this is karthikeyan i have created new website for TAMIL free e-books
you can download free books
there is more than 50 books and rare tamil videos
http://www.karthikeyanp.info/blog/TamilEbooks.html
by click above link you will free tamil books.
regards
karthi
I presume you are really interested in e-preserving Tamil works in
Digital Media. However, you have attempted a non-professional method
in doing so. You have taken the E-books from Project Madurai and
placed them in your server, without acknowledging the original source
in your Blog. Your "Further Links" column reveal your intention. You
want traffic to your blog and earn some money from others work through
Google Adsense. Don't you think it is cheating? I am sorry, you may
like to share your revenue with Project Madurai. If so, then it will
be considered Evangelism. But even then, it is only right to
acknowledge Project Madurai in your blog.
Do you know that hundreds of volunteers spend their own time in keying
in those rare Tamil works. Most of them are professionals and 'time is
money' for them. They sacrifice their time (=money) for a good cause.
Is it not right on our part in stealing their money for making further
profit.
I am sure, you have time and enthusiasm. Please join us in
strengthening the Tamil Digital Efforts. If you don't know how to
start, let us help you. We need more helping hands and not those that
weaken our efforts.
Yours truly,
N.Kannan
ம்ம்ம். வசதி வேண்டி வகைப் படுத்தியிருக்கிறார். குறையொன்றுமில்லை.
மதுரைத் திட்டத்தைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்லுங்கள் எனச்
சொல்லியிருக்கலாம். அவர் மறுத்திருந்தால் ஏனையவற்றை சொல்லியிருக்கலாம்.
சில சமயங்களில் இப்படி நேர்வதுண்டு.
> Most of them are professionals and 'time is
> money' for them. They sacrifice their time (=money) for a good cause.
> Is it not right on our part in stealing their money for making further
> profit.
நிச்சயமாக. ஆனால் ஒருவரது உழைப்பு எப்போது முழுமையாக அனைவரையும் போய்
சேருகிறது? அவர் அவ்வுழைப்பில் உரிமை கோருகிற போது அதற்குத் தடை
ஏற்படுகிறது.
பலருக்கு போய்ச் சேர வேண்டுமானால் பலரின் ஒத்துழைப்புத் தேவை. நாங்கள்
உருவாக்கினோம். நாங்கள் தான் எடுத்துச் செல்வோம் எனச் சொன்னால்
ஒருவிதத்தில் தடை தான்.
எங்கள் உழைப்புக்குத் தலை வணங்கி தாராளமாக எடுத்துச் செல்லுங்கள் எனச்
சொல்லுங்கள்! நல்ல காரியம் தானே! பொருளீட்டுவதிலும் பெரியத்
தவறொன்றுமில்லை.
அதில் அர்த்தம் இருக்கிறது. உங்களின் உழைப்பு உலகறிந்ததாக வாய்ப்புகள்
இன்னும் பிரகாசமாகும்.
எல்லாத்தையும் அச்சுக்கேத்த அச்சாணியா இருந்த உ.வே.சா இது விஷயமா
ஏதாச்சும் சொல்லியிருந்தா யாராச்சும் சொல்லுங்களேன்?
அவர் தானே ஒரு விதத்தில மதுரைத் திட்டத்துக்கு முன்னோடி? ஒரு விதத்துல
அவர் அச்சுக்கு கொண்டுவந்ததை ஆன்லைன் செய்யறோம். அதானே விஷயம்.
பி.கு: பதிப்புரிமை என்பது நமக்குப் பொருந்தாத விஷயம். படைப் பாளியின்
உழைப்புக்கு தலைவணங்கி தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆண்டாளின்
பாசுரங்களைப் பயன்படுத்த அவளிடம் நான் எப்போது அனுமதி வாங்கினேன்.. அது
ஆண்டாளுடையது என்பதைத் தவறாது சொல்லியே சொல்கிறேன்.. அப்படிதானே
மற்றவையும்... அச்சுத் துறை வந்ததன் பக்க விளைவோ? அதுக்கு முன்னாடி இது
இல்லைன்னு நினைக்கறேன்...
நன்றி..
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
உணமை இப்படி இருக்கும் போது என் ஆதங்கத்தில் குறை காணுகிறீர்களே! ஏன் ஒரு
கடிதத்தின் அடிநாதத்தை விட்டு வேறொரு கோணத்தில் சம்பாஷிக்க வேண்டும்.
> >>
> எல்லாத்தையும் அச்சுக்கேத்த அச்சாணியா இருந்த உ.வே.சா இது விஷயமா
> ஏதாச்சும் சொல்லியிருந்தா யாராச்சும் சொல்லுங்களேன்?
>
> அவர் தானே ஒரு விதத்தில மதுரைத் திட்டத்துக்கு முன்னோடி? ஒரு விதத்துல
> அவர் அச்சுக்கு கொண்டுவந்ததை ஆன்லைன் செய்யறோம். அதானே விஷயம்.
> >>
ஒருவகையில் சரி. ஆனால் முழுவதும் அப்படி இல்லை. உ.வே.சா பதிப்பிக்காத
பல்வேறு விஷயங்கள் இன்னும் உள்ளன. அவை எல்லாவற்றையும் பதிப்பாக்க
வேண்டும்.
> பி.கு: பதிப்புரிமை என்பது நமக்குப் பொருந்தாத விஷயம். படைப் பாளியின்
> உழைப்புக்கு தலைவணங்கி தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆண்டாளின்
> பாசுரங்களைப் பயன்படுத்த அவளிடம் நான் எப்போது அனுமதி வாங்கினேன்.. அது
> ஆண்டாளுடையது என்பதைத் தவறாது சொல்லியே சொல்கிறேன்.. அப்படிதானே
> மற்றவையும்... அச்சுத் துறை வந்ததன் பக்க விளைவோ? அதுக்கு முன்னாடி இது
> இல்லைன்னு நினைக்கறேன்...
>
மேலும், இலவசமாக விநியோகிக்கப்படும் ஒரு பொருளை (மதுரைத்திட்டம்)
ஆதயத்திற்கு பயன் படுத்துவது (இன்னொருவரும் செய்து கொண்டு இருக்கிறார்)
எந்த தர்மத்தில் அநுமதிக்கப்படுகிறது என்று தெரியவில்லை! பதிப்புரிமை
தமிழர்களுக்குத் தெரியாதது என்பது உண்மை. ஆனால் நாம் உலகமயமாகிவரும்
நூற்றாண்டில் இருக்கிறோம். நமது பாசுமதி அரிசியை அமெரிக்காக்காரன்
பதிப்புரிமை செய்கிறான். நாளை நாம் சாப்பிடும் பிரியாணி, அவனைக்
கேட்டுக்கொண்டு சாப்பிட நிகழலாம் (அதாவது அவர்களுக்கு காப்புரிமை காசு
கொடுத்துவிட்டு). இதையும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள் போலும்!
இந்தப் பேச்சு எதுவுமே "நன்றி" என்ற ஒரு வார்த்தை சொல்லாததால் வருகிறது.
எளிய வழி இருக்க தமிழர்கள் சுற்றி வளைப்பதே வழியாகப் போய் விட்டது!!
கண்ணன்
மற்றவை.. இத்தறிக்கு அப்பால்...