’உபரி மதிப்பு’ என்னும் மாயயை

64 views
Skip to first unread message

Athiyaman Karur R

unread,
Nov 5, 2009, 5:08:56 AM11/5/09
to சிவகுமார் மா

உபரி மதிப்பு என்னும் மாயயை’

 

உபரி மதிப்பு (surplus value) என்பதே மார்க்சிசத்தின்
மையக்கூறு என்று சொல்லலாம : http://en.wikipedia.org/wiki/Surplus_value 

 

தொழிலாளர்களின் உழைப்பிற்க்கு அளிக்கப்படும் சம்பளம்,
அவர்களால் உருவாக்கப்படும் பெருட்களின் மதிப்பை விட
(அல்லது உழைப்பின் ‘சரியான மதிப்பை’ விட) மிக மிக
குறைவானது, அந்த ’கொடுக்கப்படாத’ சம்பளமே, உபரி
மதிப்பு என்று மார்க்சிசம் சொல்கிறது. அந்த உபரி மதிப்பு
’சுரண்டப்பட்டு’, லாபமாக வெளிப்படுகிறது. அதுவே பின்
முலதனமாக உருவெடுக்கிறது. இதுதான் மார்கிசியத்தின்
மைய்யக் கரு. இது எப்படி மிக தவறான, பொய்பிக்கப்பட்ட
‘போலி’ விஞ்ஞானம் என்பதை பார்ப்போம்.

 

மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப்
படுகிறது. வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும்
உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ,
தேவையோ இருக்காத். உதாரணமாக, பாலைவனத்தில்
சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை
படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி
எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும்,
அங்கு அதற்க்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே
போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான
‘மதிப்பு’. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க
உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே
என்பது மார்கிசிய கருத்து.

 

உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்
கொள்வோம். அந்த ‘உபரியை’ ‘சுரண்டி’ லாபாமாக
மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு
ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம்
இதற்க்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், ’தொழில்
முனைவோன்’ என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம்
என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு
என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் :

 

1.தொழில்முனைவோரின் ’உபரி மதிப்பு’ என்ன ? ஒரு
நிறுவனத்தை கட்டமைக்க, organisational and managerial ability
மிக மிக மிக தேவை. Risk taking mentality, pioneering spirit,
innovative thinking, will power, leadership and communication skills :
இவை இல்லாமல் தொழில் முனைவோர் ஒரு நிறுவனத்தை
உருவாக்கி, வெற்றிகரமாக நடத்த முடியாது. இவற்றின்
உபரி மதிப்பு என்ன ?

 

2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு
தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே
நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
இரண்டும் ஒரே வகையான எந்திரங்களை கொண்டு, ஒரே
வகையான பொருட்களை உற்பத்தி  செய்து, ஒரே சந்தையில்
விற்க்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம
அளவு திறமை, உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்கள்
வேலை செய்கின்றனர். ஒராண்டிற்க்கு பிறகு, ஒரு
தொழிற்சாலை ஒரளவு லாபமும், மற்றொன்று நட்டத்தையும்
அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம்,
அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால்,
பிறகு நட்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின்
தொழிலாளர்களின் ‘உபரி மதிப்பு’ எங்கு சென்றது ? 
இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள்,
சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களை
கொண்டு, ஒரே ரகபொருட்களை தான் உற்பத்தி செய்தனர்.
பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது ?

 

3. கூட்டுறவு அல்லது அரசு துறையில், மேற்கொண்ட
உதாரணத்தில் உள்ளதை போன்ற அதே வகை / அளவிலான
நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று
வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம்
மற்றும் உற்பத்தி திறன், தனியார் நிறுவனங்களை விட
குறைவாக இருப்பது இய்லபு. ஏன் ? காரணம், உரிமையாளர்
என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பெறுப்பற்ற
மனோபாவம். Sense of ownership gives rise to sense of responsibity.
அரசு துறையின் managers மற்றும் workers : இவர்களின்
உற்பத்தி திறன் (productivity) தனியார் துறையை விட
குறைவாகவே இருக்கிறது. இவர்களின் ‘உபரி மதிப்பு’

எப்படி குறைந்தது ? அது எங்கு சென்றது ?

 

மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு
சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு,
ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக
கட்டமைப்பே அழியும் என்பது. Business cycles என்று சொல்லப்படும்
பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
நிகழ்கின்றன. மார்க்ஸின் ‘விஞ்ஞானப்படி’ ஒவ்வொறு சுழற்ச்சியின்
மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து,
குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும்
பிழைக்கும். மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட
புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும்
உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் )உபரி மதிப்பை
மேலும் மேலும் ‘சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே
முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார
கட்டமைப்பே இயல்பாக அழியும். ஆனால் கடந்த 150 வருட
பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு
பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை
விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது.
தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல
படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது.

 

இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு
மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே
அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது
என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று

world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.

 

மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற
நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது.
ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான
விளைவுகளையே ஏற்படுத்தியது. The road to hell is paved with
 good intentions என்கிறது ஒரு ஆங்கில முதுமொழி.

 

srirangammohanarangan v

unread,
Nov 5, 2009, 9:36:48 PM11/5/09
to mint...@googlegroups.com
என்ன   இது   மிந்தமிழில்   பொருளாதாரக்  கருத்துக்களைப்  பற்றியும்   விவாதம்  வந்தால்  நன்றாக  இருக்குமே    என்று   நான்  நினைப்பதுண்டு.   திரு   அதியமான்  கரூர்    ஒரு  முக்கியமான    பொருளாதாரக்  கருத்தை   விவாதத்திற்கு   முன்  வைத்திருக்கிறார்.    உபரி   மதிப்பு   என்ற   கருத்து,   கம்யூனிஸத்திலும்,  மற்ற  சித்தாந்தங்களிலும் (பொருளாதார  சித்தாந்தங்கள் :--))  )   எப்படி  அணுகப் பட்டிருக்கிறது  என்பதை  அறிய   ஒரு  நல்ல  வாய்ப்பு.    பொருளாதார   சித்தாந்தங்கள்    பல  இருக்கின்றன.    classical   school  of   economics,   keynes  theory,    austrian  school  of  economics,    chicago  school  of  economics   என்று  இன்னும்  பல.
 
கம்யூனிஸக்   கொள்கைக்கான    மூல  நூல்   தாஸ்   காபிடல்   தமிழில்    இரண்டு    மொழிபெயர்ப்புகள்  கண்டிருக்கின்றன,   திரு  தியாகுவாலும்,   திரு  ஜமதக்னியாலும்.    மேலும்  இருக்கலாம்.     திரு  சாமிநாத  சர்மா    ஒரு  நூல்  எழுதியிருந்ததாக    நினைவு.      இதைப்  போன்று     மற்ற  சித்தாந்தங்களுக்கு   உரிய  நூல்கள்    மொழிபெயர்ப்புகள்   காணவில்லை.    உதாரணமாக     கட்டற்ற     சுதந்திரமான    தனித்துவமய    பொருளாதார  இயக்கம்   என்பதைச்  சுட்டும்   laissez-faire  capitalism   என்பதற்கு    மிக  ஆழமான     விரிவான     நூல்கள்    லுட்விக்   வான்  மைஸஸ்  Ludwig  von  Mises,   எப்  ஏ  ஹயக்   F A  Hayek,   போன்றவர்களால்    எழுதப்பட்டிருக்கின்றன.   ஆனால்    அவையெல்லாம்     ஆங்கிலத்தில்    மொழிபெயர்ப்பும்,  மூலமுமாக  இருக்கின்றனவேயன்றி      தமிழில்  அறிந்துகொள்ளக்   கிடைப்பதில்லை.  
 
முக்கியமாக     வான்  மைஸஸ்    அவர்களது    நூலான     Human  Action   என்ற     நூல்    மிக  முக்கியமான    நூலாகும்.    பொருளாதார    இயக்கத்தைத்   தனிப்பட    ஒரு  துண்டுபட்ட   துறையாகக்  காணாமல்     மனித     யத்தனம்    என்ற   ஒட்டுமொத்தத்  துறையின்     ஓர்  அங்கமாகக்    காட்டுகின்றார்   வான்  மைஸஸ்.    மனித  யத்தனம்   என்பதை     Praxeology  என்ற    துறையாக   அணுகுகிறார்.   எப்படி    மனித  முயற்சிகள்  அனைத்திற்கும்  பொது   தத்வார்த்த    அடிப்படைகள்  அமைந்திருக்கின்றன,    அவை  என்ன,   அதே   தத்வார்த்த  அடிப்படைகள்  எப்படி    Praxeology  இன்    அங்கமான    பொருளாதாரத்திலும்    உள்  அமைந்து    செயல்படுகின்றன,   உள்ளார்ந்த    இந்த  தத்துவார்த்த  இயல்பிற்கு    விரோதமாக    பொருளாதாரம்   இயங்கத்  தொடங்கும்  போது   எப்படி   குளறுபடியாகிறது    என்பதையெல்லாம்     அந்த  நூலில்    விரிவாகக்   கூறுகிறார்.  
 
அவரே     சோஷலிஸம்    என்பதைப்  பற்றிய    விமரிசன  நூலொன்றையும்   எழுதியிருக்கின்றார்.       Theory  of  Money  and  Credit,   Epistemological  foundations  of  Econiomics  போன்று  பல  நூல்கள்.     கோட்பாடும்,  சரித்திரமும்    என்பதைப்பற்றி    Theory  and  History     என்ற  நூல்   முக்கியமானது.   நல்ல  வேளையாக    அவரது  நூல்களையெல்லாம்     அனைவருக்குமாக   இணையத்தில்  ஏற்றிவைத்திருக்கிறார்கள்.  
 
இதனோடு   கூட    தமிழ்  மரபில்    எப்படி   பொருளாதாரச்  சிந்தனைகள்   அமைந்திருக்கின்றன    என்று   இலக்கியத்தையே  ஒரு  பொருளாதாரப்  பார்வை  பார்ப்பதற்கும்    வசதியாக  இருக்கும்   இந்த  இழை.    ’வரப்புயர’    என்ற   ஒற்றைச்  சொல்லில்    micro,  macro  economics,    agriculture   vs  manufactural  economics,   domestic  vs  political  economics  என்றபடி   அனைத்தையும்    குறிப்பு  காட்டிவிட  முடிகிறது    ஔவைப்  பாட்டியால்   என்றால்,    தமிழ்க்  கன்னியின்    கடைக்கண்  குறிப்பில்   எத்தனை  எத்தனை  அர்த்தங்களோ!
 
திரு  அதியமான்   இழையைப்  படித்தவுடன்     இதே  கருத்தைப்  பல  சித்தாந்தங்களை வைத்து    விவாதித்துப்  பார்த்தால்    நன்றாக  இருக்குமே   என்று  தோன்றியது.  அதன்  தொடர்பாக     எழுந்தவையே  இந்த    வான்  மைஸஸ்    பற்றிய   எண்ணங்கள்.     நன்றி  திரு   அதியமான். 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்        

 

Innamburan Innamburan

unread,
Nov 5, 2009, 11:24:40 PM11/5/09
to mint...@googlegroups.com
சரியே, ரங்கனார் ஸ்வாமி,
எனக்கும் இது அடிக்கடி தோன்றும் எண்ணம். எனக்கு 
' ... in the long run, we are all dead..' என்று நிரந்தரத்தை அந்தரத்தில் கொண்டு வந்த லார்ட் கீன்ஸ் மேல் மதிப்பு. பொருளாதார இயல் அமைப்புகள் அவரை மறு பார்வை பார்க்க தொடங்கியுள்ளன. பிற்காலம், சாமுவேல்சன்னின் நோக்கு என்னை கவர்ந்தது. தற்காலம் பால் க்ரூக்மென்னின் ஆட்சி. இது நிற்க. நான் இத்துறையில் படிக்க விழைகிறேன் என்றதற்கு, அப்படி ஒன்றுமில்லையே என்று பரிகசித்தார், ராஜாஜி.  படித்த பிறகு தான், அதை புரிந்து கொண்டேன். இது நிற்க.

பொருளுக்கு ஆதாரம் இந்த துறையல்ல. பொருளுக்கு ஆதாரம் தேடும் மற்ற இயல்களை இது மதிப்பிடக்கூடும். ஆனால், சமயவாதிகள் தோற்றார்கள்; அவ்வலவு கருத்து வேற்றுமை இவர்களுக்குள். நான்கு இத்துறை வல்லுனர்கள் இருந்தால், ஐந்து கருத்துக்கள்; அவற்றில் இரண்டு கீனிஷியன்ஸ் என்று கேலி செய்துகொள்வார்கள். முதலாளித்துவம் செல்வம் கூட்டும்; பகிர்ந்து கொள்ளாது. பொதுவுடமைத்துவம் செல்வம் கூட்டும், மெத்தனமாக. ஆனால் பகிர்ந்து கொள்ளும் என்று மாயையை உணர்த்தியது சோவியத் ரஷ்யா. கம்யூனிஸ நாடுகள் சர்வாதிகார ஆட்சி செய்வதற்கு காரணம், அந்த கோட்பாடு மனிதனின் இயல்பான பேராசையை எதிர்ப்பது தான். முதலாளித்துவம், ஜனநாயகத்தை, உதட்டளவில் தான் போற்றுகிறது. ஆக மொத்தம், குடிமகனுக்கு எப்படியும் ஆப்பு.

என்று பொருளாதாரம், அரசியலில் ஆதாரம் தேடுவதை நிறுத்துகிறதோ, அன்று வளிச்சம் கொஞ்சமாகத் தெரியலாம்.
இன்னம்பூரான்

2009/11/6 srirangammohanarangan v <ranga...@gmail.com>

karthi

unread,
Nov 5, 2009, 11:48:46 PM11/5/09
to mint...@googlegroups.com
க்ரூக்மன் ஒபாமாவை மதிப்பதில்லை என்று அவருக்குக் கோபம்.
ஒபாமாவின் சிந்தனைகளை ஆள்பவர்கள் கெய்த்னர் மற்றும் சம்மர்ஸ்.
 
அமர்த்தியா சென்னின் கொள்கைகளை டேவிட் ஃப்ரிட்மன் (அவங்கப்பனைப் போலவே)
ஒப்புக்கொள்வதில்லை.
 
பொருளாதாரம் ஒரு கலைதான்; அறிவியல் அல்ல. ஆகவே ஒரே கொள்கையானாலும்
வெளிப்பாடு வேறுபடும்.
 
அதியமான் கரூர் அவர்களின் கட்டுரைக்கு அரங்கனாரின் கட்டுரை "உபரி மதிப்பை:"
வழங்குகிறது. இரண்டையும் நான் இன்னொரு முறை படிக்கவிருக்கிறேன். இரண்டாம்
முறை படிக்கத் தகுந்தவை. எனக்கு இந்தத் துறையில் மிகுந்த ஆர்வம் உண்டு.
 
சரி, மன்மோஹன் சிங்கும் சிதம்பரமும் யார் பக்கம்?
 
ரெ.கா.

Innamburan Innamburan

unread,
Nov 6, 2009, 12:17:28 AM11/6/09
to mint...@googlegroups.com
தன் தன் பக்கம், ரெ.கா. அவர்களே.


2009/11/6 karthi <karth...@gmail.com>



--

Raja sankar

unread,
Nov 6, 2009, 12:26:47 AM11/6/09
to mint...@googlegroups.com
இந்த உபரி மதிப்பு என்பது கம்யூசினத்தின் அடிப்படை கொள்கையான சொத்து இருக்க கூடாது எனும் கருத்தில் வேரூன்றியுள்ளது என நினைக்கிறேன்.

கம்யூனிசத்தின் கொள்கை அறிக்கை, கம்யூனிசம் என்பது தனிப்பட்ட சொத்து உரிமையை ஒழிப்பதே முதல் நோக்கம் என தெளிவாக கூறுகிறது. ஆனால் அறிவு எனும் சொத்தை ஒருத்தரிடம் பறிக்கவோ, சேர்ப்பதை தடுக்கவோ முடியாது எனபது நடைமுறை.

இந்த அறிவால் விளையும் பலன் என்பதை மறுத்துரைக்கவே இந்த உபரி மதிப்பு,முதலாளித்துவம் போன்ற ஜல்லியடிப்புக்கள் எல்லாம். ஒருவன் உடலுழைப்பால் 10 மணி நேரம் செய்வதை மற்றொருவன் அதையே அறிவின் உதவியால் ஐந்து மணி நேரத்தில் செய்து முடிக்க முடியுமல்லவா? அப்போது இந்த மதிப்பு என்பது அறிவுக்கு கொடுக்கும் விலையே அன்றி எவ்வளவு மணிநேரம் வேலை செய்யப்பட்டது அல்ல என்பதற்கானது அல்ல.


ராஜசங்கர்



2009/11/6 karthi <karth...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Nov 6, 2009, 10:47:30 AM11/6/09
to mint...@googlegroups.com
ஒரு  சந்தேகம்.    இந்த   உபரி  மதிப்பு   என்பதில்    மதிப்பு   பின்  அதற்கு  மேல்   உபரியான  அம்சம்   என்று   பொருள்  வருகிறது.     அப்பொழுது    உழைப்புக்கு  உரிய  மதிப்பு   வந்துவிடுகிறது.  அதற்கு மேல்   உபரியான   அம்சம்   என்னாகிறது  என்றுதான்   பேச்சு.    அது  யாருடையது?    உழைத்தவருடையதா?   உழைப்புக்கான    முதல்  போட்டவருடையதா?     உழைக்க  வரும்  முன்னரே     இந்த  உழைப்புக்கு   இந்த   மதிப்பு  என்று    தீர்வாகி    முடிந்து  போகிறது.   பின்    தொடர்ந்து  அந்த   உழைப்பு    ஈட்டிக்கொடுக்கும்    பல்ன்    உபரி  என்றால்   அதில்    உழைத்து   அதற்குரிய  மதிப்பைப்  பெற்றுச்  சென்று  விட்டவருக்கு    அதில்   எந்த    உரிமையோ  பங்கோ  இல்லையா?     முதல்  போட்டவருக்குத்தான்     தொடர்ந்த    பயன்களால்     லாபம்  என்பதா?
 
இது  இப்படி  என்றால்    இந்தியாவில்    ஒரு  மணி  நேரம்   ஒருவர்   உழைக்கிறார்.   அதற்கு    ஒரு  மதிப்பு  நிர்ணயமாகிறது.     அதே  நேரம்  அதே  உழைப்பு   அவர்    வேறு  ஒரு  நாட்டில்    செய்தால்     பலமடங்கு    மதிப்பு    பெற முடிகிறது.    அப்பொழுது     உழைப்புக்கான  உரிய  மதிப்பை    முடிவு  செய்வது   எது?     சந்தையின்    தேவை   என்பதுதானே      அனைத்து  மதிப்புகளையும்   நிணயிக்கும்     மூலம்.     சந்தையின்   தேவை    நிர்ணயித்துத்    தரும்    மதிப்பு    உழைப்புக்கு  வந்தடையாமல்    போக   இடைப்பட்ட    தடங்கல்கள்    ஏற்படலாம்.  அப்பொழுது    அந்தத்   தடங்கல்களை     சமாளித்து    உரிய  மதிப்பைப்  பெற்றுத்தரவும்,    எதிர்காலத்தில்   தடங்கல்கள்   ஏற்படாதவாறு   பார்த்துக்கொள்ளவும்     உழைப்பவரின்  ஒருங்கிணைந்த    அமைப்பு     அவசியம்  இல்லையா?       

 

Innamburan Innamburan

unread,
Nov 6, 2009, 11:51:11 AM11/6/09
to mint...@googlegroups.com
அந்த விக்கி கட்டுரையை மறுபடியும் படித்தேன். இதையும், அதையும் கலந்து, சுருக்கி அமைத்தால், இது தான் கஷ்டம். 
'உபரி மதிப்பு' என்ற மார்க்ஸீய கோட்பாடு, பொருளியலின், மற்ற நோக்குகளில் ஒன்று. மார்க்ஸீயம் முற்றிலும் தவறு என்றால், அம்பானிகளும், சச்சின் டெண்டுல்கரும், எம். எஃப். ஹுஸேன்களும் எங்கிருந்து அளவிலா செல்வம் சேர்த்தார்கள்? பெரிய கம்பெனிகள் எப்படி மிக குறைந்த அன்றாடக்கூலி கொடுத்து கடைநிலை ஊழியர்களை வயிற்றில் அடிக்கிறார்கள். அவுட்-சோர்ஸிங்க் என்ற பேய் எங்கிருந்து வந்தது? ராஜா சங்கர் அவர்களே, அறிவு போடும் சோறு இங்கு பொருந்தாத, முக்கியமான வேறு விஷயம்.
கம்யூனிசம் ரஷ்யாவில் வீழ்ந்த போது, அது கம்யூனிசமாக இயங்கவில்லை. சர்வாதிகாரிகளிடம் அது த்ன் கற்பை இழந்தது. முதலாளித்துவம் செழிப்பாக இருப்பது ஒரு மாயம். அது என்றுமே செல்வத்தை நியாயாமாக பகிர்ந்து கொடுத்தது இல்லை. இது நிற்க.

ரங்கனார் கூறிய படி, பொருளியல் பற்றி பேசவேண்டுமானால், நாம் திசை மாறவேண்டும்.

இன்னம்பூரான்.

2009/11/6 srirangammohanarangan v <ranga...@gmail.com>



--

Raja sankar

unread,
Nov 6, 2009, 12:18:47 PM11/6/09
to mint...@googlegroups.com
உழைப்பு க்கு ஊதியம் என்பதைப்பற்றிய எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பது பற்றி பார்க்கபடவேண்டும்.

ஒருவரிடம் ஒரு பொருள் தயாரிக்கும் திறமை இருக்கிறது. என்று வைத்துக்கொள்வோம். அவர் அந்த பொருளை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்யலாம் அல்லது அதை செய்து கொண்டிருப்பவர்களிடம் வேலை செய்யலாம். அப்படி சேரும் பொழுது அவருக்கு அளிக்கபடும் பலன்(கூலி அல்லது பணம்) குறைவாக இருக்கிறது என்று நினைத்தால் அதில் சேராமல் இருக்கலாம். மேற்சொன்ன எதிலும் கட்டாயம் இல்லை என்றால் அது கேப்பிடலிசம். இருந்தால் கம்யூனிசம்.


நீங்கள் சொல்லும் வாதப்படி பார்த்தால் நாம் வாங்கும் எல்லாப்பொருள்களுக்கும் வாடகை போல் ஒன்று அப்பொருளை உபயோகிக்கும் வரை தரவேண்டுமா?

ராஜசங்கர்

2009/11/6 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Raja sankar

unread,
Nov 6, 2009, 12:26:50 PM11/6/09
to mint...@googlegroups.com
//. மார்க்ஸீயம் முற்றிலும் தவறு என்றால், அம்பானிகளும், சச்சின் டெண்டுல்கரும், எம். எஃப். ஹுஸேன்களும் எங்கிருந்து அளவிலா செல்வம் சேர்த்தார்கள்? பெரிய கம்பெனிகள் எப்படி மிக குறைந்த அன்றாடக்கூலி கொடுத்து கடைநிலை ஊழியர்களை வயிற்றில் அடிக்கிறார்கள். அவுட்-சோர்ஸிங்க் என்ற பேய் எங்கிருந்து வந்தது?//

மார்க்சீயத்தின் அடிப்படையே தவறு என்று முதல் மடலிலேயே சொல்லியிருந்தேன். மதிப்பு என்பது அறிவு என்பதில் இருந்து வருகிறது. எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உடல் உழைப்பு போடலாம். ஆனால் எல்லோருடைய அறிவும் ஒன்று அல்ல. எல்லோருடைய அறிவுக்கும் ஒரே மதிப்பு என்றால் ஏன் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு எல்லாம்? எல்லோருக்கும் ஒரே மதிப்பெண் வழங்க வேண்டியது தானே? எல்லோரும் மருத்துவ அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கலாம், செய்ய வேண்டியது தானே?

சச்சின் டெண்டுல்கர் மாதிரி சதங்களோ ஹூஸேன் மாதிரி ஓவியங்களோ நீங்களும் வரைந்து அதற்கு மதிப்பு கொடுக்காமல் இருந்தால் தான் உண்டு. அப்படி செய்ய முடியாவிட்டால் அப்படி பணம் கிடைக்காது.

அவுட்சோர்ஸ்சிங் பற்றி -
அமெரிக்கா ருபாயின் மதிப்பை குறைத்து வைக்கும் படி நம்மிடம் சொல்லவில்லை. நம்முடைய ரூபாயைவிட டாலர் நம்பக தன்மை மிக்கது. அது அமெரிக்காவின் பொருளாதாரத்தால் வந்தது. அந்த பொருளாதாரம் அவர்களின் அறிவு சார் உழைப்பால் வந்தது. உண்மையை சொல்லப்போனால் அமெரிக்கர்களின் வேலையை நாம் பறிக்கிறோம். அங்கு எவரும் இந்த மார்க்சீயம் பேசாததால் தப்பித்தது.


ராஜசங்கர்

2009/11/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2009, 10:31:28 PM11/6/09
to mint...@googlegroups.com
நில  உச்ச வரம்பு சட்டம் என்ன ஆனது
 
அந்தச் சட்டம்  இருப்பது உண்மையானால்  பல மக்கள் அன்றாடம்  உணவுக்கே  கஷ்டப் படும் நிலையில் இருக்கும்போது  சில முதலைகள் மட்டும்  இருக்கும்  எல்லா நிலங்களையும்  வளைத்துப் போட்டு
 
பற்றாக்குறைக்கு  விவசாயிகளின்  தொழிலான விவசாயத்தைக் கூட  சரியாக நடக்க வொட்டாமல்
 
அவர்கள்  தங்களுடைய  விவ்சாய நிலங்களை  விற்றுவிட்டு
 
சொத்து முழுவதும் இழந்து
 
நாட்டில்  வேலைக்காரர்களாக  அவதிப்படும் நிலை எப்படி வந்தது
 
இபோதைய நிலவரப்படி   மக்கள் தொகை 98 %   விவசாய  உற்பத்தி  இரண்டு சதவிகிதம்
 
எப்படி அரிசி கிடைக்கும் தானியங்கள் கிடைக்கும்
 
 
முதல் போட்ட முதலாளிகள்   ஏற்கெனவே  கொள்ளையடித்த  பணத்தை வைத்து  முதச்ல் போட்டுவிட்டு
 
அதில் வரும் லாபத்திலும்   உழைப்பவருக்கு நியாயமான  பங்கைக் கொடுக்காமல்
தாங்களே  இன்னும் கோடி கோடியாக சேர்ப்பதெப்படி
 
 
இந்த நாட்டில்   மார்க்சீயம்  தவறாக  பயன்படுகிறது   என்று சொன்னால்  அதில் தவறு என்ன
 
 
ரஷ்யா   சீனா போன்ற நாடுகள்  பொருளாதார  வீழ்ச்சி கண்டதே  இந்த 
தொழிலாளிகளின்  வீழ்ச்சியினால்தான்
 
முதலாளிகளின்  அநியாயமான  மார்க்சீய தத்துவங்களினால்தானே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
6-11-09 அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதினார்:

srirangammohanarangan v

unread,
Nov 6, 2009, 10:33:22 PM11/6/09
to mint...@googlegroups.com
திரு  ராஜசங்கர்,    நீங்கள்  எழுப்புகின்ற  கேள்விகள்   பொருத்தமுடையனவே.    ஆனாலும்      ஒரு   தொழில்  ஏற்படும்   முன்    முந்தைய    பொதுவான  சூழ்நிலையில்   பலர்  இருக்கின்றார்கள்  என்று  வைத்துக்கொண்டால்,   யாரோ  ஒருவர்    அந்தச்  சூழ்நிலையில்    இருக்கும்  சாத்தியங்களைக்  கண்டறிந்து,  அவற்றை  வளமாக   ஆக்க    வழிகளையும்    தேர்ந்து,   அதற்கு   பெருவாரியான  உழைப்பு    தேவை  என்னும்  போது, யந்திரங்களையோ  மனிதர்களையோ    அன்றேல்  இரண்டும்  கலந்தோ    உள்ளே சேர்த்துக்  கொள்ள     தேர்வழைப்பு  விடுக்கிறார்.
 
உள்ளே   சென்ற   உழைப்பாளிகள்    தங்கள்    உழைப்பைக்  கேட்கும்  விதத்தில்  தருகிறார்கள்.    அதற்கான      சார்பு  மதிப்பு    ஊதியமாகத்  தரப்படுகின்றது.      அதே   உழைப்பாளிகள்      அந்த  உழைப்பில்   அவர்கள்    செய்யும்     அதே  உழைப்பின்    அத்தனை  சடங்குகளையும்   ஒன்றுவிடாமல்      வெளியே  இருந்துகொண்டு     செய்தார்களானால்     அதற்கு   எந்த  மதிப்பும்  இல்லை.   வெறும்  பிரயாசையே  மிஞ்சும்.   உண்மை.     அப்பொழுது    அந்த    உழைப்பு    அது    இயற்றப்படும்    எதிர்பார்ப்பு--திட்டச்  சூழ்நிலைகளால்     ஒரு  மதிப்பைப்  பெறுகின்றது.    அதாவது    உழைப்புக்கு  என்று    Innate   Value    என்பது  இல்லை.   சரி.
 
ஆனால்     ஒரு   தொழிலைத்  திட்டமிட்டுத்  தொடங்கிய     தொழிலறிவாளர்,    இந்த  உழைப்புகள்  ஏதும்    கிடைக்காத   நிலையில்    தம்முடைய    தொழிலறிவு,    முதல்  இவைகளை  மட்டும் கொண்டு     அந்த  வளத்தை உருவாக்கம்     செய்துவிட  முடியுமா?   அப்பொழுது     தொழிலறிவும்   உழைப்பை  நம்பித்தானே    இருக்கிறது.   என்ன.....ஏகப்பட்ட     உழைப்பாளிகள்     கிடைக்கும்     சூழ்நிலையில்       இது    ஒருவித,     உழைப்பை   நம்பியிராத    சுதந்திரப்  போக்கு   கொண்டதுபோல்     ஒரு  தோற்றம்   தருகிறது.   சரி  இருக்கட்டும்.      தொழில்  ஆரம்பித்து    நினைத்த   வளத்தை ஈட்டி    அனுபவிக்கும்   நிலையில்     அந்த  வளத்திற்கான    காரணப்  பங்குகள்     எது  எது   என்று  கணக்கெடுக்கும்போது       தம்முடைய      தொழிலறிவும்,     முதலும்        காரணப்பங்காய்    இருப்பது   போன்று,    உழைப்பும்  அதில்    காரணப்பங்குதான்,    அதன்   விகிதம்     குறைவாக    இருந்தாலும்  கூட   என்றுதானே    முடிவுக்கு  வர  வேண்டிவரும்.   சரி  அதற்குத்தானே    ஊதியம்  பேசி  கொடுத்தாய்விட்டது.   அப்புறம்    எதற்கு  அதைக்  கணக்கில்  எடுப்பது    என்று  விடலாம்    என்று  சொல்வோம்.     கிடைத்த    வளத்தில்    உழைப்புக்கான    பங்கு  ஊதியமாகக்  கொடுத்தாகி  விட்டது.   மிஞ்சினது    அனைத்தும்    நம் போகத்திற்கு.      சமன்பாடு  இதோடு  முடிந்தது. 
 
அந்த    வளம்   அதோடு  நின்றால்     இது  சரி.  ஆனால்  அந்த    வளம்  அதற்கு  மேல் வளத்தை    ஈட்டிக்கொண்டே    போகும்போது      அங்கு  புது    உழைப்போ   அல்லது  புது  தொழிலறிவோ    உள்ளே   போடப்படுவதில்லை.    created  wealth  begins  to  have  a  life  of  its   own.    அப்பொழுது   மேலே  மேலே    அடையப்படும்     உபரிவளம்     காரணப்பங்கு  விகிதம்    என்பதை  வைத்துப்  பார்க்கும்  போது     தொழிலறிவு--முதல்    என்ற     காரணிக்கு  மட்டுமே    சென்று    சேர்வதையும்,     உழைப்பு  என்ற  காரணிக்கு     எந்த    சம்பந்தமும்    இல்லாது  போன்றும்   ஆக்கப்படுகிறது. 
 
எந்த  வளத்திற்கு     இந்த  உழைப்பு  என்ற   காரணம் இல்லையோ    அங்கு     இதற்கான     பயன்  விகிதம்     இல்லை.    ஆனால்    ஒரு  வளம்     இந்த  உழைப்பாலும்     சேர்ந்து   உருவானது   என்னும்  போது     அந்த   வளம்    ஈட்டும்    மேலதிக   உபரிவளத்தில்      இந்த  முதல் உழைப்புக்கு    எந்தப்  பங்கும்  கிடையாது    என்று  சொல்லமுடியுமா?      அதான்  ஊதியம்  தந்தாயிற்றே    என்று  சொல்லும் வாதம்     தொழிலறிவுக்கும்    பொருந்தும்தானே.     தொழிலறிவு--முதல்    இவற்றுக்கான     முதல் வளப்பங்கும்  முடிந்துவிட்டதே.     எந்த   வளத்தில்    உழைப்பும்,   தொழிலறிவு/முதல்   எனபதும்   காரணப்பங்குகளாய்    இருந்தனவோ     அந்த   வளம் ஈட்டும்  உபரிவளத்தில்     ஒரு  காரணப்பங்குக்குத்தான்    சம்பந்தம்  உண்டு   மற்ற     காரணப்பங்குக்கு     அது  எவ்வளவுதான்    அறிவை  நோக்க    தாழ்ந்தது  எனிலும்,   சம்பந்தமே  இலலை   என்று   சொல்வது   தொழில்   சூழ்நிலையில்    தந்திரசாலித்தனமாக  இருக்கலாமே  அன்றி,   தார்மீகம்    ஆனதா? 

 

Raja sankar

unread,
Nov 6, 2009, 10:44:54 PM11/6/09
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனீ,

நீங்கள் உடல் உழைப்பு மட்டும் வளத்தை பெருக்கும் என்பதில் உறுதியாய் இருக்குறீர்கள் என நினைக்கிறேன். விவசாயம் அதை பொய் என எப்போதும் நீருபித்துக்கொண்டிருக்கிறது.

விவசாயம் ஒரு தொழில். எல்லா தொழிற்சாலைகளும் இயங்குவது போல் அந்த தொழிற்ச்சாலையும் இயங்குகிறது. எல்லா தொழிலையும் போல் லாப நோக்கில் செய்தால் லாபம் வரும். அதைவிட்டு எதையோ போடுவேன் எதுவோ வரும் என்றால் நட்டம் வராமால் என்ன வரும். முதலுக்கு மோசம் வந்து நிலத்தை விற்று விட்டு போக வேண்டியது தான்.

விவசாயம் நிலங்களை பிரித்துக்கொடுப்பதால் முன்னேறிவிடாது. மூலப்பொருட்கள், வழிமுறைகள், விளைந்த பொருட்களை சேமித்தல், அதைக்கொண்டு இன்னும் பல பொருட்களை உருவாக்கும் தொழில்கள் என இருந்தால் தான் முன்னேறும்.

செல்போன், கம்பியூட்டரும் அதிக விலைக்கு விற்க்கப்படும் போது அரிசியும் அதிக விலைக்கு விற்றால் என்ன தவறு? விவசாயிக்கு அதிக கூலி கிடைக்க வேண்டும் ஆனால் அரிசி மிகக்குறைவான விலை கிடைக்கவேண்டும் என்றால் எப்படி நடக்கும்?

எல்லோரும் சமம் எனபது திறந்த சந்தையில் மிகவிரைவாக நடக்கும். எந்த ஆயுதப்போராட்மும் இல்லாமலே. திறந்த சந்தையின் அடிப்படையே எல்லோரும் சமம் என்பது தான்.

ராஜசங்கர்

2009/11/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Raja sankar

unread,
Nov 6, 2009, 11:02:25 PM11/6/09
to mint...@googlegroups.com
//தொழிலறிவு--முதல்    இவற்றுக்கான     முதல் வளப்பங்கும்  முடிந்துவிட்டதே.     எந்த   வளத்தில்    உழைப்பும்,   தொழிலறிவு/முதல்   எனபதும்   காரணப்பங்குகளாய்    இருந்தனவோ     அந்த   வளம் ஈட்டும்  உபரிவளத்தில்     ஒரு  காரணப்பங்குக்குத்தான்    சம்பந்தம்  உண்டு  //

உழைப்புக்கும், அறிவுக்கும் உள்ள மதிப்பை கீழ்க்கண்ட உதாரணங்கள் மூலம் விளக்கலாம்.

மரச்சுத்தியல் - ஆக்குவதற்கு கருவிகளும் ஆக்குவதைப்பற்றிய அறிவும் தேவை. ஆனால் உருவாக்கியபின் அதை உபயோகிப்பவர் ஆக்குபவரை தேடி வரவேண்டியதில்லை. அதன் பயன்காலம் முடிந்த பின் கழிவுக்கு போகும்.

இருசக்கரவாகனம் - ஆக்குவதற்கு கருவிகளும் ஆக்குவதைப்பற்றிய அறிவும் தேவை.பயன்காலம் முழுவதும் உருவாக்கிய அல்லது பழுது நீக்கும் அறிவுடையவர் தேவை. கூடவே பழுதான பாகங்களை மாற்றுவதும் தேவை.

இதில் எதை தயாரிப்பவருக்கும் அதிக மதிப்பு தேவைப்படும்? முன்னதின் ஆக்கும் அறிவை கற்றுக்கொள்ளும் காலம் பின்னதை ஆக்கும்/பழுது நீக்கும் அறிவை கற்றுக்கொள்ளும் காலத்தை விட மிக்ககுறைவு. அந்த காலத்திற்கு ஆகும் விரயங்களின் மதிப்பை எவ்வாறு கணக்கிடுவீர்கள்?

காப்புரிமை என்பது இங்கே தான் வருகிறது. எவ்வாறு உழைப்பை யாரும் சுரண்டக்கூடாதோ அதே போல் அறிவையும் சுரண்டக்கூடாது என்பது தான் காப்புரிமை.

ராஜசங்கர்

2009/11/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2009, 11:04:28 PM11/6/09
to mint...@googlegroups.com
லாப நோக்கில் செய்தால் லாபம் வரும். அதைவிட்டு எதையோ போடுவேன் எதுவோ வரும் என்றால் நட்டம் வராமால் என்ன வரும். முதலுக்கு மோசம் வந்து நிலத்தை விற்று விட்டு போக வேண்டியது தான்.
 
 
லாப  நோக்கில்  விவசாயிக ள்   விவசாயம் செய்வதை  உபயோகித்துதான்
 
நாட்டின் வளத்தைக் காக்கும் பொருப்பு உள்ள  அரசாங்கம்
 
அமெரிக்காவிலிருந்து  அதிக மகசூல் தரும்  அரிசி வகையை  இந்த நாட்டிலலனுமதித்தது
 
ஆனால்   விதை நெல்  மீண்டும்  கிடைக்கும்  அருமையான  நெல் வகையைப் பயிரிடாமல்
 
அரசியல்வாதிகள்  தங்களின் லாப நோக்கிலே ஆன்னிய நாடுகளிலிருந்து  வாங்கிய  விதை நெல் கிடைக்காத  அரிசியைப் பயிர் செய்ததாலேயே    இப்போது மீண்டும் அந்த நெல்லுக்கு   அன்னிய நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகி இருக்கிறது
 
 
 
வரப்புயர என்றாள் அவ்வை
 
 
 
விவசாயிகள் லாப நோக்கிலே  அதாவது பொருள் ஈட்டும் நோக்கிலே  விவசாயம்செய்யக் கூடாது
 
நம் நாட்டின் உணவுத்தேவையைப் பெருக்கும் நோக்கிலேதான்  செயல் படவேண்டும்
 
அதற்கு அரசாங்கம்   விவ்சாயிகளை  பட்டினி போடாமல்  அவர்கள்  தொழிலைச் செய்ய  உதவிடவேண்டும்
 
 
சாராய வியாபாரத்தை  லாப நோக்கிலே  செய்யலாம்
 
 
விவசாயத்தை  லாப நோக்கிலே செய்யலாமா
 
 
 
நாட்டின் வளத்தை   அதிகப்படுத்த வேண்டும்  என்று நினைக்கு நல்ல அரசாக  இருந்தால்
 
விவசாயத்தை  வளப்படுத்த வேண்டும்
 
விவசாயிகளை  வளமாக வைத்திருக்கவேண்டும்
 
 
 
அவர்களுக்கு  விவசாயம் செய்ய  வேண்டிய  உதவிகளை  உரிய நேரத்தில் செய்து கொடுக்கவேண்டும்
 
நாட்டின்  நீர் நிலைகளைப் பெருக்கவேண்டும்
 
மின்சாரம்  தடையில்லாமல்  அவர்களுக்கு கிடைக்க  ஏற்பாடுகள்  செய்யவேண்டும்
 
குறிப்பாக  விவசாய நிலங்களை ஆக்ரமிப்போர் மீது  நடவடிக்கை  எடுக்க வேண்டும்
 
விவசாய நிலங்களை  வீடு கட்டும்  நிலங்களாக  மாற்றி பதிவு செய்வதை  நிறுத்தவேண்டும்
 
இவை அனைத்தையும்  செய்துவிட்டு  விவசாயிகளை  சரியாக வழி நடத்தாமல்
 
 
  மார்க்சிசம்  போன்ற   எந்த   இசம்  பேசினாலும்   நாடு முன்னேறாது
 
பசியும் பஞ்சமும்  உள்ள நாடு  முன்னேராது
 
என்ன வளம் இல்லை  இந்தத் திருநாட்டில்  ஏன் கையை ஏந்தவேண்டும்  வெளிநாட்டில்
 
என்னும் பாடல்தான்  நினைவுக்கு வருகிறது
 
 
இசங்கள் எப்போதும்  பட்டி மன்றம் நடத்தத்தான் சுகமாக இருக்கும்
 
யதார்த்தம் மட்டுமே  நாட்டின் வளம் சேர்க்கும்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
7-11-09 அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதினார்:

Raja sankar

unread,
Nov 6, 2009, 11:10:14 PM11/6/09
to mint...@googlegroups.com
//விவசாயத்தை  லாப நோக்கிலே செய்யலாமா//


தமிழ்த்தேனீ,

ஏன் விவசாயத்திற்கு மட்டும் விதிவிலக்கு?  அதிலேயும் மனிதர்கள் தானே உழைக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வாறு சரியான ஊதியம் தருவது?

மனிதன் செய்யும் எந்த தொழிலும் லாப நோக்கிலே தான் இருக்கும். எந்த இசமாக இருந்தாலும் சரி.

Tthamizth Tthenee

unread,
Nov 6, 2009, 11:19:38 PM11/6/09
to mint...@googlegroups.com
விவசாயத்தில்  லாபம் என்பது  நாட்டின்  வளத்தைப் பெருக்குதல் மட்டுமே
 
அதற்கு  விவசாயிகளை  செழிப்பாக வைத்திருக்க  அரசுதான் ஆவன செய்யவேண்டும்
 
தேவையில்லாமல்  பல வேண்டாத  தொழில்களுக்கு  மானியம் தரும் அரசு
 
விவசாயத்துக்கு  மானியங்கள்  அளிக்கும் வழி முறைகளை  ஆராய்ந்து  அதிக மானியம் அளித்து
 
அவர்கள்   விவசாயம் செய்து  விளைவிக்கும் பொருட்களை  மக்களுக்கு லாப நோக்கிலே  அளித்து
 
விவசாயிகளுக்கு   உலகிலேயே கடினமான தொழிலாகிய  விவசாயத்துக்கு
உதவியாய் இருந்து  அவர்களை  வளமாக வைக்க  வேண்டும்
 
இல்லையென்றால்  இனி உலகில் உள்ள  அனைத்து மக்களுக்கும் பசி தீர்க்க
 
மாத்திரைதான்
 
ஏற்கெனவே  விவசாயிகள்   வறுமை காரணமாக விளை நிலங்களை  விற்றுவிட்டு
பட்டிணத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில்  காவலுக்கு வேலை செய்கிறார்கள்
 
 
வீட்டில் உண்ண உணவில்லையெனில்  
 
நாம் உபயோகிக்கும் மேல்பூச்சு  அழகு சாதனங்களின் செலவைக் குறைத்து
 
உணவுப் பொருட்களை வாங்கவேண்டுமல்லவா
 
அது போலத்தான்  நாடும்
 
தேவையில்லாத செலவினங்களைக் குறைத்து  விவசாயத்தை அதிகரிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்

srirangammohanarangan v

unread,
Nov 6, 2009, 11:19:50 PM11/6/09
to mint...@googlegroups.com
On 11/7/09, Raja sankar <errajasa...@gmail.com> wrote:
//தொழிலறிவு--முதல்    இவற்றுக்கான     முதல் வளப்பங்கும்  முடிந்துவிட்டதே.     எந்த   வளத்தில்    உழைப்பும்,   தொழிலறிவு/முதல்   எனபதும்   காரணப்பங்குகளாய்    இருந்தனவோ     அந்த   வளம் ஈட்டும்  உபரிவளத்தில்     ஒரு  காரணப்பங்குக்குத்தான்    சம்பந்தம்  உண்டு  //
 
 
திரு  ராஜசங்கர்,    இது  அல்லவே  என்னுடைய  வரி.     வெட்டி  ஒட்டும்போது   நான் ஐயம்  எழுப்புகிற   வாக்கியத்தை,   நான்  சாற்றிச்    சொல்லும்  வாக்கியமாக    மாற்றிக் காட்டலாமா?   அது  படிப்பவர்களுக்கு   மயக்கத்தை  ஏற்படுத்தாதா?    இந்த   வரி  நான் எழுதியபடி  பார்த்தால் இதுதான்:--
 
“தொழிலறிவு--முதல்    இவற்றுக்கான     முதல் வளப்பங்கும்  முடிந்துவிட்டதே.     எந்த   வளத்தில்    உழைப்பும்,   தொழிலறிவு/முதல்   எனபதும்   காரணப்பங்குகளாய்    இருந்தனவோ     அந்த   வளம் ஈட்டும்  உபரிவளத்தில்     ஒரு  காரணப்பங்குக்குத்தான்    சம்பந்தம்  உண்டு   மற்ற     காரணப்பங்குக்கு     அது  எவ்வளவுதான்    அறிவை  நோக்க    தாழ்ந்தது  எனிலும்,   சம்பந்தமே  இலலை   என்று   சொல்வது   தொழில்   சூழ்நிலையில்    தந்திரசாலித்தனமாக  இருக்கலாமே  அன்றி,   தார்மீகம்    ஆனதா? ”  
 
 
இந்தக் கேள்வியை    நீங்கள்    நேரே   சந்திக்காமல்     காப்புரிமை  என்பதை  நோக்கி    திசை  திருப்புகிறீர்கள்.  போகிற வாக்கில்   என்னுடைய     வாக்கியத்தையும்  நேர்   எதிரான    பொருள்  படும்படி  வெட்டி  ஒட்டிப் போகிறீர்கள்.     இது  தாங்கள் கருதிச் செய்தது  ஆகாது  என்று  நம்புகிறேன். 

Raja sankar

unread,
Nov 7, 2009, 12:10:48 AM11/7/09
to mint...@googlegroups.com
srirangammohanarangan ,

முழுவதும் வெட்டி ஒட்ட வேண்டாம் என்று கொஞ்சம் ஒட்டினேன் அது இப்படி ஆகிவிட்டது.

என்னுடைய சிறிய பதில்:

உழைப்பு/அறிவுக்குமான வளப்பங்கில் எதற்கு பங்கு அதிகம் என்பது அது கிடைக்கும் தன்மையை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. உழைப்பு எளிதில் கிடைக்கும். அறிவு அப்படி அல்ல. அதனாலேயே அறிவுக்கான பங்கு அதிகமாக இருக்கிறது.

ராஜசங்கர்



2009/11/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>


karthi

unread,
Nov 7, 2009, 2:03:19 AM11/7/09
to mint...@googlegroups.com
>>விவசாயிகள் லாப நோக்கிலே  அதாவது பொருள் ஈட்டும் நோக்கிலே  விவசாயம்செய்யக் கூடாது
 
நம் நாட்டின் உணவுத்தேவையைப் பெருக்கும் நோக்கிலேதான்  செயல் படவேண்டும்
 
அதற்கு அரசாங்கம்   விவ்சாயிகளை  பட்டினி போடாமல்  அவர்கள்  தொழிலைச் செய்ய  உதவிடவேண்டும்<<
 
தேனீயாரே,
 
இது பற்றி முன்பு நீளமாகப் பேசியிருக்கிறோம் என்று நினைவு:
 
லாப நோக்கம் இல்லாத சேவையானால் அரசாங்கம்தான் அதை நேரடியாக நடத்தவேண்டும்
மக்களின் வரிப் பணத்தில் அது நடக்க வேண்டும்.
அரசாங்கம் நடத்தும் எந்தச் செயலிலும் திறமை இருக்காது. ஊழல் பெருகும். பணம் விரயமாகும்.
ஆகவே விவசாயத் தொழில் நசித்துப் போகும்.
 
பிற தொழில்கள் போல் திறந்த சந்தையில் போட்டியிட்டு வளரும் தொழிலாக விவசாயம்
மாறினால்தான் விவசாயிக்கும் நல்லது; தொழிலுக்கும் நல்லது.
 
ஆனால் விவசாயத்தின் முக்கியத்துவம் கருதி அரசு அதற்கு ஓரளவு பாதுகாப்பும்,
உதவித் தொகையும், குறைந்தபட்ச பொருள் விலையையும் நிர்ணயிக்க வேண்டும்.
 
ரெ.கா.

srirangammohanarangan v

unread,
Nov 7, 2009, 1:26:25 PM11/7/09
to mint...@googlegroups.com
அறிவுக்கான  பங்கு    அதிகம்   இருக்கட்டும்.    திரு ராஜசங்கர்,    உழைப்புக்கான பங்கு  குறைவு  என்று  இருக்கட்டும்.   ஆனால்     உபரிவளத்தில்    உழைப்புக்கு  ஒரு  உரிமை   இருக்கிறதா   இல்லையா    என்று    பார்த்தால்   இல்லை என்று  சொல்லிவிட முடிவதில்லை.   உழைப்பு   தாராளமாகக் கிடைக்கிறது    எனவே    அதன் உரிமைகள்    மீச்சிறு  பங்கு    மட்டுமல்ல,     கவனிக்கத்தக்கதும் அல்ல.  நிராகரிக்கலாம்.  கண்டுகொள்ளாமல்  இருந்துவிடலாம்  என்பது   சந்தர்ப்ப  வாதமாக
அமைந்து விடாதா?     ‘போர்க்களத்தில்  என்ன   ஒப்பாரி   வேண்டிக் கிடக்கிறது?’    என்பது போல    சந்தை   ஓட்டத்தில்    சூழ்ச்சியும்,    சுதாரிப்பும்தான்  வெல்லுமே  அன்றி    அறக்கவலைகள் எல்லாம்    என்ன  மதிப்புடையன   என்று  நினைக்கலாம்.  
அப்பொழுது    பொருளாதாரத்தில்   லாபம் மட்டுமே   அறம்.   மற்றபடி     அறக்கோட்பாடுகள்  என்பதற்கு    இடமில்லை     என்று    ஆகுமா?    இது  ஒரு  பக்கம்.   ஆனால்    நான்    வேறு  ஒரு  கோணத்தில்    உங்கள்  பதில்    வாதத்தை  எதிர்பார்த்தேன்.  
 
என்னவென்றால்,     சரி,    உபரிவளத்தில்    உழைப்புக்கு    பங்கு  உண்டு  என்னும் பட்சத்தில்,     தொடர்ந்து   உபரிவளம்    ஏற்படாமல்    எதிர்பாராத   வளத்தின் கேடு     சம்பவித்தால்     அப்பொழுது  நிலைமை  என்ன?    உபரிவளத்தில்   உரிமை  கோரிய உழைப்பு     அந்த    நஷ்டத்திலும்    பங்கெடுக்குமா?  அன்றேல்     அது  முழுக்க   தொழிலறிவு/முதல்    என்பதைச்  சார்ந்தது    தனக்கு  எவ்விதத்திலும்    சம்பந்தம்  இல்லை என்று   ஒதுங்கிவிடுமா?     ஒதுங்கிவிடுகிறது  என்பதுதான்    யதார்த்தம்.    எனவேதான்      உபரிவளத்தில்  கறாராகத்   தன் பங்கைக் கோராமல்  ஏதோ   லாபத்தில்    ஓர்  ஊக்கத்தொகை    என்பதுபோல்     அமைதியடைகிறது.   

 

srirangammohanarangan v

unread,
Nov 10, 2009, 1:38:02 AM11/10/09
to mint...@googlegroups.com
முதல்   ஈட்டும்   மேலதிக   வளம்   என்று   சொன்னோம்.    ஒரு  விதத்தில்  சரி  என்று  தோன்றுகிறது.    ஆனால்    முழு  உண்மையா    என்று ஐயமும்    வருகிறது.   ஏனெனில்    வியாபாரத்தில்,   தொழிலில்,   முதலின்   பெருக்கம்  தன்னைப்போல்  லாபத்தை    ஈட்டிவிடுகிறதா?     லாபம் என்பதே    முதலைச்   சார்ந்து மட்டுமா   இருக்கிறது?   தொழில்  முனைவோர்     முதலையும்,   வாய்ப்பான    இடத்தையும்,    உற்பத்திக்  காரணிகளையும்,  உழைப்பையும்     குவித்து  ஒரு  இடத்தில்  வைத்துக்கொண்டு  விட்டால்    அது  உடனே  லாபத்தில்  போய்  முடிந்துவிடும்  என்று  சொல்ல முடியுமா?     பயன்படுத்துவோரின்   தேவைகள்    என்று  ஒன்று    கோலோச்சுகிறதே.   அதற்குக்   கீழ்ப்படிந்துதானே     அனைத்தும்     இயங்கமுடியும்.    தொழிலுக்கான    அத்தனை   ஸங்காதங்களும்    சேர்ந்துவிட்டால்   அங்கு    லாபத்தின்    பிரஸன்னம்    தோன்றிவிடுமா  என்ன?     (இங்கு    சம்பந்தமில்லாமல்     ஒரு   ஒப்புமைக் கருத்து     தோன்றுகிறது.      அதிகமாகத்  தத்துவம்  படித்தால்   இப்படித்தான்  போலும்.   --   ரூப,  வேதனா,    ஸாம்ஜ்ஞ,  ஸம்ஸ்கார,  விஜ்ஞான   ஸ்கந்தங்கள்    ஒன்று  சேர்ந்து     அந்தக்  கூட்டரவில்     ஆத்மா   என்று  தோற்றம்   ஏற்படும்     என்ற    புத்த  உபதேசத்தின்   பிரதிபலிப்பா  லாபம்?)    
தொழில்  முனைவோரின்    பங்கு  பௌதிகமாய்   இல்லாவிட்டாலும்     எதிர்காலத்தின்    நிச்சயமற்ற   தன்மையை     மூடு   மறைவு   பாதுகாப்பு   ஒன்றுமின்றி      எதிர்கொள்ளும்     பெரும்பங்கு    அவர்களுடையது  அன்றோ?    
லுட்விக்    வான்  மைஸஸின்      Human  Action  ல்    வரும்   பகுதி  நம்மைச்  சிந்திக்க  வைக்கிறது.   சற்றே   நீளமானது  எனினும்     முக்கியமானது  என்பதால்    தருகிறேன்.     அலுப்படையச்  செய்தால்    மன்னிக்கவும்.  
 
 
 

Many people are utterly unfit to deal with the phenomenon of entrepreneurial profit without indulging in envious resentment. In their eyes the source of profit is exploitation of the wage earners and the consumers, i.e., an unfair reduction in wage rates and a no less unfair increase in the prices of the products. By rights there should not be any profits at all.

Economics is indifferent with regard to such arbitrary value judgments. It is not interested in the problem of whether profits are to be approved or condemned from the point of view of an alleged natural law and of an alleged eternal and immutable code of morality about which personal intuition or divine revelation are supposed to convey precise information. Economics merely establishes the fact that entrepreneurial profits and losses are essential phenomena of the market economy. There cannot be a market economy without them. It is certainly possible for the police to confiscate all profits. But such a policy would by necessity convert the market economy into a senseless chaos. Man has, there is no doubt, the power to destroy many things, and he has made in the course of history ample use of this faculty. He could destroy the market economy too.

If those self-styled moralists were not blinded by their envy, they would not deal with profit without dealing simultaneously with its corollary, loss. They would not pass over in silence the fact that the preliminary conditions of economic improvement are an achievement of those whose saving accumulates the additional capital goods and of the inventors, and that the utilization of these conditions for the realization of economic improvement is effected by the entrepreneurs. The rest of the people do not contribute to progress, but they are benefited by the horn of plenty which other people’s activities pour upon them.

What has been said about the progressing economy is mutatis mutandis to be applied to the conditions of a retrogressing economy, i.e., an economy in which the per capita quota of capital invested is decreasing. In such an economy there is an excess in the total sum of entrepreneurial losses over that of profits. People who cannot free themselves from the fallacy of thinking in concepts of collectives and whole groups might raise the question of how in such a retrogressing economy there could be any entrepreneurial activity at all. Why should anybody embark upon an enterprise if he knows in advance that mathematically his chances of earning profits are smaller than those of suffering losses? However, this mode of posing the problem is fallacious. Like everyone else, entrepreneurs do not act as members of a class, but as individuals. No entrepreneur bothers a whit about the fate of the totality of the entrepreneurs. It is irrelevant to the individual entrepreneur what happens to other people whom theories, according to a certain characteristic, assign to the same class they assign him. In the living, perpetually changing market society there are always profits to be earned by efficient entrepreneurs. The fact that in a retrogressing economy the total amount of losses exceeds the total amount of profits does not deter a man who has confidence in his own superior efficiency. A prospective entrepreneur does not consult the calculus of probability which is of no avail in the field of understanding. He trusts his own ability to understand future market conditions better than his less gifted fellow men.

The entrepreneurial function, the striving of entrepreneurs after profits, is the driving power in the market economy. Profit and loss are the devices by means of which the consumers exercise their supremacy on the market. The behavior of the consumers makes profits and losses appear and thereby shifts ownership of the means of production from the hands of the less efficient into those of the more efficient. It makes a man the more influential in the direction of business activities the better he succeeds in serving the consumers. In the absence of profit and loss the entrepreneurs would not know what the most urgent needs of the consumers are. If some entrepreneurs were to guess it, they would lack the means to adjust production accordingly.

Profit-seeking business is subject to the sovereignty of the consumers, while nonprofit institutions are sovereign unto themselves and not responsible to the public. Production for profit is necessarily production for use, as profits can only be earned by providing the consumers with those things they most urgently want to use.

முழுப்பகுதியையும்     படிக்க     மேற்கோள்   சுட்டி    இஃது:-

http://oll.libertyfund.org/title/308/34651/868277      வான்  மைஸஸின்     நூல்  முழுமையையும்     வலையேற்றி    வைத்திருக்கிறார்கள். 

         

Tthamizth Tthenee

unread,
Nov 10, 2009, 9:13:43 AM11/10/09
to mint...@googlegroups.com
முதலின்   பெருக்கம்  தன்னைப்போல்  லாபத்தை    ஈட்டிவிடுகிறதா?     லாபம் என்பதே    முதலைச்   சார்ந்து மட்டுமா   இருக்கிறது?   தொழில்  முனைவோர்     முதலையும்,   வாய்ப்பான    இடத்தையும்,    உற்பத்திக்  காரணிகளையும்,  உழைப்பையும்     குவித்து  ஒரு  இடத்தில்  வைத்துக்கொண்டு  விட்டால்    அது  உடனே  லாபத்தில்  போய்  முடிந்துவிடும்  என்று  சொல்ல முடியுமா?     பயன்படுத்துவோரின்   தேவைகள்    என்று  ஒன்று    கோலோச்சுகிறதே.   அதற்குக்   கீழ்ப்படிந்துதானே    
 
 
 
மேற்கண்ட  வரிகள்தான் வியாபாரத்தின் மொத்த சூக்ஷுமம்
 
ஒவ்வொரு கேள்வியும்   ஒரு பெரிய  கட்டுரைக்கு வழி வகுக்கிறது
 
முதலின்  பெருக்கம்  தன்னைப் போல  லாபத்தை  ஈட்டுகிறதா   
 
இல்லை என்பதே என் வாதம்
 
 
ஓரிடத்தில்  ஒரு வீட்டை வாங்கி  அந்த வீடு இருக்கும் பகுதி வளமாக மாறி   அந்த வளத்தினால்
 
அந்த வீட்டின் மதிப்பு  பலமடங்கு பெருகினும், அந்த வீட்டை  விற்பதால் மட்டுமே  அந்த லாபத்தை  ஈட்டமுடியும், ஒரே ஒரு வீடு வைத்துகொண்டு  அந்த வீட்டையும்  விற்க முடியாத நிலையில்
அந்த வீடு கோடி ரூபாய்க்கு விற்கலாம் என்றாலும்
 
அது லாபமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்
 
 
 
 
அதே போல லாபம் என்பது  முதலிப் பொறுத்து  அல்ல
 
என்பதே நியாயம்
 
வேர்கடலை விற்பவர் என்னதான் அதிக முதல் போட்டாலும் அவர் விற்கும் அளவுக்கு தகுந்தார்ப் போலத்தான் லாபம் வருமேதவிர  அதிகம் வராது
இதை உதாரணத்துக்குதான் சொன்னேன்
 
அதே வேர்க்கடலை விற்பவர்  வியாபாரத்தை  மாற்றி மக்கள்  அதிகமாக வாங்கும் பொருட்களை வாங்கி அதிக முதல் போட்டு விற்க ஆரம்பித்தால்  ஒரு வேளை  அதிக லாபம் வரலாம்
 
அதுவும் வியாபாரம் ஆகும் அளவைப் பொறுத்தும்  வாங்குபவர்களின்  எண்ணிக்கையைப் பொறுத்தும் இருக்கிறது, இப்போதெல்லாம் எல்லாக் கடைகளிலும்  வியாபபரம் ஆகிறது
ஆனாலும் ஒரே பொஉளை விற்கும் கடைகள் அடுத்தடுத்து இருக்கின்றன
 
அப்படி இருக்கும்போது வியாபாரமும் , லாபமும் பங்கிடப்பட்டுவிடுகிறது
அதனால் போடும் முதலுக்கும் அதிக லாபத்துக்கும் தொடர்பே இல்லை எனும் மாயைதான் எடுபடுகிறது
 
அதேபோலத்தான் தொழில் முனைவோரும் என்னதான் எல்லாக் காரணிகளையும் ,உழைப்பையும் ஒரே இடத்தில் குவித்தாலும்   அவர்கள் வியாபாரம் செய்யும் திறமையும் ,அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள் தேங்காமல் Hand  to Mouth Feeding  என்று இருந்தால் தான் லாபம் பார்க்க முடியுமே தவிர
 
கிடங்கில் உற்பத்திப் பொருட்களை சேமித்து  வைப்பதால்  லாபம் அடிபட்டுபோகும் அபாயம் உள்ளது
 
 
மொத்தத்தில்  வாங்குவோர் இல்லாத வியாபாரம்  லாபம் ஈட்டாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
 
 
 
 
  
 
2009/11/10, srirangammohanarangan v <ranga...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Nov 10, 2009, 11:29:27 AM11/10/09
to mint...@googlegroups.com
முதல்  ஈட்டும்   மேலதிக  வளத்தில்    உழைப்பாளருக்கு    உரிய  பங்கில்    ஒரு  நியாயம்  இருக்கிறது  என்று    நாம்  கூறிக்கொண்டிருந்தது    அவ்வளவு  நியாயமானதுதானா  என்பதைச்  சிந்திக்க  வைக்கிறது     மேற்கோள்  காட்டிய   பகுதியில்    முதல்   ஓரிரு   பத்திகளில்   வான்  மைஸஸ்   தரும்  எண்ணங்கள்.  
 
“ தொழில்   முனைவோரின்  லாபங்களைப்   பற்றிப்  பேசுவதில்   பலரும்   பொறாமை  உணர்ச்சியையே  காட்டுகின்றனர்.    அவர்களின்   எண்ணத்தில்   தொழில்  முனைவோரின்  லாபம்  என்பது    ஏதோ   தொழிலாளிகளின்   சம்பளத்தில்  அடித்தும்,   பயனுறுவோர்களை  ஏமாற்றி  அதிக  விலை  வைத்தும்   பொருட்களை   உற்பத்தி  செய்தும்,  விற்றும்   ஈட்டப்படுவதுதான்  லாபம்   என்று  இருக்கிறது.

பொருளாதாரத்திற்கு   இத்தகைய  தாந்தோன்றித்தனமான   அபிப்ராயங்களைப்  பற்றிச்  சிறிதும்  கவலையில்லை.   அது   இயற்கை  விதி  என்று  சொல்லிகொண்டு  வந்தாலும்  சரி  அல்லது   அருள்  நிலை,  தெய்வக்  காட்சி  என்று  சொல்லிகொண்டு  வந்தாலும்  சரி.   பொருளாதாரம்    சொல்வது  எல்லாம்   சந்தைப்  பொருளாதாரத்தின்   இன்றியமையா   நிகழ்வுகள்   லாபமும்  நஷ்டமும்.   இவையின்றி   சந்தைப்  பொருளாதாரம்  இருக்க முடியாது.   போலீஸை  வைத்து   அத்தனை  லாபத்தையும்  பிடுங்கிவிட  முடியும்.   ஆனால்  அத்தகைய   கொள்கை   சந்தைப்  பொருளாதாரத்தை   அர்த்தமற்ற  குழப்பமாக  ஆக்கிவிடும்.   பலவற்றையும்  அழிப்பதற்கான  ஆற்றல்  மனிதனிடம்   இருக்கவே இருக்கிறது.  வரலாற்றில்   நெடுக  பார்த்தால்   இந்த   அழிக்கும்  ஆற்றலையே   பெருமளவு  அவன்  பயன்  படுத்தியிருக்கிறான்.  சந்தைப்  பொருளாதாரத்தையும்  அவன்  அழிக்க  முடியும்.

தங்களைத்  தாங்களே   பெரும்   அறவழி   அக்கறை  வாதிகள்  போல்   காட்டிக்கொள்வோர்   லாபத்தால்   கண்கள்  மறைக்கப்  படுகின்றனர்.  இல்லையேல்   அவர்கள்   லாபத்தைப்  பற்றிப்  பேசும்  போது  சௌகரியமாக   நஷ்டத்தைப்  பற்றி   கவனியாதது  போல்   விட்டுவிட  மாட்டார்கள்.   பொருளாதார   முன்னேற்றத்தின்  பூர்வாங்கங்களே   சேமித்து வைப்போரின்   சேமிப்பு  முதலாக  ஆவதும்,   புதியன  கண்டு  பிடிப்பவரின்   கண்டு  பிடுப்புகளும்,  இவற்றைக்  கொண்டு,  சூழ்நிலையை  சரிவர  கணித்து   தொழிலில்  துணிவோர்களான   தொழில் முனைவோர்களின்  முயற்சியும்   ஆகும்  என்பதை   அறவழி  வாதிகள்   மௌனமாக   காணாததுபோல்  கடந்துசெல்ல  வேறு  காரணம்  இல்லை.   முன்னேற்றத்திற்கு    மற்றவர் பங்களிப்பதில்லை.    இந்தப்  பூர்வாங்கங்களான   காரணங்களால்     ஏற்படும்  வளத்தின்    அட்சய   பெருக்கத்தில்   பங்கெடுப்பவரே    மற்றவர் எல்லாம்.” 

(ஒத்தி  எடுத்தாற்போல்   மொழிபெயர்க்காமல்    பொருளோட்டத்தை மட்டும்   மொழிபெயர்த்துள்ளேன்)

On 11/10/09, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
 
 
அதே போல லாபம் என்பது  முதலிப் பொறுத்து  அல்ல
 
என்பதே நியாயம்
 
வேர்கடலை விற்பவர் என்னதான் அதிக முதல் போட்டாலும் அவர் விற்கும் அளவுக்கு தகுந்தார்ப் போலத்தான் லாபம் வருமேதவிர  அதிகம் வராது
இதை உதாரணத்துக்குதான் சொன்னேன்
 
அதே வேர்க்கடலை விற்பவர்  வியாபாரத்தை  மாற்றி மக்கள்  அதிகமாக வாங்கும் பொருட்களை வாங்கி அதிக முதல் போட்டு விற்க ஆரம்பித்தால்  ஒரு வேளை  அதிக லாபம் வரலாம்
 
அதுவும் வியாபாரம் ஆகும் அளவைப் பொறுத்தும்  வாங்குபவர்களின்  எண்ணிக்கையைப் பொறுத்தும் இருக்கிறது, இப்போதெல்லாம் எல்லாக் கடைகளிலும்  வியாபபரம் ஆகிறது
ஆனாலும் ஒரே பொஉளை விற்கும் கடைகள் அடுத்தடுத்து இருக்கின்றன
 
அப்படி இருக்கும்போது வியாபாரமும் , லாபமும் பங்கிடப்பட்டுவிடுகிறது
அதனால் போடும் முதலுக்கும் அதிக லாபத்துக்கும் தொடர்பே இல்லை எனும் மாயைதான் எடுபடுகிறது
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages