்க வேண்டும். இப்பலகணியின் முன்னே விமானம், சபா மண்டபம், நந்தி
>>> மண்டபம்,
>>> கொடிக் கம்பம் உயர்ந்த பலி பீடம், மேற்கு திருவாயில், திருக்கதவு முதலியன
>>> அமைக்கப்பட்டுள்ளன. இப்படி அடைப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு
>>> ஆண்டும் மூன்று நாட்களில் இந்த ஒன்பது துளைகளினுள்ளாகச் சென்று
>>> அர்த்தநாரீஸ்வரக் கடவுளின் திருப்பாதங்களைத் தொட்டு திருமுடியுங் கண்டு
>>> மறைகின்றது என்று தல புராணம் குறிப்பிடுகின்றது.
>>>
>>> *ஆலயத்தின் அடிவாரம்*
>>>
>>> ஆலயத்திற்கு மலைமேல் வாகனம் செல்ல சிறந்த சாலை அமைக்கப்படிருந்த போதிலும்
>>> பக்தர்கள் நடந்து செல்ல நினைத்தால் அவர்களின் பயணம் சிறப்பாக அமையும்
>>> வகையில்
>>> கைப்பிடிச் சுவர்களும் பாதைகளும் சீர்செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
>>> ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறிச் செல்ல சிறிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன.
>>>
>>> அடிவாரத்திலேயே கஜமுகப்பட்டி விநாயகர் ஆலயம் மலையின் முதற்படியைச் சார்ந்து
>>> ஒரு கிழுவை மரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருக்கின்றார். விநாயகர் சிலையின்
>>> இரு புறங்களிலும் இரும்பினால் ஆன வேல்களும் நாகர் கற்சிலைகளும் இருக்கின்றன.
>>> இங்கிருந்துதான் மலை மீது செல்வதற்குக் கற்படிகள் தொடங்குவதால் இது
>>> கஜமுகப்படி
>>> என அழைக்கப்படுகின்றது.
>>>
>>> இங்கிருந்து மலை மேல் உள்ள இராய கோபுரம் மண்டபம் வரை செல்ல 1206 படிகளை
>>> கடக்க வேண்டும். கடக்கும் வழியில் உள்ள மண்டபங்களை இனி காண்போம்.
>>>
>>> *1. காளத்தி சுவாமிகள் திருமடம்* - அளவில் மிகப் பெரிய மண்டபம் இது. இங்கே
>>> பக்தர்கள் அருந்த தண்ணீர் தொட்டியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
>>>
>>> *2.திருமுடியார் மண்டபம்* - திருமுடியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிய
>>> மண்டபம். இக்குலத்து ஆண்கள் திருமுடிக்கவுண்டர் என்றும் பெண்கள்
>>> திருமுடித்தாசிகள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு ஆலயத் திருப்பணி செய்வதும்
>>> திருச்செங்கோட்டு திருப்பணிமாலையில் குறிப்பிடப்படுகின்றது. (பக் 87)
>>> இம்மண்டபம் திருமுடித்தரசி சேனாபதி வேலாள் என்பவரால் கட்டப்பட்டது
>>> (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை -வெண்பா 341 )
>>>
>>> *3.தயிலி மண்டபம்*- இம்மண்டம் தயிலி எனும் ஒரு அறச்செல்வியால் கட்டப்பட்டது
>>> (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை - செய்யுள் 432). இம்மண்டபத்தின் கிழக்குப்
>>> புறத்தில் ஒரு வீரபத்திரர் கோயில் உள்ளது. சற்று அருகாமையில்
>>> படுத்திருக்கும்
>>> ஒரு நந்தி உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு இறைவனை தரிசிக்க வருவோர்
>>> அம்மாவாசை நாளில் நந்தியின் முகம், கொம்பு, திமிழ், முதுகு ஆகிய இடங்களில்
>>> வெண்ணெய் வைத்து வழிபடுகின்றனர். இந்த நந்தி மண்டபத்திலிருந்து 28 படிகளைக்
>>> கட்ந்து சென்றால் கற்பாறையின் மீது 60அடி நீளத்தில் பெரியதோர் உருவத்தில்
>>> ஐந்து தலை பாம்பு வடிக்கப்பட்டுள்ளது. பாம்பின் நடுவில் சிவலிங்கம்
>>> அமைக்கப்பட்டுள்ளது.
>>>
>>>
>>> *4.செங்குந்த சின்ன முதலியார் மண்டபம்* - இது திருவாளர் சின்ன முதலியார்
>>> என்பவரால் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் யானைமுகப் பிள்ளயார் சிலையும்
>>> வீரம்மிக்க நவவீரர்கள் ஒன்பதினர் திருவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
>>>
>>> *5. சிங்கத்தூண் மண்டபம்* - செங்குந்தர் மண்டபத்திலிருந்து 157 படிகளைக்
>>> *6. அறுபதாம்படி மண்டபம் *- இது மோரூர் கொங்கு வேளாளர்களில் கண்ணகுலம்
>>> என்னும் ஒரு பிரிவினரால் கட்டப்பட்ட மண்டபம். பிற்காலத்தில்
>>> இவர்கள் இம்மணடபத்தைச் சாணார் (நாடார்) என்னும் சமூகத்தினருக்கு
>>> உரிமையாகும்படி விட்டுவிட்டதாக தலபுராணம் விவர்க்கின்றது.
>>>
>>> இம்மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அமர்ந்த
>>> நிலையிருக்கும் முருகன் கற்சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்திலிருந்து மேலே
>>> சென்றால் 10ம் படியிலிருந்து 21ம் படிவரைக்கும் இடையிலுள்ள சதுரமான பாறை
>>> மீது
>>> வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில் ஜடவர்ம சுந்தர பாண்டிய தேவர்
>>> பத்தாம் ஆண்டில் பூமிதானம் செய்யப்பட்ட செய்தி காணப்படுவதோடு செங்கோட்டு
>>> வேலவரை "சுப்பிரமயிப் பிள்ளையார்" என்றும் குறிப்பிட்டுள்ளது. இக்கல்வெட்டு
>>> சிதைந்த நிலையில் இருக்கின்றது.
>>>
>>> *7.செட்டிக்கவுண்டன் மண்டபம் *- இம்மண்டபம் குமாரபாளையம் என்கின்ற
>>> மண்டபப்பாளையம்கொங்குவேளாளர் தூரகுலத்து மசவேலகவுண்டன் மனைவி வள்ளியம்மாள்
>>> என்பவர் கட்டத்தொடங்கினார். இப்பணி முற்றுப்பெறாத நிலையில் குமரமங்கலத்தைச்
>>> சார்ந்த சிவநேசர் குமரபூபதி செட்டிகவுண்டன் என்பவர் இம்மணடபத் திருப்பணியை
>>> நிறைவேற்றினார். (திருப்பணிமாலை 338ம் செய்யுள்). இதே சிவபக்தர் மலைமேலுள்ள
>>> அர்த்தநாரீஸ்வரர் கோயில் பகுதிகளிலும் சில திருப்பணிகளைச் செய்துள்ளார்.
>>>
>>> *8.தேவரடியாள் மண்டபம்* -செட்டிக்கவுண்டன் மண்டபத்திலிருந்து 78 படிகள்
>>> ஏறிச் சென்றால் அடுத்து வருவது தேவரடியார் மண்டபம். இவர்கள் தம்மை
>>> உருத்திரக்
>>> கணிகையர் என்று கூறிக் கொள்கின்றனர் என்று தலபுராணம் விவரிக்கின்றது.
>>> இம்மண்டபத்தைக் கட்டிய கணிகையின் பெயர் குருவம்ம மாணிக்கம் என்பதாகும். இவர்
>>> திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். தரும சிந்தனையுடைய இக்கணிகையே
>>> இம்மண்டபத்தைக்
>>> கட்டினார். (திருப்பணிமாலை 345ம் செய்யுள்).
>>>
>>> *9. இளைப்பாறு மண்டபம் *- இது இதுவரை குறிப்பிடப்பட்ட 7 மண்டபங்களையும் விட
>>> பெரியது. இம்மண்டபத்தின் தெற்குப் பகுதியில் விநாயகருக்கு ஒரு சிறு ஆலயம்
>>> அமைந்துள்ளது.
>>>
>>> *10. கோபுரவாசல் மண்டபம் *- இளைப்பாறு மண்டபத்திலிருந்து தொண்ணூற்றொன்பது
>>> படிகள் மேலே ஏறிச் சென்றால் இந்த மண்டபததை அடையலாம். இம்மண்டபம்
>>> கி.பி.1654ஆம்
>>> ஆண்டில் சீயால கட்டி முதலியாரால் திருப்பணி தொடங்கப்பட்டு சேலம்,
>>> இராசிபுரம்,
>>> விழியகுலத்தாரால் பூர்த்தி செய்யப்பட்டது. இம்மண்டபத்தின் மேற்குப்
>>> பகுதியில்
>>> பெரிய சிறிய இரண்டு விநாயகர் கற்சிலைகளை எழுந்தருளச் செய்திருக்கின்றனர்.
>>> இம்மண்டபத்தில் மலைமேல் நிகழும் பூஜா காலங்களை அறிவிக்கும் ஓசை மிகுந்த
>>> வெங்கல
>>> சேகண்டி ஒன்றும் தொங்கவிடப்பட்டிருக்கின்றது.
>>>
>>>
>>> இந்த 10 மண்டபங்களையும் கடந்து கோபுர வாசலைக் கடந்து கோயிலுக்குள் செல்லும்
>>> போது மிகப்பெரிய கலைநுணுக்கம் வாய்ந்த கோபுரக்கதவுகளைக் கடந்து கோயிலுக்குள்
>>> செல்லலாம்.
>>>
>>> கோயில் அமைப்பில் மிகவும் வித்தியாசமான அமைப்பைக் கொண்ட கோயில் இது. சிறந்த
>>> கைதேர்ந்த சிற்ப வேலைப்பாடுகள் இக்கோயிலின் எல்லா பகுதிகளிலும்
>>> நிறைந்திருக்கின்றன.
>>>
>>>
>>> இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இக்கோயில் தனித்துவத்துடன் விளங்குகின்றது
>>> என்பதை இங்கு வந்து செல்வோர் நிச்சயம் உணர முடியும்.
>>>
>>>
>>> திருமதி.பவளசங்கரி, சுபா
>>>
>>>
>>> டாக்டர். நா.கண்ணன், ஆரூரன்
>>>
>>>
>>> *உசாத்துணை:*
>>>
>>>
>>> 1. தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பன்பாட்டுச் சின்னங்களும், V.கந்தசாமி
>>> 2. ஸ்தல புராணம் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் உற்சவர் திருச்செங்கோடு
நீங்கள் பதிப்பித்துள்ள எல்லாமே சிறந்தவை; அதிலும் இது மிகச் சிறப்பாகவே உள்ளது! அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சொல்கிறார்: விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத்துணையவன் பன்னிரு தோளும்
பயந்ததனி வழிக்குத்துணை வ டிவேலும் செங்கோடன் மயூரமுமே! இதைத் தவிர திருப்புகழில் ஐந்து பாடல்கள் அவர் திருச்செங்கோடு குறித்துப் பாடியுள்ளார். அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற ...... நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் ...... முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை ...... யணிவோனே வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த ...... வடிவேலா சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ டமர்ந்த ...... பெருமாளே. 2 காலனிடத் ...... தணுகாதே காசினியிற் ...... பிறவாதே சீலஅகத் ...... தியஞான தேனமுதைத் ...... தருவாயே மாலயனுக் ...... கரியானே மாதவரைப் ...... பிரியானே நாலுமறைப் ...... பொருளானே நாககிரிப் ...... பெருமாளே. 3 கொடிய மறலியு மவனது கடகமு மடிய வொருதின மிருபதம் வழிபடு குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ் கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும் படியு நெடியன எழுபுண ரியுமுது திகிரி திகிரியும் வருகென வருதகு பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப் பழய அடியவ ருடனிமை யவர்கண மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும் சடில தரவிட தரபணி தரதர பரசு தரசசி தரசுசி தரவித தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத் தரணி தரதநு தரவெகு முககுல தடினி தரசிவ சுதகுண தரபணி சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும் நிலனும் வெருவர வருநிசி சரர்தள நிகில சகலமு மடியவொர் படைதொடு நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே. 4 பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப ...... னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட ...... மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே. 5 புற்புதமெ னாம அற்பநிலை யாத பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும் புத்திரரும் வீடு மித்திரரு மான புத்திசலி யாத ...... பெருவாழ்வு நிற்பதொரு கோடி கற்பமென மாய நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான் நித்தநின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும்வகை யோத ...... நினைவாயே சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத சக்ரகதை பாணி ...... மருகோனே தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற வைத்தவொரு காழி ...... மறையோனே கற்புவழு வாது வெற்படியின் மேவு கற்றைமற வாணர் ...... கொடிகோவே கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால கற்பதரு நாடர் ...... பெருமாளே. (ந்ன்றி திரு கோபாலசுந்தரம்; கெள்மாரம்) ச்ர்ப்பகிரி = திருச்ச்ங்கோடு உங்கள் தொண்டு சிறந்தது. எல்ல ஸ்தலபுராணங்களையும் தொகுத்து [படஙக்ளுடன்] நூலாகப் பதிப்பித்தால் பலருக்கு உதவும். நீங்கள் அடுத்த முறை இந்தியா வருகையில் சில பதிப்பாளர்களைச் சந்தித்து இந்த முற்சியில் இறங்கலாம். நரசய்யா |
|
அன்பின் பவளா
இக்கருத்தை முதன் முதல் குன்றக்குடி மடாதிபதியிடம் சொன்னேன்.
நேற்று இங்கு வேதாகம சபை கூட்டத்தில் பல சைவாச்சார்யர்களை சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்தது. இந்துக் கோயில்களின் இருப்பே ஒரு தலைமுறையை நம்பி
இருக்கும் சூழலில் எவ்வகை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டால் தமிழ்க்
கோயில்களை நிலை நிறுத்தலாம் எனும் யோசனைகள் வழங்கினேன்!
கோயில்கள் பற்றிய ஒரு விரிவான அலசல் இங்கு தேவைப்படுகிறது!
நா.கண்ணன்
கோயில்கள் பற்றிய ஒரு விரிவான அலசல் இங்கு தேவைப்படுகிறது!
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆரூரான் நாம் படம் எடுத்த கதையையும் சொல்லிவிட வேண்டும் :-) ஆளாளுக்கு
கோயிலில் கார்வார் செய்வது, படமெடுத்தால் ஏதோ சிலையைத் திருடிக்கொண்டு
போவது போன்ற மிரட்டல்...ஈதெல்லாம் குறைய வேண்டும். அழகான சிலைகளை
கம்பிக்கிராதிக்குள் சிறை வைக்க வேண்டிய அவல நிலையில் 21ம் நூற்றாண்டுத்
தமிழனின் கலைப்புரிதல் உள்ளது! இத்தனை நூற்றாண்டுகளாக இக்கோயிற்சிலைகள்
வலை அடைப்பு இல்லாமல்தானே இன்று நம் கைக்கு வந்திருக்கிறது. ஒரு இந்து,
தன் கோயில் சிலையை உடைப்பான், எனவே கம்பிக்கிராதி போட வேண்டும் என்று
எண்ணுவதே எவ்வளவு கேவலமாக உள்ளது. இம்முறை என்னை மிகவும் பாதித்த விஷயம்
தமிழனிடம் அற்றுப் போன அழகியல் உணர்வு! இல்லையெனில் வாழும் இடத்தை
குப்பைக்காடாக்கி, கோழிகள் உணவு உண்பது போல் ரங்கநாதன் தெருவில்
குப்பைகளின் நடுவில் எவ்விதக் கூச்சமும் இன்று விலங்குகள் போல் சுகித்து
வாழ்வானா? எங்கே போனது தமிழ் அழகியல்? தமிழன் கவிதை பற்றிப் பேசாமல் வாயை
மூட வேண்டும் என்று சட்டம் போடுவேன்! (வாய்ப்புக் கிடைத்தால் :-)
நா.கண்ணன்
நிழலதிபர்களே, நிழலதிபைகளே!ஆலயம் செல்வது சாலவும் நன்று. திருமயிலையில் அருள்மிகு கற்பகாம்பாள் சமேத அருள்மிகு கபாலீஸ்வரர் வாசம் செய்து அருள் பாலிக்கும் ஆலயம் தனில், முதலில் ஒரு மணற்பரப்பு. அது ஒரு சமுதாயக்கூடம். கல்யாணம் பேசலாம்; வம்படிக்கலாம். வைரத்தோடும், காஞ்சிப்பட்டுமாக பள பளக்கலாம். ஆலயத்தின் பிரகாரங்கள் காதல் சுற்றுக்கு உகந்தவை என்பாரும் உண்டு. சிற்பங்களின் கலையழகைக் கண்டு களிப்படையலாம். பேரூர். கருவறையை அணுகும் முன்னரே, பக்தி அலைவரிசை தொடங்கும். மீனாக்ஷி. ஆனாலும், பக்தியுடன் ஆலயம் செல்வது அதிசாலவும் நன்று.இன்னம்பூரான்
--
செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு கோவில்களில் நான் இதுவரை பார்த்திராத ஒரு வியக்க வைக்கும் கலைப்படைப்பு.
3.தயிலி மண்டபம்- இம்மண்டம் தயிலி எனும் ஒரு அறச்செல்வியால் கட்டப்பட்டது (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை - செய்யுள் 432). இம்மண்டபத்தின் கிழக்குப் புறத்தில் ஒரு வீரபத்திரர் கோயில் உள்ளது. சற்று அருகாமையில் படுத்திருக்கும் ஒரு நந்தி உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு இறைவனை தரிசிக்க வருவோர் அம்மாவாசை நாளில் நந்தியின் முகம், கொம்பு, திமிழ், முதுகு ஆகிய இடங்களில் வெண்ணெய் வைத்து வழிபடுகின்றனர். இந்த நந்தி மண்டபத்திலிருந்து 28 படிகளைக் கட்ந்து சென்றால் கற்பாறையின் மீது 60அடி நீளத்தில் பெரியதோர் உருவத்தில் ஐந்து தலை பாம்பு வடிக்கப்பட்டுள்ளது. பாம்பின் நடுவில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சேச்சா ஐயா ,
பரகேசரி வர்மன் முதலாம் இராஜராஜன், மதுரை கொண்ட முதற் பரகேசரி வர்மன்,
சுந்தரபாண்டிய தேவன், சொக்கப்ப நாயக்கன், சொக்கலிங்க நாயக்கன்,
மைசூர் கிருஷ்ணராஜ உடையார் முதலான உமக்கு மிகவும் பிடித்தமான
மன்னர்கள்
கல்வெட்டுகள் சுமார் ஐம்பதை இங்கு அமைத்துள்ளனர்.
அவை கருத்தைக் கவருமா தெரியவில்லை:))
செங்கோடு ஆலயத்தில் ’பஞ்ச மஹா சப்தம்’ எனும் வாத்யகோஷம் முழங்கியதாகவும்
செப்பேடு கூறுகிறது
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நீங்கள் பதிப்பித்துள்ள எல்லாமே சிறந்தவை; அதிலும் இது மிகச் சிறப்பாகவே உள்ளது!
அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சொல்கிறார்:
..
உங்கள் தொண்டு சிறந்தது. எல்ல ஸ்தலபுராணங்களையும் தொகுத்து [படஙக்ளுடன்] நூலாகப் பதிப்பித்தால் பலருக்கு உதவும். நீங்கள் அடுத்த முறை இந்தியா வருகையில் சில பதிப்பாளர்களைச் சந்தித்து இந்த முற்சியில் இறங்கலாம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உம்மைதானுங்ணா, அதும் நாம போட்டா புடிக்கறதப் பாத்து, பலபேரு வெசனப்பட்டாலும் சிலபேரு வயிறெரிஞ்சதையும் சொல்லித்தானுங்களே ஆகோணும். சரி தென்ன செய்யறதுங்க..........ஆனாலும் பாருங்க, மாதொரு பாகனைப் புடிக்கமுடியலைன்னாலும், ரதிமதனை புடிச்சிபுட்டோமில்ல.....போட்டோ புடிச்சதென்னவோ நாமாருந்தாலும், போறவன் வாரவனெல்லாம் வெக்கப் பட்டதுதான் இன்னிக்கு வரைக்கும் புரியலைங்ணா!!!!!!!!!!!
மதிப்பிற்குரிய எழுத்தாளர், பெருமாள் முருகன், திருச்செங்கோட்டு மலையையும், கடந்த நூற்றாண்டில் அங்குவாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல், மற்றும் சமூகச் சூழலோடு இயைந்த ஒரு கதையை “ மாதொரு பாகன்” என்ற பெயரில் எழுதியிருக்கிறார். கொங்கு வட்டாரவழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் என்னை மிகவும் பாதித்தது.
கோபுரவாசல் மண்டப நுழை வாயில்
சுபாஷினி மிகவும் அழகான மனதை சங்கல்பிக்கவைக்கும் சிற்பங்கள். கமலம் http://www.kamalagaanam.blogspot.com --- On Sat, 21/4/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote: |
ஆலயத்தின் உள்ளே நுழைந்தாயிற்றா.. சரி வாருங்கள்..சிற்பக்கூடத்தைப் பார்ப்போம்..
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்தச் சிற்பக்க் கூடத்தில் நான் இணைத்திருந்த படங்களில் சில வித்தியாசமான வடிவங்களும் இணைந்திருக்கின்றன.. குறிப்பாக
இந்தப் படத்தில் உள்ள சிலைகள்..
இதில் சிறப்பாக
- இந்த ஆலயத்தை அலங்கரிக்கும் பற்பல யாழிகளும் அதில் பதிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும்
- தூண்களில் வடிக்கபப்ட்டுள்ள பல பொதுவான சிற்பங்களும் மன்னர்கள் அவர் தேவியர் சிற்பங்களும் இடம் பெறுகின்றன.
சிற்பக்கூடம் 2 க்குச் செல்வோமா...?
2012/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
> ஆலயத்தின் உள்ளே நுழைந்தாயிற்றா.. சரி வாருங்கள்..
>
இவன் நிச்சயம் தமிழனல்ல. அரபுக்காரனோ? ஆங்கிலேயனோ? கொரியனோ இல்லைச் சீனனோ! கீழேயுள்ள படத்தைக் காண்க:
சிறைக்குள் யாழி. யாழி வாய் சிறைக்குள் கற்பந்து!
From: கி.காளைராசன் <kalair...@gmail.com>Date: April 22, 2012 9:26:26 AM PDTSubject: Re: [MinTamil] Re: புத்தாண்டு சிறப்பு வெளியீடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்Reply-To: mint...@googlegroups.com
2012/4/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
> ஆலயத்தின் உள்ளே நுழைந்தாயிற்றா.. சரி வாருங்கள்..
>
இவன் நிச்சயம் தமிழனல்ல. அரபுக்காரனோ? ஆங்கிலேயனோ? கொரியனோ இல்லைச் சீனனோ! கீழேயுள்ள படத்தைக் காண்க:
இந்தக் காலத்தில் இந்திய அறிஞர்கள் கொரியா சென்றுள்ளது போல், அந்தக் காலத்தில் கொரியர்கள் இந்தியா வந்திருக்க வேண்டும்.இப்ப காலம் மாறிப்போச்சு,
சிறைக்குள் யாழி. யாழி வாய் சிறைக்குள் கற்பந்து!
இந்தக் கல்லை யாழியின் வாயில் இருந்து எடுக்க முடியாது. ஒருகல்லைக் குடைந்து யாழியின் வாய்க்குள் கற்பந்தை சிற்பி செய்துள்ளார்.இதுபோன்ற சிற்பங்கள், காளையார் கோயில், பிரான்மலை ஆகிய கோயில்களில் இருந்தன. காளையார் கோயில் சிற்பத்தைச் சிதைத்துவிட்டனர். பிரான்மலையில் நல்லநிலையில் உள்ளது என்று நினைக்கிறேன்.படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன ஐயா,வாழ்த்துகள்.அன்பன்கி.காளைராசன்
அம்மையார் சுபாஷினி அவர்களுக்கு வணக்கம்.2012/4/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
இந்தச் சிற்பக்க் கூடத்தில் நான் இணைத்திருந்த படங்களில் சில வித்தியாசமான வடிவங்களும் இணைந்திருக்கின்றன.. குறிப்பாகஇந்தச் சிற்பங்களையும் கவனித்தேன். தாங்கள் இதுபற்றிக் கூறுவீர்கள் என எதிர்பார்த்தேன்.
இந்தப் படத்தில் உள்ள சிலைகள்..வலமிருந்து இடமாக.1) அயல்நாட்டு வியாபாரி தனது வாளைக் கீழே தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவிக்கிறார்.
2) வியாபாரி அற்புதமான அரியவகை (நவரெத்தின?)மாலையை அரசியிடம் காண்பித்து விற்கிறார் (அல்லது) பரிசளிக்கிறார்.3) அரசி அந்த மாலையை அணிந்து கொண்டு வீணை மீட்டிப் பாடுகிறாள்.இது எனது கற்பனையே,உண்மை வரலாற்றை ஊரார்களிடம் தான் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.அன்பன்கி.காளைராசன்
சுபா
3) அரசி அந்த மாலையை அணிந்து கொண்டு வீணை மீட்டிப் பாடுகிறாள்.
இந்தப் படத்தில் உள்ள சிலைகள்..
வலமிருந்து இடமாக.1) அயல்நாட்டு வியாபாரி தனது வாளைக் கீழே தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவிக்கிறார்.
எனக்கு அது வாள் போலத் தெரியவில்லை. குடை போலத்தெரிகின்றது .
யாழி வாயின் கல் உருண்டை பல கோயில்களில் உள்ளதுபோல! அது நம் சிற்பிகளின் அற்புதப் படைப்பு! மதுரை மீனாட்சி கோயிலில் உள்ள அந்த யாழிவாய் உருண்டைக் கல்லை எடுத்துவிட நான் எவ்வளவு முயன்றிருக்கிறேன்!
அம்மையின் சந்நிதிக்குள் நுழையுமிடத்தில் ... இடப்புறம் கிளிமண்டபம் இருந்தது. வலப்புறம் அந்த யாளி, வாயில் கல் உருண்டையுடன். தம்பியின் பேரனை அங்கே கூட்டிச் செல்லவும்.
சிறு பிள்ளைகளுக்கு அது ஒரு பெரிய விந்தையான விளையாட்டு. இப்போதெல்லாம் கூட்டம் காரணமாக அனுமதிக்கிறார்களோ என்னவோ. அந்தச் சிறுபிள்ளைக் காலத்தில் "நாளைக்கு எப்படியும் செய்துவிடலாம்" என்ற நம்பிக்கையைத் தந்தவர்கள் அந்த யாளியும் என் தாத்தாவும்! பொல்லாத ஏமாற்று ஆசாமிகள்! :-) :-) :-)
சிறப்பு மிக்க இந்தப் புனித ஸ்தலத்திற்குச் சென்று வரும் போது (இந்தக் கோயில் மட்டுமல்ல.. அனைத்து இடங்களுமே ) நாம் பக்தி செலுத்தி வருவதோடு முடிந்தால் ஏதாவது ஒரு வகையில் நம்மால் ஆன வகையில் நன்மை செய்து வரவேண்டும். அதை விட்டு இவ்வகை புனிதத் திருத்தலங்களில் குப்பைகளை..
உணவுப் பொட்டலங்களை தூக்கி வீசி அசிங்கப் படுத்தலாமா...
அன்பன்
கி.காளைராசன்
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நானும் இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆலய நிர்வாகம் நிச்சயம் யோசித்து தக்க வகையில் குப்பை தொட்டிகளை நிர்மானித்து வைக்க வேண்டுவது அவசியம்.அதே வேளை பக்தர்களைக் குறை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதுவே தங்கள் வீடு என்றால் இந்த மாதிரி குப்பைகளைக் கொட்டி வைக்க மனம் வருமா? சாப்பிட்ட இலையை தூக்கி வீசி விட்டுப் போகிறோமே என்ற வருத்தம் யாருக்கேனும் இருந்தால் உடன் ஆலய நிர்வாகத்திடம் சென்று முறையிட வேண்டும். ஒன்றுக்கு 10 பேர் இப்படி கேள்வி கேட்டால் அசையாத மனமும் அசையும் இல்லையா..? ஏன் இந்தப் பொறுப்பு பக்தர்களுக்கு வருவதில்லை? யோசிக்க வேண்டிய கேள்வி தானே!சுபா
Suba Tremmelhttp://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings