சங்கத்தமிழ் நாள்காட்டி:சங்க இலக்கியப்பாடல்கள் — விளக்கங்கள் ஓவியங்களுடன்

26 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 31, 2025, 7:53:14 PM (5 days ago) Aug 31
to மின்தமிழ்

Screenshot 2025-09-01.jpg

ஆநிரைகளோடு வரும் யானைக் கன்றுகள்

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனில் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
நிலம்செல, செல்லாக் கயந்தலைக் குழவி
சேரிஅம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும்! (நற். 171:1-5)
        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
நீர் வேட்கை கொண்ட யானைகள்,
வெயில் காலத்தில் மலையடிவாரத்தை நோக்கி  
நெடுந்தொலைவு செல்லும். அவற்றோடு செல்ல முடியாத
மெல்லிய தலையையுடைய யானைக்கன்றுகள், நின்று விடும்.
அவை, பசுவின் கன்றுகளோடு சேர்ந்து ஊருக்குள் புகும்.
இதனைக் கண்டு, சேரியில் வாழும் அழகிய பெண்கள் அஞ்சுவர்.

The elephant herd that grieves of acute thirst,
Walks into the foothills seeking water,
While its soft-headed calves
Enter a hamlet along with the calves of the cows,
To the fright of the village women.

தேமொழி

unread,
Sep 1, 2025, 11:42:53 PM (4 days ago) Sep 1
to மின்தமிழ்
Screenshot 2025-09-02.jpg

என் உடன்பிறந்தவள் இந்தப் புன்னை

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம்! துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப,
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும், என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே!
அம்ம, நாணுதும் நும்மொடு நகையே! (நற். 172:1-6)

        பெயர் அறியப்படாத புலவர்

பொருள்:
நண்பர்களுடன் விளையாடிய போது, நாங்கள் மணலில் அழுத்தி
வைத்த புன்னை விதை முளைத்து வந்தது. அதற்கு
நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தோம். அது எங்களால்
வளர்க்கப்பட்டதால் 'உங்கள் தங்கை போல் ஆகும்' என்று
தாய் கூறினார். தங்கை போன்ற இந்தப் புன்னை மரத்தின்
நிழலில் உன்னுடன் நகைத்து மகிழ்வதற்குத் தலைவி வெட்கப்படுகிறாள்.

While playing, we pressed a mature punnai seed
Into the white sand and forgot all about it.
The seed sprouted forth and we nourished it into a tree.
Our mother said, "This tree is your younger sister";
And so, she (Heroine) feels shy to laugh and play with you
Under this tree.

தேமொழி

unread,
Sep 2, 2025, 9:01:37 PM (3 days ago) Sep 2
to மின்தமிழ்
Screenshot 2025-09-03.jpg
மடல் ஏறுதல்

சிறுமணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல்மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்! (நற். 220:1-4)
        குண்டுகட் பாலியாதனார்

பொருள்:
பனை மடலால் குதிரை செய்து, அதற்கு மேலாடை அணிவித்து,
சிறிய மணிகளைக் கழுத்தில் கட்டினார்கள். அதன்மேல்
எருக்கம்பூ மாலையைச் சூடிய தலைவன்,
உணவு உண்ணாத அக்குதிரையின் மேல் ஏறி உட்கார்ந்தான்.
அக்குதிரையைச் சிறுவர்கள், தெருவில் இழுத்துக்கொண்டு வருகின்றனர்.

I am now mounted on a horse
Wrought of palmyra stems, and decked with a wreath
Of small bells and a piece of cloth.
I am wearing a garland of the tiny blooms of the erukkam.
The young boys follow me through the streets.

தேமொழி

unread,
Sep 3, 2025, 9:34:42 PM (2 days ago) Sep 3
to மின்தமிழ்
Screenshot 2025-09-04.jpg

என்ன வியப்பு!

ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின் உள்நோய் மல்கும்!
புல்லின் மாய்வது எவன்கொல்? அன்னாய்! (குறுந். 150:3-5)
          மாடலூர் கிழார்

பொருள்:
தோழியே! மலைநாட்டைச் சேர்ந்த தலைவனின் சந்தனம் பூசிய
மார்பினை நினைத்தால், காதல் நோய் பெருகுகிறது.
அம்மார்பை அணைத்தால், அந்நோய் தீருகிறது. என்ன வியப்பு!

If I think of the sandal painted chest
Of my Lord of the rising hills, my love sickness grows;
On embracing that chest it vanishes; What sorcery is this?

தேமொழி

unread,
Sep 4, 2025, 8:30:24 PM (23 hours ago) Sep 4
to மின்தமிழ்
Screenshot 2025-09-05.jpg
அவனோடு இருப்பதே இன்பம்

தண்கடல் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை
நாரை, நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே! (குறுந். 166)
                கூடலூர் கிழார்

பொருள்:
மரந்தை என்னும் ஊருக்கு அருகில்,
குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மீன்களை நகர்த்தின.
அயிரைமீன்களுக்காக அங்குத் திரிந்துகொண்டிருந்த
நாரைகள், மீன்கள் நகரும் திசையை நோக்கி நகர்ந்தன. அதைப் போல்,
தலைவனுடன் சென்று அவனுடன் இருப்பதே இன்பம் தருகிறது.
அவனைப் பிரிந்து இருப்பது மிகவும் வருந்தச் செய்கிறது.

As cool waves of the sea displace fish in backwaters
Flocks of stork too move where the fish moved;
Such pleasant town is Marandhai when I'm with him,
But when I'm alone it causes me anguish.
Reply all
Reply to author
Forward
0 new messages