எனது அடுத்த தொடரடைவு

46 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jul 28, 2025, 5:37:14 AMJul 28
to மின்தமிழ்

எனது அடுத்த தொடரடைவு -- திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு – (முனைவர் வ.ஜெயதேவன் அவர்களுக்கு – நன்றியுடன்)

இது 751 நூற்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு நூற்பாவும் நான்கு அடிகளைக் கொண்ட செய்யுளால் ஆனது.

இதற்குரிய மூலநூலாக, வையாபுரிப்பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் மட்டும் இணையதளத்தில் இருக்கிறது. அது மரபு வடிவில் சந்தி பிரிப்பு முறையில் இருக்கிறது. 3004 அடிகளில் ஏறக்குறைய 2 இலட்சம் சொற்கள். அவற்றைச் சொற்களாகப் பிரிப்பதற்குள் விழி பிதுங்கிவிட்டது. எனது இருபதாண்டு தொடரடைவு உருவாக்க அனுபத்தில் இத்துணை கடினமான பணியை நான் மேற்கொண்டதில்லை.

பொதுவாக சொற்பிரிப்பு முறையில் இல்லாத எந்த நூலையும் தொடரடைவு உருவாக்கத்துக்கு நான் எடுத்துக்கொள்வதில்லை. குறைந்தபட்சம் உரையாவது கிடைக்கவேண்டும். இணையதளத்தில் இல்லாவிட்டால் புத்தக வடிவில் கிடைத்தாலும் போதும். என்ன விலைகொடுத்தும் வாங்கிவிடுவேன். ஆனால் இந்த நூலுக்கு அப்படி ஒன்றும் சிக்கவில்லை.

என் அத்தை அடிக்கடி சொல்வார்கள். “தோசையத் திங்கச் சொன்னோமா, தொளைய எண்ணச் சொன்னோமா” என்று.

சொற்களாகப் பிரிக்கப்பட்ட நூலில் இருக்கும் சொற்களுக்குத் தொடரடைவு உருவாக்குவது என் வேலை.

சீர்களாக இருக்கும் நூலில் சொற்களைப் பிரிப்பது என் வேலை அல்ல.

இதற்கு முன்னர் கயாதரம் என்ற நூலுக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஆனால் தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடு ஒன்றில் கயாதரத்தின் சொற்கள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த அரும்பொருள்விளக்க நிகண்டுவுக்கு அப்படியொன்றாவது கிட்டவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் முனைந்து இப்பணியில் இறங்கிவிட்டேன். அவ்வப்போது ஏற்பட்ட இடற்பாடுகளைத் தனியாகக் குறித்துவைத்துக்கொண்டு, தொடர்ந்து சொற்பிரிப்பு செய்து முடித்தேன். இதை முடிக்க எனக்கு நாற்பது நாள்களுக்கும் மேல் ஆயின.

இப்போது இரண்டு சிக்கல்கள்.

1.   நாம் சொற்பிரிப்பு செய்தது சரிதானா?

பொதுவாக, தொடரடைவுகளோடு அந்த நூலையும் முழுமையாகக் கொடுப்பது என் வழக்கம். அது சொற்பிரிப்பு முறையில் இருக்கும். இப்போது இதனுடன் சீர்பிரிப்பு மூலத்தையும் கொடுத்தால், இரண்டையும் பார்ப்பவர்கள் என் சொற்பிரிப்பு முறையில் தவறு இருந்தால் , அவர்கள் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே இம்முறை முழுநூலையும், சொற்பிரிப்பு, சீர்பிரிப்பு என்ற இரு முறைகளிலும் கொடுத்திருக்கிறேன்.

2.   குறித்துவைத்திருக்கும் இடற்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது?

முதலில் அந்த இடற்பாடுகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக ஆய்ந்தேன். எனக்குத் தெரிந்த இணையவழி அகராதிகளைக் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள முயன்றேன். பலவற்றில் தீர்வுகள் கிடைத்தன.

இறுதியில் ஒரு பதினோரு இடங்கள் மிஞ்சின. என்னைத் தூங்கவிடாமற்செய்தன.

இலக்கிய இலக்கண நூல்களில் ஐயம் என்றால் எனக்கு உதவிட சில நண்பர்கள் உண்டு. இதுவோ நிகண்டு. யாரை அணுகலாம் என்று யோசித்தபோது எனக்கு நினைவுக்கு வந்தவர் முனைவர் வ.ஜெயதேவன் அவர்கள். எனக்குப் பழக்கமில்லை. என்னுடைய முகநூல் பதிவுகளைப் பாராட்டி சிலசமயம் எழுதுவார். அண்மையில் இங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. சிறிதுநேரம் உரையாடிக்கொண்டோம். அவ்வளவுதான். அதைவைத்து அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அவரும் உடனே அனுப்புங்கள் என்றார். மிக அருமையான விளக்கங்களுடன் அத்தனை ஐயங்களையும் தீர்த்துவைத்தார்.

இந்த ஐயங்கள் தீரும் முன்னர், இருக்கிற சொற்பிரிப்புக்குத் தொடரடைவுகள் உருவாக்கிவிட்டேன். அவருடைய தீர்வுகள் கிடைத்த பின்னர் அத்தொடரடைவுகளில் தேவையான மாற்றங்கள் செய்து இன்று மதியம் அதனை என் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டேன். முனைவர் வ.ஜெயதேவன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரும்பொருள்விளக்க நிகண்டு என்ற இந்நூலுக்குரிய தொடரடைவினை எனது tamilconcordance.in என்ற இணையதளத்தில், தொடரடைவுகள் - > நிகண்டுகள் - >  அரும்பொருள்விளக்க நிகண்டு என்று சொடுக்கினால் பெறலாம்.

மீண்டும் அடுத்த தொடரடைவுச் செய்தியுடன் சந்திக்கிறேன்.

அன்புடன்,

ப.பாண்டியராஜா

   

   

 

தேமொழி

unread,
Jul 28, 2025, 9:21:00 PMJul 28
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா. உங்கள் தொடர் முயற்சியைக் கண்டு பலரும் ஊக்கம் பெறுவார்கள் என்று எண்ணுகிறேன். 
அன்புடன் 
தேமொழி 

சக்திவேலு கந்தசாமி

unread,
Jul 29, 2025, 1:48:40 AMJul 29
to mint...@googlegroups.com
'மெய் வருத்தம் பாராமல்.....கருமமே கண்ணாக.."  தமிழை காக்கும் பணி.  தங்களை தலைதாழ்த்தி வணங்குகிறோம்.  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/acc3d7d2-65c9-4de9-bcd0-f8220a76c4b7n%40googlegroups.com.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 27, 2025, 9:54:14 AM (9 days ago) Aug 27
to மின்தமிழ்
  உங்களின் அரு முயற்சிக்குப் பாராட்ங.

அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com


Reply all
Reply to author
Forward
0 new messages