அவர்தாம் பெரியார் - பார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில் (அவர்தாம்)
மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப்பெரும்படையின்தொகுப்பு (அவர்தாம்)
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் (அவர்தாம்)
தமிழைப் பழித்த பெரியாருக்கு புரட்சிக்கவிஞர் தந்த பதிலடி!
தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த அவர்கள்
'தமிழில் ஏதுளது' என்று சாற்றுவர்.தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
'தமிழால் பயன் ஏது?" என்று சொன்னார்.தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
ம.பொ.சி. எழுதிய 'எனது பார்வையில் பாவேந்தர்' நூலிலிருந்து.(1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்கள் உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். அதற்கு காமராசரும், பெரியாரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை ஆதரித்துப் பேசிய ம.பொ.சி.யை பெரியார் 'தாய்ப்பால் பைத்தியம்' என்று பட்டம் சூட்டி அழைத்தார். இதற்கு பதிலடியாக ம.பொ.சி. 'பரங்கிமொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்' என்று கட்டுரை தீட்டினார். அப்போது பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பாரதிதாசன் வாளாவிருக்க வில்லை. தமிழைப் பழித்தும் ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தும் பேசி வந்த பெரியாரை துணிச்சலாக தனது எழுதுகோல் ஈட்டி கொண்டு தாக்கினார். அப்போது எழுதியது தான் மேற்கண்ட கவிதையாகும்.)
நன்றி : Kathir Nilavan.
சித்தரே,நான் எந்த சாதியையும், சமயத்தையும் பழிப்பவனல்லன் என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, நான் கேட்கும் கேள்விகளை அவ்வாறே எடுத்துக்கொண்டு பதிலளிக்கவேண்டுகிறேன்.தாங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் 3% உள்ள பிராமணர்களை "ஆரியர்" என்றும், 15% உள்ள வேளாளரை "திராவிடர்கள்" என்றும், மற்ற 82% மக்களை கலப்பு-நாகா என்றும் குறிப்பிடுகிறது.தங்களது இன்னொரு பட்டியல் [மரபணு ஆராய்ச்சி மூலம் கொடுக்கப்பட்டது] தமிழகத்தில் இருக்கும் அனைவரின் மரபணுக்களை ஒன்றே என்கிறது.நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்குத் தகுந்த விளக்கம் அளித்து, எனது குழப்பத்தை த்தீர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவை சித்தருக்கு மட்டும் வைக்கப்பட்ட கேள்விகள் அல்ல. எவரும் தங்கள் கருத்துக்களை பதியலாம்.
- அதன்படி பார்த்தால் பிராமணர்கள் "ஆரியர்கள்" என்ற தனி இனம் அல்லர்
- வேளாளர்கள் "திராவிடர்கள்" என்ற தனி இனம் அல்லர்.
- கலப்பு-நாகாக்களும் தனி இனம் அல்லர்.
- சென்னை இராஜதானியில் வசிக்கும், வெல்வேறு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட ஒரே இனத்தவர்.
- எனவே, தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் எவரும் -- அவர்களின் முன்னோர் தமிழைத் தாய்மொழியாகப் பேசியிருக்காவிட்டாலும் -- தமிழரே என்றே நான் எண்ணுகிறேன்.
- அதுபோல, தமிழ்நாடு மாநிலத்தில் வசித்துவரும், தமிழத் தாய்மொழியாகப் பேசாதவரும் தமிழ்நாட்டு மக்களே, அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்றும் எண்ணுகிறேன். [சான்று: ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப்பேசாத நான் அமெரிக்கக் குடிமகன்தான்; எனக்கு இங்கு எல்லா உரிமைகளும் உண்டு. யாரும் என்னை அமெரிக்காவைவிட்டு வெளியேறச்சொல்ல இயலாது -- அமெரிக்க அரசாலும்கூட]
- எனவே, ஆரியர், திராவிடர், கலப்பு-நாகர் என்று பிரித்தது, பிரித்தாளும் ஆங்கிலேயரின் சூழ்ச்சி எனலாமா?
- அச்சூழ்ச்சிப்படுகுழிக்குள் விழுந்துபட்டவர்கள் என் இன்னும் அக்குழியிலிருந்து எழாமல் "ஆரிய-திராவிட' மாயையில் இருக்கிறார்கள்?
- நன்கு சிந்திக்கத்தெரிந்த ஈ.வே.ராவும் அக்குழியில் ஏன் வீழ்ந்தார்?
- அவரைப் பின்பற்றிய அண்ணாவும் ஏன் கண்ணைத் திறந்துகொண்டே ஈ.வெ.ராவைப் பின்பற்றினார்?
- அன்று அவர்கள் எடுத்தாண்ட "திராவிட" அரசியல்தான் இன்னும் தமிழநாட்டை - தமிழரை - தமிழ்நாட்டுக்கு குடிமக்களைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது?
- சாதியைப்போல, வடுகர் என்று குறிப்பதும் ஒரு மொழியைப் பேசுபவர்களைக் குறிக்கும் அடையாளமாக இருக்கலாம் அல்லவா?
- சாதி ஒழிக என்று சொல்லிக்கொண்டு சாதி அரசியல் செய்பவர்களும், ஒருவர்மேல் பொய்யான அடையாளத்தைக் கொடுத்து [ஆரியன், திராவிடன், வடுகன், தனித்தமிழன், தலித்] சாதி, இன அரசியல் [பிரித்தாண்ட பிரித்தானியரைப்போல] செய்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? அதை ஏன் தமிழர்கள் பலரும் பின்பற்றுகிறார்கள்?
இணையம் - அதாவது ஆங்கில இன்டெர்நெட் - தோன்றிய நாளிலிருந்து எழுதிவருகிறேன், ஒரு 30 ஆயிரம் மடல்கள் தேறும்.பல ஜாதிக் குறிப்புகள் நம் செம்மொழிகள் இரண்டின் இலக்கியங்களால் தெளிவாகின்றன. பேராசிரியர்கள் (உ-ம்: உவேசா)எழுதியன கொடுத்துள்ளேன். உங்கள் பல கேள்விகளுக்கு விரிவாக பதில் என் மடல்களில் இருக்கின்றன.ஆரியர் வருகை கி.மு. 1700 எனக் கொண்டால், ரிலிஜன் போன்றவற்றால் எப்படி த்ராவிட பாஷைகள் தன்னிலை இழந்துவடக்கே ஆரிய பாஷைகள் ஆகின என்பதற்கு ஆதாரமாக, வடமொழிகளில் த்ராவிடச் சொற்கள் - உ-ம்: in fauna & flora -இன்னும் ஆழமாக ஆராயப்படவில்லை எனக் காட்டிவருகிறேன். பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
The OIT has been upheld mostly in one country for a few decades by a few scholars without any political power.
By contrast, the AIT has been used politically for some 160 years by major state actors such as the British empire and Nazi Germany, and in India by Jawaharlal Nehru, the Ambedkarites (though BR Ambedkar himself emphatically rejected it), the Dravidianists, the missionaries and of course the secularists.
If you don’t like the mixing of scholarship with politics, you should first of all lambast the AIT.