ஆம்....இது சங்க இலக்கிய அடிப்படையில் வரலாற்றின் சில புள்ளிகளை இணைத்து நான் வரைந்த கோலம் தான்..அதனால் தான் பல இடங்களில் "லாம்" இருக்கிறது. முழு ஆய்வு செய்யும் வண்ணம் ஆதாரங்களை வருங்கால ஆய்வாளர்கள் செய்யவேண்டும்.
இந்த சந்தேகத்தின் அடிப்படைகள்:பாண்டிய நாட்டில் காணப்படும் வைணவத்தின் தாக்கம். மதுரையின் அரசி மீனாட்சி கூட திருமாலிஞ்சோலை அழகரின் தங்கை. சொக்கநாதர் மண உறவு மூலமே மதுரையின் மன்னன் ஆகிறார். ஆனால் மீனாட்சியின் தாய்வீடு மதுரை, அண்ணன் ஊர் 14 கிமி தள்ளியுள்ள திருமாலிருஞ்சோலை.பலராமன் தென்பாண்டி நாடான நாஞ்சில் நாட்டின் தெய்வம். ஆக தென்பாண்டி நாடும், மதுரையும் இணைந்ததற்கான அறிகுறியாக வாலியோன் - மாயோன் இரட்டை தெய்வ வழிபாடு சுட்டுகிறது.,இந்திரவிழாவின் அடிப்படை முழுக்க சோழதேசம், பூம்புகாரையும் மையப்படுத்தி அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகை சங்ககாலத்தில் கொண்டாடப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால் இந்திரவிழாவின் முக்கியத்துவம் தீபாவளி, பொங்கலை எல்லாம் பின் தள்ளி முன்னே இருப்பதாக தெரிகிறது. காமன் விழா, காதல் விழா என அறியப்பட்ட இந்திர விழா சில நூறாண்டுகளில் மாறிய ஒழுக்க விதிமுறைகளாலும், புகார் வெள்ளத்தால் அழிந்ததாலும், பாண்டியர் செல்வாக்கு மேலோங்கியதாலும் பின்னுக்கு தள்ளப்பட்டு வைணவ பண்டிகைகளான தீபாவளியும். பொங்கலும் முன்னிலைபடுத்தபட்டிருக்கலாம். இல்லையெனில் அத்தனை கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்திர விழா நின்றுபோயிருக்கும் காரணங்கள் இல்லை.
சாரதா மனோகரன்
தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது.
சென்னி வெண்குடை நீட நபாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக்
குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன்
னுடைய
நவஞ்சி றந்தது வளம்புகார் நகரம்
என்கிறது அந்தப் பாடல்.
அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு.
|
அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம் என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.
காவிரிப்பூம் பட்டினத்திலே நிலைத்து நின்று வாழும் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். படைப்புக் காலந்தொட்டே வாழும் குடியினர் என அதற்கு உரை கூறுவர்.
சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் தென்னிந்தியப் பகுதியை ஆண்ட காலத்திலே சோழப் பேரரசின் தலைநகராக காவிரிப்பூம் பட்டினம் இருந்தது. கி.பி. 850 களின் பின்பு, பிற்காலச் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டபோது பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டதால், பேரரசின் தலைநகரம் தஞ்சாவூராகியது. காவிரிப்பூம்பட்டினத்தை மையமாகக் கொண்ட ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
சங்க காலம் தொட்டு தட்சணாயன காலத்தின் ஆரம்பத்தை இந்திர விழாவாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையிலே ‘இந்திர விழா’ பற்றிக் கூறப்படுகிறது. அதன்படி, காவிரிப்பூம்பட்டினத்தில் ஏறத்தாழ 28 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
சோழகுல மன்னர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொழத்தோள் செம்பியன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்புறச் செய்ய ஆசைப்பட்டான். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.
இந்திர விழாவை ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும் அதற்கு இந்திரன் வருகை தரவேண்டும் எனவும் வேண்டினான். இவ்விழா 28 நாட்கள் நடைபெற இந்திரன் ஆசியளித்தான்.
தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடக்கிவைத்த விழா ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்தது. இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் வகையிலே இந்திர விழாவில் கரும்பு முக்கிய இடத்தைப் பெற்றது. வீதிகளிலும் கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன.
பொன்னாலான பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத் தோரணங்கள் கட்டப்பட்டன. கோயில்களிலெல்லாம் சிறப்பாகப் பூஜைகள் நடாத்தப்பட்டன.
இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா கைவிடப்பட்டமையால் தான், காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதாகவும் குறிப்பிடுவர்.
மழை, இடி, மின்னல்களின் கடவுளாக இருப்பவன் இந்திரன். அவனை வழிபட்டால் மாதம் மும்மாரி பொழிந்து பயிர் செழிக்குமென மக்கள் நம்பினர். மழைக்கடவுளான இந்திரனை வழிபட்டனர்.
சங்க காலத்திலேயே இந்திர வணக்கமும் அவனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் தமிழர்கள் மத்தியில் இந்திருக்கிறது. இதை சங்க இலக் கியமான ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் இவ்வழக்கம் ஆழ வேரூன்றியிருந்தது.
இந்திரவிழா கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே மழையாகும். மழைக்கடவுளான இந்திரனை விழா எடுத்து வணங்கி அவனது அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதாகும்.
ஆயினும் காலப் போக்கில் வைணவ ஆதிக்கம் மேலோங்க இந்திர விழா எடுக்கும் வழக்கம் அருகி மறைந்துவிட்டது. கண்முன்னே தெரியும் சூரியனே காலநிலையை நிர்ணயிப்பவன் என்ற நம்பிக்கை வந்தது.
விவசாயம் சிறக்க வழிவகுக்கும் முதற்காரணி காலநிலை. அந்த வகையிலே சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம் அறுவடை செய்த புது நெல்லை தை முதல் நாளன்று சமைத்தனர். சூரியனுக்குப் படைத்து நன்றி செலுத்தினர். அது தைப் பொங்கலாகியது.
ஆகையால்தான் இந்திர விழா பொங்கலுக்கு வழி சமைத்தது என்பர். தமிழகத்திலே பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதலாவது நாள் போகியாகும். போகிபோகம் துய்ப்பவனாகிய இந்திரனுக்காக இந்த நாள் ஒதுக்கப்பட்டது என்றும் கூறுவர். அன்றைய நாளை வீடு வாசல்களைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்கும் நாள் என்றும் கூறுவர். இந்திர விழா என்றும் அழைப்பர்.
அறுவடை கண்ட பூரிப்பால் அந்த மகிழ்வைக் கொண்டாடுவதே பொங்கலாகும்.
ஒரு காலத்தில் ஊரே திரண்டு பெருந்திரு விழாவாகக் கொண்டாடிய பண்டிகைகள் எல்லாம் இன்று வீட்டுக்குள்ளேயே கொண்டாடப்படுவனவாகச் சுருங்கிவிட்டன. உலகமயமாதலாலோ என்னவோ முழு உலகுமே கிராமமாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டையும் தனி உலகமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். எமது பாரம் பரியங்களும் கலாசார நெறிமுறைகளும் கூட மறக்கடிக்கப்பட ஆரம்பித்துவிட்டன.
புது மண்பானையில் மஞ்சள் கிழங்கு சுற்றி முற்றத்திலே பொங்கல பொங்கிய காலமொன்றும் இருந்தது. அது இன்று எரிவாயு அடுப்பிலே, கறையில் உருக்குப் பானையிலே பொங்கி உண்ணும் காலமாக மாறிவிட்டது. நகரப் பகுதிகளிலே, சூரியனுக்காகப் பொங்கிய பொங்கலை சூரியனுக்குப் படைக்கும் சாத்தியம் காணப்படுவது கூட அரிதாகிவிட்டது.
பொங்கல் திருநாளின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் முதலில் நாம் உணரத் தலைப்படவேண்டும். அத்திருநாளுக்கே உரித்தான விழுமியங்களைக் கைவிடாது தொடர்ந்து பேணவேண்டும். அன்றேல் எமது அடுத்த சந்ததி அந்திருநாளை அறியாமல் போவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்பது மட்டும் தான் நிதர்சனமான உண்மையாகும்.
--------------------------------------
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆனால் செல்வன் சொல்கின்றபடி பாண்டியர்கள் இந்திரவிழாவை நிறுத்தினர் என்ற செய்தியை நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. மழைக்கடவுளான இந்திரன் மக்கள் அனைவருக்கும் பொதுவானவன். அவனைச் சோழன் போற்றினான் என்பதற்காகக் கோபித்துக்கொண்டு பாண்டியன் இந்திரவிழாவையே நிறுத்தினான் என்பது நம்பும்படியாக இல்லை. :-)
அதுபோல் கண்ணன் மற்றும் பலதேவனின் நினைவாகப் பொங்கல் விழா தமிழகத்தில் தொடங்கியது என்று கூறுவதும்பொருத்தமாக இல்லை. கண்ணனோ முல்லைநிலத் தெய்வம்; பலதேவன் அவன் அண்ணன். இவர்கள் இருவருக்கும் மருதநிலத்து உழவர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் என்ன வேலை? பலதேவனின் ஆயுதம் கலப்பை என்பதற்காகவெல்லாம் அவனை உழவர்களின் தெய்வம் ஆக்கிவிட முடியாது. அப்படிப்பார்த்தால்... உழவர்களின் உற்றதுணைவனான காளையையே வாகனமாகக்கொண்ட சிவபிரான்தான் பொங்கல்நாயகனாகச் சிறப்பிக்கப்படவேண்டியவர். அவரை ஏன் பொங்கல்விழாவோடு செல்வன் தொடர்புபடுத்தவில்லை? ஒருவேளை அவர் சைவர்களின் தெய்வம் என்பதால் இருக்குமோ? :-)
எது பொங்கல்?
சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். மேலும், சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதிய அடியார் நல்லாரும், அரும்பத உரைகாரரும், பொங்கல் என்ற சொல்லுக்கு கள் என, எழுதியுள்ளனர். இன்றும், அம்மன் கோவில்களில், மதுப்பொங்கல் பொங்கும் வழிபாடு உள்ளதை இதனுடன் இணைத்துக் காணலாம். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' என, சுட்டுகிறார். திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, 'பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார' என்கிறது. ஆக, சங்ககாலத்திலும், பக்தி இயக்க காலத்திலும், புழுக்கல் என்பது தான், பொங்கலாக கருதப்பட்டு வந்திருக்கிறது.
மதுப்பொங்கல்:
அப்படியானால், மதுப்பொங்கல் எப்படி வந்தது? இன்று, பொங்கலுக்கு முதல் நாள், போகி கொண்டாடப்படுகிறது. உண்மையில் அது பலராமனுக்கு உரிய திருவிழா. அவனை போகி என்ற பெயரால், பாண்டியர் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. அவனது ஆயுதம் கலப்பை. அவன் ஒரு விவசாய தெய்வம். மதுபானப் பிரியன். அவனுக்கு மதுப் பொங்கல் படைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்திலும், சங்க காலத்தில், பலராமன் வழிபாடு, விவசாயிகளின் வழிபாடாகவே இருந்திருக்கிறது. அதை, எந்தோவன் என்ற மானடவியல் அறிஞர், தன் பழங்குடிகள் பற்றிய நூல் ஒன்றில், 1927ல் குறிப்பிட்டுள்ளார். அப்போதைய பாம்பே மாகாணத்தில், காந்தேஷ் பகுதியில், பவ்ரா என்ற பழங்குடியினர், 'நாக தீபாவளி' கொண்டாடினர். நள்ளிரவில் மூங்கில் கழியில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு, ஆடவர் குழு ஊரை வலம் வருகிறது. குழுவை இரண்டு ஆடவர் வழிநடத்துவர். குழு ஒவ்வொரு வீட்டின் முன்பும் போய் நிற்கும். வீட்டின் பெண்கள், ஆடவரின் நெற்றியில், தீப்பந்தத்தின், முனையில் உள்ள கறுப்பு எண்ணெயை. வழித்து, திலகமிட்டு, மதுபானம் அளித்து அனுப்புவர். விடிந்த உடன், மாடுகளுக்கு அரிசி, தானியம் கலந்த பொங்கல் படைப்பர். இன்றும், இரவில் தான் போகி கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலையும் இதன் தொடர்ச்சியாக காணலாம்.
சேக்கிழாரின் குறிப்பு:
முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலை, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வெளியிட்டுள்ளார். பெரியபுராணத்தில், மற்றொரு குறிப்பு காணப்படுகிறது. மள்ளர்கள், இந்திர தெய்வத்தை தொழுது நாற்று நட்டதாக, சேக்கிழார் தெரிவிக்கிறார். இதில் இருந்து, தை மாதப் பிறப்பு, சோழர் காலத்தில், பெரிய விழாவாக கொண்டாடப்படவில்லை என, தெரிகிறது. விஜயநகர பேரரசின் காலத்தில், அது பெரிய விழாவாக மாறியிருக்கலாம். தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது. இருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார். அதன் பின், தைப் பொங்கலுக்கு, தமிழர் திருநாள் என்ற அடையாளம் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தது. ஐரோப்பியர் வருகையால், நமது அன்றாட நடவடிக்கைகள், ஆங்கில காலண்டர் கணக்கின்படி அமைய நேரிட்டது. அதனாலும், தைப் பொங்கலுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.
//உழவர்களின் உற்றதுணைவனான காளையையே வாகனமாகக்கொண்ட சிவபிரான்தான் பொங்கல்நாயகனாகச் சிறப்பிக்கப்படவேண்டியவர். அவரை ஏன் பொங்கல்விழாவோடு செல்வன் தொடர்புபடுத்தவில்லை? ஒருவேளை அவர் சைவர்களின் தெய்வம் என்பதால் இருக்குமோ? :-)//
|
This email has been sent from a virus-free computer protected by Avast. www.avast.com |
2016-01-20 18:07 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>://உழவர்களின் உற்றதுணைவனான காளையையே வாகனமாகக்கொண்ட சிவபிரான்தான் பொங்கல்நாயகனாகச் சிறப்பிக்கப்படவேண்டியவர். அவரை ஏன் பொங்கல்விழாவோடு செல்வன் தொடர்புபடுத்தவில்லை? ஒருவேளை அவர் சைவர்களின் தெய்வம் என்பதால் இருக்குமோ? :-)//செல்வரைப்பற்றி இன்று புதிதாக அறிகிறேன்!ஒரு அரிசோனன்
//ஊர்வன, பறப்பன, நீந்துவன என ஒன்றுவிடாமல் சாப்பிடும் என்னை மாதிரியான குகைமனிதர்களை வைணவம் ஏற்க தயாரா என்பது தான் என் சந்தேகம் :-)//
> 'கொல்லாமை'யை வலியுறுத்தி உண்ணப்படுவதை, சைவ உணவு என்றுதான் சொல்கிறார்கள், வைணவ உணவு என்று சொல்வதில்லை. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்குமுன்னர் ஒரு பிரஞ்சுப் பாதிரியாரால் எழுதப்பட்ட ஆங்கிலப் புத்தகத்தில், "ஆண்கள் வைணவர்களாவும், பெண்கள் சைவர்கலாவும் இருப்பதுண்டு; ஏனெனில், சைவர்களுக்கு இறைச்சி உண்ணக்கூடாது என்னும் கட்டுப்பாது உண்டு. வைணவர்களுக்குக் கிடையாது." என்று எழுதியுள்ளார்.
>
> ஆகவே, வைணவம் உங்களை ஏன் ஏற்காது? நீங்கள் சிவனை வழிபட்டாலும், வீட்டில் லிங்கத்தைவைத்து சிவபூசை செய்யமுற்பட்டால்தான், ஊனுண்ணியிளிருந்து, ஊணுண்ணியாக மாறவேண்டும்.
யப்பாடி...ஆக வைணவம் என்னை ஏற்றுகொண்டதில் மகிழ்ச்சி :-) சைவமாக மாற தான் கஸ்டபடணும் போல :-)
பாத்தீங்களா மேகலா......நான் சைவம் ஆகலாம்னு பார்த்தால் அதுக்கு பர்மிசன் கிடைக்க மாட்டேன் என்கிறது. :-)
>
> உடனே வேந்தர் கேட்பார்: கண்ணப்பநாயனார் ஊனுண்ணிதானே!
அவர் எதுவாகவோ இருக்கட்டும்...அசைவம் சாப்பிடுபவர்களை சிவன் காப்பாற்ற மாட்டரா? வெஜிட்டேரியன்களுக்கு தான் அருள் புரிவாரா? பக்தி முக்கியமா, உணவு வழக்கம் முக்கியமா?
>
> என்பதில்: அவர்மாதிரி, கண்ணைப்பிடுங்கிவைக்கும் மனப்பக்குவம் இருக்கும்பட்சத்தில்!
>
> அவர் கேட்பார்: சிவலிங்கம் கண்ணில் குருதி வரட்டும்!
>
> என்பதில்: வந்ததாக நினைத்துக்கொள்ளுங்க!
>
> அவர் பதில்: வைத்ததாக நினைத்துக்கொள்ளுங்க!
>
> இப்போது தெரிகிறதா, ஏன் வேந்தரிடம் வாதாடி வெல்லமுடியாது என்று?
இதான் டாபிக் எனில் நானும் வேந்தர் கட்சிதான் :-)
//பாத்தீங்களா மேகலா......நான் சைவம் ஆகலாம்னு பார்த்தால் அதுக்கு பர்மிசன் கிடைக்க மாட்டேன் என்கிறது. :-) //
//அசைவம் சாப்பிடுபவர்களை சிவன் காப்பாற்ற மாட்டரா? வெஜிட்டேரியன்களுக்கு தான் அருள் புரிவாரா? பக்தி முக்கியமா, உணவு வழக்கம் முக்கியமா?//
//இதான் டாபிக் எனில் நானும் வேந்தர் கட்சிதான் :-)//
2016-01-21 16:44 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>://பாத்தீங்களா மேகலா......நான் சைவம் ஆகலாம்னு பார்த்தால் அதுக்கு பர்மிசன் கிடைக்க மாட்டேன் என்கிறது. :-) //
எப்பொழுது நீங்கள் சிவனை வழிபடுகிறீர்களோ, அப்பொழுதே சைவராகிவிடுகிறீர்கள். சிவபூசை செய்யத்தான் ஊனுண்ணியாகவேண்டும் என்று விதிமுறை இருக்கிறது என்று எழுதியதை உங்கள் விருப்பப்படி வளைக்கிறீர்களே, செல்வரே! நான் எழுதியது இதுதான்://நீங்கள் சிவனை வழிபட்டாலும், வீட்டில் லிங்கத்தைவைத்து சிவபூசை செய்யமுற்பட்டால்தான், ஊனுண்ணியிளிருந்து, ஊணுண்ணியாக மாறவேண்டும்.//
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//பொதுவான கோயில், மடம் போன்றவற்றில் உள்ள சிவலிங்கத்தை அசைவம் உண்பவர்கள் வணங்க போககூடாது என்பதில் தான் எனக்கு உடன்பாடில்லை.//
//வைணவ உணவு என்று வட இந்தியாவில் கேட்டால் வெங்காயம், பூண்டு இல்லாத பதார்த்தங்களைப் பரிமாறுவர்.ஆகவே தங்கள் கூற்றான "வைணவ உணவு என்று சொல்வதில்லை" என்பதை அடியேன் ஏற்றுக்கொள்ளவில்லை. //
--
--
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
அவ்வளவுதான்! ஆரவாரச் சடங்குகளை சம்பிரதாயங்களை வள்ளுவர் போலவே ஈசனும் விரும்புவதில்லை! :-)
பாகுபலி படத்திலிருந்து ஈசனைப் போற்றும் அட்டகாசமான பாடல் ஒன்று!
வணக்கம்.
On 21-Jan-2016 5:49 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நன்றி: தினகரன்: http://archives.thinakaran.lk/2011/01/14/_art.asp?fn=d1101141
>
> இந்திர விழா பொங்கலுக்கு வழிசமைத்ததோ?
>
> சாரதா மனோகரன்
>
> தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது.
>
> சென்னி வெண்குடை நீட நபாயன்
> திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
> மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
> வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
> பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
> புணரி தன்னையும் புனிதமாக்
> குவதோர்
> நன்னெ டும்பெருந் தீர்த்தமுன்
> னுடைய
> நவஞ்சி றந்தது வளம்புகார் நகரம்
> என்கிறது அந்தப் பாடல்.
>
> அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு.
>
>
> தைப்பொங்கல் திருநாள் நாளை
>
> அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம் என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.
>
> காவிரிப்பூம் பட்டினத்திலே நிலைத்து நின்று வாழும் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். படைப்புக் காலந்தொட்டே வாழும் குடியினர் என அதற்கு உரை கூறுவர்.
>
> சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் தென்னிந்தியப் பகுதியை ஆண்ட காலத்திலே சோழப் பேரரசின் தலைநகராக காவிரிப்பூம் பட்டினம் இருந்தது. கி.பி. 850 களின் பின்பு, பிற்காலச் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டபோது பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டதால், பேரரசின் தலைநகரம் தஞ்சாவூராகியது. காவிரிப்பூம்பட்டினத்தை மையமாகக் கொண்ட ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
>
> சங்க காலம் தொட்டு தட்சணாயன காலத்தின் ஆரம்பத்தை இந்திர விழாவாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையிலே ‘இந்திர விழா’ பற்றிக் கூறப்படுகிறது. அதன்படி, காவிரிப்பூம்பட்டினத்தில் ஏறத்தாழ 28 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
>
> சோழகுல மன்னர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொழத்தோள் செம்பியன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்புறச் செய்ய ஆசைப்பட்டான். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.
>
> இந்திர விழாவை ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும் அதற்கு இந்திரன் வருகை தரவேண்டும் எனவும் வேண்டினான். இவ்விழா 28 நாட்கள் நடைபெற இந்திரன் ஆசியளித்தான்.
>
> தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடக்கிவைத்த விழா ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்தது. இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் வகையிலே இந்திர விழாவில் கரும்பு முக்கிய இடத்தைப் பெற்றது. வீதிகளிலும் கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன.
>
> பொன்னாலான பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத் தோரணங்கள் கட்டப்பட்டன. கோயில்களிலெல்லாம் சிறப்பாகப் பூஜைகள் நடாத்தப்பட்டன.
>
> இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா கைவிடப்பட்டமையால் தான், காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதாகவும் குறிப்பிடுவர்.
>
விழா நின்ற காரணத்தால் கடல் கொண்டதா ?
கடல் கொண்டதால் விழா நின்றதா ?
தை முதல் நாளன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா அன்று காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்ட காரணத்தினால்,
வருடந்தோரும் தை முதல் நாளைக் கரிநாள் எனத் தமிழக பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன எனவும், இதன் காரணமாக இந்திரவிழா கொண்டாட்டங்கள் நின்றுபோய், பொங்கல் மட்டும் கொண்டாடப்படுகிறது எனவும் கருத வேண்டியுள்ளது.
அன்பன்
கி. காளைராசன்
வணக்கம்.
On 21-Jan-2016 5:49 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நன்றி: தினகரன்: http://archives.thinakaran.lk/2011/01/14/_art.asp?fn=d1101141
>
> இந்திர விழா பொங்கலுக்கு வழிசமைத்ததோ?
>
விழா நின்ற காரணத்தால் கடல் கொண்டதா ?
கடல் கொண்டதால் விழா நின்றதா ?