Saba Rathinam is
with தே மொ ழி.
நூல் அறிமுகம்:
""ஆவணியே ஆதி ""
இந்த நூலின் ஆசிரியர் முடிவுரையில் சொன்னதை, நான் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். "இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பரிந்துரைப்பது இந்த நூலின் நோக்கம் அன்று.
முழுக்க முழுக்க ஆராய்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையில் ஆவணி மாதமே, தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதை எடுத் துரைக்கின்றார். சித்திரை, மற்றும் தை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத வேளையில்
ஆவணி என்பதற்கு உண்டான ஆதாரங்களை உரை க்கிறார்.
கார்காலம் -- ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் --ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக் காலம் --மார்கழி, தை
பின் பனி க்காலம் -- மாசி, பங்குனி
இள வேனில் காலம் -- சித்திரை, வைகாசி
முதுவேனில் காலம்--ஆனி, ஆடி.
""காரே, கூதிர், முன்பனி, பின்பனி,
(சீர் ) இளவேனில், முது வேனில் ( என்று ஆங்கு )
இரு மூன்று வகைப்பருவம். அவைதா ம்
ஆவணி முதலா இரண்டு இரண்டாக
மேவினர் திங்கள் எண்ணினர் கொளலே ""
10 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட சேந்தன் திவாகரம் எனும் திவாகர நிகண்டுப் பாடல் இது. இதைத் தொடர்ந்து வந்த பிங்கல நிகண்டும் இதையே உணர்த்துகிறது.
வடமொழியில் ""வர்ஷ"" என்ற சொல்
ஆண்டு என்பதையும், மழை என்பதையும் குறிக்கிறது.
மழையும் ஆண்டும் துவங்குவது ஆவணியில் தானே!!
இவற்றிக்கெல்லாம் பிந்தைய, 16 ம் நூற்றாண்டின் சூடாமணி நிகண்டு
""ஆவணி முதல் இரண்டி ரண்டு மாதம்
ஆகிய அறு வகைப்பருவம்
பரவிய காரே கூதிர்
.........
....
மருவும் ""ஆவணியே ஆதி ""
மற்று இரண்டி ரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய் ந்து
பார்த்திடின் வாய்த்த பேராம் ""
என்கிறது.
""நிழலற்ற நாள் ""-- இதுவே ஆண்டின் தொடக்க நாள் என்றால் சித்திரை 1க்கு என்ன குணஅதிசயங்களோ அவையே ஆவணி 1 க்கும் உண்டு.
கதிரவன், நிலவு, புவி ஆகியவற்றின் நகர்வுகள் சரியான வட்டத்தில் அமையாமல், நீள் வட்டத்தில் அமைவதும், புவி 23.5 பாகை சாய் மானச் சுற்றாய் சுழல் வதும், அச்சுத் திசை மாற்றமும் (precessional motion ),
பருவ கால முந்து நிலையும்( precession of equinoxes )
துல்லிய காலக் கணிப்புக்கு சவாலா கவே உள்ளன.
மகர ராசியில் சூரியன் நுழைவு என்பது ஜனவரி 14/15 என்பது அல்லாமல் இப்போதெல்லாம் டிசம்பர் 21/ 22 லேயே நிகழ்ந்து விடுதல் பற்றிக்கூறு கிறார்.
நான் இதுவரை கூறியவை எல்லாம் மேலோட்டம் தான். ஆழ்ந்து படிக்க ஏராளமான விஷயங்கள் அடங்கிய அருமையான நூல்.
ஆசிரியர் தே மொழிக்கு என் வாழ்த்துக்கள்.
இது ஒரு - தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு.
------
""தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்""
நூலாசிரியர்: தேமொழி
விலை : ₹250
வெளியீடு: 2024, தமிழ் மரபு அறக்கட்டளை
கிடைக்குமிடம்:
-------