எடிசனின் கோல்மால்

38 views
Skip to first unread message

செல்வன்

unread,
Aug 24, 2010, 3:23:27 AM8/24/10
to mintamil, பண்புடன், தமிழமுதம்
உலகின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர் யார் என கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன் என சிறு குழந்தையும் சொல்லும்.அவர் வாங்கிய பேடண்டுகளின் எண்ணிக்கை 1093.ஒரு மனிதர் இத்தனை கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்திருக்க முடியுமா என அதிசயிக்கிறீர்களா? கவலையே படவேண்டாம்..சத்தியமா முடியாது.அவர் பேரில் இருக்கும் எந்த கண்டுபிடிப்பும் அவருடையது அல்ல.எல்லாம் அவர் கம்பனியில் தினகூலிக்கு வேலை பார்த்த எஞ்சினியர்கள் கண்டுபிடித்தது.கண்டுபிடிப்பு அவர்களுடையது.ஆனால் பேடண்டை மட்டும் எடிசன் வாங்கிகிட்டார்

மற்றபடி தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு.

எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி (Alternate Current) என்ற மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை மின்சாரத்தையும் சோதித்த எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின் மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது என்பதே முடிவு. அந்த மின்சாரத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.

பத்திரிக்கையாளரை கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை போட்டார் எடிசன். அதில் ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம் அந்த நாற்காலியில் தனது டிசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை 10-20 நிமிடம் துடிதுடித்து செத்தது. அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு வினாடிகளில் செத்துவிட்டது.

Image
வெஸ்டிங்ஹவுஸ்

"பார்த்தீர்களா? எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாகமாட்டார்கள். பிழைத்துவிடுவார்கள். ஆனால் வெஸ்டிங்ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால் உடனடி மரணம்தான். எனவே எனது மின்சாரமே பாதுகாப்பானது" என பிரச்சாரம் செய்தார் எடிசன். செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

அப்புறம் எடிசனின் மூளையில் இன்னொரு ஐடியா வந்தது. அப்போதெல்லாம் கொடும் குற்றவாளிகளை கில்லட்டின் வைத்து தலையை வெட்டிக்கொன்று கொண்டிருந்தார்கள். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார நாற்காலியில் வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என ஐடியா கொடுத்தார் எடிசன். அத‌ற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து அரசிடம் விற்றும் விட்டார். இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது. மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொல்வதை அப்போதெல்லாம் Westinghoused என அழைப்பார்கள்.

ஆனால் மின்சார நாற்காலியில் மரணம் என்பது வலியற்ற மரணம் கிடையாது. முதலில் 2000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி அதிர்ச்சி கொடுப்பார்கள். சுயநினைவு தப்பியவுடன் 5000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி உடலின் உள்பாகங்களை எரிப்பார்கள். அப்போது கண்விழி வெளியே வந்து விழுவதெல்லாம் உண்டு. அப்போது சுயநினைவு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்களுக்குதான் தெரியும். அதனால் இப்போதெல்லாம் விஷ ஊசி போட்டு அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.



--
செல்வன்

www.holyox.blogspot.com


"Man is not free unless government is limited." - Ronald Reagan


செல்வன்

unread,
Aug 24, 2010, 3:35:58 AM8/24/10
to mintamil, பண்புடன், தமிழமுதம்
ஏசி மின்சாரத்ததுறைக்கு நல்ல பங்களிப்பை தந்தவர் நிக்கலஸ் டெஸ்லா எனும் விஞ்ஞானி.இவரது பெயரை நீங்கள் கேள்விபடாமல் இருந்தால் அதுக்கு இருவர் காரணம்.ஒன்று எடிசன்,இன்னொன்று மார்க்கோனி..

எந்த மார்க்கோனி என கேட்கிறீர்களா?ரேடியோவை கண்டுபிடித்ததாக நீங்கள் நம்பிகொண்டிருக்கும் மார்க்கோனிதான்.

எடிசனுக்கு கீழே வேலை பார்த்த எஞ்சினியர் தான் டெஸ்லா.அவரது கண்டுபிடிப்புக்கள் பலவற்றுக்கு எடிசன் தன் பெயரில் பேடண்ட் வாங்கிவிட்டார்.கடைசியாக டெஸ்லா ரேடியோவை 1895ல் கண்டுபிடித்தார்.ஆனால் அவர் அதுக்கு பேடண்டு வாங்குவதுக்கு முன் இங்கிலாந்து மார்க்கோனி அரசவம்சத்தை சேர்ந்த மார்க்கோனி குடு, குடு என லண்டன் பேடண்ட் ஆபிசுக்கு போய் ரேடியோவுக்கு பேடண்ட் வாங்கிவிட்டார்.அப்புறம் அதை தூக்கிகொண்டு போய் அமெரிக்க பேடண்ட் ஆபிசுக்கு ஓடிபோய் ரேடியோவுக்கு பேடண்ட் கேட்டார்.

பேடண்ட் தரும் அதிகாரி "இது டெஸ்லா கண்டுபிடிச்சதாச்சே?" என கேட்டார்

உடனடியாக மேல்மட்ட நண்பர்களுக்கு போனை போட்டு கையோடு பேடண்ட் வாங்கிவிட்டார் மார்க்கோனி.

டெஸ்லாவுக்கு பலத்த அதிர்ச்சி.புகார் செய்தார்.நீண்ட நாள் விசாரணை நடந்து 1943ல் அந்த பேடண்ட்டை டெஸ்லா பேருக்கு மாற்றி தந்தார்கள்.ஆனால் அதுக்குள் மார்க்கோனி அதை வைத்து கோடி கோடியாக சம்பாதித்துவிட்டார்.இருவரும் இறந்தும் போய்விட்டார்கள்.

செல்வன்

unread,
Aug 24, 2010, 3:58:44 AM8/24/10
to panb...@googlegroups.com, mintamil, தமிழமுதம்
Did Thomas Edison really invent the light bulb?
Did Thomas Edison really invent the light bulb?

The history of the light bulb reads like a story straight out of a tabloid magazine. Contrary to what schools have taught for years, the American icon, Thomas Edison, neither invented the light bulb, nor held the first patent to the modern design of the light bulb.

Apparently, the we gave the esteemed Mr. Edison credit for the invention solely because he owned a power company, later known as General Electric, and a light bulb is just a bulb without a source of electricity to light it. In reality, light bulbs used as electric lights existed 50 years prior to Thomas Edison's 1879 patent date in the U.S.

Additionally, Joseph Swan, a British inventor, obtained the first patent for the same light bulb in Britain one year prior to Edison's patent date. Swan even publicly unveiled his carbon filament light bulb in New Castle, England a minimum of 10 years before Edison shocked the world with the announcement that he invented the first light bulb. Edison's light bulb, in fact, was a carbon copy of Swan's light bulb.

How do two inventors, from two different countries the invent exact same thing? Very easily, if one follows in the others footsteps. Swan's initial findings from tinkering with carbon filament electric lighting, and his preliminary designs, appeared in an article published by Scientific American. Thomas Edison Without a doubt, Edison had access to, and eagerly read this article. Giving Mr. Edison the benefit of the doubt, and stopping short of calling him a plagiarist, we can say that he invented the light bulb by making vast improvements to Swan's published, yet unperfected designs.

Swan, however, felt quite differently, as he watched Edison line his pockets with money made from his invention, and took Edison to Court for patent infringement. The British Courts stood by their patent award for the light bulb to Swan, and Edison lost the suit. The British Courts forced Edison, as part of the settlement, to name Swan a partner in his British electric company. Eventually, Edison managed to acquire all of Swans' interest in the newly renamed Edison and Swan United Electric Company.

Edison fared no better back home in the U.S., where the U.S. Patent Office already ruled, on October 8, 1883, that Edison's patents were invalid, because he based them upon the earlier art of a gentleman named William Sawyer. To make matters worse, Swan sold his U.S. patent rights, in June 1882, to Brush Electric Company. This chain of events stripped Edison of all patent rights to the light bulb, and left him with no hope of purchasing any.

Edison dusted himself off, and went into business setting up a direct current (DC) system of power distribution in New York City, and selling the light bulbs that used this electricity. The light bulb business only flickered between 1879 and 1889, until word-of-mouth advertising of lower electricity costs fanned the flame, and business boomed. Edison's client base rapidly expanded to three million customers over the span of 10 years.

Always at the center of controversy, Edison next found himself in competition with Westinghouse for the sale of the first electric chair to execute criminals to New York. Edison's chair used the DC system of electricity, while Westinghouse used the AC (alternating current) system, designed especially for it by Nickola Tesla. Both Edison and Westinghouse emphasized the humanity of electrocution and the safety of their electrical system as selling points when pitching their chairs to New York.

Edison's bid for the sale of his chair was a mere formality and a ploy to have the Westinghouse system of electricity chosen by New York for the electric chair. He endorsed the Westinghouse AC system of electricity as the system of choice to be used for the electric chair, reasoning that the public would associate the Westinghouse AC system with the killing power of the electric chair, and would see the system as unsafe for household use.

Edison made this strategic move in anticipation that the public and would flock to the safety of his DC system, as he needed increased sales of the system, because of the great monetary investment he had made in the system. Edison's plan succeeded, in part, as New York did select the Westinghouse electric chair over his model.

What he could not take into account, was the fact that, unbelievably, Westinghouse never tested the chair, and the chair failed on its "Maiden Voyage." Though Edison's carefully laid plan went up in smoke, he did get the last laugh, as for years people referred to being electrocuted as being "Westinghoused," even though its chair was no longer in use.

It only took a matter of years before the public realized that the benefits of the AC system far outweighed those of the DC system. Edison's DC system took back seat, and the AC system took center stage. People in the U.S. and worldwide chose the AC system over the DC system, because AC currents deliver electricity to power lines with greater efficiency. The DC system is no longer in use today.

DID YOU KNOW?
The first light bulbs lasted a mere 150 hours, and that ten years later, Edison introduced one that lasted 1,200 hours? The average light bulb today lasts approximately 1,500 hours.

venkatachalam Dotthathri

unread,
Aug 24, 2010, 5:42:14 AM8/24/10
to mint...@googlegroups.com
ஓம்.
கூடற்ற குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டதைப்போன்று பிறர் பொருளைக் கள்ளத்தால் கைப்பற்றி உரிமை பெற்றார் போலும் எடிசன்.
ஓம். வெ.சுப்பிரமணியன்

2010/8/24 செல்வன் <hol...@gmail.com>

Annakannan

unread,
Aug 24, 2010, 5:47:40 AM8/24/10
to மின்தமிழ்
அட பாவமே!

- அ.க.

Tthamizth Tthenee

unread,
Aug 24, 2010, 8:44:28 AM8/24/10
to mint...@googlegroups.com
கண்டுபிடித்ததை  யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தால்  விலை போகாது,யாரிடமாவது சொன்னால் தான் விலை போகும், கூடவே கண்டு பிடித்தவரின் உரிமையும் பறிபோகும்,
 
ஒரு சிறிய குத்தூசியிலிருந்து, உலகை சிதறடிக்கும் குண்டு வரை தெருவோரக் கடைகளில் கிடைக்கின்றன, அவைகளைக் கண்டு பிடித்தவர் யாரென்று யாருக்கும்  கவலை இல்லை,  நயமாகக் கிடைக்கிறதா  என்பதே   கவலை
 
 நான் பணி புரிந்த  அலுவலகத்தில்  நான் என்னுடைய சுய உழைப்பில் , சுய சிந்தனையில் கண்டு பிடித்த ஒரு கருவியை ,மிகத்தந்திரமாக  என்னைக் கழற்றி விட்டுவிட்டு  அவருடைய  பெயரைப் போட்டு   அவர் கண்டு பிடிப்பு மிகவும் உபயோகமான கண்டு பிடிப்பு  என்று   அந்த  நிர்வாகத்தின் ஆண்டு விழா மலரில் அவருடைய  புகைப்படத்தைப் போட்டு  வெளியிட்டார்கள்
 
மனம் நொந்து போய்   நான் ஒரு கவிதை எழுதினேன்
 
புதுமையாய்த் திட்டமிட்டு  புலியை வீழ்த்தினேன்  நான்
புலி மீது  கால் வைத்து  புகைப்படத்தில்   அவன்!
 
என்று
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 8/24/10, Annakannan <annak...@gmail.com> wrote:
அட பாவமே!

- அ.க.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

geeyes

unread,
Aug 24, 2010, 10:33:53 AM8/24/10
to மின்தமிழ்
பெரிய மனிதர்கள் அவர்களுடைய மனிதத்தன்மையால் மட்டுமே அளக்கப்படவேண்டும்.
அவர்கள் ‘அளப்பதை’ நம்பி அல்ல !

Tthamizth Tthenee

unread,
Aug 24, 2010, 10:46:13 AM8/24/10
to mint...@googlegroups.com
நம்பிக்கை  இல்லாமல் இருப்பது அளப்பரிய இழப்பு
அனைவரையும் நம்புவதும் அளிப்பரிய இழப்புதான்
 
அடுத்தவரை நம்பாமல் இருந்தாலும் தன்னையே  நம்பாதவனுக்கு  இழப்பு அதிகம்தான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 8/24/10, geeyes <gmsan...@gmail.com> wrote:
பெரிய மனிதர்கள் அவர்களுடைய மனிதத்தன்மையால் மட்டுமே அளக்கப்படவேண்டும்.
அவர்கள் ‘அளப்பதை’ நம்பி அல்ல !

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

geeyes

unread,
Aug 24, 2010, 11:08:04 AM8/24/10
to மின்தமிழ்

திரு.தமிழ்தேனீ அவர்களுக்கு நிகழ்ந்தது மிகவும் வருந்தம் தரும் நிகழ்வு.
சக ஊழியர்களின் கருத்து என்னவாக இருந்தது?

Rajasankar

unread,
Aug 24, 2010, 11:20:33 AM8/24/10
to mint...@googlegroups.com
செல்வன்,

தமிழமுதம் குழுமத்தில் நிக்கோலா டெல்சா பற்றியும் அவருக்கும் எடிசன்னுக்கும் இருந்த சண்டை பற்றி ஒரு இழையில் எழுதியிருக்கேன். கிடைச்சா இதில் இணைக்கலாம்.

ராஜசங்கர்

செல்வன் wrote:

Tthamizth Tthenee

unread,
Aug 24, 2010, 11:26:33 AM8/24/10
to mint...@googlegroups.com
சக  ஊழியர்கள்  மனம் வருந்தினாலும் தைரியமாக  பதவியிலுள்ளோரை  எதிர்க்க முடியாததால்  அனுதாபம் மட்டும் கிடைத்தது,
 
அந்த முழுக்கவிதை  கீழே
 
புல்ஸ் ஐ என்று பெயரிட்டு
புதுமையாகத் திட்டமிட்டு
புலியை வீழ்த்தினோம்
புகைப்படத்தில் புலி மீது
கால்வைத்து வேறு யாரோ!
 
என்று எழுதி  என்னுடைய  உயர் அதிகாரியின் அறையில்  அவருடைய  மேசையில் வைத்துவிட்டு  வந்தேன், ஏனென்றால் அந்த அதிகாரிதான்  அதற்கு உடந்தையாக  இருந்தவர், 
 
அந்த  அதிகாரி என்னை  தனியே  அழைத்து  பழைய காலத்தில் புலவர்கள்  அறம் பாடுவதைப் போல்  கவிதை  எழுதி வைத்து விட்டீர்கள், மனம் உறுத்துகிறது
 
இனி என் வாழ்வில் இதுவே நான் செய்த       கடைசீத் தவறாக இருக்க வேண்டும்
நான்  என் தவறை  உணர்ந்தேன்,  நீங்கள் மனம் நொந்து  என்னை சபித்தால்  நான் பாதிக்கப்படுவேன், ஆகவே  தயவு செய்து  மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று மனம் திறந்து  என்னிடம் பேசினார், ஏனென்றால் என்னுடைய   உழைப்பு அதில் ஆறு மாத  உழைப்பு,
 
அவரிடம்  நான் ஐயா நீங்கள் என்னுடைய  அதிகாரி ஆனாலும் மனிதர்  என்று நிரூபித்து விட்டீர்கள், நான் இதை மறந்துவிடுகிறேன், என்னால்  உங்கள் குடும்பத்துக்கு நல்லது விளையவேண்டுமே  தவிர, கெடுதல் விளையக்கூடாது
 
மேலும் நானும்  பெரிய முனிவன் அல்ல, உங்களை சபிக்கும் அளவுக்கு  ,மேலும் நான் சபித்தால்  அது பலிக்கும் அளவுக்கு நான் பெரியவனே அல்ல,
அதனால்  இருவருமே  இந்த நிகழ்வை மறந்துவிடுவோம் என்று கூறிவிட்டு வந்தேன்,
 
 
ஆனால் ஒன்று, மனம் நொந்து  நாம் குமுறும்போது  நம்மை வருத்தப்பட வைத்தவர் பாதிக்கப்படுகிறார் என்பது உண்மை  நாம் நேர்மையானவராக இருந்தால்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
On 8/24/10, geeyes <gmsan...@gmail.com> wrote:

திரு.தமிழ்தேனீ அவர்களுக்கு நிகழ்ந்தது மிகவும் வருந்தம் தரும் நிகழ்வு.
சக ஊழியர்களின் கருத்து என்னவாக இருந்தது?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Swarna Lakshmi

unread,
Aug 24, 2010, 11:36:06 AM8/24/10
to mint...@googlegroups.com
வெறும் வார்த்தையை விட எழுத்துக்கு, அதுவும் கலைவடிவமாக வந்து விழும் எழுத்துக்கு சக்தி அதிகம். நீங்கள் சொல்வது போல் நேர்மையாக இருப்பவருக்கு பல யானை பலம் - அங்கே பதவியோ பணமோ கடைசி பட்சம். நேர்மை எப்போதும் மனிதர்களை உயர்த்தும். சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்களில் நாம் கடைபிடிக்கும் நேர்மைதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.
 
நன்றி
ஸ்வர்ணா


From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tue, 24 August, 2010 8:56:33 PM
Subject: Re: [MinTamil] Re: எடிசனின் கோல்மால்

Geetha Sambasivam

unread,
Aug 24, 2010, 11:48:30 AM8/24/10
to mint...@googlegroups.com
எப்போவுமே உண்மை ஜெயிக்கும்.

2010/8/24 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

geeyes

unread,
Aug 24, 2010, 12:39:40 PM8/24/10
to மின்தமிழ்
ஐயா,

தங்கள் அனுபவம் ஒரு நீதிக்கதையைப் படித்தது போலிருந்தது.
தங்களின் கடைசி வரிகள் அக்ஷர லக்ஷம் பெறும்.
ஆனால், அதுகூட வேண்டாமே என்றுதான் பிரார்த்திக்கிறேன்.
அவர்கள் திருந்திவிட்டால், பழகின மனிதர் பழையபடி நமக்குக்
கிடைத்துவிடுவாரே !

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

செல்வன்

unread,
Aug 24, 2010, 12:52:05 PM8/24/10
to mint...@googlegroups.com


2010/8/24 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

நான் பணி புரிந்த  அலுவலகத்தில்  நான் என்னுடைய சுய உழைப்பில் , சுய சிந்தனையில் கண்டு பிடித்த ஒரு கருவியை ,மிகத்தந்திரமாக  என்னைக் கழற்றி விட்டுவிட்டு  அவருடைய  பெயரைப் போட்டு   அவர் கண்டு பிடிப்பு மிகவும் உபயோகமான கண்டு பிடிப்பு  என்று   அந்த  நிர்வாகத்தின் ஆண்டு விழா மலரில் அவருடைய  புகைப்படத்தைப் போட்டு  வெளியிட்டார்கள்
 
மனம் நொந்து போய்   நான் ஒரு கவிதை எழுதினேன்
 
புதுமையாய்த் திட்டமிட்டு  புலியை வீழ்த்தினேன்  நான்
புலி மீது  கால் வைத்து  புகைப்படத்தில்   அவன்!
 
என்று
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

அடடா... இந்த மாதிரி ஆட்கள் உலகெங்கும் இருக்கிறார்கள் தேனி ஐயா..அதன்பிறகு அவர் உங்களிடம் மன்னிப்பு கேட்டாலும் இதனால் உங்களுக்கு வந்திருக்கவேண்டிய நியாயமான பெயர்,புகழ் எல்லாம் அவருக்குதானே போய் சேர்ந்தது?எப்படியோ தன் தவறை அவர் உணர்ந்தது தான் இதில் சற்று மகிழ்ச்சியளிக்கும் அம்சம்.

ஆராதி

unread,
Aug 24, 2010, 8:00:55 PM8/24/10
to mint...@googlegroups.com
திரு செல்வன் தயவால் பல பொய் முகங்கள் வெளித்தெரிந்துள்ளன. திரு தேனீயாருக்கு நடந்தது பெரிய கொடுமை. சர்.சி.வி.ராமன் கண்டுபிடிப்பைப் பற்றியும் இப்படி ஒரு தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்குக் கிடைந்த நோபல் பரிசுப் பணத்தை எல்லாம் நிதிநிறுவனக் கம்பனியை நம்பி ஏமாந்தார் என்றும் சொல்வார்கள்.
திரு தேனீ யாரின் உயர்ந்த பண்பு மிகுந்த பாராட்டுக்கு உரியது.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேனும் காத்தல் அரிது
அன்புடன்
ஆராதி

2010/8/24 செல்வன் <hol...@gmail.com>
--

srirangammohanarangan v

unread,
Aug 24, 2010, 8:21:32 PM8/24/10
to mint...@googlegroups.com
இதைப் போன்ற second-handers, looters சைகாலஜி என்ன என்றே புரியாது. இவர்கள்தாம் உலகெங்கு நிறைந்தும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், படைப்பாளர்கள் தங்களுடைய நிலை என்ன என்பதைத் தத்வார்த்தமாக உணர்ந்து சுய விழிப்பு பெறவும் உகந்த நூல்கள் Ayn Rand அவர்கள் எழுதிய நூல்களே. அன்னார் எழுதிய நாவல்கள் Fountainhead, Atlas Shrugged, We The Living, Anthem. கட்டுரைகள், பேச்சுகள் வகை நூல்கள் Philosophy who needs it, The Virtue of Selfishness, The Romantic Manifesto, The Objectivist Epistemology முதலியவை.
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

 

ஆராதி

unread,
Aug 24, 2010, 8:36:15 PM8/24/10
to mint...@googlegroups.com
திரு ஸ்ரீரங்கரே
நீங்கள் குறிப்பிட்ட ஆசிரியர் Alisa Zinovievna Rosenbaum என்னும் பெயர் உடையவர் என நினைக்கிறேன். அவருடைய Anthem நூல் வலைப் பதிவில் கிடைக்கிறது. பிற நூல்களையும் கட்டுரைகளையும் பெற முடியுமா எனப் பார்க்கிறேன்.  அதிலும் குறிப்பாக The Objectivist Epistemology என்பதைப் பார்க்க வேண்டும். எவ்வாறு பெறுவது எனத் தெரிவிக்க வேண்டுகிறேன். நானும் தேடுகிறேன்.


அன்புடன்
ஆராதி

2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Aug 24, 2010, 8:47:30 PM8/24/10
to mint...@googlegroups.com
திரு ஆராதி சார்,
 
இங்கே அவர்களின் தளம் இருக்கிறது. பதிவு செய்துகொள்ளலாம். இலவசப் பதிவு. பதிவான பின் உள்ளே பல கட்டுரைகளும், ஒலிக்கோவைகளும், வீடியோக்களும் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன. 
 

செல்வன்

unread,
Aug 24, 2010, 11:18:46 PM8/24/10
to tamizh...@googlegroups.com, mintamil, பண்புடன்
Rakashankar's write up about Nicholas tesla in tamizamutham group can be found here

Madhurabharathi

unread,
Aug 25, 2010, 4:35:57 AM8/25/10
to mint...@googlegroups.com


2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>

இதைப் போன்ற second-handers, looters சைகாலஜி என்ன என்றே புரியாது. இவர்கள்தாம் உலகெங்கு நிறைந்தும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், படைப்பாளர்கள் தங்களுடைய நிலை என்ன என்பதைத் தத்வார்த்தமாக உணர்ந்து சுய விழிப்பு பெறவும் உகந்த நூல்கள் Ayn Rand அவர்கள் எழுதிய நூல்களே. அன்னார் எழுதிய நாவல்கள் Fountainhead, Atlas Shrugged, We The Living, Anthem. கட்டுரைகள், பேச்சுகள் வகை நூல்கள் Philosophy who needs it, The Virtue of Selfishness, The Romantic Manifesto, The Objectivist Epistemology முதலியவை.
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
மோகனரே,
 
Capitalism: The Unknown Ideal, For the New Intellectual, Philosophy of the Egotist ஆகியவற்றையும் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
இளமையில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் அயர்ன் ராடு :-) (தமிழில் ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி இந்தப் பெயரை எழுதியிருந்தார்).
 
அவருடைய concept of Enlightened Selfishness, மிக அழகானது.
 
1980 என்று நினைக்கிறேன், ஹரி கிருஷ்ணனின் திருமணம் மைசூரில் நடந்தது. நான் Fountainhead நாவலைத்தான் பரிசளித்தேன். அந்தப் புத்தகத்துடனே தூங்கி, அதனுடனே விழித்திருக்கிறேன். கதாநாயகன் Howard Roark என்று நினைவு, அவனது கட்டடக்கலை நிபுணத்துவம், தனித்துவம் மறக்க முடியாதது.
 
சில கருத்துக்கள் பின்னாளில் ஏற்க முடியாதவை ஆகிவிட்டன. "தாமே எதுவும் சாதிக்க முடியாதவர்தாம் வேறொருவரின் புண்ணைத் தடவிக் கொண்டிருப்பார்" என்பதாகச் சேவை செய்பவர்களைப் பற்றி வரும், அதுபோன்றவை என்னை அயன் ரேண்டிடமிருந்து விலக்கின.
 
மற்றவர் புண்ணைத் தடவிக் கொடுக்க மனமில்லாதவர் எத்தனை பெரிய மேதையானாலும் அவருடையது வறட்டு வாழ்க்கைதான் என்று இப்போது நினைக்கிறேன், ஆன்மீகத்தில் மனம் தோய்ந்த பின்னர்.
 
அன்புடன்
மதுரபாரதி

Geetha Sambasivam

unread,
Aug 25, 2010, 4:44:15 AM8/25/10
to mint...@googlegroups.com
மற்றவர் புண்ணைத் தடவிக் கொடுக்க மனமில்லாதவர் எத்தனை பெரிய மேதையானாலும் அவருடையது வறட்டு வாழ்க்கைதான் என்று இப்போது நினைக்கிறேன், ஆன்மீகத்தில் மனம் தோய்ந்த பின்னர்.//

நல்ல கருத்து.

2010/8/25 Madhurabharathi <madhura...@gmail.com>

--
03D.gif

srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 5:59:40 AM8/25/10
to mint...@googlegroups.com
திரு மதுரபாரதி,
 
நாம் நேசிப்பவரின், நமக்கு முக்கியம் எனப்பட்ட சூழ்நிலையில் மற்றவர்க்கு உதவுதல் என்பது அவரவர்களின் விருப்பம். அதில் அயின் ராண்ட் தலையிடவில்லை.
ஆனால் altruism என்பதை மனித வாழ்வின், மனிதரின் செய்கைகளின் மதிப்பிடு standard ஆக ஆக்கும் பொழுதுதான் அவருடைய புலனாய்வு தொடங்குகிறது.
 
சில நாட்களுக்கு முன்னர் திரு கண்ணனும் நானும் ஓரிழையில் வாதிடும்போது, 
‘நம்மை மற்றவர்கள் வெறுக்கிறார்கள் என்னும் போதே அது நாம் இன்னும் பக்குவப்படவில்லை’ என்னும் பொருள்பட ஒரு கருத்து கூறப்பட்டது. தாங்கள் மிகச்சரியாக அப்பொழுது குறுக்கிட்டு ‘இல்லை. நாம் மற்றவரை வெறுக்காமல் இருக்கின்றோமா என்பதுதான் நம்மால் பார்த்துக்கொள்ள முடிந்தது. மற்றவர்கள் நினைப்பதற்கு  அவரவர்களே பொறுப்பு’ என்று நிலைப்படுத்தினீர்கள். அங்குதான் அயின் ராண்டின் தீவிரமான கவன ஈர்ப்பு இருக்கிறது.
 
ஒவ்வொருவரும் அவரவர் எண்ணத்திற்கும், செய்கைக்கும் பொறுப்பாளி.
 
--மற்றவர் அப்படி இருக்கிறார்கள் என்றால் அது உன்னுடைய பக்குவமின்மையை எடுத்துக் காட்டுகிறது -- என்ற வாதம் altruism என்பதின் விஷ நாக்குகளை உடையது.
 
வழிவழியாக வரும் விசாரிக்காத எண்ணப் பழக்கங்களால் நாம் அனைவருமே இத்தகைய vicious thinking habits பலவற்றிற்கு அடிமையாகி இருக்கிறோம். தத்துவம் இவற்றினின்றும் நம்மைக் காக்கும் கவசமாகவும், குணப்படுத்தும் மருந்தாகவும் இயங்குவதிலிருந்து தடக்களவு செய்யப்பட்டு தானே தனக்கு எதிரியாகச் செயல்படும் சுய முரணிற்கு neo-mystics, pseudo-mystics, secular mystics ஆகியோரால் தள்ளப் பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, இந்த அவலத்தைத் தத்துவ ரீதியாகத் தீவிரமாகக் கவனப் படுத்தியதுதான் அயின் ராண்டின் முக்கியப் பங்கு.
 
வேதாந்தம் மிகக் கறாராக இது போன்ற neo-mystics, pseudo-mystics, secular mystics ஆகியோரால் அறிவு நெறியில் புகுத்தப்படும் நச்சு அம்சங்களைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. 
 
எப்படி இத்தகைய அம்சங்கள் நம் சிந்தனைகளில் ஊடுருவுகின்றன என்பதற்கு உதாரணங்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால் 
 
மகாத்மா காந்தி உலக நிகழ்ச்சி ஒன்றில் எதிரான விளைவிற்குத் தான் சரியாக பிரம்மசர்யம் காக்கத் தவறியதே காரணம் என்று சொன்னார் எனப் படித்த நினைவு. மிகப் பெரியவர், மிகச் சாதாரணமானவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் இதற்குப் பலியாகி இருக்கிறோம் என்பதற்காகக் கூறினேன்.
 
இந்தவிதமான mystics அனைவருக்குமே முதல் எதிரி மனிதனின் அறிவு. அதை முதலில் அடித்துக் க்ளோஸ் செய்தால்தான் அவர்கள் சொல்லவரும் மற்ற பொருந்தாத கருத்துக் கதம்பத்தை மக்களிடம் கொடுக்கமுடியும்.
 
நீங்கள் பிறர் நலம் விழைதல் உங்கள் விருப்பம். அதற்கான தொண்டில் நீங்கள் ஆத்ம திருப்தி கண்டால் அது முற்றிலும் உங்கள் சொந்த விஷயம். அதில் அயின் ராண்டின் விமர்சனம் எதுவும் இல்லை.
 
ஆனால் உங்கள் சுய நலத்தையும் விட்டு, உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், பிறரின் நன்மைதான் ச்ரேஷ்டமானது, உங்கள் நன்மை என்பது ஈனத்தனமானது, நீங்கள் உங்களுக்கு முக்கியம் என்று கருதும் அனைத்தும் பிறர் நலம் விழைதல் என்பதன் முன் துச்சம் என்றபடியான ஜீவனின் இயல்புக்கு விரோதமான போலி அறநெறிக்கு நீங்கள் ஆட்படும் போதுதான் தத்துவ ரீதியாக எங்கோ ஏமாற்று வேலை நட்ந்திருக்கிறது என்று அயின் ராண்டின் புலனாய்வு தொடங்குகிறது. 
 
உங்களுக்கு அவர்களின் எண்ணங்களில் ஆர்வம் என்றதால் இவ்வளவும் பேச உற்சாகம் ஏற்பட்டது. ஆனால் அறிவு நெறி என்பதற்கான தத்துவ ரீதியான ஆழ்ந்த நிரூபணம் அவர்கள் அளித்த பெரும் கொடை நம்காலத்தில் என்று கருதுகிறேன். 
 
மற்றபடி தொடக்கம் முதலே அவருடைய கருத்துகளைத் தீவிர விமரிசனத்திற்கும், அறிவு செறிந்த அணுகுமுறைக்கும் ஆட்படுத்தியே நாம் கற்க வேண்டும். hero-worship என்பதற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன் 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

 

--

Raja sankar

unread,
Aug 25, 2010, 6:57:58 AM8/25/10
to mint...@googlegroups.com
ஒவ்வொருவரும் மற்றவருக்கு துன்பம் தராமல் இருந்தாலே போதும் இன்பம் தரவேண்டியதில்லை என்றே அயன்ராண்டின் கருத்துக்களை புரிந்து கொண்டிருக்கிறேன். 

மற்றவரை காப்பாற்றுகிறேன், சோறு போடுகிறேன் என்று கோதாவில் இறங்குவது இறுதியில் ஆபத்திலே முடியும். 

மேலும் அடுத்தவர் புண்ணை தடவிக்கொடுக்கவேண்டிய அவசிமில்லை. அவரை அடுத்த வேலை பார்க்க உதவினாலே போதும். ஒரு வியாபாரத்தில் நட்டம் வந்துவிட்டால் வீட்டில் உட்கார்ந்து அழவா வேண்டும்? அடுத்த வேலை பார்க்க போனாலே போதும். 

அடுத்தவருக்கு உதவுகிறேன், தூக்கி நிறுத்துகிறேன் என்பதெல்லாம் அகங்காரம். 

Atlas shrugged நாவலில் நிறைய இடங்களில் உதவி செய்வதையே கண்டித்து வரும். உதவியாக பணமோ பொருளோ தேவையில்லை, கடனாக கொடு வாங்குபவர் அதை கொண்டு உழைத்து சம்பாதித்து பின் வட்டியுடன் திருப்பி தரட்டும் என்பதாக வரும். பிச்சை போடுவதற்கு பதிலாக இப்படி தரும் பணமே சிறந்தது


ராஜசங்கர்

2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Madhurabharathi

unread,
Aug 25, 2010, 6:59:19 AM8/25/10
to mint...@googlegroups.com
2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>
திரு மதுரபாரதி,
 
மகாத்மா காந்தி உலக நிகழ்ச்சி ஒன்றில் எதிரான விளைவிற்குத் தான் சரியாக பிரம்மசர்யம் காக்கத் தவறியதே காரணம் என்று சொன்னார் எனப் படித்த நினைவு. மிகப் பெரியவர், மிகச் சாதாரணமானவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் இதற்குப் பலியாகி இருக்கிறோம் என்பதற்காகக் கூறினேன்.
 
 
உண்மைதான். அவரது தந்தையார் மரணமடைந்த அந்த நேரத்தில் அவர் மனைவியுடன் படுக்கையில் இருந்தார். அவர் வேறு ஏதாவது பணியில் இருந்திருந்தாலும் அவருடைய தந்தையார் மரணத்தைத் தவிர்த்திருக்க முடியாது. ஆனாலும் அவர் அந்தப் பழியைத் தனது காம இச்சையின் மேல் போட்டார்.
 
ஒருநாள் நிறையக் சிரித்தால் அடுத்து அழ வேண்டிய நிர்பந்தம் வரும் என்று நினைப்பவர்களை நான் பார்த்து ஆச்சரியப் பட்டதுண்டு. சிரிக்கும் போதே ஒரு குற்றவுணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். இவையெல்லாம் நீங்கள் கூறியது போல எந்தக் காரிய காரணத்துக்கும் தொடர்பு இல்லாத, வெறும் தனிமனித நம்பிக்கை சார்ந்தவை. ஆனால் அவற்றைக் கடைப் பிடிப்பவர்கள் எதோ ஒரு பிரபஞ்ச விதிக்குக் கட்டுப்படுவது போலப் பேசுவார்கள்.
 
அயன் ரேண்ட என்ன சொன்னாரோ இல்லையோ, இந்தப் பரிமாற்றங்கள் நம்மைத் தெளிவுபடுத்துகின்றன. :-)

srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 7:21:46 AM8/25/10
to mint...@googlegroups.com
திரு ராஜசங்கர்,
 
நாவல்களையும், அவரது நாவல் அல்லாத நூல்களையும் ஒருங்கு வைத்துப் பார்த்தால் சில தெளிவுகளைப் பெற முடியும்.
 
ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்ய விரும்புவது என்பதையே அவர் கண்டித்தார் எனக் கொள்வது சரியில்லை. நாவல்களில் வரும் கட்டங்கள் அதன் பாத்திரங்களின் உருவாக்கம், நாவல் சொல்ல வந்த நோக்கம் முதலியவற்றால் ஆளப்படுவது. அதில் ஒரு பாத்திரம் ஒரு கட்டத்தில் அவ்வாறு பேசியே இருக்கவும் கூடும். ஆனால் அது பொதுக் கருத்தாக அந்தச் சூழ்நிலைக்குப் புறம்பட கொள்ள முடியுமா? 
 
அவ்வாறு கொள்ள வேண்டுமெனில் மற்ற நூல்கள், நேரடி விவாதங்கள், சந்தேக விளக்கங்கள்  முதலியவற்றையும் வைத்தே முடிவுக்கு வர இயலும் அல்லவா?
:--)

 

Raja sankar

unread,
Aug 25, 2010, 7:26:19 AM8/25/10
to mint...@googlegroups.com
ஐயா
நீங்கள் சொல்வதில் முழுவதும் உடன் படுகிறேன். பிச்சை என்பதை விட கடன் மிக மேலாது என்றே அவர் சொல்லவருகிறார் என்று ஊகிக்கிறேன். ஒரு ரூபாய் பிச்சையிடுவது சுலபம். புண்ணியமும் சேர்ந்துவிடுகிறது. ஆனால் அப்படி பிச்சை எடுக்கும் நபர் திறமை கருத்தில் கொண்டு அவர் செய்யும் வேலையை நம்பி கடன் தருவது கடினம். மனமும் வராது. 

இது சரிதானே. 

srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 7:45:16 AM8/25/10
to mint...@googlegroups.com
திரு ராஜசங்கர்,
 
தங்களுடைய கவனத்திற்கு Atlas Shrugged என்னும் நூலில் John Galt's speech என்னும் தத்துவ பிரகடனப் பகுதியிலிருந்து சில:--
 
"The word that has destroyed you is 'sacrifice'. Use the last of your strength to understand its meaning. You're still alive. You have a chance. 
 
'Sacrifice' does not mean the rejection of the worthless, but of the precious.
.............................
..........................
 
If you give money to help a friend, it is not a sacrifice; if you give it to a worthless stranger, it is. If you give your friend a sum you can afford, it is not a sacrifice;if you give money at the cost of your discomfort, it is only a partial value, according to this set of moral standard; if you give him money at the cost of disaster to yourself - that is the virtue of sacrifice in full.
 
If you renounce all personal desires and dedicate your life to those you love, you do not acieve full virtue; you still retain a value of your own, which is your love. If you devote your life to random strangers, it is an act of greater virtue. If you devote your life to serving men you hate -- that is the greatest of the virtues you can practice.
 
A sacrifice is a surrender of a value. Full sacrifice is full surrender of all values."
 
(pp 1027-1028, Atlas Shrugged, Ayn Rand, A Plume Book, January 2005 )

 

Geetha Sambasivam

unread,
Aug 25, 2010, 8:41:00 AM8/25/10
to mint...@googlegroups.com
நல்லதொரு பகிர்வு. நன்றி அனைவருக்குமே
Reply all
Reply to author
Forward
0 new messages